அதிகாலை கண்விழித்த வெரோனிகா தன்னை இறுக்கமாக அணைத்தபடி உறங்கும் கணவனை வெட்கம் கலந்த புன்னகையுடன் பார்த்தாள். அவன் அமைதியாக குழந்தை போல் உறங்குவதைக் கண்டவள் அவனது தலை முடியை கோதி விட்டு அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.
மெல்ல அவனது கையை விலக்கி விட்டு எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். நிலைக் கண்ணாடியில் தன்னைக் கண்டவளுக்கு வெட்கம் தாங்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டாள். கன்னம் எல்லாம் சிவந்து அவளுக்கு வெட்கம் குறையாமல் குளித்து முடித்து வந்தாள். அவன் இன்னும் எழவில்லை. அவனை நிமிர்ந்து பார்க்க கூட அவளால் முடியவில்லை. பெண்ணவளை நாணம் வந்து சூழ்ந்து கொள்ள அறைக்குள் இருக்க முடியாமல் தவிப்புடனே வெளியே வந்தாள்.
பூஜை அறைக்கு சென்று இறைவனை பிரார்த்தனை செய்தாள். ரோனி எழுந்திட்டியா என்ற மலர்கொடியிடம் எழுந்துட்டேன் அத்தை என்று மட்டும் தான் சொன்னாள். அவளால் ஏனோ இயல்பாக இருக்க முடியவில்லை. ஒரு வெட்கம் அவளை ஆக்கிரமித்திட மருமகளின் முகத்தை வாஞ்சையுடன் நிமிர்த்திய மலர்கொடி என்னடா ஏன் இப்படி படபடப்பா இருக்க. இதெல்லாம் போக போக பழகிரும் என்றவர் நீ குழந்தை இல்லை ரோனி இந்த குடும்பத்தையே நீ தான் தாங்கிப் பிடிக்கனும் அந்த உரிமை இப்போ முழுசா உனக்கு சொந்தமாகிருச்சு. நீ எப்பவும் சந்தோசமா இருக்கனும் சரியா என்றிட அவள் தலையை ஆட்டினாள்.
என்னடி என் வாயாடி மருமகள் இப்படி மௌனமா இருக்கிற என்ற சுசீலாவிடம் அத்தை அப்படி எல்லாம் இல்லை என்றாள் வெரோனிகா. அப்படியா இல்லையே ரொம்ப அமைதியா மாறிட்டியே என்றவர் மருமகளின் நெற்றி வழித்து சொடுக்கிட்டு என் செல்லம் எப்பவும் நீ சந்தோசமா இருக்கனும் என்றார். சரி நீ உதய்க்கு காபி எடுத்துட்டு போ என்றிட அவளும் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த புன்னகையுடனும், பூரிப்புடனும் தன்னறைக்கு சென்றாள்.
உறக்கத்தில் இருந்து கண்விழித்தவன் அருகினில் பார்க்க அவள் இல்லை. எழுந்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான். குளித்து முடித்து அவன் வந்திட வெட்கம் கொண்டு கசங்கிய முகத்துடன் மெல்ல மெல்ல அடியெடுத்து அறைக்குள் வந்தாள் வெரோனிகா.
என்ன ரோனி ஏன் இப்படி மெல்லம்மா நடந்து வர காலில் ஏதும் அடி பட்டிருச்சா என்றவனை நிமிர்ந்து பார்க்காமல் இல்லை என தலையசைத்தாள். அவளிடம் காபி கோப்பையை வாங்கி ஓரமாக வைத்தவன் அவளது முகத்தை நிமிர்த்தினான். அவள் அவனை பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொள்ள என்னாச்சு ரோனி ஏன் இப்படி பிகேவ் பண்ணுற என்றிட எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு மாமா என்றாள் வெரோனிகா.
என்னடா இது நீ இப்படி வித்தியாசமா பிகேவ் பண்ணுறது எனக்கே ஒரு மாதிரி இருக்குடா. நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனோ இதற்காக தான் இப்போ இதெல்லாம் வேண்டாம் என்றேன் என்றிட இல்லை மாமா அப்படி இல்லை என்னவோ தெரியலை மாமா ரொம்ப கூச்சமா இருக்கு என்றாள் வெரோனிகா.
ரோனிம்மா என்னை பாரு நான் யாரு உன்னோட சந்துரு மாமா தானே என்கிட்ட என்ன வெட்கம் உனக்கு. இப்போ நமக்குள்ள நடந்தது நம்ம வாழ்க்கையோட அடுத்த கட்டம் அதனால இதை ஏதோ பெரிய விசயமா நினைச்சு உன்னை போட்டு குழப்பிக்காதே எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படித் தான் என்றவன் நீ எப்பவும் போல சாதரணமா இருந்தால் தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும் என்றிட அவளும் சரிங்க மாமா என்றாள். குட்கேர்ள் என்றவன் அவளது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு காபியை எடுத்துக் குடித்தான்.
என்ன அர்ச்சனா எதுவும் பேசாமல் இருக்கிறாய் என்ற விவேக்கிடம் என்ன பேசணும் என்றாள் அர்ச்சனா. என்னடி இது பேசணும்னு வரச் சொன்ன அதனால தான் நானும் வேலை எல்லாம் சீக்கிரமே முடிச்சுட்டு உன்னைப் பார்க்க வந்தேன். வந்து பத்து நிமிசம் ஆச்சு எதுவும் பேசாமல் என்னையே இப்படி வைத்த கண் எடுக்காமல் பார்த்துட்டு இருந்தால் என்ன அர்த்தம் என்றான் விவேக்.
எல்லா வேலையும் முடிச்சுட்டிங்க தானே என்றவனிடம் முடிக்காமல் வரக் கூடாதுன்னு தான் நீ சொல்லிட்டியே அதனால எல்லாமே முடிச்சுட்டேன் என்ன விசயம் சொல்லு என்றான். அப்பறம் ஏன் விவேக் பறக்கிறிங்க ஏதாவது விசயம் இருந்தால் தான் என்னை பார்க்க வருவிங்களா. விவேக் நாம இரண்டு பேரும் லவ் பண்ணுகிறோம், இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு கல்யாணம் நீங்க என்னடான்னா என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுறதே இப்போ எல்லாம் குறைவு.
வாரத்தில் ஒரு தடவை பார்க்கலாம்னு வரச் சொன்னால் என்ன விசயம், என்ன விசயம்னு கேட்கிறிங்க. ஐயோ, ஸாரி அர்ச்சு என்னை பார்க்கனும்னு தான் வரச் சொன்னியா என்றவன் சரி பார்த்துக்கோ என்றிட பார்க்க முடியாது என்றவள் முகத்தை திருப்பிக் கொள்ள அட என் பொண்டாட்டிக்கு கோபமா என்றான் விவேக். ஆமாம் பயங்கர கோபம் என்றவளிடம் உன்னோட கோபத்தை எப்படி போக்கலாம் என்று யோசித்தவன் சினிமா போகலாமா இல்லை ஷாப்பிங் போகலாமா என்றான்.
இரண்டுமே வேண்டாம் கோவிலுக்கு போகலாமா என்றாள் அர்ச்சனா. சரி அர்ச்சுமா நீ சொல்லி நான் வரமாட்டேன்னா சொல்லுவேன் என்றவன் அவளுடன் கோவிலுக்கு சென்றான்.
என்ன வேண்டிகிட்ட அர்ச்சனா என்றவனிடம் என்ன வேண்டிக்கப் போறேன் நம்ம கல்யாணம் எந்த சிக்கலும் இல்லாமல் நல்லபடியாக நடக்கனும்னு தான் வேண்டிகிட்டேன் என்றவள் நல்லபடியா நடக்கும் தானே என்றிட ஏன்டி உனக்கு இந்த சந்தேகம் அதெல்லாம் நம்ம கல்யாணம் நல்லபடியாக நடக்கும் என்று அவன் கூறிட கோவில் மணி ஒலித்தது.
நான் சொன்னேன்ல அது நடக்கும்னு கடவுளே சம்மதம் சொல்லிட்டாரு என்ற விவேக் அவளது நெற்றியில் குங்குமம் வைத்து விட்டான்.
என்ன மச்சான் நீங்க வீட்டுக்குள்ளே இருந்தால் எப்படி உடம்பு குணமாகும். நீங்க வேற டாக்டர் உங்களுக்கே அடுத்தவங்க சொல்லிக் கொடுக்கனுமா என்ற சரவணன் நான் இருக்கிற வரை நாம இப்படி வெளியே வரலாம் என்று அழைத்து வந்தான். தேவ் ஸ்டிக் உதவியுடன் நடக்க முயல அந்த குச்சியை தூக்கி தூரமா போடுங்க மச்சான் நான் தான் கூடவே வரேனே பேலன்ஸ் மிஸ் ஆனால் என்னை பிடிச்சுக்கோங்க என்றான் சரவணன்.
அவனை பாசமாக பார்த்த தேவச்சந்திரன் உங்க வீட்டில் எல்லோருமே அண்ணி போல தானா மச்சான் என்றான். புரியலையே என்ற சரவணனிடம் இவ்வளவு பாசமா இருக்கிங்களே என்றிட என்ன மச்சான் நீங்க இப்படி கேட்கிறிங்க நீங்க யாரு என் தங்கச்சியோட கொளுந்தனார். எங்க மச்சானுக்கு தம்பி உங்களை பார்த்துக்கிறதுக்கு எனக்கு உரிமையும் இருக்கு, கடமையும் இருக்கு என்றவன் கோவிலுக்கு வந்தான்.
விவேக் தேவ் அண்ணா வராரு என்ற அர்ச்சனாவிடம் வா போயி பேசலாம் என்று அவளுடன் சென்றான் விவேக். அண்ணா என்றவளிடம் அர்ச்சனா நீ எப்போ வந்த என்றான் தேவ். இப்போ தான் வந்தோம் என்ற விவேக்கிடம் நலம் விசாரித்தவன் சரவணனை அறிமுகம் செய்திட ப்ரதரை தான் கல்யாணத்தில் பார்த்தேனே என்றான் விவேக். நான் தான் கல்யாணத்திற்கு வரவில்லை என்று கவலைப் பட்டான் தேவ்.
அட நீங்க என்ன வேண்டும் என்றா வரவில்லை மச்சான் உங்க உடல்நிலை சரியில்லை அதனால தானே என்ற சரவணன் விவேக்கிடம் சிறிது நேரம் பேசி விட்டு தேவ் உடன் சென்றான்.
வெரோனிகாவோட பேம்லி எல்லோருமே ரொம்ப நல்ல டைப்பா இருக்காங்களே அர்ச்சு என்ற விவேக்கிடம் ஆமாம் விவேக். அவளைப் போல தான் எல்லோருமே அவளோட அண்ணன்கள் கூட ரொம்ப பாசமா ஒரு தங்கச்சியை பார்க்கிற மாதிரி தான் பார்க்கிறாங்க, பழகுறாங்க என்றாள் அர்ச்சனா.
என்ன மாமா சொல்லுறிங்க ஹனிமூனா என்றவளிடம் ஆமாம் ஹனிமூன் தான் உனக்கு காலேஜ்ல அட்மிசன் அடுத்த வாரம். அதற்குள்ள போயிட்டு வாங்கனு அம்மா சொன்னாங்க நீ என்ன சொல்லுற என்றான் உதயச்சந்திரன்.
எங்கே போறோம் ஹனிமூன் என்றவளிடம் கொடைக்கானல் போகலாமா என்றான் உதய். ஹும் போகலாமே என்றவள் மாமா ஊர்மிக்கு கவுன்சிலிங் எப்போ என்றிட அவளுக்கும் ஒரு வாரம் டைம் இருக்கு ஏன் கேட்கிற என்றான் உதய்.
ஹனிமூன் வேண்டாம் பேம்லி டூர் போல போகலாமே என்றாள் வெரோனிகா. ஏன்டி உனக்கு என் கூட தனியா வர பிடிக்கவில்லையா என்றவனிடம் ஐயோ மாமா நான் அப்படி சொல்லவில்லை என்றவள் எதையோ தீவிரமாக யோசித்து விட்டு சரி நாம இரண்டு பேரு மட்டும் போகலாம். கொடைக்கானல் வேண்டாம் ஊட்டி இல்லை மூணார் போகலாம் என்றாள் வெரோனிகா.
சரி ரோனி என்றவன் நீ துணிகளை எல்லாம் பேக் பண்ணி வை நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன் என்றவன் சென்று விட அவள் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
என்ன ரோனி அக்கா ரொம்ப குஷியா இருக்கிங்க போல என்ற இந்திரஜாவிடம் ஐயோ அக்கா என்னை ரோனினே கூப்பிடுங்கள் என்று சிணுங்கினாள் வெரோனிகா. அண்ணியாரே என்ன ஒரே குஷி போல என்று பிரகாஷும் சேர்ந்து கொள்ள வெரோனிகாவை அழ வைக்காத குறை தான். இருவரும் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.
என்ன சம்மந்தி ஒரு நான்கு நாட்களாவது இருந்திட்டு போகலாமே என்ற நெடுமாறனிடம் இல்லை சம்மந்தி வேலை இருக்கு என்ற கதிரேசன் தன் குடும்பத்துடன் விடைபெற்றார்.
மச்சான் ஊருக்கு போனாலும் நாம தினமும் போனில் பேசிக்கலாம் என்ற சரவணன் தேவ் இடம் விடைபெற்று சென்றான்.
ரோனி இனிமேல் நீ ரொம்ப பொறுப்பா இருக்கனும் என்று மகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு பூங்கொடியும் விடைபெற்றார்.
இந்த இரண்டு நாட்களும் சரவணனுடன் தேவச்சந்திரனிற்கு நன்றாக பொழுது போனது. இனி மீண்டும் பழையபடி அடைந்து கிடக்க வேண்டுமா என்று நினைத்தவனுக்கு ஆறுதலாக பிரகாஷ் அவனுடன் பேச ஆரம்பித்தான். அதற்கு காரணம் உதயச்சந்திரன் தான். சரவணன் அவனிடம் தேவ் தனிமையில் இருப்பதைப் பற்றி கூறிட அவன் தான் பிரகாஷிடம் சொல்லி அவனுடன் பழையபடி பேச சொன்னான்.
என்ன மாமா யோசணை என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லை ரோனி என்ற உதய் உனக்கு என் மேல எதுனாலும் வருத்தம் இருக்கிறதா என்றான். உங்க மேலையா எனக்கா அப்படி எதுவும் இல்லையே என்றாள் வெரோனிகா. என்ன கேள்வி இது திடீர்னு என்றவள் கிளம்புங்க மாமா இப்படியே இருந்தால் நேரம் ஆகாதா நாம சீக்கிரம் கிளம்பனுமே என்றாள் வெரோனிகா.
நான் எப்பவோ ரெடி என் பொண்டாட்டிக்கு தான் அவளோட அத்தைங்க, நாத்தனாருங்க, கொளுந்தனுங்க எல்லோர்கிட்டையும் வாயாடிட்டு வர இவ்வளவு நேரம் ஆச்சு
என்றவன் தன் மனைவியுடன் ஹனிமூனுக்கு கிளம்பினான்.
……தொடரும்….