விதியின் முடிச்சு…(70)

4.7
(6)

சரியான கேடிப் பொண்ணு நீ என்ற பிரகாஷ் என்னோட சாக்லேட்டை கொடு என்றிட அவனிடம் வெவ்வெவ் என்று பழிப்பு காட்டிய நிலா தன் தந்தையை கட்டிக் கொண்டாள். அண்ணா உன் பொண்ணு சரியான ஆளு தான் என்றிட தேவ் சிரித்தான்.

 

நிலா நீ வீட்டுக்குள்ள போ பாட்டிகிட்ட போயி ஹார்லிக்ஸ் வாங்கி குடிடா தங்கம் என்று தேவ் கூறிட உதயநிலா வீட்டுக்குள் ஓடிச்சென்றாள்.

 

 

என்ன அண்ணா ஏதோ யோசனையா இருந்த போல என்ற பிரகாஷிடம் ஒன்றும் இல்லை பிரகாஷ் நம்ம அர்ச்சனா கல்யாண பர்ச்சேஸ் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன். தங்கச்சிக்கு என்ன கிப்ட் பண்ணலாம்னு யோசனை என்றான் தேவ். நல்ல கிப்ட்டா கொடுக்கனும் அண்ணா என்ற பிரகாஷ் தானும் யோசித்துக் கொண்டிருக்க அவர்கள் இருவரையும் பின்னால் வந்து பே என்று பயமுறுத்தினாள் அர்ச்சனா.

 

ஏய் லூசு நீ தானா என்ற பிரகாஷிடம் ஆமாம் நான் தான். அண்ணனும், தம்பியும் ஏதோ சீரியஸா யோசிச்சுட்டு இருந்திங்களா அதான் என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்னு வந்தேன் என்றாள் அர்ச்சனா.

 

ஆமாம் சீரியஸா தான் யோசிக்கிறோம் என்ற தேவ் அர்ச்சனா உன்னோட கல்யாணத்திற்கு உனக்கு என்ன கிப்ட் வேண்டும் என்றிட என்ன கிப்ட்னா நான் என்ன சொல்லட்டும். என்னோட மூன்று அண்ணன்களும் என் கல்யாணத்தில் நின்றாளே போதும். அதை விட வேற என்ன கிப்ட் இருக்கப் போகுது.

 

எங்கே கடைசி வரை நீங்கள் நம்ம வீட்டுக்கு வராமலே போயிருவிங்களோன்னு கவலையா இருந்தேன் அண்ணா. நல்லவேளை நீங்களும் நம்ம வீட்டுக்கு வந்துட்டிங்க. இப்போ அப்பா, அம்மா இரண்டு பேரும் கூட உங்களை ஏத்துக்கிட்டாங்க எவ்வளவு சந்தோசமா இருக்கிறேன் தெரியுமா என்றாள் அர்ச்சனா.

 

அப்பா, அம்மா என்னை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் என் தங்கச்சி கல்யாணத்திற்கு அண்ணன் வராமலா போயிருவேன் அர்ச்சுமா என்ற தேவ் தன் தங்கையை தோளில் சாய்த்துக் கொண்டான்.

 

 

என்னங்கடா பாசமலர் படம் ஓட்டுறிங்களா மூன்று பேரும் சாப்பிட வாங்க என்று வந்த சுசீலாவிடம் நாட் ஒன்லி பாசமலர் சித்தி கிழக்குச்சீமையிலே படம் கூட என்றான் தேவ். அவனது காதை திருகிய சுசீலா என்னடா கிண்டலா பண்ணுற இரு உன் காதை பிய்ச்சு எடுத்துடுறேன் என்றார்.

 

ஐயோ, சித்தி உன் பிள்ளை பாவம் என்னை விட்டுருங்க என்று கொஞ்சி கெஞ்சினான் தேவ். சரி , சரி பிழைச்சுப் போ என்ற சுசீலா சீக்கிரம் சாப்பிட வாங்க நான் போயி உதய், ரோனியை கூப்பிடுகிறேன் என்றிட அம்மா உன் மகனும், மருமகளும் ஹனிமூன் போயிருக்காங்க என்றான் பிரகாஷ்

 

 

அட ஆமாம்ல மறந்தே போயிட்டேன் என்றவரிடம் உங்களுக்கு எப்பவுமே மருமகள் நினைப்பு தான் இந்த வீட்டில் பிறந்த பொண்ணுங்க இரண்டு பேரும் இருக்கோம் என்று அர்ச்சனா கூறிட நீங்க இரண்டு பேரும் நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டு இந்த வீட்டை விட்டு ஓடிருவிங்களே என் மருமகள் தானே என்னை கடைசி வரை பார்த்துப்பா அதான் எனக்கு எப்பவுமே அவளோட நினைப்பு என்ற சுசீலா, ஆமாம் உதய் போன் பண்ணினானா என்றார்.

 

உங்க மகனுக்கும், மருமகளுக்கும் ஆயுசு நூறு இதோ போன் வந்திருச்சு என்ற அர்ச்சனா ஹலோ, அண்ணா என்றிட அண்ணி நான் ரோனி என்றவள் பேச ஆரம்பித்தாள். வீட்டில் உள்ள எல்லோருடனும் பேச ஆரம்பித்தவள் போனை வைப்பதாக தெரியவில்லை.

 

அவள் போன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தான் உதய். ஒரு வழியாக அவள் பேசி் முடித்திட என்ன மேடம் பேசி முடிச்சுட்டிங்களா என்றான் உதய். பேசிட்டேன் மாமா என்றவள் அவனுடன் வெளியே சென்றாள்.

 

என்ன ரோனி உனக்கு சந்தோசம் இல்லையா என்றவனிடம் அப்படி எல்லாம் இல்லை மாமா நான் ரொம்ப சந்தோசமா தான் இருக்கிறேன் என்றாள் வெரோனிகா. சரி என்றவன் அவளுடன் ஷாப்பிங் சென்றிட அவளோ தன் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தேவையான பரிசுப் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தாள். அந்த மூன்று நாட்களும் நன்றாக ஊரைச் சுற்றி பார்த்து விட்டு , வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி விட்டு இருந்தனர்.

 

என்னடி இது நீங்க ஹனிமூன் போனிங்களா இல்லை ஷாப்பிங் போனிங்களா பெட்டி முழுக்க வீட்டில் உள்ளவங்களுக்கு தான் பொருள் வாங்கிட்டு வந்திருக்க என்ற மலர்கொடியிடம் அத்தை ஹனிமூன் போனால் வீட்டாளுங்களுக்காக ஷாப்பிங் பண்ண கூடாதுன்னு எதுனாலும் ரூல்ஸ் இருக்கிறதா என்ன என்ற வெரோனிகா தன்னறைக்கு வந்தாள்.

 

என்னாச்சு ரோனி என்ற உதயச்சந்திரனிடம் ஒன்றும் இல்லையே என்றவள் இந்த கிப்ட் தேவ் மாமாவுக்கும், ஸ்ரீஜா அக்காவுக்கும், நிலா பாப்பாவுக்கும் வாங்கினது. நான் கொடுத்தால் அவங்க தப்பா நினைப்பாங்க , சண்டை போடுவாங்க அவங்களை விட்டுட்டு மற்ற எல்லோருக்கும் கொடுத்தால் அத்தை மனசும், வசுந்தரா பெரியம்மா  மனசும் சங்கடம் படும்.  அதனால மாமா நீங்களே இதை தேவ் மாமாகிட்ட கொடுத்துறிங்களா என்றாள் வெரோனிகா.

 

 

சரி ரோனி என்றவன் அந்த கவரை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். தோட்டத்தில் தேவ் அமர்ந்திருக்க அவனருகில் வந்து அமர்ந்தான் உதய். தேவ் என்றிட சொல்லு அண்ணா என்றான் தேவ். உன் அண்ணி இதை கொடுக்க சொன்னாள் என்றவனை மௌனமாக பார்த்தான் தேவ்.

 

அவளே பார்த்து, பார்த்து வாங்கினாள். ஆனால் அவள் கொடுத்தால் என்று இழுத்தவனது கையை பிடித்த தேவ் எனக்கு புரியுது அண்ணா நீ கவலைப் படாதே என்றவன் அந்த கவரை வாங்கிக் கொண்டான். நிலாவுக்கு எதற்கு இவ்வளவு என்ற தேவ் இடம் ரோனிக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அவளோட அண்ணன் பையனை இவள் தான் பிறந்த ஒரு மாதத்தில் இருந்து எங்க கல்யாணம் வரை பார்த்து பார்த்து வளர்த்திருக்கிறாள். எங்க கல்யாணம் முடிஞ்சு அவள் இங்கே வந்த பிறகு கதிர் ஒரு வாரம் சரியா சாப்பிடவே இல்லையாம் என்றான் உதய்.

 

அப்போ சீக்கிரமே குட்டி உதய் பெத்துக்கலாமே என்ற தேவ் இடம் இப்போ என்ன அவசரம் அவள் டிகிரி வாங்கட்டும் அப்பறம் பார்த்துக்கலாம் என்றான் உதய். என்ன அண்ணா பேசுற அப்போ அன்னைக்கு என்று தயங்கியவனிடம் அன்னைக்கு எல்லா சடங்கும் முறையா நடந்துச்சு ஆனால் அது இப்பவே தொடரணும்னு அவசியம் இல்லையே.

 

அவள் இப்போ படிக்கட்டும் குழந்தைக்கு என்ன அவசரம். இப்போ தான் நம்ம வீட்டில் நிலா இருக்கிறாளே அது போதும் என்றவன் அன்னைக்கு நடந்ததே எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு. அவள் ரொம்ப சின்னப் பொண்ணு அவளை அதற்குள்ள குடும்ப வாழ்க்கைக்குள்ள இழுத்து என்றவனிடம் அதனால என்ன அண்ணா. அண்ணி ரொம்ப மெச்சுர்ட் ஆன பொண்ணு அவங்க எல்லாமே புரிஞ்சுப்பாங்க என்றான் தேவ்.

 

 

அப்பறம் அண்ணா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் இங்கே வேண்டாம் வெளியில் போகலாமா என்றான் தேவ். சரி தேவ் ஈவ்னிங் போகலாம் எனக்கு இப்போ ரோனியோட காலேஜ் அட்மிசன் விசயமா வெளியில் போக வேண்டிய வேலை இருக்கு என்றிட ஓகே அண்ணா என்றான் தேவ்.

 

 

என்ன ஊர்மி ஏன் டல்லா இருக்க என்றிட இல்லை ரோனி அர்ஜுனுக்கு ஐஐடி டெல்லில சீட் கிடைச்சுருக்கு, நிகிலா, விஷால், கிஷோர் மூன்று பேரும் ஐஐடி என்ட்ரன்ஸ்ல ஸ்கோர் பண்ணலை எனக்கு கம்பெனிக்கு யாருமே இல்லை அதான் பீலிங்ஸ் என்றாள் ஊர்மிளா. ஏய் சூப்பர் அர்ஜுனுக்கு டெல்லில சீட் அலார்ட் ஆகிருக்கா அப்போ உனக்கு என்றாள் வெரோனிகா.

 

எனக்கு கான்பூர், உத்திரப்பிரதேஷம் என்றாள் ஊர்மிளா முகத்தை சோகமாக வைத்தபடி.

 

என்னவாம் மகாராணி ரொம்ப சோகமா இருக்காங்க என்ற சுசீலாவிடம் அவளுக்கு ஐஐடிகான்பூர்ல சீட் கிடைச்சதை பற்றி தான் சொல்லிட்டு இருக்கிறாள் அத்தை என்றாள் வெரோனிகா.

 

சந்தோசமான விசயம் தானே ஊர்மி ஏன் நீ சோகமா இருக்கிறாய் என்றவள் அர்ஜுனுக்கு போன் செய்தாள்.

 

என்ன ரோனி எப்படி இருக்கிற என்ற அர்ஜுனிடம் ரொம்ப நல்லா இருக்கிறேன் அர்ஜுன் என்றவள் வாழ்த்துக்கள் என்றிட தாங்க்ஸ் என்றான் அர்ஜுன். உனக்கும், ஊர்மிக்கும் ஐஐடில சீட் கிடைச்சதால இன்னைக்கு ஈவ்னிங் என்னோட ட்ரீட் என்றாள் வெரோனிகா. நம்ம ப்ரண்ட்ஸ் எல்லோரும் ஈவ்னிங் மீட் பண்ணுகிறோம் என்றிட சரி ரோனி என்ற அர்ஜுன் போனை வைத்தான்.

 

அர்ஜுன் சாப்பிட வாப்பா என்று வந்த கிரிஜாவிடம் இல்லைம்மா ப்ரண்ட்ஸ் கூட வெளியில் போகிறேன். அங்கே சாப்பிட்டுக்கிறேன் என்றவனிடம் என்னப்பா ட்ரீட் கொடுக்கிறாயா என்றிட இல்லைம்மா ரோனி தான் டிரீட் கொடுக்கிறாள் என்ற அர்ஜுனிடம் சரிப்பா என்ற கிரிஜா ரோனியை ஒரு நாள் வீட்டுக்கு அழைச்சுட்டு வா என்றார்.

 

இன்னைக்கே கூட கூட்டிட்டி வரேன் என்றவன் அம்மா பேசாமல் நீங்களும் என் கூட வாங்களேன் என்றான் அர்ஜுன். அர்ஜுன் நீ உன் நண்பர்களோட சந்தோசமா போயிட்டு வா என்றார்.

 

 

என்ன மச்சான் சந்தோசமா என்ற விஷாலிடம் சந்தோசம் தான்டா ஆனால் உங்களை விட்டு பிரியுறோம்னு கொஞ்சம் வருத்தமா இருக்கு என்றான் அர்ஜுன். எனக்கும் டெல்லில சீட் கிடைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்றாள் ஊர்மிளா. ஊர்மி ஏன் இப்படி இருக்க எங்கே சீட் கிடைத்தால் என்ன இரண்டு பேரும் நல்லா படிங்க என்ற வெரோனிகா என்ன சாப்பிடலாம் என்றாள்.

 

ஐவரும் அவர்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு முடித்தனர். ரோனி என்ற அர்ஜுனிடம் சொல்லு அர்ஜுன் என்றாள் வெரோனிகா. நீ எங்க வீட்டிக்கு வருகிறாயா அம்மா உன்னை பார்க்கனும்னு கேட்டாங்க என்றிட அவ்வளவு தானே எல்லோரும் நேரா உன் வீட்டுக்கே போகலாம் என்றாள் வெரோனிகா.

 

ஐவரும் அர்ஜுன் வீட்டிற்கு சென்றனர். கிரிஜா இவர்களுக்காக ஸ்வீட் செய்து வைத்திருந்தார். ஆன்ட்டி ஸ்வீட் சூப்பரா இருக்கு. நீங்களே செய்திங்கனு அர்ஜுன் சொன்னான். எனக்கும் ரெசிபி சொல்லுங்க நானும் சந்துரு மாமாவுக்கு செய்து கொடுக்கிறேன் என்றவளிடம் ரெசிபி சொல்றேன் ரோனிமா. நீ இப்பவும் உன் சந்துரு மாமாவுக்கு எடுத்துட்டு போகலாம் என்றார் கிரிஜா.

 

 

தாங்க்ஸ் ஆண்ட்டி என்ற வெரோனிகா அவருடன் வாயடித்துக் கொண்டிருக்க கிஷோர், விஷால் இருவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

என்னடா உங்களுக்குள்ளே என்னமோ பேசி சிரிக்கிறிங்க என்ற ஊர்மிளாவிடம் என்ன பேசுறோம். பசங்களுக்குள்ள ஆயிரம் விசயம் இருக்கும் அதை எல்லாம் ஓபனா சொல்ல முடியுமா என்ற கிஷோரை முறைத்த ஊர்மிளா விஷால் அவன் உன் காதில் என்ன சொன்னான் இப்போ சொல்லியே ஆகனும் என்றிட அவனும் சொன்னான். அதைக் கேட்ட ஊர்மிளா கோபமாக கிஷோரை முறைத்தாள்.

 

 

 

…..தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!