03. காதலோ துளி விஷம் 💧

4.8
(70)

விஷம் – 03

யாழவன் இந்தியா வந்து மூன்று நாட்கள் முழுதாக முடிந்துவிட்டன.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கோஸ்ட் பிளாக் பேட்ஜ் மாடல் காரோ காற்றை கிழித்துக்கொண்டு அந்த வீதியில் வேகமாக சென்று கொண்டிருந்தது.

தன்னிடம் உள்ள நேரமோ மிகவும் குறுகியது என்பதை அறிந்து கொண்ட யாழவனோ எல்லை மீறிய வேகத்தில்தான் அந்தக் காரை எரிச்சலுடன் செலுத்திக் கொண்டிருந்தான்.

அவனுடைய தந்தையோ அவசர வேலையாக கோவா சென்றுவிட அவர் செல்ல வேண்டிய முக்கியமான பிஸ்னஸ் மீட்டிங்கோ யாழவனின் தலையில் வந்து வீழ்ந்தது.

மறுக்க முடியாமல் அவசர அவசரமாக தயாராகி வேகமாக அந்த மீட்டிங் நடக்கும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் அவன்.

அதே நேரத்தில் அவனது அலைபேசியோ அதிரத் தொடங்க, அதை ஆன் செய்து தன் காதில் வைத்ததும்,

“யாழவன் சார் அந்த ஃபாரின் கம்பனியோட மேனேஜர் வந்துட்டாரு..” என மறுபக்கத்திலிருந்து அவனுடைய தந்தையின் பிஏ கூறினார்.

“ஃபைன்… நான் ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன்.. சோ கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.. இன்னும் 5 மினிட்ஸ்ல ஆபீஸ்க்கு வந்துருவேன்..” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவனின் வலது கால் காரின் ஆக்சிலேட்டரை மேலும் அழுத்தத் தொடங்கியது.

தன் ஒற்றைக் கரத்தினை கார் ஷ்டேரிங்கின் மீது தட்டியபடியே இலாவகமாக அவன் வண்டியை செலுத்த,

அவனின் முன்னே சென்று கொண்டிருந்த ஓர் மோட்டார் பைக் வலது பக்க சமிஞ்சையை காட்டியபடி செல்ல தனது காரை இடப்பக்கமாக செலுத்திக் கொண்டே முந்திச் செல்ல முயன்றான் அவன்.

அவனுடைய கெட்ட நேரமோ என்னவோ அந்த பைக்கோ சமிஞ்சை காட்டிய திசைப் பக்கம் திரும்பாமல் அவன் முந்திச் செல்ல முயன்ற பக்கமாகத் திரும்பிவிட, யாழவன் வேகத்தை குறைப்பதற்காக பிரேக்கை அழுத்திய போது அவனது காரோ கட்டுப்பாடு இன்றி பாதையின் வெளியே இருந்த ஓர் மரத்தின் மீது வேகமாக மோதி நின்றது.

அவனது உயர்தர காரில் உள்ள விசேட சில அம்சங்களினால் பெரிய அடி ஏதும் ஏற்படாமல் உடலின் சில இடங்களில் மட்டும் காயங்களோடு முடிவடைந்தது அந்த திடீர் விபத்து.

“வாட் த ×××××××” என அந்த மோட்டார் பைக்கை செலுத்தியவனுக்கு கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்தவன் அப்போதுதான் தன் கையின் அதீத வலியை உணர்ந்தான்.

கரத்தின் அதீத வலியோ அவனால் இப்போது தன் கையை அசைக்கக்கூட முடியாது என்பதை உணர்த்தி விட,

தன் அலைபேசியை எடுத்து தந்தையின் பீஏவிற்கு அழைத்தவன் அவனது விபத்து தொடர்பாகக் கூறினான்.

அடுத்த சில நிமிடங்களுக்குள் அந்த விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த சிலர் அவனை இந்தியாவிலேயே மிகவும் பிரபல்யமான தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான ‘வீ கேர்’ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

“சார் உங்க அப்பாகிட்ட ஆக்ஸிடன்ட் பத்தி இன்ஃபார்ம் பண்ணிட்டோம்..” என அவனருகே இருந்த ஆண் மருத்துவர் கூற,

“வாட்…? எதுக்காக நீங்க என்னோட அப்பாகிட்ட பேசினீங்க..? சாதாரண ஒரு சின்ன விஷயம்தானே இது..?” என அங்கே இருந்த மருத்துவரை சற்றே சீற்றம் தொணிக்கும் விதத்தில் புருவம் உயர்த்திக் கேட்டான் அவன்.

அந்த மருத்துவரோ எவ்வித பதிலும் கூறாமல் தலையை குனிந்த படி நிற்க, அவனோ தனது இடது கையினை லேசாக அழுத்தியபடி “கோ டு ஹெல்…” எனத் திட்டியவன், காலில் உதிரம் கசிவதை உணர்ந்தான்.

“சார் உங்களோட ஹேண்ட்லதான் சின்ன டிஃபரென்ட் தெரியுது.. நாம ஸ்கேன் பண்ணிப் பார்த்துடலாம்..” என அந்த மருத்துவர் கூற,

“நோ இது சின்ன பெயின்தான்.. நான் இப்பவே கிளம்பி ஆகணும்.. கால்ல இருக்க காயத்துக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணிட்டு பெயின் கில்லர் கொடுங்க போதும்..” என்றான் அவன்.

“நோ சார்.. உங்களோட கை கொஞ்சம் வீங்கின மாதிரி இருக்கு..” எனக் கூறியபடி அந்த மருத்துவர் அவனது கையின் மீது ஓர் ஐஸ் க்யூப்பை வைத்து அவனுக்கான முதலுதவிகளை செய்தபடியே உள்ளே அழைத்துச் சென்றார்.

அவன் அந்த மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த நொடியில் இருந்து அவனுக்கு ராஜ மரியாதைதான்.

மருத்துவமனையில் அவனுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவசர கதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அவனுக்கு ஒன்றென்றதும் எதற்காக அந்த ஒட்டுமொத்த மருத்துவமனையும் பதற வேண்டும்..?

பின்னே அவர்களுக்கு ஊழியம் கொடுக்கும் முதலாளியின் ஒரே மகன் அவன் அல்லவா. அவனுக்கு ஒன்றென்றால் அவனுடைய ஊழியர்கள் பதறத்தானே செய்வர்.

அவர்களுடைய அதீத கவனிப்பும் அவனுக்கு எரிச்சலைத்தான் உண்டாக்கியது.

“எதுக்காக இப்போ இப்படி சீன் கிரியேட் பண்றீங்க..? எனக்கு சின்ன அடிதான் பட்டுருக்கு.. பட் நீங்க எல்லாரும் ரொம்ப ஓவரா ரியாக்ட் பண்றீங்களே வை..? ஓ காட் ப்ளீஸ் எல்லாரும் என்னையே பார்த்துட்டு இருக்காம உங்க வேலையப் போய் பாருங்க..” என அந்த மருத்துவமனையின் பிரதான வைத்தியரிடம் எரிச்சலுடன் கூறினான் யாழவன்.

“நோ சார் உங்களோட அப்பா உங்கள ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்கச் சொன்னார்.. சோ..” என அவர் தயக்கத்துடன் இழுக்க,

“நான் என்ன குழந்தையா நீங்க எல்லாரும் சேர்ந்து என்ன ஜாக்கிரதையா பார்த்துக்கிறதுக்கு..? எந்த ரீசனுமே நீங்க சொல்ல வேணாம்.. இப்போ இங்க இருந்து போங்க.. நானே உள்ள நடந்து வர்றேன்..” எனக் கூறிய யாழவனோ அங்கிருந்தவர்களை விலகிச் செல்லக் கூறி விட்டு மெதுவாக நடந்து செல்லத் தொடங்கினான்.

காலில் அதீத வலியை உணர்ந்தாலும் கூட அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் கம்பீரமான நடையுடன் உள்ளே சென்று கொண்டிருந்தவனுக்கோ அங்கிருந்த இரு பெண்களின் உரையாடல் அவனது செவிகளைத் தீண்டியது.

“எதுக்காக பானு ஹாஸ்பிடலே ரொம்ப பரபரப்பா இருக்கு..? நம்ம சார் கூட வாசல்லையே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரே..” என அர்ச்சனா கேட்க,

“யாரோ ஒரு பெரிய பிஸ்னஸ் மேனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடிச்சாம்.. சோ அவரோட ட்ரீட்மென்ட் சம்பந்தமா நம்மளோட ஹாஸ்பிடல் ஓனரே கால் பண்ணி பேசிருக்காருடி.. அதனாலதான் இவங்க எல்லாரும் அந்த விஐபி பேஷன்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க..” என்றாள் பானுமதி.

“ஹேய் இதெல்லாம் டூ மச் பானு.. யாரா இருந்தாலும் ஹாஸ்பிடல்ல எப்பவுமே எல்லோருக்கும் ஒரே மாதிரியான ட்ரீட்மென்ட்தானே பண்ணனும்.. அதென்ன இவருக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்..?”

“சும்மா இருடி.. அவங்க பணக்காரங்க.. காசு இருக்கு அனுபவிக்கிறாங்க..” என்றாள் பானுமதி.

“பணம் இருக்கிறதெல்லாம் ஓகே தான்.. அதுக்காக ஹாஸ்பிடல் ட்ரீட்மென்டுக்கு கூடவா சிபாரிசு பண்ணுவாங்க..? சில்லியா இருக்கு..” என அர்ச்சனா கூற,

அனைத்தையும் நன்றாக கேட்டுக் கொண்டு நின்ற யாழவனுக்கு முகம் கோபத்தில் சிவந்தே போனது.

ஏதோ இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பதற்காக அவன் கெஞ்சிக் கொண்டு நிற்பதைப் போல அல்லவா இந்தப் பெண் பேசுகின்றாள்.

எவ்வளவு திமிர் இவளுக்கு என எண்ணியவன் கோபத்தில் இறுகிப் போனான்.

உள்ளே வருவதாக கூறிய யாழவன் இன்னும் வராது போக மீண்டும் அவனைத் தேடி அங்கே வந்தார் தலைமை மருத்துவர்.

“சார் ஏன் இங்கேயே இருக்கீங்க..? உள்ள வாங்க.. உங்களுக்கு ப்ளீடிங் ஆகுது..” என அவர் பவ்யமாக அழைக்க,

அவரை அழுத்தமாகப் பார்த்தவன் “அதோ அந்த நர்ஸை வரச் சொல்லுங்க.. அவதான் எனக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கணும்..” என அர்ச்சனாவை நோக்கி தன்னுடைய விரலை நீட்டியவன் மருத்துவரை ஒரு கணம் அழுத்தமாகப் பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்து விட,

அவருக்கோ ஐயோ வென்றானது.

“அர்ச்சனா…” என சத்தமாக அழைத்தார் அவர்.

பானுமதியுடன் பேசிக்கொண்டே சில மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்த அர்ச்சனாவோ “எஸ் டாக்டர்..” என்றாள்.

“என்கூட வாம்மா..” என்றவர் யாழவன் சென்ற அறைக்குள் நுழைந்து விட,

‘என்ன எதுக்காக இப்போ கூப்பிடுறாரு..?’ என சிந்தித்தவாறே அவரைப் பின்தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைந்தாள் அர்ச்சனா.

“சொல்லுங்க டாக்டர்..” என கூறிய அர்ச்சனாவின் பார்வையோ அங்கே தன்னையே சற்று சீற்றத்துடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த யாழவனின் மீது ஒரு நொடி படிந்து மீண்டது.

அவனுடைய கோபப் பார்வையில் திகைத்துப் போனாள் அவள்.

“அர்ச்சனா இவரோட காயத்தை க்ளீன் பண்ணி உடனே மருந்து போடுங்க..” என்றார் அவர்.

“சார் பட் நான் இப்போ எமர்ஜென்சி வார்டுக்குப் போகணும்… டேப்லட்ஸ் எல்லாம் இன்னும் பைவ் மினிட்ஸ்ல அங்க இருக்க பேஷன்ஸ் எல்லோருக்கும் கொடுக்கணும்…” என தனக்கு இருந்த கடமையை எடுத்துக் கூறினாள் அவள்.

“ஏன் டாக்டர் இந்த நர்ஸ் சிபாரிசு பண்ணா கூட ட்ரீட்மென்ட் பண்ண மாட்டாங்களோ..?” என குத்தலாகக் கேட்டான் யாழவன்.

அவனுடைய சிபாரிசு என்ற கேள்வியில் சட்டென திரும்பி அவனைப் பார்த்தவளுக்கு அவளும் பானுமதியும் பேசிக்கொண்டிருந்த உரையாடலை இவன் கேட்டிருக்கிறான் என்பது புரிந்து போனது.

அதுமட்டுமின்றி இவன்தான் அந்த விஐபி பேஷண்ட் என்பதும் புரிய தன் விழிகளை ஒரு கணம் மூடித் திறந்தவள் தன்னுடைய தலைமை வைத்தியரைப் பார்த்தாள்.

“இட்ஸ் ஓகேமா.. நீ இவருக்கு டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிடு.. நான் வேற நர்ஸை உன்னோட வார்டுக்கு அனுப்பி வைக்கிறேன்..” என்றார் அந்த வைத்தியர்.

“பட் இவரை விட எமர்ஜென்சி வார்டுல இருக்க பேஷன்ஸ் கண்டிஷன்தானே இப்போ முக்கியம் சார்.. இந்த சின்ன காயத்துக்கு உடனே மருந்து போடணுமா என்ன..? வேணும்னா இவரை வெயிட் பண்ண சொல்லுங்க.. என்னோட வேலைய முடிச்சுட்டு வந்து இவருக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணி விடுறேன்..” என அர்ச்சனா அமைதியாகக் கூற யாழவனுக்கோ பொறுமை பறந்து போனது.

இவனைவிட தீவிரமான நிலைமையில் எவ்வளவோ நோயாளிகள் இருக்கும் போது இவனுக்கு மட்டும் இப்போதே சிகிச்சை கொடுக்க வேண்டுமா என்ற கேள்விதான் அவளை மறுக்கச் செய்தது.

“அர்ச்சனா இவர் யாருன்னு தெரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க.. இவர்தான் நம்ம ஹாஸ்பிடல் ஓனரோட ஒரே சன்..”

“சாரி சார் யாரா இருந்தாலும் என்னப் பொறுத்த வரைக்கும் எல்லாரும் பேஷண்ட்ஸ்தான்..” என்றாள் அவள்.

யாழவனின் உருவங்களோ உச்சி மேட்டைத் தொட்டு மீண்டன.

இதுவரை அவன் பார்த்த பெண்கள் எல்லாம் அவனுடன் உரையாடுவதற்கு வரிசையில் வழிந்து கொண்டு நிற்பதைத்தான் பார்த்திருக்கிறான்.

முதல்முறையாக தன்னை அலட்சியப்படுத்தும் பெண்ணைப் பார்த்ததும் அவனால் அந்த அலட்சியத்தை தாங்கிக்கொள்ள முடியாமற் போனது.

தலைமை வைத்தியருக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை. எப்போதும் எதிர்த்து பேசாத பெண் இன்று இப்படிப் பேசியதும் அவருக்கோ திணறலாகத்தான் இருந்தது.

தயக்கத்துடன் யாழவனை திரும்பிப் பார்த்தவர் அவனுடைய அனல் கக்கும் பார்வையில் அதிர்ந்து,

“அர்ச்சனா டூ வாட் ஐ சே.. எமர்ஜென்சி வார்டுல இருக்க உன்னோட பேஷண்டை நானே போய் பார்க்கிறேன்..” என்றவர் அவளுடைய கரங்களில் இருந்த மாத்திரையை பிடுங்காத குறையாக பறித்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்றவுடன் அவளை ஏளனமாக பார்த்து புருவம் உயர்த்திச் சிரித்தான் யாழவன்.

அவனை உணர்வுகள் அற்ற பார்வை பார்த்தாள் அவள்.

ஏனோ இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அவ்வளவு கோபம் வந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 70

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “03. காதலோ துளி விஷம் 💧”

  1. Modhalla aarambichachu kadhalla mudipeenga. Adhane vinima?👌👌👌👌👌👌👏👏👏👏👏👏😍😍😍😍🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!