விதியின் முடிச்சு…78 to 80

4.5
(6)

அத்தியாயம் 78

 

வினித்ராவா அது யாரு என்ற ஷாலினியிடம் எங்க ஸ்கூல் டீச்சர் இவளோட மாமாவும், அவங்களும் லவ் பண்ணுறாங்கனு சும்மா கொளுத்திப் போட்டோம் என்று சிரித்தாள் கார்த்திகா. அடிப் பாவிகளா இது வேறையா என்ற ஷாலினி அப்போ இப்போ வந்தவர் தான் வெரோனிகாவோட ஆளா என்றாள். இல்லை சும்மா சொன்னேன். அவளோட ஆளு யாருன்னு அவளுக்குத் தானே தெரியும் அந்த சீனியர் பசங்களுக்காக சொன்னேன் என்ற கார்த்திகா சிரித்திட நீ பயங்கரமான ஆளா இருப்ப போலையே என்ற ஷாலினி உன்கிட்ட உஷாரா தான் இருக்கனும் என்றாள்.

 

ஸாரி அண்ணி என்ற பிரகாஷிடம் ஏன் மாமா என்றாள் வெரோனிகா. இல்லை உங்க ப்ரண்ட்ஸ் இருந்தாங்களே அதான் அவங்க முன்னாடி அண்ணினு கூப்பிட வேண்டாம்னு ரோனின்னு கூப்பிட்டேன் என்றான். அதனால என்ன மாமா நான் தப்பா எடுத்துக்கவில்லை என்ற வெரோனிகா அவனுடன் வீட்டிற்கு வந்தாள்.

 

மச்சான் நிஜமாவே வந்தவன் அந்தப் பொண்ணோட ஆளா என்ற சந்தோஷிடம் தெரியலைடா பார்க்கலாம் விடு என்றான் துவேஷ். 

 

என்ன ரோனி கோவமா என்ற உதயச்சந்திரனிடம் எதற்கு மாமா கோபம் என்றாள் வெரோனிகா. இல்லைம்மா பிரகாஷை அனுப்பினேனா நான் வராமல் என்றவனது மடியில் அமர்ந்தவள் அவனது கழுத்தில் மாலையாக கைகளை கோர்த்துக் கொண்டாள்.

 

சரி மாமா அதனால் என்ன உங்களுக்கு வேலை இருந்துச்சு அதனால பிரகாஷ் மாமாவை அனுப்பி வச்சிங்க என்றவள் மாமா நான் ஒன்றும் குழந்தை இல்லை. உங்களை புரிந்து கொள்ளாமல் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண என்றவளது மூக்கில் தன் மூக்கால் உரசியவன் என் ரோனி தான் பெரிய பொம்பளை ஆச்சே என்று சிரித்தான் உதய்.

 

சரி ரோனி காலேஜ்ல என்ன நடந்துச்சு என்றவனிடம் ஆடு நடந்துச்சு, கோழி நடந்துச்சு, நாய் நடந்துச்சு, நரி நடந்துச்சு என்றவளை அவன் முறைத்திட அச்சோ என் மாமாவுக்கு கோபம் வந்துருச்சா என் செல்லக் குட்டி என்று அவனது கண்ணுக்கு கீழே உள்ள மச்சத்தில் முத்தமிட்டாள்.

 

என்னடி இது இந்த மச்சத்துக்கு முத்தமா என்ன என்றவனிடம் உங்களுக்கு இந்த மச்சம் ரொம்ப அழகா இருக்கு மாமா அதான் என்றவளின் நெற்றியில் முட்டியவன் சொல்லு காலேஜ்ல என்ன இன்ட்ரஸ்டிங்கா நடந்துச்சு என்றான் உதய்.

 

ராகிங் மாமா ஒரு குரூப் சீனியர்ஸ் கூப்பிட்டு தினமும் அவங்களை பார்க்கும் போது விஷ் பண்ண சொன்னாங்க. விஷ் தானே பண்ணிரலாம், பண்ணிரலாம் என்றவள் மாமா நீங்க என்னை ஏமாத்திட்டிங்க என்றாள்.

 

என்னாச்சுடி நான் என்ன உன்னை ஏமாற்றினேன் என்றவனிடம் காலையில் என்ன சொன்னிங்க காலேஜ் போகும் பொழுது சாயங்காலம் எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தரேன்னு சொன்னிங்க தானே. நான் பிரகாஷ்மாமா கூட வந்தாலும் நீங்கள் மறக்காமல் எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்திருக்கனுமா என்ன என்றாள் வெரோனிகா. அச்சோ ரோனி ஸாரிடி மறந்துட்டேன் என்றவன் சரி ஒன்று பண்ணலாம் இப்போ நாம வெளியில் போயி ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்ன சொல்லுற என்றிட சரி ஓகே என்றாள் வெரோனிகா.

 

இருவரும் சந்தோசமாக வெளியில் கிளம்பினர். மாமா ஊர்மிளா போன் பண்ணினாளா என்ற வெரோனிகாவிடம் பேசினாள் ரோனி. உன்னைக் கூட கேட்டாள் என்றான் உதய். பொய் சொல்லாதிங்க மாமா என்றவளிடம் சத்தியம்டி என்றவன் அப்பறம் அந்த கிப்ட்டை நீ அர்ஜுன்கிட்ட கொடுத்தியா என்றான் உதய்.

 

அட ஆமாம்ல நான் அதை மறந்தே போயிட்டேன். ஊர்மிக்கு அவளோட லக்கேஜ்ல தெரியாமல் வச்சு விட்டேன். ஆனால் அர்ஜுனுக்கு கொடுக்கவில்லை என்றவள் வருந்திட சரி விடு அவன் லீவுக்கு வருவான் தானே அப்போ எதுனாலும் கிப்ட் ப்ரசண்ட் பண்ணிக்கலாம் என்றான் உதய். சரிங்க மாமா வீட்டுக்கு போகலாமா மழை வரும் போல இருக்கு. க்ளைமேட் ரொம்ப சில்லுனு இருக்கு நாம ஹனிமூன் போனப்ப ஊட்டியில் இருந்தது போல என்றவனிடம் ஸாரி ரோனி என்றான் உதய்.

 

எதற்கு மாமா என்றவளிடம் ஒரு முறை மட்டும் ஆசை காட்டி உன்னை பட்டினி போட்டுட்டு இருக்கேனோன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு என்ற உதயச்சந்திரனின் கன்னத்தில் கை வைத்தவள் மாமா என்ன இது. இரண்டு பேரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு தானே நான் மட்டும் தான் பட்டினியா நீங்களும் தானே என்றவள் என்ன மாமா எனக்கு தெரியாமல் வெளியில் சாப்பிடுறிங்களா என்றவளிடம் ஆமாம்டி இப்போ என்ன என்றான் உதய். 

 

ஆமாம் அப்படியே நீங்க சாப்பிட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பிங்க எனக்கு தெரியாதா என் சந்துரு மாமா பற்றி என்றவளது கன்னம் கிள்ளியவன் சரி கிளம்பலாமா என்றான். சரி மாமா என்றவள் சீட் பெல்ட்டை அணிந்து கொள்ள கார் கிளம்பியது.

 

மழை பெய்யுது மாமா என்றவள் பால்கணியில் நின்று மழையை ரசிக்க ஆரம்பித்தாள். என்ன பண்ணுற ரோனி நனையாதே அப்பறம் சளி பிடிக்கும் என்றவனின் மீது மழைத் தண்ணீரைப் பிடித்து வீசினாள். ஏய் என்றவனின் மீது மீண்டும் , மீண்டும் வீசிட அவனும் அவளுடன் சேர்ந்து தண்ணீரை தெளித்து விளையாடினான்.

 

வானில் ஒரு பயங்கர இடிச்சத்தம் கேட்டிட அதில் பயந்தவள் அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள். ரோனி பயந்துட்டியா என்றவனை அவள் விடவே இல்லை. அவன் சிரித்து விட்டு இதற்கு தான் சொன்னேன் கேட்கிறியாடி என்றவன் சரி வா என்று அவளை உடை மாற்றச் சொன்னான். மழையில் விளையாடியதுடன், இடிச்சத்தம் கேட்டு பயந்ததாலும் அவளது உடல் குளிரில் நடுங்கியது. வேறு உடை அணிந்த பிறகும் நடுங்கும் மனைவியை இறுக்கமாக அவன் அணைத்துக் கொள்ள அவனது மார்ப்புச் சூடு கொடுத்த கதகதப்பில் அவனுடன் ஒன்றி உறங்கினாள்.

 

என்ன சார் ரொம்ப நாள் அப்பறம் வெளியே கூட்டிட்டு வந்துருக்கிங்க என்ற அர்ச்சனாவிடம் ஸாரி அர்ச்சு கொஞ்சம் பிஸி என்ற விவேக். நம்ம கல்யாணம் முடிஞ்சு நிறைய லீவு இருக்கேடா அதான் அதற்குள்ள சில வேலைகளை முடிக்கலாம்னு என்றவனிடம் பரவாயில்லை மன்னிச்சுட்டேன் என்றாள் அர்ச்சனா.

 

சரி என்ன சாப்பிடுற என்றவனிடம் ஐஸ்கிரீம் என்றாள் அர்ச்சனா. சரி என்றவன் இருவருக்கும் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்து விட்டு அவளையே பார்த்தான். என்ன சார் இது வைத்த கண் எடுக்காமல் என்னையே பார்த்தால் எப்படி என்றவளிடம் இது என்னடி வம்பா இருக்கு என் பொண்டாட்டியை நான் பார்க்கிறேன். எவன் என்னை கேள்வி கேட்க முடியும் என்றான் விவேக். அவள் சிரித்து விட்டு சரி விவேக் க்ளைமேட் ரொம்ப சில்லுனு இருக்கு. மழை வரும் போல இருக்கு வீட்டுக்கு போகலாமா என்றாள். சரி போகலாம் என்றவன் அவளுடன் காரில் அமர்ந்ந நேரம் மழை வெளுத்து வாங்கியது. காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன் என்ன அர்ச்சு இது இவ்வளவு பெரிய பேய் மழை வண்டி ஓட்ட முடியவில்லை என்றதும் ஒரு அரைமணி நேரம் பார்க்கலாம் விவேக் என்றவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். 

 

அவளது கை விரல்களுடன் அவனது விரல்களை பிணைத்துக் கொண்டவன் அவளிடம் எதிர்காலம் பற்றி பேசிக் கொண்டிருந்தான். இருவருக்கும் இந்த தனிமை, வெளியில் பெய்யும் மழை, ஏசிக் காற்றின் குளிர் ஏதோ செய்ய அவளது முகத்தை கைகளில் ஏந்தியவன் என்ன நினைத்தானோ அவளது மென்னிதழில் மென்மையாக தன்னிதழை பதித்தான். மங்கை அவளோ அவனது சட்டையை ஆதரவிற்காக பிடித்தவள் அவனது காதலை இதழ் முத்தத்தில் உணர்ந்து லயித்திருக்க வானில் கேட்ட பலமான இடிச் சத்தம் அவர்களை தன்னிலை அடைய வைத்தது.

 

இருவரும் சட்டென்று விலகினர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திடாமல் வெட்கம் வந்து விட மன்னிச்சுரு அர்ச்சனா என்றான் விவேக். விவேக் என்றவளிடம் இதெல்லாம் கல்யாணத்திற்கு அப்பறம் தான்னு சொல்லிட்டு நானே மீறிட்டேன். சத்தியமா வேண்டும் என்னு பண்ணவில்லை என்றவனிடம் விடுங்க விவேக் என்றவள் வீட்டுக்கு போகலாம் என்றாள்.

 

சரியென்று காரை இயக்கியவன் அவளை அவளது வீட்டில் விட்ட பிறகு தன் வீட்டிற்கு சென்றான்.

 

என்னடி மாப்பிள்ளை ஏன் வீட்டுக்குள்ள வராமல் போயிட்டாரு என்ற சுசீலாவிடம் இல்லை சித்தி லேட் ஆகிருச்சு. மழை வேற அதான் என்ற அர்ச்சனா தன்னறைக்கு சென்றாள்.

 

என்ன நாத்தனாரே முகத்தில் பல்பு எரியுது போல என்ற இந்திரஜாவிடம் ஏன்டி நீ வேற என்று வெட்கத்தில் கன்னம் சிவந்தாள் அர்ச்சனா. பாருடா என் நாத்தனாருக்கு வெட்கம் எல்லாம் வருதே என்ற இந்திரஜாவிடம் பிரகாஷ் அண்ணாவை கூப்பிடுறேன் உனக்கும் வெட்கம் வரும் என்ற அர்ச்சனா சென்று மெத்தையில் சரிந்தாள். அவளை வம்பு செய்து கொண்டே இந்திரஜாவும் மெத்தையில் சரிந்து அவளுடன் பேசிக் கொண்டே உறங்கினாள்.

 

என்னடா குட்டி நீங்க ஏன் பயப்படுறிங்க அப்பா இருக்கேன்ல என்று இடிச் சத்தம் கேட்டு பயந்த தன் மகள் உதயநிலாவை சமாதானம் செய்து கொண்டிருந்தான் தேவ். பலத்த இடிச்சத்தம் கேட்டு பாவம் குழந்தை மிரண்டு போனாள். அவளை சமாதானம் செய்து உறங்க வைத்த தேவ் தானும் படுத்துக் கொள்ள ஸ்ரீஜா ஏதோ யோசனையுடன் குறுக்கும் ,நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

 

ஊர்மிளா தனது விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்தாள். அவளது அறைத் தோழி சஹானா வந்து அவளிடம் பேச ஆரம்பித்தாள். ஊர்மி நீ உன் பேம்லில யாரை ரொம்ப மிஸ் பண்ணுற என்ற சஹானாவிடம் என்னோட ரோனியை என்றாள் ஊர்மிளா.

 

ரோனி அது யாரு என்ற சஹானாவிடம் என்னோட அண்ணி. என்னோட பெஸ்ட் ப்ரண்ட். இரண்டு பேருக்கும் நடுவில் ஒரு சின்ன மிஸ் அன்டர் ஸ்டாண்டிங் அவளை நான் புரிந்து கொள்ளாமல் ரொம்ப காயப் படுத்திட்டேன் என்றாள் ஊர்மிளா.

 

நீ பண்ணின தப்பை உணர்ந்துட்டியா ஊர்மி என்ற சஹானாவிடம் நிச்சயமா சனா என்றாள் ஊர்மிளா. அப்போ உன் அண்ணிகிட்ட மன்னிப்பு கேளு ஊர்மி. தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேட்காமல் இருக்க கூடாது. அவங்க உன் அண்ணி தானே உன்னை புரிஞ்சுப்பாங்க என்றாள் சஹானா.

 

நிச்சயமா சனா என் ரோனி என்னை கண்டிப்பா புரிஞ்சுப்பா என்ற ஊர்மிளா வெரோனிகாவிற்கு போன் செய்தாள். கணவனின் அணைப்பில் உறங்கிக் கொண்டிருந்தவளின் மொபைல் போன் ஒலித்துக் கொண்டிருந்தது அமைதியாக. கல்லூரியில் சைலண்ட் மோடில் போட்ட போனை அவள் நார்மல் மோடிற்கு மாற்றவே இல்லை.

 

ரோனிக்கு தன் மேல் கோபம் போல அதனால் தான் போனை அட்டன் செய்ய வில்லை என்ற கவலையுடன் படுத்து உறங்கினாள் ஊர்மிளா.

 

                அத்தியாயம் 79

 

என்னம்மா என்ற நெடுஞ்செழியனிடம் சாப்பிட்டிங்களா என்றார் வசுந்தரா. அதெல்லாம் சாப்பிட்டேன் வசு என்றவர் மனைவியின் அருகே அமர்ந்தார். ஸ்ரீஜா என்ற வசுந்தராவிடம் அவளுக்கென்ன யார் குடியை கெடுக்கலாம்னு திட்டம் போட்டுட்டு இருப்பாள் என்ற நெடுஞ்செழியன் வசு உன் பொண்ணு உனக்கு உசத்தி தான். ஆனால் அவள் மட்டும் இல்லை இந்துவும் நம்ம பொண்ணு தான். அவளுக்காக நீ வாழ்ந்தே ஆகனும். ஸ்ரீஜா ஒன்றும் குழந்தை இல்லை ஒரு குழந்தையோட அம்மா . அவளோட வாழ்க்கையை சரி பண்ண நீ என்ன ட்ரை பண்ணினாலும் ஒன்றும் நடக்காது அதனால நீ கண்டதையும் யோசிக்காமல் உன்னைப் பற்றி மட்டும் யோசி. உன்னோட ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம் என்றிட சரிங்க என்றார் வசுந்தரா.

 

தேவ் என்ற ஸ்ரீஜாவிடம் என்ன என்றான் தேவ். ஐயம் ஸாரி என்றவளிடம் எதற்காக என்றான் தேவ். எல்லாத்துக்குமே தான் என்றவள் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ஆனால் இங்கே வேண்டாம் எங்கேயாச்சும் வெளியில் கூட்டிட்டு போயேன் என்றவளிடம் நமக்குள்ள பேச என்ன இருக்கு ஸ்ரீஜா. நீ திரும்ப , திரும்ப சொல்லப் போற ஒரே விசயம் உன்னோட வாழ்க்கையை அழிச்சவன் நான் அதானே. அது உண்மை தான். அன்னைக்கு எனக்கு இருந்த மெச்சுரிட்டி அப்படி. உன்னை என் அண்ணனுக்கு விட்டுக் கொடுக்க கூடாதுங்கிற போட்டி, உதய் மேல ஏற்பட்ட பொறாமை. எல்லாத்துக்கும் மேல உன் மேல வச்சுருந்த காதல் எல்லாம் சேர்ந்து என்னை மிருகமா மாத்தினுச்சு. உன் கிட்ட உதய் போல நடிச்சு உன்னை எனக்கு சொந்தமாக்கிகிட்டேன்.

 

அன்னைக்கு ராத்திரி நான் பண்ணின தப்புக்கு உன் காலில் விழுந்து பலமுறை மன்னிப்பு கேட்டுட்டேன். நீ என்னை மன்னிக்கவே வேண்டாம். உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கனும். தப்பு பண்ணினவன் தண்டனை அனுபவிக்கனும் அது தானே நியாயம். என்னை நீ தினம் , தினம் செருப்பால அடித்தால் கூட நான் வாங்கிப்பேன் . ஆனால் நீ ஒரு பாவமும் செய்யாத உதய் அண்ணாவை தண்டிக்கிற. அவனை நீ காதலிச்ச, அவனும் உன்னை காதலிச்சான் ஆனால் அவன் உன்னோட வாழ்க்கையை கெடுக்க நினைக்கவே இல்லையே. ஆனால் நீ அவனோட எதிர்கால வாழ்க்கையை அழிக்க எத்தனை மோசமான வேலையை பார்த்து வச்சுருக்க ஏன்டி உனக்கு இத்தனை வெறி. கேட்டால் உதய் மேல லவ் அவனை உன்னால மறக்க முடியலைன்னு மட்டும் சொல்லாதே. உன்னோடது லவ்வே கிடையாது. உண்மையா நீ உதய் மேல லவ் வச்சுருந்தால் அவனோட வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்னு மட்டும் தான் நினைச்சுருப்ப என்றான் தேவ்.

 

தேவ் என்றவளிடம் என்ன சொல்லப் போற இப்பவும் நீ உதய் மேல காதலா இருக்கிறாய்னு சொல்லப் போறியா என்றான் தேவ். தேவ் நான் என்ன சொல்ல வருகிறேன்னு ஒருமுறை கேளேன்டா என்றவளிடம் போதும் ஸ்ரீஜா நீ நிறையவே சொல்லிட்ட நானும் கேட்டுட்டேன். இனிமேல் கேட்க ஒன்றுமே இல்லை என்றவன் எனக்கு தூக்கம் வருது என்று விட்டு படுத்து விட்டான்.

 

உறக்கம் கலைந்து கண்விழித்த உதய் தன் மார்பில் குழந்தை போல் தூங்கும் மனைவி அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அவளது உறக்கம் கலையாமல் அவளை விட்டு பிரிந்து எழுந்தவன் சென்று குளியலறைக்குள் புகுந்தான்.

 

வெரோனிகா மெல்ல கண் விழித்தவள் எழுந்து தன் கணவனைத் தேடிட அவன் குளியலறைக்குள் இருந்து வெளிப்பட்டான். ஸாரி மாமா என்றவளிடம் எதற்குடி ஸாரி கேட்கிற என்றான் உதய். இல்லை தூங்கிட்டேனே என்றவளிடம் லூசு இதற்கு போயி ஸாரி சொல்லுவாங்களா என்றவன் சரி நான் கீழே போகிறேன். நீ குளிச்சுட்டு வா என்றவன் சென்று விட அவள் குளியலறைக்கு சென்றாள்.

 

அவன் கீழே வர ஸ்ரீஜா கிட்சனில் நின்றிருந்தாள். சித்தி என்று வந்தவனிடம் அத்தை இன்னும் எழுந்து வரவில்லை என்ற ஸ்ரீஜாவிடம் சரியென்று கூறி விட்டு அவன் வெளியே கிளம்ப காபி குடிக்கிறிங்களா என்றாள். இல்லை , பரவாயில்லை என்றவனிடம் விஷம் எல்லாம் வைக்க மாட்டேன். நம்பி குடிக்கலாம் என்றவள் அவனிடம் காபி கோப்பையை நீட்டினாள். தாங்க்ஸ் என்றவன் அதை குடித்தபடி அமர்ந்திருக்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா என்றாள் ஸ்ரீஜா.

 

என்கிட்ட பேச என்ன இருக்கு என்றவனிடம் எதுவுமே இல்லை தான். நான் பேசணும்னு சொன்னது நம்மளைப் பற்றி இல்லை. தேவ் பற்றி கொஞ்சம் பேசணும் இங்கே வேண்டாம். வெளியில் போயி பேசலாம் என்றவளிடம் இன்னைக்கு வேலை இருக்கு ஈவ்னிங் பேசலாம் என்றான் உதய்.

 

நான்கு மணிக்கு வட பழனி கோவிலுக்கு வந்திருங்க என்ற ஸ்ரீஜாவிடம் நான் வெரோனிகாவை காலேஜ்ல இருந்து அழைச்சுட்டு வரணும் என்றான் உதய். ஒரு நாள் அர்ச்சனா, பிரகாஷ் யாரையாவது கூட்டிட்டு வரச் சொல்லுங்களேன் என்றாள் ஸ்ரீஜா. சரி பார்க்கலாம் என்றவன் வெளியே சென்றான்.

 

எழுந்து வந்தவள் கிட்சனில் சுசீலா இல்லாமல் இருக்கவும் அத்தை என்று அவரது அறைக்கு சென்றாள் . சுசீலாவிற்கு உடம்பு சரியில்லை ரோனி என்ற இளமாறனிடம் என்னாச்சு மாமா என்றவள் பதறி அவர் அருகில் சென்றாள்.

 

அத்தை என்றவளிடம் ஒன்றும் இல்லைடி லேசான தலை சுற்றல் தான் நான் வந்து சமைக்கிறேன் என்றவரிடம் சும்மா இருங்க அத்தை இப்போ தான் சமைக்கிறிங்களாம். நீங்க உங்க உடம்பை பாத்துக்கவே மாட்டிங்களா. பெரிய அத்தை வேற வீட்டில் இல்லை என்றவள் மாமா அத்தையை நீங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க நான் வீட்டு வேலையை பார்த்துக்கிறேன் என்றாள் வெரோனிகா.

 

ரோனி நீ காலேஜ் போகனும்டி என்றவரிடம் ஒரு நாள் லீவு போட்டால் ஒன்றும் ஆகாது ஆச்சியும், அத்தையும் இருந்தால் உங்களுக்கு உடம்புக்கு முடியலைனாலும் வேலை பாருங்கனு விடுவாங்களா. இல்லை என் அம்மா முடியாமல் கிடந்தால் நான் காலேஜ் தான் முக்கியம்னு ஓடுவேனா பேசக் கூடாது என்றவள் இருங்க முதலில் டீ போட்டு தரேன். குடிச்சுட்டு மாமா கூட ஹாஸ்பிடல் போறிங்க என்றவள் கடகடவென மாமனார், மாமியாருக்கு டீ எடுத்து வந்தாள்.

 

ரோனி உன்னோட டீ குடிச்சதே எனக்கு தெம்பா இருக்குடி நான் பார்த்துக்கிறேன் நீ லீவு போட வேண்டாம் என்ற சுசீலாவை முறைத்தவள் ஒழுங்கா மாமா கூட ஹாஸ்பிடல் போங்க என்றவள் கடகடவென சமையல் வேலையை ஆரம்பித்தாள்.

 

அத்தைக்கு என்ன நீ ஏன் வேலை பார்க்கிற என்ற ஸ்ரீஜாவிடம் அத்தைக்கு உடம்பு சரியில்லை என்ற வெரோனிகா தன் வேலையில் கவனமாக இருந்தாள். நீ காலேஜ் போகனுமே என்றவளிடம் ஒரு நாள் லீவு போட்டால் ஒன்றும் பிரச்சனை ஆகாது என்றவள் சமையலை முடித்து  மருத்துவமனையில் இருக்கும் வசுந்தரா, நெடுஞ்செழியன் , மலர்கொடி, கல்யாணிதேவி நால்வருக்கும் உணவை எடுத்து வைத்தாள்.

 

உதய் வந்தவன் கிட்சனில் வெரோனிகா இருக்கவும் அவளை பின்னிருந்து அணைத்தான். என்ன மாமா இது என்றவளிடம் அதான்டி நானும் கேட்கிறேன் என்ன இது நீ கிட்சனில் என்ன பண்ணிட்டு இருக்கிறாய். சித்தி எங்கே என்றான்.

 

அத்தைக்கு உடம்பு சரியில்லை அவங்களுக்கு காலையில் இருந்து தலைசுற்றல் அதான் என்றவள் அவனது வாயில் குட்டி தோசையை ஊட்டினாள். இது என்னடி குட்டி தோசை என்றவனிடம் நிலாவுக்கு மாமா என்றாள்.

 

நிலாவுக்கு மட்டும் தானா என்றவளிடம் அவள் குழந்தை அதனால குட்டி தோசை நீங்க தான் பெரியப்பா ஆச்சே அதனால பெரிய தோசை தான் என்றவளது இடுப்பில் நறுக்கென்று கிள்ளினான். அவள் துள்ளி திரும்பிட பட்டென்று அவளது கன்னத்தில் முத்தமிட்டு அவன் ஓடிச் செல்ல அவள் தான் அதிர்ந்து போனாள். எப்ப பாரு இந்த மனுசனுக்கு இதே வேலையா போச்சு என்று அவள் முணகிக் கொண்டிருக்க யாருக்கு எதே வேலை ரோனி என்று வந்தாள் இந்திரஜா. 

 

ஒன்றும் இல்லைக்கா என்றவளிடம் ஒன்றும் இல்லையா நிஜமா தான் சொல்லுறியா என்ற இந்திரஜா அர்ச்சனா நீ பார்த்தியா என்றாள். ஓஓ பார்த்தேனே என்ற அர்ச்சனா இந்திரஜாவை கண்ணடித்து கிட்சன்ல ஒரு சூப்பர் ரொமான்ஸ் சீன் எப்படி மிஸ் பண்ணுவோம் என்றதும் ஐயோ, அண்ணி போதும் எல்லாம் இந்த சந்துரு மாமாவால வந்தது என்று கணவனைத் திட்டி தீர்த்தாள்.

 

ஏய் என் அண்ணனுக்கு புறை ஏற போகுதுடி என்ற அர்ச்சனாவிடம் நீங்க போங்க என்று சிணுங்கிய வெரோனிகா தன்னறைக்கு சென்றாள். அவளை கண்டு கொள்ளாமல் அவன் கிளம்பிட அவன் முன்னே வந்து நின்றாள்.

 

என்னாச்சுடி என்றவனிடம் என்ன நொன்னாச்சுடி உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது இடுப்பைக் கிள்ளாதிங்க, அசந்த நேரம் கன்னத்தில் முத்தம் கொடுக்காதிங்கனு எலலோரும் என்னை பார்த்து சிரிக்கிறாங்க என்றாள் வெரோனிகா.

 

அவளை தன் புறம் இழுத்தவன் என்ன உன் பிரச்சனை நான் இடுப்பை கிள்ளினதா இல்லை அவங்க உன்னைப் பார்த்து சிரிச்சதா என்றவனிடம் இரண்டும் தான் என்றாள். 

 

கிட்சன்ல வச்சு ரொமான்ஸ் யாரும் பண்ணுவாங்களா இந்து அக்காவும், அர்ச்சனா அண்ணியும் பார்த்துட்டாங்க. என் மானமே போச்சு என்றவளிடம் அப்போ நான் கிட்சன்ல வச்சு ரொமான்ஸ் பண்ணினது தான் தப்பா என்றான் உதய். ஆமாம் என்றவளிடம் சரி  ரோனி இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் என்றான் உதய்.

 

என்ன மாமா பட்டுனு மாட்டேன்னு சொல்லிட்டிங்க நான் அப்படித் தான் பண்ணுவேன் நீ என்னோட ரோனின்னு சொல்லுவிங்கனு நினைச்சேன் என்றவளைப் பார்த்து சிரித்தவன் ஏன்டி உனக்கு என்ன தான் வேண்டும் என்றான் உதய்.

 

நீங்கள் தான் என்றவள் மக்கு மாமா உங்களுக்கு லவ் பண்ணவே தெரியலை. நான் வேண்டாம்னு தான் சொல்லுவேன் பொண்ணாச்சே வெட்கம் வேண்டாமா. நீங்க தான் சொல்லனும் நீ என் பொண்டாட்டி உன் கிட்ட என்னோட உரிமையை நான் காட்டிட்டே இருப்பேன்னு போங்க மாமா என்றவள் அவனது மடியில் அமர்ந்திட அப்பாடி இந்த பொண்ணை புரிஞ்சுக்க நான் என்ன தான் பண்ணனுமோ என்றான்.

 

ஒன்றும் பண்ண வேண்டாம் எப்பவுமே என் கூட இப்படியே இருங்க அது போதும் என்றவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டு சரி சாப்பிட வாங்க என்றாள். எனக்கும் குட்டி தோசை வேண்டும் என்றவனிடம் அப்பாடா எனக்கு எது குழந்தைனே தெரியலை என்றாள் வெரோனிகா. புருசன் தான் பொண்டாட்டிக்கு முதல் குழந்தை என்று கண்ணடித்தவனிடம் அப்படியா சரி தான் டேய் சந்துரு சாப்பிட வாடா என்றாள்.

 

அடிக் கழுதை புருசனை டா போட்டு பேசுற என்று விரட்டிட மாமா ஸாரி என்றவள் ஓடியே விட்டாள்.

 

                 அத்தியாயம் 80

 

ஏய் ரோனி நில்லுடி என்றவன் அவளை எட்டிப் பிடித்தான். என்னடி சொன்ன என்றவனிடம் மாமா ஒன்றும் சொல்லவில்லை என்றாள் கண்களில் கெஞ்சலுடன். அவளது கையைப் பிடித்து தன்னருகில் இழுத்தவன் அவளை பின்னிருந்து அணைத்தபடி சொல்லுங்க மேடம் என்ன சொன்றிங்க டேய் சந்துரு, வாடாவா என்றவனிடம் மாமா, மாமா ஸாரி மாமா ரோனி பாவம் ப்ளீஸ் என்றவளிடம் ரோனி பாவமா என்றவன் அவளது காது மடலில் ஊதிட அதில் சிலிர்த்தவளின் குரல் கம்மியது. மாமா ப்ளீஸ் என்றவளது இடையில் நறுக்கென்று அவன் கிள்ளிட துள்ளி திரும்பியவள் அவன் ஓடும் முன்னமே பிடித்துக் கொண்டாள். என்னை எப்ப பாரு கிள்ளிட்டே இருக்கிங்க தானே உங்களை என்றவள் அவனது சட்டையைப் பிடித்து இழுத்து அவனது நெஞ்சில் பற்கள் பதிய லேசாக வலிக்கும் படி கடித்து விட்டாள்.

 

ஆ ஆ வெறி நாய், கடி நாய் வலிக்குதுடி என்றவனிடம் வலிக்குதா வலிக்கட்டும், வலிக்கட்டும் என்றவள் சரி போதும் விளையாட்டு சாப்பிடலாமா என்றவளிடம் சரி வா என்றவன் அவளுடன் சாப்பிட சென்றான்.

 

நிலாக்குட்டி உங்களுக்கு பெரியம்மா குட்டி தோசை சுட்டு வச்சுருக்கேன் என்று குழந்தைக்கு ஊட்டி விட்டாள் வெரோனிகா. அவளை அமைதியாக பார்த்த ஸ்ரீஜா ஏதோ சொல்ல வாயெடுக்க ரோனி என்றாள் இந்திரஜா. என்னக்கா என்றவளிடம் நீ ஏன் காலேஜ் லீவு போடுற இந்த வீட்டில் நீ ஒருத்தி இல்லை இன்னும் மூன்று பொண்ணுங்க இருக்கிறோம். அத்தைக்கு உடம்பு சரி இல்லைனா நீ தான் சமைக்கனுமா என்ன நானும், அர்ச்சனாவும் சமையலை கவனிச்சுக்கிறோம் நீ காலேஜ் புறப்படு என்றாள்.

 

ஆமாம் அண்ணி இந்து சொல்லுறது தான் சரி என்ற தேவ் நீ என்ன சொல்லுற பிரகாஷ் என்றான். அதை தான் அண்ணா நானும் சொல்ல வந்தேன் என்ற பிரகாஷ் அண்ணி கிளம்புங்க உங்களை  காலேஜ்ல விட்டுட்டு அண்ணா ஸ்கூல் போகட்டும் என்றான்.

 

இல்லை மாமா என்றவளிடம் அதான் சொல்கிறானே ரோனி நீ மட்டும் இல்லை இந்துவும் இந்த வீட்டோட மருமகள் தான். அதனால இந்துவுக்கும் ஒரு வாய்ப்பு கொடு என்றிட அப்படி சொல்லுங்க மாமா என்றாள் இந்திரஜா. ரோனி உன் அளவுக்கு இல்லைனாலும் நான் நல்லா தான் சமைப்பேன். என் கூட அர்ச்சனாவும் இருக்கிறாள் அப்பறம் என்ன நீ கிளம்பு என்றிட சரிங்க அக்கா என்றவள் சென்று கிளம்ப ஆரம்பித்தாள்.

 

என்னடி காலேஜ் கட் அடிக்க நீ போட்ட ப்ளான் பெய்லியரா என்றவனிடம் மாமா நான் ஒன்றும் கட் அடிக்க மாட்டேன் என்று சிணுங்கியவளை நெருங்கியவன் நீ என்ன பச்சைப் பாப்பாவா எப்போ பாரு சிணுங்கிட்டே இருக்க என்றான் உதய். பச்சைப் பாப்பா இல்லை ரோனிப் பாப்பா என்றவளது மூக்கைப் பிடித்தவன் ஆமாம், ஆமாம் ரோனி பாப்பாதான் என்றவன் சரி வேகமா கிளம்பு என்றான். 

 

அவளும் ரெடியாகி அவனுடன் கிளம்பினான். அந்த நேரம் அவனது போன் இசைத்திட சொல்லுங்க சித்தப்பா என்றான் உதய். அப்படியா சரி என்றவன் ரோனி சித்திக்கு பெரிசா ஒன்றும் இல்லையாம். பிபி கொஞ்சம் அதிகமாகிருச்சாம். மத்தபடி ஒன்றும் இல்லையாம். சித்தப்பா வீட்டுக்கு வந்து சித்தி கூட இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கிறாரு. அதனால  இன்னைக்கு ஸ்கூல் வரவில்லைனு சொன்னாரு. எனக்கு ஒரு வேலை சொல்லி இருக்கிறாரு என்றிட சரி மாமா நான் பிரகாஷ் மாமா கூட போயிக்கிறேன் என்றாள் வெரோனிகா.

 

ஸாரிடி என்றவனிடம் மாமா இதற்கெல்லாம் ஸாரி கேட்பிங்களா என்றவள் பிரகாஷ் மாமா என்றிட சொல்லுங்க அண்ணி என்று வந்தான் பிரகாஷ். மாமா இன்னைக்கு என்னை காலேஜ்ல டிராப் பண்ண முடியுமா என்றிட அண்ணி நீங்க இன்னைக்கு என் கூட வரிங்களா என்றான் தேவ். சரிங்க மாமா என்றவள் உதயச்சந்திரனை பார்த்திட போயிட்டு வா என்றான். 

 

என்ன அண்ணி என் கிட்ட என்னை டிராப் பண்ணுறிங்களானு கேட்க மாட்டிங்களா என்றான் தேவ். ஐயோ மாமா அப்படி இல்லை பிரகாஷ் மாமா கூட பைக்ல போயிருவேன். நீங்க கார்ல டிராப் பண்ணனுமே அதனால தான் என்றாள் வெரோனிகா. ஏன் அண்ணி உங்களுக்கு கார் பிடிக்காதா என்றவனிடம் அது ஏதோ பந்தா காட்டுறது மாதிரி இருக்கும். இதுவே பைக்னா அது நார்மல் தானே என்றவளை பார்த்து சிரித்தவன் நல்ல பொண்ணு அண்ணி நீங்க என்றான் தேவ்.

 

அண்ணி என்றவனிடம் சொல்லுங்க தேவ் மாமா என்றாள் வெரோனிகா. அத்தை இன்னைக்கு குணமாகி இருக்காங்கனா அதற்கு காரணமே நீங்க தான். அவங்களோட மனநிலையை சரியான நேரத்தில் பக்குவமா பேசி நிதானமாக்கினிங்க அதனால தான் இன்னைக்கு அவங்க குணமாகி இருக்காங்க என்றவனிடம் மாமா அவங்க என் அம்மா மாதிரி. அவங்களை காப்பாத்தனும்ங்கிற பொறுப்பு எனக்கும் இருக்கு என்றாள் வெரோனிகா.

 

அண்ணி ஒரு விசயம் சொல்லவா நிஜமாவே சொல்லுறேன் அடுத்த ஜென்மம்னு ஒன்று இருந்தால் உங்களுக்கு மகனா பிறக்கனும்னு ஆசை என்றான் தேவ். அவனைப் பார்த்து சிரித்தவள் அதற்கு ஏன் அடுத்த ஜென்மம் இப்பவே நீங்க என்னோட மகன் தான். அண்ணியும், அம்மாவும் வேற வேற இல்லையே என்றவளைப் பார்த்து சிரித்தவன் உதய் ரொம்ப லக்கி அண்ணி என்றான்.

 

நான் தான் மாமா ரொம்ப லக்கி உதய் மாமா என்னோட வாழ்க்கையில் எனக்கு கிடைச்ச பொக்கிஷம் அவரை மட்டும் எந்த சூழ்நிலையிலும் தொலைக்கவே மாட்டேன் என்றவள் மாமா தப்பா நினைக்காதிங்க என்றாள்.

 

என்ன அண்ணி என்றவனிடம் ஸ்ரீஜா அக்கா கிட்ட நீங்க பேசுறது இல்லையா என்றவளிடம் பேசி என்ன ஆகப் போகுது அண்ணி எனக்கு எல்லாமே வெறுத்துப் போச்சு என்றவன் இதோ காலேஜ் வந்துருச்சு என்றான்.

 

என்ன தேவ் மாமா நான் பேசினது பிடிக்கவில்லையா அதான் கிளம்பு நீ இறங்க வேண்டிய இடம் வந்துருச்சுனு சொல்லாமல் சொல்லுறிங்களா என்றிட ஐயோ அண்ணி நான் அப்படி சொல்லவில்லை என்றவனிடம் சரி, சரி புரியுது என்றவள் இறங்கினாள். மாமா இன்னைக்கு ஈவ்னிங் நீங்களே வந்து கூட்டிட்டு போக முடியுமா என்ற வெரோனிகாவிடம் ஏன் அண்ணி என்றான் தேவ். உங்க அண்ணாவுக்கு முக்கியமான வேலை இருக்குனு சொன்னாங்க என்றதும் சரிங்க அண்ணி நானே வரேன் என்ற தேவ் கிளம்பினான்.

 

என்ன ரோனி உங்க சந்துரு மாமாவோட பைக் என்ன ஆச்சு என்ற கார்த்திகாவிடம் பைக்குக்கு என்ன ஆகப் போகுது. அது நல்லா தான் இருக்கு. சந்துரு மாமா கூட அதில் தான் ஸ்கூலுக்கு போனாரு என்றவளிடம் என்ன சொல்லுற ரோனி அப்போ காரில் உன்னை இறக்கி விட்டது உன் சந்துரு மாமா இல்லையா என்றாள் ஷாலினி.

 

இல்லையே இவரு சந்நுரு மாமா இல்லை தேவ் மாமா என்றவள் சரி வாங்க கிளாஸுக்கு போகலாம் என்று தோழிகளுடன் வகுப்பறைக்கு சென்றாள். கார்த்திகா அவளது வகுப்பிற்கு சென்ற பிறகு வெரோனிகாவின் அருகில் வந்த ஷாலினி ரோனி இந்த கார்த்திகா கூட பழக்கம் வச்சுக்காதே என்றாள். ஏன் என்னாச்சு ஷாலினி என்றவளிடம் நேற்று ஒருத்தர் உன்னை கூட்டிட்டு போனாரே அவர் யாரு என்றாள் ஷாலினி. என்னோட பிரகாஷ் மாமா என்றாள் வெரோனிகா. அவரை நீ லவ் பண்ணுறியா என்றதும் ச்சீ யார் அப்படி சொன்னது அவர் என்னோட கொளுந்தன் என்றாள் வெரோனிகா.

 

எதே கொளுந்தனா என்ன சொல்லுற ரோனி என்றவளிடம் நீ என்னோட ப்ரண்ட் உன்கிட்ட மட்டும் சொல்லுறேன் ஷாலினி எனக்கு கல்யாணம் ஆகிருச்சு அது கார்த்திகாவுக்கு தெரியாது என்றவள் நேற்று மார்னிங் என்னை டிராப் பண்ணாங்களே சந்துரு மாமா அவர் தான் என்னோட ஹஸ்பண்ட் என்றாள் வெரோனிகா. தேவ் மாமா அவரோட ட்வின் பிரதர். பிரகாஷ் மாமா அவரோட சித்தப்பா பையன். எங்க பேம்லி ஜாயின்ட் பேம்லி என்றாள் வெரோனிகா.

 

என்ன சொல்லுற ரோனி நிஜமாவா என்ற ஷாலினியிடம் சத்தியம் ஷாலினி இதில் பொய் சொல்ல என்ன இருக்கு என்றவள் புன்னகைத்திட ஸாரி ரோனி என்ற ஷாலினி உன் ஹஸ்பண்ட்டை சைட் அடிச்சேன் என்றாள். அதற்கு கலகலவென சிரித்த ரோனி இதற்கு போயி ஸாரி சொல்லுற லூசு அதெல்லாம் நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன் என்று சிரித்தாள் வெரோனிகா.

 

என்ன யோசனை பேசனும்னு சொல்லி வரச் சொல்லிட்டு அமைதியா இருந்தால் என்ன அர்த்தம். எனக்கு வேலை இருக்கு என்றவனை பதிலே பேசாமல் அமைதியாக பார்த்தாள் ஸ்ரீஜா. இப்படி பார்த்தால் என்ன அர்த்தம் ரோனி எனக்காக காத்திருப்பாள் என்றவனிடம் அவள் தேவ் கூட வீட்டிற்கு போயிருப்பாள் என்ற ஸ்ரீஜாவை அமைதியாக பார்த்தான் உதய். உங்களோட ஒவ்வொரு அசைவையும் அவள் கிட்ட நீங்க மறைச்சதில்லையே என் கிட்ட பேசணும்ங்கிற விசயமும் சொல்லி இருப்பிங்க என்ற ஸ்ரீஜாவிடம் சரி அதை விடுங்க என்ன பேசணும் என்றான்.

 

சத்தியமா பொறாமையா இருக்கு மாமா அந்த வெரோனிகாவை பார்க்கும் பொழுது அவள் கிட்ட இருக்கிற சகிப்புத் தன்மை, பெருந்தன்மை என் கிட்ட சுத்தமா இல்லை. காரணமே இல்லாமல் அவளை எதிரியா பார்த்த என் மேல அவள் துளியும் வெறுப்பு காட்டனதில்லை. எப்படி முடியுது அவளால என்ற ஸ்ரீஜாவிடம் அது அவளோட இயல்பு என்றான் உதய்.

 

நீங்க ரோனி பற்றி பேசவா என்னை வரச் சொன்னிங்க என்ற உதய்யிடம் என்ன மாமா நீங்க, வாங்க , போங்கனு மரியாதையா பேசுறிங்க என்றவளிடம் என்னொட தம்பி மனைவி நீங்க அதற்கு உண்டான மரியாதையை நான் கொடுக்க வேண்டாமா என்றவனைப் பார்த்து கசந்த புன்னகை புரிந்தாள் ஸ்ரீஜா.

 

முதலில் என்னை மன்னிச்சுருங்க உதய் மாமா என்றவளை அவன் கேள்வியாக பார்த்திட தயா மாமான்னு கூப்பிடுற உரிமை எனக்கு இல்லை. அது ரோனியோட உரிமை என்றவள் உங்க வாழ்க்கையை கெடுக்க நான் ரெடி பண்ணின போலி ரிப்போர்ட்டிற்காக என்னை மன்னிக்கனும். அது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு நல்லாவே தெரியும் நான் எத்தனை மோசமா நடந்துக்கிட்டேன்னு இப்போ நினைச்சாலும் அதற்கு மன்னிப்பு கூட கேட்கிற தகுதி எனக்கு இல்லை என்றாள் ஸ்ரீஜா.

 

மணமேடையில் உங்களை அசிங்கப் படுத்தினேன். அது கூட என்னோட சுயநலம் தான் என்றவள் கண்ணீர் வடித்தாள். உங்களை அன்னைக்கு நான் மணமேடையில் வச்சு அசிங்கப் படுத்தின காரணம் ஒன்று தான். நீங்க இன்னொரு முறை மணமேடை ஏறக்கூடாது. எனக்கு இல்லாத வாழ்க்கை யாருக்கும் இருக்க கூடாதுன்னு நினைச்சதால தான். என்னை மன்னிச்சுருங்க மாமா என்றாள் ஸ்ரீஜா.

 

     

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!