சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 19
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
“சுந்தரியை எனக்கு கட்டி வச்சுட்டேன்னா நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கலாம்.. உனக்கு பதிலா அவ எனக்கு தெனமும் சந்தோஷத்தை கொடுப்பா இல்ல..?”
பாஸ்கர் கேட்க அவன் கையைப் பிடித்து இருந்த தன் கையை உதறி உச்ச கட்ட அருவருப்புடன் அவனை எரித்துவிடுவது போல் முறைத்துக்கொண்டு அப்படியே கீழே தள்ளினாள்.. ரதி…
அந்நேரம் அவள் உருவம் பார்க்க பத்ரகாளி போல் மாறி இருந்தது..
பெரிய மூச்சுகளை விட்டுக் கொண்டு கண்கள் இரண்டும் சிவப்பேறி இருக்க அவனைப் பார்த்தவள்.. “உனக்கு எவ்வளவு திமிரும் தெனாவட்டும் இருந்தா.. என்கிட்டயே வந்து என் தங்கச்சியை கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்லுவே.. முதல் தடவை நீ குடிச்சிட்டு வந்தப்பவே உன்னை வெக்கிற இடத்தில வெச்சிருக்கணும்டா.. என் புருஷன் ஆச்சே.. நான் உயிருக்கு உயிரா நெனச்சவனாச்சேன்னு நான் உனக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுத்து உனக்கு ஒரு புள்ளையும் பெத்து கொடுத்து உனக்காக எல்லா வேலையும் இந்த வீட்டில செஞ்சு ஓடா தேஞ்சுக்கிட்டு இருக்கேன் இல்ல.. நீ இப்படித்தான்டா திமிரெடுத்து போய் திரியுவ..” என்றவள் அவன் சட்டை காலரை பிடித்து தர தரவென்று இழுத்துக் கொண்டு போய் வீட்டிற்கு வெளியே தள்ளினாள்..
கஷ்டப்பட்டு சுதாரித்து எழுந்தவன் “என்னடி.. புருஷனை மரியாதை இல்லாம பேசுற? வீட்டை விட்டு வெளிய தள்ற? என்று கேட்க “மரியாதையா..? நீ பேசின பேச்சுக்கு இனிமே இந்த வீட்டுக்குள்ள நீ வரவே முடியாது.. வெளியிலேயே கெடந்து சாவு.. நீ முதல் முதல்ல குடிச்சு நான் உழைச்சு சம்பாதிச்ச பணத்தை எல்லாம் அழிக்க ஆரம்பிச்ச அன்னைக்கே உன்னை இப்படி விட்டு எறிஞ்சிட்டு என் தங்கையோட எங்க அப்பா அம்மா வீட்டுக்கு போய் இருந்திருந்தேன்னா நான் இன்னும் நல்லா சுகமா இருந்திருப்பேன்.. உன் மேல வச்சிருக்கேனே இந்த பாழாப்போன காதல் அதுக்காக தான்யா இவ்ளோ நாளு நீ செஞ்ச எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன்.. ஆனா இன்னைக்கு நீ செஞ்சதை என்னால ஏத்துக்கவே முடியாது.. இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. நாளைக்கு ஒரு வக்கீலை பார்த்து உனக்கும் எனக்கும் இருக்கிற உறவை அறுத்துட்டு தான் எனக்கு மறுவேலை..” சொல்லிவிட்டு வேகமாக கதவை மூடி அதன் மேலேயே சாய்ந்து அப்படியே காலை மடித்து அமர்ந்தவள் கண்ணில் கண்ணீர் கட்டுக்கடங்காமல் பொழிந்து கொண்டே இருந்தது..
தன் இரண்டு கைகளாலும் தன் தலையில் அடித்துக் கொண்டவள் “சுந்தரி என்னை மன்னிச்சுருடி.. எதுவுமே சொல்லாம உள்ளுக்குள்ளே எல்லாத்தையும் வெச்சிருந்துட்டியேடி.. எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்ப நீ இந்த வீட்ல..? இனிமே என் புள்ளையை ஒழுங்கா வளக்கறது.. உன்னை ஒரு நல்லவன் கையில புடிச்சு கொடுக்குறது.. இது மட்டும் தான் என் வாழ்க்கையோட குறிக்கோள்..”
மனதிற்குள் முடிவு செய்து கொண்டவள் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து உள்ளே சென்று அழுது கொண்டிருந்த தன் குழந்தைக்கு பசியாற்றி சமாதானப் படுத்தினாள்..
அதன் பிறகு சிறிது நேரத்தில் குழந்தை தூங்கி போக அவளுக்கோ கண்களில் நீர் வழிந்து கொண்டே இருக்க அவளையும் அறியாமல் களைப்பில் உறங்கிப் போனாள் பெண்ணவள்..
விடியற்காலையில் பூமியை தழுவிக் கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்த கதிரவன் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான்..
அவன் சிரிப்பின் ஒளியில் கண் விழித்த அனைவரும் புத்துணர்வு பெற்று காலை வேலைகளில் ஈடுபட தொடங்கினர்..
“பாவம் பாட்டி.. நைட்லாம் காலும் இடுப்பும் வலிக்குதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க.. எப்ப தூங்குனாங்களோ தெரியல.. இப்போ வலி மறந்து தூங்குறாங்க.. நல்லா தூங்கட்டும்..” என்று நினைத்தவள் எழுந்து படபடவென வேலையை பார்க்க தொடங்கினாள்..
குளித்துவிட்டு வந்து சமையல் வேலையை தொடங்கியவள் எல்லோருக்கும் காபி போட்டு அவரவர் அறைக்கே சென்று கொடுத்துவிட்டு வந்தாள்..
சுந்தருக்கோ அவளுடைய காபி குடித்து நன்றாக பழகிப் போய் இருந்தது.
அவனுக்கு காபி கொடுக்க வந்த சுந்தரியிடம் “சுந்தரி.. உன் காஃபியை குடிச்சா எப்பேர்பட்ட தூக்கமா இருந்தாலும் அப்படியே விட்டுட்டு துள்ளி குதிச்சு எழுந்து வேலை செய்ய ரெடியாயிடுது என் உடம்பு.. சூப்பர் காஃபி சுந்தரி.. காலம் பூரா இந்த காஃபி கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும்”
அவன் சொல்ல முகம் மலர்ந்த சுந்தரி அவனை ஒரு கேள்வியோடு பார்த்தாள்..
அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட சுந்தர் “இது என்னோட ஆசை.. ஆனா இப்படி நடக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.. எப்படியும் பாட்டிக்கு உடம்பு நல்லா ஆன உடனே நீ இந்த வீட்டை விட்டு போயிடுவே இல்ல?” அவன் சொல்ல மலர்ந்திருந்த அவள் முகம் சுருங்கி போனது..
“நீங்க சொன்னீங்கன்னா பாட்டி நல்லா ஆனப்புறமும் இந்த வீட்ல நான் சமையல் வேலையை தொடர்ந்து பார்க்கிறேன் சார்” என்றாள் சுந்தரி..
“நம்ம நினைக்கலாம் சுந்தரி.. ஆனா உங்களுக்கு எங்க கல்யாணம் ஆகுமோ தெரியாது.. உங்களுக்கு இங்க வேலை செய்ய விருப்பமானாலும் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறவர் நீங்க இந்த சமையல் வேலையை செய்யறதுக்கு ஒத்துக்கணுமே.. பார்க்கலாம்..” என்று சொன்னவன் “செம்ம காஃபி” என்று மறுபடியும் சொல்லிவிட்டு காலி கோப்பையை அவளிடம் தந்து விட்டு குளியல் அறைக்கு சென்றான்..
அவன் சொன்னதை அசை போட்டுக் கொண்டே வெளியே வந்தவள் மறுபடியும் தன் வேலைகளில் மூழ்கிப் போனாள்..
வழக்கம் போல சுந்தர் அலுவலகம் கிளம்பி சென்றான்.. அங்கே ஷாலினி வந்து அவளுக்கென்று ஏற்பாடு செய்திருந்த இடத்தை பார்த்தவள் சுந்தரின் அறைக்கு வந்து “குட் மார்னிங் சுந்தர்” என்றாள்..
நேரத்தை பார்த்தவன் அன்றைக்கும் அவள் பத்து நிமிடம் தாமதமாய் வந்திருக்க “ஷாலினி ப்ளீஸ்.. என்னை இன்னொரு தடவை சொல்ல வைக்காதீங்க.. இந்த ஆஃபீஸ்ல லேட்டா வர்றதை என்கரேஜ் பண்ண முடியாது.. அது அஞ்சு நிமிஷமா இருந்தாலும் சரி பத்து நிமிஷமா இருந்தாலும் சரி.. 10 ஓ கிளாக் வேலை டைம்.. பத்து ஒன்னுக்கு கூட நீங்க வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்.. 9.59க்கே இந்த ஆஃபீஸ்குள்ள நீங்க இருக்கணும்.. தயவு செஞ்சு நாளையிலிருந்து எப்படியாவது பத்து மணிக்குள்ள வர்றத்துக்கு ட்ரை பண்ணுங்க..” என்றான்..
“சாரி சுந்தர்.. எனக்கு காலையிலிருந்து கொஞ்சம் உடம்பு சரியில்லை.. அதனாலதான்”
“என்ன உடம்பு சரி இல்லையா? என்ன ஆச்சு?” பதட்டமாக கேட்டான் சுந்தர்..
“கொஞ்சம் ஃபீவரிஷ்ஷா இருந்துச்சு.. ஆனாலும் ரெண்டாவது நாளே லீவு போட வேண்டாம்னு தான் ஒரு மாத்திரை போட்டுட்டு ஆஃபீஸ்க்கு வந்தேன்” என்றாள் அவள்..
தான் தாமதமாய் வந்ததற்காக திட்டிய அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அப்படி ஒரு பொய்யை சொல்லி இருந்தாள் ஷாலினி..
“இட்ஸ் ஓகே ஷாலினி.. உங்களால ரொம்ப முடியலன்னா நீங்க வேணா வீட்டுக்கு கிளம்பி போங்க.. உங்க உடம்பு சரியானப்புறம் நாளைக்கு வாங்க.. இப்படி ஃபீவரோட நீங்களும் ஒழுங்கா வேலை செய்ய முடியாது.. மத்தவங்க வேலையும் கெட்டுப்போகும்.. அதனால நீங்க லீவு எடுத்துட்டு போயிருங்க.. நாளைக்கு வரலாம் ஆஃபீஸ்க்கு.. ஆனா நாளைக்குள்ள உடம்பை சரி பண்ணிட்டு வர ட்ரை பண்ணுங்க..”
“இல்ல சுந்தர்.. மாத்திரை போட்டதனால இப்ப கொஞ்சம் பரவால்ல.. நான் வேலை செய்யறேன்.. ஒருவேளை இன்னைக்கு வீட்டுக்கு போய் இன்னும் மோசம் ஆயிடுச்சின்னா இன்னும் ரெண்டு நாள் லீவ் போடற மாதிரி ஆயிடும்.. அட்லீஸ்ட் இன்னைக்கு வேலையை முடிச்சுட்டு போயிட்டேன்னா நாளைக்கு எனக்கு உடம்பு நல்லா ஆகலைன்னா லீவு போட்டு ரெஸ்ட் எடுப்பேன்”
அவள் சொல்ல அவருடைய எதிர்மறை எண்ணங்களை நினைத்து அவனுக்கு கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது..
“எப்படியும் நாளைக்கு உடம்பு சரியாயிடும்.. நான் வந்து வேலை பார்க்கிறேன்” என்று சொல்லாமல் “உடம்பு சரியாகாமல் இன்னும் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொள்கிறேன்” என்று சொல்கிறவளை கொஞ்சம் சலிப்போடு பார்த்தான்..
அவன் பார்வையில் இருந்து அவன் எண்ணத்தை புரிந்து கொண்டவள் “அதில்ல சுந்தர்.. எனக்கு கொஞ்சம் வேலையில மூழ்கிட்டேன்னா வந்த ஜூரம் கூட சரியா போயிரும்.. ஏன்னா என் வேலை எனக்கு அவ்வளவு பிடிக்கும்.. அதனாலதான் சொன்னேன்... அப்படி சரியாயிடுச்சுனா அப்புறம் ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றாள் ஷாலினி..
அப்போது அவள் சொன்ன பதில் அவன் மனதை எங்கு சென்று தாக்க வேண்டும் என்று நினைத்து அவள் சொன்னாளோ சரியாக அங்கே சென்று தாக்கியது..
“வேலையில மூழ்கி போய்ட்டா உடம்பு சரி ஆகிடும்னு சொல்றா.. நெஜமாவே ரொம்ப சின்சியர்தான்..” என்று மனதிற்குள் நினைத்தவன் ” குட்.. ஷாலினி.. நீங்க போய் வேலையை பாருங்க..” என்றான்..
திரும்பியவள் “அப்பாடா” என்று ஒரு பெருமூச்சு விட்டபடி அவள் இடத்திற்கு சென்றாள்.. சுந்தர் அறையில் இருந்து அவன் நேர் பார்வையில் அவன் அறைக்கு வெளியில் அமர்ந்திருந்தாள் ஷாலினி..
அதன் பிறகு கணினியை திறந்து சில ஃபேஷன் ஷோக்களை பார்த்துக் கொண்டு பேருக்கு நாலு ஆடை வடிவமைப்புகளை வரைந்து விட்டு பிறகு விளையாடிக் கொண்டிருந்தாள் கணினியில்..
ஆனால் உள்ளே இருந்து பார்த்த சுந்தரோ அவள் மிகவும் அக்கறையோடு வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்று எண்ணினான்..
“இந்த பக்கம் அந்த பக்கம் பார்க்காம எவ்ளோ சின்சியரா ஒர்க் பண்றா.. நம்ம ஆஃபீஸ்க்கு இவ கிடைச்சது பெரிய விஷயம்” என்று நினைத்துக் கொண்டான் அவன்..
அன்றும் சாப்பாட்டு நேரத்திற்கு சுந்தரின் அறைக்கு வந்து “இன்னிக்கும் சாப்பாடு கொண்டு வந்து இருக்கீங்களா சுந்தர்?” என்று கேட்க “கொண்டு வந்திருக்கேன்.. வாங்க ஷாலினி.. ரெண்டு பேரும் சாப்பிடலாம்.. நான் சொன்ன மாதிரியே சுந்தரியோட சாப்பாடு உங்களை அடிமை ஆக்கிருச்சு பாத்தீங்களா?” என்று சொன்னவன் அவளை அமரச் சொல்லி இருவரும் சுந்தரி கொடுத்தனுப்பிய சாப்பாட்டை சாப்பிட்டனர்..
சாப்பிட்டு முடித்தவள் மனதிற்குள் “இந்த சமையல்காரியை பார்க்கணுமே.. சாப்பாடு செஞ்சு போட்டே மயக்கிடுவா போல இருக்கே.. இவனை” என்று நினைத்தவள் “சுந்தர் எனக்கு உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்.. தப்பா நினைச்சுக்க மாட்டீங்கல்ல?” என்று கேட்கவும் “இது என்ன கேள்வி? நான் தப்பா நினைக்கற மாதிரி அப்படி என்ன கேக்க போறீங்க?” என்றான் சுந்தர்..
“உங்க வீட்ல.. அவங்க பேர் என்ன சொன்னீங்க..” என்று யோசித்தபடி இருக்க “யாரு.. சுந்தரியா?” என்று அவன் சரியாக கேட்க.. “ஹான்… சுந்தரி.. அவங்களை நான் மீட் பண்ணனுமே.. நீங்க உங்க வீட்டுக்கு என்னை இன்வைட் பண்ணல.. இருந்தாலும் அவங்களை பாக்குறதுக்காக நான் உங்க வீட்டுக்கு வரலாமா?” என்று ஷாலினி கேட்க “ஓ.. ஷாலினி.. இட்ஸ் மை பிளஷர்.. ப்ளீஸ்.. வாங்க.. இன்னைக்கு ஈவினிங்கே நான் உங்களை கூட்டிட்டு போறேன்..” என்றான் சுந்தர்..
“ஓ தேங்க்யூ.. சுந்தர்..” என்றவள் அதன் பிறகு மறுபடியும் வேலை செய்ய தன் இடத்திற்கு சென்று விட்டாள்… அங்கே மற்ற நேரங்களில் விளையாடிக் கொண்டும் தன் நண்பர்களுடன் கைபேசியில் பேசிக்கொண்டும் இருந்தவள் சுந்தர் அவள் மேஜைக்கு அருகில் வரும் போது மட்டும் சில ஆடை வடிவமைப்பு வரைபடங்களை வரைவது போல் பாசாங்கு செய்தாள்..
அவனும் அதைப் பார்த்து “ஓ ப்ளீஸ் கேரி ஆன்.. ஆனா நடுவுல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க ஷாலினி.. கன்டினியூயஸா கம்ப்யூட்டரை பார்த்து வொர்க் பண்ணாதீங்க.. அப்பப்ப ஒரு ஃபைவ் மினிட்ஸ் கண்ணை மூடி உங்க கண்ணுக்கு ரெஸ்ட் குடுங்க” என்றான்..
அவன் சொன்னதை கேட்டு “சரியான மாங்கா மடையன்..” என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் ஷாலினி.. மாலையில் இருவரும் சேர்ந்து சுந்தர் வீட்டுக்கு போக கிளம்பினர்..
வீட்டுக்கு வந்தவுடன்,”வாங்க ஷாலினி உள்ள..” என்று அவளை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவன் வரவேற்பறையில் நடராஜன் மேகலா இருவரும் கதிரையில் அமர்ந்துகொண்டு மாலை சிற்றுண்டி உண்டு கொண்டிருக்க சுந்தரி அவர்கள் பக்கத்தில் நின்று அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள்..
ஷாலினியுடன் சுந்தர் வரும் சத்தம் கேட்டு மூவரும் அவர்கள் பக்கம் திரும்பி பார்த்தனர்.. மேகலாவோ “யார் இந்த பொண்ணு.. இவ நடை உடை பாவனை எதுவுமே சரி இல்லையே..” என்று புருவத்தை சுருக்கி ஷாலினியை பார்த்தாள்..
அப்போது சுந்தர் அவர்கள் அருகே ஷாலினியை அழைத்து வந்து “அப்பா..அம்மா…இவங்க பேரு ஷாலினி.. என் கம்பெனியோட காஸ்ட்யூம் டிசைனர்.. ஷாலினி.. ப்ளீஸ் உட்காருங்க.. ” என்றவன் சுந்தரியை பார்த்து “சுந்தரி.. ஷாலினிக்கு ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வரீங்களா?” என்றான்..
“இதோ எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே சென்று நிமிடமாய் இருவருக்கும் ஒரு தட்டில் சிற்றுண்டி எடுத்து வந்து இருவரிடமும் அதை கொடுத்தவள் கையில் ஒரு துணி இருந்தது..
ஒரு கேள்வியோடு அந்த துணியை சுந்தர் பார்க்க “சார்.. இந்த சாம்பிள் துணியை நீங்க எனக்கு தைக்க கொடுத்தீங்க.. ஆனா இதுல ஒரு டிசைன் போடலாம்னு எனக்கு தோணுச்சு.. அதான் போட்டேன் ஒரே ஒரு துணியில.. அதை உங்ககிட்ட காமிக்கலாம்னு தான் கொண்டு வந்தேன்..” என்ற சுந்தரி தான் கொண்டு வந்த துணியை நீட்ட அதை சட்டென அவள் கையில் இருந்து பறித்த ஷாலினி அந்த துணியில் வரையப்பட்ட வடிவமைப்பை பார்த்து முகத்தை சுளித்தாள்..
“ஷிட்… இது என்ன ஓல்ட் ஃபேஷன்ட் டிசைன் மாதிரி இருக்கு.. உன் வேலை.. கொடுத்த சாம்பிளை தைக்கிறது தானே..? எதுக்கு இந்த மாதிரி தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்க? காஸ்டியூம் டிசைனிங் பத்தி உனக்கு என்ன தெரியும்? அதுக்கு தானே என்னை அப்பாயின்ட் பண்ணி வச்சிருக்கார் சுந்தர் கம்பெனியில.. இனிமே உன் தெக்கற வேலையை மட்டும் பாரு.. தேவையில்லாம இந்த மூளையை யூஸ் பண்ணி செய்ய வேண்டிய வேலை எல்லாம் ட்ரை பண்றேன்னு துணி எல்லாம் வேஸ்ட் பண்ணாத.. கம்பெனிக்கு நஷ்டம் ஆயிடும்..” என்று ஷாலினி சொல்ல சுந்தர் அவள் பக்கம் திரும்பி “ஷாலினி.. சுந்தரி கிட்ட கொஞ்சம் மரியாதையா பேசுங்க..” என்று கத்தினான்..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செ
ய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து