சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 22
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
மேஜை மேல் ஒரு காகிதத்தை எடுத்து வைத்து “இது உங்க சேலன்ஜோட ஃபர்ஸ்ட் டே நடந்த சேல்ஸ் ரிப்போர்ட்.. உங்க ரெண்டு பேரோட டிசைன்ஸ் இருந்த ட்ரஸ்ஸஸ் மட்டும் எவ்வளவு சேல் ஆகி இருக்குன்னு தனியா ரிப்போர்ட் பண்ண சொல்லி எடுத்துட்டு வந்து இருக்கேன்..”
சுந்தர் சொல்ல அதை எடுத்து பார்த்த ஷாலினியின் விழி விரிந்து இதழில் புன்னகை மலர்ந்தது.. அவளுடைய வடிவமைப்பில் இருந்த 2 ஆடைகளும்.. சுந்தரி தைத்த உடைகளில் ஒரு ஆடையும் முதல் நாள் விற்றிருந்தது..
“ம்ம்ம்ம்.. பார்த்தீங்களா சுந்தர்? நான் சொன்னபடி தான் நடந்திருக்கு.. ஃபர்ஸ்ட் டே யாரோ போனா போகுதுன்னு அந்த சுந்தரியோட டிஸைன் போட்ட ட்ரஸ்ஸை வாங்கி இருக்காங்க.. என்னோடது இவ்ளோ நேரத்துக்கு பத்து பீஸும் வித்து போய் இன்னொரு பத்து பீஸ் ஆர்டர் கிடைச்சு இருக்கணுமே.. நான் சொல்றது கரெக்ட் தானே?” உற்சாகமாய் கேட்டாள் ஷாலினி..
அதைப் பார்த்த ஷாலினியின் முகம் சுண்டைக்காயாய் சுருங்கியது.. அடுத்தடுத்த நாட்களில் ஷாலினி வடிவமைத்த ஆடைகள் ஒன்று கூட விற்கப்படவில்லை.. ஆனால் சுந்தரி வடிவமைத்த ஆடைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே முழுவதுமாக விற்று போய் இருந்தது.. நான்காவது நாளுக்கான விற்பனை அறிக்கையில் சுந்தரி வடிவமைத்த ஆடைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக எழுதியிருந்தது..
அவளுக்கு வார்த்தையே வராமல் இருக்க சுந்தர் தான் தொடர்ந்து பேசினான்..
“இப்ப என்ன சொல்றீங்க? இப்பவும் சுந்தரியோட திறமை மேல உங்களுக்கு சந்தேகம் இருக்கா? முதல் நாள் உங்களோட ரெண்டு ட்ரெஸ்ஸஸ் சேல் ஆகி இருக்கு இல்ல? அது கூட ஏன் தெரியுமா? ரெண்டு ஃபாரினர்ஸ் வந்து டிரஸ் எடுத்தாங்க.. அதனால உங்களோட ரெண்டே ரெண்டு ட்ரெஸ் மட்டும் சேல் ஆயிருக்கு…” என்றவன் மேஜையில் முன்புறமாக சாய்ந்து கையில் ஒரு பேனாவை வைத்து வேகமாக ஆட்டியபடி தொடர்ந்தான்..
“ஷாலினி.. ஆக்சுவலா நான் உங்களை எதுக்கு கூப்பிட்டேன்னா சுந்தரி டிஸைன் பண்ணின பீஸஸ் எல்லாம் நேத்திக்கு முந்தின நாளே வித்து போயிருச்சு.. 4த் டேக்கு அவங்க பீசஸ் கடையில எதுவுமே இல்ல.. ஆனா இன்னும் பத்து பேரு அதே மாதிரி ட்ரஸ் வேணும்னு ஆர்டர் பண்ணி இருக்காங்க.. சோ நீங்க போட்ட சேலஞ்சில சுந்தரி வின் பண்ணிட்டாங்க.. இதை சொல்ல தான் கூப்பிட்டேன்” என்றான் சுந்தர்..
ஷாலினி புருவத்தை நெறித்து கேள்வியாய் அவனை பார்த்தபடி “அது எப்படி? நான் எவ்வளவு நல்ல டிசைன் போட்டு கொடுத்தேன்? அதை எப்படி இவங்க வாங்காம போவாங்க? என்ன சுந்தர் நம்ம கடைக்கு இவ்வளவு சீப் டேஸ்ட் இருக்கிற கஸ்டமர்ஸ் தான் வர்றாங்களா?”
அவள் கேட்க சுந்தருக்கு அவன் வாடிக்கையாளர்களை அவள் அப்படி சொன்னவுடன் கோபம் கொப்பளித்து கொண்டு வந்தது..
“ஷாலினி.. ப்ளீஸ் ஹோல்ட் யுவர் டங்க்.. நீங்க இங்க காஸ்டியூம் டிசைனரா வொர்க் பண்றீங்கங்கறதுனால கஸ்டமர்ஸை நீங்க கேவலமா பேசுறதை என்னால பொறுத்துக்க முடியாது.. அவங்க நம்ம ப்ராடக்ட்ஸை வாங்குறதுனால தான் நம்ம கம்பெனி ஓடுது.. அதனால அவங்க ரசனையை குறைவா எடை போடக்கூடாது.. அப்படி பார்த்தா உங்களோட டிஸைனை விட எனக்கும் சுந்தரியோட டிசைன் தான் ரொம்ப பிடிச்சி இருந்தது.. அப்போ எனக்கு கூட சீப் டேஸ்ட்ன்னு சொல்வீங்களா?”
அவன் ஒரு புருவம் உயர்த்தி கேள்வியாய் கேட்க ஷாலினி அவன் கேள்விக்கு எப்படி பதில் சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் சங்கடமாய் நெளிந்தாள்…
“அப்படி இல்ல சுந்தர்.. நான் போட்ட டிசைன் தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நான் நினைச்சேன்.. என்னோட ப்ரொஃபைல் பார்த்து நீங்க ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னீங்க இல்ல..? அதான்..” என்று இழுத்தாள் ஷாலினி..
“ஆமா ஷாலினி.. உங்க ப்ரொபைல் நல்லா இருந்ததுன்னு தான் நான் சொன்னேன்.. இப்ப கூட நீங்க போட்ட டிசைன் நல்லா இல்லன்னு நான் சொல்லவே இல்லையே.. உங்க டிசைனை விட சுந்தரியோட டிசைன் ரொம்ப நல்லா இருந்ததுன்னு தானே நான் சொன்னேன்.. ஷாலினி உங்களோட சில குணங்கள் ரொம்ப நல்லா இருக்கு.. அஃப்கோர்ஸ்.. நீங்க அடுத்தவங்களுக்கு உதவுறது அப்புறம் என்னை என் வளர்ச்சியை மட்டும் வச்சு மதிக்கறது.. இதெல்லாம் எனக்கு உங்க கிட்ட ரொம்ப பிடிக்கும்.. அதே சமயம் நீங்க சுந்தரியை மட்டமா நினைக்கிறது.. இந்த ஒர்க்கர்ஸை எல்லாம் கொஞ்சம் நம்மள விட லெவல் கம்மியா ட்ரீட் பண்ணறது.. இதெல்லாம் எனக்கு கொஞ்சம் உறுத்தலா இருக்கு… மத்தவங்க முன்னேற்றத்தை பார்த்தும் அவங்க திறமையை பார்த்தும் அவங்களை அப்ரிஷியேட் பண்றதை பார்த்தும் நீங்க கொஞ்சம் பொறாமை படுறீங்க.. தயவுசெய்து அந்த குணத்தை கொஞ்சம் மாத்திக்கோங்க. யாருமே நம்மளை விட குறைவானவங்க கிடையாது… எல்லாருக்கும் அவங்க அவங்களோட தனிப்பட்ட திறமை இருக்கு.. முதல்ல அதை மதிக்கணும்.. அப்பதான் நம்மளும் அதை கத்துக்கிட்டு வளர முடியும்..” என்று சொன்னான் சுந்தர்..
“அப்பா…..டி!! எவ்வளவு பெரிய லெக்ச்சர் கொடுக்கறான்.. இவனால இவ்வளவு பெருசா எப்படி பேச முடியுது? எங்கேயோ கதகாலட்சேபம் பண்ண போக வேண்டியவன்கிட்ட என்னை மாட்டிவிட்டுட்டானே இந்த மாதேஷ்.. எல்லாம் என் நேரம்..!!”
மனதிற்குள் புலம்பிய ஷாலினி “சரி சுந்தர்.. நீங்க சொல்றதெல்லாம் புரியுது.. ஆனா இப்போ சுந்தரி இந்த சேலன்ஜ்ல ஜெயிச்சிட்டதனால இந்த கம்பெனிக்கு இனிமே அவங்களை காஸ்ட்யூம் டிசைன் பண்ண வைக்கப் போறீங்களா? அப்போ நான் இந்த வேலையில் இருந்து போகட்டுமா?” கோபமாக ஷாலினி கேட்டாள்..
“மறுபடியும் சுந்தரியோட போட்டி போட்டு நீங்க கோவப்படுறீங்க.. நிச்சயமா உங்களை இந்த கம்பெனியை விட்டு நான் போக சொல்ல மாட்டேன்.. ஏன்னா என் கடைக்கு அந்த ஃபாரினர்ஸ் வந்தப்போ அவங்க சுந்தரியோட டிசைனை எடுக்கல.. உங்களோட டிசைன் தான் எடுத்தாங்க… சோ அந்த மாதிரி வெஸ்டர்ன் ஸ்டைல் விரும்பற கஸ்டமர்க்கு உங்களோட டிசைன் தேவைப்படும்.. அதனால நான் என்ன நினைச்சேன்னா நம்ம கடையிலேயே கொஞ்சம் வெஸ்டர்னைஸ்டு டிரஸ்ஸஸ் அப்புறம் ரொம்ப மாடர்னா இருக்குற டிரஸ்ஸஸ் எல்லாம் நீங்க டிசைன் பண்ணுங்க.. மத்தபடி இந்த மாதிரி ரொம்ப ரெகுலர் கஸ்டமர்ஸ்க்கு அவங்க விரும்பற மாதிரி டிரஸ்ஸஸ்ஸை சுந்தரி டிசைன் பண்ணட்டும்… இதனால நம்ம கம்பெனி ரெண்டு விதமான கஸ்டமர்ஸையும் ரீச் பண்ண முடியும்.. இந்த டீல் உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்டான் சுந்தர்..
“ஓகே சுந்தர்.. நான் இதை அக்செப்ட் பண்ணிக்கிறேன்..” என்றவளை பார்த்து.. “தட்ஸ் லைக் ஷாலினி.. நான் ஒரு நல்ல விஷயம் சொன்னா அதை டக்குனு ஓகேன்னு சொல்லி அக்செப்ட் பண்ணிக்கிறீங்க இல்ல..? ஐ லவ் திஸ் க்வாலிட்டி இன் யூ.. “
அவன் சொல்லி அர்த்தத்தோடு புன்னகைக்க அவளுக்கும் அவன் லவ் என்ற வார்த்தையை சொன்னது ஏதோ ஒரு விதத்தில் அவன் மனதை தொட்டு விட்டோம் என்ற நம்பிக்கையை கொடுத்தது..
“இந்த நூலை பிடிச்சிக்கிட்டே இவனை மேல மேல ஏத்திவிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க யோசிக்கிற அளவுக்கு கொண்டு போயிடணும்..” என்று மனதில் நினைத்தவள் “தேங்க்யூ சுந்தர்..” என்றாள் தலையை குனிந்து வெட்கப்படுவது போல் நின்று கொண்டே..
“அப்பறம் ஷாலினி.. இன்னைக்கு நீங்க போட்டுட்டு வந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு.. உங்களுக்குன்னே செஞ்ச மாதிரி இருக்கு.. இந்த பிங்க் ட்ரஸ்ல யூ லுக் லைக் என் ஏஞ்சல்..!!”
அவன் சொல்ல அவளுக்கு தான் அவன் மனதை வெல்வதில் பல படிகள் முன்னேறி விட்டோம் என்று தைரியம் வந்தது..
“தேங்க்யூ சுந்தர்.. நீங்க இதை சொல்றது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. இந்த டிரஸ்ஸை இனிமே என் உயிர் மாதிரி சேவ் பண்ணி வச்சுப்பேன்..” என்றாள் ஷாலினி..
சிரித்தவன் “ஓகே.. உங்க சீட்டுக்கு போங்க.. இது ஆஃபீஸ் டைம்.. இப்ப நம்ம வேலையை பார்க்கலாம்.. ஈவினிங் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து எங்கயாவது வெளில போலாம்.. உங்களுக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லைன்னா.. நீங்க ஃப்ரீயா இருந்தா..” என்றான் சுந்தர்..
“ஷ்யூர் சுந்தர்.. நீங்க எப்பவும் என்னோட லைஃப்ல ஒரு ஸ்பெஷல் பர்சன்.. உங்களுக்கு இல்லாத டயமா..? எப்படிப்பட்ட முக்கியமான அப்பாயின்ட்மென்ட்டா இருந்தாலும் கேன்சல் பண்ணிட்டு உங்க கூட வர்றதுக்கு நான் ரெடியா இருக்கேன்..” என்றாள் ஷாலினி..
சுந்தருக்கோ மனதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது.. தன்னை பார்த்து முதல் முறையாக இப்படி ஒரு பெண் பேசுகிறாள் என்று அவன் உள்ளுக்குள் துள்ளி குதித்துக் கொண்டு இருந்தான்..
ஒருவேளை ஷாலினி தன்னை விரும்பினால் தன் நண்பர்களிடம் தான் போட்ட சவாலில் ஜெயித்து விடலாம் என்று மனக்கோட்டை கட்ட ஆரம்பித்தான் அவன்..
ஆனால் அவனுக்கு புரியாத விஷயம் என்னவென்றால் அது உறுதியான மனக்கோட்டை இல்லை மணல் கோட்டை என்பது தான்.. அது ஒருநாள் சுக்குநூறாய் தகர்ந்து அவனுக்கு பெரிய வலியை கொடுக்க காத்திருக்கிறது என்று புரியாமல் போனது அவனுக்கு..
“ஓகே சுந்தர்.. அப்போ ஈவினிங் வெளியில போலாம்..” என்று சொல்லி அவள் தன் இருப்பிடத்திற்கு போக திரும்ப அப்போது சுந்தரின் கைப்பேசி ஒலித்தது.. கதவு வரை போனவள் காதில் சுந்தர் பேசியது விழ முழுவதுமாய் அவன் உரையாடலை கேட்க அங்கேயே நின்றாள்..
சுந்தர் தன் கைபேசியில் “சொல்லுங்கம்மா.. என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டிருந்தான்..
“அப்படியா.. என்ன ஆச்சு? என்ன ஆச்சு பாட்டிக்கு?” என்று பதட்டத்தோடு எழுந்தவன் “சரி.. நான் உடனே வரேன்..” என்று கைபேசியில் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான்..
ஷாலினி அங்கே நின்று கொண்டு இருந்ததை பார்த்தவன் “நல்லவேளை ஷாலினி நீங்க இங்கயே இருக்கீங்க.. கொஞ்சம் ஆஃபீஸை பார்த்துக்கோங்க.. பாட்டிக்கு ஏதோ ரொம்ப உடம்பு சரி இல்லையாம்.. நான் வீட்டுக்கு அவசரமா போகணும்..” என்றான்..
“சுந்தர் நாம ரெண்டு பேரும் வெளியில் போலாம்னு சொன்னிங்களே..” என்று அவள் கேட்க “சாரி ஷாலினி.. இன்னொரு நாள் போலாம்.. பாட்டிக்கு உடம்பு சரியில்லாதப்போ நான் எப்படி உங்க கூட வர முடியும்? அவங்களை பாத்துக்கணும் இல்லையா? அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னாலயே என்னை மன்னிக்க முடியாது.. இன்னிக்கு அவங்களை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு அவங்களுக்கு என்னன்னு பாத்துட்டு இன்னொரு நாள் நம்ம இந்த பிளானை மறுபடியும் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்..”
“என்ன ஷாலினி..?! என்ன பேசறீங்க நீங்க..!? பாட்டியை பொறுத்த வரைக்கும் அவங்களுக்கு செய்ய வேண்டியது எல்லாம் நானே செஞ்சா தான் எனக்கு திருப்தியா இருக்கும்.. பாட்டி உடம்பு சரியில்லைன்னு சொல்றேன்.. அதைவிட நம்ம வெளியில போறது முக்கியமா ஷாலினி? சாரி ஷாலினி.. எனக்கு உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ண கூட டைம் இல்ல.. உங்களால முடிஞ்சா கம்பெனியை பாத்துக்கோங்க.. இல்லன்னா நான் கணேஷ் கிட்ட சொல்லிட்டு போறேன்.. நீங்க கிளம்பி வீட்டுக்கு போகலாம்..”
படபடப்பாய் சொன்னவன் அங்கு ஒரு நிமிடம் கூட நிற்காமல் உடனே கிளம்பி சென்றான்..
அறைக்கு வெளியே போனவன் கணேஷை அழைத்து அவரிடம் விவரங்களை சொல்லிவிட்டு காரை நோக்கி போனான்..
அவன் பின்னாலேயே ஓடி சென்ற ஷாலினி “இருங்க சுந்தர்.. நானும் வரேன்.. உங்க பாட்டியை பாக்க..” என்று அவனோடு சென்று அவன் காரில் ஏறிக் கொண்டாள்..
கார் ஓட்டிக்கொண்டு செல்லும்போது அவனுக்கு இருந்த பதைபதைப்பை பார்த்தவள்.. “இந்த கிழவி இருக்கிற வரைக்கும் நம்ம பிளான் எதுவுமே சக்சஸ் ஆகாது.. ஐயோ இன்னைக்கு தான் கொஞ்சம் மடிஞ்சு வந்தான்.. அதுக்குள்ள இந்த கிழவி புகுந்து ஆட்டத்தை கலைச்சு குட்டையை குழப்பி கும்மி அடிச்சுட்டாளே.. மொதல்ல அவளை போட்டு தள்ளணும்.. எனக்கு வில்லியே அவதான்..” என்று மனதிற்குள் பாட்டியை திட்டி தீர்த்தாள்..
சுந்தரின் பதட்டத்தை அவன் வேகமாக கார் ஓட்டுவதில் இருந்தே உணர்ந்தவள் “சுந்தர் டென்ஷன் ஆகாதீங்க.. கொஞ்சம் மெதுவா வண்டி ஓட்டுங்க.. பதட்டமானீங்கன்னா இன்னும் லேட் தான் ஆகும்..” என்றாள் ஷாலினி..
“நானும் டென்ஷன் ஆக கூடாதுன்னு தான் பாக்குறேன் ஷாலினி.. ஆனா பாட்டிக்கு ஏதாவது ஆயிரக்கூடாதுன்னு உள்ளுக்குள்ள படபடப்பா இருக்கு..” என்று சொன்னவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீட்டு வாசலில் இருந்தான்..
உள்ளே சென்று பாட்டியின் அறைக்கு சென்றவன் அங்கே பாட்டிக்கு மூச்சு திணறிக் கொண்டிருப்பதை பார்த்து கலங்கிப் போனான்..
“பாட்டிக்கு என்ன ஆச்சு சுந்தரி..? டாக்டருக்கு ஃபோன் பண்ணிங்களா?” என்று கேட்க “பாட்டியை வழக்கமா பாக்குற டாக்டர் ஊர்ல இல்லைங்களாம்.. எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல சுந்தர்..” என்றாள் சுந்தரி..
“அதனால என்ன சுந்தரி..? வேற யாராவது டாக்டர் இருக்காங்களான்னு தேடி பார்த்து கூட்டிட்டு போக வேண்டியது தானே..? எவ்வளவு நேரம் கடத்துவீங்க? இதனால அவங்க உயிருக்கு ஏதாவது ஆபத்தாச்சுன்னா என்ன பண்றது?”
“சரி நான் பாக்குறேன்..”
தன் கைபேசியை எடுக்க அதற்குள் அங்கு வந்த ஷாலினி “ஒரு நிமிஷம் சுந்தர்.. எங்க அப்பாவுக்கு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்காரு.. எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் தான்.. அவர்கிட்ட பாட்டியை அழைச்சிட்டு போலாம்.. லேட் பண்ணாம கிளம்புங்க..” என்று சொன்னாள்..
“தேங்க்யூ வெரி மச்.. ஷாலினி.. நீங்க தயவு செஞ்சு அவருக்கு ஃபோன் பண்ணி கொஞ்சம் அட்டென்ட் பண்றதுக்கு ரெடியா இருக்க சொல்ல முடியுமா?” என்று கேட்டான் சுந்தர்..
“முதல்ல நீங்க பாட்டியை கார்ல ஏத்துங்க.. நம்ம போற வழியில ஃபோன் பண்ணாலே அவர் ரெடியா இருப்பார்.. அப்பாக்குன்னா அவர் உடனே செய்யறதுக்கு தயாரா இருப்பார்..”
கொஞ்சம் நிம்மதியாக பெருமூச்சு விட்ட சுந்தர் பாட்டியை தூக்கிக் கொண்டு காரில் ஏற்றினான்..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு
செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து