Banu Rathi

அசுரனின் குறிஞ்சி மலரே.. 21

குறிஞ்சி மலர்.. 21 ஜீவோதயம் பங்களாவின் வரவேற்பறையில், மேற்குப் பக்கச் சுவரில் கிடந்த வீணைவடிவ சுவர்க் கடிகாரத்தில் நேரம் எட்டு என்பதை, வீணை ஒலி தெரிவிக்க, மாடியில் இருந்து கீழே வந்தான் ஜேம்ஸ்பீட்டர். அவன் வருவதற்கு முன்னரே தில்லையம்பலம் அங்கே ஆஜராகி விட்டிருந்தார். பீட்டர் நாளை வந்து சந்திக்கச் சொன்னார் என்ற செய்தியைக் கேட்டதில் இருந்தே அம்பலத்துக்கு தலைகால் புரியவில்லை. அவனாகவே அழைத்திருக்கிறான் என்றால் நிச்சயமாக தனக்கு ஏதோ இலாபகரமான விசயம் தான் நடக்கப் போகிறது என […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 21 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 20

குறிஞ்சி மலர்.. 20 சமைத்த காலை உணவை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த கோதைக்கு, எலிசபெத் மற்றும் செபமாலை பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவருக்கும் நடந்திருப்பது கொடூரம். சொந்த வீட்டிலேயே மனநோயாளிகள் என முத்திரை குத்தப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள் என்றால் அதை விடக் கொடுமை வேறு என்னவாக இருக்கும். இந்தக் கொடூரம் இங்கிருப்பவர்களுக்குத் தெரியுமா தெரியாதா, இல்லாது போனால் தெரிந்ததும் தெரியாதது போல நடந்து கொள்கிறார்களா, இது எல்லாம் ஒரு பக்கம்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 20 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 19

குறிஞ்சி மலர்.. 19 வஞ்சி மற்றும் வியாகேசின் துணையோடு, ஜோசப்பின் அறைக்குள் கிடைத்த, போதைமருந்துகளுக்கு பதிலாக போசாக்கான மருந்துகளை, மாத்திரைகளை மாற்றி வைத்து விட்டிருந்தாள் கோதை. அந்தக் காரியத்தைக் கச்சிதமாக, சந்தேகம் வராத வகையில் நிறைவேற்றிய பிறகு தான் அவளுக்கு வேலையே ஓடியது என்று சொல்லலாம். கிட்டத்தட்ட அந்த நிம்மதி கொடுத்த தென்பில், எலிசபெத் மற்றும் செபமாலைக்கு காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தவளை, வரவேற்பறையில் கேட்ட ஏதோ உடையும் சத்தம், பதறிக் கொண்டு வெளியே ஓடிச் சென்று

அசுரனின் குறிஞ்சி மலரே.. 19 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 18

குறிஞ்சி மலர்.. 18 தேக்குமரக் கட்டிலுக்குக் கீழே லேசாக இருளாக இருக்க, மெல்லக் கையை விட்டு அங்கே ஏதேனும் பாதை தென்படுகிறதா என்பது போல கோதை தடவிப் பார்த்தாள். முதலில் ஒன்றுமே அவளது கண்களுக்குத் தெரியவுமில்லை, அவளது கைகளுக்குத் தட்டுப்படவும் இல்லை. ஆனாலும் அல்போன்ஸும் ஜோசப்பும் இங்கிருந்து தானே வெளியே வந்தார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்தவளால், அத்தனை சீக்கிரம் அங்கே ஒன்றுமேயில்லை என்ற எண்ணத்துடன் விட்டுப் போக முடியவில்லை. நன்றாகத் தரையோடு தரையாகப் படுத்துக் கொண்டு, மீண்டும்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 18 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 17

குறிஞ்சி மலர்.. 17 ஜேம்ஸ்பீட்டரின் அறை வாசலில் நின்று அவனது கதவை ஓங்கித் தட்டிக் கொண்டிருந்தாள் கோதை. அவளுக்கு பின்னால் நின்றிருந்த தேவாவுக்கு பயத்தில் வியர்த்துக் கொட்ட, ரகுமானோ அவளின் பக்கம் ஓடி வந்து “இந்தாம்மா இப்ப எதுக்கு ஐயாவிந்தை கதவை உப்புடித் தட்டுறியள்.. ஐயாவுக்கு கோபம் வரப் போகுது..” என தன் பதட்டத்தை மறைத்தபடி சொல்ல, வேகமாக அவனைத் திரும்பிப் பார்த்தவளின் பார்வையில் அவன் சட்டென்று வாயை மூடிக் கொண்டான். “உங்கடை கொய்யாவுக்கு இல்லாட்டிக்கு மட்டும்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 17 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 16

குறிஞ்சி மலர்.. 16 நேரம் நடுநிசியைக் கடந்து கொண்டிருக்க, சுவர்க்கடிகாரத்தின் டிக் டிக் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமுமே கேட்கவில்லை. அந்த பங்களாவே துயிலில் ஆழ்ந்திருந்த தருணம் அது. கோதையும் பம்பரம் போல் சுழன்று செய்த வேலைகளின் அசதியினால் தன்னை மறந்து ஆழ் துயிலில் மூழ்கியிருந்தாள். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுத்திருந்த கோதைக்கு, ஏதோ அரங்குவது போன்ற சத்தம் லேசாகக் கேட்கவே, அவள் அடுத்த பக்கம் புரண்டு படுத்துக் கொண்டாள். மீண்டும் மீண்டும் ஏதோ அரங்கும்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 16 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 15

குறிஞ்சி மலர்.. 15 ஜீவோதயத்தில் வெளியே பரந்து கிடந்த புல்வெளியில் அமர்ந்திருந்த வியாகேசு மற்றும் வஞ்சிக்கு நடுவே அமர்ந்து ‘தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..’ என்ற பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள் கோதை. வியாகேசு கண்களை மூடி அந்தப் பாடலை இரசித்துக் கொண்டிருந்தார். வஞ்சிக்கு பழைய பாடல்கள் அவ்வளவு பிடித்தம் இல்லை என்றாலும், கோதையின் குரலில் அந்தப் பாடலைக் கேட்க கேட்க அவனுக்கும் மிகவும்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 15 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 14

குறிஞ்சி மலர்.. 14 அறையில் இருந்த மின்குமிழ்களில் இருந்து கசிந்து வந்த வெளிச்சத்தில், மூலைக்கு மூலையாக இருந்த இரண்டு பெண்மணிகளையும் தான் கோதை பார்த்துக் கொண்டிருந்தாள். அழுக்கேறிய புடவையும், வாரப்படாமல் சிக்கேறிய தலைமுடியும், மங்கிப்போன கண்களும், காயம் பட்டுக் கிடந்த கைகாலும், வெளிறிப் போன முகமும் என பார்ப்பதற்கே பயந் தரக் கூடிய தோற்றத்தில் தான் இரண்டு பெண்மணிகளுமே இருந்தார்கள். அதிலும் வலது பக்க மூலையிலிருந்த ஜேம்ஸின் அப்பம்மா செபமாலை கோதையையே தலையைத் திருப்பி திருப்பி பார்த்த

அசுரனின் குறிஞ்சி மலரே.. 14 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 13

குறிஞ்சி மலர்.. 13 இராத்திரி நேரத்துக்கேயுரிய அமைதி அந்த பங்களாவை ஆட்சி செய்து கொண்டிருக்க, ஒருத்தி மட்டும் தொண தொணவெனப் பேசிக் கொண்டேயிருந்தாள். அவள் பேசுவதையே பிரமை பிடித்தவர் போலப் பார்த்துக் கொண்டேயிருந்தார் வியாகேசு. பக்கத்தில் இருந்த வஞ்சிமாறனின் நிலையும் அதுவாகத் தான் இருந்தது. “என்னப்பா நீங்கள்.. நான் பாட்டுக்குத் தனியா அலம்பிக் கொண்டு இருக்கிறன்.. நீங்கள் ரெண்டு பேரும் என்ரை வாயையே பாத்துக் கொண்டு இருக்கிறியள்..” “ஆ என்ன பிள்ளை..” “நீங்கள் இங்கினை தானே இருக்கிறியள்..”

அசுரனின் குறிஞ்சி மலரே.. 13 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 12

குறிஞ்சி 12 லாந்தர் விளக்கின் உபயத்தால் அறையில் இருந்த இருட்டை விலக்கி, அங்கே என்னென்ன இருக்கிறது என்பதை கோதையால் பார்க்க முடிந்திருந்தது. வாசலோடு இருந்தால் மட்டும் போதும் என்று அழைத்து வந்திருந்த வியாகேசை, அவள் மெல்ல பேசிப் பேசியே அறையினுள் அழைத்துச் சென்று விட்டிருந்தாள். “என்னடி பிள்ளை.. அறையோ இது பாழடைஞ்ச பங்களா மாரிக் கிடக்குது..” “போங்கோப்பா காமெடி செஞ்சு கொண்டு.. பாழடைஞ்ச பங்களாவாச்சும் பாக்குறதுக்கு பக்காவா இருக்கும்.. இது ஏதவோ வர்ணிக்க வார்த்தையே வருகுதில்லை..” “அதெல்லாம்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 12 Read More »

error: Content is protected !!