Vageeswari

வேந்தன்… 44

வேந்தன்… 44   மக்களே முதல் அத்தியாயத்தில் ஒரு டிஸ்க்ளைமர் தந்திருக்கேன்🙈 மறந்துருக்க மாட்டிங்கன்னு நினைக்கறேன். அங்கயே கிடன்னு அவன் சொல்லி விடவும், இவளுக்கு பயம். பிறந்த வீட்டினரின் கைகளுக்குள்ளேயே வளர்ந்த பெண்ணுக்கு புகுந்த வீட்டில் கணவனின் அவதாரம் மிரட்சியைத் தந்தது. அதுவும், தானே தேர்ந்தெடுத்த வாழ்க்கை என்பதால் குற்றம் குறையேன எதுவும் சொல்லவும் முடியாது. சுவற்றோடு சுவராக நெருக்கியடிச்சுகிட்டு நின்றவளுக்கு பிடிமானம் ஏதுமில்லை. இறங்கும் பொழுது ஏதோ ஒரு வேகத்தில் எட்டிக் குதித்து இறங்கியாயிற்று. இப்பொழுது […]

வேந்தன்… 44 Read More »

வேந்தன்… 43

வேந்தன்… 43 எவ்வளவு உக்கிரமா மிரட்டிட்டு இருக்கோம். இவளானால் ரெஸ்ட் ரூம் போறேன்னு சொல்றாளே! அவளையே கடுப்பாய் முறைத்தான். “ப்ளீஸ் அர்ஜென்ட்” ஒற்றை விரலை உயர்த்தி அவன் முன் காட்டிட. “போய்த் தொலை” அவளை விடுவித்தான். அவன் விடுவித்த அடுத்த கணம் அருகில் இருந்த ஜன்னலை நோக்கி ஓடினாள் அவனிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு. “ஏய்” கைக்கெட்டிய முந்தானையை பற்றிட, பின் எதுவும் குத்தாததால், ஒரே சுற்றில் எளிதாய் அவன் கைக்குப் போய்விட்டது. ஒரு செக்கன் நின்று அவனைப்

வேந்தன்… 43 Read More »

வேந்தன்… 42

வேந்தன்… 42 மக்களே விமர்சனம் தரலாம்ல. 🤗 மென்மையான மலர் பெண்ணிற்கு இப்படியொரு ராட்சசன்தான் புருஷனாக அமையணுமோ. கணவன் அமைவதெல்லாம் இறைவன் தந்த வரம்னு சொல்வாங்க. சிபினும் நல்லவன்தான். ஆனால் தனக்கு உரிமைப்பட்டவளின் மீது வேறொருவனின்  பார்வை பட்டால்?…  சிவந்த கண்களும், உக்கிர முகமும், சட்டையில்லாத தேகத்தில் வரிவடிவமாக முறுக்கேரிய கட்டுக்கட்டானா அங்கங்களும் பார்க்கப் பார்க்க அவளுக்கு கண்களை இருட்டிகிட்டு வந்தது. அவனது தேகத்தின் சூடு இன்னும் தன்னில் படிந்திருப்பதை உணர்ந்தவளுக்கு இப்போதே காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது.

வேந்தன்… 42 Read More »

வேந்தன்… 41

வேந்தன்… 41 மக்களே முதல் அத்தியாயத்தில் நான் சொன்னது உங்களுக்கு நினைப்பிருக்கும்னு நினைக்கறேன். கதை இனி ஆரம்பிக்க போகிறது. எப்படி வேணாலும் போகலாம். சிபின் அறையில் தனித்திருந்தாள் நளிரா.  பெற்றவர்களும் சென்றுவிட, ஏனோ இங்கே எந்த பாதுகாப்பு உணர்வும் சரிவர கிடைக்காதது அச்சமாக உணர்ந்தாள். அலங்கரிக்கப்பட்ட மஞ்சத்தில் அமரவும் அச்சம் தடுக்க அங்கே இருந்த நீள்இருக்கையில் அமர்ந்தாள்.  விழிகளால் அறையை அளவிட்டவளுக்கு அதன் பிரம்மாண்டமும் ஆடம்பரமும் பார்க்கவும், தான் இங்கே பொருந்தாததைப் போலவே தோன்றியது.  சிபினை சந்தித்த

வேந்தன்… 41 Read More »

வேந்தன்… 40

வேந்தன்… 40 “என்னடி அநியாயத்துக்கு வெட்கப்படுற. மாப்பிள்ளை கிட்டயாவது பேசுவியா?” அழகு பதுமையாக அமர்ந்திருந்த தங்கையின் காதோரம் கண் மையால் திருஷ்டிப் பொட்டு வைத்த சைத்ரா, செல்லமாக அவள் கன்னம் தட்டிக் கேட்டாள். “அக்கா” மெல்ல அழைத்தவள் அவள் இடையோடு கட்டிக்கொண்டாள். அவள் மனதில் இனம் புரியாத அச்சம் வாட்டி வதைத்தது. அதை வெளியே காட்டி யாரையும் தொந்தரவு பண்ணாது தனக்குள்ளேயே போட்டுப் புதைத்தாள். “நளி. முதல் நாள் அப்படித்தாண்டி இருக்கும். பயப்படாதே” தாம்பத்தியம் பற்றிய அச்சத்தில்

வேந்தன்… 40 Read More »

வேந்தன்… 39

வேந்தன்… 39 சிபினிடம் பேசிமுடித்துவிட்டு நேராக கணவனை தேடிச் சென்றாள் மிரா. துருவ்வை பார்த்துவிட்டு, அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்திருந்தவனுக்கு மனதெல்லாம் அத்தனை சோர்வாக இருந்தது. உடல் சோர்வு, வலி இப்படி எதுவும் இருப்பின் ஒரு வலி நிவாரணியை எடுத்துக் கொண்டால் அதற்கு தீர்வு கிடைத்துவிடும். ஆனால் மனம்?… உலகில் பாதி துன்பம் மனதளவில் மட்டுமே வருகிறது. ஆரியன் மகனின் நினைவில் படுக்கையில் படுத்திருக்க, கணவனின் முகம் பார்த்தவளையும் அவனது கவலை தொற்றயது. “துருவ் எப்படி இருக்கான்?” வேதனையுடன்

வேந்தன்… 39 Read More »

அத்தியாயம் 38

அத்தியாயம் 38l   சொல்லாமல் சொன்ன காதல் கதைக்கான கரு நெஞ்சுக்குள் முட்டி நிற்க, அதன் கணம் தாளாது போனான்.   பார்த்த நாள் முதல் தன்னை ஆட்சி செய்தவள் இப்பொழுது இன்னொருவன் அதுவும் தன் கூடப்பிறந்தவனின் சொந்தம்?   ஆத்மாவும் ரவிக் இருவரும் சிபினின் காதல் பற்றி சொல்லும் பொழுது, அருகில் இருந்த துருவ்க்கு முகமெல்லாம் வெளிரிப் போனது. அப்போதைக்கு தன்னை சந்தோஷமாக காட்டிக்கொண்டவன், அங்கேயிருந்து காரில் கிளம்பிவிட்டான்.   நவீன ரக கார், வேகத்திற்கு

அத்தியாயம் 38 Read More »

வேந்தன்… 37 

வேந்தன்… 37  பெரியவர்கள் பேசுவதைக் காதில் வாங்கியவாறு அந்தந்த இடத்தில் மடித்து வைத்த துணிகளை அடுக்கினாள் நளிரா. “நளி அக்கா ஆர்த்திது எல்லாம் எப்பவும் போலவே அடுக்கி வைம்மா. மாத்தி வச்சுட்டா அவ்ளோதான்” மலர்விழி மகளிடம் சப்தமாக சொன்னார்.  “சரிம்மா” சொன்னவளுக்கு இவர்கள் தானாய் சென்று பேசுவதில் விருப்பமேயில்லைதான். ஆனால் இதற்கும் ஏதாவது மறுத்துப் பேசினால் தப்பாகப் போகுமோ என்று வாயை மூடிக்கொண்டாள்.  “என்னாச்சுங்க? ரொம்ப யோசிக்க வேண்டாம். கேட்டு பார்ப்போம். அவங்க சரின்னு சொன்னா மேற்கொண்டு

வேந்தன்… 37  Read More »

வேந்தன்… 36

வேந்தன்… 36 ரெண்டு வாரம் கடந்திருக்க, இரண்டு பெண்களுக்கும் திருமணமாகி மறுவீட்டு விருந்து முதல் எல்லா விசேஷங்களையும் நல்லபடியாக நடத்தி முடித்தாயிற்று. பெண்கள் இருவரும் மாமியார் வீட்டில் நன்றாகப் பொருந்திப் போகவும், பெத்தங்களுக்கு நிம்மதியானது. நளிராவை தங்கிட்டுப் போவதற்கு அவர்கள் கட்டாயப்படுத்தவும், வாணி வேண்டாமென மறுத்ததோடு, “அப்படியெல்லாம் தங்கக் கூடாதுடி. அந்தம்மா பத்திதான் நமக்கே தெரியுமே. உன்னையக் கண்டாவே ஆவாது அதுக்கு. ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லிட்டா காலம் முழுக்க மறக்காது பாத்துக்க. உன்னால வாழப் போன

வேந்தன்… 36 Read More »

வேந்தன்… 35

வேந்தன்… 35 “என்னங்க நம்ம குருஜிகிட்ட பேசிட்டு வரீங்களா? அடுத்து என்ன செய்யறதுன்னும் கேளுங்க” மிரா ஆரியனிடம் கூறினாள். “அதெல்லாம் நீ பேசு மிரா” அவள் அருகில் குனிந்து கூறினான். “ப்ச். சொன்னதை மட்டும் செய்ங்க. நான் அவர்கிட்ட பேசினா சுத்தி வளைச்சு வளவளான்னு பேசணும். நீங்களா இருந்தா ஒரு பேச்சுல பதில் சொல்லிடுவார்” மிரா நறுக்குன்னு சொன்ன விதத்தில், “பயந்துட்டேன்” சிரித்துவிட்டான். “ஆமாமா ரொம்ப பயம்தான். போய் பேசிட்டு வாங்க” “நீங்க பேசிட்டு இருங்க. டென்

வேந்தன்… 35 Read More »

error: Content is protected !!