அன்னமே 4
அத்தியாயம் 4 சுலோச்சனா முகம் இஞ்சி தின்னது போல மாறிவிட்டது. “பொண்ணா அடக்க ஒடுக்கமா இருந்தாத்தான. என்னைப் பாரு அழகைப் பாருன்னுட்டு காட்டிட்டு நிக்கறா. பக்கத்துல ஆம்பளைங்க நின்னா பத்தடி தள்ளி நிப்போம் நாம. இவ பாத்தியா அன்னம், அன்புவ உரசிகிட்டு நிக்கறா” பட்டாசு மாதிரி படபடத்தார். “எட்டி நின்னவதான் நெல்லு மூட்டைய ஒப்படைக்க வந்தவனை மயக்கி இழுத்தாளாக்கும். பேசுற பழமையை சரியா பேசச் சொல்லு கருப்புச்சாமி” ராமாயி மருமகளை இடிக்காத பாட்டில் வெத்தலையை கொட்டலாவில் போட்டு […]