வேந்தன் 16
வேந்தன் 16 எதிரே கண்ணுக்கு எட்டிய வரை நீலக் கடலின் ஆதிக்கம் கம்பீரமாய் வீற்றிருந்தது. தங்கமாய் ஜொலித்த மணல் மீது திமிராய் நின்றிருந்தது சிபினின் வாகனம். சூரியன் அஸ்தமனம். ஆகும் நேரம் அது, இளவெய்யில், கடற்கரை காற்றும் சுகமாய் மேனியை தழுவிப் போக, ஆங்காங்கே மக்களின் நடமாட்டம் இருந்தது. ஆரம்பத்தில் தம்பியை அடித்துவிட்டாளே என்ற கோபம்தான் அவனுக்கு. செல்லமாய் ஒரு துரும்பு கூடப் படாமல் வளர்ந்தவனை இப்படி கன்னத்தில் தடம் வரும் அளவிற்கு அடித்துவிட்டாளே என்ற ஆவேசத்தில்தான் […]