ஸ்ரீ வினிதா

13. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 13 இரவு வரவே கூடாது என்று பரிதவிப்போடு எண்ணினாள் அஞ்சலி. இன்று அவள் எவ்வளவு தடுத்தாலும் மாமா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அவளுக்குப் புரிந்தது. இன்றே வாழ்க்கையை ஆரம்பித்து விட வேண்டும் என்ற உறுதியில் இருப்பவரிடம் இனி என்ன சொல்லி தடுத்து நிறுத்துவது என எண்ணி மனம் கலங்கிப் போனாள் அவள். மதுராவின் மிரட்டல் வேறு அவளை வருத்தத்தில் ஆழ்த்தியது. “கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம எப்படி அவளால கதிர் […]

13. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

12. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 12 வீட்டிற்கு வந்ததும் அஞ்சலி அறைக்குச் சென்று ஈரமான புடவையை மாற்றினாள். அவளால் கதிரை இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை. கதிரோ அவளுக்கு நேரம் தர வேண்டும் என்று உணர்ந்தவன் அவளைத் தனியே விட்டு வெளியேறினான். புடவையை மாற்றிக் கொண்டு கண்ணாடியின் முன்பு வந்து நின்றவளுக்கு கண்களில் கண்ணீர் பெருகியது. கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். கதிர் அன்று பூஜை அறையில் வைத்து கட்டிய தாலி அவளுடைய மார்பில் ஒட்டி உறவாடுவதைக் கண்டு நெஞ்சம் வெம்பியது. இந்தத்

12. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

11. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 11 அவள் கால் வைத்திருந்த படிக்கட்டில் படிந்திருந்த பாசியோ அவளைத் தடுமாறச் செய்தது. விளைவு படிக்கட்டில் அவளுடைய கால் நழுவி விட சட்டென ஆழமான பகுதியில் விழுந்து விட்டாள் அஞ்சலி. இவ்வளவு நேரமும் அவள் இரசித்து விளையாடிய குளிர்ந்த நீர் அவளை நொடியில் மூழ்கடித்து விட, “மாமாஆஆஆ..” என அலறித் துடித்தாள் நீச்சல் தெரியாத பேதையவள். அடுத்த நொடியே அந்தக் குளத்திற்குள் குதித்த கதிரோ குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த தன்னவளின் புடவையை

11. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

10. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 10 கதிரின் ஏக்கம் கலந்த வார்த்தைகள் அஞ்சலியின் மனதில் ஒரு புதிய உணர்ச்சியைத் தூண்டிவிட்டன. இதெல்லாம் அவளுக்குப் புதிதாக இருந்தது. அவனுடைய புன்னகையும் அவளைப் பார்க்கும் ஆழ்ந்த பார்வையும் அவளுக்கு ஒரு இனம்புரியாத சிலிர்ப்பை அளித்தன. “மாமா…” என அழைத்து எதையோ கூற முயன்றவள் வார்த்தைகளை முடிக்க முடியாமல் தலையைக் குனிந்தாள். அவளுடைய முகம் வெட்கத்தில் சிவந்து இதயம் வேகமாகத் துடித்தது. கதிரோ அவளுடைய வெட்கத்தை ரசித்தவன், “கையில இருக்க தட்ட என்கிட்ட கொடு..”

10. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

09. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 09 கதிரின் கோபத்தை முதன்முறையாகக் கண்ட அஞ்சலிக்கு உடல் வெலவெலத்துப் போனது. அவனுடைய கோபத்திற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று கூடத் தெரியாமல் உறைந்து போய்விட்டாள் அவள். அவளுக்கு இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. தந்தை ஒரு பக்கம், உண்மையைச் சொல்லக் கூடாது என மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். தன்னுடைய அக்காவோ உண்மையைச் சொன்னால் என் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.. அவர்கள் இருவருக்கும் இடையே நான் அல்லவா சிக்கித் தவிக்கின்றேன்?

09. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

08. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 08 இடம் சென்னை.. கடற்கரையை ஒட்டிய நவீனமான ஃபேஷன் டிசைனிங் ஸ்டுடியோவில் ஒரு மர மேஜையின் முன் அமர்ந்திருந்தாள் மதுரா. அவள் சென்னைக்கு வந்து ஒரு நாள் மட்டுமே ஆகியிருந்தது. அவளுடைய முகத்தில் ஒரு தன்னம்பிக்கையான புன்னகையும் தன் கனவுகளை அடையும் உற்சாகமும் மின்னின. அவள் அணிந்திருந்த எளிய ஆகாய நீல நிற காட்டன் சுடிதார் அவளுக்கு பாந்தமாகப் பொருந்தி அவளுடைய அழகை எடுத்துக் காட்டியது. ஸ்டுடியோவின் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக சென்னையின் கடற்கரை

08. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

07. தொடட்டுமா தொல்லை நீக்க.!

தொல்லை – 07 தன் முன்னே நிற்பது தன்னுடைய மூத்த மகள் மதுரா இல்லை இரண்டாவது மகள் அஞ்சலி என்பது புரிந்ததும் உச்சகட்ட அதிர்ச்சியில் அப்படியே அசையாமல் நின்று விட்டார் சீதா. சில நொடி நேரங்கள் அவர் அசையவே இல்லை. அதிர்ச்சியில் மூளை அவருடைய செயல்பாட்டுத் திறனை நிறுத்தி இருந்ததோ என்னவோ.. அதே நேரம் தன்னுடைய அறைக்குள் நின்ற அன்னையைக் கண்டு அதிர்ந்து போனாள் அஞ்சலி. அவளுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் பொலபொலவென வழியத் தொடங்கியது. “அ..

07. தொடட்டுமா தொல்லை நீக்க.! Read More »

06. தொடட்டுமா தொல்லை நீக்க

தொல்லை – 06 “போ போன்னா எப்படிங்க போக முடியும்..? சின்னவ ஓடிப் போயிட்டான்னு சம்மந்தி வீட்ல போய் எல்லாருக்கும் சொல்லச் சொல்றீங்களா..? இவ்வளவு நாளும் பணம்தான் நம்மகிட்ட இல்ல இதைச் சொன்னா நம்ம மானம் மரியாதையும் நம்மள விட்டுப் போயிடும்..” என அழுதவாறு கூறினார் சீதா. அவர் முகம் வீங்கிச் சிவந்திருந்தது. “இல்லடி நேத்து அஞ்சலி மது கூடதான் கடைசியா பேசினா.. அதுக்கப்புறம்தான் அவளைக் காணல.. உன்னோட அக்கா பொண்ணு லல்லுகிட்ட ஊர விட்டுப் போறேன்னு

06. தொடட்டுமா தொல்லை நீக்க Read More »

05. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 05 கதிரின் இறுகிய அணைப்பில் திகைத்துத் திணறிப் போனாள் அஞ்சலி. அவளுடைய உடல் முழுவதும் ஒரு வித ஒவ்வாமை உணர்வு பரவ, வேகமாக அவனைத் தள்ளிவிட முயற்சித்தவளுக்கு அடி வயிறு சுரீரென வலித்தது. சட்டென தன் அடி வயிற்றில் கரங்களைப் பதித்தவாறு வலியோடு முனகியவளை உணர்ந்து அவளிடமிருந்து வேகமாக விலகினான் கதிர். “என்ன ஆச்சுடி..? எதுக்கு இப்போ கத்தின..? நான் உன்னை ஏதாவது ஹர்ட் பண்ணிட்டேனா..?” என அவன் பதறியவாறு கேட்க, “இல்… இல்லை

05. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

04. தொடட்டுமா தொல்லை நீக்க

தொல்லை – 04 கதிரின் வார்த்தைகளைக் கேட்ட அஞ்சலியின் இதயம் படபடவென அடித்தது. “மாமா… இது… இது அபசகுணம்… இன்னைக்கு எதுவும் வேணாமே…” என மெல்ல முனகினாள் அவள். அவளுடைய குரல் நடுக்கத்துடன் தழுதழுத்தது. கைகளில் இருந்த பால் செம்பு அவளுடைய பயத்தின் விளைவால் கிடுகிடுவென ஆடியது. கதிரோ அவளை உற்றுப் பார்த்தவன், மெல்லப் புன்னகைத்து, “ஏய்… இதெல்லாம் ஒரு பிரச்சனையா..? தாலிக் கயிறு அவிழ்ந்து விழுந்துடுச்சு, அதுக்கு என்ன..? நானே மறுபடியும் கட்டி விடுறேன்டி..” எனக்

04. தொடட்டுமா தொல்லை நீக்க Read More »

error: Content is protected !!