அசுரனின் குறிஞ்சி மலரே

அசுரனின் குறிஞ்சி மலரே.. 41

குறிஞ்சி மலர்.. 41 ஜேம்ஸ் தன் நாய்களை அவிழ்த்து விடுவேன் என்று சொன்னதும், எப்படித் தான் அழுகையை நிறுத்தினாளோ தெரியவில்லை. சட்டென்று கோதையின் அழுகை நின்று போனது. “குட் பேபீ..” “என்ன மிரட்டுறியளோ..” “இல்லையே பேபீ..” “அப்போ இதுக்கு என்ன பேரு..” “எதுக்கு..” என சாதாரணமாகக் கேட்டவனின் தொனியில் கடுப்பாகி “ஆ..” எனக் கண்களை மூடிக் கத்திய கோதை, வேகமாக உள்ளே போக திரும்ப, மீண்டும் மனைவியைத் தூக்கி விட்டிருந்தான் ஜேம்ஸ். “என்ன நீங்கள்..” “என்ன நான்..” […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 41 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 40

குறிஞ்சி மலர்.. 40 தூரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் மணி, நேரம் நள்ளிரவு பன்னிரெண்டு என்பதை உறுதிப்படுத்த டாங் டாங்கென ஒலிக்கவும் கோதை திடுக்கிட்டு கண் திறந்து பார்த்தாள். வாசல் தூணோடு சாய்ந்து லேசாக கண்மூடியிருந்தவளுக்கு, கண் லேசாக எரிவது போல இருந்தது. நிமிர்ந்து வாசலைப் பார்த்தவள், மீண்டும் தூணில் சாய்ந்து கொண்டாள். அவளை அப்படியும் இப்படியும் மனதால் அலைக்கழிய வைத்துவிட்டு, நடு இரவு ஒரு மணிக்கு ஜேம்ஸ் வீடு வந்து சேர்ந்தான். வாட்ச்மென் ஓடிச் சென்று

அசுரனின் குறிஞ்சி மலரே.. 40 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 39

குறிஞ்சி மலர்.. 39 கோதைக்கும் ஜேம்ஸுக்கும் திருமணம் முடிந்து சரியாக ஆறு தினங்கள் முடிந்த நிலையில், ஏழாவது நாள் அவர்களின் திருமண வரவேற்பு நடத்தப் பட இருந்தது. விடிந்தால் திருமண வரவேற்பு எனும் நிலையில், அதற்கான ஆயத்தங்களை வியாகேசும் வஞ்சியும் முன்னின்று கச்சிதமாக நடாத்திக் கொண்டிருந்தனர். திருமண வரவேற்பை நடாத்துவதற்காக வெளியே ஒரு மண்டபத்தை புக் செய்திருந்தார்கள். வரவேற்பில் இருந்து உணவு பரிமாறுவது வரை மண்டபத்தினரே சிரத்தையாகப் பார்த்துக் கொள்ள, பணம் கொடுத்து விட்டு அதை மேற்பார்வை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 39 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 38

குறிஞ்சி மலர்.. 38 தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த கோதையின் பார்வை, சுவற்றிலே தான் மாட்டி வைத்த ஜேம்ஸின் படத்திலும், கட்டிலில் கிடந்த தன் டப்பா ஃபோனிலுமே அடிக்கடி பதிந்து பதிந்து மீண்டு கொண்டிருந்தது. காதல் கொண்ட மனது அவனுக்கு அழைத்து பேசு என்று ஆர்ப்பரிக்க, வேண்டாம் வேண்டாம் அவர் தான் ஜாலியாக கொழும்பு போய் விட்டாரே என்று அவளது பெண் மனது அவளுக்கு அணை போட, கடைசியில் ஏதாவது குறுஞ்செய்தியாவது அனுப்பி பார்ப்போமே

அசுரனின் குறிஞ்சி மலரே.. 38 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 37

குறிஞ்சி மலர்.. 37 கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் பூக்காடும், நடு நடுவே நீர்வீழ்ச்சியும் என இயற்கை எழில் கொஞ்சும் இடத்தின் நடுவில், பச்சை வண்ணப் புடவையில் கோதை நின்றிருக்க, அவளின் முன்னால் கையில் பூச்செண்டு ஏந்திக் கொண்டு ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இயற்கையின் அழகில் தன்னை மறந்திருந்தவளது பார்வையைத் தன் பக்கம் திருப்ப முனைந்து கொண்டிருந்த, அந்த பூச்செண்டுகாரனின் முகம் கோதைக்கு தெளிவாகத் தெரியவில்லை. சூரிய வெளிச்சம் வந்து கொண்டிருந்த திக்கில், கோதையைப் பார்த்தபடி நின்றிருந்தவனது

அசுரனின் குறிஞ்சி மலரே.. 37 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 36

குறிஞ்சி மலர்.. 36 கோதையின் கழுத்தில் ஜேம்ஸ் தாலி கட்டி, கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆகி விட்டிருந்தது. அந்த ஐந்து மணி நேரத்தையும் எப்படிக் கடந்து வந்தாள் கோதை என அவளிடம் கேட்டால் அவளது பதில் தெரியாது என்பதாகத் தான் இருக்கும். ஜேம்ஸின் தாலியை கழுத்தில் சுமந்து நின்றவளுக்கு, அவனை நேர் கொண்டு பார்க்க மட்டும் தைரியம் வரவேயில்லை. அதனால் தாய்க்கு பின்னால், அவரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டு அறையிலேயே அடைந்து விட்டிருந்தாள். ஏதோ அவசர

அசுரனின் குறிஞ்சி மலரே.. 36 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 35

குறிஞ்சி மலர்.. 35 “அம்மா..” என்று கொண்டு அங்கே வந்த கோதையைப் பார்த்து வியாகேசு முட்டைக் கண்ணை உருட்ட, நீலரூபி நெஞ்சை அழுத்தி பிடிக்க, ஒருத்தன் மட்டும் தன் பேபியை இரசித்துக் கொண்டு நின்றிருந்தான். இது நாள் வரையில் வெள்ளையில் கறுப்பு கரையிட்ட புடவையுடன் வலம் வந்தவள் இன்று கூரைப் பட்டில் அவன் முன்னால் நிற்கிறாள். அதுவும் அவளுக்கென அவன் ஆசையாக எடுத்துக் கொடுத்த புடவையில். அவளது சாக்லேட் நிறத்துக்கு அந்தப் புடவை எடுப்பாகத் தான் இருந்தது.

அசுரனின் குறிஞ்சி மலரே.. 35 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 34

குறிஞ்சி மலர்.. 34 ஜேம்ஸின் அருகில் மணப்பெண்ணாய் அவன் கட்டிய தாலியை சுமந்தபடி தலை குனிந்து அமர்ந்திருந்த கோதைக்கு, கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. இப்படியொரு திருப்பம் தன் வாழ்வில் வருமென்று அவள் கனவு கூட கண்டிருக்கவில்லை. ஆனாலும் அவளும் சராசரி பெண்கள் போல கணவன், குழந்தை என ஒரு திருப்திகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்படாதவள் இல்லை. அவளுக்கு தன்னை முதலில் மணம் முடித்த வாகீசன் மீது, திருமணம் முடித்த புதிதில்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 34 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 33

குறிஞ்சி மலர்.. 33 ரூபவர்ஷியை வீடு முழுவதும் தேடியும் அவள் எங்குமே கிடைக்கவில்லை. அதற்குள் பட்டு வேஷ்டி சட்டை போட்டு மாப்பிள்ளை கோலத்தில் ஜேம்ஸ் கீழே இறங்கி வர தில்லையம்பலத்துக்கு பதட்டம் கூடி விட்டது. ஒரு மர்மப் புன்னகையோடு அவரையே பார்த்தபடி போய் மணமேடையில் அவன் அமர்ந்து கொள்ள, மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள் என ஐயர் உத்தரவு கொடுத்தார். முகூர்த்தத்துக்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது, ஐயர் ஏன் இப்போதே பெண்ணை அழைக்கிறார் என

அசுரனின் குறிஞ்சி மலரே.. 33 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 32

குறிஞ்சி மலர்.. 32 தன் அறையினுள் நுழைந்து கொண்ட கோதைக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏன் அவனுக்கு முகம் அப்படி மாறியது என மண்டையை போட்டுக் குழப்பிக் கொண்டாள். பிறகு தன்னைத் தானே மானசீகமாகத் திட்டியும் கொண்டாள். என்ன இருந்தாலும் நான் அந்தப் பாட்டைப் பாடி இருக்க கூடாது. அந்த இடத்துக்கு ஏற்ற போல நல்ல பாட்டாப் பாடியிருந்தால் அந்த இடம் இன்னும் அழகாக மாறியிருக்கும், அவனும் இப்படிப் பாதியில் எழுந்து வந்திருக்க மாட்டான் என

அசுரனின் குறிஞ்சி மலரே.. 32 Read More »

error: Content is protected !!