அசுரனின் குறிஞ்சி மலரே

அசுரனின் குறிஞ்சி மலரே.. 11

குறிஞ்சி மலர்..11 அடிபட்ட புலி ஆக்ரோஷம் தாங்காமல் குறுக்கும் நெடுக்கும் நடப்பது போல ஜேம்ஸ் மாடியில் நடந்து கொண்டிருந்தான். கோதையை வீட்டின் பெரிய கூடத்துக்கு அழைத்து வந்த ரகுமான், தேவாவிடம் வீட்டு உறுப்பினர்களையும் வேலைக்காரர்களையும் அழைத்து வரச் சொல்லி அனுப்பி வைத்தான். ஜோசப்பும், அல்போன்சும், மேரியும் ஒரு ஓரமாக வந்து நின்று பவ்வியமாக முகத்தை வைத்துக் கொண்டார்கள். வேலைக்காரர்களும் ஒரு ஓரமாக நின்றார்கள். அவர்கள் எல்லோரையும் பார்த்த ரகுமான் “இனிமேல் இந்தப் பிள்ளையை நீங்கள் யாருமே வேலை […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 11 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 10

குறிஞ்சி மலர்.. 10 அதிகாலை நேரத்துக்கே உண்டான குளுமையும் புத்துணர்ச்சியும், மெல்லிய காற்றுடன் திறந்திருந்த வாசலினூடாகவும், சாளரங்களினூடாவும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. கோதையோ அந்த அதிகாலைப் பொழுதின் குளுமையிலும் கூட வியர்த்து விறுவிறுக்க நின்றிருந்தாள். இடது கையால் நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்தபடி வலது கையில் பால் குவளையை வைத்திருந்த கோதை, அப்போது தான் அவனின் நீல விழிகளைப் பார்த்தாள். “என்ன இந்த மனுஷன் தேத்தண்ணியைக் குடுத்தால் வாங்கிக் குடிக்காமல்.. குறுகுறுண்டு பாக்குது.. இதென்ன எல்லாருக்கும் கருவிழி

அசுரனின் குறிஞ்சி மலரே.. 10 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 9

குறிஞ்சி மலர்.. 9 மலேசியாவில் இருந்து கொழும்பு திரும்பிய ஜேம்ஸ் பீட்டர், அதிகாலையிலேயே திருகோணமலை திரும்பிக் கொண்டிருந்தான். அவனது வரவை எதிர்நோக்கி பங்களாவின் வாசலில் காத்திருந்த வியாகேசுவுக்கு பக்கத்தில், தூணோடு சாய்ந்து கொண்டு தூங்கி வழிந்தபடி நின்றிருந்தான் வஞ்சிமாறன். “யோவ் பெரிசூ..” “என்னடா..” “பாஸு வர இன்னும் எம்புட்டு நேரம் புடிக்கும்.. வருதா வருதா வருதா..” “டேய்.. கொஞ்ச நேரமாச்சும் சும்மா இரடா.. உந்தக் கேள்வியை நீ எத்தினை தரங் கேட்டாலும் அவன் வார நேரந்தான் வருவான்..

அசுரனின் குறிஞ்சி மலரே.. 9 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 8

குறிஞ்சி மலர்.. 8 வானம் மழை மேகங்களை சுமந்து கொண்டு மப்பும் மந்தாரமுமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது. சூரியனை வெகு பிரயதனப்பட்டு மேகங்கள் மூடி கிடக்க, வாயு பகவானும் வெகு பிரயத்தனப் பட்டு மேகங்களைக் கலைத்து சூரியனை வெளிக்கொணர முயன்று கொண்டிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தின் வாசலில் அமர்ந்து கொண்டு, மழை வருமா? வராதா? என்பது போல விரல் நகங்களைக் கடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள் பூங்கோதை. பூங்கோதை ஜீவோதயத்திற்கு வந்து இன்றோடு ஐந்து நாட்களாகி

அசுரனின் குறிஞ்சி மலரே.. 8 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 7

குறிஞ்சி மலர்.. 7 மரங்களை ஊடறுத்து வந்த மெல்லிய தென்றல் காற்று, தேகம் வருடிச் செல்ல, காற்று கலைத்து விட்டுச் சென்ற கூந்தலை ஒரு கையால் ஒதுக்கி விட்டபடி திரும்பிப் பார்த்தாள் பூங்கோதை. அவள் வரும்போது இருந்த மாட்டுத் தொழுவத்திற்கும் இப்போது இருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. எல்லாம் அவளின் கை வண்ணம் தான். மேலே வேயப்பட்டிருந்த ஓலை தவிரத் திறந்த வெளியாக இருந்த மாட்டுத் தொழுவம், கீழே குப்பை கஞ்சலாகப் பார்ப்பதற்கே அழுக்குப்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 7 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 6

குறிஞ்சி மலர்..6 தென்றல் காற்று பூ மரங்களின் ஊடே புகுந்து அப்பால் நகர்கையில், தன் குளுமையோடு பூக்களின் சுகந்தத்தையும் ஏந்திக் கொண்டே நகர்ந்தது. அத்தனை இதமான சுகந்தத்தை எங்கும் பரப்பும், பூமரங்களைக் கொண்ட தெருவின் முனையில் தான் ஜேம்ஸ்ஸின் ஜீவோதயம் அமைந்திருந்தது. வீடு அமைந்திருந்த தெருவில் மட்டும் தான் வாசனை மரங்கள் ஏராளமாக இருந்தன ஆனால், ஜேம்ஸின் பங்களா அமைந்திருந்த வளாகத்தில், வாசனைப் பூக்களுக்கு மட்டும் பஞ்சம். அங்கே நின்ற பூ மரங்கள் வாசனையுள்ள பூக்களைப் பூக்காமல்,

அசுரனின் குறிஞ்சி மலரே.. 6 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 5

குறிஞ்சி மலர்..5 தெற்கிலிருந்து வீசிய காற்றின் வேகத்தில், சாளரக் கதவுகளுக்குப் போடப் பட்டிருந்த திரைச் சீலைகள், தேசியக்கொடி பறப்பது போல பறந்து கொண்டேயிருந்தன. பூ மரங்களில் இருந்த பூக்களும் காற்றோடு சேர்ந்து வந்து அந்தப் பெரிய மொட்டை மாடியில், பூமழை தூவியது போலக் கொட்டிக் கிடக்க, அங்கே போடப் பட்டிருந்த பெரிய இருக்கையில் அமர்ந்து கொண்டு, மேலே வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்பீட்டர். அவன் மேல் விழுந்த ஒன்றிரண்டு பூக்களை, எரிச்சலோடும் அலட்சியத்தோடும் தட்டி விட்டவனின் கரம்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 5 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 4

குறிஞ்சி மலர்.. 4 காலை நேர இளங்காற்று அவசரம் இல்லாமல், சாமரம் வீசுவது போல வீசிக் கொண்டிருக்க, காலைச் சூரியனும் தன் சேவைக்கு வந்திருந்தான். அந்தப் பெரிய வீட்டின் ஒரு பக்கமாகத் தனியாக இருந்த அறையின், சாளரக் கம்பிகளின் ஊடாக உள்ளே நுழைந்த சூரியக் கதிர்கள், கீழே படுத்துக் கிடந்த பூங்கோதை மீது, தம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்ச, அவளோ போர்த்தியிருந்த சேலையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டு விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தாள். அவள் காலை நேரத்தில்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 4 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 3

குறிஞ்சி மலர்.. 3 வெள்ளை நிறத் தாமரை மலர்களும் மொட்டுகளும் என நிரம்பி வழிந்த தாமரைத் தடாகத்தின், கரையோரமாக விரிந்து கிடந்த புல்வெளியில் நின்று பார்க்கையில், வட திசையில் பெரிய அரசமரத்துக்குக் கீழே கருங்கல்லால் செதுக்கப் பட்டிருந்த, அமர்ந்த நிலை புத்த பகவானின் சிலை மனதுக்கு அமைதியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்தப் புத்த பகவானின் சிலையையே பார்த்தபடி நின்றிருந்தார் வியாகேசு. அவர் நின்றிருந்த இடத்தில் இருந்து, பத்து கிலோமீற்றர் தூரத்தில் இருந்த கோல்ட் ஸ்டார் ரெஸ்ரோரன்டில், ஜேம்ஸ்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 3 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே..2

குறிஞ்சி மலர்..2 காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த வேப்ப மரத்தின் கீழே, வெயில் தீண்டாமல் பாதுகாப்பாக இருப்பது போல, அந்த ஓட்டு வீடு அமைந்திருந்தது. வெளியே மரத்தின் கீழே சாய்மனைக் கட்டில் போட்டு, அதில் சாய்ந்தமர்ந்து கொண்டு, வெத்திலையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார், அந்த ஓட்டு வீட்டின் ராணி திரிலோகநாயகி. அவரது ஆனந்தமான அந்த வேலையைக் குழப்புவது போல, வீட்டின் வெளி வாசலில் காரின் கோர்ன் சத்தங் கேட்கவே, நம் வீட்டுக்கு யாருப்பா அது காரில் வருவது

அசுரனின் குறிஞ்சி மலரே..2 Read More »

error: Content is protected !!