விடாமல் துரத்துறாளே

விடாமல் துரத்துராளே 12

விடாமல் துரத்துராளே 12 தேவா எதையோ டைப் செய்வது தெரிய தியா முகம் பிரகாசத்தில் மின்னியது. ஆனால் பத்து நிமிடங்கள் ஆகியும் பதில் ஏதும் வரவில்லை. என்னடா இது என்று நொந்தவள் அவளே தேவாவிற்கு போன் செய்தால், தியாவை திட்டி வேகமாக மெசேஜ் டைப் செய்தவன் அதை அனுப்பவில்லை. இப்போது திட்டினாலும் பிரயோசனமில்லை. தியா அடங்கமாட்டாள். தன் மீது அந்த பெண்ணுக்கு ஒரு சின்ன ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதுவே அவளை தன்னிடம் இவ்வாறு நடந்து கொள்ள […]

விடாமல் துரத்துராளே 12 Read More »

விடாமல் துரத்துராளே 11

விடாமல் துரத்துராளே 11 மறுநாள் காலை வேளை “டேய் எருமைமாடே எழுந்திரு என்ன இப்புடி நடுஹால்ல படுத்து இருக்க” என பாட்டில்கள் நடுவே மிக்சரில் முகத்தை வைத்து தூங்கி கொண்டு இருந்த தேவா முதுகிலே இரண்டு அடி போட்டான் சூர்யா… அவன் அடித்த அடியிலும் போட்ட சத்தத்திலும் இரவு குடித்த போதையின் தாக்கம் இன்னும் இருந்தாலும் கஷ்டப்பட்டு கண் விழித்தான் தேவா… “ குடிக்கார பக்கி இப்புடியா கண்ணு மண்ணு தெரியாம குடிப்பாங்க”.. என கன்னத்தில் ஒட்டி

விடாமல் துரத்துராளே 11 Read More »

விடாமல் துரத்துராளே 10

பாகம் 10 தேவா தனக்கு ஹச் ஐ வி என்று சொல்லி விட்டு தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தான். அதை கேட்ட தியாவிற்கு தான் பெரும் அதிர்ச்சி. அவளின் இதயமே துடிப்பதை ஒரு நொடி நிறுத்தியது… இப்படி ஒரு காரணம் இருக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை. தன்னை அறியாமல் கண்கள் கண்ணீரை வெளி ஏற்றியது… தேவாவிற்கு தியாவின் கண்ணீரை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. அவன் இவ்வாறு கூறியதும் அவள் எழுந்து ஓடி விடுவாள்

விடாமல் துரத்துராளே 10 Read More »

விடாமல் துரத்துராளே 9

பாகம் 9 இரவு யமுனா டைனிங் டேபிளிலில் உணவு பதார்த்தங்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தார். அவரது கணவர் பாலகிருஷ்ணன் சாப்பிட வந்து அமர்ந்தவர், “தியா குட்டி எங்க யமுனா?” என்று கேட்டார்… “அவ ரூம்ல இருக்கா”… “என்னது ரூம்ல இருக்காளா, என் கார் சத்தம் கேட்டாலே போதும் டாடி சொல்லி என் பொண்ணு ஓடி வருவா, இப்ப நான் வந்து ஓன் ஹவருக்கு மேல் ஆக போகுது… நான் வந்ததில் இருந்து பார்க்கிறேன் ஆளையே காணோம்…

விடாமல் துரத்துராளே 9 Read More »

விடாமல் துரத்துராளே 8

பாகம் 8 காரில் இருந்து இறங்கிய வெண்ணிலா கோவமாக செருப்பை கழற்றி வீசிவிட்டு வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு ஷோபாவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்… அவள் பின்னேயே காரை பார்க் செய்து விட்டு வந்த திவேஷ் அவன் மனைவி கோவமாக உள்ளாள் என்பதும் எதனால் கோவமாக இருக்கிறாள் என்பதும் தெரியும்… அதனால் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு அவள் அருகே சென்று அமர்ந்து அவள் கையை பிடிக்க, வெண்ணிலா

விடாமல் துரத்துராளே 8 Read More »

விடாமல் துரத்துராளே 7

விடாமல் துரத்துராளே 7 ஆரோக்கியம் மருத்துவமனை நான்கு மணி நேரத்திற்கு முன்பு…. கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள 20 அடுக்குமாடிக் கொண்ட மிகப்பெரிய பிரபலமான மருத்துவமனை தான் ஆரோக்கியம் மருத்துவமனை… கோவை மக்களின் முதல் தேர்வு இந்த மருத்துவமனை என்று தான் சொல்ல வேண்டும்.. ஏன் தமிழக அளவில் இந்திய அளவில் கூட மருத்துவமனை பெயர் சொன்னால் தெரியுமளவு பிரபலமான மருத்துவமனை இது..‌  அந்த அளவு தரமானதாக இருக்கும் இங்கு வைத்தியம்… அனைத்து வியாதிகளுக்குமான ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் இங்கு

விடாமல் துரத்துராளே 7 Read More »

விடாமல் துரத்துராளே 6

பாகம் 6 மறுநாள் காலை பாலகிருஷ்ணன் யமுனா வேதாசலம் வீட்டுக்கு வந்து ராகவ் இனியாவை மறுவீட்டு சம்பிரதாயத்திற்கு அழைத்து செல்ல வந்தனர்.. அவர்களுடன் தியா தன் வீட்டுக்கு சென்று விட்டாள்… அங்கு இரண்டு நாள் தங்கிய ராகவ் இனியா இருவரும் அதன் பின்பு தங்கள் இல்லத்திற்கு திரும்பி விட்டனர்… இரண்டு மாதங்கள் ஓடி விட்டது… தியா எப்போதும் போல் கல்லூரி சென்று வந்து கொண்டு இருந்தாள்… ஆனால் இந்த இரண்டு மாதத்தில் தேவா பற்றி எண்ணம் எழாமல்

விடாமல் துரத்துராளே 6 Read More »

விடாமல் துரத்துராளே 5

  பாகம் 5 தியா வீட்டுக்குள் ஓடி வந்தவள் கண்டது… தேவா வீட்டில் அனைவரும் சிரித்து பேசி கொண்டே சாப்பிடுவதை தான், அவளுக்கு அவர்களை பார்க்கும் போது கோவமாக வந்தது… குடும்பத்தில் உள்ள ஒருவனை தனியாக ஒதுக்கி விட்டு இவர்களால் எப்படி சிரித்து மகிழ்வாக இருக்க முடிகிறது என்று தோன்றியது… அங்கு இருக்கவே பிடிக்க வில்லை… தனது அக்காவிற்காக அந்த ஒரு நாளையும் கடினப்பட்டு அந்த வீட்டில் கழித்தாள்… தனது வீட்டில் இருந்து கோவமாக கிளம்பிய தேவா…

விடாமல் துரத்துராளே 5 Read More »

விடாமல் துரத்துராளே 4

  பாகம் 4 தேவேந்திரன் மாநிறம் தான் ஆனாலும் அழகனே, ஆறடி உயரம், அலை அலையென அவனை போன்று அடங்காத கேசம், பரந்த நெற்றி, அடர்த்தியான புருவம், குத்தீட்டி போன்று கூர்மையான பார்வை, தடித்த இதழ்கள், கட்டுக்கோப்பான உடற்கட்டு என்று தன் முன் கம்பீரமான தோற்றத்துடன் ஆணழகனாக தன் முன் நின்று கொண்டு இருந்தவனை தியா இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்… அவளின் உதடுகளோ ‘தேவேந்திரன் அப்படின்னு கரெக்டா தான் பேர் வச்சு இருக்காங்க’ என்று

விடாமல் துரத்துராளே 4 Read More »

விடாமல் துரத்துராளே 3

பாகம் 3 ராகவ் – இனியா இருவருக்க திருமணம் நல்ல முறையில் நடை பெற்றது… மண்டபத்தின் வாயிலில் தங்கள் காரில் வந்து இறங்கினார்கள் வெண்ணிலா திவேஷ் இருவரும்… வெண்ணிலாவை கண்ட மஞ்சுளாவும் இந்துமதியும் ஓடி வந்து அவளை கட்டி கொண்டனர்… “ஏன் நிலா இவ்வளோ லேட்டா வர?, நீ நேத்தே வருவன்னு நான் எதிர் பார்த்தேன்” ….  “இல்ல இந்து அவர் ஃப்ரெண்ட் வீட்டில்  ஒரு பங்ஷன் அங்க போயிட்டு வந்தோம் அதான் லேட்”…  “சரி இப்பவாவது

விடாமல் துரத்துராளே 3 Read More »

error: Content is protected !!