விஷ்வ மித்ரன்

25. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்   💙 அத்தியாயம் 25   _சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு_   ஹாஸ்பிடலில் ஹரிஷின் முன்னால் அமர்ந்திருந்தான் மித்ரன். அவனையே கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தார் தந்தை.   சில நாட்களாக அவனுக்கு அடிக்கடி நெஞ்சு வலி, தலைவலி வரத் துவங்கியிருந்தது. ஆரம்பத்தில் பெரிதாக எடுக்காமல் அலட்சியமாக இருந்தவன் நாட்கள் செல்லச் செல்ல அவனுடலில் ஏதும் மாற்றம் ஏற்படுவதை அறிந்தான். கூடவே முன்பை விட சற்றே பலவீனமாக உணர்ந்தான் அருள் மித்ரன்.   […]

25. விஷ்வ மித்ரன் Read More »

24. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   அத்தியாயம் 24   தோழனைக் கையில் ஏந்திக் கொண்டு ஹாஸ்பிடல் வாயிலினுள் நுழைந்து, “டாக்டர்ர்ர்” என்று அக்கட்டிடமே அதிரும் வண்ணம் கத்தினான் விஷ்வா.   அவனது அலறலைக் கேட்டு ஓடி வந்த தாதியர் உடனடியாக மித்ரனை டாக்டரின் உதவியோடு ஐ.சி.யூவில் அனுமதித்தனர்.   விஷ்வா அவ்விடத்திலேயே தொப்பென அமர்ந்து கொள்ள, அவனருகில் வைஷுவும், அக்ஷுவும் பதறிக் கொண்டு வந்தனர்.   “அண்ணா எந்திரிண்ணா” அழுகையூடே சொன்னாள் அக்ஷரா.   தன்னவன் நிலையைக் கண்டு

24. விஷ்வ மித்ரன் Read More »

23. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்    அத்தியாயம் 23   பைக்கில் ரவுண்ட்ஸ் போய் களிப்புடன் மித்துவின் வீட்டை அடைந்த நண்பர்களை வரவேற்றது வைஷ்ணவி காணாமல் போய் விட்டாள் என்ற அதிர்ச்சியான தகவல்!   தலையில் கை வைத்து அமர்ந்திருந்த ஹரிஷின் இரு புறமும் ஓடிச் சென்று உட்கார்ந்தனர் இருவரும்.   மித்து “டாடி! என்ன சொல்லுறீங்க? வைஷு இல்லையா? அவள் எங்க தான் போனாள் அதுவும் இந்த டைம்ல” படபடப்புடன் கேட்டான்.   “மனசு சரியில்லைப்பா கோயில் வரைக்கும்

23. விஷ்வ மித்ரன் Read More »

22. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   அத்தியாயம் 22   தர்ஷனின் மிரட்டல் அழைப்பு வந்ததிலிருந்து அக்ஷராவுக்கு மனது வெடவெடத்துப் போயிருந்தது.   “அது யாராக இருக்கும்? அண்ணாவுக்கு யாரும் எதிரிங்க இருக்குறதா எனக்கு தெரியாதே. அவனால விஷு மித்துக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்துருமா?” என்ற நினைப்பே அவள் உடலைச் சில்லிட வைத்தது.   “கடவுளே! அப்படி எதுவும் நடந்திடக் கூடாது. ஏதாவது சோதனை வந்தாலும் அதை எனக்கு கொடுத்திரு” என வேண்டியவளுக்கு “எனக்கு நீ வேணும்” என்ற குழையும்

22. விஷ்வ மித்ரன் Read More »

21. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்   அத்தியாயம் 21   முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த பூர்ணியையே கன்னத்தில் கை வைத்து பாவமாகப் பார்த்திருந்தான் ரோஹன்.   “அடியே எதுக்கு மூஞ்ச தொங்க போட்டுட்டு இருக்கே? பார்க்கவே சகிக்கல” என்றவனைக் கண்ணில் கனலுடன் நோக்கி, “எப்படி சகிக்கும்? அதான் ஆபீஸ்ல மூக்கும் முழியுமா சீவி சிங்காரிச்சுக்கிட்டு உன்னோட இருக்காளே சீலா. அவள் தான் உனக்கு தேவதை மாதிரி தெரிவா” என நொடித்துக் கொண்டாள் அவள்.    “பூர்ணிஇஇ” அதட்டலுடன் வந்தது அவன்

21. விஷ்வ மித்ரன் Read More »

20. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 20   ‘சிவகுமார் பேலஸ்’ என்று பொறிக்கப்பட்ட பொன்னெழுத்துக்கள் சூரிய ஒளியின் மாயாஜாலத்தில் பளபளத்துக் கொண்டிருக்க, பூவலங்காரங்களும் தோரணங்களுமாக கண்ணைக் கவர்ந்தது விஷ்வாவின் வீடு!   பேன்டும் சந்தன நிற சர்ட்டும் அணிந்து, சைட் சொட் வெட்டிய முடியுடன் பார்க்க அழகாக இருந்தான் விஷ்வா. மிக நெருங்கிய உறவுகள் ஒரு சிலரை மாத்திரமே நிச்சயதார்த்தத்திற்கு அழைத்திருக்க, மற்ற அனைவரையும் கல்யாணத்துக்கு அழைப்பதாக சிவகுமாரின் முடிவு.   சிவகுமாருக்கு அருகில் நின்று

20. விஷ்வ மித்ரன் Read More »

19. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 அத்தியாயம் 19   “டாடி எங்க போயிட்டீங்க” தந்தையைத் தேடிக் கொண்டு வந்தான் மித்ரன்.   ஹாலில் மாட்டப்பட்டிருந்த அன்னபூர்ணியின் ஃபோட்டோவை பார்த்தபடி நின்றிருந்தார் ஹரிஷ். அவரது மனதில் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருப்பது புரிந்து அருகில் சென்று தோளில் கை வைக்க திரும்பி பார்த்தார் அவர்.   “என்ன டாடி! உங்க ஆளு கூட தன்னந்தனியா டூயட் பாடிட்டு இருக்கீங்களா?” அவன் பக்கவாட்டாக அணைத்துக் கேட்க, “போடா உனக்கு எப்பவுமே

19. விஷ்வ மித்ரன் Read More »

18. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 18   கடு கடுவென இருந்த வைஷு, எதிரில் கூர்மையாய் தன்னைப் பார்த்தவாறு நிற்கும் விஷ்வாவைக் கண்டு திரு திருவென விழிக்கத் துவங்கினாள். தான் பேசியதை அவன் கேட்டு விட்டானோ என்று நினைக்கும் போது இதயம் ரயிலாக தடதடத்து ஓட ஆரம்பிக்க, கைகளைப் பிசைந்து கொண்டு அவனைப் பயத்துடன் பார்த்தாள் வைஷ்ணவி.   “என் மூஞ்சில படமா ஓடுது? அப்படி பார்த்துட்டே இருக்க. யாரு அந்த சீன் பார்ட்டி?” என்று அவன்

18. விஷ்வ மித்ரன் Read More »

17. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 17   ஜூஸை வாயில் வைத்த மாத்திரத்திலே பூர்ணி அவன் மேல் வாந்தி எடுத்து விட, அதைத் தன் கையால் வாங்கிக் கொண்டான் ரோஹன்.   அவனைப் பார்த்து “ரோஹி! என்ன பண்ணுறே?” என்று பதறினாள் அவள்.   அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றவன், டி-ஷர்டை மாற்றிக் கொண்டு வர அவளோ தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.   “பூ என்ன பண்ணுது உனக்கு? உடம்பு சரியில்லையா?

17. விஷ்வ மித்ரன் Read More »

16. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 16   வெளியில் சென்று வந்ததில் இருந்தே சோபாவில் சரிந்து அழுது கொண்டிருந்த நீலவேணியைப் புரியாமல் பார்த்தவாறு நின்றிருந்தனர் சிவக்குமாரும், அக்ஷராவும்.   என்ன தான் கண்ணீர் விட்டாலும் மனைவியின் அருகில் கூட செல்லாமல் உறுத்து விழித்தபடி சிவா எதிர் இருக்கையில் அமர்ந்து கொள்ள,   தாயின் அருகில் சென்று உட்கார்ந்த அக்ஷரா “அம்மா என்ன ஆச்சு? எங்க போயிட்டு வந்தே? எதுக்கு அழுவுற?” என பதற்றமாக கேட்டவளுக்கு ஒன்றுமே

16. விஷ்வ மித்ரன் Read More »

error: Content is protected !!