உள்நெஞ்சே உறவாடுதே

இறுதி பகுதி – உள்நெஞ்சே உறவாடுதே!

உள்ளமதில் உனையேந்தி ஊனிலும் உனையே தாங்கும் வரம் தந்தான் இவன்… உன்னுயிரை என்னுள் ஊற்றி என்னுயிரை உன்னுள் உருக்கி உருமாற்றம் செய்து விட்டான் இவன்… இடையில்லா இன்பங்களின் இடைவெளியில் இளைப்பாறும் இடமாய் – ஈரம் படர்ந்த இதயம் கொடுத்தான் இவன்… இனி என்ன நான் கொடுக்க… நிதம் நிதம் என்னையே கொடுக்க உத்தரவிட்டான் இவன்… என்னவன்! —————— ஷக்தி மகிழவனின் கருவிழிகளில் முத்தாய் ஒரு துளி நீர். “கண்ல தண்ணி வந்தா நீங்க அழுகுறீங்கன்னு அர்த்தம் மகிழ். […]

இறுதி பகுதி – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

16 – உள்நெஞ்சே உறவாடுதே!

உனக்காய் சிந்திக்கும் என்னுள்ளத்திடம் என்னவென்று விளக்குவேன் அன்பே… என்னுள்ளே தான் உன்னுயிரும் வீற்றிருப்பதை… உனக்காக உன்னைப் பிரியவா? அல்லது எனக்காக என்னையே பிடுங்கிடவா? உயிர்வதை உணர்கிறேன் என்னுயிரே! ——————— இதழ் முத்தத்தில் இருவரும் திணறும் நேரம் இடைவெளிகள் இன்னும் குறைந்து போனது. மூச்சிரைக்க அவனிடம் இருந்து விடுபட்டவளுக்கு, அவனது தீண்டல்கள் மட்டும் புது பரவசம் தந்தது. “உனக்கு ஃபைவ் மினிட்ஸ் வேணுமா?” ஷக்தி மகிழவன் வினவ, “ஹான் எதுக்கு?” எனக் கேட்டாள் அவனைப் பாராமல். “எப்பவும் கிஸ்

16 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

14, 15 – உள்நெஞ்சே உறவாடுதே!

அத்தியாயம் 14 என் விழியில் உன் இமையாய்… என் மொழியில் உன் பதமாய்… என் உணர்வில் உன் உணர்வாய்… நம் அன்பில் நிறைந்திடுவாய்!!! —————- கண்ணை மூடிப் பிரகிருதியின் முத்தத்தை ஏற்றுக்கொண்ட ஷக்தி மகிழவனின் மூடிய கருவிழிகள் அங்கும் இங்கும் உருண்டது. “என்ன பீல் பண்றீங்க மகிழ்?” வெட்கம் மின்னப் பிரகிருதி கேட்க, அவன் கைக்கடிகாரத்தினுள் தலையைப் புகுத்தினான். கையைக் கட்டிக்கொண்டு அவனை ரசித்திருந்தாள் பிரகிருதி. ‘என்ன சொல்லப் போகிறான்’ என்ற ஆர்வம் மின்னியது. சில நொடிகளில்

14, 15 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

13 – உள்நெஞ்சே உறவாடுதே!

இதழ் முத்தம் நாடவே… இணக்கம் தாராயோ! சிவந்த இடங்களெல்லாம் என்னிதழ் தீண்ட… சிவப்பே நிறமாய் கொண்ட செவ்விதழின் சமிக்கையை எங்கனம் அறிந்திடுவேன்!!! ——————- அன்று, காலையிலேயே ஷக்தி மகிழவனுக்கு குறுஞ்செய்திகளும் அலைபேசி அழைப்புகளும் வந்தபாடாக இருந்தது. அவசரமாக உணவு வேலையை முடித்து விட்டு ரேடியோ ஸ்டேஷனுக்கு கிளம்பிக் கொண்டிருந்த பிரகிருதி, “என்ன மகிழ். இன்னைக்கு ரொம்ப பிசியா?” எனக் கேட்டாள் அவன் அலைபேசியில் தலையைப் புதைத்திருப்பதைக் கண்டு. “இன்னைக்கு என் பர்த்டே. அதான் எல்லாரும் விஷ் பண்றாங்க”

13 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

12 – உள்நெஞ்சே உறவாடுதே!

உணர்விலே உயிரெழுதி உள்ளத்தில் உனையே வார்த்தேன்…! என் சொல்லின் இயலாமைகள் யாவும் என் நேசத்தின் வேர்கள் என்றே அறிவாயா பெண்ணே? —————- இதழொற்றல் தந்த இனிமையில் கரைந்திட்ட இருவருக்குள்ளும் புதிதாய் மென்வெட்கம். “சரியா தான செஞ்சேன்?” அவனது கேள்வியில் இன்னும் கொஞ்சம் நாணிப்போனாள் பிரகிருதி. “தப்பா செஞ்சாலும் எனக்குப் பிடிக்கும்” கீழுதட்டைக் கடித்து அவள் கூறிட, அவனிடம் குறுநகை. “நெக்ஸ்ட் டைம் என் கண்ணைப் பார்ப்ப தான?” ஷக்தி மகிழவன் தீவிரமாக கேட்க, “பாக்குறேன்” எனத் தலையசைத்தாள்.

12 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

11 – உள்நெஞ்சே உறவாடுதே!

அத்தியாயம் 11 இதழ் ஒற்றல் நான் கேட்டேன்… உயிர் தாவும் இதம் தந்தாய்! உன்னழகில் உருக்கம் கண்டேன்… ஊன் சிவக்கும் முறுவல் தந்தாய்! இனி என்ன நான் செய்வேன்… நெஞ்சூறும் நேசம் பிறக்க! ———————- “இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பிடலாமா ருதி… நாளைக்குச் சென்னைக்குப் போகணும்!” ஷக்தி மகிழவன் வினவ, “கிளம்பிடலாம் மகிழ்!” என்றாள். கூடவே சிறு அமைதியும். “என் அப்பாட்ட என்னைப் பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்க தான?” தவிப்புடன் வினவ, அது என்னவோ அவனைக் காயப்படுத்தியது.

11 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

10 – உள்நெஞ்சே உறவாடுதே!

உள்ளம் தொட்ட உறவிதுவென்றே உளமார உருகி உணர்கிறேன்… என்னை நீ ரசிக்க… உன்னை நான் ருசிக்க… காதல் தாகம் நம்முள்ளே! ————– நெற்றியில் கொடுத்திட்ட முத்தத்தின் தொடர்கதையாகச் சிவந்திருந்த நுனி மூக்கிலும் முத்தம் வைத்தான் ஆடவன். அதற்கு மேல் அவனுக்கும் தொடர்வதில் தயக்கம் இருக்க, மீண்டும் வெளிப்பட்ட கண்ணீர் அவனைத் தடை செய்தது. மெல்ல விலகி, “ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிறியா ருதி?” என வினவ, அவளோ இன்னும் உணர்வுகள் அடங்காமல், முத்தமிட்ட கணங்களின் கனம் நீங்காமல் பெருமூச்சு

10 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

9 – உள்நெஞ்சே உறவாடுதே!

உடைந்தே தான் உதிர்கிறேன் உயிரே!!! உறைய வைத்தே உயிர்வதை செய்யாதே… உன் நேச கனம் உள்ளுயிரும் தாளாது!!! ——— சட்டென முத்தமிட்டு விட்டதில் ஆடவனைத் திகைப்புடன் பார்த்த பிரகிருதிக்கு கை நடுக்கம் தொடங்கியது. அதனைக் கவனித்துக் கொண்டவனுக்கு சிறு குழப்பம் ஏற்பட, “நீ ஓகே தான?” என்றான். “ம்ம்” எனத் தலையசைத்தவளை அபிராமி வலுக்கட்டாயமாக அழைத்து பேச்சு கொடுத்தார். கோபித்துக் கொண்டு சென்று விடுவாளோ என்ற பயம் அவருக்கு. அவருடன் இணைந்து இன்னும் நான்கு பெண்மணிகள் இயல்பாகப்

9 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

7, 8 – உள்நெஞ்சே உறவாடுதே!

அத்தியாயம் 7 நின் முத்தம் நான் ஏற்க… என் முத்தம் நீ ஏங்க… நம் முத்தம் நாணலாகி நழுவிடுதே நேசமாய்…!!! ————————————- ஒரு பக்க கன்னத்தில் ஈரம் படர, மறுகன்னத்திலும் முத்தமிட்டு இருந்தான் ஷக்தி மகிழவன். நடுக்கம் கொண்ட கரங்களை இறுக்கி மூடிக் கொண்ட பிரகிருதி, இயல்பாக இருக்க முனைந்தாள். வீட்டில் சொன்ன அறிவுரைகள், பார்த்த படங்களை வைத்து அடுத்தது இப்படி தான் நடக்கும் என ஒரு கணிப்பு இருந்தது அவளுக்கு. ஆனால் அதுவும் ஒரு பயத்தையே

7, 8 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

6 – உள்நெஞ்சே உறவாடுதே!

உள்ளத்தின் உள்ளர்த்தம் உணர வழி தேடும் உனதிரு விழிகளுக்கு எப்படியடி புரிய வைப்பேன்? உயிரில்லா என்மொழிகளிலேயே உயிருள்ள என்னுணர்வுகள் உருகிக் கிடக்கிறதென்பதை!!! ——————— “எல்லாம் எடுத்து வச்சுட்டியா ருதி?” தனது ஆடையை பையில் வைத்தபடி கேட்டான் ஷக்தி மகிழவன். “ம்ம் வச்சுட்டேன்…” என்றவளின் குரலில் ஸ்ருதி குறைந்திருந்தது. அதனைக் கவனியாதவன், “பிளைட்டுக்கு டைம் ஆகிடுச்சு. வா கிளம்பலாம்” என்றிட, “ம்ம்” என்றாள் அமைதியாக. சென்னையில் இருந்து கோவைக்கு மறுவீடு செல்ல ஆயத்தமாகினர் புதுமணத் தம்பதியர்கள். லேகா தான்

6 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

error: Content is protected !!