
Category:
என் தேடலின் முடிவு நீயா
தேடல் 34
அடுத்த இரண்டு வாரங்களிலேயே மகிமாவுக்கு பிரசவ வலியும் வந்துவிட… அவளை அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றான் அபின்ஞான்…
அரசாங்க வைத்தியசாலை என்பதால் அவனால் உள்ளே செல்ல முடியவில்லை…
பதற்றமாகவே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்…
அன்னபூரணி அம்மாளோ அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்…
சிறிது நேரத்திலே இரு தாதிகள் வந்து, “கங்கிராஜுலேஷன் சார் உங்களுக்கு ரெண்டு பசங்க பிறந்து இருக்காங்க” கூறி ரோஜா குவியல் போல் இருந்த குழந்தைகளைக் கொண்டு வந்து நீட்ட இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன் முதலில் எந்த குழந்தையை தூக்குவது என்று தடுமாற்றமாக இருந்தது…
அவன் தடுமாற்றத்தை போக்கும் விதமாக அன்னபூரணி அம்மாளும், பசுபதியும் குழந்தைகளை தூக்கிக் கொண்டனர்…
“என் வைஃப் எப்படி இருக்கா டாக்டர்” என்று வெளியே வந்த வைத்தியரை பார்த்து கேட்க, “ஷீ இஸ் ஃபைன், இன்னும் கொஞ்ச நேரத்துல நார்மல் போர்டுக்கு மாத்திடுவோம்… அப்ப நீங்க வந்து பாத்துக்கோங்க” என்றவர் அங்கிருந்து செல்ல தாதி மாறும் குழந்தைகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றனர்…
அவளை அறைக்கு மாற்றியதுமே, உடனே அவளை பார்க்க சென்று விட்டான்…
வாடிய கொடியாக படுத்திருந்தாள் மகிமா…
அவள் தலையே மென்மையாக வருடியவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு, “ஆர் யூ ஒகே” என்று கேட்டான்…
“ம்ம்… நம்ம பசங்கள பார்த்தீர்களா?” என்று கேட்க,
“பார்த்தேன் டி… ரொம்ப சின்னதா இருக்கானுங்க… தூக்கவே பயமாயிருக்கு” என்றான் அருகில் தொட்டிலில் வளர்த்த பட்டு இருந்த குழந்தைகளை பார்த்தபடி, அவன் பேச்சைக் கேட்டு அவளும் சிரித்துக் கொண்டாள்…
சஞ்சனாவுக்கும் பிரசவ நேரம் நெருங்கியதால் மகாதேவ் மட்டும் அவளை வந்து பார்த்துவிட்டு சென்றான்…
அடுத்த இரு நாட்களிலே அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்…
அபின்ஞான் கட்டிலில் அமர்ந்து குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருக்க மகிமா கன்னத்தில் கை வைத்தபடியே அவனது தந்தை அவதாரத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்…
அன்னபூரணி அம்மாளும் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார்…
“அம்மா நான் சின்ன வயசுல இருந்த போலவே இவனுங்களும் இருக்கானுங்க” என்றான் சிரித்தபடி…
“உன் பசங்க உன்ன மாதிரி இல்லன்னா தான் புதினம்… இவ உன்ன மட்டும் நினைச்சிட்டு இருந்தா… அதனால எப்டியுமே குழந்தை உன்ன மாதிரி தான் பிறக்கும்” என்றவர் குழந்தைகளை ஆசையாக வருடிக் கொடுத்தார்…
குழந்தைகளுக்கும் விஹான் வியான் என்று பெயரும் சூட்டினர்…
அன்று தோட்டத்திலிருந்த பெஞ்சில் அமர்ந்து ஓரிடத்தை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
ஒரு பெரிய வாத்து டாப்பி டாப்பி வந்து கொண்டிருந்தது…அதன் பின்னாலே பன்னிரெண்டு சிறிய வாத்து குஞ்சுகள் தாய் பறவையை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தன…
அவற்றின் தாய் வாத்து அங்கே இருந்த குளம் போன்ற நீர் தொட்டியில் பாய, தாயைப் பார்த்த குஞ்சுகளும் ஒன்றின் பின் ஒன்றாக பயந்தபடி மெது மெதுவாக பாயத் தொடங்கின…
ஒரு குஞ்சு மட்டும் பாயாமல் நின்று இருக்க, அதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
அக்குஞ்சின் பின்னால் வந்து நின்ற தந்தை வாத்தோ அதனிடம் ஏதோ “பேக் பேக்” என்று கூற அக்குஞ்சோ தந்தையின் சிறகின் மேல் பாய்ந்து நின்றுகொள்ள, தந்தையே நீரில் பாய்ந்தது…
அவற்றைப் பார்த்து கண்களை விரித்த மகிமா, “ஹவ் ஸ்வீட்” என்று இதழ் விரித்து சொல்லிக் கொண்டாள்…
“ரொம்ப அழகான ஒரு குடும்பமா இருக்குல்ல” என்றபடி அவள் அருகே வந்து அமர்ந்தான் அபின்ஞான்…
அவனை விசித்திரமாகப் பார்த்தவள், “என்ன இன்னைக்கு நேரத்தோடு வந்து இருக்கீங்க” என்று கேட்டாள்…
“உன்ன பார்க்கணும் போல இருந்துச்சு… அதுதான் வந்துட்டேன்” என்றான்…
“ஓஹோ” என்றாள் மகிமா…
“எங்க நம்ம பசங்க… வீடு அமைதியா இருக்கு” என்று கேட்டான் மகிமா…
“ரெண்டு பேரும் நல்லா தூங்குறாங்க” என்றவளது கண்களோ வாத்துக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய குளத்தில் குளித்துக் கொண்டிருந்த வாத்துக்களிலே ஆகாமல் நிலைத்தது…
இறகுகளை விரித்துக்கொண்டும் அதை தண்ணீரில் அடித்துக் கொண்டும் அது குளிப்பதோ தனி அழகு…
அபின்ஞானோ அவளை மட்டும் ரசித்துக் கொண்டிருந்தான்…
அவனை திரும்பிப் பார்த்தவள், “ஏன் என்னையே பார்த்துட்டு இருக்கீங்க” என்று கேட்டாள்…
“சும்மாதான்” என்றவன், “நான் லைஃப்ல எத்தனையோ ரிசர்ச் பண்ணி இருக்கேன்… எத்தனையோ விஷயங்களை தேடித் கண்டுபிடிச்சு இருக்கேன்… நான் தேடி போற சில விஷயங்களுக்கு ஒரு முடிவு இருக்கும்… சில விஷயங்களுக்கு முடிவே இருக்காது… ஆனா நீ கூட இருந்தா என் எல்லா தேடல் ட முடிவு நீ மட்டும்மா தான் இருப்ப… ஐ லவ் யூ சோ மச் மகி… என் தேடலின் முடிவு நீ மகி” என்றான் அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து…
அவளுக்கோ கண்கள் கலங்கிவிட்டது…
என்ன வார்த்தைகள் இவை…
எவ்வளவு ஆழமாக தன் காதலை சொல்லி விட்டான்…
கண் கலங்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு பதில் சொல்வதற்கு கூட அவர் வாயில் இருந்து வார்த்தை வரவில்லை…
“நான் லாஸ்ட்டா கடல்ல மூழ்க கிட்ட
உன்ன மட்டும் தான் நினைச்சேன்… நீ மட்டும் தான் என் கண்ணுல தெரிஞ்சா… உனக்காக வாழனும்னு தோணுச்சு… நீ கூட இருந்தா என்னால எதையும் சாதிக்கலாம் மகி… அந்த கணத்ல தான் உண்மையா என்னையே உணர்ந்தேன்… இந்த டைமெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சு இல்லாட்டி கூட நான் கவலைப்பட்டு இருக்க மாட்டேன் மகி….
நான் என்னதான் தேடல் தேடல்ன்னு சுத்தினாலும் இதுக்கு முந்தியும் சரி இதுக்கு பிறகும் சரி… என் எல்லா தேடலின் முடிவு நீ மட்டுமா தான் இருப்ப” என்றவன் அவள் இதழ்களை கவ்விக் கொண்டான்…
அவள் வார்த்தைகளில் மயங்கியவள் இப்போது அவன் முத்தத்தில் முற்றாக அவனில் பைத்தியமே ஆகிப்போனாள்…
அவளிடம் இருந்து மெதுவாக விலகியவன், “வா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றவன் அவளை கண்ணை கட்டிக்கொண்டு அழைத்து சென்றான்…
காரில் செல்லும்போது அவள் எங்கு செல்கிறோம் என்று எத்தனையோ முறை கேட்டு விட்டாள். ஆனால் அவன் தான் வாயே திறந்த பாடில்லை…
காரை நிறுத்தியவன், அவளை இறக்கி அவள் முதுகில் கையை வைத்து தள்ளியப்படியே சென்றவன் அவரிடத்தில் அவளை நிறுத்தி அவள் கண்கட்டை அவிழ்த்து விட்டான்…
“மகி ட்ரஸ்ட்” என்ற போர்ட் போடப்பட்ட ஒரு பாரிய கட்டிடம்…
அதை ஆச்சரியமாக பார்த்தவள், “இது என்ன அபி… எதுக்காக என் பேர வச்சிருக்க” என்று கேட்டபடியே அவனுடன் உள்ளே நுழைந்தாள்…
“நான் கடலிருந்து எடுத்து டைமண்ட்ஸ என் தேவைக்கு யூஸ் பண்ண விரும்பல… நம்ம நாட்டுல ஊட்டச்சத்து, போசனை குறைந்த நிறைய குழந்தைங்க இருக்காங்க… அவங்களுக்கு தேவையான வசதிகளை செய்யணும்னு தான் இத கட்டியிருக்கேன்… இதுக்காக நான் எடுத்து டைமண்ட்சா யூஸ் பண்ண இருக்கேன்” என்று கூற அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் மகிமா…
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அபி நீங்க என்ன இம்ப்ரஸ் பண்ணிட்டே இருக்கீங்க… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல” என்ற அவளது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது…
“நீ எனக்கு தேங்க்ஸ் சொல்ல தேவல்ல நானே எனக்கு தேவையானதை உன் கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்” என்று கூறி சிரித்தான்…
“அபி லேட் ஆகுது… நம்ம பசங்க தேட போறாங்க… அத்தைய என்ன பாடு படுத்துகிறார்களோ தெரியல” என்று கூற,
“சரி போலாம்” என்றவாறு இருவரும் வீட்டுக்கு வந்து அபின்ஞான் ஒரு குழந்தையும் மகிமா இன்னொரு குழந்தையும் தூக்கியபடி அறைக்குள் நுழைந்தனர்…
எபிலோக்
மூன்று வருடங்களுக்குப் பிறகு…
விஹான் மற்றும் வியான் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்க… “டேய் விளையாடினது போதும்டா…” என்று அவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு வந்தவர், கட்டிலில் போட்டு குட்டி வாண்டுகளை தயார் படுத்த தொடங்கினார் அன்னபூரணி அம்மாள்…
விஹானும் வியானும் தன் கையில் இருந்த பவுடர் டப்பவை வைத்து கொட்டி விளையாடிக் கொண்டிருக்க, “டேய் எங்கடா உங்க அம்மா… நான்தான் உன்னை வளர்த்துட்டு இருக்கேன், அவ சொகுசா ரூம்ல உக்காந்துகிட்டு என்ன வேல வாங்கிட்டு இருக்கா… நீங்க என்னாண்டா உங்க அம்மா விட்டுட்டு என் மடில தொத்திட்டு இருக்கீங்க” என்றபடி இருவரையும் தயார் படுத்திக் கொண்டிருந்தார்…
அபின்ஞானின் அறையிலோ, “இப்ப சரியா?” என்று கேட்டான் அபின்ஞான்.
“இல்ல சரியா வரல அபி” என்றாள் மகிமா…
“என்னடி இவ்ளோ நேரமா உனக்கு புடவை கட்டி விட்றேன்… என்ன கொஞ்சம் பாவம் பார்க்கலாமே” என்று கோபமாக ஆரம்பித்து கெஞ்சலாக முடித்தான் அவன்…
“நான் நேரத்தோட எழும்புறேன்னு சொன்னேன், நீங்க என்ன விட்டீங்களா… என்ன எழுந்துக்க விடாம நீங்க உங்க வேலைய காட்டிட்டு இப்ப என்ன கேக்குறீங்களா” என்று அவனை முறைத்தாள்…
“சரி சரி… கட்டி விட்றேன்” என்றவன் எரிச்சலாக அவள் புடவையில் பிளிட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க,
“நான் காலையில் எழும்ப பார்க்க…” என்று அவள் ஏதோ சொல்ல பார்க்க, எட்டி அவள் வாயை மூடியவன், “கட்டி முடிச்சிட்டேன்… இப்போ ஓகே” என்று கேட்டான்…
“பேபெக்ட்” என்றவாறு மகிமா அவன் கன்னத்தில் முத்தமிட…
“கிஸ் பண்ணியே என்ன டெம்ப் பண்ண வேண்டியது… பிறகு அங்க புடிச்சான் இங்க புடிச்சான்னு வர வேண்டியது, போடி…” என்றான் அவளை முறைத்தபடி…
“அழகா சாரி கட்டி விட்டிங்கன்னு எபிரிஷியேட் பண்ணா குத்தமா…” என்று கூறிக் கொண்டிருந்தவளின் இடையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவள் இதழ்களுடன் தன் இதழ்களை உரசிய படி, “உனக்கு எப்படி எப்ரிஷியேட் பண்ணனும் இன்னும் தெரியல” என்றபடி அவள் இதழ்களை சிறை பிடித்தவன், தன் கைகளை அவள் மேனியில் இஷ்டத்துக்கு அழைய விட்டான்… அவளும் அவனில் பாகாக உருகிக் கரைந்து கொண்டிருக்க, அந் நேரம் அவர்களது ஒரு வயது மகள், ஆத்யா அழத்தொடங்க சட்டென்று இருவரும் விலகிக் கொண்டனர். மகிமாவின் புடவை முழுவதும் அவிழ்ந்து இருக்க அவனை முறைத்தாள்.
தலையை அழுத்தமாக கோதிக் கொண்டவன் குழந்தையை தூக்கிக் கொண்டு அவளை துகிலுரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வையில் கூச்சத்தில் நெளிந்தவள், “அபி வெளிய போங்க நான் புடவ கட்டணும்…” என்றாள்.
“நீ உன் பாட்டுக்கு புடவ கட்டு… நான் என் பாட்டுக்கு ஓரமா இருக்கேன்” என்றான் அசையாமல் நின்று அவளைப் பார்த்தபடி,
“உங்க பார்வயே சரி இல்ல, முதல்ல வெளிய போங்க” என்றாள்.
அவன் அசையாமல் நிற்கவும் அவனை முறைத்துப் பார்த்தபடியே புடவையை கட்டி முடித்தாள்.
இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன் அவள் காதருகே குனிந்து, “சும்மா சொல்ல கூடாது… உன்ன பார்த்தா மூனு குழந்தைக்கு அம்மா மாதிரியே விளங்கள” என்றான்…
அவனை அதிர்ந்து பார்த்தவள், “குழந்தய வெச்சிட்டு என்ன பேச்சு பேசுறீங்க” என்றவளது முகமோ தன்னை மீறி சிவந்து தான் போனது.
மகிமா பழுப்பு நிற புடவை கட்டியிருக்க அதற்கு, மெச்சாக பழுப்பு நிற சர்ட் மற்றும் வெண்ணிற வேட்டி அணிந்திருந்தான் அபின்ஞான்…
மகிமா மென்மையான அழகுடனும் கம்பீரமாகவும் இருவரும் ஜோடியாக நடந்து வர… அவர்களைக் கண்ட இரு குட்டி வண்டுகளும், “அம்மா…அப்பா…” என்று ஓடிச் சென்று அவர்களை காலை கட்டி கொண்டனர்….
“என் கண்ணே பட்டுடும்” என்ற அன்னபூரணி அம்மாள் குடும்பமாக நின்ற ஐந்து பேருக்கும் சுத்தி போட்டு விட்டே அனைவரும் காரில் ஏரி கிளம்பினர்… மகிமா ட்ரஸ்ட்க்கு…
மகிமா இப்பொழுது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்… அவள் பிஎச்டி படிக்க அபிஞ்ஞானே உதவி செய்தான்… அவள் பசுபிக் சமுத்திரத்தில் வைத்து செய்த ஆய்வு உலகில் ஆய்வுகளிலும் முதலாவது இடத்தை பெற்றிருந்தது…
இன்று மகிமா ட்ரஸ்டின் இரண்டாவது ஆண்டு விழா…
அதற்காகத்தான் இன்று குடும்பமாக சென்று கொண்டிருந்தனர்…
மகாதேவ் குடும்பமும் வந்திருந்தது…
மகாதேவுகக்கு முதலாவது பெண் குழந்தை அவள் தேவகாசினி, இரண்டாவது ஆண் குழந்தை அவன் பிரனீதன்…
அனைவரும் உள்ளே நுழைந்தனர்…
இப்போது மகிமா ட்ரஸ்டின் கிளைகள் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக நாட்டில் மொத்தம் எட்டு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தன…
எல்லாரும் பேசிக் கொண்டிருக்க மகாதேவ் அருகே வந்த அபின்ஞான், “உனக்கு இந்த தேவான்ற பெயர்ல என்னடா அவ்ளோ க்ரஷ்… மகிக்கு தேவகன்யான்னு பேர் வெச்ச, இப்ப உன் பொண்ணுக்கே தேவஹாசினின்னு பெயர் வெச்சிருக்க… உண்மைய சொல்லு ஸ்கூல்ல தேவான்னு ஒரு பொண்ணுக்கு பின்னாலே சுத்தினியே… உன் க்ரஷ்ட பெயரையா வச்சிருக்க” என்று கேட்க…
“உனக்கு எப்படி டா தெரியும்” என்று அதிர்ந்து கேட்டான்…
“சும்மா கெஸ் பண்ணினேன் ஆனா உன் வாயால சொல்லிட்டியே…” என்றவன் மகிமா அருகே சென்று நின்று கொள்ள,
‘டேய் அதை சஞ்சனா கிட்ட சொல்லிடாதே” என்று கத்தினது காற்றிலே கரைந்து போனது…
மகிமா தன் கையில் ஆத்யாவை வைத்துக் கொண்டு நின்று இருக்க…
விஹானும் வியாானும் அபின்ஞானிடம் தூக்க சொல்லி சண்டை பிடிக்க, அவன் தன் மகன்களை தூக்கி இரு தோள்பட்டையிலும் வைத்துக் கொண்டான்…
அவனை நிமிர்ந்து பார்த்த மகிமா, “உங்கள போலவே… உங்க பசங்களுக்கும் பிடிவாதம் கூட” என்று சொல்ல
“ஏன் அவங்க அம்மா கிட்ட பிடிவாதமே இல்லையா… அதிலிருந்தும் இங்க பாதி வந்துருக்கு” என்று அவள் முகம் நோக்கி குனிந்து சிரித்தபடி கூற,
இவ் அழகான குடும்பக் கட்சியை தூர இருந்து புகைப்படம் எடுத்தான் ஒருவன்… கேமராவில் பதிவான புகைப்படத்தை பார்த்து சிரித்துக் கொண்டவன், “மேட்ச் போ ஈச் அதர்” என்று சொல்லிக்கொண்டு தன் கேமராவை தூக்கித் தோளில் போட்டபடி அங்கிருந்து சென்றான் அவன்…
முற்றும்….
தேடல் 33
மகிமாவை பார்த்த ராகவ், “அடடா இப்பதான் மகி முகமே விடிஞ்சிருக்கு…” என்று சிரித்தபடி சொல்ல,
“பழைய கதய விடுங்க அண்ணா… இப்ப தான் எல்லாம் ஓகே ஆயிடுச்சே” என்றவள், “உங்க பிரண்ட் எழும்பி என்ன வேல செஞ்சார் தெரியுமா?” என்று கேட்க…
அவர்களோ புரியாமல் அபின்ஞானை பார்த்தார்கள்…
அபின்ஞானோ நெற்றியை வருடியபடி அவர்களை பாவமாக பார்த்து வைத்தான்…
இப்பொழுதல்லவா அவர்கள் அவனுக்கு பல அறிவுரைகளை வழங்கி விட்டு நிறுத்து இருக்கிறார்கள்….
“மெமரி லாஸ்ட் மாரி நடிச்சார் அண்ணா…” என்று அவள் அவனது திருகு தாளங்களை புட்டு புட்டு வைக்க…
“சரிடி தெரியாம பண்ணிட்டேன்… நீ போ நான் பேசிகிறேன்” என்று அவளை விரட்டப் பார்த்தான்…
“என்ன விரட்ட பாக்குறீங்களா? உங்க வீர தீர செயல சொல்லத் தானே வேணும்” என்று உதடு சுழித்துக் கூறியபடி அங்கு இருந்து சென்றாள்…
அவனை முறைத்துப் பார்த்த கரன், “உன் கூடவும் தேவ் கூடவும் சேர்ந்த நாம தான் இன்னமும் சிங்கிளா சுத்திட்டு இருக்கோம்… நீ ரெண்டு குழந்தைக்கு அப்பாவாக போற… அதுல வேற நீ கல்யாணமே ஆகாதவனா? ஆயிரத் தெட்டு கண்டிஷன் போட்டுட்டு இருந்துட்டு எங்க எல்லாருக்கும் முந்தி கல்யாணம் முடிச்சுட்டு குசும்பு பாத்தியா?” என்று ராகவிடம் கேட்க,
ராகவும், “ஆமா… அவனுங்க பொண்ண பார்க்கவும் மாட்டாங்க பாக்க எங்களுக்கும் விட மாட்டாங்க… இப்ப ரெண்டு பேரும் அப்பாவாக போறானுங்க, கூட இருந்த நாமதான் ஒண்ணுக்கும் இல்லாம இருக்கோம்…” என்றவன், அபின்ஞானை கிண்டலாக பார்த்து, “ஏண்டா உனக்கு இந்த வேலை” என்று கேட்க….
“சும்மா… தாண்டா… ஒரு சான்ஸ் கிடைச்சா வச்சு செய்ய பாக்குறீங்களே” என்று சிரித்தபடி கூற,
“இப்படி ஒரு நல்ல சான்ஸ் மிஸ் பண்ண முடியுமா? நீயும் தேவும் சண்டை போட்டுக்கிட்டு எங்கள என்ன பாடு படுத்தின இப்ப கொஞ்சம் அனுபவிச்சுக்கோ தப்பில்ல” என்று இருவரும் சொல்ல,
“சரிதான்” என்றான் அபின்ஞான்…
“என்னடா இவ்ளோ ஃபாஸ்ட்டா உன் தப்ப ஒத்துக்கிட்ட” என்று கரன் கேட்க, “ஒத்துக்கலன்னா மட்டும் விடவா போறீங்க” என்றான் தலையாட்டி சிரித்தபடி…
நண்பர்களும் கலகலப்பாக நீண்ட நேரம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்…
அபின்ஞானின் உடல்நிலை நாளுக்கு நாள் நன்றாகவே தேரிக் கொண்டிருந்தது…
இப்போது வீட்டிலே ஜிம்மும் செய்ய ஆரம்பித்து விட்டான்…
அவன் தான் தன் உடல் நிலையிலும் அதை கவனிப்பதிலும் அலாதி அக்கறை உடையவன் ஆயிற்றே…
மகிமாவின் உடல் நிலையும் இப்போது இருந்ததற்கு சரியாகி விட்டிருந்தது…
மகிமாவுக்கு இப்போது ஏழாவது மாதம் சென்று கொண்டிருந்தது…
“மகி இன்னக்கி நாம ஒரு இடத்துக்கு போகலாம் வா…” என்று அவளை தயாராக சொல்லி அழைத்துக் கொண்டு சென்றான்…
அபின்ஞானின் கருப்பு நிற பி எம் டபிள்யு கார் நிற்கும் போதே, சாம்பல் நிற பி எம் டபிள்யு காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர் மகாதேவும் சஞ்சனாவும்….
இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்…
“தேவ் ஜெம் & ஜூவலர்ஸ்” என்ற பாரிய பெயர் பலகை இருந்தது…
மகாதேவின் கம்பெனிக்கு தான் வந்திருந்தனர்….
“நைஸ் இன்டீரியர் டிசைன்… இன்னைக்கு தான் நான் முத முதலா தேவ் கம்பெனிக்கே வரேன்” என்று கூறியவன், அனைத்தையும் ரசித்தப்படியே உள்ளே வந்தான்….
மகாதேவின் தனிப்பட்ட அறைக்கு வரவும் அங்கே ராகவும் கரனும் இருந்தனர்…
மகாதேவ் அவன் கம்பெனியின் லோக்கர் அறைக்குள் அவர்கள் ஐவரையும் அழைத்து சென்றான்…
அங்கிருந்த ஒரு லோக்கரை திறந்து அதிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து மேசை மேல் வைத்த மகாதேவ், “இது நாம எடுத்த டைமண்ட்ஸ், இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது… நீ இந்த டைமண்ட்ஸ எப்படி எடுத்தன்னு ஞாபகம் இருக்கா அபி” என்று சிரித்தபடி கேட்க,
“மறக்குமாடா… அவ்ளோ பாரம்ன்னு சொல்லி…. நான் கொண்டு வந்திருந்த பேக்ல எல்லா டைமண்ட்ஸ போட்டேன்… லாஸ்ட் ஒன்ன மட்டும் ராகவ் கையில கொடுத்துட்டு மயங்கிடேன்… அது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு” என்றான் அன்றைய நாளைய நினைவுகளை திரும்பவும் மீட்டி…
“நீ எழும்புற வர… நாங்க யாருமே இத தொடல்ல… இப்ப இந்த டேமேண்ட்ஸ ஆறா பிரிக்கலாம்” என்றான் கரன்…
அவனை பார்த்த சஞ்சனா, “எதுக்குடா ஆறா பிரிக்கணும்… நாலா பிரிக்கலாம்” என்றாள்…
ஆண்கள் திரும்பி மகிமாவை பார்க்க, “எனக்கும் ஓகே தான்…” என்றாள்.
ராகவ் மகிமாவை பார்த்து, “ஆர் யூ சுவர்…. உன் புருஷன் தான் உயிரை பணயம் வெச்சி எடுத்தான்னு அப்புறம் கேட்டு சண்டை பிடிக்க மாட்டியே…’ என்று கிண்டலாக கேட்க,
அவனைப் பார்த்து சிரித்தவள், “அப்படி இல்லண்ணா… எனக்கு வந்தாலும் ஒன்னுதான், அபிக்கு வந்தாலும் ஒன்னுதான்… அப்புறம் சும்மா எதுக்கு ஆறா பிரிக்கணும்? நான்காவே பிரிச்சிடலாம்” என்றாள் உறுதியான குரலில்…
அவளுக்கே இதில் எதிலும் எப்போதுமே ஆசை இருப்பதில்லையே…
அவளுக்கு அவள் அபி மட்டும் வாழ்நாள் முழுக்க கூட இருந்தால் போதுமே…
எப்போதுமே அவர்களுக்கு அவள் மேல் ஒரு பிரமிப்பு இருக்கும்… புதுமை பெண்ணாகவே இருக்கிறாளே…
அனைத்திலுமே கம்பீரமான தோரணையுடன் வலம் வருபவள்… தன் காதலிலும் அதே கம்பீரமாக அல்லவா இருக்கிறாள்…
எதிலுமே அவளை குறை சொல்லி விட முடியாது…
டயமண்ட்ஸும் நான்கு பேருக்கு பிரிக்கப்பட்டன…
ஆறு பேரும் சிரித்துப் பேசிய படியே உண்பதற்காக ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்…
“நான் என்கிட்ட இருக்கிற டைமண்ட்ஸ காட்டியே ஒரு நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்க போறேன்…” என்றான் கரன்.
“நீ டைமண்ட்ஸ காட்டினா அந்தப் பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டா… டைமண்ட்ஸ தான் கல்யாணம் பண்ணிப்பா” என்றான் அபின்ஞான்…
“டேய் இது தான் வேணாங்கறது… என் மன சந்தோஷத்துக்காக சரி நான் சொல்லிக்கறேன் டா… இனி இந்த பில்லியனரை யாரும் வேணாம்னு சொல்ல போறாங்க” என்றான் கரன்…
“கண்ணாடில போய் உன் மூஞ்ச பார்த்துட்டு இத சொல்லு” என்றாள் சஞ்சனா கிண்டலாக…
“அடிங் விட்டா பேசிட்டே போற…” என்று கரன் எகிறிக் கொண்டு வர, அவர்கள் ஆர்டர் பண்ணிய உணவை கொண்டு வந்த வெயிட்டர் உணவை வைக்கும் போது அவர்களை ஒரு பெண் தாண்டி வேகமாக செல்லும்போது வெயிட்டரின் கையில் இருந்த தட்டு அவள் மேல் பட்டு கீழே விழுந்தது.
அபின்ஞானின் மேசையில் இருந்தவர்கள் சட்டென திரும்பி அவளை பார்த்தனர்.
சுடிதார் அணிந்து இருந்தாள்.
மெல்லிய உடல்வாகு…
முகத்துக்கு மாஸ்க் அணிந்திருந்ததால் அவளை சரியாக பார்க்க முடியவில்லை ஆனால் அவள் பதற்றமாக இருப்பது தெளிவாகவே தெரிந்தது.
மேசையில் அமர்ந்திருந்த மகிமாவை பார்த்தவள், “ஐ அம் ரியலி சாரி மேடம்” என்று அவள் கவலையுடன் கூற,
“இட்ஸ் ஓகே… நோ ப்ராப்ளம்” என்று மகிமா கூற,
மீண்டும் இருமுறை மன்னிப்பை வேண்டி விட்டு அந்த ஹோட்டலில் இருந்து வேகமாக வெளியேறியவள் தன் ஐடி கார்ட் விழுந்ததை அறியவில்லை…
மேசையில் இருந்தவர்களும் பெருமூச்சுடன் அடுத்த உணவை ஆர்டர் பண்ணிவிட்டு அமர்ந்திருக்க,
அந்த நேரம் மகிமா, “வாவ்… செம்ம ஹென்ஸமா இருக்கான்” என்றாள் மகிமா ஒரு இடத்தை பார்த்தபடி….
அவனை முறைத்து பார்த்த அபின்ஞான், “நான் பக்கத்துல இருக்க கிட்ட எதுக்குடி கண்டவனுங்கள சைட் அடிக்கிற” என்றான் பொறாமை பொங்கும் குரலில்,
“அழகா இருக்கான்… அதுதான் பார்த்தேன்… தப்பா என்ன?” என்று கண் சிமிட்டு கேட்க,
அவள் அழகில் மயங்கியவனோ, “இல்லை” என்பது போல் தலையசைத்தான்.
அபின்ஞானை பார்த்து சிரித்த மகிமா, “அவன் இங்கதான் வரான்” என்றாள் அவர்கள் மேசையை நோக்கி வந்து கொண்டிருந்தவனை கண்களால் காட்டி…
அந்நேரம் அவனும் ஆறடி உயரத்தில் பார்க்கப் பளிச்சென்று தோற்றத்தில் அவர்களை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தான்…
பட்டர் கலர் ட்ரவுசரும் மெரூன் கலர் டி-ஷர்ட் அணிந்து கையில் டாக்டர் கோர்ட் ஒன்றை வைத்துக்கொண்டு ஆளுமையான தோற்றத்தில் சுற்றிலும் எதையோ தேடி கண்களை சுழல விட்டபடியே இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்…
அபின்ஞானுக்கும் மகாதேவிற்கும் இடையே வந்து நின்றவன், “ஹாய் மச்சி எப்படி இருக்கீங்க டா” என்று சிரித்தபடி கேட்டான்…
சிரிப்பிலே அனைவரையும் ஈர்த்துவிடுவான் போலும்…
அபின்ஞானும் மகாதேவும் சட்டென எழுந்து நின்றனர்…
அவன் அவர்கள் பாடசாலையில் வகுப்பில் ஒன்றாக படித்த அவர்களது நண்பன் இஷாந்த்…
“டேய் மச்சி எப்படி இருக்க டா” என்றபடி அபின்ஞான் இஷாந்தை அணைத்துக் கொண்டான்…
“நல்லா இருக்கேன் டா” என்றான் இஷாந்த்…
“இப்ப என்னடா செய்ற?”என்று அவனை பார்த்து அபின்ஞான் கேட்க,
“ஜெனரல் ஹாஸ்பிடல்ல ஹாட் சர்ஜனா இருக்கேன் டா” என்றான் இஷாந்த்…
அவனைப் பார்த்தது, “நல்லா வளர்ந்துடுடா நீ..” என்று மகாதேவ் சொல்ல,
“பதினஞ்சி வருஷத்துக்கு அப்புறம் பா ர்த்தா வளர்ந்து தான்டா இருப்பேன்” என்றான் இஷாந்த் சிரித்தபடி…
பழைய நண்பர்கள் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? நன்றாக பேசி சிரித்து விட்டு இஷாந்த் கிளம்பத் தயாராக மற்ற ஆண்களும் எழுந்து நின்றனர்…
“நாமெல்லாம் திரும்ப மீட் ஆகலாம் மச்சி… என்ன ஹெல்ப் வேணும்னாலும் கால் பண்ணு…” என்றான் இஷாந்த்.
“கட்டாயம் டா… என்றான் தேவ்…
“சரி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” என்று கேட்டான் அபின்ஞான்.
“எங்கடா இப்பதான் லைஃப்ல செட்டில் ஆயியிருக்கேன்… வீட்ல பேசிட்டு இருக்காங்க” என்றவன், “திரும்ப கட்டாயம் மீட் பண்ணலாம்” என்ற இஷாந்த் பெண்களிடமும் விடை பெற்றுக் கொண்டு மேசையிலிருந்து எழும்பியவனது காலில் ஏதோ தட்டுப்பட்டது…
குனிந்து பார்த்தான் அது ஒரு வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரின் ஐடி கார்ட்… “மிஸ் மைனிகா…” என இதழ்களுக்குள் நக்கலாக சிரித்துக் கொண்டவன் யாரும் அறியாமல் அதை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்றான் அவன்……
அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மகாதேவ், “அபி உனக்கு தெரியுமா நம்ம சயின்ஸ் டீச்சருக்கு லெட்டர் போட்டதே இவன் தான்” என்று கூற… அங்கிருந்தவர்களோ அதிர்ந்து கண்ணை விரித்துக்கொண்டனர்…
தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த மகிமாவுக்கோ புரையேறிவிட்டது…
இருமி கொண்டவள், “இவனா உங்களுக்கு பெரிய ஆப்பா வச்சவன்… இதைக் கண்டுபிடிக்க உங்க ரெண்டு பேருக்கும் பதினாஞ்சி வருஷம் போயிருக்கு… அவன் என்னான்னா ஒண்ணுமே பண்ணாதவன் மாதிரி வந்து சிரிச்சு பேசிட்டு போறான்” என்றால் மகிமா தன் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தபடி…
அவளை சலிப்பாக பார்த்த அபின்ஞான் மகாதேவை பார்த்து, “எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்டான்…
“நான் இங்க வந்ததுமே யாருன்னு தேடி கண்டுபிடிச்சிட்டேன்… நாம ரெண்டு பேரும் மாறி மாறி பெஸ்ட் வருவோம்… எங்க ரெண்டு பேருக்கும் அப்புறமா இவன்தான் கிளாஸ்ல மூணாவதா வந்துட்டு இருப்பான்… நமக்குள்ள போட்டி மட்டும் தான் இருக்கும்… ஆனா அவன் அப்படி இல்ல… அவனுக்கு போட்டியா வர்றவன முதல்ல இல்லாமாக்கிட்டு தான் எடுத்த வேலை பார்ப்பான்…இஷாந்த் ஃபர்ஸ்ட் வர்ரதுக்காக நம்மள பிரிச்சிருக்கான்…
இப்ப பெஸ்ட் டாக்டரா இருக்கான்… எங்க பீல்டும் அவன் பீல்டும் ஃபுல்லா வேற… அவனுக்கு இனி நம்மளால எந்த பிரச்சினையும் இல்ல… அதனால தான் இப்ப பழையபடி நல்லா பேசுறான்… ஹீ இஸ் டேஞ்சர்… ஆனா நமக்கு இல்ல… அவன எதிர்க்கிறவங்களுக்கு மட்டும்தான்…
இப்ப நாம என்ன ஹெல்ப் கேட்டாலும் செய்வான்…” என்றான் சிரித்தபடி…
“உங்கள விட பெரிய கில்லாடி போல… பார்க்க ஸ்மார்டா அப்பாவியா இருக்கான்” என்றாள் மகிமா…
“அப்பாவி மாதிரி இருக்கிறவங்கள தான் நம்ப முடியாது” என்றான் மகாதேவ்…
“ம்ம் அது…. அரட்டை அடித்துவிட்டு அவர்கள் வீடு வந்து சேரும் போது இரவாகிவிட்டது…
சின்ன பெட்டி ஒன்றில் டைமண்ட்சை வைத்து அதை லாக் பண்ணிக் கொண்டிருந்த அபின்ஞானை பார்த்த மகிமா, “இத என்ன பண்ண போறீங்க” என்று கேட்டாள்…
“இத எடுக்க முந்தி… இத வச்சு எத்தனையோ வேலை செய்யணும்னு நினைச்சிருந்தேன்… நம்ம கம்பெனிய வோல்ட் வாய்ஸா முன்னேத்தனும்னு எத்தனையோ பிளேன் வெச்சி இருந்தேன்… ஆனா இப்ப அந்த ஐடியா கொஞ்சம் இல்ல… இனி என்ன செய்யணும்னு யோசிக்கணும்” என்றான் தன் தாடியை நீவியபடி…
அவளோ உங்க விருப்பம் என்ற படி தோல்களை குலுக்கி கொண்டாள்…
மகிமாவுக்கு எட்டாம் மாதம் நெருங்கிக் கொண்டிருக்க அபின்ஞான் வீட்டிலே சிறிதாக வளைகாப்பு செய்ய விரும்பினான்…
மகிமாவுக்கு அதில் பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும் அபின்ஞானின் விருப்பத்தை மறுக்க அவள் விருப்பப்படவில்லை…
அன்று அவளது வளைகாப்பு நாள்..
அவளோ சிவப்பு நிற பட்டுப் புடவை உடுத்தி நகைகளும் அணிந்து தேவதை போல் இருந்தாள்…
அபின்ஞான் அவளை பழையபடியே மாற்றி விட்டான்.
அவள் கண்களோ சிரிப்பில் எப்போதும் மின்னிக் கொண்டிருந்தன…
அவர்களது நெருங்கிய குடும்பத்தினரை மட்டும் அழைத்தினர்…
மீனாட்சியுடன் மகாதேவும் சஞ்சனாவும் வந்திருந்தனர்…
மீனாட்சியும் சஞ்சனாவுக்கு வளைகாப்பு செய்ய கேட்டுக் கேட்டுக் கொண்டிருக்க, மகாதேவ் அதற்கு மறுத்து கொண்டு இருந்தான்…
வளைகாப்பு செய்தால் அவள் தன் தாய் வீட்டுக்கு சென்று விடுவாளே….
அவள் செல்லாவிட்டாலும் மீனாட்சி வற்புறுத்தி அழைத்து சென்று விடுவார்…
அதனால் அவன் மகிமாவை அழைக்கவும் இல்லை… அவன் அழைத்தாலும் அவள் வரப்போவதில்லை என்பது வேறொரு கதை…
அவள் அபின்ஞானை விட்டு பிரிந்திருந்தால் தான் அதிசயம்…
அபின்ஞான் அவள் கைக்கு டைமண்ட் பதிக்கப்பட்ட அழகான இரண்டு தங்க வளையல்களைப் போட்டவன், அவள் முகத்தில் மஞ்சளை பூசி விழாவை ஆரம்பித்தான்…
மகிமாவுக்கு பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருந்தான்.
தாகம் ஏற்பட்டால் அவள் கேட்க முன்பே அவள் கையில் ஜூசை கொடுப்பான்…
அதைப் பார்க்கும்போது தான் மீனாட்சிக்கு பற்றி கொண்டு வந்தது…
“சிங்கம் மாதிரி இருந்த பையன என்ன செஞ்சி மயக்கினாலோ தெரியல… எப்ப பார்த்தாலும் அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கான்” என்று புகைச்சல் ஆக நினைத்துக் கொண்டார்.
விழாமுடிந்ததும் அனைவரும் சென்று விட்டனர்…
மகிமா அபின்ஞானின் கையைப் பிடித்தபடி வாசலில் நின்று இருக்க, அன்னபூரணி அம்மாளும் ஏதோ ஆவலுன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்…
சஞ்சனாவுக்கு கால் வலி என்பதால் சோபாவில் காலை நீட்டி அமர்ந்திருந்தாள்…
அன்னபூரணி அம்மாளிடம் எதோ கொடுக்க வந்த மீனாட்சி மகிமாவை பார்த்து, “இப்பதான் உன் புருஷன் எழும்பி இருக்கான்… அதுக்குள்ள நீ அவன பழயபடி உன் பின்னாலே சுத்த வச்சுட்ட… உன்ன மாதிரி ஒரு அன்னக்காவடிய கட்டிக்கிட்டு இவன் உருப்பட்ட மாதிரி தான்” என்றார் வக்கனையாக…
இவ்வளவு நாளும் மகிமா இருந்த மனநிலையில் அவர் சொல்லும் கதைகளுக்கு எந்த ஒரு பதிலையுமே கொடுக்க முடியவில்லை…
ஆனால் இப்போது அபின்ஞான் அவளை பழையபடி மாற்றி விட்டானே…
“என் புருஷன் என் பின்னால சுத்தாம உங்க பின்னாடியா சுத்துவார்… நானும் என் புருஷனும் எப்படி வேணாலும் இருந்துட்டு போவோம்… நாங்க எப்படி இருந்தா உங்களுக்கு என்ன” என்றாள் அவரை முறைத்துக் கொண்டு,
“இந்த காலத்து பசங்க நலவ சொன்ன எங்க கேக்குறீங்க… உன் புருஷன் கிட்ட இப்பிடி ஒட்டிடே இருக்காம அவன கொஞ்சம் வேல பார்க்க விடேன்…” என்று அவரும் பொடி வைத்து பேச,
அவர் பேச்சில் அவரை பார்த்து சிரித்தவள், அருகே நின்றிருந்த அபின்ஞானை பிடித்து தன்னறுகே இழுத்தவள், அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “இது இப்படி கிஸ் கூட பண்ணுவேன்… நான் என் அபிக்கு கிஸ் பண்ணா தப்பா” என்று அவள் அப்பாவியாக கேட்கற…
அபின்ஞானுக்ககோ சங்கடமாக இருக்க சத்தம் இல்லாமல் அங்கிருந்து நழுவிக்கொண்டான்…
இந்த இடியாப்ப சிக்கலில் அவன் மாட்ட விரும்பவில்லை…
மகிமாவே சமாளித்து விடுவாள் என்பதால் பின்னால் இருந்த சோபாவில் அமர்ந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆத்தி…” என நெஞ்சில் கையை வைத்துக் கொண்டவர், “கலிகாலம்… என்ன பொண்ணு டி நீ…” என்று அவள் செய்த செயலில் சங்கடமாகவும் கோபத்துடனும் கேட்க,
“நீங்க இப்படியே ஓவரா பேசிட்டு இருந்தீங்கன்னா… என் புருஷன கொஞ்சுரத விட்டுட்டு உங்க பொண்ணையும் மாப்பிள்ளையும் தான் பிரிச்சிடுவேன்… இப்பவே சொல்லிட்டேன்” என்றாள் மகிமா…
மீனாட்சியை பார்த்த அன்னபூரணி அம்மாள், ” அண்ணிக்கு வேற வேலயே இல்லயா… இவ கிட்ட போய் வாய கொடுத்துட்டு இருக்காங்க… ஆனா வாங்க வேண்டியவர் தான்” என்று முனுமுனுத்தபடியே அங்கிருந்து சென்றார்…
“என்னடி மிரட்றியா?” என்று கேட்டார் மீனாட்சி…
“மிரட்டல்ல நான் உண்மைய சொன்னேன்… நான் என்ன சொன்னாலும் என் அண்ணா கேட்பான் தெரியுமா? அதனால பார்த்து நடந்துக்கோங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
மகாதேவோ அங்கிருந்த வேலைக்காரன் ஒருவனிடம், “என்கிட்ட எதுக்கு கேட்டுட்டு இருக்க போய் மகி கிட்ட கேளு… அவ ஓகேன்னா… எனக்கும் ஓகே தான்” என்று சொல்ல,
மீனாட்சியின் கண்களோ அதிர்ந்து விரிந்து கொண்டன…
“ஐயோ… நான் நினைச்சத விட இவ படு பயங்கரமா இருக்காளே” என்று நினைத்துக் கொள்ள…
பின்னாலிருந்த அபின்ஞானுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை…
சஞ்சனாவும் கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கி கொண்ட அமர்ந்திருந்தாள்.
அவர் சட்டென பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டார்…
“ஐயோ அப்படி இல்லம்மா… சும்மா தான் சொன்னேன்” என்றவர் அங்கிருந்து எதுவும் பேசாமல் சென்றார்…
இதற்கு மேல் அவர் மகிமாவுடன் வாயைக் கொடுப்பாரா என்ன?.
மகிமாவும் நமட்டு சிரிப்புடன் சஞ்சனா அருகே செல்ல, “என்னடி என் அம்மாவை அடக்கிட்டியா?” என்று கேட்டாள்…
“ச்சே சே… அவ்ளோ பெரிய மனுசி அவங்க… நான் என்னத்துக்குடி அவங்கள அடக்கணும்… சும்மா பேசிட்டு வந்தேன்” என்று அமைதியாக கூற,
“கையை நீட்டி அவள் பேசுவதை தடுத்தவள், “மூடு… உன்ன பத்தி எனக்கு தெரியாதா? என் காதிலே பூசுத்த வந்துட்டா…” என முனுமுனுத்தபடியே அங்கிருந்து சென்றாள்…
செல்லும் சஞ்சனாவை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த மகிமாவின் தோலை யாரோ தட்ட திரும்பி பார்த்தாள் அபின்ஞான் தான் நின்று இருந்தான்…
அவளை முறைத்து பார்த்தவன், “எதுக்குடி என்ன கிஸ் பண்ணிட்டு போனா” என்று கேட்டான்…
“அது ஒரு ப்லோல பண்ணிட்டேன்” என்றாள் அவன் பழுப்பு நிற விழிகளை பார்த்தபடி…
இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன், “சரி சரி வா… வந்து உட்காரு உன் கால் ரொம்ப வீங்கிடுச்சு… இனி ரெஸ்ட் எடு” என்று கூறியவாறு அவளை அழைத்துக்கொண்டு சென்றான்…
தேடல் 32
இருவரும் படுத்திருந்தாலும் இருவருக்கும் தூக்கம் தான் வரவில்லை…
இருவருக்கிடையேயும் ஒரு திரை விழுந்த உணர்வு…
மெதுவாக அவளை நெருங்கி வந்தவன், அவளை அணைத்துக் கொள்ள மகிமா அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்…
ஒற்றைப் புருவம் உயர்த்தியவன், “நமக்கு பேபீஸ் ஃபாம் ஆகுற அளவுக்கு நெருக்கமா இருந்திருக்கோம்… நீ எதுக்கு நான் உன்ன லைட்டா ஹக் பண்ணதுக்கே ஷாக் ஆகுற” என்று கேட்க…
“திடீர்னு நீங்க அணச்சதால தான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்…” என்றவள், திரும்பிப் படுக்க சிரமமாக இருந்ததால் மல்லாக்க படுத்திருந்தாள்…
அவளை அணைத்தபடியே அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்…
ஆறு மாதங்கள் கடந்தும் அன்று போல் இன்றும் அவன் தொடுகையில் அவள் மேனி உருகிக் குழைந்தது…
உணர்சியின் பிடியில் இதழ் விரித்து கண் மூடி படுத்திருந்தவளின் உதடுகளோ அவனை ஈர்க்க… சட்டென்று குனிந்தவன் அவள் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்…
மிக மிக ஆழமான முத்தம்… அவர்களது இதழ்களுடன் சேர்த்து உமிழ்நீரும் பரிமாறப்பட்டன…
அவன் இதுவரை அவளுடன் பேசாதது எல்லாம் சேர்த்து அவன் முத்தம் அவளுடன் பேசிக் கொண்டிருந்தது…
அவன் ஒரு கை அவள் வயிற்றிலிருந்த தன் மகவுகளை வருடிக் கொண்டிருந்தது…
கொஞ்ச நேரத்திலே அவள் மூச்சு வாங்கவும் தான் அவளிடமிருந்து பிரிந்தவன் அவளை தன் மார்புக் கூட்டுக்குள் சுருட்டிய படியே தூங்கிப் போனான்…
அடுத்த நாள் அபின்ஞானின் கைவளைவுக்குள் தான் மகிமா கண்விழித்தாள்.
அவனைப் பார்த்ததும் அவள் இதழ்கள் தானாகவே புன்னகைத்துக் கொண்டன.
மெதுவாக அவனிடமிருந்து விலகப் பார்க்கும் பொதே அவனும் முழித்து விட்டான்.
அவள் முகத்தை அருகில் கண்டதும் அதிர்ந்தவன் தன் கைவளைவுக்குள் இருந்தவளை பிடித்து தள்ளி விட்டவன், “ஏய் நீ இங்க என்னடி பண்ற” என்று கேட்க, இப்பொழுது அதிர்வது என்னவோ மகிமாவின் முறையாகப் போனது.
நேற்று அவன் அல்லவா அவளை அவனுடன் வந்து தங்குமாறு கூறினான். இன்று இவ்வாறு மாற்றிப் பேசினால் அவளும் என்னதான் செய்வது.
“நீ தேவ் தங்கச்சி தானே… என் கம்பெனிக்கு வந்து என் ப்ராஜெக்ட் கொட்டேஷன நீதானே திருடிட்டு போன… இப்ப என் ரூம்ல நீ என்ன பண்ற” என்று தலையை அழுத்தமாக வருடிக் கொண்டே கேட்க,
மகிமாவுக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போனது…
அவனுக்கு எது முதலில் நினைவு வரக்கூடாது என்று நினைத்தாலோ அதுவே அவனுக்கு முதலில் நினைவு வந்துவிட, என்ன செய்வது என்று புரியாது கண்களில் கண்ணீர் ததும்ப கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அப்பொழுதுதான் அவனுக்கு நேற்று நடந்ததும், அவள் கர்ப்பமாக இருப்பதும் புரிய தலையை அழுத்தமாக தேய்த்துக் கொண்டான்.
ஏனோ அவனுக்கு அவளை பிடிக்கவில்லை.
ஆனாலும் அவன் தங்கள் திருமண புகைப்படங்களை பார்த்ததில் அவள் தன் மனைவி என்று ஏற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.
அதே நேரம் அவள் தனக்கு இழைத்த துரோகம், தேவின் தங்கச்சி தான் அவள் என்ற உண்மை அறைந்ததில் அதை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
தங்களுக்கு இடையில் எப்படி திருமணம் முடிந்தது? அவள் எதற்காக தன்னை திருமணம் முடித்தாள் என்று அவனுக்கு இப்பொழுது சந்தேகமாக இருந்தது.
அவன் மனமோ, “இவள் என்னை ஏமாற்றி திருமணம் முடித்திருக்கிறாள்” என்று அடித்துக் கூறிக் கொண்டிருந்தது. இதற்கு மேல் எதைப் பற்றியும் யோசிக்க முடியாமல் அவன் தலை வேறு விண் விண் என்று வலிக்கத் துவங்கியது.
தன்னை நினைத்து சுய பரிதாபம் ஒரு பக்கம்… அடுத்தது அவன் நினைவுகள் சரியாக திரும்பாமல் அவன் தலைவலியில் அவதிப்படுவதை பார்த்து அவளால் மனதினுள் மட்டுமே கதற மட்டுமே முடிந்தது…
ஒரே ஒரு முறை அவள் திருட்டுத்தனம் செய்ததற்கு அவளும் எத்தனை முறை தான் தண்டனை அனுபவிப்பது…
அவள் முகத்தைப் பார்க்க பிடிக்காதவன் அறையிலிருந்து வெளியே சென்று விட்டான்.
நேற்று சந்தோஷத்தை குடுத்தவன் இன்று அதையும் பிடுங்கிக் கொண்டான்.
இருவரது முகமும் சோர்ந்து போய் இருப்பதைக் கண்ட அன்னபூரணி அம்மாள் மகிமாவிடம், “ஏதாவது பிரச்சினையா மகி” என்று கவலையாக கேட்டார்.
அவளும் அவரிடம் என்னதான் சொல்வது. இதற்கு மேல் பேசி அவர் மனதை நோகடிக்க விரும்பாதவள் ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டிக் கொண்டாள்.
அவள் தலையை வருடிவிட்டவர், “கடவுள் எல்லாத்தையும் சரியாக்கி விடுவார்னு நம்புவோம்” என்றவர் அங்கிருந்து சென்றார்.
அன்று முழுவதும் அவன் அவளுடன் பேசவே இல்லை.
காணும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே திரிந்தான்.
வார்த்தைகளால் எதுவும் குத்தி கிளிக்கவில்லை என்பது மட்டுமே அவளுக்கு நிம்மதி.
அவன் ஏதாவது ஒரு வார்த்தை தவறாக பேசி விட்டால் அதற்குப் பிறகு அவளால் அடுத்து என்ன நடக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடிய வில்லை.
அவனும் அவள் குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறாள் என்பதால் தான் எதுவும் பேசாமல் விலகி சென்று கொண்டிருக்கிறான்.
அவனுக்கு அவள் தேவ் தங்கை என்பதை தாங்கிக் கொள்ளவே முடியவில்ல. அது மட்டும் இல்லாமல் தன்னை ஏமாற்றி பெரிய ஒரு திருட்டுத்தனம் செய்திருக்கிறாள்… அதை அவளிடம் வெளிப்படுத்தவும் முடியாமல், நினைவுகள் சரியாக வராத நிலையில் அவனுக்குத்தான் தலைவலி உயிர் போனது…
மகிமாவுக்கும் அவன் தலைவலியில் அவதிப்படுவது புரிந்தது. அவனிடம் பேச பயந்தவள் அன்னபூரணி அம்மாளிடம் சென்று கூற விட, அவரோ அவனுக்கு தைலம் தேய்த்து விட்டார்…
மகிமா அவனுக்கு காபியை கொண்டு வந்து வைத்து விட்டு அமைதியாக சென்று விட்டாள்.
அவனும் இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்கி விட, அவன் தூங்கியதை உறுதி செய்து கொண்டவள் அவன் அருகே படுத்து அவன் மார்பில் தலையை வைத்து தூங்கிப் போனாள்.
அவன் அருகே உறங்குவதில் அவள் இன்பம் கண்டு கொண்டிருக்கிறாள் இப் பேதை.
அடுத்த நாள் விடியலில் அவளுக்கு மூச்சு விட சிரமமாக இருக்க தூக்கத்திலிருந்து சிரமப்பட்டு கண்களை திறந்தவளது விழிகளோ சாசர் போல் விரிந்தன.
அபின்ஞான் அவள் இதழ்களை அழுத்தமாக கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தான்.
“ம்ம்ம்” என முனங்கிய படி அவன் மார்பில் கையை வைத்து அவனை தள்ளிவிட, அவள் தள்ளுவாள் என்பதை எதிர்பாராதவன் கட்டிலில் இருந்து கீழே விழுந்தான்.
அவன் விழுந்ததை பார்த்து அதிர்ந்தவள் இரு கைகளையும் வாயில் வைத்துக் கொண்டாள்.
நிலத்திலிருந்து அவளை முறைத்தபடியே எழுந்தவன், “என்ன திமிரு டி உனக்கு” என்று கேட்டபடி அவள் அருகே வர பயத்துடன் கண்களை மூடிக்கொண்டாள்.
அவன் எதுவும் செய்யாமல் இருக்கவும் மெதுவாக கண்ணை திறந்து பார்க்க அவள் அருகே அமர்ந்து அவன் அவளைத்தான் கணிவாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளும் எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்கிக் கொள்வாள். நேற்று காலையில் ஒரு மாதிரி நடந்தான். இன்று காலையில் வேரு ஒரு அவதாரத்தில் இருக்கிறான்.
“அபி ஏன் இப்படி பண்றீங்க” என்று உள்ளடங்கிய குரலில் கேட்க,
“நீ என் பொண்டாட்டி தானே உன்னை நான் கிஸ் பண்ண கூடாதா” என கேட்டான்.
“நீங்க நேத்து என்னென்னமோ பேசிட்டு இப்போ இப்படி நடக்குறது மட்டும் சரியா?” என்றாள்.
“நமக்கிடையில் என்ன பிரச்சன இருந்தாலும் நீ இப்போ என் பொண்டாட்டி… என் குழந்தைக்கு அம்மா அதனால நான் உன்ன எனக்கு தோன்ற நேரம் எல்லாம் கிஸ் பண்ணலாம்… தப்பில்ல” என்றவன் அவள் கன்னத்தில் தட்டி விட்டு குளியலறைக்குள் சென்றான்.
அவள் தான் என்ன செய்வதென்று அறியாது அப்படியே அமர்ந்திருக்க,வெளியே தேவின் சத்தம் கேட்கவும் பதறி எழும்பினாள்.
அபின்ஞான் தேவை கண்டால் என்ன செய்வன் என்று தெரியாதே…
நல்ல வேலை அவன் குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருக்கின்றான். அவன் வருவதற்கு முன்னரே தேவை அனுப்ப நினைத்தவள் வேகமாக வெளியே சென்றாள்.
வெளியே வந்தவள் மகாதேவ் அருகே சென்று, “அண்ணா எப்ப வந்த நீ” என்று கேட்டாள்…
“இப்போ தான் டி… ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும்… நீ எப்படி இருக்க மகி” என்று கேட்டான்…
“நான் இருக்கேன் டா… அபி மட்டும் கண்டான்டா பெரிய பிரச்சினை ஆயிடும்… ஃபாஸ்டாக கிளம்பு” என அவனை அவசரப்படுத்தினாள் மகிமா…
“இன்னும் பழைய ஞாபகம் வரலையா?” என்று மகாதேவ் கேட்டுக் கொண்டிருக்கும்போதே,
“நீ இங்க என்னடா பண்ற” என்று கேட்டபடி வந்தான் அபின்ஞான்…
மகிமா அச்சத்தில் கையை பிசைந்தபடி நின்று இருந்தாள்…
மகாதேவை முறைததுப் பார்த்தவன், “என்ன தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்து… என் பொண்டாட்டி கூடவே பேசிட்டு இருப்ப” என்று கேட்டான் அபின்ஞான்…
“ஆஹ் ஸ்டார்ட் பண்ணிட்டான்… டேய் முதல்ல நான் உன் பொண்டாட்டியாகுறதுக்கு முந்தியே நான் அவன் தங்கச்சி டா… இவன் இப்ப முதல்ல இருந்து ஆரம்பிக் போறான்” என்று நினைத்தபடி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
மீண்டும் இருவருக்கும் சண்டை ஆரம்பித்து விடுமோ என பயந்தவள் அபின்ஞானின் கையை பற்றிக் கொண்டவள், “அவன ஒன்னும் பண்ணிடாதீங்க… ” என்றாள் மகிமா வேகமாக…
“நீ போ மகி…” நான் பேசிக்கொறேன் என்ற தேவ், அபின்ஞானை அறைக்குள் இழுத்துக்கொண்டு சென்று கதவை மூடினான்…
“டேய் என்ன விடுடா…” என்று அவன் கையை தட்டிவிட்டான் அபின்ஞான்….
அவனை அழுத்தமாக பார்த்த மகாதேவ், “எதுக்குடா நடிக்கிற” என்று எடுத்த எடுப்புக்கே கேட்டான்…
அபின்ஞான் ஒரு கணம் அசையாது நின்றவன், பின் “நான் என்னத்துக்கு நடிக்கணும்… நீ ஏதாவது டிராமா போடாதே” என்றான்…
“மத்தவங்க வேணும்னா உன் நடிப்ப நம்பலாம்… ஆனா நான் உன்ன நம்பவே மாட்டேன்… இதுக்கு முன்ன நீ என்ன பார்க்க கிட்ட உன் கண்ணுல ஒரு கோபம், வெரி, வெறுப்பு இருக்கும்… ஆனா இன்னைக்கி அது ஒண்ணுமே இல்லாமா ரொம்ப சாதாரணமா இருந்துச்சு… எதுக்குடா நடிக்கிற” என்று மீண்டும் கேட்டான் மகாதேவ்.
“உண்மையா எல்லாம் மறந்துட்டேன்டா… இன்னைக்கு காலையில தான் எல்லாமே ஞாபகம் வந்துச்சு… மகி என்ன பண்றான்னு பார்க்க ஆசையா இருந்துச்சு… அதுக்காகத்தான் சும்மா நடிச்சு பார்த்தேன்… நாளைக்கு சொல்லலாம்னு இருந்தேன்… நீயே கண்டுபிடிச்சுட்ட” என்றான் சிரித்தபடி…
“டேய்… உனக்கு விளையாட வேற நேரமே கிடைக்கலயா டா… மகி ரொம்ப வீக்கா இருக்கா… கொஞ்சம் கவனமா இருந்துக்கோ… நீயே தான் இத அவ கிட்ட பார்த்து சொல்லணும்” என்றான் ஒரு அண்ணாவின் பாசத்துடன்…
“சரி டா… கவலைப்படாதே… இனி நான் அவள கவனமா பாத்துக்குறேன்” என்றான் அபின்ஞான்…
“அப்ப சரிடா… நான் கிளம்புறேன்… சஞ்சனா தனியா இருக்கா… நீ கவனமா இருந்துக்கோ… மகிய கவனமா பார்த்துக்கோடா” என்ற படி மகாதேவ் கதவை திறக்க…
அங்கே தேனீர் கோப்பையுடன் எடுத்துக் கொண்டு வந்த மகிமா கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தாள்…
உள்ளே வந்து அங்கிருந்த மேசையில் தேநீர் கோப்பைகளை வைத்தவள், “அண்ணா நீ வெளியே போ” என்றாள் கோபமாக….
“மகி” என்று அவன் இழுக்க…
“போ அண்ணா” என்று கத்தவும் அபின்ஞானும் வெளியே செல்லும்படி கண்ணசைத்தான்…
ஒரு தலையசைப்புடன் அபின்ஞானிடம் விடை பெற்றுக் கொண்டவன் வெளியே செல்லவும் கதவை அடித்து மூடியவள் அபின்ஞான் முன்னே வந்து நின்றாள்…
“உன்ன அரஞ்சே சாவடிக்கனும் போல இருக்கு டா” என்றாள் அவனை முறைத்தபடி…
“மகி” என்று அவன் என்ன சொல்வது என்று தெரியாது மாட்டிகொண்டதில் முழித்துக் கொண்டிருந்தான்.
“எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? நேத்து காலையில இருந்து நான் எவ்வளவு துடிச்சிட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா” என்றாள் கண்களில் கண்ணீர் ததும்ப கேட்டாள்.
அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவளை மிக மிக இறுக்கமாக அணைத்துக்கொண்டான்…
அவளுக்கும் அந்நேரம் அந்த அணைப்பு தேவையானதாகவே இருந்தது…
“எனக்கு புரியுது மகி… எனக்கு இன்னைக்கு காலையில தான் எல்லாமே ஞாபகம் வந்துச்சி… நீ என்ன பண்றன்னு பார்க்கத்தான் அப்படி நடந்துகிட்டேன்… சொல்லலாம்னு தான் இருந்தேன் டி” என்றான் அவள் முதுகை வருடிக் கொடுத்தபடி…
அவளுக்கும் புரிந்தது… இன்று காலையிலே அவன் நடத்தையில் வித்தியாசத்தை பார்த்தளே… அவளிடம் மென்மையாக அல்லவா நடந்து கொண்டான்.
அறை குறை நினைவுடன், தான் அவனுக்கு துரோகம் இழைத்தது நினைவிருந்தாலும் அவளை மனதால் வேதனைப்படுத்த வில்லையே… பேசாமல் ஒதுங்கி தானே போனான்…
அவளோக்கோ அவனுடன் பேசவும் முடியவில்லை… பேசாமல் இருக்கவும் முடியவில்லை…
அவன் உயிர் தப்பி பிழைத்து வந்ததே அவளுக்கு பெரிய விஷயம் தான்….
வாழும் கொஞ்ச நாட்களில்… சண்டை போட்டுக் கொண்டோ அவனிடமிருந்து பிரிந்து வாழ்வதற்கோ அவளிடம் தெம்பில்லை…
எத்தனை நாள் தான் அவளும் அவனைப் பிரிந்து வலியை அனுபவிப்பாள்…
“இனிமே இப்படி பண்ணாதீங்க அபி” என்றவள்… அவனிடமே நியாயமும் கேட்டு… அவனிடமே ஆறுதலும் தேடி ஏங்கி ஏங்கி அழுதாள்.
எத்தனை நாளைய வலி அவளுடையது…
அபின்ஞான் அமைதியாக அவள் தலையை கோதிக் கொண்டிருந்தான்…
அந்த வருடலே அவளுக்கு ஆயிரம் மடங்கு பலத்தை கொடுத்தது போல் இருந்தது…
அவன் அவன் பேசியிருந்தால் கூட அவள் இப்படி உணர்ந்திருப்பாலோ என்னவோ…
இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது…
நீண்ட நேர அமைதியின் பின் அவளே பேசினாள், “அத்த கிட்ட போய் சொல்லலாம்” என்று கூறியவள் அது கையை பற்றிய படியே அன்னபூரணி அம்மாளிடம் சென்றாள்.
அவரும் இருவரும் ஜோடியாக வருவதை வஞ்சையாக பார்த்துக் கொண்டிருந்தார்…
“அத்த அபிக்கு எல்லாமே ஞாபகம் வந்துருச்சு” என்று கூற,
அவருக்கோ இரட்டிப்பு சந்தோஷம்… “இனியாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க” என்றவர் மகிமாவின் தலையை வருடியவர், “இப்போ உனக்கு சந்தோஷமா… எனக்கு என் பையன் எழுந்திருவான்னு தெரியும்… உன்னை நினைத்து தான் ரொம்ப பயந்தேன்… நான் கும்பிட்ட சாமி என்ன கைவிடல” என்றவர் அவளை அணைத்து விடுவித்தார்…
மகிமாவும் கண்சிமிட்டி சிரித்துக்கொண்டாள்…
“சரி என் பையனோட நீ சுத்தினது போதும் வா என்னோட… இனி உன்ன விட்டா பிடிக்கவே முடியாது… உனக்கு ஃபுருட்ஸ் கட் பண்ணி வெச்சேன் வந்து சாப்பிடு” என்று அவளை கையுடன் அழைத்துச் செல்ல,
அபின்ஞானும் அவர்கள் பின்னாலே வர, அவனை திரும்பிப் பார்த்தவர், “நீ எதுக்குடா எங்க பின்னால வர”என்று கேட்டார்…
“அம்மா உங்க பையன் நான்… நான் தான் கஷ்டப்பட்டு எழும்பி வந்து இருக்கேன்… நீங்க என்ன கவனிச்சுறத விட்டுட்டு மகிய கவனிச்சிட்டு இருக்கீங்க” என்றான் விளையாட்டாக…
அவனை முறைத்துப் பார்த்தவர், “நீ கஷ்டப்படுறது உன் மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கு பாரு… அழகா படுத்துட்டு மகி கிட்ட ஒவ்வொரு வேலயா சொல்லிட்டு இருக்கிற… உன்ன பார்த்துக்க எத்தன பேர் இருக்கோம்…. மகிய பார்த்துக்க தான் யாரும் இல்ல… நான் தான் அவள கவனிக்கனும்” என்றவர் அவள் சாப்பிட பழங்களை நீட்ட,
“அப்படி சொல்லுங்க அத்த” என்று சலுகையாக அவர் தோளில் சாய்ந்து ஆப்பிள் துண்டை கடித்த படி அபின்ஞானை முறைத்துப் பார்த்தாள்.
அவள் தட்டில் இருந்து ஆப்பிள் துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு சமையல் கட்டில் ஏறி அமர்ந்தவன், “மத்த இடத்தில மாமியார் மருமகள கொடுமைப்படுத்துவாங்க, இல்லன்னா மருமக மாமியார கொடுமை படுத்துவா… இங்க என்னன்னா மாமியாரும் மருமகளும் சேர்ந்து சொந்த பையன கொடுமப்படுத்துறீங்க” என்றான் மகிமாவின் தட்டில் இருந்து அடுத்த ஆப்பிள் துண்டையும் எடுத்தபடி…
அவன் கையில் ஒரு அடி போட்டவர், “எதுக்குடா அவளுக்கு கொடுத்தத நீ எடுத்து சாப்பிடுற… உனக்கு தாரத மட்டும் சாப்பிடு” என்று அவன் கையில் இருந்த ஆப்பிள் துண்டை பறித்துக் கொள்ள, மகிமா பக் என்று சிரித்து விட்டாள்…
“கொடுமப்படுத்துறன்னா இப்படித்தான் கொடுமைப்படுத்தனும்” என்று அன்னபூரணி அம்மாளும் சிரித்தபடி கூறினார்.
அந்நேரம் இருவரது ஓர விழிப் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ள அவர்களுக்கு பேசுவதற்கு வார்த்தை தேவைப்படவில்லை… விழி மொழியே போதுமானதாக இருந்தது…
அவளோ இனி ஒவ்வொரு நொடியையும் அவனுடன் ரசித்து வாழ நினைத்தாள்.
அவன் அவளைப் பார்த்து கண் சிமிட்ட, அவள் சிரித்தபடி அன்னபூரணி அம்மாளை திரும்பிப் பார்த்தாள்.
அவர் இருவரையும் கண்டும் காணது போல் மனதிற்குள் மகனையும் மருமகளையும் நினைத்து சந்தோஷப்பட்ட படி தன் வேலையை கவனித்தார்.
“சரி சரி… மாமியும் மருமகளும் இருந்து உங்க கதைய பேசிக்கோங்க…” என்றவன் மகிமா தட்டில் இருந்து ஆப்பிள் துண்டுகளை எடுத்துக்கொண்டே அங்கிருந்து சென்றான்…
“சாப்பாடு கொடுக்காம நாம இவன காய போட்ட மாதிரி தான் நடந்துக்கிறான்” என்றவர் அவள் சாப்பிட்டு முடிந்ததும் தன் வேலைகளை கவனிக்க சென்றார்…
அன்று அபின்ஞானை பார்க்க காரனும் ராகவும் வந்திருந்தார்கள்…
மூன்று பேரும் அபின்ஞானின் அறைக்குள் சென்று கதைக்க ஆரம்பித்து விட்டனர்…
“தேவ் வரலையா டா” என்று கேட்டான் அபின்ஞான்.
“வரத்தான் இருந்தான்… இப்போ எதோ முக்கியமான வேலைன்னு வர முடியல, அதுக்கு அப்புறம் தான் நாங்க ரெண்டு பேரும் வந்தோம்” என்ற கரன், “அபி எங்கள நல்லாவே பயமுறுத்துட்ட… இப்ப எல்லாம் ஓகே தானே” என்று கேட்டான்…
“இப்போ ஓகேடா…” என்றான் அபின்ஞான்…
“நல்லா ரெஸ்ட் எடுடா” என அவன் தோளில் தட்டியபடி கூறிய ராகவ், “டேய் மகிய நல்லா பார்த்துக்கோ… அவ ரொம்ப பயந்துட்டா… உன்ன பார்க்க வர டைம்ல, எங்களுக்கு அவள பார்த்தா தான் பயமாயிக்கும்… பேசக்கூட மாட்ட, எங்கயாவது வெரிச்சு பார்த்துட்டே இருப்பா… நல்லாவே மாறிட்டா… கொஞ்ச நாள் டிப்ரஷன்ல கூட இருந்தா… நாங்க எல்லாம் நல்லாவே பயந்துட்டோம்… நீ தான் இனி அவள கவனமா பார்த்துக்கனும்” என சொல்ல…
அபின்ஞானுக்கு அதிர்ச்சியாய் இருந்தது இந்த விடயம்….
இத்தனை விடயங்கள் நடந்திருக்கிறதா என்று?
யாருமே… தன் பெற்றோரோ… மகாதேவ் கூட இதை அவனிடம் கூறவில்லையே…
அவளைப் பார்த்ததுமே அவள் தோற்றத்திலே அவள் உடைந்து போய் இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது தான்…
ஆனால் இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று இன்று தான் தெரிந்தது…
இப்பொழுது அவன் மனதுக்கு இரு மடங்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது…
அவள் நிலைமையை புரியாமல் அவளுடன் விளையாடியதை நினைத்து…
பெருமூச்சுவிட்டுக் கொண்டான்…
இனி அதை நினைத்து எந்த பயனுமே இல்லை அல்லவா…
இனி அவளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்…
தன் மேல் அவள் எவ்வளவு பாசம் வைத்திருந்தால் தான் படுக்கையில் இருக்கும்போது அவள் நடைபிணமாக சுற்றி இருப்பாள்…
இனி அவளை காவமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் நண்பர்களுடன் பேச ஆரம்பித்தான்…
அந்நேரம் அவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் தேநீர் கோப்பைகளை எடுத்துக்கொண்டு வந்தாள் மகிமா…
அப்போது தான் அவளை ஊன்றிக் கவனித்தான் அபின்ஞான்…
உடலுக்கு இலகுவான கருப்பு நிற காட்டன் சல்வார் அணிந்திருந்தாள்…
முடியை கொண்டை போட்டிருந்தாள்…
மெலிந்து போய் அவளது வயிறு மட்டும் அவளை விட பெரிதாக தெரிந்தது…
தன் தோற்றத்தில் எந்த ஒரு அக்கறையும் இல்லை என்று அவளை பார்க்கும் போதே விளங்கியது…
ஆனால் அவள் தோற்றத்துக்கு மாறாக அவள் இதழ்களிலோ புன்னகை நிறைந்திருந்தது…
அன்றைய மகிமாவுக்கும், இன்று தன் முன்னால் இருப்பவளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் கூறி விட அவனால் முடியும்…
அவளை பார்க்கும் பொழுதே அவனுக்கு வேதனையாக இருந்தது…
கூடிய சீக்கிரம் அவளை பழைய மகிமாவாகவே மாற்றி விட வேண்டும் என நினைத்துக் கொண்டான்…
தேடல் 31
ஐந்தாறு நிமிடங்களிலே அவனது அந்த துடிப்பு குறைந்து விட்டது…
இசிஜி மெஷினை பார்த்த தாதி அவனையும் நன்றாக சோதித்து விட்டு, “மகிமாவை பார்த்து நீங்க டென்ஷன் ஆகாதீங்க… உங்க ஹஸ்பெண்ட் கான்சியன்ஸ்க்கு வந்துட்டு இருக்கிறார்… எந்த பிரச்சினையும் இல்ல அவருக்கு” என்று கூற…
அவர் சொல்வதை அவளால் நம்ப தான் முடியவில்லை…
ஆனா அவன் எதற்காக இவ்வாறு துடித்தான் என்று அவளுக்கு புரியவில்லை…
அதை வாய் திறந்து கேட்கவும் முடியவில்லை…
அவள் முக உணர்வை வைத்து அவள் மனதை கணித்திருக்க வேண்டும் அவர்…
இந்த ஆறு மாதங்களாக அவளைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார், “எல்லாரும் நார்மலா எந்திரிக்க மாட்டாங்க… கோமால இருந்து எழுபும்போது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சிம்டம்ஸ் காட்டும். உங்க புருஷனுக்கு இந்த மாதிரி காட்டி இருக்கு பயப்படாதீங்க” என்று சிரித்தபடி படி அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே…
மெதுவாக கண்களை திறந்தான் அபின்ஞான்…
அவனுக்கோ கண்கள் கூசின…
கண்ணை திறந்து மூடி… அவன் இந்த ஆறு மாத காலமாக வாழ்ந்து கொண்டிருந்த இருட்டு உலகத்தில் இருந்து வெளிச்சத்துக்கு வர தன் கண்களை பழக்கிக் கொண்டிருந்தான்…
கண்களை நன்றாக திறந்து பார்த்தான்…
அவன் அருகே அவனை அன்பொழுக பார்த்த படி அன்னபூரணி அம்மாள் நின்றிருந்தார்…
அவரை பார்த்து, “அம்மா” என்று வாயாசைத்தான்.
அவன் வாயெல்லாம் வறண்டு போய் இருந்தது.
அவன் தலையை வருடியவர், “எங்கள ரொம்ப பயமுறுத்திட்ட அபி” என்றார் பெருமூச்சுடன்…
மகிமாவும் மெதுவாக அவனை நோக்கி வர, அவள் தன் அருகில் வருவதை கண்டு புருவம் சுருக்கி பார்த்த அபின்ஞான், அன்னபூரணி அம்மாளை பார்த்து, “யாரும்மா இந்த பிரக்னெட் லேடி” என்று கேட்டானே பார்க்கலாம்…
அன்னபூரணி அம்மாளுக்கோ அவன் கூறியதை கேட்டு மயக்கம் வராத குறை தான்…
அவனை அதிர்ந்து பார்த்தபடியே ஓரடி பின்னே சென்றாள் மகிமா…
அவளை மறந்து விட்டானா அவளவன்??
அதேநேரம் வைத்தியரும் வந்துவிட்டார்…
வயிற்றில் கையை வைத்தபடியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
அவனை சோதித்துப் பார்த்தவர், “மிஸ்டர் அபி இது யாருன்னு உங்களுக்கு தெரியுதா?” என்று அன்னபூரணி அம்மாலை சுட்டிக்காட்டி கேட்க,
“என் அம்மாவ எனக்கு தெரியாத டாக்டர்… எதுக்கு என் கிட்ட இப்படி எடக்கு மொடக்கா கேள்வி கேக்குறீங்க?” என்று அவரிடம் அவன் திருப்பிக் கேட்க,
அந்த வைத்தியரும் பல கோமா நோயாளிகளை பார்த்து அனுபவப்பட்டிருந்ததால் அதைக் கண்டு கொள்ளாது மகிமாவை காட்டி, “இவ யார்ன்னு தெரியுமா?” என்று கேட்டார்…
“திடீர்னு ஒரு பொண்ண காட்டி யாருன்னு கேட்டா எனக்கு எப்படி தெரியும் டாக்டர்” என்று அவன் இடக்காக கேட்க,
அவனை வெறித்து பார்த்த படி நின்றவள் முகத்திலோ தாங்க முடியாத வேதனை நிலவியது…
“நீங்க இப்ப எந்த வருஷத்துல இருக்கீங்க” அவர் மீண்டும் கேட்க,
அவரை லூசா என்பது போல் பார்த்தவன், “2024” என்று கூற மகிமா நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள்….
ஒரு வருடம் முழுவதும் நடந்ததை மறந்து விட்டானா…
வைத்தியரும் அன்னபூரணி அம்மாளை வெளியே அழைத்து வந்தவர், “பொதுவா கோமால இருந்து எழுந்தா சிலருக்கு எல்லாமே ஞாபகம் இருக்கும்… சிலருக்கு ஒண்ணுமே ஞாபகம் இருக்காது… அப்படி இருந்தாலும் ஒரு சில நாட்களில் எல்லாம் ஞாபகம் திரும்பிடும்… சிலாக்களுக்கு லைப் லாங் ஒண்ணுமே ஞாபகம் வராது… இப்ப அவர் பெர்பெக்ட்லி ஆல் ரைட்… ஃபுல் பாடி செக்கப் ஒன்னு பண்றது பெட்டர்…” என்று கூறிவிட்டு சென்றார்…
அவன் எழுந்து விட்டதை கேள்விப்பட்ட உடனே பசுபதியும் வந்து விட்டார்…
அபின்ஞானின் அறையில் தான் மகிமா அன்னபூரணி அம்மாள் பசுபதி மூன்று பேரும் இருந்தனர்…
அந்த பெரிய மனிதருக்கும் இந்த நிலையை எவ்வாறு சமாளிப்பது என்று புரியவில்லை…
அவன் மறந்திருந்தாலும் இது மறைக்கக் கூடிய விஷயமா என்ன…
பசுபதி சங்கடமாக மகிமாவை பார்த்துவிட்டு அபின்ஞானை பார்த்தவர்… “அபி நீ இவள யாருன்னு கேட்டுட்டு இருந்தல்ல… இவதான் உன் பொண்டாட்டி” என்றார்.
அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தவன், “எனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” என்று நம்ப முடியாமல் கேட்டான்…
“ம்ம்… கல்யாணமாகி உனக்கு குழந்தையும் பொறக்க போகுது” என்றவர், அருகில் இருந்த நாட்காட்டியை காட்டி, “நீ இப்ப 2025ல இருக்க ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதே… ரிலாக்ஸா இரு…” என்றார்.
அவனால் தனக்கு திருமணம் முடிந்ததை ஏற்கவே முடியவில்லை. அருகே இருந்த மகிமாவை அவன் துளைப்பது பார்க்க, அவளும் அவன் பழுப்பு நிற விழிகளை ஆறு மாதங்களுக்கு பிறகு உயிரை கையில் வைத்துக் கொண்டு பார்த்தாள்.
அவன் புரியாத பார்வையை அவளால் எதிர் கொள்ளவே முடியவில்லை.
அவன் முன் கண்ணீர் வடிக்க விருப்பம் அந்த அறையிலிருந்து வெளியேரி விட்டாள்.
அவள் பார்வை அர்த்தம் அவனுக்கும் புரியவில்லை.
அவனுக்கு தனிமை தேவை என்பதை உணர்ந்த பசுபதி அன்னபூரணி அம்மாளுடன் வெளியே சென்றார்…
வெளியே வந்தவள் சோபாவில் அமைதியாக அமைந்து கொண்டாள்…
பசுபதியுடன் தான் மகாதேவும் வந்திருந்தான்… அவளை அணைத்தபடியே அவள் அருகே அமர்ந்து கொண்டவன், “டென்ஷன் ஆகாதே மகி… அவன் எழும்பினதே பெரிய விஷயம் தான்… இனி கவலைப்படாதே எல்லாமே சரியாகிடும்… நான் இப்ப அபிய பார்க்கல… என்ன மனநிலைல இருக்கான்னோ தெரியல… பொறகு வந்து பார்க்கிறேன்” என்றவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்…
ஏன் அவளுக்கு மட்டும் இத்தனை பிரச்சினைகள் என்று தெரியவில்லை…
அவன் எழும்பியதற்கு சந்தோஷப்படுவதா… இல்லை தன்னை மறந்ததை நினைத்து கவலைப்படுவதா என்றும் யோசிக்க முடியவில்லை…
அவள் மனதுக்கு சரியான அழுத்தமாக இருந்தது…
அடுத்த இரு நாட்களும் அவள் அவன் அரை பக்கமே செல்லவில்லை…
அன்னபூரணி அம்மாளும் அவளை புரிந்து கொண்டதால் அவரே அவனை பார்த்துக் கொண்டார்…
அபின்ஞான் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டான்…
போசனையான உணவுகளும், ஏற்கனவே அவன் ஆரோக்கியமானவன் என்பதாலும் வேகமாக தேரி வந்து கொண்டிருந்தான்…
வீட்டில் நடமாடுகிறான்… வெளியே செல்கிறான்… தந்தையுடன் பேசுவான்… டிவி பார்ப்பான்…
ஆனால் அவன் கண்ணில் தான் மகிமா படவே இல்லை…
அன்று அவன் தந்தையிடம் கம்பெனியை பற்றி பேசி விட்டு வந்தவன் சாப்பாட்டு மேசையில் அமர அன்னபூரணி அம்மாள் அவனுக்கு உணவை பரிமாரிக் கொண்டிருந்தார்…
மகிமா தன் அறைக் கதவின் ஓரத்தில் நின்று மறைந்து நின்று பார்த்துக் ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்குத் தெரியாமல் அவன் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசித்துக் கொண்டிருக்கின்றாள்.
அவன் முன்னால் சென்று நின்று அவன் பார்க்கும் பார்வையை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை…
அன்னபூரணி அம்மாளை அழுத்தமாகப் பார்த்தவன், “அம்மா உண்மையிலுமே அவ என் பொண்டாட்டி தானா?” என்று கேட்க, ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த மகிமா சுவரில் சாய்ந்து நின்று கண்ணை விரித்தாள்.
“ஏண்டா அப்படி கேக்குற” என்று அதிர்ந்து கேட்டார் அன்னபூரணி அம்மாள்…
“கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்றீங்க… நான் எழும்பி மூணு நாளாச்சு… இன்னும் அவ ஏன் பக்கம் கூட திரும்பி கூட பார்க்கல” என்றான் கராறான குரலில்…
“நீ பழசை மறந்ததினால உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணம்ன்னு அப்படி இருக்காப்பா” என்றார் …
“சரி அதுக்குன்னு இப்படி விலகியா இருப்பா… இனி அவ என்ன பார்க்கட்டும்” என்றான் அதிகாரமாக,
திருமணத்தின் பின் கொஞ்சம் மென்மையாக மாறியிருந்தான்…
ஆனால் அவன் பிறவிக் குணம் முழுதாக மாறிப் போய்விடுமா என்ன…
அவரும் மகிமாவை சென்று அழைக்க, அவளும் அவன் அருகே வந்து அவனுக்கு தயங்கியபடியே பரிமாறினாள்…
தலை குனிந்த படி பரிமாறிக் கொண்டிருந்தவளின் கையை பற்ற சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள், “நீயும் சாப்பிடல்ல தானே… என் கூடவே சாப்பிடு” என்று தனக்கு முன்னால் இருந்த இருக்கையை காட்டினான்.
அவளும் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, “என்ன நெனச்சா நீ இவ்ளோ மெலிஞ்சு போய் இருக்க” என்ற அவனது கேள்வியில் விழுங்கிய உணவு அவள் தொண்டையில் சிக்கிக் கொள்ள இரும ஆரம்பித்தாள்.
“சரியா பார்த்தா கோமாவிலிருந்து எழுந்த என்ன நீ தான் கவனிச்சிருக்கணும்… ஆனா நீ என்ன திரும்பி கூட பார்க்காம இருக்க… நான் தான் உன்ன தேடி வந்து கவனிக்க வேண்டியதா இருக்கு” என்றவன் அவள் தலையில் தட்டி நீரை கொடுத்தான்…
அவள் அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, “எதுக்கு இவ்ளோ ஷக்காகுற… சாப்பிட்டு முடிஞ்சதும் என் ரூமுக்கு வா… உன் கூட பேசணும்” என்றவன் அறைக்குள் நுழைய, அவளும் வேகமாக சாப்பிட்டுவிட்டு அவன் பின்னாலே சென்றாள்…
என்ன கதைக்கப் போகிறானோ என்ற பதற்றத்தில் அவள் கைகளை பிசைந்தபடி நின்று இருந்தாள்.
கட்டிலில் அமர்ந்தவன் அவளையும் தன் அருகில் அமருமாறு சைகை செய்ய அவளும் அமர்ந்து கொண்டாள்…
“மகிமா தானே உன் பெயர்” என்று கேட்டான்…
“ஐயோடா… மறுபடியும் முதலில் இருந்தா” என பெருமூச்சு விட்டவள், ஆம் என்பது போல் தலையசைத்தாள்…
“வாய தொறந்து பேச மாட்டியா என்ன?” என்று கேட்டான்…
அவளுக்கு பழைய அபின்ஞான் தான் அவள் கண் முன்னால் வந்தான்…
“பழைய படி பொறுக்கியா மாறிடான்” என்று நினைத்துக் கொண்டவள், “என் பெயர் மகிமா தான்” என்றாள் அழுத்தமாக…
“சரி உன்ன பத்தி சொல்லு எனக்கு ஒண்ணுமே ஞாபகம் இல்லை…” என்றான் கட்டிலில் சவகாசமாக சாய்ந்தமர்ந்த படி…
இப்போது அவனிடம் எதை சொல்வது… முதலில் அவனை ஏமாற்றியதை பற்றியதா? அல்லது மகாதேவின் தங்கை என்று கூறுவதா? எதை கூறினாலும் அவன் மனதில் அவளை பற்றி நல்ல அபிப்பிராயம் வரப்போவதில்லையே…
எச்சிலை கூட்டு விழுங்கிக் கொண்டவள், “சொல்றது போல பெருசா எதுவும் இல்லை… எனக்கு அம்மா அப்பா இல்ல ஒரு அண்ணா மட்டும் தான்… அவன் பிசினஸ் பண்ணிட்டு இருக்கான்” என்றாள் பட்டும் படாமல் சமாளிப்பாக…
“ஓஹ்… நாம எப்படி கல்யாணம் பண்ணோம்… லவ் மேரேஜா இல்லன்னா அரேன்ஞ்ச் மேரேஜா?” என்று கேட்டான்…
“ரெண்டும் இல்லடா நீ என்ன மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்று நினைத்தவள், “லவ் மேரேஜ்” என்றாள்…
“நான் உன்ன லவ் பண்ணேனா… ஐ காண்ட் பிலிவ் திஸ்” என்றான் அதிர்ச்சியாக…
“தெரியல” என்று வாய் தவறி சொல்லிவிட்டவள் தன் நாக்கை கடித்துக் கொண்டாள்…
“என்னது?” என்று சந்தேகமாக அவளை பார்க்க…
“ஐயோ ஐயோ… நானே உலரி வெச்சிடுவேன் போலிருக்கே” என நினைத்தவள், “நீங்க வேற யாராவது லவ் பண்ணா இல்லையான்னு தெரியல” என்றாள்…
நெற்றியை அழுத்தமாக வருடியவன், “நான் உன்ன லவ் பண்ணான்னு தான் கேட்டேன்… எதுக்கு லூசு மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இருக்க… நானும் ஆரம்பத்தில் இருந்தே பாத்துக்கிட்டு இருக்கேன்… திருடி மாறி முழிச்சிட்டே இருக்க… ஏதாவது திருட்டுத்தனம் பண்ணி என்கிட்ட மறைக்கிறியா என்ன?” என்று புருவம் சுருக்கி வினவ,
“அடப்பாவி… என்ன வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி குழந்தையை குடுத்துட்டு என்ன கேள்வி எல்லாம் கேட்கிறான் பாவி” என்னை நினைத்த வேலைக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அவனோ அவள் வாய் மூலமாக தனக்கும் அவளுக்கும் இடையில் நடந்ததை கறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
ஆனால் வெளிப்படையாக அதை அவளிடம் கேட்கத்தான் அவனுக்கு சங்கடமாக இருந்தது.
“நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்டேன், நீ இன்னும் பதில் சொல்லல” என்றான் அதட்டலாக…
“ம்ம்… நீங்க லவ் பண்றேன்னு தான் சொன்னீங்க” என்றாள்…
“அப்ப நீ என்னை லவ் பண்ணலையா?” என்று அடுத்த கேள்வி வர,
“சரியான கேள்விக்கு பொறந்தவனா இருக்கான்” என்று நினைத்தவள், “நானும் உங்கள லவ் பண்றேன்” என்றாள்..
“அப்ப ஏன் இவ்ளோ டிஸ்டன்ஸ்ல இருக்க” என்று இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை பார்த்து கேட்டானே பார்க்கலாம்.
“இன்னும் ஒண்ணுமே ஞாபகம் இல்ல, ஆனா குசும்ப பாரேன்” என நினைத்தவள் ஒன்றும் பேசாமல் அவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
அவள் தொளில் கையை போட்டு தன்னுடன் அணைத்துக் கொண்டவன், தன் பழுப்பு நிற விழிகளால் அவளை நோக்கி, “நான் ஒரு பொண்ண லவ் பண்ணுவேன்னு நினைச்சு கூட பார்க்கல” என்றவன்… “சரி அத விடு… இனி நீ தான் என் கூடவே இருந்து என் வேலய பார்த்துக்கனும்” என்றான் அதிகாரமாக…
‘சரி’ என்பது போல் தலையசைத்தாள்…
அந்த நேரம் மீனாட்சியும் அபின்ஞானை வந்தார்…
மகிமா அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள்.
அவன் அறை கதவை தட்டி விட்டு உள்ளே வந்தவர், “அபி… நீ இப்போ ஓகே தானே” என்று அவன் அருகில் வந்தவர் கேட்க, “ஓஹ் அத்தை… இப்ப எல்லாம் சரியாயிடுச்சு… சஞ்சனா எப்படி இருக்கா” என கேட்டான்.
“ம்ம் அவளுக்கு என்ன அவ நல்லா இருக்கா… நீதான் எங்கள நல்லா பயமுறுத்திட்ட… ஆமா நீ இந்த சிறுக்கிய மறந்துட்டியாமே” என்று மகிமாவை இகழ்ச்சியாக பார்த்து கேட்க,
“ம்ம்…” என்றான் அபின்ஞான்…
“இவ உனக்கு பொருத்தமே இல்ல… எதுக்கு இவள கூடவே வெச்சிருக்க” என்று அவர் தன் வழமையான பல்லவியை ஆரம்பிக்க…
“அண்ணி” என்று அழைத்த அன்னபூரணி அம்மாள், “உங்கள உங்க அண்ணா பேசுறார்” என்று கூற,
பசுபதி அங்கே இருப்பதை அறிந்து சத்தமில்லாமல் சென்று விட்டார்…
அன்று இரவு நீண்ட நாட்களில் பின் சேர்ந்து மகிழ்ச்சியாக உண்டானர்…
சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்தவள் படுக்க ஆயத்தமாக… அவள் அருகே சென்றவன்… அவள் வயிற்றைத் தொட்டு பார்த்து, “ட்வின்சா” என்று அவள் வயிற்றை வருடியபடியே ஆர்வமாக கேட்டான்…
மகிமாவும் புன்னகையுடன் “ம்ம்” என்றாள்.
வெளியே அவள் புன்னகைத்தாலும் அவன் தன்னை புரியாது பார்க்கும் ஒவ்வொரு பார்வைகும் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் அருகருகே படுத்துக் கொண்டனர்.
நடு ஜாமத்தில் எழும்பி அவனை பார்த்துக் கொண்டிருப்பாள்.
இவ்வளவு நாளும் அவளுக்கு நிம்மதியான உறக்கம் என்பதே இல்லை.
அவனை நினைத்து அவள் மனம் எப்போதும் நிலையில்லாமல் துடித்துக் கொண்டே இருக்கும்.
அவன் எழும்பியதன் பின்னரும் அதே நிலைதான்.
ஆனால் இன்று தான் அவன் அருகே நிம்மதியாக உணர்ந்தாள்.
தேடல் 30
மகிமா அமர்ந்திருந்த இடத்திலிருந்து அசையவே இல்லை…
அடுத்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களும் எப்படி கழிந்தது என்று அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை…
ஒவ்வொருவரும் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்…
ஒரு நாள் முழுதாக கடந்து விட்டது…
அவனை சோதித்துப் பார்த்து விட்டு வந்த வைத்தியர், “டோன்ட் வொர்ரி” என்று அவர்களை அமைதிப்படுத்தும் விதமாகவே பேச்சை ஆரம்பித்தார்…
“இனி பேஷண்ட உயிருக்கு ஆபத்தில்ல… ஆனா அவர் கோமாவுக்கு போய்ட்டார்… எப்ப கண்விழிப் பாருன்னு நம்மளால சொல்ல முடியாது… ஒரு கிழமை… ஒரு மாசம் அல்லது அவர் எழும்புறதுக்கு வருஷங்கள் கூட போகலாம்… இனி இவருக்கான ட்ரீட்மென்ட் ஹாஸ்பிடல்ல தான் பார்க்கணும்” என்று கூறிவிட்டு அபின்ஞானை பார்க்க சென்று விட்டார்.
அவன் உயிருக்கு ஆபதில்லை என்று கூறியதே அவர்கள் இருந்த மனநிலைக்கு நிம்மதியாக இருந்தது…
உயிர் தப்பி விட்டானே….
அவன் இருந்த நிலைக்கு அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் தான்…
*
அடுத்த ஏழு நாட்களில் அவர்களது சொந்த நாட்டுக்கே வந்துவிட்டனர்…
அவர்களுக்கு அவர்களது நாட்டு ஜனாதிபயிடம் இருந்தே ராஜ வரவேற்பு…
எவ்வளவு பெரிய சாதனையை படைத்து விட்டு வருகிறார்கள்…
ஆனால் அதைக் கொண்டாடும் மனநிலையில் யாரும் இருக்கவில்லை…
அபின்ஞான் ராகவ் கையில் கொடுத்த நவ ரத்தினம் அரசாங்கத்துக்கு உரியது…
அது பாதுகாப்பில் எப்போதும் கண்காட்சிக்கு வைக்கப்பட வேண்டியது…
அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் வேலையை ராகவிடம் வழங்கி விட்டு மற்றவர்கள் நேரடியாக வைத்தியசாலைக்கு தான் சென்றனர்.
அன்னபூரணி அம்மாளுக்கும் பசுபதிக்கும் போகும் போதே விஷயத்தை தேவ் கூறிவிட்டான்…
அவர்களும் உடனே தம் மகனை பார்க்க வந்துவிட்டனர்…
போகும்போது கம்பீரமாக சென்ற தம் மகனை படுக்கையில் திரும்பக் கொண்டு வருவதை அவர்களாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை…
அன்னபூரணி அம்மாளோ ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை…
பசுபதியை பார்த்தவர், “என் பையனுக்கு ஒன்றுமே நடக்காது, சீக்கிரமா எழுந்து வந்துருவான்” என்றார் ஒரு உறுதியடனும் அபரிதமான நம்பிக்கையுடனும்…
பசுபதியும் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு, “கட்டாயம் நம் பையன் எழுந்திடுவான்” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டார்…
மகிமாவோ எந்த உணர்வும் இன்றி சிலை போல் அமர்ந்து இருந்தாள்…
அபின்ஞான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் தாண்டி விட்டது…
எந்த முன்னேற்றமுமே இல்லை அவனிடம்…
அன்று அவனை பார்க்க வந்த பசுபதி வைத்தியரிடம், “டாக்டர் நம்ம பையன வீட்டுக்கே கூட்டிட்டு போய் நாம பார்த்துக் கொள்ளலாமா” என்று கேட்க,
“எல்லா வசதியும் இருந்தா நீங்க கூட்டிட்டு போய் பார்க்கலாம்… வீட்டுல இருந்து நீங்க டுவன்டி போர் ஹவரும் கூடவே இருந்து பார்க்கும் போது பேஷன்ட் சீக்கிரமா ரெக்கவர் ஆகுற சான்ஸ் இருக்கு” என்று கூற…
அடுத்த இரு நாட்களிலே அபின்ஞானை வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார் பசுபதி…
மகாதேவ் பசுபதிக்கு பக்க பலமாக நின்று அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டான்.
அபின்ஞான் இது மாதிரி பல ஆபத்தான இடங்களுக்கு சென்று இருக்கிறான்…
தம் மகன் கவனமாய் போய் வருவான் என்று எண்ணி விட்டனர் அவர்கள்… ஆனால் அவனோ படுத்த படுக்கையாக வந்து சேர்ந்தான்…
அவர்களுக்கும் யார் மீதும் குற்றம் சொல்ல பிடிக்கவில்லை…
கடவுள் எழுதி வைத்தது என்று அதைப் புறம் தள்ளிவிட்டு, “அவன் எப்படியாவது நன்றாக வேண்டும்”என்று மட்டுமே கடவுளிடம் வேண்டிக் கொண்டனர்…
மகிமாவோ அவன் உடனே தன் முழு நேரத்தையும் செலவழித்தாள்.
அவனைத் தாண்டி அவளால் வேறு எதுவுமே யோசிக்க முடியவில்லை…
அவனைப் பார்க்க மீனாட்சி வந்திருந்தார்…
அபின்ஞானை பார்த்துவிட்டு வந்தவர், “உன் மருமக வந்த நேரத்தை பார்த்தியா… நல்லா போன பையன் இப்ப பேச்சு மூச்சு இல்லாம வந்து சேர்ந்திருக்கான்… அண்ணி இனி நீங்க இவள வீட்ல வச்சு கொள்ளணுமா… துரத்தி விட்டிடுங்க இவ போனா எல்லாமே பழையபடி சரியாகிவிடும்” என்று மீனாட்சி தேள் கொடுக்கு போல் வார்த்தைகளை பேச,
“ஐயோ அண்ணி என்ன பேசுறீங்க… நாங்களே மனசுடஞ்சி போய் இருக்கோம்… நீங்க வேற” என்று அன்னபூரணி அம்மாள் வேதனையாக கூற,
அங்கே சிலை போல் நின்ற மகிமாவை வெறுப்பாக பார்த்தவர், “அண்ணி உங்க நலவுக்கு தான் சொல்றேன்… காலம் போகல… இந்த சனியன ஒழிச்சிடுங்க…” என்று மீனாட்சி கூறிக்கொண்டிருக்க அவரை அதிர்ந்து பார்த்த அன்னபூரணி அம்மாள், மகிமாவின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டார்.
மகிமாவுக்கோ சட்டென கண்ணீரே வந்துவிட்டது…
எதுவும் பேசாமல் அவள் அப்படியே நின்றிருந்தாள்.
இப்பொழுது இதுமாதிரி ஆயிரம் கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறாள் ஆனால் திருப்பிப் பேச வாய்தான் வருவதில்லை…
மீனாட்சியை அழுத்தமாக பார்த்த அன்னபூரணி அம்மாள், “இந்த விஷயத்துல என்னால எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது அண்ணி… நாங்க தேர்ந்தெடுத்த பொண்ணு இல்ல மகி… அபி பார்த்து காதலிச்ச கல்யாணம் பண்ண பொண்ணு… அவன் எழும்பி எங்க என் பொண்டாட்டின்னு கேட்டா நாங்க என்ன சொல்றது? அவனுக்கு இப்ப முடியாம இருந்தாலும் அவன் முடிவ எங்களால எதிர்க்கவும் முடியாது… அத மீறவும் முடியாது” என்று நிதானமாகவே கூறிவிட,
அதற்கு மேல் மீனாட்சியாலும் எதுவும் பேச முடியவில்லை…
அவர் சென்று விட, மகிமா அபின்ஞான் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்…
“அபி நான் பேசுறது கேக்குதா…ஏன் அபி என்னோட பேசாம இருக்கீங்க, நான் வந்த நேரம் தான் நீங்க இப்படி ஆகிடீங்கன்னு எல்லாரும் சொல்றாங்க… எனக்கு எவ்ளோ கவலயா இருக்கு தெரியுமா? ப்ளீஸ் எழும்புங்க அபி…ப்ளீஸ் எனக்காக எழும்புங்களேன்… ” என்றவளுக்கோ கண்களில் கண்ணீர் வழிந்தது…
சட்டென தன் கண்ணீரை துடைத்தவள் அங்கிருந்த குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்…
அவளுக்கோ தன்னுடன் தன் சகோதரன், அபின்ஞானின் பெற்றோர் கூட இருந்தும் தனிப்பட்ட மாதிரி உணர்வு…
அவன் இல்லாத குறை அவளை பூதாகரமாக வளர்ந்து தாக்கி கொண்டிருந்தது…
குளியலறைக்குள் இருந்தவள் தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் நீண்டநேரம் அழுதவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வந்து அவனைப் பார்த்துவிட்டு வெளியே சென்றாள்…
அபின்ஞான் இருக்கும் நிலையை பார்த்து அன்னபூரணி அம்மாளோ மனதாலும் உடலாலும் உடைந்து போய் பலவீனமாக இருந்தார்…
இந்த நேரத்தில் அந்த வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டிய முழு பொறுப்பும் மகிமாவுக்கே வந்து சேர்ந்தது…
வெளியில் பசுபதியே அவனது தொழிலை கவனித்துக் கொண்டிருந்தார்…
மகாதேவும் அவருக்கு உதவி செய்தான்…
அன்னபூரணி அம்மாளுக்கும் ஆறுதல் அளித்து அவரையும் படுக்க வைத்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அபின்ஞான் அருகே படுத்தாள்…
அந்த அறையில் இருந்த கடினமான திரைச்சீலையை தாண்டி ஒலி ஊடுறுவவும் கண்களை விரித்தாள் மகிமா…
விடிந்தது விட்டது… மெதுவாகத் திரும்பி அருகே படுத்திருந்த அபின்ஞானை பார்த்தாள்…
அவனோ எப்போதும் போலவே எந்த அசைவும் இன்றி படுத்திருந்தான்…
அவன் கன்னத்தை மென்மையாக வருடியவளுக்கோ… தன்னை மீறி கண்ணீர் வழிந்தது…
“ஏன் அபி என்ன இப்படி கஷ்டப்படுத்துறீங்க… நான் அழுறத பார்த்து உங்களுக்கு அவ்ளோ சந்தோஷமா? எனக்கு உங்கள கிஸ் பண்ணனும் போல இருக்கு… உங்களோட லைப் லோங் நடந்து போகனும் மாதிரி இருக்கு… தோல்ல சாஞ்சுக்கனும் போல இருக்கு.. நடக்குற எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட பேசணும் போல இருக்கு… உங்களோட சண்டை போடணும் போல இருக்கு” என்று தன் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்தவள் அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்தவள், “நமக்கு ரெண்டு குழந்தைங்க வரப்போகுது… அவங்க கூடவாவது உங்களுக்கு பேச விருப்பம் இல்லையா…” என்று தன்னை மீறி விம்மிய படியே கண்ணீரை துடைத்தவள், சுவரில் மாட்டியிருந்த கலண்டரை பார்த்தாள்…
அவன் கோமாவுக்கு சென்று ஆறு மாதங்கள் கடந்து விட்டன…
எத்தனையோ சிகிச்சை செய்து பார்த்து விட்டனர்… ஆனால் எந்த பலனும் இல்லை…
அவளும் இன்று எழுவான்… நாளை எழும்புவான் என்று நம்பிக்கை தளராது காத்துக் கொண்டிருக்கிறாள்…
அவள் மட்டுமா இல்லையே… அவள் வயிற்றில் இருக்கும் இன்னும் இரு ஜீவன்கள் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனவே…
ஆனால் அவனோ ஒவ்வொரு நாளும் அவளது நம்பிக்கையை தலரடிப்பது போலவே படுத்தே கிடக்கின்றான்…
அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு கட்டில் இருந்து எழுந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், அவனை துடைத்து உடைமாற்றி விட்டு வெளியே வந்தாள்…
அவள் அழகோ மங்கிப்போய் இருந்தது…
கண்களில் கருவளையம் வந்து… மெலிந்து போய் இருந்தாள்…
அவள் உடலில் எடுப்பதற்கு சதை இல்லை…
அதற்கு மாறாக அவள் வயிறு மட்டும் பெரிதாக வீங்கிப் போயிருந்தது…
அவன் குழந்தைகளை சுமந்து கொண்டிருப்பதற்கு சான்றாக…
பார்க்கவே பரிதாபமான தோற்றத்தில் இருந்தாள்…
மீனாட்சி தப்பித்தவறி அந்த வீட்டுக்கு வந்து விட்டால், அவளோ அன்று நரக வேதனை அனுபவிப்பாள்…
இப்பொழுது அவள் அமைதியாகி தனக்குள் ஒடுங்கிப் போய்விட்டாள்…
யாருடனும் பேசக் கூட மாட்டாள்…
அன்னபூரணி அம்மாளும் அவளுக்கு எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டார்…
அது அவள் செவிகளுக்கு ஏறுகிறதோ இல்லையோ என்பது அந்த கடவுள் தான் அறிவான்…
“குழந்தைக்காக மனதை அமைதியாக வைத்துக்கொள்… ஒழுங்கா சாப்பிடு” என்று அன்னபூரணி அம்மாளோ எவ்வளவோ அவளுக்கு எடுத்துக் கூறிவிட்டார்…
ஆனால் அவளோ அதைக் கேட்ட பாடே இல்லை…
இப்போது எல்லோருக்கும் அவனை விட அவளை நினைத்து தான் பயம் அதிகம்…
அவளை நம்பி இன்னும் ஒரு இரு உயிர்கள் இருக்கின்றனவே…
அவள் குழந்தைகளை பத்திரமாக பிரசவிக்க வேண்டுமே…
மகாதேவும் அவளை தன்னுடன் வந்து சிறிது காலம் இருக்கும் படி எவ்வளவு அழைத்தும் அவளோ அபின்ஞானை விட்டு நகர மறுக்கிறாள்…
மகாதேவும் சஞ்சனாவும் திருமணம் முடித்து இருந்தனர்… சஞ்சனாவும் ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறாள்…
ஆரம்பத்தில் அவர்களது திருமணத்துக்கு மீனாட்சி முழுக்க முழுக்க எதிர்ப்பு தெரிவித்தார்…
ஆனாலும் மகாதேவ் அபின்ஞானுக்கு எந்த ஒரு வகையும் குறைந்தவன் இல்லையே…
சஞ்சனாவும் அவனைத் தான் கல்யாணம் முடிப்பேன் என்று உறுதியாக இருந்துவிட அதற்கு மேல் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை…
மகாதேவே அனைத்து திருமண ஏற்பாடுகளையும் செய்து முடித்தான்…
அபின்ஞான் இவ்வாரு இருக்கும் போது திருமணம் செய்வது சங்கடம் தான்…
ஆனால் திருமணத்துக்கு முன்பே சஞ்சனா கருவுற்றிருந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை…
மகிமாவுக்கோ எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஈடுபடுவதற்கு மனமே இல்லை…
அதை மீறி மகாதேவுக்காக சென்றாலும், மீனாட்சி அவளை ஒதுக்கி வைத்து விடுவார்…
இல்லாவிட்டால் வார்த்தைகளால் அவர் மனதை குத்தி கிழிப்பார்…
விதியின் சூழ்ச்சியால் தன் அண்ணன் என் திருமணத்தில் கூட ஒதுங்கி இருக்க வேண்டிய நிலையாகிப் போனது…
அவளுக்கு சந்தர்ப்பம் இருந்தாலும் அதை கொண்டாடும் மனநிலையில் மகிமா இருக்கவில்லை என்பதுதான் உண்மை…
அவளே அனைத்து விடயங்களில் இருந்தும் தன்னை ஒதுக்கி ஒரு கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டாள் என்பதுதான் நிஜம்…
சஞ்சனா மீனாச்சியிடம் பெரிதாக அபிப்ராயம் கேட்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்… அப்போதாவது அவர் திருந்துவாரா என்கிற எண்ணம் அவளுக்கு…
எவ்வளவோ மகிமாவை தங்களுடன் வந்து தங்குமாறு அழைக்கிறாள் சஞ்சனா… ஆனால் அவள் தான் வரமாட்டாளே…
அவளையும் அபின்ஞானையும் சென்று இருவரும் பார்த்து விட்டு வருவார்கள்…
நேரம் கிடைக்கும் போது கரனும் ராகவம் வருவார்கள்…
கரனது காலோ இப்பொழுது முழுதாக குணமாகி விட்டிருந்தது…
அவளது வசதிக்காக இப்பொழுது அபின்ஞானது அறை கீழே மாற்றப்பட்டிருந்தது…
அதனால் மகிமாவுக்கு மாடி ஏறி இறங்கும் சிரமம் இருக்கவில்லை….
அவள் அறையில் இருந்து வெளியே வந்ததும் அவள் முன்னால் பழங்கள் அடங்கிய ஒரு பாத்திரத்தை நீட்டிய அன்னபூரணி அம்மாள், ” மகி சாப்பிடு முதல்ல” என்றார் கடினமாக…
அவளுக்கு இப்போதெல்லாம் யாராவது கொஞ்சம் கடினமாக பேசினாலே கண்ணீர் வடிந்து விடும் …
ஆனால் அவளிடம் பொறுமையாக சொன்னால் கேட்பதில்லையே…
அதனால் தான் இப்பொழுது அவளை மிரட்டி உருட்டி உண்ண வைத்துக் கொண்டிருக்கிறார் அன்னபூரணி அம்மாள்…
காலை உணவை உண்டு விட்டு அபின்ஞான் அருகே சென்று படுத்துக் கொண்டாள்…
அவள் நேரம் முழுவதும் தூங்குவதிலே தான் கழிந்து கொண்டிருந்தது…
எதிலும் ஈடுபட அவள் மனம் விரும்பவும் இல்லை… எதிலும் அவள் மனம் லயிப்பதும் இல்லை…
இந்தக் காதல் அவளை பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்…
அவன் அருகே உறங்குவதில் அவளுக்கு ஒரு நிம்மதி… அதனால் உறங்கியே நேரத்தை நெட்டி தள்ளிக் கொண்டிருக்கிறாள்.
திடீரென அவளை யாரோ தட்டிய உணர்வு…
சட்டென அவனை திரும்பிப் பார்த்தாள்…
எப்போதும் போலத்தான் இருந்தான்…
தன் மன உணர்வு என்று அதை ஒதுக்கியவள் மீண்டும் கண்ணை மூடிக்கொள்ள மீண்டும் ஏதோ ஒரு அசைவு…
இல்லை… இல்லை… இது அவள் மனக்குழப்பம் இல்லை என்பது அவளுக்கு நூற்றுக்கு நூறு வீதம் உறுதி…
எழுந்து அமர்ந்து கொண்டவள் அவனை ஊன்றிப் பார்த்தாள்…
அவன் கைகால்கள் துடித்தன…
அதிர்ந்து போய்விட்டாள்…
அவனுக்கு ஏதோ நடந்து கொண்டிருக்கின்றது…
தான் கை கால் துடிக்கும் வேகம் இன்னும் இன்னும் கூடியது…
அவன் உடல் துடித்து வெட்டி வெட்டிப் போட்டது.
வேகமாக வெளியே ஓடி வந்தவளுக்கு வாயிலிருந்து வார்த்தை வரவில்லை காற்று தான் வந்தது…
அழுகையில் உதடுகள் துடித்தன…
கண்ணீரும் வரவில்லை…
அதுவும் வற்றிப் போய் விட்டது போலும்…
அவள் அறை வாசல் கதவை வேகமாக தட்டினாள்…
அவள் அபிக்கு எதோ நடந்து கொண்டிருக்கின்றது…
அவளால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை…
தொண்டை அடைத்துக் கொண்டது…
கதவு தட்டும் சத்தத்தை கேட்டு அன்னபூரணி அம்மாளும்… அருகில் இருந்த அறையில் அவனைப் பார்த்துக் கொள்வதற்காக இருந்த தாதியும் வேகமாக அவள் அறையை நோக்கி வந்தனர்…
பித்துப் பிடித்தவள் போல் நின்று அறையை நோக்கி கை நீட்டி காட்டியவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவனை பார்க்க முடியாமல் முகத்தை மூடிக்கொண்டாள்…
அவள் உடலோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது…
அபின்ஞானது உடலோ கட்டிலில் அடங்காமல் வெட்டி வெட்டி இழுக்க, தாதியோ வேகமாக அவனை சோதித்தபடியே வைத்தியரை அழைத்து வர சொன்னார்….
அன்னபூரணி அம்மாளுக்கோ தன் மகனை பார்ப்பதா மருமகளை பார்ப்பதா என்கின்ற கையறு நிலையில் தவிப்பாக நின்றிருந்தார்…
தேடல் 29
சிதைந்து பாழடைந்து போயிருந்த கப்பலின் உள்ளே சென்ற மகாதேவுக்கு ஓரளவுக்கு மேல் எந்த பாதையில் செல்வது என்று குழப்பமாக இருந்தது…
ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை…
மெதுவாக சுற்றியும் கூர்மையாக அவதானித்த படியே உள்ளே செல்ல, ஓரிடத்திலிருந்து டார்ச் வெளிச்சம் தென்பட வேகமாக அங்கே நீந்திச் சென்றான்…
அபின்ஞான் தான் அங்கே இருந்தான்…
பெருமூச்சுடன் அவனை நெருங்கினான் மகாதேவ்…
மகாதேவை கண்டதும் கண்ணை மூடித் திறந்து ஆசுவாசமாக மூச்சு விட்ட அபின்ஞான் தன் காலை எடுத்து விடும் படி சைகையால் கூறினான்…
சட்டென கீழே குனிந்து பார்த்தான். அபியின் காலோ கப்பலின் ஒரு மூலையில் இறுகிப் போயிருந்தது…
மகாதேவும் அவன் காலை எடுத்து விட்டு அவன் காலை ஊன்றிப் பார்த்தான்…
நல்ல வேலை… அவன் காலுக்கு எந்த அடியும் பட்டிருக்க வில்லை.
மகாதேவின் தோளின் தட்டியவன் அவன் அருகிலிருந்த ஒரு இரும்புப் பெட்டியை காட்டினான்.
“கிடைச்சிடுச்சா” என்பது போல் அதிர்ந்து பார்த்தான் மகாதேவ்…
ஆம் ஒருவாரு அபின்ஞான் அந்த பெட்டியை கண்டுபிடித்து விட்டான்…
இரும்பு பெட்டி என்பதால் அது அப்படியே பாதுகாப்பாக இருந்தது…
இருவருமே நினைக்கவில்லை எக்ஸ் த்ரீ பொக்ஸை இவ்வளவு இலகுவாக கண்டு பிடித்து விடலாம் என்று…
கண்டுபிடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருவரும் தங்களை மீறி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்…
விலகி இருவரும் ஒருவன் முகத்தை மற்றவன் பார்த்து சிரித்துக் கொண்டனர்…
இவ்வளவு நாளும் இருவருக்கு இடையே இருந்த இடைவெளி இப்போது தீர்ந்து போய் விட்டது…
எக்ஸ் த்ரீ பாக்ஸை எடுத்துக் கொண்டு இருவரும் கப்பலுக்கு வெளியே வர ஆயத்தமாக, அந்த நேரம் ஏதோ வித்தியாசமான ஒரு சத்தம்….
இதுவரது விழிகளும் அதிர்ந்து விரிந்தன…
அது கரனை தாக்கிய அந்த விசித்திரமான உயிரினத்தின் சத்தமே…
சப்மெரினுல் இருந்த மகிமா, “ஃபாஸ்ட்டா அபி, தேவ்ட டோச் லைட்ஸ ஆஃப் பண்ணனும்” என்றபடி அதை அணைப்பதற்காக கையை நீட்ட…
அவள் கையை எட்டிப் பிடித்த ராகவ், “உனக்கு என்ன பைத்தியமா மகி, எதுக்கு அவங்கட லைட்ஸ ஆப் பண்ணனும்” என்று கேட்க,
“இனி அவங்க வந்துடுவாங்க…” என்றவள் ராகவின் பேச்சைக் கேட்காமல் அவர்கள் இருவரது டார்ச் லைட்டை இங்கிருந்த சிஸ்டத்தை பயன்படுத்தி அனைத்து விட்டவள் நிம்மதியாக மூச்சு விட,
“என்ன முட்டாள் தனமான வேல பார்த்துட்டு இருக்க மகி” என்று ராகவ் கோபமாக கேட்டான்.
“ஐயோ அண்ணா… நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க… சப்மெரின்ட எல்லா லைட்ஸ முதல்ல ஆஃப் பண்ணனும்” என்றபடி அதையும் அவள் அணைக்க பார்க்க…
“மகி என்ன வேல பண்ற நீ… லூசா நீ… இப்பிடி லைட்ஸ ஆப் பண்ணா அவனுங்க எப்படி வருவானுங்க… சின்ன குழந்த மாதிரி நடக்காதே” என்றவன் அவள் அணைத்த இருவரது டோச் லைட்டை ஆன் பண்ண பார்க்கும் போதே அவர்களது நீர்மூழ்கி கப்பலோ திடீரென உருண்டு சென்று ஓரிடத்தில் விழுந்தது…
“ராகவ்… முதல்ல சப்மெரின்ட லைட்ஸ ஆஃப் பண்ணுடா” என்று சஞ்சனா கத்த,
அவனும் பயந்து போய் அனைத்து லைட்ஸையும் ஆஃப் பண்ணி விட்டான்….
அனைவருமே இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் போட்டிருந்ததால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை…
சப்மெரினும் உறுதியாக செய்யப்பட்டிருந்ததால் இப்போது எந்த பிரச்சினையும் இல்லை.
சப்மெரினுக்கு வெளியே பயங்கரமான சத்தங்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன…
அங்கிருந்தவர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தனர்…
“லைட் வெளிச்சத்துக்காக தான் அது நம்மள நோக்கி வந்திருக்கு…” என்ற மகிமா, “இப்ப அண்ணாவும் அபியும் எப்படி வருவாங்க” எனக் கேட்டாள் பதற்றமாக…
அந்த சூழலில் இவ்வளவு நேரமும் இருந்த அமைதிக்கு மாறாக பயங்கரமான ஒலிகள் மட்டுமே…
முப்பது நிமிடங்களாக அப்படியே இருந்தனர்…
வெளியே இருந்த அந்த பயங்கரமான சத்தம் படிப் படியாக குறைந்து போனது…
அது போய்விட்டது போலும்…
அபின்ஞான் தன் டோச் லைட்டை ஆன் பண்ணி விட்டு மகாதேவ் பார்த்து, அவனது டோச்சை ஆன் பண்ண வேண்டாம் என்று சைகையால் கூற…
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையசைத்த படி சப்மெரினை நோக்கி வேகமாக நீந்தத் தொடங்கினர்…
இருவரும் நீந்தி கொண்டிருக்கும் போதே மீண்டும் அந்த சுறா போன்ற உயிரினம் எங்கிருந்து தான் இவர்களை நோக்கி வர தொடங்கியதோ தெரியவில்லை…
அபின்ஞானும் மகாதேவும் இரு திசைகளில் பிரிந்து சப்மெரினை நோக்கி நீந்த தொடங்கினர்…
அபின்ஞானின் டார்ச் ஒளிர்ந்து கொண்டிருந்ததால் அது இப்போது அவனையே விரட்டி வந்து கொண்டிருந்தது…
அபின்ஞானும் தன்னால் முடிந்த மட்டும் வேகமாக நீந்தத் தொடங்க… அந்த சுறாவின் பின்னாலே வந்த மகாதேவ் மயக்க மருந்து ஏற்றப் பட்டிருந்த துப்பாக்கியால் அந்த உயிரினத்தில் பல இடங்களில் சுட… ஒன்று இரண்டு ஊசிகள் தவறினாலும் பல ஊசிகள் அந்த உயிரினத்தின் மேல் சென்று பொருந்திக் கொண்டது…
அபின்ஞானோ தன் வேகத்தை குறைத்து அதை திரும்பிப் பார்க்க… அதோ இருந்ததை விட அசுர வேகத்தில் அவனை நோக்கி வர… ஒரு கணம் அதிர்ந்து நின்றவன் தன்னை மீறிய வேகத்தில் நீந்தத் தொடங்கினான்.
தன்னை அது மிக மிக நெருங்கி விட்ட சமயம் அவன் அருகே ஒரு பாறை ஒன்று இருக்க எதையும் யோசிக்காமல் அதனுள் புகுந்து கொண்டான்…
அதனால் அதற்குள் தன் வாயை நுழைக்க முடியவில்லை…
அதன் உறுமல் சத்தம் தான் கேட்டுக் கொண்டிருந்தது…
விசித்திரமான சத்தம் அது…
அபின்ஞான் தன் டோச்சை அணைத்துவிட்டு மூச்சு வாங்க அந்த பாறையினுல் இறுகிப்போய் நின்றிருந்தான்.
மயிர் இலையில் தப்பிவிட்டான்…
அவனுக்கோ புதுமையாக இருந்தது அத்தனை மயக்க மருந்து ஊசிகள் அதன் உடலில் செலுத்தப்பட்டன…
ஆனாலும் எந்த ஒரு பலனும் இல்லையே…
இனி என்ன செய்வது… எப்படி சப்மெரின் செல்வது என்று அவனுக்கு யோசனை தான்…
அந்த சுறா அவனை விரட்டிக் கொண்டு வரும்போது எக்ஸ் த்ரீ பொக்ஸையும் தவற விட்டிருந்தான்…
இனி அதை திரும்ப தேடி எடுக்க வேண்டுமே…
மகாதேவ் இந்நேரம் சப்மெரினுள் நுழைந்து இருப்பான் என்று நினைத்துக் கொண்டவன் அப் பாறையினுள்ளே இருந்தான்.
மகாதேவ் சப்மெரினுள் நுழையவும் அவனைப் பார்த்த மகிமா, “அபி வரலயா அண்ணா” என்று கேட்டாள்.
“இப்ப நமக்கு பேச டைம் இல்ல மகி… ராகவ் பாஸ்ட்டா நாம மேல போகலாம்” என்று கூற கூற,
ராகவும் அவன் பேச்சை கேட்டு சப்மெரினை இயக்கத் தொடங்கினான்.
“அண்ணா என்ன வேல பண்ற… அபி இன்னும் வரலடா” என்றாள் மகிமா.
மகாதேவோ எந்தப் பதிலும் இன்றி அமைதியாக இருந்தான்…
“ஏதாவது பேசு அண்ணா… அமைதியா இருந்தா… நான் என்னத்த புரிஞ்சுக்கிறது” என்று தன் பதற்றத்தை கட்டுப் படுத்திய படி கேட்டாள்…
தான் கொண்டு சென்ற இரு துப்பாக்கிகளையும் போட்டவன், “மயக்க மருந்து ஊசி பத்து அதுக்கு அடிச்சிருக்கேன்… பட் நோ யூஸ்… இந்த கன் ல இருந்த எல்ல புலட்டும் அது உடம்புள்ளுக்கு இருக்கு… என்னால அத எதுவுமே பண்ண முடியல… நம்ம யோசிக்காம இங்க கால வெச்சிட்டோம்னு தோணுது” என்று தலையில் கையை வைத்த படி மகாதேவ் அமர…
“இப்ப என்ன பண்றது அண்ணா… அபி வெளிய இருக்கானே” என்று கண்களில் கண்ணீர் ததும்ப கேட்டாள் மகிமா…
“ராகவ் பாஸ்டா மேல போவோம்” என்றான் மகாதேவ்…
சப்மெரினும் மேலே செல்ல தொடங்கியது…
மகிமா எதுவும் யோசிக்க முடியாமல் பதற்றமாக இருந்தாள்…
“இப்ப லைட்ஸ ஆன் பண்ணு மகி” என்றான் மகாதேவ்…
மகிமா நாளைந்து மூச்சுக்களை எடுத்து தன்னை அமைதிப்படுத்திக் கொண்டவள், லைட்டை ஆன் பண்ணினாள்…
அபின்ஞான் பலமுறை அவளிடம் சொல்லி இருக்கிறானே எந்த ஒரு கட்டத்திலும் பதற்றமடையும் போது தானாகவே தோல்வி எனும் சிலந்தி வலையில் சிக்கிக் கொள்வோம் என்று…
இப்போது அந்த சுறா போன்ற உயிரினம் இவர்களது நீர்மூழ்கி கப்பலை நோக்கி மறுபடியும் வந்து கொண்டிருந்தது…
அது அவர்களது கப்பலை நெருங்கியதும் மகாதேவ் சப்மெரினின் அனைத்து மின்விளக்குகளையும் அணைத்து விட்டான்….
நீரின் ஆழத்தில் ஏதோ ஒரு வெளிச்சம்…
இப்பொழுது அந்த வெளிச்சத்தை நோக்கி செல்ல தொடங்கியது அந்த உயிரினம்…
சப்மெரின் இன்னும் கொஞ்ச தூரம் மேலே சென்றதும் மகாதேவ் அனைத்து மின் குமிழ்களையும் திரும்பவும் ஒளிர விட்டான் …
அதேநேரம் அபின்ஞான் தன்னுடைய டோச்சை அணைத்து விட்டு அந்த சுறா சென்ற திசைக்கு எதிர் திசையில் நீந்தத் தொடங்கினான்.
இதற்கு மேல் அவனால் நீந்த முடியவில்லை…
கலைத்து விட்டான்…
நீரின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் அதற்கு ஈடு கொடுத்து கடலின் ஆழ் பகுதியில் வேகமாக நீந்துவது அவனுக்கு கடினமாகவே இருந்தது…
அவ் உயிரினம் நீர் மூழ்கி கப்பலை நெருங்கியதும், நீர் மூழ்கிக் கப்பலின் அணைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு விட இருளில் அந்த உயிரினத்தால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை…
வெளிச்சம் வருவதை அது தான் தன் இறை என்று எண்ணிக் கொண்டிருக்கிறது அந்த உயிரினம்…
இருளில் கண் தெரியாத அந்த உயிரினம் வெளிச்சத்துடன் மினுங்குவதை வேட்டையாடுகின்றது…
ஆனால் அதற்கு மனித வாசனை அடித்து விட்டது போலும்…
அபின்ஞான் சென்ற திசையை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தது…
அது தன்னை நோக்கி வருவதை கண்டு கொண்ட அபின்ஞான் தனக்கு சற்று தள்ளி இருந்த பாறையை நோக்கிச் செல்ல பார்க்க… அந்த சுறா வந்து அவனை கவ்விய வேகத்தில் அவன் தலையில் அணிந்திருந்த ஆக்சிஜன் மாஸ்கோ அதன் பல்லுடன் இழுபட்டு செல்ல…
அப்பாறையை நெருங்கி நகர்ந்தவனது தலையோ அந்தப் பாறையில் பலமாக மோதிக் கொண்டது….
ஆனால் தன்னையும் மீறியும் உயிரை காத்துக் கொள்ள உத்வேகம் வர அசுர வேகத்தில் நீந்திக் கொண்டிருந்தான்…
அது தன்னை நெருங்குவது நன்றாகவே அவனுக்கு புரிந்தது…
மூச்சு எடுக்க அவனுக்கு கஷ்டமாக இருந்தது…
அதனிடம் சிக்கி இறந்து விடுவோம் என்கிற மனநிலை அவனுக்கு வந்து விட்டது…
கண்களிலோ மகிமா சிரித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு மாய தோற்றம்…
அவளை கண்டவனது இதழ்களும் தானாகவே புன்னகைத்துக் கொண்டன…
யாரோ தன்னை நெருங்குவது போலிருக்க கையில் பிடித்திருந்த மாணிக்கத்தை அவனை பிடிக்க வந்த ராகவின் கையில் கொடுத்தவன் பின்னோக்கி செல்ல தொடங்கினான்…
அவனது கண்களுக்கோ எல்லாமே மங்கலாக தெரிந்தன…
அவன் பின்னாலிருந்து அவனை மகாதேவ் தாங்கிப் பிடித்துக் கொண்டான்…
இருவரும் அவனை இழுத்தபடி வேகமாக நீருக்கு வெளியே நீந்தத் தொடங்கினார்…
சுறா இவர்களை நெருங்கிய சமயம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்த வெளிச்சத்தால் அதை நோக்கி வேகமாக சென்று சப்மெரினை கவ்விய வேகத்தில் அந்த நிர்மூழ்கிக் கப்பலோ அங்கேயே வெடித்து சிதறிப் போனது…
***
பதினைந்து நிமிடங்களுக்குப் பின்…
கப்பலில் அவசர சிகிச்சை பிரிவில்…
“பேஷண்ட்க்கு கார்டியாக் எரெஸ்ட் வந்துடுச்சு… பாஸ்ட்டா சிபிஆர் பண்ணுங்க” என்றார் அங்கிருந்த தலைமை வைத்தியர்…
நூறு நூற்றுக்கும் மேற்பட்ட முறை அவன் மார்பில் அழுத்தத்தை வழங்கிய அந்த வைத்தியர் வியர்வை வழிய, “இல்லை” என்பது போல் தலையாட்ட…
அங்கிருந்த இன்னொரு வைத்தியர், தன் கையில் இருந்த எஇடி (AED) கருவியையை பயன்படுத்தி அவன் மார்புக்கு மின்சார அதிர்ச்சி வழங்கினார்…
ஆனாலும் அவன் இதயத்தின் தாளம் தான் திரும்பவே இல்லை…
அவன் மூச்சை மீளப் பெற, கடவுளுடனே முப்பது நிமிடங்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர் இந்த வைத்தியர்கள்…
அவனது இதயம் துடிப்பை நிறுத்தி முப்பது நிமிடங்கள் தாண்டியிருக்க இதற்கு மேல் அவனுக்கு உயிர்த் திரும்பாது என்று வைத்தியர்கள் அவன் மார்பில் அழுத்துவதை நிறுத்தும் போது அவர்களுக்கே மூச்சு வாங்கியது…
அவர் எடுத்த விடா முயற்சியால்… வியர்வையில் குளித்திருந்தனர் அந்த வைத்தியர்கள்.
அத்தனை முயற்சி செய்து விட்டனர்…
முப்பது நிமிடங்களாக விடாமல் முயற்சி சி பி ஆர் செய்வது ஒன்றும் சாதாரண விடயம் அல்லவே…
இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த அந்த இசிஜி மெசினோ வைத்தியர்கள் அவனை கை விட்ட உடனே டிக் டிக் என்ற சத்தத்துடன் ஒலிக்க தொடங்கியது…
அவனை கைவிட்ட வைத்தியர்கள் சட்டென்று அவனைப் பார்க்க அவனது இதயமோ மீண்டும் தன் துடிப்பை ஆரம்பித்து விட்டது…
பெருமூச்சு விட்டவர்கள் அடுத்த கட்ட சிகிச்சைகளை வேகமாக செய்யத் தொடங்கி விட்டனர்…
அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே மீதி ஐவரும் நின்றிருந்தனர்…
அனைவருமே தப்பிவிட்டிருந்தனர்… அவர்களது சப்மெரினை தவிர…
ஆனால் அவர்களைக் காப்பாற்றிய அபின்ஞானோ உயிருக்காக போராடிக் கொண்டிருகின்றான்…
அங்கே தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த மகாதேவுக்கோ அவனைக் காப்பாற்றியது தான் நினைவு வந்தது…
சப்மெரின் வேகமாக மேல் நோக்கி சென்று கொண்டிருக்க உள்ளே இருந்தவர்களை பார்த்த மகாதேவ், “எல்லாரும் நீந்த ரெடியா இருங்க… இனியும் அபியால நீந்த முடியும்னு சொல்ல முடியாது… ரொம்ப நேரமா அவனே தனியா எல்லாத்தையும் ஹெண்டில் பண்ணிட்டு இருக்கான்… லைட்ட வச்சு அது நம்ம பின்தொடர்ந்துட்டே இருக்கு… அத டெக்னிக்கை யூஸ் பண்ணித்தான் அதை நாம அடிக்கணும்… நானும் ராகவும் அபி கிட்ட போறோம்… மேல இந்நேரம் கரன் நமக்காக போர்ட்ட அனுப்பி இருப்பான்… நீங்க இந்த சப்மெரின்ல லைட் ஆன் பண்ணிட்டு இதிலிருந்து வெளிய போயிடுங்க… மேல போய்ட்டா சேப் தான்…” என்றவன் ராகவுடன் அபின்ஞானை நோக்கி சென்றான்…
அவர்கள் அபின்ஞான் நோக்கி செல்லும் போதே அது அவனை தாக்கி விட்டிருந்தது…
நல்ல வேலை அவன் ஆக்சிஜன் மாஸ் மட்டும்தான் மட்டும் கழண்டு போக அந்த சுறாவால் அபின்ஞானுக்கு எந்த ஆபத்து ஏற்படாவிட்டாலும் இவர்கள் எதிர்பார்க்காமலே அவன் தலை பாறையில் சென்று மோதி விட்டது.
இவர்கள் அபின்ஞானை மேலே இழுத்து வரும் போதே அதிகமான நீரை அருந்தி விட்டான்…
உடனடியாக அவன் வயிற்றில் இருந்த நீரை அகற்றி அவசர முதலுதவியை வழங்கி பத்து நிமிடத்திலே அவனை வைத்தியர்களின் கையில் ஒப்படைத்து விட்டனர்…
உள்ளே வைத்தியர்களோ பதற்றமாக இருப்பதை கண்டு வெளியுள்ளவர்களும் பதற்றமாக தொடங்கினார்…
மேலும் இரண்டு மணித்தியாலங்கள் கடந்து வெளியே வந்தனர் வைத்தியர்கள்…
எல்லாரும் எழுந்து நிற்க மகாதேவ் அருகே வந்த வைத்தியர், “பேஷன்ட தலையில பலமா அடிபட்டு இருக்கு… நாம எங்களால முடிஞ்ச ட்ரீட்மென்ட குடுத்து அவரோட உயிரை மட்டும்தான் நம்மளால காப்பாத்த முடிஞ்சது… நீண்ட நேரமா மூச்ச டம் பண்ணி இருந்ததால கார்டியாக் எரெஸ்டும் வந்துடுச்சு… ஆனா எப்படியோ காப்பாத்திட்டோம்… தலைல பலமா அடிபட்டதால அவர் பிரைன் டெத் ஸ்டேஜ்ல இருக்கார்… அதனால மூச்சு விட மட்டும் தான் அவரால் முடியும்… அவர் பொடில உள்ள பாட்ஸும் வேல செய்தில்ல… அவர்ட் நிலைமய சரியா சொல்லனும்னா அவர் இப்போ உயிருள்ள பிணத்துக்கு சமம்.
இனி அவர் உயிர் பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்…. டுவண்டி போர் ஹவர்ஸ் தான் அவர் உயிரோடு இருப்பார்… அதுக்கு மேல இருப்பாரோ இல்லைன்னு சொல்ல முடியாது… இனி கடவுள் கையிலதான் எல்லாமே இருக்கு… வேண்டிக்கோங்க” என்று அவர்களது தலையில் இடியை இறக்கிவிட்டு சென்றனர்..
அவன் மிக மிக ஆபத்தான, பாரதூரமான ஒரு மருத்துவ நிலையில் இருக்கிறான் என்பது தெரிந்ததும் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பக்கம் இடிந்து போய் நின்றனர்…
இனி அவர்களாலும் என்ன செய்து விட முடியும்… கடவுளிடம் பிராத்திப்பதை தவிர வேறு வழி இல்லை…
மகிமாவுக்கோ பேச வார்த்தைகளே வரவில்லை…
கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே கொட்டிக் கொண்டிருந்தது…
அப்படியே மடங்கி நிலத்திலே அமர்ந்து விட்டாள்…
அவளவன் அவனை விட்டு சென்று விடுவானா…
ஒரே இரண்டு மாதங்கள் அவனுடன் கூடவே வாழ்ந்திருக்கிறாள்… அவள் மனதிலோ நீங்காத இடத்தை பிடித்து விட்டான்…
அவள் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சந்தோசங்களை வழங்கியவன்… அதை அவனுடனே பறித்து சென்று விடுவானோ…
அணையப் போகின்ற விளக்கின் ஒளியாக இருந்திருப்பானா அவன்…
மகிமாவால் அதை நினைத்து பார்க்கவே முடியவில்லை…
“ப்ளீஸ் அபி… திரும்ப என் கிட்டயே வந்துடுங்க” என்று அவள் மனம் அதையே திரும்ப திரும்ப உருப் போட்டு கொண்டிருந்தது…
நெஞ்சை கசக்கி பிழிவது போன்று தாங்க முடியாத ஒரு வலி…
மூச்சு எடுக்கவே சிரமமாக இருந்தது…
அழுவதற்கோ கத்துவதற்கோ அவள் வாயில் இருந்து சத்தம் வரவில்லை…
அதற்கு மாறாக கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தாராளமாக கொட்டிக் கொண்டிருந்தது…
தேடல் 28
அபின்ஞான் ஸ்விம்மிங் பூலுக்கு வெளியே ஷார்ட்ஸுடன் கடலை வெறித்தபடி நின்று இருந்தான்…
அவனுக்கு மகிமாவை அந்த கோலத்தில் பார்த்ததிலிருந்து தாறுமாறாக உணர்வுகள் கிளர்ந்து எழ ஆரம்பித்து விட்டன…
அந்நேரம் இரு கரங்கள் அவனை பின்னாலிருந்து அணைத்து தன் உடல் முழுவதும் அவனுடன் உரச ஒட்டி நின்றிருந்தாள் மகிமா…
கண்ணை மூடி திறந்தவன் அவள் கைகளை விலக்கிய படி, “மகி இங்க என்ன பண்ற போய் தூங்கு” என்றான்…
அவன் முன்னால் வந்து நின்றவள் காலை நிலத்தில் ஊன்றி அவன் உயரத்துக்கு எழும்பியவள் அவன் டைமண்ட் டேட்டுவில் முத்தமிட்டு விட்டு அவனை நிமிர்ந்து பார்க்க… அடுத்த கணம் அவள் இடையை ஒற்றைக் கையால் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன் மற்றைய கையால் அவள் கன்னத்தைப் பற்றி உயர்த்தியவன் அவள் இதழ்களில் ஆழமாக முத்தமிட ஆரம்பித்து விட்டான்…
அவளும் தன் உணர்வுகளை அடக்க முடியாமல் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்…
அவனுக்கு அவளது இந்த நெருக்கம் புதிது…
ஆனால் அவனுக்கு புடித்தும் இருந்தது…
அடுத்து இருவரும் கட்டிலில் தஞ்சம் அடைந்து விட்டனர்…
அடுத்த நாள் மகிமா எழும் போது அவன் அறைக்குள் இல்லை…
வேலை அதிகமாக இருப்பதால் காலையிலே எழுந்து சென்றிருப்பான் என்று புரிந்தது…
ஹீட்டரை போட்டு அவளை நன்றாக போர்த்தி விட்டு சென்றிருந்தான்…
தனக்குள் சிரித்தபடியே எழுந்தவள் கட்டிலில் அருகில் இருந்த கபோர்டை பார்த்தாள்…
சுடச்சுட காபி மூடி வைக்கப்பட்டிருந்தது…
மகிமாவுக்கோ மனதில் பறக்கும் உணர்வு…
காலையிலே அவள் மனதை குளிர்வித்துவிட்டு சென்று விட்டான் அல்லவா…
“ஐ லவ் யூ அபி… என்ன லவ் பண்ண வெச்சுட்டே இருக்க” என்றவள் அந்த காபியை தூக்க, காபி கப்பின் அடியில் ஒரு பேப்பர் இருந்தது…
இதழ்களில் மலர்ந்த புன்னகையுடன் அதை எடுத்துப் பார்த்தாள், “பிரஷ் பண்ணாம காபியா வாயில மட்டும் வச்சுடாதே… மீட்டிங் இருக்கு ஃபாஸ்ட்டா ரெடியாகி மீட்டிங் ரூமுக்கு வா” என்று எழுதி இருந்தவன், சிறிய இடைவெளி விட்டு, “சொல்ல மறந்துட்டேன் நேத்து நைட் நான் நல்லா என்ஜாய் பண்ணேன்… நீ நல்லா கம்பெனி கொடுத்த” என்றவன் என்று இரு கண்ணடிக்கும் இமோஜிகளுடன் முடித்து இருந்தான்…
இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டவளுக்கு பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வு… , “என்ன வெட்கப்பட வெச்சிட்டே இருக்க அபி” என சிவந்த முகத்துடன் சொன்னவள் வேகமாக தயாராகிக் கொண்டு மீட்டிங் அறைக்குள் சென்றாள்…
அவள் வரும் போது பேசிக் கொண்டிருந்தவன் ஒரு கணம் தன் பேச்சை நிறுத்தி அவளை ஊன்றி பார்த்துவிட்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தான்…
மகிமா தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்…
“நாம இங்க வந்து கம்ப்ளீட்லி ஒன் அண்ட் ஹாப் மந்த் முடிஞ்சிருச்சி… நாளைக்கு எங்க பயணத்த ஸ்டார்ட் பண்றோம்… எக்ஸ் த்ரீ பொக்ஸ் கிட்ட போறோம்… அத எடுக்கிறோம்” என்றான் அபின்ஞான்…
அங்கே இருந்தவர்களும் அதை எடுக்கும் உறுதியுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அனைத்து கருவிகள், கேமரா, சேஃப்டி ஜாக்கெட், எக்ஸ்ட்ரா ஆக்சிஜன் மார்க்ஸ் நாளைக்கு தேவையான எல்லாமே தயார்படுத்தி நீர் மூழ்கிக் கப்பலில் (சப்மெரின்) வைத்து விட்டனர்…
நாளைக்கு செல்வதற்கு தேவையான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் தூங்க சென்றனர்…
நாளை காலை ஏழு மணிக்கு புறப்பட வேண்டும்…
1500 மீட்டர் அடி ஆழத்துக்கு செல்ல வேண்டுமே…
அபின்ஞானுக்கு தூக்கம் வரவில்லை நாளை என்ன நடக்குமோ என்ற யோசனைதான்… மகிமாவை இறுக்கமாக அணைத்த படியே படுத்திருந்தான்.
அவளுக்குத்தான் அவன் அணைப்பில் மூச்சு முட்டியது, “அபி எதுக்கு என்ன டெடி பேர் மாதிரி போட்டு இறுக்கிட்டு இருக்கீங்க” என்றபடி அவனை தள்ளிவிட, அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் இறுக்கமாக அனைத்தவன், “சும்மாதான் உன்னை கைக்குள்ளே வச்சுட்டு இருக்கணும் போலவே இருக்கு” என்றான்.
அவன் தலையை கோதியவள், “நாளைக்கு மார்னிங் கிளம்பனும் இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க” என்றபடி விலகப் பார்க்க, அவனோ அவளிடம் இருந்து பிரியாமல் அவளை தன் கை வளைவுக்குள்ளே வைத்துக்கொண்டே தூங்கிப் போனான்..
கூடல் இல்லாத ஒரு நிம்மதியான பரவசமான ஆழ்ந்த உறக்கம்…
அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு அலாரம் அடிக்க, கண்விழித்த மகிமாவால் அசைய முடியவில்லை…
அபின்ஞானின் இறுக்கமான அணைப்பில் தான் இருந்தாள்…
மெதுவாக தலை தூக்கி அவன் மார்பில் நாடியை குற்றியவள், “அபி” என்று மென்மையாக அழைத்தாள்…
தூக்க கலக்கத்திலே அவளை தூக்கி கட்டிலில் போட்டவன் அவள் மேல் படர்ந்து அவள் இதழ்களை அழுத்தமாக முத்தமிட்டு விட்டே எழுந்து கொண்டான்…
இரவு முழுவதும் ஒரே மாதிரி படுத்து இருந்ததால் அவள் கை கால்களோ விரைத்து போய் இருக்க… காலை தேய்த்தபடியே எழும்பாமல் கட்டிலிலே அமர்ந்திருந்தாள்…
அவளைப் புருவம் சுருக்கி பார்த்தவன், “நீ எழும்பலயா…” என்று கேட்டான்…
“நேத்து நைட் ஒரே மாதிரி படுத்து இருந்ததால என் கை கால அசைக்க முடியல” என்றாள்…
அவள் அருகே வந்தவன் அவள் கால்களை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு, அவள் காலை அழுத்தி மசாஜ் பண்ண ஆரம்பித்தான்…
சிறிது நேரம் மசாஜ் பண்ணியவன், “இப்போ ஓகேயா” என்று தன் பழுப்பு நிற விழிகளை உயர்த்தி அவளை பார்த்து கேட்டான்…
அவனையே அவள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க,
“என்னடி இப்பிடி பார்க்கிற” என்று கேட்டான் சிரித்தபடி,
“அபி… நீங்க என்ன இம்ப்ரஸ் பண்ணிட்டே இருக்கீங்க… உங்களுக்கு எப்படியோ தெரியல…. ஆனா எனக்கு உங்கள ரொம்ப புடிச்சு போச்சு… கல்யாணத்துக்கு பிறகு நான் இவ்ளோ சந்தோஷமா அதுவும் உங்க கூட இருப்பேன்னு நினைக்கவே இல்ல… எல்லா இடமும் நீங்க மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சிட்டு இருக்கீங்க” என்றவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ அபி” என்றாள் உணர்ச்சி வசப்பட்டு…
அவள் தலையை அதே புன்னகையுடன் வருடி அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன், “சரி… நீ போய் குளிச்சிட்டு வா’ என்று கூற,
அவன் என்ன சொல்வான் என்று ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தவளுக்கோ சப்பென்றாகி விட்டது…
அவன் நெற்றி முத்தம் ஆயிரம் கதை பேசியதை அவள் உணரவில்லை…
அவனை முறைத்து பார்த்தவள், “உங்ககிட்ட போய் நான் உருகி உருகி லவ்வ சொன்னேன் இல்ல…என்ன சொல்லணும்” என்றவள் அவனை அழுத்தமாக பார்த்து, “பொண்டாட்டி கிட்ட லவ்வ சொல்லலாம் தப்பில்ல” என்று கூறி விட்டு செல்ல பார்க்க, அவள் கையை பிடித்தவன், “எனக்கு தோணுற நேரம் சொல்றேன்… எனக்கு உன்ன பிடிச்சிருக்கு… லவ்வா இல்லையான்னு தெரியல” என்றான்.
“சுத்தம்” என்றவள் அங்கிருந்து செல்ல பார்க்க அவளை நகர விடாமல் பிடித்தவன், “நாம சேர்ந்தே குளிக்கலாம்” என்றபடி அவளுடன் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்…
*******
எல்லோரும் சப்மெரினில் ஏறி விட்டனர்…
அதோ ஜெலி பிஷ் போன்ற அமைப்பில் வட்டமாக இருந்தது…
டிரான்ஸ்பேரன்டாக இருந்தது… ஆனால் வெளியே இருந்து பார்த்தால் உள்ளே ஒன்றும் தெரியாது…
ஆனால் உள்ளே இருந்து பார்த்தால் வெளிய அனைத்தும் விளங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது…
ராகவ் அதை ஓட்ட ஆயத்தமாக… கப்பலில் இருந்தே கரன் அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தான்…
“ஓகே… நான் ஸ்டார்ட் பண்றேன்” என்ற ராகவ் அதை உயிர்ப்பித்து இயக்க ஆரம்பித்தான்…
சப்மெரினும் கொஞ்சம் கொஞ்சமாக கடல் பரப்பின் ஆழமான பகுதியை நோக்கி செல்லத் தொடங்கியது…
100m
200m
500m
“1000m ஆழத்துக்கு நாம் வந்துட்டோம்” என்றான் ராகவ்….
உள்ளே இருந்தவர்களின் விழிகளோ சுற்றிலும் கூர்மையாக ஊன்றி அவதானித்துக் கொண்டிருந்தன…
இன்னும் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் பரப்பை அவர்கள் அடையவில்லை…
ஆழம் செல்ல செல்ல வெளிச்சம் படிப்படியாகக் குறைந்து தனி இருட்டாகவே இருந்தது…
அவர்களது நீர் மூழ்கி கப்பலில் இருந்த வெளிச்சம் தான் சுற்றிலும் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டு இருந்தது…
எந்த ஒரு உயிரினத்தின் நடமாட்டமும் அந்த பகுதியில் இருக்கவில்லை…
அதைப் பார்க்கும்போது மனதினுள் ஒரு பயம் ஊடுருவுவதை தவிர்க்க முடியவில்லை…
1500m அடி ஆழத்தை தாண்டியதும் தான் நிலப்பரப்பே இருந்தது…
மிக மிக வித்தியாசமான ஒரு சூழலாக இருந்தது அந்த இடம்…
அவர்கள் வந்திருந்த பகுதியிலோ எந்த ஒரு பொருளுமே தவரமோ பாறைகளோ இருக்கவில்லை…
வெறுமையாக இருந்தது அந்த பகுதி…
இனி அந்தக் கப்பலை தேடி செல்ல வேண்டுமே…
ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்…
இன்னும் அந்தக் கப்பல் இருந்த இடத்தை நெருங்கவில்லை…
ஒரு எதிர்பார்ப்புடன் அனைவரது விழிகளும் சுழன்று கொண்டிருந்தன…
ஓரிடத்தை பார்த்தது மகிமாவின் கண்களோ மகிழ்ச்சியின் மின்னின…
தூற ஒரு இடத்தை கைநீட்டிக் கட்டியவள், “அங்க பாருங்க காய்ஸ்… ஷிப் மாதிரியே ஏதோ ஒன்னு இருக்கு” என்றாள்…
எல்லோரும் அதை பார்க்க தொடங்கி விட்டனர்…
அது கப்பல் மாதிரி ஒரு அமைப்பில் தான் இருந்தது…
ஆனால் கப்பல் என்றும் உறுதியாக சொல்லி விட முடியாது…
அதன் பாதி நிலத்தினுள் அமிழ்ந்து போய் இருந்தது…
மீதி பகுதி கப்பல் மாதிரி ஒரு அமைப்பில் இருந்தது…
அது முழுக்க தாவரங்கள் வளர்ந்து… பாசி பிடித்து கடலில் இருக்கும் ஏதோ ஒரு பாறை போல் இருந்தது…
தூர இருந்து பார்ப்பதால் உறுதியாக எதையும் தீர்மானிக்க முடியாது அருகில் சென்று பார்த்தாக வேண்டும்…
சப்மெரினை அந்த கப்பலை நோக்கி செலுத்த தொடங்கினர்…
அருகில் இருப்பது போல் தெரிந்தாலும் அதிக தூரம் செல்ல வேண்டி இருந்தது…
அதன் அருகே செல்ல செல்ல அது அதே கப்பல் என்று உறுதியானது…
அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க வில்லை…
அவர்களது பல வருட உழைப்பு கண்ணெட்டும் தூரத்தில்…
நூற்றுக் கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த கப்பல் அது…
அது இன்னும் உவர் நீரில் அழியாமல் இருப்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை அதே ஒரு அதிசயம் தான்…
அத்தனை உறுதியாக தயாரிக்கப்பட்டிருந்தது போலும்…
இந்த நவீன காலத்திலும் ஆங்கிலேயர்களின் தொழில்நுட்பத்தை பாராட்டியே ஆக வேண்டும்…
இனி எக்ஸ் த்ரீ பொக்ஸை எடுக்க சப்மெரினில் இருந்து வெளியே செல்ல வேண்டும்…
அது பாதுகாப்பு கவசத்தில் இருந்து வெளியே வருவதற்கு சமன்…
“நான் போய் எக்ஸ் த்ரீ பொக்ஸ எடுக்கிறேன்” என்ற அபின்ஞான் நீரின் அழுத்தத்தை தாங்கக்கூடிய ஆடைகளை அணிய ஆரம்பித்தான்..
“நீ போகப் போறியா” என்று கேட்டான் மகாதேவ்…
“ஓஹ் டா… நானே போறேன்” என்றவன் லைட் கேமரா போன்றவற்றை தன் உடையில் பொருந்திக் கொண்டிருந்தான்…
அவன் ஆக்சிஜன் மாஸ்க்கை அணிய முன்பு அவன் கன்னத்தை பற்றிய மகிமா, “கவனமா போய் வாங்க” என்றவள் அவனை உற்று பார்த்து விட்டு, “ நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஐ டோன்ட் கெயார் அபி… நான் சொல்லிட்டே இருப்பேன்… ஐ லவ் யூ அபி” எனக் கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்…
அவர்கள் அருகே யாரும் இருக்கவில்லை… இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு சென்றிருந்தனர்… புன்னகைத்தபடி “ம்ம்ம் ஓகே…” என்றவன் குனிந்து அவள் இதழை கவ்விக் கொண்டான்….
உயிர் குடிக்கும் முத்தம் அது… அவன் அவளிடமிருந்து விலகும் போது அவளுக்கு மூச்சு வாங்கியது… எதையோ உணர்த்துவது போல் இருந்தது அந்த முத்தம்…
அவள் இதயம் வேகமாக துடித்தது….
வித்தியாசமான ஒரு உணர்வு அவளுள்….
என்னவென்று புரியவில்லை…
தன் உணர்வை வெளிக்கட்டாது அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள் ஆக்சிஜன் மாஸ்கை அவன் தலையில் அணிவித்தாள்…
இனி அவன் சப்மெரினிலிருந்து வெளியே செல்ல வேண்டும்.
மகாதேவும் அவனை அணைத்து விடுவித்தவன், “கவனமா போய் வா” என்று கூற ஒரு தலையசைப்புடன்… அவர்கள் இருந்த பகுதியிலிருந்து கடலுக்குள் செல்லும் சப்மெரினின் கதவை நோக்கி வந்தான்…
அது சிறிய நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தது…
முதல் கதவு திறக்கப்பட அதிலிருந்து வெளியே வந்தான்…
உள்ளே இருந்தவர்கள் அவன் செல்வதை கேமராவில் பார்த்துக் கொண்டிருந்தனர்…
அதிலிருந்து இரண்டாவது கதவு… அதைத் தாண்டினால் மூன்றாவது கதவு…
அடுத்த கதவை திறந்தால் கடலுக்குள் சென்று விடலாம்…
இத்தனை கதவுகள் அமைக்கப்பட்டிருப்பது கதவை திறக்கும் போது உள்ளே வரும் நீரை வெளியேற்றுவதற்காக தான்…
நான்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்று முழுமையாகப் பிரிக்கப்பட்டு இருந்தன…
ஒரு பகுதி கதவு மூடினால் அடுத்த பகுதிக்கு ஒரு சொட்டு நீர் கூட செல்லாது… அத்தனை நவீன வசதிகளுடன் செய்யப்பட்டிருந்தது…
கடலுக்குள் போகும் பகுதி கதவில் இருந்த ஒரு பட்டனை அபின்ஞான் அழுத்த… கதவு திறந்து கொள்ள அபின்ஞான் வெளியே வர கதவும் தானாக மூடிக் கொண்டது…
சப்மெரினில் இருந்து வெளியே வந்தவன் அந்தக் கப்பலை நோக்கி நீந்த தொடங்கினான்…
அந்தக் கப்பலை ஒருமுறை முழுதாக சுற்றிப் பார்த்தான்…வெளியே ஏதாவது இருக்கின்றதா என்று ஒன்றும் இருக்கவில்லை…
அந்த ஷிப் உறுதியான இருப்பினால் செய்யப்பட்டிருந்ததால் தான் அது மட்டும் இன்னும் மிச்சம் இருந்தது என்று அதைத் தொட்டுப் பார்த்தவனால் புரிந்து கொள்ள முடிந்தது…
இங்கு வரும் வரையும் நவீன டெக்னாலஜிகள் அவனுக்கு உதவினாலும் சில விடியங்கள் மனிதனால் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்தது…
நவீன தொழில்நுட்பம் என்ன அற்புதமாக உறுதியான சக்தியுடன் இருந்தாலும் அந்த சக்தியை விட கடவுளால் படைக்கப்பட்ட மனித சக்தி அந்த சக்திக்கு அப்பாற்பட்டது போலும்…
கப்பலில் உடைந்திருந்த ஒரு பகுதியை பார்த்து அதன் வழியாகவே கப்பலினுள் செல்லத் தொடங்கினான் அபின்ஞான்…
அவன் செல்வதை நீர் மூழ்கி கப்பலில் இருந்த திரையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் உள்ளே இருந்தவர்கள்….
அந்தக் கப்பலுக்குள் இடைவெளி குறைவாகவும், பார்க்கவும் சிரமமாகவும் இருந்தது…
கப்பலினுல் இருந்த நீர் கலங்களாகவும் மங்கலாகவும் இருந்தது…
“இங்கே எப்படி எக்ஸ் த்ரீம பாக்ஸை தேட்றது” என்று தான் அவனுக்கு யோசனையாக இருந்தது…
அவன் கப்பலுக்குள் சென்றவுடன் உள்ளே இருந்தவர்களுக்கு திரையில் அங்கே நடப்பது தெளிவாக விளங்கவில்லை…
அவன் சென்று இருபது நிமிடங்கள் கடந்து விட்டன…
இன்னும் அவன் வரவில்லை…
திரை முழுக்க கருப்பாக இருந்தது…
அனைவருக்கும் பதற்றம் கூடிக் கொண்டே இருந்தது…
“ஏன் இன்னம் அபி வரல்ல… உள்ள என்ன நடக்குதுன்னு நம்மளால பார்க்கவும் முடியல” என்று பயத்துடன் கூறினாள் மகிமா…
“ஒன்னும் இருக்காது பயப்படாதே மகி” என்ற மகாதேவுக்கும் இதற்கு மேல் இங்கே இருந்து, கைகட்டிய படி திரையை பார்த்துக் கொண்டிருக்க முடிய வில்லை…
மகாதேவும் வேகமாக தயாராகிக் கொண்டு அபின்ஞான் சென்ற வழியிலே கப்பலை நோக்கி செல்லத் தொடங்கினான்.
தேடல் 27
அந்த உடைந்த கப்பல் இருக்கும் இடத்தை சுற்றி கேமரா கண்காணிப்பு வேலைகள் நடைபெற்று முடியும்போதே மின்னல் வேகத்தில் ஒரு வாரம் கழிந்து விட்டது…
அவ் இடத்தை சூழ நடக்கும் விடயங்களை தங்களால் முடிந்த மட்டும் அவதானித்து தகவல்களை திரட்டி இருந்தனர்.
கரனிற்கு ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது ஓரளவு நன்றாகி விட்டது…. இப்பொழுது பிசியோதெரபி எடுத்துக் கொண்டிருந்தான்.
மூன்றாம் தளத்திலிருந்த வெட்ட வெளியில் கரனை அமர்த்தி வைத்து விட்டு மீதி ஐந்து பேரும் கடலைப் பார்த்தபடி இருந்தனர்…
ஆறு பேரின் மனநிலையும் இருந்ததுக்கு இப்போது நன்றாகவே மாற்றம் ஏற்பட்டு விட்டது…
அந்த சம்பவத்திலிருந்து வெளியே வந்து விட்டார்கள் என்றே சொல்லலாம்…
“அவர்களைப் பார்த்த மகிமா ஸ்விம்மிங் காம்பெடிஷன் ஒன்னு வெப்போமா” என்று கேட்க…
“இது நல்ல ஒரு ஐடியா… யுனிவர்சிட்டி காலத்துல இவங்க காம்பெடிஷன பார்த்தது” என்றாள் சஞ்சனா…
“நான் பார்க்கலயே அது தான்… கேட்கிறேன்” என்றாள் மகிமா…
“அப்ப வச்சிட்டா போச்சு” என்றான் அபின்ஞான்…
“அபி கிட்ட இருந்து… மகிமா பேச்சுக்கு எங்க மறு பேச்சு வரப்போகுது” என்று அமர்ந்த படியே கரன் சொல்ல…
“ஆரம்பத்துல எப்படி விறைச்சி போய் சுத்திட்டு இருந்த பையன்… இப்ப அவன் பொண்டாட்டி பேச்ச மீறாத புருஷனா மாரிட்டான்… உனக்கு தெரியாதா?” என்று ராகவ் கேட்க,
“டேய் என்னடா… ஓகேன்னு ஒரு வார்த்தை சொன்னது குத்தமாடா” என்று அபின்ஞான் கேட்க,
“இப்போ தானே உன் வாயிலிருந்து இப்படி முத்து கொட்டுது, இதுக்கு முன்னாடி நீ சொல்லாம இப்போ சொல்றது குத்தம் தானே” என்று கரன் சொல்ல…
“ஆமா குத்தம் தான்… என்ன மன்னிச்சிடு” என அவனை விழி இடுங்க பார்த்தவன், “நேரம் பார்த்து வெச்சி செய்றான்… ராஸ்கல்… எனக்கு டைம் கிடைச்சட்டும் அப்போ இருக்குடா உனக்கு” என முனு முனுத்தவன்,
“வாங்க ஸ்விம்மிங் ஃபூல்க்கு போகலாம்” என்றவன் எல்லோருக்கும் முன்னாடியே அங்கிருந்து செல்ல…
கரனும் ராகவும் சத்தமாக சிரித்துக் கொண்டனர்.
“அபின்ஞான் டி-ஷர்ட் மற்றும் ஷார்ட் சகிதம் வந்து நின்றான்…
மகிமா அவனையே பார்த்துக் கொண்டிருக்க… தன் டீ ஷர்டை கழட்டி விட்டு, நீந்த ஆயத்தமானான்…
போட்டியும் ஆரம்பித்தது…
மகிமா எங்கே போட்டியை கவனித்தாள்…
அவளின் விழிகளோ அபின்ஞானை விட்டு அசையவில்லை…
போட்டியில் வெற்றி பெற்றது என்னவோ அபின்ஞான் தான்…
ஆனால் அதையும் அவள் கவனிக்கவில்லை…
அவள் முதுகில் தட்டிய சஞ்சனா, “தேவ் தோத்துட்டான்” என்றாள் சோகமாக…
சட்டென்று அபின்ஞானின் விழிகளை பார்த்தாள்…
அவனோ மகிமாவை பார்த்து முத்தமிடுவது போல சைகை செய்ய… அவளோ இதழ்களுக்குள் புன்னகைத்தபடி முகத்தை திருப்ப, மகிமாவை ஒரு மார்க்கமாக பார்த்த சஞ்சனா, “அபி அத்தான் போட்டில ஜெயிச்சது கூட தெரியாம சைட் அடிச்சிட்டு இருந்த போல” என்று கேட்க…
அவள் உண்மையை கண்டுபிடித்து விட்டதில் மகிமாவின் முகமோ சிவந்துவிட்டது, “என் புருஷனை சைட் அடிக்கிறது தப்பா?” என்று சஞ்சனாவை பார்த்து கேட்டாள்.
“பைத்தியம் நல்லாவே முத்திருச்சு… உன்கிட்ட பேச முடியாது” என்றவள் மகாதேவை நோக்கிச் சென்றாள்…
தனக்குள் சிரித்தபடியே டவளைக் கொண்டு சென்று அபின்ஞான் கையில் கொடுத்தாள் மகிமா…
“என்ன மேடம் சைட் அடிச்சு முடிச்சிட்டீங்களா?” என்று அவன் கேட்க…
அவளோ, “உங்கள இறுக்கமா ஹக் பண்ணி டீப்பா லிப் லாக் ஒன்னு பண்ணணும் போல இருக்கு” என்று சொல்ல…
அதிர்ந்தபடி சுற்று முற்றும் பார்த்தான்… நல்ல வேளை யாரும் அருகில் இருக்காததால் யார் காதிலும் அவள் சொன்னது விழுந்து விடவில்லை…
நிம்மதியா மூச்சு விட்டு கொண்டான்… ஏற்கனவே அவன் அசைந்தாலே அவனை வைத்து கலாய்த்து கொண்டிருக்கின்றனரே… இது கேட்டிருந்தால் நாள் முழுவதும் அவனை வைத்து ஓட்டி இருப்பர்…
குரலை செருமிக் கொண்டவன் மீண்டுமொறு முறை சுற்றிலும் பார்த்து விட்டு அவள் முகம் நோக்கி குனிந்து, “அதுக்கு என்ன பண்ணிட்டா போச்சு” என்றான்…
“ஓஹ்…” என்று உதடு குவித்து சொன்னவள், “நம்ம ரூமுக்கு போய் கிஸ் பண்றேன்” என்றபடி அவள் அங்கிருந்து செல்ல… சிரித்தபடியே அவள் பின்னாலே சென்றான் அபின்ஞான்…
தொடர்ந்து வேலையிலே ஈடுபட்டிருந்ததால் அன்று இரவு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…
இனிவரும் அடுத்தடுத்த நாட்களில் வேலையில் ஈடுபட தொடங்கினால் வேறொன்றுக்கும் நேரம் இருக்காது என்பதாலும் எல்லாரும் மனநிலையை நிதானமாகவும் இயல்பாகவும் வைப்பதற்காகவே இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தான் அபின்ஞான்…
பார்ட்டி என்றால் கேட்கவும் வேண்டுமா…
மது போத்தல்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் ராகவ்…
அவன் அருகே வீல் செயாரில் அமர்ந்து இருந்த கரன் போத்தல்களை எண்ணிக் கொண்டிருந்தான்.
அவர்களை பார்த்த தேவ், “குடிக்க போறீங்களாடா” என்று கேட்க,
“இல்லடா கரன் கேட்டான்… அதுக்காக இன்னைக்கு மட்டும் கொஞ்சம் குடிக்க போறோம்” என்று சமாளிப்பாக ராகவ் சொல்ல…
தலையை உயர்த்தி அவனை பார்த்து துப்புவது போல் செய்கை செய்தான் கரன்.
அதை கண்டு கொள்ளாமல் ராகவ் தேவ் முன்னால் பணிவாக நிற்க,
“போதும் டா உன் நடிப்பு… மட்டையாகுற அளவுக்கு மட்டும் குடிச்சிடாதீங்க…” என்றவன் அருகில் நின்றிருந்த சஞ்சனாவின் கையை பற்றிய படி சென்றான் மகாதேவ்…
அபின்ஞானும் மகாதேவும் குடிக்க மாட்டார்கள்… ஏதாவது பார்ட்டி என்றால் மட்டும் தவிர்க்க முடியாது குடித்தால் தான் உண்டு…
அதையும் முடிந்தவரை தவிர்த்து விடுவார்கள்…
“இவனுங்க குடிக்கவும் மாட்டானுங்க எங்கள குடிக்க விடவும் மாட்டானுங்க… இப்ப லவ் பண்ணி, கலியாணம் முடித்து லைப் ல செட்டில் ஆகிட்டாங்க… கூட இருந்த நாம தான் சிங்களா சுத்திட்டு இருக்கோம்” என்ற கரன்…
“டேய்… அங்க பாரு டா… இது எப்போல இருந்து நடக்குது” என்று சஞ்சனாவுடன் கை கோர்த்து செல்லும் மகாதேவைப் பார்த்து அதிர்வுடன் கேட்க,
“ஆமா டா… இது எங்க போய் முடியுமோ தெரியல… ஆனா ஒன்னு மட்டும் இப்போ தான் புரியுது… எவ்ளோ அடி தடி ல இவன்னுங்க இருந்தாலும் எதிரி தங்கச்சி அத்தை பொண்ணு கூட சேர்ந்து இவனுங்க வாழ்ரானுங்க… ஆனா கூட இருந்த நாம ரெண்டு பேரும் தான் முட்டாளாகி தனிக் காடா சுத்திட்டு இருக்கோம்” என்றான் ராகவ் பெரு மூச்சுடன்…
“ம்ம்ம் அது சரி… கப்பல் ல சிங்கிள் பசங்க முன்னாடி ரோமேன்ஸ் பண்ணிட்டு எங்க வயித்தெரிச்சல கொட்டிகிறானுங்க… இதுக்கே நாம ரெண்டு பேரும் நம்ம நாட்டுக்கு போன உடனே கல்யாணம் பண்ணி லைப் ல செட்டில் ஆகி காட்டணும்” என்று கரன் உறுதியுடன் சொல்ல… ராகவும் தலையாட்டிக் கொண்டான்…
இவர்களை பார்க்க வந்த மகிமா அவர்களின் பேச்சை கேட்டு பைத்தியக் காரனுங்க… என தலையை உலுக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றாள்…
“அபி இவ்ளோ நேரமா என்ன பண்ற… சீக்கிரமா வா… பொண்ணு நானே குயிக்கா ரெடியாயிட்டேன்… நீங்க எதுக்கு இவ்ளோ நேரம் எடுத்துக்குறீங்க” என்று ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வெளியே இருந்து கத்திக் கொண்டிருந்தாள் மகிமா…
“பொண்ணுங்க நீங்க மட்டும் அழகா ரெடியாகிட்டு வருவீங்க… நாங்க சும்மா வரணுமா…” என்றவன் கதவை திறந்து கொண்டு நிதானமாகத் தான் வெளியே வந்தான்…
நீட்ட கை கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற டெனிம் அணிந்து கையில் அபள் வாட்ச் கட்டிருந்தான்…
மகிமாவும் கருப்பு நிற கையில்லாத நீளமான பிராக் அணிந்து இருந்தாள்…
உடை நிறத்திலே பென்சில் ஹீலும் அணிந்திருந்தாள்…
கழுத்தில் எப்போதும் அணிந்திருக்கும் எம் பெண்டெட் போட்ட ஒரு செயின் மாத்திரம்…
முடியை கொண்டை போட்டு இருந்தவள் முகத்தில் ஓரிரு முடிகளை விட்டிருந்தாள்…
அதே அவளுக்கு அழகாக இருந்தது…
அந்த செயினை மெதுவாக வருடியவன், “இந்த செயின் உனக்கு பெர்பெக்டா இருக்கு” என்று அதை வருடிய படி கூற,
“ஜுவல் ஷாப் ஓனர் மாதிரியே நகய மட்டும் பார்த்து சொல்லுங்க” என்று முகத்தை சுளித்தபடி முன்னோக்கி செல்ல பார்க்க…
“நீதான் ரொம்ப அழகுன்னு உனக்கே தெரியுமே… ” என்று அவன் கேட்க…
“ஒன்னு கேட்டா… இப்படி வக்கனையா மட்டும் பேச வேண்டியது” என்றவளின் கையுடன் தன் கையை கோர்த்துக் கொண்டவன் அவளுடன் இணைந்து பார்ட்டி நடக்கும் ஹோலுக்கு சென்றான்…
பார்ட்டி டிரஸ் கோட் கருப்பு நிறம் என்பதால் எல்லோருமே கருப்பு நிறத்திலே உடை அணிந்து வந்திருந்தனர்….
அங்கே அவர்களுக்கு உதவியாக வந்திருந்த அனைவரையுமே அழைத்து இருந்தான் அபின்ஞான்…
கரன் வீல்ச்சியாரில் வந்திருந்தான்…
ஆண்கள் ஓரத்துக்கு சென்று அரட்டை அடிக்க ஆரம்பித்து விட, அந்நேரம் சஞ்சனா கருப்பு நிற சாரியில் வந்து நின்றாள்…
அவளைப் பார்த்த தேவுக்கோ மூச்செடுக்க முடியவில்லை…
மெதுவாக சஞ்சனா அருகே சென்றவன், “சாரில செம்ம செக்ஸியா இருக்க” என்றான் அவளை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டு…
தன்னை குனிந்து பார்த்தவள், “எவ்ளோ ஒழுக்கமா சாரி உடுத்தியிருக்கேன் தேவ் இதுல என்ன இருக்கு” என்று கேட்டாள்…
“ஆனா என் கண்ணுக்கு அப்படித்தான் தெரியுது” என்று சொல்ல,
“ஐயோ… இங்க வச்சு இப்படியெல்லாம் பேச வேணாம்” என்றாள் சுற்றியும் பார்த்தபடி…
“யாரும் இல்லடி” என்றபடி அவளை இன்னும் நெருங்கி நின்றபடி கூற…
“ஹாய் சஞ்சு” என்றபடி அங்கே வந்தாள் மகிமா…
“ஹேய் மகி… வா நாம அந்தப் பக்கம் போலாம்” என்று மகிமாவை அங்கே இருந்து அழைத்து சென்றாள் சஞ்சனா…
எதுவும் செய்ய முடியாது மகாதேவ் மகிமாவை முறைத்துக் கொண்டிருந்தான், “இவ வேற எப்ப பார்த்தாலும் இடையில புகுந்து கொண்டு” என்று தலையை வருடியபடி ஆண்களுடன் சென்று சேர்ந்து கொண்டான்…
எல்லாரும் சாப்பிட்டு முடிய, “மகி எனக்கு தாகமா இருக்கு கூல்ட்ரிங்ஸ் வாங்கிட்டு வரியா” என்று சஞ்சனா கேட்க…
“எனக்கும்தான்… சாப்பாட்டுக்கு அதிகமா எண்ணெய் ஊற்றி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்… அது தான் தாகமா இருக்கு” என்றவள் சென்று வாங்கிக் கொண்டு வந்தது என்னவோ… ராகவ் ஆர்டர் பண்ணியிருந்து வோட்காவைத் தான்…
ஆரம்பத்தில் புரியாமல் அதை குடித்தவர்கள், அதன்பின் அதையே கேட்டு கேட்டு வாங்கி குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்…
இரு பெண்களுக்குமே சந்தோஷத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வு…
“சஞ்சு உனக்கு தெரியுமா? இன்னைக்கு அபி என்ன பிடிக்கலைன்னு சொல்லிட்டான்” என்றாள் மகிமா அவள் தோளில் சாய்ந்து அழுதபடி,
“உன்ன பிடிக்கலன்னு சொல்லிட்டானா அந்த ராஸ்கல்… எவ்ளோ தைரியம் இருக்கணும்… உன்னையே பிடிக்காதுன்னு சொல்றதுக்கு” சஞ்சனாவும் போதையில் எகிறிக் கொண்டு வந்தாள்…
“ம்ம்… அவனுக்கு இந்த ரிசேர்ச்சும்… அதுல தேடி கண்டுபிடிக்கிற ப்ரொபஷனல் விஷயமும் தான் புடிக்குமாம் பாரேன்…” என்றாள் அழுதபடி…
“அப்ப அவன் அவனுக்கு பிடிச்சதையே கல்யாணம் பண்ணியிருக்கணும் உன்ன எதுக்கு கல்யாணம் பண்ணனும்” என்று அவளை அணைத்து தோளில் தட்டிக் கொடுத்தாள் சஞ்சனா…
“ம்ம்… ” என்றபடி அவள் தோளில் சாய்ந்து கொண்டாள் மகிமா…
இரவு ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருக்க பார்ட்டி முடிந்து அனைவரும் சென்று விட்டிருந்தனர்…
அபின்ஞானும் மகாதேவும் கூட சென்றிருந்தனர்…
இருவரும் அறைக்குள் சென்று தம் துணையை தேடினால் இருவருமே இருக்கவில்லை…
மகாதேவ் வருவதை கண்ட அபின்ஞான், “மகிய பார்த்தியா” என்று கேட்டான்…
“இல்ல நான் அவள காணவே இல்ல… சஞ்சனாவ தான் தேடிட்டு இருக்கேன்” என்றான்…
“இன்னும் ரெண்டும் இங்க வரவே இல்லையா” என்று இருவரும் சொல்லிக்கொண்டே பார்ட்டி நடந்த ஹோலை நோக்கிச் சென்றனர்…
அங்கோ மகிமாவும் சஞ்சனாவும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தனர்…
சஞ்சனாவோ, “அழாதே மகி… நான் எல்லாத்தையுமே பார்த்துக்கிறேன்” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்…
இரு ஆண்களும் அவர்களை புரியாது பார்த்தனர்…
“நீ என்னத பார்த்துப்ப… நீ அபிக்கு கொடுத்த சாபம் கூட பலிக்கவே இல்ல தெரியுமா?” என்று சொன்னாள் மகிமா…
இரு ஆண்களும் சஞ்சனாவை பார்த்தனர்…
“இவ எனக்கு என்ன சாபம் கொடுத்திருப்பா” என்று அபின்ஞான் புருவம் சுருக்கி பார்க்க…
சஞ்சனாவுக்குகோ தான் கொடுத்த சாபம் மறந்து விட்டது போலும், “என்ன சாப்பாடு கொடுத்தேன் டி…” என்று கேட்க,
“அடிப்பாவி… சாபம் கொடுத்துட்டு இப்ப சாப்பாடு கொடுத்தன்னு கேட்கிறாயா” என்றபடி அங்கே அபின்ஞான் செல்ல பார்க்க மகாதேவ் அவனை தடுத்து நிறுத்தினான்…
“கொஞ்சம் பொறுடா… என்ன சொல்றான்னு பார்க்கலாம்” என்றான் சிரித்தபடி…
“ஏண்டி மறந்துட்டியா… நீ தேவ கல்யாணம் பண்றத தடுத்த… என் புருஷன் லைஃப் லாங் கன்னிப் பையனா இருக்கணும்னு சொன்னியே டி” என்று மகிமா சொல்ல…
“அடிப்பாவி என்ன சாபமெல்லாம் விட்டு இருக்கா…” என்று அவன் நினைக்க
தேவோ இரு கைகளையும் வாயில் வைத்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்…
அபின்ஞான் திரும்பி மகாதேவை முறைத்துப் பார்க்க, இரு கைகளாலும் வாயை மூடிக்கொண்டு சிரித்தவன், “முடியல மச்சி… கண்ட்ரோல் பண்ண முடியலடா” என்றபடி சிரித்தான்…
இருவரும் பெண்களை நெருங்கி விட்டனர்…
மகிமாவோ அத்துடன் நிறுத்தாமல், “உன் சாபம் பலிக்கல… என் புருஷன் கன்னி கழிஞ்சிட்டான்…” என்று சொல்லிக் கொண்டிருக்க, கண்களை அதிர்ந்து விரித்தவன் வேகமாக வந்து மகிமாவின் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டான்…
ஆனால் அது சஞ்சனாவுக்கும் கேட்டு விட்டது…
“என் புருஷனும் கன்னி கழிஞ்சிட்டான்” என்று கூற, அவள் வாயை பொத்திக் கொண்டான் தேவ்…
தங்களுக்கு இடையே நடந்ததை இப்படி வெளிப்படையாக பேசி விட்டாளே என்று மகாதேவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது…
அபின்ஞான், “இது எப்போதிலிருந்துடா… என்ன வேல பண்ணி வெச்சு இருக்க… இவ அம்மா தெரிஞ்சா உன் கத முடிஞ்சி” என்று அவனை முறைத்த படி சொல்லிக்கொண்டு இருக்கும் போது,
சஞ்சனா தன் வாயிலிருந்து தேவ் கை எடுத்து, “ஹேய் ஹை ஃபை போடுடி… நம்ம ரெண்டு பேர்ட புருஷனும்” என்ற படி கையை நீட்ட… இறுக்கமாக அவளது வாயை மூடிய தேவ் அவளை முறைத்துப் பார்த்தன்.
“டேய் முதல்ல இவள கூட்டிட்டு போடா” என்றபடியே மகிமாவை இழுத்துக் கொண்டு சென்றான் அபின்ஞான்…
“ஏண்டா அவ கிட்ட இருந்து என்ன பிரிச்சிட்டு போற” என்று அழுதபடியே அவனுடன் இழுபட்டு சென்றாள் மகிமா…
ஒரு கட்டத்தில் அவன் மேல் இருந்த கோபத்தில் கழுத்தை பிராண்டி வைக்க, “உனக்கு இப்படி இறக்கமா மென்மையா சொன்னா சரி வராது” என்றவன் அவளை தன் தோளில் தூக்கி போட்ட படியே அறைக்குள் சென்றவன்…அவளை கட்டிலில் அமர்த்தி, “என்ன பேச்சு பேசுற… உனக்கு விவஸ்தையே இல்லையா” என்று அவளை முறைத்தபடி கேட்க,
“இல்லையே… நான் பேசினது தப்பா என்ன” என்ற அப்பாவியாக கேட்க…
“மக்கு… மக்கு… என்னதாண்டி குடிச்சு தொலைச்ச” என்று எரிச்சலாக கேட்டான் அபின்ஞான்…
“கூல் ட்ரிங்க்ஸ்… எனக்கு அது இன்னும் வேணும்” என்றாள் அவன் இரு கன்னத்தையும் பிடித்து கிள்ளிய படி..
“ராட்சஷி கைய எடேன்டி வலிக்குது” என்றவன், அவள் வாயைத் திறந்து முகர்ந்து பார்க்க, “ஓட்கா எடுத்து குடிச்சியா” என்று கேட்டான்…
“இல்ல இல்ல… நான் என்ன உன்ன மாதிரி மொடக்குடிகாரனா…” என்றவள் தன் கையாலே தன் வாயை அடித்துக் கொண்டவள், “இல்ல…. மொடக்குடிகாரியா…. நான் என்ன உன்ன மாதிரி மொடக்குடிகாரியா” என்று குழறலாக திரும்பவும் கேட்டாள்…
“நீ பேசுற பேச்சிலே விளங்குது” என்றவன்… அவளை குளியல் அறைக்குள் இழுத்து செல்ல,
“என்னடா சொல்ற நீ… என்ன பார்த்து குடிகாரின்னு சொல்ல வரியா” என்று அதற்கும் சண்டை போடத்தயாராக, “எங்கடி மரியாதை…” என்று அதிர்ந்து கேட்டான்…
“நீ எனக்கு மரியாத தந்தியாடா? சொல்லு நீ எனக்கு மரியாதை தந்தியா?” என்று அவன் டீ சட்டை பிடித்து இழுத்தபடி கேட்டவள்… “நீ டி போட்டு பேச கிட்ட நான் டா போட்டு பேசினா தப்பா…” என்று நடக்க முடியாமல் அவன் மார்பில் சாய்ந்தபடியே கேட்க,
சலிப்பாக அவளைப் பார்த்தவன் ஒன்றும் பேசாமல் அவளை அழைத்துச் சென்று ஷவருக்கு அடியில் நிறுத்தியவன், தண்ணீரைத் திறந்து விட்டான்…
“எதுக்குடா பாத்ரூமுள்ளுக்கு மழை பெய்து” என்று அண்ணாந்து பார்த்தபடி கேட்க…
“நீ மழையில நனஞ்சிட்டே வா… நான் வெளியே இருக்கேன்” என்றவன்
அங்கிருக்க முடியாமல் வெளியே வந்தான்…
சிறிது நேரத்தில் அவளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக போதை தெளிய ஆரம்பித்தது…
முழுமையாக போதை இறங்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு நிதானத்துக்கு வந்து விட்டாள்…
நான் எதுக்கு குளிக்க வந்தேன் என்று யோசித்தவளுக்கு எதுவும் நினைவில்லை…
உடையை மாற்றி அங்கிருந்த டவளை கட்டியபடி வெளியே வந்தாள்…
தேடல் 26
அடுத்த நாள் காலையிலே எல்லோரும் கரனது அறையில் தான் அமர்ந்திருந்தனர்…
அவனது அறையிலே அனைத்து கேமரா திரைகளும் பொருந்தப் பட்டிருந்தன…
ராகவ், கரன் கடலுக்கு சென்ற அன்று கேமராவில் பதிவான காட்சிகளை திரையில் போட்டான்…
அந்த உயிரினம் எவ்ளோ பெரிதாக இருந்ததோ அதை விட அதன் வேகம் பல மடங்கு அதிகமாக இருந்தது…
அதன் வேகத்தில் நீரும் மங்கலாகி விட திரையில் காட்சிகள் சரியாக புலப்படவில்லை…
எவ்வளவு தான் திரையில் ஓடிக் கொண்டிருந்த கட்சிகளை பார்த்தாலும் அந்த உயிரினம் என்னவென்று தான் யாருக்கும் சரியாக புரியவில்லை…
கரனை பார்த்த மகாதேவ், “நீ டென்ஷன் ஆகாம அன்னக்கி நடந்தத ரிலாக்ஸா இருந்து சொல்ல முடியுமா கரன்?” என்று கேட்டான்.
“கண்டிப்பா அதுல எந்த பிரச்சனையும் இல்ல… இப்ப நான் ஓகே ஆகிட்டேன்” என்றவன் ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டே, “அன்னக்கி நான் போன இடம் ரொம்பவே ஆழமா இருந்துச்சு… ஒரு கட்டத்துக்கு மேல வெளிச்சமே இல்ல… என் டார்ச் லைட் மூலமா தான் உள்ள இருந்தத பார்த்தேன்… கும்மிருட்டா இருந்துச்சு… அதனால தான் நான் ஆழத்துக்கு போகாம கேமராவை வீசிட்டு வர நினைச்சேன்… அந்த டைம்ல தான் என் சென்சர் லைட் ஒன் ஆக ஏதோ ஆபத்துன்னு விளங்கிடுச்சு… பாஸ்டா மேல வர தொடங்கினேன்… திடீர்னு தண்ணி ரொம்ப கலங்க ஆரம்பிச்சிடுச்சி… ரொம்ப பெருசா ஷார்க் மாதிரி ஏதோ ஒன்னு… எனக்கிட்ட வாய தொறந்துட்டே வந்துச்சி… நான் வேகமா நீந்தினேன்…
நீந்திட்டே இருக்கும் போது என் கால் எதிலோ சிக்கின மாதிரி இருந்துச்சு… நான் திரும்பி கூட பாக்கல…என் காலை இழுத்துட்டு மேல வரத் தொடங்கிட்டேன்… என் காலுக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியல… வலிக்க கூட இல்ல… என் மனசுல இந்த ஒரே ஒரு எண்ணம் எப்படி சரி தப்பிக்கனும்ன்னு தான் இருந்துச்சி… கனவு மாதிரி இருந்துச்சி டா… போட்டுக்கு வந்ததுக்கு பிறகு தான் வலியே விளங்கிச்சு… இந்த சின்ன காயத்தோட நான் தப்புவேன்னு நெனைக்கவே இல்லடா” என்று பெருமூச்சுடன் சொல்லி முடித்தான்…
அவன் தோளில் தட்டிய அபின்ஞான், “ரிலாக்ஸ் டா… அதோட சாரி… ரொம்ப கவனயீனமா இருந்துட்டேன்… டெக்னலாஜியால எல்லாம் கரெக்டா நடக்கும்ன்னு நெனச்சேன்… இனி ரொம்ப கவனமா இருக்கலாம்… ” என்றான் குற்ற உணர்வுடன்.
“டேய் நான் சும்மா சொன்னேன்டா… நீ கவல படாதே… இனி தான் நம்ம தேடல ஸ்டார்ட் பண்ணும்… அதுக்கு இது நல்ல ஒரு அனுபவமா இருக்கட்டும்… இனி கேயார்புல்லா இருக்கலாம்” என்றான் கரன்…
“ம்ம்… கரன் சொல்றதும் சரி தான்… இனி ஒண்ணுக்கு ரெண்டு மடங்கு கவனமா இருப்போம்” என்ற ராகவ், “அத உயிரினத்த பத்தி நமக்கு ஒண்ணுமே தெரியாது… அது எப்படிப்பட்டது… அதோட வீக்னெஸ் என்ன? அதுட பலம் என்னனு கூட தெரியல… இது ரொம்ப ரிஸ்க்கான ஒரு வேல…” என்று கூறியபடியே கரன் நீரினுள் போட்டு விட்டு வந்த ஐந்து கேமராக்களின் காட்சிகளையும் ஐந்து திரைகளில் ஓட விட்டான்…
முதல் மூன்று கேமராக்களும் வேலை செய்யவில்லை…
நான்காவது கேமராவோ தனி இருட்டாக இருந்தது…
அதில் எந்த ஒரு காட்சியும் புலப்படவில்லை…
ஐந்தாவது கேமராவின் காட்சிகள் மங்கலாக இருந்தது…
எல்லாரும் அந்த ரெண்டு கேமராக்களின் திரைகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஏதாவது கிடைக்குமா என்று…
பல மணி நேரங்களாக கவனித்து விட்டனர்…
அதைப் பார்த்துக் கொண்டே உதட்டை சுழித்த சஞ்சனா, “இத வச்சி நம்மளால எதுவுமே கண்டுபிடிக்க முடியாது” என்று கூற, அங்கிருந்தவர்களுக்கும் அதே எண்ணம் தான்…
“இந்த இடத்துல எக்ஸ் த்ரீ(X3) பாக்ஸ் இருக்குனுன்னே வச்சுக்குவோம்… ஆனா அத எடுக்க நாங்க எப்படி போறது” என்று மகிமா கேட்க…
“நாம அங்க போனா எக்ஸ் த்ரீ பாக்ஸ் இருக்கும், அத எடுக்க நாம தான் இருக்க மாட்டோம்” என்று சிரித்தபடி ராகவ் சொல்ல,
“பி சீரியஸ் காய்ஸ்… இது விளையாட்டு இல்ல” என்ற மகாதேவ், “ராகவ் நாலாவது கேமரா சவுண்ட்ட நல்லா கூட்டி வை” என்று கூற,
அனைவரும் காதை தீட்டிக்கொண்டு அதை கேட்க ஆரம்பித்தனர்…
அதிலோ ஏதேதோ வித்தியாசமமான சத்தங்கள் கேட்டன…
தன் தாடியை வருடியபடி யோசித்த அபின்ஞான், “இரும்புல ஏதோ முட்ற சத்தம்…நடுக்கடல்ல எப்படி இரும்பு சத்தம் கேட்கலாம்…” என்றவன் கண்களை விரித்து, “அப்படின்னா… அங்க தான் எக்ஸ் த்ரீ(X3) பொக்ஸ் இருக்க சான்ஸ் இருக்கு” என்று அபின்ஞானும் மகாதேவும் ஒன்றாகவே கூறினர்…
“எப்படிடா உங்க ரெண்டு பேருக்கும் மட்டும் இப்படி தோணுது” என்று கட்டிலில் படுத்திருந்தபடியே கரன் கேட்க,
“அது ஜீனியஸ்க்கு மட்டும் தான் புரியும்… உன்ன மாதிரி பசங்களுக்கு புரியாது” என்று மகிமா கூற,
“ஒரு மாடு அத இன்னொரு மாட்டுக்கு சொல்லுது பாரேன்” என்று சிரித்தபடி அபின்ஞான் கூற,
அவனை முறைத்துப் பார்த்தாவள் யாரும் அறியாது அவன் இடையில் நறுக்கென கிள்ளி விட்டு சமத்தாக அமர்ந்து கொண்டாள்…
அவன் தான் வலியை முகத்தில்
காட்டாமல் அமர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்…
அவள் கிள்ளியத்தை கண்ட கரன், “அட நம்ம பையன மகி அடக்கிட்டா போல” என சத்தமாக ராவிடம் சொல்ல,
அபின்ஞான் அதிர்ச்சியாக அவனை பார்த்தான்.
“ம்ம்ம்… நானும் இந்த கூத்த பத்துட்டு தான் இருக்கேன்” என்றான் ராகவ்.
“ம்ம்ம்… என்னமாய் வாய் அடிச்சிட்டு இருந்தான்… இப்போ இவன் பல்லு புடிங்கின பாம்பா மாறிட்டான்” என்று கரன் சிரித்தபடி சொல்ல…
“எனக்கு ஒரு சான்ஸ் கிடக்க கிட்ட பார்த்துகிறேன்டா” என்றான் அபின்ஞான் அவனை முறைத்தபடி…
மகாதேவ் அவர்களை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்…
“இவ்ளோ நாளும் நீ மட்டும் தான்டா பேசின… இப்போ தான் நாம பேசுரோம்… நீ கேட்டு தான் ஆகணும்” என்று சிரித்த படி கரன் சொல்ல,
“சரி தான்” என்றவன் மகிமாவை அழுத்தமாக பார்க்க,
அவளோ இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல், “அப்படின்னா அந்த இடத்தில தான் பிரிட்டிஷ் ஷிப் இருக்கணும்… எவ்ளோ ஆழம் உள்ள போகணும்னு தெரியாது… வெளிச்சமும் இல்ல… உள்ள என்ன இருக்கும்னு கூட தெரியாது…” என்று மெதுவாக கதையை மாற்ற…
அவளை முறைத்துப் பார்த்த அபின்ஞான் “நாம அந்த இடத்த பத்தி முழுசா தேடலாம்… புல் ப்ராக்டிஸ் எடுக்கலாம்… கரன் வரத் தேவையில்லை… அவன் இங்க இருந்து எங்கள கைய்ட் பண்ணட்டும்… மீதி அஞ்சு பேரும் போகலாம்” என்று கூற,
மற்றவர்களும் ஆமோதிப்பாக தலையசைத்துக் கொண்டனர்…
அடுத்த இரு நாட்களும் அனைவரும் கப்பலில் உள்ளே அடைந்து கிடந்தனர்…
கேமராக்களை ரிமோட் மூலம் செலுத்தி அப்பகுதியை தங்களால் முடிந்த அளவுக்கு ஆராய்ந்து முடித்திருந்தனர்…
“காய்ஸ் நாம இன்னக்கி போட்டிங் போகலாம்” என்றபடி தயாராகி வந்தான் அபின்ஞான்.
எல்லோருக்கும் மனமாற்றம் தேவைப்படவே போட்டிங் செல்ல ஆயத்தமானார்கள்…
மனதினுள் பயம் இருக்கிறது தான் ஆனால் அதிலே உலன்று கொண்டிருக்க முடியாதே…
அதிலிருந்தும் வெளியே வரத்தானே வேண்டும்…
பயந்து ஒரு இடத்திலே பின்தங்கி விட்டால் வாழ்க்கையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலுமோ பிரச்சினையிலுமோ நம்மால் முன்னேற முடியாது…
தடைகள் வருவது நிச்சயம்…
அதை கடந்து தான் ஆக வேண்டும்…
கரனும் ராகவும் மட்டும் செல்லவில்லை…
மற்ற இரு ஜோடிகளும் இரு படகுகளை எடுத்துக் கொண்டு சென்றனர்…
ஆண்கள் பயப்படவில்லை என்றாலும் பெண்களுக்கோ மனதினுல் பயம் இருந்தது… ஆனால் அதை வெளிப்படுத்தவில்லை….
மகிமாவோ படகில் இருந்தபடியே சுற்றிலும் பயந்தபடி பார்த்துக் கொண்டு வந்தாள்…
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற நிலையாகி போனது அவளுக்கு…
அபின்ஞான் கூலாக ஒரு பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்…
ஓரிடத்தை பார்த்து படகை நிறுத்தியவன், அவள் தோளில் கையை போட்ட படி வந்து நிற்க அவனை அதிர்ந்து பார்த்தவள், “எதுக்கு இப்ப போட்ட நிறுத்தினீங்க” என்று படபடப்பாக கேட்டாள்…
அவளுக்கோ பயம் அவனிடம் சொல்லவில்லை…
சொன்னால் கேலி செய்து சிரிப்பான்…
அவ்விடத்தை சுற்றி ரசித்தபடியே அவளை தன் கை வளைவுக்குள் வைத்துக்கொள்ள… அவளும் பயத்திலே அவனுடன் நன்றாக ஒட்டி நின்றபடி சுற்றிலும் வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்…
“ஏன் நிப்பாட்ட கூடாதா? எவ்ளோ ரொமான்டிக்கான பிளேஸா இருக்கு பாறேன்” என்றான்…
“என்னது ரொமான்டிக்கான பிளேஸ்ஸா… நானே பயந்துட்டு இருக்கேன்… நானும் ரசிச்சா தான்டா அது ரொமான்டிக்கான பிளேஸ், நீ பாட்டுக்கு பேசிட்டே போற” என்று நினைத்தவள் வாய் திறந்து சொல்லவில்லை…
“நாம இங்க ஹனிமூன் வந்த மாதிரியே பீலிங்கா இருக்கு… இட்ஸ் ஹெவன் ஃபீலிங்…” என்று அவன் யாரும் இல்லாத தனிமையில் அவள் மேனியில் எல்லை மீறிய படி கூற,
“அடப்பாவி இந்த ரணகளத்தில உனக்கு கிளுகிளுப்பா” என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை…
அவன் தொடுகையில் அவள் உருகி நின்ற நேரம் ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர்ந்து அவளை மடியில் அமர்த்திக் கொண்டவன்… அவள் இதழ்களில் தன் முரட்டு அதரங்களால் அழுத்தமாக முத்தமிட்ட படியே அவள் மேனியில் தன் சில்மிஷங்களை தொடர்ந்தான்…
அவளுக்கும் உடலில் என்னென்னவோ உணர்வுகள்…
அவள் உணர்வுகளையும் தூண்டிவிட்டுக் கொண்டு அல்லவா இருக்கிறான் அவன்…
அவனிடமிருந்து விலகி எழுந்து நின்று கொண்டவள், “நீங்க இங்க என்னத்துக்கு வந்திருக்கீங்க… இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று மகிமா கேட்க…
“உன்ன பார்த்தா என்ன என்னவோ பண்ணனும் போல இருக்குடி” என்றபடி அவளை தன் லேசர் விழிகளால் அங்குளம் அங்குளமாக ரசித்தான்…
அவன் பேச்சில் தன் முக உணர்வுகளை காட்டாமல் பக்கவாட்டாக திரும்பி மறைத்துக் கொண்டடவள், “சரி அது இருக்கட்டும்… நான் இப்ப உங்க கிட்ட ஒன்னு கேட்கவா” என்று கேட்க…
“அதுக்கு ஏன் இவ்ளோ தூரம் இருந்து கேக்குற…” என்று ஒற்றை கண்ணை சிமிட்டிக் கேட்டவன், எட்டி அவள் கையை பற்றி இழுத்தவன் அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்…
சலிப்பாக தலையாட்டியபடி அவன் மடியில் வாவாக அமர்ந்தவள் அவன் தாடி அடர்ந்த கன்னத்தை வருடியபடி … “அபி” என்றாள் இழுவையாக…
“ம்ம்…” என்றான் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்த படி.
“நான் கேக்குறது பைத்தியக்காரத்தனமான கேள்வின்னு எனக்கே புரியுது… ஆனாலும் கேட்கணும்னு தோணுது… உங்களுக்கு என்ன பிடிக்குமா… இல்லன்னா உங்களுக்கு இந்த கடல் நிலம் மலைன்னு நீங்க தேடுற உங்க தேடலா புடிக்கும்…” என்று கேட்டாள்…
“டிபிகல் பொண்டாட்டி மாதிரி நீயும் கேட்டுட்ட…” என்றான் அவள் விழிகளை உற்றுப் பார்த்தபடி…
“ஜஸ்ட் கேக்கணும்னு தோணிச்சி” என்றவள் பார்வையை அவனிடமிருந்து விளக்கிக் கொண்டாள்.
அவனை நேரடியாக பார்க்க ஏனோ தடுமாற்றமாக இருந்தது அவளுக்கு…
இது எந்த மாதிரியான உணர்வு என்று அவளுக்கும் புரியவில்லை.
அவள் தடுமாற்றத்தை தனக்குள் உள்வாங்கிக் கொண்டவன், “உண்மைய சொல்லப்போனா என் லைஃப் லாங் இப்படி காடு மலை கடல் என்று போய் ரிசேர்ச் பண்ணி புதிய விஷயங்கள கண்டுபிடிக்கிறது தான் என் கனவு… அதனால என் லைஃப்ல இந்த தேடலும் தொடர்ந்துட்டே இருக்கணும்னு நினைக்கிறேன்…. ” என்று சொல்ல அவள் முகம் கூம்பி விட்டது…
அவன் இந்தப் பதிலை தான் சொல்வான் என்று தெரியும்…
ஆனாலும் அவன் சொல்லும் போது மனதுக்கு வேதனையாக இருந்தது…
“இதே கேள்விய நீ கொஞ்ச நாளைக்கு முந்தி கேட்டிருந்தா உன்ன பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்லி இருப்பேன்… ஆனா எனக்கு இப்ப உன்ன ரொம்ப புடிச்சு போச்சு… அதுக்காக உன்கிட்ட பொய் சொல்ல நான் விரும்பல” என்று அவள் இதழை வருடியபடி கூறினான்…
பெருமூச்சு விட்டவள், “எனக்குத் தெரியும், இத உங்ககிட்ட கேட்க கூடாதுன்னு நினச்சேன், இந்த இடத்துல என்ன மீறி ஒரு பீலிங்ஸ்ல கேட்டுட்டேன்” என்றாள்…
“நோ ப்ராப்ளம்… ஏன்ன… இந்த கேள்விய நீ என்கிட்ட மட்டும் தானே கேட்க முடியும்” என்றவன், “இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க…” என்றான் அவளை ரசித்தபடியே…
அவனைப் பார்த்து கண் சிமிட்டியவள், “எனக்கு தெரியும்” என்றாள்.
“உன்கிட்ட போய் நான் இத சொன்னேனே…” என்றவன் ஆய்வுக்கு தேவையான சில விஷயங்களை சேகரித்துக் கொண்டே இருவரும் கப்பலை நோக்கி சென்றனர்…
இங்கு வரும்போது இருந்த பாரமான மனநிலை இருவருக்குமே இல்லை…
அதற்காகத்தானே அவளை இங்கு அழைத்து வந்திருந்தான் அபின்ஞான்…
Newer Posts