அபின்ஞானும் மகாதேவும் ஒருவருக்கு முன் ஒருவர் நின்றிருந்தனர்…
கரன் கட்டிலில் படித்தபடியே இவர்களை பார்த்துக் கொண்டிருக்க, அவன் அருகே கட்டிலில் ஒரு ஓரத்தில் ராகவும் அமர்ந்திருந்தான்.
சண்டை பிடிப்பதற்காக வாயை திறந்தவர்களுக்கு சாதாரணமாக ஒரு வார்த்தை பேச வாயை திறக்க முடியவில்லை…
சலிப்பாக தலையை ஆட்டிய மகிமா, “இவனுங்க பேச மாட்டானுங்க” என்று சஞ்சனாவிடம் கூறிவிட்டு, “அண்ணா உன்கிட்ட இவர் ஒன்னு கேட்க வந்திருக்கிறார்… நீயா அந்த சயின்ஸ் டீச்சருக்கு லெட்டர் கொடுத்தது” என்று மகிமாவே கேட்டுவிட…
அபின்ஞானை முறைத்து பார்த்து விட்டு மகிமாவை பார்த்த மகாதேவ், “உன் புருஷன் மாதிரி பொறுக்கி வேலயெல்லாம் நான் செய்ய மாட்டேன்” என்று எப்பொழுதும் தன் மீதே பழி சொல்லும் அபின்ஞான் மீது கோபப்பட்டபடி சொல்ல…
“ஏய் யாருடா பொறுக்கி? நீ செஞ்சிட்டு என்ன சொல்ல வரியா?” என்று மீண்டும் சண்டைக்கு தயாராக….
இரு பெண்களும் அவரவர் துணையை முறைத்துப் பார்த்தனர்…
ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்ட மகாதேவ், “இங்க பாரு அபி… நான் யாருக்குமே இதுவர எந்த லெட்டரும் போடல… இது உண்மை… என் அம்மா மேல நான் சத்தியமே பண்ண மாட்டேன்… வேணும்டா மகிமா கிட்ட கேட்டு பாரு… என்ன நிரூபிக்கிறதுக்காக சொல்றேன்… என் அம்மா சத்தியமா எந்த டீச்சருக்கும் சரி பொண்ணுங்களுக்கும் சரி லவ் லெட்டர் கொடுத்ததும் இல்ல… லவ் சொன்னது கூட இல்ல…” என்று கூறினான் வேதனையாக…
‘டேய்… நானும் சத்தியமா சொல்றேன்டா நானும் குடுக்கல… ஆனா அதுல எப்படி என் பெயர் வந்துச்சு… உனக்கு அந்த டீச்சரை பிடிச்சதுனால நீ கொடுத்திருப்பேன்னு நான் நினைச்சேன்” என்று அபின்ஞான் கூற,
“டேய் பொதுவா பசங்களுக்கு இரக்கம் காட்ற டீச்சர்ஸ பிடிக்கும் டா…அந்த மாதிரி பிடித்தம் எனக்கு… எந்த ஒரு தவறான எண்ணத்திலுமே நான் டீச்சர்ஸ பார்த்ததில்லை…” என்றான் மகாதேவ்.
“சரி நானும் போடல… நீயும் போடலன்னு வச்சுக்குவோம்… என் பேர்ல லெட்டர் போட்டது யாரு??” என்று அபி கேட்க…
“எனக்கும் இப்ப அது தான் புரியல” என்று தாடியை நீவியபடி சொல்லிக் கொண்டான் மகாதேவ்…
இப்பொழுதுதான் இரு பெண்களுக்கும் மற்ற ஆண்களுக்கும் மூச்சு வந்தது…
அடித்துக் கொள்ளாமல் பேசி விட்டனரே…
“நம்மள பிரிக்கத்தான் இதை யாரோ பண்ணி இருக்கணும்னு நினைச்சிறேன்… யாரா இருக்கும்னு தான் புரியல” என்று அபின்ஞான் கூற,
நாம இங்க இருந்து போனதும் முதல்ல இத கண்டுபிடிக்கலாம்… என்றான் மகாதேவ்…
“அத கண்டுபிடிக்க இவனுங்களுக்கு பதினஞ்சு வருஷமாச்சு… அதக்கூட மத்தாவங்க சொல்லித்தான் புரியுது… என்ன ஒரு பிசினஸ் மேக்னட்ஸ்…” என்று மகிமா சொல்ல…
“ம்ம்… சின்ன பசங்க மாதிரி சண்டை போட்டுக்க தான் இவனுங்களுக்கு தெரியும்” என்று சிரித்தபடி சொன்னாள் சஞ்சனா…
“அப்ப நாம எக்ஸ் த்ரீ (x3) பாக்ஸ சேர்ந்துதானே தேட போறோம்” என்று கரன் கேட்க…
“இதுல உனக்கு எதுக்குடா சந்தேகம்” என்று கேட்டாள் சஞ்சனா…
“இனி யாரும் தனித்தனியா செய்ய தேவயில்லை… எப்படி யுனிவர்சிட்டில சேர்ந்து ப்ரொஜெக்டர் செஞ்சோமோ அதே மாதிரி சேர்ந்தே செய்யலாம்” என்று ராகவ் சொல்ல…
“டேய் என்னடா சொல்ற… யுனிவர்சிட்டில செஞ்ச மாதிரி செய்யவா? வேணாம் சாமி அந்த விளையாட்டுக்கு நான் வரல… மறந்துட்டியாடா… இவனுங்க ரெண்டு பேரும் எப்படி அடிச்சிட்டு செத்தானுங்க… ஒரு மாச வேலய செய்ய மாசக் கணக்குல இங்க குடி இருக்க வேண்டிவரும்” கிண்டலடித்தான் கரன்…
“என்னடா சந்தர்ப்பம் பார்த்து கலாய்க்கிறீயா” என்று கேட்டான் அபின்ஞான்…
“ச்சே… சே… உன்ன போய் கலாய்பேனா மச்சி…” என்றான் கரன்.
“விளங்குது வாய மூடிட்டு படு” என்ற அபின்ஞான், “சரியா யோசிச்சி சொல்லு கரன்… என்ன நடந்தது” என்று கேட்க,
“ஷார்க் மாதிரி இருந்துச்சுடா… ஆனா அது சுறாவும் இல்ல… ரொம்ப டிஃபரென்டா பெருசா இருந்துச்சு… இதுவரை நான் அப்படி ஒரு மீன நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோ இல்ல…
அதுமட்டுமில்லாம நான் அன்னைக்கு போன இடம் ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு…. அதே இடத்தில் மூன்று கேமராவ போட்டுட்டு வந்து இருக்கேன்… கையிலிந்த மீதி ரெண்டு கேமராவும் அந்த சுறா கிட்ட இருந்து தப்பிச்ச கிட்ட விழுந்துடுச்சு… அதுல எல்லாமே ரெக்கார்டு ஆகும்… நாம அந்த கேமராட வீடியோ பார்த்தோம்னா ஏதாவது கண்டுபிடிக்கலாம்” என்றான் கரன்.
“ஓகேடா நீ எத பத்தியும் யோசிச்சு ஸ்ட்ரெஸ் ஆகாம ரிலாக்ஸா இரு… பிறகு மீதியை பார்க்கலாம்” என்று விட்டு அங்கிருந்து சென்றார்கள் ராகவ் அவனுடனே கூட இருந்தான்…
அன்றோ அவர்களுக்கு வேலை பார்க்கும் மனநிலையே இல்லை…
பல பிரச்சினைகளை தீர்த்து முடியும் போதே இரவு ஒன்பது மணியாகி விட்டிருந்தது…
பல வருடங்களுக்குப் பின் ஏனோ சகஜமாக பேசிக்கொள்ள அபின்ஞானுக்கும் மகாதேவுக்கும் சங்கடமாக இருந்தது…
சம்பிரதாயமாக ஓரிரு வார்த்தைகள் பேசினர்களே தவிர ஒதுங்கியே இருந்து கொண்டனர்…
இரவு உணவை ஆறு பேரும் சேர்ந்து கரன் அறையிலே உண்டார்கள்…
சாப்பிட்டுவிட்டு மகிமாவை தன் கையுடனே அழைத்துச் சென்றான் அபின்ஞான்…
அவள் கதவை மூடிய அடுத்த கனமே அவள் இதழ்களில் முரட்டுத்தனமாக முத்தமிட ஆரம்பித்து விட்டிருந்தான்…
அவன் மார்பில் கையை வைத்து தள்ளி விட்ட மகிமா, இதழ்களை வருடியப்படியே, “ஸ்ஸ்ஸ் வலிக்குது… எதுக்கு இப்படி கிஸ் பண்றீங்க” என்று கேட்க,
“தேங்க்ஸ் சொன்னேன் டி” என்றான் அவள் கன்னத்தில் இதழ்களை உரசியப்படியே…
“என்னது… உதட்டுல ரத்தம் வர்ற அளவுக்கு கடிச்சா தேங்க்ஸ் சொல்லுவாங்க” என்று கேட்க…
“எனக்கு இப்படி சொல்லத்தான் புடிக்கும்” என்று கூற,
தலையில் அடித்துக் கொண்டவள், “உங்களோட பேசி ஜெயிக்க முடியுமா” என்றபடி படுக்கப் பார்க்க…
“மகி இன்னக்கி ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்கு…” என்றான் அவள் கன்னத்தை வருடியபடியே,
அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து விட்டது…
“அதுக்கு…” என்று அவளும் புரியாதது போலவே கேட்டாள்.
“வேணும்னே நடிக்கிறா ராட்சஷி” என்று முணுமுணுக்க… மகிமாவுக்கும் தெளிவாகவே கேட்டது…
இதழ்களுக்குள் சிரித்துக்கொண்டவள், “உங்களுக்கு நான் வேணும் அதுக்கு ஏதாவது சாக்கு சொல்றீங்க தானே” என அவன் கழுத்தில் தன் இரு கைகளையும் கோர்த்தபடி கேட்க,
“இல்லையே…’ என்று அவளை இழுத்துக் கொண்டே கட்டிலில் விழுந்தவன்… அவள் அணிந்திருந்த ஷேர்டின் பட்டன்களை கழட்ட… அவள் அதை உணர்ந்து விலக முன்பே அவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தான் அபின்ஞான்.
“அபி என்ன பண்றீங்க” என்று தன் இரு கைகளாலும் உடலை மறைத்துக் கொள்ள,
“ப்ச்… கையை எடுடி” என்று கரகரப்பான குரலில் கூறியவாறு அவள் கை விரல்களுடன் தன் விரல்களை கோர்த்தபடி அவள் கையை கட்டிலில் அழுத்தியவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க…. அவளும் மோகமாக கண்களை மூடிக்கொண்டாள்.
இருவரும் தத்தம் துணைகளில் இன்பக்கடலில் மூழ்க ஆரம்பித்து விட்டனர்…
சஞ்சனாவுக்கு தான் தூக்கம் வரவில்லை…
தன் அறை ஸ்விம்மிங் பூலுக்கு வெளியே வந்தவள் அங்கிருந்த கம்பியில் கையை வைத்த படி கடலை வெறித்தபடி நின்று இருந்தாள்…
கரனை ரத்தம் வழிய பார்த்த கோர நிகழ்ச்சி ஒரு பக்கம்… தேவ் தன்னை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்திய வலி என்று அவளை மனக்குழப்பத்திற்கு தள்ளி விட்டிருந்தது…
கண்ணை மூடினாலே ரத்தக் காட்சிதான் வந்து கொண்டிருந்தது…
இன்னும் அவள் மனம் சமாதானம் அடையவில்லை… வெளியே அமைதியாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் அவள் மனதோ இன்னும் பதறிக் கொண்டுதான் இருந்தது.
அந்நேரம் அவள் கழுத்தில் சூடான மூச்சுக்காற்று ப்பட்டது…
கண்களை மூடி திறந்தாள் சஞ்சனா…
அந்த மூச்சுக்காற்றை வைத்தே புரிந்து விட்டது அவன் தேவ்தான் என்று…
அவள் பின்னால் வந்து நின்ற மகாதேவ் அவள் கழுத்தில் தன் நாடியை அழுத்தமாக வைத்து, அவளுக்கு முன்னால் இருந்த கம்பியை பற்றிய படி நின்றான்…
அவள் எதுவுமே பேசவில்லை….
“சஞ்சு உனக்கு என்ன பிரச்சின… ஒன்னும் இல்லன்னு மட்டும் சொல்லாதே” என்று மென்மையாக கேட்டான்…
அவளுக்கும் திரும்பத் திரும்ப என்ன விஷயம் என்று கேட்டுக் கொண்டிருப்பவனிடம் இதற்கு மேல் மறைக்க முடியவில்லை…
“தேவ்… நான் அன்னைக்கு உன் டைரிய வாசிச்சேன்… நீங்க பழிவாங்க என்ன யூஸ் பண்ணிக்கிட்டீங்க தானே” என்று அவள் வேதனையுடன் கேட்க,
அவள் தோள்களைப் பற்றி தன்னை நோக்கித் திருப்பியவன் அவளை கோபமாக பார்த்தபடி, “பைத்தியமாடி உனக்கு… அபி கதைச்சத கேட்டு கோபம் வந்துச்சு தான்… எப்படியாவது உன்ன என்கிட்டயே வச்சுக் கொள்ளனும்ன்னு தான் தோணிச்சு… உன்ன பழிவாங்குற ஐடியா எனக்கு சுத்தமாவே இல்ல…” என்றான் அழுத்தமாக…
“பொய் சொல்லாதடா” என்றாள் விம்மியபடி,
“நான் எதுக்குடி உன்கிட்ட பொய் சொல்லணும்… நேத்து உன்னை சாரியில பார்த்ததும் ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ப்… அதனாலதான் உன்னை போக சொன்னேன்… நீ போகவே இல்ல, என்னால அதுக்கு மேல என்ன கண்ட்ரோல் பண்ண முடியாம உன்னை நெருங்கிட்டேன்… நீ போகாம இருந்தது உன் தப்பு தான் ” என்றான்.
“நீங்க பாவம்னு கூட இருந்தா தப்ப என் மேல தூக்கி போட பாக்குறீங்களா?” என்று அவள் கேட்க…
“என்னடி பிரச்சின உனக்கு… எத சொன்னாலும் தலைகீழாவே பாக்குற” என்று பாவமாக கேட்க,
“உங்க மாதிரிக்கு உங்களை அப்படித்தான் பார்க்க முடியும்” அவன் பேச்சை கேட்டதும் தன்னை மீறி சிரிப்பு வர அதை அவன் பார்க்காமல் மறைத்துக் கொண்டே கூற,
அவனும் அதை கண்டு கொண்டான்… “அப்படி இருந்த தேவ தானே நீ பின்னால சுத்தி சுத்தி காதலிச்ச… இப்ப பெருசா பேச வந்துட்ட” என்று அவன் கேட்க,
“அது தெரியாம பண்ணிட்டேன்” என்றாள் அவள்…
“என்னடி சொல்ற” என்று கேட்டான் அதிர்ச்சியாக…
“அது அப்படித்தான்” என்று கூறிக் கொண்டிருந்தவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்…”நம்ம பாஸ்ட் எப்படி வேணும்னாலும் இருந்துட்டு பபோகட்டும்… ஆனா இனி லைஃப்ல நீ என்கூட தான் இருக்கணும்” என்றான் மகாதேவ்…
“யாரு முடியாதுன்னு சொன்னது” என்று சஞ்சனா அடுத்த வார்த்தை பேச முன்னே அவளது இதழ்களை கவ்விக் கொண்டான் அவளது தேவ்…
சஞ்சனா பேசியதில் கோபம் கொண்ட மகாதேவ், “என்னடி விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டே போற… என்ன பேச்செல்லாம் பேசுற” பாய்ந்து கொண்டே அவள் அருகே வர அவளோ ஆசையாமல் நின்று இருந்தாள்…
“சஞ்சனா இப்ப நீ சொல்றத கேக்குற மூட் இல்ல, ப்ளீஸ் கொஞ்சம் சும்மா இரு நானே மனசு உடைஞ்சி போய் இருக்கேன்” என்றான் அபின்ஞான்…
“ஓஹோ நான் வாயால சொன்னதே உங்களால தாங்க முடியல…. ஜஸ்ட் ஒரு செகண்ட் மிஸ் ஆகி இருந்தா அவன் உயிரே போய் இருக்கும்… இன்னக்கி நடந்த இந்த விஷயத்துக்கும் கரன் இப்படி படுத்திருக்கவும் நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் முழுப் பொறுப்பு… நானும் பார்த்துட்டே இருக்கேன்… இங்க வந்ததிலிருந்து அடிச்சிட்டு சாவுறீங்க…. நீங்க போட்ற சண்ட… உங்க பழிவெரி… வன்மத்தால ரெண்டு பேருக்கும் என்ன கிடைச்சிச்சு… லாஸ்ட்க்கு என்னத்த கொண்டு போகப் போறீங்க ரெண்டு பேரும்…
சொல்லுங்க அத்தான் நீங்களா இந்த இடத்த கண்டுபிடிச்சீங்க? இல்லயே…
நீயும் சொல்லு தேவ்… நீ மட்டுமா இருந்து இந்த இடத்தை கண்டுபிடிச்ச… அதுவும் இல்லையே…
நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து தான் இந்த இடத்தை கண்டுபிடிச்சோம்…
அது என்னமோ நீங்க ரெண்டு பேரும் தான் தனித்தனியா இருந்து கண்டுபிடிச்ச மாதிரி… அடிச்சுட்டு சாவ பாக்குறீங்க…
நம்ம அஞ்சு பேரும் சேர்ந்து தானே பண்ணோம்…
அதுக்கு பேர் கூட உங்க ரெண்டு பேர்ட பேர சேர்த்து தானே நாம வெச்சோம்…
மகாதேவ் பேர்ல முதல் பகுதி “மகா”வும் அபின்ஞான் பேர்ல கடைசிப் பகுதி”ன்ஞான்” னும் சேர்த்து தான் மகான்ஞான்னு நம்ம ப்ராஜெக்ட்க்கு பேர் வெச்சோம்… ஆனா அந்த பேர உங்களுக்கு வெளிய சொல்ல அவமானம்… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்ச ப்ரொஜெக்ட்ன்னு சொல்ல உங்க ஈகோ தடுக்குது… ஆனா தனியா கண்டுபிடிச்ச மாதிரி பெருசா பேச வந்திருவீங்க… அன்னக்கி நாம சேர்ந்து செஞ்ச ப்ராஜெக்ட ஏன் இப்ப நம்ம எல்லாரும் சேர்ந்து இத கண்டுபிடிக்க முடியாது?”
அத்தான் தேவ் வ பழிவாங்க என்னென்னமோ செய்றான்…
தேவ் நீ அத்தான பழிவாங்க என்னென்னமோ செய்றான்…
கடைசில உங்க ரெண்டு பேருக்கும் சப்போர்ட்டா உங்க கூட இருந்த நாங்க தான் பாதிக்கப்பட்றோம்…
ஏன் இன்னும் ரெண்டு பேரும் சும்மா இருக்கீங்க… நல்லா சண்டை போடுங்க” என்றவள் இருவரையும் முறைத்தபடியே தன் அறையை நோக்கிச் சென்றாள்…
இக்கதையை அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்த மகிமா… சஞ்சனாவின் பின்னாலே சென்றாள் …
சஞ்சனா அறைக்குள் வந்ததும் அவள் கையைப் பற்றிக் கொண்ட மகிமா,
“என்ன சொல்ற சஞ்சு… நீங்க எல்லாரும் ஒரே யுனிவர்சிட்டியா” என்று எதையும் இணைத்துப் பார்க்க முடியாமல் கேட்க…
“இல்ல… ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்…” என்று கூறியவளை அதிர்ந்து பார்த்தாள் மகிமா…
இந்தக் கதை அவளுக்கு புதிதல்லவா…
ஆம்… அபின்ஞான், மகாதேவ், சஞ்சனா, ஒரே பாடசாலையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல ஒரே வகுப்பையும் சேர்ந்தவர்கள் தான்…
சிறுவயதிலிருந்தே நெருங்கிய
நண்பர்கள் தான் அபின்ஞானும் மகாதேவும்…
எப்போதுமே நகமும் சதையும் போலவே ஒட்டிக்கொண்டே திரிவர்…
அடுத்த வீட்டில் மாங்காய் திருடுவதில் இருந்து, வகுப்பை கட் பண்ணி விட்டு வெளியே சுத்த செல்வது வரை இருவரும் ஒன்றாகவே செய்வர்…
இருவருக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம் பெண்கள் விஷயம் மட்டும் தான்…
சிறு வயதிலிருந்தே எல்லா பெண்களோடும் மகாதேவ் நன்றாக சிரித்து சிரித்து பேசியே மயக்கி விடுவான்.
அவன் மேல் காதல் வயப்பட்ட பெண்களில் சஞ்சனாவும் ஒருத்தி…
அதுவும் பத்தாம் வகுப்பிலேயே…
அபின்ஞானோ பெண்கள் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டான்…
அது மட்டும் தான் இருவருக்குள்ளும் இருக்கும் வித்தியாசம்…
படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி இருவரும் முதல் இரண்டு இடங்களை பெற்று விடுவார்…
போட்டி மட்டுமே இருக்குமே தவிர பொறாமை இருக்காது இவரிடமும்…
இருவரும் சேர்ந்தால் அவர்களை யாராலும் தோற்கடிக்கவே முடியாது…
இவர்களது இந்த ஆழமான நட்போ அவர்கள் பத்தாம் வகுப்பு வரை தான் தொடர்ந்தது…
அவர்களது பத்தாம் வகுப்பு முடியும் தருவாயில் சயின்ஸ் டீச்சருக்கு அபின்ஞான் பெயரில் ஒரு காதல் கடிதம் சென்றது…
அபின்ஞானுக்கோ இந்த செய்தி அதிர்ச்சி…
உடனே மகாதேவை தேடித்தான் சென்றான்…
அவனுக்கு அல்லவா சயின்ஸ் டீச்சரை ரொம்ப பிடிக்கும்…
தேவ் அருகே சென்றவன், “எதுக்குடா சயின்ஸ் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்த” என்று அவன் ஷர்ட் காலரை பற்றிய படி கேட்க,
உனக்கென்ன பைத்தியமா அபி… நான் எதுக்கு அவங்களுக்கு லெட்டர் கொடுக்கணும், நீ கொடுத்துட்டு உன் தப்ப என் மேல போடாதே” என்றான் தேவ்…
“என்னடா நீ செஞ்சுட்டு என்ன மாட்டிவிட பாக்குறியா? உனக்கு அவங்களை பிடிக்கும்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா…” என்றான் கோபத்தில்…
“அபி சும்மா சும்மா உன் தப்ப தூக்கி என் மேல போடாதே” என்றான் தேவ் உருமளாக…
“நான் உன்னை நம்பினேன் டா… ஆனா நீ எனக்கு என்ன நல்லா ஏமாத்திட்ட… நம்பிக்க துரோகிடா நீ… இனி என்னோட பேசாதே…” என்ற அபின்ஞான் அங்கிருந்து சென்றான்…
தேவ் அவனையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
மொத்தத்தில் இந்த கடிதத்தை அபின்ஞான் எழுதினானா? மகாதேவ் எழுதினானா? என்பது இன்றும் தெரியாத விடயமாகவே இருக்கின்றது.
அடுத்த நாளே அபின்ஞானது பெற்றோரை அதிபர் அழைத்திருந்தார்…
வீட்டுக்கு சென்றதுமே அவனது அப்பா அவனை வெளுத்து கட்டி விட்டார்…
அதன் பிறகு அவனை ஆசிரியர்களும் பெரிதாக மதிக்கவே இல்லை…
ஆரம்பத்தில் நன்றாக பேசியவர்கள் தலைமை பொறுப்புகளை வழங்கியவர்கள் இப்போது அவனை ஒதுக்கி வைக்கும் பொழுது அவமானமாக உணர்ந்தான் அபின்ஞான்.
மாணவர்கள் கூட அவனை அவமானப்படுத்துவதற்காக இதே கதையை கூறிக் கொண்டிருக்க, அபின்ஞானால் அதற்கு மேல் அந்த பாடசாலையில் இருக்க முடியவில்லை….
அந்த கோபம் எல்லாம் சேர்ந்து தேவ் மேல் ஒரு வெறுப்பையும் வன்மத்தையும் பலிவெறியையும் அவனுக்குள் உருவாக்கி இருந்தது…
அபின்ஞான், மகாதேவ் இருவருமே பாடசாலை மாறி சென்று விட்டனர்…
அதற்குப் பிறகு அவர்கள் சந்தித்துக் கொண்டது என்னவோ பல்கலைக்கழகத்தில் தான்…
அங்கே மகாதேவின் உற்ற நண்பனாக ராகவ் இருந்தான்…
அபின்ஞானின் நண்பன் தான் கரன்…
மூவரும் திரும்ப ஒன்றாக சந்தித்ததில் சஞ்சனாவுக்கு தான் மகிழ்ச்சி தாங்கவில்லை….
அவள் அல்லவா மீண்டும் தேவை எப்போது சந்திப்போம் என்று காத்துக் கொண்டிருந்தாள்…
தொல்பொரு ஆய்வு (Archaeology) கற்கையே அபின்ஞான் மற்றும் மகாதேவும் படித்துக் கொண்டிருக்க மகாதேவை தொடர்ந்து பார்ப்பதற்காகவே சஞ்சனாவும் அத் துறையையே தெரிவு செய்தாள்…
ஆனால் அங்கேயும் இருவருக்குள்ளும் போட்டியும் சண்டையுமாகவுமே நாட்கள் நகர்ந்தன…
எல்லா விளையாட்டுளையும் எதிரெதிர் அணியாவே இருப்பார்கள்…
போட்டி ஒழுங்காக நடைபெற்று முடியுதோ இல்லையோ இருவரும் இடையிலே அடிதடியில் இறங்கி விடுவர்…
அவர்கள் சண்டையை விலக்கி விலக்கி கரணுக்கும் ராகவுக்கும் தான் வெறுத்துப் போய்விடும்…
ஒரு நாள் சஞ்சனா அவள் பேரையும் தேவ பேரையும் இணைத்து பிலேம்ஸ் போட்டு பார்க்க அதை அபின்ஞான் கண்டுவிட்டான்…
அவள் அம்மா மீனாட்சியடமும் கூறி விட்டான்…
அன்றைய நாளை அவளாள் மறக்கவே முடியாது… மீனாட்சி விளக்குமாரை எடுத்து அவளை அடி வெளுத்து விட்டார்…
அதிலிருந்து தேவ் பக்கத்துல நிற்கக் கூட விடமாட்டான் அபின்ஞான்…
ஆனால் அவர்களை சேர்த்து வைப்பது போல் யூனிவர்சிட்டியில் ஒரு ப்ரொஜெக்டை செய்வதற்காக அபின்ஞான், மகாதேவ், சஞ்சனா, ராகவ் மற்றும் கரனை ஒரே அணியில் போட்டு விட்டனர்…
அபின்ஞான் மற்றும் மகாதேவின் சண்டைகளுக்கு மத்தியில் அந்த ப்ராஜெக்ட் செய்யப் பட்ட பாடு அவர்களுக்குத்தான் தெரியும்….
அபின்ஞான் ஒரு கருத்தை சொன்னால் அதற்கு எதிராகவே மகாதேவ் செய்வான்…
தேவ் கருத்தை சொன்னால் அதற்கு எதிராகவே அபின்ஞான் செய்வான்…
இருவரும் எந்த ஒரு விடயத்திலும் ஒத்துப் போகவே மாட்டார்கள்…
ஆரம்பத்தில் இருந்த ஆழமான நட்பு, இப்பொழுது அதைவிட பல மடங்கு வெறுப்பாக மாறி இருந்தது இருவருக்குள்ளும்…
அவர்கள் என்ன ப்ரொஜெக்ட் செய்வதென்றோ, ப்ரொஜெக்டுக்கான ஒரு தலைப்பை பற்றியோ அவர்கள் எந்த முடிவும் எடுத்திருக்கவில்லை…
கடைசியில் என்னென்னதோ பேசி எப்படியோ இருவரும் ஒரு ப்ரொஜெக்டை செய்ய ஒத்துக் கொண்டார்கள்…
இருவரும் சம்மதித்ததும் தான் குழுவினருக்கோ மூச்சே வந்தது… ஒரு தலைப்பை தெரிவு செய்யவே மாதக்கணக்கில் இழுத்து விட்டனர் இருவரும்…
ஆனால் அவர்கள் செய்த ப்ரொஜெக்டோ யூனிவர்சிட்டியில் அவர்கள் எதிர்பார்க்காமலே மிகச் சிறந்த ஒரு செயற்திட்டமாக அமைந்துவிட்டது…
ஆனால் ஈகோவில் ஊறிப் போய் இருக்கும் இருவருக்கும் அது தாங்கள் இருவரும் சேர்ந்து செய்த ப்ராஜெக்ட் என்று வெளியே சொல்லிக் கொள்வதற்கோ அவமானம்…
அது தங்கள் ப்ராஜெக்ட் என்பதை முழுதாக மறைத்து விட்டனர் இருவரும்…
அவர்கள் செய்த ப்ராஜெக்ட் ஆங்கிலேயர் நம் நாட்டை ஆக்கிரமித்து இருந்த காலங்களில் இம் நாட்டிலிருந்து பெருமதி வாய்ந்த ரத்தின கற்களை சூறையாடிக் கொண்டு போயிருக்கின்றனர்…
ஆனால் அவர்கள் நாட்டை அடைவதற்கு முன்பே பசிபிக் சமுத்திரத்தின் ஒரு பகுதியில் அவர்களது கப்பல் மூழ்கி விட்டது…
அக்கப்பலிலோ ரொம்ப பெருமதி வாய்ந்த விலை மதிக்க முடியாத ரத்தினங்களும்… மாணிக்கங்களும் நவ ரத்தினங்களும் அதில் இருந்ததாக சொல்லப்படுகிறது…
இதுவரை அந்த இடத்தை யாருமே கண்டுபிடிக்க வில்லை… அது சம்பந்தமாக தான் அவர்களது ப்ரொஜெக்ட் இருந்தது…
பல்கலைக்கழகம் முடிந்தது விட அனைவரும் பிரிந்து விட்டனர்…
சஞ்சனாவும் கரனும் அபிஞ்ஞானது கம்பெனியிலே வேலைக்கு சேர, ராகவ் மகாதேவனது கம்பெனியிலே வேலைக்கு சேர்ந்து கொண்டான்…
ஆனால் இன்று எதிர்பாராமல் பல்கலைக்கழகத்தில் எந்த ப்ராஜெக்ட் செய்தார்களோ அதை இப்பொழுது தேடுவதற்காகத்தான் ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்…
ஆனால் அன்று ஒன்றாக செய்ததை இன்று இருவரும் பிரிந்து தனித்தனியாக செய்வதற்கு போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சஞ்சனா சொன்னதை மகிமா அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தாள்…
“அப்போ நீங்க பண்ணின ப்ராஜெக்ட தான் நான் இப்போ ரிசர்ச் பண்ணிட்டு இருக்கேன்… அந்த எக்ஸ் த்ரீ பொக்ஸ (X3 box) தான் நானும் தேடிட்டு இருக்கேன்” என்ற மகிமா, “உங்க அத்தானோ… என் அண்ணனோ என்கிட்ட ஒரு வார்த்தை சரி சொல்லல… அவங்க ரெண்டு பேருக்குமே நானும் மகான்ஞான் ப்ரொஜெக்ட்டை தான் ரிசேர்ச் பன்றேன்னு நல்லவே தெரியும்… படுப்பாவி பயலுங்க… என் கிட்ட ஒரு வார்த்த சொல்லல” என்று கோபமாக கூறினாள்.
“அவனுங்க ஒரே ஸ்கூல், ஒரே யுனிவர்சிட்டின்னு சொல்லிக்கவே விருப்பப்பட மாட்டானுங்க… இதுல அவனுங்க ஒரே ப்ராஜெக்ட் செஞ்சன்னு சொல்லிக்கவா போறானுங்க… சரியான திமிரு புடிச்சவனுங்க… நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் ப்ரொஜெக்ட செஞ்சோம்ன்னு சொல்றதுக்கு அவனுங்க ஈகோ விடுமா? என்று கேட்டாள் சஞ்சனா.
“ம்ம் அது சரிதான்” என்று சொல்லிக் கொண்ட மகிமா, இப்போதுதான் சஞ்சனா சொன்ன கதையை மீண்டும் யோசித்தவள் வாயில் கையை வைத்த படி சஞ்சனாவை அதிர்ந்து பார்த்தவள், “அடிப்பாவி… பிசினஸ் மீட்டிங்ல ஆரம்பிச்ச லவ்ன்னு அன்னைக்கு என்னமா பொய் பொய்யா கத சொல்லி வச்ச… டென்த்லயே ஆரம்பிச்ச லவ்வா? அப்ப நீ இன்னைக்கு வரைக்கும் முதிர் கன்னியா இருக்க இதுதான் காரணமா ஏண்டி…?” என்றாள் வடிவேல் பாணியில் கேட்க…
“நான் இத சொன்னா உன் அருமை புருஷன்னும் உன் நொண்ணனும் என்ன தின்னு போடுவானுங்க” என்றாள்…
“ம்ம் அதுவும் சரி தான்…இனி என்ன பண்ணுறானுங்கன்னு பார்க்கலாம்” என்று கூறிக்கொண்டே மகிமாவும் சஞ்சனாவும் தத்தம் அறைக்குச் சென்றனர்…
அவனுடன் பழகிய நாட்களில் அவன் சோர்வாக இருந்ததை அவள் பார்த்ததே இல்லை…
குளித்து தன் உடையை மாற்றி வந்தவள், அமைதியாக அவன் மார்பில் தலை வைத்து படுத்துக்கொள்ள… அவள் தலையை மெதுவாக வருடி கொடுத்தான் அபின்ஞான்…
இருவருக்கும் நீண்ட நேர அமைதி…
அவர்களில் பேசாத மௌனத்துக்குள் ஆயிரம் விடயங்கள் ஒளிந்து இருந்தன…
“மகி… நான் தப்பு பண்ணி இருப்பேன்னு நீயும் நினக்கிறியா?” என்று அவனே ஆரம்பித்தான்…
அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் அணைப்புக்குள் இருந்தபடியே, “அபி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… எனக்கு நீங்க ரெண்டு பேருமே இந்த வேலய பண்ணிருக்க மாட்டீங்கான்னு தோணுது” என்று மகிமா தயங்கியபடி சொல்ல,
அவளை சட்டென தன் மேல் இருந்து தள்ளிவிட்ட படி எழுந்து அமர்ந்தான் அபின்ஞான்…
அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள்…
“அந்த நம்பிக்கை துரோகிய எப்பிடி நம்ப சொல்ற… ஸ்கூல்ல எவ்வளவு அவமானப்பட்டேன் தெரியுமா? டீச்சர்ஸ் எல்லாம் என்ன பொம்பள பொறுக்கி மாதிரி பார்த்தாங்க… பசங்க என்ன அப்படி கேலி பண்ணாங்க… எல்லாரும் என்ன தலை மேல தூக்கி வெச்சு கொண்டாடிட்டு திடீர்னு எல்லாரும் கால்ல போட்டு மிதிச்சா எனக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு… இது எல்லாத்துக்கும் காரணம் உன் அண்ணா தான்… தேவுக்கு தான் சாயின்ஸ் டீச்சர ரொம்ப பிடிக்கும்… அவன் பண்ணிட்டு என்ன மாட்டி விட்டுட்டான்… பொறுக்கி” என்று அவனுக்கு திட்ட,
அவனை நெருங்கிய அமர்ந்து, அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டவள், “அபி எனக்கு உங்க வேதன புரியுது, லைஃப்ல மறக்க முடியாத ஒரு அவமானம் தான்… ஆனா நீங்க அவசரப்பட்டு ஒரு முடிவு எடுத்துட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்று அவள் கூற…
அவளை புரியாது பார்த்தான் அபின்ஞான்…
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “அண்ணாவும் லெட்டர் போடலன்னு அவ்ளோ உறுதியா அடிச்சு சொல்றான்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளிடம் இருந்து விலகப் பார்க்க… இன்னும் அவனை இறுக்கியணைத்துக் கொண்டவள், “சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்றவள்,
“நீங்க ரெண்டு பேரும் ஒரே விஷயத்தை தான் சொல்றீங்க… நான் உங்க ரெண்டு பேர் பக்கமும் இல்லாம நடுவுல இருந்து யோசிச்சு பார்க்க கிட்ட… உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த வேற யாரோ இத பண்ணி இருந்தா என்ன செய்வீங்க? எதுக்கும் அண்ணா கிட்ட நேரடியா போய் கேட்டுப் பார்க்கலாமே” என்று மகிமா கெஞ்சுதலாக கேட்க….
அபின்ஞானின் புருவங்களும் யோசனையாக சுருங்கின…
அவன் மனம் மாறுவதற்கு முன்பே, “வாங்களேன் போய் பேசிப் பார்க்கலாம்” என்று அவன் கைபிடித்து இழுக்க… அவனுக்கும் அது சரி என்று படவே அமைதியாகவே அவளுடன் சென்றான்…
எல்லோரும் கரன் அறையில் தான் இருந்தனர்…
சஞ்சனா வெளியே நின்று இருக்க, அவளை அழுத்தமாக பார்த்த அபின்ஞான்… மகிமாவை பார்த்து, “உனக்காக மட்டும் தான் தேவோட பேச வரேன்” என்று அப்போதும் தன் ஈகோவை விட்டு கொடுக்காமல் கரன் அறைக்குள் நுழைந்தான்…
“இவன் பட்டும் திருந்தலல்ல…” என்று மகிமாவை பார்த்து சஞ்சனா சொல்ல…
“இவனுங்க எல்லாம் திருந்தாத ஜென்மம்…” என்ற மகிமாவும் சஞ்சனாவுடன் சேர்ந்து, “இனி என்ன நடக்குமோ” என்ற பயத்திலே உள்ளே நுழைந்தாள்…
சஞ்சனாவின் அறைக்கு முன்னால் வந்து நின்ற மகாதேவ் சங்கடமாக அவள் அறைக்கதவை தட்டினான்…
இதுவரை சஞ்சனா தான் அவன் பின்னாலே சுற்றுவளே தவிர அவன் யார் பின்னாடியும் சென்றதில்லை…
சஞ்சனா அறைக் கதவை திறக்க, உள்ளே சென்றவன் அவளை உற்றுப் பார்த்தபடி, “ஏன் நீ ரொம்ப டிஸ்டர்பா இருக்க” என்றவன் குரலை செருமியபடி, “நேத்து ஹார்ஷா நடந்துட்டேனா? உனக்கு அன்கன்ஃபர்டர்பல்லா இருந்துச்சா?” என்று கேட்க,
அவளுக்கோ, அவனது இந்தக் கேள்வி உண்மையான அக்கறையா? அல்லது வெறும் நடிப்பா? என்று புரியவில்லை…
“ஐ அம் பைன்” என்றாள் பட்டும் படாமல்…
“ஓஹ் ஓகே… ஆனா ஏன் ஒருமாதிரி இருக்க? ஏதாவது பிரச்சினயா சஞ்சு… டெல் மீ” என்று அவள் கன்னத்தை மென்மையாக வருடியபடி கேட்க…
“நீ தான்டா என் பிரச்சினையே” என்று வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவள், “எனக்கு ஒரு பிரச்சனையுமே இல்ல தேவ்… கொஞ்சம் டயர்டா மட்டும் தான் இருக்கு… தட்ஸ் ஆல்… போட்டிங்க்கு போக டைம் ஆயிடுச்சு… நான் கிளம்பட்டுமா?” என்று கேட்டாள்…
“ஓகே” என்றவனுக்கு அவள் தன்னிடம் ஏதோ மறைப்பதாகவே தோன்றியது…
******
இன்றுடன் பசிபிக் சமுத்திரத்துக்கு வந்து மூன்று வாரங்கள் கடந்து விட்டன…
இதுவரை அவர்கள் தேடுவது இன்னும் கிடைக்கவில்லை…
தேடி தேடி கலைத்துப் போய் விட்டனர்… என்னவென்று முடிவெடுக்க முடியாத ஒரு நிலை…
இன்று போட்டிங் கொஞ்சம் தூரம் செல்லலாம் என்று தீர்மானித்திருந்தனர்…
அபின்ஞான் கடல் காற்றை ரசித்துக்கொண்டு விசில் அடித்தபடி கூலாக, படகை ஓட்டிக் கொண்டிருந்தான்…
அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்த மகிமா… “நாம எவ்ளோ ஆபத்தான இடத்துல இருக்கோம், நீங்க இப்படி கூலா இருக்கீங்க? உங்களுக்கு பயமே இல்லையா” என்று கேட்க,
அவளைப் பார்த்து சிரித்தவன், “நான் வந்த நோக்கம் நடக்கணும்ன்னா… அதுக்கு பயப்படுறது டென்ஷன் ஆகுறது வேஸ்டான ஒரு விஷயம்… நாம டென்ஷன் ஆகினா எங்களை சுத்தி இருக்கிற இயற்கையே எங்களுக்கு எதிரா சூழ்ச்சி வலை பின்ன சான்ஸ் இருக்கு… கூலா ரிலாக்ஸா இருந்தா எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிச்சிடலாம்” என்றான் சுற்றியும் தன் கூறான விழிகளால் ஊன்றி கவனித்தபடியே…
“நல்ல பிளேன் தான்” என்ற படி கடலை பார்க்கத் தொடங்கினாள் மகிமா…
மகாதேவ் கேமராவை கடலினுள் அனுப்பி அதை ரிமோட் மூலம் இயக்கிக் கொண்டிருக்க, டச்பேர்ட் திரையைப் பார்த்த ராகவ், “இங்கேயாவது நாம தேட்றது இருக்குமாடா?” என்று கேட்க,
“ம்ஹூம்… இங்க இருக்க வாய்ப்பே இல்ல… நாளைக்கு வந்து வேற இடத்துல தான் தேடணும்… லேட்டாயிடுச்சு நாம இப்ப கிளம்பலாம்” என்று கேமராவை மேலே எடுக்க ராகவ் படகை எடுத்தான்…
கரன் இன்று சென்ற பகுதியோ அதிக ஆழமாக இருந்தது…
இதற்கு மேல் செல்வது பாதுகாப்பு இல்லை என்பதால் கேமராவை பாதுகாப்பாக ஆழமான ஒரு இடத்தை நோக்கி வீசிய கரன் மேலே வரத் தயாரானான்…
சஞ்சனா திரையில் அவனைப் பார்த்தபடி, “இன்னைக்கு உள்ள ரொம்ப டார்க்கா இருக்கு…” என முனு முனுத்தவளது கண்களோ அதிர்ந்து விரிந்தன…
கரனை நோக்கி ஏதோ ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது… இருட்டில் அது சரியாக விளங்கவில்லை…
“கடவுளே…” என்றவள் அவனுக்கு ஆபத்து சொல்வதற்காக அவள் டச் பேடில் இருந்த பட்டனை அழுத்த… கரன் கையில் இருந்த சிவப்பு நிற சென்சர் லைட்டோ ஒளிரத் தொடங்கியது…
சென்சர் லைட் எரிவதை கண்ட கரன், ஏதாவது ஆபத்தா என்று சுற்றியும் பார்க்க… அவன் கண்களுக்கு எதுவுமே புலப்படவில்லை…
திடீரென நீர் கலங்கலாக மாற சிறிய மீன்களை உள்ளடக்கிய மீன் கூட்டங்கள் அவனை தாண்டிச் சென்றன…
“ஓஹ்… இது தான் வந்திருக்கு” என நினைத்தவன், இதற்கு மேல் இருக்க முடியாது என்று வேகமாக மேல் நோக்கி நீந்த ஆரம்பித்தான்….
அவனை சுற்றி எதோ வித்தியாசமாக நடப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது… ஆனால் என்ன வென்று தான் புரியவில்லை…
கடலின் ஆழ் பகுதியிலிருந்து மேல் நோக்கிச் செல்ல வேண்டுமே…
ஏதேர்ச்சையாக பின்னால் திரும்பி பார்த்தவனது கண்களோ உச்சகட்ட மின்சாரம் தாக்கியது போல் விரிந்து கொண்டன…
அடுத்த கணம் அவன் மூளை வேகமாக செயல்பட அசுர வேகத்தில் நீந்த தொடங்கினான்…
அவனை விட ஐந்து மடங்கு பெரிய சூறா போன்ற ஒரு உயிரினம்… அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது…
உயிர் பயத்தில் அவன் வேகமோ அலாதியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவனால் நீந்த முடிய வில்லை….
அவன் உடல் எதிலோ சிக்கி விட்ட உணர்வு…
பின்னால் திரும்பி பார்க்காமலே மேல் நோக்கி செல்ல முயன்று கொண்டிருந்தான் கரன்.
சஞ்சனாவோ தன் கையில் இருந்த வொக்கி டாக்கியை பயன்படுத்தி அபின்ஞானை தொடர்பு கொள்ள அவளுக்கு இருந்த பதற்றத்தில் அதுவோ சரியாக வேலை செய்யவில்லை…
“ஷிட்…” என்றவள், அதன் பட்டன்களை கண்டபடி அமுக்கிப் பார்க்க எதுவும் சரியாக அமைந்து விடவில்லை…
அதை தூக்கி போட்டில் போட்டவள் டச்பேர்டை பார்க்க… கடல் நீரோ தனி சிவப்பு நீராக காட்சியளித்துக் கொண்டிருந்தது…
“ஓ மை காட்” என்றவள் அவசர தேவைக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டவள் எதைப் பற்றியும் யோசிக்காமல் கடலில் குதித்தவள், ஆழம் நோக்கி நீந்தத் துவங்கினாள்….
இது அனைத்தும் முப்பது வினாடிகளுக்குள்ளே நடந்து முடிந்து விட்டது…
அபின்ஞான் வாக்கி டாக்கியில் ஏதோ சத்தம் கேட்க அதை எடுத்துப் பார்த்தான்…
யாரோ அவனை தொடர்பு கொள்ள முயன்றிருப்பது புரிந்தது…
சஞ்சனா தான் என்பதை புரிந்து கொண்டவன், அவளை தொடர்பு கொள்ள முயல அந்தப் பக்கத்திலிருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை…
அபின்ஞானோ கப்பலை நெருங்கி விட்டிருந்தான்…
படகை வேகமாக திருப்பியவன், மகிமாவை பார்த்து, “தேவ்க்கு பாஸ்ட்டா சஞ்சனாட போட் இருக்க இடத்துக்கு போக சொல்லு” என்றவன் படுவேகமாக அவர்களை நோக்கி செல்ல தொடங்கினான்…
மகிமாவுக்கும் ஏதோ பெரிய பிரச்சினை என்று புரிந்ததால் எந்தக் கேள்வியும் இன்றி வேகமாக தேவுக்கு விஷயத்தை கூறினாள்…
சஞ்சனா நீந்திக்கொண்டு ஆழத்துக்கு செல்லும்போதே… அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்தான் கரன்…
சஞ்சனா அவனை அதிர்ந்து பார்க்க… செய்கையால் அவளை மேலே போகும் படி கூறினான்…
அவளும் வேகமாக மேலே நீந்த தொடங்கினாள்…
போட்டில் ஏறியவள் கரன் ஏறுவதற்காக, கையை கொடுக்க அவனால் சரியாக ஏறிக்கொள்ள முடியவில்லை…
அவனை கஷ்டப்பட்டு இழுத்து போட்டில் போட்டவள், அவன் காலை பார்த்ததும், அவள் விழிகளோ கண்ணீர் கொட்ட தொடங்கியது…
செயலிழந்து நின்று விட்டாள் சஞ்சனா…
“குயிக்கா போட்ட எடு” என்று கரன் கூற… சஞ்சனாவோ அசையாமல் நின்று இருந்தாள்…
“அவசரமா எடு… குயிக் சஞ்சு ” என்று அவன் தொண்டை கிளிய கத்தியதுமே போட்டை வேகமாக செலுத்த ஆரம்பித்தாள்…
தன் கண்களில் வலிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்த படியே நடுங்கும் கரங்களை கட்டுப்படுத்திய படி படகை செலுத்திக் கொண்டிருந்தாள்…
எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதே அவளுக்கு மறந்து விட்டது…
அவள் இதயம் வெளியே வந்தது போல் சத்தமாக துடித்துக் கொண்டிருந்தது…
அவள் மேனியோ பதறி நடுங்கிக் கொண்டிருந்தது…
அதேநேரம் சஞ்சனாவை தேடிக் கொண்டிருந்த மகாதேவின் கண்ணிலும் அவர்கள் பட்டுவிட அவனும் வேகமாக இவர்களை நெருங்கினான்…
“சஞ்சனா மரியாதையா சொல்லிட்டேன் நிப்பாட்டாம போடி” என்று கரன் வலியில் மீண்டும் கத்த,
அதற்கு மேல் படகை செலுத்துவதற்கு கொஞ்சமுமே அவள் உடலிலோ மனதிலோ பலமில்லை…
அழுதபடியே போட்டை நிறுத்தி விட்டாள் சஞ்சனா…
கரனது படகுக்கு இரு பக்கமும் அபின்ஞானும் மகாதேவும் தம் படகை நிறுத்தியவர்கள் வேகமாக கரனது படகில் ஏரிக்கொண்டவர்கள், சஞ்சனாவை பார்த்து, ஃபாஸ்ட்டா மகி போட்கு போ” என்று அவளை அனுப்பிய அபின்ஞான், ராகவை பார்த்து, “ஃபாஸ்ட்டா ஷிப்புக்கு போய் மெசேஜ் குடு” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே தேவ் கரனின் படகை ஓட்ட ஆரம்பித்து விட்டான்…
முதலுதவியைப் பெட்டியை எடுத்த அபின்ஞான் கரனின் அருகே அமர்ந்து, அவன் காலைப் பார்த்தான்…
அவனின் தொடை பகுதியில் உள்ளங்கை அளவான ஒரு சதை பகுதி பிளந்து அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது…
கப்பலுக்கு செல்லும் வரை அவனது ரத்தப்போக்கை நிறுத்த வேண்டுமே…
பஞ்சையும்… பெண்டேஜையும் எடுத்தவன், வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை தடுத்து பஞ்சை காயத்தின் மேல் அழுத்தமாக வைத்து பிடித்துக் கொண்டான்….
“ஆஆஆஆ…..” என்று கத்தியவனுக்கோ தன்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு வலி…
“கொஞ்சம் பொறுத்துக்கோடா போயிடலாம்…” என்ற அபின்ஞானது சமாதான வார்த்தைகள் அவன் காதில் ஏறவில்லை…
அதிகமான ரத்தப்போக்கால் அவனுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது…
தன் ரத்தம் பட்ட கையாலே அவன் கன்னத்தை தட்டிய அபின்ஞான், “டேய் என்ன பாரு… தூங்கிடாதே…” என்று பேசிக்கொண்டே, “பாஸ்டா போ தேவ்” என்று கரன் மயங்கி விடாமல் இருக்க அவன் கன்னத்தில் தட்டிய படியே கத்தினான்…
அவர்களது சென்ற வேகத்திற்கு ஐந்து நிமிடங்களிலே கப்பலை அடைந்து விட்டனர்…
ராகவ் சென்று வைத்தியர்களுக்கு அறிவித்திருந்ததால்… கரனின் சிகிச்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன…
நான்கு பக்கமும் விழாமல் மூடப்பட்டு படுக்கை போன்ற ஒன்று மேலிருந்து கீழே தொங்க போடப்பட்டிருந்தது…
அதில் அபின்ஞானும் மகாதேவும் சேர்ந்து கரனை வைக்க… மேலிருந்தவர்கள் சேர்ந்து இழுத்து, அவனை அவசர சிகிச்சை பிரிவுக்கு அவனை எடுத்துச் சென்றனர்…
அனைத்து வைத்திய வசதிகளையும் செய்து வைத்திருந்தது இப்பொழுது உதவியாக இருந்தது…
இப்பொழுதுதான் அனைவருக்கும் மூச்சே வந்தது…
ஆசுவாசமாக மூச்சு விட்ட மகாதேவ் சஞ்சனாவை தேடி விழிகளை சூழல விட்டான்…
அவளோ சோர்ந்து போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.
வேகமாக அவள் அருகே சென்றவன், அவள் கையில் இடது முழங்கைக்கு கொஞ்சம் மேலே கிழித்து அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருக்க… அதிர்ந்தவன், “உனக்கும் அடிபட்டு இருக்கு சஞ்சு… பெஸ்ட் எய்ட் எடுக்காம இங்க என்ன பண்ற” என்றபடி அவளை வைத்தியரிடம் அழைத்து சென்றான்…
மருந்திட்டு பிளாஸ்டர் ஒட்டிய வைத்தியர், “ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
கரனுக்கோ அதிகமான ரத்த இழப்பு ஏற்பட்டிருந்ததால் ரத்தம் தேவைப்பட்டது… வெளிய வந்த வைத்தியர், “ஓ பொசிடிவ் பிளட் வேணும்” என்று கூற அபின்ஞானுக்கோ என்ன செய்வதென்றே விளங்கவில்லை…
இந்த நடுக்கடலில் எங்கே அவன் ரத்தம் தேடி செல்வான்…
அங்கிருந்த மகாதேவ், “நான் மகிமாவ அழைச்சிட்டு வரேன்… அவளும் இதே ப்ளாட் குரூப் தான்” என்றவன் மகிமாவை அழைத்து வர, அவளிடம் இரத்தம் எடுக்கப்பட்டதன் பின் கரனுடைய சத்திர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது…
ஐந்து மணித்தியாலங்களாக சத்திர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது…
அவனுக்கான சிகிச்சை முடிந்ததும் வைத்தியர் வெளியே வரவும், அனைவரும் அவரை தான் பார்த்தனர்,
“பதினஞ்சி ஸ்டிசஸ் போட்டிருக்கோம்… நல்லவேளை அவர்ட போர்ன்ஸ்கு எந்த ஒரு டேமேஜ்மே இல்ல… ஒரே ஒரு எலும்பு மட்டும் கொஞ்சம் டேமேஜ் ஆயிருக்கு ஆனா அதை ட்ரீட்மென்ட் மூலம் சரி பண்ணிடலாம்… டோன்ட் ஒரி” என்று படி கரனை பார்க்க சென்றார்…
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர்…
இதுவரை என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை.
ஆனால் உயிர் போய் திரும்பி வந்தது போல் தான் இருந்தது…
கப்பலில் அபின்ஞான் ஒரு மினி ஐசியு யை கட்டியிருந்ததால் இந்த சந்தர்ப்பத்தில் அது மிகவும் உதவியாக அமைந்துவிட்டது.
ஆடம்பரத்தின் உச்சமாக மட்டும் கப்பலை கட்டாமல்… எல்லா வகையான வசதிகளையும் செய்து வைத்திருந்ததால் ஒரு உயிர் தப்பித்துக் கொண்டது…
ஐசியுவுக்கு வெளியே அபின்ஞானும் மகாதேவும் அருகருகே நின்று இருந்தனர்.
அவர்கள் முன்னால் வந்து நின்றாள் சஞ்சனா….
“இப்போ உங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷமா இருக்குமே… ரெண்டு பேரும் நல்லா சண்டை போட்டுக்கோங்க… ஏன் இப்ப மட்டும் சேர்ந்து இருக்கீங்க… போங்க போய் தனித் தனியா உங்க வேலைய பாருங்க… உங்க ரெண்டு பேர்ட்ட ஈகோ தான் ஜெயிச்சுடுச்சு… லாஸ்ட் வரைக்கும் நாம பிரிஞ்சு தான் வேல பாத்துட்டு இருக்கோம்… கரனுக்கு ஏதாவது நடந்திருந்தா தான் உங்களுக்கு இன்னும் கொண்டாட்டமா இருந்திருக்கும்… அவன் பேரன்ஸ்க்கு என்ன பதில் சொல்லுவீங்க ரெண்டு பேரும்” என்று இன்றய அதிர்ச்சி வேதனை இது வரை மறைத்திருந்த ரகசியங்களை தன்னை மறந்த நிலையில் ஆவேசமாக கொட்டத் தொடங்கினாள்…
எவ்வளவு தனிமையை உணர்ந்திருந்தால் கொஞ்சம் அரவணைப்பாக நடந்து கொண்டதும் மனதில் உள்ள அனைத்தையும் கூறிவிட்டு இருப்பான்…
பெருமூச்சுடன் அவன் தலையை வருடியபடி இருந்தாள் சஞ்சனா…
தன் மனதில் இருந்த அழுத்தங்களை கூறியதுமே மனதுக்கு இதமாக இருந்தது அவனுக்கு…
அப்போதுதான் அவனுக்கு தான் சஞ்சனாவுடன் நெருக்கமாக இருப்பதே புரிய… வேகமாக அவளிடம் இருந்து விலகிக் கொண்டான்…
விலகியதும் தான் அவள் இடையின் மென்மையை உணர்ந்தவன், நிமிர்ந்து அவள் வயிற்றைப் பார்த்தான்…
அவன் அவள் வயிற்றில் முகம் புதைத்திருந்ததால் இடுப்பு சேலை விலகி அவள் வெண்ணிற இடையோ பளிச்சென்று தெரிந்தது…
அவனுக்கு அவள் இடுப்பு இப்போதே தொட்டு விட வேண்டும் என்ற அவா…
தன்னை மீறி கையையும் நீட்டியும் விட்டான்…
நல்லவேளை அவள் பார்க்கவில்லை கையை பின்னுக்கு இழுத்தவன், “என்னடா பண்ற அவ கண்டிருந்தா உன்ன காஞ்ச மாடுன்னு நினைச்சிருப்பா… ” தனக்குத்தானே மனதினுள் ஏசியவன், தனக்குள் நிகழும் மாற்றங்கள் என்னவென்று புரியாமல், “சஞ்சு நீ போ…” என்று அவளை விரட்டப் பார்த்தான்…
இதற்குமேல் அவள் இருந்தால் தன்னை மீறி ஏதாவது செய்து விடுவான்…
மகாதேவ் பெண்களோட நன்றாக கதைப்பான்…
அவர்கள் அழகை ரசித்து விமர்சித்துக் கொள்வான்…
இதுவரை சஞ்சனாவை அப்படி ஒரு கோணத்தில் பார்த்ததே இல்லை…
அவளுக்கு அவன் உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருப்பது புரியவில்லை…
அவன் அருகே நெருங்கி உட்கார்ந்தவள், “தேவ் கவலைப்படாதே… நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்…. சும்மா யோசிச்சு தலைவலிய தேடிக்காம கூலா இரு” என்றவாறு அவன் தலையை வருட,
“ஐயோ… இவ வேற நேரம் காலம் தெரியாம, அட்வைஸ் பண்ணிட்டு இருக்கா…. போக சொன்னா போகாம என்ன போட்டு வதவாங்குற… நான் எவ்வளோ நேரம் தான் என்ன கட்டுப்படுத்திட்டு இருக்கிறது” என்று மனதிற்குள் போராடிக் கொண்டிருந்தவன்… அவள் வார்த்தைகள் தந்த தைரியத்தில்,
“அதுதானே இவ என்ன காதலிக்கிறா… என்ன நல்லா பாத்துக்குறா… அபிக்காகவாவது நான் இவள கல்யாணம் பண்ணிக்கணும்… வேற என்ன வேண்டும்” தனக்குத்தானே பல நியாயங்களை முன்வைத்தவன்… தன் சங்கடங்களை அகற்றி அவளை பார்த்தான்…
சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது…
மாநிறத்துக்கும் சற்று அதிகமான நிறம்…
மெலிவான தோற்றம்…
“வாவ் இவ்ளோ அழகா இருக்கா… இவ்ளோ நாளும் ரசிக்காம விட்டுட்டேனே ” என நினைத்தவன் கண்களோ அவள் சங்கு கழுத்தை தாண்டி கீழே பயணிக்க… குரலை செருமியபடி தலையை கோதிக் கொண்டான்…
“இவ இதுக்கு மேல இங்க இருந்தா நாம தான் கஷ்டப்படணும்” என்று நினைத்தவன் அவள் அருகில் இருந்து எழுந்தான்.
“சஞ்சு நீ போ…” என்றான் மீண்டும்…
“ஏன் தேவ்… நானும் வந்ததிலிருந்தே பார்க்கிறேன்… என்ன விரட்றதிலே குறியா இருக்க… உனக்கு என் காதல் கொஞ்சமுமே புரியலையா” என்று கேட்டாள்…
“புரிஞ்சதால தானே உன்னை ஏதாவது பண்ணிடுவேன்னு அனுப்ப பார்க்குறேன்… கூடவே இருந்து இம்ச பண்ணுறா” என்று நினைத்தவன், “நாம இத நாளைக்கு பேசிக்கலாம்…” என்றான் ஆற்றில் ஓடும் மீனில் நழுவும் மீனாக…
அவளோ மீனை பிடிக்கும் கொக்காக நின்று, “எனக்கு இப்ப ஒரு பதில் தெரிஞ்சே ஆகணும்” என்றபடி அவனை நெருங்கி நிற்க… அவன் கட்டுப்பாடுகள் அனைத்தும் அவள் முன்னாள் தகர்ந்து தான் போயின…
அவள் ஈரமான உதடுகளோ பள பள என மினுங்கிக் கொண்டிருக்க… வண்டை ஈர்க்கும் தேனாக அவனை ஈர்த்து விட, சற்றும் யோசிக்காமல் அவள் கழுத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன்… தன்னை மயக்கிய உதடுகளுக்கு தண்டனை வழங்க ஆரம்பித்து விட்டான்…
முதலிலேல் அதிர்ந்தவள் பின் லயிக்க ஆரம்பித்து விட்டாள்…
காதல் கொண்ட ஆண்மகனின் இதழ் முத்தம் கசக்குமா என்ன அவளுக்கு…
கண்களை மெதுவாக மூடிக்கொண்டாள்…
அவள் இதழ்களில் இருந்து தன் இதழ்களை பிரித்து எடுத்தவன்… “சஞ்சு ஐ நீட் யூ “என்றான்…
அவளோ அவனால் உண்டாகிய உணர்வுகளிலிருந்து விடுபட முடியாமல் இருக்க… அவனோ அடுத்த இடியாக அவளையே வேண்டும் என்று கேட்டு விட…
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை…
“தேவ் நம்ம கல்யாணத்துக்கு பிறகு…” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும்போதே…
“என் மேலஉனக்கு நம்பிக்க இல்லயா” என்று எதிர் கேள்வி கேட்டான்…
“உன்ன நம்பாம வேற யார நம்புவேன்… ஆனா…” என்று சஞ்சனா இழுக்க, அவனுக்கோ அவளது அந்த பதிலே போதுமானதாக இருந்தது…
அவளை கட்டில் சரித்து அவள் மேல் படர தொடங்கி விட்டான் அவளது தேவ்…
ஐம் பூதங்கள் மட்டுமே அவர்களுக்கு கூடலுக்கு சாட்சியாகிப் போனது…
அடுத்த நாள் விடியலில் அவள் கண் விழிக்கும்போது அவனது இறுக்கமான அணைப்பில் இருந்தாள்…
மெதுவாக அவன் வெற்று மார்பிலிருந்து தலையை தூக்கி பார்த்தாள்…
நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்…
அவன் இறுக்கமான அணைப்பில் அவளுக்குத்தான் மூச்சு முட்டியது…
மெதுவாக அவன் கைவளைவில் இருந்து வெளியே வந்தவள், அணிந்திருந்த சேலையைத் தேட அதுவோ கிழிந்து போய் இருந்தது…
அதை பார்த்துவிட்டு அவனைப் பார்த்தவள், “காஞ்சமாடு மாதிரி பஞ்சுடான்… காஜிப் பய…” என்று அவனுக்கு வாய்க்குள் திட்ட,
அவள் அசைவில் எழுந்து கொண்டவனுக்கும் கேட்டது…
கண்களை திறந்து அவளைப் பார்த்தவன், “ஏய் நீயும் எனக்கு ஏத்த காஜி பொண்ணு தான்… இங்க பாரு என்ன எப்படி கடிச்சு வச்சிருக்கன்னு… அதுமட்டுமில்லாம…” என்று அவன் எதோ சொல்ல வர… அவன் வாயை மூடியவள், “போதும்” என்றபடி, நேற்று இரவு அவன் அணிந்திருந்த டீ ஷர்டை போட்டவள் குளியலறைக்குள் செல்ல, அவனும் அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான்…
குளியலறையில் வெளிய வந்த சஞ்சனா தேவை பார்க்க… அவனோ குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்…
நேரத்தை பார்த்தால் ஆறு மணி ஆகிவிட்டிருந்தது…
அந்த அறையின் கடினமான திரைச்சீலைகளை தாண்டி வெளிச்சம் உள்ளே வரவில்லை…
“ஐயோ யாரும் பார்க்காம ரூமுக்கு போகணும்” என நினைத்துக் கொண்டவள், இருட்டிலே அவன் அறைக்குள் உலாவ… அங்கே போடப்பட்டிருந்த மேசையில் காலை இடித்துக் கொண்டாள்…
“ஸ்ஸ்… இந்த மேசை வேற…” என காலை தடவியபடியே மேசைக்கு முன்னால் இருந்து இருக்கையில் அமர்ந்து கொண்டவள், மேசையை பார்க்க அங்கே அவன் டயரி இருந்து…
“ஓஹ்… டைரி எழுதுவானா” என நினைத்தபடி அதை எடுத்தவளுக்கு பிரித்துப் பார்க்க யோசித்தாள்…
“பரவால்ல அப்படி என்ன எழுதியிருக்க போறான்” என்று முன்னாள் இருந்த டேபில் லாம்பை போட்டவள் சிரித்த படி வாசிக்க தொடங்கினாள்…
வாசித்து முடியும்போது அவள் முகமோ கறுத்து இருகியது.
அபின்ஞான் மகிமாவிடம் கதைத்ததையும், அதற்குப் அவன் பழி வாங்க வேண்டும் என்று நினைத்ததையும் எழுதி இருந்தான்.
அவள் கண்களில் இருந்து தாரை தரையாக கண்ணீர் வழிந்தது…
“பழிவாங்க என்ன யூஸ் பண்ணானா” என்று யோசிக்கவே அவளால் முடியவில்லை…
அவன் டி ஷர்டுக்கு மேல், வாட்ரோப்பை அணிந்து கொண்டவள் அவள் அறைக்குச் சென்றாள்…
அவளுக்கோ அழுகையை அடக்கவே முடியவில்லை…
ஏங்கி ஏங்கி அழுதாள்…
மெதுவாக எழுந்த தேவ் சஞ்சனாவை தேட, அவளோ அவன் அறைக்குள் இல்லை, “அதுக்குள்ள எழும்பி போய்ட்டாளா” என்றபடி அவள் இதமான நினைவுகளுடனே குளித்து தயாராகி வெளியே வந்தவன் விழிகள் அவளைத் தேடித் தேடி கலைத்துப் போயின…
அவனருகே வந்த ராகவ், “தேவ் எல்லாரும் மீட்டிங் ரூமுக்கு போறோம்… நீ வரலயா?” என்று கேட்க,
நீ போ… நான் பைவ் மினிட்ஸ்ல வரேன்டா” என்று ராகவை அனுப்பியவன் அவளைத் தேட அவளோ அவன் கண்ணில் அகப்படவே இல்லை…
சலிப்பாக தலையை இரு பக்கம் ஆட்டியபடியே மீட்டிங் ரூமுக்கு சென்றான்…
அவன் செல்லும்போது தான் அபின்ஞானும் வந்து கொண்டிருந்தான்…
இருவரும் ஒருவரை ஒருவர் அனல் தெறிக்க பார்த்த படியே ஒன்றாகவே உள்ளே நுழைந்தனர்…
மற்றவர்களும் அங்கேதான் இருந்தனர் சஞ்சனா உட்பட…
தேவ் சென்று அபின்ஞான் பார்க்க வென்றே சஞ்சனாவுக்கு அருகே அமர்ந்து கொண்டான்…
அபின்ஞான் தேவுக்கு நேர் எதிராக அமர்ந்து கொண்டான்…
கரனும் ராகவும் யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்து இருந்தனர்…
“சப்மேரின்ன (submarine -நீர் மூழ்கிக் கப்பல்) முதல்ல நான் தான் யூஸ் பண்ணுவேன்” என்று அபின்ஞான் ஆரம்பித்து வைக்க,
“நீ பர்ஸ்ட்கு யூஸ் பண்ணி அதில ஏதேனும் பிராப்ளம் வந்தா நான் எப்படி உள்ள போவேன்… அதனால நான் தான் ஃபர்ஸ்ட் யூஸ் பண்ணுவேன்” என்றான் தேவ் மறுப்பாக…
“ஸ்டார்ட் பண்ணிட்டானுங்க” என்றான் கரன், “நாம தேட்ற எக்ஸ் த்ரீ (x3) பாக்ஸ் எங்க இருக்குன்னே கண்டுபிடிக்கல… அதுக்குள்ள இவனுங்க அத எடுக்க போறதுக்கு மீட்டிங் போட்டு சப்மெரினுக்காக அடிச்சுக்க ஆரம்பிச்சிட்டானுங்க…” என்று சஞ்சனாவின் காதில் கூற,
“லாஸ்டா என்ன முடிவு வருதோ அதுக்கு நாம தலையாட்ட வேண்டியது தான்” என்றாள் சஞ்சனா மெதுவாக…
“ம்ம்” என்று இப்போதே தலையாட்டிக்கொண்டான் கரன்…
“டேய்… இது என் ஷிப்… நீ எனக்கே ஆர்டர் போட வராதே” என்றான் அபின்ஞான்.
“நான் வந்தன்னக்கே இந்த ஷிப்க்கு பாதி பேமென்ட் உன் அக்கௌன்ட்கு ட்ரான்ஸ்பெர் பண்ணிட்டேன்… அதனால இந்த ஷிப்ல எனக்கும் சம உரிமை இருக்கு” என்றான் தேவ் இறுமாப்புடன்…
“நீ இப்படி சொல்லுவன்னு தெரிஞ்சு தான்… அந்த பேமெண்ட திருப்ப உனக்கே டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டேன்” என்று அமர்த்தலாக இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த படி கூறினான் அபின்ஞான்…
மகிமாவோ எந்த உணர்வுமின்றி அவர்கள் இருவரையும் பார்த்திருந்தாள்…
இருவரும் தத்தம் ஈகோவில் சளைத்தவர்கள் அல்லவே…
சஞ்சனாவுக்கும் அதே எண்ணம் தான்…
அவன் திமிரான பேச்சில் மகாதேவ் இருக்கையில் இருந்து எழுந்த வேகத்தில், அவ்விருக்கையோ தூர சென்று விழுந்தது…
அனைவரும் தேவை அதிர்ந்து பார்க்க, அவனோ அதே வேகத்தில் அபின்ஞான் அருகே சென்று அவன் ஷர்ட் காலரை பற்றி இழுத்தவன், “டேய் நடிக்கிறியா டா… என் ஷிப்ப உடைச்சு உன் கூட எங்கள வர வச்சது நீ… நீ பண்ணதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்… எனக்கு முழு நியூஸும் வந்துடுச்சு… இப்படி சீப்பா நடிக்காதே” என்று அவன் காலரை பற்றி உலுக்கியபடி கூற,
மகிமா இருவரையும் புரியாது பார்த்தாள்… ஆக மொத்தம் அவளை தன்னுடன் வரவைக்க என்ன வேலை எல்லாம் பார்த்திருக்கிறான்… இப்போது அவன் மீது கோபப்படவும் முடியவில்லை…
அவன் செய்கையில் தன்னை மீறி அவள் மனதினுள் ஒரு இதம் பரவியது என்னவோ உண்மை…
அவனைப் போலவே அடங்காத அவனது கேசம் இன்றும் அவன் முன்நெற்றியில் விழுந்து அவனை மேலும் அழகனாகிக் கொண்டிருந்தன…
அழுத்தமான உதடுகள்… “இந்த லிப்ஸ்ல லேசில சிரிக்காது…” என நினைத்தவளது பார்வையோ அவன் முகத்தை தாண்டி கீழ் இறங்கியது…
ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டு அவன் அருகே செல்லவும், அப்போதுதான் அவள் வந்திருப்பதை கண்டான் அபின்ஞான்…
“நீயும் எக்ஸைஸ் பண்ண வந்தியா… லேடிஸ் ஜிம் போய்ருக்கலாமே” என்று கேட்க,
“என் டிரஸ்ஸ பாத்தா ஜிம் பண்ண வந்த மாதிரியா இருக்கு…” என்று தன்னை குனிந்து பார்த்தபடி கேட்டாள்…
அவன் பதில் சொல்லாமல் இருக்க… “உங்களத்தான் பார்க்க வந்தேன்” என்று சொல்லியபடி அவனை நெருங்கி நின்று, அவன் டையமண்ட் டேட்டூவை தொட பார்க்க, சட்டென அவள் கையை பிடித்துக் கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தான்…
அவளோ ஒற்றைப் புருவம் உயர்த்தி ‘என்ன’ என்பது போல் பார்க்க, “இப்ப டச் பண்ணாதே” என்றான் குரலை செருமிய படி…
இதழ்களுக்குள் சிரித்தவள், “நீங்கதான் சொன்னீங்களே ஆசைப்பட்டா தொடலாம்ன்னு” என்று இழுவையாக சொல்ல…
“என்னடி காலையிலேயே பிரச்சின பண்ணனும்ன்னு வந்திருக்கியா?” என கேட்டான்.
“இல்லயே… உங்கள பார்க்க ஆசையா இருந்துச்சு… அதுதான் வந்தேன்” என்றவள்,
அவன் சிக்ஸ் பேக் தேகத்தை பார்த்து, “வாவ் செம்மயா இருக்கு… நான் இத தொட்டு பார்க்கவா” என கேட்ட படி கையை நீட்ட, அப்போதும் அவள் கையை தடுத்து பிடித்தவன், “இதுவரக்கும் நீ என்ன தொட்டதே இல்ல பாரு… இன்னக்கி புதுசா பாக்கிற… காலையிலே டெம்ப்ட் பண்ணி மனுஷன கஷ்டப் படுத்தாம போடி” என்றான் அவளை முறைத்தபடி…
“நான் என்ன பண்னேன் இப்ப… நீங்க என்ன கண்ட கண்ட நேரத்துல தொடுவீங்க… நான் என்ன உங்கள மாதிரி புலம்பிட்டா இருக்கேன்” என்று அவள் சிரித்தபடி கேட்க,
“இன்னக்கி என்ன ஒரு மார்க்கமா இருக்கா” என நினைத்தவன் வராத கோபத்தை வர வலைத்தபடி, “என்னடி நக்கலா?” என்றான்.
“இல்லயே உண்மையா தான் சொன்னேன்” என்றாள் சிரிப்பை கட்டுப்படுத்திய படி…
“சரி எங்க வேணுமோ தொட்டுக்கோ… ஆனா நான் ஆரம்பிச்சா நீ தாங்க மாட்ட…” என்று அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டு கூற…
“எனக்கு எதுக்கு வம்பு… நீங்க உங்க பாட்டுக்கு எக்ஸர்சைஸ் பண்ணுங்க” என்றவள் அங்கிருந்து திரும்பி நடக்க பார்க்க…
அவளை மரித்தபடி அவள் முன்னாள் வந்து நின்றவன், “வந்ததோட வந்துட்ட… கிஸ் பண்ணிட்டே போ” என்றான்…
“அடப்பாவி…” என்று வாயில் கையை வைத்துக் கொண்டவள், “இவ்ளோ நேரமா என்னமோ பேசினீங்க… நிறைய வேலை இருக்கு… டெம்ப் பண்ணாதேன்னு சொல்லிட்டு இருந்தீங்க…” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே, அவள் வாயில் கை வைத்தவன், “போதும்மா நீ கெளம்பு” என்று கைகளை கூப்பியபடி கூறினான்…
அவன் பேச்சில் சிரித்தவள் அவன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டவள், “அபி நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்” என்றாள்…
“என்ன விஷயம்” என்று புருவம் சுருக்கி கேட்டான்.
“நீங்க சஞ்சனாவயும் அண்ணாவையும் உண்மையாவே பிரிச்சிடுவீங்களா?” என்று கேட்டாள்.
“இங்க பாரு மகி… நான் ஏற்கனவே சொல்லிட்டேன்… ஒரு நாளும் சஞ்சனாவ நான் அவனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன்… தேவ் சஞ்சனாவ லவ் பண்ணா கூட அவங்கள சேர விடவும் மாட்டேன்” என்று அபின்ஞான் கராறாக கூறவும்,
“நீங்க மாறிட்டீங்கன்னு நினைச்சேன், ஆனா அதே மாதிரியே தான் இருக்கீங்க” என்றாள் வேதனையாக…
“யார் சொன்னா… நான் மாறினேன்னு நம்ம போட்ட எக்ரிமெண்ட் கூட அப்படியே தான் இருக்கு… இங்கிருந்து போனதும் நாம டிவோர்ஸ் எடுத்துக்கலாம்” என்றான் ஒற்றை கண்ணை சிமிட்டி…
மகிமாவை சந்திப்பதற்காக அவளைத் தேடி வந்த தேவுக்கோ, அபின்ஞான் கதைத்தது முழுவதும் கேட்டுவிட அவனுக்கோ கழுத்து நரம்புகள் புடைத்து கிளம்பின…
“எங்க வீட்டு பொண்ண… நீ பழி வாங்க கல்யாணம் பண்ணி டிவோஸ் பண்ணுவியாடா… ஓஹ் நீ எனக்கு சஞ்சனாவ கல்யாணம் பண்ணி தர மாட்டியா… என் லைஃப்ல முடிவெடுக்க நீ யாருடா? இனி நானும் சும்மா இருக்க மாட்டேன்” என நினைத்தவன் மகிமவுடன் பேசாமலே கோபமாக அங்கிருந்து சென்றான்…
அவன் எதேர்ச்சியாகத்தான் இதை கேட்க நேர்ந்தது…
ஆனால் ஒட்டுக்கேற்பவர்கள் பொதுவாக நல்லதை கேட்பதில்லை என்பது மகாதேவ் விஷயத்தில் உண்மையாகிப்போனது…
அபின்ஞானுக்கோ மகிமாவை டிவோஸ் பண்ணும் எண்ணம் கடுகளவும் இல்லை…
அவன் விளையாட்டாக தான் அவளிடம் கூறினான்…
மகிமாவுக்கும் அது தெரிந்ததால் அவளும் அதை கண்டு கொள்ளவில்லை…
ஆனால் அபின்ஞான் விளையாட்டுக்கு கூறியதை மகாதேவ் கேட்டு விட்டான் என்பதை இருவருமே அறியவில்லை…
தேவ் வந்து சென்றதை அறியாத மகிமா, “விளையாடினது போதும் அபி… நம்மள பத்தின கதய விடுங்க… உங்களுக்கு ஏன் தேவ பிடிக்கவே இல்ல” என்று கேட்க…
“மகிம அவன பத்தியே கேட்டு நீ என்ன இரிடேட் பண்ணாதே… வா நம்மள பத்தி பேசலாம்” என்று கூறியபடி அவளை கட்டி அணைக்க… அவன் மார்பில் கையை வைத்து தள்ளி விட்டவள்…
“நீங்க உங்க வேலய பாருங்க… நான் என் வேலய பார்க்குறேன்” என்றபடி அங்கிருந்து சென்றாள்…
கடலில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து, அங்கு நடக்கும் மாற்றங்களை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான் மகாதேவ்…
மனதுக்குள் ஏதோ ஒரு உறுத்தல்…
“தான் எடுத்த முடிவு சரியா…” என்று யோசனை…
வேலையில் கவனம் செலுத்தவும் முடியவில்லை…
தலை வலிப்பது போல் இருந்தது…
அந்த நேரம் மகாதேவ் அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் சஞ்சனா…
வலித்துக் கொண்டிருந்த தலையை வருடியபடியே “ஹாய் சஞ்சு…” என்றான்.
அவன் தலையை வருடிக் கொண்டிருப்பதை கண்டவள், “என்னாச்சு தேவ்… உனக்கு தலை வலிக்குதா?” என்று கேட்டபடியே அவன் அருகே வந்தாள்…
“ம்ம் லைட்டா… நீ போ நான் கொஞ்சம் தூங்கி எழுந்தேன்னா சரியாகிடும்” என்றவனுக்கு இப்போது அவளுடன் பேசும் மனநிலை கடுகலவும் இருக்கவில்லை…
எந்த பதிலும் சொல்லாமல் அவனது சமையலறைக்குள் சென்றவள், ஏதோ பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருக்கும் சத்தம் தான் கேட்டது…
“இந்தத் தலைவலி பத்தாதுன்னு… இவ வேற… என்ன பண்றான்னே புரியல” என முனு முனுத்தவன், அமர்ந்தபடியே சமையலறையை திரும்பிப் பார்த்தவன், “என்னடி பண்ற… தெரியாம ஏதும் செஞ்சு வச்சிடாதே” என்று இங்கிருந்து அவன் கத்த அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை…
“பேசினா மதிக்கிறாளா பாரு… அவ அத்தான் மாதியே திமிரு புடிச்சவ” என நினைத்தவன், முன்னால் காபியை நீட்டியபடி நின்றாள் சஞ்சனா…
விழி விரித்து அவளைப் பார்த்தவன், எதுவும் சொல்லாது காபி கப்பை வாங்கிக் கொண்டான்….
அவன் முன்னால் குவித்து வைத்திருந்த பைல்களை நேர்த்தியாக மூடி அங்கிருந்த மேசை மேல் வைத்தவள், மகாதேவ் பின்னால் வந்து நின்று அவன் தலையை மசாஜ் பண்ண ஆரம்பித்தாள்….
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது…
மகிமா கூட அவனை இப்படி பார்த்துக் கொண்டதில்லை…
அவளை அவன் பார்த்துக் கொள்வானே தவிர… அவள் அவனைப் பார்த்ததில்லை…
அப்படி அவனை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்றுதான் சொல்லலாம்…
சிறுவயதிலிருந்தே மகிமா ஹாஸ்டலில் தான் வளர்ந்தாள்…
வீட்டிலிருந்தால் அவனுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டே அவள் நேரம் போய்விடும்…
இதுவரை அவன் ஒரு பெண்ணின் அரவணைப்பை அனுபவித்ததில்லை… அவன் கைக்கே வேலைகளை செய்து கொடுக்கும் சஞ்சனாவை அதனால் தான் அவளை ஆச்சரியமாக பார்த்தான்…
அவளது இதமான வருடலில், மகாதேவ்கோ இருந்த அழுத்தம் குறைந்து… மனதிலும் ஏதோ ஒரு நிம்மதி பரவியது…
சஞ்சனா கையை பற்றி முன்னே இழுத்தவன், “தேங்க்ஸ் சஞ்சு…” என்றபடி அவளை கட்டிப்பிடித்து அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான்…
“ஹேய் தேவ்… இந்த சின்ன விஷயத்துக்கு தேங்க்ஸ் சொல்லனுமா…” என்றவளுக்கு அவன் திடீர் நெருக்கம் அவஸ்த்தையாக இருந்தது…
அவனை விளக்கவும் முடியவில்லை… அணைத்துக் கொள்ளவும் அவளால் முடியவில்லை…
அவளுக்கோ வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் உடல் எல்லாம் புல்லரிக்க ஆரம்பிக்க அசையாமல் சிலை போல் நின்றிருந்தாள்…
அவள் தவிப்பையோ உணர்வுகளையோ அறியாதவன், அவள் வயிற்றிலே முகத்தை அழுத்தி வைத்தபடி, “அம்மா கூட இருந்தா இப்படித்தான் பீல் பண்ணி இருப்பேன்னு நினைக்கிறேன் சஞ்சு” என்றான்…
அவளோ அவனைப் அதிர்ச்சியாக பார்த்தாள்…
இப்போதுதான் அவளுக்கு அவனது மனநிலையே புரிந்தது…
மெதுவாக தன் கையை உயர்த்தி அவன் தலையை வருடிக் கொடுத்தாள்…
“மகி பிறக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க… அப்போ எனக்கு அஞ்சு வயசு… குட்டி குட்டி கைகாலோடு துருதுறுன்னு இருந்தவள பாத்ததும் எனக்கு அவள நல்லா பாத்துக்கணும்னு தான் தோணுச்சு… அம்மா இல்லாததுனால மகி பொறந்த அப்புறம் அப்பா அவள தான் கூடுதலா பார்த்துகிட்டார்… எனக்கும் புரிஞ்சது… ஆனா அத தாண்டியும் எனக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு… அம்மாவும் இல்ல… அப்பா இருந்தும் இல்லாதது போல ஒரு நிலை… ரொம்ப தனிமையாக ஃபீல் பண்ணினேன். நானும் வளர கிட்ட அப்பா என் கூட இருக்கணும்… பேசணும்னு… எதிர்பார்க்கல, எதிர்பார்ப்பு இருந்தா தானே அவர் என்கிட்ட இருந்து விலகி இருக்க கிட்ட கவலையா இருக்கும்…” என்று ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டவன்,
“சின்ன வயசுல மகி ரொம்ப சமத்து” என்றவனது இதழ்களில் அன்றைய நாளைய நினைவுகளில் இன்றும் மலர்ந்தன…
“மகி எப்பவுமே என் கூடவே ஒட்டிட்டு இருப்பா… அவ கூட இருக்கும்போது ரொம்ப நல்லா இருக்கும்… ஆனா அப்பா அவ நல்லா படிக்கனும்ன்னு ஹாஸ்டல்ல சேர்த்துட்டார்… வீட்டில் தனியா இருக்கும் போது ரொம்ப தனிமயா ஃபீல் பண்ணுவேன்… என் தனிமையை போக்க நல்லா படிச்சேன்… படிச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் முழு மூச்சா பிசினஸ்லயே இறங்க அந்த ஃபீல் இல்லா போயிடுச்சு… அந்த நேரம் தான் அப்பா இருந்துட்டார்… என்னால அந்த டைம்ல அழக் கூட முடியல… மகிய சமாதானப்படுத்தனும்… என்ன கட்டுப்படுத்திக்கிட்டு மகிய பார்த்துகிட்டேன்… மகிக்கு கல்யாணம் முடிச்சு போனா உடனே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… வீட்ல இருக்கவே பிடிக்கல… மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… நான் பணக்காரன் தான்… ஆனா பணம் இருந்தும் அனாதையா இருக்கேன்… எல்லாரும் என்கிட்ட இருக்க பணத்தை பாப்பாங்களே தவிர மனுசனா பாக்க மாட்டாங்க… ஆனா நீ என் கூட இருக்கும் போது தனிமை ஃபீல் ஆகவே இல்ல” என்று இவ்வளவு நாளும் தன் அடி மனதில் புதைத்திருந்த ரகசியங்களை தன்னை மீறி அவளிடம் கொட்டிக் கொண்டிருந்தான்…
அவளுக்கோ அவன் கூறியதை கேட்டு கண்களில் கண்ணீரை வந்துவிட்டது….
இந்த கம்பீரமான ஆண்மகலுக்குள் இத்தனை துன்பம் இருக்கின்றதா என்று அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை…
உணவை மேசையில் வைத்தவள் அதை திறந்து பார்க்க, சுடச்சுட பரோட்டாவும் குருமாவும் இருந்தது…
“வாவ்” என்றவள் வாயில் எச்சில் ஊற… சாப்பிட தயாராக, அபின்ஞானும் இடையில் டவலுடன் வெளியே வந்தான்…
மகிமா சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்தவன் அவள் அருகே நெருங்கி அமர்ந்தான்…
அபின்ஞான் பொதுவாக இரவில் கடினமான உணவு எடுப்பதில்லை…
ஏதாவது இலகுவான உணவுடனோ அல்லது பழங்களுடனோ சாப்பாட்டை முடித்துக் கொள்வான்…
அவன் அவள் அருகே அமரவும், “நீங்களும் சாப்பிட போறீங்களா?” என்று மகிமா கேட்க,
அவன் கையில் இருந்த ஆப்பிளை காட்டியவன், “எனக்கு இது போதும்… உனக்கு தான் ஆர்டர் பண்ணேன் சாப்பிடு” என்றான்…
இருவருக்கிடையே இருந்த நெருக்கத்தை பார்த்தவள், “அப்போ கொஞ்சம் தள்ளி உட்காரலாமே” என்று மகிமா நெளிந்தபடி கூற,
“ஏன் இப்படி இருந்தா உனக்கு என்ன பிரச்சின” என்று புருவம் உயர்த்தி கேட்டவன், அவளுடன் மேலும் நெருங்கி அமர்ந்து தன் இடது கையை அவள் நைட் ஷர்டினுள் விட்டு அவள் வெற்று இடையை வருடியபடியே ஆப்பிளை கடித்தான்…
“ஏன்டா கேட்டோம்” என்ற நினைத்துக் கொண்டாள் மகிமா…
அவளுக்கோ தொண்டைக் குழியைத் தாண்டி உணவு இறங்க மறுத்தது…
அவன் ஓயாமல் அவளிடம் எல்லை மீறிக் கொண்டிருக்கும் அவளால் எங்கனம் உண்ண முடியும்…
அவள் உண்ணாமல் அலைந்து கொண்டிருப்பதை கண்டவன், கொஞ்ச நேரத்திற்கு அவளை பாவம் பார்த்து சற்று விலகி அமரவும் தான் மகிமா பெருமூச்சு விட்டபடியே வேகமாக உண்ணத் தொடங்கினாள்…
அபின்ஞானும் அவளை புன்னகையுடனே பார்த்துக் கொண்டிருந்தான்…
அவள் கை கழுவி விட்டு எழும்பவும், அபின்ஞானும் அவளுடனே எழுந்து கொள்ளவும், “இப்போ என்ன?” என்பது போல் அவனை பார்த்தாள்.
அவனோ அவளை நெருங்கி முத்தமிட்டபடியே தூக்கிக் கொள்ள… அவளும் தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாக கோர்த்துக் கொண்டாள்…
வானில் தெரிந்த நிலவு மகளோ அவர்களைப் பார்க்க வெட்கப்பட்டு மேகங்களுக்குள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களது நெருக்கம் இருந்தது…
காலையில் அவள் அவன் கைவளைவுக்குள் தான் கண் விழித்தாள்…
தூக்கத்திலும் அவன் இதழ்கள் இறுகிப் போயிருந்தன…
அவன் சிகையோ கலைந்து இருந்தாலும் அவனுக்கு அது எடுப்பாகவே இருந்தது…
முரட்டு குழந்தை போல் இருந்தான்.
மென்மையாக அவன் தலை முடியை வருடியவள்… குனிந்து அவன் இதழ்களில் முத்தமிட, அவன் கண்களோ சட்டென விரிந்து கொண்டன…
அவன் எழும்பியதை கண்டதும் மகிமா அவனிடம் இருந்து விலக பார்க்க, அவன் அணைப்பிலிருந்து தான் அவளால் நகர முடியவில்லை…
அவளை உற்றுப் பார்த்தவன், “இப்ப நீ என்ன கிஸ் பண்ண தானே” என்று தூக்கம் கலையாத கரகரப்பான குரலில் அவள் கன்னத்தில் இதழ் உருசிய படியே கேட்க,
“ஆம்… இல்லை…” என்பது போல் நான்கு பக்கமும் தலையாட்டினாள்…
“சரி… என்ன கிஸ் பண்ணாததுக்கு உனக்கு தண்டன வேணாம்” என்று கேட்க,
அவனை அதிர்ந்து பார்த்தாள்… முத்தமிட்டாலும் குத்தம்… இல்லாவிட்டாலும் குத்தம் என்பது போல் அல்லவா அவன் கதை இருக்கிறது…
அவள் பார்வையை கண்டவன், “சரி போன போகட்டும்ன்னு உன்ன மன்னிச்சி விட்றேன்… என் கூட சேர்த்து குளிச்சா” என்று கூறிய படியே அவளை இழுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான்…
அவனுக்கோ அவள் மீது எல்லையற்ற மோகம்…
தன்மோகம் எல்லை கடக்கும் போதெல்லாம் அவளை நாடி விடுவான்…
போதை இல்லாமலே இப்பேதை அவனுக்கு போதை ஏற்றிக் கொண்டிருந்தாள்…
இருவருக்குள்ளும் துளிர்ந்து மலர்ந்திருந்த காதலை இருவரும் வெளிப்படையாக சொல்லிக்கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாலும் தம் செயலால் தத்தம் துணைகளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தனர்…
யாரு முதலில் சொல்வார்கள் என்று காத்துக் கொண்டிருந்தனர்…
அடுத்த வாரம் முழுவதுமே கேமராக்கள் பொருந்துவதிலும் அதை கண்காணிப்பதிலுமே முழு நேரமும் கழிந்தது…
திரையின் முன்னே அமர்ந்து கடலில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர் அபின்ஞானும் கரனும்…
“நாம தேட்றது இன்னும் கிடைக்கலடா… ஒரு வாரமா தேடிட்டு இருக்கோம்…” என்றான் கரன்…
“உண்மையாவே இருக்கிற விஷயத்தயா நாம தேடிட்டு இருக்கோம்ன்னு எனக்கு இப்போ டவுட்டா இருக்கு அத்தான்…. எத்தன வருஷத்துக்கு முந்தி நடந்தது… இன்னும் இருக்குமா? இருந்தாலும் எங்கிருக்கும்ன்னு கெஸ் பண்றது கூட ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்றாள் சஞ்சனா…
நெற்றியை நீவிக்கொண்ட அபின்ஞான் “கண்டிப்பா இருக்கணும்… ஆனா நாம தான் அந்த இடத்தை நெருங்கல… கிடைச்சிடும்… கட்டாயம் கிடைக்கணும்” என்றான் அழுத்தமாக…
“கிடச்சா சரி” என நினைத்த சஞ்சனா பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
“மகிமா எங்க ஆளயே காணோம்” என்று கரன் கேட்க,
“இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தா… இப்பதான் போனா… நைட் கடல் உள்ளுக்கு வித்தியாசமான சவுண்ட் கேக்குதுன்னு சொல்லிட்டு இருந்தா” என்றாள் சஞ்சனா…
“ம்ம்…” என்கிட்டயும் சொன்னா என்ற அபின்ஞான்… “பகல்ல நம்மளால கடல்ல எந்த உயிரினத்தை அவதானிக்க முடியல… நைட்டுக்குத்தான் அதுங்களே உலாவுதுங்க போல… அதுங்க சவுண்டா இருக்கலாம்…ஆனா இட்ஸ் வெரி டிஃபரண்ட்” என்ற சந்தேகமாக முடித்துக் கொண்டான் அபின்ஞான்…
“இருட்டா இருக்கிறதுனால நம்மளால அதைப் பார்க்கவும் முடியல” என சொல்லிக் கொண்டான் கரன்…
“ம்ம்ம் அது சரி தான்…”என்றபடி தன் அறைக்குள் சென்றான் அபின்ஞான்…
மகிமாவோ போர்த்தி மூடியபடி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்…
அவள் அருகே வந்து நெருங்கி படுத்தவன், “மகி…” என்று அழைத்த படி அவள் கழுத்து வளைவில் முகத்தை உரசினான்…
“சரியான கும்பகர்ணி” என்று மீண்டும் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் கழுத்தில் முத்தமிட, அவன் தாடி மீசை குறுகுறுப்பில், “அபி தூங்க விடுங்க” என அவன் முகத்தை தள்ளி விட்ட படி முனங்கினாள்…
“மகி வேல பார்த்து சரியான ஸ்ட்ரெஸ் ஆகி வந்திருக்கேன்… எனக்கு ஸ்ட்ரஸ் ரிலீப் வேணும்” என்றான் அவள் இதழ்களில் முத்தமிட்டபடி…
“அதுக்கு நான் என்ன பண்ணனும்” என்றாள் தூக்கம் கலையாத குரலில்…
“நாம் என்ன பிக்னிக்கா வந்திருக்கோம்…இங்க சுத்திப்பார்க்க… இந்த குளிர்ல என்னால வெளியே சுத்த முடியாது” என்றபடி விட்ட தூக்கத்தை அவள் மீண்டும் தொடர பார்க்க…
அவளை அதட்டி… உருட்டி.. மிரட்டி… அழைத்துக் கொண்டு சென்றான்…
ட்ரவுசர் மற்றும் நீட்ட கை டி-ஷர்ட் அணிந்து… மேலால் ஸ்விட்டார் அணிந்து, காதுகளை மூடிய தொப்பியும் போட்டுக் கொண்டு முகத்தை தூக்கி வைத்தபடி மோட்டார் படகில் அமர்ந்திருந்தாள்.
“ரிசெர்ச் செய்யணும்ன்னு ஆளுக்கு முந்தி இங்க வந்தது நீ… ஆனா இங்க வந்து சோம்பேறி மாதிரி முழு நேரமும் தூங்கிட்டே இருக்க… எல்லாம் வெட்டி வீராப்பு மட்டும்தான்…” என்றான் ஓரிடத்தில் படகை நிறுத்தியபடி…
அவன் பேச்சில் அவனை முறைத்து பார்த்தவள், “நான் என்னடா செய்றது… சத்தம் இல்லாம இருந்த நீங்க ரெண்டு பேரும் தான் என்னென்னதோ செஞ்சுட்டு இருக்கீங்க… நான் என்னன்னு கேட்டா கூட சொல்ல மாட்டீங்க.. எல்லாத்தையும் ஒளிச்சு ஒளிச்சு வச்சுக்கிறீங்க… எனக்குத்தான் ஒண்ணுமே விளங்காம முழிச்சிட்டு இருக்கேன்… நீங்க எல்லாம் சேர்ந்து என்னமோ செஞ்சிட்டு இருக்கீங்க… நான் தான் தனியா நின்னுட்டு உங்களுக்கு எடுபிடி வேல பாத்துட்டு இருக்கேன்… பெருசா பேச வந்துட்டான்” என்று அவள் வாய்க்குள் முனக,
அது அவனுக்கு கேட்காமல் இருக்குமா என்ன…
“சரி… சரி… அத விடு… உன் ரிசேர்ச்க்கு நான் ஹெல்ப் பண்றேன்டி…” என்றவன் நீரினுள் பாய்வதற்கு ஆயத்தமாக… “இப்ப நீங்க கடல்ல நீந்த போறீங்களா?” என்று கேட்டாள்…
“ம்ம்… நான் மட்டும் இல்ல நீயும் தான்” என்று கண்ணுக்கு வாட்டர் கிளாஸை அணிந்தபடி கூறினான்…
“என்னது…” என்று அவள் அதிர…
“வா…” என்று அவளை அவசரப்படுத்தியவன், அவளை தயார்படுத்தி மகிமாவின் கையை பற்றிய படியே நீரினுள் குதித்தான்…
அபின்ஞான் இப்பகுதி பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்திய பின்னர் தான் மகிமாவை இங்கு அழைத்து வந்திருந்தான்….
அவள் கையை பிடித்தபடியே நீந்தினான்…
அவன் நீந்தும் வேகமோ அசாத்தியமான வேகமாக இருக்க மகிமா எவ்வளவு தான் பயிற்சி எடுத்திருந்தாலும் அவன் வேகத்துக்கு அவளால் ஈடுகட்ட முடியவில்லை…
அதை உணர்ந்தவன் அவள் வேகத்துக்கு ஏற்றவாரு நீந்தியபடி அவளை கடலின் ஆழப் பகுதிக்கு அழைத்து சென்றான்…
ஆழப் பகுதிக்கு வந்தவளது கண்களோ மகிழ்ச்சியில் மின்னின…
கடலின் அடிப்பகுதியாக இருந்தாலும் மிக மிக வெளிச்சமாகவே இருந்தது….
தெளிவான இளம் நீல நிற நீர்…
அப் பகுதியின் அடிபரப்பு முழுவதுமே பவளப்பாறைகள் நிறைந்து இருக்க… அப்பாறைகளுக்கு மேல் பச்சை பசேல் என்ற தாவரங்கள் நிறைந்திருந்தன…. அவை மினுங்கிக் கொண்டிருந்தன…
அப் பகுதி அத்தனை செழிப்பாகவும் வளமாகவும் இருந்தது… நிலப்பரப்பில் கூட இப்படி ரம்யமான ஒரு காட்சியை பார்க்க முடியாது… அற்புதமாக இருந்தது…
புல்லிருந்து பாறைகள் வரை அதில் தங்கி இருக்கும் ஒவ்வொரு உயிரினமுமே பல்வேறு நிறங்களில் மினங்கிக் கொண்டிருந்தன…
அவற்றின் பளபளப்பாலும் அவற்றால் உருவாகும் வெளிச்சத்தினாளும் தான் அவ்விடம் முழுவதும் சூரிய ஒளி படாமல் அவ்வளவு வெளிச்சமாக இருந்தது…
மகிமா மெதுவாக தன் கையால் புல் போன்ற இருந்த தாவரத்தை தொட்டுப் பார்த்தாள்…
சட்டென்று அது அவள் கையுடன் இறுக்கமாக பின்னிப் பிணைய ஆரம்பித்தன…
நல்ல வேலை அவள் உடல் முழுவதற்கும் பாதுகாப்பாக கவசம் போன்று உலர் உடை அணிந்து இருந்ததால் அவளுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை…
இல்லையென்றால் அதன் விஷத்தன்மையில்… தொட்டு இரண்டாவது நிமிடத்தில்லே பரலோகம் போய் சேர்ந்திருப்பாள்…
கடலுக்கு அடியில் அதிகமான விஷ சக்தியுள்ள உயிரினங்களே மினுங்கிக் கொண்டிருக்கும்…
சிரித்துக் கொண்டவள் மெதுவாக கையை அதனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள்…
அவள் கையைப் பிடித்த படியே அருகே வந்து கொண்டிருந்த அபின்ஞானை பார்த்து கண் சிமிட்டியவள்… மகிழ்ச்சியில் அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள்…
நீண்ட நேரம் கடலுக்கு அடியில் நீந்தியவர்கள் உடற்கலைத்த பின்னரே தங்கள் படகு இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்…
கடலில் உள்ளே இருக்கும்போது இல்லாத குளிர் வெளியே வந்ததும் தான் அதிகமாக உடலை தாக்கியது… அபின்ஞான் அதைத் தாங்கிக் கொண்டாலும், மகிமாவுக்கு சற்று சிரமமாகவே இருந்தது…
அவனை ஒட்டி அமர்ந்தவள் அவனிடமே குளிர் காய்ந்த படி கப்பலுக்கு வந்து சேர்ந்தாள்.
“ஓகே மகி… இப்ப நான் உள்ள போறேன்…” என்றவன் தன் கையில் இருந்த டச் பேடை அவளிடம் கொடுத்து, “என் டிரஸ் புல்லா கேமரா ஃபிட் பண்ணியிருக்கிறதால உள்ள என்ன நடக்குதுன்னு உனக்கு இங்கிருந்தே பார்க்கலாம்… ஏதாவது டேஞ்சரான விஷயத்த பார்த்தா… இல்லனா வித்தியாசமான ரேடியோ வேவ்ஸ்ஸ இந்த மானிட்டர்ல நீ பார்த்தன்னா இந்த பட்டனை கிளிக் பண்ணு…” என்றவன் படகில் இருந்த சிஸ்டத்தில் ஒரு பட்டனை அழுத்த அவன் கையில் மாட்டியிருந்த சிவப்பு நிற சென்சர் லைட்கள் ஒளிரத் தொடங்கின…
“ஓஹ்… நைஸ்… இதுல ரொம்ப அனுபவம் போல உங்களுக்கு” என்று அவன் ஒவ்வொரு விடயத்தையும் கையாளும் நேர்த்தியையும் வேகத்தையும் அனைத்தையும் அறிந்து வைத்து இருந்ததை பார்த்துக் கேட்டாள்…
அவளைப் பார்த்து சிரித்தவன், “கேமராவை ஃபிட் பண்ணிட்டு வந்தே சொல்றேன்” என்றவாரு எழும்பியவன், அவள் இடையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான்…
“இப்படியே சொல்லி சொல்லி… என்கிட்ட எல்லாத்தையுமே மறைக்கிறீங்க… நான் தான் எதுவும் தெரியாம… ஒண்ணுமே விளங்காம உங்களோட இழுபட்டு வந்துட்டு இருக்கேன்…” என்றபடி அவன் ஆக்சிஜன் மாஸ்க்கை சரி செய்தாள்…
“என்னது… கிளைமேட் செம்மயா இருக்கா… இந்தக் குளிரயே தாங்க முடியல… இதுல செம கிளைமேட்டா… விளங்கிடும்” என நினைத்தவள் அவனை புரியாது பார்க்க…
“உன்ன இப்ப இறுக்கமா கட்டிப்பிடிச்சு லிப் லாக் பண்ணனும் போல இருக்கு… ஆக்சிஜன் மாஸ்க் போட்டு இருக்கிறதால ஒன்னும் பண்ண முடியல… வந்து உன்ன பார்த்துக்கிறேன்” என தன் ஒற்றை கையால் அவள் கழுத்தை வருடியபடி கூறியவன், அவளிடம் இருந்து விலகி நீரினுள் பாய்ந்தான்…
அபின்ஞான் கடலின் ஆழம் வரை நீந்திச் செல்ல ஆரம்பித்தான்… திரையை பார்த்துக் கொண்டிருந்த மகிமாவின் கண்களோ ஆச்சரியத்தில் விரிந்தன….
“வாவ் இந்த பிளேஸ் எவ்ளோ அழகா இருக்கு… எவ்ளோ டெக்னாலஜிஸ் வளர்ந்தாலும் மனுஷனால இன்னும் கடலுக்கு அடியில் உள்ள விஷயங்களை தான் கண்டுபிடிக்க முடியல” என முனுமுனுத்தவள் திரையை உன்னிப்பாக பார்த்தபடியே இருந்தாள்…
அபின்ஞான் கடலில் ஆழமான பகுதியை நோக்கிச் செல்ல அவளுக்கோ கொஞ்சம் பயமாகவும் இருந்தது…
உள்ளே செல்லும் போது வெளிச்சம் குறைந்து கொண்டே சென்றது…அவன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு சென்றாலும்… அவள் மனமோ திக் திக் என்ற அடித்துக் கொண்டது…
அபின்ஞானும் கடலுக்கு அடியில் இருந்த பாறையொன்றில் கேமராவை பொருந்துவது தெரிந்தது…
மகிமா பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
ஒரு சில நிமிடங்களில் அவ் வேலையை முடித்தவன், சொன்னது போலவே பத்து நிமிடங்களிலே மேலே வந்து விட்டான்…
படகில் அவன் ஏர அவள் கையை நீட்ட இதழ்களுக்குள் சிரித்த படி அவள் கையை பற்றி மேலே ஏரியவன் தான் அணிந்திருந்த ஆக்ஸிஜன் மாஸ்க், சேஃப்டி ஜெக்கட்டை கலைந்து விட்டு அவளை நெருங்கி வர, “அபி நீங்க ஈரமா இருக்கீங்க… இங்க ரொம்ப குளிரா வேற இருக்கு…” என்று சொல்லி முடிப்பதற்கு முன்பே அவள் இதழ்களின் கதகதப்பை உறிஞ்ச ஆரம்பித்து விட்டான்…
அவள் உடலோ அவன் உடலில் இருந்த மொத்த ஈரத்தையும் உறிஞ்சி கொண்டிருந்தது…
அவனால் அவளும் முழுமையாக ஈரமாகிவிட அந்தத் திடீர் குளிரில் அவள் மேனியும் சிலிர்த்து நடுங்கத் தொடங்கி விட… அவளை இறுக்கமாக அணைத்து அவனே அவளுக்கு கதகதப்பையும் வழங்கினான்…
அவள் இதழ்களை பொறுமையாக விடுவித்தவன் அவள் கண்களை பார்த்து, “நடுக் கடல்ல… அதுவும் ஸ்பேஸ்ஸான பிளேஸ் ல வெச்சி லிப் லாக் பண்றது செம்ம கிக்கா இருக்குல்ல” என்று கேட்க,
“அபி… குளிர் தாங்க முடியல கப்பலுக்கு போயிடலாம்… இங்க என்ன கிக்க கண்டீங்கன்னு தான் எனக்கு புரியல” என்றவர் பற்கள் தந்தி அடிக்க நடுக்கத்துடன் அவனுடன் ஒட்டி நின்றபடி கூற…
“நீ இப்படியே நின்னுட்டு இருந்த எனக்கு எப்படி போட்ட ஓட்ட நினச்சும்…” என்று கூறியவனுக்கு அவளது நெருக்கத்தில் அவஸ்தையாகிப் போனது…
தன் கட்டுப்பாடுகளை மீறி, அவள் மேனியில் அவன் கைகளோ இஷ்டத்துக்கு அத்துமீறி அலைய விட்டுக் கொண்டிருந்தான்…
அவன் அத்துமீறளில் தான் மகிமாவுக்கு தாம் இருக்கும் இடம் நினைவுக்கு வர, அவன் மார்பில் கையை வைத்து தள்ள… உணர்வுகளின் பிடியில் இருந்தவனோ அவளிடமிருந்து விலக மறுத்தான்…
மீண்டும் அவன் மார்பில் கையை வைத்து பலமாக அவனை தள்ளி விட்டவள், “என்ன பண்ணிட்டு இருக்கீங்க ” என்று அவனை முறைத்தபடி கேட்டாள்…
“ஓஹோ… ஆரம்பத்துல உங்கள… அதாவது உங்க டேட்டூவ நான் தொடவே கூடாதுன்னு சொன்னீங்க… அவ்ளோ அட்வைஸ் பண்ண நீங்களே இப்படி ஓபன் ஸ்பேஸ்லயே கண்ட்ரோல மிஸ் பண்ணலாமா…” அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க,
“ராட்சஷி வேணும்னே பழிவாங்றா” என முனுமுனுத்தவன், அவளை அழைத்துக்கொண்டு கப்பலுக்கு வரும் போது மாலையாகி விட்டிருந்தது…
குளியலறைக்குள் சென்ற மகிமா பிரஷ்ஷாகி கையில்லாத ஒரு நைட்டி ஒன்றை அணிந்து என்னைப் பார் என்பது போல் வர, அபின்ஞானுக்குத்தான் தன் உணர்வுகளுக்கு கடிவாளமிட முடியவில்லை…
அவன் உணர்வுகளோ கட்டவிழ்ந்து சென்று கொண்டிருந்தன.
அவள் அருகே சென்றவன் அவளை தொட பார்க்க, அவனது கை அவனது கையை தட்டி விட்டவள், “அடிங் மேல கைய வச்சா சாவடிச்சிடுவேன் டா” என்று கூறி விட,
அவனது கண்களோ அதிர்ந்து விரிந்து கொண்டன…
அன்று அவன் அவளுக்கு சொன்ன அதே வார்த்தைகள்… அச்சு பிசகாமல் சுவரில் அடித்த பந்தாக அவனை நோக்கிய திரும்பி வந்த விட்டது.
குரலை செருமிக் கொண்டவன் தன் பழுப்பு நிற விழிகளால் அவளைக் கூர்மையாக பார்த்தவன், “என்னடி என்ன செடியூஸ் பண்ண பார்க்குறியா” என்று கேட்டான்…
“ச்சே… ச்சே… நான் எதுக்கு உங்களை செடியூஸ் பண்ணனும்… நான் எப்பவும் போல தானே இருக்கேன்” என்றாள் அப்பாவியாக,
“நடிக்காதடி…” என்றவனுக்கு அவளுடன் இதையெல்லாம் பேசும் அளவுக்கு கொஞ்சமுமே பொறுமை இல்லை…
அவள் அடுத்த பேச வந்த வார்த்தைகளை பேச முன்பே, அவள் இடையில் கை வைத்து அவளை தன்னுடன் நெருக்கிக் கொண்டவன், அவ்வார்த்தைகளை அவன் உதடுகள் மூலம் தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தான்…
கொஞ்சம் கொஞ்சமாக அவள் கட்டுப்பாடுகள் தகர்த்து அவனில் அவள் முழுதாக மயங்கி விட… அவள் மேனியிலோ உணர்வுகள் தாறுமாறாகப் பரவ… அவள் கைகளும் மேலெழுந்து அவன் சிகையை நெரிக்க ஆரம்பித்தன…
முத்தமிட்டு கொண்டிருந்த அவன் இதழ்களோ இப்போது சிரிப்பில் விரிந்தன…
அவனும் இதைத்தானே எதிர்பார்த்தான்…
மூச்சுக்காற்றுக்காக அவளிடம் இருந்து விலகியவன், அவர் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவள் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தான்…
மகிமாவோ மூச்சு வாங்க நின்றிருந்தாள்….
கழுத்தில் இருந்து தன் முகத்தை பிரித்தெடுத்தவன் அவள் இதழில் தன் அச்சாரத்தை பதிக்க… அவளும் அவன் வழங்கிய முத்தத்திற்கு பதில் முத்தம் வழங்க தொடங்கி விட… அபின்ஞானோ தன் இஷ்டத்திற்கு அவளை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விட்டான்…
எப்போது அவளை மஞ்சத்திற்கு நகர்த்திச் சென்றான்… எப்போது அவளுக்கு அவனே ஆடையானான் என்றும் அவளுக்கு தெரியாது…
அந்த அறையில் கடல் அலைகளின் பேரிறைச்சலும் அவளது முனகல்களும், அவனது கர்ஜனை ஓசைகளுமே கேட்டுக் கொண்டிருந்தன…
அந்த அறையின் ஏசி குளிருக்கு மத்தியில் அவர்களது நெருக்கத்தை கேட்கவும் வேண்டுமா…
எந்தத் தடையும் இல்லை அவர்களது நெருக்கத்துக்கு…
மாலையில் அவளுடன் ஆரம்பித்த கட்டில் யுத்தத்தை இன்னும் முடித்தபாடில்லை…
அவனோ அவளது முழு சத்தையும் உரிஞ்சு விட்டிருக்க, “அபி என்ன விடுங்க… எனக்கு பசிக்குது” என்று மகிமா கெஞ்சிய பின்னரே அவளைப் பாவம் பார்த்து, ஒரு சில சில்மிஷங்களை செய்து விட்டே அவளை விட்டு விலகினான்…
போர்வையால் தன்னை சுற்றிய படி தான் அணிந்திருந்த நைட்டியை தேட, அதற்கு மேல் அபின்ஞான் படுத்திருந்தான்…
அவளுக்கோ அவன் முகத்தை பார்க்க தயக்கமாக இருந்தது…
அவன் முகத்தை பார்க்காமல் அவள் நைட்டியை எடுக்கப் பார்க்க… அவள் எடுக்க முன்பே அபின்ஞான் நைட்டியை எடுத்து விட்டான்…
“கிஸ் பண்ணிட்டு எடுத்துட்டு போ” என்றான் அவன் கையிலிருந்த நைட்டியை காட்டி…
தன் மேல் சுற்றி இருந்த போர்வை அழுத்தமாக பற்றிக் கொண்டவளுக்கு அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை… இனி எங்கே அவனை முத்தமிடுவது…
“இதுக்கு மேல வெட்கமா?” என்று அவன் சிரித்தபடி கேட்க,
அவளுக்கோ நிலத்தில் புதைந்து விடுவோமா என்கின்ற நிலை தான்…
அவள் சுற்றி இருந்த போர்வையுடனே குளியல் அறைக்குள் நுழைந்தாள்…
அபின்ஞானுடைய சத்தமான சிரிப்பு சத்தமே அவளை பின் தொடர்ந்து வந்தது…
வாஷ்பேஷனில் அமர்ந்தவளுக்கோ நீர் பட்டு உடலில் மெல்லிய எரிச்சல்…
அவன் அழுத்தமான பிடியில் அவள் தேகத்தில் அங்கங்கே சிவந்து கன்றிப் போயிருந்தன…
அதை மீறியும் அவளது இதழ்கள் புன்னகைத்துக் கொண்டன…
குளித்து முடித்தவளுக்கோ இன்னமும் அவள் உடலில் அவனது எச்சில் ஈரம் இருப்பது போன்ற ஒரு உணர்வு…
என்னவெல்லாம் செய்துவிட்டான்…
இம்முறையும் அவள் உடையை மறக்க வைத்து விட்டான் அவன்… உடையை கொண்டு வந்திருக்கவில்லை மகிமா…
குளியல் அறைக்குள் அவன் ஷேர்ட் ஒன்று இருக்க, அவசரத்துக்கு பாவம் இல்லை என்று அதை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்…
அவள் வந்ததை கண்ட அபின்ஞான் கட்டிலில் இருந்து பாய்தெழுந்தவன் அவள் அருகே நெருங்கி வர…
நெஞ்சில் கையை வைத்தபடி, “திரும்பத் திரும்பவுமா?” என்று அதிர்ந்தபடி கேட்க,
“இப்ப இல்ல… சாப்பிட்டதுக்கு பொறகு பார்க்கலாம்… சாப்பாடு ஆர்டர் பண்ணியிருக்கேன் வந்ததும் வாங்கிக்கோ” என்றவன் அவள் கன்னத்தில் தட்டி விட்டு விசில் அடித்தபடியே குளியலறைக்குள் சென்றான்…
மகிமாவும் தன் நைட்டி ஒன்றை எடுத்து அணிந்து கொண்டவள் போனுடன் அமர, யாரோ கதவை தட்டும் சத்தத்தில், “சாப்பாடு வந்துடிச்சி போல” என நினைத்தவள் சென்று கதவைத் திறந்தாள்…
அபின்ஞானுடைய கப்பல் பசிபிக் சமுத்திரத்தின் மத்திய பகுதியை அடைந்து விட அங்கே பாதுகாப்பான ஒரு இடத்தை பார்த்து கப்பலை நிறுத்தினார்கள்….
கப்பல் அடித்தளம் முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன…
கப்பலில் உள்ள சென்சர் மற்றும் சவுண்ட் சிஸ்டம் என்பன கேமராக்களுடன் இணைக்கப்பட்டிருந்தால் கப்பலை சுற்றியுள்ள கடலின் உட்பகுதியையும் மேற்பரப்பையும் பார்க்கவும் செவிமடுக்கவும் முடியும்…
இதற்காகவே ஒரு தனி கண்காணிப்புக்கு குழுவினர் கப்பலில் இருந்தனர்…
அபின்ஞான் கப்பலை நிறுத்தியதால் அதன் வேலைகளில் மும்முறமாக ஈடுபட்டிருக்க அவனுக்கு தொந்தரவாக இருக்க விரும்பாத மகிமா சஞ்சனாவை தேடிச் சென்றாள்…
அவளோ மாகதேவுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்…
மகாதேவோ அவள் உடற்பயிற்சியில் விடும் பிழைகளை திருத்திக் கொண்டிருந்தான்…
அவர்களுக்கு இடையில் செல்ல விரும்பாதவள் தன்னறைக்கே திரும்பி வர அப்போது அபின்ஞானும் வந்துவிட்டிருந்தான்…
அவனோ சில புத்தகங்களை வைத்துக்கொண்டு அதில் எதோ அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்…
அவன் செய்யும் வேலைகளை மகிமாவை பார்க்க விடமாட்டான்… அந்த அளவுக்கு அவனுக்கு தன் மனையால் மீது நம்பிக்கை கொட்டிக் கிடந்தது…
அவன் வேலை செய்யும் போது அருகே சென்றால், “இங்கே உனக்கு என்ன வேல…” என்று அவளை விரட்டி விடுவான்…
அவனைப் பார்த்து சலிப்பாக தலையாட்டிய படி நீந்தச் சென்றாள்.
அவளுக்கோ சஞ்சனாவை பற்றி யோசனையாகவே இருந்தது…
“அபி எப்போ சஞ்சனாவுக்கு கல்யாணம் பேசினானோ… அன்னயிலிருந்து அவ முழுக்க அண்ணா கூடத்தான் டைம் ஸ்பென்ட் பண்றா… என் கூட பேசறதுக்கு கூட அவளுக்கு டைம் இல்ல” என்று யோசித்தவளது விழிகள் அதிர்ந்து விரிந்து கொண்டன..
“ஓஹ்… மை கோட்… நான் அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ண கூடாதுன்னு பிளேன் பண்ணி காய் நகர்த்திருக்கான்… ராஸ்கல்” என்றபடி மகிமா பல்லை கடிக்க…
அபின்ஞானும் நீந்த தயாராகி வந்து அவளை பார்த்து கண் சிமிட்டிய படி, நீரினுல் பாய்ந்தான்…
தலையில் இருந்து வடிந்த நீரை ஒற்றை கையால் கோதியப்படியே, “என்ன மேடம் எந்த கோட்டையை பிடிக்க ரொம்ப பலமா யோசிச்சிட்டு இருக்கீங்க” என்று கேட்ட படி அவளருகே வந்தான்…
அவளுக்கோ தன் மனதில் தோன்றிய சந்தேகத்தை மறைக்கும் எண்ணம் கடுகளவும் இருக்கவில்லை…
அதனால் நேரடியாகவே அதை அவனிடம் கேட்டு விட, அவன் இதழ்களிலோ கண்டுபிடிக்க முடியாத மில்லிமீட்டர் அளவு புன்னகை அவன் தாடி மீசைக் குள்ளே ஒளிந்து கொண்டது.
“அப்படி ஒன்னும் இல்லடி… வா நாம நீந்தலாம்” என்று அவள் கையை பிடிக்க வர,
அவன் கையைத் தட்டி விட்டவள், “அபி எனக்கு உண்ம தெரிஞ்சே ஆகணும்… நடிக்காதீங்க எனக்கு உங்கள பத்தி தெரியாதா?” என்று மகிமாவும் விடாப்பிடியாக நிற்க…
தன் நாவால் உட்கன்னதை வருடிய படி பழுப்பு நிற விழிகளால் அவளை அழுத்தமாக பார்த்தான்…
“பாக்குறத பாரு… எங்கடா பொண்ணுங்கள மயக்கிடலாம்னு பார்த்துட்டு இருக்கான் போல” என நினைத்தவள் அசையாமல் அப்படியே நின்று இருந்தாள்…
அவளை பார்த்து சிரித்தவன், “நீ இவ்ளோ புத்திசாலியா இல்லாம இருந்திருக்கலாம்” என்றபடி அவள் கன்னத்தில் தட்ட… “ஆஹான்… அப்பதானே என்ன நல்லா ஏமாத்திட்டு உங்க வேலய பார்க்கலாம்… ஆனா எனக்கு ஒன்னு தான் புரியல… உங்களுக்கு அண்ணாவை சுத்தமா பிடிக்காது, ஆனாலும் சஞ்சனாவ அண்ணா கிட்ட அனுப்பி இருக்கீங்க… உங்கள பார்த்தா அவங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிற ஆள் போல விளங்கலையே ” என்றாள் புருவ முடிச்சுடன்…
“சஞ்சனா உன் அண்ணா கூட எவ்ளோ பழகினாலும்… அவன் ஒரு நாளும் சஞ்சனாவ கல்யாணம் பண்ணிக்க மாட்டான்… அதனால அவன் கூட பழகுறதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை… இங்கிருந்து போன உடனே அவளுக்கு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்…” என்று அவள் காதருக்கே குனிந்து சொன்னவன் மனதினுள், “அதோட நீயும் என்ன அவாய்ட் பண்ண முடியாது… சோ என்கூட தான் நீ டுவண்டிபோர் ஹவர்ஸும் இருந்தாகணும்… ஒரு கல்லுல ரெண்டு மாங்கா…” என்று நினைத்துக் கொண்டான்…
அவன் சொல்லாமலே அவன் எண்ண ஓட்டத்தை உணர்ந்தவள், “கடவுளே… என்னா ஒரு மாஸ்டர் மைண்ட்… ஆனா அத நல்ல விஷயத்துக்கா யூஸ் பண்றான்… நாசமா போனவன்…” என அவனுக்கு திட்டியவள்… அவனை பார்க்காது அவள் முகத்தை திருப்பிக் கொண்டு நீந்தத் துவங்கினாள்…
அவளுக்கும் இதற்கு மேல் அவர்களைப் பற்றி விவாதிக்க விருப்பமில்லை…
அவள் அருகே நீந்திய படி வந்தவன், “நீ சரியான ஸ்லோவா நீந்துர… நான் உனக்கு கத்து தரட்டுமா”” என்று கேட்டேன்.
“என்ன நேத்தய மாதிரியா?” என்று கேட்டாள் கிண்டலாக…
“உஷாராகிட்டாள்…” என முனுமுனுத்தவன், ‘இல்லை’ என்பது போல் தலையாட்டி, “நான் தர பிரக்டீஸ உன்னால தாங்க முடியாது” என்றான்.
“நல்லா மூச்சு எடுத்து விடு…” என்றபடி அவளுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தவன் அவளை விடும்போது அவளுக்குத்தான் போதும் போதும் என்றாகிப் போனது…
கலைத்து சோர்ந்து போய் விட்டிருந்தாள்…
“நான் ஒழுங்கா கத்துத் தருவீங்களான்னு கேட்டதற்கு என்ன வெச்சி செஞ்சிட்டீங்க தானே அபி” என்று மூச்சு வாங்கியபடி சொன்னவள் நீச்சல் தடாகத்தை விட்டு வெளியே வந்து அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்…
அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன், “இதுதான் பிராக்டீஸ்… உன்கிட்ட சொன்னேனே…” என்றான்…
“தெரியாம கேட்டுட்டா… இப்படியா கஷ்டப்படுத்துவீங்க?” என்றவளுக்கு இன்னும் மூச்சு வாங்குவது நின்ற பாடில்லை…
“நீ டெய்லி இனி இப்படித்தான் ப்ரசிட்டிஸ் எடுக்கணும்” என்றான் கறாராக…
“என்ன வேற மாதிரி பழிவாங்கி என் மேல இருக்க கோபத்த தீர்க்கிறீங்கல்ல…” என்றாள் முகத்தை சுருக்கிய படி…
அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாததால் அவனை திரும்பிப் பார்த்தாள்…
நீரில் நனைந்திருந்ததால் அவள் அணிந்திருந்த டி-ஷர்டோ அவள் உடலுடன் ஒட்டி இருந்தது…
அவள் மேனியில் ஒற்றியிருந்த நீர் துளிகளோ அவனை அவள் மீது பித்தம் கொள்ள செய்து கொண்டிருந்தது…
தலையே அழுத்தமாக கோதிக் கொண்டவனுக்கு தன் பார்வையை ஆகற்ற முடியவில்லை…
அவளிடம் அத்துமீற தூண்டிய மனதை காட்டுப்படுத்திக் கொண்டு அவளுக்கு அவன் பயிற்சி அளித்ததே பெரிய விஷயம் தான்….
“என்ன மூட் ஏத்திட்டே இருக்கா ராட்சஷி…” என்றவனது தொண்டை குழியோ ஏறி இறங்கியது…
அவன் பார்வை மாற்றத்தை அப்போது கண்டவள் அருகிலிருந்த டவலை எடுத்து தன்னை சுற்றிக் கொண்டபடி. “பார்க்குறத பாரு… காணாம கண்டவன் மாதிரி…” என முனு முனுத்துக் கொண்டே அவள் எழுந்து அறைக்குள் செல்ல பார்க்க…
“உன் பாடி ஷேப் நல்லா இருந்துச்சின்னு தான் பார்த்தேன்… அதுக்காக நீ போர்த்திட்டு போகணும்ன்னு அர்த்தம் இல்ல…” என்றான் சத்தமாக…
அவன் பேச்சில் அவளுக்கோ வெக்கம், சங்கடம், தடுமாற்றம் என்று எத்தனையோ உணர்வுகளின் கலவை… அதை அவனிடம் காட்ட முடியாமல் எதுவும் பேசாமல் சென்று விட்டாள் அவள்…
*****
“அப்பாடா… ஒரு மாதிரி வந்துட்டோம்… இனி வேலய ஆரம்பிக்கிறது தான் பாக்கி…” என்று பெருமூச்சு விட்டபடி கரன் கூற,
“இனிதான் ரிஸ்க்கே இருக்கு கரன்” என்றவாரு திரையில் சென்ற கொண்டிருந்த கடலை சுற்றி பதிவு செய்யப்பட்டு கொண்டிருக்கும் கட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தான் அபின்ஞான்…
ட்ரோன் கேமராக்கள் மூலம் கடலின் மேற்பரப்பில் உள்ள நிலைமைகளை அதானித்துக் கொண்டிருந்தார்கள்…
“நாளைக்கு மார்னிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்ல” என கேட்டாள் சஞ்சனா…
“ம்ம்… பார்க்கலாம்” என்றவாரு அங்கிருந்து சென்றான் அபின்ஞான்.
பசிபிக் சமுத்திரத்தின் மத்திய பகுதிக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது…
அனைவரும் இன்று போட்டிங் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்…
ஆனாலும் அபின்ஞானும் மகாதேவும் தான் இன்னும் முட்டி மோதிக் கொண்டிருந்தனர்… இருவருமே பிரிந்து தனித் தனி தீவுகளாக தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்…
CNC இயந்திரப் படகுகள் மூன்று கடலில் இறக்கப்பட்டிருக்க, ஒரு படகில் இரண்டு பேர் வீதம்… மகாதேவும் ராகவும், சஞ்சனாவும் கரனும் மற்றும் அபின்ஞானும் மகிமாவும் என்று மூன்று ஜோடிகளாகப் பிரிந்து செல்லத் தயாராகினார்கள்…
கப்பலில் கீழ்தளத்தில் இருந்து ஒருவரின் பின் ஒருவராக அங்கிருந்த ஏணியில் கடலை நோக்கி இறங்கினர்…
அனைவரும் தத்தம் படகுகளில் ஏறி விட… ஒவ்வொரு ஜோடியும் பிரிந்து பசிபிக் சமுத்திரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல ஆயத்தமானார்கள்…
நீலக் கடலில் மூன்று திசைகளை நோக்கி அந்த மூன்று மோட்டார் படகுகளும் பயணிக்க ஆரம்பித்தன…
அவர்களின் படகுகளோ கடல் நீரை கிழித்துக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தன…
ஆனால் அதிலிருந்து ஒரு அதிர்வோ… சத்தமோ… கேட்கவில்லை…
அவ்வளவு நவீனமாகவும் அனைத்து வசதிகளுடனும் ஆராய்ச்சிகளுக்கு பொருத்தமான முறையில் தயாரிக்கப்பட்டிருந்தன அந்தப் படகு…
குளிர் சற்று அதிகமாகவே இருந்தது….
வெளிச்சமும் இல்லாத இருளும் இல்லாத ஒரு கலவையான ஒரு காலநிலையே நிலவியது…
பார்க்கும் இடம் எல்லாம் கடல் மட்டுமே கண்களுக்கு புலப்பட்டது….
வானத்தையும் கடலையும் கூட பிரித்து அறிய முடியவில்லை…
அந்த மயான அமைதியில் கடல் அலைகளின் இரைச்சல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது…
இதை ரசனையாக பார்த்துக்கொண்டு அபின்ஞான் அருகே அமர்ந்திருந்தாள் மகிமா…
“மகி… உன் பின்னால ஒரு பேக் இருக்கும் அத கொஞ்சம் தா” என்று அபின்ஞான் கேட்க,
அதை அவன் கையில் கொடுக்கவும், “இந்த போட்ட கொஞ்சம் நீ ஒட்டு…” என்று ஓட்டுனர் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்…
மகிமா படகை செலுத்த தொடங்கவும், அபின்ஞான் கடலினுல் பாய்வதற்கு தயாராக தொடங்கினான்…
கடலினுள் செல்ல பாதுகாப்பான உலர்ந்த உடையை(dry suit) அணிந்தவன், நீந்தும் கேமரா ஒன்றை கடலில் போட்டு, அதை தன் கையில் இருந்த நவீன ரக டச் பேடின் மூலம் இயக்கிக் கொண்டிருந்தான்… அந்த தொடுத்திரையிலோ கடலில் நடக்கும் அனைத்து காட்சிகளும் நேரடியாக பதிவாகிக் கொண்டிருந்தன…
கடலுக்கு அடியில் கேமராவை பொருந்துவதற்கு பாதுகாப்பான இடம் கிடைக்கவில்லை அவனுக்கு…
“மகி இன்னும் கொஞ்சம் ஃபாஸ்ட்டா போ” என்றான்…
அவளும் வேகத்தை கூட்டினாள்…
“ஏய்… மகி வேகமா போக சொன்னா ஏன் இவ்ளோ பாஸ்ட்டா போற… நீ போற போக்க பார்த்தா ரெண்டு பேரும் திரும்ப வீடு போய் சேர மாட்டோம் போல இருக்கு… பார்த்துப் போ” என்றான்…
“ஓகே ஓகே தவறி வேகத்தை கூட்டிட்டேன்” என்றவள் வேகத்தை குறைக்க….
“அடிப்பாவி உனக்கு போட் ஓட்ட தெரியும் தானே… உண்மைய தானே சொன்ன, இல்லன்னா பெருமைக்காக சும்மா அடிச்சு விட்டியா” என்று அதிர்ச்சியாக கேட்க,
“இதுல யாராலும் விளையாடுவாங்களா அபி” என்று அவள் பின்னால் திரும்பி அவனை முறைத்த படி சொல்ல,
“ஏய் முன்னால பார்த்து ஒட்டு டி… நீ ஓட்ட கிட்ட எனக்குத்தான் பக் பக்ன்னு இருக்கு என்றவன்…” கையில் இருந்த தொடுதிறையில் கவனமானான்…
“ஓகே மகி… இங்க போட்ட நிறுத்து” என்று கூறவும், மகிமாவும் போட்டை நிறுத்தி விட்டு அவனருகே அமர்ந்தபடி அவன் கையில் இருந்த தொடுதிரையை பார்த்து விட்டு படகில் பொருத்தப்பட்டிருந்த திரையை பார்த்தாள்.
“இந்த இடத்துலயா கேமரா ஃபிட் பண்ண போறீங்க” என்று கேட்க,
“ம்ம்.. இங்க பிட் பண்ண இந்த இடத்தை சுத்தி நடக்கிற அவ்ளோ விஷயமும் நமக்கு தெளிவா தெரியும்… நாம இந்த ஏரியால வேற கேமரா ஃபிட் பண்ணி… நம்ம டைம்ம வேஸ்ட் பண்ண தேவல்ல… இந்த ஒரு இடமே போதும்” என்று தன் கையில் இருந்த டச் பேடை காட்டியபடி கூறினான்….
“ம்ம்… இந்த இடம் நல்லாத்தான் இருக்கு, ஆனா எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க” என்று கேட்டாள் மகிமா.
“அதெல்லாம் எங்கள மாதிரி ஜீனியஸ்க்கு தான் புரியும்… உன்ன மாதிரி மக்குங்களுக்கு புரியாது” என்றான்.
“அப்ப எதுக்கு இந்த மக்க கூடவே வச்சிருக்கீங்க… அண்ணா கூடவே அனுப்ப வேண்டியது தானே” என்றவளுக்கோ அவன் ஒருநாளும் தன்னை தேவுடன் அனுப்ப மாட்டான் என்று பதில் தெரிந்திருந்தாலும் வேண்டும் என்றே கேட்டாள்…
“இந்த மக்குப் பொண்ண புத்திசாலியா மாத்துறதுக்கு தான் கூடவே வச்சிருக்கேன்” என்று கூற மகிமாவோ முகத்தை சுழித்துக்கொண்டே திரையை பார்க்க தொடங்கினாள்…
அவள் அரைவாசி தூரம் நீந்தி விட்டு முன்னால் பார்க்க அவனை காணவில்லை…
சட்டென பின்னால் திரும்பிப் பார்த்தாள்…
அபின்ஞான் இறுதிக் கோட்டை நெருங்கி விட்டான்….
அவள் அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட்டாள்…
அவளோ இன்னும் ஆரம்ப புள்ளியை தாண்டாத நிலையில் அவன் போட்டியையே முடித்து விட்டான்…
அவனிடம் இவ்வாறான ஒரு வேகத்தை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை…
அவளோ நீச்சல் தடாகத்தில் நடுவே நின்று இருக்க அபின்ஞானே அவள் அருகே வந்தான்…
“நான் வின் பண்ணிட்டேன்” என்றபடி அவளை எப்போது மயக்கும் பழுப்பு நிற விழிகளால் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
“ச்சே… நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டேன்” என நினைத்தவள் அவனைப் பார்த்து, “என்ன வேண்டும்” என்று கேட்டாள்…
அவளை அவன் நெருங்க… அவன் தன்னை நெருங்குவதை உணர்ந்து ஓர் அடி பின்னே வைப்பதற்கு முன்னே அவள் பின் கழுத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தான்…
அவன் இழுத்த வேகத்தில் அவள் மேனியோ அவன் இரும்பு போன்ற தேகத்துடன் அழுத்தமாக மோதி நின்றது…
இருவரது மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து வெளியேறியது…
அவன் மேனியின் கதகதப்பு அவள் அணிந்திருந்த டி-ஷர்டை தாண்டியும் அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது…
அவன் நெருக்கம் அவளுல் பூகம்பத்தை கிளப்பிக் கொண்டிருந்தது…
அவளோ அவன் அதீதமான நெருக்கத்தில், தன்னையே மறந்து அவனிடத்தில் மயங்கியிருந்தாள்…
தன் பெருவிரலால் அவள் இதழ்களின் ரேகைகளை அழுத்தமாக வருடியவன், “உன் லிப்ஸ் லிப்ஸ்டிக் பூசாமலே பிங்காயிருக்கு” என்றவன், அவன் என்ன சொன்னான் என்பதை அவள் உணர முன்பே அவள் மென்இதழ்களை தன் முரட்டு ஆதரங்களால் கவ்வி அவள் கேட்ட வினாவுக்கு அவள் இதழிலே விடை எழுத ஆரம்பித்தான்…
ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த முத்தம்… நேரம் செல்ல செல்ல ஆழமான அழுத்தமான இதழ் யுத்தமாக மாறத் தொடங்கியது.
அவன் தன் உணர்வுகளின் தாக்கத்தால் அவள் இடையில் தன் கைகளின் அழுத்தத்தை மேலும் மேலும் கூட்டிக் கொண்டிருந்தான்…
அவன் இதழ் முத்தத்தால் நிற்க கூட சக்தி அற்று… அவன் மேனியிலே முழுமையாக சாய்ந்து நின்றாள் மகிமா…
அவர்களது முத்தம் எவ்வளவு நேரம் நீடித்ததோ… முதலில் சுய உணர்வுக்கு வந்ததென்னவோ அபின்ஞான் தான்…
மெதுவாக அவள் இதழ்களிலிருந்து தன் இதழை பிரிக்க… அவளோ இன்னும் விழிகளை மூடி அந்த மயக்கத்திலே நின்றிருந்தாள்…
அவள் விரிந்திருந்த அதரங்களோ அவனை முத்தமிட அழைப்பது போலவே இருந்தது…
தன்னை மீறி ஒரு முறை அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டு விலகியவன்… அவள் கன்னத்தை மென்மையாக வருடியபடி, “மகி” என்று அழைத்தான்…
அவன் பேசியது அவளுக்கு கேட்கவில்லை…
இதழ்களுக்குள் புன்னகைத்தவன், அழுத்தமாக அழைக்கவும், சட்டென கண்ணை விரித்தவள் என்ன செய்வதென்று தெரியாத பதற்றத்தில் அவனிடமிருந்து விலக பார்க்க… நீரில் சமநிலையின்றி கால் தடுமாறி விழப்போக… அபின்ஞானும் அவளைப் பிடிக்க கையை நீட்ட… மகிமாவோ அவன் கையைப் பிடித்து தன்னை சமநிலை படுத்த முயன்ற நேரத்தில் இருவருமே நீரில் விழுந்து விட்டனர்.
நீரின் ஆழத்துக்கு சென்றவர்கள் திரும்பி மேலே வரும் போது… இருவரது தேகங்கள் மட்டுமில்லது… இதழ்களுமே இணைந்து தான் இருந்தன…
“என்ன பிடிக்கலன்னு சொன்ன… ஒரு முத்தத்துக்கே முழுசா மயங்கிட்ட…” என்று தன் நாவால் உற்கன்னத்தை வருடியபடி கேட்க,
அவளுக்கோ அவன் முகத்தைப் பார்க்கவே சங்கடம்…
உண்மையிலுமே அவன் ஒற்றை முத்தத்திற்கே மயங்கி விட்டாள் அல்லவா அவள்…
“ஐயோ பார்த்தாலே தெரியுதுதானே… அத சொல்லிக் காட்டணுமா… மானத்த வாங்குகிறான்… ராட்சஷன்” என நினைத்தவளது முகமோ செவ்வானம் போல் சிவந்து போனது…
“மகி ஆர் யூ பிளசிங்…” என்று அவன் கன்னத்தை வருட…
அவன் கையைத் தட்டி விட்டவள் வேகமாக ஸ்விம்மிங் பூலில் இருந்து வெளியே வந்தவள், குளியலறைக்குள் சென்று சவரின் கீழ் நின்றாள்…
அவளுக்கு இன்னும் அவன் அளித்த புது விதமான உணர்வுகளிலிருந்து விடுபடத்தான் முடியவில்லை…
ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் செய்து விட்டான்…
நினைக்கவே கூச்சமாக இருந்தது…
மகிமாவுக்கு உணர்வுகள் இவ்வாறு இருக்க நீச்சல் தடாகத்தில் இருந்த அபின்ஞானுக்கோ… நீரின் குளிர்ச்சியாலும் அவன் உடலின் வெம்மையை தகிக்க முடியவில்லை…
அவனுக்கோ உணர்வுகள் பேயாட்டம் போட்டது…
அவன் மனதும் உடலும் இப்போதே அவள் வேண்டுமென்று அடம் பிடித்துக் கொண்டிருந்தன…
உடல் கலைக்க நீந்தியவன் கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அறைக்குள் வந்தான்…
ஆனால் அவன் உணர்வுகளை இன்னும் தூண்டி விடும் விதமாக நின்றிருந்தாள் மகிமா…
மகிமா குளியலறைக்குள் தன் உடைகளை கொண்டு சென்றிருக்காததால் குளித்துவிட்டு டவல் ஒன்றை கட்டிக் கொண்டு வந்தவள்… உடைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது அபின்ஞான் அறைக்குள் வந்து விட்டான்…
அவன் பார்வையோ எந்த கூச்சமுமின்றி அவளை மேய்ந்து கொண்டிருந்தது…
அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டே அடி மேல் அடி வைத்து அவளை நெருங்கினான்…
அவன் பார்வையில் வீரியத்தில் அவளுடலோ பலமிழந்து நடுங்கத் தொடங்கி விட அருகிலிருந்த கபோர்டிலே சாய்ந்து நின்றாள்…
அவனோ தன் கட்டுப்பாட்டை மறந்து அவளுக்கு இரு பக்கமும் கபோர்டில் கை வைத்த படி நின்றான்…
அவன் பழுப்பு நிற கண்களில் மயங்காமல் தன்னை கட்டுப்படுத்தியவள்… அவன் தன்னை முழுமையாக நெருங்காமல் இருக்க அவன் வெற்று மார்பில் இரு கைகளையும் ஊன்றி இருவருக்கு இடையிலும் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனையால்…
அவன் ஒரு ஷாட்ஸுடன் நின்றிருக்க, அவளோ ஒற்றை டவலுடன் இருக்க… இருவரது வெற்று தோல்களும் தாராளமாகவே உரசி கொண்டன…
அவனை முறைத்துப் பார்த்தவள், “அபி இது சரியில்ல” என்று கூறியது அவளுக்கே கேட்கவில்லை…
ஆனால் அவளது ராட்சஷனோ அவள் உதட்டசைவை வைத்தே கண்டுபிடித்து விட்டான்…
“எது சரியில்ல” என்று கரகரப்பான குரலில் அவள் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து உரசியப்படி கேட்டான்…
அவனின் டிரீம் பண்ணிய தாடி, மீசையோ அவளுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்த… கூச்சம் தாங்காது நிலத்தில் கால்களை ஊன்றி தன்னை தன் உணர்வுகளை அடக்க முயன்றாள்…
தன்னை மீறி அவன் தொடுகையை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்… அது அவளே மறுக்க முடியாத உண்மை…
“அபி” என்றவள் அவன் மார்பில் வைத்திருந்த கையை எடுத்து அவன் முகத்தை அவள் முகத்திலிருந்து விலக்க பார்க்க, இருவருக்கும் இடையே காற்று கூட போக முடியாத அளவுக்கு நெருக்கம்…
அவளைப் பார்க்காமலே அவளை முழுதாகவே உணர்ந்து கொண்டான் அவன்…
அவனுக்கோ அவளை என்னென்னவோ செய்ய வேண்டும் போல் இருந்தது…
அவனுக்குத்தான் அவள் தடை விதித்து கொண்டு இருக்கிறாளே…
தலையை நிமிர்த்தி சலிப்பாக அவளை பார்த்தான்…
“அபி இங்கிருந்து போனதுக்கு அப்புறம் நமக்கு டிவோஸ் ஆயிடும்… இது ரொம்ப தப்பு” என்று அவள் கூற,
அவள் முகத்தை முரட்டுத்தனமாக அவன் பற்ற, அதிர்ச்சியில் அவள் கண்களும் இதழ்களும் ஒருங்கே விரிந்து கொண்டன…
“நீ ஏற்கனவே என் பொண்டாட்டி தான்மா… இப்ப இது நமக்குள்ள நடக்கலன்னா தான் ரொம்ப தப்பு… நாம டிவோச பத்தி பிறகு பேசிக்கலாம்” என்று அவள் இதழ்களில் கவி பாட ஆரம்பிக்க,
அவளோ அவனிடமிருந்து இருந்து இதை எதிர்பார்க்கவில்லை…
அவன் மார்பில் கையை வைத்து தள்ள முயன்றாள்… இரும்பு போன்ற ஆண்மகனை பஞ்சு போன்ற பெண்ணால் அசைக்க முடியுமா என்ன?
அந்நேரம் அவர்களது அறைக் கதவை யாரோ தட்டவும் அவளிடம் இருந்து அவன் விலக… அச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள் மகிமா…
அபின்ஞான் சென்று கதவை திறக்க, ஒரு ஊழியன் தான் அவன் ஆர்டர் பண்ணி இருந்த உணவைக் கொண்டு வந்திருந்தான்…
“கரடி வேல பார்த்திருக்கான்” என நினைத்தபடி உணவை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தான்…
அவள் குளியலறையிலிருந்து வெளியே வரும் போது அவன் அறையில் இல்லை…
நிம்மதியாக மூச்சு விட்டவள் சாப்பிட்டு விட்டு சத்தமில்லாமல் படுத்துக் கொண்டாள்…
அவனை நேருக்கு நேர் பார்க்க தயக்கமாக இருந்தது…
அபின்ஞான் தாமதமாகத்தான் வர மகிமாவோ தூங்கி இருந்தாள்…
பெரு மூச்சுடன் அவளை அணைத்த படியே படுத்தான்…
அடுத்த நாள் விடியல் அபின்ஞானுக்கு அழகான விடியலாக அமைந்தது….
அவன் மனையாலோ சேலை அணிந்து சுற்றிக் கொண்டிருக்கும், தெய்வீகமான காட்சிதான் கண்களுக்கு புலப்பட்டது…
கையை மடக்கி தலைக்கு அடியில் வைத்து படித்த படி, அவளைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான்…
அவள் அலை அலையான கூந்தலோ, முகத்தில் விழுந்து நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தன…
அவனுக்கோ தான் காண்பது கனவு போன்ற ஒரு உணர்வு…
அவள் நடவடிக்கையே அதிசயமாக இருந்தது…
மகிமா சேலை உடுத்துவது இல்லை…
அவனுக்கு எது பிடிக்குமோ அதற்கு எதிராகவே நடப்பாள்…
அதனால் அவன் அதை செய்… இதை செய்… என்பதை சொல்வதை நிறுத்தியிருந்தான்.
இன்று அவன் ஆசைப்படியே சேலையில் வலம் வந்து கொண்டிருக்க, அவனுக்குத்தான் தன் உணர்வுகளை தான் கட்டுப்படுத்த முடியவில்லை…
அவளைப் பார்க்கும் பொழுது எங்கிருந்துதான் இவ்வளவு உணர்வுகள் மேல் எழுகின்றன என்று அவனுக்கே தெரியவில்லை…
அவனே அறியாமல் அவனுள் அவள் மீதான காதல், மோகம் இரண்டும் துளிர்த்து விட்டதை அவனே அறியவில்லை…
“காலையிலே மனுசன டெம்ப்ட் பண்றா” என்று முணுமுணுத்த படி குளியலறைக்குள் செல்ல,
“என்ன சொல்லிட்டு போறான்…” என அவனை புருவம் சுருக்கி பார்த்தவள், “அது நமக்கு எதுக்கு” என்று எண்ணிய படி மகிமாவும் வெளியே செல்ல, கரனும் சஞ்சனாவும் டைனிங் ஹோலில் அமர்ந்து பேசியபடி இருந்தனர்…
“அட இவ இங்கயா இருக்கா” என நினைத்தபடி அவர்களை நோக்கி சென்றாள்…
மகிமா வருவதை கண்ட கரன், “மகிமா தேவ் தங்கச்சியா இருந்தாலும்… அபி எதிர்பார்த்த பொண்ணு மாதிரியே இருக்கால்ல” என்றவனுக்கு அவள் முழுசா அவனுக்கு அவள் நேர் எதிரானவள் என்று இன்னும் தெரியாதே…
“அரை கிறுக்காடா நீ…” என கரனைப் பார்த்து சஞ்சனா நினைக்க…
“மேச் ஃபார் ஈச் அதர்… ரெண்டு பேரும்” என்று கரன் மேலும் கூறிக் கொண்டிருக்க,
“மேட்ச் மேச் ஃபார் ஈச் அதர் ரா… விளங்கிடும்” என்று முணுமுணுக்கவும் மகிமா அங்க வரவும் நேரம் சரியாக இருந்தது…
மகிமா சஞ்சனா அருகில் அமர்ந்து கொள்ள, அவர்களை நோக்கி வந்த அபின்ஞான், “கான்ஃபரன்ஸ் ஹால்க்கு வாங்க…” என்றபடி செல்ல,
மற்றவர்களும் அவனைப் பின்தொடர்ந்தனர்…
அறைக்குள் வந்தவர்கள் தத்தம் இருக்கையில் அமர்ந்து கொள்ள அங்கு வந்த மகிமாவை பார்த்தவன், “உனக்கு இங்க என்ன வேல” என்று கேட்டு விட,
அவள் எதுவும் பேசாமல் அவனை அழுத்தமாக பார்த்தபடி இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளவும், “வந்துட்டேல்ல இனி இந்த ரூம விட்டு போக முடியாது… இங்கேயே இரு” என்றவன், “நாம இன்னும் டூ டேஸ்ல பசிபிக் ஓஷனுக்கு போயிடுவோம்… நாம அங்க இருக்கிற சூழ்நிலய முதல்ல நல்லா கண்காணிக்கனும்… அதே நேரம் இங்க புதுசா என்ன விஷயம் நடக்குதுன்னு பார்த்துட்டு தான் நம்ம வேலைய ஆரம்பிக்கனும்…” என்று அபின்ஞான் கூறிக் கொண்டிருந்தாலும் அவனது விழிகளோ தன்னை மீறி அடிக்கடி மகிமாவை நோக்கியே சென்றது…
தொண்டையை செருமி கொண்டவன், பார்வையை மாற்றி, “இங்க நிலம நமக்கு சாதகமா இருந்தா தான் கடல் ஆழத்துக்கு போகலாம்…” என்றவன் அவர்களைப் பார்த்து, “எனி டவுட்ஸ்” என்று கேட்டான்… அங்கிருந்த மூவரும் ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்ட,
“நாம பசிபிக் ஓஷனுக்கு வந்த பிறகு அங்க ஒரு சேஃபான ஒரு இடத்தை பார்த்து தான் நம்ம ஷிப்ப நிறுத்துவோம்…. நாம இங்க வாக்கிடோக்கி தான் இனி யூஸ் பண்ணனும்…” என்றவன் “இனி டய்ம் வேஸ்ட் பண்ணாம வேலய பாருங்க” என்று அபின்ஞான் கூறிக்கொண்டு இருக்கும் போது… நீர் அருந்திக் கொண்டிருந்த மகிமாவுக்கு புரை ஏறி விட்டது…
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “யாரு டைம் வேஸ்ட் பண்றது…”என்று மகிமா இருமிய படி சொல்ல, அவளை முறைத்துப் பார்த்தவன் கரனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்…
“நீ தான் டா டைம்ம வேஸ்ட் பண்ணிட்டிருக்க” என நினைத்தவள் தலையில் தட்டிக் கொண்டாள்…
இதே சமயம் மகாதேவும் ராகவும் இதைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தனர்…
“ஃபஸ்ட்டுக்கு நாம கேமரா மூலம் இந்த இடத்த பத்தி பாக்கலாம் ராகவ்… அதுக்கு பிறகு மீதி வேலய யோசிக்கலாம்” என்று மகாதேவ் கூறிக் கொண்டிருந்தான்.
சஞ்சனா முன்னாள் நின்றிருந்த அபின்ஞான், “அத்த… உனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க… இது எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் தான்… உனக்கு பிடிக்குமான்னு பாரு… பிடிச்சிருந்தா பேசி முடிச்சிடலாம்…” என்று தன் அலைபேசியில் இருந்த ஒரு பையனின் புகைப்படத்தை காட்டி கூறிக் கொண்டிருக்க,
ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த மகிமாவுக்கோ கோபம் பொத்திக் கொண்டு வந்தது. “நாசமா போனவன் குட்டய குழப்ப பார்க்குறான்” என நினைத்துக் கொண்டாள்.
சஞ்சனாவோ கைகளை பிசைந்து படி நின்றிருக்க, “எதுக்குடி… புட்டு விக்கின மாதிரி வாய தொறக்காம இருக்க… ஏதாவது பேசுடி” என்று மகிமா அவளை மனதிற்குள் வைது கொண்டிருக்க…
“மகி நீ வெளியே இருக்கிறது எனக்கு தெரியும்… உள்ள வா…” என்று அறைக்குள் இருந்த படியே அபின்ஞான் சத்தமாக சொல்ல…
“ஆத்தி… பார்த்துட்டானா…” என நினைத்தவள் சமாளிப்பாக சிரித்தபடி “இப்பதான் கதவ தட்ட வந்தேன்… அதுக்குள்ள என்ன பார்த்துட்டீங்க” என்றாள் திரு திருவென முழித்தபடி…
அவளை அழுத்தமாக பார்த்தவன், “சஞ்சனா கல்யாண விஷயம் தான் பேசிட்டு இருந்தோம்… எனக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சி… இனி அவள இப்படியே வெச்சு பார்த்துட்டு இருக்க முடியாது” என்று கூற,
“மல மாடு… மல மாடு… அது உனக்கு இப்ப வாடா தெரியுது… பண்றதெல்லாம் சிறப்பா பண்ணிட்டு இப்ப அக்கற உள்ளவன் மாதிரி என்னமா நடிக்கிறான்…” என நினைத்துக் கொண்டவள், அவன் பின்னாலிருந்து சஞ்சனாவை பார்த்து, “திருமணம் வேண்டாம்” என்று கூறும் படி சைகை செய்தாள்…
“நான் கேட்கிறது உனக்கு சங்கடமா இருக்கும்… நானே அடுத்த கட்ட விஷயங்கள பாக்குறேன்” என்றவன் விசில் அடித்த படி தன் அறைக்குச் சென்றான்…
அபின்ஞான் சென்றதும் சஞ்சனா அருகே வந்த மகிமா, “மக்கு… மக்கு… வடிகட்டின முட்டாள்” என அவள் தலையில் கொட்டியவள், ” என்கிட்ட மட்டும் வாய் கிழிய பேசு… உன் அத்தான் உனக்கு ஒருத்தனோட கல்யாணம் பண்ணி வைப்பான்… அவனோட போய் வாழு” என்றவள் அவள் பேச வந்ததை கேட்காமல் அங்கிருந்து சென்றாள்…
“எல்லாரும் சேர்ந்து என்ன என் தேவ் கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறீங்களா? இனி நான் இப்படி சைலண்டா இருந்தா சரியே வராது… இனி இந்த ஆட்டத்துக்கு அதிரடிதான் சரி” என நினைத்தவள் வேகமாக தேவ் அறைக்கு முன்னாள் சென்று நின்றவள் தனக்கு இருந்த எல்லா கோபத்தையும் சேர்த்து அவன் அறைக் கதவை பட படவென தட்டினாள்…
“எந்த பைத்தியம் விவஸ்தயே இல்லாம இப்படி கதவை தட்டுது” என நினைத்தபடி கதவை திறந்தான் மகாதேவ்.
சஞ்சனா தான் வெளியே நின்று இருந்தாள் …
“ஓஹ்… இந்தப் பைத்தியமா… இது எதுக்கு நம்மள தேடி வந்திருக்கு” என நினைத்தபடி அவளை புருவம் சுருக்கிப் பார்த்தவன், “என்ன விஷயம்?” என கேட்டான்…
அவனை ஆழ்ந்து பார்த்தபடி, அவன் கண்களுடன் தன் விழிகளை கலக்க விட்டவள்,” ஐ லவ் யூ தேவ்” என்றாள் எடுத்த எடுப்புக்கே…
“ஓஹ்… அப்படியா” என்றவன்அறைக்குள் செல்ல பார்க்க,
“நான் இவன் கிட்ட என் காதல சொன்னா கத சொன்ன மாதிரி கேட்டுட்டு போறான்” என நினைத்தபடி எட்டி அவன் கையைப் பிடித்தவள், “பதில் சொல்லிட்டு போங்க தேவ்” என்றாள்…
“நீ என்ன லவ் பண்ற… ஓகே அது உன் விருப்பம்… அதுல தலயிட எனக்கு எந்த உரிமயும் இல்ல… ஆனா நானும் உன்ன லவ் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லயே” என்று கூற,
சஞ்சனாவுக்கு சப்பென்றாகி விட்டது…
அவனை முறைத்துப் பார்த்தவள், “நான் உன்ன உயிருக்கு உயிரா லவ் பண்றேன் தேவ்” என்றாள் அழுதபடி…
“சரி என்ன லவ் பண்ணு… ஆனா நல்ல மாப்பிள்ளயா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” என்றான்.
“என்னடா ஆளாளுக்கு என்னோட விளயாட பார்க்குறீங்களா… அதெல்லாம் முடியாது… நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றாள் விடாப்பிடியாக…
“சும்மா ஏதாவது உளறிட்டு இருக்காம போய் உன் வேலய பாரு” என்று அவன் அவளை விரட்ட பார்க்க,
“என் கூட பழகினா என்ன லவ் பண்ணிடுவேன்னு உனக்கு பயம்… அதுமட்டுமில்லாம அத்தானுக்கு முன்னால என் கூட பழகவும் பயம், அதுக்குத்தானே ஏதேதோ சாக்கு சொல்லிட்டு இருக்க” என்று அவனது வீக் பயிண்ட்டை பார்த்து அடிக்க…
“ஏய் பார்த்து பேசுடி… எனக்கு ஒரு பயம் இல்ல… எனக்கு உன்ன பிடிக்கல… தட்ஸ் ஆல்… இப்போ எனக்குத்தான் சந்தேகமா இருக்கு… என்ன ஒத்துப்பார்க்க சொல்லி உன் அத்தான் உன்ன அனுப்பி வெச்சானா… அதுக்காக தானே வந்து என்னென்னமோ பேசிட்டிருக்க” என்று அவன் கேட்க,
“சும்மா உன்ன மாதிரியே மத்தவங்களயும் நெனச்சி பேசாதே… அத்தானுக்கு பயந்துதானே என் கூட பேசாம இருக்க” என்று அவள் அதிலே நிற்க,
அபின்ஞானுக்கு அவன் பயப்படுகிறான் என்று கூறியதை, அவன் ஈகோவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…
“ஓஹ் எனக்கு பயமா?” என்று நக்கலாக கேட்டவன், “ஒகே டீல்… நான் உன்னோட பழகுறேன்… ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்றான் ஆரம்பத்திலே உஷாராக…
“அதயும் பார்க்கலாம்டி… நான் ஜெயிச்ச நீ என்ன பண்ணுவ” என்று மகாதேவ் கேட்க,
“இனி உங்க பக்கமே வர மாட்டேன்… அதே மாதிரி அத்தானுக்கு பயந்துட்டு என்கிட்ட பேசாம இருந்தன்னா நீ என்ன கல்யாணம் பண்ணிக்கனும்” என்றாள்.
“நீ அதிலேயே நில்லு” என நினைத்துக்கொண்டவன், “எனக்கும் இந்த டீல் புடிச்சிருக்கு” என்றவன்… “சரி… நாம நாளையிலிருந்து பழக ஆரம்பிக்கலாம்” என்றான் ஸ்டைலாக கதவில் சாய்ந்து நின்றபடி…
“எல்லாத்தையும் டீல்லாவா பார்க்குற… இந்த டீல் தான் நீ போட்ற, முதலும் கடைசியுமான டீலா இருக்கும்” என நினைத்தபடி அங்கிருந்து சென்றாள் சஞ்சனா…
சஞ்சனா உடன் பேசி விட்டு வந்த அபின்ஞான் தன் வேலைகளை தன் பாட்டுக்கு மகிமாவை கண்டு கொள்ளாது செய்து கொண்டிருக்க, அவனருகே சென்றமர்ந்தவள், “நீங்க எதுக்காக பசிபிக் ஒஷனுக்கு போறீங்க” என்று கேட்க…
“உன் அண்ணா எதுக்காக வந்தானோ நானும் அதுக்குத்தான் வந்திருக்கேன்… ஏன் தேவ் உன் கிட்ட சொல்லலயா?” என்று கேட்க,
“அவனுக்கு தொழில் விஷயத்துல நான் தலையிடறது பிடிக்காது… அதனால அது சம்பந்தமா நானும் அவன் கிட்ட எதுவும் கேட்க மாட்டேன்…” என்றாள் தோள்களை குலுக்கிய படி…
“ஓஹோ…” என்றவன் தன் கையில் இருந்த புத்தகத்தை படிக்க… அவன் அருகில் இருந்த ஃபைலில் உள்ளதை எட்டிப் பார்த்தபடி நீங்களும் பசிபிக் ஓஷன்ல ரிசெர்ச் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று கேட்க…
அவள் அருகில் இருந்த ஃபைலை பட்டென்று மூடியவன், “மூடிக்கிட்டு போய் படு… சும்மா தொன தொனன்னு பேசிட்டு இருக்காம” என்று அவள் மேல் எரிந்து விழ…
“ரொம்ப தான் பண்றான் காலைல கெஞ்சிட்டு… இப்ப பேசினா கணக்கே எடுக்க மாட்டான்” என்று நினைத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் படுத்துக் கொண்டாள்…
விடியற்காலையில் எழுந்தவள் தயாராகிக் கொண்டு சஞ்சனாவை தேடி செல்ல, அவளோ அறையில் இருக்கவில்லை.
“காலையிலே இவ எங்க போனா?” என்று யோசித்தபடி அவளைத் தேடிச் செல்ல, அவளுடன் வந்து இணைந்து கொண்ட அபின்ஞான், “யார தேட்ற” என்று கேட்டான் கூலாக சிரித்தபடி…
“இவன் பம்முறது சரியா படலயே… ஏதோ பண்றான்… ஆனா என்னன்னு தான் புரியல” என நினைத்தபடி சஞ்சனாவை தேடிச்சென்றாள்…
எல்லா இடமும் தேடி விட்டாள்… ஆண்கள் ஜிம்மை தவிர…
அங்கே சென்றவளது கண்களோ அதிர்ந்து விரிந்து கொண்டன…
ஏனென்றால் மகாதேவ் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க, அங்கிருந்த இருக்கை அமர்ந்து, முகத்தில் கைகுற்றி அவனை ரசித்துக்கொண்டிருந்தாள் சஞ்சனா…
“அதுக்குள்ள கரெக்ட் பண்ணிட்டாளா… ஆனா நம்ம ஆளு லேசுல மடங்க மாட்டானே” என்று நினைத்தபடி அவள் அருகே வந்து கொண்டிருந்த அபின்ஞானை பார்த்தாள்…
அவனோ கூலாகவே சஞ்சனா அருகே செல்ல, இப்போது பயத்துடன் எழுந்து கொள்வது சஞ்சனாவின் முறையாகிப்போனது…
“நீ இங்கு என்ன பண்ற… உன் ரூமுக்கு போ” என்றபடி சஞ்சனாவின் கையை பிடித்து தன்னருகே அபின்ஞான் இழுக்க…
சஞ்சனாவின் மற்றய கையைப் பிடித்து அவளால் அசைய முடியாதவாரு தன் அருகே நிறுத்திக் கொண்டான் மகாதேவ்…
“டேய் மரியாதையா அவ கைய விடுடா” என்றான் அபின்ஞான்…
“விட முடியாதுடா… அவ என் கூடத்தான் இருப்பா” என்றான் மகாதேவ்…
“உன்கிட்ட ஒரு செகண்ட் கூட அவள விட மாட்டேன்” என்று அபின்ஞான் கூற,
அவனை முறைத்துப் பார்த்த மகாதேவ், “ஒரு செகண்ட் என்னடா என் லைப் முழுக்க அவள என் கூடவே வெச்சிருப்பேன்…. முடிஞ்சா தடுத்து பாருடா” என்று எகிறக் கொண்டுவர…
“அட… பையன் விழுந்துட்டான்… ஆனா சரியா தான் சொல்லியிருக்கான்” என்று மகிமா மனதுக்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“சஞ்சனா… நான் சொன்னத கேப்பா” என்று உறுதியுடன் சொன்னவன், “வா.. நாம போகலாம்” என்று அவளைப் பார்த்து கூப்பிட்டான் அபின்ஞான்.
அவனை தயக்கமாக பார்த்தவள், “அத்தான் நான் தேவ் கூடவே இருக்கேன்” என்று கூற…
“லாஸ்ட்டா கேட்கிறேன், உன்னால வர முடியுமா? முடியாதா” என்று கேட்டான் அபின்ஞான்.
சஞ்சனாவும் உறுதியாக முடியாது என்று கூறி விட அபின்ஞானை பார்த்து கண் சிமிட்டிய மகாதேவ், “நீ வா சஞ்சு… நாம போகலாம்… இங்க சரியான டிஸ்டர்பன்ஸ் நமக்கு” என்று அபின்ஞான் பார்ப்பதற்காகவே அவள் தோல் மேல் கையை போட்டுக் கொண்டு சென்றான்…
அவன் போகும் வரை இறுகிப்போயிருந்த அபின்ஞானின் முகம் இப்போது சாதாரணமாக மாறியது…
அவனையே ஊன்றி கவனித்துக் கொண்டிருந்த மகிமாவின் முகமோ இப்போது சுருங்கியது…
“இவனுக்கு கோபம் வந்த மாதிரி விளங்களயே… நடிக்கிறானா? இல்லன்னா ஏதாவது பிளேன் போட்டிருக்கானா?” என்று அவள் தான் தலையடித்துக் கொண்டு யோசிக்க ஆரம்பம்பித்தாள்…
மகிமாவுக்கு சஞ்சனா இல்லாமல் அலுப்பாக இருந்தது…
கடந்த சில நாட்கள் முழுக்க முழுக்க அவளுடன் அல்லவா நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தாள்…
சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள் மகிமா…
அபின்ஞானோ எதோ குறிப்புக்கள் எடுத்துக் கொண்டிருந்தான்…
அதை முடித்துவிட்டு அவள் அருகே அமர்ந்தவன், “ஸ்விம்மிங் பண்ண வரியா?” என்று கேட்டான்…
“நீங்க போங்க நான் இப்ப வரல” என்றாள் சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி.
“உன் கூட்டாளி தான் உன்ன விட்டுட்டு போய்ட்டாளே… இனி எப்படி அவளோட சேர்ந்து ஸ்வீம் பண்ணுவ…” என்று இதழ்களுக்குள் சிரித்தபடி கேட்டவன், அவளை நோக்கி குனிய…
அவனை எரிச்சலாக பார்த்தவள், “இப்போ என்ன சொல்ல வர்றீங்க” என்று கேட்டு கொண்டிருந்தவளது பேச்சோ இடையில் நிற்க… அவன் கழுத்தை பிடிமானமில்லாமல் இறுக்கப் பற்றிக் கொண்டவள், “டேய் இப்ப எதுக்கு என்ன தூக்கின… என்ன கீழ விடுடா” என்று அவள் அவன் கைகளில் அவள் திமிர… அவள் விழுந்து விடமால் அவள் இடையில் அழுத்தத்தை கூட்டியவன், “ஸ்விம் பண்ண வரேன்னு சொல்லு… இப்பவே உன்ன கீழ விட்றேன்” என்றான்.
“முடியாது… எனக்கு இப்ப ஸ்விம் பண்ற மூட் இல்ல” என்று அவள் கத்தியதை எல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை…
“டேய் விடுடா… மலமாடு மாதிரி வளர்ந்து இருக்க… நான் சொல்றது புரியலயா” என்று அவன் வெற்றுமார்பில் அடித்தபடி கூறினாள் மகிமா…
அவனுக்கோ அந்த அடியெல்லாம் பொருட்டே இல்லை…
அவனோ அவன் வேலயிலே கண்ணாக இருக்க… கோபத்தில் அவன் கழுத்தை அவள் ஊன்றிக் கடித்து வைக்க, வலியில் “ராட்சஷி” என கத்தியவன் அப்படியே அவளை நீச்சல் தடாகத்தினுள் போட்டவன், அடுத்த கணமே அவனும் டவ் அடித்து நீரினுல் பாய்ந்தான்…
நீரில் மூழ்கி எழுந்தவன் தன் தலையில் இருந்து வடிந்த தண்ணீரை ஒற்றை கையால் துடைத்த படி அவளை பார்க்க,
அவளோ அவனை உக்கிரமாக முறைத்த படி நின்றிருந்தாள்.
மகிமா பழுப்பு நிற டி-ஷர்ட்டும்… ட்ரவுசரும் அணிந்திருந்தாள்…
அவள் டி-ஷர்ட் நீரில் நனைந்ததால் அவள் மேனியுடன் ஒட்டி அவள் அழகை அவனுக்கு விருந்தாக்கி கொண்டிருந்தது…
அவளைப் பார்த்து எச்சிலை விளங்கிக் கொண்டவனுக்கு, தன் கண்ணை அவளிடம் இருந்து அகற்றத்தான் முடியவில்லை…
அவன் பார்வை மாற்றத்தை அறியாதவள் அவன் அருகே வந்து, “நனைய கூடாதுன்னு பார்த்தேன்… முழுசா நனஞ்ச அப்புறம் முக்காடு எதுக்கு?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டவள், “நாம ஸ்விம்மிங் காம்பெடிஷன் ஒன்னு வைப்போமா” என்று ஆர்வமாக கேட்க,
பெருமூச்சுடன் அவளைப் பார்த்து, “ம்ம் ஒகே… நான் ஜெயிச்சா என்ன தருவ” என கண்கள் மின்ன கேட்டான்.
“என்ன வேணும்” என்று அவன் புரியாது கேட்டாள் மகிமா.
“ஜெயிச்சுட்டு சொல்றேன்” என்றான் அவன்.
“அவ்ளோ நம்பிக்கையா… பார்க்கலாம் யாரு ஜெயிக்கிறாங்க” என்று உதடு சுழித்துக் கூறியவள், அவன் கேட்க போவதை அறியாது “சரி” என்று சொல்லியவள், தான் ஜெயித்தால் டிவோஸ் கேட்க நினைத்திருந்தாள்…