என் பிழை நீ

என் பிழை நீ – 20

பிழை – 20 மதன் கூறியது போலவே அன்று மதிய உணவு இடைவேளையில் அவனை சந்திக்க வேண்டி அவனின் அறையை தேடி சென்றாள் ஆஷா. அந்நேரம் மதன் யாருடனோ செல்பேசியில் பேசிக் கொண்டிருப்பது இவளின் காதில் விழ.. அப்படியே சற்று நேரம் நின்று இருந்தாள். “என்னக்கா நான் தான் இப்போ எதுவும் பார்க்க வேண்டாம்னு சொல்றேன்ல இப்ப என்ன அவசரம்?”. எதிர் முனையில் என்ன கூறப்பட்டதோ, “ஆமா என் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா அதனால […]

என் பிழை நீ – 20 Read More »

என் பிழை‌ நீ – 19

பிழை – 19 தன் கடின உழைப்பால் இனியாள் நீட் தேர்வில் தேர்ச்சியாகி பெரிய மருத்துவ கல்லூரியிலும் அவளுக்கு படிக்க இடம் கிடைத்தது. நாராயணனுக்கு அத்தனை மகிழ்ச்சி.. தன் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததை அனைவரிடத்திலும் சொல்லி பூரித்துப் போனார். தன் சம்பந்தி வீட்டிற்கும் அவர் அழைத்து இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள.. அவர்களும், “அப்படியா ரொம்ப சந்தோஷம்” என்று அதைப்பற்றி விசாரித்துவிட்டு அழைப்பை துண்டித்து விட்டனர். பாக்யா உடனே நித்யாவிற்கு அழைப்பெடுத்தவர், “என்னடி

என் பிழை‌ நீ – 19 Read More »

என் பிழை‌ நீ – 18

18 “வாயை திறந்து அப்படி உன் மனசுல என்ன தான் இருக்குன்னு சொல்லுடி.. உன்கிட்ட உரிமையா வெளிப்படையா கேட்கவும் முடியாம நீ இப்படி கஷ்டப்படுவதை பார்க்கவும் முடியாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கேன் டி. ப்ளீஸ், அப்படி என்ன தான் உன் மனசுக்குள்ள இருக்குன்னு என்கிட்ட வெளிப்படையா சொல்லு” என்று மனசீகமாக அவளிடம் மன்றாடியவன். தன் குரலை செருமியவாறு, “என்கிட்ட உனக்கு ஷேர் பண்ணிக்கனும்னு இருந்தா தாராளமா உன்னுடைய பாஸ்ட் பத்தி என்கிட்ட நீ ஷேர் பண்ணலாம்”. அவனின்

என் பிழை‌ நீ – 18 Read More »

என் பிழை‌ நீ – 17

பிழை – 17 “என்னமோபா அவங்க வாழ்க்கை தான் அப்படி ஆயிடுச்சுன்னு பார்த்தா இப்ப அவங்க பையனோட வாழ்க்கையும் இப்படி இருக்கு” என்று வருத்தத்தோடு அவர் பெருமூச்சு விடவும். மீண்டும் இனியாளின் எண்ணம் தன் மகளிடம் சென்றது. தன் தாயின் வார்த்தைக்கு இனியாளின் முகம் சுணங்குவதை கண்ட பாரிவேந்தன், “உள்ள குழந்தை அழற மாதிரி சத்தம் கேட்குது நீ போய் என்னன்னு பாரு” என்றதும் அவனுக்கு சம்மதமாக தலையசைத்த இனியாள் அறைக்கு எழுந்து சென்று விட்டாள். “நான்

என் பிழை‌ நீ – 17 Read More »

என் பிழை‌ நீ – 16

பிழை‌ – 16 எத்தனை நல்லவனாக இருக்கிறான். தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு கூட எவ்வளவு உதவிகளை செய்கிறான். அவர்களின் வாழ்க்கையை சீர்படுத்த முனைகிறான்.. உண்மையிலேயே அன்று நர்ஸ் ரம்யா கூறியது போல் இவன் மிகவும் நல்லவன் தான் என்று பிரம்மிப்பாக அவனை பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள். “சைன் பண்ணு” என்று அவன் தன் கண்களால் அவள் கையில் இருக்கும் காகிதங்களை காட்டவும். முதல் இரண்டு பக்கங்களை படித்தவளுக்கு அவன் கூறியது போல் இது குழந்தைக்கானது தான்

என் பிழை‌ நீ – 16 Read More »

என் பிழை நீ – 15

பிழை – 15 பாரியின் இத்தகைய பேச்சு இனியாளுக்குமே பேரதிர்ச்சி தான். அதிலும், அவன் ஏதேதோ கதையை எல்லாம் கூறவும் இதையெல்லாம் நாம் எப்போது அவனிடம் கூறினோம் என்று அதிர்ந்து அவனை பார்த்தாள். அவளின் அதிர்ந்த பார்வையை உணர்ந்தாலுமே அதை சற்றும் சட்டை செய்யாதவன் தன் கையில் இருந்த காபியை ஒரு மிடர் அருந்தினான். “ஓ.. அப்படியா.. இதுல என்ன இருக்கு இனியா எங்க கிட்ட எல்லாம் இத முதல்லையே சொல்லி இருக்கலாமே.. இந்த காலத்துல காதல்

என் பிழை நீ – 15 Read More »

என் பிழை நீ – 14

பிழை – 14 எப்பொழுதும் எதையோ பறிகொடுத்தது போல் சற்றும் கண்களில் உயிர்ப்பில்லாமல் தான் இருக்கிறாள் இனியாள். ஆம், அவள் பறி கொடுத்தது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லையே.. அவளின் வாழ்க்கையை அல்லவா அவள் பறி கொடுத்திருக்கிறாள். அதன் தாக்கம் அவ்வளவு எளிதில் அவளிடம் இருந்து மறைந்து விடுமா என்ன.. இதோ அதோவென்று அவள் பாரியின் வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டது. இப்பொழுது எல்லாம் குழந்தையும் நன்கு முகம் பார்த்து சிரிக்க துவங்கி விட்டது.

என் பிழை நீ – 14 Read More »

என் பிழை நீ – 13

பிழை -13 வெளியே வந்து அரவிந்தும் விதுஷாவும் காரில் ஏறிவிட்டனர். விதுஷாவின் முகம் இன்னும் தெளிவடையவில்லை சற்று கலக்கமாக தான் தென்பட்டது. அரவிந்த் அவளின் கையை மென்மையாக பற்றியவன், “என்னாச்சு விது?”. “பாரியை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்குடா.. இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு நாள் மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான்ல.. இதை அவன் நம்ம கிட்ட எல்லாம் ஷேர் பண்ணி இருந்திருக்கலாமே நாம என்ன சொல்ல போறோம் நாம அவனுடைய பிரெண்ட்ஸ் தான”. “ஆமா

என் பிழை நீ – 13 Read More »

என் பிழை நீ – 12

பிழை – 12 “எஸ்.. அவளுடைய குழந்தைக்கு அப்பா நான் தான்” என்றவன் எப்படி இவனின் குழந்தைக்கு அவள் தாயாகினாள் என்ற கதையையும் கூறி முடித்தான். “என்ன சொல்ற பாரி நீ சொல்றதெல்லாம் உண்மையா? என்னால கொஞ்சம் கூட நம்பவே முடியல” என்று அதிர்ந்து போய் விதுஷா கேட்கவும். அரவிந்திற்கோ பாரிவேந்தன் கூறியதை கேட்ட பின்னர் பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஆம், அவன் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதை பற்றி இவனும் அறிவான். ஆனால் அப்பெண் இனியாளாக

என் பிழை நீ – 12 Read More »

என் பிழை நீ – 11

பிழை – 11 ஏற்கனவே தனக்குள் இறுக்கமாக இருந்தவனின் மனநிலை விதுஷா உடனான திருமண பேச்சுக்கு பிறகு மேலும் இறுகியது. அவளிடமிருந்து இன்னும் கொஞ்சம் விலகி நிற்க தொடங்கினான். அது அரவிந்திற்கு தான் வசதி ஆகிப் போனது. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் விதுஷாவின் மனதை தேற்றுகிறேன் என்ற பெயரில் அவளுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு இருந்தான். வீட்டில் நடந்த திருமண நிராகரிப்பு பேச்சு பற்றியும் விதுஷா அரவிந்த்திடம் கூறி இருக்க.. “விடு விது.. நான் தான் உன்கிட்ட ஏற்கனவே

என் பிழை நீ – 11 Read More »

error: Content is protected !!