அறைந்த தன் தந்தையிடம் சண்டை பிடிப்பது எல்லாம் முட்டாள் தனமானது என்பதை அப்போது உணர்ந்தாள்.
“உன் சித்தி வாக்கு கொடுத்துட்டா. அதனால நம்ம அது நல்லது கெட்டதுன்னு பாக்காமல் செஞ்சு தான் ஆகனும்”.
சித்தியா? என் விஷயத்தில் முடிவு எடுக்க அவங்க யாரு?
அவதான் உன் அம்மா
இல்ல அவ என் அம்மாவ கொன்ன பாவி. நீயும் என் அம்மாவ கொல பண்ண உதவின பாவினு எனக்கு தெரியும். தெரிஞ்சும் யாருகிட்டையும் நான் உங்கள மாட்டி விடாமல் இருக்கனா அதுக்கு ரிதன்யா மட்டும் தான் காரணம் என்று விரல் நீட்டி மிரட்டினாள்.
சமையலறையில் இருந்து வெளிவந்த மதுமிதாவிற்கு இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இதுவரை காத்து கொண்டு இருக்கிறோம் என்ற சிந்தனை இப்போது பொய்யானது.
அம்மா என்று அன்புடன் அழைக்கும் இவள் வார்த்தைக்கு வார்த்தை சித்தி சித்தி என்கிறாளே, ஒரு வேல நம்மள போலீஸ் கிட்ட இவ மாட்டி விட்டுட்டா என்ன பண்றது என தீவிரமாக யோசித்தாள்..
அத்தோடு அரச்சனாவும் சித்தி உங்களுக்கு அப்படி என்னப்பா பண்ணிட்டாங்க. அவங்க என்ன பண்ணாலும் செஞ்சே ஆகனும்னு அடம் புடிக்கிறீங்க..
ஆதங்கத்துடன் அர்ச்சனா கேட்கவும் பதிலளிக்க துவங்கினார் கோபாலகிருஷ்ணன்.
அவ எனக்காக எல்லாத்தையும் இழந்தவ.
மதுமிதா சித்தி இல்லப்பா என்னோட அம்மா காந்தாரி தான் எல்லாத்தையும் இழந்தவங்க. உங்களோட அன்பு முதல் கொண்டு இழந்தவங்க.
அவள பத்தி நீ இந்த வீட்ல பேசுனா நீ முதல்ல என் வீட்டை விட்டு வெளியே போ என்று கோபாலகிருஷ்ணன் ஆதங்கத்துடன் கூறினார்.
வேகமாக அவரிடம் ஓடிவந்த மது, ஏங்க நீங்க வேற. அவ தான் சின்ன புள்ள விவரம் தெரியாம பேசுறா. நீங்களும் சின்ன பையன் மாதிரி பெத்த பொண்ணு கிட்டயே சண்டை போடுறீங்க. இத்தனை வருஷத்துல சண்டனு நம்ம வீட்டுல வந்து இருக்கா. இப்ப ஏன் இப்படி
தன்மையாக காரியம் சாதிக்கும் விதத்தில் பேசினால் மதுமிதா.
அவ என்ன பேசினான்னு பார்த்த தானே. காந்தாரிய பத்தி என்கிட்டையே விளக்கம் கொடுக்கிறா.
என மதுமிதாவிடம் பதில் அளித்தவர்
உன்ன நான் உயிரோடு விட்டு வச்சிருக்கேனா காரணமே மதுமிதா தான். ஒழுங்கா பொம்பள புள்ளையா நான் சொல்றவன கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் வாழ்ற வழிய பாரு.
அப்படி என்னால வாழ முடியாதுன்னு சொன்னா பொட்டி படிக்கைய எல்லாம் கட்டிக்கிட்டு வீட்டை விட்டு வெளியே போ. ஒரு பிள்ளை எனக்கு இல்லைன்னு நான் முடிவு எடுத்துறேன்.
ராஜேஷின் மூர்க்கமான செயலை சொல்லிக் கூட இந்த குடும்பம் தன்னை அவனுக்கு திருமணம் முடித்து வைத்தாக வேண்டும் என்று என்னை வற்புறுத்துகிறார்கள் என்றால் இது நடக்கக் கூடாது என போராடும் நானே ஏன் இந்த முடிவை எடுக்க கூடாது.
போறேன் இந்த வீட்டை விட்டு நான் போறேன். இனிமே நீங்க வாமானு கூப்பிடற வரைக்கும் நான் வரமாட்டேன். என் அம்மாவை பத்தி பேச கூடாதுன்னு சொன்னீங்க இல்ல. நீங்களா அவங்கள பத்தி பேசுற சூழ்நிலையோட வருவேன்.
இவ்வாறு அர்ச்சனா சொல்லவும் ஒருவேளை காவல் அதிகாரியிடம் சென்று விடுவாளோ என்று பயந்த மதுமிதா கிருஷ்ணரிடம் ஓடி சென்று ஒருவேளை போலீஸ் ஸ்டேஷன் போயிட்டான்னா நம்ம என்ன பண்றதுங்க. கொஞ்சம் அவகிட்ட சாந்தமா பேசி காரியத்த சாதிக்க பாருங்க.
அதோட மட்டுமில்லாம இந்த ஊருக்கு நீங்க பஞ்சாயத்து ஆளு. வீட்டை விட்டு வெளியே போன அவள துரத்திட்டீங்கன்னா உங்க மானம் மரியாதை எல்லாம் என்ன ஆகுறது.
என அவன் அறியும்படி அவனோடு கிசுகிசுதாள்.
தனது அறையில் நுழைந்து தனக்கென்று உள்ள உடைகளை பெட்டியில் அடுக்கியவள் நான் போயிட்டு வரேன் என்று கிளம்ப எத்தனித்தாள்.
தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இந்த வீட்டில் இத்தனை நாள் அவள் அமைதியாக பொறுத்துக் கொண்டு சென்று இருந்தாள்.
அவரையே தவறாக பேசும் இவர்கள் எல்லாம் இனிமேல் இவளுக்கு தூசுதான்.
என்ன சித்தி போலீஸ் ஸ்டேஷன் போயிடுவனு பயப்படுறீங்களா? உங்க நாடகம் உங்க அன்புன்ற வேசத்துல எங்க அப்பா கிட்ட காட்டுறீங்க. அத ஒரு நாள் அவரே புரிஞ்சுப்பார். இதுக்காக நான் போலீஸ் ஸ்டேஷன் போகணும்னு அவசியம் இல்ல. ரொம்ப பயப்படாதீங்க கொஞ்சம் மூச்சு விடுங்க.
மதுமிதாவின் முகத்தை பார்த்து அவள் இருந்த பதட்டத்தினை அறிந்தவள் சொல்லிவிட்டு பெட்டியோடு புறப்பிட்டாள்.
ஜலகண்டபுரம் வந்து நின்றவர்களுக்கு என்ன செய்வது என்று சுத்தமாக விளங்கவில்லை. காலம் தன் போக்கில் அவளை சேலம் செல்லும் பேருந்தில் அமர்த்தியது. மனமும் இவர்கள் இருவராலும் தான் பாதிக்கப்பட்ட சூழ்நிலையை எண்ணி தவிதவித்தது. இவளின் இச்சூழ்நிலைக்கு முழு காரணகர்த்தாவான அவனோ அவனது பதவி உயர்வில் மும்முரம் காட்டிக்கொண்டிருந்தான்.
கண்டிப்பா நான் பண்ணி கொடுக்கிறன் சார். இதனால எனக்குன்னு ஒரு பதவி உயர்வும் கமிஷனும் சேர்ந்து வந்துச்சுன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்.
உனக்கு இல்லாமலா ராஜேஷ். நான் சொல்றத மட்டும் நீ பண்ணி கொடுத்துட்டனா மாச மாசம் உனக்கு தகுந்த கமிஷன் வந்துரும். அதோட மட்டும் இல்லாம இப்ப நீ வெறும் சேக்காலி மட்டும் இல்ல. இந்த கட்சி ஓட தலைவர் என்ற பொறுப்பையும் அடைஞ்சிடுவ.
சும்மாவே ஆசை கொள்ளும் இவனுக்கு இப்படிப்பட்ட லட்டு பேராசை வந்தால் சும்மா விடுவானா அவன்.
ஒருபுறம் அர்ச்சனாவை கைபிடிக்க போகின்றோம் என்ற சந்தோசமும், அவனது கட்சியில் பதவி உயர்வும் சந்தோஷமும் அவனுக்கு இரட்டிப்பானது.
ராஜேஷ் அன்றைய கொடூர செயலால் விளையவிருக்கும் அனர்த்தம் அவனுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என அறியாதவன்.
சீக்கிரம் சீக்கிரம் டா பந்தல் எல்லாம் கரெக்டா போடுங்க. சேர்லாம் லைனா நீட்டா இருக்கணும். நம்ம தலைவரே பார்த்து என்ன பாராட்டற அளவுக்கு இது இருக்கணும். அங்க அந்த பொக்கே பாக்ஸ் வச்சிருங்க. இங்க இந்த தண்ணீர் கேன் வச்சிருங்க.
பதவி உயர்வுக்காக மட்டும் தனது உடலை வளைத்து வேலை செய்து கொண்டிருக்கிறான் இவன்.
என்ன அண்ணே இத்தனை நாளா வீட்ல சோம்பேறியா படுத்துட்டு இருப்பா. இப்ப என்னடான்னா வெறி புடிச்ச மாதிரி வேலை செஞ்சிட்டு இருக்கா.
அவனுக்கு அடிச்ச ஜாக்பாட் அப்படிடா. ஓடி ஓடி உழைச்சாலும் நமக்குன்னு ஒரு பதிவியும் கொடுக்க மாட்டாங்க. அவன் வீட்டிலையே கால் மேல கால் போட்டு டிவி பார்த்துகிட்டு தலைவர் பதவிக்கு ரெடி ஆகிட்டு இருக்கான்டா.
அப்ப இப்ப இருக்க தலைவர்?
அவரு ஒரு பெரிய ஹாஸ்பிடல் கட்டப் போறாராம். அதுக்கு அவங்க பையன் தான் தலைமை தாங்கி நடத்த போறானாம். சோ இனிமே அதை கவனிக்கறதுல இவர் உதவ சொல்லி அவங்க மகன் கூப்பிட்டானு கட்சியில் இருந்து விலகப் போறாரு. அதுக்காக அவருக்கு யாரு தலைவரா வரணும்னு யோசிக்கிறாரோ அவர அவரே நியமிச்சுட்டு போயிடுறதா முடிவெடுத்துட்டு இருக்காரு.
இது எப்படிண்ணா இவரே முடிவு எடுக்க முடியும்?
நல்ல கேள்விதான். பட் தலைவரை சுத்தி நடக்குற எல்லா விஷயத்துக்குமே தலைவர் ஆல்ரெடி முடிவு பண்ணி இருப்பார். யாரும் எதுவும் எதிர்த்து பேச முடியாத அளவுக்கு தான் இருக்கும் என்றான் பதவி வெறிக்காக ஆசைப்படும் இருவர்கள்.
கட்சி என்றாலே பதவி உயர்வு தான் முக்கியமானது. அதில் வெகு நாட்களாக உள்ள இவர்களைத் தாண்டி இந்த தலைவர் பதவி உயர்வு ராஜேஷிடம் செல்கிறது என்றால் அதற்கு முழுமுதற்காரணம் அவனிடம் குவிந்து கிடக்கும் சொத்து பத்துகள்தான்.
தலைவரைப் போன்று நான்கைந்து ஊர்களில் உள்ள சொத்து பத்துகளை தன் கைவசம் வைத்துள்ளவன் தான் இவன். எங்கு திரும்பினாலும் பூத்துக் குலுங்கும் மலர்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அண்ணாந்து பார்க்கும் தென்னை மரங்களோடும் வாழும் இவனுக்கு அந்தப் பணம் மற்றும் செழுமைம் மட்டும் போதாமல், இதோ கட்சியின் முக்கிய பிரமுகர் ஆக மாற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான்.
அதற்காக எந்த முயற்சியும் எடுக்காமலே அவனுக்கே அவை வந்து சேர்ந்தன.
ஊர்ல உனக்கு தெரியாத ஆளுங்களே இல்லடா. இப்ப என்னோட அப்பாவை நான் வந்து அந்த கட்சியிலிருந்து விலக்கி எங்க ஹாஸ்பிடலுக்கு உதவி செய்வதற்காக வச்சுக்கலாம்னு இருக்கேன். இது உனக்கே வந்து சேரட்டும் என்று ராஜேஷின் நண்பன் சொல்ல இவனுக்கு தலைகால் புரியவில்லை. அதற்காகத்தான் இப்பொழுது கை,கால் நிற்காமல் வேலை பார்க்கிறான். இல்லையென்றால் தான் குடித்த தண்ணீர் தம்ளரை கூட நகற்றி வைக்க யோசிப்பவன்.
தாய் தந்தையின் பேச்சுக்களினால் வீட்டை விட்டு புறப்பட்டவள் இப்பொழுது சேலம் வந்தடைந்தாள்.
அப்போது அங்கு பொழிந்திருந்த மழையின் காரணத்தினால் பேருந்து நிறுத்தத்திலே நிற்கும் சூழல் ஏற்பட்டது.
ஏனோ தன் கண்ணிற்கு ஒரு ஆண்மகன் இந்த கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டபடி செல்வது அவளுக்கு தெரிந்தது.
யார் இவன் இந்த மழையிலும் கூட இப்படி நனஞ்சுட்டு இருக்கான் என யோசித்தவளுக்கு இவையெல்லாம் தனக்குத் தேவையில்லாத வேலை என்று தோன்றியது.
அதனால் என்னவோ அமைதியாக இருந்தளக்கு தானே போய் உதவி செய்யும் அளவிற்கு மழை கொண்டு வந்து விட்டது.
இன்னும் சிறிது தூரம் நடந்து இருந்தால் அவன் அங்கு அடித்துச் செல்லப்படும் சாக்கடையில் மூழ்கி இருப்பான்.
கொட்டும் மழையில் நனைந்த தேகத்தோடு கிழிந்த உடையில் அந்த சாக்கடையில் விழாமல் அவனைத் தடுத்து நிறுத்தினால் அர்ச்சனா.
அவனது கையை பிடித்து நிறுத்தியவள் கொஞ்சமாவது உங்களுக்கு அறிவு இருக்கா. கொட்டுற இந்த மழையில எதுக்காக இப்படி நனைஞ்சிட்டு வந்துட்டு இருக்கீங்க.
தன் முன் நின்று தனது கையினை பிடித்து பேசிக் கொண்டிருக்கும் இந்த குரல் தான் நேற்று ஹோட்டலில் தான் கேட்ட குரல் என்று அவனுக்கு நினைவு வந்தது.
என் மனைவியைப் போன்று பண பேராசை உள்ள பெண்ணாளா நான் காப்பாற்றப்பட வேண்டும்.
நீ…நீதானே நேத்து ஹோட்டல்ல என்று அவன் ஆரம்பிக்கும் முன்
முதல்ல கொட்டுற மழையில் இருந்து வந்து அந்த நிறுத்தத்துல நின்னுட்டு பேசுங்க, என்றதோடு அவனை கையோடு கூப்பிட்டு சென்றாள்.
அங்கே நின்றவுடன் இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் விழி அகலாமல் நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டே நின்றார்கள்.
இவளா நேற்று அப்படி வார்த்தைகளை பேசியது. பணம் பணம் என திரியும் முகம் போல இவளுக்கு இல்லை என்றாலும் இவள் தானே அது என உறுதி செய்ய துடித்தது அவனது மனம்.
நேத்து ஹோட்டல்ல நீ தானே ஒரு பையன நீதான் பில் பே பண்ணியே ஆகணும்னு வற்புறுத்தினது.
கொட்டிய மழையில் நனைந்த தன்னுடைய உடையை செய்தவாறு ஆமாம் நானே தான் என்ற அவள் அசட்டையாக பதில் அளித்தாள்.
ஒரு உதவி புரிஞ்சதற்காக அவனுக்கு இவ்வளவு செலவு வைக்கணும்னு நினைக்கிற நீ எல்லாம் நல்ல குடும்பத்து பொண்ணா?
என்ன என்பது போல கண்களை குறுக்கி அவனை முறைத்த அவளுக்கு அவனும் ஒரு அறை கொடுத்தான்.
போனால் போகட்டும் என்று மழையிலிருந்து காப்பாற்றிய அவளுக்கு இப்பெயரும் இந்த அடியும் தேவைதான்.