காதலுற்றேனடி அன்னம்

அன்னமே 45

அன்னமே 45 அத்தியாயம் 46     சிற்பம் வடிக்க அங்க அளவுகள் தேவை..! அதற்கு தேவையான அளவுகோல் உபகரணம் தேவை..! கையையும் கண்களையும் கொண்டு சிற்பம் செய்திடத்தான் முடியுமா..! முடியுமே..! ஏற்கனவே செய்த சிலையின் அளவை எடுக்க கண்பார்வையே போதும்…!   சத்தியசீலன் அன்னத்தின் அங்கங்களில் வேட்கையுடன் இரு கரம் கொண்டு உணர்ந்தான். இது போதாதே வேக மூச்சுடன் பின் அழகை உள்ளங்கையால் வதைத்தான்.   ஒரு கரம் அங்கே தேங்க அடுத்தது இடையில் இருந்து […]

அன்னமே 45 Read More »

அன்னமே 42, 43, 44

அன்னமே 42, 43, 44   புடிச்சிருக்குதுன்னு வம்பா கட்டிக்கிட்டார். அதுவும் அத்தன பேரு நிக்கையில அன்னைக்கு சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணிக்கிட்டான். “நீயா வந்து கால்ல உழுந்து கேட்டாத்தான் உந் தங்கச்சியா கட்டிக்குவேண்டா” ன்னு சொன்னதை அப்படியே நடத்திட்டான்.   உடம்பு சரியில்லன்னு விலகி போராப்லயாட்டம் இருக்குதுன்னு அவளா நெனச்சுக்கிட்டு விட்டுட்டா. அவன்கிட்ட இருக்க முரட்டுக்குணம், முரட்டு பேச்சு இதெல்லாம் காணலை. சின்ன வயசுல இருந்தே அவளைப் பாத்தாவே அடிப்பதும் கொட்டுவதுமா இருப்பான். உன்னாலதாண்டி சண்டை

அன்னமே 42, 43, 44 Read More »

அன்னமே 38,39,40 41

அன்னமே 38,39,40 41 அத்தியாயம் 38     பொண்ணை கட்டிக்குடுக்கும் போது நண்டு சிண்டுல இருந்து அந்தப் பொண்ணுக்கு சொல்ற ஒரே புத்திமதி புருஷன் மனசு கோனாம நடந்துக்க. தப்பு உம்மேல இலைன்னாலும் அனுசரிச்சு இருந்துக்க புள்ள.   சண்ட சச்சரவுன்னு பொறந்த ஊட்டுக்கு பைய தூக்கிட்டு வராதன்னு சொல்லி சொல்லி மனசுக்குள்ள பதிய வைப்பாங்க. இதுவே பால பாடமா போவ புகுந்த ஊட்டுல மூச்சு விடக்கூட பயமா போவும் பொண்ணுங்களுக்கு.   ஆசை அறுபது

அன்னமே 38,39,40 41 Read More »

அன்னமே 36 37

அத்தியாயம் 36 37 தலை வலி அதீதமா இருக்க, ஒரு மாத்திரைய வாயில போட்டு முழுங்கினார் டாக்டர். அவரும் ஒரு மணிநேரமா எல்லா வகையிலும் எடுத்து சொல்லிட்டாரு அவன்கிட்ட. அன்னம் அப்சர்வேசன்ல இருக்கணும். குளிக்க புடிக்க சாப்பிட கூட தெம்பிருக்காது. ஒரு வாரத்துக்கு தூக்கமும் மயக்கமாவுமே போவும்னு. ஆனாக்கா சத்தியசீலன் எதையுமே கேக்கல. வீட்டுக்கு போயே ஆவணுமுன்னு நின்னுட்டான் புடிவாதமா. “நா பாத்துக்கறேன் டாக்டர். நீங்களா விடுங்க. இல்லன்னா தூக்கிட்டுப் போயிட்டே இருப்பன் பாத்துக்கங்க” மெரட்டினான் அவரையே.

அன்னமே 36 37 Read More »

அன்னமே 34 35

அத்தியாயம் 34,35 தங்கங்களே எழுதும் போது, ரொமான்ஸ் வச்சுத் தள்ளிட்டேன். ஆனாலும் அங்கங்கே சென்சார் போட்டு கட் பண்ணிட்டேன். இதுவும் அதிகத்துக்கும் அதிகமா ரொமான்ஸ் இருந்தா சொல்லிடுங்கடா🙈   பேச்சு கொடுத்து முத்தம் வைத்து மெதுவாக அவளை ஆண்டிருந்தால் தாம்பத்தியம் என்றால் கொடுமையான வலியாக அவளுக்கு தெரியாது.     ‘அம்மாடியோ இது பிடிக்கவே இல்ல. திரும்ப அதே வாழ்க்கைக்குள்ள போவ முடிஞ்சா தேவலையே’ உடம்பு நோவு தாங்காம கெஞ்சிற்று. இனி தெனமும் இப்படியேதான் நாளு போவோமா

அன்னமே 34 35 Read More »

அன்னமே 33

அன்னமே 33 அத்தியாயம் 33   “என்ன புள்ள நா சொன்னது வெளங்குச்சா?” அம்சா செவ்வந்திகிட்ட விசாரித்தார்.   அவளுக்கு ஒரு மண்ணும் புரியல. அம்சா பாத்து பாத்து கட்டிவிட்டிருந்தார் பட்டுசீலையை.   “என்னடி ஒரு மார்க்கமா தலையாட்டி வக்கிற. ஆமாவா இல்லையான்னு வாய தொறந்து சொல்லு”   “ஆமாக்கா புரிஞ்சுது” பாக்க கூடாது கேக்க கூடாதுன்னு மெரட்டி வச்சுட்டு இப்ப இதெல்லாம் புரியுதான்னு சொல்லிட்டு வெக்கமே இல்லாம பேசறாங்க அப்படின்னு முகம் சிவந்து போனாள் செவ்வந்தி.

அன்னமே 33 Read More »

அன்னமே 32

அன்னமே 32 அத்தியாயம் 32     செவ்வந்தியையும் கருப்புச்சாமியையும் மறுவீடு அழைத்து திரும்ப அவர்கள் வீட்டில் விட்டார்கள் அமுதாவும் கண்ணப்பனும்.   செவ்வந்தியோட புகுந்த வீட்டை பாக்கையில வெசனமா போனது அவங்களுக்கு. புதுசா கல்யாணம் கட்டினதுக்குண்டான எந்த களையும் அவங்க மூஞ்சியில காணோம்.   எங்கே சந்தோசப்பட. ஒரே பந்தலுல ரெண்டு கல்யாணத்த வச்சாச்சு அதுவரைக்கும் சந்தோசந்தேன். அடுத்து தங்கச்சி கல்யாணத்த முடிக்கணுமேன்னு அந்த பரபரப்புல பொண்ணு பக்கத்துல உக்காந்துச்சா தாலியை கழுத்துல கட்டினமான்னு ஆச்சு

அன்னமே 32 Read More »

அன்னமே 30, 31

அன்னமே 30, 31 அத்தியாயம் 30   முகத்தில் சோர்வும் களைப்பும் அப்பிக்கிடந்தாலும், அலங்காரத்தால் அழகு கூடி இருந்தது. கருத்தடர்ந்து நீண்ட கருங்கூந்தலில் பூச்சரங்கள், ஏறி இறங்கிய வளைவுகள், அவள் உடுத்தியிருந்த கூரை புடவையை கருத்தில் கொண்டு வெறித்தவன், அவளை ரசிக்கவில்லை எவனோ ஒருத்தன் பக்கத்தில் உட்கார்ந்தாளே, அவள் கழுத்தில் அணிந்திருந்த மாலையை குரங்கு மாதிரி பிச்சு எரிய கைகள் பரபரத்தது.   ரோஜாப்பூ நிற உதட்டுச்சாயத்தில் குளித்திருந்த செழித்த அதரங்கள் அவன் கருத்தை கவரவேயில்லை.  

அன்னமே 30, 31 Read More »

அன்னமே 28, 29

அன்னமே 28, 29 மன்னிச்சிடுங்க தங்கங்களே. அப்டேட் கொடுக்க மறந்தே போயிட்டேன் 🙈. நீங்களாவது கேட்டிருக்கலாம்ல🤗 கண்ணப்பனுக்கும் அமுதாவுக்கும் எந்த சிரமத்தையும் கொடுக்கலை இளவரசன். செவ்வந்தியும் சேமிப்பை எடுத்துக் கொடுக்க. இருக்கறத போட்டு ஆகவேண்டிய செலவை பண்ணினான் இளவரசன். செவ்வந்திக்கு புகுந்த வீட்டுக்கு போகையில தந்துவிட வேண்டிய எல்லாத்தையும் அமுதாவையும் அம்சாவையும் கூட்டிட்டு போய் வாங்கிட்டு வந்துட்டான். கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னவே பத்திரிகை வேலையையும் முடிச்சிட்டார்கள் இவர்களும். அந்த கல்யாண மண்டபத்தில் இரண்டு ரூம்தான் இருந்தது.

அன்னமே 28, 29 Read More »

அன்னமே 26 27

அன்னமே 26 27     “கனவு மாதிரி ஆச்சு புள்ள” வந்தவர்கள் போய்விட, சூராவளி காற்று சுழற்றி அடித்தது மாதிரி ஆனது அவர்களுக்கு.   “நா நெனச்சுக் கூடப் பாக்கலை நம்ம புள்ளைக்கு இம்புட்டு நல்ல இடம். அதைவிடு புள்ள இப்பேர்ப்பட்ட நல்ல மாப்பிளை கிடைப்பாருன்னு கனவா கண்டோம்” அவரு வியந்தார்.   “நமக்கு சரியா வருமாய்யா. அந்தம்மா குணம் கொரங்குன்னு ஊர் மூச்சுட பேச்சு இருக்கு. அதான் கேக்குறேன். நம்ம புள்ளைக்கும் வாயி அதிகம்.

அன்னமே 26 27 Read More »

error: Content is protected !!