காதலுற்றேனடி அன்னம்

அன்னமே 9, 10, 

அன்னமே 9, 10,  பெரிய அத்தியாயமா தந்திருக்கேன் ஹனீஸ் 💕 அத்தியாயம் 9  கல்லூரி செல்ல ஆயத்தமாகி வெளியே வந்த அன்னம் ராமாயி அமர்ந்திருந்த திண்ணையில் அமர்ந்தாள். “அப்பத்தா காஃபி தரீங்களா?” கேட்ட அன்னம் கல்லூரியில் தோழிகளிடம் ஆசிரியைகளிடம் என பேசப்பழக இருப்பதால் கிராமத்துப் பேச்சு வழக்கை பேசுவதில்லை. மற்றவர்கள் கேலி கிண்டலுக்குப் பயந்தே முடிந்த அளவு தன்னை மாற்றிக்கொண்டாள். அவள் ஓரளவு நாகரீகமாய் இருப்பதுக்கு சுலோச்சனாவும் முக்கியக் காரணமாக இருந்தார். “மொத மொதல்ல காலேஜ் போற […]

அன்னமே 9, 10,  Read More »

அன்னமே 8 

அன்னமே 8    மக்களே ஒண்ணு கேட்கணுமே. நான் அதிகம் ஸ்டார் கமெண்ட் எல்லாம் தர சொல்லி கேட்கரதே இல்லைதானே. விருப்பம் இருந்தா தாங்கன்னுதானே சொல்லுவேன். ஆனால் எல்லாருமே படிச்சுட்டு சைலன்ட் ரீடரா இருக்கறதுதான் என்னை சோர்வடைய செய்யுதுன்னு தோணுது. லைக் கமெண்ட் இதெல்லாம் தரலாமே 🤗 கடைக்கு வரும் போகும் மக்களில் ஆயிரக்கணக்கான பேரைப் பார்த்துவிட்டார் கருணா. நல்லவன் கெட்டவன் மொள்ளமாரி குடிகாரன் என ஊரில் இருக்கும் மொத்த வரலாறும் தெரியும் அவருக்கு. “மனசுல பட்டத

அன்னமே 8  Read More »

அன்னமே 7

அன்னமே 7 அத்தியாயம் 7 விமர்சனம் ரேட்டிங் எதுவும் வரலையே. அப்போ யாரும் படிக்கலையா? கதை தொடர்ந்து தரவா?  எட்டி வைத்து நடந்த செவ்வந்தி பேயை நேரில் பார்த்த கணக்காக அரண்டு விட்டாள். இன்னும் தடக் தடக் என எஞ்சின் ஓசை செவியில் டமாரம் அடித்தது.  “எம்மாடி கருவாயன் கண்ணு பாக்கவே பயங்கரமா இருக்குது. முன்ன பின்ன பொண்ண கண்ணுல பாக்காதமேனிக்கு வெறிச்சுப் பார்க்கறான் வெக்கங்கெட்ட நாயி” முந்தியை இழுத்து கழுத்தோடு மூடினாள். இன்னும் அவன் பார்வை

அன்னமே 7 Read More »

அன்னமே 6

அன்னமே 6 அத்தியாயம் 6  கதைய யாருமே படிக்கலை போலயே. விமர்சனம் ஏதும் வரலை.  சைலன்ட் ரீடராவே இருக்காதீங்கப்பா🤗 விமர்சனம் நிறைய வந்தால் அத்தியாயங்களும் வந்துட்டே இருக்கும்🤗 மஞ்சள் வானில் கருமேகங்கள் சூழ, மழைக்காற்று கட்டுடலை வருடிச் செல்ல, அவன் இதயத்தில் அரும்பாய் முகிழ்த்த காதல் உணர்வுக்கு தூபம் போட்டது. செவ்வந்தியை பார்க்கும் பார்வையில் இப்போது உரிமை இருந்தது. தன் முன் தாவணியில்லாமல் அங்கம் மறைக்க முயன்று தோற்று போனவளை பார்க்கவும் கிஞ்சித்தும் இரக்கம் வரவில்லை அவனுக்கு.

அன்னமே 6 Read More »

அன்னமே 5

அன்னமே 5     கொலுசு சலக் சலக்கென சப்திக்க உடுக்கை இடை அசைவுக்கு தக்க, இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையில் தைத்திருந்த முத்து மணிகள் ஓசை எழுப்பியது.   இரண்டு கையிலும் நாலு நாலு கண்ணாடி வளையல் போட்டிருக்க, கலகலவென ஒலியோடு அவள் வாய் தானாக பாடியது.   அயித்தயும் மாமனும் சுகந்தானா… ஆத்துல மீனும் சுகந்தானா…   அன்னமே உன்னையும் என்னையும்… தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா…   கருத்த மச்சான் என்னை விட்டுப்

அன்னமே 5 Read More »

அன்னமே 4 

அத்தியாயம் 4  சுலோச்சனா முகம் இஞ்சி தின்னது போல மாறிவிட்டது. “பொண்ணா அடக்க ஒடுக்கமா இருந்தாத்தான. என்னைப் பாரு அழகைப் பாருன்னுட்டு காட்டிட்டு நிக்கறா. பக்கத்துல ஆம்பளைங்க நின்னா பத்தடி தள்ளி நிப்போம் நாம. இவ பாத்தியா அன்னம், அன்புவ உரசிகிட்டு நிக்கறா” பட்டாசு மாதிரி படபடத்தார். “எட்டி நின்னவதான் நெல்லு மூட்டைய ஒப்படைக்க வந்தவனை மயக்கி இழுத்தாளாக்கும். பேசுற பழமையை சரியா பேசச் சொல்லு கருப்புச்சாமி” ராமாயி மருமகளை இடிக்காத பாட்டில் வெத்தலையை கொட்டலாவில் போட்டு

அன்னமே 4  Read More »

அன்னமே… 3

அன்னமே… 3 ‘இந்தம்மா வாயில விழுந்தா விளங்குன மாதிரிதான். சீமையில இருந்து வந்தேன்னு சிங்காரிச்சுகிட்டு சுத்துறது. இதுக்கு மட்டும் எப்படித்தான் எந்நேரமும் அலங்கார பொம்மை மாதிரியே இருக்க முடியுதோ. ஒரு முடி கலையறது இல்ல, உதட்டுல சாயம் அப்பியிருக்கோ?’ சந்தேகம் வர, கண்களை சுருக்கி சுலோச்சகனா உதட்டில் பார்வையை ஊன்றினாள். அவள் மனதில் தோன்றும் தன்னைப் பற்றிய சந்தேகம் புரியாத சுலோச்சனா தன்னைப் பார்த்ததும் பயந்து வாயை மூடி அமைதியானாள் என்ற மிதப்பில் கண்ணில் உள்ள பவர்

அன்னமே… 3 Read More »

அன்னமே 2

அத்தியாயம் 2 ஒரு கம்பில் எலுமிச்சம் பழத்தை கட்டி முடிஞ்சு வைத்திருந்தது. “தூஊ இவனெல்லாம் பெரிய மனுஷன்னு சுத்திக்கிட்டு இருக்கானே. இப்படியாப்பட்ட வேலையை பண்றதுக்கு குட்டையில விழுந்து சாவலாம்” கம்பை மண்ணிலிருந்து உருவி ஓரமாய் நட்டுவிட்டு நடந்தாள். “இதுக்கெல்லாம் பயந்தா எப்படி பொழைக்கறது?” வரப்பில் நடந்தவள், சும்மா போகாமல் கடலைச் செடியை வேரோடு பிடுங்கி ஒவ்வொன்றாய் சாப்பிட்டவாறே நடந்தாள். “ஏண்டி கருவாச்சி முள்ளு வேலி போட்டு வச்சிருக்கன், மந்திருச்சு கட்டிவச்சிருக்குது. எதுக்குடி உள்ள வந்த?” மண்வெட்டியை தோளில்

அன்னமே 2 Read More »

அன்னமே… 1

அன்னமே… 1 வணக்கம் மக்களே… உங்களின் ஆதரவை பொறுத்து தொடர்ந்து அப்டேட் தருவேன்… வேந்தன் கதையில் அதிகமாய் உங்களோட ஆதரவு இல்லை. அதான்🤗 “ம்மா!” பசு மாடுகளின் குரல் அமுதாவை கூப்பாடு போட்டு என்னையும் சித்த நேரம் கவனின்னு அழைத்தது. “ம்மாவ்!” மகளின் குரலும் என்னை முதல்ல கவனின்னு காதில் விழ, “இருக்கறதை கொட்டிக்க முடியலையா? எந்திருச்சு வந்தன்னா விளக்குமாறு பிஞ்சுரும். இடுப்பு வலி உயிரை எடுக்க இதுங்க கூப்பாட்டுக்கு குறைச்சலில்ல” பெத்த மகளையும் பெக்காத பசு

அன்னமே… 1 Read More »

error: Content is protected !!