சிந்தையுள் சிதையும் தேனே

35. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 35 அந்த காகிதத்தை நன்கு வாசித்தவள், திடீரென நேராக நிமிர்ந்து, விக்ரமின் கண்களில் நேராகப் பார்த்தாள். அவளது பார்வையில் கிண்டலும், கேலியும் கலந்திருந்தது. அவள் பார்க்கும் பார்வையை பார்த்து சினம் கொண்ட விக்ரம், “பார்த்ததெல்லாம் போதும், முதலில் இந்த பேப்பர்ஸ்ல சைன் வை உடம்பில் உசுரு இருக்கணும்னு ஆசைப்பட்டின்னா மரியாதையா நான் சொன்னத வாய மூடிட்டு செய் அப்படி செய்தா இவங்க கிட்ட பேசி உனக்கு போனா போகுதுன்னு உயிர் பிச்சை வாங்கித் தாரேன்..” என்று […]

35. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

34. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 34 அவளது தலையில் பட்ட அடியின் கனத்த வலியில் உலகமே இருண்டு போனது. எத்தனை நேரம் கடந்தது என்று தெரியவில்லை. மெல்ல மெல்ல அவளது கண்கள் திறக்கும்போது, அவள் முதலில் பார்த்து ஒரு காரிருள் நிறைந்த அறை. அவளுக்கு நேராக மேலே ஒரு மின்குமிழ் மட்டும் ஆடிக்கொண்டிருந்தது. அவள் நகர முயன்றாள். ஆனால் கைகள், கால்கள் அனைத்தும் பெரிய கயிறுகளால் கட்டப்பட்டு இருந்தன. குளிர்ந்த தரையின் குளிர்ச்சியால் அவளது உடலே நடுங்கியது. ‘நான் எங்கே?’ என்று

34. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

33. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 33 காலை தேநீர் இடைவேளை நேரத்தில் ராதாவை தேடத் தொடங்கிய மகிழ்மதியின் மனசு, ஒரு முள் நுனியில் அமர்ந்தது போல பெரும் அவஸ்தைப்பட்டது.. “எப்படியும் லஞ்ச் டைம்ல எப்பாடு பட்டாவது அவங்கள கண்டுபிடிச்சு உண்மையை வெளிக்கொண்டு வரணும் நம்மளுக்கு இப்போதைக்கு வேறு வழியே இல்லை..” என்று முடிவெடுத்தாள். இயந்திரங்களின் பின்புறம் நிழல் போல ஒளிந்துகொண்டு அவள் ராதாவுக்காக காத்திருந்தாள். நொடிகள் மணி போலவும், நிமிடங்கள் நாள் போலவும் சென்று கொண்டிருந்தன. அந்த நேரம் மணி ஒன்று

33. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

32. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 32 மகிழ்மதி நிழலின் பின்னால் சுருண்டு நின்றவாறே தன் கைப்பேசியை மெதுவாக உயர்த்தியபடி ஒவ்வொரு நொடியும் அவள் கைகள் சற்று நடுங்கினாலும், அவளது கண்கள் இரும்புபோல கூர்மையுடன் அங்குள்ள ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்துக் கொண்டிருந்தது. அவள் முன் விரிந்திருந்த காட்சி மனிதர்களின் வேலை அல்ல, இயந்திரங்களின் பேரரங்கம் போலவே இருந்தது. சீருடையணிந்த ஆண்கள், பெண்கள் அதிக எண்ணிக்கைக்கு மேல் இருந்தாலும், அவர்கள் மனிதர்கள் என்பதை மறக்கச் செய்யும் விதத்தில் இயங்கிக் கொண்டிருந்தனர். ஒருவரின் கையில்

32. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

31. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 31 கிழக்கே பரந்த வானத்தின் ஓரத்தில், மெதுவாக பொன்னிறம் பரவி, இரவின் கருமையான போர்வையை அகற்றி ஒளியின் புது வண்ணங்கள் படரத் தொடங்கின. பறவைகளின் இனிய கீச்சு அந்த அமைதியை நொறுக்காமல், அதற்கே உயிர் கொடுக்கும் மெலோடியாக கலந்து கொண்டது. பனித்துளிகளால் நனைந்த பச்சை புல்லின் மேல் சூரியனின் முதல் ஒளிக்கதிர் விழுந்தபோது, அது வைரமாய் மினுக்கியது. உலகமே ஒரு புதிய நம்பிக்கையோடு விழித்தெழுவது போலத் தோன்றியது. ஆனால் மகிழ்மதி சுற்றுப்புறத்தில் நடக்கும் இயற்கை நடைமுறைகள்

31. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

30. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 30 மகிழ்மதி கமிஷனர் அலுவலகத்தில், மேசை மேல் சிதறிக் கிடக்கும் கோப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக புரட்டி ஆராய்ந்து கொண்டிருந்தாள். அறையில் இருக்கும் மந்தமான விளக்கின் கீழ் அவளது கண்கள் தீவிரமாக முக்கிய தலைவர்கள் கிடைக்கின்றதா என்று தேடியது. அப்போது திடீரென்று அவளது அலைபேசி சத்தமிட்டது. ‘யாரடா இந்த நேரத்தில்?’ என்று சலிப்புடன் ஒரு நொடி யோசித்தவள், திரையில் மின்னும் எண்ணைப் பார்த்ததும் கண்கள் ஆச்சரியத்துடன் பெரிதானது. ஒரு நிமிடம் தொலைபேசியின் திரையில் இருந்து பார்வையை எடுக்காமல்

30. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

29. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 29 நள்ளிரவு பன்னிரண்டு மணி. சாலையில் வாகன ஓசைகள் அரிதாகவே கேட்கின்றன. மெதுவாக வீட்டின் முன்பு சத்தம் எழுப்பாமல் நிவேதா காரை நிறுத்தினாள். கண்ணாடிக்குள் தெரியும் அவரது முகத்தில் பதட்டம் பளிச்சிட, காரின் கதவை திறந்து அவசரமாக வெளியே வந்தாள். அந்த நேரத்தில் கைப்பேசியில் ஒரு  குறுஞ்செய்தி ஒளிர்ந்தது. அதனை வாசித்தவள் திகைப்புடன் ஒரு நிமிடமும் தாமதிக்காமல், அந்த எண்ணுக்கு அழைப்பு எடுத்தாள். “ஹலோ டாக்டர்… எனிதிங் எமர்ஜென்சி?” என்று நிவேதாவின் குரலில் கவலை, ஆவல்

29. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

28. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 28 மகிழ்மதி தப்பி ஓடிய குற்றவாளி இருந்த அறையை ஒவ்வொரு அங்குலமாக ஒவ்வொரு மூலையையும் கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தாள். எங்காவது மறைந்து கிடக்கும் சிறிய குறிப்பு கூட அவளுக்குப் பெரிய வழிகாட்டுதலாக மாறும் என்று உள்ளம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தது. ‘ஒரு துரும்பே போதும்… அது தான் இந்த கேஸின் கதவைத் திறக்கும் சாவி..’ என்று அவள் மனதுக்குள் புனைந்தாள். அவள் விரல்கள் அங்கு இருக்கும் கோப்புக்களை ஒவ்வொன்றாகத் தொட்டு எடுத்து பார்த்தபோது, மார்புக்குள் உள்ள

28. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

27. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 27 அசிஸ்டன்ட் கமிஷனர் ரகுவரனின் அலுவலகத்துக்கு இந்த கேஸ் தொடர்பான விசாரணை பற்றி அறியும் ஆவலில் புறப்பட்டாள் மகிழ்மதி. அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற உற்சாகம் இருந்தாலும், உள்ளம் முழுக்க ஒரு பதட்டம் ஊர்ந்தது. அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன், அவரைப் பார்த்து சல்யூட் அடித்தாள். “வாங்க, வாங்க மகிழ்மதி… உங்களோட முதலாவது கேஸஸ்ஸ ரொம்ப சீரியஸா ஹேண்டில் பண்றீங்க போல,” என்று சற்றே கிண்டலுடன் கேட்டார் ரகுவரன். அவரது கிண்டலான பேச்சைக் கேட்டதும் மகிழ்மதிக்கு சற்று

27. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

26. சிந்தையுள் சிதையும் தேனே..?

தேன் 26 காயத்ரி, கையில் சூடான உணவுப் பாத்திரமும், மாத்திரையும் எடுத்துக்கொண்டு மெதுவாக படிகளில் ஏறினாள். மனதில், “நிவேதா இப்போ எல்லாம் ஒழுங்கா சாப்பிடுவதே இல்லை இன்னைக்கு நானே ஊட்டி விடணும் இன்னைக்கு எப்படி தப்பிக்கிறான்னு பார்ப்போம்..” என்ற எண்ணமே. அவளது அறைக்கதவின் கைப்பிடியைத் தொடும் அந்த நொடி வரை, அனைத்தும் இயல்பாகத்தான் இருந்தது. ஆனால் கதவைத் தள்ளி திறந்தவுடன், அந்த ஒரு கணத்தில், உலகமே இடிந்து விழுந்ததுபோல் தோன்றியது. மெத்தையின் அருகில், நிவேதா சுயநினைவற்றபடி தரையில்

26. சிந்தையுள் சிதையும் தேனே..? Read More »

error: Content is protected !!