சிறையிடாதே கருடா

26. சிறையிடாதே கருடா (இறுதி அத்தியாயம்)

கருடா 26   “வண்டிய நிறுத்துங்க!” என்றதும் அந்த நான்கு சக்கர வாகனம் இரண்டாவது முறையாகக் கதறிக் கொண்டு நிற்க, “உங்க பையனைக் கூட்டிட்டு வரேன்.” என்றுவிட்டு அவள் இறங்கியதும் வாகனம் நகர ஆரம்பித்தது.   “ஹே நில்லுப்பா, ஆள் வரணும்…” என்பதைக் காதில் வாங்காமல் அந்த ஓட்டுநர் இயக்க, “என்னப்பா, நீ பாட்டுக்குப் போற? என் மகனும் மருமகளும் வரணும்.” எழுந்து சென்று கத்தினார் சத்யராஜ்.   “உங்க பையன் தான் சார், நான் இறங்கினதுக்கு […]

26. சிறையிடாதே கருடா (இறுதி அத்தியாயம்) Read More »

25. சிறையிடாதே கருடா

கருடா 25   கதவைத் திறந்து வெளிவந்தவனைக் குடும்பம் மொத்தமும் வரவேற்றது. அவர்களைக் கண்டும் காணாமலும் கடக்க நினைத்தவனை, “ஹா ஹா…” என்ற சத்தம் வெறுப்பேற்றியது. ஆட்டோ சாவியைக் கையில் நுழைத்துச் சுற்றிக்கொண்டு,   “ஒன்னு கூடிக் கலாய்க்கிறீங்களா? என் பொண்டாட்டி மட்டும் சமாதானம் ஆகட்டும், இந்த வீட்டுப் பக்கமே தலை வச்சுப் படுக்க மாட்டேன்.” என்றான்.   “இந்த முடிவ அப்பவே எடுத்திருந்தா, இந்த நிலைமைல நின்னிருக்க மாட்ட.”   “என்னம்மா பண்ண? நீங்க எல்லாரும்

25. சிறையிடாதே கருடா Read More »

24. சிறையிடாதே கருடா

கருடா 24     சத்யராஜ் வழியாக அவ்விஷயத்தைக் கேட்டு அனைவரும் அதிர, அறைக்குள் படுத்திருந்தவன் அலறியடித்து வெளியே ஓடி வந்தான். மகன் கன்னத்தில் அறைந்த சரளா, “கேட்டியாடா… எல்லாம் உன்னால தான்.” மீண்டும் போட்டு அடிக்க, “ரி… ரி…” என்றதற்கு மேல் அவன் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை.   அடித்து ஓய்ந்த சரளா மருமகளைக் காண அழுது கொண்டே ஓட, அவரைத் தாண்டி ஓடினான். அதிவேகத்தையும் தாண்டி அசுர வேகத்தில் வந்தடைந்தவனை வாசலில் தடுத்துப் பிடித்த

24. சிறையிடாதே கருடா Read More »

23. சிறையிடாதே கருடா

கருடா 23   இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விடியலை வரவேற்றவளைக் காபியோடு வரவேற்றார் சரளா. கனிந்த அவர் முகத்தைக் கண்டபின் அனைத்தும் காணாமல் சென்றது. மருமகள் வந்த நாளைக் கொண்டாட நினைத்தவர், உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்பினார். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததைத் திட்டிக்கொண்டு அவர் முன்பு நிற்க, அதை இதை வாங்கி வரச் சொல்லிக் கட்டளையிட்டார்.   அங்கிருக்கும் நால்வருக்கும், அரசியைக் கவனிக்கும் சேவகியாகத் தான் தெரிந்தார் சரளா. அவள் அமர்ந்தால் இருக்கையைத் துடைத்து விடுவது, வேர்த்தால்

23. சிறையிடாதே கருடா Read More »

22. சிறையிடாதே கருடா

கருடா 22   ராஜ நடையில் நடந்து வருபவளின் சத்தத்தை வைத்தே அது ரிதுசதிகா என்று கண்டு கொண்ட ரவி, சுற்றி நிற்கும் காவல் துறையினரை மிரண்டு பார்த்தான். அனைவரும் அவனைக் கண்டு சிரித்தனர். கம்பீரத்திற்குப் பேர் போனவள், சற்றும் குறையாத கர்வத்தோடு அவன் முன்பு அமர்ந்து கால் மீது கால் போட்டாள்.‌   “உன்னை அவ்ளோ சீக்கிரம் விட்டிடுவேன்னு பார்த்தியா? எங்க போனாலும் என் கழுகுப் பார்வை உன்னைத் துரத்திக்கிட்டே இருக்கும்.”   “தயவுசெஞ்சு என்னை

22. சிறையிடாதே கருடா Read More »

21. சிறையிடாதே கருடா

கருடா 21   “மாமா…”   மனைவியின் கைப்பிடித்துக் கதை பேசிக் கொண்டிருந்த பொன்வண்ணன், மருமகனின் குரல் கேட்டுத் திரும்ப, “இன்ஸ்டிடியூட்ல கொஞ்சம் சேஞ்சஸ் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?” அவர் எண்ணத்தைக் கேட்டான்.   “அதை உன்கிட்ட முழுசா ஒப்படைச்சு ரொம்ப நாள் ஆகுதுப்பா. இனி அது முழுக்க முழுக்க உன் சம்பந்தப்பட்டது. எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும் நீ தான் எடுக்கணும்.”   “இருந்தாலும்…” என அவன் இழுக்க,   “நான்தான் அன்னைக்கே

21. சிறையிடாதே கருடா Read More »

20. சிறையிடாதே கருடா

கருடா 20   மடிக்கணினியில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தாள் ரிதுசதிகா. அவளை முறைத்துக் கொண்டு எதிரில் அமர்ந்திருந்தான் கருடன். எதற்கு முறைக்கிறான் என்று அவன் மனைவிக்குத் தெரியும். தெரியாதது போல் நடித்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் கேட்ட கேள்விக்குப் பதில் தராததால்,   “ஏன்டி, காது செவிடாகிடுச்சா?” குரல் கொடுத்தான்.   “வேலையா இருக்கேன்.”   “ஓங்கி மிதிச்சேன்… பல்லு மொத்தமும் கழண்டு விழுந்துடும்.”   “பரவால்ல, தங்கப்பல் செட் பண்ணிக்கிறேன்.”   “பணக் கொழுப்பு!”  

20. சிறையிடாதே கருடா Read More »

19. சிறையிடாதே கருடா

கருடா 19 உடலுக்குள் இருக்க வேண்டிய உயிர் வெளியேறி அவன் மார்பில் ஊஞ்சலாடுவது போல் இதமாக உணர்ந்தவன், அணைக்காமல் நின்று கொண்டிருக்கும் ரிதுவை மெல்லத் தன்னிடமிருந்து பிரித்தான். அடம் பிடிக்காமல் விலகி நின்றவள், பழையபடி பால்கனிக் கம்பியைப் பிடித்துக்கொண்டு நிலவைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். அவளைப் பார்க்க ஆரம்பித்து விட்டான் கருடேந்திரன். நொடிகள் காதலோடு கடந்தது. பால்கனிக் கம்பியைப் பற்றிக் கொண்டிருந்த அவள் கை மீது கை வைத்தவன், மற்றொரு கையால் தோள் மீது கை வைத்தான்.

19. சிறையிடாதே கருடா Read More »

18. சிறையிடாதே கருடா

கருடா 18 கம்பீரமாகப் பார்த்த மகனை, இப்படித் தலை குனிந்து பார்ப்பது வருத்தமாக இருந்தாலும், மருமகளோடு சேர்ந்திருப்பதைப் பார்க்க மகிழ்வாக இருந்தது. அதில் சற்று நிம்மதி அடைந்தவர் அவர்களைத் தாண்டிச் சென்றார். அன்னை நகர்வதை உணர்ந்தவன் குற்ற உணர்வோடு தலையை நிமிர்த்தினான். “போய்ப் பேசு!” அவளுக்குப் பதிலளிக்காதவன் ஊமையாக நடந்து வந்தான். அவனிடம் இருந்த சிரிப்பு ஓடியது. கவலை படிந்த முகத்தோடு நடந்து வரும் தன்னவனை, எப்படிச் சரி செய்வதென்று தெரியாமல் சென்ற மாமியாரைத் திரும்பிப் பார்க்க,

18. சிறையிடாதே கருடா Read More »

17. சிறையிடாதே கருடா

கருடா 17 காலை எழுந்ததுமே அன்னையை நோக்கி ஓடினாள் ரிது. அவளுக்கு முன்னதாக அவள் கணவன் அங்கு இருக்க, சின்னப் புன்னகையோடு அவன் தோள் மீது கை வைத்தாள். திரும்பி முகம் பார்த்தவனும், அந்தச் சிரிப்பைக் கொடுத்து, “கிளம்பலாமா?” கேட்டான். “கொஞ்ச நேரம் பேசிட்டு வரவா…” “பர்மிஷன் கேட்கணுமா?” கனிவாகச் சிரித்தவள் ராதாவின் பக்கத்தில் அமர, கட்டியவளின் முகத்தில் தோன்றும் நிம்மதியில் மனம் நிறைந்தவன் காத்திருந்தான். அரை மணி நேரம் பேசிவிட்டுக் கிளம்பினாள். “நம்ம ஃபேக்டரிக்குப் போகணும்.”

17. சிறையிடாதே கருடா Read More »

error: Content is protected !!