சுட்டிக்காரிகை
முன்னோட்டம் “ஆமாமா ஊருல இல்லாத தங்கச்சியைக் கொண்டுட்டான் இவன்” சரஸ்வதி வெத்தலையை கொட்டலாவில் நச்சு நச்சுன்னு இடிச்சுக்கிட்டே சொன்னாரு. ஜோசியர் சரஸ்வதியை தயக்கமாக பார்த்தார். “நீங்க மேற்கொண்டு சொல்லுங்க ஜோசியரே” பரமன் பெத்தவளை முறைச்சுக்கிட்டே சொல்ல. “ஒன்பது பொருத்தமும் அமோகமா இருக்கு பரமா. தாராளமா இந்தப் புள்ளைய உங்க மவனுக்கு கட்டி வைங்க” என்று ஜோசியர் சொல்லிட்டே கிழவியை ஒரக்கண்ணால் பார்த்தார். “போய்க் கேட்டதும் இந்தான்னு பொண்ணை தந்துருவாப்புல பாத்துக்க” கிழவி […]