நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன்..

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 04

காதல் : 04 “நீ வேற யாரையாவது விரும்புறியா….?” என சக்தி சத்தியாவிடம் கேட்டான்.  அதற்கு சத்தியா “ஐயோ இல்லை… பெரியையா…..” என்றாள்.  “அப்பிடியா.. அப்போ நம்ம கல்யாணம் நடக்கட்டும்….”  “பெரியையா… நான் என்ன சொல்றேன்னா….?”  “எதுவும் சொல்ல வேணாம்… வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு தயாரா இரு….” என்று அழுத்தமாகக் கூறினான்.  “சரி பெரியையா…..”  “இருட்டிட்டு வருது நேரத்திற்கு வீட்டுக்குப் போ…..” “சரி….”  அவள் சென்றதும் யோசனையில் ஆழ்ந்தான்.  பெரிய வீட்டில்……………… “எதுக்குப்பா அவனுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கிறீங்க…..?” […]

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 04 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 03

காதல் :03 கோபத்துடன் வீட்டிற்கு வந்த முத்துபாண்டி சகுந்தலாவை அழைத்தார்.  “என்னங்க…..?” “என்ன என்னங்க…. இங்க என்ன நடக்குது என்று உனக்குத் தெரியுமா….?”  “எதுக்கு இப்பிடி கோவமா பேசுறீங்க….?”  “கோவப்படாம என்ன செய்ற….?”  “கடவுளே, முதல்ல என்ன நடந்தது என்று சொல்லுங்க….. ”  “சொல்றேன்… உன்னோட ரெண்டு காதும் குளிர நல்லாக் கேட்டுக்க.. உன்னோட அருமை மூத்த மகன் நம்மளோட வீட்டில வேலை செய்ற சரஸ்வதியோட மகள் சத்தியாவை கெடுக்கப் பார்த்தான்….. அப்போ அந்தப்பக்கம் போன ரகு

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 03 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 02

காதல் : 02 தனது குடிசையின் ஒரு ஓரத்தில் தையல் இயந்திரத்தை வைத்துக்கொண்டு அதில் ஆடை ஒன்றினை தைத்துக்கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி சத்தியா. அவள் பாட்டுப் பாடியவாறு தைத்துக் கொண்டிருந்தாள்  அப்போது அவள் எதேச்சையாக வாசலைப் பார்த்தாள். வாசலில் நிழல் ஒன்று தெரிந்தது. அது என்னவென்று நிமிர்ந்து பார்த்த சத்தியா பயத்தில் கதிரையை விட்டு எழுந்தாள். “என்ன சத்தியா உன்னை வீட்டுப்பக்கமே காணவில்லை. என்ன பயந்துட்டியா? ” என கேட்டான் ரகு. சத்தியாவுக்கு பயத்தில் பேச்சு

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 02 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 01

காதல் : 01 பச்சைப் பசேல் என்று நான்கு திசைகளிலும் பரந்து காணப்படும் வயல்வெளிகள் பார்ப்போரின் கண்களை வியக்க வைக்கும். காற்றின் திசைக்கேற்ப தமது மெல்லிய உடலை அசைத்தாடும் நெற்கதிர்களை பார்த்தாலே போதும் எவ்வாறான குழப்பத்திலோ கவலையிலையோ இருந்தாலும் சட்டென்று நமது மனம் அமைதியடையும். எப்போதும் வயலைச் சுற்றியோடும் வாயக்கால்களில் ஓடும் நீர் குளிர்ச்சியாகவே இருக்கும். வயல்களில் சோம்பலன்றி சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் வேலை செய்யும் ஆட்கள் என அந்த சுற்றுவட்டாரமே பார்க்க அத்தனை அழகாக இரம்மியமாக இருந்தது.

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 01 Read More »

error: Content is protected !!