நெருப்பாய் நின் நெருக்கம்..!!

49. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 49 அவன் தொட்டதே தீது என்பதைப் போல வேகமாக தன்னுடைய பாதங்களை உருவி எடுத்த தன் மனைவியை வலியோடு பார்த்தான் அவன். “தொடாதீங்க குரு…” மறுத்தாள் அவள். “ஹேய் யாரோ மாதிரி விலகி நிற்க முடியல.. என்னால சுத்தமா முடியலடி…” “யாரோ மாதிரி இல்ல… நீங்க யாரோதான்… டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிக் கொடுத்துட்டு தானே வந்தேன்..” “அ.. அத நான் கி.. கிழிச்சுட்டேன் அபி…” “ஓஹோ….” இகழ்ச்சியாக இதழ் பிதுக்கினாள் அவள். அமைதியாக […]

49. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

48. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 48 அவள் கேட்ட கேள்விக்கு எந்தவிதமான பதிலும் கூறாது விழி விரித்து அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தவனை முகத்திற்கு நேரே தன்னுடைய கரத்தை உயர்த்தி அசைத்தவள், “ஹேய் ஆர் யு ஓகே..?” எனக் கேட்க அவனுக்கு விழிகள் சடுதியில் கலங்கிப் போயின. தாடியடர்ந்த கன்னத்தில் கண்ணீர் வழிந்தே விட அவனுடைய கண்ணீரைக் கண்டவள் தடுமாறி அவனுடைய முகத்தில் இருந்த தன்னுடைய பார்வையை விலக்கிக் கொண்டாள். “எனக்கு நிறைய வேலை இருக்கு குரு.. நீங்க பேசினாதான்

48. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

47. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 47 எப்படியாவது அபர்ணாவைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு வந்திருந்த குருவுக்கு அவளைப் பார்த்த நொடி சகலதும் மறந்து உலகமே உறைந்து போனதைப் போலத் தோன்றலானது. ஒரு முறை, இரு முறை அல்ல ஓராயிரம் முறை அவளைத் தேடித் தேடி ஏமாற்றம் மட்டுமே கிடைத்திருக்க இன்றோடு அந்த ஏமாற்றம் முடிவுக்கு வந்திருந்ததை அவனால் அவ்வளவு எளிதாக நம்பத்தான் இயலவில்லை. தன் தேவதைப் பெண்ணைக் கண்டால் ஓடிச் சென்று இறுக அணைத்துக் கொள்ள வேண்டும்.. எண்ணற்ற

47. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

46. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 46 சில மாதங்களின் பின்பு..!! இழக்கக்கூடாததை இழந்துவிட்ட வேதனையில் ஆழ்ந்து போயிருந்தது நம் நாயகனின் ஹிருதயம். அபர்ணாவை இழந்து இன்றோடு சில மாதங்கள் முடிந்திருந்தன. அவனுக்கோ ஒரு யுகமே முடிந்து போனாற் போலத்தான் தோன்றியது. எங்கே மாயமாக மறைந்து போனாளோ… கடவுளுக்குத்தான் வெளிச்சம். அவள் இல்லாத நாட்களில்தான் உண்மையான காதல் என்றால் என்னவென்று நன்றாக உணர்ந்து கொண்டான் அவன். தன்னைக் காதலிக்கிறேன் எனக் கதறி அழுதவளை கொஞ்சம் கூட இரக்கமின்றி துரத்தி விட்டதற்கு தினம்

46. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

45. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 45 அந்தச் சிறிய லேப்டாப்பின் திரையில் நான்கு பகுதிகளாகப் பிரிந்து காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. ஒரு பகுதியில் வெளியே உணவு அருந்த வரும் இடத்தில் நடந்த நிகழ்வும், இன்னொரு பகுதியில் காபி குடிப்பதற்கான கபே முறையில் அமைக்கப்பட்ட இடத்தில் நடந்த நிகழ்வும், இன்னொரு பகுதியில் கடைக்கு வெளியே இருந்த சிசிடிவியின் பதிவும் நான்காவதாக ஸ்டோர் ரூமில் நடந்த பதிவும் திரையில் தெரிந்தது. சற்று நேரத்திலேயே அந்த ஃபுட்டேஜில் வேலை செய்து கொண்டிருந்த அபர்ணாவின் உருவம்

45. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

44. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 44 விடியற்காலையில் இலங்கையின் ‘மீன் பாடும் தேன் நாடு’ எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை வந்தடைந்திருந்தான் குருஷேத்திரன். தன்னவள் இங்கே இருப்பதாலோ என்னவோ அந்த மாவட்டத்திற்குள் நுழைந்த மாத்திரமே அவனுடைய இதழ்களில் சிறு புன்னகை கூட தோன்றி மறைந்தது. ஒரு நாளில் தன்னை எப்படி எல்லாம் படுத்தி எடுத்து விட்டாள் இந்தச் சிறு பெண். எப்படி எனக்குள் இவ்வளவு ஆழமாக ஊடுருவி விட்டாள்..? அவள் மீது கொள்ளை அன்பை வைத்துக்கொண்டு கண்மூடித்தனமாக

44. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

43. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 43 குருஷேத்திரனைத் தாங்கிப் பிடித்தவாறு நின்றிருந்த மாதவனுக்கு நெஞ்சம் பிசையத் தொடங்கியது. இவ்வளவு துடிப்பவன் எப்படி அன்று பொய்யாகிப் போனான்..? எதற்காக அவளை வீட்டை விட்டு அனுப்பினான்..? குறையோடு வந்திருப்பதாக அல்லவா அந்தப் பெண் கூறி அழுதாள். எதுவுமே புரியவில்லை அவனுக்கு. ஆனால் அவனுடைய கதறலையும் துடிப்பையும் நெஞ்சத்தின் பதைபதைப்பையும் நேரடியாகக் கண்ட மாதவனுக்கு அதற்கு மேலும் தான் அமைதியாக இருந்தால் அது தவறாகிப் போகும் என்ற முடிவுக்கு வந்தான். இனியும் இப்படியே அமைதியாக

43. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

42. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 42 இடம் பொருள் ஏவல் அனைத்தும் மறந்து தன் சுயம் தொலைத்து அபிக்காக தவியாய் தவித்துக் கொண்டிருந்தான் குருஷேத்திரன். அவனுடைய இரும்பு கரத்தின் அழுத்தத்தில் மாதவனின் கழுத்து எலும்புகளோ உடைந்து விடும் போல இருக்க அவனிடமிருந்து விடுபட முயன்றவனோ குருவின் கரத்தை தன்னிலிருந்து அகற்றப் போராடினான். இதற்கு மேலும் அழுத்தினால் அவனுடைய குரல்வளை உடைந்து விடும் என்பதை உணர்ந்து தன்னுடைய கரத்தை விடுவித்த குருவோ, “மரியாதையா சொல்லிரு என்னோட அபி எங்க..?” எனக் கேட்க

42. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

41. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 41 அபியின் வீட்டில் இருந்து அழைப்பு வருகின்றது என்றதும் ஏதோ ஒரு விதமான புத்துணர்வு அவனை சூழ்ந்து கொண்டதைப் போலத்தான் அவனுக்குத் தோன்றலானது. அதேநேரம் நெஞ்சுக்குள் ஒரு விதமான படபடப்பும் இதயத் துடிப்பின் அதிகரிப்பும் அவனைத் திகைக்கவும் செய்தது. விந்தைதான். அனைத்து விதமான உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு அவளைப் பற்றி அறியும் ஆர்வத்தில் “ஹலோ..” என்றான் குருஷேத்திரன். “மாப்பிள எப்படி இருக்கீங்க..? நல்லா இருக்கீங்களா..?” என்ற பத்மாவின் குரலில் இவனுக்கோ வியப்பு மேலோங்கியது. நான்

41. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

40. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 40 ஏதோ ஒரு வெறுமை அவனுடைய மனம் முழுவதும் சூழ்ந்து அவனைத் தனிமையாக்குவது போலத் தோன்றியது. இரண்டு நாட்களில் திருமணம் எனக் கூறியதில் இருந்து அவனுடைய உள்ளம் சமநிலை அடைய மறுத்தது. அடிக்கடி அவனுடைய இரும்பு மனம் கூட இளகிப் போய் அபியைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்க தடுமாறிப் போனான் குருஷேத்திரன். இதோ அவள் இந்த வீட்டை விட்டு வெளியேறி இன்றோடு முழுதாக மூன்று நாட்கள் முடிந்து போன பின்பும் கூட தினம் தினம்

40. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

error: Content is protected !!