நெருப்பாய் நின் நெருக்கம்..!!

39. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 39 இரண்டு நாட்களுக்குப் பிறகு..! குருஷேத்திரனின் முன்பு அமர்ந்திருந்தாள் ஓர் அழகி. அவனுடைய பார்வை அவளில் அழுத்தமாகப் படிந்திருந்தது. “எனக்கு சம்மதம் டார்லிங்..” என அத்தனைப் பற்களையும் காட்டி அவனைப் பார்த்து அழகாய் சிரித்து வைத்தாள் அந்த முத்துப்பல் அழகி. “சம்மதம் ம்ம்…?” புருவம் உயர்த்தினான் அவன். “நான் இன்னும் என்னோட சைட் ரூல்ஸ்ஸை உன்கிட்ட சொல்லவே இல்லையே.. அதுக்குள்ளயே சம்மதமா..? இன்ட்ரெஸ்டிங்…” என்றான் குரு. “என்ன ரூல்ஸ்..?” எனக் கேட்டவளின் முகத்தில் மெலிதாக […]

39. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

38. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 38 தன் முன்னே அடுக்கி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைக் கையில் எடுத்துப் பார்த்தவனுக்கு அனைத்திலும் ஏதோ ஒரு குறை இருப்பதைப் போலவே தோன்றியது. யாரைப் பார்த்தாலும் ஏதோ ஒரு குறை சொல்லி ஒதுக்கி வைத்தவன் முத்துவை முறைத்துப் பார்த்தான். “இவங்க யாரும் ஏன் அபர்ணாவா மாதிரி அழகா இல்ல..? அவள மாதிரி யாருக்குமே நீளமான கூந்தல் இல்லையே..!” “சார் இந்த பொண்ணோட கூந்தல் நீளமாதான் இருக்கு இவங்க ஓகேவா..?” “முடி மட்டும் இருந்தா போதுமா மூக்கு

38. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

37. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 37 எந்த தைரியத்தில் வீட்டுக்குச் செல்லாமல் ஆட்டோவில் ஏறி விட்டோம் என்று அவளுக்கே புரியவில்லை. ஆட்டோவில் தான் ஏறியாகிவிட்டது இனி எங்கே செல்வது..? வீட்டையும் கல்லூரியையும் விட்டால் அவளுக்கு வேறு எதுவும் தெரியாதே! சுற்றுலாவுக்குக் கூட இலங்கையின் வேறு மாவட்டங்களுக்கு செல்லாத பேதை அவளுக்கோ தற்போது எங்கே தான் செல்வது என்று மனம் மருகியது. “பாப்பா நீங்க எந்த ஊருக்குப் போகணும்..? இல்லனா உங்கள பஸ் ஸ்டாப்ல இறக்கி விடவா..?” எனக் கேட்டார் ஆட்டோ

37. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

36. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 36 கிட்டத்தட்ட 12 வருடங்களாக தன்னைத் தயார்படுத்திப் பார்த்து நிகழ்த்திய அனைத்து திட்டங்களும் இன்றும் மண்ணோடு மண்ணாகிப் போனதை அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. குழந்தை விடயத்தில் அபர்ணாவுக்கு இப்படி ஒரு குறை இருக்கும் என அவன் எண்ணிக் கூட பார்க்கவில்லையே. அவளை விவாகரத்து செய்ததற்கு பின்னர் பல கேள்விகள் எழும்பும் அதற்கும் தான் பதில் கூறியாக வேண்டும் என்று எண்ணி நொந்து கொண்டவனை வேலைகள் அழைத்தன. செய்து முடிக்காத அலுவலக வேலைகள் அதிகம்

36. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

35. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 35 அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாது திணறிப் போய் அவளைப் பார்த்தான் குருஷேத்திரன். மிக இலகுவாக பழைய அபர்ணாவைக் கொடுக்க முடியுமா எனக்கு கேட்டுவிட்டு முன்னே நடப்பவளைப் பார்த்தவன், “அபி ஒரு நிமிஷம்..” என அவளை நிறுத்தினான். வேகமாக நடந்து கொண்டிருந்தவளின் நடை சட்டென நின்றது‌ அவன் தன்னை அழைத்து விட்டான் என்றதும் உள்ளுக்குள் ஏதோ படபடவெனத் துடிப்பது போல இருக்க வேகமாக அவனை நோக்கித் திரும்பியவள் ஆவலோடு அவனுடைய விழிகளைப்

35. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

34. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 34 நேரம் செல்லச் செல்ல அவளுடைய அழுகை அதிகரித்ததே தவிர சற்றும் குறையவே இல்லை. பொறுமை இழந்து எழுந்து கொண்டவன் சிகரெட் ஒன்றை எடுத்து சற்று தள்ளி நின்று புகைக்கத் தொடங்க இவளோ தன்னை நினைத்து கழிவிறக்கம் கொண்டு அழுகையில் கரைந்து கொண்டு இருந்தாள். அவனைப் பிரிவதென்ன அவ்வளவு எளிதான காரியமா..? சில நாட்கள் அவன் வீட்டிற்கு வராவிட்டாலே துடித்துப் போய் விடுபவள் எப்படி அவனை விட்டு மொத்தமாக விலகிச் செல்வாள்..? மெல்ல எழுந்து

34. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

33. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 33 டிவோர்ஸ் என்ற வார்த்தையில் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போனாள் அபர்ணா. அவன் டிவோர்ஸ் என்றுதான் கூறினானா..? இல்லை எனக்குத்தான் தவறாக காதில் விழுந்து விட்டதா..? புரியவில்லை அவளுக்கு. சற்றே திணறிப் போய் அமர்ந்திருந்தவள் மெல்ல மெல்ல தன்னை இயல்பாக்கி கொண்டு அவனுடைய முகத்தை அண்ணாந்து பார்த்தாள். “நீ.. நீங்க என்ன சொன்னீங்க…? எனக்கு அது தெளிவா கேட்கல.. ம.. மறுபடியும் சொல்ல முடியுமா ப்ளீஸ் குரு…?” என திக்கித் திணறியவாறு அவள் கூற அவனோ

33. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

32. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 32 எப்போதும் கலகலப்பாக சிரித்துக் கொண்டே இருப்பவள் தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பதையே மறந்து போனாள். குருஷேத்ரனின் மீது அவளுக்குள் மலர்ந்த காதல் அவளை உருக்கிப் போட்டது. அவன் தன்னை எவ்வளவு காயப்படுத்தினாலும் நொடியில் அவனுடைய முகத்தைப் பார்ப்பதற்காக ஏங்கச் செய்யும் காதலை மனதார சபித்தாள் அபர்ணா. ஆறு நாட்களாக அவனைக் காணாமல் இருந்தபோது அவளுக்கு உண்டான ஏக்கமும் கவலையும் அவனுக்குத் தோன்றவே இல்லையா..? இல்லைதான்..! அந்த ஏமாற்றத்தை அவளால் அவ்வளவு

32. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

31.நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 31 விடிந்த பின்பும் கூட ஆதவனை வானில் மறைத்த வண்ணம் மழை மேகங்கள் சூழ்ந்து கொள்ள இருளாகவே இருந்தது அந்தக் காலை வேளை. அபர்ணாவோ தூக்கம் நீங்கி எழுந்து கொண்டவள் தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்து இடிந்து போனாள். எது வரக்கூடாது என அவள் நேற்று எல்லா மதக் கடவுளிடமும் வேண்டுதல் வைத்தாளோ அது இன்று வந்தே விட்டது. வேதனையோடு படுக்கையிலிருந்து மெல்ல எழுந்து கொண்டவள் குளித்து முடித்து ஆடை மாற்றிக் கொண்டு

31.நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

30. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 30 குளியல் அறைக்குள் நுழைந்த நொடி முதல் தற்போது வரை ஷவரைத் திறந்து விட்டு ஏதேதோ சிந்தனைகளில் ஆழ்ந்து போயிருந்தவள் திடீரென குளியலறைக் கதவு வேகமாக தட்டப்படும் சத்தத்தில் அதிர்ந்து துவாலையை எடுத்து தன் உடலில் அவசர அவசரமாக சுற்றி விட்டு கதவைத் திறந்தாள். வெளியே அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் குரு. “எ.. என்ன என்னாச்சு..?” “நீ உள்ள போய் ரெண்டு மணி நேரம் ஆகுது.. இவ்வளவு நேரமா என்ன பண்ணிட்டு

30. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

error: Content is protected !!