நெருப்பாய் நின் நெருக்கம்..!!

19. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 19 மிகப்பெரிய ஹோட்டலில் பார்ட்டி நடக்கும் என அபர்ணா எண்ணி இருக்க அவளை கடற்கரையில் கூட்டி வந்து நிறுத்தியிருந்தான் குருஷேத்திரன். “பார்ட்டின்னு சொன்னீங்க..” “ஆமா.. இப்பவும் பார்ட்டின்னுதான் சொல்றேன்..” “அப்போ இங்க வந்திருக்கோம்..” “பார்ட்டி இங்கன்னா.. இங்க தானே வரணும்..” “ஆனா, யாரையுமே காணோமே..!” “வருவாங்க..” “ஓ..! நாம ரொம்ப முன்னாடியே வந்துட்டோமா..” “இல்ல கரெக்டான டைமுக்கு தான் வந்திருக்கோம்..” “அப்போ ஏன் இன்னும் யாரும் வரல..” “நோ ஐடியா…” “நோ ஐடியான்னா…?” அவனோ […]

19. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

18. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 18 கேள்விக்குப் பதில் கூறாது விழிகளை மூடிப் படுத்துக்கொண்ட குருஷேத்திரனை வெறித்துப் பார்த்தவள், “நீங்க என்ன டேப்லெட்னு சொல்லலைன்னா நான் இதைப் போடவே மாட்டேன்..” என்றாள். மீண்டும் விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தவன், “விட்டமின்ஸ் டேப்லெட்தான் போட்டுட்டு தூங்கு மணி ஒன்னு ஆகுது..” எனக் கூற நேரத்தைப் பார்த்தவளுக்கோ ஐயோ வென்றிருந்தது. “நேத்தும் உங்களாலதான் நான் காலேஜ் போகல.. இன்னைக்கும் இவ்வளவு லேட்டா தூங்க விட்டா நான் எப்படி காலைல சீக்கிரமா எழுந்து காலேஜுக்குப்

18. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

17. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 17 தன்னுடைய ஆடைகளோடு எரிந்து கொண்டிருந்த அவனுடைய ஆடைகளைக் கண்டவளுக்கு அப்போதுதான் மனம் சற்றே ஆறுதல் அடைந்தது. ‘என்னோட ட்ரெஸ்ஸ எரிக்கும் போது எனக்கு எப்படி வலிக்குமோ அதே வலி அவனுக்கும் தெரியணும்…’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள் மீண்டும் வீட்டிற்குள் நுழைய அவளுடன் விளையாடிய வேலையாட்கள் அனைவரும் அவளை நெருங்கி வந்து வேலை மீண்டும் கிடைத்துவிட்டது எனக் கூறி அவளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றுவிட அப்போதுதான் அவளுக்கு முகத்தில் புன்னகை மலர்ந்தது. ‘பரவாயில்லையே

17. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

16. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 16 “கொன்னு புதைச்சிடுவேன்…” என்ற குருஷேத்திரனின் கர்ஜனையில் சுவற்றோடு ஒட்டிக்கொண்டவளுக்கு நாக்கு உலர்ந்து தொண்டை வறண்டு போனது. அவளுடைய பயந்த பார்வையில் தன்னை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவன் அவளை சுவற்றோடு அழுத்தி இருந்த தன்னுடைய கரத்தை விலக்கிக் கொண்டான். “ட்ரெஸ்ஸுக்காக கொலையெல்லாம் பண்ணுவீங்களா..?” என அவள் விழி விரித்து அச்சத்தோடு கேட்க இவனுக்கோ அவளை என்ன செய்வதென்றே புரியவில்லை. “போய் ட்ரெஸ்ஸ மாத்துடி..” “மு.. முடியாது..” அவனுக்கோ முற்றிலும் பொறுமை பறந்து போனது.

16. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

15. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 15 அவளுடைய வார்த்தைகளில் குருஷேத்திரனுக்கு வியப்பே மிஞ்சியது. அபர்ணா இவ்வளவு கூச்ச சுபாவம் கொண்ட பெண்ணா..? அவனுக்கு புதிதாக இருந்தது. அவன் அறிந்த பெண்கள் எல்லாம் மாடர்ன் ட்ரெஸ்ஸில் பாதி உடலை காட்டியல்லவா அவனுடைய கம்பெனிக்கே வருகை தருவார்கள். அதுவே பார்ட்டி என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி இருக்கும் போது வைத்தியத்திற்காகக் கூட தன்னுடைய உடலைக் காட்டவே சங்கடப்படும் அபர்ணாவின் குணம் வெகு வித்தியாசமாக தெரிந்தது அவனுக்கு. அவளோ கண்கள் கலங்கி அவனைப் பார்த்தவாறு

15. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

14 நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 14 காலை நேரம் கண்விழித்து எழுந்தவளுக்கோ அடித்துப் போட்டாற் போல உடல் முழுவதும் சோர்வு விரவியது. நேற்றைய இரவுப் பொழுது நடந்த எதையும் மறந்தும் கூட நினைத்து விடக்கூடாது என எண்ணியவள் மீண்டும் மீண்டும் அதைப் பற்றித்தான் நினைத்து தன்னை அழுத்தத்திற்குள்ளாக்கினாள். நேரமோ 8 மணி தாண்டி இருக்க பதறிப் போய் எழுந்து கொண்டவள், ‘அச்சச்சோ காலேஜுக்குப் போக டைம் ஆயிருச்சே.. இதுக்கு அப்புறமா காலேஜ் போனா ப்ரொபசர் பின்னி எடுத்துடுவாரு..’ எனத் தலையில்

14 நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

13. நெருப்பாய் நின் நெருக்கம்..!!

நெருக்கம் – 13   நிதர்சனம் என்னவென்றால் தாம்பத்தியம் பற்றிய தெளிவு அபர்ணாவிடம் இல்லை என்றே சொல்லலாம். திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் என்றதும் அவள் எதைப் பற்றித்தான் சிந்தித்து தெளிவது..? அவசர அவசரமாக நடக்கவிருந்த திருமணத்தில் அன்னையின் அறிவுரைகளும் ஓரளவு இருந்தன தான். தாம்பத்தியம் பற்றி தன்னால் முடிந்த அளவிற்கு மேலோட்டமாக அவளிடம் எடுத்துக் கூறியிருந்தார் பத்மா. அவளுக்கு அதைக் கேட்டு அச்சம் பிறந்தது மட்டுமே மிச்சம். எப்படியும் குருஷேத்திரன் ஒன்றும் வாலிபன் அல்லவே..

13. நெருப்பாய் நின் நெருக்கம்..!! Read More »

12. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 12 காருக்குள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவள் வெகு நேரத்தின் பின்பே தன்னுடைய விழிகளை மலர்த்தினாள். அடுத்த கணமே அந்த இடம் அவளுக்கு பழக்கப்பட்ட தன்னுடைய அறையாக இல்லாது போக உடனடியாக வந்து ஒட்டிக்கொண்டது அதிர்ச்சியும் அச்சமும். தான் எங்கே இருக்கிறோம் எனப் பதறி எழுந்து கொள்ள முயன்றவள் அப்போதுதான் தனக்கு திருமணமானதும் குருஷேத்திரனுடைய நினைவுகளும் சட்டென மூளையை ஆக்கிரமிக்க நிதர்சனம் புரிந்து சற்று நிம்மதியாக ஆசுவாசமடைந்தாள் அவள். நீண்ட தூரப் பயணமாக இருந்ததால் அசந்து

12. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

11.நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 11 அவன் இழுத்த இழுப்பில் அவனுடைய உடலோடு மோதி நின்றவளின் முகத்தை குனிந்து பார்த்தவன் “ஏன் நான் உன்னோட கைய புடிக்க கூடாதா..?” எனக் கேட்டான். தன்னுடைய முன்னுடல் மொத்தமும் அவனுடைய பரந்த மார்பில் அழுத்தமாக பதிந்திருப்பதை உணர்ந்தவளுக்கு தேகம் நடுங்கத் தொடங்கியது. “உன்னத்தான் கேட்கிறேன்… இப்போ உனக்கு காது கேட்கலையா..?” என அவன் கேட்க அவளுக்கு வாயைத் தாண்டி வார்த்தைகள் வெளிவராமல் சதி செய்தன. இவ்வளவு நேரமும் அடக்கி வைத்த அழுகை கண்களில்

11.நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

10. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 10 தாலி கட்டி முடித்ததும் ஒவ்வொருத்தராக வந்து அவர்களுக்கு வாழ்த்து கூறிக் கொண்டே போக அபர்ணாவிற்கோ அனைத்தும் கனவு போலவே இருந்தது. மூன்று நாட்களுக்குள் அனைத்தும் முடிந்துவிட்டது. பணம் இருந்தால் அனைத்தும் சாத்தியம்தான் போல என எண்ணிக் கொண்டவள் சோர்ந்து போனாள். எப்போது இந்த ஆடை, ஆபரணங்களை எல்லாம் நீக்கி விட்டு ஃப்ரீயாக இருக்கலா என ஏங்கத் தொடங்கியது அவளுடைய மனம். ‘நகைகள் ஒவ்வொன்றும் பாரமாக இருக்க இப்போதே கழற்றி வைத்து விடலாமா..?’ என்று

10. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

error: Content is protected !!