
Category:
வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!
வாழ்வு : 37
தீஷிதனின் வன்கரம் சம்யுக்தாவின் மெல்லிடையை பற்ற அவளின் உடல் சிலிர்த்தது. அதை உணர்ந்த தீஷிதன் புன்னகையுடன் அவளை மேலும் நெருங்க, அவளின் கரங்களோ அவனின் தலையை துடைப்பதை நிறுத்தின. மெல்ல மெல்ல அவளை தன் அணைப்பினுள் கொண்டு வந்த தீக்ஷிதனின் ஒரு கரம் அவளின் இடையை இறுக்க, மறு கரம் அவள் தலையின் பின்பக்கம் பிடித்தது. அவளது கழுத்தில் புதைந்து வாசம் பிடிக்க, சம்யுக்தாவின் கைகளில் இருந்த டவல் கீழே விழுந்தது. அவள் கரமோ அவனை அணைத்து. அவள் கரம் தன்னை அணைத்தும் குறுநகை பூத்த தீஷிதன் அவளை மெல்ல தனது கைகளில் ஏந்திக் கொண்டு அறைக்குள் வந்து பெட்டில் விட்டான்.
தீஷிதன் பெட்டில் அவளை விட்டதும்தான் சம்யுக்தாவிற்கு நடப்பது புரிய அவனைப் பார்த்தாள். அவள் அருகே குனிந்து அவளை அணைத்துக் கொண்டு, அருகில் படுத்தவன் அவள் முகம் பார்த்தான்.
“யுக்தா…”
“ம்ம்ம்ம்”
“யுக்தா, உன்னை இப்படி பக்கத்துல வச்சிட்டு என்னால அமைதியா இருக்க முடியலடி.. யுக்தா உன்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தமாட்டேன்.. உனக்கு சம்மதமா யுக்தா?” என்று ஒரு கண்ணில் காதலும் மறு கண்ணில் தாபத்தையும் வைத்து கேட்பவனிடம் மறுப்பு ஏதும் கூறாமல், அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் சம்யுக்தா.
சம்யுக்தாவின் சம்மதம் கிடைத்ததும் அவள் மீது படர்ந்தான் தீஷிதன். சம்யுக்தா சம்மதம் சொன்னாலும் அவளை காயப்படுத்தி விடக் கூடாது என்று கண்ணாடி போல அவளை கையாண்டான் தீஷிதன். அவனது தீண்டலில் புதிதாக உயிர் பெற்றாள் மங்கையவள். மனதால் இணைந்த இருவரும் உடலாலும் ஒன்றிணைந்தனர்.
கூடல் முடிந்ததும் சம்யுக்தாவை அணைத்துக் கொண்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டவனின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் சம்யுக்தாவை தொட்டதும் பதறி அவனின் முகத்தை பார்த்தாள் சம்யுக்தா. ஆனால் அவனோ அவனின் முகத்தை அவளிடம் காட்ட விரும்பவில்லை.
“என்னங்க என்னாச்சு?” என்றவள் அவனின் முகத்தை பார்க்க முயன்றாள்.
“ஒண்ணுமில்லை யுக்தா, உன்னோட காதல், நம்மளோட வாழ்க்கையை ஆரம்பிச்சதுனு மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதுதான் கண்ல ஆனந்தக் கண்ணீர்..” என்றவன் அவளைப் பார்க்க, அவனின் முகத்தை தனது கரங்களால் ஏந்தியவள், அவள் முகத்தோடு இணைத்து, “உங்களோட எதிர்பார்ப்பில்லா இந்த அன்புக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம்ங்க.”
“யுக்தா நான் ஒண்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டல?”
“கேளுங்க..”
“யுக்தா நான் உன்னை கஷ்டப்படுத்திட்டனா?”
“இல்லைங்க… என்னை எப்பவும் உங்களால கஷ்டப்படுத்த முடியாதுங்க.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…” என்றவளை இறுக அணைத்து முத்த மழை பொழிந்தான் தீஷிதன். பின்னர் அவளை தனது மார்பின் மீது போட்டு, தலையை வருடிக் கொடுக்க, சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தாள் சம்யுக்தா.
தூங்கும் தன்னவளை இரசித்துக் கொண்டு இருந்தவன் அவள் உச்சியில் முத்தம் வைத்து, தன்னிடம் இருந்து அவளை பிரித்து பெட்டில் படுக்க வைத்து பெட்ஷீட்டால் போர்த்தி விட்டு, குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு, சமையல் அறைக்குள் சென்றான்.
………………………………………………….
பிரகாஷ் அறையில் இருந்து நாளை ஆரம்பிக்கப் போகும் ப்ரொஜெக்ட்டுக்கான வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது மேடிட்ட வயிற்றுடன் மெல்ல நடந்து வந்தாள் சீமா.
“பிரகாஷ்..”
“சொல்லு சீமா.”
“எனக்கு எப்போங்க வளைகாப்பு பண்ணுற?”
“இப்போ வளைகாப்புக்கு என்ன அவசர சீமா.. உனக்கு இப்பதானே அஞ்சு மாசம், வளைகாப்பு ஒன்பதாம் மாசம் தானே பண்ணுவாங்க..”
“ஆமா, ஆனால் அஞ்சு மாசத்துலயும் பண்ணுவாங்க.. எனக்கு இப்பவே பண்ணணும்னு ஆசையா இருக்கு பிரகாஷ்..”
“சரி நான் நாளைக்கு அம்மாகிட்ட இதைப் பற்றி பேசுறன்..”
“சரி.. நீங்க இப்போ பிஸியா? இல்லைனா ஒரு நைட் ட்ரைவ் போலாமா?”
“அதுக்கென்ன வா போகலாம்”
“உங்களுக்கு வேலை இருக்கே…”
“அதை நான் அப்புறமா பண்ணிக்கிறன் சீமா.. உன்கூட சரியா டைம் ஸ்பென்ட் பண்ணவும் முடியுதுல.. வா போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பார்க்கிற்கு அழைத்துச் சென்றான்.
………………………………………………….
தீஷிதன் சமையல் அறையில் இருந்து நைட் இருவரும் சாப்பிடுவதற்காக தோசை ஊற்றிக் கொண்டு நின்றான். அப்போது அவனின் போன் சத்தமிட எடுத்துப் பார்க்க, துர்கா அழைத்திருந்தார்.
“சொல்லுங்க அத்தை.. என்ன பண்றீங்க? அங்க எல்லோரும் எப்படி இருக்கிறாங்க?”
“தீஷி இங்க எல்லோரும் நல்லா இருக்கிறாங்கபா.. நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கிறீங்க?”
“நாங்க நல்லா இருக்கிறோம் அத்தை.”
“தீஷி சம்மு எங்க? அவளோட நம்பர்க்கு கூப்டேன். ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது..” என்றார்.
தீஷிதன்தான் கீழே வரும் போது சம்யுக்தாவின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று அவளின் போனை ஆஃப் பண்ணி விட்டு வந்தான்.
“ஆமா அத்தை. யுக்தா போன்ல சார்ஜ் இல்லை.. அதுதான் ஆஃபாகிட்டு போல, அவ தூங்கிட்டு இருக்கா அத்தை. நான் யுக்தா எந்திரிச்சதும் கால் பண்ணவா? ஏதும் இம்பார்ட்டனா அத்தை?”
“தீஷி உங்க கல்யாணம் நடந்ததும் குலதெய்வம் கோயிலுக்கு போகணும்.. ஆனால் நீங்க சென்னை போனதால போக முடியல.. ரெண்டு நாள்ல பௌர்ணமி வருது. அப்போ குலதெய்வம் கோயிலுக்கு போகலாம்னு அண்ணா சொன்னாங்க.. நீங்களும் அங்க இருந்து குலதெய்வம் கோயிலுக்கு வந்துடுங்கபா”
“சரி அத்தை.. நான் யுக்தாகிட்டே சொல்லிடுறன்.”
“சரி தீஷி நான் அப்புறமா பேசுறன்..”
“ஓகே அத்தை..” என்றவன் போனை வைத்து விட்டு, ஒரு தட்டை எடுத்து நன்கு முறுகலாக சுட்ட தோசையையும், கடலைக் கறி மற்றும் தேங்காய் சட்னியையும், க்ளாஸ் ஒன்றில் சுடச்சுட பாலையும் எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். அங்கே அமைதியான முகத்துடன் தூங்கிக் கொண்டு இருந்த தன்னவளைப் பார்த்து விட்டு, அருகில் இருந்த மேசை மீது தட்டை வைத்தான்.
சம்யுக்தாவின் அருகில் அமர்ந்தவன், அவள் பிறை நுதல் மறைத்த கூந்தலை ஒதுக்கி, அக் கூந்தல் இருந்த இடத்தில் முத்தத்தை கொடுத்தான். அவன் இதழ் தீண்டலில் தூக்கம் கலைய கண்களைத் திறந்த சம்யுக்தா, “என்னங்க” என்றவாறு வேகமாக எழுந்தவள், பின் தனது நிலைகண்டு பெட்ஷீட்டை எடுத்து கழுத்து வரை சுற்றிக் கொண்டு குனிந்திருந்தாள். அதைப் பார்த்து சத்தமாக சிரித்தான் தீஷிதன்.
“ஐயோ சும்மா இருங்க”
“யுக்தா, இப்போ எதுக்கு கீழே பார்த்திட்டு இருக்க, இங்க பாரு.” என்று அவளது முகத்தை பிடிக்க, “போங்க…” என்ற சிணுங்கலுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“யுக்தா…”
“ம்ம்ம்ம்…”
“எனக்கு பசிக்குது, உனக்கு பசிக்கல..”
“அட ஆமாங்க.. நைட்டுக்கு சாப்பாடு செய்யணும்.. எல்லாம் உங்களாலதான்.. நீங்க பண்ண வேலையால சாப்பாடு எதுவும் செய்யலை.. ஒரு பத்து நிமிஷம் தாங்க.. நான் குளிச்சிட்டு வந்து தோசை ஊற்றித் தாறேன்..” என்று படபடத்தவளை நிறுத்தியவன், “யுக்தா இங்க பாரு.. அமைதியா இரு. நானே சமைச்சிட்டேன்.. நீ நல்லா தூங்கிட்ட, அதனால நானே போய் தோசை ஊற்றி எடுத்திட்டு வந்தேன்.. வா சாப்பிடலாம்..” என்றான்.
“என்னங்க நீங்க.. என்னை எழுப்பியிருக்கலாம்ல.. நீங்க எதுக்கு கஷ்டப்பட்டுட்டு?”
“இதுல கஷ்டப்பட எதுவும் இல்லை.. என்னோட பொண்டாட்டிக்காக நான் பண்றேன்.. சரி எந்திரி..” என்றவன் தனது மார்பில் சாய்ந்திருந்தவளுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டான். பின்னர் பாலை எடுத்து அவளிடம் குடிக்க கொடுத்தான்.
பின்னர் அவனும் அதே தட்டில் சாப்பிட, அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் கண்களில் கண் குளம் கட்டியது. சாப்பிட்டு கீழே சென்று தட்டை வைத்து விட்டு, வந்தவனை தனது கைகளை விரித்து அழைத்தாள் சம்யுக்தா. காதலோடு அழைக்கும் அவளின் அழைப்பில் வந்து சேர்ந்தவனை அணைத்துக் கொண்டவள், அவனின் இதழோடு இதழ் சேர்த்தாள் சம்யுக்தா.
மனைவி அவளாக தரும் முத்தத்தில் தன்னை மறந்த தீஷிதன் மீண்டும் அவளுடன் இரண்டறக் கலந்தான். அவர்களின் கூடலைப் பார்த்து வெட்கப்பட்டு மேகத்தினுள் மறைந்தது நிலா..
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்ய சதுர்ஷி💙
வாழ்வு : 36
மணிகண்டனிடம் இருந்து எடுத்துக் கொண்ட கம்பெனிக்கு தீஷிதன் சம்யுக்தாவை அழைத்துக்கொண்டு சென்றான். அங்கிருந்தவர்கள், ‘என்னடா இது? அன்னைக்கு என்னடானா மணிகண்டன் சார்கிட்ட இருந்து விக்டர் சார் கம்பெனியை வாங்கினாரு. இன்னைக்கு சம்யுக்தா மேம் வந்து நிக்கிறாங்க. அவங்க எப்படி இங்க? என்ன நடக்குதுன்னே புரியல.’ என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்த எம்டி அறையினுள் இருந்த சுவாமியை மனதார வணங்கி விட்டு சம்யுக்தா வந்ததும் அவளை அழைத்துச் சென்று அந்த எம்டியின் சேரில் உட்கார வைத்தான் தீஷிதன்.
“வேணாம்ங்க இதுல நீங்க இருந்துக்கோங்க. எனக்கு இந்த எம்டி பதவியில எல்லாம் ஆசை இல்லை. அப்படி சொல்லாத யுக்தா, உன்னோட திறமை என்னன்னு நீ மத்தவங்களுக்கு காட்டணும். எனக்காக நீ இதை செஞ்சுதான் ஆகணும்” என்றவன் அந்த சேரில் அவளை உட்கார வைத்தான்.
பின்னர் ஸ்டாப் அனைவரையும் எம்டி அறைக்குள் வரச் சொல்ல, அவர்களும் வந்தனர். வந்தவர்கள் அனைவரையும் பார்த்த தீக்ஷிதன், “குட் மார்னிங் டூ ஆல்.. நான் எதுக்கு உங்களை எல்லாம் இங்க வரச் சொல்லிருக்கேன்னா, இனிமேல் இந்த கம்பனியோட எம்டி மிஸ்ஸிஸ் சம்யுக்தா தீஷிதன் தான். நீங்க இதுவரைக்கும் எப்பிடி வேணும்னாலும் இருந்திருக்கலாம். பட் இனிமே சம்யுக்தா மேடம் சொல்ற மாதிரி இருக்கணும்” என்றான்.
அவன் பேசி முடிந்ததற்கு அடையாளமாக, சம்யுக்தாவின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான். அவனைப் பார்த்து விட்டு எழுந்து நின்ற சம்யுக்தா பேச ஆரம்பித்தாள்.
“எல்லோருக்கும் என்னோட வணக்கம்.. இந்த கம்பனியை இன்னைல இருந்து நான் பொறுப்பெடுத்திருக்கேன். நம்மளோட இந்த கம்பனி மேலும் மேலும் முன்னேறணும்னா அது உங்க கைலதான் இருக்கு. ஏன்னா தொழிலாளர்களோட உழைப்பை அதிகமாக நம்புறவ நான். உங்களுக்கு என்ன பிரச்சனைனாலும் எங்கிட்ட தயங்காம சொல்லலாம். உங்களோட உழைப்பிற்கான பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். எனக்கு நம்பிக்கை துரோகம் பண்றவங்கள பிடிக்காது. நீங்க யாரும் அப்பிடி பண்ண மாட்டீங்கன்னு நினைக்கிறன். இது உங்களோட கம்பனி எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும். இப்போ நீங்க போய் உங்களோட வேலையை பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு சேரில் அமர்ந்தாள் சம்யுக்தா.
“வாவ் யுக்தா, செம்மையா பேசின டார்லிங்.. கீப் இட் அப்.”
“அட நீங்க வேற உள்ள உதறலா இருந்திச்சு பட் நான்தான் அதை வெளிக்காட்டல.”
“இப்பிடியே இரு யுக்தா.. உன்னோட பயம் எப்பவும் வெளியே தெரியக் கூடாது.”
“கண்டிப்பாங்க, நீங்க கூட இருந்தா நான் தைரியமா இருப்பேன்” என்றவளை உச்சிமோர்ந்தான் தீஷிதன்.
இப்படியாக கம்பனியில் இருந்த வேலையை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்றனர்.
………………………………………………….
ஊட்டியில் பரந்தாமனும் கிருபாகரனும் அவர்கள் வீட்டில் இருந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
“மச்சான் தீஷிதன் சம்முவோட கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சிட்டு, அடுத்ததா புகழ் மதுரா கல்யாணத்தையும் விக்ராந்த் வித்யா கல்யாணத்தையும் ஒண்ணாவே பண்ணிடலாம்.”
“ஆமா மச்சான், அவங்களுக்கும் நேரகாலத்துக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தானே வேணும்” என்றார் கிருபாகரன்.
அங்கே வந்த துர்க்கா, “நானும் நீங்க சொல்றது சரிதான் அண்ணா, நம்ம குல தெய்வம் கோயிலுக்கு போகவும் இல்லை. அங்க போயிட்டு வந்த அப்புறம் மற்றவங்களோட கல்யாண வேலையை ஆரம்பிக்கலாம்.”
“அக்கா சொல்றதும் சரிதான் அண்ணா, விக்ராந்தும் இவரும் மலேசியா போயிட்டாங்க.. அவங்க அங்க இருக்கிற வேலைய எல்லாம் முடிச்சிட்டு வரட்டும் அண்ணா. இல்லைனா அவங்க இங்க இருந்து அங்க, அங்க இருந்து இங்கனு அலைஞ்சிட்டு இருப்பாங்க.”
“ஆமா தமயந்தி நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான். சரி அப்போ முதல்ல நாம குலதெய்வம் கோயிலுக்கு போய் பூஜையை முடிச்சிடலாம். தீக்ஷிதன் கிட்டயும் சம்யுக்தாக்கிட்டேயும் சொல்லலாம். அப்போ ரெண்டு நாள்ல பௌர்ணமி வருது அப்போ கோயிலுக்கு போகலாம்” என்று பரந்தாமன் சொல்ல அனைவரும் அதற்கு சம்மதித்தனர்.
………………………………………………….
வீட்டில் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த உமேஸ்வரன், பிரகாஷை அழைத்தார்.
“சொல்லுங்க அப்பா.”
“பிரகாஷ் நீ அந்த ப்ராஜெக்ட்டை இன்னும் ஆரம்பிக்கலயா?”
“டாடி, அந்த ப்ராஜெக்டை சம்யுக்தா சொல்றபடிதான் செய்யணும். அதுதான் யோசிச்சிட்டு இருக்கேன்.”
“இதுல யோசிக்க என்ன இருக்கு? அவளுக்கும் நம்ம குடும்பத்துக்குமான உறவு முறிஞ்சிடிச்சி. நீயும் வேற வாழ்க்கைக்குள்ள போயிட்ட, அவளும் வேற வாழ்க்கைக்குள்ள போயிட்டா சோ, இனிமேல் இதைப் பற்றி பேச வேண்டாம். வேலையில நம்மளோட பெர்சனல் லைஃபை கொண்டு வந்து சேர்க்கக் கூடாது. தீஷிதன் ரொம்ப பெரிய பிஸ்னஸ் மேன். அவன் நினைச்சா நம்ம கம்பனியை ஒண்ணுமில்லாம பண்ணிட முடியும். அதனால நீ அவன் சொல்ற மாதிரி நடந்துக்கிறத்தான் உனக்கும் நல்லது. நம்ம கம்பெனிக்கும் நல்லது”
“இருந்தாலும் அவளுக்கு கீழே நான் வேலை செய்யணும்றது…”
“நிறுத்து பிரகாஷ், நீ அந்த ப்ராஜெக்ட்டை நல்லபடியா முடிப்பேன்னு நம்பினான். நீ இதை முடிச்சிக் கொடு, இல்லைனா அந்த தீஷிதன் உன்னை சும்மா விடமாட்டான். அக்ரீமண்ட்ல சைன் பண்ணதை மறந்திடாத.”
“சரி.. நான் நாளைக்கே போய் அந்த ப்ராஜெக்ட்டை ஸ்டார்ட் பண்றன்” என்றவன் அங்கிருந்து சென்றான்.
………………………………………………….
கம்பனியிலிருந்து வந்ததும் ஃப்ரெஷாகிவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள் சம்யுக்தா. தீக்ஷிதன் வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியும், அதை சம்யுக்தா ஏற்றுக் கொள்ளவில்லை. “இரண்டு பேர் இருக்கிற வீட்டில எதுக்குங்க வேலைக்கு ஆளுங்க? நானே பாத்துக்கிறேன்” என்று தீஷிதனிடம் உறுதியாக சொல்லிவிட, அவனும் விட்டுவிட்டான்.
சமையல் அறையில் நின்று காப்பி போட்டுக் கொண்டிருந்தவள், அதை எடுத்துக் கொண்டு அறைக்குள் வர, அங்கே ஈரம் சொட்டும் தலையோடு பால்கனியில் நின்று தூரத்தில் தெரிந்த கடலை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் தீஷிதன்.
சம்யுக்தாவின் கொலுசு சத்தம் கேட்க, திரும்பி பார்த்தவனிடம் வந்தவள் காபியை கொடுத்தாள். அதை சிரிப்புடன் வாங்கிக் கொண்டு மீண்டும் கடலை பார்க்க, அவள் அறைக்குள் சென்று துவாலையை எடுத்து வந்து, ஒரு கையால் கம்பியை பிடித்துக் கொண்டு, மறுகையால் காபி குடித்துக் கொண்டு நிற்கும் அவனின் முன்புறம் வந்து நின்றாள்.
“என்ன யுக்தா டவலோட நிற்கிற?”
“சொல்றன் காபியை குடிச்சா கப்பை அங்க வைங்க” என்றாள். அவனும் குடித்து விட்டு காபி கப்பை அருகில் இருந்த சிறிய மேசை மீது வைத்து விட்டு, அவள் புறம் திரும்பி நின்றாள்.
அவளும் டவலை எடுத்து அவன் தலையை துவட்டத் தொடங்கினாள்.
“இந்த டைம்ல குளிச்சிட்டு இப்படி ஈரத்தலையோட நின்னா சளி பிடிக்கும்.” என்றவாறே தலையை துவட்டினாள். அவளுக்கு இசைந்து கொடுத்துக் கொண்டிருந்த தீஷிதன் தனது வலிமையான கைகளை அவளது இடை மீது வைக்க, சம்யுக்தாவின் உடல் சிலிர்த்தது.
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 35
மணிகண்டனும் லீலாவதியும் அங்கிருந்து செல்லும் போது அவர்களை தடுத்து நிறுத்தினார் துர்க்கா.
“ரெண்டு பேரும் கொஞ்சம் நில்லுங்க.”
“அத்தை அவங்களை எதுக்கு நிற்க சொல்றீங்க?” என்றான் தீஷிதன்.
“இரு தீஷி சொல்றேன். நீங்க இங்க வாங்க” என்று அவர்களை அழைத்தார். அவர்களிடம், “நீங்க இப்போ பண்ணினது பெரிய தப்புதான். ஆனா என் பொண்ணு சின்ன வயசுல பாதுகாப்பா, வேளைக்கு சாப்பிட்டு, நல்லா படிச்சிருக்கானா அதுக்கு நீங்கதான் காரணம். நாட்டில இப்போ சின்னக் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. ஆனால் நீங்க அந்த வயசுல சம்முக்கு பாதுகாப்பு குடுத்திருக்கிறீங்க. அதுக்கு நன்றிக்கடனா உங்களுக்கு உதவி பண்ணலாம்னு இருக்கேன். தீஷி இவங்களை நாங்க இருந்த அந்த ஆச்சிரமத்துல சேர்த்து விடு. அங்க வேலை பார்த்திட்டு இருக்கட்டும். அப்போதான் இவங்களுக்கு பாசம், உறவுகளோட அருமை புரியும்” என்றார்.
தீஷிதனும் துர்க்கா கூறியதற்கு எதிர்த்துப் பேசாமல், “சரிங்க அத்தை. இப்பவே அனுப்பி வைக்கிறன். ஆனால் இவங்க போவாங்களா?”
அவர்களை எப்படியாவது அங்கே அனுப்பினாலாவது அவங்க திருந்த வாய்ப்பு இருக்கும் என்று நினைத்த வித்யா அவர்களிடம் வந்து, “உங்களுக்கு கிடைச்ச கடைசி வாய்ப்பு இது. துர்க்கா அம்மா சொல்ற அந்த ஆச்சிரமத்துக்கு போங்க. அப்பிடி அங்க போனா நான் எப்பவாவது வந்து பார்த்துக்குவேன். இல்லை இவங்களை பழிவாங்கணும், சம்மு அக்காவை கஷ்டப்படுத்தணும்னு ஏதாவது பண்ணப் பார்த்தீங்க அப்புறம் பொண்ணுனு சொல்ல நான் இருக்க மாட்டேன்” என்றாள்.
இதைக் கேட்ட லீலாவதி, “ஐயோ வித்து என்னம்மா இப்பிடி சொல்ற? நீ சொல்ற மாதிரி அங்கேயே போயிடுறோம். எங்களுக்கு நீ நல்லா இருந்தா போதும். சம்மு எங்களை மன்னிச்சிடுமா.. உனக்கு எவ்வளவு கெடுதல் பண்ணியிருக்கம். ஆனால் நீ எப்பவும் எங்க மேல பாசத்தையே காட்டின. இதுக்கு பிறகு எங்களால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. அம்மா நீங்க சொல்ற மாதிரி அந்த ஆச்சிரமத்துக்கே நாங்க போயிடுறோம்” என்றார்.
அப்போதும் அவர்களை சந்தேகத்துடன் பார்த்த தீக்ஷிதனைப் பார்த்த மணிகண்டன், “தம்பி நாங்க நிஜமா திருந்திட்டோம். எப்போ எங்க பொண்ணு எங்களோட இருக்கிறது பாதுகாப்பு இல்லைனு சொன்னாளோ அப்பவே நாங்க செத்துட்டோம். எங்களை அந்த ஆச்சிரமத்தில விட்டிருங்க” என்றார்.
பின்னர் தீஷிதன் அவனின் ஆட்களில் ஒருவனை அழைத்து அவர்களை ஆச்சிரமத்தில் கொண்டு விடும்படி கூறினான்.
அதன் பிறகு பரந்தாமன் பேச ஆரம்பித்தார்.
“தீஷி நீ எப்பிடி துர்க்காவை கண்டுபிடிச்ச?”
“சொல்றன் அப்பா. நீங்க அன்னைக்கு எங்கிட்ட யுக்தா பற்றி சொன்னீங்க.. உங்களோட தங்கச்சி பொண்ணுனு. ஆனா அத்தை எங்க இருக்காங்கனு சொல்லலை. அதை வச்சு நான் தேட ஆரம்பிச்சப்போதான் அத்தையும் மாமாவும் இருக்கிற இடம் தெரிஞ்சது. அப்பறம் அங்க இருக்கிற ஒருத்தர் கிட்ட ஹெல்ப் கேட்டேன். அதுமட்டுமல்ல அத்தை மாமாவோட டிஎன்ஏவோட யுக்தா டிஎன்ஏ ஒண்ணாகுதான்னு பார்த்தேன். அதுவும் மேட்சாகிட்டு. சோ யுக்தா இவங்களோட பொண்ணுனு கன்பார்மாகிடிச்சி.. எங்களோட கல்யாணத்துக்கு அத்தை இருக்கணும்னு நினைச்சேன். அதுக்கே ஏற்ற மாதிரியே அவங்களும் கண்ணு முழிச்சிட்டாங்கனு அங்க இருந்து எனக்கு போன் வந்திச்சு அதுதான் நைட்டே கிளம்பி புகழை கூட்டிட்டு போனேன். அப்புறம் நைட் புகழ் வீட்ல இவங்களை தங்க வச்சேன்” என்று நடந்தது முழுவதையும் சொல்லி முடித்தான்.
அனைத்தையும் கேட்ட தமயந்தி, “தீஷி உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.. யுக்தா மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தா இப்படி அவளுக்காக பாத்து பாத்து இவ்வளவு பண்ணுவா. ரியலி யூ ஆர் கிரேட் தீஷி.”
“ஐயோ அத்தை. அதெல்லாம் ஒண்ணுமில்லை. யுக்தாக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். யுக்தா நான் சொன்ன மாதிரியே உன்னோட அம்மா அப்பாவை உன்கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டேன். இப்போ சந்தோஷமா?”
“ரொம்ப ரொம்ப சந்தோஷம்ங்க. என்னை இனிமே யாரும் அநாதைனு சொல்ல மாட்டாங்கல” என்று குழந்தை போல கேட்டவளை அணைத்துக் கொண்ட தீஷிதன்.
“இல்லை யுக்தா நீ அநாதை இல்லை.. உனக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கு… நீ அநாதை இல்லடா” என்றான்.
சம்யுக்தாவின் அருகில் வந்த துர்க்கா, “அம்மாடி உன்னை வளர்க்கிற பாக்கியம் எங்களுக்கு கிடைக்கல.. இனிமே உன்னை நாங்க பாத்துக்குவம்” என்றார்.
இப்படியாக அங்கே அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அன்று மாலை தீஷிதன் சம்யுக்தாவிற்கும் ரிஷப்ஷனும் வித்து விக்ராந்த் மற்றும் மதுரா புகழின் என்கேஜ்மென்ட்டும் பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் சிறப்பாக நடந்தேறியது.
வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் வாழ்த்தி விட்டு பரிசு கொடுத்து விட்டுச் சென்றதும், அங்கிருந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
தீஷிதன் சம்யுக்தாவிற்கு தமயந்தி ஆர்த்தி எடுத்து வரவேற்ற பின்னர் துர்க்கா கிருபாகரனுக்கும் ஆர்த்தி எடுத்தார். சம்யுக்தா சுவாமி அறைக்குள் சென்று விளக்கேற்றி வணங்கினாள். அனைவரும் ஹாலில் வந்து இருந்தனர்.
அப்போது மதுரா, “இன்னைக்கு நம்ம வீடே நிறைஞ்சு இருக்கு.. எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு” என்றாள்.
“ஆமா மது.. இத்தனை நாள் இந்த வீட்டுல பெரும்பாலும் நான் மட்டும்தான் இருப்பேன். இனிமேல் என் மருமக, தங்கச்சி, பொண்ணு எல்லோரும் இருப்பாங்கன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.. தமயந்தி நீங்களும் இங்கேயே வந்திடுங்களேன்.”
“எனக்கும் உங்க எல்லோர்கூடவும் இருக்கணும் போலத்தான் இருக்கு. ஆனா இவங்க பிஸ்னஸ் எல்லாம் அங்கதானே இருக்கு”
“அதுக்கென்ன தமயந்தி, உனக்கு இங்க இருக்கிறான் சந்தோஷம்னா இங்கேயே ஒண்ணா இருக்கலாம். மாசத்துக்கு ஒரு தடவை நான் அங்க போய் பிஸ்னஸை பார்த்திட்டு வர்றேன்” என்றார் அமரேந்திரன்.
அவரது இந்தப் பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
பின்னர் துர்க்காவும், “எல்லோருக்கும் டயர்டா இருக்கும்.. போய் தூங்குங்க காலையில பேசிக்கலாம்” என்றார். சிறுசுகள் அங்கிருந்து சென்றதும் தமயந்தியிடம் வந்த துர்க்கா, “தீஷிக்கும் சம்முக்கும் சடங்கு வைக்க ஏற்பாடு பண்ணலையா தமயந்தி?”
“இல்ல அக்கா, தீஷி இப்போ எதுவும் வேணாம்னு சொல்லிட்டான். சம்மு கொஞ்சம் ரிலாக்ஸாகட்டும், இந்த லைஃபை அவ ஏத்துக்கிட்ட அப்புறம் அதை பாத்துக்கலாம்னு சொன்னான் அக்கா. அதுதான் எதுவும் ஏற்பாடு பண்ணலை.”
“தீஷி சம்முக்காக பார்த்து பார்த்து பண்றதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இப்பிடி எல்லோரும் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.”
“ஆமா அக்கா, அக்கா நீங்களும் டயர்டா இருப்பீங்க. போய் தூங்குங்க அக்கா. நான் இங்க இருக்கிற வேலையை முடிச்சிட்டு தூங்குறேன்.”
“சரி தமயந்தி.. நீயும் ரொம்ப நேரம் இருக்காம தூங்குமா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
தீஷிதனின் தனது அறையில் இருந்தான். சம்யுக்தா அவளது அறைக்குள் சென்று குளித்துவிட்டு விட்டு ஒரு புடவையை அணிந்து கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள். சம்யுக்தாவுடன் தீஷிதன் பேசுவதை தவிர்த்துக் கொண்டிருந்தான். அது சம்யுக்தாவைப் பெரிதும் பாதித்தது. அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்து தீஷிதனின் அறைக்குள் சென்றாள். அங்கே தீஷிதன் அப்போதுதான் குளித்துவிட்டு வந்து தலையை துவட்டிக் கொண்டு நின்றான்.
அவன் அறைக் கதவை திறந்து வாசலில் நின்றவள், “என்னங்க” என்றாள். திரும்பிய தீஷிதன் அவளை ஒரு நொடி பார்த்து விட்டு, “யுக்தா வாடா” என்றான். அவ்வளவுதான் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக சென்று அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.
“ஏங்க.. ஏன் என்கூட பேசாம அவாய்ட் பண்றீங்க?”என்று அழுதாள்.
சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டவன், “இதோ இதுக்காகத்தான் உன் பக்கமே வரலைடா. நான் உன் பக்கத்தில வந்திருந்தா நீ இருக்கிற இடம் மறந்து இப்படி அழுதுட்டு இருப்ப.. அங்க நீ அழுதா உன்னை நான் எப்படி சமாதானப்படுத்துவது? நம்ம ரெண்டு பேரு மட்டும் இருக்கும் போது சமாதானப்படுத்துறது ரொம்ப ஈஸி.. அதுதான் கொஞ்சம் விலகி இருந்தேன்.” என்றவன் நெஞ்சில் குத்தியவள் பின்னர் அழ ஆரம்பித்தாள்.
“எனக்காக நீங்க பண்ண இதுக்கு என்னால கைமாறாக என்னங்க பண்ண முடியும்? ஒரே நிமிஷத்துல என்னோட வாழ்க்கையேயே மாற்றி விட்டீங்க.. அநாதையாக இருந்த எனக்கு இவ்வளவு பெரிய குடும்பத்தை கொடுத்திருக்கிறீங்க. எனக்கு சந்தோஷத்துல மூச்சு முட்டுதுங்க.” என்று அழுது கொண்டு இருந்தவளை அப்படியே அணைத்துக் கொண்டு சோபாவில் அவன் அமர்ந்து அவளை தனது மடியில் வைத்துக் கொண்டான்.
“யுக்தா.. இது வரைக்கும் அழுதது போதும். இனிமேல் நீ எப்பவும் அழவே கூடாது.. இந்த கண்கள்ல கண்ணீரை நான் பார்க்க விரும்பவே இல்லை. இதுக்கு மேல நீ அழுதா நான் இல்லைனு அர்த்தம் யுக்தா.” என்றவனைப் பார்த்து, “இப்படி எல்லாம் சொல்லாதீற.. நான் இனிமே அழமாட்டேன்.. நான் எதுக்கு அழணும்? என்னைப் பார்த்துக்கத்தான் என் புருஷன் இருக்காரே.” என்றவள் இதழோடு இதழ் சேர்த்தான் தீஷிதன்.
இப்படியாக அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தனர். இரண்டு நாட்களின் பின்னர் தீஷிதன் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு சென்னை போக வேண்டும் என்றான். இதைக் கேட்ட பரந்தாமன், “எதற்கு தீஷி இப்போ சென்னைக்கு போகணும்னு சொல்ற?”
“அங்க ஒரு ப்ரொஜெக்ட் பண்ண வேண்டி இருக்கு அப்பா, இதுக்கு யுக்தா தான் லீடர்.. அதனால அங்க போயேயாகணும்” என்றான்.
“அப்டியா.. சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” என்றார்.
அவர்களிடம் சொல்லி விட்டு, இங்க இருக்கும் கம்பனியை பார்த்துக் கொள்ளுமாறு புகழிடம் சொல்லிவிட்டு தீஷிதன் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்றான்.
சென்னையில சம்யுக்தா வீட்டிலே இருவரும் தங்கினார்கள். அடுத்த நாள் காலையில் மணிகண்டனிடம் இருந்து சம்யுக்தா பெயருக்கு மாற்றிய கம்பெனிக்கே சம்யுக்தாவை அழைத்துச் சென்றான் தீஷிதன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி💙
வாழ்வு : 34
அறைக்குள் சென்ற சம்யுக்தாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். அவளது மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றின. அந்த நேரத்தில் அவளது போன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க தீஷிதன்தான் அழைத்திருந்தான். “ஹலோ யுக்தா.”
“சொல்லுங்க.”
“யுக்தா என்ன பண்ணிட்டு இருக்க?”
“படுத்திருக்கேன்.. நீங்க என்ன இந்த டைம்ல கால் பண்ணியிருக்கிறீங்க?”
“யுக்தா கொஞ்சம் மொட்டை மாடிக்கு வர்றியா?”
“இப்பவா?”
“ஆமா, நான் அங்கதான் இருக்கேன் நீயும் வா”
“ம்ம்ம் சரி” என்றவள் எழுந்து சென்றாள்.
அங்கே நிலவைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் தீஷிதன். சம்யுக்தாவின் கொலுசு சத்தம் கேட்டதும் திரும்பினான். சம்யுக்தா புன்னகையுடன் வந்திருந்தாள். ஆனால் அந்த புன்னகையில் உண்மைத் தன்மை இல்லாததைப் பார்த்தவன் அவளது கையைப் பிடித்தான்.
“யுக்தா, என்ன மனசு ரொம்ப குழப்பமா இருக்கா?” என்றான். அவனைப் பார்த்த சம்யுக்தா, “ம்ம்ம்.. மனசு ஒரு மாதிரி இருக்குங்க. நாளைக்கு என் வாழ்க்கையில நடக்குற ஒரு சந்தோஷமான நாள், ஆனால் என்னோட அம்மா அப்பா யாருமே இல்லையேங்க.. அவங்களை கூட்டிட்டு வருவேன்னு சொன்னீங்க.”
“இப்போ உனக்கு என்ன யுக்தா? உன்னோட அம்மா அப்பா முன்னாடி நின்னு இந்த கல்யாணத்தை நடத்தணும் அவ்ளோதானே. அதுக்காகத்தானே வித்யாவோட அம்மாவையும் அப்பாவையும் வரவழைச்சிருக்கேன். அவங்க கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி, அவங்க வந்திடுவாங்க.” என்றான்.
அவன் சொன்னதை கேட்ட சம்யுக்தா, எதுவும் பேசவில்லை.
“உனக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கேன். அதை தர்றதுக்குத்தான் இங்க கூப்டேன்.”
“எதுக்குங்க கிப்ட்?”
“இன்னைக்குத்தான் நாம லவ்வர்ஸ்.. நாளையில இருந்து நம்ம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். நான் என்னோட காதலிக்கு தர்ற கிப்ட் இது.” என்றான். அதை வாங்கிப் பார்த்த சம்யுக்தா அதிர்ச்சி அடைந்தாள்.
“என்னங்க இது? எதுக்காக இந்த வேலை பார்த்தீங்க?”
“யுக்தா உன்னை கொடுமைப்படுத்தின பிரகாஷை விட மோசமானவங்க வித்யாவோட அம்மாவும் அப்பாவும். நிற்க இடமில்லாம இருந்த உன்னை, நடுரத்திரியில நாயை விடக் கேவலமா உன்னை அடிச்சு விரட்டினாங்க. அதுக்கு பதிலடி கொடுக்காம நான் விடமாட்டேன் யுக்தா.”
“ஏங்க அதுக்காக அவங்க பேர்ல இருக்கிற சொத்து எல்லாத்தையும் என்னோட பேர்ல மாத்தணுமாங்க? இது எப்படி நடந்திச்சு?”
“அவங்க பணம் வாங்கிருந்த விக்டர், அவனோட பேர்ல சொத்து எல்லாத்தையும் எழுதி எடுத்திருந்தான். அவன்கிட்ட பணத்தை கொடுத்திட்டு நான் உன்னோட பேர்ல வாங்கிட்டேன்.”
“இப்போ இது தேவையாங்க?”
“தேவைதான் யுக்தா கல்யாணம் முடிஞ்சதும் நீயும் நானும் சென்னை போறோம். நீ அங்க இருக்கிற கம்பனியை டேக்ஓவர் பண்ற.”
“நான் எப்பிடீங்க?”
“யுக்தா நீ கண்டிப்பா இதை பண்ணியேயாகணும். சரி ரொம்ப லேட்டாச்சு. நீ போய் தூங்கு காலையில மண்டபத்துல பார்க்கலாம்” என்றான்.
………………..………………..………………
மணிகண்டனும் லீலாவதியும் தீக்ஷிதன் அனுப்பிய காரில் ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். விடியும் போது ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர். ஒரு ஹோட்டலில் காரை நிறுத்திய ட்ரைவர்,“இந்த ஹோட்டல்ல போய் ரெடியாகிட்டு வாங்க, நான் வெயிட் பண்றேன்” என்றான். அவர்களும் சரி என்று சொல்லி உள்ளே சென்று ரெடியாகினார்கள்.
பிரகாஷ் மற்றும் சீமாவும் அதே ஹோட்டலில்தான் இருந்தார்கள்.
“இந்த கல்யாணத்துக்கு வர்றதுக்கு எனக்கு விருப்பமே இல்லை” என்றாள் சீமா.
“எனக்கு மட்டும் விருப்பமா என்ன? போய் தானேயாகணும்” என்று சிடுசிடுத்தவாறு ரெடியாகினான் பிரகாஷ்.
………………..………………..………………
புகழும் நேரத்திற்கு எழுந்து ரெடியாகி விட்டு துர்க்காவை அழைக்க, அவரும் கிருபாகரனும் ரெடியாகி வந்தனர்.
“வாவ் அம்மா, அப்பா நீங்கதான் புது ஜோடி மாதிரி அழகா இருக்கிறீங்க. அதுவும் அம்மா அப்படியே மகாலக்ஷ்மி மாதிரி இருக்காங்க” என்றான்.
“டேய் என்னோட பொண்டாட்டி மேல கண்ணு வைக்காத” என்று அவனுடன் சண்டைக்கு வந்தார் கிருபாகரன்.
“ஐயோ அப்பா என்னை விட்டுடுங்க, நான் எதுவும் சொல்லலை.”
“உங்களுக்கு பொறாமைங்க.” என்றவர் “நீ ரொம்ப அழகா இருக்க புகழ்” என்று புகழுக்கு திருஷ்டி கழித்தார்.
“சரி சரி அவனை புகழ்ந்தது போதும் கல்யாணத்துக்கு போகலாமா?”
“பாருங்க அம்மா அப்பாவை நீங்க எதுவும் சொல்லலைனு கடுப்பாகிட்டாங்க.”
“என்னோட புருஷன் எப்பவும் அழகுதான் புகழ்.” என்றார் துர்க்கா.
“ஐயோ உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் வரவேயில்லை. போகலாம்” என்றான். மூவரும் மகிழ்ச்சியுடன் கல்யாண மண்டபத்திற்கு வந்தனர்.
………………..………………..………………
கல்யாண மண்டபம் அலங்காரங்களால் கண்களை கவரும் வண்ணம் இருந்தது. பெரிய பெரிய விஐபிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியான ஒரு இடம் மண்டபத்தின் கீழே ஒதுக்கப்பட்டு இருந்தது. மண்டபத்தின் உள்ளே அனைவரும் அழகாக அமரும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேடையில் ஐயர் அக்கினி குண்டத்தின் முன்னே அமர்ந்து மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.
மணமகன் அறையில் தீஷிதன் ஆணழகனாக ரெடியாகிக் கொண்டிருந்தான். அவனை அழகுபடுத்திக் கொண்டிருந்தான் விக்ராந்த்.
“அத்தான் சும்மா சொல்லக்கூடாது நீங்க பார்க்க ரொம்ப ஹேண்ட்ஸமா மேன்லியா இருக்கீங்க.”
“டேய் சும்மா கலாய்க்காத”
“நெஜமாத்தான் அத்தான். நீங்க வேணும்னா பாருங்க இன்னைக்கு சம்மு அக்கா உங்களை வைச்ச கண் வாங்காம பார்த்திட்டு இருப்பாங்க.” என்றதைக் கேட்ட தீக்ஷிதனின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“அத்தான் பொண்ணுங்க வெட்கப்பட்டா அழகுன்னு தெரியும். உங்களைப் பார்த்த பிறகுதான் ஆண்கள் கூட வெட்கப்பட்டா அழகுன்னு தெரியுது.” என்று அவனை மேலும் வெட்கப்பட வைத்தான் விக்ராந்த்.
“டேய் போதும்டா,ரொம்ப ஓட்டாத.” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போது புகழிடமிருந்து தீஷிதனுக்கு கால் வந்தது. அதே நேரத்தில் அமரேந்திரன் ஒரு வேலையாக விக்ராந்தை அழைக்க, “இதோ வந்திடுறன் அத்தான்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். அவன் சென்றதும் போனை எடுத்த தீஷிதன், “சொல்லு புகழ், எங்க இருக்க? அத்தையும் மாமாவும் எங்க?”
“தீஷி நாங்க மண்டபத்துக்கு வந்திட்டோம். இப்போ எங்க வர?”
“நீ யார் கண்லேயும் படாம நாலாம் நம்பர் அறைக்கு கூட்டிட்டு போ, கல்யாணத்துல கைப்பிடித்துக் கொடுக்க தயாராகும் போது அவங்களை கூட்டிட்டு வா” என்றான்.
“சரி” என்றவன் அவர்களை யாரும் அறியாமல் மெல்ல தீஷிதன் சொன்ன அறைக்கு அழைத்து வந்தான்.
“அம்மா, அப்பா நீங்க இங்கேயே இருங்க, நான் வந்து கூப்பிடுற வரைக்கும் வெளியே வராதீங்க”
“சரி புகழ்” என்றனர்.
பின்னர் புகழ் தீஷிதன் அறைக்கு வந்து அவனுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
மணமகள் அறையில் ப்யூட்டிஸனின் கைவண்ணத்தில் தேவதை போல தயாராகினாள் சம்யுக்தா. அவளை கேலி செய்து கொண்டிருந்தனர் வித்யாவும் மதுராவும்.
“அக்கா உன்னைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிமே உன் வாழ்க்கையில எல்லாமே நல்லதுதான் அக்கா நடக்கும்.”
“ஆமா வித்து, அண்ணிக்கு இனிமே கஷ்டமே இல்லை. என் அண்ணா அண்ணியை உள்ளங்கைல வைச்சித் தாங்குவாங்க” என்றாள் மதுரா. இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த தமயந்தி, “என் பொண்ணு என்ன அழகு.” என்று சம்யுக்தாக்கு திருஷ்டி கழித்தார்.
“சம்மு ஐயர் உங்களை அழைச்சிட்டு வரச் சொல்றாரு.. மதுரா வித்யா ரெண்டு பேரும் சேர்ந்து சம்முவை கூட்டிட்டு வாங்க”
“சரி” என்றனர் இருவரும்.
மணமகன் அறையில் இருந்த தீஷிதனை விக்ராந்த் மற்றும் புகழ் அழைத்து வந்தனர். மணமேடைக்கு வந்த தீக்ஷிதன் பரந்தாமன் காலிலும், துர்க்கா அமரேந்திரன் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். அவர்களும் அவனை மனதார ஆசிர்வதித்தனர்.
மணமேடையில் அமர்ந்தவன் சபைக்கு வணக்கம் சொல்லும்போது, அங்கே மணிகண்டன் லீலாவதி ஒரு பக்கமும், பிரகாஷ் சீமா ஒரு பக்கமும் அமர்ந்திருப்பதைப் பார்த்தவன் இதழ்களிலே ஒரு கேலிப் புன்னகை தோன்றியது.
பின்னர் ஐயர் கூறும் மந்திரங்களை சிரத்தையுடன் சொல்லிக் கொண்டிருந்தான். பின் ஐயர் வழமை போல, “பொண்ணை அழைச்சிட்டு வாங்க” என்று சொன்னதும், சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு மதுராவும் வித்யாவும் அங்கே வந்தனர். சம்யுக்தாவுடன் வரும் வித்யாவைப் பார்த்த மணிகண்டனுக்கு அவளை கொல்லும் வெறி வர எழுந்தார். லீலாவதிதான், “ஏங்க கொஞ்சம் அமைதியா இருங்க. இது கோபப்படுவதற்கான நேரம் இல்லை” என்று அவரை சமாதானப்படுத்தி வைத்திருந்தார்.
தேவதை போல அலங்கரிக்கப்பட்டு வரும் சம்யுக்தாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீஷிதன். அவனைப் பார்த்த புகழ் சற்றுக் குனிந்து, “தீஷி ஹேண்ட்சீஃப் வேணுமா?” என்றான்
அவனை திரும்பிப் பார்க்காமல், “இருடா உனக்கு கல்யாணம் நடக்கும் போது பார்த்துக்கிறன்” என்றான்.
மேடைக்கு வந்த சம்யுக்தா அங்கிருந்த பரந்தாமன் தமயந்தி அமரேந்திரன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு தீஷிதன் அருகில் அமர்ந்தாள்.
அவள் தனக்கு அருகில் அமர்ந்ததும் தீஷிதன் அவள் புறம் சாய்ந்து, “யுக்தா ரொம்ப அழகா இருக்க” என்றான். அவள் வெட்கத்தில் குனிந்து கொண்டான்.
சபைக்கு வணக்கம் சொன்னவள் கண்களில் பட்டனர் மணிகண்டன் மற்றும் லீலாவதி. அவர்களைப் பார்த்ததும் பாசத்தில் கண்கள் கலங்கின. பின்னர் ஐயர் சொல்லும் மந்திரங்களை இருவரும் சேர்ந்து சொல்லி, அவர் கூறும் சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஐயர், “கன்னிகாதானம் பண்ணணும் பொண்ணோட அப்பா அம்மா வாங்க” என்றார். அப்போது தீஷிதன் புகழைப் பார்க்க அவன் துர்க்காவையும் கிருபாகரனையும் அழைத்து வரச் சென்றான். பரந்தாமன் ஐயரிடம், “ஐயரே சம்யுக்தாவோட அம்மா அப்பாக்கு பதிலா என்னோட தங்கச்சியும் அவங்க வீட்டுக்காரரும் செய்யலாமா?” என்றார்.
இதைக் கேட்டதும் லீலாவதி அங்கிருந்து எழுந்து, “அதெப்டி சம்முவோட அம்மா அப்பா நாங்க இருக்கும் போது இவங்க செய்யணும்?” என்றார். அப்போதுதான் வித்யா அவர்களைப் பார்த்தாள்.
‘ஐயோ என்ன அம்மாவும் அப்பாவும் வந்திருக்கிறாங்க. இவங்களுக்கு எப்படி அக்காவோட கல்யாணம் தெரிஞ்சது?’ என்று யோசித்தாள்.
அப்போது வாய் திறந்தான் தீஷிதன், “நீங்க ஒண்ணும் யுக்தாவோட சொந்த அம்மா அப்பா இல்லையே.. அதுமட்டுமல்ல நீங்க அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டு இப்போ எந்த உரிமைல கன்னிகாதானம் பண்ண வர்றீங்க?” என்று கேட்டதும், லீலாவதிக்கு கோபம் வர, “அவளுக்கு எங்களை விட்டா யாரும் இல்லை.. அம்மா அப்பா இல்லாத அநாதைக்கு போனா போகுதுன்னு இந்த சடங்கை பண்ணி வைக்கலாம்னா நீங்க இப்படி சொல்றீங்க?” என்றார்.
“ஹலோ மேடம் ஒரு நிமிஷம். நீங்க சொல்ற மாதிரி சம்யுக்தா ஒண்ணும் அநாதை இல்லை. அவளுக்கு பெரிய குடும்பமே இருக்கு. அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, மாமானு எல்லா சொந்தமும் இருக்கு.” என்று தீஷிதன் சொல்லும் போதே மேடைக்கு துர்க்காவையும் கிருபாகரனையும் அழைத்து வந்தான் புகழ்.
“அத்தை மாமா முன்னாடி வாங்க.” என்றுதும் அவர்கள் முன்னாடி வர, அப்போதுதான் பரந்தாமன், தமயந்தி, கிருபாகரன் எல்லோரும் துர்க்காவைப் பார்த்தனர்.
“துர்க்கா…”
“அக்கா..”
“துர்க்கா நீ எப்படிமா இங்க?”
“தீஷிதான் அண்ணா எங்களை கூட்டிட்டு வந்தான்.”
“அத்தை உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குனு சொன்னேன்ல.. அன்னைக்கு நடந்த ஆக்ஸிடெண்ட்ல நீங்க தொலைச்ச உங்க பிள்ளை இதோ இவதான், பேரு சம்யுக்தா” என்றான். இதைக் கேட்டதும் சபையே அமைதியானது.
“தீஷி நீ… நீ சொல்றது?”
“நெஜம்தான் அத்தை. யுக்தா இவங்கதான் உன்னோட அப்பா அம்மா.. இனிமே உன்னை அநாதைனு யாரும் சொல்ல முடியாது. நீ என்னோட சொந்த அத்தை பொண்ணு..”என்றான். துர்க்கா பாய்ந்து அணைத்துக் கொண்டார் சம்யுக்தாவை. அவளும் அவரை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதாள்.
சில நிமிடங்களில் பரந்தாமன், “துர்க்கா முதல்ல நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னாடி கல்யாணம் நடக்கட்டும். மற்றதை அப்புறமா பேசிக்கலாம்” என்றார்.
“சரிங்க அண்ணா” என்றார் துர்க்கா.
பின்னர் துர்க்காவும் கிருபாகரனும் சேர்ந்து சம்யுக்தாவை தீஷிதனுக்கு கன்னிகாதானம் பண்ணி வைத்தனர். அனைவரின் ஆசிர்வாதத்துடன் தீஷிதன் சம்யுக்தா திருமணம் நல்லபடியாக நடந்தேறியது.
திருமணம் நடந்து முடிந்ததும், வந்திருந்தவர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சென்றதும் தீக்ஷிதன் மணிகண்டன், லீலாவதி, பிரகாஷ் மற்றும் சீமாவை அங்கே அழைத்தான்.
“மிஸ்டர் பிரகாஷ் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, நீங்க வேணாம்னு சொன்னதாலதான் எனக்கு இப்பிடி ஒரு லைஃப் பார்ட்னர் கிடைச்சிருக்காங்க.. அதே போல மிஸ்டர் மணிகண்டன் அண்ட் மிஸஸ் மணிகண்டன் உங்களுக்கு என்னோட நன்றி, நீங்க மட்டும் அன்னைக்கு நடுராத்திரி இவளை வீட்டை விட்டு அனுப்பலனா எனக்கு சம்யுக்தா கிடைச்சிருக்கமாட்டா, அவளுக்கும் அவளோட குடும்பம் கிடைச்சிருக்கமாட்டோம்” என்றான்.
“ரொம்ப பேசாதீங்க மிஸ்டர். இவளை கல்யாணம் பண்ணினதே வேஸ்ட். இவளால உங்களுக்கு ஒரு குழந்தை பெத்ததுக் குடுக்க முடியாது. அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டார் லீலாவதி.
இதைக் கேட்ட சம்யுக்தாவிற்கு அழுகை வந்தது. அவளது கையை இறுக்கிப் பிடித்த தீஷிதன் புகழைப் பார்க்க, அவன் ஒரு ரிப்போர்ட்டை தீஷிதனிடம் கொடுத்தான். அதை வாங்கியவன், “பிரகாஷ் நீ எல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது. உனக்கு சீமாவைத்தான் பிடிச்சிருக்குனா அவளையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே. இவளை எதுக்கு கல்யாணம் பண்ணி இவளோட வாழ்க்கையை அழிச்ச? என்ன சொன்ன சம்யுக்தாவால குழந்தை பெத்துக்க முடியாதுனுதானே டைவர்ஸ் பண்ண? நீ சொல்றத யுக்தா நம்பலாம் மற்றவங்க யாரு வேணும்னாலும் நம்பலாம். ஆனால் நான் நம்ம மாட்டேன். இதோ இந்த ரிப்போர்ட்ல என்ன இருக்கு தெரியுமா? யுக்தாக்கு தாயாகுற அத்தனை தகுதியும் இருக்குனு சொல்றாங்க” என்றான்.
இதை எதிர்பார்க்காத பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தாலும், “ என்ன சார் இவளை மற்றவங்க திட்டுறதுல இருந்து காப்பாத்த பொய் ரிப்போர்ட் ரெடி பண்ணியிருக்கிறீங்களா?”
“வெல்டன் பிரகாஷ். நல்லா சொன்னீங்க போங்க, பொய் ரிப்போர்ட்தான் நீங்க சம்யுக்தா மேல போட்ட குற்றத்துக்கு உங்களோட டாக்டர் குடுத்தது. இதோ என்னோட கைல இருக்கிற ரிப்போர்ட் ஒரிஜினல்னு டாக்டர் குடுத்த ரிப்போர்ட். அதுமட்டுமல்ல நீங்க சொல்லி, பணத்துக்கு ஆசைப்பட்டு உங்களுக்கு பொய் ரிப்போர்ட் குடுத்த அந்த டாக்டரும் தன்னோட தப்பை ஒத்தக்கிட்டாங்க.” என்றவன் அவர் பேசிய வீடியோவை எல்லோருக்கும் காட்டினான்.
“மிஸ்டர் பிரகாஷ் இதுக்கு மேல எங்க வழியில குறுக்க வந்தீங்க.. அப்புறம் இந்த தீஷிதனோட இன்னொரு முகத்தை பார்ப்பீங்க.. பொறக்க போற இந்த குழந்தைக்காவது நல்ல அப்பாவா இருங்க” என்றான்.
தீஷிதன் சொன்னதை கேட்ட சம்யுக்தா தனது கண்களை துடைத்து விட்டு பிரகாஷ் முன்னால் வந்தவள், அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். வேறு எதுவும் பேசாமல் தீஷிதன் அருகில் வந்து நின்று கொண்டாள். பிரகாஷிற்கோ சீமாவுக்கோ எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர்.
“இதுக்கு மேல நீங்க இங்க இருக்கவே கூடாது.. கெட் லாஸ்ட்” என்றான் தீஷிதன். அவர்களும் எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல, தீஷிதன் அடுத்து மணிகண்டன், லீலாவதி பக்கம் வந்தான்.
“தாய்னா யாருனு தெரியுமா? பிள்ளை ஒரு கஷ்டம்னா தன்னோட உயிரைக் கூட கொடுப்பாங்க. ஆனால் நீங்க எல்லாம் தாயா இல்லை ஒரு மனுஷனா இருக்கவும் தகுதி இல்லாதவங்க. ஒரு பொண்ணு மனசு உடைஞ்சி உங்ககிட்ட வரும்போது அவளுக்கு ஆதரவா இல்லைன்னாலும் மேலும் கஷ்டப்படுத்தாம இருந்திருக்கலாம்.. நீங்க என்ன பண்ணீங்க அவளை நடுரத்திரியில போட்டிருக்க ட்ரெஸ்ஸோட வீட்டை விட்டு அனுப்பியிருக்கிறீங்க.. அதனாலதான் இப்போ நீங்க இருக்க இடம் இல்லாம கஷ்டப்படுறீங்க. இதுதான் நான் உங்களுக்கு குடுக்கிற தண்டனை” என்றான்.
“ஏய் நீ எங்களை பற்றி பேசுறியா? நீ இவகூட குடும்பம் நடத்து இல்லை கும்மியடி எங்களுக்கு என்ன வந்துது. என் பொண்ணு வித்யாவை கூட்டிட்டு நாங்க இங்க இருந்து போயிடுறம்” என்ற லீலாவதி வித்யா அருகதை வர, வித்யா விக்ராந்த் கையை பிடித்துக் கொண்டு அவருடன் வர மறுத்தாள்.
“இல்லை நான் உங்ககூட வர மாட்டேன்.”
“ஏய் யாருடி இவன். இவன் கையை பிடிச்சிட்டு நிற்கிற வா போகலாம். உன்னால்தான் இப்போ சொத்து எல்லாம் இழந்திட்டு நடுரோட்டில நிற்கிறம். வா போலாம்” என்றார் லீலாவதி.
“நான் வரமாட்டேன்.” என்றவளை அடிக்க கை ஓங்கினார் லீலாவதி. ஓங்கிய அவரின் கையைப் பிடித்து நிறுத்தினான் விக்ராந்த்.
“ஹலோ மேடம், அதுதான் அவ வரலனு சொல்றால்ல அப்புறம் என்ன, அவளை விட்டுட்டு நீங்க இங்க இருந்து கிளம்பலாம்.”
“அதை சொல்ல நீ யாருடா?”
“நான் யாரா.. மை டியர் அத்தை நான்தான் உங்க பொண்ணு வித்யாவை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை. இன்னைக்கு நைட் அத்தானோட ரிஷப்ஷன் மட்டுமல்ல எங்களோட என்கேஜ்மென்டும் இருக்கு.”
“என்ன என்கேஜ்மென்டா? யாருக்கு யாரு மாப்ள? உனக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணி தர முடியாது”
“அதை நீங்க சொல்ல முடியாது அத்தை. என்னோட கல்யாணம் வேணாம்னு வித்யாதான் சொல்லணும்”
“வித்யா சொல்லு இவன் உனக்கு வேணாம்.. நாங்க நல்ல மாப்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறன் வா என்கூட” என்றார்.
“போதும் நிறுத்துங்க.. எனக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களா? இப்போ உங்கிட்ட ஒரு சொத்தும் இல்லை. உங்களுக்கு பணம் வேணும்னா என்னை யாருக்கும் விக்ககக் கூட நீங்க தயங்க மாட்டீங்க.. உங்களோட வர்றது எனக்கு பாதுகாப்பில்ல” என்றவள் தீஷிதனிடம் வந்து, “மாமா என்னை அவங்க கூட அனுப்பாதீங்க, சொத்துக்காக அந்த கேடுகெட்ட விக்டர்க்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தவங்க, இப்போ பணத்துக்காக என்னை யாருக்கும் வித்தாலும் விப்பாங்க.. நான் அவங்க கூட போகல மாமா” என்றாள். அவளது தலையை வருடிக் கொடுத்த தீஷிதன்.
“எந்த பிள்ளையும் பாதுகாப்பை உணர்வது பெத்தவங்ககிட்டதான். ஆனால் எப்போ அந்த பெத்தவங்ககிட்டேயே பாதுகாப்பு இல்லைனு இவ சொன்னாளோ அப்பவே நீங்க தரம் குறைஞ்சி போயிட்டீங்க.. இதுக்கு அப்புறம் உங்களுக்கு இங்க இடம் இல்லை. நீங்க கிளம்பலாம்” என்றான்.
அவனை எதிர்த்து பேச முடியாமல் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தியது ஒரு குரல்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 33
தீஷிதன் டாக்டரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான். தீக்ஷிதனின் கார் சத்தம் கேட்டதுமே அறைக்குள் இருந்த சம்யுக்தா வேகவேகமாக கீழே ஓடி வந்தாள். பரந்தாமனும் தமயந்தியும் சம்யுக்தாவைப் பார்த்து சிரித்தனர். ஆனால் சம்யுக்தா அதைக் கவனிக்காமல் வாசலுக்கு ஓடினாள். அதே நேரத்தில் உள்ளே வந்த தீக்ஷிதன் சம்யுக்தாவை அணைத்துக் கொண்டான்.
“என்ன யுக்தா.. கார் சத்தம் கேட்டு ஓடி வந்தியா?”
“ஆமாங்க, நீங்க சீக்கிரமா வந்திடுறன்னு சொல்லிட்டு இப்போதான் வர்றீங்க.. ரொம்ப பயந்திட்டேன்..”
“சரி அதுதான் நான் வந்திட்டேன்ல.. உள்ள வா போகலாம்.” என்று அவளது தோளில் கையைப் போட்டு உள்ளே அழைத்து வந்தான்.
“தீஷி எங்கதான் போன? ஒரு நாள் ஃபுல்லா நீ இல்லை.. எங்க போன எதுக்கு போனனு நாங்க பயந்துட்டோம்.” என்றார் பரந்தாமன்.
“டாடி ரொம்ப இம்போர்ட்டான வேலை.. அதனாலதான் போனேன்.”
“அப்படி என்ன வேலை?”
“அதெல்லாம் இப்போ சொல்ல மாட்டேன்.. டைம் வரும் போது சொல்றன். அத்தை எனக்கு பசிக்குது.. சாப்பாடு எடுத்து வைங்க நான் ஃப்ரெஷாகிட்டு வர்றேன். யுக்தா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காபி கொண்டு வா.” என்றவன் உள்ளே செல்ல, சம்யுக்தா காபி போடச் சென்றாள்.
“தமயந்தி தீஷியோட நடவடிக்கை சரியில்லையே.. எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு.”
“என்ன அண்ணா இப்படி சொல்றீங்க?”
“தீஷிதன் ஏதோ பண்றான்னு மட்டும் புரியுது பாக்கலாம்.”
“அவன் எது செய்தாலும் அது நல்லதாகவே இருக்கும் அண்ணா. நீங்க எதையும் போட்டு குழப்பிக்க வேணாம். நான் போய் அவனுக்கு சாப்பாட்டை ரெடி பண்றன்.”
“சரிமா..” என்றவர் அமரேந்திரனுடன் வெளியே இருந்த வேலையைப் பார்க்கச் சென்றார்.
அறைக்கு வந்த தீக்ஷிதன் ஃப்ரெஷாகிவிட்டு வந்து பால்கனியில் நின்றான். அப்போது அவனுக்கு கொலுசு சத்தம் கேட்டது. அதன் ஓசைக்கு சொந்தக்காரியான சம்யுக்தா கதவை திறந்து உள்ளே வந்தாள்.
“எங்க இருக்கீங்க?”
“நான் பால்கனியில இருக்கேன் யுக்தா இங்க வா” என்றான்.
அவளும் காபி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்க, அதை வாங்கி குடித்து விட்டு, அங்கே நின்றிருந்த சம்யுக்தாவை தனது கையணைப்பில் கொண்டு வந்தான். தீக்ஷிதனின் ஒரு கரம் அவளது இடையை இறுகப் பற்றியது. மறு கையோ அவளது நெற்றியில் படர்ந்த முடியை ஒதுக்கியது. சம்யுக்தா கண்களை மூடிக் கொண்டு நின்றாள். அவளது முகத்தைப் பார்த்த தீக்ஷிதன், “யுக்தா..” என்றான்.
“ம்ம்ம்..”
“யுக்தா என்ன பயந்துட்டயா?”
“ம்ம்ம்..” என்றவள் கண்களைத் திறக்க, அவள் கண்கள் குளமாகின.
“என்னாச்சிமா? எதுக்காக இந்த அழுகை? நான் தான் சொல்லியிருக்கேன்ல இப்படி நீ அழவே கூடாதுனு..”
“நான் ரொம்ப பயந்துட்டேன்.. நைட் போனீங்க.. ஈவ்னிங்காச்சு லேட்டாகவும் பயந்துட்டேன்.. உங்களுக்கு அந்த பிரகாஷால ஏதாவது நடந்திடுமோனு பயந்துட்டே இருந்தேன்..”
“என்னை அவனால ஒண்ணும் பண்ண முடியாது.. அப்பிடி எனக்கு எதுவும் நடந்தாலும் உன்னை இங்க இருக்கிற எல்லோரும் நல்லா பாத்துக்குவாங்க..” என்று தீஷிதன் சொல்லி முடிக்கும் முன்பே அவனது வாயில் தனது கையை வைத்து அவனின் பேச்சை நிறுத்திய சம்யுக்தா, “உங்களுக்கு ஏதாவது நடந்தா, சத்தியமா சொல்றேன் அதுக்கு அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன். நீங்க இல்லாம என்னால இருக்க முடியாதுங்க. அதை மட்டும் மறந்திடாதீங்க.” என்றாள்.
உடனே தீஷிதன், “யுக்தா இப்போ நீ என்ன சொன்ன?” என்றான் ஒருவிதமான பதட்டத்துடன். அவனைப் பார்த்தவள், “அவனிடம் தான் சொன்னதை மறுபடியும் சொன்னாள். நீங்க இல்லன்னா என்னால இருக்க முடியாதுங்க.” என்று அவள் மறுபடியும் சொன்னதைக் கேட்ட தீக்ஷிதன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பின் இறுக்கம் அதிகமாகியது.
“யுக்தா அப்போ உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு தானே அர்த்தம். என்னை மனப்பூர்வமாத்தானே கல்யாணம் பண்ணிக்கிற. உன்னோட வாயிலிருந்து வந்த இந்த வார்த்தை… இந்த வார்த்தை மட்டும் போதும் எனக்கு. என்ன நடந்தாலும் அதை சமாளிக்க என்னால முடியும்.”
“ஆரம்பத்துல நீங்க எல்லாம் சொல்றீங்கனுதான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் நீங்க எப்படி என் மனசுக்குள்ள வந்தீங்க, உங்களை எப்படி எனக்கு பிடிச்சதுனு எனக்கு தெரியாதுங்க.. ஆனா, இப்போ இந்த நிமிஷம் சொல்றேன், நீங்க இல்லன்னா என்னால இருக்க முடியாது. அது மட்டும் நிஜம். ப்ளீஸ் என்னை விட்டு எப்பவுமே போகமாட்டீங்க தானே” என்று அவனைப் பார்த்து ஏக்கமாகக் கேட்டாள்.
“ஏய் உன்னை விடுறதுக்காடி நான் இவ்வளவு பாடுபடுறேன். உன்னை எப்பவுமே இப்படியே என் கைக்குள்ளேயே வச்சிக்குவேன். யுக்தா ஐ லவ் யூ” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
பதிலுக்கு சம்யுக்தாவும், “ஐ லவ் யூ மோர் தான் யூ” என்றாள் சிரிப்புடன்.
“ஏய் கேடி…”
“சரிங்க நான் ஒன்னு கேட்கட்டுமா, நீங்க எங்க போனீங்க?”
“கண்டிப்பா சொல்லுவேன். உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப் போறேன். நாளைக்கு நான் எங்க போனேன் எதுக்கு போனேன்னு எல்லாமே உனக்கும் மற்றவங்களுக்கும் தெரிய வரும். நீ ஒன்னும் வொரி பண்ணாத.”
“சரிங்க வாங்க சாப்பிடலாம்” என்று கீழே அவனை அழைத்துக் கொண்டு வர, தமயந்தி சாப்பாடு எடுத்து வைத்தார்.
சிறிது நேரத்தின் பின்னர் நலங்கு, மெஹந்தி பங்ஷனுக்கான ஏற்பாடுகள் வீட்டில் ஆரம்பித்தன. வண்ண வண்ண விளக்குகளால் அந்த மாளிகையே ஜொலித்தது. வரும் விருந்தினர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகள் தோட்டத்தில் செய்யப்பட்டிருந்தன. டிஜே ஒரு பக்கம், சாப்பாடு ஒரு பக்கம், மெஹந்தி ஒரு பக்கம் என்று அனைத்தும் நடந்து கொண்டிருந்தது.
சம்யுக்தா அருகே வித்யாவும் மதுராவும் நின்று கொண்டு அவளை கேலி செய்து கொண்டிருந்தார்கள். பியூட்டிஷியன் பெண்ணிடம் சம்யுக்தா தான் வரைந்த ஒரு டிசைனை காட்டி இதை போட்டு விட முடியுமா என்று கேட்க, அவளும் சிரித்துக் கொண்டே, “சரிங்க மேடம்” என்றாள்.
விக்ராந்த் தீஷிதனுடன் சேர்ந்து கொண்டு அங்கு நடைபெற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். பிஸியாக இருந்தாலும் அவன் கண்களை அடிக்கடி வித்யாவிடம் சென்று வந்தது. வித்யாவும் அடிக்கடி விக்ராந்தை பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் மதுரா தனது போனை எடுத்து புகழுக்கு அழைத்தாள்.
புகழ் தனது வீட்டில், கிருபாகரன் மற்றும் துர்க்காவுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது போன் அடிக்க எடுத்துப் பார்த்த புகழ், போனை எடுக்காமல் வைத்து விட்டான். துர்க்கா, “போன் எடுக்கல புகழ்” என்றார்.
“இல்லம்மா மதுரா தான் கால் பண்றா. இன்னைக்கு தீஷி வீட்டில் நலங்கு ஃபங்ஷனும் மெஹந்தி பங்ஷனும் இருக்கு. நான் இன்னும் போகல இல்ல அதான் கால் பண்றா.”
“அதுக்கு என்னப்பா நீ போயிட்டு வரவேண்டியது தானே.”
“இல்ல அம்மா உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு எப்படி போறது?”
“ஐயோ பரவால்ல புகழ் நாங்க ரெண்டு பேரும் எங்கேயும் போக மாட்டோம். வீட்லதான் இருப்போம் பயப்படாம நீ போய் என்ஜாய் பண்ணிட்டு வா.”
“இல்லம்மா நான் உங்க கூடவே இருக்கிறேன். நான் அப்புறமா மதுராவை சமாதானப்படுத்திக்குவேன்.”
“இல்ல புகழ் இதெல்லாம் எப்போவாவது வர்றது தானே. நீ போயிட்டு வா” என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இப்போது புகழுக்கு தீஷிதன் கால் பண்ணினான்.
“சொல்லு தீஷி” என்றான் போனை எடுத்த புகழ்.
“என்ன பண்ணிட்டு இருக்க புகழ்?”
“இங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்கோம்.”
“அப்படியா சரி நீ வரலையா இங்க?”
“நான் எப்படி தீஷி வர்றது? அம்மா அப்பா இருக்காங்களே அவங்கள பார்த்துக்கனுமேடா”
“அதுவும் சரிதான் ஆனா புகழ், இங்க உன்னை எல்லாரும் தேடறாங்க. யுக்தா வேற புகழ் அண்ணா வரலையா? என்று கேட்டுட்டு இருக்கா நீ ஒன்னு பண்ணு அத்தையையும் மாமாவையும் நீ இங்க கூட்டிட்டு வர்றியா?” என்றான்.
“என்ன சொல்ற தீஷி?” என்றான்.
அதற்கு தீஷிதன், “அவங்க வந்தா நல்லா இருக்கும். ஆனா என்ன பண்றது எனக்கு அவங்க இங்க இருக்கணும் போல இருக்குடா” என்றான்.
“தீஷி புரிஞ்சிதான் பேசுறயா? ஒன்னும் பிரச்சனை இல்ல நாளைக்கு அவங்க அங்க வரட்டும். இன்னைக்கு வந்து ஏதாவது பிரச்சினை வந்தா எல்லாமே எதிர்பாக்காத மாதிரியாயிடும் தீஷி” என்றான்.
“நீ சொல்றது சரிதான் புகழ்” என்று தீஷிதன் பேசிக் கொண்டிருக்கும்போது, புகழிடமிருந்து போனை வாங்கினார் துர்க்கா.
“தீக்ஷி புகழ் இரண்டு பேரும் எதுக்கு இப்படி டென்ஷனாகுறீங்க? எங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை. நாங்க இங்க இருக்கோம் புகழ் அங்க வந்துட்டு வரட்டுமே. இதுல என்ன இருக்கு, அவனும் அங்க இருக்கத் தானே வேணும். புகழ் நீ போ நாங்க இங்க பத்திரமா இருப்போம். நாங்க காலையில வரோம்” என்றார் துர்க்கா.
“அத்தை நீங்களும் மாமாவும் ஏதும் நினைச்சிக்காதீங்க. தப்பா எடுத்துக்காதீங்க அத்தை ப்ளீஸ்” என்றான்.
“ஐயோ தீஷி, இதுல என்ன தப்பா நினைக்க இருக்கு? எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. உன்னோட நிலைமை எங்களுக்கு புரியுது சரியா? நாளைக்கு காலைல உங்களை இங்க கூட்டிட்டு வர புகழையும் காரையும் அனுப்பறேன். நீங்க புகழ் கூடவே வந்துடுங்க” என்றான் தீஷிதன்.
“சரி தீஷி” என்றவர் போனை வைத்து புகழிடம் திரும்பி, “நீ சாப்பிட்டு போயிட்டு வாப்பா” என்றார்.
அப்போது கிருபாகரனும் புகழிடம் விளையாட்டாக, “ஆமா ஆமா சீக்கிரமா கிளம்பு, எங்களுக்கும் கொஞ்சம் பிரைவசி வேணுமில்ல புகழ்” என்றதும் அவரைப் பார்த்து பொய்யாக அதிர்ச்சி அடைந்தவன், “அடப்பாவி அப்பா அப்போ நீங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி தான் என்னை அனுப்புறீங்களா?” என்றதும் துர்க்கா, “ஐயோ நீங்க வேற ஏங்க என் மானத்த வாங்குறீங்க?” என்று தலையில் அடித்துக் கொண்டார்.
புகழ் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்களிடம் சொல்லிவிட்டு தீக்ஷிதன் வீட்டுக்குச் சென்றான்.
ஆட்டம் பாட்டம் என்று அங்கே தீஷிதன் வீட்டில் மகிழ்ச்சி மட்டுமே குடி கொண்டிருந்தது. புகழும் வந்துவிட தீஷிதன், புகழ், விக்ராந்த் மூவரும் நன்றாக என்ஜாய் பண்ண ஆரம்பித்தனர். ஸ்டேஜில் விக்ராந்தும் வித்யாவும் ஒரு பக்கமாக ஆட, மதுராவும் புகழும் இன்னொரு பக்கம் ஆடினார்கள். தீக்ஷிதன் சம்யுக்தா அருகே உட்கார்ந்து இருந்தான்.
“அக்கா நீயும் வா” என்று வித்யா அவளை அழைக்க, “இல்ல நான் வரல, நீங்க என்ஜாய் பண்ணுங்க” என்றாள்.
“அட வாக்கா” என்று அவளையும் பிடித்து இழுத்தார்கள் வித்யாவும் மதுராவும். அப்போது அவளுக்கு துணைக்கு வந்தான் தீக்ஷிதன்.
“யுக்தா வா என்கூட” என்றவன் அவள் கையைப் பிடித்து ஸ்டேஜிக்கு அழைத்துச் சென்றான். மெல்ல மெல்ல அவனுக்கு ஈடு கொடுத்து ஆட ஆரம்பித்தாள் சம்யுக்தா.
அங்கே வந்திருந்தவர்கள் எல்லோரும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்கள். இப்படியாக நலங்கு ஃபங்ஷன் மெஹந்தி பங்க்ஷனும் இனிதே நடைபெற்று முடிய, புகழ் அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டான்.
“சரி சரி சீக்கிரமா நீங்க எல்லாம் போய் தூங்குங்க. நாளைக்கு நேரத்துக்கு எந்திரிக்கணும்ல. இப்ப தூங்கினால் தான் காலையில முகம் ஃப்ரெஷ்ஷா இருக்கும்” என்று ஹாலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் சிறுசுகளை அனுப்பி வைத்தார் தமயந்தி.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 32
மணிகண்டன் மிகுந்த கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். “என்னங்க, என்னாச்சு உங்க முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு? ஏதாவது பிரச்சனையா?”
“உன்ன சொல்லணும் டி.. எல்லாம் நீ பெத்து போட்டியே ஒரு பொண்ணு அவளால வந்த பிரச்சனை. ஓடுகாலி கழுதை.. எவனோட ஓடிப்போச்சுன்னே தெரியல.. இப்போ அந்த விக்டர் வந்து நம்ம பொண்ணு தேவையில்ல ஒன்னும் தேவை இல்லன்னு சொல்லி கத்திட்டு இருந்தான். அப்புறம் நம்ம சொத்து எல்லாம் அவனோட பேருக்கு மாத்தி எடுத்திட்டு போயிட்டான்.”
“என்ன சொல்றீங்க, அப்போ நம்ம பேருல எந்த சொத்தும் இல்லையா? இப்போ என்ன தாங்க பண்றது?” “என்ன பண்றதா? ரோட்ல போய் பிச்சை தான் எடுக்கணும். இந்த வீட்டுக்கு கூட ஒரு நாள் தான் டைம் கொடுத்து இருக்கிறான். ஒரு நாள்ல இங்க இருந்து நம்ம கிளம்பனும் இல்லைன்னா நம்ம உசுரு கூட மிஞ்சாது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் உன்னோட பொண்ணு வித்யாவை மட்டும் கண்டுபிடிச்சேன்னு வை என் கையால தான் அவளோட சாவு.”
“என்னங்க இப்படி பேசுறீங்க? என்ன இருந்தாலும் அவ நாம ஆசையா பெத்த பொண்ணுங்க.”
“அதுக்காக இப்படி நம்மள சந்தி சிரிக்க வச்சுட்டு, பிச்சைக்காரங்க ஆக்கிப்புட்டு போனவ அவளை எப்பவும் என்னால மன்னிக்க முடியாது.”
“இப்ப என்னங்க பண்றது?”
“என்ன பண்றது, எங்கையாவது போய் தொலைவோம், உன் ட்ரெஸ் எல்லாம் எடுத்து வை.”
“எங்க தாங்க போறது?”
“எங்க போறது? எங்க போறதுனு என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்? கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?” என்றவர் தனது அறைக்குள் சென்றார்.
‘என்ன இப்படி சொல்லிட்டு போயிட்டாரு.. இவரு இருக்கிற கோவத்தில என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரே. என்ன பண்ணலாம்’ என்று யோசித்தவாறு உட்கார்ந்தார் லீலாவதி.
அப்போது லீலாவதிக்கு ஒரு போன் வந்தது. “யாரா இருக்கும், புது நம்பர்ல இருந்து கால் வருது. ஒரு வேளை வித்யாவா இருக்குமோ?”என்றவர் உடனே போனை எடுத்தார்.
“ஹலோ யாரு?”
“நான் யார் என்றது முக்கியம் இல்ல. நான் சொல்ல போற விஷயம் தான் முக்கியம்.”
“என்ன விஷயம்?”
“இங்க பாருங்க உங்க வளர்ப்பு பொண்ணு சம்யுக்தாவுக்கும் ஊட்டியில இருக்கிற பெரிய பிஸ்னஸ்மேனுக்கும் நாளைக்கு கல்யாணம்.”
“வாட் சம்யுக்தாவுக்கும் இன்னொரு கல்யாணமா? என்ன விளையாட்டுறீங்களா?”
“இங்க பாருங்க மேடம், நான் சொல்றது உண்மைதான். நாளைக்கு சம்யுக்தா மேடம்க்கும் தீஷிதன் சார்க்கும் கல்யாணம். அதுவும் ஊட்டியில் இருக்கிற பெரிய ஹால்ல நடக்க இருக்கு. நீங்க கண்டிப்பா வரணும்னு எங்க பாஸ் உங்க கிட்ட சொல்ல சொன்னாரு.”
“எவன்டா உன் பாஸ்?”
“என் பாஸ் தீஷிதன் சார். இதோ இப்போ கூட உங்களுக்கு வாட்ஸ் அப்ல அவங்களோட இன்விடேஷன் அனுப்ப சொன்னாரு. நான் அனுப்பி இருக்கேன் பாருங்க. கண்டிப்பா நீங்க இங்க வந்தே ஆகணும்.”
“அந்த ஒன்னுத்துக்குமே உதவாதவ கல்யாணத்துக்கு நான் எதுக்கு வரணும்? அதெல்லாம் வர முடியாது.”
“நீங்க வநுதே ஆகணும்ன்றது என் பாஸோட ஆர்டர்.”
“டேய் யார்டா உன் பாஸ்? எனக்கு தெரியாது சும்மா ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்க? நான் வேற கடுப்புல இருக்கேன். நீ வேற மரியாதையா போனை வை..” என்று கத்திவிட்டு ஃபோனை வைத்தார்.
பின் தனது போனை எடுத்து வாட்ஸ்அப்பை பார்க்க, அங்கே சம்யுக்தா தீஷிதனின் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் படமும் அவர்களுடைய திருமண அழைப்பிதழும் வந்திருந்தது. அதைப் பார்த்ததற்கே லீலாவின் வாய் வயிறு எல்லாம் எரிந்தது. ‘இங்க நாங்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம். இவ எப்படி சந்தோஷமா இருக்கான்னு பாரு..’ என்று கோபப்பட்டவர், “என்னங்க…. என்னங்க…” என்றார்.
அவரது சத்தத்தில் அங்கே வந்த மணிகண்டன், “என்னடி ஒரு மனுஷனை நிம்மதியா கொஞ்ச நேரம்கூட இருக்க விட மாட்டியா?”
“இங்க பாருங்க அந்த வீணா போன சம்யுக்தாக்கு ரெண்டாவது கல்யாணமாம். மாப்பிள்ளை பெரிய பிசினஸ்மேன்னு போட்டு இருக்கு.”
“என்ன ரெண்டாவது கல்யாணமா? எங்க பார்ப்போம்.” என்றவர் அந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
“அடியே இவன் ஊட்டியிலேயே பெரிய பிசினஸ்மேன்.. சென்னைல கூட இவனுக்கு நிறைய கம்பெனிஸ் இருக்கு.. ரொம்ப பெரிய இடம்.. ஆனா இவ எப்படி அங்க இவன் கூட?”
“யாருக்குத் தெரியும்? அதிர்ஷ்டம் தான் பாருங்களேன். அவளுக்கு வந்த வாழ்க்கையை.. இவெல்லாம் நல்லாவே இருக்க மாட்டா. நம்ம இப்போ எப்படி கஷ்டப்படுறோம்.. இவ மட்டும் எப்படி சொகுசா வாழ்றா பாருங்க?” என்று கடுகு போல பொரிந்து தள்ளினார் லீலாவதி.
சற்று நேரம் அந்த போட்டோவை பார்த்து மணிகண்டனுக்கு ஒரு ஐடியா வந்தது. “லீலா எனக்கு ஒரு ஐடியா தோணுது.”
“என்னங்க?”
“இங்க பாரு இப்போ நம்ம போறதுக்கு போக்கிடம் ஒன்னும் இல்ல. சொத்து பத்து எல்லாம் அந்த விக்டருக்கு போயிடுச்சு. இப்போ நமக்கு இருக்கிற ஒரே ட்ரம் காட் இந்த சம்யுக்தா தான்.”
“என்னங்க சொல்றீங்க?”
“நம்ம போய் சம்யுக்தாவைப் பார்க்கலாம்.. அவ கல்யாணத்துக்கு போற மாதிரி போய் நைசா அவ கூடவே தங்கிக்கலாம். இப்போ இவளை விட்டா நமக்கு வேற வழி கிடையாது.”
“அதுக்காக நம்ம வீட்டை விட்டு விரட்டின அவளோட கால்ல போய் விழச் சொல்றீங்களா? நாம போனாலும் அவ ஏத்துப்பாளா?”
“ஏய் அவ ரொம்ப நல்லவ. அதனால நம்ம எப்போ போனாலும் ஏத்துக்குவா. இப்பா நமக்கு இருக்கிற ஒரே வழி இவதான். இங்க பணம் இல்லாம இருக்க முடியாது. ஆமா உனக்கு கால் பண்ண நம்பருக்கு கால் பண்ணி நம்ம அங்க வர்றதா சொல்லு.”
“என்னால அவன்கிட்ட பேச முடியாது நீங்களே பேசுங்க.” என்றவர் அவரனுக்கு போன் பண்ணினார். கால் அடித்ததும் எடுத்தவர், “ஹலோ யாருங்க நீங்க? என் பொண்ணு சம்யுக்தா எங்க?”
“இருங்க சார் மணிகண்டன் சார்.. எங்க பாஸ்தான் இந்த நம்பருக்கு இன்விடேஷன் அனுப்ப சொன்னாங்க.. கண்டிப்பா நீங்க இதை கல்யாணத்துக்கு வரணும்னு சொல்ல சொன்னாங்க..”
“சரிங்க நான் வரேன் ஆனா நான் எப்படி வர்றது?”
“அதுக்கு ஒன்னும் பயப்பட வேண்டாம் சார்.. எங்க பாஸ் அதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணுவாரு. நீங்க ரெடியாயிட்டு கால் பண்ணுங்க. நான் உங்களுக்கு கார் அனுப்பறேன்.”
“சரி நான் உங்களுக்கு கால் பண்றேன்.” என்றவர் ஃபோனை வைத்துவிட்டு, “பெரிய புளியங்கொம்பாத்தான் புடிச்சிருக்கா. நம்மள அவனே காரை அனுப்பி நம்மல வீட்டுக்கு கூப்பிடுறான். நாம அங்க போயிடலாம்.. நீ நமக்கு தேவையான ட்ரெஸ்ஸ மட்டும் எடுத்து பேக் பண்ணு.”
“சரிங்க..” என்று லீலாவதி அந்த வேலையை செய்ய உள்ளே சென்றார்.
…………………………………………………
தீஷிதன் வீட்டிற்கு கூட செல்லாமல் நேரே ஹாஸ்பிடலுக்குச் சென்றான். அங்கே அவன் கொண்டு வந்தவற்றை டாக்டரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கி டெஸ்ட் எடுக்க அனுப்பி வைத்தார். “தீஷிதன் நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ரிப்போர்ட் இப்போ வந்திடும்.”
“ஓகே டாக்டர். நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி என் ஃபியான்சி மயக்கம் போட்டுட்டாங்கனு கூட்டிட்டு வந்தப்போ ஒரு டெஸ்ட் எடுக்க சொன்னேனே.. அந்த ரிப்போர்ட்டை வந்திட்டா?”
“யெஸ் தீஷிதன். அந்த ரிப்போர்ட் நேற்றுதான் வந்தது.” என்றவர் நர்ஸை அழைத்து தீஷிதன் கேட்ட ரிப்போர்ட்டை எடுத்து வரச் சொன்னார். நர்ஸ் ரிப்போர்ட்டை எடுத்து வந்து டாக்டரிடம் கொடுத்தார்.
தீஷிதன் தனக்கு முன் இருக்கும் டாக்டரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் கூறும் பதிலால் பல மாற்றங்கள் நடக்க இருக்கிறது. தனது கையில் இருந்த ரிப்போர்ட்டை நன்கு பார்த்து விட்டு, தீஷிதனை நிமிர்ந்து பார்த்தார் டாக்டர். அப்போது தீஷிதனுக்கு போன் வந்தது. எடுத்துப் பார்க்க சம்யுக்தாதான் அழைத்திருந்தாள். சிரித்துக் கொண்டு டாக்டரிடம், “டாக்டர் ப்ளீஸ் ஒன் மினிட்..”
“ இட்ஸ் ஓகே தீஷிதன்.” என்றதும் போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“யுக்தா சொல்லுமா”
“எங்க இருக்கீங்க? இன்னும் வீட்டிற்கு வரல.. மாமாவேற உங்களை தேடிட்டு இருக்காங்க.. எங்க போறீங்கனு சொல்லிட்டாவது போயிருக்கலாமே..”என்று படபட என்று பேசினாள். இதைக் கேட்ட தீஷிதன், “என்ன மேடம், படபடனு பட்டாசு மாதிரி வெடிக்கிறீங்க? அக்மார்க் பொண்டாட்டியாவே மாறிட்டீங்க.. எனக்கு வேலை மிச்சம் போ.. நான் நல்லா இருக்கேன்.. ஊட்டியிலதான் இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களை பார்க்க ஓடி வந்திடுவன்” என்றான்.
“இல்லைங்க மாமா தான் உங்களை காணோம்னு…”
“அப்போ மேடம் என்னை தேடலையா?” என்றதற்கு சம்யுக்தா பதில் பேசவில்லை. அமைதியாக இருந்தாள்.
“ஓகே இதுக்கு நீங்க இப்போ பதில் சொல்ல வேண்டாம்.. நான் சீக்கிரமாவே வந்துடறேன்..” என்றவன் போனை வைத்து விட்டு டாக்டரிடம் சென்றான்.
“சாரி டாக்டர்..”
“இட்ஸ் ஓகே தீஷிதன்.. இந்த ரிப்போர்ட்ல நீங்க சொன்ன மாதிரி எந்த ப்ராப்ளமும் இல்ல. சம்யுக்தா நல்லா இருக்கிறாங்க. அவங்க ஹெல்த் ரொம்ப நல்லா இருக்கு. அப்புறம் அவங்களால குழந்தை பெத்துக்க முடியும். அதுல எந்த பிரச்சனையும் இல்லை..”
“டாக்டர் நிஜமா சம்யுக்தாக்கு குழந்தை பிறக்கிறதுல ப்ராப்ளம் இல்லையே..”
“உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்கிறாங்க தீஷிதன். நூறு வீதம் நான் அடிச்சு சொல்லுவேன் சம்யுக்தாவால் தாயாக முடியும்.”
இதை கேட்டதும் தீஷிதன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டான். “ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.. யுக்தா இதை நினைச்சித்தான் ரொம்ப கவலைப்பட்டா…”
“அவங்க கிட்ட சொல்லுங்க தீஷிதன்.. அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுத்த ரிப்போர்ட்டை எடுத்து வந்தார் நர்ஸ்.
அந்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர், தீஷிதனிடம், “தீஷிதன் இன்னைக்கு உங்களோட சந்தேகம் எல்லாம் தீர்ந்து போகணும்னு இருக்கு போல..”
“என்ன டாக்டர் சொல்றீங்க?”
“ஆமா தீஷிதன் நீங்க கேட்டது இப்போ கன்பார்மாகிருக்கு.. உங்களுக்கு இதுல எந்த டவுட்டுமே வேண்டாம்” என்றார் டாக்டர்.
தீஷிதனுக்கு என்ன சொல்றதுனே தெரியல. எல்லாப் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது போல இருந்தது. அதே சமயத்தில் அவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தான். டாக்டரிடம் நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்வாழ்வு : 32
மணிகண்டன் மிகுந்த கோபத்துடன் வீட்டுக்கு வந்தார். “என்னங்க, என்னாச்சு உங்க முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு? ஏதாவது பிரச்சனையா?”
“உன்ன சொல்லணும் டி.. எல்லாம் நீ பெத்து போட்டியே ஒரு பொண்ணு அவளால வந்த பிரச்சனை. ஓடுகாலி கழுதை.. எவனோட ஓடிப்போச்சுன்னே தெரியல.. இப்போ அந்த விக்டர் வந்து நம்ம பொண்ணு தேவையில்ல ஒன்னும் தேவை இல்லன்னு சொல்லி கத்திட்டு இருந்தான். அப்புறம் நம்ம சொத்து எல்லாம் அவனோட பேருக்கு மாத்தி எடுத்திட்டு போயிட்டான்.”
“என்ன சொல்றீங்க, அப்போ நம்ம பேருல எந்த சொத்தும் இல்லையா? இப்போ என்ன தாங்க பண்றது?” “என்ன பண்றதா? ரோட்ல போய் பிச்சை தான் எடுக்கணும். இந்த வீட்டுக்கு கூட ஒரு நாள் தான் டைம் கொடுத்து இருக்கிறான். ஒரு நாள்ல இங்க இருந்து நம்ம கிளம்பனும் இல்லைன்னா நம்ம உசுரு கூட மிஞ்சாது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் உன்னோட பொண்ணு வித்யாவை மட்டும் கண்டுபிடிச்சேன்னு வை என் கையால தான் அவளோட சாவு.”
“என்னங்க இப்படி பேசுறீங்க? என்ன இருந்தாலும் அவ நாம ஆசையா பெத்த பொண்ணுங்க.”
“அதுக்காக இப்படி நம்மள சந்தி சிரிக்க வச்சுட்டு, பிச்சைக்காரங்க ஆக்கிப்புட்டு போனவ அவளை எப்பவும் என்னால மன்னிக்க முடியாது.”
“இப்ப என்னங்க பண்றது?”
“என்ன பண்றது, எங்கையாவது போய் தொலைவோம், உன் ட்ரெஸ் எல்லாம் எடுத்து வை.”
“எங்க தாங்க போறது?”
“எங்க போறது? எங்க போறதுனு என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்? கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?” என்றவர் தனது அறைக்குள் சென்றார்.
‘என்ன இப்படி சொல்லிட்டு போயிட்டாரு.. இவரு இருக்கிற கோவத்தில என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரே. என்ன பண்ணலாம்’ என்று யோசித்தவாறு உட்கார்ந்தார் லீலாவதி.
அப்போது லீலாவதிக்கு ஒரு போன் வந்தது. “யாரா இருக்கும், புது நம்பர்ல இருந்து கால் வருது. ஒரு வேளை வித்யாவா இருக்குமோ?”என்றவர் உடனே போனை எடுத்தார்.
“ஹலோ யாரு?”
“நான் யார் என்றது முக்கியம் இல்ல. நான் சொல்ல போற விஷயம் தான் முக்கியம்.”
“என்ன விஷயம்?”
“இங்க பாருங்க உங்க வளர்ப்பு பொண்ணு சம்யுக்தாவுக்கும் ஊட்டியில இருக்கிற பெரிய பிஸ்னஸ்மேனுக்கும் நாளைக்கு கல்யாணம்.”
“வாட் சம்யுக்தாவுக்கும் இன்னொரு கல்யாணமா? என்ன விளையாட்டுறீங்களா?”
“இங்க பாருங்க மேடம், நான் சொல்றது உண்மைதான். நாளைக்கு சம்யுக்தா மேடம்க்கும் தீஷிதன் சார்க்கும் கல்யாணம். அதுவும் ஊட்டியில் இருக்கிற பெரிய ஹால்ல நடக்க இருக்கு. நீங்க கண்டிப்பா வரணும்னு எங்க பாஸ் உங்க கிட்ட சொல்ல சொன்னாரு.”
“எவன்டா உன் பாஸ்?”
“என் பாஸ் தீஷிதன் சார். இதோ இப்போ கூட உங்களுக்கு வாட்ஸ் அப்ல அவங்களோட இன்விடேஷன் அனுப்ப சொன்னாரு. நான் அனுப்பி இருக்கேன் பாருங்க. கண்டிப்பா நீங்க இங்க வந்தே ஆகணும்.”
“அந்த ஒன்னுத்துக்குமே உதவாதவ கல்யாணத்துக்கு நான் எதுக்கு வரணும்? அதெல்லாம் வர முடியாது.”
“நீங்க வநுதே ஆகணும்ன்றது என் பாஸோட ஆர்டர்.”
“டேய் யார்டா உன் பாஸ்? எனக்கு தெரியாது சும்மா ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்க? நான் வேற கடுப்புல இருக்கேன். நீ வேற மரியாதையா போனை வை..” என்று கத்திவிட்டு ஃபோனை வைத்தார்.
பின் தனது போனை எடுத்து வாட்ஸ்அப்பை பார்க்க, அங்கே சம்யுக்தா தீஷிதனின் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் படமும் அவர்களுடைய திருமண அழைப்பிதழும் வந்திருந்தது. அதைப் பார்த்ததற்கே லீலாவின் வாய் வயிறு எல்லாம் எரிந்தது. ‘இங்க நாங்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம். இவ எப்படி சந்தோஷமா இருக்கான்னு பாரு..’ என்று கோபப்பட்டவர், “என்னங்க…. என்னங்க…” என்றார்.
அவரது சத்தத்தில் அங்கே வந்த மணிகண்டன், “என்னடி ஒரு மனுஷனை நிம்மதியா கொஞ்ச நேரம்கூட இருக்க விட மாட்டியா?”
“இங்க பாருங்க அந்த வீணா போன சம்யுக்தாக்கு ரெண்டாவது கல்யாணமாம். மாப்பிள்ளை பெரிய பிசினஸ்மேன்னு போட்டு இருக்கு.”
“என்ன ரெண்டாவது கல்யாணமா? எங்க பார்ப்போம்.” என்றவர் அந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
“அடியே இவன் ஊட்டியிலேயே பெரிய பிசினஸ்மேன்.. சென்னைல கூட இவனுக்கு நிறைய கம்பெனிஸ் இருக்கு.. ரொம்ப பெரிய இடம்.. ஆனா இவ எப்படி அங்க இவன் கூட?”
“யாருக்குத் தெரியும்? அதிர்ஷ்டம் தான் பாருங்களேன். அவளுக்கு வந்த வாழ்க்கையை.. இவெல்லாம் நல்லாவே இருக்க மாட்டா. நம்ம இப்போ எப்படி கஷ்டப்படுறோம்.. இவ மட்டும் எப்படி சொகுசா வாழ்றா பாருங்க?” என்று கடுகு போல பொரிந்து தள்ளினார் லீலாவதி.
சற்று நேரம் அந்த போட்டோவை பார்த்து மணிகண்டனுக்கு ஒரு ஐடியா வந்தது. “லீலா எனக்கு ஒரு ஐடியா தோணுது.”
“என்னங்க?”
“இங்க பாரு இப்போ நம்ம போறதுக்கு போக்கிடம் ஒன்னும் இல்ல. சொத்து பத்து எல்லாம் அந்த விக்டருக்கு போயிடுச்சு. இப்போ நமக்கு இருக்கிற ஒரே ட்ரம் காட் இந்த சம்யுக்தா தான்.”
“என்னங்க சொல்றீங்க?”
“நம்ம போய் சம்யுக்தாவைப் பார்க்கலாம்.. அவ கல்யாணத்துக்கு போற மாதிரி போய் நைசா அவ கூடவே தங்கிக்கலாம். இப்போ இவளை விட்டா நமக்கு வேற வழி கிடையாது.”
“அதுக்காக நம்ம வீட்டை விட்டு விரட்டின அவளோட கால்ல போய் விழச் சொல்றீங்களா? நாம போனாலும் அவ ஏத்துப்பாளா?”
“ஏய் அவ ரொம்ப நல்லவ. அதனால நம்ம எப்போ போனாலும் ஏத்துக்குவா. இப்பா நமக்கு இருக்கிற ஒரே வழி இவதான். இங்க பணம் இல்லாம இருக்க முடியாது. ஆமா உனக்கு கால் பண்ண நம்பருக்கு கால் பண்ணி நம்ம அங்க வர்றதா சொல்லு.”
“என்னால அவன்கிட்ட பேச முடியாது நீங்களே பேசுங்க.” என்றவர் அவரனுக்கு போன் பண்ணினார். கால் அடித்ததும் எடுத்தவர், “ஹலோ யாருங்க நீங்க? என் பொண்ணு சம்யுக்தா எங்க?”
“இருங்க சார் மணிகண்டன் சார்.. எங்க பாஸ்தான் இந்த நம்பருக்கு இன்விடேஷன் அனுப்ப சொன்னாங்க.. கண்டிப்பா நீங்க இதை கல்யாணத்துக்கு வரணும்னு சொல்ல சொன்னாங்க..”
“சரிங்க நான் வரேன் ஆனா நான் எப்படி வர்றது?”
“அதுக்கு ஒன்னும் பயப்பட வேண்டாம் சார்.. எங்க பாஸ் அதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணுவாரு. நீங்க ரெடியாயிட்டு கால் பண்ணுங்க. நான் உங்களுக்கு கார் அனுப்பறேன்.”
“சரி நான் உங்களுக்கு கால் பண்றேன்.” என்றவர் ஃபோனை வைத்துவிட்டு, “பெரிய புளியங்கொம்பாத்தான் புடிச்சிருக்கா. நம்மள அவனே காரை அனுப்பி நம்மல வீட்டுக்கு கூப்பிடுறான். நாம அங்க போயிடலாம்.. நீ நமக்கு தேவையான ட்ரெஸ்ஸ மட்டும் எடுத்து பேக் பண்ணு.”
“சரிங்க..” என்று லீலாவதி அந்த வேலையை செய்ய உள்ளே சென்றார்.
…………………………………………………
தீஷிதன் வீட்டிற்கு கூட செல்லாமல் நேரே ஹாஸ்பிடலுக்குச் சென்றான். அங்கே அவன் கொண்டு வந்தவற்றை டாக்டரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கி டெஸ்ட் எடுக்க அனுப்பி வைத்தார். “தீஷிதன் நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ரிப்போர்ட் இப்போ வந்திடும்.”
“ஓகே டாக்டர். நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி என் ஃபியான்சி மயக்கம் போட்டுட்டாங்கனு கூட்டிட்டு வந்தப்போ ஒரு டெஸ்ட் எடுக்க சொன்னேனே.. அந்த ரிப்போர்ட்டை வந்திட்டா?”
“யெஸ் தீஷிதன். அந்த ரிப்போர்ட் நேற்றுதான் வந்தது.” என்றவர் நர்ஸை அழைத்து தீஷிதன் கேட்ட ரிப்போர்ட்டை எடுத்து வரச் சொன்னார். நர்ஸ் ரிப்போர்ட்டை எடுத்து வந்து டாக்டரிடம் கொடுத்தார்.
தீஷிதன் தனக்கு முன் இருக்கும் டாக்டரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் கூறும் பதிலால் பல மாற்றங்கள் நடக்க இருக்கிறது. தனது கையில் இருந்த ரிப்போர்ட்டை நன்கு பார்த்து விட்டு, தீஷிதனை நிமிர்ந்து பார்த்தார் டாக்டர். அப்போது தீஷிதனுக்கு போன் வந்தது. எடுத்துப் பார்க்க சம்யுக்தாதான் அழைத்திருந்தாள். சிரித்துக் கொண்டு டாக்டரிடம், “டாக்டர் ப்ளீஸ் ஒன் மினிட்..”
“ இட்ஸ் ஓகே தீஷிதன்.” என்றதும் போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“யுக்தா சொல்லுமா”
“எங்க இருக்கீங்க? இன்னும் வீட்டிற்கு வரல.. மாமாவேற உங்களை தேடிட்டு இருக்காங்க.. எங்க போறீங்கனு சொல்லிட்டாவது போயிருக்கலாமே..”என்று படபட என்று பேசினாள். இதைக் கேட்ட தீஷிதன், “என்ன மேடம், படபடனு பட்டாசு மாதிரி வெடிக்கிறீங்க? அக்மார்க் பொண்டாட்டியாவே மாறிட்டீங்க.. எனக்கு வேலை மிச்சம் போ.. நான் நல்லா இருக்கேன்.. ஊட்டியிலதான் இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களை பார்க்க ஓடி வந்திடுவன்” என்றான்.
“இல்லைங்க மாமா தான் உங்களை காணோம்னு…”
“அப்போ மேடம் என்னை தேடலையா?” என்றதற்கு சம்யுக்தா பதில் பேசவில்லை. அமைதியாக இருந்தாள்.
“ஓகே இதுக்கு நீங்க இப்போ பதில் சொல்ல வேண்டாம்.. நான் சீக்கிரமாவே வந்துடறேன்..” என்றவன் போனை வைத்து விட்டு டாக்டரிடம் சென்றான்.
“சாரி டாக்டர்..”
“இட்ஸ் ஓகே தீஷிதன்.. இந்த ரிப்போர்ட்ல நீங்க சொன்ன மாதிரி எந்த ப்ராப்ளமும் இல்ல. சம்யுக்தா நல்லா இருக்கிறாங்க. அவங்க ஹெல்த் ரொம்ப நல்லா இருக்கு. அப்புறம் அவங்களால குழந்தை பெத்துக்க முடியும். அதுல எந்த பிரச்சனையும் இல்லை..”
“டாக்டர் நிஜமா சம்யுக்தாக்கு குழந்தை பிறக்கிறதுல ப்ராப்ளம் இல்லையே..”
“உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்கிறாங்க தீஷிதன். நூறு வீதம் நான் அடிச்சு சொல்லுவேன் சம்யுக்தாவால் தாயாக முடியும்.”
இதை கேட்டதும் தீஷிதன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டான். “ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.. யுக்தா இதை நினைச்சித்தான் ரொம்ப கவலைப்பட்டா…”
“அவங்க கிட்ட சொல்லுங்க தீஷிதன்.. அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுத்த ரிப்போர்ட்டை எடுத்து வந்தார் நர்ஸ்.
அந்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த டாக்டர், தீஷிதனிடம், “தீஷிதன் இன்னைக்கு உங்களோட சந்தேகம் எல்லாம் தீர்ந்து போகணும்னு இருக்கு போல..”
“என்ன டாக்டர் சொல்றீங்க?”
“ஆமா தீஷிதன் நீங்க கேட்டது இப்போ கன்பார்மாகிருக்கு.. உங்களுக்கு இதுல எந்த டவுட்டுமே வேண்டாம்” என்றார் டாக்டர்.
தீஷிதனுக்கு என்ன சொல்றதுனே தெரியல. எல்லாப் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது போல இருந்தது. அதே சமயத்தில் அவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தான். டாக்டரிடம் நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 31
பரந்தாமன் மிகவும் யோசனையில் இருந்தார். அவரிடம் வந்த தமயந்தி, “அண்ணா என்ன காலையிலிருந்து உங்களோட முகம் நல்லா இல்ல, ஏதாவது பிரச்சனையா அண்ணா?”
“இல்ல தமயந்தி, தீஷிதன் நைட் வேலை இருக்குனு போனான். இன்னும் வந்து சேரல அதுதான் எங்க போனான்? என்ன பண்றானு புரியல. பயமா இருக்கு” என்றார்.
அதற்கு உடனே தமயந்தி, “அண்ணா நீங்க எதுக்கு பயப்படுறீங்க? தீஷி பத்திரமா வந்துடுவான். அது மட்டும் இல்ல அவன் தனியா போகல துணைக்கு புகழையும் கூட்டிட்டு தான் போயிருக்கிறான்.”
“அப்படியா? இதை யாரு உன் கிட்ட சொன்னது?”
“இல்ல அண்ணா, சம்மு அவனுக்கு கால் பண்ணினா, அப்போ தான் அவன் சொல்லி இருக்கிறான். புகழையும் கூட்டிட்டு தான் போயிருக்கேன் சீக்கிரம் வந்துடுவேன்னு. அவன் வந்ததுக்கப்புறம் எங்க போனானு கேட்டுக்கலாம் அண்ணா.”
“சரிமா நீ நலங்கு வைக்கிறதுக்கான வேலையை ஆரம்பி.”
“ஓகே அண்ணா, நீங்க கவலைப்படாதீங்க. அந்த வேலையை நான் இப்பவே ஆரம்பிக்கிறேன்.”
“ஆமா விக்கி எங்க ஆளையே காணோம்.”
“அவனா, அவன் வீட்டுக்குள்ள இருக்கே போரடிக்குதுனு வெளியே போயிட்டு வரேன்னு போனான்.”
“சரிம்மா.” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள் சம்யுக்தா.
“சம்மு நான்தான் உன்கிட்ட நீ எந்த வேலையும் செய்ய வேணான்னு சொன்னேன்ல. இப்ப எதுக்கு ஜூஸ் எடுத்துட்டு வந்த?”
“ஐயோ அம்மா இதெல்லாம் ஒரு வேலையா?”
“சரி நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, கொஞ்ச நேரத்தில நலங்கு வைக்கிறதுக்கு ஆளுங்க எல்லாம் வந்துருவாங்க, அப்புறம் உன்னால ரெஸ்ட் எடுக்க முடியாது.”
“சரிங்க அம்மா.” என்ற சம்யுக்தாவிடம், “வித்யாவையும் மதுவையும் காலையிலிருந்து காணோமே சம்மு.” என்றார் தமயந்தி.
“அதை ஏன் அம்மா கேக்குறீங்க? நைட்டுக்கு மெஹந்தி பங்க்ஷன் இருக்குல, அதனால அதுக்கு டான்ஸ் பாட்டு எல்லாம் செய்யணும்னு பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.”
“நல்ல பொண்ணுங்கமா, அது பரவால்ல சம்மு, அதுங்க ரெண்டும் பேரும் பாட்டு, ஆட்டம்னு இருக்கத்தான் வீடே கலகலனு இருக்கு.”
“சரி சம்மு நீயும் போய் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சு ரெடியாகு.”
“சரிங்க அம்மா.” என்று அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றதும் பரந்தாமனிடம் திரும்பிய தமயந்தி, “ஏன் அண்ணா சம்முக்கு உண்மை தெரிஞ்சா, அவளுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்ல.”
“உண்மைதான் தமயந்தி, ஆனா அவங்க இருக்கும் நிலைமைக்கு, அவங்களை பற்றி சம்முக்கு தெரியாமல் இருக்கிறதே நல்லது. அவங்கள நினைச்சு தினம் தினம் வேதனைப்படுறன். அந்த வேதனை என்கூடையே போயிடட்டும்.”
“அண்ணா அப்படி இல்லை. யாரும் இல்லைனு அவ ரொம்ப கஷ்டப்படுறால்ல, அதுக்காகவாவது சொல்லலாமே.”
“தமயந்தி நீ நல்லா யோசிச்சு தான் பேசுறியா? இருக்கிறாங்க என்பதைவிட இருந்தும் இல்லைன்றது எவ்வளவு வலிக்கும் தெரியுமா? அந்த வலியை நான் தினமும் அனுபவிச்சிட்டு இருக்கிறேன். அதை சம்முக்கு கொடுக்க நான் விரும்பலாமா. இதுக்கெல்லாம் அந்த காலம் தான் பதில் சொல்லணும்.”
“அண்ணா நானும் அதுக்காக தான் காத்திருக்கேன். சரிங்க அண்ணா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ஆளுங்க வந்த உடனே அப்புறம் செய்ய முடியாமல் போய்விடும் நான் போய் வேலையை பார்க்கிறேன்.”
“சரிமா நீ போய் பாரு” என்று சொல்ல சம்யுக்தா அங்கிருந்து சென்றுவிட, பரந்தாமன் தனது அறைக்குள் சென்றார்.
………………………………………………….
ஜெகன் ஆபீஸ் அறைக்குள் வேகமாக வந்தான் விக்டர். அவனை அங்கே பார்த்த ஜெகன், “என்னாச்சு விக்டர் எதுக்கு இவ்வளவு வேகமா வர?”
“டாடி அந்த மணிகண்டனும் அவன் பொண்டாட்டியும் நம்மளை நல்லா ஏமாத்திட்டாங்க டாடி.”
“என்ன சொல்ற விக்டர், அப்பிடி என்னாச்சு?”
“என்ன ஆகணும் டாடி? அந்த வித்யா வந்து வீட்டை விட்டு காணாமல் போயிட்டா. இவங்க அதை நம்ம கிட்ட சொல்லாம டூர் போயிட்டா, அங்க போயிட்டா, இங்க போயிட்டானு நம்ம தலையில மொளகா அரைச்சுட்டாங்க.”
இதைக் கேட்ட ஜெகனுக்கோ கோவம் எல்லை கடந்தது. “இப்போ என்ன பண்றது விக்டர்? அவங்கள சும்மாவே விடக்கூடாது.”
“ஆமா டாடி, நம்மகிட்ட அவங்களே பணம் வாங்கிட்டு, அந்த பணத்தையும் தராமல், அவங்க பொண்ணையும் தராமல் நம்மளை ஏமாத்த பார்க்கிறாங்க. இப்படி ஓடிப்போன பொண்ணு எனக்கு தேவையில்லை டாடி, அவங்ககிட்ட இருக்கிற சொத்தை நம்ம பேர்ல மாத்தி எடுத்துக்குவோம்.”
“நம்ம அந்த வித்யாவை தேடி கண்டுபிடிக்கலாம். நீ அவளை கல்யாணம் பண்ணிக்கலாமே.”
“டாடி இது என்ன சினிமாவா ஓடிப்போன பொண்ணை தேடி கண்டுபிடித்து கூட்டிட்டு வந்து பழிவாங்க? எனக்கு வேற வேலை இல்ல பாருங்க, டாடி நம்ம கம்பெனியோட புதுசா ஒருத்தர் பார்ட்னர்ஷிப் வச்சிருக்கிறாரு மிஸ்டர் ரத்தன்லால். அவரோட பொண்ணு ஹேமா, கொஞ்சம் என்கிட்ட நெருக்கமா பேசுறா. இவங்களை விட அவரு ரொம்ப வசதி. அதனால நான் இந்த ஓடிப்போனவளை தேடாம அப்பிடியே விட்டுட்டு, நான் ஹேமா பக்கம் தூண்டில் போட்டு பார்க்கலாம்னு நினைக்கிறேன்.”
“அதுதானே நான் பார்த்தேன். சோழியன் குடும்பி எப்படி சும்மா ஆடும்?”
“ஆனால் டாடி நம்மளை ஏமாத்தினவர்களை மட்டும் சும்மா விடவே கூடாது. இப்பவே கிளம்புங்க டாடி, அவங்க கிட்ட இருக்குற சொத்தை எல்லாம் நமக்கு மாத்தி எழுதுவோம்”
“இதோ, இப்பவே போலாம்.” என்ற ஜெகன் தான் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்துவிட்டு விக்டருடன் சென்றார்.
மணிகண்டன் தனது கம்பெனியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஜெகனும் விக்டரும் வந்தனர். மணிகண்டனின் பிஏ வந்து, “சார் உங்கள பாக்க ஜெகன் சாரும் விக்டர் சாரும் வந்திருக்காங்க” என்று சொல்லும் போதே அந்த கேபின் கதவை திறந்து கொண்டு வந்தான் விக்டர். அவன் பின்னாலயே ஜெகனும் வந்தார்.
இவர்கள் இப்படி திடீரென்று வருவார்கள் என்று நினைக்காத மணிகண்டன், சேரில் இருந்து எழுந்து நின்றார்.
“வாங்க மாப்ள… வாங்க ஜெகன்..” என்றார்.
“யோவ் நிறுத்தியா, யாரு யாருக்கு மாப்பிள்ளை?” என்றான் விக்டர்.
“மாப்பிள்ளை என்னாச்சு? எதுக்கு இப்படி பேசுறீங்க?”
“என்னாச்சா? உன் ஓடுகாலிப் பொண்ணு ஓடிப் போயிடுச்சாம் நீ இன்னும் தேடிக்கிட்டு இருக்கிறதா எனக்கு தகவல் வந்துச்சு. நீ எங்ககிட்ட டூர் போயிருக்கானு பொய் சொல்லியிருக்க.”
‘ஐயோ கடவுளே இந்த விஷயம் இவனுக்கு எப்பிடி தெரிஞ்சுது?’ என்று நினைத்த மணிகண்டன் வெளியே, “இல்ல மாப்ள, உங்க கிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க.”
“யோவ் நிறுத்து. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுதான் என் பையன் வந்திருக்கிறான். உனக்கு வெட்கமா இல்ல, எங்ககிட்ட கடனை வாங்கிட்டு கடனை கொடு, இல்லன்னா பொண்ண கல்யாணம் பண்ணி வைனு சொன்னப்போ நீயே வந்து என் பொண்ணை கல்யாணம் பண்ணி தர்றேன், சொத்து தான் எனக்கு முக்கியம்னு சொல்லிட்டு இருந்த, இப்ப எங்களுக்கு என்ன பதில்? இங்க பாரு இப்படி ஓடிப்போன பொண்ணு எங்களுக்கு தேவை இல்லை. உன் சொத்தை எல்லாம் மரியாதையா இப்பவே எங்க பேர்ல எழுதி குடு. இல்ல பின் விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.”
“ஜெகன் எதுவா இருந்தாலும் நாம கொஞ்சம் பேசிக்கலாம்.”
“உன்கிட்ட மனுஷன் பேசுவேனா? உங்கிட்ட இனிமே எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. மரியாதையா இந்த டாக்குமெண்ட்ல கையெழுத்து போட்டு இப்பவே இந்த நிமிஷமே, இங்க இருந்து கிளம்பு” என்றான் விக்டர்.
“எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க, அதுக்குள்ள நான் என்னோட பொண்ணை எப்படியாவது கண்டுபிடிச்சிடுவேன்.”
“உனக்கு புரியுதா இல்லையா? எனக்கு தான் உன்னோட பொண்ணு வேணாம்னு சொல்றேன்ல, நீ ரெண்டு நாள் தேடுகிறாயோ இல்ல ரெண்டு மாசம் தேடுறியோ அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. என்கிட்ட நீங்க வாங்கின அந்தப் பணத்துக்கு பதில் சொல்லணும்.”
“என்னால பணத்தை எவ்வளவு சீக்கிரம் தர முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல பணத்தை கொடுத்திடுறேன்.”
“உனக்கு அவ்ளோதான் மரியாதை. ஒழுங்கு மரியாதையா உன் சொத்து எல்லாத்தையும் என் பேர்ல மாத்தி எழுதியிருக்கிற இந்த டாக்குமெண்ட்டில கையெழுத்து போட்டுட்டு அமைதியா போயிடு, உயிராவது மிச்சமாகும்.” என்றான் விக்டர்.
விக்டரிடம் தனது பேச்சு எடுபடாது என்பதை உணர்ந்த மணிகண்டன் வந்து ஜெகனிடம், “நீங்களாவது விக்டர்கிட்ட சொல்லுங்களேன்.”
“இங்க பாரு மணிகண்டா, அவனை விட உன் மேல செம கோபத்துல இருக்கிறது நான். இப்படி எங்களை நம்ப வைத்து ஏமாத்திட்ட இல்ல, உன்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல, நீ மரியாதையா சைன் போடு” என்று இருவரும் அவரை கட்டாயப்படுத்தினர். வேறு வழியில்லாத மணிகண்டன் அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டார்.
“சரி இனிமே இந்த சொத்தை எல்லாம் என் சொத்து, சீக்கிரம் இங்க இருந்து கிளம்பு” என்றான்.
“டாடி இவரை பார்த்தாலும் ரொம்ப பாவமா இருக்குல்ல, இங்க பாரு உன் வீட்டில் இருந்து நீ வெளியே போகணும், அதுக்காக நான் உனக்கு ஒரே ஒரு நாள் டைம் தரேன். அந்த ஒரு நாள்ல நீ வீட்டை காலி பண்ணிட்டு போய்கிட்டே இருக்கணும். இல்ல ஏதாவது பிரச்சனை பண்ணுவேன்னு எங்கேயாவது போனேன்னு வை, அப்புறம் சத்தமே இல்லாம உங்க ரெண்டு பேரோட சங்கையும் அறுத்துப் போட்டுக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்” என்றான் விக்டர்.
“மணிகண்டன், உன்கூட பழகின பாவத்திற்காக சொல்றேன், என் பையன் என் பேச்சை கேட்க மாட்டான். அவனை கோபப்படுத்தாம, நீ ஒரே நாள்ல வீட்டை காலி பண்ணிட்டு போயிடு. உன்னோட உயிரையாவது பத்திரப்படுத்திக.” என்று ஜெகன் விக்டருடன் அங்கிருந்து செல்ல, தான் இத்தனை நாள் உழைத்து சேர்த்த தனது கம்பெனியை கொடுத்துவிட்டு, கையாலாகாதவராக அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்றார் மணிகண்டன்.
………………………………………………….
புகழின் வீட்டில் முன்னால் வந்து இறங்கினார்கள் அனைவரும்.
“அத்தை, மாமா இது தான் புகழோட வீடு, அது மட்டும் இல்ல என் தங்கச்சி மதுரா..”
“என்ன சொல்ற தீஷி உனக்கு தங்கச்சி வேற இருக்கா?”
“ஆமா அத்தை பேரு மதுரா. அவளும் நம்ம புகழும் லவ் பண்ணாங்க, அப்புறம் ரெண்டு பேருக்கும் சரி போனா போகுதுன்னு கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்து இருக்கோம்.”
“ஏன் புகழுக்கு என்ன அவனும் நல்ல பையன் தானே. பார்த்த கொஞ்ச நேரத்திலேயே அவனைப் பத்தி புரிஞ்சுகிட்டேன்” என்று அவனுக்கு சப்போர்ட் பண்ணினார் துர்கா.
“அத்தை உங்களை இத்தனை நேரம் தீஷி போல அத்தைனு கூப்டேன். இனிமே அம்மானு கூப்பிடட்டுமா?”
“அதுக்கென்ன புகழ் நீயும் என் பையன் மாதிரித்தான் நீ தாராளமா என்னை அம்மானு சொல்லலாம்.”
“ரொம்ப சந்தோஷம் அம்மா, எனக்கும் இந்த வீட்ல சப்போர்ட் பண்ண ஒரு ஜீவன் கிடைச்சது. சரி வீட்டுக்கு வெளியே நின்னு பேசிட்டு இருக்காமல் வாங்க உள்ள போகலாம்” என்று அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் புகழ்.
அவர்களுடன் வந்த தீக்ஷிதன், “மாமா நீங்களும் அத்தையும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். நாளைக்கு ஒரு நாள் மட்டும் எனக்காக பொறுத்துக்கோங்க. நாளைக்கு உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு.”
“சர்ப்ரைஸா? அதுறஎன்ன தீஷி?”
“இருக்க மாமா, அதான் சொன்னேன்ல சர்ப்ரைஸ்னு சொல்லிட்டேனே. அதுக்கப்புறம் எப்படி இப்போ சொல்றது?”
“சரி சரி உன் சர்ப்ரைஸ் என்னனு தெரிஞ்சிக்க வெயிட் பண்றேன்.”
“சரி மாமா, அப்புறம் நான் கிளம்புறேன். நான் நைட்டு வந்தேன். அப்பா என்னை இன்னும் காணவே இல்லைனு பயந்துட்டு இருப்பாரு.”
“சரி தீஷி, ஆனா நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணோட போட்டோவை இதுவரைக்கும் எங்ககிட்ட காட்டலையே.”
“அத்தை போட்டோல என்ன நாளைக்கு வந்து நேரிலேயே பாருங்க” என்றான் தீஷிதன்.
“அதுவும் சரிதான்.”என்றார் துர்க்கா.
“புகழ் அத்தையையும் மாமாவையும் பாத்துக்கோ.”
“நீ கவலையேபடாத நான் அவங்களை பத்திரமா பாத்துக்கிறேன்” என்றான்.
“சரி நான் போயிட்டு வரேன்.” என்றவன் அங்கிருந்து நேராக வீட்டிக்கு செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 30
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த புகழ் திடீரென கண் விழித்தான். அப்போதும் கார் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தவன் தீஷிதனிடம் திரும்பி, “தீஷி எங்க போறோம்? இவ்வளவு நேரமாச்சு ஆனா இன்னும் நீ கார் ஓட்டிக்கிட்டு இருக்க. ரொம்ப தூரம் போயிருப்போம்னு நினைக்கிறேன்.”
“ஆமா புகழ் ரொம்ப தூரம் தான். ஆனா இப்போ அந்த இடத்துக்கு பக்கத்துல வந்துட்டோம்.”
“டைம் என்னனு பாத்தியா தீஷி காலைல மணி நாலரை. நாலு மணி நேரம் நீ கார் ஓட்டிக்கிட்டு வந்திருக்க. எங்கேயாவது காரை நிறுத்தியிருக்கலாம்ல”
“இல்ல புகழ் எனக்கு அப்படி நிறுத்தி திரும்ப காரை எடுத்து அங்க போய் சேர லேட் ஆகிடும். அங்க போறதுக்கு கொஞ்சம் கூட லேட் ஆகக்கூடாதுனு தான் நான் ஃபுல்லா டிரைவ் பண்ணிட்டு வரேன்.”
“அப்படி என்ன முக்கியமான இடத்துக்கு போறோம் தீஷி?”
“நான் முன்னாடியே சொன்னேன்ல அங்க போனதுக்கு அப்புறம் உனக்கே தெரியும்.”
“சரி கொஞ்ச நேரம் நீ ரெஸ்ட் எடு. நான் காரை ஓட்டுறேன்.”
“இல்ல.. இல்ல.. இன்னும் கொஞ்ச தூரம் தான். நானே ஓட்டுறேன் நீ வேணும்னா தூங்கு.”
“என்ன தூங்குறதா? நல்லா தூங்கிட்டேன்.”
“ சரி சரி அப்போ வெளிய பாத்துட்டு வா” என்று கார் ஓட்டுவதில் மும்முரமானான்.
………………………………………………….
நேரத்துக்கு எழுந்த சம்யுக்தா, வழமை போல குளித்து விட்டு வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு, சுவாமிக்கு பூஜை செய்தாள். பின் சமையல் அறைக்கு வந்தவள், அப்போதுதான் பரந்தாமன் ஹாலிலேயே அமர்ந்தவாறு தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவரின் அருகில் வந்தாள்.
“மாமா… மாமா…” என்று அவரை எழுப்ப, மெல்ல எழும்பியவர், “சொல்லுமா..” என்றார்.
“மாமா என்னாச்சு? ஏன் ஹாலிலேயே படுத்து தூங்கிட்டீங்க?” என்று கேட்டாள்.
“ஒன்னும் இல்ல சம்யுக்தா. நைட் இங்கே உக்காந்து இருந்தனா அப்படியே தூங்கிட்டேன் போல.”
“சரி மாமா போய் ரூம்ல படுத்து தூங்குங்க” என்றாள்.
பரந்தாமன், “சரிமா தீக்ஷி வந்துட்டானா?”
“அவரு எங்க போனாரு மாமா?”
“இல்ல சம்யுக்தா நைட்டு ஏதோ முக்கியமான வேலை இருந்துதுனு போனான். அதான் வந்துட்டானானு கேட்டேன்.”
“தெரியலை மாமா நான் பாக்கறேன்” என்றாள். அவனது அறைக்கு வந்து பார்க்க அங்கே அறையில் அவனில்லை. அவனது ஜிம், ஆபீஸ் ரூம் எங்கும் தேட அவன் வீட்டிலேயே இல்லை. திரும்பி பரந்தாமனிடம் வந்தவள், “மாமா அவங்க வீட்ல இல்ல.”
“அப்படியா ஆனா அவன் நைட்டு வெளிய போறேன்னு போனான். அப்போ இன்னும் வரல போல.”
“எங்க மாமா போனாங்க?”
“எங்க போறேன்னு சொல்லல, ஒரு முக்கியமான வேலையா போறேன் டாடி வந்திடுறன்னு போனான். சரிமா நீ யோசிக்காத அவன் பத்திரமா வந்திடுவான்.”
“சரி மாமா நீங்க போய் தூங்குங்க.”
“சரிமா” என்றவர் அவர் அறைக்கு சென்று தூங்கினார்.
சம்யுக்தா கிச்சன் வேலைகளையும் முடித்துவிட்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்தாள். யாரும் இன்னும் எழும்பி இருக்கவில்லை. நேரமோ ஆறு மணியைக் காட்டியது. வாசலுக்கும் போவதும் திரும்ப ஹோலுக்கு வருவதுமாக நடந்து கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்தவாறு வந்த தமயந்தி, “என்ன சம்மூ ஹாலுக்கும் வீட்டுக்கும் நடந்துட்டு இருக்க என்னாச்சு?”
“இல்லம்மா மாமா சொன்னாங்க இவங்க நைட்டு வெளியில போறேன்னு சொல்லிட்டு போனதா. ஆனா இன்னும் வரல அதுதான் பாத்துட்டு இருக்கேன்.”
“பார்டா கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு கவனிப்பா கொடுத்து வச்சவன் சம்மு அவன், எதுவும் முக்கியமான வேலையா போயிருப்பான். நீ டென்ஷனாகாத. அவன் வந்திடுவான்.”
“சரி அம்மா.” என்றவள் முகம் இன்னும் தெளிவடையாமல் இருப்பதைப் பார்த்தவர், “அம்மு உன்னோட முகம் இன்னும் தெளிவாக, நீ வேணும்னா அவனுக்கு போன் பண்ணி பாரேன்.”
“இல்லம்மா அவங்க வேலையா இருந்தா தொல்லை பண்றது போல இருக்கும்ல.”
“ஒரு தொல்லையும் இல்ல. நீ போன் பண்ணா கண்டிப்பா, அவன் உடனே எடுப்பான். நீ போன் பண்ணி பேசு.”
“சரிங்க அம்மா, நான் போன் பண்ணி பாத்துட்டு வரேன். காபி எல்லாம் போட்டு வச்சுட்டேன் அம்மா. டிபன் செஞ்சுட்டேன்.”
“ஏம்மா எல்லா வேலையும் நீ செஞ்ச நான் என்ன வேலைதான் சம்மூ பாக்குறது? இங்க பாரு இதுக்கு அப்புறம் நீ எந்த வேலையும் செய்யக்கூடாது. நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு இப்படி வேலை வேலைன்னு இருக்காத”
“சரி அம்மா” என்று சிரித்து விட்டு மேலே சென்றாள்.
‘நல்ல பொண்ணு இவ’ என்றவர் ஒரு பெரும் மூச்சை விட்டுவிட்டு சமையலறைக்குச் சென்றார்.
தனது ரூமுக்கு வந்த சம்யுக்தா போனை எடுத்து தீஷிதனின் நம்பரை அழுத்தினாள். சில நிமிடங்களில் போன் கனெக்ட் ஆகியது.
காரை ஓட்டிக்கொண்டே ருந்த தீஷிதன் போனை எடுத்துப் பார்க்க சம்யுக்தா அழைத்திருப்பது தெரிய அவன் உதடுகளில் புன்முறுவல். அதைப் பார்த்த புகழ், “என்னடா தங்கச்சி கால் பண்ணுதா?”
“ஆமாடா”
“பரவாயில்லையே.. ஒரு மாதிரி தங்கச்சியை உன்னோட வழிக்கு கொண்டு வந்துட்ட போல இருக்கு.”
“டேய் சம்யுக்தா அன்புக்காக ஏங்கிறவடா, அவ மேல அன்பு காட்டினாலே போதும் அன்புக்காக ரொம்ப ஏங்கிப் போய் இருக்கா, ஆனால் அதை வெளிப்படையா காட்டிக்கிட்டதுல ஆனா அதை நான் புரிஞ்சுகிட்டேன். அவளைக் கொடுமைப்படுத்தின வித்யாவோட அம்மா, அப்பாவுக்கு கூட நல்லது செய்ய நினைக்கிற மனசு அவளுக்கு.”
“சரிடா முதல்ல தங்கச்சியோட போனை எடுத்துப் பேசு.”
“சரி” என்றவன் போனை எடுத்து காதில் ப்ளூடூத் ஐ போட்டு போனை கனெக்ட் பண்ணினான்.
“ஹலோ சொல்லுங்க யுக்தா.”
“எங்கங்க இருக்கீங்க?”
“ஒரு வேலையா வந்து இருக்கேன். ஏன் யுக்தா பேபி என்னை தேடினியா?”
“இல்ல மாமா சொன்னாங்க நீங்க நைட்டே வெளில போனதா. அதான் இன்னும் வீட்டுக்கு வரல எப்ப வருவீங்கன்னு கேட்கலாம்னு தான்…” என்று இழுத்தாள்.
“பாருடா என்னோட யுக்தாவை. இப்படி பேசறது யுத்தானா? ரொம்ப முக்கியமான ஒரு வேலையாக வந்திருக்கேன், நான் தனியா வரல புகழும் என் கூட தான் இருக்கிறான். நான் வேலைய முடிச்சுட்டு சீக்கிரமாவே வீட்டுக்கு வந்துடுறேன். சரியா டென்ஷனாகாத.”
“சரிங்க இப்ப நான் போனை வச்சிடவா?”
“சரி ஓகே நீ வீட்டிலே இருக்கிறவங்க கிட்ட சொல்லிடு நான் வர லேட் ஆகும்னு.”
“சரிங்க பார்த்து பத்திரமா வாங்க.” என்றவள் ஃபோனை வைத்தாள்.
………………………………………………….
அதிகாலை வேளையில் அந்த ஆச்சிரமத்தில் லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. குருஜி உட்பட அங்கிருந்த அனைவரும் அதில் கலந்து கொண்டனர். கிருபாகரனும் துர்க்காவும் கூட அந்த பூஜையில் கலந்து கொண்டனர். தங்கள் கண்கள் குளிர சிவனின் தரிசனத்தை பார்த்து மகிழ்ந்தனர் அனைவரும். பூஜையை நல்லபடியாக நடத்தி முடித்த குருஜி, “இந்த ஆசிரமத்துக்கு வந்து எத்தனையோ பேரு தாங்களோட நோய்களை தீர்த்துட்டு போயிருக்காங்க. அதுவும் கொஞ்ச நாட்களிலேயே அவங்களுக்கு சரியகிடும். ஆனா இவங்க மட்டும் தான் இத்தனை வருஷமா நம்ம ஆச்சிரமத்துல இருந்திருக்காங்க. அந்த எமன்கிட்ட இருந்து தன்னோட புருஷன் உயிரை மீட்டவள் சாவித்திரி. அந்த மாதிரி கிருபாகரனும் தன்னோட மனைவியோட உயிரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்.
“கிருபாகரா, துர்க்கா உங்களோட வாழ்க்கையில இனிமே எந்த கவலையும் துன்பமும் இருக்காது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா வாழ போறீங்க. நீங்க இங்கேயே இருக்கணும்னாலும் இருக்கலாம். இல்ல உங்க உறவினர்களிடம் போகணும்னாலும் நீங்க தாராளமா போகலாம். ஆனால் இந்த இடம் எப்பவுமே உங்களுக்காக காத்திருக்கும்” என்றார் குருஜி. கிருபாகரனும் துர்க்காவும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.
அப்போது அங்கே ஒரு பிஎம்டபிள்யூ கார் வந்து நின்றது. ‘இந்த நேரத்துல கார்ல யாரு வர்றாங்க’ என்று எல்லோரும் அந்த காரை நோக்கி தமது பார்வையை திருப்பினார்கள். அங்கே தீக்ஷிதனும் புகழும் காரை விட்டு இறங்கினார்கள். ஆச்சிரமத்திற்கு புதியவர்களான அவர்களைப் பார்த்த உதவியாளர் ஒருவர் அவர்கள் அருகே சென்று, “நீங்க யாருங்க? எங்கிருந்து வர்றீங்க?”
“ஐயா நாங்க ஊட்டியில் இருந்து வர்றோம். இங்க குருஜியை பாக்கணும்.”
“அப்படியா சரி அதோ அந்த அருவியில் போய் முகம் கைகள் கழுவிட்டு வாங்க” என்றார்.
“சரி” என்று இருவரும் அந்த அருவிக்குச் சென்று முகத்தைக் கைகால்களை கழுவி விட்டு வந்தனர். புகழ் தீஷிதனிடம், “இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த? நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இங்க எதுக்குடா வந்த?”
“சொல்றன் வா” என்றவன் புகழை அழைத்துக் கொண்டு வந்து குருஜியின் முன்னால் நின்றான். இவர்களைப் பார்த்த குருஜி, “யாருப்பா நீங்க எங்க இருந்து வர்றீங்க?”
“ஐயா குருஜி நாங்க ஊட்டியில் இருந்து வரோம். இங்க ஒரு முக்கியமான வேலையா வந்திருக்கிறோம்” என்றான்.
“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க குருஜி” என்ற தீஷிதன் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். புகழும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.
“சொல்லுங்கப்பா என்ன முக்கியமான வேலை?”
“குருஜி இங்கே இருக்காங்களே துர்க்கா கிருபாகரன் இவங்களை பார்க்க வந்திருக்கிறோம். இவங்க என்னோட அத்தையும் மாமாவும். நான் துர்க்கா அத்தையோட அண்ணன் பரந்தாமனோட மகன்” என்றார்.
“என்ன என் அண்ணன் மகனா? தீஷி நீயா கண்ணா?” என்றார் துர்க்கா.
“ஆமா அத்தை நானே தான். அத்தை மாமா நல்லா இருக்கீங்களா?”
“தீஷி உனக்கு எப்படி நாங்க இங்க இருக்கிறது தெரியும்?”
“மாமா அப்பா உங்களைப் பற்றி என்கிட்ட சொன்னாங்க. ஆனா நீங்க எங்க இருக்கிறீங்கனு சொல்லவேயில்லை. நீங்கதான் யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேணாம்னு சத்தியம் வாங்கினதா அப்பா சொன்னாங்க. அதனால நான்தான் உங்களை தேடி கண்டுபிடிச்சேன் மாமா. இவன் என் ப்ரெண்ட் புகழ்.”
“தீஷி என்ன சொல்ற நீ? உனக்கு ஒரே ஒரு அத்தை தமயந்தி அத்தை தானே.”
“ஆமா புகழ். எங்க அப்பாவோட முதல் தங்கச்சி இவங்க துர்க்கா அத்தை. இவங்களோட தங்கச்சி தான் தமயந்தி அத்தை” என்றான். புகழுக்கு நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் ஆனால் இப்போது தீஷிதனிடம் எதுவும் கேட்க முடியாது என்று அமைதியாக இருந்தான்.
குருஜிதான், “பார்த்தாயா துர்க்கா, உன்னோட உறவுகள் உன்னை தேடி வந்துட்டு. ரெண்டு பேரும் சந்தோஷமா அவங்க கூட போயிட்டு வாங்க” என்றார்.
“ஆமாம் குருஜி, நாங்க அத்தையும் மாமாவையும் இங்கிருந்து கூட்டிட்டு போகலாம்னு தான் வந்து இருக்கோம்.”
“அப்படியாப்பா நல்லபடியா கூட்டிட்டு போங்க. அவங்க இனிமேல் சந்தோஷமா இருக்கட்டும்” என்றார்.
பின்னர் அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு துர்க்காவும் பிரபாகரனும் தீஷிதனுடன் வந்தார்கள்.
காரின் அருகே வந்ததும், “அத்தை நான் உங்க அண்ணனோட பையன்னு சொன்னதும் எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க? ஒருவேளை நான் பொய் சொல்லி உங்களை கூட்டிட்டு போகலாம் இல்ல”
“தீஷி இதோ உன் வலது கையில் இருக்கிற மச்சத்தை வச்சுத்தான் என் அண்ணன் பையன் தான் நீனு கண்டுபிடிச்சேன்.”
“அத்தை பயங்கர ஆள்தான் நீங்க என்றான் புகழ்.
“புகழ் நீயும் தீஷி கூடவா இருக்குற? ஆமா அத்தை. காலேஜ்ல இருந்து ரெண்டு பேருமே திக் ப்ரண்ட்ஸ்.”
“சூப்பர் பா, சரி தீஷி அண்ணா, தமயந்தி எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க அத்தை. மாமா அத்தைக்கு தான் இப்படி ஆயிடுச்சு நீங்களாவது எங்களோட காண்டாக்ட்ல இருந்து இருக்கலாம் இல்ல. கஷ்டத்துல உங்களுக்கு ஆறுதலா இருந்திருப்போமே”
“இல்லப்பா எனக்கு யார் கூடவும் பேசுற மனநிலை இல்ல. அப்படியே துர்க்காவை பார்த்துட்டு அவ கூடவே உட்கார்ந்துட்டு இருப்பேன்.”
“உண்மையா மாமா உங்கள மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க ரியலி கிரேட் என்ற தீஷிதன் அவரை அணைத்துக் கொண்டான்.
“சரி வாங்க, உங்கள பாக்க வீட்ல எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க.”
“ஆமா தீஷி வீட்டுல சொல்லிட்டியா அத்தை வாங்கன்னு?”
“இல்ல புகழ் நீ யாருக்கும் இந்த விஷயத்தை சொல்லாத.”
“ஏன்டா மாமா அத்தை எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க இல்ல.”
“சந்தோஷப்படுவாங்க தான் புகழ் ஆனா இதுல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. அத்தை மாமா நீங்க ரெண்டு பேரும் தப்பா நினைக்க கூடாது. நாளைக்கு எனக்கு கல்யாணம் நீங்க இன்னைக்கு புகழ் கூடத்தான் இருக்கணும். நாளைக்கு கல்யாணம் மேடைக்கு உங்களை புகழ் அழைச்சிட்டு வருவான் சரியா? அதுவரைக்கும் அப்பாவுக்கும் தமயந்தி அத்தைக்கும் நீங்க குணமாயின விஷயம் தெரிய வேணாம். அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டும் ப்ளீஸ் அத்தை.”
“அப்படியா தீஷி, சரி ஏதோ நீ ஆசைப்படுற அது அப்படியே நடக்கட்டும்” என்றார்.
பின்னர் நால்வரும் காரின் ஏற வரும்போது புகழ், “தீஷி வரும்போது ஃபுல்லா நீதான் காரை ஓட்டிட்டு வந்த. இப்போ நான் ஓட்டுறேன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.”
“சரி நீயே ஓட்டு” என்றவன் டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்தான். பின்னால் துர்க்காவும் கிருபாகரனும் ஏறிக்கொண்டனர். புகழ் காரை எடுத்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
வாழ்வு : 29
“குருஜி… குருஜி… என்னோட துர்கா கண்ணு முழிச்சிட்டா, வந்து பாருங்க குருஜி..” என்று பதட்டத்துடன் ஓடிவந்தவர் சிவலிங்கத்தின் முன்னால் இருந்த குருஜியின் கால்களைப் பிடித்தார். கண்களை விழித்துப் பார்த்த குருஜி, அவன் கூறியது கேட்டு, “கிருபாகரா உண்மையிலேயே துர்கா கண்விழித்து விட்டாளா?” என்று கேட்டார்.
“ஆமாம் குருஜி. நான் சொல்றது நிஜம்தான். நீங்களே வந்து பாருங்களேன். என்னோட துர்கா கண்ணுமுழிச்சிட்டா. வாங்க குருஜி வந்து பாருங்க” என்று அவரை அழைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக துர்காவிடம் ஓடி வந்தார்.
குருஜி வந்து துர்க்காவின் அருகில் அமர்ந்தார். அவரது உதவியாட்கள் அங்கே வந்து நின்றிருந்தார்கள். துர்க்காவிற்கு ஒரு புறம் கிருபாகரன் வந்து அமர்ந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டு, “துர்கா… துர்கா.. என்னைத் தெரியுதா துர்க்கா” என்று தவிப்புடன் கேட்டார் கிருபாகரன். குருஜி அவரைப் பார்த்து, “கிருபாகரா கொஞ்சம் அமைதியா இருப்பா. நான் துர்காவை கொஞ்சம் பாக்கணும்” என்றார். அவரும், “சரி குருஜி” என்று அமைதியானார். அவரின் கைகளோ துர்காவின் கைகளை பற்றியபடி இருந்தது. குருஜி மெதுவாக துர்காவிடம் பேச ஆரம்பித்தார்.
அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் துர்கா நன்றாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். துர்காவின் அருகில் இருந்த கிருபாகரனை காட்டிய குருஜி, “அம்மாடி துர்கா இவரை உனக்கு தெரியுமா?” என்று கேட்டார். கிருபாகரனை சற்று நேரம் உற்றுப் பார்த்த துர்க்கா, “தெரியும் குருஜி. இவரு என்னோட வீட்டுக்காரர்.” என்றாள்.
கிருபாகரனிடம் திரும்பிய, “என்னங்க நான் எங்க இருக்கேன்? இது என்ன இடம்?” என்று கேட்டாள். அதற்கு அவளை பார்த்த கிருபாகரன், “நாம ஒரு ஆச்சிரமத்தில் இருக்கிறம். இங்கே இருக்கிறவங்க தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கிறாங்க.”
“இங்கேயா ஆமா எனக்கு என்ன பிரச்சனை? நம்ம குழந்தை…. நம்ம குழந்தை…. ஏங்க நம்ம குழந்தை..” என்றவர் அழ ஆரம்பித்தார். அவளை அணைத்துக் கொண்டார் கிருபாகரன்.
குருஜி துர்காவிடம், “நீ இப்பதான் மா கண்ணு முழிச்சிருக்க. உடனே நீ இப்படி பதட்டப்படக் கூடாது. அப்புறம் திரும்பவும் நீ உன்னோட சுயநினைவை இழந்திருவ, முன்னாடியும் இப்படித்தான், உனக்கு நினைவு திரும்பினப்போ அழுது புலம்பி பழையபடி நினைவிழந்திட்ட, இப்போ மறுபடியும் நீ சுயநினைவு வந்திருக்க, இதோ இங்க உன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறாரே என் புருஷன், அவரோட அன்பு தான் உன்னை திரும்ப இந்த உலகத்துக்கு கொண்டு வந்து இருக்கு. நீ பிழைக்கிறது கஷ்டம்னு இங்க எல்லாருமே சொன்ன போதுகூட, அவர்தான் இல்ல என் பொண்டாட்டி எனக்காக கண்விழிப்பாள் என்று உனக்காகவே காத்திருந்தார். அந்த மனுஷனுக்காக நீ பழையது எதையும் யோசிக்கக் கூடாது. உனக்காகவே உன் கூடவே இருக்கிற உன்னோட புருஷனை பற்றி மட்டும் யோசிம்மா. கிருபா துர்காவை பாத்துக்கோ, இன்னொரு தடவை இப்படி சுயநினைவு இழந்துட்டானா அப்புறம் அது யார் கையிலயுமே இல்லை.. அதனால இவ பதட்டப்படாமல் பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு.. மற்றபடி அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல அவ நல்லாவே குணமாயிட்டா..” என்றார் குருஜி. இருவரையும் காலையில் வந்து பார்ப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து தனது உதவியாளர்களுடன் சென்றுவிட்டார். துர்கா கண்விழித்த செய்தி அந்த ஆச்சரியமும் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது அந்த ஆசிரமத்தில் வேலை செய்யும் ஒருவர் தனது போனை எடுத்துக் கொண்டு யாரும் பார்க்காமல் சென்று கால் பண்ணினார்.
லேப்டாப்பில் இருந்து தனது வேலையைச் செய்து கொண்டிருந்த தீஷிதனுக்கு போன் வந்தது. அதை எடுத்து பார்த்தவன் புருவங்கள் சுருங்கின. ‘என்ன இந்த நேரத்துல போன் பண்றாங்க’ என்று நினைத்தவன் போனை எடுத்து காதில் வைத்தான்.
“ஹலோ…”
“ஹலோ சார் நான் ராமசாமி பேசுறேன்.”
“சொல்லுங்க மிஸ்டர் ராமசாமி என்ன விஷயம்?”
“சார் ரொம்ப முக்கியமான விஷயம்.அதுதான் இந்த நேரத்துல கூப்டேன்”
“அப்படியா என்ன விஷயம்”
“சார் நீங்க என்னை பாத்துக்க சொன்ன அந்த அம்மா கண்ணு முழிச்சிட்டாங்க சார்.”
“வாட் கண்முழிச்சிட்டாங்களா? இப்போ அவங்க எப்படி இருக்கிறாங்க?”
“ரொம்ப நல்லா இருக்காங்க சார். அவங்க வீட்டுக்காரரை கூட சரியா அடையாளம் சொல்லிட்டாங்க. குருஜி அவங்களை பாத்துட்டு, அவங்க பூரணமா குணமாயிட்டாங்கனு சொல்லிட்டாங்க சார்.”
“அப்படியா ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் உடனே அங்க வரேன்.”
“சரிங்க சார்” என்றவர் போனை வைத்தார்.
தீஷிதனும் போனை வைத்துவிட்டு தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வர, அங்கே ஹாலில் பரந்தாமன் உட்கார்ந்திருந்தார்.
“டாடி நீங்க இன்னும் தூங்கலையா?”
“இல்ல தீஷி தூக்கம் வரல. உன் கல்யாண நல்லபடியா நடக்கணும்னு அதைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்.” என்றார்.
“டாடி எல்லாம் நீங்க ஆசைப்பட்ட மாதிரி நல்லபடியா கல்யாணம் நடக்கும்.”
“அப்படி நடந்தால் ரொம்ப சந்தோஷம் தீஷி. ஆமாம் இந்த நேரத்துல நீ எங்க கிளம்பிட்ட?”
“அதுவா டாடி, ஒரு முக்கியமான வேலை நான் போயிட்டு வந்துடறேன்.”
“தீஷி விளையாடுறயா? நாளை கழிச்சு கல்யாணத்தை வச்சுட்டு நீ இந்த நேரத்துல வெளில போறது சரியில்ல.”
“இல்ல டாடி நான் கண்டிப்பா போய்த்தான் ஆகணும். நான் சீக்கிரமா வந்துடுவேன்.”
“அப்படி எங்க தான் போற தீஷி?”
“டாடி அதை இப்போ என்னால சொல்ல முடியாது நான் போயிட்டு வந்து சொல்றேன். ஆனா நான் போற இடம் உங்களுக்கு தெரிஞ்ச இடம் தான்.”
“என்ன எனக்கு தெரிஞ்ச இடமா? அப்படி எங்க போக போற?”
“அதை வந்து சொல்றேன் டாடி. நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்குங்க.” என்றவன் அங்கிருந்து சென்றான்.
கார் அந்த இரவு நேரத்தில் சீறிப்பாய்ந்தது. காரை ஓட்டிக்கொண்டே புகழுக்கு போன் அடித்தான். புகழும் நல்ல தூக்கத்தில் இருந்தான்.
“ஹலோ புகழ்..”
“சொல்லுடா, என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க. எனி ப்ராப்ளம்?”
“ப்ராப்ளம் இல்ல புகழ், நீ சீக்கிரம் கிளம்பி இரு, நாம் ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்.”
“இந்த நேரத்துல ஏன்டா இப்படி படுத்துற?”
“ரொம்ப ரொம்ப முக்கியம் புகழ். நீ சீக்கிரம் வா நான் உன் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்.”
“டேய் அவசரத்துக்கு பொறந்தவனே இருடா நான் ஃப்ரெஷ் ஆயிட்டு வந்துடறேன்.”
“நாம ஒன்னும் உனக்கு பொண்ணு பாக்க போகல ஃப்ரெஷாகிட்டு போக, அப்படியே எழுந்திரிச்சு வந்து வெளியே நில்லு” என்றவன் போனை கட் பண்ணினான்.
தலையில் அடித்துக் கொண்ட புகழ், “உலகத்துல ஆயிரம் ப்ரெண்ட்ஸ் வைச்சிருக்கிற எல்லோரும் நிம்மதியா இருக்காங்க. இந்த ஒரே ஒரு ப்ரெண்ட வச்சுட்டு நான் படுற பாடு இருக்கே, அப்பா முருகா நீ தான் என்னை காப்பாத்தணும். இந்த நேரத்துல எங்க கூப்பிடறான்னு தெரியலையே” என்றவன் முகத்தை கழுவி விட்டு வெளியில் வர அங்கே தீஷிதனின் கார் வந்து நின்றது. காரின் கதவைத் திறந்து முன்னால் ஏறிய புகழ், என்னவென்று கேட்கும் முன்னரே கார் வேகமாக சென்றது.
“டேய் மெதுவா போடா.. ஏன்டா இப்படி பாடா படுத்துற? அப்படி என்ன தலை போற காரியம் இவ்வளவு அவசரமா போறதுக்கு?”
“தலை போற காரியம் தான் மச்சான். அங்க போனா உனக்கு விஷயம் விளங்கும் அதுவரைக்கும் அமைதியா இரு. அப்படியா சரி அப்ப நான் கார்ல தூங்குறேன் நீ போக வேண்டிய இடம் வந்ததும் என்னை எழுப்பி விடு.”
“மவனே என்ன ஆனாலும் நீ இன்னைக்கு தூங்கவே கூடாது.”
“தீஷி இது உனக்கு நியாயமா தெரியுதா? நைட் வரைக்கும் கான்பிரன்ஸ் மீட்டிங்ல என்ன கலந்துக்க வச்சுட்டு, அப்போதான் போய் தூங்கினேன். அந்த நேரம் பார்த்து என்ன கூட்டிட்டு வர்ற ஏண்டா டேய் என்னால முடியலடா” என்றான் புகழ்.
“சரி… சரி கொஞ்ச நேரம் தூங்கு நான் அப்புறம் எழுப்பி விடுறேன்.”
“நன்றி நண்பா… நன்றி நண்பா..” என்றவன் அப்படியே சீட்டில் சாய்ந்து தூங்கினான்.
…………………………………………………
கிருபாகரனின் அணைப்பில் இருந்தாள் துர்க்கா. எத்தனை வருடங்கள் ஆயிற்று இப்படி தனது கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டு இருந்து, கிருபாகரனின் இடது கை துர்க்காவின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தது.
“என்னங்க..”
“என்னம்மா..”
“நீங்க ஏங்க என் கூடவே இருந்தீங்க? என்னால உங்க வாழ்க்கையும் பாளாப் போச்சு. என்னை விட்டுட்டு நீங்க வேற கல்யாணம் பண்ணி குழந்தை குட்டினு சந்தோஷமா இருந்திருக்கலாம்ல.”
“ஏய் என்ன துர்க்கா பேசுற? இன்பத்திலேயேயும் துன்பத்திலேயும் உன்கூட இருப்பேன்னு தான் உன் உன் கழுத்துல தாலி கட்டி, உன் கையை பிடிச்சேன். இப்போ இப்படி ஆயிட்டனு நான் உன்னை விட்டுட்டு போயிருவேன்னு நினைச்சியா? ஏன் துர்க்கா எனக்கு இப்படி நடந்திருந்தா நீ என்னை விட்டுட்டு போயிருப்பியா?”
“என்னங்க சொல்றீங்க? உங்களை விட்டுட்டு எப்படிங்க என்னால இருக்க முடியும்?”
“அப்படித்தான் நானும், என்னால் மட்டும் எப்படி நீ இல்லாம இருக்க முடியும்” என்றவரை இறுக அணைத்துக் கொண்டார் துர்க்கா. “என்னங்க எனக்கு எங்க அண்ணா, தங்கச்சி எல்லாரையும் பாக்கணும் போல இருக்கு. ஆமா எங்க அண்ணன் என்னை தேடி வரலையா?”
“வந்தாரு மா ஒரு நாள், ஆனா எனக்கு அவங்க கூட போக விருப்பம் இல்ல. அதான் உனக்கு குணமாகட்டும்னு உன் கூடவே இருந்திடுறன்னு சொல்லிட்டு நான் இங்கே இருந்துட்டேன்.”
“எனக்கு அவங்களை பாக்கணும் போல இருக்குங்க.”
“கண்டிப்பா பாக்கலாம். உனக்கு குணமாயிட்டுன்னு தெரிஞ்சாலே மச்சான் ஓடி வந்துருவாரு.”
“அண்ணனோட பசங்க, தங்கச்சியோட பசங்க எல்லோரும் வளர்ந்திருப்பாங்க இல்ல.”
“ஆமா துர்க்கா ரொம்பவே வளர்ந்து இருப்பாங்க”
“ஏங்க நம்ம குழந்தைய மட்டும் ஏன்ங்க அந்த கடவுள் பறிச்சிக்கிட்டாரு?”
“துர்கா எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான். நீ அந்த குழந்தையை பத்தி பேசி உனக்கு ஏதாச்சும் இன்னொரு முறை ஆயிடுச்சின்னா, அப்புறம் நீ கண்முழிச்சாலும் என்னை பார்க்க முடியாத இடத்துக்கு நான் போயிடுவேன். எனக்காக அதை நீ மறந்து தான் ஆகணும் துர்க்கா.”
“ஐயோ என்னங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. எனக்கு நீங்க மட்டும் போதுங்க.” என்று இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இருவரும் என்ன பேசினார்கள் என்றால் அவர்களுக்கு தெரியவில்லை. இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து பேசிக்கொண்டே இருந்தார்கள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
Newer Posts