“குருஜி… குருஜி… என்னோட துர்கா கண்ணு முழிச்சிட்டா, வந்து பாருங்க குருஜி..” என்று பதட்டத்துடன் ஓடிவந்தவர் சிவலிங்கத்தின் முன்னால் இருந்த குருஜியின் கால்களைப் பிடித்தார். கண்களை விழித்துப் பார்த்த குருஜி, அவன் கூறியது கேட்டு, “கிருபாகரா உண்மையிலேயே துர்கா கண்விழித்து விட்டாளா?” என்று கேட்டார்.
“ஆமாம் குருஜி. நான் சொல்றது நிஜம்தான். நீங்களே வந்து பாருங்களேன். என்னோட துர்கா கண்ணுமுழிச்சிட்டா. வாங்க குருஜி வந்து பாருங்க” என்று அவரை அழைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக துர்காவிடம் ஓடி வந்தார்.
குருஜி வந்து துர்க்காவின் அருகில் அமர்ந்தார். அவரது உதவியாட்கள் அங்கே வந்து நின்றிருந்தார்கள். துர்க்காவிற்கு ஒரு புறம் கிருபாகரன் வந்து அமர்ந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டு, “துர்கா… துர்கா.. என்னைத் தெரியுதா துர்க்கா” என்று தவிப்புடன் கேட்டார் கிருபாகரன். குருஜி அவரைப் பார்த்து, “கிருபாகரா கொஞ்சம் அமைதியா இருப்பா. நான் துர்காவை கொஞ்சம் பாக்கணும்” என்றார். அவரும், “சரி குருஜி” என்று அமைதியானார். அவரின் கைகளோ துர்காவின் கைகளை பற்றியபடி இருந்தது. குருஜி மெதுவாக துர்காவிடம் பேச ஆரம்பித்தார்.
அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் துர்கா நன்றாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். துர்காவின் அருகில் இருந்த கிருபாகரனை காட்டிய குருஜி, “அம்மாடி துர்கா இவரை உனக்கு தெரியுமா?” என்று கேட்டார். கிருபாகரனை சற்று நேரம் உற்றுப் பார்த்த துர்க்கா, “தெரியும் குருஜி. இவரு என்னோட வீட்டுக்காரர்.” என்றாள்.
கிருபாகரனிடம் திரும்பிய, “என்னங்க நான் எங்க இருக்கேன்? இது என்ன இடம்?” என்று கேட்டாள். அதற்கு அவளை பார்த்த கிருபாகரன், “நாம ஒரு ஆச்சிரமத்தில் இருக்கிறம். இங்கே இருக்கிறவங்க தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கிறாங்க.”
“இங்கேயா ஆமா எனக்கு என்ன பிரச்சனை? நம்ம குழந்தை…. நம்ம குழந்தை…. ஏங்க நம்ம குழந்தை..” என்றவர் அழ ஆரம்பித்தார். அவளை அணைத்துக் கொண்டார் கிருபாகரன்.
குருஜி துர்காவிடம், “நீ இப்பதான் மா கண்ணு முழிச்சிருக்க. உடனே நீ இப்படி பதட்டப்படக் கூடாது. அப்புறம் திரும்பவும் நீ உன்னோட சுயநினைவை இழந்திருவ, முன்னாடியும் இப்படித்தான், உனக்கு நினைவு திரும்பினப்போ அழுது புலம்பி பழையபடி நினைவிழந்திட்ட, இப்போ மறுபடியும் நீ சுயநினைவு வந்திருக்க, இதோ இங்க உன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறாரே என் புருஷன், அவரோட அன்பு தான் உன்னை திரும்ப இந்த உலகத்துக்கு கொண்டு வந்து இருக்கு. நீ பிழைக்கிறது கஷ்டம்னு இங்க எல்லாருமே சொன்ன போதுகூட, அவர்தான் இல்ல என் பொண்டாட்டி எனக்காக கண்விழிப்பாள் என்று உனக்காகவே காத்திருந்தார். அந்த மனுஷனுக்காக நீ பழையது எதையும் யோசிக்கக் கூடாது. உனக்காகவே உன் கூடவே இருக்கிற உன்னோட புருஷனை பற்றி மட்டும் யோசிம்மா. கிருபா துர்காவை பாத்துக்கோ, இன்னொரு தடவை இப்படி சுயநினைவு இழந்துட்டானா அப்புறம் அது யார் கையிலயுமே இல்லை.. அதனால இவ பதட்டப்படாமல் பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு.. மற்றபடி அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல அவ நல்லாவே குணமாயிட்டா..” என்றார் குருஜி. இருவரையும் காலையில் வந்து பார்ப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து தனது உதவியாளர்களுடன் சென்றுவிட்டார். துர்கா கண்விழித்த செய்தி அந்த ஆச்சரியமும் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது அந்த ஆசிரமத்தில் வேலை செய்யும் ஒருவர் தனது போனை எடுத்துக் கொண்டு யாரும் பார்க்காமல் சென்று கால் பண்ணினார்.
லேப்டாப்பில் இருந்து தனது வேலையைச் செய்து கொண்டிருந்த தீஷிதனுக்கு போன் வந்தது. அதை எடுத்து பார்த்தவன் புருவங்கள் சுருங்கின. ‘என்ன இந்த நேரத்துல போன் பண்றாங்க’ என்று நினைத்தவன் போனை எடுத்து காதில் வைத்தான்.
“ஹலோ…”
“ஹலோ சார் நான் ராமசாமி பேசுறேன்.”
“சொல்லுங்க மிஸ்டர் ராமசாமி என்ன விஷயம்?”
“சார் ரொம்ப முக்கியமான விஷயம்.அதுதான் இந்த நேரத்துல கூப்டேன்”
“அப்படியா என்ன விஷயம்”
“சார் நீங்க என்னை பாத்துக்க சொன்ன அந்த அம்மா கண்ணு முழிச்சிட்டாங்க சார்.”
“வாட் கண்முழிச்சிட்டாங்களா? இப்போ அவங்க எப்படி இருக்கிறாங்க?”
“ரொம்ப நல்லா இருக்காங்க சார். அவங்க வீட்டுக்காரரை கூட சரியா அடையாளம் சொல்லிட்டாங்க. குருஜி அவங்களை பாத்துட்டு, அவங்க பூரணமா குணமாயிட்டாங்கனு சொல்லிட்டாங்க சார்.”
“அப்படியா ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் உடனே அங்க வரேன்.”
“சரிங்க சார்” என்றவர் போனை வைத்தார்.
தீஷிதனும் போனை வைத்துவிட்டு தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வர, அங்கே ஹாலில் பரந்தாமன் உட்கார்ந்திருந்தார்.
“டாடி நீங்க இன்னும் தூங்கலையா?”
“இல்ல தீஷி தூக்கம் வரல. உன் கல்யாண நல்லபடியா நடக்கணும்னு அதைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்.” என்றார்.
“டாடி எல்லாம் நீங்க ஆசைப்பட்ட மாதிரி நல்லபடியா கல்யாணம் நடக்கும்.”
“அப்படி நடந்தால் ரொம்ப சந்தோஷம் தீஷி. ஆமாம் இந்த நேரத்துல நீ எங்க கிளம்பிட்ட?”
“அதுவா டாடி, ஒரு முக்கியமான வேலை நான் போயிட்டு வந்துடறேன்.”
“தீஷி விளையாடுறயா? நாளை கழிச்சு கல்யாணத்தை வச்சுட்டு நீ இந்த நேரத்துல வெளில போறது சரியில்ல.”
“இல்ல டாடி நான் கண்டிப்பா போய்த்தான் ஆகணும். நான் சீக்கிரமா வந்துடுவேன்.”
“அப்படி எங்க தான் போற தீஷி?”
“டாடி அதை இப்போ என்னால சொல்ல முடியாது நான் போயிட்டு வந்து சொல்றேன். ஆனா நான் போற இடம் உங்களுக்கு தெரிஞ்ச இடம் தான்.”
“என்ன எனக்கு தெரிஞ்ச இடமா? அப்படி எங்க போக போற?”
“அதை வந்து சொல்றேன் டாடி. நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்குங்க.” என்றவன் அங்கிருந்து சென்றான்.
கார் அந்த இரவு நேரத்தில் சீறிப்பாய்ந்தது. காரை ஓட்டிக்கொண்டே புகழுக்கு போன் அடித்தான். புகழும் நல்ல தூக்கத்தில் இருந்தான்.
“ஹலோ புகழ்..”
“சொல்லுடா, என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க. எனி ப்ராப்ளம்?”
“ப்ராப்ளம் இல்ல புகழ், நீ சீக்கிரம் கிளம்பி இரு, நாம் ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்.”
“இந்த நேரத்துல ஏன்டா இப்படி படுத்துற?”
“ரொம்ப ரொம்ப முக்கியம் புகழ். நீ சீக்கிரம் வா நான் உன் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்.”
“டேய் அவசரத்துக்கு பொறந்தவனே இருடா நான் ஃப்ரெஷ் ஆயிட்டு வந்துடறேன்.”
“நாம ஒன்னும் உனக்கு பொண்ணு பாக்க போகல ஃப்ரெஷாகிட்டு போக, அப்படியே எழுந்திரிச்சு வந்து வெளியே நில்லு” என்றவன் போனை கட் பண்ணினான்.
தலையில் அடித்துக் கொண்ட புகழ், “உலகத்துல ஆயிரம் ப்ரெண்ட்ஸ் வைச்சிருக்கிற எல்லோரும் நிம்மதியா இருக்காங்க. இந்த ஒரே ஒரு ப்ரெண்ட வச்சுட்டு நான் படுற பாடு இருக்கே, அப்பா முருகா நீ தான் என்னை காப்பாத்தணும். இந்த நேரத்துல எங்க கூப்பிடறான்னு தெரியலையே” என்றவன் முகத்தை கழுவி விட்டு வெளியில் வர அங்கே தீஷிதனின் கார் வந்து நின்றது. காரின் கதவைத் திறந்து முன்னால் ஏறிய புகழ், என்னவென்று கேட்கும் முன்னரே கார் வேகமாக சென்றது.
“டேய் மெதுவா போடா.. ஏன்டா இப்படி பாடா படுத்துற? அப்படி என்ன தலை போற காரியம் இவ்வளவு அவசரமா போறதுக்கு?”
“தலை போற காரியம் தான் மச்சான். அங்க போனா உனக்கு விஷயம் விளங்கும் அதுவரைக்கும் அமைதியா இரு. அப்படியா சரி அப்ப நான் கார்ல தூங்குறேன் நீ போக வேண்டிய இடம் வந்ததும் என்னை எழுப்பி விடு.”
“மவனே என்ன ஆனாலும் நீ இன்னைக்கு தூங்கவே கூடாது.”
“தீஷி இது உனக்கு நியாயமா தெரியுதா? நைட் வரைக்கும் கான்பிரன்ஸ் மீட்டிங்ல என்ன கலந்துக்க வச்சுட்டு, அப்போதான் போய் தூங்கினேன். அந்த நேரம் பார்த்து என்ன கூட்டிட்டு வர்ற ஏண்டா டேய் என்னால முடியலடா” என்றான் புகழ்.
“சரி… சரி கொஞ்ச நேரம் தூங்கு நான் அப்புறம் எழுப்பி விடுறேன்.”
“நன்றி நண்பா… நன்றி நண்பா..” என்றவன் அப்படியே சீட்டில் சாய்ந்து தூங்கினான்.
…………………………………………………
கிருபாகரனின் அணைப்பில் இருந்தாள் துர்க்கா. எத்தனை வருடங்கள் ஆயிற்று இப்படி தனது கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டு இருந்து, கிருபாகரனின் இடது கை துர்க்காவின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தது.
“என்னங்க..”
“என்னம்மா..”
“நீங்க ஏங்க என் கூடவே இருந்தீங்க? என்னால உங்க வாழ்க்கையும் பாளாப் போச்சு. என்னை விட்டுட்டு நீங்க வேற கல்யாணம் பண்ணி குழந்தை குட்டினு சந்தோஷமா இருந்திருக்கலாம்ல.”
“ஏய் என்ன துர்க்கா பேசுற? இன்பத்திலேயேயும் துன்பத்திலேயும் உன்கூட இருப்பேன்னு தான் உன் உன் கழுத்துல தாலி கட்டி, உன் கையை பிடிச்சேன். இப்போ இப்படி ஆயிட்டனு நான் உன்னை விட்டுட்டு போயிருவேன்னு நினைச்சியா? ஏன் துர்க்கா எனக்கு இப்படி நடந்திருந்தா நீ என்னை விட்டுட்டு போயிருப்பியா?”
“என்னங்க சொல்றீங்க? உங்களை விட்டுட்டு எப்படிங்க என்னால இருக்க முடியும்?”
“அப்படித்தான் நானும், என்னால் மட்டும் எப்படி நீ இல்லாம இருக்க முடியும்” என்றவரை இறுக அணைத்துக் கொண்டார் துர்க்கா. “என்னங்க எனக்கு எங்க அண்ணா, தங்கச்சி எல்லாரையும் பாக்கணும் போல இருக்கு. ஆமா எங்க அண்ணன் என்னை தேடி வரலையா?”
“வந்தாரு மா ஒரு நாள், ஆனா எனக்கு அவங்க கூட போக விருப்பம் இல்ல. அதான் உனக்கு குணமாகட்டும்னு உன் கூடவே இருந்திடுறன்னு சொல்லிட்டு நான் இங்கே இருந்துட்டேன்.”
“எனக்கு அவங்களை பாக்கணும் போல இருக்குங்க.”
“கண்டிப்பா பாக்கலாம். உனக்கு குணமாயிட்டுன்னு தெரிஞ்சாலே மச்சான் ஓடி வந்துருவாரு.”
“அண்ணனோட பசங்க, தங்கச்சியோட பசங்க எல்லோரும் வளர்ந்திருப்பாங்க இல்ல.”
“ஆமா துர்க்கா ரொம்பவே வளர்ந்து இருப்பாங்க”
“ஏங்க நம்ம குழந்தைய மட்டும் ஏன்ங்க அந்த கடவுள் பறிச்சிக்கிட்டாரு?”
“துர்கா எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான். நீ அந்த குழந்தையை பத்தி பேசி உனக்கு ஏதாச்சும் இன்னொரு முறை ஆயிடுச்சின்னா, அப்புறம் நீ கண்முழிச்சாலும் என்னை பார்க்க முடியாத இடத்துக்கு நான் போயிடுவேன். எனக்காக அதை நீ மறந்து தான் ஆகணும் துர்க்கா.”
“ஐயோ என்னங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. எனக்கு நீங்க மட்டும் போதுங்க.” என்று இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இருவரும் என்ன பேசினார்கள் என்றால் அவர்களுக்கு தெரியவில்லை. இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து பேசிக்கொண்டே இருந்தார்கள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
சம்யுக்தாவுடன் அவளது அறைக்குள் வந்தான் தீஷிதன். அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் அவளை தனக்கு அருகில் உட்காருமாறு சொன்னான். அவளும் மறுக்காமல் அவனின் அருகில் அமர்ந்தாள். “யுக்தா நான் வெளியில வித்யாவோட கல்யாணத்த பத்தி எடுத்த முடிவுல உனக்கு ஏதும் வருத்தம் இருக்கா?” என்றான்.
அதற்கு சம்யுக்தாவோ, “இல்லைங்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்களுக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்றிங்க நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதுல எங்களுக்கு சந்தோசம் தான். ஆனா ஒன்னு எனக்கு லீலா அம்மாவையும் அப்பாவையும் நினைச்சா தான் பயமா இருக்கு.”
“அவங்கள பத்தி நீ எதுக்கு பயப்படுற? அவங்களால என்ன பண்ண முடியும்? அவங்க அந்த விக்டர் கிட்ட நல்லா மாட்டிகிட்டாங்க.”
“விக்டரா அது யாருங்க?”
“அது யாரா? உன் தங்கச்சி வித்யாவுக்கு அவங்க பார்த்த மாப்பிள்ளை. அவன் ரொம்ப மோசமானவன். உங்க அப்பா அவங்க கிட்ட ஏதோ கடன் வாங்கி இருக்கிறார் போல. அதை கொடுக்கலைன்னா உன் பொண்ண கல்யாணம் பண்ணி வை. இல்லனா சொத்தை என் பேருல எழுதி வைனு சொல்லியிருக்கிறான். உங்க அப்பாவும் எனக்கு என்னோட சொத்து முக்கியம். அதனால என் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேனு வாக்கு கொடுத்துட்டாரு. இப்ப அவன் வித்யா எங்க வித்யா எங்கன்னு கேட்கிறான். இவங்களோ வித்யா ஊருக்கு போய் இருக்கா அங்க போய் இருக்கா இங்க போயிருக்கான்னு சமாளிக்கிறாங்களே தவிர இன்னும் அவன்கிட்ட உண்மைய சொல்லல.”
“என்னங்க இது, உங்களுக்கு இவ்வளவு தெரிஞ்சிருக்கு. அப்படியே நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்க.”
“அதுதான் நான். அங்க என்ன நடக்குதுனு எனக்கு தெரியணும் இல்ல. ஏன்னா அவங்களோட எந்த ஒரு நடவடிக்கையும் உன்னையோ வித்யாவையோ பாதிக்க கூடாதுன்னு நான் உறுதியா இருக்கேன். அதனாலதான் அங்க ஒரு ஆளை வச்சிருக்கேன்.”
“ஏங்க அந்த விக்டரால அம்மா அப்பாக்கு ஏதாவது ஆபத்து வந்திடாதே?”
“இதான் நீ யுக்தா. ஏன் நீ இப்படி இருக்க? உன்னை அனாதராவா நடு ரோட்டில் விட்டவங்க அவங்க. அவங்களுக்கு போய் நீ பாவம் பாக்குற.”
“என்ன இருந்தாலும் அவங்க என்னை வளத்தவங்க இல்லையா? அந்த நன்றி எப்பவும் எனக்கு இருக்கும். ப்ளீஸ்ங்க அந்த விக்டர்கிட்ட இருந்து அவங்களை எப்படியாவது காப்பாத்துங்க.”
“யுக்தா அதுக்கு ஒண்ணு அவனுக்கு வித்யாவை கல்யாணம் பண்ணி வைக்கணும். அது உனக்கு ஓகேவா?”
“ஏங்க இப்படி பேசுறீங்க? நீங்க தானே சொல்றீங்க அவன் ரொம்ப மோசமானவன்னு இப்போ அவனுக்கு வித்யாவை கல்யாணம் பண்ணி வைக்க சொல்றீங்க? அவளோட வாழ்க்கை என்ன ஆகும்?”
“இப்போ புரியுதா உனக்கு? அதனால தான் அவங்களுக்கு சீக்கிரமாவே நிச்சயம் பண்ணனும்னு சொன்னேன். அந்த விக்டரால வித்யாவுக்கு எந்த ஆபத்து வரக்கூடாது. அது மட்டும் இல்ல உங்க அம்மா அப்பா அவங்க சொத்தை அவன் பெயரை எழுதி கொடுத்துட்டா இந்த பிரச்சனை முடிஞ்சிடும். வித்யாவை கல்யாணம் பண்ணி கொடுத்துத்தான் பிரச்சனையை முடிக்கணும்னு இல்ல.”
“ஆனா அப்பா சொத்தை கொடுக்க ஒத்துக்கலனா என்ன பண்றது?”
“அது அவங்களோட சாய்ஸ். ஆனா நான் இப்ப எதுக்கு இங்க வந்தேன் தெரியுமா? எனக்கு அர்ஜென்டா உங்கிட்ட இருந்து ஒரு ஹக் இல்லனா ஒரு கிஸ் வேணும்” என்று சொன்னான்.
இதைக் கேட்டதும் யுக்தாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. “ஏய் எதுக்குடி இப்பிடி பார்க்கிற? நான் கேட்டதை கொடுப்பியா இல்லையா?” என்று அவளை நெருங்கினான். அவளோ எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டு இருந்தாள். அவளை நெருங்கியவன், அவள் முகத்தை கையில் ஏந்தி, அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான். அவளும் கண்களை மூடிக் கொண்டு அந்த முத்தத்தை ஏற்றாள். சிரிப்புடன் அவள் நெற்றியில் முட்டியவன், “யுக்தா கண்ணை தொற”
“ம்கூம் முடியாது..”
“ப்ளீஸ் டி” என்றான். அவளும் மெல்ல கண்களை திறக்க, அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன் பார்வை உணர்த்திய செய்தியை புரிந்து கொண்டவள் அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள்.
“யுக்தா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். நீ அதை யார்க்கிட்டேயும் சொல்லக்கூடாது.”
“சரி சொல்ல மாட்டேன்.” என்றாள்.
“நான் வித்யாவோட அம்மாவையும் அப்பாவையும் நம்மளோட கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான். இதைக் கேட்டு அவனிடம் இருந்து பதறியபடி விலகினாள் சம்யுக்தா.
“ஏய் எதுக்கு இப்பிடி பதறுற? இங்க வா” என்று மறுபடியும் அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
“என்னங்க ஏங்க இப்படி பண்றீங்க? அவங்களுக்கு மட்டும் வித்யா இங்க இருக்கிறது தெரிஞ்சா, அதுக்கு அப்புறம் என்ன பண்ணுவாங்கனே தெரியாது.”
“நீ என்ன நெனச்சிட்டு இருக்க யுக்தா உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் கையாலாகாதவன்னு நினைக்கிறாயா? இங்க பாரு உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. உன்னை அன்னிக்கு கதற கதற வெளியே அனுப்பினாங்க தானே. அதுக்கு அவங்களுக்கு பாடம் சொல்லியே ஆகணும். அவங்க உன்னை கைவிட்டாலும் நீ ராணி மாதிரி இருக்கிறதை அவங்க பாக்கணும். இந்த விஷயத்தில நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறதா இல்ல யுக்தா.”
“வேணாம்ங்க.. ப்ளீஸ் சொன்னா கேளுங்க. எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. வித்யாக்கோ உங்களுக்கு இங்க இருக்கிற மத்தவங்களுக்கோ ஏதாவது தப்பா நடந்தா அதை என்னால தாங்கிக்க முடியாது.”
“நான் திரும்பவும் சொல்றேன் என்னை மீறித்தான் உனக்கும் வித்யாக்கும் ஏதாவது பிரச்சனை வரும். நான் உன்னை பாத்துக்குவேன்ற நம்பிக்கை இருக்குல உனக்கு?”
“ம்ம்ம் ரொம்ப”
“அப்புறம் என்ன? எதைப் பத்தியும் யோசிக்காமல் நீ நம்ம கல்யாணத்தை பற்றி மட்டும் யோசிம்மா. அதை எப்படி என்ஜாய் பண்ணலாம்னு பாரு” என்றவனிடம் சம்யுக்தாவிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அமைதியானவள் அவனது கையை பிடித்துக்கொண்டு, அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
வித்யாவை அழைத்துக் கொண்டு விக்ராந்த் மாடிக்கு சென்றான். அங்கே வித்யா அவனைப் பார்த்து கையை கட்டிக்கொண்டு நின்றாள். அவனும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அந்த மௌனத்தை அவளே கலைத்தாள்.
“என்ன ஏதோ பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருக்கீங்க?” என்று கேட்க, விக்ராந்த், “வித்யா எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. உன்னைப் பார்த்த உடனே புடிச்சு போயிடுச்சு. அதனாலதான் வீட்ல உள்ளவங்க கிட்ட பேசி நம்ம கல்யாணத்தை பத்தி பேச சொன்னேன். உனக்கு என்னைய புடிச்சிருக்கா? இல்ல இவங்க எல்லாம் சொல்றாங்கனு என்னை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டியா?”
“நான் உண்மையை சொல்லவா? எனக்கு உங்க மேல எந்த தப்பான அபிப்பிராயமும் இல்லை. அதே நேரத்துல எனக்கு எங்க வீட்டுக்கு போக இஷ்டம் இல்ல. இங்கே இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. மதுரா உங்களை பற்றி எங்கிட்ட நிறைய சொல்லியிருக்கிறா. அது மட்டும் இல்ல மாமா எது செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும். அவங்களே நீங்க நல்லவங்கன்னு சொல்லும் போது நீங்க ரொம்ப நல்லவங்களாதான் இருப்பீங்கனு நான் கெஸ் பண்ணேன். அதனால தான் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டேன்”என்றாள்.
“அப்போ என்ன லவ் பண்ண மாட்டியா?”
“அதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேனே. அப்புறம் என்ன லவ் பண்ணி தானே ஆகணும்” என்று சொல்லி சிரித்தாள்.
“சான்ஸ்ஸே இல்ல தியா. நீ இப்படி பேசுவேன்னு நான் நினைச்சு கூட பாக்கல.”
“வேற அப்படி பேசுறது? வாழ்க்கை எதை நோக்கி போகுதோ அதன் போக்கிலேயே நாம போய்க்கொண்டே இருக்கணும். என்னோட அம்மா அப்பா இங்க வர்றது கஷ்டம். ஆனா ஒருவேளை அவங்க இங்க வந்து என்னை கூட்டிட்டு போனாங்கன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”
“என்ன பண்ணுவேன்னா கேக்கிற, வித்யா என்னோட பொண்டாட்டி, அவளை எப்படி நீங்க கூட்டிட்டு போகலாம்னு அவங்ககூட சண்டை போய்டுவேன்.”
“அதையும் மீறி கூட்டிட்டு போக பார்த்தாங்கனா?” என்றாள்.
“உன்னை கடத்திட்டு மலேசியாக்கு போய்டுவேன். அங்க யாராலையும் உன்னை கண்டுபிடிக்க முடியாதுடி” என்று சிரித்தவன், “தியா நீ எதுக்கு பயப்படுற? அதுதான் அத்தான் இருக்காங்கல அவரை மீறி எதுவும் நடக்காது. நான் மட்டும் என்ன அவ்வளவு குறைந்தவனா அவங்க உன்னை கூட்டிட்டு போகும் வரைக்கும், நான் பார்த்துட்டு அமைதியா இருப்பேன்னு நினைச்சியா? என்கிட்ட இருந்து உன்னை யாராலும் பிரிக்க முடியாது. என்னை நம்பி வா கண்டிப்பா உன்னை நான் எப்பவும் விட மாட்டேன்” என்று கூறியவனின் வார்த்தைகளைக் கேட்டு கண்கலங்கினாள் வித்யா.
“ஏய் இது என்ன? நீ எப்பவுமே சின்ன பிள்ளை போல கலகலன்னு தான் இருக்கணும்” என்றவனை அணைத்துக் கொண்டாள் வித்யா.
………………………………………………….
இரவு வேளையில் இதமான தென்றல் வீசிக்கொண்டிருந்தது. அந்த இடமே ஒரு அமைதியை தத்தெடுத்துக் கொண்டிருந்தது. அங்கங்கே இருந்த ஒவ்வொரு குடிசைகளிலும் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஒரு சிலர் அந்த இடத்திலுள்ள நடைபாதையில் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சிலரோ தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு இடத்தில சிலருக்கு சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பெரிய சிவலிங்கத்திற்கு முன்பாக ஒரு குருஜி தியானத்தில் அமர்ந்திருந்தார்.
ஒரு குடிசையில் மட்டும் கீழே விரிக்கப்பட்ட துணியில் ஏராளமான இலைகள் போடப்பட்டிருந்தன. அதன் மீது ஒரு பெண் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது முகமே நீண்ட நாள் அவள் உறக்கத்தில் இருப்பதாக தெரிந்தது. அவளுக்கு அருகில் அவள் முகத்தில் எதையோ தேடியவாறு ஒரு ஆண் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அருகில் அமர்ந்திருந்தார்.
அவர் எத்தனை மணி நேரம் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. திடீரென்று அந்த தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் ஒரு அசைவு. அவளது கண்களோ பட்டாம்பூச்சி போல படபடவென்று அடித்துக் கொண்டது. அவர் பிடித்திருந்த கைவிரல்கள் அசைய தொடங்கின.
இதுபோல் எத்தனை முறை நடந்திருக்கிறது. அவர் அவள் எழுந்துவிட்டார் என்று எண்ணி எத்தனை தடவைகள் ஏமாற்றம் அடைந்திருப்பார். அதுபோல இதுவும் தனது பிரம்மை என்று நினைத்துக் கொண்டவர் அமைதியாக இருந்தார். ஆனால் இம்முறை அப்பெண் அவரை ஏமாற்றவில்லை. படுக்கையில் இருந்தவர் மெல்ல மெல்ல தனது கண்களை திறந்தார். இதைப் பார்த்த அவர் அவளது கையை கீழே வைத்துவிட்டு சட்டென்று வெளியே ஓடினார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
சம்யுக்தாவும் தீஷிதனும் வீட்டிற்கு உள்ளே வரும்போது, இவர்கள் பேசிக் கொண்டிருப்பது அவர்கள் காதில் விழுந்தது. அப்போது தீஷிதன், “என்ன பேசிட்டு இருக்கீங்க? எது சரியா வராது?” என்றவாறு வந்து விக்கியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். சம்யுக்தா தமயந்தியின் அருகில் நின்றாள்.
தீஷிதனிடம் திரும்பிய விக்ராந்த், “நீங்களே சொல்லுங்க அத்தான். நான் ஒரு பொண்ணை விரும்புறேன். அந்த பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொல்றாங்க. இது நியாயமா? உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம் எனக்கு மட்டும் ஒரு நியாயமா?” என்று கேட்டான்.
அதற்கு சிரித்துக் கொண்டே தீஷிதன், “இப்போ என்ன விக்கி, உனக்கு நீ விரும்புற பொண்ணோட கல்யாணம் நடக்கணும் அவ்வளவுதானே. நீ பொண்ணு யார்னு மட்டும் சொல்லு, எங்க இருந்தாலும் தூக்கிட்டு வந்திடு” என்றான் தீஷிதன்.
அதற்கு விக்கியோ, “அதெல்லாம் தூக்கிட்டு வர தேவையில்லை. பொண்ணு இங்கதான் இருக்கா”
“என்ன பொண்ணு இங்க இருக்கா? ஆமா நீ யாரை சொல்ற?” என்று கேட்க,
“வேற யாருப்பா அது தான் நம்ம சம்யுக்தாவோட தங்கச்சி வித்யாவைதான் சொல்றாங்க” என்றார் தமயந்தி.
“என்ன நம்ம வித்யாவையா?” என்றாள் சம்யுக்தா.
“ஆமாங்க அக்கா, இங்க பாருங்க அக்கா, சம்யுக்தா உங்க கூட பொறந்த தங்கச்சி இல்ல தானே. அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கறதுல என்ன தப்பு இருக்கு? இவங்க எல்லாம் நீங்க எனக்கு அக்கா முறையாம். அதனால உங்க தங்கச்சி எனக்கு தங்கச்சி முறைன்னு சொல்றாங்க. அக்கா பாருங்க உங்க கூட பிறந்திருந்தாக்கூட பரவால்ல இது…” என்று இழுத்தான்.
இப்போது சம்யுக்தா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். தீக்ஷிதன் தான், “விக்கி” என்றான்.
“சொல்லுங்க அத்தான் நீங்க ஒரு முடிவு சொல்லுங்க. என்னோட வாழ்க்கையே உங்க கையில தான் இருக்கு” என்றவனைப் பார்த்தவன், அமரேந்திரனிடம் திரும்பி, “நீங்க என்ன சொல்றீங்க மாமா?”
“இதுல நான் சொல்ல என்னப்பா இருக்கு? இது அவனோட லைப் அவனுக்கு யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா லைஃப் சந்தோஷமா இருக்கும்னு நினைக்கிறானோ அவங்களையே அவன் கல்யாணம் பண்ணிக்கட்டும்”என்றார்.
“சரியா சொன்னீங்க மாமா, இத்தனை நாள் என்னை மாதிரி அவனும் கல்யாணம் வேணாம்னு தான் சொல்லிட்டு இருந்தான். இப்போ வித்யாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றான். இதுல என்ன இருக்கு, அவளும் நல்ல பொண்ணு தானே. தாராளமா கல்யாணம் பண்ணி வைக்கலாம். சம்யுக்தாவுக்கு தங்கச்சி தான். ஆனா அதனால எந்த பிரச்சனையும் இல்லை. தாராளமா கல்யாணம் பண்ணி வைக்கலாம். வேணும்னா எங்க கல்யாணம் நடக்கிற அன்னைக்கு இவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் பண்ணிடலாம்” என்றான்.
சம்யுக்தாவ, “ஒரு தடவை லீலா அம்மாகிட்ட பேசிட்டா நல்லா இருக்கும்ங்க. ஏன்னா அவங்க எப்ப பிரச்சனை பண்ணலாம்னு இருப்பாங்க. வித்யா வேற சொல்லாம கொள்ளாம இங்க வந்துட்டா. நாளைக்கு ஏதும் பிரச்சனை வந்துட்டா என்ன பண்ணுறது?”
“எந்த பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்குறேன். நீ பீல் பண்ணாத.”
“அவ மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் நடக்காது. வித்யாக்கிட்ட இதைப் பற்றி நானே கேட்கிறேன். அத்தை எங்க வித்யா?” என்றான்.
“வித்யாவும் மதுராவும் உன் கல்யாணத்துக்கு மதுராவோட பிரெண்ட்ஸை அழைக்கிறதுக்காக போயிருக்காங்க.”
“அப்படியா சரி வரட்டும், வந்தது நான் வித்யா கிட்ட கேட்கிறேன்.” என்றான்.
பரந்தாமன், “தீஷி என்னாச்சுப்பா போன விஷயம் என்னாச்சு?” என்றார்.
“ரொம்ப சிறப்பா முடிஞ்சுது டாடி. யுக்தா தான் அங்க பிரகாஷைப் பார்த்த உடனே ரொம்ப பயந்துட்டா. அதுக்கப்புறம் சமாளிச்சுட்டு பேசினா பாருங்க, அவனை யார்னே தெரியாத மாதிரி பேசினா. யுக்தா நீ எப்பவும் இதே மாதிரி ரொம்ப போல்டா இருக்கணும் சரியா”என்றான். பின்னர் அனைவரும் கல்யாண வேலை சம்மந்தமாக அங்கே பேசிக்கொண்டு இருந்தார்கள். மதுராவின் வித்யாவும் வீடு வந்து சேர்ந்தனர்.
………………………………………………….
மணிகண்டனும் லீலாவதியும் தங்களது வீட்டில் உட்கார்ந்து இருந்தார்கள். இருவருக்கும் தங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கி இருப்பது புரிந்தது. ஆம் வித்யா மட்டும் கிடைக்கவில்லை என்றால் விக்டர் இவர்களை சும்மா விடமாட்டான். இத்தோடு நூறாவது முறையாக கால் பண்ணி வித்யா வந்துவிட்டாளா வந்துவிட்டாளா என்று கேட்டு விட்டான். இவர்களும் ஏதோ ஒன்றைக் கூறி சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இது எத்தனை நாட்களுக்கு என்று தான் தெரியவில்லை. இருவரின் ஆட்களும் ஒவ்வொரு இடங்களிலும் வித்யாவை தேட ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் வித்யா எங்கே என்று தான் யாருக்கும் தெரியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு அப்போதுதான் லீலா, “ஏங்க இப்ப என்ன பண்றது? பேசாம நீங்க வாங்கின கடனுக்கு நம்ம சொத்து எல்லாத்தையும் கொடுத்து இருக்கலாமா?”
“அப்புறம் சொத்து எல்லாத்தையும் கொடுத்துட்டு ஒண்ணும் இல்லாம ரோட்ல பிச்சை எடுக்கப் போறியா?” என்று எரிந்து விழுந்தார் மணிகண்டன்.
“வேற என்ன தான்ங்க பண்றது? அந்த எடுபட்ட சிரிக்கி வேற நம்மகிட்ட சொல்லாம இப்படி மாயமா மறைஞ்சுட்டாளே. எங்க போன என்ன பண்றானு எதுவுமே தெரியல” என்று வித்யாவின் மீது தனது கோபத்தை காட்டினார் லீலா.
………………………………………………….
வித்யாவும் மதுராவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வித்யாவிடம் தீஷிதன், “வித்யா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இப்ப பேசலாமா இல்ல அப்புறமா பேசவா?” என்று கேட்டான்.
வித்யாவும், “ஐயோ என்ன மாமா இது? எதுக்கு நீங்க என்கிட்ட பேச டைம் கேட்டுட்டு இருக்கீங்க. சொல்லுங்க மாமா என்ன விஷயம்?” என்றாள்.
தீஷிதனும் அங்கே இருந்தவர்களைப் பார்த்துவிட்டு, “வித்யா இதோ இங்க இருக்கானே விக்கி இவனுக்கு உன்ன ரொம்ப புடிச்சி இருக்காம். கல்யாணம்னு ஒண்ணு பண்ணினா உன்னைத்தான் பண்ணிக்குவானாம். ஆனா இவங்க தான் நீ சம்யுக்தாவோட தங்கச்சி. அதனால இவனுக்கு முறை இல்லன்னு சொல்லி சொல்றாங்க. ஆனா தப்பா எடுத்துக்காதமா நீ இப்படி இருந்தாலும் யுக்தாவோட கூட பிறந்த தங்கச்சி இல்லையே அதனால உனக்கு விருப்பம்னா இந்த கல்யாணம் நடக்கும். மற்றபடி உன்னை யாரும் இங்கே கட்டாயப்படுத்த மாட்டாங்க. உனக்கு புடிச்சிருந்தா மட்டும் உன்னோட முடிவை சொல்லுமா” என்றான்.
இதைக் கேட்ட வித்யா சம்யுக்தாவைப் பார்த்தாள். சம்யுக்தாவோ, “நான் எதுவும் சொல்லல வித்து. இது உன் வாழ்க்கை. நீ தான் முடிவு எடுக்கணும்.”
மதுரா வித்யாவை கட்டி அணைத்துக் கொண்டு, “வித்து நிஜமா நீயே எங்க விக்கி அத்தனை கல்யாணம் பண்ணிக்கோ டி. அவங்க ரொம்ப நல்ல பர்சன்” என்றாள்.
அதைப் பார்த்த தமயந்தி, “யாரும் அவளை கன்பியூஸ் பண்ண வேணாம். வித்யா அவளோட முடிவை சொல்லட்டும். எனக்கு வித்யா என் வீட்டுக்கு மருமகளா வர்றதுல எந்த பிரச்சினையும் இல்ல. அவளுக்கு பிடித்திருந்தா ஓகே தான். நான் ரெண்டு பேருக்கும் முறை சரியா வருதுன்னு யோசிச்சேன். ஆனால் இவங்க சொல்ற மாதிரி சம்முவோட ரெத்த பந்தம் இல்லல வித்யா. அதனால எந்த பி இல்லை” என்றார்.
வித்யா அமைதியாக நிற்பதைப் பார்த்த விக்ராந்த், “வித்யா எனக்கு உன்னை பார்த்ததுமே படிச்சுப் போச்சு. அதனால நான் இதை தள்ளிப் போடாம சொன்னேன். உனக்கு என்னை பிடிச்சிருந்தா சொல்லு இல்லன்னா இப்பவே சொல்லிடு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றான்.
“ஏன் விக்கி எதுக்குப்பா அவசரப்பட்டு? அவளுக்குரிய டைம் நம்ம கொடுப்போம்” என்ற தீஷிதன் வித்யாவிடம் திரும்பி, “வித்யா அவன் கிடக்கிறான். உனக்கு வேண்டிய டைம் எடுத்துக்கோ. அப்படி இந்த கல்யாணத்துல இஷ்டம்னா சொல்லு, எங்க கல்யாணம் நடக்கிற அன்னைக்கே உங்களுக்கு நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம்” என்றான்.
இவர்கள் எல்லோரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்ற வித்யா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். பின்னர் தீஷிதனிடம், “மாமா எனக்கு இந்த கல்யாணத்துல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா எங்க அப்பா அம்மாவை நினைச்சாத்தான் பயமா இருக்கு. அது மட்டும் இல்ல அவங்களோட ஆளுங்க வேற என்னை தேடிட்டு இருப்பாங்க. அதுதான் ரொம்ப பயமா இருக்கு.”
“அப்படியா வித்யா, அதெல்லாம் பாத்துக்கலாமா நீ ஒண்ணும் பயப்படாத, இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்ல. உனக்கு இவனை கட்டிக்க சம்மதம்னா மட்டும் சொல்லும் நிச்சயதார்த்தம் நடக்கும். இல்லை, இன்னும் டைம் வேணும்னா எடுத்துக்கோ ஒன்னும் அவசரமில்லை” என்றான் மீண்டும் சொன்னதையே சொல்லியபடி.
“மாமா எனக்கு திரும்பவும் எங்க வீட்டுக்கு போக விருப்பம் இல்லை. நான் இங்கேயே இருந்துடறேனே. மாமா நீங்க எங்க அக்காவுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கீங்க. நீங்க சொன்ன அவங்க நல்லவங்களா தான் இருப்பாங்க. அதனால நான் இவங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன் மாமா” என்றாள்.
“வித்யா வாவ் சூப்பர் …வித்து ஐ அம் சோ ஹாப்பி.” என்றாள் மதுரா.
விக்ராந்த், “பாத்தீங்களா இப்ப வித்யாவே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா. இப்ப இந்த கல்யாணத்துல யாருக்காவது எந்த அப்ஜக்ஷனாவது இருக்கா?” என்று கேட்ட, எல்லோரும் சேர்ந்து, “எந்அப்ஜெக்ஷனும் இல்லை. தீக்ஷிதன் சம்யுக்தா கல்யாணத்து அன்னைக்கே உங்களுடைய நிச்சயதார்த்தத்தோட இவங்க நிச்சயதார்த்தத்தையும் சிறப்பாக பண்ணிடலாம்” என்றார் பரந்தாமன்.
“யுக்தா நீ மட்டும் என்ன அமைதியா இருக்க? உனக்கு இதுல விருப்பம் இல்லையா?” என்ற தமயந்தியிடம், “ஐயோ அம்மா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு அங்க அம்மாவையும் அப்பாவையும் நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்கு. அவங்களுக்கு மட்டும் இது தெரிந்தது என்றால், என்ன பண்ணுவாங்கன்னு தெரியாது. அதுதான் பயமா அமைதியா இருக்கேன்” என்றாள்.
என்னோட தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு நான் நம்புறேன். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்” என்றவளை அணைத்துக் கொண்டாள் வித்யா.
“இங்கே யாரும் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவங்களால உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. எந்த பிரச்சனையும் வராது. சரி போங்க போய் ஃப்ரெஷாகிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றார் தமயந்தி.
அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல, விக்ராந்த் மெல்ல வித்யாவிடம் சென்று, “உன் கூட கொஞ்சம் பேசணும் மொட்டை மாடி வரைக்கும் வா” என்று சொன்னான்.
அவளோ, “அங்க எதுக்கு என்னால வர முடியாது” என்ற வித்யாவிடம் விக்ராந்த், “ப்ளீஸ் வித்து கொஞ்சம் வா. கண்டிப்பா உன் கூட பேசியே ஆகணும்” என்றான்.
இதைக் கேட்ட மதுரா, “அதுதான் அத்தான் கூப்பிடறாங்கல போயிட்டு வா வித்து. ஏதாவதுனா ஒரு குரல் கொடு நான் வந்து பாத்துக்குறேன்.” என்றாள்.
“உன்னை..” என்று அவளை போலியாக மிரட்டிய விக்ராந்த் மதுராவின் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைத்து விட்டு, “உன் ப்ரெண்டுக்கு என்னால எந்த பிரச்சனையும் வராது மேடம்” என்றான்.
சம்யுக்தாவின் பின்னாடியே தீக்ஷிதன் சென்றான். அவன் தன் பின்னால் வருவதை உணர்ந்த சம்யுக்தா, “ஏதாவது பேசணுமா?” என்றாள்.
அவனும், “ஆமா பேசணும், உள்ள வா” என்று அவளுக்கு முன்னால் அவள் அறைக்குள் சென்றான்.
‘என்னவா இருக்கும்’ என்று யோசித்துக் கொண்டு உள்ளே வந்தாள் சம்யுக்தா. அப்போது தீஷிதன் சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் அவளது கண்கள் விரிந்தன.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
பிரகாஷ் சம்யுக்தாவை எதிர்பார்த்து வந்திருந்தான். ஆனால் சம்யுக்தா பிரகாஷை அங்கே எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவள் தன்னை பார்த்து எதுவித உணர்ச்சியையும் காட்டாதது பிரகாஷிற்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் அவனைப் பார்த்து பயப்படும் சம்யுக்தா எங்கே? இவள் அவனை சரிசமமாய் உட்கார்ந்து கொண்டு, பயம் சிறிதும் இன்றி இருக்கும் இவள் மீது கோபம் வந்தது. ஆனால் இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தான்.
அங்கே நிலவிய அமைதியை கலைத்தான் தீஷிதன். “யுக்தா பேபி, இவங்க தான் நம்மளோட புது ப்ரொஜெக்டை பண்ணப்போறாங்க. அதுமட்டுமல்ல, இந்த ப்ரொஜெக்டுக்கு நீதான் லீடர். உனக்கு கீழேதான் இவங்க வேலை செய்யணும்.” என்பதை அழுத்தி சொன்னான். அவனை திரும்பி பார்த்தாள் சம்யுக்தா.
“நீ வொரி பண்ணாத டார்லிங். உனக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அதுக்கு இவங்கதான் பொறுப்பு. அதனால உன்னை எந்த தொந்தரவும் பண்ணமாட்டாங்க.”
“எனக்கு உங்களை மீறி எந்த பிரச்சனையும் வராதுனு தெரியும்ங்க.” என்ற சம்யுக்தாவை அள்ளி அணைக்க துடித்தன தீஷிதனின் கரங்கள்.
“யுக்தா பேபி நீ என் மேல ரொம்ப நம்பிக்கை வைச்சிருக்கனு எனக்கு நல்லாவே தெரியும்டா. என்னைக்குமே என்னை மீறித்தான் தான் உனக்கு எந்த துன்பமாவது வரும் சரியா. சோ டோன்ட் வொரி.” சம்யுக்தா நிமிர்ந்து பிரகாஷைப் பார்த்து, “மிஸ்டர் பிரகாஷ் டாக்குமென்டைப் நல்லா படிச்சுப் பாருங்க. நான் திரும்பவும் சொல்றன் உங்களுக்கு இதுல எனக்கு கீழே ஒர்க் பண்ண உங்களுக்கு ஓகேனா மட்டும் சைன் பண்ணுங்க. அப்புறம் வந்து என்னால முடியாது. இந்த ப்ரொஜெக்ட் வேணாம்னு நீங்க சொல்லக்கூடாது”என்று ஸ்ட்ரிக்ட் ஆகவே சொன்னாள் சம்யுக்தா. தீக்ஷிதன் எதுவும் பேசாமல் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.
பிரகாஷூம் சம்யுக்தா கொடுத்த டாக்குமென்டே வாங்கிப் படித்தான். பின்னர் எனக்கு இதுல ஒரு பிரச்சனையும் இல்ல மிஸ் சம்யுக்தா. நான் சைன் பண்ண ரெடி” என்றான்.
“உங்க தைரியத்தை நான் ரொம்பவே பாராட்டுறேன் மிஸ்டர் பிரகாஷ்” என்ற தீஷிதன், “ஃபர்ஸ்ட் நீங்க சைன் பண்ணுங்க அப்புறம் என் ஃபியான்சி இதுல சைன் பண்ணுவாங்க.”
“சரி” என்ற பிரகாஷ் அதை வாங்கி கையெழுத்துப் போட்டான். பின் அதை தீக்ஷிதனிடம் கொடுக்க, அவன் வாங்கி சம்யுக்தாவிடம் கொடுத்து, “யுக்தா இதுல சைன் பண்ணு. இனிமே இவங்க செய்ற ப்ரொஜெக்டை நீதான் லீட் பண்ற” என்றான். அவளும் சரி என்று சொல்லி அந்த ப்ராஜெக்ட் அக்ரிமெண்டில் சைன் பண்ணினாள்.
“வெல் நல்லபடியாக இந்த ப்ராஜெக்ட் சைட் பண்ணி முடிஞ்சுது. பிரகாஷ் இந்த ப்ராஜெக்டை நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம். அடுத்தது, எங்களுக்கு ரெண்டு நாள்ல கல்யாணம். கண்டிப்பா நீங்க உங்க பேமிலியோட வரணும். இத நான் பர்சனலா கூப்பிடல. எங்க கம்பெனியோட ப்ரொஜெக்ட்ல சைன் பண்ணி இருக்கிற ஒரு கம்பெனியோட எம்டியை அழைக்கிற அழைப்பு” என்றவன்,
அடுத்து நம்ம கொஞ்சம் பர்சனலா பேசலாமா? என்றான். பிரகாஷிம், “சொல்லுங்க மிஸ்டர் இங்க பர்சனலா பேச என்ன இருக்கு?”
“பிரகாஷ் இதுக்கு முன்னாடி எப்படியோ, இனிமே யுக்தா என்னோட வைஃப். நீங்க பார்க்கிற இடத்துல எல்லாம் அவங்கள அவமானப்படுத்தவோ இல்ல உங்களை சார்ந்தவங்க அவளை அவமானப்படுத்துவதோ நடக்கக்கூடாது. அப்படி இல்ல நாங்க அப்படித்தான் பண்ணுவோம்ன்னா அதற்கான பின் விளைவுகள் ரொம்ப ரொம்ப மோசமா இருக்கு. இதை நான் ஆர்டரா சொல்றதா கூட நீங்க எடுத்துக்கலாம். ஐ டோன்ட் கேர், பட் யுக்தா விஷயத்துல நீங்க இனிமே தலையிடவே கூடாது.”
அதைக் கேட்ட பிரகாஷ், “மிஸ்டர் தீக்ஷிதன் நீங்க பர்சனலா பேசுறேன்னு சொன்னதனால நானும் பர்சனலாவே பேசுறேன். இவக்கிட்ட என்ன இருக்குன்னு நீங்க இவளை கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு எனக்கு தெரியல. ஆனா இவளால நீங்க ரொம்ப அவமானப்பட போறீங்கனு மட்டும் தெரியும். ஓகே நீங்க எங்கள இன்வைட் பண்ணதால அந்த அழைப்புக்கு மரியாதை கொடுத்து நானும் வரேன். கண்டிப்பா என் குடும்பத்தோடு இந்த கல்யாணத்துல கலந்துப்பேன்.
ஆனா பாருங்க இந்த கல்யாணத்துல உங்க கூட உங்க குடும்பம் இருக்கும், எங்களோட குடும்பம் இருக்கும், எல்லாரும் குடும்பத்தோட வந்து இருப்பாங்க, ஆனா கல்யாணப் பொண்ணோட குடும்பம்னு சொல்லிட்டு அங்க யாருமே இல்ல. அது தான் ரொம்ப கஷ்டமான விஷயம்.”
“நான் வரேன்” என்ற பிரகாஷ் சம்யுக்தாவை நக்கலான பார்வை பார்த்துவிட்டு இங்கிருந்து சென்றான்.
பிரகாஷ் அங்கிருந்து சென்றதும் தீக்ஷிதன் சம்யுக்தாவிடம், “என்ன பேபி வந்த வேலை சிறப்பா முடிஞ்சிட்டு போலாமா?”
சரி என்று தலை அசைத்தாள்.
“இங்க பாரு உன்னை என்ன சொல்லி, நான் கூட்டிட்டு வந்தேன்? என்ன நடந்தாலும் அதை போல்டா ஹாண்டில் பண்ணனும்னு சொன்னேனா இல்லையா? அவனோட கோவத்தை அவன் இப்படி பேசி காட்டிட்டு போயிட்டான். அதுக்கு நாமளும் பதிலுக்கு ஏதாவது பேசி அந்த தவறையே செய்யணும்னு இல்லையே.. நம்ம வேலையை நாம பார்த்துட்டு போவோம். அதுவே அவனுக்கு நம்ம கொடுக்கிற பதிலடி. அவன் சொல்றதை எல்லாம் நினைச்சி கவலப்பட்டுட்டு இருந்தா அது உன்ன ரொம்ப பலவீனமாக்கும்.
இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீ பேசினபோ என்மேல இருந்த நம்பிக்கை உன்னோட வார்த்தை மூலம் வெளிவந்தது. அந்த நிமிஷம் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.”
“இல்ல அப்போ எனக்கு அப்படி தோணுச்சு அதை அப்படியே பேசிட்டேன்” என்றாள் சம்யுக்தா.
“அப்போ உனக்கு அப்படி தோணுதுனா என்ன அர்த்தம்? என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குனுதானே அர்த்தம். அந்த நம்பிக்கை தான் நான் எப்பவுமே காப்பாத்துவேன். நீ எதுக்கும் பயப்படக்கூடாது, கலங்கவும் கூடாது சரியா?” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு புகழிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றான்.
………………………………………………….
பிரகாஷ் அங்கிருந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான். அங்கே கட்டிலில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் சீமா. பிரகாஷ் போன எடுத்து உமேஸ்வரனுக்கு போன் பண்ணினான். முக்கியமான ஒரு மீட்டிங்கில் இருந்த அவர் பிரகாஷின் ஃபோனை பார்த்ததும் அவர்களிடம் எக்ஸ்க்யூஸ்மி சொல்லிவிட்டு வெளியே வந்து, “என்ன பிரகாஷ் என்னாச்சு போன வேலை நல்லபடியா முடிஞ்சுதா?”
“ஆமா டாடி வேலை நல்லா முடிஞ்சுது. ஆனா அதுல ஒரு சின்ன பிராப்ளம் இருக்கு.”
“என்னது ப்ராப்ளமா? என்ன பிராப்ளம்?”
“டாடி அது வந்து…. நம்மளோட கம்பெனிக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைச்சிட்டு. ஆனா நாம வந்து அந்த ப்ரொஜெக்டை அந்த கம்பனியோட எம்டிக்கு கீழே தான் வொர்க் பண்ணனும். அதோட நம்மளோட கம்பெனியில கண்டிப்பாக இருபது வீதம் ஷேர் குடுத்தாகணும். நான் ஓகேன்னு சொல்லி சைன் பண்ணிட்டேன் டாடி.”
“அதெல்லாம் பிரச்சனை இல்லை. எனக்கு அந்த ப்ரொஜெக்ட் ரொம்ப முக்கியம். அதனாலதான் உன்னை நான் அந்த ப்ரொஜெக்டை என்ன பண்ணியாவது சைன் பண்ணி எடுக்க சொன்னேன். சரி அந்த கம்பெனி எம்டி தீஷிதன் தானே?”
“ஆமா டாடி பட் இப்போ அவரோ ஒரு பார்ட்னர் புதுசா ஜாயின் பண்ணி இருக்காங்க அவங்க தான் நம்மகூட சேர்ந்து இந்த ப்ரொஜெக்டை செய்வாங்க.”
“அப்படியா யாரது?”
“அது வேற யாரும் இல்ல அந்த சம்யுக்தா தான்.”
“என்ன சொல்ற பிரகாஷ் சம்யுக்தாவா? அவ எப்படி அங்க? அவளுக்கும் தீஷிதனுக்கும் என்ன சம்பந்தம்? நீ என்ன சொல்ற பிரகாஷ்? எனக்கு எல்லாத்தையும் தெளிவா சொல்லு.”
உடனே பிரகாஷ் ஊட்டி வந்தது, சம்யுக்தாவும் தீஷிதனும் ஹோட்டலில் பேசிக்கொண்டது, பின்னர் ப்ராஜெக்ட்டில் சைன் பண்ணது என்று அனைத்தையும் சொல்லி முடித்தான்.
இதைக் கேட்ட உமேஸ்வரன் கோபத்தில் கத்த ஆரம்பித்தார். “என்ன வேல பண்ணி இருக்க பிரகாஷ்? நீ இதெல்லாம் முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாமே. இப்ப பாரு அந்த வீணாப்போனவ கீழ நம்ம வேலை பார்க்க வேண்டிய நிலைமை. இது எனக்கு தெரிஞ்சிருந்தா இந்த ப்ரொஜெக்டே வேணாம்னு சொல்லி இருப்பேன்.”
“டாடி நீங்க தானே சொன்னீங்க என்ன செஞ்சாவது இந்த ப்ரொஜெக்டை எடுத்துட்டு வான்னு. இப்ப இப்படி சொல்றீங்க?”
“அதுக்காக அவளுக்கு கீழ எல்லாம் வொர்க் பண்ண முடியுமா?”
“சரி டாடி விடுங்க பாத்துக்கலாம். இன்னொரு விஷயம் சொல்லவா சம்யுக்தாக்கும் அந்த தீஷிதனுக்கும் ரெண்டு நாள்ல கல்யாணம். நம்மள குடும்பத்தோட இன்வைட் பண்ணி இருக்கான். கண்டிப்பா வரணும்னு வேற சொல்லி இருக்கான், என்ன பண்றது டாடி?”
“என்ன பண்றது போய்த்தான் ஆகணும் நீயும் சீமாவும் போயிட்டு வந்துடுங்க. அங்க பெரிய பெரிய விஐபிகள் வருவாங்க. அவங்க கூட பேசிப்பாரு.”
“ஓகே டாடி. நான் இங்க இருந்து அந்த கருமம் புடிச்ச கல்யாணத்தை முடிச்சிட்டு அதுக்கப்புறம் ஊருக்கு வரேன்.”
“சரி பார்த்து பத்திரமா இரு.” என்று போனை வைத்துவிட்டு மீட்டிங்கில் கலந்து கொள்ள, இந்தப்பக்கம் இருந்த சீமாவும், “என்ன உங்க முன்னாள் மனைவியோட கல்யாணத்துக்கு போக ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல?”
“ஏன் சீமா நீ வேற இப்படி பண்ற? நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுது உன்னை மட்டும்தான். அவளை ஏதோ சொத்துக்காக கல்யாணம் பண்ணேன். அப்புறம் அதுவும் இல்லைனதும் விரட்டி விட்டாச்சு. இப்போ எதுக்கு அவளோட பேச்சு?”
“நீங்க சொல்றது சரிதாங்க ஆனாலும் இப்போ அவளுக்கு கீழே நீங்க வேலை பார்க்க மாதிரி ஆயிடுச்சு. எனக்கு இப்ப வர்ற கோபத்துக்கு பேசாம அவளை கொன்னுட்டா என்ன?”
“ஏய் என்கிட்ட சொல்லாம எதுவும் பண்ணிடாத, அவளுக்கு ஏதாவது நடந்தா நாமதான் பொறுப்புன்னு வேற சொல்லிட்டான். அவன் நம்மள விட ரொம்ப பெரிய இடம். அப்புறம் நான் ஜெயில்ல களிதான் தின்னனும் உனக்கு சம்மதமா?” என்றான்.
“ஐயோ ஏன் நீங்க இப்படி எல்லாம் சொல்றீங்க? எனக்கு நீங்க தான் முக்கியம். அந்த கேடுகெட்டவ எப்பிடி போனா எனக்கு என்ன? என்னால அந்த கல்யாணத்துக்கு வர முடியாது.”
“சீமா நாம அந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா போய்த்தானாகணும் ஏன்னா அவன் கம்பெனியில ஒர்க் பண்ற எல்லாரையும் இன்வைட் பண்ணி இருக்கிறான். சோ நம்ம போய் தான் ஆகணும்.”
“என்ன பண்றது எல்லாம் தலையெழுத்து. சரி நீங்க ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க நம்ம ஊர சுத்தி பாத்துட்டு வரலாம்.”
“ஓகே சீமா ஒரு பைவ் மினிட்ஸ்” என்ற பிரகாஷ் ஃப்ரெஷாகிவிட்டு வந்து அவளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பினான்.
………………………………………………….
இங்கே பரந்தாமன், தமயந்தி மற்றும் அமரேந்திரன் அனைவரும் ஹாலில் அமர்ந்து நாளைய தினம் நலங்கு வைப்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். ஊட்டியில் உள்ள மதுராவின் ப்ரெண்ட்ஸை கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுவதற்காக மதுராவும் வித்யாவும் சென்றிருந்தார்கள். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த விக்ராந்த், “நான் உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றான்.
“என்னாச்சு விக்கி ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார் அமரேந்திரன்.
“என்ன விக்கி சொல்ற?” என்ற பரந்தாமனிடம், “மாமா அது வந்து நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். என்னன்னு தெரியல பாத்த உடனே அவளை ரொம்ப பிடிச்சு போச்சு. எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது அவளோடதான்னு நான் பிக்ஸ் பண்ணிட்டேன்.”
“டேய் என்ன சொல்ற? இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த, இப்போ என்ன திடீர்னு?”
அதற்கு அவன், “மாமா எனக்கு புடிச்ச மாதிரி எந்த பொண்ணையும் இதுவரைக்கும் பார்க்கல. இப்ப பார்த்துட்டேன். அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ப்ளீஸ் மாமா நீங்க தான் எப்படியாவது எனக்கு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்றான்.
அதற்கு தமயந்தி, “அதுக்கு என்னடா எனக்கு நம்ம வீட்டுக்கு ஒரு மருமக வந்தா போதும். நீ யாரை சொல்றியா அவங்களையே கல்யாணம் பண்ணி வைக்கிறன். பொண்ணு யாரு நீ வரும்போது ஏர்போர்ட்ல வச்சு பேசிட்டு இருந்தியே அந்தப் பொண்ணா?”
“ஐயோ அம்மா அது யாருன்னே தெரியாது. சும்மா பேசிட்டு இருந்தேன். அதுக்காக அந்த பொண்ணை என் வாழ்க்கையில கோர்த்துடுவீங்களா?”
“அப்புறம் பொண்ணு யாருன்னு சொல்லுடா.”
“அந்த பொண்ணு வேற யாரும் இல்ல நம்ம மதுராவோட ஃப்ரெண்ட் வித்யாதான். வித்யாவை தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.”
“என்ற வித்யாவா? டேய் அவ வந்து சம்முவோட தங்கச்சிடா. அவ உனக்கு தங்கச்சி முறை வரும்.”
“அம்மா ஏம்மா இப்படி என் வாழ்க்கையில குண்டைத் தூக்கி போடுறீங்க? அவ ஒண்ணும் சம்மு அக்காகூட பிறந்த தங்கச்சி இல்லல்ல. அப்புறம் என்ன அம்மா?”
“இல்ல விக்கி இது சரியா வரும்னு எனக்கு தோணல.”
அதே நேரத்தில், “எது சரியா வராது?” என்றவாறு வந்தான் தீஷிதன் சம்யுக்தாவுடன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்
விக்ராந்த் வித்யாவைப் பார்த்து கண் அடித்து விட்டு உள்ளே போய் அமர்ந்தான். வித்யா, ‘என்ன இது வந்ததும் வராததுமா ஒரு பொண்ண பாத்து கண்ணாடிக்குறான்’ என்று மனதுக்குள் அவனைத் திட்டியவள் உள்ளே சென்றாள். “தமயந்தி, மச்சான் எல்லாரும் போங்க.. போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க சாப்பிடலாம்.” என்று பரந்தாமன் சொல்ல அவர்களும் சரி என்று அவரவர் அறைக்குச் சென்றனர். அவர்கள் சென்றதும் தீக்ஷிதன் தந்தையிடம், “டாடி நாளைக்கு ஏதாவது இம்பார்ட்டண்ட் ஒர்க் இருக்கா?” என்று கேட்டான்.
அவரும், “இல்ல தீஷி.. உன்னோட வெடிங் ஒர்க்தான் இருக்கு” என்றார்.
“அப்டியா, சரி அப்போ நாளைக்கு நான் சம்யுக்தாவ ஆபீஸ்க்கு கொஞ்சம் கூட்டிட்டு போயிட்டு வரேன்.” என்றான்.
பரந்தாமனும், “இல்லப்பா ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுட்டு இப்படி வெளியில போறது நல்லா இல்ல. நலங்கு வைக்கணும் இப்படி நிறைய ஒர்க் இருக்கு.” என்றார்.
அதற்கு தீஷிதன், “இல்லப்பா இது ரொம்ப முக்கியமான விஷயம் கண்டிப்பா போய் ஆகணும்” என்றான்.
அதற்கு மேல் அவரும் எதுவும் பேசவில்லை. “சரி ஆனால் பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” என்றார்.
பின் அனைவரும் வந்ததும் ஒன்றாக சேர்ந்து உணவு உண்டனர். பயண கிளப்பினால் விக்ராந்த் தான் தூங்க செல்வதாக சென்றுவிட்டான். தமயந்தி பரந்தாமன் இருவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அமரேந்திரனுக்கு போன் வர அவர் போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார்.
மதுவும் வித்யாவும் இன்று ஷாப்பிங் செய்த களைப்பில் அவர்கள் அறைக்குச் செல்ல, சம்யுக்தா சமையலறையில் இருந்தாள். அங்கே வந்த தீக்ஷிதன், “யுக்தா இந்த வேலையை எல்லாம் எதுக்கு பாத்துட்டு இருக்க? இந்த வேலையை பாக்கத்தான் இத்தனை பேரு இருக்காங்களே.” என்றான்.
“கொஞ்ச வேலை தானே முடிச்சு வச்சுட்டு வந்துடறேன்.”என்றாள்.
“சரி எனக்கு கொஞ்சம் பால் சூடாக்கி தரியா?” என்று கேட்க இருங்க என்றவள் அவனுக்கு பாலை சூடாக்கி கொடுத்தாள். அதை வாங்கி குடித்துக் கொண்டே தீஷிதன் அவளிடம், “நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு. சீக்கிரமா எழுந்து ரெடியாகு. அப்புறம் நான் உன்னை கூட்டிட்டு போனதும் அங்க நீ எந்த டென்ஷனும் ஆகக்கூடாது. அந்த நிலமைய நீ ரொம்ப கூலா ஹேண்டில் பண்ணனும்.” என்றான்.
அவளுக்கு எதுவும் புரியாவிட்டாலும், “சரிங்க.” என்று மட்டும் சொன்னாள். “சரி சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு போய் தூங்கு குட் நைட்” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான். தமயந்தியும் பரந்தாமனும் பேசிக்கொண்டு இருந்தனர். “அண்ணா இந்த விஷயம் தீஷிக்கு தெரியுமா?”
“அவனுக்கு தெரியும் தமயந்தி. ஆனா அவங்க எங்க இருக்காங்கன்னு மட்டும் அவனுக்கு தெரியாது.”
“என்ன அண்ணா சொல்றீங்க? அப்போ உங்களுக்கு அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா?”
“அது வந்து தமயந்தி…” என்று இழுத்தார்.
“சொல்லுங்க அண்ணா உங்களுக்கு தெரியுமா?”
“தெரியும் தமயந்தி.”
“அப்போ ஏன் அண்ணா இவ்வளவு நாளும் எங்க கிட்ட சொல்லல? எதுக்காக இப்படி பண்ணிங்க?”
“தமயந்தி எல்லாம் சொல்ல வேண்டிய நேரம் வரும். அப்போ நான் சொல்றேன். இப்போ எதுவும் எங்கிட்ட கேக்காதமா.”
“அண்ணா நீங்க என்கிட்ட வேணா ஏதாவது சொல்லி என்னை சமாளிக்கலாம். ஆனால் தீக்ஷிக்கிட்ட அது நடக்காது. எனக்குத் தெரிஞ்சு அவன் அவங்க இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சி இருப்பானு தான் நான் நினைக்கிறேன்.”
“இல்ல தமயந்தி அவனுக்கு எதுவும் தெரியாது.”
“வாய்ப்பே இல்ல அண்ணா கண்டிப்பா தீஷிதன் அவங்க இடத்தை கண்டு பிடிச்சு இருப்பான். நீங்க வேணும்னா பாருங்க.” என்று அடித்துக் கூறினார் தமயந்தி.
“சரிமா அதை அப்புறம் பாக்கலாம். நீ போய் ரெஸ்ட் எடும்மா.”
“சரிங்க அண்ணா எதையும் போட்டு நீங்க குழப்பிக்காதீங்க. எல்லாம் நல்லாதாவே தான் நடக்கும். போய் தூங்குங்க காலையில பேசலாம்.” என்று தமயந்தி அங்கிருந்து சென்றார்.
……………….…………………………………
அடுத்த நாள் காலை நேரத்துக்கு எழுந்து வேலைகளை செய்து முடித்து இருந்தாள் சம்யுக்தா.
“என்ன சம்மு நான் வந்து செஞ்சு இருப்பேன்ல?” என்றவாறு அங்கே வந்தார் தமயந்தி.
“பரவாயில்ல அம்மா.” என்றவள் அவரிடம் ஒரு காபி கப்பை கொடுத்தாள்.
“அம்மா நீங்க குடிச்சிட்டு இருங்க நான் மத்தவங்களுக்கும் காபி கொடுத்துட்டு வந்துடுறேன்.”
“சம்மு விக்ராந்த்தும் அவரும் நல்ல தூங்குறாங்க அவங்கள எழுப்பாதடா அப்புறமா கொடுக்கலாம்.”
“சரிங்க அம்மா” என்றவள் ஹாலுக்கு வர அங்கே பரந்தாமன் அன்றைய பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தார். அவரிடமும் காபியை கொடுத்துவிட்டு மதுரா வித்யாவின் அறைக்குச் சென்று அவர்களை எழுப்பி காப்பியை கொடுத்தாள்.
பின் சமையல் அறைக்கு வந்து தமயந்தியுடன் சமையல் செய்யும்போது தமயந்தி, “அம்மாடி நீ எதுவும் பண்ணாதம்மா.. நான் இதை எல்லாம் பண்ணிக்கிறேன் நீ போய் ரெடியாகு. தீஷி ஏதோ முக்கியமான இடத்துக்கு போறேன்னு சொன்னான்ல லேட்டானா அவனுக்கு ரொம்ப கோபம் வரும்” என்றார். “சரி அம்மா” என்ற சம்யுக்தா அவளது அறைக்கு வந்து அழகான பச்சை நிற புடவை ஒன்றை அணிந்து ரெடியாகி விட்டு அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
“இவங்க எங்க கூப்பிடறாங்கன்னு தெரியலையே.. ஏதாவது முக்கியமான விஷயமா இருக்குமா? அப்படி என்ன விஷயமா இருக்கும்?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.
அப்போது அங்கே வந்த தீக்ஷிதன் “யுக்தா எதுக்கு இவ்வளவு யோசிச்சிட்டு இருக்க? இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க போக போறோம்னு உனக்கே தெரிஞ்சிரும் போலாமா?” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.
“நீங்க இன்னும் காபி குடிக்கலையே” என்றாள். அவனும் “இல்ல யுக்தா எனக்கு இப்போ வேணாம். நான் அப்புறமா கிடைச்சிக்கிறேன் வா போலாம்” என்றவன் தந்தையிடமும் அத்தையிடமும் சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.
………………………………………………….
பிரகாஷ் காலையில் தீஷிதன் ஆபிஸ்க்கு போக ரெடியாகிக் கொண்டிருக்கும்போது சீமா அவனிடம், “எனக்கு மார்னிங் சாப்பிட ஃபுட் ஆர்டர் பண்ணிட்டு போயிடுங்க” என்றாள். அவனோ இருக்கிற கடுப்பில், “ஏன் அது கூட உனக்கு ஆர்டர் பண்ண தெரியாதா? என்று கத்தினான். அதற்கு அவள், “என்ன இப்போ எதுக்காக இப்படி கத்துறீங்க? இங்க பாருங்க என்கிட்ட உங்க குரலை உசத்தி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. உங்க பிள்ளையை தானே நான் சுமந்திருக்கிறன் அப்போ அதை பாத்துக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு தானே இருக்கு. என்ன மொத பொண்டாட்டிய பார்த்ததும் என் மேல கோபம் வருதா? என்றாள் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவாறு.
“சீமா ஏன் என்னை இப்படி புரிஞ்சுக்காம பேசுற? நானே செம்ம டென்ஷன்ல இருக்கேன் நீ வேற மேலும் டென்ஷன் படுத்தாத. இப்ப என்ன உனக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணனும் அவ்ளோதானே. சரி நான் ஆர்டர் பண்றேன் நல்லா ரெஸ்ட் எடு.”
“ஆமா இப்ப எங்க போறீங்க?”
“ப்ரொஜெக்ட் சைன் பண்ணனும்ல அதுக்கு தான்.”
“அப்படியா சரி அந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா வந்துடுங்க. என்னை இந்த ஊர் சுத்தி பார்க்க கூட்டிட்டு போங்க.”
“நாம என்ன ஹனிமூனா வந்துருக்கோம்?”
“வந்துட்டாலும் சொன்னதைக் கேளுங்க. என்னை வெளியே கூட்டிட்டு போறீங்க அவ்வளவுதான்” என்றவள் மறுபடியும் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.
பிரகாஷ் தனது காலை ஓங்கி தரையில் உதைத்து விட்டு அங்கிருந்த பேக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். போகும் போது மறக்காமல் அவளுக்கு உணவு அனுப்புமாறு சொல்லிவிட்டே சென்றான்.
தீஷிதனின் ஆபீசுக்கு சென்று அவனுக்காக காத்திருந்தான். பிரகாஷிற்கு அந்த சம்யுக்தாவின் கீழ் வேலை செய்ய வேண்டும் என்ற நினைப்பே வேப்பங் காயாக கசத்தது. ‘ச்சே போயும் போய் அவ கீழ தான் வேலை செய்யணும். இப்பிடியாயிடுச்சே. இதை டாடிக்கிட்ட சொன்னா என்ன பண்ணுவாங்கன்னு தெரியாதே. இவன் வேற அவ பெரிய உலக அழகி மாதிரி அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கிறான்.’ என்று மனதுக்குள் தீஷிதனை திட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அப்போது அந்த ஆபீஸை முன்னால் ஒரு பிஎம்டபிள்யூ ஒன்று வந்து நின்றது. அதைப் பார்க்க அதிலிருந்து இறங்கிய தீஷிதன் மறுபக்கம் வந்து, சம்யுக்தாவின் பக்கம் இருந்த கார் கதவை திறந்து விட்டான். சம்யுக்தாவிற்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.
“என்னங்க இது நானே வந்திருப்பேன்ல.”
“பரவால்ல இப்போ நீ என்னோட வைஃப் ஆகப் போறவ. உன்னை எப்படி எல்லாமோ பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுறேன்னு உனக்கு தெரியாது யுக்தா. இதுவும் நான் உன்னை பார்த்துக்கிற விஷயத்துல ஒன்று. நீ என்னோட மகாராணி டி” என்றவன் அவளின் கையைப் பிடித்து அழைத்து வந்தான்.
அங்கே முன்னாடி இருந்த ஷோபாவில் உட்கார்ந்து இருந்த பிரகாஷை கண்டுகொள்ளாமல் அவனுடைய கேபினுக்கே அவளை அழைத்துச் சென்றான். சம்யுக்தாவிற்கும் அவன் கையைப் பிடித்துக் கொண்டு வருவது கூச்சமாக இருந்ததால் தலையைக் குனிந்து கொண்டே சென்றாள். அதனால் அவள் பிரகாஷை கவனிக்கவில்லை.
தனது அறைக்கு அழைத்துச் சென்ற தீஷிதன் அவளை அங்கிருந்த அவனின் எம்பி சீட்டில் அமர வைத்தான். “ஐயோ என்னங்க பண்றீங்க? எனக்கு எந்த சீட்டெல்லாம் வேண்டாம். நான் இதுல உட்கார மாட்டேன். நீங்களே உட்காருங்க. இதுக்கு நான் கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவங்க” என்று சட்டென்று அந்த சேரில் இருந்து எழுப்பினாள்.
அவளது தோளைப் பிடித்து மறுபடியும் அந்த சேரில் உட்காரவைத்த தீஷிதன், “யுக்தா நான் சொல்ல வர்றதை கவனமா கேளு. இன்னைக்கு நீ இந்த சீட்டிலேதான் உட்கார்ந்துக்க போறே. இந்த கம்பெனில நீயும் ஒரு பார்ட்னர். நீ தாரளமா இந்த சேரில் உட்காரலாம்.”
“நீங்க ஏங்க இப்படி எல்லாம் பண்றீங்க?”
“நீ என்னை கல்யாணம் பண்ணிக்க போறதையே என்னால ஏத்துக்க முடியல. இது வேறயா? ப்ளீஸ் என்னை ரொம்ப சங்கடப்படுத்தாதீங்க. எனக்கு இதெல்லாம் வேணாம்” என்றாள். தீக்ஷிதன் அவளை கண்டிப்புடன் ஒரு பார்வை பார்த்தான். இங்க பாரு இன்னைக்கு நீதான் இந்த கம்பனியோட எம்டி புரிஞ்சுதா?” என்று கேட்க, அவளும் அவன் கூறியதற்கு அதற்கு மேல் மறுத்துப் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“குட் கேர்ள் இப்படித்தான் என்னைக்கு நான் எது சொன்னாலும் நீ மறுத்து பேசக்கூடாது” என்றவன் அவள் தலையை வருடி விட்டான்.
அப்போது அவன் கேபின் கதவை தட்டிக் கொண்டு அனுமதி கேட்டு உள்ளே வந்தான் புகழ்.
“உள்ளே வரலாமா?” என்றான் புகழ்.
“அடி வாங்குவடா. நீ வரும்போது எதுக்குடா பர்மிஷன் கேட்டுக்கிட்டு?”
“இல்ல நண்பா முன்னாடின்னா நீ மட்டும் இருப்ப நான் வரலாம். இப்போ தங்கச்சி வேற இருக்குல்ல அதான் எதுக்கும் ஒரு சேப்டிக்கு கதவை தட்டிட்டே வந்தேன்” என்றான்.
அவனது தோளைத் தட்டிய தீஷிதன், “சரி எல்லாரும் வந்தாச்சா? அந்த முக்கியமான ப்ராஜெக்ட் பண்ண அந்த கம்பனியோட எம்டி வந்துட்டாங்களா?”
“எது நீ அவன கவனிக்கல. சூப்பர்டா நான் நம்பிட்டேன் நம்பிட்டேன்..” என்றான் புகழ்.
“யார் அது?” என்றாள் சம்யுக்தா.
“அதுவா சம்மு நீயே அவர் வரும்போது பார்த்து தெரிஞ்சுக்கோ சரியா? நான் போய் அவரை வரச் சொல்றேன்” என்ற புகழ் பிரகாஷைப் பார்க்க வெளியே சென்றான்.
“மிஸ்டர் பிரகாஷ் எம்டி வந்தாச்சு. நீங்க உள்ள போங்க” என்றான். அவனும் சரி என்று கதவை தட்டி விட்டு உள்ளே சென்றான்.
“எஸ் கம்மிங்” என்றான் சம்யுக்தா அருகே ஒரு சேரை எடுத்து போட்டுக் கொண்டு அதில் உட்கார்ந்திருந்த தீஷிதன்.
உள்ளே வந்த பிரகாஷ் அங்கே எதிர்ப்பக்கமாக எம்டி சீட்டில் அமர்ந்து இருந்த சம்யுக்தாவைப் பார்த்து அதிர்ச்சியடையவில்லை. ஆனால் பிரகாஷை நிமிர்ந்து பார்த்த சம்யுக்தா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். சேரில் இருக்கும் அவளது கையை பற்றிக் கொண்டான் தீஷிதன். அவள் தீஷிதனை தனது கலங்கிய கண்களால் பார்க்க, அவனோ அவனது கண்களாலே அவளை சமாதானப்படுத்தினான். அவளும் ஒரு பெரும் மூச்சை இழுத்து விட்டு, கண்களை மூடி திறந்தாள். பின் பிரகாஷைப் பார்த்து, “உட்காருங்க மிஸ்டர் பிரகாஷ்” என்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
தீஷிதனும் சம்யுக்தாவும் லெகேங்கா இருக்கும் இடத்திற்கு வர அங்கே புகழ் தலையில் கையை வைத்துக் கொண்டு ஒரு ஓரமாக இருந்த சேரில் உட்கார்ந்து இருந்தான். அவனைப் பார்த்தவர்கள், அவனருகில் வந்தனர்.
“என்னாச்சு புகழ்?” என்றான். அவனை நிமிர்ந்து பார்த்த புகழ் எதுவும் சொல்லாமல், அவன் கையை மதுரா மற்றும் வித்யா பக்கம் காட்டினான். அங்கே இருவரும் மலைபோல் குவிந்த லெகேங்காவையே பார்த்துக் கொண்டு இருந்தனர். தீக்ஷிதனுக்கு தனது நண்பனின் நிலை புரிந்தது. சம்யுக்தா தலையில் அடித்துக் கொண்டு அவர்களிடம் சென்றாள். வித்யாவின் தலையில் ஒரு கொட்டு வைத்தாள்.
“வித்து என்னடி பண்ணி வச்சிருக்கிறீங்க ரெண்டு பேரும்?”. என்று கோபமாக கேட்டவளை பார்த்து இருவரும் ஒரே சமயத்தில், “இங்க இருக்கிற லெகேங்கா எதுவுமே எங்களுக்கு பிடிக்கல…” என்றனர்.
“ஆமா, அண்ணி எதுவும் பிடிக்கல…” என்று சோகமாக கூறினாள் மதுரா.
“உங்களுக்காக இவ்வளவு லெகேங்கா எடுத்துக் காட்டிருக்காங்க… நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது இதுல இருந்து ஆளுக்கு ஒண்ணு எடுக்கிறீங்க… ம்ம்ம்ம் சீக்கிரமா எடுங்க…” என்றாள். அவளது குரலில் இருந்த கட்டளைக்கு மறுபேச்சு பேச இருவராலும் முடியவில்லை.
நடப்பதை பார்த்துக் கொண்டு நின்ற தீஷிதனின் அவர்களிடம் வந்தான். சிறிது நேரம் அங்கிருந்த லெகேங்காவையே பார்த்தவன் இருவருக்கும் ஒரு ஒரு லெகேங்காவை எடுத்துக் கொடுத்து, “இது சூப்பரா இருக்கு…” என்றான். உடனே அவர்களும், “ஆமால இது ரொம்ப சூப்பரா இருக்கு… நாங்க இதையே எடுத்துகிறோம்…” என்றனர்.
இப்படியாக ஐவரும் ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் காலையில் வீட்டிற்கு வர்றேன் என்று அவனது ஃப்ளாட் அருகே இறங்கிக் கொண்டான் புகழ். வீட்டிற்கு வந்து பார்த்தால் பரந்தாமன் இன்னும் வந்திருக்கவில்லை. எல்லோரும் அவரவர் அறைகளுக்குச் ஃப்ரெஷாக சென்றனர்.
தனது அறைக்கு வந்த சம்யுக்தா அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டு தலையை பின்னால் சாய்த்துக் கொண்டு கண்களை மூடியபடி இருந்தாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் வந்த வண்ணமே இருந்தது. காதுகளில் சீமா கூறிய வார்த்தைகளே ஒலித்துக் கொண்டு இருந்தன.
ஆம், இன்று ஷாப்பிங் முடிந்ததும் தீக்ஷிதன் பில் போட சென்றான். மதுரா வாஷ்ரூம் போக வேண்டும் என்று சொல்ல, வித்யா அவளுடன் சென்றாள். புகழுக்கு கால் வர அதை அட்டென்ட் பண்ணி பேசிக் கொண்டு வெளியே சென்றுவிட்டான். தனியாக நின்றவள், மெல்ல தீஷிதனுக்கு அருகில் வந்து நின்றாள்.
அங்கே வந்த சீமா, இவளை நக்கலாக பார்த்து, “பாரேன் கழுதைக்கு வந்த வாழ்வை… எத்தனை கல்யாணம் பண்ணினாலும் பிள்ளையே பிறக்காதுனு தெரிஞ்சும் அடுத்தவன் வாழ்க்கை நாசமாக்க பார்க்கிற… அப்பிடி என்ன உனக்கு ஆசை…. இதுக்கு கல்யாணம் பண்ணணுமா? இதுக்குத்தான் எத்தனையோ இடம் இருக்கே அங்கே போய் தீர்த்துக்க வேண்டியதுதானே… உன்னோட அம்மாவும் இப்பிடித்தான் உன்னை பெத்திருப்பா போல அதுதான் நீயும் இப்பிடி அலையுற…” என்று கூரிய கத்தி போன்ற வார்த்தைகளை சம்யுக்தாவின் நெஞ்சில் இறக்கி விட்டுச் சென்றாள். சம்யுக்தா அவள் சொன்னதற்கு அழவில்லை. அமைதியாக நின்றாள். தீஷிதனை பார்க்க அவனோ மும்முரமாக போனை பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது முகமே அவன் ஏதோ முக்கியமான வேலையில் இருப்பதாக சொல்ல, எதுவும் பேசாமல் நின்றாள் சம்யுக்தா.
எப்போது அறைக்கு வருவோம் என்று காத்திருந்ததைப் போல அறைக்குள் வந்ததும் சம்யுக்தாவால் அவளை அதற்கு மேல் அடக்க முடியாமல் அழுதாள். ஷோபாவில் சாய்ந்து இருந்தவள் கண்களில் கண்ணீர் அருவியாக வந்து கொண்டிருந்தது. கண்ணீரும் நின்றபாடில்லை. அவளது காதுகளில் சீமா சொன்ன வார்த்தைகள் திரும்பித் திரும்பி கேட்க, காதுகளை தனது இரு கைகளாலும் மூடிக் கொண்டு கதறினாள். அப்போது அவளது அறைக்கதவை திறந்து, அதை லாக் பண்ணிவிட்டு வேகமாக வந்து அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் தீஷிதன்.
தன்னை அணைத்துக் கொண்டவனை நிமிர்ந்து பார்க்காமலே, “போயிடுங்க… உங்களுக்கு நான் வேண்டாம்… ப்ப்ளீஸ் என்னை விட்டு போயிடுங்க…” என்று அவனை பிடித்து தள்ளினாள். ஆனால் அவளால் அவனை தள்ள முடியுமா என்ன? அவளை மேலும் தன் இறுகிய அணைப்பிற்குள் கொண்டு வந்தவன்,“யுக்தா என் கண்ணுல என்னை பாருடா…” என்று அவளது முகத்தை பார்க்க முயன்றான். ஆனால் அவளோ அவனை பார்க்க கூடாது என்று அவன் நெஞ்சிலே முகத்தை மறைக்க, அவன் புன்னகையுடன் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்தான்.
“யுக்தா…. கண்ணம்மா என்னை பார்க்கலனாலும் பரவாயில்லை நான் சொல்றதை கேளு…” என்றான். நீ சொல்வதை நான் கேட்ட மாட்டேன் என்பது போல தலையை அசைக்க, அவள் தலையில் முத்தம் வைத்தவன், தன்னோடு அவளை மேலும் இறுக்கி அணைத்து, மெல்ல தன் மடிமீது அவளை கொண்டுவந்து, இடமும் வலமுமாக குழந்தையை மடியில் வைத்து அசைப்பது போல இவளையும் அசைத்தான்.
“கண்ணம்மா… நான் முன்னாடியே சொல்லியிருக்கேன் நம்மளோட கண்ணீர் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்… அதை நாம நமக்கு பிடிச்சவங்களுக்ககா யூஸ் பண்ணலாம்… அதை விட்டுட்டு ரோட்டுல போற ஏதோ ஒண்ணு வேலை இல்லாம எதையோ சொல்லிட்டுனு நீ அழுதிட்டு இருப்பியா? அவங்களுக்கு நீ உன்னோட தைரியத்தால பதிலடி கொடுக்கணும்… நீ வாழுற வாழ்க்கையை பார்த்து அவங்க பொறாமைப்படணும்…” என்று சொல்ல அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “அப்போ…. அப்போ…. நீங்க அவ சொன்னதை…..”
“எல்லாத்தையும் கேட்டுட்டுதான் இருந்தேன்…” என்றான். இதைக் கேட்ட சம்யுக்தா என்ன நினைத்தாளோ தெரியாது அவனது நெஞ்சிலே தனது கைகளால் அடித்தாள். சம்யுக்தா எதற்காக அடிக்கிறாள் என்று தீஷிதனுக்கு புரிந்தது. சிறிது நேரம் அவளிடம் அடியை வாங்கிக் கொண்டவன், “போதும்டி… நீ அடிக்கிறது எனக்கு வலிக்காது.. உன்னோட கைக்குத்தான் வலிக்கும்… இங்க பாரு அவ பேசும் போது நான் பக்கத்துல இருந்தும் எதுவும் பேசலனுதானே உனக்கு கோபம்… அங்க சத்தம் போட்டா போற வர்ற எல்லோரும் பாப்பாங்க… அந்த இடத்தில என்னோட பொண்டாட்டி காட்சிப் பொருளாக நிக்க கூடாதுன்னு தான் நான் ஒண்ணும் பேசல… ஆனால் சிறப்பா ஒரு வேலை பண்ணியிருக்கேன்…” என்றான்.
“ஏன் என்னை இப்பிடி அவ பேசுறா? உண்மையிலே நான் இப்பிடி ஆம்பளைகு அலையுறவளா? இந்த கல்யாணம் வேண்டாம்னு உங்ககிட்ட எத்தனை தடவை சொன்னேன் நீங்கதான் கேட்கல… இப்போ என்னோட பொறப்பையே தப்பா பேசுறா? நீங்க என்ன பண்ணினாலும் அவ சொன்னது என் காதிலேயே கேட்டுட்டு இருக்குங்க…. என்னால முடியல…” என்றவள் மறுபடியும் அழ ஆரம்பித்தாள். தன்னவளை அழவைத்தவர்கள் மீது கொலவெறி ஏற்பட்டது தீஷிதனுக்கு.
சம்யுக்தா மிகவும் அழுது கொண்டிருந்தாள். அவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று யோசித்தான். பின்னர் ஒரு முடிவுடன், அவள் முகத்தை கையில் ஏந்தி, “இங்க பாரு யுக்தா, நீ வந்து தப்பான வழியில் பிறக்கல.. உன் அம்மா அப்பாவோட தூய்மையான காதலுக்கு கிடைத்த பொக்கிஷம் தான் நீ.” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட சம்யுக்தாவின் கண்கள் விரிந்தன. அவனது முகத்தை ஒருவித தவிப்புடன் பார்த்து, “என்ன சொல்றீங்க, நீங்க சொல்றது நிஜமா?”
“ரெண்டு பேரோட பேரன்பில பிறந்தவ தான் நீ.. உன்னை யாரும் தப்பா சொல்ல முடியாது.” என்றான்.
அதை கேட்ட சம்யுக்தா, “அப்படின்னா என்னோட அம்மா, அப்பாவை உங்களுக்கு தெரியுமா?”
“ரொம்ப நல்லாவே தெரியும்.” என்றான்.
அவனது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, “ப்ளீஸ் சொல்லுங்க… எங்க அம்மா அப்பா யாரு? அவங்க எங்க இருக்காங்க? எப்படி இருக்காங்க? நான் அவங்களை பார்க்கணும்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்று கெஞ்சினான்.
அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், கண்ணீரைத் துடைத்து விட்டான். “யுக்தா எல்லாத்துக்கும் பதில் இருக்கு. ஆனா அது சொல்றதுக்கான சந்தர்ப்பம் இது கிடையாது. கண்டிப்பா உன்னோட அப்பா அம்மாக்கிட்ட உன்னை கூட்டிட்டு போவேன். அதுவரைக்கும் நீ யார் எது சொன்னாலும் அதை காதுல வாங்கிக்காம பேசாம அமைதியா இருக்கணும். உனக்கு ஒண்ணுனா நாங்க இருக்கோம். அதனால நீ தைரியமா இரு. இன்னைக்கு அவ பேசின பேச்சுக்கு நீ திருப்பி குடுக்க ரெடியாயிரு. உன்னை எப்படி மாத்தறேன்னு மட்டும் பாரு.” என்றான்.
“என்னை மாத்த வேணாம்ங்க. நான் இப்படியே தான் இருப்பேன்.”
“ஐயோ நான் என்ன சொல்றேன், நீ என்ன சொல்ற? உன்னோட ஆட்டிடியூட்டைத் தான் மாத்தணும்னு சொன்னேன். மத்தபடி உன்னோட அப்பியரன்ஸை நான் பேசவே இல்ல. நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும். ஆனா மத்தவங்களுக்கு பதிலடி கொடுக்கிற அளவுக்கு கெத்தா இருந்தா இன்னும் பிடிக்கும். நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு. சீக்கிரமா எழுந்திரிச்சு ரெடியாயிரு. என்றவன், “சரி நான் போகட்டுமா?” என்று கேட்க, அவள் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு இருந்தாள்.
“என்ன யுக்தா இங்கே இருக்கவா?” வேகமாக இல்லை என்று தலையசைத்தாள். சிரித்துக் கொண்டு எழுந்தவன், அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு, “இங்க இருந்து எதையும் யோசிக்காமல் ஃப்ரெஷாகிவிட்டு வா சாப்பிடலாம். கல்யாணம் அன்னைக்கு நீ ரொம்ப ஹேப்பியா இருக்கணும்.” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.
சிறிது நேரத்தில் அனைவரும் கீழே வந்தனர். சம்யுக்தாவும் டைனிங் டேபிள் உணவு பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள். பரந்தாமனும் தமயந்தியின் குடும்பமும் வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம் என்று தீஷிதன் சொன்னான். அதனால் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
தீஷிதனும் தனது போனில் ஏதோ முக்கியமான வேலை ஒன்று செய்து கொண்டிருந்தான். மதுராவும் வித்யாவும் பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு, “அத்தை வந்தாச்சு..” என்று மதுரா துள்ளியோட பின்னால் வித்தியாவும் மதுராவின் அத்தையைப் பார்க்க சென்றாள்.
காரில் இருந்து இறங்கிய தமயந்தி மதுராவை கண்டதும், “மது குட்டி.” என்று அவளை அணைத்துக் கொண்டார். மதுவும், “அத்தை.” என்றவாறு அவரை அணைத்து தமயந்தியின் கன்னத்தில் முத்தங்கள் கொடுத்தாள்.
“அத்தை உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணேன்.. நல்லா இருக்கீங்களா?”
“நான் நல்லா இருக்கேன் டா கண்ணு.”
“போதும் மது போதும்.. அப்படியே எங்களை கொஞ்சம் பார்க்கிறது.” என்றான் விக்ராந்த்.
அவனைப் பார்த்தவள், “விக்கி என்னப்பா இப்படி சொல்ற? நீயாரு என்னோட உயிர் தோழனாச்சே.. எப்படி இருக்க விக்கி?” என்று ஒரு பிரெண்ட்லி ஹக்கை அவனுக்கு கொடுத்தாள்.
“நான் ரொம்ப நல்லா இருக்கேன் மது.. நீ ஓகே தானே?”
“யா விக்கி ஐ அம் பைன்.. மாமா வரலையா?” என்று கேட்க,
“நல்லவேளை மருமகளே.. இப்பவாவது இந்த மாமாவோட ஞாபகம் உனக்கு வந்துச்சே..” என்றவர் கைகளை பிடிக்துக் கொண்டு, “மாமா உங்களை மறப்பேனா? வாங்க உள்ளே போலாம்.” என்று அவர்களை உள்ளே அழைத்து வந்தாள்.
வாசலுக்கு வந்த தமய அங்கே நின்றிருந்த சம்யுக்தாவை அடையாளம் கண்டு கொண்டார்.
“சம்யுக்தா இங்க வாடா.” என்றதும், அவரின் அருகில் சென்றாள். “அழகா இருக்கடா கண்ணு அப்படியே..” என்று ஏதோ சொல்ல வந்தவர் பரந்தாமனின் பார்வையில் அத்தோடு நிறுத்திக்கொண்டு, “அப்படியே அந்த மகாலக்ஷ்மி மாதிரி இருக்க..” என்றார். அதுக்கு சம்யுக்தா சிரித்துக்கொண்டு, “அம்மா ஏன்மா பொய் சொல்றீங்க? மகாலக்ஷ்மி எவ்வளவு அழகா இருப்பாங்க. நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்? பாருங்க குண்டா இருக்கிறேன்.” என்றாள்.
அதற்கு விக்ராந்த், “அக்கா..” என்று தொடங்கியவன் அவளிடம், “நான் உங்களை அக்கானு சொல்லலாம்ல?” என்று கேட்டான்.
“தாராளமா சொல்லலாம்..”
“அக்கா அழகு என்பது மனசு தான்.. மனசு அழகா இருந்தா போதும். அத்தான் உங்களைப் பற்றி சொன்னாங்க.. இதுமட்டுமல்ல இந்த மதுராவும் உங்களைப் பத்தி தான் சொல்லிட்டே இருந்தா. இப்ப நேர்ல பார்த்ததும் அவங்க எதுவும் ஓவரா சொல்லல.. எல்லாம் சரியா தான் சொல்லி இருக்காங்கனு கன்ஃபார்ம் ஆயிடுச்சு..” என்றான்.
“என்ன வாசலையே நின்று பேசுறீங்க? விக்கி உள்ள வா..” என்றார் பரந்தாமன்.
பின் வித்யாவை காட்டி, “இவதான் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் வித்யா… அதுமட்டும் இல்ல நம்ம சம்யுக்தா அண்ணியோட தங்கச்சி..” என்று வித்யாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் மதுரா. ஏனோ விக்ராந்துக்கு வித்யாவை முதல் பார்வையிலே பிடித்துப் போனது. வித்யா அவனை பார்க்கும்போது சட்டென்று அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டான். வித்யா அவனை முறைத்துக் கொண்டு உதட்டை சுழித்தாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
புடவை எடுக்க வந்திருக்கும் துணிக் கடையின் முன்னால் வந்து நின்ற தீஷிதனின் காரைப் பார்த்த துணிக்கடையின் முதலாளி வேகமாக பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். தீஷிதன் முன்னால் கிட்டத்தட்ட மண்டியிட்டவாறு குனிந்து வணக்கம் போட்டார்.
“சார் நீங்களா எங்க கடைக்கு வந்திருக்கிறீங்க.. என்னால நம்பவே முடியவில்லை சார்… உள்ள வாங்க சார்….” என்று கும்பிடு போட்டு உள்ளே அழைத்துச் சென்றார். அவருக்கு சிறு தலையசைப்பை மாத்திரம் கொடுத்துவிட்டு நடந்த தீஷிதனை பார்த்த சம்யுக்தா அவன் பின்னாடி செல்ல, அவனோ அவளது கையை தனது வலிமையான கையினால் பிடித்துக் கொண்டு சென்றாள். அவர்கள் முன்னே செல்ல மதுரா, புகழ், வித்யா மூவரும் பின்னால் சென்றனர்.
“சார் என்ன பார்க்கலாம்னு சொல்லுங்க….” என்றார் கடை முதலாளி.
“கல்யாணத்துக்கு புடவை எடுக்கணும்…” என்றான்.
“அதோ அந்தப்பக்கம் இருக்கிறது விஐபிகளின் ஃபங்ஷனுக்குனு இருக்கிற ட்ரெஸ் அங்க போகலாம்….” என்றவர் அந்த இடத்திற்கு அவர்களை அழைத்து வந்தார்.
அங்கிருந்த பணியாட்களிடம், “சார் கேக்கிற புடவையை எடுத்துக் காட்டுங்க… சார் நீங்க பார்த்திட்டு இருங்க நான் இப்போ வந்திடுறன்…”என்று அங்கிருந்து சென்றுவிட்டார்.
மதுராவும் வித்யாவும், “எங்களுக்கு புடவை எல்லாம் வேண்டாம்… லெகேங்கா எடுத்துக்கிறம்… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து புடவை எடுங்க…” என்று சொல்லிவிட்டு புகழை அழைத்துக் கொண்டு லெகேங்கா எடுக்க சென்று விட்டனர்.
சம்யுக்தா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்த தீக்ஷிதன், “யுக்தா இப்பிடி நிலத்தையே பார்த்திட்டு இருந்தா எப்படி புடவை எடுக்கிறது? கொஞ்சம் நிமிர்ந்து புடவையை பாரு…” என்றதும் சம்யுக்தா நிமிர்ந்து அமர்ந்தாள்.
அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸ், “இங்க பாருடி பார்க்க ஹாலிவுட் நடிகர் மாதிரி எவ்வளவு அழகா இருக்கிறாரு…. இவரு ஏன் இப்படி குண்டா பார்க்க சிலிண்டர் மாதிரி இருக்கிற இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறாரு?” என்று ஒருத்தி சொல்ல, மற்றவளோ, “ஆமாடி என்ன சொல்றதுனே தெரியலை… சரி விடு நமக்கு எதுக்கு பெரிய இடத்து விஷயம்… நம்மளோடநம்மளோட வேலையை பார்ப்போம்…” என்றாள். இவர்கள் பேசியது தீஷிதனுக்கும் சம்யுக்தாவிற்கும் நன்றாக கேட்டது. கோபத்தில் கையை முறுக்கி கொண்டு எழச்சென்ற தீஷிதனின் கையைப் பிடித்துக் கொண்ட சம்யுக்தா, “வேண்டாம்…” என்று தனது கலங்கிய கண்களால் அவனிடம் கூற, அவனும் கண்களை மூடித்திறந்து தனது கோபத்தை அடக்கிக் கொண்டவன், அவர்களுக்கு வேறு மாதிரி தண்டனை கொடுக்க நினைத்தான்.
அவர்கள் ஒவ்வொரு புடவையாக எடுத்துக் காட்ட, “நோ இது நல்லா இல்லை… இந்தஇந்த கலர் நல்லா இல்லை… பார்டர் நல்லா இல்லை… பெரிய பார்டர் இல்லையா… அதை எடுங்க…. இது வேண்டாம்…” என்று அவர்கள் எடுத்துக் காட்டிய கண்களை கவரும் அழகிய புடவைகள் எல்லாவற்றையும் வேண்டாம், நல்லாவே இல்லை என்று சொல்லி நிராகரித்தான். அவர்கள் இருவரும் இவனுக்கு புடவையை காட்டி களைத்து விட்டனர். சம்யுக்தாவிற்கு அவனது இந்த செயலுக்கான காரணம் புரிந்து விட்டது. அவர்களை நினைத்து பாவப்பட்டவள், அவர்கள் காட்டிய புடவை ஒன்றை எடுத்து, “இது ரொம்ப நல்லா இருக்குங்க…” என்றாள்.
அவளையே பார்த்த தீக்ஷிதன் சிரித்துக் கொண்டு, “யுக்தா பேபி… நீ என்ன இவ்ளோ குறைவான விலையில புடவை எடுத்திருக்க? உனக்கு நான் ரொம்ப காஸ்ட்லியான புடவை எடுக்கலாம்னு இருக்கிறன்…”என்றான்.
அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ஸைப் பார்த்தவன், “நீங்க இங்க இருந்து போயிட்டு வேற சேல்ஸ் கேர்ள்ஸை அனுப்புங்க….” என்றான். அவர்களும் விட்டா போதும்டா சாமி என்று நினைத்துக் கொண்டு உடனே அங்கிருந்து ஓடி விட்டனர்.
அங்கே வந்தனர் வேறு இரண்டு பெண்கள். அவர்கள் முகத் அனுபவம் தெரிந்தது. அவர்கள் ஒவ்வொரு புடவையாக எடுத்து அதைப் பற்றி சொல்லியவாறு எடுத்துக் காட்டினார்கள். அதுமட்டுமல்லாது சம்யுக்தாவைப் பார்த்து, “அம்மாடி இதை எடுத்துக்கோ உன்னோட நிறத்துக்கு அழகா இருக்கும்…” என்று சொல்லியவாறு இருந்தனர்.
அப்போது தீஷிதனுக்கு கால் வர, அதை எடுத்துப் பார்த்தான். முக்கியமான கால், அதனால் சம்யுக்தாவிடம், “பேபி நீ புடவையை பாரு டூ மினிட்ஸ்ல வந்திர்றன்…” என்றவாறு போனை எடுத்துக் கொண்டு திரும்ப, அங்கே பிரகாஷ் அவனின் இரண்டாவது மனைவி சீமாவுடன் வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த தீக்ஷிதன் போனில் இருந்தவரிடம், “கொஞ்சம் பிஸியாக இருக்கேன்… லேலேட்டா கால் பண்றன்….” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டு மீண்டும் சம்யுக்தா அருகில் அமர்ந்தவன், அங்கிருந்த புடவையில் அவனுக்கு பிடித்த ஒன்றை எடுத்து சம்யுக்தா மீது வைத்துப் பார்த்தான்.
“வாவ் பேபி இது சூப்பரா இருக்கு நம்மளோட வெடிங்ல எல்லோரும் உன்னைப் பார்த்து அசர போறாங்க யுக்தா பேபி…” என்றான். தீக்ஷிதன் குரலைக் கேட்ட பிரகாஷ் திரும்பிப் பார்க்க, அவனுடன் சம்யுக்தாவும் இருப்பது தெரிந்தது. உடனே தன்னருகில் இருந்து புடவை பார்த்துக் கொண்டு இருந்த சீமாவிடம், “இங்க பாரு சீமா… அந்த தீஷிதனும் சம்யுக்தாவும் வந்திருக்கிறாங்க…”என்றான். அவன் காட்டிய திசையில் பார்த்த சீமா சம்யுக்தாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
“என்ன பிரகாஷ் இந்த சம்யுக்தா இப்பிடி இருக்கிறா? பார்க்க ஆளே மாறிட்டா… ஆனால் அவளோட பூசிப்போன சிலிண்டர் உடம்பு மட்டும் குறையவே இல்லை போல…”என்று கேலி செய்தவள் காதில் வந்தது விழுந்தது தீஷிதன் சொன்னது.
“என்னோட பேபிக்கு 5 லக்ஸ்க்கு புடவை எடுத்துக் காட்டுங்க…” என்று சொன்னதைக் கேட்ட சம்யுக்தா, “ஐயோ எதுக்குங்க அவ்வளவு காஸ்ட்லியா.. அதெல்லாம் வேணாம்ங்க…” என்றாள். ஆனால் தீஷிதன் குறைந்த விலையில் எடுக்க முடியாதுனு சொல்லி விட்டான்.
இங்கே பிரகாஷிடம், “பிரகாஷ் இங்க பாருங்க எனக்கும் ரொம்ப காஸ்ட்லியான புடவை எடுத்துக் கொடுங்க…” என்றாள்.
“எதுக்காக அந்த வீணாப்போனவ காஸ்ட்லியான புடவை கட்டும் போது நான் மட்டும் எந்த விதத்துல குறைஞ்சிட்டேன்?” என்றாள்.
பிரகாஷிற்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு சீமா கேட்ட விலையிலேயே புடவையை காட்டச் சொன்னான். சீமா புடவையை பார்த்துக் கொண்டு இருக்க, பிரகாஷின் கண்களோ அடிக்கடி சம்யுக்தாவின் பக்கம் சென்று வந்தது.
“பேபி இது உனக்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு…” என்று அழகிய புடவை ஒன்றை எடுத்து சம்யுக்தாவின் மீது வைத்துப் பார்த்தான். சம்யுக்தாவிற்கும் அந்த புடவையை பிடித்துள்ளதை அவளது விரிந்த கண்களின் மூலம் அறிந்து கொண்ட தீஷிதன் அதையே செலக்ட் பண்ணினான்.
“சரி போலாமாங்க?” என்று கேட்க,
“இரு பேபி கல்யாணத்துக்குதானே புடவை எடுத்திருக்கிறம்… இனஇன்னும் மற்ற சடங்கு, ரிஷெப்ஷன் எல்லாத்துக்கும் எடுக்கணும்ல….” என்றவன், மேலும் பல புடவைகளை சம்யுக்தாவிற்கு எடுத்து அதை பேக் பண்ண சொல்லிவிட்டு, எழுந்தான். இப்பவாவது முடிஞ்சிதே என்று பெருமூச்சு விட்டவாறு எழுந்தாள் சம்யுக்தா. அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு, “என்ன யுக்தா பேபி இப்போவாவது விட்டானேனு பார்க்கிற…?” என்றவாறு அவளது தோளில் கையைப் போட்டவனை விழி விரித்துப் பார்த்தாள்.
“யுக்தா பேபி இப்படி எல்லாம் என்னைப் பார்த்த என்னால சும்மா இருக்க முடியாது….” என்றவன் அவள் காதில் ஏதோ சொல்ல அவளது முகம் சிவந்தது.
இருவரும் இப்படியே பேசிக் கொண்டு போனதைப் பார்த்த பிரகாஷின் தலையில் தட்டிய சீமா, “அங்க என்ன பார்வை… இங்க பாருங்க…” என்றாள்.
தீஷிதனும் சம்யுக்தாவும் லெகேங்கா இருக்கும் பகுதிக்கு வர, அங்கே புகழ் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
பிரகாஷ் ஹோட்டல் அறையில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனது அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ‘இருக்கிற கடுப்பில கதவை வேற தட்டிட்டு இருக்கிறது யாருன்னு தெரியலையே..’என்றவாறு வந்து கதவைத் திறக்க அங்கே அவனின் மனைவி சீமா நின்றிருந்தாள். அவளை இங்கே சற்றும் பிரகாஷ் எதிர்பார்க்கவில்லை. “சீமா என்னாச்சு என்ன திடீர்னு வந்து இருக்க?” என்று கேட்டான்.
அதற்கு அவளும், “பிரகாஷ் என்னால அங்க தனியாக இருக்க முடியல.. அதுதான் உங்களை பாக்க இங்க வந்துட்டேன்… அதுவும் இல்லாம அங்க அத்தை வேற ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க.. அவங்க சொல்ற வேலையை எல்லாம் என்னால செய்ய முடியல.. நீங்க எப்படியும் இங்க ஒரு நாலு அஞ்சு நாள் இருப்பீங்க இல்ல அதான் நானும் கிளம்பி வந்துட்டேன்…” என்றவள் அந்த அறை இருந்த கோலத்தையும் பிரகாஷின் முகத்தில் இருந்த காயத்தையும் பார்த்து பிரகாஷிடம், “என்னாச்சு பிரகாஷ் இப்படி அடிபட்டிருக்கு? றூமை எதுக்கு இப்படி அலங்கோலப்படுத்தி வச்சிருக்க?” என்றாள்.
உடனே பிரகாஷ், “சீமா இங்க நான் அந்த சம்யுக்தாவ பார்த்தேன்..” என்று கூற, “சம்யுக்தாவையா.. அவ எப்படி இங்க… ஓ ஹோட்டல்ல வேலை பாக்குறாளா?” என்று நக்கலாக கேட்ட சீமாவைப் பார்த்தவன், “அதுதான் இல்லை… அப்படி இருந்தா நான் சந்தோஷப்பட்டு இருப்பேனே.. அவ ஹோட்டல் எல்லாம் வேலை பார்க்கல… இங்கே ஒரு பெரிய பணக்காரன புடிச்சுட்டா… இப்போ அவளுக்கும் அவனுக்கும் கல்யாணம்னு பேச்சு..”
“என்ன சொல்ற பிரகாஷ் சம்யுக்தாவுக்கும் கல்யாணமா? அது எப்படி?”
“அதை ஏன் கேக்குற..” என்றவன் அவன் ஊட்டிக்கு வந்தது முதல் இன்றைய பிசினஸ் மீட்டிங் வரை அனைத்தையும் சொல்லி முடித்தான். இதைக் கேட்டதும் சீமாவிற்கு கோபம் வந்தது, “அந்த சிலிண்டர் மாதிரி இருக்கிறவளுக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கையா? பிரகாஷ் அவளை நிம்மதியா இருக்கவே விடக்கூடாது… நீ என்னை கல்யாணம் பண்ணி இருந்தாலும் எல்லாரும் என்னை உன்னோட ரெண்டாவது பொண்டாட்டி ரெண்டாவது பொண்டாட்டின்னுதானே சொல்றாங்க… அதுக்கு அவதான் காரணம்… அவ மட்டும் நம்ம லைஃப்ல வராம இருந்திருந்தா இந்த வீட்டுக்கு நான் தான் மூத்த மருமகளா, முதல் மருமகளா இருந்திருப்பேன்… எப்படி இருந்தாலும் நான் இப்போ இரண்டாவது பொண்டாட்டி தானே… அதுக்கு காரணமானவளை ஏதாவது பண்ணனும்னு நெனச்சிட்டு இருந்தேன்.. கடவுள் அதுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்துட்டாரு…” என்றாள் வில்லத்தனத்துடன்.
“சீமா பார்த்து பேசு… அவள் இப்போ யாரும் தொட முடியாத இடத்துல இருக்கிறா…”
“அவ எங்க வேணா இருக்கட்டும்.. ஆனா அவளை ஒரு வழி பண்ணிட்டு தான் நான் இந்த ஊட்டிய விட்டு கிளம்புவேன்…”
“நீ புரிஞ்சுதான் பேசுறியா சீமா? இங்க பாருங்க நான் சொன்னா சொன்னதை செய்வேன்.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. இந்த றூமை கிளீன் பண்ண சொல்லுங்க… நான் கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்…” என்றாள்.
பிரகாஷீம் ஹோட்டல் மேனேஜர்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னான். அவரும் உடனே கிளீன் பண்ணுவதற்கு ஆட்களை அனுப்பி வைத்தார் அந்த அறைக்கு..
************************************************
மணிகண்டனும் லீலாவதியும் வித்யாவை எங்கெல்லாமோ தேடி அலைந்தார்கள். ஆனால் வித்யாவை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதே நேரத்தில் வித்யாவை பெண் கேட்டு வரும் சம்பந்தக்காரர்களும் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் தான் இவர்களுக்கு ஞாபகம் வந்தது அவர்களிடம் வித்யா இல்லாததை சொல்லாதது. மணிகண்டனோ லீலாவதி முறைத்துக் கொண்டு வந்திருப்பவர்களை, “வாங்க வாங்க.. வந்து உட்காருங்க..” என்று வரவேற்றார்.
அவர்களோ மகிழ்ச்சியாக வந்து அமர்ந்தனர். “என்னாச்சு மணிகண்டன் தங்கச்சி ஏதோ யோசனையில இருக்கிற மாதிரி இருக்கு..” என்றார். அதற்கு மணிகண்டனும், “ஒன்னும் இல்ல ஜெகன் வித்யா பிரண்ட்ஸ் கூட டூர் போயிட்டா எங்ககிட்ட சொல்லக்கூட இல்ல.. அது தான் உங்ககிட்ட எப்படி சொல்றதுனு இவ தயங்கிட்டு இருக்கா…” என்று சொல்ல,
“இல்ல தங்கச்சி அவளுக்கு தெரியாது… நாங்க தான் சப்ரைஸ் ஆக இருக்கட்டும்னு சொல்லல.. ஆனா அவ காலையில டூர் போயிடுவானு எங்களுக்கு தெரியாது… எங்களை மன்னிச்சிடுங்க…”
“மாமா எதுக்காக மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு.. என்னைக்கா இருந்தாலும் வித்யா எனக்கு தானே… சோ வொரி பண்ணாதீங்க… பிரண்ட்ஸ் கூட போய் இருக்கா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரட்டும்… நான் அப்புறமா வந்து வித்யாவை பாத்துக்குறேன்…” என்றான் விக்டர்.
விக்டர் அவ்வாறு சொன்னதை கேட்ட இருவருக்கும் சென்ற உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. எப்படியாவது வித்யாவை சீக்கிரமாக கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வந்திருந்தவர்கள் மணிகண்டனுடன் பேசிவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
அவர்கள் சென்றதும், “வித்யாவை விக்டருக்கு ரொம்ப புடிச்சிருக்கு… அதனாலதான் அவன் பொறுமையா போறான்… சீக்கிரமா வித்யாவை நம்ம கண்டுபிடிச்சே ஆகணும்…” என்றார்.
லீலாவதியும், “சரிங்க கண்டுபிடிச்சிடலாம்… நான் என்னோட பிரெண்ட்ஸ்ட சொல்லி தேட சொல்றேன்… நீங்க உங்க பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி தேட பாருங்க… எப்படியாவது கண்டுபிடிச்சிடலாம்…” என்று இருவரும் வித்யாவை தேடுவதற்கான முயற்சியில் மீண்டும் ஈடுபட்டனர்.
************************************************
வித்தியாவும் மதுராவும் சேர்ந்து சம்யுக்தாவை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தனர். “வித்து உனக்கு தெரியுமா? எங்க அண்ணன் அப்படியே மான்ஸ்டர் மாதிரி யாருக்கிட்டேயும் நெருங்கி பேசினது இல்ல… ஏன் எங்க அப்பா கிட்டேயும் சரி எங்கிட்டேயும் சரி ஏதாவது சொல்லனும்னா அதுவே ஒரு கட்டளை மாதிரி தான் பேசுவாரு…. அப்படிப்பட்ட எங்க அண்ணன் அண்ணிக்கிட்ட எப்படி பேசுவார் தெரியுமா? யாரு சாமி நீனு எனக்கு கேட்க தோணும்… அவ்வளவு மென்மையாக பேசுவார் தெரியுமா? வெளியில எவ்வளவு முரடா இருந்தாலும் வைஃப் கிட்ட இப்படித்தான் இருப்பாங்க போல….” என்று சம்யுக்தாவை கேலி பண்ணிக் கொண்டிருந்தாள் மதுரா.
அவளுடன் இணைந்து கொண்ட வித்யா, “ஏன் எங்க அக்காக்கு மட்டும் என்ன குறை? எங்க சம்மு அக்காவைப் பார்த்தா யாருக்கும் சத்தமா கூட பேச வராது… எங்க அக்கா முகம் அப்படியே குழந்தை மாதிரி இல்லகா…” என்று தனது தமக்கையை அணைத்துக் கொண்டாள்.
“ஆமா வித்து எனக்கும் அண்ணியை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ ரொம்ப புடிச்சி இருந்துச்சு… ஆனா எப்படித்தான் இவங்கள கஷ்டப்படுத்த உன் அம்மாக்கு மனசு வந்துச்சோ தெரியல…”
“அவங்களை ஏன் மது இப்ப ஞாபகப்படுத்த? நானே அவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிட்டேன்னு சந்தோஷமா இருக்கேன் நீ வேற…” என்றாள் வித்யா.
அப்போது சம்யுக்தா, “வித்யா நீ அம்மா அப்பா கிட்ட இங்க இருக்கிறதை சொல்லிடு… இல்லனா உன்னை காணோம்னு தேடுவாங்க…”
“அக்கா நீ புரிஞ்சுதான் பேசுறியா? நான் மட்டும் இங்கே இருக்கிறது தெரிஞ்சுதுன்னு வை அப்புறம் அந்த விக்டர் என்னை இங்க வந்து இழுத்துட்டு போய் தாலி கட்டிடுவான்… அதனால நான் எங்க இருக்கேன்னு அவங்களுக்கு இப்போதைக்கு தெரிய வேணாம்…” என்றாள் வித்யா.
அவர்கள் கீழே பேசிக்கொண்டு இருக்க அங்கே வந்த பரந்தாமன், “மதுரா இன்னைக்கு நைட்டு உன்னோட தமயந்தி அத்தை, விக்ராந்த் அப்புறம் மாப்பிள்ளை எல்லாரும் வர்றாங்க…”
“வாவ் என்னது விக்ராந்த் அத்தான் வராங்களா? செம ஜாலியா இருக்கலாம்… அத்தை வந்தா தான் கல்யாண வீடு களை கட்டும்…” என்றாள் மதுரா.
“ஏய் யாருடி அது விக்ராந்த்?”
“வேற யாரும் இல்ல வித்து.. அவன் என் அத்தை பையன்… செம லுக்கா இருப்பான்… என்ன பண்றது நான் மட்டும் இந்த புகழை லவ் பண்ணாம விட்டிருந்தா விக்ராந்தை தான் கல்யாணம் பண்ணி இருப்பேன்..” என்றாள்.
“ஓ… ஓஹோ… கதை அப்படி போகுதா… எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல மது… நீ விரும்பினால் நான் விலகிக்கிறன்… நீ தாராளமா விக்ராந்தை கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றவாறு புகழ் வந்தான்.
அதைக் கேட்டதும் மதுரா, “என்கிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரமா உங்களால தப்பிச்சிட முடியாது… எனக்கு இப்போ மட்டும் இல்ல எப்பவும் நீங்க தான்…” என்றாள்.
இதைக் கேட்ட புகழ் சிரித்துக் கொண்டு, “என்னமா பண்றது? உன்கிட்ட இருந்து தப்பிக்க ஏதாவது வழி கிடைக்கும்னு பாத்தேன்… என்ன பண்றது வழி கிடைக்கவே இல்லை… சரி இதுதான் எனக்கு அமைஞ்ச வாழ்க்கைனு நினைச்சுட்டு போக வேண்டியதுதான்…” என்று சொல்ல அவ்விடத்தில் சிரிப்பு அலை ஒன்று எழுந்து ஓய்ந்தது.
“இல்ல சம்மு எனக்கு வெளில ஷாப்பிங் மால்ல வேலை இருந்துச்சு.. அங்க போயிட்டு வரேன்… ஆனா இந்த டைம்க்கு வந்து இருக்கனுமே மீட்டிங் முடிஞ்சிருக்குமே…” என்று சொல்லும்போதே, “வந்துட்டேன் டா…” என்றவாறு வந்தான் நமது தீக்ஷிதன்.
தீக்ஷிதன் உள்ளே வந்து உடனே, சம்யுக்தா அங்கிருந்து எழுந்து சென்றாள்.
“அக்கா எங்க போற?”என்று வித்யா கேட்க, “இரு வரேன்…” என்ற சம்யுக்தா கிச்சனுக்கு சென்று எல்லோருக்கும் ஜூஸ் போட்டு எடுத்து வந்தாள்.
“சம்மு இவ்வளவு நேரம் நாம எல்லாம் பேசிட்டு இருந்தோம்… அப்ப ஜூஸ் கொடுக்கல… இப்போ உன்னை கட்டிக்க போறவன் வந்த உடனே ஜூஸ் எடுத்துட்டு வர்ற…” என்று அவளை கலாய்த்தார் பரந்தாமன். அதை கேட்டதும் மதுரா புகழ் வித்யா அனைவரும் சேர்ந்து சிரிக்க, சம்யுக்தா சங்கடமாக நெளிந்தாள். அப்போது அவளுக்கு உதவிக்கு வந்தான் தீஷிதன்.
“அதனால என்ன இப்ப கூட எனக்கு மட்டுமா எடுத்துட்டு வந்தா? உங்க எல்லாருக்கும் சேர்த்துதானே எடுத்துட்டு வந்தா…”
“மச்சான் நீ ரொம்ப கொடுத்து வச்சவன்… நீ வந்த உடனே சம்மு போய் ஜூஸ் எடுத்துட்டு வந்துட்டா… நான் வந்து பத்து நிமிஷமாவது இருக்கும்… ஆனா இன்னும் ஒரு காபி கூட என்னை கட்டிக்க போறவ கொண்டு வரல…” என்றான் புகழ். அதற்கு தீஷிதன், “என்ன பண்றது மச்சான் அதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்…” என்று கலாய்த்து விட்டு அந்த ஜூசை குடித்து முடித்தவன், “நான் பிரஷ் ஆயிட்டு வரேன் எல்லாரும் கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க போலாம்….” என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு அங்கிருந்து தனது வேக எட்டுக்களுடன் அறைக்குள் சென்றான்.
அவன் சென்றதும், “சரி சூப்பரான டிரஸ் எடுக்கலாம்… வித்து வா நம்ம போய் ரெடியாகலாம்… அண்ணி நீங்களும் போய் ரெடி ஆகுங்க… அப்பா நீங்க வராங்களா?” என்றாள் மதுரா.
அதுக்கு பரந்தாமன், “இல்லம்மா நீங்க எல்லாம் போய் எடுத்துட்டு வாங்க… நான் எதுக்கு நான் தமயத்தி வர்றால நான் போய் கூட்டிட்டு வர ஏர்போர்ட் போறேன்… புகழ் நீயும் இவங்க கூட போயிட்டு வா…” என்றார்.
“மாமா நீங்க இல்லாம எப்படி ப்ளீஸ் வாங்களேன்…” என்றாள் சம்யுக்தா. “இல்லம்மா அதுதான் தீக்ஷிதன் வர்றான்ல அவன் சூப்பரா செலக்ட் பண்ணுவான்…. நீங்க சந்தோஷமா போய் எடுத்துட்டு வாங்க…” என்றார். அதற்கு சரி என்று தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள் சம்யுக்தா.
தனது அறைக்குச் சென்ற தீக்ஷிதன் குளித்துவிட்டு ரெடியாகி விட்டு, சம்யுக்தாவின் அறைக்கதவில் வந்து தட்டினான். தீக்ஷிதன் சொன்னதும் ரெடியாகி கொண்டு வெளியே செல்லவும் மனமில்லாமல் அங்கிருந்த கட்டிலில் தனது நகத்தை கடித்த படி உட்கார்ந்திருந்தாள் சம்யுக்தா. அப்போது அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் வித்யா அல்லது மதுராவாகத்தான் இருக்கும் என்று நினைத்தவள், “உள்ள வாங்க…” என்றாள்.
கதவைத் திறந்து கொண்டு வந்த தீஷிதன் சம்யுக்தா முன்னால் வந்து நின்றான். “யுக்தா என்ன ஆச்சு? நீ உன்னோட விரல்ல இருக்கிற நகத்தை எல்லாம் கடிச்சு முடிஞ்சிடுச்சுன்னா கிளம்பலாமா?” என்றான்.
அவனது குரலில் நிமிர்ந்து பார்த்தவள் சட்டென்று கட்டலில் இருந்து எழுந்து நின்றாள். “ஏன் இப்படி பண்ற? ரிலாக்ஸாக இரு… நான் தான் வந்து இருக்கேன் எதுக்கு இப்படி பதறிட்டு இருக்க… ரிலாக்ஸ் இரு யுக்தா…” என்றவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து நின்றாள்.
“யுத்தா இங்க பாரு…” என்றவன் அவனது வலது கையினால் அவள் முகத்தைப் பிடித்து தன் முகம் பார்க்க வைத்தான்.
“யுக்தா நான் மறுபடியும் சொல்றேன் இதுவரைக்கும் நடந்ததெல்லாம் மறந்திடு… இனிமே நடக்கப்போறத பத்தி மட்டும் யோசி… அப்புறம் உனக்கு யோசிக்க எதுவும் இல்லன்னா என்ன பத்தி யோசி… என்னை எப்படி பார்த்துக்கலாம்னு யோசி…” என்று அவளை பார்த்து குறும்பாக கண்ணடித்தான்.
“யுக்தா இந்த கல்யாணம் ரொம்ப ஸ்பெஷல் ப்ளீஸ் ஹாப்பியா இரு…” என்றவன், அவளது நெற்றியில் முத்தம் வைத்தான்.
அவனது முத்தத்தை ஏற்கும் விதமாக அவளது கண்கள் மூடின. அவள் தன்னிடம் இருந்து விலகிடுவாள் என்று எதிர்பார்த்தான் தீஷிதன். ஆனால் அவளோ அவனிடம் இருந்து விலகவில்லை என்றதும் சிரிப்புடன், “யுக்தா போலாம் வா…” என்று அவளது கை பிடித்து அழைத்து வந்தான். எல்லோரும் வந்ததும் ஊட்டியில் இருந்த பிரபல துணிக்கடைக்கு அவர்களை அழைத்துச் சென்றான் தீஷிதன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀
லீலாவதி காலையில் எழுந்தது முதல் அந்த வீட்டையை சுற்றிச் சுற்றி வந்தார். அதைப் பார்த்த மணிகண்டன், “லீலா வீட்டை சுத்தி சுத்தி வர என்ன ஆச்சு?” என்று கேட்க, அதற்கு லீலாவதியோ, “என்ன ஆச்சுனா கேட்கிறீங்க? ஐயோ வித்யாவை காணோங்க.. நானும் காலையிலிருந்து நல்லா தேடிட்டேன்ங்க வீட்ல எங்கேயுமே இல்ல.. எங்க போனான்னே தெரியல..” என்று புலம்பினர் லீலாவதி.
“அட நீங்க வேற அவ அப்படி ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போகவே இல்ல.. அந்தப் பாளாப் போன சம்யுக்தாவைத் தேடித் தான் போவா ஆனால் இப்போ கொஞ்ச நாள் வீட்டுக்குள்ளயே தான் இருக்கா.. வெளியில எங்கேயும் போறதாவும் இல்ல.. அப்படி இருக்கிறவ இன்னைக்கு போய் இருக்கானா எனக்கு ஏதோ சந்தேகமா இருக்குங்க.. ஒருவேளை இந்த கல்யாணம் பிடிக்காம எங்கேயாச்சும் போயிட்டாளா என்ன?” என்றார். இதைக்கேட்ட மணிகண்டன் முகத்தில் அதிர்ச்சி வந்தது. “என்ன சொல்ற லீலா? வித்யா மட்டும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் நாம் கம்பெனிக்கு பிரச்சினை ஆயிடுமே சொல்லப்போனால் நம்ம நடுத்தெருவுக்கு வந்துருவோம்..”
“நீ நம்ம பிரச்சினை எல்லாம் வித்யா கிட்ட சொன்னியா என்ன?”
“இல்லங்க நான் எதுவுமே சொல்லல.. சொன்னா வித்யா அதுக்கு ஒத்துக்க மாட்டான்னு தான் நான் சொல்லலை..” என்றார் லீலாவதி தன் கையை பிசைந்து கொண்டு.
மணிகண்டருக்கு கோபம் வர ஓங்கி அறைந்தார் லீலாவதிக்கு. “நீ புரிஞ்சுதான் பேசுறியா? நான் சொன்னேன் தானே நம்மளோட பிரச்சனையை அவக்கிட்ட சொல்லு அதுக்கப்புறம் முடிவெடுக்கட்டும்னு.. பிரச்சனையை சொல்லி இருந்தாலும் வித்யா போகாம இருந்திருப்பா.. இப்ப என்ன பண்ண போற? சாயந்திரம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துருவாங்க.. ஒன்னு நம்ம கம்பெனியெல்லாம் எழுதிக் கொடுக்கணும்.. இல்ல பொண்ண கட்டி கொடுக்கணும் பொண்ண கட்டி கொடுத்து சம்மந்தியாக்கலாம்ன்னு பார்த்தா இப்படி வேலை பார்த்து வச்சிருக்க.. இப்போ எங்க அவ?”
“எங்கங்க போயிட போறா எப்படியும் இங்க தான் இருப்பா சாயந்திரத்துக்குள்ள அவளை எப்படியாச்சும் கண்டுபிடிச்சிடலாம்.. நம்ம ஆட்கள் கிட்ட சொல்லுங்க.” என்று சொல்ல, அவரும் “உன்னைச் சொல்லி எந்த பிரயோசனமும் இல்லை ச்சே..” என்று தனது ஆளுங்களுக்கு அழைத்து வித்யாவை தேடச் சொன்னார்.
**********************************************
பிரகாஷ் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு அந்த அறையை அளந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் தீக்ஷிதன் தனது வேலையை காட்டி இருந்ததால் அதற்கு கட்டுப் போடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அவனுக்கு கால் பண்ணினார் உமேஸ்வரன்.
“பிரகாஷ் மீட்டிங்கு எல்லாம் ரெடி தானே.. என்ன டைம் அப்பாயின்மென்ட் வாங்கி இருக்க?” என்று கேட்டார். அப்போது தான் பிரகாஷிற்க்கு இன்று காலையில் அவனுக்கு மீட்டிங் இருப்பதே ஞாபகம் வந்தது.
“அப்பா அது வந்து…” என்று இழுத்தான்.
“என்ன அப்பா.. வந்து போய்னு இழுத்துக்கிட்டு இருக்க.. உன்ன எதுக்காக அங்க அனுப்பினேன்? அந்த மீட்டிங்குக்கு போய் நல்லபடியா முடிச்சு இந்த ப்ராஜெக்ட் நமக்கு வர்ற மாதிரி சைன் பண்ணி வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்.. அந்த வேலைய மட்டும் நீ சரியா பண்ணல அப்புறம் கெட்ட கோவம் வரும் எனக்கு..” என்றார்.
“அப்பா அது வந்து…”
“நிறுத்து பிரகாஷ் என்ன ஆச்சு? உன் குரல் நல்லா இல்ல.. நீ மீட்டிங் போக ரெடியா இருக்கியா இல்லையா? முதல்ல அத சொல்லு..” என்றார்.
உடனே பிரகாஷ், “இங்க நான் அந்த சம்யுக்தாவைப் பார்த்தேன் அப்பா..”
“அவ எப்படிப்போனா உனக்கு என்னடா?”
“அப்பா நீங்க நினைக்கிற மாதிரி அவளை ஒன்னும் ரோட்ல பாக்கல.. ஒரு ஹோட்டலில் பார்த்தேன்.. ஒரு பணக்கார பையன் கூட பார்த்தேன்..”
“பிரகாஷ் என்ன சொல்ற?”
“ஆமாப்பா நானும் அவள அவமானப்படுத்தலாம்னு போனேன்… ஆனா அவ அந்த பையனை வச்சு என்ன அடிச்சிட்டாங்க.. அது மட்டும் இல்ல அவனுக்கும் அவளுக்கும் இன்னும் அஞ்சு நாள்ல கல்யாணம்னு என்கிட்ட சவால்விட்டா.. அதைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேனா இந்த வேலையை கொஞ்சம் கவனிக்கலப்பா..”
“இங்க பாரு பிரகாஷ் முதல்ல நம்ம எடுத்த வேலையை முடிக்க பழகு.. வேற பிரச்சினைகள் எல்லாம் இந்த விஷயத்தில் காட்டக்கூடாது என்ன புரிஞ்சுதா? முதல்ல அந்த கம்பெனி ப்ரொஜெக்டை நம்மளோட கைக்கு கொண்டு வர்ற வழியைப் பாரு.. அதுக்கு அப்புறமா அந்த சம்யுக்தாவை என்ன வேணா பண்ணிக்கோ..”
“ஓகே டாட் நான் இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவேன் மீட்டிங்கு..”
“சரி ஆல் தி பெஸ்ட் முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணு…” என்ற உமேஸ்வரன் போனை வைத்தார். இந்த பக்கம் இருந்த பிரகாஷோ, “என்னை மீறி உனக்கு எப்படி அந்த நல்ல வாழ்க்கை கிடைக்கிறது என்று பார்க்கிறேன்.. கேவலம் உனக்கு போய் இப்படி ஒரு மாப்பிள்ளையா? விடமாட்டேன் டி என்னைய அவன வச்சு அடிச்சி அசிங்கப்படுத்திட்ட இல்ல உன்னை என்ன பண்றேன் பாரு..” என்ற பிரகாஷ் மீட்டிங்கு தயாராகிச் சென்றான்.
*************************************************
சம்யுக்தாவிடம் சொல்லிவிட்டு தீக்ஷிதன் தனது கம்பெனிக்கு சென்றான். அங்கே அவனது ப்ராஜெக்டை எந்த கம்பெனிக்கு கொடுக்கலாம் என்பதற்கான மீட்டிங் தயாராகிக் கொண்டிருக்க, இவன் தனது கேபினில் இருந்தான். அங்கிருந்து எதார்த்தமாக சீசிடீவி வழியே அவனது கம்பெனியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிரகாஷ் அவனது கண்களில் பட்டான். அதுவும் மீட்டிங் நடக்க இருக்கும் இடத்தில் அவன் இருப்பது இவனுக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. ஏனெனில் அவன் தான் பிரகாஷைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் தன் கைவசம் வைத்திருந்தானே.
‘என்கிட்டயே வந்துட்டியா வா வா.. நீ இங்க வந்து நீயே என்கிட்ட மாட்டிக்கணும்னுதாண்டா நான் ஹோட்டல்ல வச்சு உன்னை தெரிஞ்சுக்காத மாதிரியே காட்டிகிட்டேன்..’ என்று மனதுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது, அவனது கேபின் கதவை தட்டிவிட்டு வந்து நின்றான் அவனது பிஏ.
“சார் மீட்டிங்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சு…”
“ஓகே..” என்ற ஒத்த வார்த்தையுடன் அவன் அங்கிருந்து எழுந்தான். மீட்டிங் நடக்கும் அறைக்குள் சென்றதும், அங்கிருந்த எல்லோரும் எழுந்து நின்றனர். அனைவருக்கும் ஒரு தலையசைப்பை மாத்திரம் பதிலாக கொடுத்தவன், அவனுடைய சேரில் வந்து அமர, அவனைப் பார்த்த பிரகாஷின் முகத்தில் ஈ ஆடவில்லை.
தீக்ஷிதன் அவனை தெரியாதவாறு காட்டிக் கொள்ள முயன்றான். தீஷிதனுடைய ப்ரொஜெக்ட் பற்றி அவன் எடுத்துரைக்க அந்த மீட்டிங்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். நிச்சயமாக இந்த ப்ராஜெக்ட் தங்களுக்கு கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் தாங்களும் இந்த பிசினஸ் சாம்ராஜ்யத்தில் ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று அங்கு வந்திருந்த அனைவரும் நினைத்துக் கொண்டனர். அதனால் அந்த தீக்ஷிதனின் ப்ராஜெக்டை தங்கள் கம்பெனிக்கு தருமாறு ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர்.
பிரகாஷிற்கோ தான் என்ன பேச வேண்டும் என்பதே மறந்து போய் அமர்ந்திருந்தான். தீஷிதனை பார்த்துக் கொண்டு இருந்த பிரகாஷிற்கு உமேஸ்வரன் சொன்னது ஞாபகம் வந்தது. ‘எப்படியாவது இந்த ப்ராஜெக்ட் நம்ம கம்பெனிக்கு எடுத்துட்டு போகணும்.. இல்லனா டாட் சும்மா இருக்க மாட்டாங்க.. அதே நேரம் இவன் நமக்கு அதை தருவான்னு சொல்றதுக்கும் இல்லை.. என்ன பண்ணலாம்..’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த தீக்ஷிதன், “என்ன மிஸ்டர் பிரகாஷ் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருக்கிற மாதிரி இருக்கு வாட் ஹப்பெண்ட்..? ஆமா என்னாச்சு உங்க முகத்தில் எல்லாம் காயம் மாதிரி இருக்கு அடி ரொம்ப பலமோ..” என்று நகையாடினான் பிறர் அறியாத வகையில். பிரகாஷிற்கோ அவனது வாயை உடைக்க வேண்டும் போல இருந்தது. என்ன செய்வது என்று அமைதியாக இருந்தான்.
“இல்ல சார் நைட் வரும்போது அடிபட்டிருச்சு அதுதான்..” என்றான்.
“ஓகே இப்போ நீங்க உங்களோட ப்ரெஷென்டேஷனை ஸ்டார்ட் பண்ணுங்க… நான் அதைப் பாத்துட்டு இந்த ப்ராஜெக்ட் யாருக்கு கொடுக்கலாம்னு டிசைட் பண்றன்..” என்று சொன்னான்.
ஒவ்வொருவராக அவர்களது ப்ரெஷென்டேஷனை நன்றாகச் செய்து கொண்டு இருந்தனர். பிரகாஷின் முறை வந்ததும் அவனும் அவனது ப்ரெஷென்டேஷனை செய்தான். இப்படியாக எல்லோரும் செய்து முடித்ததும் தீக்ஷிதன் எழுந்து நின்றான்.
“வெல் இந்த மீட்டிங்கு வந்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. உங்களுடைய ப்ரெஷென்டேஷன் ஒவ்வொண்ணுமே எனக்கு உங்களோட திறமையை வெளிப்படுத்தியிருக்கு.. பை த வே நான் இந்த ப்ரொஜெக்ட்ட வந்து எந்த கம்பெனி கொடுக்கிறனோ அந்த கம்பெனியில எனக்கு 20% ஷேர் வேணும்.. அது மட்டும் இல்ல அந்த ப்ராஜெக்ட் நடக்குறப்போ அந்த ப்ரொஜெக்டர் அடிக்கடி பாக்குறதுக்கு என்னோட சைட்ல இருந்து என்னோட பெட்டர் ஹாப் ஐ மீன் என்னோட மனைவி வருவாங்க… அவங்களுக்கு கீழே தான் நீங்க ஒர்க் பண்ண வேண்டி வரும்.. உங்களுக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லைனா சொல்லுங்க..” என்றான். அவனது வழமையான புன்னகையுடன். அதைப் பார்த்து அனைவரும் இந்த ப்ராஜெக்ட் மட்டும் கிடைத்துவிட்டால் போதும். யாருக்கு கீழே வேலை செஞ்சா என்ன என்பது போல சரி சார் என்று உடனே தலையாட்டினார்கள். பிரகாஷின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது.
“ஓகே நான் இந்த ப்ராஜெக்ட்டை மிஸ்டர் பிரகாஷோட கம்பெனிக்கு கொடுக்கலாமான்னு இருக்கேன்.. ஏன்னா அவரோட ப்ரெஷென்டேஷன் வித்தியாசமா இருக்கு… என்ன பிரகாஷ் உங்களுக்கு என் வைஃப் கீழ வொர்க் பண்ண ஓகே தானே.. ஏதாவது பிராப்ளமா என்ன?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான் பிரகாஷைப் பார்த்து.
பிரகாஷிற்கு கோபம் வந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாது, “நோ ப்ராப்ளம் சார்.. எனக்கு இந்த ப்ராஜெக்ட் ரொம்ப இம்போர்ட்டண்ட்.. என்னோட டேட் எப்படி இருந்தாலும் இந்த ப்ரொஜெக்டர் வரணும்னு சொல்லி இருந்தாரு..” என்றார்.
“ஓகே மிஸ்டர் பிரகாஷ் அப்படின்னா நீங்க நாளைக்கு இங்க வாங்க நம்ம நாளைக்கு அக்ரிமெண்ட்ல சைன் பண்ணிடலாம்.. எனிவே காய்ஸ் மத்தவங்களும் உங்களோட டைம் ஒதுக்கி இங்க வந்து இருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ்.. நம்ம நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்ல சந்திக்கலாம்.. தேங்க்யூ ஒன்ஸ் அகைன்…” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான். இங்கே ஹோட்டல் அறைக்கு வந்த பிரகாஷ் அங்கு இருந்த பொருட்கள் எல்லாம் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டிருந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
15ரேட்டிங் வந்தா அடுத்து ரெண்டு எபி தர்றேன் பட்டூஸ் 😍
குளிர்காற்று வித்யாவின் உடலைத் துளைத்தது. அதன் மூலமாக ஊட்டியை நெருங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் எழுந்து அமர்ந்து காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள். சிறையில் இருந்து விடுதலை பெற்ற பறவையைப் போல இருந்தது அவள் மனது. தாயிடம் இருந்து தப்பி வந்தது சந்தோஷமாக இருந்தாலும் அவர் தன்னைக் கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயமும் வித்யாவிற்கு இருந்தது.
மதுராவும் சம்யுக்தாவும் டைனிங் டேபிளில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கல்யாணம் நடைபெறும் வரைக்கும் சம்யுக்தாவை கம்பனிக்கு வர வேண்டாம் என்று தீஷிதன் சொல்லிவிட்டான். மதுராவிற்கு தனக்குப் பிடித்த சம்யுக்தா அண்ணியாக வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பரந்தாமனும் அவரது வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மாடியில் இருந்து வேகமாக கீழே இறங்கி வந்தான் தீஷிதன். அவனும் வீட்டின் வாசலுக்கு வர, கார் ஒன்றும் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கினாள் வித்யா. தயக்கத்துடன் வாசலில் நின்றவளைப் பார்த்து தீஷிதன், “உள்ள வா வித்யா.. இதுவும் உன்னோட வீடுதான்..” என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.
வித்யாவும் தலையை ஆட்டிவிட்டு தீஷிதனைப் பின்தொடர்ந்து வந்தவள், அங்கே சம்யுக்தாவைப் பார்த்ததும், “அக்கா…” என்று அழைத்துக் கொண்டு சம்யுக்தாவை அணைத்துக் கொண்டு அழுதாள். திடீரென தன்னை அணைத்துக் கொண்டு அழுபவளைப் பார்த்த சம்யுக்தாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
“வித்து…வித்து…” என்று அவளை பார்த்து உச்சிமுகர்ந்தாள் சம்யுக்தா.
“வித்து நீ எப்பிடி டி இங்க?” என்று கேட்டாள் மதுரா ஆனந்தமும் அதிர்ச்சியும் நிறைந்த குரலில். அப்போதுதான் வித்யா சம்யுக்தா அருகில் நின்ற மதுராவைப் பார்த்தாள்.
சம்யுக்தா வித்யாவிடம், “வித்து நீ எப்பிடி டா இங்க வந்த? நான் இங்க இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?” என்றாள்.
“அக்கா உன்னை எங்கே எல்லாமோ தேடிட்டு இருந்தேன்.. சார்தான் எனக்கு நைட் கால் பண்ணி நீ இங்க இருக்கிறதாவும் உங்களுக்கு கல்யாணம்னு சொன்னாங்க..”
“வித்து நீ வந்தது அம்மாக்குத் தெரியுமா?”
“அக்கா உன்னை இப்படி கொடுமைப்படுத்தினவங்களை அம்மானு சொல்ல எப்படி மனசு வருது?”
“அவங்க எப்படி நடத்தினாலும் நான் அவங்க மேல உண்மையான பாசம் வைச்சிருக்கன் வித்து.. நீ சொல்லு நீ இங்க வந்தது அவங்களுக்குத் தெரியுமா?”
“தெரியாது அக்கா.. உன்னை அந்த பிரகாஷ்க்கு கல்யாணம் பண்ணி வச்ச மாதிரி என்னையும் ஒரு பணக்காரனுக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணிருக்காங்க அக்கா.. எனக்கு என்ன பண்றது என்று தெரியாம இருந்தப்போதான் சார் கால் பண்ணாங்க.. அவங்களே கார் அனுப்பி வைச்சாங்க அக்கா.. அந்தக் கார்லதான் வந்தேன்..” என்று நடந்ததைக் கூறினாள் வித்யா. சம்யுக்தா தீஷிதனைப் பார்க்க அவன் தனது வலது பக்க இமையை தூக்கி கண்ணடித்தான் குறும்பாக. அதைப் பார்த்ததும் உடனே தலையை குனிந்து கொண்டாள் சம்யுக்தா. தீஷிதன் தனக்கு வந்த சிரிப்பினை உதட்டினுள்ளே மறைத்துக் கொண்டு மதுராவிடம், “மது உன்னோட பிரெண்ட் இனிமே இங்க தான் இருக்கப்போறாங்க வித்யாவிற்கு ரெடி பண்ண றூமைக் காட்டு.. வித்யா போய் ஃப்ரெஷ்ஷாகிட்டு வந்து சாப்பிடு.. சம்யுக்தா கொஞ்சம் என்கூட வா உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்..” என்றவன் வெளியே செல்ல, சம்யுக்தாவும் அவன் பின்னால் சென்றாள். மதுரா வித்யாவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
தோட்டத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்த தீஷிதன் சம்யுக்தாவின் கையைப் பிடித்து தனக்கு அருகில் உட்கார வைத்தான். சம்யுக்தாவைப் பார்த்து, “சரி இப்போ சொல்லு என்ன சொல்லணும் எங்கிட்ட? உன் தங்கச்சிய இங்க கூட்டிட்டு வந்ததுக்கு நன்றி சொல்லுமா?” என்று அவன் நேரடியாக கேட்க, சம்யுக்தாவின் கண்கள் கண்ணாடிக்குள்ளே விரிந்தன. அவளைப் பார்த்து சிரித்தவன், “என்னடா நாம மனசுல நினைச்சதை இவன் சொல்லிட்டானேன்னு பாக்கிறியா யுக்தா? உன் மனசு எனக்கு நல்லா புரியும்.. உன்னோட ஒவ்வொரு பார்வைக்குமான அர்த்தத்தை என்னால ரொம்ப நல்லா புரிஞ்சிக்க முடியும்..” என்றான்.
“வித்யாவை இங்க கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி..” என்று தனது நன்றியை அவனிடம் சொல்ல, அதை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டான்.
“யுக்தா நம்மளோட கல்யாணத்துக்கு சந்தோஷமா நீ ரெடியாகணும்.. எதைப்பற்றியும் நீ யோசிக்கக் கூடாது.. உன்னோட கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டும் யுக்தா.. உன்னோட நிகழ்காலமும் எதிர்காலமும் நானாக இருக்க ஆசைப்படுறேன்.. நம்ம கல்யாணத்துக்கு வர்ற அந்த பிரகாஷ் அடுத்தது உன்னை வளர்த்தவங்க உன்னை காயப்படுத்த நினைப்பாங்க.. அவங்க முன்னாடி நீ அழுதிட்டு நிற்கக்கூடாது.. உன்கூட நான் இருக்கிறன்.. இப்போ மட்டுமல்ல எப்பவும் நான் இருப்பேன்.. நீ தைரியமா இருக்கணும்.. ஈவ்னிங் வெட்டிங் ட்ரெஸ் எடுக்க போகலாம் சரியா?” என்றான்.
அவன் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தவள், “என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்ங்க..” என்றாள்.
“லூசு உன்னால எந்த கஷ்டமும் எனக்கு இல்லை.. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரு… உன்னோட தங்கச்சிகூட பேசு.. ஹாப்பியா இரு.. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் போயிட்டு வந்திடுறன்..” என்ற தீஷிதன் வெளியே செல்ல சம்யுக்தா அங்கேயே அமர்ந்திருந்தாள்.
பரந்தாமன் மலேசியாவில் இருக்கும் தன் தங்கைக்கு போன் பண்ணினார். சமையல் வேலை செய்து கொண்டிருந்த தமயந்தி போன் சத்தம் போடவும், வேலையை அப்படியே வைத்து விட்டு வந்து பார்க்க பரந்தாமனின் அழைப்பு என்றதும் உடனே போனை எடுத்து, “அண்ணா நல்லா இருக்கிறீங்களா? வீட்ல எல்லோரும் நல்லா இருக்கிறாங்களா?”
“இங்க எல்லோரும் நல்லா இருக்கிறாங்கமா.. அங்கே மாப்பிள்ளை, விக்ராந்த் எல்லோரும் நல்லா இருக்கிறாங்களா?”
“ம்ம்ம்ம் அவங்க சூப்பரா இருக்கிறாங்க அண்ணா..”
“தமயந்தி உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..”
“என்ன அண்ணா?”
“அதுவந்துமா நம்ம தீஷிதனுக்கு நாலுநாள்ல கல்யாணம்.. நீங்க இங்க இன்னைக்கே வர முடியுமா?”என்று பரந்தாமன் சொன்னதைக் கேட்ட தமயந்தி அதிர்ச்சி அடைந்தார்.
“என்ன அண்ணா நாலுநாள்ல கல்யாணம்னு இன்னைக்கு சொல்றீங்க? முன்னாடியே சொல்லிருக்கலாமே..” என்று ஆதங்கத்துடன் கேட்டவரிடம், சம்யுக்தா பற்றிய அனைத்தையும் சொல்லி, தீஷிதன் அவளை விரும்பியது முதல் திருமணம் முடிவானதுவரை சொல்லி முடிக்க மறுபக்கம் இருந்த தமயந்திக்கு மயக்கம் வராத நிலைதான்.
“அண்ணா நீங்க சொல்றதை கேட்டா எனக்கு சீரியல்தான் ஞாபகம் வருது..”
“தமயந்தி சம்யுக்தா யாருனு உனக்கு தெரிஞ்சா நீ இன்னும் அதிர்ச்சியாயிடுவ..”
“என்ன அண்ணா சொல்றீங்க?”
“ஆமா தமயந்தி..” என்ற பரந்தாமன் சம்யுக்தாவைப் பற்றி சொன்னதைக் கேட்ட தமயந்திக்கு கண்களில் கண்ணீர் வந்தது. அவரது நாக்கு தளுதளுத்தது. பேச்சு வரவில்லை.
“தமயந்தி இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.. நேரம் வரும்போது அதை சொல்லலாம்.. நீ இப்போ யார்க்கிட்டேயும் சம்யுக்தாவைப் பற்றி சொல்லிடாத.. நீ கல்யாண விஷயத்தை ரெண்டு பேர்க்கிட்டேயும் சொல்லி அவங்களையும் அழைச்சிட்டு வா..”
“கண்டிப்பா அண்ணா.. நான் இன்னைக்கு நைட்டே அங்க இருப்பேன்…” என்றவர் போனை வைத்து விட்டு சிறிது நேரம் அழுதார். பின்னர் கணவன் அமரேந்திரனுக்கும் விக்ராந்திற்கும் போன் பண்ணி உடனே வீட்டிற்கு வரச் சொன்னார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊