தீஷிதன் அங்கிருந்து சென்ற பின்னர் அங்கேயே நின்றிருந்த பரந்தாமன் தனது கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு, அந்த இருள் நிறைந்த வானத்தைப் பார்த்தவாறு நின்றார். அறைக்கு வந்த தீக்ஷிதன் ஃப்ரெஷாகிவிட்டு வந்து போனை எடுத்தான். மறுபக்கம் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த புகழ், தீஷிதனின் போன் காலில் பதறிப்போய் எழுந்தான்.
“ஹலோ தீஷி ஆர் யூ ஓகே?”என்று கேட்க, தீஷிதனோ, “புகழ் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..”
“சொல்லு தீஷி..”
“எனக்கும் சம்யுக்தாவிற்கும் இன்னும் ஐந்து நாள்ல கல்யாணம்..” என்று சொல்ல அந்தப் பக்கம் இருந்த புகழ் காதில் வைத்திருந்த போனை எடுத்துப் பார்த்தான். பின் மீண்டும் போனை காதில் வைத்து விட்டு, “ஏன் தீஷி நீயா பேசுற? ஆமா கனவு ஏதும் கண்டாயா?”
“இப்போ நான் வந்து உன்னை போட்டு அடிக்குறதுல உனக்கு கனவா நினைவானு தெரியும்.. எப்படி வசதி?” என்று அவனை மிரட்ட, புகழ் சிரித்துக் கொண்டு, “இல்லடா இந்த நைட் டைம்ல நீ எதுக்கு கஷ்டப்படணும்? நான் நீ சொல்றதை நம்புறேன்.. இப்போ நான் என்ன பண்ணணும்?” எனக் கேட்டான்.
அதற்கு தீஷிதன் புகழ் செய்ய வேண்டியதைக் கூற, “சிறப்பா பண்ணிடலாம் மச்சான்… நான் இப்பவே அதற்கான வேலையைப் பார்க்கிறேன்…”
“டேய் இப்போ தூங்கு காலையில வேலையை ஆரம்பிச்சா போதும்..” என்று சொல்லிவிட்டு மேலும் சில விஷயங்களை பேசி விட்டு போனை வைத்தான்.
புகழுடன் பேசிவிட்டு திஷிதன் தனது போனில் வித்யாவிற்கு அழைத்தான். லீலாவதி மீது கோபத்திலிருந்து வித்தியா என்ன செய்வது என்று தெரியாமல் கட்டிலில் படுத்துக் கொண்டு புரண்டு புரண்டு இருந்தாள். அந்த நேரத்தில் புது எண்ணில் இருந்து கால் வர இந்த நேரத்துல யாரா இருக்கும் என்று எண்ணியவர், போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
“ஹலோ யார் பேசுறது?” என்றாள் வித்யா. மறுபக்கம் இருந்த தீக்ஷிதன், “நான் தீஷிதன் பேசுறன் மதுராவோட அண்ணன்..” என்று சொன்னதைக் கேட்ட வித்யா எழுந்து அமர்ந்தாள். “என்ன மதுவோட அண்ணனா? மதுவுக்கு என்ன ஆச்சு? ஏன் இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்கீங்க?” என்று அவனிடம் பதற்றத்துடன் கேட்டாள். தன் தங்கை மீது இவள் வைத்திருக்கும் உண்மையான நட்பினை பார்த்தவன் அவளிடம், “இங்க பாரு வித்யா மதுவுக்கு ஒன்னும் இல்ல.. ஆனா உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. அதுக்கு தான் இப்ப கால் பண்ணினேன்..”
“என்கிட்ட முக்கியமான விஷயமா? சொல்லுங்க என்ன விஷயம்?”
“இங்க பாரு நான் டைரக்ட்டாவே விஷயத்துக்கு வந்திடுறன்.. நீ தேடிக்கிட்டு இருக்க உன்னோட அக்கா சம்யுக்தா இப்ப எங்க வீட்ல தான் இருக்கா..” என்றான்.
இதை கேட்டது வித்யா தான் கனவு காண்கின்றோமா என்ற எண்ணத்தில் தன் கையை ஒருமுறை கிள்ளிப் பார்த்தாள். அவளுக்கு வலித்ததில் ஆவென்று கத்த மறுபக்கம் லைனில் இருந்த தீக்ஷிதன், “என்ன ஆச்சு வித்யா?” என்றான்.
“ஒன்னும் இல்ல.. ஆமா நீங்க சொல்றது நிஜமா? எங்க அக்கா நல்லா இருக்கா இல்ல? ஆனா மது கூட என்கிட்ட அதை பத்தி சொல்லலையா.. மதுவுக்கு உன்னோட அக்காவ தெரியாதுல்ல.. அதனால தான் அவ சொல்லல.. நான் இப்போ உனக்கு எதுக்கு கால் பண்ணினேன்னா உன் அக்காவுக்கும் எனக்கும் அஞ்சு நாள்ல கல்யாணம்.. நீ இங்க வந்துடுறியா?”
“என்ன சார் சொல்றீங்க? திடீர்னு இப்படி ஷாக் நியூஸ் சொன்னா நான் எப்படி தாங்கிக்கிறது? என் அக்கா நல்லா இருக்கா இல்ல?”
“உங்க அக்கா நல்லா இருக்கிறா.. அதனால தான் எனக்கு அவங்களுக்கும் கல்யாணம்..”
“சார் எங்க வீட்டையும் பிரச்சனை நான் அக்காவை பார்க்க வாரது ரொம்ப கஷ்டம்னு நினைக்கிறேன்.. எங்க அம்மா என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டாங்க.. என்னை நாளைக்கு பொண்ணு பாக்க வர்றதா சொல்லி இருக்காங்க..”
“ஓ அப்டியா உன்னோட நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டு நீ அதுக்கப்புறம் வரலாமே வித்யா..”
“நோ நோ என் அக்காவோட வாழ்க்கையை அழிச்ச மாதிரி என்னையும் ஏதோ ஒரு பணக்கார இடத்துல கட்டி வைக்க பாக்குறாங்க.. பட் எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல.. எனக்கு என் அக்கா கூட இருக்கணும் சார்.. ப்ளீஸ் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுங்க..” என்று அவளுக்கு கிடைத்த ஒரு துருப்புச் சீட்டாக தீஷிதனை நினைத்து அவனிடம் உதவி கேட்டாள்.
அவனிடம் தன்னை வீட்டில் இருந்து எப்படியாவது அவள் அக்கா இருக்கும் இடத்திற்கு கூட்டிச் செல்லுமாறு கெஞ்சினாள். அவ்வளவு கெஞ்சலைக் கேட்ட தீஷிதன், “சரி வித்யா நீ காலையில நேரத்துக்கு வந்து வீட்டுக்கு வெளியில நில்லு.. அங்க ஒரு கார் இருக்கும்.. அந்த காரோட நம்பர் நான் உனக்கு அனுப்பறேன்.. அப்புறம் அந்த கார்ல ஏறி இங்க வந்துடு.. அடுத்தது அந்த வீட்டிலிருந்து நீ எதுவுமே எடுத்துட்டு வரக்கூடாது சரியா?”
“ரொம்ப நன்றி சார்.. நான் காலையில வந்துடறேன்.. என் அக்காவை நான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன் ரொம்ப சந்தோசம் நான் வர்றது அக்கா கிட்ட சொல்ல வேண்டாம்.. அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும்..”
“ஓகே வித்யா பத்திரம்.. ஏதாச்சும் அவசரம் ஆபத்துனா எனக்கு கால் பண்ணு..” என்றான்.
“சரிங்க சார் ரொம்ப நன்றி..” என்று போனை வைத்தாள் வித்யா. இப்போதுதான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஒரு பக்கம் தனது அன்பான சம்யுக்தா அக்கா கிடைத்துவிட்டாள். மறுபக்கமும் இந்த பிடிக்காத திருமணத்திலிருந்து தப்பித்து விடலாம். என்று அவள் மகிழ்ச்சியோடு இருந்தாள்.
எல்லா விஷயங்களையும் பேசி முடித்த தீஷிதன் சம்யுக்தாவைப் பார்ப்பதற்காக அவள் அறைக்குள் வந்தான். அங்கே பச்சிளம் குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. அவளருகே வந்து நின்றவன் வெற்றியில் விழுந்த கூந்தலை தனது ஒரு கையால் மெல்ல அவள் எழும்பாதவாறு எடுத்துவிட்டான். கள்ளம் கபடம் இல்லாத அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், “யுக்தா உனக்கு எந்தப் பிரச்சினையும் வராது.. அப்படி ஏதாவது ஒரு பிரச்சனை வரணும்னா அது என்னைத் தாண்டித் தான் வரும்.. கவலைப்படாதே உனக்கு நீ வாழாத வாழ்க்கை எல்லாம் நம்மளோட கல்யாணத்துக்கு அப்புறம் வாழ போற..” என்று அவளுடன் பேசியவன் சிறிது நேரம் அவள் முகத்தை பார்த்து விட்டு எழுந்து சென்றான்.
அடுத்த நாள் அதிகாலையிலே எழுந்து தயாரானாள் வித்யா. எப்போது தீஷிதனிடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளை வெகு நேரம் காத்திருக்க விடாமல் கால் பண்ணினான் தீஷிதன். உடனே போனை எடுத்து பேசினாள் வித்யா.
“வித்யா நீ ரெடியா?”
“ரெடியாயிட்டேன் சார்..”
“சரி ****இதுதான் கார் நம்பர்.. உங்க வீட்டுக்கு வெளியே நின்னுட்டு இருக்கு.. ட்ரைவர் ரொம்ப நம்பிக்கையானவரு அதனால பயப்படாம வா..” என்றான்.
“சரிங்க சார்..” என்றவள், வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறினாள். அவள் ஏறியதும் ஜெட் வேகத்தில் கார் கிளம்பியது.
இங்கே தீஷிதன் வீட்டில் காலையில் இருந்து வேலையாட்கள் பம்பரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். தீஷிதன் ஜாக்கிங் சென்று விட்டு வர, ஹாலில் காப்பி குடித்துக் கொண்டு இருந்த பரந்தாமன், தீஷிதனை அழைத்தார்.
“சொல்லுங்க டாட்..” என்றவாறு அவர் அருகில் வந்து அமர்ந்தன்.
“தீஷி காலையில இருந்து இவங்க இப்பிடி வேலை பார்க்கிறாங்க கேட்டா நீ ரூம் அரேஞ்ச் பண்ண சொன்னனு சொல்றாங்க… அதுமட்டும் இல்ல சாப்பாடு வேற ரொம்ப ஸ்பெஷலா ரெடி பண்ண சொல்லியிருக்க… ஆமா நம்ம வீட்டுக்கு யாரு வர்றாங்க? உன்னோட ப்ரெண்ட்ஸ் யாரும் வர்றாங்களா என்ன?” என்று கேட்டவரைப் பார்த்து சிரித்தவன், “கூல் டாட்.. வர்றவங்க இங்க இருக்கிறவங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்.. அதனாலதான் இந்த ஏற்பாடு..”
“அப்படி யாரு தீஷி?”
“வெயிட் டாட்.. இப்பவே சொல்லிட்டா அதுல என்ன இருக்கு? வெயிட் பண்ணி அவங்க வந்ததும் நீங்களே பாருங்க..” என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
தீஷிதனின் நெஞ்சில் சாய்ந்து அழுத சம்யுக்தா சில நிமிடங்களில் நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் நேராக நிமிர்ந்து அமர்ந்ததும் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். சம்யுக்தாவிற்கும் அது தேவையாக இருக்க வாங்கிக் குடித்தாள். அவள் தண்ணீர் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், பாட்டிலை வாங்கி வைத்து விட்டு, “யுக்தா நீ அந்த பிரகாஷ் கிட்ட சவால் விட்ட மாதிரியே இன்னும் ஐந்து நாள்ல நம்மளோட கல்யாணம் இந்த ஊரே வியக்கும்படி நடக்கும்.. நீ எதையும் போட்டு குழப்பிக்க வேணாம்..” என்றான். அவனிடம் மறுத்துப் பேச முயன்றவள் உதடுகளில் தனது கையை வைத்துத் தடுத்தவன், “எதுவும் பேச வேணாம் யுக்தா ப்ளீஸ்.. எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்..” என்று சொல்ல அவளது தலை தானாக சரி என்று அசைத்தது. “தட்ஸ் மை கேர்ள்..” என்றவன் காரை எடுத்தான்.
அவர்கள் அங்கிருந்து செல்வதைப் பார்த்துக் கொண்டு இருந்த பிரகாஷிற்கு கோபம் வந்தது. அங்கிருந்து தனது காரை எடுத்துக் கொண்டு அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றான்.
……………………….…………………………
லேடிஸ் கிளப்பில் இருந்து வீட்டிற்கு வந்த லீலாவதி வித்யாவை அழைத்தார். “வித்யா.. வித்யா.. எங்க இருக்க? சீக்கிரமா இங்க வா..” என்று குரல் கொடுத்தவர் ஹாலில் இருந்த ஷோபாவில் உட்கார்ந்தார். அவரது அழைப்பு கேட்டாலும் அதை கவனத்தில் எடுக்காமல் இருந்தாள் வித்யா. சிறிது நேரம் அமைதியாக இருந்த லீலாவதி வேலைக்காரியை அழைத்துக் கேட்க, அவரோ “வித்யா பாப்பா அவங்க றூம்ல தான் மேடம் இருக்கிறாங்க..” என்றார்.
“என்ன றூம்லதான் இருக்கிறாளா? சரி நீ போ..” என்று அவரை அனுப்பி வைத்து விட்டு வித்யாவின் அறைக்கே சென்றார். அங்கே பெட்டின் மீது படுத்திருந்த வித்யாவிடம் வந்து, “வித்து என்னாச்சி? நான் அந்தக் கத்து கத்துறன் நீ என்னடானா இங்க படுத்திருக்க? என்ன நினைச்சிட்டு இருக்க நீ?”
“உன்கூட பேச பிடிக்கலைன்னு நினைச்சிக்கோங்க.. தயவு செய்து இங்க இருந்து போயிடுங்க..” என்று கோபமாக கூறிய வித்யாவின் கையைப் பிடித்து இழுத்தவர்,
“என்னடி வாய் ரொம்ப நீளுது.. இங்க பாரு நாளைக்கு உன்னை பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றாங்க.. அதனால நாளைக்கு எங்கேயும் வெளிய போயிடாத..” என்றார். அதைக் கேட்ட வித்யா, “வாட்?” என்று கத்தினாள்.
அவள் கத்தியதை கவனிக்காதவாறு, “இங்க பாரு இந்த கத்துற வேலை எல்லாம் எங்கிட்ட வச்சிக்காத..”
“அம்மா நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ட என்னால முடியாது.. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்.. நான் அக்காவை கண்டுபிடிக்கணும்.. நீங்கதான் அவளைத் தேடவே இல்லை.. ஆனால் நான் உங்களை மாதிரி மனசுல ஈவிரக்கம் இல்லாம இருக்க முடியாது.. அடுத்தது நீங்க பாக்குற மாப்பிள்ளையை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியவே முடியாது.. அக்காவோட வாழ்க்கையை பாழாக்கின மாதிரி என்னோட வாழ்க்கையையும் அழிக்கப் பார்க்கிறீர்களா?” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்த வித்யாவின் கன்னத்தில் பளார் என அறைந்தார் லீலாவதி.
“என்னடி நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. வாய் ரொம்பத்தான் நீளுது.. பிச்சிடுவேன் பிச்சு.. நாளைக்கு வரப்போற சம்மந்தம் எவ்வளவு பெரிய இடம்னு உனக்குத் தெரியுமா? பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு வசதி இருக்கு.. அங்க நீ மகாராணிபோல இருக்கலாம்.. உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.. உனக்கு பிடிக்குதோ இல்லையோ உனக்கு அவர்தான் மாப்பிள்ளை.. இதை யாராலும் தடுக்க முடியாது..” என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
…………………………………………………
தீஷிதனும் சம்யுக்தாவும் ஒன்றாக சேர்ந்து வருவதைப் பார்த்து பரந்தாமனுக்கு மனசுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. சம்யுக்தா தனது முகத்தில் எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம் என முயன்றாலும் எப்போதும் அவளது மனதின் நிலையை கண்ணாடியாக காட்டும் அவள் முகம் இன்றும் உள்ளதை உள்ளவாறே காட்ட தவறவில்லை. அவளது முகத்தைப் பார்த்த பரந்தாமன் அவளிடம் எதுவும் கேட்காமல், தனது மகனைப் பார்க்க தீஷிதன் கண்களாலே பிறகு பேசுவதாக கூறினான். அவரும் அமைதியாக இருக்க, சம்யுக்தா அவளின் அறைக்குச் சென்றுவிட்டாள்.
சம்யுக்தா அங்கிருந்து சென்றதும் தீக்ஷிதன் தனது தந்தையை மேலே வருமாறு கூறி அவரை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான். “தீஷி என்னாச்சு ஏன் சம்யுக்தா முகமே வாடிப்போய் இருக்கு.. எதுவும் பிரச்சனையா?” என்று பதற்றத்துடன் கேட்ட தந்தையைப் பார்த்தவன், “ஆமா அப்பா.. பிரச்சனை தான்..”
“நான்தான் சொன்னேன்ல்ல அவளுக்கு கொஞ்சம் டைம் வேணும்னு.. நீ தான் உன்னோட காதல சொல்ல போறேன் அப்படின்னு சொல்லி என்னை சம்யுக்தாவை கூட்டிட்டு போனே.. இப்போ என்னாச்சினு பாத்தல..”
“அப்பா பிரச்சனை என்னால இல்லை.. அந்த பிரகாஷாலதான் பிரச்சனை..”
“என்ன சொல்லுற பிரகாஷாலேயா? பிரகாஷ் எப்படி அங்க வந்தான்?”
“அது எனக்குத் தெரியல அப்பா.. நான் சம்யுக்தாக்கு ப்ரொபோஸ் பண்ணும் போது அந்த பிரகாஷ் வந்து என் கண்ணு முன்னாடியே சம்யுக்தாவை கேவலமா பேசிட்டான்.. ஆனா அவன் அப்படி பேசினதும் இதுவரைக்கும் பார்த்திராத ஒரு சம்யுக்தாவைப் பார்த்தேன்.. அப்படி ஒரு கோபம், வெறி அவ முகத்துல.. நீ என்ன வேணா பண்ணு நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டா.. அதுவும் அஞ்சு நாளைக்குள்ள எனக்கும் அவளுக்கு கல்யாணம்னு வேற அவர்கிட்ட சவால் விட்டா..” என்றான் புன்சிரிப்புடன்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பரந்தாமன், “என்ன சொல்ற தீஷி நிஜமா சம்யுக்தா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா?”
“அப்பா அவ கல்யாணம் பண்ணனும்னு சொன்னது ஒரு அவசரத்துல.. பிரகாஷ்கிட்ட சவால் விடணும்னு சொன்னது.. நிஜமா அவளுக்கு என்ன புடிச்சிருக்கானா அது எனக்குத் தெரியாது.. ஆனா இதுவும் நல்லதுதான் அப்பா.. முதல்ல எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கட்டும்.. அதுக்கப்புறம் அவளை நான் மாத்திடுறேன்..” என்ற மகனிடம்,
“தீஷி உங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க எனக்கு பரிபூரண சம்மதம் தான்.. நான் மறுபடியும் சொல்றேன் நீ எப்பவுமே அவளை காயப்படுத்தக் கூடாது.. அவளோட முதலாவது கல்யாணத்தைப் பத்தி பேசி அவளை கஷ்டப்படுத்திடாத..”
“அப்பா நான் அப்படி பண்ணுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான் தீஷிதன்.
“நீ நினைக்க மாட்ட தீஷி.. ஆனா உனக்கு கோபம் வந்தா நீ என்ன பேசுவேன்னு யோசிச்சு பேச மாட்டே.. உன்னோட கோபம் சம்யுக்தாவை எப்பவும் காயப்படுத்தக் கூடாது.. அதுதான் எனக்குப் பயம்..”
“அப்பா உங்களுக்கு தான் தெரியும்ல்ல நான் அப்படி பண்ணுவேனா?”
“தீஷி எனக்கு உன்னைப் பத்தி தெரியும்.. ஆனா உன்னோட கோபத்தின் அளவும் எனக்கு நல்லாத் தெரியும்.. உன்னோட கோபத்தை எப்போவும் நீ சம்யுக்தா மேல காட்டக் கூடாது..”
“நிச்சயமா அப்பா.. என்னோட கோபம் அவளை எப்பவுமே காயப்படுத்தாது..”
“சரி வெட்டிங் எப்படி பண்ணனும்னு பிளான் பண்ணி இருக்க?”
“ஆமா அப்பா.. நான் சம்யுக்தாவைப் பத்தி விசாரிக்கும் போது வித்யாபற்றியும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.. நான் வித்யாவை நாளைக்கு வர சொல்லலாம்னு இருக்கேன்.. பாவம் அக்காவைக் காணோம்னு அவதான் ரொம்ப உடைந்து போய் இருக்கா..”
“நல்லது தீஷி.. தங்கச்சி கூட இருந்தா சம்யுக்தாக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்ல..”
“கண்டிப்பா அப்பா..”
“சரிப்பா நீ போய் தூங்கு மீதிய காலைல பேசிக்கலாம்..”
“ஓகே அப்பா..” என்றவன் தனது அறைக்குச் சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
அதற்கு தீஷிதன், “பரவாயில்ல சம்யுக்தா.. உன்கிட்ட இப்படித்தான் கேட்கணும்றது என்னோட ஆசை.. நீ உன்னோட பதிலை சொல்லு..” என்றான். “ஐயோ சார் புரிஞ்சுக்கோங்க எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு.. முதல்ல எந்திரிங்க சார் ப்ளீஸ்..” என்றவள் அனது கையைப் பிடிக்க, எழுந்து நின்றவன், “சரி இப்ப எந்திரிச்சிட்டேன்ல்ல சொல்லுங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா?” என்று மீண்டும் அதையே கேட்க சம்யுக்தா அவனைப் பார்த்து, “சார் நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கிறீங்கனு நினைக்கிறேன்.. நீங்க நினைக்கிற மாதிரி நான் கிடையாது.. நான் ஒன்னும் கல்யாணம் ஆகாதவ கிடையாது..” என்றாள்.
“ஆமா நீங்க கல்யாணமானவதான்.. இப்போ அதுக்கு என்ன? அதுதான் டைவர்ஸாயிடுச்சுல்ல..”என்றான் மிகவும் கூலாக. தீஷிதனைப் பார்த்த சம்யுக்தா மேலும் பேச வருவதற்கு முன்னர், “வாவ் சூப்பர்.. நீ இங்க தான் இருக்கியா? இன்னும் எத்தனை பேரை ஏமாத்திட்டு இருக்க? நான்கூட நீ கிணத்துலயோ குளத்துலயோ விழுந்து செத்திருப்பன்னு நெனச்சேன்..” என்ற பிரகாஷின் குரலைக் கேட்ட சம்யுக்தாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
தீஷிதன், ‘யாருடா அது?’ என்று திரும்பிப் பார்க்க அங்கே பிரகாஷ் நின்று இருந்தான். பிரகாஷைப் பார்த்ததும் சம்யுக்தாவிற்கு பழைய ஞாபகங்கள் வர அவன் தனக்கு செய்த கொடுமைகளும் நினைவில் வர அவள் உடல் நடுங்கியது. மெல்ல அருகில் நின்றிருந்த தீஷிதன் கைகளை அவள் கரங்கள் பற்றின. தன் கரங்களை தீண்டிய அவளது கரங்களில் தட்டிக் கொடுத்தான் தீஷிதன். கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்க்க, கண்களால் நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறியவன் பிரகாஷிடம் திரும்பினான்.
“என்ன சம்யுக்தா ரொம்ப ஜாலியா இருக்க போல இருக்கு.. உன்ன காணலைனு உன் தங்கச்சி ஒவ்வொரு மூலையா தேடிக்கிட்டு இருக்கா.. நீ இங்க வேற ஒருத்தன் கூட கூத்தடிச்சிட்டு இருக்க.. நல்லவ மாதிரி வேஷம் போட்டி.. நீ எல்லாம் ஒரு பொண்ணு.. கல்யாணமான புருஷன் விட்டுட்டு போயிட்டான்னு கொஞ்சம் கூட வருத்தமே இல்லாம ஹோட்டல்ல சுத்திட்டு இருக்க? ஆமா உன் அம்மா வேற நீ அவங்க பொண்ணு இல்லன்னு சொல்லிட்டாங்களாமே.. நீ பேசாம என் வீட்டுக்கு வேலைக்காரிய வந்து இருக்கலாம்ல்ல.. வாரிசுக்கு இல்லைன்னாலும் வசதிக்கு வச்சிப்பேன்.. உன் திமிருடி அதற்குத்தான். உனக்கு இப்படியெல்லாம் நடக்குது ஆமா இங்க என்ன வேலை பாக்குற? தினமும் ஹோட்டல்ல நைட்ஷிப் பாக்குறியா?” என்று அவன் வாய்க்கு வந்ததை பேச தீஷிதனுக்கு கண்கள் சிவந்து கைகள் புடைத்தன. அவனுக்கு வந்த கோபத்தில் பிரகாஷின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து வைத்தான். அவனின் மூக்கு உடைந்து இரத்தம் பொலபொலவென்று கொட்டியது. “ஹேய் யூ..” என்று பிரகாஷின் சட்டையை பிடிக்க, தீஷிதனும் பதிலுக்கு அவன் சட்டையைப் பிடித்து, “எங்க வந்து என்ன பேசுற? மரியாதை இங்கிருந்து ஓடிடு.. இல்ல நீ பேசின பேச்சுக்கு உன்னை கொன்னு மழையிலிருந்து தள்ளிவிட்டுருவேன்… நீ வந்ததுக்கான தடயமும் இருக்காது அதுபோல நீ செத்ததுக்கான தடயமும் இருக்காது..” என்றான் தீஷிதன். அவனின் மிரட்டலில் பாய்ந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாத பிரகாஷ், “நீ யாருடா? எதுக்கு இவ கூட இருக்க? எவ்வளவு பே பண்ற அவ கூட இருக்கிறதுக்கு? என்று வார்த்தையை மேலும் விட சம்யுக்தாவிற்கு இப்படியே நிலமுடைந்து கீழே சென்று விடமாட்டோமா என்ற இருந்தது. தீஷிதன் பிரகாஷை மீண்டும் மீண்டும் அடிக்கப் பாய்ந்தான். “என்னடி உன் கஷ்டமர்க்கிட்ட என்னை அடி வாங்க வைக்கிறியா? எங்கிட்ட தனியா மாட்டுவல அப்போ வச்சுக்கிறேன்..” என்று பிரகாஷ் சொல்லிக் கொண்டே செல்ல, “டேய் நிறுத்துடா.. யாரைப் பார்த்து என்ன பேச்சுப் பேசுற? அவர் யார் தெரியுமா? அவருடைய இடம் தெரியுமா?” என்று சம்யுக்தா பத்ரகாளியாக மாற, இத்தனை நாட்களில் சம்யுக்தாவை இப்படியான ஒரு நிலையை காணாத தீஷிதனும் பிரகாஷிம் அவளை திரும்பிப் பார்த்தனர்.
“இங்க பாரு இவரு என்னைக் கல்யாணம் பண்ணிக்க போறாரு.. என் வாழ்க்கையில நடந்தது அவருக்கு தெரியாது.. அப்பிடி இருந்தும் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லாறு.. இவரை கல்யாணம் பண்ணிக்க ஆயிரம் பேரு கியூல நிக்கிறாங்க.. அப்பிடி இருந்தும் டைவர்ஸான என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நிக்கிறாரே இவரு தான் மனுஷன். நீயும் இருக்கியே பொறுக்கி நாயே.. கட்டின பொண்டாட்டி உன்கூட இருக்கும்போது இன்னொருத்தி கூட போனவன் தானே நீ.. நீ என்னை தப்பானவனு சொல்றியா? இன்னும் அஞ்சு நாள்ல எப்படி ஐந்தே நாள்ல எனக்கும் இவருக்கு கல்யாணம்.. உனக்கு இன்விடேஷன் வரும்.. வந்து நல்லா கொட்டிக்க..” என்ற சம்யுக்தாவைப் பார்த்து மீண்டும் இருவரும் அதிர்ந்தனர்.
“என்னடி டிராமா பண்றியா? இவனாவது உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதாவது? உன் கண்ணாடியை துடைச்சிட்டு பாரு ஆள் எப்படி இருக்கான்னு.. இவனோட கலருக்கு எத்தனையோ பேர் வருவாங்க.. இதுல கண்ணாடியை போட்டுக்கிட்டு, இப்படி குண்டா இருக்கிற உன்னை கல்யாணம் பண்ணிக்குவானா? கண்ணு தெரியாதவன் கூட உன்னை தொட்டு பார்த்தா கூட கல்யாணம் பண்ணிக்க மாட்டான்..” என்று மேலும் அவளை வார்த்தையால் கஸ்டப்படுத்த, “என் மிஸ்டர் அதுதான் என் யுக்தா சொல்லிட்டால்ல.. என் பொண்டாட்டிய இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின அவ்வளவுதான்.. நீ வா டார்லிங் நாம போலாம்.. நமக்கு கல்யாண வேலை இருக்கு…” என்று அவள் தோளில் கையை போட்டு அழுத்திக்கொண்டு சென்றான் தீக்ஷிதன்.
அவர்கள் இந்த சென்றது பிரகாஷிற்கு மிகவும் அவமானமாக போய் விட்டது. ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இருவரும் எதுவும் பேசாமல் காரில் அமர்ந்தனர். காரின் உள்ளே அமர்ந்ததுதான் தாமதம் தனது கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள் சம்யுக்தா. அவளின் நிலை புரிந்ததால் சிறிது நேரம் அவளை அழவிட்டான் தீஷிதன். ஆனால் அவள் அழுகை நின்றபாடில்லை. மெல்ல அவளை நெருங்கியவன் அவள் தோளில் கைபோட்டான்.
“யுக்தா இப்போ எதுக்கு அழுதிட்டு இருக்க.. கண்டநாய் ஏதோ பேசுதுனா அதை நீ பெருசா எடுத்துப்பாயா? அதை மறந்திடு.. வாழ்க்கையை உனக்காக வாழு..” என்று அவளை தேற்றியவன் கைகளை தட்டி விட்டாள்.
“நான் ரொம்ப துரதிர்ஷ்டசாலிங்க.. என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.. நான் ஏதோ கோபத்துல அப்பிடி பேசிட்டேன்.. நீங்க ரொம்ப நல்லவங்க.. மரியாதையான குடும்பத்தை சேர்ந்தவங்க.. உங்களுக்கு நான் எந்த விதத்துலயும் பொருத்தம் இல்லைங்க.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க..” என்று அவனிடம் கையெடுத்து கும்பிட்டுக் கேட்க, அவளின் கையை தனது கரத்தினால் பிடித்தவன் அவளை இழுத்து தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். அவனிடம் இருந்து விடுபட முயன்றவளை அவன் விடவில்லை. மேலும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். அவன் நெஞ்சிலே குத்திக் கொண்டு அழுதாள் சம்யுக்தா. அவள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தான் தீஷிதன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
மாலை நேரம் அவன் கூறிய நேரத்துக்கு கேபினுக்குள் வந்தாள் சம்யுக்தா. தீஷிதனுக்கு அப்போதும் அவனின் வேலை முடியவில்லை. மிகவும் தீவிரமாக அந்த லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு பத்து நிமிடம் எடுத்துக் கொண்ட தீஷிதன், “சாரி சம்யுக்தா.. கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க்..” என்றவன் அந்த வேலையை முடித்துவிட்டு லேப்டாப்பை மூடி வைத்து, எழுந்து நின்றான்.
“சார் லேட் ஆயிடுச்சு..” என்றாள்.
“யா போலாம்..” என்ற தீஷிதன் முன்னே செல்ல சம்யுக்தா அவன் பின்னால் சென்றாள். தீஷிதனைப் பார்த்ததும் கார் ட்ரைவரை வேகமாக காரைக் கொண்டு வந்து அங்கே நிறுத்தினார். அவனும் ட்ரைவரை வெளியே வரச் சொல்லிவிட்டு, “நீங்க வீட்டுக்கு போங்க.. எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு நான் சம்யுக்தாவையும் அழைச்சிட்டு போறதா அப்பாக்கிட்ட சொல்லிடுங்க..” என்றவன் சுற்றி வந்து அந்த காரில் அமர்ந்தான். சம்யுக்தா முன்னாடி அமரலாமா? இல்லை பின்னாடி அமர்வதா? என்று யோசிக்கும்போதே தீஷிதன், “சம்யுக்தா முன்னாடியே உக்காருங்க..” என்றவன் குரலில் முன்னாடியே உட்கார்ந்தாள்.
‘மீட்டிங்னு சார் சொன்னாங்க ஆனா, ரொம்ப அமைதியா வர்றாங்க சார் என்னவா இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டு இருந்தவள் விழிகள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. அந்திநேர தென்றல் காற்று அவள் கூந்தலை கலைக்க, அவள் முகத்தில் வந்து விழுந்த ஒரு முடிக்கற்றையை எடுத்துவிட துடித்தது அவனின் விரல்கள்.
கண்ணாடி போட்டு அவள் தனது கயல்விழிகளை மறைத்து இருந்தாலும் அந்த கயல்விழிகளின் அழகில் தொலைந்தது என்னவோ தீட்சிதனின் மனம். அவளை ஒரு பக்கம் அவள் அறியாமல் ரசித்தவாறு பாதையில் கவனத்தை வைத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தான் அவன்.
ஊட்டியில் இருந்த ஒரு பிரபல்யமான ஹோட்டல் ஒன்றுக்கு அவளை அழைத்து வந்திருந்தான். மாலை மங்கிய நேரத்திலும் அந்த ஹோட்டல் இந்திரனின் அவை போல அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது. காரைப் பார்க் பண்ணி விட்டு வர அவனுடன் இணைந்து நடந்தாள் சம்யுக்தா. தீட்சிதனை கண்ட பிறர் அவனிடம் வேகமாக வந்தார்.
“சார் நீங்க புக் பண்ண சீட் அங்க இருக்கு..” என்று அந்த இடத்தில் அவர்கள் இருவரையும் அழைத்து சென்றார். அவனிடம் தலையை சேர்த்து விட்டு, “கம் சம்யுக்தா..” என்று, அவன் முன்னால் செல்ல அங்கே தீட்ஷிதன் ஒரு கார்டன் ஏரியாவில் அழகாக மேசை போடப்பட்டிருக்க அதை சுற்றி இரண்டு நாற்காலிகள், அந்த மேஜையில் அழகிய வாசம் மிக்க மலர்கள் நிறைந்த பூச்சாடியும் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடம் பார்ப்பதற்கு அத்தனை ரம்யமாக இருந்தது. பின்னால் மெல்லிய டிஜே மியூசிக் இசைத்துக்கொண்டிருந்தது. மொத்தத்தில் அந்த இடம் ஒரு வித்தியாசமான மனநிலையை கொடுத்தது. சம்யுக்தா இத்தனை நாளில் இப்படியான ஒரு இடத்திற்கு மீட்டிங் என்று சென்றதே இல்லை. பெரும்பாலும் மீட்டிங்குகள் ஏதாவது ஒரு ஹோட்டலில் அல்லது ஆபீஸ்களில் இருக்கும் இப்படி ஹோட்டலில் உள்ள கார்டன் ஏரியாவில் என்றுமே நடந்ததில்லை. சம்யுக்தாவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவளின் குழப்பத்தை அவளின் புருவங்களை பார்த்து அறிந்த தீஷிதன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். ஆனால் தீஷிதனுக்கு ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. தனது காதலை சம்யுக்தா அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளுவாள் என்று அவன் நினைக்கவில்லை. அதற்கு அவன் பெரும் கடினப்பட வேண்டும் என்றும் அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அவளை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இருந்தான் தீஷிதன். சம்யுக்தா அங்கிருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னவன் அவளுக்கு எதிராக இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
சம்யுக்தா சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டு, கையில் கட்டி இருந்த வாட்சையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளது ஒவ்வொரு அசைவையும் தனது கூலிங் கிளாஸ் மாட்டி இருந்த விழிகளால் படம் பிடித்துக் கொண்டிருந்தான் தீக்ஷிதன். அங்கிருந்த பேரரை அழைத்தவன், இருவருக்கும் காபியை ஆர்டர் செய்தான். அவனைப் பார்த்த சம்யுக்தா, “சார்.. யார் கூட சார் மீட்டிங்? இன்னும் யாரும் வரல.. வீட்ல மது வேற வெயிட் பண்ணிட்டு இருப்பா.. லேட் ஆகுமா சார்?” என்றாள். அவள் பணிவுடன் பேசியதைப் பார்த்த தீக்ஷிதன், “கிளைண்ட் வந்துகிட்டு தான் இருக்காங்க வெயிட் பண்ணுங்க.. லேட் ஆகாது சீக்கிரமா போயிடலாம்..” என்றான்.
அவளும் சரி என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த வெயிட்டர் காபியை கொண்டுவந்து இருவர் முன்னும் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். “சாப்பிடுங்க..” என்ற தீஷிதன் ஒரு கப்பை எடுத்துக் கொள்ள, மறுகப்பை எடுத்தாள் சம்யுக்தா. இருவரும் எதுவும் பேசவில்லை. ஒரு மெல்லிய மௌனம் அங்கு நிலவிக் கொண்டிருந்தது. இரம்யமான வேளையில் பின்னணியில் இசைகள் ஒலித்தன. தீஷிதன் வார்த்தைகள் அங்கே மௌனமாக, தனது காதலை சொல்ல வார்த்தைகள் இன்றி தடுமாறினான். எத்தனையோ பேரை நிராகரித்த அவனால் இன்று தன் மனம் கவர்ந்தவளிடம் தனது காதலைச் சொல்லி அவளை மனைவியாக்க வார்த்தை இன்றி தவித்தான். இறுதியில் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டவன் எழுந்து நிற்க, அவன் எழுந்து நிற்பதை பார்த்த சம்யுக்தாவும் சட்டென்று எழுந்து நின்றாள்.
“நீங்க உட்காருங்க சம்யுக்தா..” என்றான்.
“இல்ல சார் நீங்க எந்திரிச்சிட்டீங்க..” என்று இழுத்தவளை உட்காருங்க சம்யுக்தா, என்று அவளின் இரு தோள்களையும் பிடித்து உட்கார வைத்தான் அந்த நாற்காலியில். அவனது இந்த திடீர் தொடுதலில், சம்யுக்தா அவனை நிமிர்ந்து பார்க்க, புன்முறுவல் பூத்தவன் தனது பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய பெட்டியை எடுத்தான்.
சம்யுக்தா உட்கார்ந்திருக்க, அவள் முன்னாள் வந்து நின்றவன் தனது கையில் இருந்த சிறிய பெட்டியை அவள் முன்பாக நீட்டி, இடது காலை மடக்கி வலது காலை ஊன்றி அவளைப் பார்த்து கண்களால் சிரித்தவன், “சம்யுக்தா உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.. கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்று கேட்டான்.
இப்படி ஒரு நிகழ்வு சம்யுக்தாவின் வாழ்க்கையில் இதுவரை நடந்ததே இல்லை. பிரகாஷ் கூட ஒரு தடவையும் இப்படி சம்யுக்தாவிற்கு முன்பால் முட்டி போட்டு நின்று எதுவும் கொடுத்ததும் இல்லை. அவளும் அவனிடம் எதிர்பார்த்ததும் இல்லை. இன்று தீக்ஷிதன் அவளின் முன்பாக மண்டியிட்டு இருக்கின்றான். அவளுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. எத்தனையோ பேர் இவனிடம் அப்பாயின்மென்ட் கேட்டு தவிக்கின்றனர். ஆனால் இன்று இவன் தன்னிடம் இப்படி நடந்து கொள்கின்றானே என்று நினைத்த சம்யுக்தாவிற்கு பதட்டம் வர, “சார் முதல்ல எந்திரிங்க சார் ப்ளீஸ்..” என்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
புகழ் தீஷிதனுடன் பேசிக்கொண்டு வரும்போது புகழை ஒருமாதிரி பார்த்த தீக்ஷிதன், “நானாவது இப்பவாவது சொன்னேன் ஆனா நீ என்கிட்ட சொல்லவே இல்லையே புகழ்..” என்றான் ஒரு மாதிரியான குரலில். தீஷிதன் இப்படிக் கேட்டதும் புகழின் முகத்தில் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.
“தீஷி நீ என்ன சொல்ற?” என்று சற்றுத் தடுமாறியபடி கேட்டான். அவனின் தோளைத் தட்டிய தீஷிதன், “புகழ் நடிக்காதடா.. நீயும் மதுவும் லவ் பண்ற விஷயம் எனக்குத் தெரியும்..” என்று தீஷிதன் சொல்ல புகழ், “தீக்ஷி அது வந்து…” என்று அவனின் முகம் பார்க்க முடியாது குனிந்து கொண்டான்.
“இப்போ எதுக்கு புகழ் தல குனிஞ்சு உக்காந்துக்கிட்டு இருக்க? நீ எந்த தப்பும் பண்ணலையே.. எங்க வீட்ல இருந்து தங்கச்சியை நீ யாருக்கும் சொல்லாம கூட்டிகிட்டு ஓடி இருந்தால்தான் அது தப்பு.. ஆனா நீ எனக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கணும் அமைதியா பொறுமையா இருக்க, அது மட்டும் இல்ல மது சூசைட் பண்ண ட்ரை பண்ணதுக்கு அப்புறம் தான் நீ அவ காதல ஏத்துக்கிட்டணும் எனக்குத் தெரியும்.. நானும் காதலுக்கு எதிரி எல்லாம் இல்ல புகழ் உன்ன விட வேற யாரு நல்ல பையன் என் தங்கச்சிக்கு லைஃப் பார்ட்னரா கிடைப்பான்னு சொல்லு..”
“தீஷி நான் வேணும்னு உங்கிட்ட மறைக்கலடா.. ஆனா யாரும் இல்லாத ஒரு அநாதையான எனக்கு இப்படி ஒரு பெரிய குடும்பத்து பொண்ணை யாராவது கட்டிக் கொடுப்பாங்களா? அது மட்டும் இல்லடா உன்னோட ப்ரெண்ட்ஷிப் இல்லன்னா நான் இப்ப என்னவாக இருப்பேன்னு தெரியல.. அந்த நட்புக்கு நான் எப்பவுமே உண்மையா இருப்பேன்.. மது ஃபர்ஸ்ட் எங்கிட்ட லவ் வந்து சொல்லும் போது கூட சின்ன பொண்ணு மறந்திடுவானு நெனச்சேன்… லாஸ்ட்ல அவ சூசைட் பண்ண போயிட்டா.. அதனால தான் நான் அந்த லவ்வ ஒத்துக்கிட்டேன்.. ஆனா நிஜமா சொல்றேன் தீஷி யாருமே இல்லாத எனக்கு மது எல்லாமாவே இருந்தா.. எனக்கு இந்த உலகத்துல கடவுள் கொடுத்த ரெண்டு வரம்னா ஒண்ணு நீ மற்றது மது..” என்ற தனது நண்பனை அணைத்துக் கொண்டான் தீஷிதன்.
“நோ தீஷி… எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்.. முதல்ல உன் லைப் செட்டில் ஆகணும் அதுக்கு அப்புறம் தான் நான் மதுவை கல்யாணம் பண்ணிப்பேன்..” என்று செக் வைத்தான் புகழ்.
“புகழ் அது அவ்ளோ சீக்கிரம் நடக்கும்னு நீ நினைக்கிறியா?” என்று தீஷிதன் புகழைப் பார்த்து கேட்க அதற்கு புகழும் அவனைப் பார்த்து புன்னகையுடன், “தீஷிதனால் முடியாதது ஒன்று இருக்கா என்ன?” என்றான்.
இதைக் கேட்டது தீஷிதனின் உதடுகளில் மர்ம புன்னகை ஒன்றும் மலர்ந்தது. “அப்படின்ற? சரி பாத்துக்கலாம்..” என்றவன் கம்பெனிக்குச் சென்றான்.
மதுவுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு சம்யுக்தா, அவள் ஓய்வெடுக்கட்டும் என்று தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.
………….……………………………………
இங்கே சென்னையில் தனது கம்பெனியில் உமேஸ்வரன் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார். தனது முன்னால் இருந்த பிரகாஷிடம், “பிரகாஷ் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது.. அந்த லக்ஷ்மி குரூப் ஆஃப் கம்பெனியோட நடக்கிற மீட்டிங்ல நமக்கு அந்த ப்ராஜெக்ட் கிடைத்தே ஆகணும்.. அவங்க கூட சேர்ந்து ஒர்க் பண்ண நிறைய பேரு நான் நீனு போட்டி போட்டுட்டு இருக்காங்க.. ஆனா அத நம்ம கண்டிப்பா நாம எடுத்துக்கிட்டே ஆகணும்.. ஏன்னா அவங்க ரொம்ப பெரிய கம்பெனி.. பிரகாஷ் உன்னோட விளையாட்டுத்தனத்தை எல்லாம் இந்த விஷயத்துல எல்லாம் காட்டினே அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. சொன்னதை நல்லா புரிஞ்சிப்பனு நினைக்கிறன்.. அந்த மணிகண்டன் கம்பெனிக்குக்கூட இந்த காண்ட்ராக்ட் போக கூடாது புரிஞ்சுதா?” என்று குரலில் மிகுந்த அழுத்தத்துடன் கேட்டார் உமேஸ்வரன்.
பிரகாஷ் சம்யுக்தாவின் பிரிவிற்கு பின்னர் உமேஸ்வரன் மற்றும் மணிகண்டன் இருவருக்கும் இடையிலான அந்த உறவு கூட முறிந்து விட்டது. இப்போது இருவரும் போட்டி போட்டு கொண்டு முட்டிக்கொண்டு நின்றனர். நண்பர்களாக இருந்தவர்கள் திடீரென்று எதிரிகளாக நிற்பதை பார்த்தவர்கள் இவர்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் முயன்றனர்.
இப்படியாக இருக்க, அந்த லக்ஷ்மி குரூப் ஆஃப் கம்பெனியுடன் சேர்ந்து ப்ராஜெக்ட் பண்ணுவதற்காக
போட்டி இப்போது நடந்து கொண்டிருந்தது. உமேஸ்வரனின் வழிகாட்டலில் பிரகாஷ் அதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். இங்கே மறுபக்கமும் மணிகண்டன் இந்த லட்சுமி குரூப் ஆப் கம்பெனியுடன். இணைந்து ப்ராஜெக்ட் செய்வதற்காக அவர் தரப்பிலிருந்து அவர் தயாராகிக் கொண்டிருந்தார். இருவரும் நேர் வழியில் செல்லாமல், தாங்கள் குறுக்கு வழியில் எப்படியாவது அந்த கம்பெனியுடன் ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் என்று அதற்கான வழிகளையும் பார்க்க ஆரம்பித்தார்கள்.
கீதாவிற்கு சீமாவிற்கு இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது. தன் மருமகள் தன்னிடம் அடிபணிந்து போக வேண்டும் என்பார் கீதா. ஆனால் சீமா, கீதாவை மதிக்கவே இல்லை. அவள் அவளின் விருப்பத்திற்கு இருந்தாள். நேரம் சென்று எழும்புவாள், நன்றாக உண்பால், பின்னர் எழுந்து வெளியே செல்லுவாள். இப்படியாக நடந்து கொண்டிருக்க வீட்டில் ஒரு வேலையும் சீமா செய்வதில்லை. கீதா ஏதாவது கேட்ட முயன்றால், உங்களுக்கு வாரிசு வேண்டுமா இல்லையா என்று அதை சொல்லிச் சொல்லியே அவரை அமைதிப்படுத்தி விடுவாள். இதெல்லாம் கீதாவிற்கு மிகவும் கடுப்பாக இருந்தது. தான் சொல்லுவதை ஒரு அடிமை போல செய்து கொண்டிருந்த சம்யுக்தா எங்கே.. தன்னையே சில சமயங்களில் வேலை வாங்கும் சீமா எங்கே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டே இருந்தார் கீதா.
………………………………………………..
மெல்ல மெல்ல புகழும் மதுவும் ஒருவருக்கொருவர் விரும்பும் விடயத்தை பரந்தாமனிடம் சொன்னான் தீக்ஷிதன். அவரும் விசயத்தைக் கேட்டதும் சந்தோஷப்பட்டாரே தவிர, அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக புகழ் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய நிலை வந்தது. அதற்கு தீஷிதன், “புகழ் நீ ரொம்ப கவனமா இருக்கணும்.. ஏன்னா இந்த ப்ராஜெக்ட் நமக்கு ரொம்ப முக்கியம்.. பாத்து பத்திரமா போயிட்டு வா..” என்றான். புகழும், “கண்டிப்பா தீஷி.. நீ கவலைப்படாத இந்த ப்ராஜெக்டை சக்சஸ்ஃபுல்லா முடிச்சுட்டு வரேன்..”
“ப்ரொஜெக்ட் முக்கியம்தான் ஆனால் அதைவிட நீயும் ரொம்ப முக்கியம்.. கவனமாய் இரு..” என்று மீண்டும் அவனை பத்திரமாக இருக்கும்படி கூறி வழி அனுப்பி வைத்தான் தீஷிதன்.
தீஷிதன் புகழை வழியனுப்பி விட்டு, கேபினில் இருந்து முக்கியமான வேலை ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனிடம் சைன் வாங்குவதற்காக உள்ளே வந்தாள் சம்யுக்தா. வழமை போல அவனிடம் அனுமதி கேட்டு விட்டு உள்ளே வந்து, அவன் முன் நின்றவள், “சார் சைன்..” என்றாள்.
அவளைப் பார்க்காமல் தனது கையை நீட்டினான். அவனிடம் பைலை கொடுத்தவளிடம், “சம்யுக்தா ஈவினிங் ஏதாவது அப்பாயின்மென்ட் இருக்கா?”
“நோ சார் ஈவினிங் உங்களுக்கு எந்த அப்பாயின்மென்டும் இல்ல..” என்று சொன்னார் புகழ். புகழ் சென்றபின் தீஷிதனின் பிஏவாக சில நாட்களாக வேலைய பார்க்கின்றாள் சம்யுக்தா.
“அப்படியா சார்? ஆனா ஈவினிங். ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு என்னோட ஜாயின் பண்ணிக்கோங்க..”என்று சீரியஸாக சொன்ன தீஷிதனைப் பார்த்தவள், “சரி ஆனா எனக்கு எந்த அப்டேட்டுமே கிடைக்கலையே..” என்றாள் தயங்கியபடி.
“இது இப்பதான் சடனா ஃபிக்ஸ் ஆச்சுது..” என்றான்.
“ஓ ஓகே சார்.. எந்த பிளேஸ்ல சார் மீட்டிங்?”
“எனக்கு இன்பார்ம் பண்ணல இன்ஃபர் பண்ணதுக்கப்புறம் நான் உங்ககிட்ட சொல்றேன்..” என்றவன் அவள் நீட்டிய கோப்பில் சைன் பண்ணி மீண்டும் அவளிடம் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு தனது வேலையை பார்க்க சென்றாள் சம்யுக்தா. அவள் சென்றதும் தீஷிதனின் இதழ்களில் ஒரு புன்னகை. அந்த புன்னகை என்ன கூற வந்தது என்று அவன் மட்டுமே அறிவான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
மதுரா தனது கடந்த காலத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “அண்ணனும் அப்பாவும் என்ன சிங்கப்பூரில் கொண்டு விட்டு வந்தாங்க.. அத்தை வீட்டுல நான் ரெண்டு வருஷம் இருந்தேன்.. அங்கிருந்துதான் காலேஜ் போனேன்.. காலேஜ் எல்லாம் நல்லாவே போச்சு கொஞ்சம் கொஞ்சமா நான் வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டேன், நடந்தது எல்லாத்தையும் மறக்க பழகிட்டேன்.. அத்தையும் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க.. மாமா அவர் பொண்ணு மாதிரியே என்னை பாத்துக்கிட்டு.. விக்ரம் ரொம்ப நல்ல நண்பன் எனக்கு.. அப்படி இருக்கும்போது ஒரு நாள் காலேஜ்ல ஒரு பையன் வந்து என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணினான்.. அவன் எனக்கு ப்ரொபோஸ் பண்ணும் போது எனக்கு இன்னொருத்தங்க முகம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு.. அப்போதான் அந்த செகண்ட் தான் எனக்கு என் மனசுல இருக்கிறது புரிந்தது.. நாம் மலேசியாக்கு வந்ததுக்கப்புறம் அவங்க கூட பெருசா பேசுறது இல்ல.. எப்பயாவது கிடைச்சாத்தான் நான் பேசுவேன்.. அன்னைக்கு அந்த பையன் ப்ரொபோஸ் பண்ணப்போ என் மனசுக்குள்ள வந்த முகம் புகழோடுதுதான் அண்ணி..” என்று மதுரா சொன்னதைக் கேட்ட சம்யுக்தா மயங்கி விழுவதைப் போல நடித்தாள்.
“என்ன மது சொல்ற நம்ம புகழ் அண்ணாவா?”
“ஆமா அண்ணி அவங்களே தான்.. ஆனா அண்ணி அவங்க ரொம்ப மோசம் தெரியுமா? என்னை எவ்வளவு நாள் அலைய வச்சாங்க தெரியுமா? எவ்வளவு கெஞ்சினேன்.. அழுதேன்.. ஆனாஅ அண்ணாகூட இருக்கிற பிரண்ட்ஷிப்புக்காக என்னை ஏத்துக்கவே மாட்டேன்னுட்டாங்க.. அதுக்கப்புறம் நீங்க இல்ல நான் செத்துருவேன்.. அது இதுன்னு சொல்லி ஒரு மாதிரியா என்ன லவ் பண்ண வச்சுட்டேன்.. சரி காலேஜ முடிச்சிட்டு இங்க வந்து ஃப்ரீயா இருக்கலாம்னு வந்தா.. என் அண்ணன் என்ன பண்ணாருன்னா அமெரிக்காக்கு எம்பிஏ படிக்க அனுப்பி வைச்சிட்டாரு.. ஆனா நான் மலேசியாவில் இருந்து இங்க வந்தப்போ என் பழைய அண்ணன் காணாமலே போய்ட்டாங்க.. அண்ணனைப் பாக்கவே ரொம்ப பயமா இருந்துச்சு.. தனக்கென்று ஒரு வட்டத்தை போட்டுக்கிட்டு அண்ணே வாழ ஆரம்பிச்சாங்க.. நான் புகழ்கிட்ட இதைப் பத்தி கேட்டப்போ அது என் நண்பனோட பர்சனல் என்னால அதை சொல்ல முடியாதுனு சொல்லிட்டாரு.. அண்ணாவைப் பார்க்கும்போது எல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.. அண்ணா பழையபடி மாறிட மாட்டாரானு வேண்டிகிட்டே இருப்பேன்.. பாப்போம் அவர் எப்ப பழையபடி மாறுறாருன்னு..” என்று தனது மனதில் இருந்தது எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் மதுரா.
மதுராவும் புகழும் விரும்புகிறார்கள் என்பதை அறிந்த சம்யுக்தாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. “ரொம்ப சந்தோஷம் மது எனக்கு.. உண்மையாவே இந்த விஷயம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் ஹாப்பியா இருக்கணும்..” என்று மனதார வாழ்த்தினாள் சம்யுக்தா.
“ஆனா அண்ணி இது அண்ணனுக்கு தெரிஞ்சா அண்ணா என்ன முடிவெடுப்பாருனு தான் எனக்கு பயமாவே இருக்கு..”
“சார் ஏந்த விஷயம் இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவெடுப்பார் மது.. நீ எதுக்கும் பயப்படாத.. கூடிய சீக்கிரமே உனக்கும் புகழ் அண்ணாக்கும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க.. எனக்கு தெரிஞ்சு உங்க விஷயம் சாருக்கு தெரிந்திருக்கும்னுதான் எனக்குத் தோணுது.. ஏன்னா உன்னை இவ்வளவு பாதுகாப்பா பாத்துக்கிறாங்க.. உன்னோட ஒவ்வொரு அசைவும் அவருக்குத் தெரியும்.. அப்படி இருக்கும் போது நீங்க ரெண்டு பேரும் விரும்புறது கூட அவருக்கு தெரிஞ்சிருக்கும்னுதான் நான் நினைக்கிறேன்.. வெயிட் பண்ணி பாப்போம் என்ன நடக்குதுன்னு..” என்று சம்யுக்தா மதுராவிடம் சொல்ல அவளது முகமோ கலவரமானது. “அய்யய்யோ என்ன அண்ணி இப்படி குண்டத்தூக்கிப் போடுறீங்க.. சரி லவ் பண்ணியாச்சு இனி சமாளிச்சு தானே ஆகணும்..” என்று சிரித்தாள் மதுரா. அவளுடன் இணைந்து சிரித்த சம்யுக்தாவின் சிரிப்பொலி அந்தப் பக்கமாக வந்த தீக்ஷிதன் காதுகளில் விழுந்தது. இங்கு வந்த இத்தனை நாட்களில் இன்று தான் சம்யுக்தா இப்படி கலகலவென்று சிரித்து பார்க்கிறான் தீஷிதன். ஒரு நிமிடம் நின்று அந்த சிரிப்பை இரசித்துவிட்டு கீழே சென்றான்.
கீழே சென்ற தீஷிதனை அழைத்தார் பரந்தாமன். தந்தையின் அழைப்பிற்கான காரணம் தீஷினுக்கு புரிந்தது. அதனால் அவனும் மனசுக்குள் சிரித்துக் கொண்டே தந்தையிடம் சென்றான். “சொல்லுங்க டாட் என்ன விஷயம்?” என்று எதுவும் தெரியாது போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, அவனைப் பார்த்த பரந்தாமன், “என்கிட்டயே மறைக்கிறயா தீஷி? கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. பொண்ணுங்கள பிடிக்காதுன்னு சொல்லிட்டு இருப்ப.. இப்போ என்னடான்னா மதுராக்கிட்ட சம்யுக்தாவ எதுக்காக அண்ணின்னு கூப்பிட சொல்ற என்ன விஷயம்?” என்று நேரடியாக விசயத்துக்கு வந்தார் பரந்தாமன்.
தந்தையைப் பார்த்த தீக்ஷிதன் ஒரு பெரும் மூச்சென்றை விட்டு விட்டு, “அண்ணன் பொண்டாட்டியை அண்ணின்னு சொல்லாம வேற எப்படி சொல்ற? இங்க பாருங்க அப்பா எனக்கு சம்யுக்தாவ பிடிச்சிருக்கு.. என்னை தேடி வந்து மேல விழுற பொண்ணுங்கள தான் நான் பாத்திருக்கிறேன்.. முதல் முறையா ஒரு பொண்ணு என்கிட்ட இருந்து விலகி விலகி நிற்கிறா.. அதுதான் என்ன அவ பக்கம் இழுத்துச்சின்னு சொல்லலாம்.. அதுக்கப்புறம் தன்னோட வேலையில மட்டும் இல்லாம தன்னோட டீமுக்காக அவ காட்டுற சின்சியாரிட்டி.. அது ரொம்பவே புடிச்சிருக்கு.. மொத்தத்தில சம்யுக்தாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குபா..” என்று தீஷிதன் கூற, அவனைப் பார்த்த பரந்தாமன் நெஞ்சிலே கையை வைத்தார்.
“ஐயோ நீ என்னோட மகன் தீஷியா? அவனுக்கு இப்பிடி எல்லாம் பேச வராதே.. நீ யாரு?” என்று மகனிடம் கேட்க,
“அப்பா கலாய்க்காதீங்க.. நான் தான் பேசுறேன்.. இந்த வீட்டுக்கு மருமகனா அது சம்யுக்தா தான்.. அதுல எந்த மாற்று கருத்துமே கிடையாது..” என்ற அவனின் உறுதியான குரலில் கூற இதைக் கேட்ட பரந்தாமனுக்கு ஒருபக்கம் பயமாகவும் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
“ஆனா தீக்ஷி இதுல உன்னோட விருப்பம் மட்டும் முக்கியம் இல்ல.. சம்யுக்தாவோட சம்மதமும் வேணும்ல.. உங்கிட்ட நான் சம்யுக்தாவ பத்தி சொல்லியிருக்கேன்ல..”
“அப்பா உங்களுக்கு தெரியாதது கூட எனக்கு தெரியும்..”
“என்ன தீஷி சொல்ற?”
“ஆமாப்பா சம்யுக்தா வந்து மூணு நாள்லயே அவள பத்தி ஃபுல் டீடைல்ஸ் நான் எடுத்துட்டேன்..”
“அப்போ அவ மேல அனுதாபப்படுறியா?”
“இல்லவே இல்லை அப்பா.. நான் ஜஸ்ட் அவளை பற்றி தெரிஞ்சிக்க நினைச்சேன் அவ்வளவு தான்..”
“தீஷி அவளோட முதலாவது கல்யாணத்தில் நடந்த குழப்பம், அதனால அவ பட்ட வேதனை அவ மனசுக்குள்ள வடு மாதிரி இருக்கும்.. நீ அவகிட்ட பேசுற விதம் ரொம்ப முக்கியம்.. என்னால இத பத்தி சம்முக்கிட்ட நிச்சயமா பேச முடியாது.. நான் காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டு இப்ப நானே என் பையன அவள கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்றது நல்லா இல்ல.. எனக்குத் தெரிஞ்சு இதை நீதான் அவகிட்ட பேசணும்..” என்று சொன்னார்.
“ஓகே அப்பா இதை நானே ஹேண்டில் பண்ணிக்கிறேன்..” என்று சட்டென்று சொன்ன தீஷிதனிடம், “ஓகே தீஷி ஆனா நீ இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பனு நான் கொஞ்சம்கூட நினைச்சு பாக்கல..”
“காலம் எல்லாத்தையும் மாத்தும் அப்பா.. நான் சம்யுக்தாவை மனப்பூர்வமா கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.. அவளோட கடந்த காலம் எனக்கு முக்கியம் இல்ல.. அவ யாருக்கு முன்னால தலை குனிஞ்சு நின்னாலோ அவங்க முன்னால தலை நிமிர்ந்து நிப்பா.. நிக்க வைப்பேன்..” என்று சொல்லும்போது தீட்சிதரின் கண்கள் சிவந்து. மகனின் கோபம் அளவு கடந்து உள்ளது என்பதை அவனின் முகத்தை வைத்து அறிந்த பரந்தாமன் நிலைமையை மாற்றும் பொருட்டு, “தீஷி நான் மறுபடியும் சொல்றேன் அவளை கஷ்டப்படுத்துற மாதிரி ஒரு நிலைமையை நீ எப்பவுமே கொடுக்க மாட்டேன்னு நீ எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்க.. அதை எப்பவுமே ஞாபகம் வச்சுக்கோ.. இந்த கல்யாணத்துல சம்யுக்தாக்கு சம்மதம் இல்லைன்னு சொன்னா.. நிச்சயமா சொல்றேன் நான் அவள் பக்கம் தான் நிப்பேன்.. நீ அவளை எதுவும் சொல்லக்கூடாது.. கட்டாயப்படுத்தவும் கூடாது..” என்றார்.
அதைக் கேட்டதும் சிரித்த தீஷிதன், “அப்பா என்னைப் பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல்ல.. எனக்கு புடிச்சது எப்போதும் என்னை விட்டு போகாது.. இந்த தீக்ஷிதனோட பொண்டாட்டினா அது சம்யுக்தாதான்..” என்றவன் தனது ஷர்டில் மாட்டி இருந்த கூலிங்கிளாஸை எடுத்து கண்களில் மாட்டிக்கொண்டு திரும்ப அங்கே வாயை ஆ என்று விரித்தபடி நின்று இருந்தான் புகழ்.
அவன் முதுகில் ஒரு தட்டி தட்டியவன், “அதுதான் எல்லாத்தையும் கேட்டுட்டல அப்புறம் என்ன சும்மா ரியாக்ஷன் கொடுத்துட்டு வா போகலாம்..” என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றான். பரந்தாமன் தான், ‘எது எப்படியோ நல்லது நடந்தா சரி..’ என்று நினைத்தவர் தன் மனைவியின் சமாதிக்குச் சென்றார்.
காரில் தீஷிதனுடன் வந்து கொண்டிருந்த புகழ் தீக்ஷிதனைப் பார்ப்பதும் ரோட்டை பார்ப்பதுமாக மாறி மாறி பார்த்துக் கொண்டு வருவதை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.
“புகழ் இப்ப எதுக்கு நீ என்னையும் ரோட்டை மாத்தி மாத்தி பாத்துட்டு இருக்க என்ன விஷயம்?” என்றான். அதற்கு புகழும், “தீஷி பொண்ணுங்களே பிடிக்காத மாதிரி பேசுவ.. இப்ப என்னனா சம்யுக்தாவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்குனே நீ பொறந்தவன் மாதிரி பேசிட்டு இருக்க?”
“ஆமா எனக்கு பொண்ணுங்களை பிடிக்காது தான்.. சும்மா இருக்கவங்க மேல வந்து வந்து விழுற பொண்ணுங்களை யாருக்குத்தான் பிடிக்கும்? எனக்கு சம்யுக்தாவோட அமைதி பிடிச்சது.. அவ வேலைல காட்டுற நேர்மை பிடிச்சுது..” என்று சொல்லிக் கொண்டே செல்ல, அவனை நிறுத்திய புகழ், “ஆனா தீஷி நான் இதை வேணும்னு சொல்லல.. யாராவது சம்யுக்தாவோட உருவத்தைப் பார்த்து கேலி பண்ணி அவளை ஹர்ட் பண்ணினா என்ன பண்ணுவ? ஏன் நீயே எப்பவாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில சொல்லிட்டா என்ன பண்ணுவ? நீ கோபத்துல வார்த்தையை விடுறதை நானே பாத்திருக்கேன் தீஷி.. அதனாலதான் கேக்கிறேன்.. ஒரு வாழ்க்கைதான் சம்முக்கு சரியா அமையல.. ரெண்டாவது வாழ்கையாவது நல்லா அமையணும்டா..”
“நீ சொல்றது எனக்கு புரியுது புகழ்.. நான் சம்யுக்தான்னு சொன்னது அவளை மொத்தமா சேர்த்துதான்.. அவளோட வெளிப்புற அழகு எனக்கு தேவை இல்லடா.. அவளோட மனசு அழகு.. அது தான் அங்க தான் நான் விழுந்துட்டேன்.. என்னோட சந்தோஷத்தை காதலை ஏத்துக்கிறவ என் கோபத்தையும் ஏத்துக்கத்தான் வேணும்.. ஆனால் நான் அவளை எப்பவும் நோகடிக்க மாட்டேன்..” என்று தீஷிதன் சொல்லும் போதே அவன் சம்யுக்தா மீது கொண்ட காதல் புகழுக்கு புரிந்தது.
“தீஷி அங்கிள் சொன்னதைத்தான் நானும் சொல்றேன்.. நீ அவள ரொம்ப நிதானமா ஹேண்டில் பண்ணனும்.. இன்கேஸ் கல்யாணத்துக்கு அப்புறம் கூட வார்த்தைகளை பார்த்து பேசு.. நீ சட்டுனு ஒரு வார்த்தை சொன்னாலும் அவளால தாங்கிக்க முடியாம போயிடும்.. நீ புரிஞ்சுப்பனு நினைக்கிறேன்..” என்றவன் நண்பன் தோளில் தட்டிக் கொடுத்தான். “கண்டிப்பா புகழ் நீ வேணும்னா பாரேன் உன் தங்கச்சிய நான் எப்படி பாத்துக்குறேன்னு..”
“எனக்கு தெரியாதா உன்னைப்பத்தி.. ஆனா இந்த லவ் மேட்டரை என்கிட்ட சொல்லாம விட்டுட்டியே..” என்று புகழ் சொல்லும்போது அவனைப் பார்த்து தீஷிதன் கேட்ட கேள்வியில் புகழ் அதிர்ச்சி அடைந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
நான் கேட்டது 20+ரேட்டிங் ஆனா நீங்க அதை விட அதிகமா குடுத்திருக்கிறீங்க ரொம்ப நன்றி பட்டூஸ் 😍😍
ஆகாஷ் கையில் இருந்த அசிட் பாட்டிலை குறி வைத்து அங்கிருந்த கட்டையொன்றை எடுத்து வீசி இருந்தான் புகழ். அவன் வீசிய கட்டை ஆகாஷின் கையில் பட அந்த அசிட் பாட்டில் கீழே விழுந்தது. பயத்தில் இருந்த மதுரா இன்னும் தன் கண்களை திறக்கவில்லை. தான் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அசிட் பாட்டில் இப்படி கீழே விழ காரணமானவனை திரும்பிப் பார்த்தான் ஆகாஷ். அங்கே அவன் பின்னால் கண்கள் சிவக்க, இரையைக் குறி வைக்கும் வேங்கையாக நின்றிருந்தான் புகழ். வேகமாக வந்த புகழ் அவனின் சட்டையை பிடித்து, “ஏன்டா நீங்கலாம் திருந்தவே மாட்டீங்களா? ஒரு பொண்ணை லவ் பண்ணுவீங்க அதே பொண்ணு உங்கள விரும்பலனா ஆசிட் அடிக்கிறது இப்ப வரைக்கும் இருக்குல்ல.. ஏன்டா நீ லவ் பண்ண பொண்ணு முகத்து மேல ஆசிட் அடிக்க உனக்கு எப்பிடிடா மனசு வந்துச்சு இது? இப்ப புரியுதா இதெல்லாம் காதலே இல்லனு? உன்னை அன்னைக்கு நான் எதுவும் பண்ணாம விட்டுப் போய் பெரிய தப்பு பண்ணிட்டேன்.. உன்னை அப்பவே போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருந்தேன்னா இன்னைக்கு நீ இந்த வேலை பார்த்து இருக்க மாட்ட.. நான் கொஞ்சம் லேட்டாகி வந்து இருந்தா கூட மதுவோட முகத்துல நீ அசிட்டை ஊத்தி இருப்ப.. உன்னை இன்னைக்கு சும்மா விடுவேன்னு மட்டும் நினைக்காதே..” என்று அவனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான்.
கண்களை மூடிக்கொண்டு இருந்தாலும், மதுராவின் செவிகளிலே புகழின் குரல் கேட்க, கண்களை மெல்லத் திறந்தாள். அங்கே ஆகாஷை நிலத்தில் போட்டு அடி வெளுத்துக் கொண்டிருந்தான் புகழ். புகழின் அருகில் சென்று அவனது கையைப் பிடித்து இழுத்தாள் மதுரா. அவனும், “என்னை விடு மது.. இவனை இன்னைக்கு கொல்லாம விட்டா என் ஆத்திரம் அடங்காது.. என்ன வேலை பார்த்து இருக்கான் இந்த பொறுக்கி..” என்று அவனை மீண்டும் அடிக்க பாய்ந்தான் புகழ்.
“விடு புகழ்.. ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு முதல்ல இங்க இருந்து என்னை கூட்டிட்டு போ..” என்று மறுபடியும் அவன் கையைப் பிடித்து அழ ஆரம்பித்தாள்.
“விடு மது என்னை.. என்று மீண்டும் அந்த ஆகாஷிடம் பாயப் போனவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். “ப்ளீஸ் புகழ் எனக்கு பயமா இருக்கு..” என்று அழ ஆரம்பித்தவளுக்காக அந்த ஆகாஷிடம் திரும்பிய புகழ் தனது கையை நீட்டி, “இதுதான் உனக்கு நான் குடுக்கற லாஸ்ட் வார்னிங்.. ஆனால் இந்த விஷயத்தை நான் தீஷிக்கிட்ட சொல்லியே தீருவேன்.. அவன் உன்னை என்ன பண்றான்னு பொறுத்து இருந்து பாரு..” என்று மீண்டும் அவன் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி மிதித்து விட்டு தனது கையணைப்பிலையே மதுவை அழைத்து சென்றான்.
மது அழுது கொண்டே புகழுடன் வீட்டிற்கு வந்தாள். இதைப் பார்த்ததும் ஹாலில் இருந்த பரந்தாமன், “மது என்னாச்சிமா? ஏன் அழுதிட்டே வர்ற?” என்று கேட்க, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக ஓடிச் சென்று தந்தையை அணைத்துக் கொண்டு கதறி அழ தொடங்கினாள் மதுரா. இதைப் பார்த்த தீக்ஷிதன் புகழிடம், “புகழ் என்னாச்சு? மது எதுக்காக இப்படி அழுகிறா?”
“சொல்லுப்பா என்னாச்சு என்னோட மதுக்கு?” என்றார் பரந்தாமனும் மிகுந்த பதற்றத்துடன்.
“சொல்றேன் அங்கிள்.. இருங்க முதல்ல மதுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுப்போம்..” என்று சொல்லி தண்ணீரை எடுத்து வந்து மதுவிடம் குடிக்க கொடுத்தான் புகழ்.
அங்கிருந்து சோபாவில் தன் மகளை தன்னோடு உட்கார வைத்துக் கொண்டார் பரந்தாமன். இந்த உலகத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் தந்தையின் நெஞ்சுக்குள் அடங்கிக் கொண்டாள் மதுரா.
மதுரா இப்படி இருந்து அவர்கள் இதுவரை ஒரு நாளும் பார்த்ததில்லை. தீஷிதன் மெல்ல மதுரா அருகில் வந்து அமர்ந்து அவள் தலையில் வருடி கொடுத்தான். “மது எதுக்கு இப்படி பயப்படுற? ஒன்னும் இல்ல எல்லாம் சரியாயிடும்..” என்று அவள் தலையை வருடி கொடுத்தவன் புகழை கேள்வியாக நோக்கினான். புகழும் அன்று தான் அவளை அழைத்து வரச் சென்றது, ஆகாஷ் அவளிடம் தவறாக நடந்து கொள்ளப் பார்த்தது, இன்று அசிட் ஊற்ற வந்தது என்று அனைத்தையும் சொல்லி முடித்தான். அவன் அதை சொல்லும் போதே தீக்ஷிதனின் கண்கள் சிவந்து கைகள் இறுகின.
புகழ் அந்த ஆகாஷை பாத்துட்டு வரலாம் வா என்றவாறு எழுந்தான் தீஷிதன். எழுந்த அவனின் கரத்தை இறுக்கிப்பிடித்தால் மதுரா. “அண்ணா வேண்டாம் அண்ணா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. ப்ளீஸ் அண்ணா எனக்கு இங்க இருக்க வேணாம்.. என்னை எங்கேயாவது பத்திரமான இடத்துக்கு அனுப்பி வை அண்ணா.. என்னால முடியல..” என்று விம்மி விம்மி அழுதாள். தங்கையின் அழுகுரலை கேட்டதும் மேலும் கோபம் வந்தது தீஷிதனுக்கு. ஆனால் அதை இப்போது காட்டுவது சரியல்ல. முதலில் தங்கைக்கு தைரியத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவன் புகழிடம் கண்ணைக் காட்டிவிட்டு, மதுவின் அருகிலேயே உட்கார்ந்தான்.
“மது இப்போ எதுக்கு நீ இப்பிடி பயப்படுற? உன் அண்ணன் நான் இருக்கிறன்.. உன் அப்பா இருக்கிறாங்க.. இதோ புகழ் வேற இருக்கிறான்.. உன்னை யாரும் எதுவும் பண்ண முடியாது.. நீ பயப்படாத..” என்று முடிந்த அளவு அவளுக்கு ஆறுதல் சொன்னான். இருந்தாலும் அவள் அந்த பயத்தினால் விட்டு வெளியே வரவும் முடியவில்லை. இப்படியே நாட்கள் செல்ல வீட்டை விட்டுக்கூட வெளியே வருவதற்கு கூட பயந்தாள் மதுரா.
எங்கே ஆகாஷ் மீண்டும் வந்து விடுவானோ? தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் அவளுக்குள் அதிகம் வர தொடங்கியது. இதைப் பார்த்து தீஷிதன் இதை இப்படியே விட்டால் சரியில்லை என்று தன் தந்தையிடம் பேச நினைத்தான். அதே நேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. அந்த மாவட்டத்திலேயே மூன்றாம் இடத்தை பெற்றாள் மதுரா. அவளை அனைவரும் பாராட்டினார்கள். பாடசாலையில் இருந்து வந்து அனைவரும் அவளுக்கு வாழ்த்துச் சொல்லி சென்றார்கள். பள்ளிக்கூடத்தில் பாராட்டு விழா கூட இடம் பெற்றது. ஆனால் அனைத்திக்கும் தந்தையும் தமையனும் புகழும் உடன் வரவே வந்தாள் மதுரா. தனியாக செல்வதற்கு அவள் மிகவும் பயந்தாள். இதைப் பார்த்துவிட்டு இதற்கு மேலும் பொறுமையாக இருக்கக் கூடாது என்று நினைத்த தீஷிதன் தந்தையை அழைத்து, “டேட் மது இப்படியே இருக்கிறது நல்லது இல்ல.. நம்ம வேணும்னா நம்ம அத்தை வீட்டுக்கு மதுவ அனுப்பி வைக்கலாமா? அவ காலேஜ்ஜ அங்கேயே படிக்கட்டுமே..”
“என்ன தீஷி சொல்ற மலேசியாவுக்கா அனுப்ப?” என்று யோசனையாகக் கேட்டார் பரந்தாமன்.
“ஆமாப்பா என்ன இங்க இருந்தா மது நடந்ததையே தான் யோசிச்சிட்டு இருப்பா.. கொஞ்ச நாள் வேற இடத்தில் இருந்து பாக்கட்டுமே.. அத்தையும் அவள பாத்துப்பாங்கல்ல..” என்றான். அவன் சொல்வது சரிதான் என்று யோசித்துப் பார்த்த பரந்தாமன், மலேசியாவில் இருக்கும் தனது தங்கைக்கு கால் பண்ணினார். அண்ணனின் அழைப்பைப் பார்த்ததும் துள்ளிக் குதித்துக் கொண்டு முகம் முழுதும் மகிழ்ச்சியோடு போனை எடுத்தார் தமயந்தி.
“அண்ணா..”
“தமயந்தி நல்லா இருக்கியாமா?” “ஆமா அண்ணா ரொம்ப நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க? தீஷி, மது, புகழ் எல்லாரும் நல்லா இருக்காங்களா?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க டா.. அங்க மாப்பிள்ளை.. விக்ராந்த் எல்லோரும் நலமா?”
“ஆமா அண்ணா அவங்களுக்கு என்ன ரொம்ப ஜாலியா நல்லா சந்தோஷமா இருக்காங்க.. என்ன அண்ணா திடீர்னு இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க.. எதுவும் அவசரமா?” என்றார் தனது தமையனிடம்.
“ஆமாம் தங்கச்சி ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..” என்றவர் மதுவுக்கு நடந்த அனைத்தையும் கடகடவென்று கூறி முடித்தார்.
இதை கேட்டதும் மறுபக்கத்தில் இருந்த தமயந்தி ஆடிப் போய்விட்டார். “அண்ணா அந்த ஆகாஷை சும்மாவா விட்டிங்க?” என்று கோபத்துடன் கேட்டார்.
“அது எப்படிம்மா விட முடியும்? தீக்ஷிதா யார் மூலமோ பேசி அவனுக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்திருக்கிறான்.. மது தான் எதுவுமே பண்ண வேணாம்னு சொல்லிட்டா.. ரொம்ப பயத்தில் இருக்காம்மா.. எங்கேயும் தனியா போறது கூட இல்லை.. இப்போ கூட காலேஜ் போக மாட்டேன்னு பிடிவாதம் வேற பிடிக்கிறா.. தீஷிதான் சொன்னான் மலேசியாவில் இருக்க அத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம் அப்பா.. கொஞ்சம் நாளைக்கு இடம் மாறி இருந்தா நல்லா இருக்கும்னு.. உனக்கு மது அங்க வர்றதுல எதுவும் பிரச்சனையிலேயேமா?” என்று பரந்தாமன் தயங்கிக் கொண்டு தமயந்தியிடம் கேட்க,
“அண்ணா என்ன இது இப்படி கேக்குறீங்க? மது என்னோட பொண்ணு அண்ணா.. நீ தாராளமா அவளை அனுப்பி வை.. நான் அவளை பத்திரமா பாத்துக்குறேன்..” என்று சொன்னார் தமயந்தி.
“அம்மாடி மாப்பிள்ளை கிட்டயும் எதுக்கு ஒரு வார்த்தை கேட்டுக்கோ அம்மா..”
“அண்ணா அவரும் இதுக்கு சம்மதம் தான் சொல்லுவாரு.. உங்க மாப்பிள்ளை பத்தி உங்களுக்கு தெரியாதா? நீங்க எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு எப்ப வரீங்கன்னு மட்டும் சொல்லுங்க.. அப்புறம் மது என்ன படிக்கப் போறான்னு சொல்லுங்க.. நான் இங்கே காலேஜ் பற்றி விசாரிச்சு வைக்கிறேன்.. அப்போ அவள் வரவும் காலேஜ் போகவும் லேசா இருக்கும்ல..” என்று மேலும் அவருடன் பேசிவிட்டு போனை வைத்தார் தமயந்தி.
தமயந்தி சொன்னதை தீக்ஷிதனிடமும் புகழிடமும் சொன்ன பரந்தாமன் இதை மதுவிடம் எப்படி சொல்வது என்று நினைக்க, தீஷிதன் தான், “நான் மது கிட்ட பேசிக்கிறேன் அப்பா..” என்றான்.
மது தனது அறைக்குள் இருக்க கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான் தீக்ஷிதன். “மது என்ன பண்ணிட்டு இருக்க?”
“ஒன்னும் இல்லன்னா சும்மா தான் இருக்கேன்..” என்றாள். அவளின் அருகில் வந்து உட்கார்ந்தவன், “மதுமா அண்ணா சொல்லுறதை நீ கேட்பாதானே..” என்றான். “சொல்லுங்க அண்ணா.. நான் என்ன பண்ணனும்? “ என்று மதுரா தீஷிதனிடம் கேட்க,
“அதுவந்து மதுமா நீ இங்க இருந்தா ரொம்ப பயப்படுற.. உனக்கு அந்த ஆகாஷால எந்த பிரச்சனையும் வராது இனிமேல்.. ஆனால் நீ நடந்ததையே நினைச்சிட்டு இருக்க.. கொஞ்ச நாள் அத்தை கூட போய் இருக்கிறயா?”
“அத்த கூடவா? எங்க அண்ணா மலேசியாக்கா?”
“ஆமாடா நீ காலேஜ் வந்து மலேசியாவில் படிச்சுக்கோ.. நான் அப்பா எல்லாம் அடிக்கடி உன்னை வந்து பார்த்துட்டு வருவோம்.. அங்கிருந்தா உனக்கும் ஒரு சேஞ்ச் கிடைக்கும்ல்ல.. அத்தை, மாமா விக்ராந்த் எல்லாரும் உன்ன நல்லா பாத்துக்குவாங்க..”
“ஆனா அவங்க யாரும் நீ என்னை பாத்துக்கிற மாதிரி பாத்துக்க மாட்டாங்கல்ல அண்ணா..” என்றாள் மதுரா அவனின் தோளில் சாய்ந்தவாறு.
“இங்க பாருடாம்மா, அண்ணா எது செஞ்சாலும் அது உன்னோட நல்லதுக்காகத் தான்னு உனக்கு தெரியும்ல..”
“சரி அண்ணா நீ சொல்றதனால நான் அங்க போறேன்.. ஆமா அண்ணா அங்க போய் நான் என்ன தான் படிக்கட்டும்?” என்று கேட்ட தங்கையிடம், “நம்ம பிஸ்னஸை பாத்துக்குற மாதிரி பிஸ்னஸ் ஸ்டடீஸ் படிடா.. அதுதான் உனக்கும் நல்லது.. எதிர்காலத்துல நீ நம்ம கம்பெனியை பொறுப்பேற்கும் நிலை வந்தால் உனக்கு அது ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்..”
“சரி அண்ணா நீ சொல்ற மாதிரி அதையே படிக்கிறேன்..” என்ற தங்கையை அனைத்து நெற்றியில் பாசமாக முத்தம் ஒன்றை வைத்தான் தீஷிதன். என்று தனது கடந்த காலத்தை சொல்லிக் கொண்டிருந்த மதுராவை நிறுத்தினாள் நாம் நாயகி சம்யுக்தா.
“என்ன அண்ணி கதை போர் அடிக்குது?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் மதுரா.
“இல்லை மது.. நீ உன்னோட லவ் ஸ்டோரி சொல்ல வந்த இதுல எங்க உன் ஆள் வந்தாங்க?”
“அண்ணி இதுக்கப்புறம் தான் கதையே இருக்கு..” என்று சிரித்தாள் மதுரா. அவள் சிரிப்பதைப் பார்த்து சம்யுக்தா முறைக்க, “சரி அண்ணி கவலைப்படாதீங்க இப்ப சொல்லிடுறேன்..” என்றவள் மீண்டும் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊 20 ரேட்டிங் வந்தா நைட் ஒரு எபி தர்றேன் பட்டூஸ் 😍
மதுராவின் காதல் கதையை கேட்க மிகுந்த ஆவலாய் மதுராவின் கட்டிலில் வசதியாக உட்கார்ந்து கொண்டு அங்கிருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்து தனது இரண்டு கைகளையும் அதில் ஊன்றி முகத்தை அதில் வைத்தபடி கதை கேட்க தயாரானாள். அவளின் நிலையைப் பார்த்து சிரித்த மதுரா, “ஏன் அண்ணி என்னோட காதல் கதையை கேட்க இவ்வளவு ஆர்வமா?” எனக் கேட்க, அதற்கு சம்யுக்தா,“இருக்காதா பின்ன.. எனக்கு லவ் ஸ்டோரி படிக்கிறது ரொம்ப பிடிக்கும்.. காலேஜ் படிக்கும் போது நிறைய லவ் ஸ்டோரீஸ் படிச்சிட்டு இருந்தேன்.. அதெல்லாம் அழகிய காலம்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு லவ் ஸ்டோரி கேக்கப் போறேன்ல அதுதான் இந்த செட்டப்..”
“அண்ணி ஆனால் நீங்க எதிர்பார்க்கிற சீன் எல்லாம் இருக்காது.. அப்புறம் வீணா ஏமாந்து போகக்கூடாது..”என்றவள் தனது காதல் கதையை சம்யுக்தாவிடம் கூற ஆரம்பித்தாள்.
மதுரா பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தாள். எப்போதும் தீஷிதன் முதலில் மதுராவை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு செல்வான். இப்படியாக நடந்து கொண்டு இருந்தது. மதுராவை ஒருதலையாக அவள் வகுப்பு மாணவன் ஒருவன் காதலித்து வந்தான். இது மதுராவிற்கு தெரியாது. ஒருநாள் காலேஜ் முடிந்ததும் தீஷிதனுக்கு ஃபுட்பால் ப்ராக்டிஸ் இருந்ததால் அவனது தோழன் புகழை அழைத்து மதுவை வீட்டில் விட்டுவிடுமாறு சொன்னான். புகழும் சரி என்று சொல்லிவிட்டு மதுரா படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு வந்தான். அங்கே மதுவைக் காணவில்லை. உள்ளே சென்று பார்க்க, அங்கேயும் மதுராவைக் காணவில்லை. ‘என்ன மதுவை எங்கேயும் காணவே இல்லை.. ஒருவேளை வீட்டிற்கு போயிருப்பாளா?’ என யோசித்தவன், அங்கிருந்த காவலாளியிடம் கேட்க, அவரோ நான் பாக்கலைங்க என்றார்.
புகழ் அவரிடம் மதுவின் வகுப்பறையை கேட்டு அறிந்து கொண்டு அங்கே வந்தான். அவளது வகுப்பறையை புகழ் நெருங்கும் போது, அவனுக்கு மதுராவின் குரல் கேட்க, வேகமாக ஓடி வந்தான்.
மதுரா அழுதழுது கண்கள் சிவந்திருந்தன. “இங்க பாரு ஆகாஷ் நான் இங்க படிக்கத்தான் வந்திருக்கேன்.. எங்க அண்ணனுக்கு மட்டும் நீ இப்பிடி எங்கிட்ட நடந்துக்கிறது தெரிஞ்சா அவரு என்ன பண்ணுவாருன்னு தெரியாது என்னை விட்டுடு எனக்கு உன்னைப் பிடிக்கல..” என்று ஆகாஷ் முன்னால் கையெடுத்துக் கும்பிட்டு கதறினாள் மதுரா. ஆனால் அவனோ இவளை வக்கிரமாகப் பார்த்து, “உன்னை எனக்கு பிடிச்சிருக்கு.. நீ என்னை லவ் பண்ற அவ்வளவுதான்.. உன்னை மாதிரி அழகிய என்னோட லவ்வர்னு நான் மத்தவங்ககிட்ட சொல்லணும்.. மரியாதையா என் காதலை ஏத்துக்க இல்லைனு வையேன்.. நைட்டுக்கு இங்கதான் இருப்போம்.. நாளைக்கு மார்னிங் யாராவது வந்து க்ளாஸ்ரூமைத் திறக்கட்டும்.. அப்போ உன் மானம் மரியாதை எல்லாம் போயிடும்..” என்று அவன் சொல்லிக் கொண்டே இருக்கும் போது, அவனெ பேசுவதைக் கேட்ட புகழுக்கு கோபம் வர அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து பூட்டை உடைத்து, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
புகழைப் பார்த்ததும் தனது கையைப் பிடித்துக் கொண்டு இருந்த ஆகாஷின் கையை தன் பலம் கொண்ட மட்டும் உதறிவிட்டு ஓடி வந்து புகழை அணைத்துக் கொண்டு அழுதாள் மதுரா. அவளை சமாதானப்படுத்திய புகழ் அந்த ஆகாஷ் பக்கம் திரும்பினான். மதுராவை அங்கிருந்த சேரில் உட்கார வைத்து விட்டு அவனிடம் வந்தவன், அவனைப் போட்டு அடி வெளுத்து விட்டான். “படிக்க வந்தா அந்த வேலையை மட்டும் பாக்கணும் அத விட்டுட்டு பொண்ணுக்கிட்ட இப்படி தப்பா பேசிட்டு இருக்க.. இங்க நடந்தது எல்லாம் மதுவோட அண்ணனுக்கு தெரிஞ்சிதுனு வையேன் அப்புறம் உன் உயிர் உங்கிட்ட இருக்காது.. ஏதோ படிக்கிற பையன் வயசுக் கோளாறுல இப்படி பண்ணிட்ட இந்த ஒரு தடவை உன்னை மன்னிச்சு விடுறேன்.. இதுக்கு அப்புறம் மது பக்கம் வந்த அப்புறம் உனக்கு நடக்கிற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை மது வா..” என்றவன் அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தான்.
மதுராவிற்கு மிகவும் பயமாக இருந்தது. அதனால் புகழின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அவன் தோளில் சாய்ந்தவாறு நடந்து வந்தாள். அவளின் உடல் நடுங்குவதிலேயே அவளின் பயத்தை உணர்ந்த புகழ் அவளை சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் அவளோ பயத்திலேயே இருந்தாள். தனது பைக்கில் அவளை ஏற்றிக்கொண்டு வந்தவன், வீட்டிற்கு போகும் வழியில் ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தினான். புகழ் பைக்கை நிறுத்த அவனைப் பார்த்தாள் மதுரா.
“இங்க பாரு மது இப்போ எதுக்கு நீ இப்பிடி பயந்துட்டு இருக்க? நீ பயப்படற அளவுக்கு எதுவும் நடக்கல..”
“இல்ல ஒரு வேளை அந்த ராஸ்கல் என்னை ஏதாவது பண்ணியிருந்தா என் வாழ்க்கையே போயிருக்கும்.. அண்ணா என்னை பற்றி என்ன நினைக்கும்?”
“மது அதுதான் எதுவும் தப்பா நடக்கல.. அதையே யோசிச்சிட்டு இருக்காத.. படிக்கிற வேலையை பாரு.. இது தீஷிக்கு தெரிஞ்சா அந்த ஆகாஷை என்ன பண்ணுவான்னு தெரியாது.. வீட்டில இதை சொல்லாத அங்கிள் பயந்திடுவாங்க.. மது நீ இந்த விஷயத்தை நினைச்சிட்டு இருக்காத..” என்று பலவாறு அவளிடம் பேசி அவள் மனதை மாற்றினான். புகழ் பேசியதைக் கேட்ட மதுராவின் குழப்பமடைந்திருந்த முகம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைந்ததை பார்த்த புகழுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. மதுராவை வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டான்.
இப்படியாக நாட்கள் நகர்ந்து சென்றன. அன்று ஆகாஷிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய புகழ் மீது மதுராவிற்கு ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது. அது நன்றிய்ணர்வா? இல்லை பாசமா? எதுவென்று அவளால் சரியாக இனங்காண முடியாமல் இருந்தாள். அவள் மனம் புகழைப் பார்க்க துடித்தது. அவனைப் பார்த்தால் பேச முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. இந்த நிலையில் அவளின் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதிப் பரீட்சை நிறைவடைந்தது. தனது தோழிகளுடன் பேசிக் கொண்டு தீஷிதனுக்காக காத்திருந்தாள் மதுரா. அப்போது அவளின் முன்னால் வந்த ஆகாஷ் அவளின் தோழிகளைப் பார்த்து, “நான் மதுகூட கொஞ்சம் தனியாக பேசணும்.. நீங்க கொஞ்சம் அந்தப் பக்கம் போறீங்களா?” என்றான். அதற்கு அவர்கள் மதுராவைப் பார்க்க அவளோ, “நீங்க எதுக்கு எங்கூட தனியா பேசணும்? எனக்கு உங்ககூட பேச எதுவும் இல்லை..” என்று ஆகாஷைப் பார்த்து கேட்டவள், தோழிகள் பக்கம் திரும்பி, நீங்க இங்கேயே இருங்கடி..” என்று தோழிகளிடம் சொன்னாள். இதைக் கேட்ட ஆகாஷிற்கு கோபம் வர, மதுராவின் கையைப் பிடித்து கலாட்டா செய்தான். “என் கையை விடுடா.. இதை மட்டும் என் அண்ணா பாத்தாங்க உன்னை உயிரோடவே விடமாட்டாங்க..” என்று சொல்லிக் கொண்டு அவனிடம் இருந்து தப்பிக்க முயன்றாள் மதுரா. அதைக் கேட்டு சிரித்த ஆகாஷ், “உன் அண்ணன் என்னை என்ன வேணாலும் பண்ணட்டும்.. ஆனால் அதுக்கு முன்னாடி நான் உன்னை இன்னைக்கு ஒருவழி பண்ணாம விடமாட்டேன்.. உன்ன லவ் பண்றேன்னு சொல்ற என்னை லவ் பண்ண மாட்ட.. உன் அண்ணன் ப்ரெண்டோட மட்டும் சுத்தித்திரிவல?”
“ஏய் வார்த்தையை அளந்து பேசு..”
“எல்லாம் நீ அழகா இருக்கிற திமிருதானே.. உன் திமிர இன்னைக்கு அடக்கல என் பேரு ஆகாஷ் இல்லடி..” என்று சொல்லியபடி யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது பையில் இருந்த அசிட் பாட்டிலை எடுத்தான். அதைப் பார்த்தும் மதுராவிற்கு உதறல் எடுத்தது.
“ஆகாஷ் நீ எதுக்கு இப்போ அசிட் பாட்டிலை எடுத்த? ப்ளீஸ் என்னை எதுவும் பண்ணிடாத..” என்று பயத்துடன் கெஞ்சினாள் அவனிடம். அவளைப் பார்த்து கொடூரமாக சிரித்தவன்,
“இந்த அழகான முகம் இருக்கிறதனாலதானே நீ இப்பிடி திமிரா இருக்க.. எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது..” என்றவன் அந்த அசிட்டை அவள் முகத்தில் ஊற்றச் செல்லும் போது மதுரா பயத்தில் அழ ஆரம்பித்தாள். ஆனால் அவனை அவளின் அழுகை நிறுத்தவில்லை. மதுரா பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். அசிட்டை ஊற்றும் நேரத்தில் அவன் கையில் கட்டை ஒன்று வந்து விழ, அவன் கையில் இருந்த அசிட் பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. தன்னை அடித்தவனை திரும்பிப் பார்க்க அங்கே சினம் கொண்ட வேங்கையாக நின்றிருந்தான் புகழ்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
தீக்ஷிதன் சம்யுக்தாவை அண்ணி என்று மதுரா அழைப்பதற்கு சம்மதம் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான். அவன் என்ன சொல்லி விட்டுப் போனான் என்று யோசனையில் இருந்த சம்யுக்தாவிடம், “ஆரத்தி எடுமா.. மது உள்ளே போகட்டும்..” என்று பரந்தாமன் சொல்ல, அவளும் சரி என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு மதுராவிற்கு மகிழ்வோடு ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வரவேற்றாள்.
“தேங்க்ஸ் அண்ணி..” என்று அவள் சம்யுக்தாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளிவிட்டு உள்ளே குதித்துக் கொண்டு உள்ளே ஓடினாள் சென்றாள். ஆரத்தியை வாசலில் கொட்டி விட்டு உள்ளே வந்த சம்யுக்தா தீஷிதனிடம் பேச வேண்டும் என்று நினைத்து அவனைத் தேடினாள். அவன் எங்கே இங்கே இருந்தான். அவன் எப்போதோ அவனின் அறைக்குள் சென்றிருந்தான்.
‘என்ன இது சார் வெளியில ஏதோ சொன்னாரு இப்போ வந்து அவர்கிட்ட கேட்கலாம்னா இந்த சார் ரூமுக்கு போய்ட்டாரு போலயே இப்ப என்ன பண்றது..’ என்று புடவை முந்தானையில் முடிச்சு போட்டுக் கொண்டு இருந்தாள் சம்யுக்தா.
அவளிடம் வந்த பரந்தாமன், “என்னம்மா ரொம்ப யோசிக்கிற மாதிரி இருக்கு?” என்று எதுவும் தெரியாத மாதிரி கேட்க, சம்யுக்தா அவரைப் பார்த்து, “சார் எதுக்கு தீஷிதன் சார் அப்படி சொல்லிட்டு போனாரு?”
“மது எதுக்கு என்னை அண்ணி என்று கூப்பிடனும்?”
“என்னைக் கேட்டா எனக்கு எப்படிம்மா தெரியும்? நீ அவன்கிட்ட தான் அதைக் கேக்கணும்.. நான் எதுவும் சொல்லலையே அவன் தானே சொன்னான்..” என்று அங்கிருந்து நழுவப் பார்த்தார். ஆனால் சம்யுக்தா விடுவாள், “இங்க பாருங்க சார்.. நான் இங்க நிம்மதியா இருந்துட்டு இருக்கேன்.. அதுல ஏதாவது குழப்பம் வந்துச்சுன்னா சத்தியமா சொல்றேன் இங்க இருந்து நான் யார்கிட்டேயும் சொல்லாம போயிடுவேன்.. அப்புறம் நீங்க எப்படி தேடினாலும் நான் கிடைக்கவே மாட்டேன்..” என்றாள் மிகவும் உறுதியான குரலில். அந்தக் குரல் பரந்தாமனை அசைத்துப் பார்த்தது. “என்ன சம்யுக்தா எதுக்குமா இப்படி பேசுற.? இப்போ உனக்கு இந்த வீட்ல என்னாச்சு? உன் நிம்மதிக்கு அப்படி என்ன பங்கம் வந்துச்சு?”
“சார் நான் ஒன்னும் சின்னக் குழந்தை கிடையாது.. நான் வாழ்க்கையில ரொம்பவே அடிபட்டு இருக்கேன்.. அதனால இப்ப யாரு என்ன பேசினாலும் அவங்க எந்த மீனிங்ல பேசுறாங்கனு என்னால புரிஞ்சுக்க முடியும்.. சார் தயவு செய்து உங்க பையன் கிட்ட சொல்லுங்க சார்.. அப்படி எதுவும் பேச வேண்டாம்னு..”
“இங்க பாரு சம்யுக்தா நீ இங்க மூணு மாசமா இருக்க.. நீயும் தீஷிய பார்த்துகிட்டு தானே இருக்க.. அவன் உன்னோட நிம்மதியை கெடுக்கிற மாதிரி எப்பவாவது நடந்துக்கிட்டானா? இல்ல உன்கிட்ட தான் தப்பா நடந்துக்கிட்டானா இல்ல இல்ல.. இப்போ ஏதோ தங்கச்சி ஆசைப்படுறான்னு சொல்லி இருப்பான் நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லம்மா.. நீ ஏதுவும் யோசிக்காத..” என்று அவளை சமாதானப்படுத்தும் விதமாக கூறினார்.
“சரிங்க சார்.. நான் நினைக்கிற மாதிரி எதுவும் இல்லைனா எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான்.. சரி நான் போய் மதுவை பாத்துட்டு வரேன்..” என்ற அவள் மதுராவின் அறைக்குச் சென்றாள்.
சம்யுக்தா அங்கிருந்த நகர்ந்ததும் பரந்தாமன் உதடுகளுக்குள் சிரித்துக் கொண்டார். ‘சம்மு நீ இன்னும் தீஷியை சரியா புரிஞ்சுக்கல.. ஆனா எனக்கு அவனோட ஒவ்வொரு நகர்வும் எப்படி இருக்கும்னு தெரியும்.. எப்படியோ நல்லது நடந்தா சரி..’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டார்.
………………………………………………….
வித்யாவிற்கு அந்த பிரகாஷ்ஷை ஏதாவது ஒரு வழி பண்ண வேண்டும் என்ற வெறி இருந்தாலும் தனது அன்பான அக்காவை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தாள். சம்யுக்தாவை கண்டுபிடித்த பின்னர் பிரகாஷிற்கு ஒரு முடிவு கட்ட முடிவெடுத்த வித்யா, சம்யுக்தாவைப் பற்றி தேட ஆரம்பிக்க தனது நண்பர்களின் உதவியை பெற நினைத்தாள். அதனால் அங்கிருக்கும் தனது நண்பர்களுக்கு அழைத்து சம்யுக்தா காணாமல் போய் விட்டதாக கூறி அவளை கண்டுபிடிக்க உதவி செய்யும்படி கேட்க, அவளின் நண்பர்களும் அவளுக்கு உதவுவதாக கூறினார்கள்.
………………………………………………….
தனது அறைக்குள் வந்த மதுரா, வித்யாவிற்கு அழைக்கலாம் என்று போனை எடுக்க சரியான நேரத்தில் வந்து கதவைத் தட்டினாள் சம்யுக்தா. கதவு தட்டும் சத்தம் கேட்டு, “யாரு?” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தால் மதுரா.
வெளியே இருந்து, “மது நான் தான்..” என்ற சம்யுக்தாவின் குரல் கேட்டது. “ஐஐஐ அண்ணி உள்ள வாங்க.. நான் கதவை லாக் பண்ணல..” என்றாள். அவளின் அண்ணி என்ற அழைப்பு சம்யுக்தாவிற்கு கடுப்பாக்கினாலும் நீண்ட நாட்களின் பின் வீட்டுக்கு வந்த அவளிடம் மன நோகும்படி எதுவும் பேசக்கூடாது என்று பொறுமை காத்தாள். கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த சம்யுக்தா, “அப்புறம் மது எப்படி இருக்க? இனிமே என்ன பண்ணலாம்னு இருக்க?” என்று கேட்க மதுராவும், “அண்ணி சூப்பரா இருக்கிறேன்.. ஆனா என்னோட ஃப்ரெண்ட்டை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அண்ணி.. இத்தனை நாள் அவ கூட ரொம்ப ஜாலியா இருந்தேன்.. இனிமே அவளும் பிஸி ஆயிடுவா நானும் பிஸி ஆயிடுவேன்.. என்னோட அண்ணன் இருக்காரே அவரு எப்பவோ சொல்லிட்டாரு.. நான் காலேஜ் முடிஞ்சு வந்ததும் கம்பெனில ஒரு பொறுப்பை எடுத்துக்கணும்னு.. நான் கொஞ்ச நாள் வீட்ல ஃப்ரீயா ரிலாக்ஸா இருக்கணும்னு நினைக்கிறேன்.. பாக்கலாம் அண்ணன்கிட்ட அப்புறமாதான் பேசி பாக்கணும்..” என்று அங்கலாய்த்தவளை பார்த்த சம்யுக்தாவிற்கு சிரிப்பு வந்தது.
“அண்ணி என்ன சிரிப்பா? இங்க பாருங்க நானாவது அண்ணன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிடுவேன்.. ஆனா நீங்க எஸ்கேப் ஆகவே முடியாது..”
“ஏன் நான் எஸ்கேப்பாக முடியாது? அதெல்லாம் நான் எஸ்கேப் ஆயிடுவேன்..” என்று சவால்விட்டாள் சம்யுக்தா.
“ஐயோ அண்ணி.. நான் உங்களை அண்ணி.. அண்ணி.. என்று கூப்பிடுவது மரியாதைக்காக மட்டும் இல்ல.. என் அண்ணனோட மனசு புரிஞ்சதால தான்.. இன்னைக்கு வந்த எனக்கே புரிஞ்சுது மூணு மாசமா இங்கேயே இருக்கிற உங்களுக்கு புரியலையா?”
“மது நீ என்ன சொல்ற? எனக்கு ஒன்னும் அப்படி புரியலையே.. சார் என்கூட பேசவே மாட்டாங்க.. எல்லாரையும் புரிஞ்சிக்கிற என்னால ஒருவேளை அவரை புரிஞ்சிக்க முடியலையா?” என்று பதட்டமானாள் சம்யுக்தா.
அவளின் பதட்டத்தைப் பார்த்த மதுரா, “அண்ணி இப்ப எதுக்கு பதட்டப்படுறீங்க?”
“பதட்டப்படாமல் என்ன மது பண்ண சொல்ற? நீ இப்ப வந்து என்ன ரொம்ப குழப்புற..”
“அண்ணி நான் உங்கள விட ரொம்ப சின்னவ தான்.. ஆனா இந்த அனுபவத்துல உங்களை விட நான் பெரியவ” என்றாள்.
“ஏய் மது என்ன சொல்ற நீ?”
“ஆமா அண்ணி.. நான் ஆல்ரெடி கமிட்டட்.. அண்ணி யார் கிட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்..”
“என்னது நீ கமிட்டடா? இங்க பாரு மது இப்படி ஒரு அண்ணனை வச்சுக்கிட்டா நீ கமிட்டட்னு சொல்ற? தீஷி சார் மட்டும் இதைக் கேட்டாரு அப்புறம் அந்தப் பையன் ரொம்ப பாவம்..” என்ற சம்யுக்தாவிடம், “அண்ணி ஏன் ஆளு யாருக்கும் பயப்பட மாட்டாரு.. அண்ணனுக்கு கொஞ்சம் லைட்டா பயப்படுவாரு.. ஆனா என் அண்ணனுக்கு நான் யாரை லவ் பண்றேன்னு தெரிஞ்ச உடனே கல்யாணம் பண்ணி வச்சிடுவாரு தெரியுமா?”
“அப்படினா மது நீ லவ் பண்ற ஆளு யாருனு சொல்லு மது.. நானும் தெரிஞ்சுக்கிறேன்..” என்று ஆர்வமாக மதுவின் அறைக்குள் போடப்பட்டிருந்த சோபாவில் ஏறி அமர்ந்து அவளிடம் கேட்டாள்.
அவள் கேட்டதும் மதுராவிற்கு வெட்கம் எட்டிப் பார்த்தது. “ஐயோ அண்ணி, நான் எப்படி சொல்றது? எனக்கு வெக்க வெக்கமா வருதே..” என்றாள்.
அவளை கேலி செய்த சம்யுக்தா “பாருடா.. உனக்கு வெக்கம் எல்லாம் வருமா மது?” என்று அவளின் காலை வாரினால் சம்யுக்தா. “அண்ணி என்ன என்கிட்டயே லந்தா? எனக்கும் டைம் வரும்ல.. அப்போ உங்களை பாத்துக்கிறன்..”
“அத அப்புறம் பாத்துக்கலாம்.. இப்ப உங்க லவ் ஸ்டோரிய சொல்லு..” என்று ஆவலாய் அவளின் கதையைக் கேட்பதற்கு ஆவலாய் இருந்தாள் சம்யுக்தா.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
லீலாவதியை முறைத்து விட்டு தனது அறைக்குள் வந்து கதவை அறைந்து சாற்றினாள். அதிலேயே வித்யாவின் கோபத்தின் அளவு தென்பட்டது. அதைப் பார்த்து சிறிதும் கவலைப்படாமல் ரமணியை அழைத்து வித்யாவிற்கு ஜீஸ் கொடுக்குமாறு சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.
ரமணியும் வித்யாவிற்கு மிகவும் பிடித்த மாம்பழ ஜூஸை எடுத்துக் கொண்டு, அவள் அறைக்கு முன்னால் சென்று கதவைத் தட்டினாள். அறைக்குள் கோபத்தில் நெயில் பாலிஷ் போட்ட தனது அழகிய விரல் நகங்களை கடித்துத் துப்பியபடி தனது கோபத்தை விரல் நகங்களில் காட்டிக் கொண்டு அறையை குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள் வித்யா. அந்த நேரத்தில் ரமணியும் கதவைத் தட்டினார்.
“யாரும் உள்ள வர வேண்டாம்.. நான் கதவைத் திறக்க மாட்டேன்.. இங்க இருந்து போயிடுங்க..” என்று சொன்னதைக் கேட்ட ரமணி, “சின்னப்பாப்பா நான் ஜூஸ் எடுத்திட்டு வந்திருக்கிறன்.. கதவைத் திறங்க பாப்பா..”
“ரமணிமா நான் இருக்கிற கடுப்புக்கு இந்த ஜூஸ்தான் ரொம்ப முக்கியம்.. என்னைக் கொஞ்சம் தனியா விடுங்கம்மா..” என்று அவள் சத்தம் போட, அமைதியாக நின்ற ரமணி, “சின்னப்பாப்பா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.. கதவைத் திற பாப்பா.. என் கண்ணுல..” என ரமணி அவளிடம் அன்பாகக் கேட்க, கதவைத் திறந்தாள் வித்யா.
“பாப்பா முதல்ல இந்த ஜூஸைக் குடி..” என்று வித்யாவை வற்புறுத்தி அந்த ஜூஸை குடிக்க வைத்தார் ரமணி. அதன் பின்னர் அவளிடம், “பாப்பா உங்க அக்கா ரொம்ப பாவம்டா.. யாருக்குமே அந்த நிலமை வரக்கூடாதுமா..” என்று மிகவும் வருத்தம் நிறைந்த குரலில் கூற, அதைக் கேட்ட வித்யா ரமணியின் கையைப் பிடித்துக் கொண்டு பதட்டத்துடன், “ரமணிம்மா நீங்க என்ன சொல்றீங்க? என் அக்காவுக்கு என்னாச்சி? அவ எங்க இருக்கிறா?” என்றவள் விழிகள் கலங்க, அவளது கையைத் தட்டிக் கொடுத்து விட்டு நடந்த அனைத்தையும் வித்யாவிடம் கூறத் தொடங்கினார்.
“சின்னப்பாப்பா கல்யாணம் பண்ணி அந்த வீட்டிற்கு போன அப்புறம் உங்க அக்கா சந்தோஷமா இல்லை.. அந்த பிரகாஷ் பெரியபாப்பாவை ரொம்ப கொடுமைப்படுத்தினான்.. சம்மு பாப்பாக்கூட வாழ்ந்திட்டு இன்னொரு பொண்ணுகூட தொடர்பு வச்சிருந்துக்கிறான்..” என்று அவர் சொல்லிக் கொண்டே போகும் போது வித்யாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. “என்ன சொல்றீங்க? அந்த பொறுக்கி நாயை அம்மாவும் அப்பாவும் சும்மாவா விட்டாங்க?” என தொனியில் கோபத்தைக் காட்டிக் கேட்க, அவளைப் பார்த்து வருத்தமான புன்னகையை சிந்திய ரமணி, “சம்மு பாப்பா அந்த பொறுக்கிய டைவர்ஸ் பண்ணிட்டு இந்த வீட்டிற்கு ஆதரவு தேடி வந்த பாப்பாவை நீ இந்த வீட்டுப் பொண்ணே இல்லை.. அநாதைனு பேசி அவ மனசை உடைச்சி வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க.. அந்த ராத்திரி நேரத்துல எங்க போனா என்ன ஆனானு யாருக்கும் தெரியலை..” என்றவர் தனது புடவை முந்தானையால் வாயை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தார். வித்யாவிற்கு அந்த பிரகாஷையே கொல்லும் வெறி வர அறையில் இருந்து வெளியே செல்ல முயன்றவளைத் தடுத்தார் ரமணி.
“என்னை விடுங்க ரமணிம்மா.. எவ்வளவு தைரியம் இருந்தா என் அக்கா வாழ்க்கைய நாசமாக்கியிருப்பான்? அவனை கொல்லாம விடமாட்டேன்..”
“அவசரப்படாத சின்னப்பாப்பா.. முதல்ல சம்மு பாப்பா எங்க இருக்கான்னு கண்டுபிடிக்கணும்.. எனக்கு யார்கிட்ட உதவி கேக்கிறன்னு தெரியல பாப்பா..” என்றவரின் குரலில் இருந்த கவலை அவர் சம்யுக்தா மீது கொண்ட அன்பை பறைசாற்றியது.
“நீங்க கவலைப்படாதீங்க அக்கா.. அக்காவை எப்படியாவது கண்டுபிடிச்சி மறுபடியும் இந்த வீட்டிற்கு கூட்டிட்டு வந்து, அந்த பிரகாஷ் நாய்க்கு அவ கையாலேயே நான் தண்டனை கொடுக்க வைப்பேன்.. என் சம்மு அக்கா மனசு குழந்தை மனசு அவ மனசுக்கு நிச்சயம் நல்லாத்தான் இருப்பா..” என்றாள் உறுதியான குரலில்.
“நான் கும்பிடுற அந்த மாரியாத்தா நிச்சயமா பெரியபாப்பாவை காப்பாத்துவாமா..” என்று நம்பிக்கை மிகுந்த குரலில் கூறினார். வித்யா யோசனையில் இருக்க அவர் அங்கிருந்து சமையல் அறைக்குச் சென்று விட்டார்.
………………………………………………..
பரந்தாமன் வீட்டையே தலைகீழாக மாற்றி வைத்திருந்தார். எப்போதும் புன்னகையுடனே அவர் இருந்தாலும் இன்று அவரது முகத்தில் அதிக ஜொலிப்பாக இருந்தது. அதைப் பார்த்த சம்யுக்தா, “சார் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறீங்க போல இருக்கு..” என்று அவரிடம் புன்னகையுடனே வினவினாள். ஆம் இப்போது சம்யுக்தா முற்றிலும் மாறி இருந்தாள். அவளது பேச்சில் ஒரு தெளிவு, செயலில் நிதானம், ஆனால் உடல் எடையும் கண்ணில் அணிந்துள்ள கண்ணாடியும் மட்டுமே அவளை அடையாளம் காட்டியது. வேலையில் சேர்ந்தது முதல் மிகவும் கடினமாக உழைத்தாள். கடைசியாக இருந்த அவளது டீமை கொஞ்சம் கொஞ்சமாக ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்தாள். மூன்று மாதங்களில் அவளது இந்த கடமை உணர்வு தீஷிதனை இம்ப்ரஸ் பண்ணியது. ஒவ்வொரு விடயத்தையும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டாள். டீமில் தன்னுடைய வேலை முடிந்தது என்று நினைத்து விடாமல், மற்றவர்கள் முடிக்காமல் வைத்திருந்த வேலைகளையும் செய்து முடித்தாள். இவை அவளின் கடந்து வந்த முட்பாதையை மறக்க உதவியது. காலை முதல் மாலை என்று இல்லாமல் காலை முதல் இரவு வரை கம்பனியே கதி என்று வேலை செய்து கொண்டு இருந்தாள் சம்யுக்தா. இவளின் செயல் பரந்தாமனை வியக்க வைத்தது.
இந்த மூன்று மாதத்தில் நடந்த மற்றுமொரு விடயம் சம்யுக்தா, புகழின் செல்லத் தங்கையாக பரந்தாமனின் மாணவியாக, ஆம் சம்யுக்தாவிற்கு வேலையில் வரும் சந்தேகங்களை தீர்த்து வைத்து ஆலோசனை வழங்குவது பரந்தாமன் தான். அதனால் அவரின் மாணவியாகிப் போனாள் சம்யுக்தா. இவர்கள் இருவருடனும் சேர்ந்து இருந்தாலும் தீஷிதனுடன் மட்டும் ஒரு இடைவெளியை கடைபிடித்தாள்.
“அட ஆமால்ல சார்.. நான் மறந்தே போயிட்டேன்.. ஆமா மதுவை பார்க்க நீங்க ஏன் ஏர்போர்ட் போகல?”
“அந்த சோகத்தை ஏன்மா கேக்குற.. கடன்காரன் தீஷிதன் இந்த காலையில ரொம்ப குளிரா இருக்கும் என் உடம்புக்கு ஒத்துக்காதுனு என்னை விட்டுட்டு அவன் மட்டும் போயிட்டான்..” என்று குழந்தை போல முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டு சம்யுக்தாவிடம் மகனைப் பற்றி புகார் வாசித்தார். அவரது முகத்தைப் பார்த்த சம்யுக்தாவிற்கு சிரிப்பு வந்தாலும் அதை உதடுகளுக்கு மறைத்துக் கொண்டு, “கவரப்பட்டாதீங்க சார் மது சீக்கிரமா வந்திடுவா..” என்று சொல்லும் போதே தீஷிதனின் காரின் ஹாரன் சத்தம் கேட்டது.
ஹாரன் சத்தம் கேட்டதும் வேகமாக வாசலுக்கு ஓடினார் பரந்தாமன். இத்தனை வயதிலும் தன் மகளைப் பார்க்க ஓடும் அவரைப் பார்த்து மகிழ்ந்தாள் சம்யுக்தா. சமையலறைக்குச் சென்று ஆரத்தியை தயார் செய்து கொண்டு வெளியே வந்தாள். காரில் இருந்து இறங்கிய மதுரா, “அப்பாபாபா…” என்று சொல்லியபடியே ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள்.
“சிண்டு நல்லா இருக்கியாடா?” என்று தனது அருமை மகளின் முகத்தை தன் கைகளால் பாசமாக வருடி அவள் தலையை தடாவினார். தந்தையின் கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு, “நான் படிச்சி முடிச்சிட்டு அமெரிக்காக்கு டாட்டா காட்டிற்று வந்திட்டேன் அப்பா.. இனிமேல் உங்ககூடதான் இருப்பேன்.. எங்கேயும் போக மாட்டேன்..” என்று தந்தையை அணைத்துக் கொண்டவள் கண்களிலும் கண்ணீர். இங்கே நடக்கும் பாசப் பிணைப்பை பார்த்தும் பார்க்காமலும் நின்றான் தீஷிதன். ஆரத்தியுடன் வந்த சம்யுக்தாவிற்கு இதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போல நமக்கு ஒரு உறவு அமையவில்லையே என்று எண்ணி வருத்தம் வந்தது உண்மையே. நொடியில் அதை மறைத்துக் கொண்டு இதழ்களில் புன்னகையை மலரவிட்டாள். ஆனால் ஒரு நொடியில் அவள் முகத்தில் வந்த வருத்தம் தீஷிதனின் விழிகளில் இருந்து தப்பவில்லை.
“ஹாய் மது..” என்றவாறு வந்த சம்யுக்தாவிடம் வந்த மதுரா, “ஹாய் சம்மு அண்ணி..” என்றாள். அவளின் அண்ணி என்ற அழைப்பில் விழிகள் தெறிக்க அதிர்ச்சியில் மதுராவைப் பார்த்தாள் சம்யுக்தா. அவளைப் பார்த்து கண்களை சிமிட்டியவள், “எனக்கு உங்களை அக்கானு கூப்பிடவோ இல்ல பேர் சொல்லிக் கூப்பிடவோ விருப்பம் இல்லை.. அண்ணினு கூப்பிட பிடிச்சிருக்கு.. ப்ளீஸ் சம்மு அண்ணி நான் அப்டியே கூப்ட்டுக்கவா..?” என்று விழிகளில் ஆர்வத்துடன் கெஞ்சினாள். சம்யுக்தாவிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நிற்க, தீஷிதன், “தாரளமாக கூப்பிடு மது..” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல, “சூப்பர் அண்ணாவே சொல்லியாச்சு.. அப்புறம் என்ன நான் உங்களை இனிமேல் அண்ணினுதான் கூப்பிடுவேன்..” என்றாள். பரந்தாமனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. சம்யுக்தாவிற்கோ இப்போ இங்க என்ன நடந்தது என்று யோசிக்க, அதை தடை செய்யும் விதமாக, “சம்மு அவன் கிடக்கிறான் நீ ஆரத்தி எடுமா மது வீட்டிற்குள்ள போகட்டும்..” என்று சொல்ல, அவளும் தலையசைத்து விட்டு மகிழ்வோடு மதுராவிற்கு ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வரவேற்றாள். மதுரா துள்ளிக் குதித்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊