விதியின் முடிச்சு

அத்தியாயம் 31

வீட்டின் அழைப்பு மணி ஒலித்திட பிரகாஷ் கொஞ்சம் யாருனு பாரேன் என்ற சுசீலாவிடம் சரிங்கம்மா என்ற பிரகாஷ் கதவைத் திறந்திட ஹாய் பிரகாஷ் என்றாள் எதிரில் நின்ற மங்கை. இந்து நீ எப்படி என்றவனிடம் ஏன் மாமா நானெல்லாம் உங்க வீட்டுக்கு வரக் கூடாதா என்ன என்றவள் அட தள்ளு மாம்ஸ் பாதையை மறைச்சுட்டு என்றவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.   ஏய் இந்து நீ எப்போ வந்த என்ற சுசீலாவிடம் என்ன மாமியாரே அம்மாவும், மகனும் இப்படியே […]

அத்தியாயம் 31 Read More »

விதியின் முடிச்சு…(30)

ஜாதகம் பார்க்க போயிருக்காங்க என்ற சுசீலாவிடம் சரிங்க அண்ணி மாப்பிள்ளை எப்போ வருவாங்க என்றார் பூங்கொடி. இதோ இப்ப வந்துருவான் அண்ணி ரோனிக்கு ஒன்றும் இல்லை நீங்க பயப்படவே வேண்டாம். என்ன பிள்ளைக்கு கை தான் உடைஞ்சுருச்சு என்ற சுசீலா வருந்தினார்.   அதெல்லாம் அவளோட கை சரியாகிரும் சித்தி என்றபடி வந்து சேர்ந்தான் உதயச்சந்திரன். வாங்க மாப்பிள்ளை என்ற கதிரேசனிடம் வணக்கம் சொல்லி விட்டு, கணேசன், வசந்தி, பூங்கொடி மூவரையும் வணங்கியவன் சாப்பிட்டிங்களா என்றான்.  

விதியின் முடிச்சு…(30) Read More »

விதியின் முடிச்சு..(29)

அலறி அடித்து எழுந்தாள் வெரோனிகா. என்னாச்சு ரோனி என்ற அர்ச்சனாவிடம் அண்ணி மாமா எங்கே என்றவளிடம் அண்ணா, ஸ்கூலுக்கு போயிருக்காராம் ரோனி. ஏதோ இம்பார்டன்ட் வொர்க் இருக்காம். மதியம் வரேன்னு சொன்னாரு என்றாள் அர்ச்சனா.   என் அப்பா, அம்மா என்றவளிடம் அவங்க கிளம்பிட்டாங்களாம் ஈவ்னிங் இங்கே வந்துருவாங்க நீ ரெஸ்ட் எடு என்ற அர்ச்சனா ஏன் பதறி எழுந்த என்றாள். கெட்ட கனவு அண்ணி என்றவள் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள்.   என்ன கனவு இது

விதியின் முடிச்சு..(29) Read More »

விதியின் முடிச்சு…(28)

அண்ணா ஜூஸ் இந்தாங்க என்ற அர்ச்சனாவிடம் புன்னகை முகத்துடன் அதை வாங்கிக் கொண்டான். என்ன ரோனி பசிக்கவில்லைன்னு சொன்ன அப்போ அண்ணனை ஊட்டிவிட வைக்க தான் பசி இல்லைன்னு சொன்னியா என்ற அர்ச்சனாவிடம் சிறு புன்னகை மட்டும் பதிலாக கொடுத்தாள் வெரோனிகா.   மருத்துவர் வந்து அவளை பரிசோதித்து விட்டு இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்கச் சொல்லி விட்டு கிளம்பினார். மாமா நீங்க வீட்டுக்கு போங்க அதான் அண்ணி இருக்காங்களே அவங்க என்னை பார்த்துப்பாங்க என்றவளை

விதியின் முடிச்சு…(28) Read More »

விதியின் முடிச்சு…(27)

என்ன நீ தூங்காமல் என்ன பண்ணுற என்றவனிடம் மாமா ரெஸ்ட் ரூம் போகனும் என்றாள் வெரோனிகா. என்னாச்சு கால் எதுவும் வலிக்குதா என்றவனிடம் இல்லை மாமா இந்த மாதிரி ஹாஸ்பிடலில் உள்ள ரெஸ்ட்ரூம்ல எல்லாம் பேய் இருக்குமோன்னு பயம் என்றவளைப் பார்த்து சிரித்தவன் ஆமாம் பெரிய பேய் இருக்கு அதுவும் வெரோனிகான்னு பெயர் வச்சுருக்கிறவங்க இரத்தத்தை தேடி தேடி வந்து குடிக்குமாம் என்றிட மாமா பயமுறுத்தாதிங்க என்றவள் பாவமாக அவனைப் பார்த்தாள். நான் இங்கே தானே இருக்கேன்

விதியின் முடிச்சு…(27) Read More »

விதியின் முடிச்சு..(26)

அம்மா ஆஆ என்று கீழே விழுந்த வெரோனிகா எழ நினைக்க அவளால் எழ முடியவில்லை. அடி சற்று பலமாக  இருந்த்தாலும்,  விழுந்த அதிர்ச்சியாலும் அவளால் எழ முடியவில்லை.   அர்ச்சனா சுதாரித்து எழுந்தவள் ரோனி என்று அவளைத் தூக்கிட ஏன் அண்ணி இவ்வளவு வேகமா வண்டி ஓட்டுனிங்க என்றவள் மயங்கி சரிய ஏய் ரோனி என்று பதறினாள் அர்ச்சனா.   சொல்லுங்க விவேக் என்ற உதயச்சந்திரனிடம் எனக்கு அர்ச்சனாவை பிடிச்சுருக்கு உங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிக் கொடுங்க

விதியின் முடிச்சு..(26) Read More »

விதியின் முடிச்சு….(25)

அரட்டை எல்லாம் ஒன்றும் இல்லை மாமா சும்மா பேசிட்டு இருந்தோம் என்ற வெரோனிகா மாமா முறுக்கு சாப்பிடுங்க என்று அவனிடம் பலகாரத் தட்டை நீட்டினாள். நீ சாப்பிடு எனக்கு வேண்டாம் என்றவன் ரோனி உன்னை அம்மா கூப்பிடாங்க என்றிட சரி அண்ணி நான் அப்பறம் வருகிறேன் என்று ஓடி விட்டாள் வெரோனிகா. சொல்லு அர்ச்சனா என்ன விசயம். ஏன் இப்போ எல்லாம் முன்னே மாதிரி நீ இருக்கிறதில்லை. எப்போ பாரு எதையாவது யோசிச்சுட்டே இருக்கிற என்றான் உதயச்சந்திரன்.

விதியின் முடிச்சு….(25) Read More »

விதியின் முடிச்சு…(24)

நான் பேசிட்டு இருக்கேன் நீ அதை கவனிக்காமல் என்ன பண்ணுற தேனு என்ற சக்தியிடம் என்ன பண்ணனும் உங்க கூட சேர்ந்து என் அண்ணனை திட்டனுமா. அதான் அவங்களுக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லைனு சொல்லிட்டிங்களே. ஒரே ஊரில் இருந்தும் அவங்க யாரோ, நான் யாரோங்கிற மாதிரி தானே இருக்கேன் . அப்பறம் என்ன.  வெரோனிகா சந்தோசமா தலை ஆடி கொண்டாட அவள் புருசனோட வந்திருக்கிறாள். உங்க அம்மா தான் என் அத்தை கூட சண்டை போட்டு

விதியின் முடிச்சு…(24) Read More »

விதியின் முடிச்சு…(23)

என் தங்கச்சியை என்ன பேசி மயக்கினானோ படுபாவி என்று புலம்பிய சக்தியிடம் ஏன் உங்க மாமா பையன் தானே அந்த பிரபு நீங்க அவங்களை ஏற்றுக் கொள்ளலாமே என்றான் உதயச்சந்திரன். எப்படி ஏத்துக்குறதாம் என் அப்பாவால வெளியே தலை காட்ட முடியலை மச்சான். அவள் ஓடிப் போனதால எங்க அப்பாவையும், என்னையையும், தம்பியையும் முன்னே யாரும் பேசுறதில்லை முன்னே விட்டு பின்னாடி பேசுறாங்க. ஓடிப்போனவளோட அப்பன், அண்ணன்னு எம்புட்டு அசிங்கமா இருக்கு தெரியுமா மச்சான்.   இது

விதியின் முடிச்சு…(23) Read More »

விதியின் முடிச்சு….(22)

மச்சான் நீங்க வாங்க போகலாம் அது கிடக்கு லூசு என்ற சக்திவேல் அவனை அழைத்திட ஒரு ஐந்து நிமிசம் மச்சான்  நான் வரேன் என்றவன் என்ன ரோனி இது ஏன் இப்படி பண்ணுற அப்படி எங்கே கூப்பிடுறாரு உன் அண்ணன் என்றான் உதயச்சந்திரன்.   மாமா அது கள்ளு இறக்கிற இடத்துக்கு போகுது. உங்களையும் குடிக்கச் சொல்லும் அதனால தான் வேண்டாம்னு சொல்லுறேன். நாளைக்கு அப்பாகிட்ட சொல்லி பதனி வாங்கி வர சொல்லுறேன். கள்ளு குடிக்காதிங்க என்றவளைப்

விதியின் முடிச்சு….(22) Read More »

error: Content is protected !!