அப்போது மான்விழிக்கு பதினைந்து வயது.. வில்விழிக்கு பதிமூன்று.. மான்விழிக்கு குதிரை ஏற்றம் என்றால் கொஞ்சம் பைத்தியம் என்றே சொல்லலாம்.. நாள் முழுவதும் குதிரை மேல் ஏறி சவாரி செய்யக்கூட அவள் அலுத்துக் கொள்வதே இல்லை..
பரிமேலழகர் குதிரையேற்றத்தில் நாட்டமுள்ளவர்.. வீட்டிலேயே தேஜஸ்வி என்ற குதிரையை வளர்த்து வந்தார்.. அவர் குதிரை ஓட்டுவதை பார்த்து பார்த்து ஆர்வம் கொண்ட மான்விழி அவரோடு 12 வயதில் இருந்தே குதிரையேற்றத்தை பழக ஆரம்பித்தாள்..
இப்போது அவள் ஒரு தேர்ந்த குதிரையேற்ற வீராங்கனை.. தினமும் மாலையில் அருகில் இருந்த ஒரு திடலில் குதிரை சவாரி செய்வது அவளுக்கும் அவள் தந்தைக்கும் வழக்கமாகி போனது..
தினமும் ஒரு மணி நேரமாவது குதிரை சவாரி செய்பவர்களின் கூடவே விழியும் செல்வாள்.. ஆனால் தள்ளி நின்று இவர்கள் குதிரை சவாரி செய்வதை வேடிக்கை பார்ப்பானே தவிர அவளுக்கு குதிரையேற்றத்தில் பெரிதாய் நாட்டம் இருந்ததில்லை..
அது தீபாவளி பண்டிகை சமயம்.. இரண்டு நாட்களில் தீபாவளி பண்டிகை இருப்பதால் ஊருக்குள் எல்லோரும் வெடி வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.. வழக்கம்போல பரிமேலழகரும் மான்விழியும் மாற்றி மாற்றி முறை எடுத்து குதிரை சவாரி செய்து கொண்டிருந்தார்கள்..
மான்விழி குதிரை மேல் ஏறி வேகமாக சவாரி செய்து கொண்டிருந்தாள்.. அப்போது எங்கிருந்தோ வந்த ராக்கெட் வெடி குதிரையின் உடலில் தாக்கி விட குதிரையோ மிரண்டு போனது..
மான்விழி எவ்வளவு முயன்றும் குதிரையை கட்டுப்படுத்த முடியவில்லை.. வேகமாய் கண்மண் தெரியாமல் குதிரை பயணிக்க தொடங்க பரிமேலழகருக்கு நடக்கப் போகும் விபரீதம் புரிந்தது.. அவரும் எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ குதிரையின் பின்னால் ஓடி அதன் கடிவாளத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று முயன்று கொண்டிருந்தார்..
வில்விழியும் தன் தந்தையின் பின்னாலேயே கலவரம் நிறைந்த முகத்தோடு ஓடினாள்.. ஆனால் குதிரையோ அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.. சிறிது நேரம் வரை தைரியமாக குதிரையை கையாண்டிருந்த மான்விழி ஒரு நிலையில் பயந்து போக அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுக்க தொடங்கியது..
தன் தந்தையை கூவி கூவி அழைத்தவள் எதுவும் செய்ய முடியாமல் குதிரையின் கடிவாளத்தை இறுக பிடித்து இருந்தாள்.. கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் வேறு சிறு பெண்ணவளுக்கு..
குதிரையும் அந்த தெருவை விட்டு வெளியே சென்று சாலையில் ஓட ஆரம்பித்தது.. வேகமாக சாலையில் தாறுமாறாக ஓடி வந்த குதிரையை பார்த்த மக்களும் தங்களுக்கு குதிரையால் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று சிதறி ஓடினரே தவிர மான்விழியின் உதவிக்கு யாரும் வரவில்லை..
பரிமேலழகர் விடாமல் குதிரையை துரத்திக்கொண்டு ஓட ஒரு இடத்தில் தடுக்கி விழுந்தவர் ஒரு கல்லில் தலை மோதி அடிபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருக்க அதனை சட்டை செய்யாமல் தொடர்ந்து தன் மகளை காப்பாற்ற இன்னும் வேகமெடுத்து ஓடினார் அவர்..
கால் போன போக்கில் ஓடிய குதிரை இறுதியாக ஒரு ஏரிக்கரைக்கு ஓடி சென்று அதிவேகமாய் தண்ணீருக்குள் பாய்ந்தது.. மான்விழிக்கோ நீச்சல் தெரியாது..அவ்வளவு நேர மிரண்ட குதிரையோடு போராட்டம்.. இப்போது தண்ணீரோடு.. அவள் பின்னே ஓடிப்போன பரிமேலழகர் மான்விழியை காக்க வேகமாக ஓடிச் சென்று தண்ணீருக்குள் பாய்ந்து இருந்தார்..
சிறிது நேரம் தண்ணீரின் மேல் தத்தளித்த மான் விழி அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீருக்குள் மூழ்க தொடங்க பரிமேலழகர் வேகமாக நீந்தி சென்று அவள் தலை முடியை பிடித்து இழுத்து கரையில் கொண்டு வந்து சேர்த்தார்..
அவ்வளவு நேரம் குதிரையின் அசுர ஓட்டத்தில் உயிர் பயம் கொண்டு போராடிக் கொண்டிருந்தவள் அதன் பிறகு அவள் உயிரை மொத்தமாய் இழுத்துக் கொண்டு இருந்த தண்ணீரோடும் போராட வேண்டி இருந்தது.. சிறு பெண் தானே அவள்.. போராடி போராடி களைத்து போய் இனிமேல் எப்படியும் உயிர் பிழைக்க முடியாது என்று முடிவுக்கு வந்திருந்தாள்..
ஆனால் அவள் தந்தையால் காப்பாற்றப்பட்டாள்.. கிட்டத்தட்ட இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தவளுக்கு மனதில் அந்த சம்பவம் ஒரு மாறாத வடுவானது.. அதன் பிறகு குதிரைகளை கண்டாலே அவளுக்கு பயம் தான்..
ஒவ்வொரு தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்கும் போது தன் அறைக்குள் போய் போர்வைக்குள் பதுங்கிக் கொள்வாள் மான்விழி..
மான்விழியை காப்பாற்றிய பரிமேலழகர் அவள் கண் விழித்ததும் தத்தளித்துக் கொண்டிருந்த குதிரையை காப்பாற்ற மறுபடியும் நீருக்குள் குதித்து பலவாறு முயன்றும் தேஜஸ்வியை காப்பாற்ற முடியாமல் போனது..
அவருக்கு தலையில் பட்டிருந்த அடி வேறு அவரை கிட்டத்தட்ட மயக்கநிலைக்கு தள்ளிவிட தண்ணீருக்குள் இருந்து வெளி வருவதே அவருக்கு பெரும் பாடாகி போனது.. அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இரண்டு நாள் மயக்கத்தில் இருந்து வெளிவருவதற்குள் பெண்கள் மூவரும் செத்துப் பிழைத்தார்கள்..
மான்விழி அந்த சம்பவத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தாள்.. அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அந்த சம்பவம் ஆட்டி படைத்து கொண்டு இருந்தது..
இது நடந்து எட்டு வருடங்கள் ஆகியும் இன்னும் கூட மான்விழிக்கு அன்று இருந்த அதே பயமும் நடுக்கமும் விட்டுப் போன பாடில்லை..
“நீ பிருத்விகிட்டு பேசுனியா.. நீ இங்க வந்து உட்கார்ந்து இருக்கிறதுதான் இந்த பிரச்சனைக்கு சொல்யூஷன்னு நினைக்கிறியா? நிச்சயமா இல்லை.. நீங்க பிரிஞ்சிருக்கறதனால உங்களுக்கு மட்டும் இல்ல.. சின்ட்டூக்கும் கஷ்டம்தான்.. உனக்கிது புரியுதா இல்லையா? ஏதாவது செஞ்சு இதை சால்வ் பண்ணனும்னு ரெண்டு பேருமே முயற்சி பண்ணலையா?”
“பண்ணாம இருப்போமா? ஆனா எனக்கு அந்த குதிரையை பார்த்தாலே பயமா இருக்குடி.. நடுக்கம் எடுக்குது.. எப்படியோ பிருத்விக்காக பொறுத்துக்கிட்டு நான் அந்த வீட்ல இருந்து கிட்டு தானே இருந்தேன்.. உனக்கு தெரியும் இல்ல..?”
“தெரியும்டி.. அதனால தான் கேட்கிறேன்.. நான் போற வரைக்கும் நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு தானே இருந்த.. நீ கர்ணாவை அவாய்ட் பண்ண.. பிருத்வி மட்டும் அப்பப்ப கர்ணாவோட ரைட் போய்ட்டு வருவாரு.. அதுவரைக்கும் எல்லாம் ஸ்மூத்தா தானே போயிட்டு இருந்தது..?”
“ஆமா.. எல்லாம் ஸ்மூத்தா தான் போயிட்டு இருந்தது.. ஆனா சின்ட்டூக்கு ரெண்டு வயசு ஆனப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ப்ருத்வியோட சேர்ந்து ஷ்யாம்கர்ணாவோட வெளையாட ஆரம்பிச்சிட்டான்..
பிருத்வி கூட அவன் அப்படி விளையாடுனப்ப எனக்கு அது ஒன்னும் பிரச்னையா இல்ல.. ஆனா ஒருநாள் சின்ட்டூக்கு உடம்பு சரியில்லன்னு அத்தை கிட்ட விட்டுட்டு நானும் ப்ருத்வியும் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்தோம்.. திரும்பி வரும்போது பார்த்தா யாரும் பக்கத்துல இல்லாதப்போ சின்ட்டூ தனியா ஷ்யாம்கர்ணாவோட விளையாடிகிட்டு இருந்தான்.. அப்ப என் கண் முன்னாடி அன்னிக்கு நடந்நது அப்படியே ஓடிச்சு மலரு.. ஒரு செகண்ட் எனக்கு ஆன மாதிரி விபரீதம் சின்ட்டூவுக்கும் ஆகற மாதிரி..” பயத்தில் தொண்டை அடைத்தது அவளுக்கு..
“அந்த நினைப்பு என்னை பதற வெச்சிருச்சு.. ஓடிப்போய் சின்ட்டூவை தூக்கிக்கிட்டு பக்கத்தில யாரும் இல்லையான்னு பார்த்தேன்.. அத்தை தோட்டக்காரரோட பேசிகிட்டு இருந்தாங்க.. அவ்வளவுதான்.. அடுத்த நிமிஷமே சின்ட்டூவை தூக்கிக்கிட்டு நான் இங்க வந்துட்டேன்.. விளையாட்டு போல ஒரு வருஷம் ஆகப்போகுது.. எனக்கு மறுபடியும் அந்த வீட்டுக்கு போறதுக்கு தைரியமே வரல மலரு..”
“அப்ப காலம் ஃபுல்லா அம்மா வீட்லயே இருக்க போறியா? ஏதாவது ஒரு காம்ப்பரமைஸ்க்கு வரணும் இல்ல மானு..?”
“நான் பிருத்விகிட்ட ஷ்யாம்கர்ணாவை வீட்ல வச்சுக்க வேண்டாம்னு எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன்.. ஆனா ப்ருத்வி முடியவே முடியாதுன்னு பிடிவாதமா சொல்லிட்டான்.. அந்த வீட்டை விட்டு ஷ்யாம்கர்ணா என்னிக்கு போறானோ அன்னைக்கு தான் நானும் சின்ட்டூவும் அந்த வீட்டுக்கு வருவோம்..”
அவள் உறுதியாய் சொல்லிட அவளை கவலையோடு பார்த்தாள் விழி..
“ம்ம்.. சரி.. அப்புறம் உன் இஷ்டம்.. ஏ மானு.. நான் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. இந்தரை அவனோட அப்பா அம்மா ப்ருத்வி எல்லாரையும் விட்டுட்டு வர சொல்லி இருக்கேன்.. நானும் இந்தரும் இனி தனியா தான் இருப்போம்”
“அது எப்படி? அவங்க பிள்ளை அவரு.. அவங்க எல்லாரையும் விட்டுட்டு அது எப்படி உனக்காக தனியா வருவாரு? அது நியாயமே இல்லை விழி..”
“ஏன் நியாயம் இல்ல? நம்ம கல்யாணம் நடந்ததிலிருந்து மாமா எப்படி நடந்துக்கறாருன்னு உனக்கு தெரியும் இல்ல? என்னை எப்படி எல்லாம் கேவலமா பேசி இருக்காரு.. அப்படிப்பட்டவரோட ஒரே வீட்ல நான் எதுக்கு சகிச்சுக்கிட்டு வாழணும்? தெனமும் காலைல எழும்பும் போதே இன்னிக்கு அவரு என்ன சொல்வாரோ.. ஏது சொல்வாரோன்னு டென்ஷனாகுது.. நான் டென்ஷன் ஃப்ரீயா இருக்கறதுக்காக அவங்களை விட்டுட்டு என்னோட தனியா வான்னு இந்தர் கிட்ட சொல்றது நியாயம் தானே?”
“அதெப்படி மலரு.. அவங்களோட அட்ஜஸ்ட் பண்ணி எப்படி ஒண்ணா இருக்கிறதுன்னு தானே நீ யோசிக்கணும்.. உன்னோட இந்த டென்ஷனுக்காக அவரோட உறவை எல்லாம் விட்டுட்டு வாங்கன்னு சொல்றது எப்படி சரியாகும்..? இத்தனை வருஷங்களா அவர் கூடவே இருந்தவங்க அவங்க.. திடீர்னு உனக்காக அவங்களை விட்டுட்டு வரணும்னா எப்படி?”
“ம்ம்.. சரிதான்.. என் டென்ஷனுக்காக அவங்களை விட சொல்றது தப்புன்னா உன்னோட பயத்துக்காக சின்ன வயசுல இருந்து தான் கூடயே வளர்ந்த ஷ்யாம்கர்ணாவை விட்டுட்டு வான்னு ப்ருத்வியை நீ சொல்றது மட்டும் எப்படி மானு நியாயமாகும்? ப்ருத்வியை பொறுத்தவரைக்கும் கர்ணாக்கும் இந்தருக்கும் பெரிய வித்தியாசம் இல்லன்னு அவரே சொல்லி இருக்கிறாரே.. இந்தர் அவரோட அண்ணான்னா கர்ணா அவரோட தம்பின்னு சொல்லி இருக்கிறாரே.. கர்ணா நம்ம குடும்பத்துல ஒருத்தன் மாதிரி.. அப்பறம் எப்படி ப்ருத்வியால அவனை எங்கேயோ கொண்டு விட முடியும்?”
அவள் கேட்ட கேள்வியில் சற்று திடுக்கிட்டு தான் போனாள் மானு.. விழியின் கேள்விக்கு பதில் இல்லை அவளிடம்..
“நீ கவலைப்படாதே.. நான் இந்தரை எல்லாரையும் விட்டுட்டு தனியால்லாம் வர சொல்லல.. அப்படி தான் பண்ணணும்னா அதுக்கு இவ்வளவு நாள் காத்திருக்கணும்னு அவசியம் இல்லை.. நான் வீட்டை விட்டு போகாம அப்பவே இந்தரை தனியா கூட்டிட்டு போயிருக்க முடியும்.. ஆனா அது இந்தருக்கு ரொம்ப வலிக்கும்னு தான் நான் மட்டும் அவரை விட்டு பிரிஞ்சு போனேன்.. நாளைக்கு காலைல நான் நம்ம வீட்டுக்கு கிளம்புறேன்.. நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு.. உனக்கு பயமா இருக்குன்னா அந்த பயத்தை போக்குறதுக்கு என்ன பண்ணனும்னு பாரு.. அப்படி அந்த பயத்தை ஃபுல்லா போக்க முடியலையா? அதை கொஞ்சம் குறைக்க ட்ரை பண்ணு.. அதுக்காக நீ பிருத்வியை விட்டுட்டு வர்றதோ இல்ல பிருத்வியை ஷ்யாம்கர்ணாவை விட்டு பிரிஞ்சு இருக்க சொல்றதோ இல்ல சின்ட்டூவை ஃப்ரீடம் இல்லாம ஒரு ஜெயில்ல வைக்கிற மாதிரி அடக்கி வளர்க்கறதோ சரி கிடையாது.. யோசிச்சு நைட்டுக்குள்ள ஒரு முடிவு எடு.. உனக்கு ஓகேன்னா நாளைக்கு காலைல என்னோட கிளம்பி வீட்டுக்கு வா.. சரி சக்தி என்ன பண்றான்னு தெரியல.. வா போய் பாக்கலாம்.. சின்ட்டூவும் சக்தியும் ஒருத்தங்க ஒருத்தங்களை பார்த்து எப்படி ரியாக்ட் பண்ணினாங்கன்னு தெரியல..” என்று சொல்லிய படியே மான்விழியையும் அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் விழி..
அங்கே சின்ட்டூ ஏதோ பெரிய மனிதன் போல சக்தியை தூக்கி தன் கையில் வைத்துக்கொண்டு “சக்தி… அண்ணா சொல்றபடி தான் கேட்கணும்.. அங்க இங்க ஓடக்கூடாது.. எப்பவும் அண்ணாவோட தான் இருக்கணும்.. சரியா?” என்று மிரட்டிக்கொண்டிருந்தான்..
அதைப் பார்த்து அங்கிருந்த
அத்தனை பெரியவர்களும் சிரித்து விட “ஆமா சக்தி.. பெரிய மனுஷன் சொல்லிட்டான்.. அப்படியே அவன் சொல்றபடி கேட்டு நடந்துக்கோ” என்றான் இந்தர்..
மானுவும் தலையை குனிந்த படி யோசிக்க ஆரம்பித்திருந்தாள்..
அதன் பிறகு இரவு வரை ஒன்றாக எல்லோரும் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க மானுவுக்கு பிருத்வி அங்கு இல்லாதது ரொம்பவும் வலியை கொடுத்தது தான்..
இரவு சாப்பிடும் போது அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்..
வில்விழியிடம் “மலரு.. நாளைக்கு காலையில நான் உன்னோட வரேன்.. நம்ம வீட்டுக்கு போகலாம்..” என்று சொல்ல அங்கு இருந்த அனைவர் முகத்திலுமே மகிழ்ச்சி தாண்டவமாடியது..
“ரொம்ப சந்தோஷம் டா.. என் மாப்பிள்ளையும் பொண்ணும் பிரியாம ஒண்ணா எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.. சின்ட்டூக்கு அவன் அப்பா வேணும்டா.. இந்த முடிவை நீ எப்பவோ எடுத்து இருக்கணும்.. பரவால்ல.. லேட்டானாலும் நல்ல முடிவா எடுத்து இருக்கே.. என்ன எங்களுக்கு தான் சின்ட்டூவும் இல்லாம போர் அடிக்கும்.. இன்னைக்கு வேற சக்தி இந்தர் மாப்பிளை விழி எல்லாரும் வந்திருக்காங்க.. வீடே கலகலன்னு இருந்துச்சு.. நாளைக்கு காலையில நீங்க கிளம்பின அப்புறம் வீடே வெறிச்சோடி போயிடும்.. நானும் உங்க அம்மாவும் மட்டும் தனியா இந்த வீட்ல கொட்டு கொட்டுன்னு உட்கார்ந்து இருக்கணும்..”
வயதானவர்களை தனிமை வாட்டியது.. அது புரிந்த வில்விழியோ அங்கு நிலவிய இறுக்கத்தை மாற்ற “செகன்ட் ஹனிமூன் பீரியடை ஜாலியா கொண்டாடுவீங்களா? அதை விட்டுட்டு எங்க தொல்லை இல்லன்னு வருத்தப்படுறீங்க.. அம்மாவுக்கும் கொஞ்சம் உங்க லவ்வை கொடுங்கப்பா.. எல்லாத்தையும் எங்களுக்கே கொடுக்காதீங்க..” என்றாள்..
அதைக் கேட்டு வெட்கத்தில் முகம் சிவந்த வாசுகி “மாப்பிள்ளை முன்னாடி இது என்னடி பேச்சு?” என்று சமையலறையில் ஏதோ வேலை இருப்பது போல் எழுந்து உள்ளே சென்றார்..
இந்த வயதிலும் அவருடைய வெட்கம் அவருக்கு கூடுதல் அழகை சேர்த்து இருக்க பரிமேலழகரோ ரசனையாய் தன் மனைவியையே பார்வையால் பின்தொடர்ந்திருந்தார்..
அதை கவனித்து விட்ட வில்விழி “அப்பா இன்னைக்கு நாங்கல்லாம் இருக்கோம்.. கொஞ்சம் அடக்கி வாசிங்க.. நாளைக்கு நாங்க எல்லாம் போயிருவோம்.. அப்புறம் ப்ரீயா ஜாலியா ம்ம்..ம்ம்..” என்றாள்..
இப்போது பரிமேலழகருக்கே வெட்கமாய் வந்தது.. “சரி நான் என் ஃபிரண்டுக்கு ஒரு கால் பண்ணனும்.. போய் பண்ணிட்டு வரேன்” என்று அங்கிருந்து நகர்ந்தார்..
இந்தரோ வில்விழியை பிரமிப்பாய் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஒரு வருடமாக மான்விழிக்கும் பிருத்விக்கும் நடுவே பிரச்சனை.. இழுபறியாக சென்று கொண்டே இருந்தது.. வந்த இரண்டு மணி நேரத்தில் அத்தனை பிரச்சனையையும் முடித்து இருந்தாள்..
இரவு தன் அன்னையோடும் மான்விழியோடும் வெகு நேரம் பேசிக் கொண்டே இருந்துவிட்டு தன்னறைக்கு சென்றாள் வில்விழி..
உள்ளே நுழைந்தவள் கண்ட காட்சியோ கவிதை மயமாய் இருந்தது.. கட்டிலில் நெடுஞ்சாண்கிடையாய் இந்தர் படுத்திருக்க அவன் மார்பில் சக்தி கன்னத்தை அழுத்தமாய் பதித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..
அவள் தலையை மெல்ல வருடியபடி தன் அழகு மகளின் முகம் பார்த்திருந்தவன் அவள் உச்சியில் இதழ் பதித்தான்..
தந்தையினுள் தாய்மையின் சாயல்.. அந்த அழகை நெகிழ்வோடு பார்த்தபடி நின்றிருந்தாள் வில்விழி..
தன்னவனின் இந்த புதிய அவதாரத்தை ரசித்தபடியே உள்ளே வந்தவள் அவன் பக்கத்தில் வந்து தலையணையில் சாய்ந்து படுக்க அவளை திரும்பிப் பார்த்தவன் “தேங்க்ஸ் வில்லி” என்றான்..
“எதுக்கு தேங்க்ஸ்?”
அவள் கேட்க “இவ்வளவு அழகா என் பொண்ணு சக்தியை பெத்து கொண்டு வந்து என்கிட்ட கொடுத்ததுக்கு.. நடந்ததை நினைச்சுகிட்டு நீ வராமலே போயிருந்தா நான் இவளோட அழகான மொமென்ட்ஸை இன்னும் எவ்வளவு மிஸ் பண்ணி இருப்பேன்னு நினைச்சா தாங்கவே முடியலடி.. ரெண்டு வருஷம் அவ வளர்றதை பார்க்கலனாலும் இப்பயாவது அவளை கூட்டிட்டு வரணும்னு உனக்கு தோணுச்சே.. தேங்க்ஸ் டி..”
“ம்ம்.. அப்படியே நான் கூட்டிட்டு வரலைன்னாலும் இன்னும் ரெண்டு வருஷம் கூட உன் பொண்ணு உன்னை விட்டுட்டு இருந்திருக்க மாட்டா.. அவ ரொம்ப ஸ்மார்ட்.. சுத்தி இருக்கிறவங்களை ரொம்ப அப்சர்வ் பண்ணுவா.. நிச்சயமா அப்பா யாருன்னு என்னை கேட்டு கேட்டு கொடைஞ்சு அவளை இங்க கூட்டிட்டு வர வெச்சிருப்பா..”
அவள் சொன்னதைக் கேட்டவன் இதழ் விரித்து தன் மகளை பெருமிதத்தோடு பார்த்து இருந்தான்..
அவள் அப்படியே இந்தரின் சாயலில் தான் இருந்தாள்.. வில்விழி அவளுக்குள் இந்தரை பார்த்து பார்த்து தான் இந்த இரண்டு வருட பிரிவை கஷ்டப்பட்டு கடந்து இருந்தாள்.. இந்தரோடு அவளுக்கு இருந்த உருவ ஒற்றுமை இப்போது இன்னும் நன்றாகவே தெரிந்தது..
சட்டென தன் இடத்திலிருந்து எழுந்தவள் “அதான் தூங்கிட்டா இல்லை.. கொடு.. அவளை பக்கத்துல படுக்க வெக்கறேன்..”
அவள் சக்தியை தூக்க போக அவள் கையைப் பிடித்து தடுத்தவன் “வேண்டாம்.. அவ இப்படியே படுத்து இருக்கட்டும்..” என்றான்..
“எவ்வளவு நேரம் அவளை மேலயே படுக்க வச்சிருப்ப.. இரு.. அவளை கீழே எடுத்து விடுறேன்..”
“இதுல என்ன இருக்கு நீ கூடத்தான் என் மேல நைட் ஃபுல்லா படுத்துட்டு இருந்திருக்கே.. நீ படுக்கும் போது அவ படுக்க கூடாதா?”
அவளுக்கு கோவம் வரும் என்று தெரிந்து வேண்டுமென்றே தான் அப்படி கேட்டான் அவன்..
அவன் கேட்ட கேள்வியில் எதிர்பார்த்தது போலவே சுர்ரென அவள் பார்வையில் அனல் ஏறியது..
சட்டென முகம் இறுக்கமாய் மாற “எல்லாம் ஞாபகம் இருக்கு.. மூணு வருஷம் கழிச்சு திரும்பி வந்து இருக்கேன்.. ஆனாலும் இவன் மரமண்டைக்கு ஒன்னும் தோணமாட்டேங்குது.. தன் பொண்ணை பத்தி மட்டும் தான் கவலைப்படுறான்.. என்னை பத்தி எந்த அக்கறையும் இல்லை..”
வாய்க்குள் முணுமுணுத்தவள் அவனுக்கு எதிர்ப்புறமாய் திரும்பி படுத்து விட்டாள்..
“இப்ப எதுக்குடி கோபப்படுற? ஏய் வில்லி.. என் சண்டிராணி.. என்னை பாருடி.. பாருடி..”
அவளை கொஞ்சி கெஞ்ச தொடங்கி இருந்தான் அவன்.. எதற்கும் மசியவில்லை அவள்.. ஏனோ அவள் கண்களின் ஓரமாய் கண்ணீர் வெளியே வர காத்து கொண்டு இருந்தது..
சக்தியை தூக்கி தனக்கு இன்னொரு பக்கத்தில் கிடத்தியவன் வில்விழியின் பக்கம் நகர்ந்து அவள் கைப்பிடித்து அவளை தன் பக்கமாய் திருப்ப அதற்குள் அவள் கண்ணோரத்தில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடி இருந்தது..
“ஹேய்.. அழறியா? நீயாடி அழற? இது என் விழியே கிடையாதே.. ஆஸ்திரேலியா போயிட்டு வேற மாதிரி மாறி வந்துட்டியா என்ன.. என் விழி சண்டை போடுவாளே தவிர அழமாட்டா..”
“இந்த பேச்சுக்கெல்லாம் ஒன்னும் கொறச்சல் இல்லை.. என் மேல சும்மா அக்கறை இருக்கிற மாதிரி நடிக்க வேண்டாம்.. நீ உன் பொண்ணு கூடவே இரு..” என்று மறுபடியும் எதிர்புறமாய் திரும்பப் போனவளை தன் புறமாய் பிடித்து இழுத்து அவள் நாடி பிடித்து முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன்
“என்னடி..? என்னதான் வேணும் உனக்கு? மனுஷனை தள்ளியும் இருக்க விட மாட்டேங்குற.. நெருங்கவும் விட மாட்டேங்குற.. நான் என்ன தான்டி பண்ணுவேன்..” அவன் அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டான்..
“உங்களை நான் ஏன் நெருங்க விட மாட்டேங்கறேன்னு உங்களுக்கு தெரியாதுல?”
அவள் அவனை முறைத்தபடி கேட்க “சரி.. தெரியும்.. அதுக்கு நான் எவ்வளவோ முறை உனக்கு விளக்கம் சொல்லியாச்சு.. நம்ப மாட்டேன்னு நீ பிடிவாதம் பிடிச்சா நான் என்ன பண்றது சொல்லு,.. சரி இப்ப என்னை என்ன பண்ண சொல்ற?”
“எனக்கு அங்க இடம் வேணும்..”
அவன் மார்பை காட்டியபடி அவள் சொல்ல அழகாய் இதழ்விரித்தவன் இரண்டு கையையும் பெரிதாய் விரித்தபடி அவளை நோக்கி தன் நெஞ்சப் பகுதியை காட்டி கண்களால் ஜாடை செய்ய அதற்காகவே காத்திருந்தவள் போல அவன் மீது ஏறி அவனை இறுக்கமாய் அணைத்து மார்பில் முகம் புதைத்து படுத்துக் கொண்டாள் விழி..
இதன் பிறகு அவன் கைகள் சும்மா இருக்குமா? அவளில் தன் தேடலை துவங்க ஆரம்பிக்க சட்டென அவன் கையைப் பிடித்தவள் அதை பக்கவாட்டில் இருத்தி
“ம்ஹூம்.. நான் இப்படியே உன்னை கட்டி பிடிச்சிக்கிட்டு தூங்குறேன்.. நீயும் இப்படியே தூங்கு..” என்றாள்..
அவனுக்கோ அதைக் கேட்டு மூக்கின் மேல் கோபம் வந்தது..
“என்னடி விளையாடுறியா? எனக்கெல்லாம் அவ்வளவு கண்ட்ரோல் எல்லாம் கிடையாது.. நீ எழுந்து அந்த பக்கம் போய் படு..”
“முடியாது.. நான் இப்படித்தான் படுப்பேன்..” உடும்புபிடியாய் அவனை பிடித்துக் கொண்டாள் அவள்..
அவனுக்கோ பெரும் அவஸ்தையாகி போனது..
“ஏய் வில்லி.. நெஜமாவே நீ வில்லி தான்டி.. இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது..”
“ம்ம்.. அதெல்லாம் அடுக்கும்..அடுக்கும்.. உன் மேல சக்தி படுத்திருக்கறதா நினைச்சுக்கோ..”
அவள் சொல்ல அவளை இன்னும் தீவிரமாய் முறைத்தவன் “அப்படி எல்லாம் நினைச்சுக்க முடியாது.. சொன்னா கேளுடி.. முடியலடி ப்ளீஸ்..” அவன் விட்டால் அழுது விடுபவன் போல அவளை பாவமாய் பார்த்திருக்க..
சட்டென பக்கவாட்டில் சரிந்தவள் “ரொம்பத்தான்..” என்று உதட்டை சுழித்து அவனை கட்டி அணைத்தபடி அப்படியே படுத்து விட்டாள்.
அவனுக்குள் ஏற்கனவே மோக முடிச்சுகள் அவிழ்ந்திருக்க இப்போது அவனின் ஆண்மை உணர்வுகள் பீறிட்டு எழுந்திருந்தது..
சிரமப்பட்டு தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டவன் அவளை கட்டி அணைத்தபடியே உறங்க முயற்சி செய்து கொண்டிருந்தான்..
உறக்கம் கண்ணை ஆட்கொள்ளும் நேரம் அவன் கழுத்தில் மென் ரோஜா இதழ்களின் ஊர்வலம்.. கண்ணை திறக்க வில்விழியோ அவனின் கழுத்து வளைவில் முத்த ஊர்வலம் நடத்தி கொண்டிருந்தாள்..
வில்விழியை பார்த்தபடி சரியாக இலக்கை நோக்கி அம்பை செலுத்தி இருந்தான் இந்தர்..
“எங்க அப்பா அவர் மகனாவே இருந்தாலும் செய்யற வேலைக்கான தகுதி இருந்தா தான் அந்த பொறுப்பை ஒருத்தர் கிட்ட ஒப்படைப்பார்.. இந்தர் ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஆர்ச்சர்ஸ்.. அதனாலதான் அவன் அகாடமில கோச்சா மட்டும் இல்ல அதோட மேஜர் ஷேர்ஹோல்டராவும் இருக்கான்..”
பிருத்வி சொல்ல இப்போது வில்விழிக்கும் அவனுடைய ஆற்றல் எத்தகையது என்று புரிந்தது.. அந்நேரம் பிரமித்து தான் போனாள் அவனுடைய திறனை எண்ணி..
அடுத்ததாய் விழியின் முறை வர இந்த முறை இந்தர் பக்கவாட்டில் நின்று கொண்டிருக்க ஒரு கண்ணால் அவனை கவனித்தபடி அம்பு செலுத்த தயாரானவளின் கவனம் வழக்கம் போல் சிதறத் தொடங்கியது..
அவளின் பார்வை அவள் ஆணையை கேட்காமல் அலைபாய்ந்து கொண்டிருக்க மிகவும் சிரமப்பட்டு அதனை இழுத்து பிடித்து இலக்கு பலகையின் மேல் தன் கவனத்தை மொத்தமாய் குவிக்க முயன்றாள்..
பலவாறு முயன்றும் தங்க நிற வளையத்துக்குள் அம்பை செலுத்த முடியாமல் போனது அவளால்..
அம்பு சிவப்பு நிற வளையத்துள் பாய அவளோ கண்ணை இறுக்கமாய் மூடி “எவ்ளோ ட்ரை பண்ணியும் ஃபோக்கஸ் பண்ண முடியல.. இந்த மலைமாடு என்னை என்ன தான் செய்யறானோ தெரியல.. இவனை பார்த்தாலே என் கான்சென்ட்ரேஷன் மொத்தமும் பாழா போகுது..” தனக்குள் முனகிக்கொண்டாள் அவள்..
அவளை நெருங்கி வந்து நின்று கொண்டவன் “இந்த முறை உன்னோட எய்ம் கொஞ்சம் தவறி போயிடுச்சு போல.. அடுத்த ஏரோ நான் சரியா அடிச்சுட்டேன்னா ஜெயிச்சிடுவேனே.. ம்ம்.. பார்க்கலாம்.. எப்படியும் இந்த மலர்விழி எனக்கு தான்..” அவள் செவிகளில் ரகசியமாய் சொல்லி கையில் ஒரு முடிவோடு வில்லை ஏந்தினான் அவன்..
ஏனோ அவன் சொன்னதை கேட்டவளின் எண்ணத்தில் பெரிய மாற்றம்.. அவன் எப்படியும் இந்த போட்டியில் வென்று விட வேண்டும் என்று அந்த கணம் எண்ணினாள் பாவை அவள்..
எப்படியும் அம்பை அதற்குரிய இடத்தில் சரியாக அடித்து விடுவான்.. இந்த முறை தான் தோற்பது உறுதி என்று நினைத்து அவள் அவனை பார்த்திருக்க அவள் அதிரும்படி அவன் செலுத்திய அம்பு தங்க நிற வளையத்துக்குள் பாயாமல் கருப்பு நிற வளையத்தில் பாய்ந்தது..
எப்படியும் இனி வெற்றி அவளுக்கு தான் என்று சந்தோஷப்பட வேண்டியவளின் முகத்தில் மருந்துக்கு கூட மகிழ்ச்சியின் அறிகுறி கொஞ்சமும் இல்லாது ஏதோ ஒரு பதட்டம் சூழ்ந்து கொண்டது..
ஆம்.. இந்தர் இந்த போட்டியில் தோற்று விட்டால் அவளுக்கும் இந்தருக்கும் திருமணம் நடக்காதே… இதனாலேயே அந்த பதட்டம்..
இத்தனை நேரம் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே அவள் குறியாய் இருந்தது.. ஆனால் அப்படி வெற்றி பெற்றால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற விஷயம் இப்பொழுது தான் அவளுக்கு உறைத்தது..
போட்டியில் வெற்றி பெற்றால் இந்தரை இழந்து விடுவாளே.. அந்த நினைவே அவளை மெல்ல அழுத்த தொடங்கியது..
இந்தரோ அவள் புறம் திரும்பி “மிஸ் ஆயிடுச்சு..” என்றான்.. அவன் இதழிலே ஒரு குறும்பு சிரிப்பு.. வேண்டும் என்றே இலக்கை தவற விட்டு இருந்தான் கள்ளன் அவன்..
“நீ நெனச்சபடியே இந்த கல்யாணம் நடக்காது போல.. ஆனா இந்தக் கல்யாணம் நடக்குதோ இல்லையோ என்னை பொறுத்த வரைக்கும் நீ மட்டும் தான் என் பொண்டாட்டி.. ஒருவேளை இந்த கல்யாணம் நடக்கலனா வாழ்க்கை முழுக்க கல்யாணமே பண்ணாம இருப்பேனே தவிர நிச்சயமா இன்னொருத்தி இந்த இந்தர் வாழ்க்கையில வர முடியாது..”
மறுபடியும் அவளுக்கு மட்டும் கேட்குமாறு அவள் செவிகளில் அவன் உரைக்க அதை கேட்டவள் இதயத்திலோ குளிர் காற்றின் சாரல்.. அவன் தனக்கானவன் மட்டுமே என்ற எண்ணம் அவளையும் அறியாமல் அவள் இதழில் ஒரு குறு நகையை தோற்றுவித்திருந்தது..
“ம்ம்.. கமான் பேபி.. அடுத்த ஏரோவை ஷூட் பண்ணி கேமை வின் பண்ணிடு..” என்றவனை ஆழமாய் பார்த்தவள் சட்டென திரும்பி வில்லை தன் கைகளில் எடுக்க அவள் கைகளோ அம்பை நாணேற்ற முடியாமல் தடுமாறியது..
அதை கவனித்தவன் அவள் அருகே வந்து “என்னடி.. டென்ஷனாகுதா? நான் வேணா ஹெல்ப் பண்ணவா?” என்று அவள் பின்னால் ஒட்டி நின்றபடி அவள் கைகளை தன் கைகளால் பிடித்துக் கொண்டு அம்பை எடுத்து நாணேற்றியவன்
“இந்த ஷாட் மிஸ் ஆகவே ஆகாது.. ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்கிறோம் இல்ல? நிச்சயமா நீ வின் பண்ணிடுவ..” என்றவனின் முகத்தை தலையை தூக்கி பார்த்தவள்
“நிஜமாவே நான் வின் பண்ணனும்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டாள்..
“நீ அதானே ஆசைப்படுற.. நான் விரும்புற பொண்ணு ஆசைப்படுறதை அவளுக்கு கொடுக்கணும் இல்ல..?” அவன் சொல்ல அவளுக்கோ அதைக் கேட்டு ஏனோ கோபம் வந்தது..
அதெப்படி அவன் தன்னை விட்டுக் கொடுக்கலாம் என்ற கோவம் அது.. ஆனால் அவனா விட்டுக் கொடுப்பான்.. அவள் வாய்மொழியாக அவனுக்கான அவளின் காதலை சொல்லி கேட்க வேண்டும் என்று தவம் இருந்தான் அவன்..
இது புரியாமல் “ஓகே ஐ அம் ரெடி..” என்றாள் அவள் வீம்பாக..
இறுகிய குரலில் முகத்தை இலக்கு பலகையை நோக்கி திருப்பிய படி அவள் சொல்ல.. இருவருமாய் சேர்த்து அந்த அம்பை செலுத்தி இருந்தார்கள்..
அம்பை செலுத்திய நேரம் நாணை இழுத்து விட்ட அந்த நொடி அவள் வில்லை சிறிது நகர்த்தி இருந்தாள்.. வேண்டும் என்றே தான் செய்திருந்தாள்.. அம்பு இலக்கு பலகையில் பட கூட இல்லை.. எங்கேயோ போய் அநாதையாய் விழுந்திருந்தது..
அவனோ அவள் கையைப் பிடித்து இருந்தபடியே இலக்கை நோக்கி பார்வையை செலுத்தியவன் தன் நாவை உட்கன்னத்தில் துழாவியபடி “எனக்கு தெரியும்டி நீ இதான் பண்ணுவன்னு..” இதழுக்குள் புன்னகைத்துக் கொண்டவன்
“அச்சச்சோ.. ஷாட் மிஸ் ஆயிடுச்சே..” அவன் கிண்டலாக சொல்ல “அது.. நீங்க என் கைய புடிச்சி ஏதோ பண்ணிட்டீங்க.. அதான் ஷாட் மிஸ் ஆயிடுச்சு..” என்று அவன் மீதே பழி போட்டாள் அவள்..
“ஆஹான்.. அப்படியா? சரி நீ வேணும்னா இன்னொரு சான்ஸ் எடுத்துக்க.. நீ தனியாவே ஷூட் பண்ணு..” என்க
“ஒன்னும் தேவை இல்ல” என்றாள் அவள்..
“அது எப்படி? போட்டினா கரெக்ட்டா இருக்கணும் இல்ல..? அப்புறம் நான் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நீ சொல்ல கூடாது இல்ல..?” என்றவனை முறைத்துப் பார்த்தவள்
“அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்.. நான் ஒத்துக்குறேன் நான் தோத்துட்டேன்” என்றவளை கூர்ந்து பார்த்தவன் “அப்போ வான்ட்டடா தோக்கறயாடி..?”என்று கேட்டான்..
ஆம்.. வேண்டுமென்றேதான் தானே மனம் உவந்து அவனிடம் தோற்கிறாள்.. காலம் முழுவதும் தன் வாழ்க்கை துணையாக அவனை வென்றெடுப்பதற்காக அவன் வேண்டும் என்று தான் தோற்கிறாள்..
நினைத்ததை சாதித்து விட்டானே.. அவனை முறைத்தபடியே அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் “சேலஞ்ச் படி நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்று அவனை மேற்கண்ணால் பார்த்த படி சொன்னவளின் செவியோரம்
“தோத்துட்டா இதை வேற மாதிரி சொல்லணும்னு இல்ல கண்டிஷன்..”
அவன் அவளுக்கு நினைவு படுத்த அவளோ சுற்றும் முற்றும் பார்த்தபடி மெதுவாய் அவனை நெருங்கி வந்தாள்.. மறுபடியும் பதட்டம்.. இதயத்துடிப்பு எண்ணிக்கையில் எல்லை கடந்து போனது..
சங்கடமாய் சுற்றி இருந்தவர்களை பார்த்தபடியே தயங்கி தயங்கி அவனை கட்டி அணைக்கும் தூரத்தில் வந்து நின்றவளை ஆழ்ந்து பார்த்தவன் சட்டென நிமிர்ந்து பரிமேலழகரிடம்
“மாமா எங்க கல்யாணம் நடக்கும்.. மலர் ஓகே சொல்லிட்டா.. ஆனா நான் மலரோட கொஞ்சம் தனியா பேசணும்..” அவள் விழிகளை ஆழமாய் பார்த்துக் கொண்டே சொன்னவனிடம்
இதழை பெரிதாய் விரித்து அவரை பார்த்து புன்னகைத்தவன் “என்ன மேடம்.. தனியா பேசலாமா?” என்று மலரிடம் கேட்க அவளும் பதட்டம் தணிந்து ஒரு பெருமூச்சோடு வேகமாய் ஆமோதிப்பாய் தலையாட்டினாள்..
அங்கே இருந்த மான்விழியும் பரிமேலழகரும் வாசுகியும் மலர்விழியை வியந்து பார்த்திருந்தார்கள்.. அவள் தான் எப்போதும் அதிரடியாய் செயல்படுபவள் ஆயிற்றே.. முதல் முறையாய் ஒருவன் சொல்லுக்கு மறுபேச்சு பேசாது அவன் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு நடக்கும் அமைதியான வில்விழியை பார்க்க அவர்களுக்கெல்லாம் ஆச்சரியமாய் இருந்தது..
அவனோடு அவள் தன் அறைக்குள் சென்ற அடுத்த நொடி கதவை தாழிட்டவள் அவனை நெருங்கி வர அவனோ அவள் விழிகளுக்குள்ளேயே ஊடுருவி பார்த்து இருந்தான்..
அவன் பார்வைக்கு பதில் பார்வையாய் கண்கள் நிறைய காதலுடனும் மோகத்துடனும் அவனை ஏறிட்டவள் அவன் கழுத்தை சுற்றி கைகளை மாலையாய் போட்டு அவன் முகத்தை தன் புறம் இழுத்து அவன் இதழோடு தன் இதழை அழுத்தமாய் சேர்த்திருந்தாள்..
அவள் இதழ் சேர்த்த நொடி அவள் இதழை தன் இதழுக்குள் உணவாய் வாங்கிக் கொண்டவன் அந்த முத்தத்தின் ஊடாகவே மனம் நிறைந்து புன்னகைத்திருந்தான்..
வாய் திறந்து எதுவும் பேசவில்லை அவள்.. மனதில் இருந்த அத்தனை காதலையும் இதழ் வழியாக தான் சொல்லி இருந்தாள்.. ஆனால் வேறு விதமாக மௌன மொழியில் சொல்லியிருந்தாள்..
அவன் உயிரோடு சேர்ந்து ஒட்டி இருந்தாள் அந்த இதழணைப்பின் மூலம்..
அவன் ஆளுமையோடு கொடுத்த வன்மையான இதழணைப்பில் கூட அவ்வளவு காதலும் தாபமும் மோகமும் ஏக்கமும் இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. பெண்ணவள் இதழ் வழியாகவே அவனுக்குள் சென்று குடி கொண்டு விட எண்ணியது போல இருந்தது அவளின் முத்தம்.. நீண்ட நெடிய இதழ் கலப்பு..
நேரம் கரைந்து கொண்டு இருக்க பதினைந்து நிமிடங்களுக்கு பிறகும் அறையை விட்டு வெளியே வரவில்லை இந்தரும் வில்விழியும்..
வாசுகி பரிமேலழகரிடம் “என்னங்க.. இவ்வளவு நேரம் ஆகுது.. ரூமுக்குள்ள போனவங்களை இன்னும் காணோமே..” கவலையோடு கேட்க
“ஏய் வரட்டும் டி.. இப்ப எதுக்கு நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற? ஒன்னும் ஆகாது.. அவரு மார்க்கண்டேயனோட புள்ள.. தப்பா எதுவும் நடக்காது..”
சொன்னவருக்கு தெரியும் வில்விழி எவ்வளவு தான் வெளியே இந்தரைப் பற்றி கோபமாக பேசினாலும் அவள் மனதில் முழுமையாய் இந்தர் நிறைந்திருக்கிறான் என்று.. அவரின் செல்ல மகளை பற்றி அவருக்கு தெரியாதா.. அது தெரிந்து தானே அவர் அந்த போட்டிக்கே சம்மதித்திருந்தார்..
இங்கு அறையிலோ பல நிமிடங்களுக்குப் பிறகு இதழ்கள் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்த போது இருவர் முகத்திலும் வெகு காலமாய் பிரிந்து இருந்த தங்கள் இணை உயிரோடு வந்து ஒன்றிவிட்ட ஆர்ப்பரிப்பு.. இதழ்கள் பிரிந்தனவே தவிர விழிகள் இன்னும் இறுக்கமாய் ஒருவரை ஒருவர் பார்வையால் ஆற தழுவிக் கொண்டுதான் இருந்தன..
இந்தர் அவள் கன்னங்களை தன் கைகளில் தாங்கி “ஓய் சண்டி ராணி.. வாயை திறந்து லவ்வை சொல்லணுங்கறது தான் சேலஞ்ச்.. சொல்லுடி..” என்க
அவளோ அவன் கன்னத்தில் தன் விரலை வைத்து வருடியபடி ஒரு கிறக்கமான பார்வையுடன் “அதான் சொல்லிட்டேனே..” என்க
புருவம் சுருக்கி அவன் அவளை புரியாமல் பார்க்க அவன் நெஞ்சத்தை விரலால் சுட்டிக்காட்டி “இங்க கேளுடா.. நான் சொல்லிட்டேன்னு தெளிவா சொல்லும்..” என்றவள் அழகாய் பெரிதாய் இதழ் விரித்து புன்னகைத்தபடி அவன் கன்னத்தை பிடித்து இழுத்து மறுபடியும் அவன் உதட்டில் அழுத்தமாய் “ம்ம்ம்ம்ம்…” என்று சத்தத்தோடு தன் இதழ்களின் தடம் பதித்து கதவை திறந்து கொண்டு வேகமாய் வெளியே சென்றாள்..
தன் நெஞ்சில் கையை வைத்து படபடக்கும் இதயத்தை பிடித்துக் கொண்ட இந்தரோ “ஐயோ கொல்றாளே..” என்றபடி தேன் குடித்த குள்ளநரியாக உள்ளுக்குள் ஒருவித ஆனந்த பரபரப்பு பரவ முகம் முழுக்க புன்னகையை தாங்கி அந்த அறையை விட்டு வெளியேறினான்..
அதன் பிறகு மார்க்கண்டேயனிடம் விஷயத்தை சொல்லி ப்ருத்வி அவரோடு பல விவாதங்கள் செய்து அவரை சம்மதிக்க வைத்து ஒரு வழியாய் இரண்டு திருமணமும் நடந்தேறியது..
நினைவடுக்குகளில் இந்த அழகான காதல் நிமிடங்கள் நகர்ந்து போக இன்று விழி சொன்னது எதுவுமே காதில் விழாதது போல் அந்த பழைய நாட்களில் அவன் மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது..
“இந்தர்.. நான் சொல்றது கேக்குதா இல்லையா?” என்று விழி அவனை கேட்க இந்தர் தன் நினைவில் இருந்து மீண்டவன் “ஓகே வில்லி.. நீ போ..” என்றான்..
வில்விழியோ அவனை பார்த்தபடியே மான்விழியை தொடர்ந்து இதழில் புன்னகை தவழ உள்ளே சென்றாள்..
அப்போது மான்விழியின் அறைக்குள் இருந்து ட்ர்ர்ர்ர்.. என்று வண்டி ஓட்டுவது போல் சத்தமிட்டபடி வெளியே ஓடி வந்தான் சின்ட்டூ..
வில்விழியை பார்த்ததும் தன் வண்டியை சடன் ப்ரேக்கிட்டு நிறுத்தியவன் “அம்மா யாருமா இந்த ஆன்ட்டி..?” என்று கேட்க
அவன் உயரத்திற்கு முட்டி போட்டு அமர்ந்த வில்விழிக்கோ கண்கள் நிறைந்து போக அவன் தலையை வருடி
“ஏய் சின்ட்டூ.. எவ்ளோ வளர்ந்துட்டே நீ.. நான் போகும் போது ஆறு மாச குழந்தையா இருந்தான்.. எவ்வளவு அழகா க்யூட்டா இருக்கான் மானு இவன்.. சின்ட்டூ.. நான் உன் அம்மாவோட யங்கர் சிஸ்டர்.. உன் இந்தர் பெரிப்பாவோட வொய்ஃப்..”
அவள் சொன்னதைக் கேட்டு தன் சிறிய விழிகளை உருட்டி விழித்த சின்ட்டூ “அப்போ நான் உங்களை எப்படி கூப்பிடணும்..? அம்மாவோட சிஸ்டர்னா சித்தின்னு கூப்பிடவா? என் ஃபிரண்ட் பிரக்ருதி கூட அவ அம்மாவோட சிஸ்டரை அப்படித்தான் கூப்பிடுவா..”
இப்போதுதான் அங்கு பக்கத்திலிருந்த நர்சரிக்கு போக ஆரம்பித்து இருந்தான் அவன்.. ஓரளவு உறவு முறைகள் இப்போதுதான் அவனுக்கு தெரிய ஆரம்பித்திருந்தது.. அப்போது அங்கே வந்த இந்தர்
“ஹே.. சின்ட்டூ.. நீ பயங்கர ஸ்மார்ட் டா கண்ணா.. ஆனா அவ பெரியப்பாவோட வொய்ஃப் இல்லையா? அதனால நீ பெரியம்மான்னு கூப்பிடு.. ஓகேவா?”
“ஹே பெரிப்பா” என்று விழிகளை பெரிதாய் விரித்து தாவி இந்தரை அணைத்துக் கொண்டவன் “பெரிமான்னு கூப்பிடுறேன்..” சொன்னவனிடம் “ஏன்.. சித்தின்னே கூப்பிடலாமே..” வில்விழி சொல்ல
“இல்ல.. பெரிம்மான்னு தான் கூப்பிடுவேன்.. இந்தர் பெரியப்பா சொன்னா அதுதான் கரெக்ட்” என்று இந்தருக்கு ஹைஃபை கொடுக்க இந்தரோ விழியை கிண்டலாய் பார்த்தபடி புருவத்தை ஏற்றி இறக்கினான்..
அதன் பிறகு சின்ட்டூவுக்கு பொறுமை இருக்கவில்லை..
“ஹேய்.. இந்தர் பெரிப்பா.. வாங்க போலாம்” என்க..
“போலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு முக்கியமான ஆளை இண்ட்ரடியூஸ் பண்ண போறேன்.. உன்னோட சிஸ்டர் சக்தி வந்திருக்கா.. வரியா போய் பார்க்கலாம்..”
இந்த சொல்ல ஆர்வமாய் விழிகளை விரித்த படி “ஹேய்.. என்னோட சிஸ்டரா.. விஷாலுக்கு இருக்கிற மாதிரி எனக்கும் ஸ்வீட் சிஸ்டரா?” அவன் கேட்க அவனை தூக்கிக் கொண்டு சக்தியை பார்க்க போய்விட்டான் இந்தர்..
விழியோ ஆச்சரியமாக மானுவிடம் “இவன் என்னடி.. அவன் அப்பாவை பத்தி கூட கேட்கல.. இந்தரோட ஒட்டிக்கிட்டு இப்படி ஓடுறான்..” என்று கேட்க
மான்விழியோ ஒரு பெருமூச்சை விட்டு “அதை ஏன்டி கேக்குற? எனக்கு வந்து வாய்ச்சதெல்லாம் இப்படித்தான் இருக்கு.. ப்ருத்வி தான் ஒரு குதிரையை வச்சுக்கிட்டு என்னை டென்ஷன் பண்றாருன்னு பார்த்தா இவன் எந்த நேரமும் ஆர்ச்சரி ஆர்ச்சரின்னு அந்த நெனைப்பாவே சுத்திக்கிட்டு இருக்கான்.. இந்தர் எப்ப இங்க வந்தாலும் அவரோட உன்னோட அந்த ஆர்ச்சரி ரேஞ்சுக்கு போய் அம்பு விட ஆரம்பிச்சுடுவான்.. அவரும் இவனுக்கேத்த மாதிரி சின்னதா ஒரு வில்லும் அம்பும் வாங்கி கொடுத்திருக்கிறார்..”
அவள் புலம்பியதை கேட்டு சத்தமாக சிரித்து விட்டாள் வில்விழி..
“மவளே நீ இனி எஸ்கேப் ஆக முடியாதுடி.. எதுக்குடி தேவை இல்லாம இன்னும் பயந்துகிட்டே இருக்கே.. அப்ப எதோ அது நடந்து போச்சு.. அது ஒரு ஆக்சிடென்ட்.. அதிலிருந்து வெளியில வா மானு.. அதையே நெனச்சுக்கிட்டு இப்படியே நீ பயந்துகிட்டு இருந்தா உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு எல்லாம் அது வலியை கொடுக்குதடி..”
அந்த நிகழ்வைப் பற்றி பேசும்போதே மான்விழி கொஞ்சம் படபடத்து தான் போனாள்..
“என்னால அன்னைக்கு நடந்ததை மறக்கவே முடியல டி..”
“ஏய் நீ எவ்ளோ சூப்பர் ஹார்ஸ் ரைடர் தெரியுமா? அப்பாவோட நீ குதிரை ஓட்டும் போது எனக்கு பாத்துகிட்டே இருக்கணும்னு தோணும்.. ஆனா இப்போ ஷ்யாம் கர்ணாவை பார்த்து பயப்படற அளவுக்கு அப்படியே அந்த இன்ஸிடன்ட் உன்னை மாத்திருச்சு இல்ல..?”
“நான் என்னடி பண்ணுவேன்..? அன்னைக்கு நடந்தது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லையே.. எனக்கும் அப்பாவுக்கும் உயிர் போய்ட்டு உயிர் வந்தது டி..”
அவள் சொன்ன அந்த கொடுமையான நிகழ்வு வில்விழி கண்களுக்குள் நிழல் படமாய் ஓடியது..
அறைக்குள் வந்ததுமே அறைக்கதவை கோவமாய் அடைத்த விழி இந்தர் புறம் திரும்பி
“நீங்க என்னதான் நினைச்சுகிட்டு இருக்கீங்க? அன்னைக்கு அந்த காம்பெட்டிஷன்ல அதுவரைக்கும் பொண்ணுங்களையே பார்த்ததில்லைங்கிற மாதிரி அப்படி ஒரு லுக்கு.. இப்போ அதை பத்தி எல்லாம் எந்த கவலையும் இல்லாம எங்க அக்காவை பொண்ணு பார்க்க கிளம்பி வந்தாச்சு.. எங்க அக்காவை உங்க தம்பிக்கு புடிச்சிருச்சுன்னு இப்ப சார் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியாச்சு.. உங்க அப்பா என்னடான்னா இப்படி நேரத்துக்கு ஒரு பொண்ணுன்னு லுக் விட்டுட்டு திரிகிற உருப்படாத பிள்ளைக்கு எங்க அப்பா கிட்ட பெரிய உத்தமர் காந்தி பட்டம் கொடுத்திட்டு போறார்..” வார்த்தையால் வதக்கினாள் அவனை..
அவ்வளவுதான்.. அவ்வளவு நேரம் தன்னை வாய்க்குள் போட்டு அரைத்துக் கொண்டு இருந்த அந்த உதடுகளையே கடித்து தின்று விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இறுதியாய் சொன்ன வார்த்தையில் பொங்கி எழுந்து விட்டான்..
அவள் கன்னங்களை ஒற்றை கையால் அழுத்தமாய் பிடித்து இழுத்தவன் அவள் கண்களுக்குள் பார்த்து “என்னடி ரொம்ப ஓவரா பேசுற..?” என்று கேட்டவன் அடுத்த நொடி அவனை வன்சொற்களால் வதைத்த அந்த இதழ்களை வன்மையாகவே தண்டித்திருந்தான்..
அவளோ விழிகளை சாசர் போல் விரித்த படி அவன் கைகளை கன்னத்தில் இருந்து பிடித்து இழுத்து அவனிடமிருந்து திமிறி விலக பார்க்க அவன் கைகளும் இதழ்களும் அவளின் அதரங்களை தங்கள் உடமையாய் எண்ணியதோ என்னவோ.. உடும்புப்பிடியாய் அல்லவா பிடித்திருந்தன அவளின் மெல்லிய இதழ்களை..?!
பெண்ணவளால் தன் இதழ்களை சிறை பிடித்து தண்டித்துக் கொண்டிருந்த அவனின் காதல் ஆயுதங்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை..
சிறிது நேரம் போராடியவள் ஒரு நிலைக்கு மேல் அந்த முத்தத்தின் கட்டிலிருந்து வெளிவர முடியாமல் அதனுள்ளேயே மாட்டிக் கொண்டு பதிலுக்கு தானும் அவன் இதழ்களை துவைக்க ஆரம்பித்திருந்தாள்..
நொடிகள் தாண்டி நிமிடங்கள் வரை இரு பக்கமும் ஒருவரை ஒருவர் பழிவாங்க அந்த முத்தக்கலை என்னும் இனிமையான யுத்தக்கலையை மற்றவர் மேல் பிரயோகித்துக் கொண்டு இருந்தார்கள்..
சில நிமிடங்களுக்கு பிறகு அவள் இதழை விடுவித்தவனின் கண்களிலோ மதுக் குவளைக்குள் விழுந்த வண்டாய் போதை ஏறி கிடந்தது..
மூச்சு வாங்கியபடி “ஹ்ஹ..ஹ.. அடியேய்.. என்ன தான்டி வச்சிருக்க அந்த லிப்ஸ்ல.. அதை என் வாய்க்குள்ளேயே வச்சுக்கணும்னு தோணுது.. என்னை ஒரு ஜென்டில்மேனா இருக்க விட மாட்டே போலயே..”
சொன்னவன் அதோடு நிறுத்தாமல் அவளை இதழ்கள் நோக்கி மீண்டும் படையெடுக்க இம்முறை சுதாரித்தவள் சற்று பின்னால் சென்று “தோணும்.. விருப்பம் இல்லாத பொண்ணை ஃபோர்ஸ் பண்ணி கிஸ் பண்ணிட்டு இதுல ஜென்டில்மேன்னு பெருமை வேறயா..?”
அவள் மீண்டும் காளியவதாரம் எடுக்க அவனோ அதை எல்லாம் சட்டை செய்யாமல் “என்னவோ அந்த சைடு கிஸ் கொடுத்ததுனால ரொம்ப கஷ்டப்பட்ட மாதிரி சீன் போடுற.. நீயும் என்ஜாய் பண்ணிட்டு தானே இருந்த.. என் லிப்ஸை புண்ணாக்கிட்டு பேசுற பேச்சை பாரு..” தன் தடித்த இதழ்களை வருடிக்கொண்டே
அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தபடி “இவ்வளவு அழகா உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்கறதனால தானே நான் முடிச்சப்புறம் கூட நீ முடிக்காம கண்டினியூ பண்ணிக்கிட்டே இருந்த..” என்றவனை எரித்து விடுவது போல் முறைத்தாள் அவள்..
“ஆமா.. இவர் பெரிய மன்மதன்.. இவரை பார்த்து மயங்கி முத்தம் குடுத்தாங்க..”
“நீ ஒத்துக்கலன்னாலும் அதான்டி உண்மை.. இதுவரைக்கும் எந்த போட்டியிலயும் தோக்காதவ அன்னைக்கு ஐயாவோட ஒத்த பார்வையில சுத்தி இருந்த உலகத்தையே மறந்து அந்த டார்கெட் போர்டை தாண்டி ஷூட் பண்ணுன தானே..?”
அவன் அப்படி கேட்டதும் சற்று தடுமாறியவள் “அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. அன்னைக்கு ஏதோ ஃபார்ம்ல இல்ல நானு.. அதனால மிஸ் ஆயிடுச்சு..” என்றவளை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாய் பார்த்தவன்
“ஓஹ்.. அன்னைக்கு ஃபார்ம்ல இல்லையா? ஆனா இன்னைக்கு செம ஃபார்ம்ல இருக்க போல..” என்றவனின் மண்டையை பிளந்தால் என்ன என்று தோன்றியது அவளுக்கு…
“டேய்.. அசிங்கமா பேசாத டா..”
“அப்படின்னா என்னை லவ் பண்றேன்னு உண்மையை ஒத்துக்கோ..”
“என்னது.. லவ்வா..? யாரு லவ் பண்றா..? அதெல்லாம் யாரும் இங்க லவ் பண்ணல.. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத.. ஓவர் கற்பனை உடம்புக்காகாது”
“இங்க பாருடி.. பாக்குற பொண்ணை எல்லாம் கிஸ் அடிக்கிறதுக்கு நான் ஒன்னும் ப்ளே பாய் இல்ல.. என் வாழ்க்கையில நீ ஒருத்தி தான் இருக்க முடியும்.. உன்னை தவிர வேற எவளும் இங்க நுழைய முடியாது..” என்று தன் நெஞ்சப் பகுதியை காட்டியவன்
“அங்கேயும் அதே நிலைமை தான்.. எனக்கு தெரியும்.. சும்மா எதுக்குடி நடிக்கிற? கிஸ் அடிச்சுட்டாங்களாம்.. கிஸ் மட்டும் இல்ல.. எனக்கு உன்னை இப்ப என்னென்னவோ பண்ணனும்னு தோணுது..” என்றவனின் கண்களை பார்த்தவளுக்கு இரண்டு நொடிகளுக்கு மேல் அந்த கண்களை பார்த்து பொய் பேசவும் முடியவில்லை..
சட்டென தலையை வேறு புறம் திருப்பியவள் “இல்ல.. நான் லவ்லாம் பண்ணல..” என்றாள்..
“சோ மேடம் ஒத்துக்க மாட்டீங்க.. அப்படித்தானே?”
“லவ்வே இல்லைங்கிறேன்.. அப்புறம் எப்படி ஒத்துக்க முடியும்?” அவள் கேட்க
“ஓகே.. ஒரு சின்ன பெட் வச்சுக்கலாம்.. இன்னைக்குதான் நீ ஃபுல் ஃபார்ம்ல இருக்கல்ல..?” அவன் கேட்ட கேள்வியில் மறுபடியும் அதிர்ந்து முறைத்தவளை “ஏய்.. நீ ஏண்டி இவ்ளோ டர்ட்டியா யோசிக்கிற? நான் ஆர்ச்சரில இருக்கிற ஃபார்மை பத்தி தான்டி சொல்றேன்..”
அவன் கீழ் உதட்டை கடித்து புன்னகைத்தபடியே கேட்க “அதெல்லாம் நாங்க ஃபார்ம்ல தான் இருக்கோம்” என்றாள் இறுக்கமாக..
“இப்படி சும்மா நீ வாயால சொல்றதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது.. நெஜமாவே உனக்கு என் மேல லவ்வு இல்லைன்னு ப்ரூவ் பண்ணு..”
அவள் புரியாமல் அவனை கேள்வியாய் பார்க்க “உங்க வீட்ல தான் இப்போ ரேஞ்ச் செட் பண்ணி இருக்க இல்ல..? மொத்தம் த்ரீ ஷாட்ஸ்.. நீ த்ரீ ஏரோஸ் ஷுட் பண்ணு.. நான் த்ரீ ஏரோஸ் ஷூட் பண்றேன்… யாரு வின் பண்றாங்கன்னு பார்க்கலாம்.. ஒருவேளை நீ வின் பண்ணிட்டேனா உனக்கு என் மேல லவ் இல்லன்னு நான் ஒத்துக்குறேன்.. இந்த கல்யாணம் நடக்காது.. ஆனா ஒருவேளை நீ தோத்துட்டனா என்னை கல்யாணம் பண்ண நீ சம்மதிக்கணும்.. அதுவும் அங்க சுத்தி இருக்கிற எல்லார் முன்னாடியும் என்னை கட்டிப் பிடிச்சு உன் லவ்வை சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்.. ஓகேன்னா சொல்லு.. இப்பவே போய் இந்த சேலஞ்ச் பத்தி உங்க அப்பா கிட்ட சொல்லி ஸ்டார்ட் பண்ணிடலாம்..”
அவன் அவளை கூர்ந்து பார்த்தபடி அவள் பதிலுக்காக காத்திருக்க “முடியாது.. அப்படி எல்லாம் எல்லார் முன்னாடியும் கட்டிக்கிட்டுல்லாம் என்னால சொல்ல முடியாது..”
அவள் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்தவன் “அப்போ நீ என்னை லவ் பண்ற.. என் கண்ணை பார்த்தா இந்த சேலஞ்சில தோத்துடுவன்னு பயம் உனக்கு.. அப்ப லவ்வை ஒத்துக்கோ.. அப்படி பயம் இல்லன்னா நீ என்னை கட்டிக்கிட்டு லவ் சொல்ல வேண்டிய அவசியமே வராதே.. அப்போ நீ என்னை லவ் பண்றதானே..?”
“இல்ல.. நான் உன்னை லவ் பண்ணல.. நான் சேலஞ்சை அக்செப்ட் பண்றேன்..” என்றாள் அவள்..
“மாட்டிக்கிட்டா மலரு..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் அவளை ஒரு மார்க்கமாய் பார்த்து “அப்ப ஓகே.. உனக்கு அவ்ளோ கான்ஃபிடன்ஸ் இருக்குன்னா வா.. போய் உங்க அப்பா கிட்ட சொல்லிட்டு நடக்க வேண்டியதை பார்க்கலாம்..” என்று கதவை திறந்து கொண்டு “வாடி வாடி நாட்டுக்கட்டை.. வசமா வந்து மாட்டிக்கிட்ட..” பாடியபடி வெளியே சென்றான் இந்தர்..
வில்விழிக்கோ “அய்யய்யோ தெரியாத்தனமா இப்படி ஒரு சேலஞ்சுக்கு ஒத்துக்கிட்டேனே.. என்னை வச்சு செய்யப் போறான்.. இன்னைக்கு நீ காலி டி மலரு..” என்று புலம்பியபடி அவன் பின்னாலேயே அவளும் சென்றாள்..
இங்கே மான்வழி அறைக்குள் வந்த பிருத்வி உள்ளே வந்ததும் “மானு..” என்றழைக்க அவன் புறம் திரும்பியவள் கண்களோ கண்ணீரில் நிறைந்திருக்க அவள் விழிகள் அவனிடம் தனக்கு அவ்வளவு நேரமாய் ஏற்பட்டிருந்த அவஸ்தைகளை ஒன்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தது..
அவள் அருகே வந்தவன் அவள் நாடி பிடித்து நிமிர்த்தி “ஹேய் எதுக்குடி கண்ணெல்லாம் கலங்கி இருக்கு.. என்ன ஆச்சு மா?” அவன் ஆதூரமாய் அவள் தலையை வருடியபடி கேட்டது தான் தாமதம்..
அவன் மார்பில் முகம் புதைத்து கண்ணீர் மழையால் அவன் மார்பை நனைக்க ஆரம்பித்தாள் பாவை அவள்..
“என்னடா..? எதுக்கு இப்போ அழற? என்னை பிடிக்கலையா?” அவன் அப்படி கேட்டதும் சட்டென அவனை ஏறிட்டுப் பார்த்தவள் அவன் இதழ்களை தன் கரத்தால் மூடி “உங்களைப் பிடிக்காதவ தான் இப்படி உங்களை கட்டிப்பிடிச்சுக்கிட்டு அழுதுகிட்டு இருக்கேனா? உங்களை பிடிக்கலைன்னு சொன்னா இந்த உலகத்துல இருக்கற யாரையுமே எனக்கு பிடிக்கலைன்னு சொல்றதா அர்த்தம்.. என்னையும் உட்பட..”
அதைக் கேட்டு அழகாய் புன்னகைத்தவன் “ம்ம்.. அதான் பிடிச்சிருக்கு இல்ல..? நம்ம கல்யாணமும் ஃபிக்ஸ் ஆயிடுச்சு.. அப்புறம் எதுக்கு அழற?” என்றான்..
“உயிரே போயிடுச்சு பிருத்வி.. உங்க அண்ணாவுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சிருவாங்களோன்னு பயந்தே போயிட்டேன்.. இந்த ரூம் ஜன்னல்ல இருந்து உங்களை பார்த்த அந்த நிமிஷம் உங்க கிட்ட மொத்தமா என் மனசை இழந்துட்டேன்.. உங்க அண்ணன் தான் மாப்பிள்ளைன்னு உங்க அம்மா சொன்ன அத்த நிமிஷத்தில இருந்து உங்கண்ணா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ற அந்த நிமிஷம் வரைக்கும் என் உயிரே என்கிட்ட இல்ல..”
“அப்பவே உனக்கு என்னைதான் புடிச்சிருக்குன்னு சொல்ல வேண்டியது தானடி..”
“அது எப்படி அவ்வளவு பேர் முன்னாடி..”
“மானு.. இது உன் வாழ்க்கை.. இதுக்கு கூட நீ பேசலனா அப்புறம் உனக்கு தானடி கஷ்டம்.. வாயை திறந்து உன்னோட இஷ்டத்தை சொன்னாதானே அடுத்தவங்களுக்கு புரியும்..”
“என் தங்கச்சி மலரும் இப்படித்தான் சொல்லுவா.. ஆனா நான் அப்படி கிடையாது.. சட்டுனு எல்லார் முன்னாடியும் பேச மாட்டேன்..”
அவன் முடிக்கும் முன் அவனை இறுக்கமாய் அணைத்தவள் “நான் ஒன்னு சொன்னா என்னடா ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ண உடனேயே இப்படி சொல்றாளேனு தப்பா நினைப்பிங்களா..?”
“அப்படி தோணுதா உனக்கு? நீ எது சொன்னாலும் அப்படி நினைக்க மாட்டேன்.. நீ என்கிட்ட என்ன வேணா பேசலாம்டி பொண்டாட்டி..” என்க..
அவன் பொண்டாட்டி என்று அழைத்ததில் இதழ் மலர்ந்து சிரித்தவள் அவன் அணைப்புக்குள் இருந்து கொண்டே “ஐ லவ் யூ ப்ருத்வி.. ஐ லவ் யூ டு த கோர்..”
என்றவள் தன் அணைப்பை இன்னும் இறுக்க அவனுக்கோ உள்ளுக்குள் ஆனந்த பூகம்பம் ஒன்று அடியில் இருந்து முடி வரை அதிர்வுகளை கொடுத்தபடி ஓடிக் கொண்டிருந்தது..
அவனும் அவள் தோளில் முகம் புதைத்து “ஐ லவ் யூ மோர் கண்ணம்மா..” என்றான்..
திடீரென ஏதோ தோன்ற அவனில் இருந்து விலகியவள் அவன் முகம் பார்த்து “அப்படினா நீங்க ஆர்ச்சர் இல்லையா?”
அவள் கேட்கவும் புருவம் சுருக்கியவன் “இல்லடி.. இந்தர்தான் ஆர்ச்சர்.. நான் ஆர்ச்சரி ஃபேக்டரியை அப்பாவோட சேர்ந்து பாத்துட்டு இருக்கேன்..”
அவன் சொன்னதும் முகம் மலர்ந்து பெரிதாய் சிரித்தவளை ரசனையாய் பார்த்தவன் “ஏன்.. உனக்கு ஆர்ச்சர்னா பிடிக்காதா?” என்று கேட்க
“இல்ல.. எனக்கு இந்த மாதிரி கொஞ்சம் விபரீதமா இல்லனா முரட்டுத்தனமான விளையாட்டெல்லாம் பிடிக்காது.. உங்களை மாதிரி அமைதியா இருக்கறவங்களை தான் பிடிக்கும்..” உண்மை தெரியாமல் அப்போது சொல்லி இருந்தாள் அவள்..
“சோ மேடம் நான் ஆர்ச்சரா இருந்தாலும் பரவாயில்லைன்னு தான் முதல்ல ஓகே சொல்லி இருக்கீங்க.. பார்த்த உடனே அவ்வளவு லவ் ஆயிடுச்சா டி என் மேல..” அவளை மோக கண்களோடு ஊடுருவி பார்த்தவன் அடுத்த நொடியே அவள் இதழ்களை தன் இதழுக்குள் சிறை செய்திருந்தான்..
இந்தர் வில்விழியின் இதழ் ஆக்கிரமிப்புக்கு மாறாக அழகான ஆழமான நிதானமான முத்தமாய் இருந்தது அது.. வெகு நேரம் அவள் இதழை தன் இதழால் வருடி கொண்டிருந்தவன் சற்றே விலகி “உன் தங்கச்சி இந்தரோட கல்யாண பிரபோஸலுக்கு என்ன பதில் சொன்னான்னு தெரியல.. வா போய் பார்ப்போம்..” என்றவனை புரியாமல் பார்த்தாள் அவள்..
வெளியே நிகழ்ந்ததை சொன்னவன் “இந்த முடிவை அவன் இன்னைக்கு எடுக்கல.. ரெண்டு நாள் முன்னாடி உன் தங்கச்சி ஒரு காம்பெடிஷனுக்கு போயிருந்தால்ல? அங்கேயே அவளைப் பார்த்து மொத்தமா ஆஃப் ஆகிட்டான்..”
அவன் சொன்னதைக் கேட்டு விழி விரித்தவள் “இன்ட்ரஸ்டிங்கா இருக்கே.. வாங்க போய் பார்க்கலாம்..” என்றாள்..
இருவரும் வெளியே வர அங்கே ஏற்கனவே பெரியவர்களிடம் தாங்கள் போட்டுக் கொண்ட சவால் பற்றி சொல்லி அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி இருந்தார்கள் இந்தரும் வில்விழியும்..
அவர்கள் வீட்டு தோட்டத்தின் மறுபகுதியில் வில்வித்தைக்கான களத்தை உருவாக்கியிருந்தார்கள்.. அங்கே ஒரு இலக்கு பலகை அதன் பின்னால் ஒரு பெரிய தடுப்பு சுவர் மற்றும் வில் அம்பு அம்பறாத்தூணி எல்லாம் இருந்தன..
அங்கே சென்றவன் அந்த அமைப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு போனான்..
விழி பக்கம் திரும்பி “என்ன மலர் மேடம் தொடங்கலாமா? நீங்க தொடங்குறீங்களா இல்ல நான் தொடங்கவா?”
அவன் அவளை மேல் கண்ணால் பார்த்த படி கேட்க அவளும் “நீங்களே தொடங்குங்க.. நான் அப்புறம் ஷூட் பண்றேன்..” என்றாள்..
“ஒன் ஆன் ஒன் ஷாட்ஸ்.. ஓகேவா?”
அவளும் சரி என தலையாட்ட வில்லையும் அம்பையும் எடுத்த இந்த்ரதனுஷ் பெயருக்கேற்றார் போலவே அதில் லாவகமாய் நாணை கட்டி அதில் அம்பை பொருத்தி இலக்கு பலகையை கூர்மையாய் நோக்கியபடி அம்பை செலுத்த அதுவும் சரியாக தங்க நிற வளையத்தில் சென்று பாய்ந்து நின்றது..
அதைப் பார்த்து புன்னகைத்தவன் “உங்க டர்ன் மேடம்..” என்று அவளுக்கு பின்னால் போய் நின்று கொண்டான்..
அவளும் அவனை ஓரவிழியால் நோட்டமிட்டபடியே தன் இடத்தில் போய் நின்றவள் நடுப்புள்ளிக்கு மிக அருகில் தன் அம்பை எய்திருந்தாள்..
அவன் அவளுக்கு பின்னால் நின்றிருந்ததால் அவள் கவனம் சீராக இலக்கு பலகை மேலே தான் குவிந்து இருந்தது.. தங்க வளையத்தில் தன் பார்வையை பதித்தவள் எய்த அம்பு சரியாக அதன் நடுப்புள்ளியை நோக்கி பாய்ந்து இருந்தது..
இந்தர் கையை தட்டியபடி “வாவ்.. பர்ஃபெக்ட் ஷாட்.. பரவாயில்லையே.. நேரா இதயத்து நடுல போய் குத்துற ஏரோ போல கோல்டன் ரிங்கோட நடுவுல பாய்ஞ்சுருச்சு.. ம்ம்.. குட் ஷோ” என்று
அவள் கையில் இருந்து வில்லை வாங்கிக் கொண்டவன் அவளை அளவிடும் ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி இலக்கு நோக்கி தன் பார்வையை திருப்பினான்..
அவளோ அவன் பக்கவாட்டில் சென்று நின்று கொள்ள அடுத்த அம்பை நாணில் பொருத்தியவன் அதை எய்யவிருந்த நேரம் அவள் பக்கம் திரும்பி அவளை ஆழமாய் பார்க்க வில்விழியோ “ஒழுங்கா டார்கெட் பார்த்து ஷூட் பண்ணுங்க.. ஒழுங்கா ஷூட் பண்ணலைனா அப்புறம் கல்யாணம் நடக்காது” என்றாள்..
அவள் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்தவன் அவள் புறம் திரும்பிய படியே அம்பை எய்ய அது நேராக இலக்கு பலகையின் தங்க வளையத்தில் சென்று குத்திக் கொண்டு நின்றது..
அந்த புறம் திரும்பாமலேயே கண்களால் இலக்கு பலகையை பார்க்கச் சொல்லி அவளுக்கு அவன் சைகை காட்ட திரும்பி இலக்கு பலகையை பார்த்தவளின் கண்களோ பெரிதாய் விரிந்து கொண்டது..
“ஐயோ.. இவனா..? இவன் எங்க இங்க வந்தான்? இவன் கூட இன்னொருத்தன் வேற வரான்.. யாரு மாப்பிள்ளைன்னு தெரியலையே.. எவனா இருந்தாலும் மானுக்கு இந்த சம்பந்தம் வேண்டாம்.. இவன் கண்ணால பார்த்து பார்த்தே என்னை டார்ச்சர் பண்ணுவான்”
இந்த யோசனையுடனே உள்ளே வந்து கொண்டிருந்த மூவரையும் வில்லிழி பார்த்துக் கொண்டிருக்க உள்ளே இருந்த மான் விழியோ “இவ்வளவு நேரம் என்ன பார்த்துட்டு இருக்கா?” என்று எண்ணமிட்டபடி
“மலரு.. என்னடி ஆச்சு? மாப்பிள்ளை வரலையா?” என்று அவள் பின்னால் வந்து நின்று வெளியே பார்க்க அவள் பார்க்கும் நேரம் இந்தரும் சகுந்தலாவும் அந்த ஜன்னலை கடந்து போயிருக்க சரியாக பிருத்வி அந்த இடத்தை கடந்தான்.. அதே நேரம் மான்விழியும் ஜன்னல் பக்கம் வந்து அவனைத் தான் பார்த்திருந்தாள்..
அவனும் யாரோ தன்னைப் பார்ப்பது போல் தோன்ற சட்டென அந்த சாளரத்தின் பக்கம் திரும்பி பார்த்தவன் கண்கள் மான்விழியின் கண்களோடு கலந்தன.. முதல் பார்வையிலேயே அவளிடம் மொத்தமாய் விழுந்திருந்தான் பையன் அவன்..
அவனுக்கு இந்த நிலை என்றால் அவளோ ஏதோ இதற்கு முன் பல ஜென்மங்களாய் தவமிருந்து அவனுக்காகவே பிறந்து காத்திருந்தது போல அவனிலேயே கட்டுண்டு கிடந்தாள் சில நிமிடங்கள்..
அந்த சாளரத்தின் வழி அவளின் பார்வை களத்தில் இருந்து அவன் மறையும் வரை அவனை பின் தொடர்ந்தது அவள் பார்வை..
முழு அலங்காரத்தோடு நின்றவளை பார்த்த உடனேயே அவள்தான் இந்தருக்கு பார்த்திருக்கும் பெண் என்று புரிந்து போனது ப்ருத்விக்கு..
இங்கே வில்விழியோ அவர்கள் சென்றதும் மான்விழியிடம் “மானு.. இந்த மாப்பிள்ளை உனக்கு வேண்டாம்.. உனக்கு தான் ஆர்ச்சர் பிடிக்காது இல்ல.. நானே அப்பா கிட்ட வேண்டாம்னு சொல்லிடறேன்..” என்றாள்..
மான்விழியோ “இல்ல இல்ல.. எனக்கு அந்த மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு.. அவர் என்னவா இருந்தாலும் பரவால்ல.. நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்..”
அவள் பட்டென முடிவை மாற்றி சொல்லிவிட மற்றவளுக்கோ உள்ளுக்குள் தவிப்பாய் போனது..
இந்தருடன் வந்தவன் மாப்பிள்ளை என்றால் சரிதான்.. ஆனால் இந்தர்தான் மாப்பிள்ளை என்றால்..
அந்த நினைவே அவளுக்குள் ஏதோ ஒரு வலியை கொடுத்தது..
“அவன் யாரை கட்டிக்கிட்டா எனக்கு என்ன? எனக்கு ஏன் இவ்ளோ டிஸ்டர்ப் ஆகுது?” குழம்பி தவித்து போனாள் அவள்.. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது தங்கள் வீட்டு தோட்டத்தில் போய் தனியாய் நின்று கொண்டாள் அவள்..
இதற்குள் வரவேற்பறையில் பரிமேலழகர் அவர்கள் மூவரையும் அமர வைக்க சகுந்தலா “அவருக்கு ஆஃபீஸ்ல ஒரு மீட்டிங் இருந்தது.. ஆனா இன்னைக்கு ரொம்ப நல்ல நாள்.. மிஸ் பண்ண வேண்டாம்னு எங்களை மட்டும் வந்து பொண்ணு பார்க்க சொல்லிட்டாரு.. அவரு ஏற்கனவே பொண்ணை பாத்துட்டேன்னு சொன்னாரு..” என்க
“ஆமா.. அது.. நான் அன்னைக்கு எதேச்சையா மார்க்கண்டேயனை கிளப்ல மீட் பண்ணுனேன்.. வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.. என் ரெண்டாவது பொண்ணு ஆர்ச்சரி கிளாஸ் போயிட்டு இருக்கா.. அவ வீட்ல ப்ராக்டிஸ் பண்றதுக்கு ஆர்ச்சரி குட்ஸ் வாங்கணும்னு சொன்னா.. அவன்தான் ஆர்ச்சரி குட்ஸ் மேனுஃபேக்சர் பண்ற கம்பெனி வச்சிருக்கான் இல்லையா? அதான் என்ன வாங்கலாம் அந்த ப்ராக்டிஸ்க்கு எங்க அவளோட டார்கெட் எல்லாம் செட் பண்ணலாம்னு அவன் கிட்ட ஐடியா கேட்டேன்.. அப்பதான் மான்விழியை பார்த்தான்.. உடனேவே தான் மகனுக்கு மான்விழியை கல்யாணம் பண்ணி குடுன்னு அவன் கேட்டதும் எனக்கு ஒன்னும் புரியல.. என்ன சொல்றதுன்னு தெரியல.. எங்க வீட்ல என் பொண்ணுங்களோட விருப்பம் தான் என் விருப்பம்.. நான் எதையும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்.. மான்விழிக்கு பிடிச்சிருந்தா நிச்சயமா நடத்தலாம்ன்னு சொன்னேன்..” என்றார் பரிமேலழகர்..
“நீங்க சொல்றதும் சரிதான்.. பொண்ணும் பையனும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கட்டும்.. பிடிச்சி இருந்தா மேற்கொண்டு பேசலாம்.. இந்தரை பொறுத்த வரைக்கும் அவனோட ஆர்ச்சரி அகடமி ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு.. அவனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது.. நீங்க அவனை நம்பி உங்க பொண்ணை கொடுக்கலாம்..”
சகுந்தலா சொல்ல “மார்க்கண்டேயனோட பசங்க.. நிச்சயமா அவங்களை டிஸ்ஸிப்ளினோட தான் வளர்த்து இருப்பான்.. ஏன்னா அவன் அவ்வளவு டிஸ்ஸிப்ளின்ட்.. நாங்க ஸ்கூல்ல இருந்து ஃபிரெண்ட்ஸ்.. எந்த நேரத்திலும் எந்த ரூல்ஸையும் பிரேக் பண்ண மாட்டான்.. எல்லாத்தையும் பர்ஃபெக்ட்டா பண்ணுவான்.. இந்த இடத்தில இப்படித்தான் இருக்கணும்னா அப்படித்தான் இருக்கணும் அவனுக்கு. அதனால அவன் பசங்களும் இப்படித்தான் இருப்பாங்கன்னு எனக்கு ஏற்கனவே ஒரு யூகம் இருந்தது.. இப்ப நேர்ல பார்த்ததும் அது கன்ஃபார்ம் ஆயிடுச்சு..” இந்தரையும் ப்ருத்வியையும் பார்த்து சிரித்தார் பரிமேலழகர்..
இந்தருக்கும் பிரத்விக்கும் அவரைப் பார்த்த உடனேயே பிடித்துப் போனது.. அமைதியாக இயல்பாய் இதமாய் பேசும் மனிதர்.. எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் எல்லோருக்கும் மரியாதை கொடுத்து இன்முகமாய் பேசுபவரை யாருக்குத்தான் பிடிக்காது..
“சரிண்ணா.. அப்ப பொண்ணை வர சொல்லிருங்க…”
சகுந்தலா சொல்ல வாசுகி உள்ளே சென்று மான்விழியை கையில் காபி கோப்பைகள் அடங்கிய தட்டை கொடுத்து அழைத்து வந்தாள்..
மான்விழியும் ப்ருத்வி தான் தன்னை பார்க்க வந்த மாப்பிள்ளை என்று நினைத்து முதலில் அவனிடம் காபி தட்டை நீட்டினாள்.. அவனும் கோப்பையை எடுத்தபடியே முழுவதுமாய் மான்விழியை விழிகளால் விழுங்கிக் கொண்டிருந்தான்..
அவன் அருகாமையில் இருந்து நகர தோன்றாது மெல்ல அவனோடு பேசிய விழிகளை மனமே இல்லாது அகற்றிய படி அடுத்ததாய் இந்தருக்கு காபியை நீட்ட சரியாக சகுந்தலா “அவன் தான்மா மாப்பிள்ளை.. நல்லா பாத்துக்க..” என்க
அதை கேட்டு அதிர்ந்து போனவள் அந்த அதிர்வில் தன் கையில் இருந்த தட்டை தவற விட அதிலிருந்து காபி கோப்பைகள் கீழே விழுந்து சில்லுசில்லாய் நொறுங்கின..
இந்தரின் உடையிலும் கொஞ்சம் காபி தெறித்து விட அவளோ பதறிப் போய் “ஐயோ சாரி.. ரொம்ப சாரி.. தெரியாம..” என்று பதைபதைப்போடு சிதறிய கோப்பை சில்லுகளை தட்டில் சேகரிக்க ஆரம்பித்திருக்க சட்டென தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து வந்த பிருத்வியும் அந்த இடத்தில் இருந்த உடைந்த துண்டுகளை எடுக்க அவளுக்கு உதவினான்..
அவன் கீழே அவள் பக்கத்தில் அமர்ந்து அவற்றை எடுக்க தொடங்கிய நேரம் அவன் விழிகளை பார்த்தவளின் கண்கள் ஏகத்துக்கும் கலங்கியிருந்தது..
அதைப் பார்த்தவன் பதறிப் போக அவளோ சட்டென சிதறிய துண்டுகள் அடங்கிய அந்த தட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாய் விலகி உள்ளே சென்று இருந்தாள்..
ப்ருத்வி அவளையே பார்த்த படி தன் இடத்தில் சென்று அமர இந்தர் இதையே காரணமாக வைத்து “அங்கிள் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்தது என்னவோ போல இருக்கு.. அதனால இது வேண்டாம்.. நாங்க கிளம்பறோம்” என்று சொல்ல
முன்னே சென்று கொண்டிருந்த மான்விழிக்கோ இந்தர் தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னதில் ஒரு நிம்மதி பரவியது நெஞ்சில்..
இந்தர் தன் அன்னையின் பக்கம் கண்ணை காட்டி தன் இருக்கையில் இருந்து எழ முயல அவன் கையை அழுத்தமாய் பிடித்து இருக்கையிலேயே இருத்தினான் ப்ருத்வி..
அவனைக் கேள்வியாய் பார்த்த இந்தர் “என்னடா..?” என்க
“டேய் மான்விழியை எனக்கு பிடிச்சிருக்கு.. நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்..”
அவன் முடிவாய் சொல்லிவிட அவன் சொன்னது அறைக்குள் சென்ற மான்விழியின் செவிகளில் விழ அதுவரை அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராய் கன்னம் தாண்டி உருண்டோடியது..
உள்ளுக்குள் இருந்த ஆனந்த கொந்தளிப்பை தாங்க முடியாது இன்பமாய் படபடத்துப் போனாள் பாவை அவள்..
வில்விழியோ இந்தரை பார்த்ததிலிருந்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில் இதயம் அதிவேகமாய் துடித்திருக்க அங்கேயே இருந்தால் எங்கே தனக்கு படபடப்பில் மூச்சு நின்று விடுமோ என்று பயத்தில் தோட்டத்திற்கு சென்று கிணற்றருகே கலக்கத்தோடு நின்று கொண்டிருந்தாள்.
அவள் மான்விழியோடு இல்லாததற்கு இன்னொரு காரணமும் இருந்தது.. இந்தரின் கண்ணை பார்த்தால் அவளோ தன்னையே மறந்து போவாள்.. மான்விழி வேறு மாப்பிள்ளை பிடித்திருக்கிறது என்று சொல்லி இருக்க தான் ஏடாகூடமாக ஏதாவது செய்துவிடப் போகிறோம் என்ற பயத்தில் தோட்டத்திலேயே அமர்ந்திருந்தாள் அவள்..
பிருத்வி சொன்னதைக் கேட்டு இந்தருக்கோ மகிழ்ச்சி தாளவில்லை.. அவன் புறம் திரும்பியவன் சந்தோஷமாய் அவன் கையைப் பிடித்து “சூப்பர் டா.. சான்சே இல்ல..” என்றவன் தன் அன்னை பக்கம் திரும்பி “அம்மா கல்யாணத்தை பேசி முடிச்சிடுமா.. அவன் தான் பிடிச்சிருக்குன்னு சொல்றான்ல..?” என்க
பரிமேலழகருக்கோ ரொம்பவுமே குழப்பமாக இருந்தது..
“தங்கச்சி மா.. பெரிய புள்ள இருக்கும்போது சின்ன பிள்ளைக்கு சம்பந்தம் பேசறது அவ்வளவு சரியா வருமா?”
அவர் தயங்கி தயங்கி கேட்க சகுந்தலா பதில் சொல்வதற்கு முன்னால் இந்தர் “அங்கிள்.. நீங்க கவலைப்படாதீங்க.. கூடிய சீக்கிரம் என் கல்யாணமும் நிச்சயமாகிடும்.. எனக்கும் பிருத்விக்கும் ஒரே நேரத்தில தான் கல்யாணம் ஆகும்.. அதனால நீங்க தயங்காம சம்மதம் சொல்லுங்க.. என் தம்பிக்கு புடிச்ச வாழ்க்கை அவனுக்கு கிடைக்கணும்..”
அவன் பொறுப்பாய் பேசியதை கேட்டவருக்கும் மனம் நிறைவாய் இருக்க “சரி இருங்க தம்பி.. மார்க்கண்டேயன் கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வந்துடலாம்..” என்றவர் உடனேயே மார்க்கண்டேயருக்கு அழைக்க அவரோ அந்த அழைப்பை ஏற்கவில்லை..
“கால் கட்டாகுதே..” பரிமேலழகர் சொல்ல ப்ருத்வி “அவர் மீட்டிங்கில் இருப்பார் அங்கிள்.. இன்னொரு 15 மினிட்ஸ்ல மீட்டிங் முடிஞ்சிடும்.. அப்புறம் பண்ணி பார்க்கலாம்..” என்றான்..
அதற்குள் வாசுகி “ஏங்க.. அவரோட ட்ரெஸ்ல எல்லாம் காபி கொட்டிருச்சு.. அவரை வேணா பின்பக்கம் போய் கழுவிட்டு வர சொல்லுங்க..” என்றார்..
பரிமேலழகரும் இந்தரிடம்” நீங்க போய் வாஷ் பண்ணிட்டு வாங்க தம்பி.. அவர் வரத்துக்குள்ள நீ இன்னொரு காப்பியும் பலகாரமும் எடுத்துட்டு வா வாசு..” என்றார்..
“இதோ போறேங்க..” என்று அவர் சமையலறைக்குள் சென்று விட இந்தரும் மெல்ல தோட்டத்து பக்கம் நடந்தான்..
அப்போதுதான் ஏதோ தோன்ற சமையலறையில் இருந்து தோட்டத்துக்குள் அங்கிருந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த வாசுகி “அம்மாடி மலரு.. அந்த தம்பி மேல காபி கொட்டிடுச்சு.. வாஷ் பண்ண வந்திருக்காரு.. கொஞ்சம் தண்ணி எடுத்துக் குடு அவருக்கு..” என்றார்..
அங்கே நின்றிருந்த மலர்விழியும் சட்டென திரும்பி பார்க்க தோட்டத்து படியில் கால் வைத்து இறங்கிய இந்தரோ அவளை பார்த்ததும் இன்பமாய் அதிர்ந்து போனான்..
“ஹே மலர்விழி.. நீ எங்க இங்க?” அவனுக்கோ அவளைப் பார்த்த வியப்பு அடங்கவே இல்லை.. இனிமையான படபடப்பில் இதயத்துடிப்பின் எண்ணிக்கை எட்டாத உயரத்தை எட்டிக் கொண்டிருந்தது..
“மானு என் அக்கா தான்.. என்ன.. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சா?” அவள் குரலில் கோபம் கொப்பளிக்க அவனுக்கோ சற்று அவளோடு விளையாட தோன்றியது..
“ம்ம்.. கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சு.. அதுக்குத்தானே வந்திருக்கோம்..” என்றான் அவன் சீண்டலாய்..
“அப்படியே மொத்தமா முழுங்கற போல அன்னிக்கு என்னை வெறிக்க வெறிக்க பாத்துட்டு இன்னைக்கு அவளோட கல்யாணமா? ஹைய்யோ.. இவன் சரியான பிளேபாயா இருப்பான் போலையே.. அப்பா கிட்ட சொல்லி எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடனும்.. இன்னும் எத்தனை பொண்ணுங்கள இந்த மாதிரி பார்த்து வச்சிருக்கான்னு தெரியாது..”
உள்ளுக்குள் முணுமுணுத்து கொண்டே இருந்தவள் சட்டென அங்கிருந்த வாளியில் இருந்து தண்ணீர் எடுத்து அங்கிருந்த துவைக்கும் கல்லின் மேல் அந்த தண்ணீர் பாத்திரத்தை ணங்கென்று வைக்க அவனோ “அம்மாடி பாத்ரம் பத்திரம்..” என்றான் இதழிற்குள் சிரிப்பை மறைத்தபடி..
அவளோ அவனை தீவிரமாய் முறைத்து விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்..
அங்கு இருந்த அந்த ஐந்து நிமிடங்களும் அவளைத்தான் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.. கோபத்தில் அவள் மூக்கு விடைத்து சிவந்திருக்க வாயும் தொடர்ந்து அவனை திட்டி முணுமுணுவென அர்ச்சித்துக் கொண்டே இருந்தது..
அவள் கோபத்தை முழுவதுமாக ரசித்தவன் தொண்டையை செறுமியபடி “ம்க்கும்.. ரொம்ப கோவமா இருக்காப்ல இருக்கு..” அவன் புருவம் சுருக்கி கேட்க அவளோ “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் கோபப்படுற அளவுக்கு உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு..? நீங்க எங்க அக்காவை கட்டிக்க போற மாப்பிள்ளை.. என்னை பொறுத்த வரைக்கும் அவ்வளவுதான்..” என்று வார்த்தையாலேயே வெட்டினாள்..
“ஓ ஆமாம்ல..? அப்படின்னா நீ என்னை மாமான்னு தானே கூப்பிடணும்.. இது கூட நல்லா இருக்கே..” அவன் சொன்னதைக் கேட்டு முறைத்தவள் “பொறுக்கின்னு வேணா கூப்பிடறேன்” தனக்குள் சொல்லிக்கொண்டவள் வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டாள் அவன் புறமிருந்து..
உடையை நன்கு கழுவிக் கொண்டவன் கை ஈரமாக இருக்க சட்டென அவள் புறம் நகர்ந்து வந்தான்.. ஒரு அடி பின்னால் தள்ளி நின்றாள் அவள்.. அவனோ எட்டி அவள் சேலையின் தலைப்பை பிடித்து இழுத்து அதில் தன் கையை துடைத்துக் கொள்ள அதிர்ந்தவள் விழிகள் வெளியே வந்து விடும்படி கண்களை பெரிதாய் விரித்து முறைத்தாள் அவனை..
சட்டென அவன் கையில் இருந்து தன் புடவை தலைப்பை உருவி “என்ன பண்றீங்க..?” என்று முறைத்தாள்..
“கை ஈரமா இருந்துச்சு.. இங்க சுத்தி பார்த்தேன்.. எதுவும் துணியை காணோம்.. அதான்..”
“அதுக்காக..” அவனை எரித்து விடுவது போல் முறைத்தவள் “நீங்க பண்றது எதுவுமே சரி இல்லை.. நான் முதல்ல அப்பாகிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்றேன்..” என்றாள்..
“நீ என்ன பண்ணாலும் இந்த கல்யாணம் நடக்கும்.. இந்த கல்யாணம் மட்டும் இல்லை இன்னொரு கல்யாணமும் நடக்கும்.. உன்னால ஒண்ணுமே பண்ண முடியாது..” கண்ணடித்து சொல்லிவிட்டு உள்ளே வந்தவனின் பின்னாலேயே தொடர்ந்து அவளும் உள்ளே வந்தாள்..
இப்போது பரிமேலழகரை பார்த்தவன் உரிமையாய் “மாமா.. மான்விழி கல்யாணத்தோட எனக்கும் மலர்விழிக்கும் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிடுங்க.. எனக்கு மலரை ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்..”
அவன் சொன்னதை கேட்ட மலருக்குள்ளோ பூகம்பமாய் ஆனந்த அதிர்வு..
பரிமேலழகர் “இப்படி அண்ணன் தங்கையையும் தம்பி அக்காவையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா பின்னாடி குழப்பம் வராதா மாப்பிள்ளை..”
அவர் மாப்பிள்ளை என்று அழைத்ததில் சிரித்தவன் “என்ன குழப்பம் வந்தாலும் பாத்துக்கலாம் மாமா.. அதான் மாப்பிள்ளைன்னு கூப்பிட்டீங்க இல்ல..? இனிமே எந்த தடையும் இல்லை.. ரெண்டு கல்யாணமும் நடக்கட்டும்..”
அவன் சொல்லிக் கொண்டே இருக்கும் போதே முன்னே வந்து நின்ற விழி “நீங்க சொல்லிட்டா போதுமா? என் கல்யாணம் இது.. அதுக்கு என் விருப்பம் முக்கியம் இல்லையா? அப்பா அதெல்லாம் இவர் சொல்றாருங்குறதுக்காக என்னால எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது..” என்றாள் கோவமாக..
“சரிதான்.. உங்க பொண்ணு விருப்பமும் ரொம்ப முக்கியம்.. நீங்க உங்க ரெண்டு பொண்ணுகிட்டயுமே அவங்க விருப்பத்தை கேட்டுக்கோங்க.. ஆனா எனக்கு தெரிஞ்சு வேண்டாம்ன்னு ரெண்டு பேருமே சொல்ல மாட்டாங்க..” வில்விழியை குறும்பாய் பார்த்தபடியே அவன் சொல்ல..
“ஹா..ங்.. ஆனாலும் ஓவர் கான்ஃபிடன்ஸ் ரொம்ப ஓவரா தான் இருக்கு சாருக்கு.. அப்பா.. நான் அவரோட கொஞ்சம் பேசணும் பா.. அப்படி எல்லாம் டக்குனு முடிவு சொல்ல முடியாது..”
அவள் சொன்னதும் “அதுக்கு என்ன? தாராளமா பேசலாமே” என்றான் இந்தர் புன்னகையினூடே.. கரும்பு தின்ன அவனுக்கு கூலி வேண்டுமா என்ன..?
பரிமேலழகர் “சரி மா.. அப்ப அவரை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ..” என்றார்..
அவள் முன்னே செல்ல அவளின் பின்னழகில் அத்து மீறி பயணித்த அவன் கண்கள் கட்டுப்பாடு இல்லாமல் அவளின் அழகியல்களை ரசித்திருக்க ஒரு பெருமூச்சோடு அவளை பின்தொடர்ந்து இருந்தான் இந்தர்..
“கன்னுக்குட்டி உன் பேர் என்னடி கண்ணூ.. ரெண்டு வயசு ஆயிடுச்சு.. உன் பேரை கூட தெரிஞ்சுக்க விடாம பண்ணிட்டா பாரு உன் ஆத்தாக்காரி..” என்று பல்லை கடித்துக் கொண்டு விழியை முறைத்தார் வாசுகி..
“குட்டி பேர் என்னம்மா?” என்று மறுபடி கேட்க
“ச்சத்தீ..” என்று மழலை பேசியவள் அவர் கைநீட்டி அழைக்க அவரிடம் வருவதற்கு தயங்கினாள்..
“பாட்டிடா.. சக்தியோட பாட்டி..” என்று கண்களில் நீர் தழும்ப மறுபடியும் அழைக்க
“பாத்தீய்..” என்று கூவி அழைத்தபடி இயல்பாக அவரிடமும் தாவி இருந்தாள் சக்தி..
“அம்மா.. அவளை ஆஸ்திரேலியாவில இருக்கும் போது அகாடமிக்கு கூட்டிட்டு போய் தான் வச்சுட்டு இருந்தேன்.. அங்க ஸ்டூடண்ட்ஸ் கோச்சுன்னு வித்தியாசம் இல்லாம எல்லார்கிட்டயும் இப்படி தான் வாயடிச்சிட்டு இருப்பா.. இவ பேசறது புரியுதோ இல்லையோ அங்க எல்லாரும் இவளோட கதை அளநாதுக்கிட்டு இருப்பாங்க.. ஒரு ஸ்டேஜ்ல இவளுக்கு கால் முளைச்சு அகாடமியை தாண்டி பக்கத்துல இருக்குற ரோடுல எல்லா இடத்துக்கும் ஓட ஆரம்பிச்சிட்டா.. அப்புறம் தான் தன்வி முழுக்க முழுக்க இவளை பார்த்துக்க ஆரம்பிச்சா..”
“ஆமா.. அந்தத் தன்வி தான் உனக்கு கிடைச்சாளா இவளை பார்த்துக்கறதுக்கு.. நல்லா பாத்துக்கிட்டா அவ.. இன்னிக்கு நான் மட்டும் டைமுக்கு வரலைன்னா சக்தி வண்டியில அடிபட்டு இருப்பா.. ஷீ இஸ் ஸோ இர்ரெஸ்பான்சிபிள்..” இந்தர் கடுகடுவென பேச
“பாவம் அவ.. நல்லாத்தான் பாத்துக்குவா.. உங்க பொண்ணரசி தான் எல்லா இடத்திலயும் இஷ்டத்துக்கு ஓடுவா.. இவளுக்கு கால் முளைச்சதிலிருந்து இவளை பிடிக்க மூணு ஆள் வேண்டியிருக்கு.. எனக்கு காம்படிஷனுக்கெல்லாம் போகும்போது இவளை பார்த்துக்கறது பெரும் பிரச்சனையா இருக்கும்..”
விழி அலுத்துக்கொள்ள வாசுகியோ “இதெல்லாம் ஓடிப்போய் புள்ள பெத்துக்கறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்.. புள்ளனா அப்படித்தான் இருக்கும்.. நீ ஓடாத ஓட்டமா.. 15 வயசு ஆன அப்புறம் கூட அப்பப்ப ஃபிரண்ட்ஸோட போய் ஆட்டம் போட்டவ தானே நீ.. உன் புள்ள எப்படி இருப்பா? உன்னை மாதிரி தானே இருப்பா…”
அதை பார்த்த விழி “ஐயோ போதும்மா.. ரொம்ப டேமேஜ் பண்ணாத.. இதுக்கு மேல தாங்காது..” என்றாள்
அப்போது உள்ளே இருந்து சத்தம் கேட்டு வந்த பரிமேலழகர் “வாசு.. யாருடி வந்திருக்கிறது..?”
கேட்டுக் கொண்டே வந்தவர் வில்விழியை பார்த்ததும் அப்படியே கண் கலங்கி உறைந்து நின்று விட்டார்..
“அம்மாடி.. மலரூஊஊஊ.. எங்கடா போயிருந்த?” கேட்டவர் வேகமாய் வந்து தன் பெண்ணை அணைத்துக் கொண்டார்..
அவளுக்கும் கண்கள் நிறைந்து போயின.. பின்னே அவள் அப்பாவின் செல்ல மகள் ஆயிற்றே.. முன்பெல்லாம் விழி தன் தந்தையோடு இப்படி அதிக ஒட்டுதலாய் நடந்து கொள்ளும் போது இந்தருக்கு பொறாமையாக இருக்கும்.. தனிமையில் அவளோடு இதை பற்றி சண்டை பிடிப்பான்..
“என் கூட இருக்கும் போது நீ இவ்வளவு ஹேப்பியா இருக்கமாட்டேங்குற.. அது என்ன? உங்க அப்பா முகத்தை பார்த்த உடனே அவ்ளோ எக்சைட்மென்ட் உன் கண்ணுல.. அவரு என்ன சொன்னாலும் கேட்டுக்குறே.. அவர் இருந்தா சுத்தி யாரு இருக்காங்கன்னு கூட நீ பாக்குறது இல்ல.. ரெண்டு பேரும் உங்க உலகத்துக்கே போயிடறீங்க.. பக்கத்துல ஒருத்தன் இருக்கறது கூட தெரியல.. அதான் மாப்பிள்ளை நான் வந்துட்டேன் இல்ல.. இதுக்கு அப்புறம் உங்க அப்பா உங்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்க வேண்டியதுதானே? இங்க பாரு.. நீயும் உங்க அப்பாவும் தனியா இருக்கும்போது உங்க அப்பா உன்னை எவ்வளவு வேணா கொஞ்சிக்கட்டும்.. ஆனா நான் இருக்கும்போது அவரை கொஞ்சம் தள்ளி இருக்க சொல்லு.. இல்லன்னா நான் சொல்ல வேண்டியதா இருக்கும்.. அது அவ்வளவு நல்லா இருக்காது.. சொல்லிட்டேன்” பொறாமையில் வெந்து நொந்து ரொம்பவும் தான் கோபப்படுவான் அவன்..
அவன் பேசியதெல்லாம் எவ்வளவு அபத்தமான விஷயம் என்று இப்போது புரிந்தது இந்தருக்கு.. நியாயமே இல்லாத கோபம் அது.. இப்போது சக்தியை கண்டதும் விழிக்கும் அவள் தந்தைக்கும் எப்படிப்பட்ட பிணைப்பு இருந்திருக்கும் என்று உள்ளுக்குள் உணர்ந்திருந்தான் அவன்..
சக்திக்கு இரண்டு வயது கூட முடியவில்லை.. இப்போதே அவளுக்கு திருமணம் ஆனால் தன் நிலை என்ன என்று கவலைப்பட ஆரம்பித்து விட்டான் தந்தை அவன்..
“அத்தை.. நீங்க உங்க பேத்தியை கூப்பிட்டுக்கிட்டு உள்ள வாங்க.. இந்த பாசமழை இப்போதைக்கு முடியாது.. மூணு வருஷமா விட்டதெல்லாம் இன்னைக்கு ஒரு நாள்ல முடிச்சுடுவாங்க அப்பாவும் பொண்ணும்..”
இந்தர் சொல்ல தன் தந்தையின் அணைப்பில் இருந்து கொண்டே “போடா பொறாமை புடிச்சவனே..” என்றாள் விழி அவரை இன்னும் இறுக்கி அணைத்தபடி..
பரிமேலழகர் அவள் கன்னத்தை தாங்கி “என் தேவதை மாப்பிள்ளை அவ.. அப்படியே என்னை மாதிரி அவ.. எதுக்கும் பயப்படமாட்டா.. எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா பளிச்சுன்னு பேசுவா.. மான்விழி அப்படியே அவங்க அம்மா மாதிரி.. சரியான பயந்தாங்கொள்ளி..” அவர் சொன்னதும் வாசுகி அவரை முறைக்க
அவரோ “போடி போ.. உன் முறைப்பெல்லாம் என்கிட்ட தான்.. அந்த கோடி வீட்டு கனகா கொஞ்சம் குரலை ஒசத்தி பேசினா அவ கால்ல விழறவ தானே நீ.. முறைக்கிறதை நிறுத்திட்டு பேத்தியை ஆரத்தி எடுத்து உள்ள கூட்டிட்டு போ..”
அவர் சொல்லவும் வாசுகி சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தவர் வரும்போது மான்விழிக்கும் விஷயத்தை சொல்லி அழைத்து வந்தார்..
வெளியே வந்து அவளை பார்த்த மான்விழியோ “மலரு வந்துட்டியாடி? இது கனவில்லல்ல..?” என்று கேட்க
“ஹேய் மானு.. நெஜமா தான் வந்திருக்கேன்.. இரு.. உனக்கு உள்ள வந்து வச்சிக்கிறேன் கச்சேரி.. என்னடி வேலை பண்ணி வெச்சிருக்க நீ?” என்று அவள் திட்ட ஆரம்பிக்க அப்படியே அமைதியாகினாள் மான்விழி..
ஆரத்தி எடுத்து மூவரும் உள்ளே வந்ததும் இந்தர் பக்கம் திரும்பிய விழி “இந்தர்.. நீங்க அப்பாவோட பேசிகிட்டு இருங்க.. நான் கொஞ்சம் மானுவோட பேசிட்டு வரேன்..” என்க அவனோ ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தான்..
ஏனோ இப்போது அந்த வீட்டுக்குள் வரும்போது முதன் முதலில் பெண் பார்ப்பதற்காக அந்த வீட்டுக்குள் அவன் வந்த நிகழ்வுக்கு தாவி இருந்தது அவன் மனம்..
விழி இந்திரதனுஷ் அகாடமியில் போட்டியில் கலந்து கொண்டு முதல் முறையாய் இந்தரின் பார்வை வீச்சால் தோற்றுப் போய் அங்கிருந்து சென்ற பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்குள் மார்க்கண்டேயர் இந்தருக்கு ஒரு பெண் பார்த்திருப்பதாக சொல்லவும் அதிர்ந்து போனான் இந்தர்..
அவன் மனதை தான் வில்விழி மொத்தமாய் பறித்து கொண்டாளே.. இனி வேறு ஒரு பெண் அவன் வாழ்வில் நிச்சயம் வர முடியாது.. அவளை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் அவள் தான் தன் வாழ்க்கை துணை என்று உறுதியாக முடிவே எடுத்திருந்தான்..
இந்நிலையில் மார்க்கண்டேயன் இந்தருக்கு பார்த்திருப்பது தன் நண்பனுடைய பெண்தான் என்றும் அவள் பெயர் மான்விழி என்றும் சொன்னவர் பெண் பார்க்க அன்று நல்ல நாளாக இருப்பதால் அன்றே செல்ல வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்..
இந்தரோ மான்விழி என்ற பெயர் மலர்விழி என்று இருந்திருக்கக்கூடாதா என்று ஏக்கம் கொண்டான்..
அவள் யார்.. எங்கிருக்கிறாள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தவன் தந்தையின் திடீர் முடிவில் கதி கலங்கி போனான்.. அவன் தான் அவரை எதிர்த்து பேசாதவன் ஆயிற்றே.. என்ன செய்வது என்று தெரியாமல் வழக்கம்போல பிருத்வியிடம் அடைக்கலம் புகுந்தான்..
“டேய் பிருத்வி.. எனக்கு இந்த பொண்ணு பாக்க போறதுல இஷ்டமே இல்லடா.. ஏதாவது பண்ணி இதை நிறுத்தணும்டா..”
“ஏன்டா.. எப்படியும் யாரையாவது கல்யாணம் பண்ணிக்க தானே போற.. ஒரு வேளை அவர் பார்க்கிற பொண்ணை உனக்கு பிடிச்சிருந்தா.. போய் பொண்ணு பாத்துட்டு வா.. பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ.. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிரு..”
அவன் ரொம்பவும் சாதாரணமாக சொல்லி விட்டான்.. இந்தருக்கு தான் அது முடியாத காரியம் ஆயிற்றே.. தந்தை சொல் அவனுக்கு உயிரையும் மிஞ்சிய மந்திரம் ஆயிற்றே..
“இல்லடா.. அந்த பொண்ணை எனக்கு பிடிக்காது டா..”
“அதெப்படிடா பார்க்காமயே சொல்றே..” என்று ஒரு நொடி நிறுத்தியவன் “ஹேய்.. வேற யாரையாவது லவ் பண்றியா டா?” நம்ப முடியாமல் விழி விரித்து கேட்டான் அவன்..
“ம்ம்.. என் மனசுல வேற ஒருத்தி இருக்கா..”
அவன் சொன்னதைக் கேட்டு அவனை ஆச்சரியமாய் பார்த்து இருந்தான் பிருத்வி.. தந்தையிடம் மட்டுமே பம்முவானே தவிர மற்ற இடங்களில் அதிகம் சிரித்து கூட பேசாமல் விறைப்பாய் திரிபவனாயிற்றே.. அவனுக்கு காதல் என்றால்..
“என்னடா சொல்ற? நிஜமாவே லவ் பண்றியா?”
“ஆமாம்டா.. ஒன் சைடு லவ் தான்.. அந்த பொண்ணு கிட்ட இன்னும் சொல்ல கூட இல்லை.. இன்னும் சொல்லப்போனா அந்த பொண்ணு யாருன்னே தெரியாது.. பேர் மட்டும் தான் டா தெரியும்.. அவ பேரு மலர்விழி.. எனக்கு மலர்விழி வேணும்டா.. ஆனா அப்பா மான்விழியை கொண்டு வந்து என் தலையில் கட்டுறேங்கிறார்..”
“எங்கடா பார்த்த அவளை.. மொத்தமா உன்னை இப்படி சாய்ச்சு போட்டு இருக்கா..”
“அவ விஷ்வஜித் அகடமியோட ஸ்டூடண்ட் டா..”
அதிர்ந்து போனான் ப்ருத்வி..
“டேய்.. அந்த விஷ்வாக்கும் உனக்கும் ஆகவே ஆகாதேடா.. அவன் அகாடமியில போய் நீ எப்படிடா பொண்ணை புடிச்ச..”
“அடிச்சு மண்டைய பொளந்துடுவேன்.. உனக்கு அண்ணி ஆகப் போறவ.. மரியாதையா பேசுடா.. பொண்ணு புடிச்ச.. மண்ணு புடிச்சன்னு ஏதோ கோழி பிடிக்கிற மாதிரி சொல்றே.. அவனோட அகாடமிக்கெல்லாம் நான் போகல.. அந்த டிஸ்ட்ரிக்ட் லெவல் காம்பெடிஷன் நடந்ததுல்ல? அந்த இவன்ட்டுக்கு வந்து இருந்தா..”
“ஓ.. ஓகே ஓகே..”
“இப்ப எனக்கு இந்த பொண்ணு பாக்குறதை நிறுத்தணும்.. என்ன பண்ணலாம்னு ஏதாவது ஐடியா சொல்லுடா..”
“எதுக்குடா நிறுத்தணும்? போய் பாத்துட்டு புடிக்கலைன்னு சொல்லுடா..”
“டேய் அப்பா கிட்ட முடியாதுன்னு சொல்ற கட்ஸ் இருந்தா நான் ஏன்டா இப்படி இருக்கேன்..?”
“ம்ம்.. உன்னை திருத்தமுடியாது.. இது உன் வாழ்க்கை டா.. இதுக்கு கூட வாயை திறந்து பேச மாட்டியா? ஆனா கவலைப்படாதே.. இன்னிக்கு அப்பா வர மாட்டார்.. அவருக்கு முக்கியமான கிளையன்ட் மீட்டிங் ஒன்னு இருக்கு.. அதுக்குதான் பெங்களூர் கிளம்பிட்டு இருக்கார்.. நாளைக்கு காலையில தான் வருவார்.. அதனால இன்னைக்கு பொண்ணு பார்க்கறதுக்கு அவர் நிச்சயமா வரமாட்டார்.. அநேகமா நம்ம அம்மா கூட தான் போவோம்..”
சிறிது யோசித்து “ஏய் வெயிட் வெயிட்.. பிடிக்கலைன்னு எதுக்கு சொல்லணும்..? என்னோட நீயும் வர தானே போற? நீயும் பொண்ணை பாரு.. உனக்கு புடிச்சிருந்ததுன்னா நீ கட்டிக்க.. இந்த பொண்ணை என் தம்பிக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. அதனால என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லி நான் கழண்டுக்கிறேன்..”
இந்தரை முறைத்தான் பிருத்வி.. “டேய் அடி வாங்குவ நீ.. நீ எஸ்கேப் ஆகணும்ங்கிறதுக்காக என்னை மாட்டி விட பாக்குற பாத்தியா? இதான வேணாங்கறது.. இங்க பாரு.. நான் உன்னோட வரேன்.. உனக்கு பொண்ணு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லு.. என்னை இதுல கோர்த்து விடாதே..”
“ம்ம்.. ஒரு நல்ல ஆஃபர் கொடுக்கலாமேன்னு நினைச்சேன்.. வேணாம்னா போ.. இவ்வளவு தூரம் பொண்ணை பார்க்க போறோமே அனாவசியமா வேஸ்ட் பண்ண வேண்டாம்.. ஒரு சின்ன சமூக சேவை செய்யலாம்னு பார்த்தா ரொம்ப தான் சீன் போடற… போடா போ..”
“யப்பா நீ உன் கல்யாணத்தை மட்டும் பாருப்பா… எனக்கு கல்யாணம் பண்றேன்னு இந்த சமூக சேவை எல்லாம் வேண்டாம்.. நான் இன்னும் கொஞ்ச நாள் நல்லா ஜாலியா இருக்கிறேன்..”
“ம்ம்.. அதுவும் சரிதான்.. ஆனா எதுக்கும் நீ பொண்ணை பாரு.. ஒருவேளை புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணலாம் தானே? நான் மலர்விழியை தேடி கல்யாணம் பண்ணிக்கிறேன்.. நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ..”
இங்கே இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்க அங்கே மான்விழியோ தன் தங்கை மலர்விழியிடம் புலம்பிக்கொண்டு இருந்தாள்..
“ஏய் மலரு.. உன்னை மாதிரியே மாப்பிள்ளையும் ஒரு ஆர்ச்சராம் டி.. எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம்.. வாழ்க்கை முழுக்க என்னால பயந்துகிட்டே வாழ முடியாது”
அவள் சொன்னதை கேட்ட விழியோ “இங்க பாரு மாப்பிள்ளைய பாரு பிடிக்கலன்னா பிடிக்கலைன்னு சொல்லிட்டு போ.. அன்னைக்கு அப்பா ஃபிரண்டு நம்ம வீட்டுக்கு வந்து உன்னை பாத்து புடிச்சு போய் தன் மகனுக்கு பொண்ணு கேட்டிருக்கிறார்.. இப்ப என்ன.. பொண்ணு பாக்க தானே வராங்க.. பிடிச்சிருந்தா ஓகே சொல்லு.. பிடிக்கலைன்னா வேண்டாம்னு சொல்லு.. இதுக்கு எதுக்கு இவ்வளவு கவலைப்படற..?”
“இல்ல டி அந்த அங்கிள் அப்பாக்கு ரொம்ப க்ளோஸ் போல இருக்கு.. எனக்கு பிடிக்கலன்னு சொல்லி அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்துருச்சுன்னா..”
மான்விழியை முறைத்த வில்விழி “ஏய் லூசு.. உன் வாழ்க்கையோட பெரிய டெசிஷன் இது… இதுல உனக்கு பிடிச்சிருக்காங்கிறது தான் முக்கியம்.. அவங்க ஃப்ரெண்ட்ஷிப் கெட்டு போகக்கூடாதுன்னு உன் லைஃப்பை ஸ்பாயில் பண்ணிப்பியா? நம்ம லைஃபபை நம்ம தான் டிசைட் பண்ணனும்.. வேற யாரும் எதுவும் நம்ம லைஃப் டெசிஷன்ஸை அஃபெக்ட் பண்ண விடக்கூடாது.. யாரோ ஒருத்தருக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு அவரு மகனை நீ எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்? உனக்கு பிடிச்சிருக்கணும்.. உன் இஷ்டப்படி தான் நீ கல்யாணம் பண்ணணும்.. தயக்கமா இருந்தா சொல்லு.. நான் வேணா அப்பா கிட்ட சொல்லிடறேன்..”
“அப்பாக்கு தெரியும் தானே எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு.. ஆனாலும் ஏற்பாடு பண்ணி இருக்காரு இல்ல..?”
“ஏய்.. நம்ம அப்பா விஷயத்தை சொல்லும் போது என்ன சொன்னாரு..? அந்த பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.. குடும்பமும் ரொம்ப நல்ல குடும்பம்னு சொன்னாரு இல்ல..? இந்த சின்ன விஷயத்துக்காக அந்த பையனை பார்க்காம வேண்டாம்னு சொல்ல வேண்டாம்ன்னு தானே சொன்னாரு.. அவனை பார்த்த அப்புறமும் உனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லு.. அதுக்கெல்லாம் தயங்கிட்டு இருக்காத.. அப்பா நிச்சயமா நமக்கு ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாரு”
ஆனால் மான்விழி முகத்தில் குழப்பம் அகலவே இல்லை.. தனக்குள் இருக்கும் அந்த பயத்திற்காக ஒரு நல்ல வரனை வேண்டாம் என்று சொல்ல அவளுக்கே யோசனையாக தான் இருந்தது.. மாப்பிள்ளையை பார்த்து விட்டு சொல்லலாம் என்று அப்போதைக்கு முடிவுக்கு வந்திருந்தாள் அவள்..
அன்று மாலை இந்தர் சகுந்தலா ப்ருத்வி மூவரும் வில்விழியின் வீட்டிற்கு மான் விழியை பெண் பார்க்க வந்திருந்தனர்.. முழு அலங்காரத்துடன் தேவதையாய் மிளிர்ந்தாள் மான்விழி..
வீட்டு வாசலில் பரிமேலழகர் பரபரவென வருபவர்களை வரவேற்க செல்வதை பார்த்த வில்விழி அறைக்குள் வந்து மான்விழியிடம் “ஹே மானு… மாப்பிள்ளை வந்துட்டாரு.. இரு.. நான் அந்த ஜன்னல் வழியா பார்த்துட்டு வரேன்..” என்று சொல்லி சாளரத்தின் பக்கம் விரைந்து போனாள்..
ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தவளின் கண்களோ அதிர்ந்து விரிந்தது.. அங்கே இந்திர தனுஷ் பிருத்வியோடும் சகுந்தலாவோடும் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான்..
காரை ஓட்டிக் கொண்டிருந்த இந்தரோ சக்தி வில்விழியின் மடியில் அமர்ந்து இருந்தாலும் அவ்வப்போது அவனைப் பார்த்து சிரிப்பதும் மழலை மொழியில் அவனை ஏதோ சொல்லி அழைப்பதும் அவனை வண்டி ஓட்ட விடாமல் கையை பிடித்து இழுப்பதும் வில்விழி இடமிருந்து அவனிடம் தாவ முயல்வதும் என விளையாடிக் கொண்டிருந்ததை ஏக்கத்தோடு திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான்..
அவன் பாதையில் முழு கவனத்தை வைக்காமல் அவர்கள் புறம் திரும்பி திரும்பி பார்த்த படி வண்டி ஓட்டிக் கொண்டிருந்ததை கவனித்த வில்விழிக்கோ அவன் நிலை புரிய அவனை பார்க்கவே பாவமாக இருந்தது..
அவள் தான் வண்டி ஓட்டுவதாக சொல்லவும் அவனோ அதற்காகவே காத்திருந்தவன் போல் அப்படியே வண்டியை நிறுத்தி வேகமாய் இறங்கி சென்று சக்தியை தன் கையில் ஆவலோடு வாங்கிக் கொண்டான்..
அதன் பிறகு தந்தையும் மகளும் அவர்கள் உலகத்தில் மொத்தமாய் தொலைந்து போயினர்.. அங்கு வில்விழி என்று ஒருத்தி இருப்பதே அவர்களுக்கு மறந்து போனது.. இதில் வில்விழிக்கு சற்று கடுப்பானாலும் இரண்டு வருடங்களாக அவனிடம் இருந்து அவன் மகளை பிரித்து வைத்த குற்ற உணர்வு அவளை எதுவும் பேசவிடாமல் செய்திருந்தது..
ஆனாலும் உர்ரென்று முகத்தை வைத்தபடியே வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தாள்..
அதை கவனித்த இந்தர் “என்னடி..? ஓராங்குட்டான் மாதிரி மூஞ்சியை வச்சிருக்க? ஏதாவது கோவமா?” என்று கேட்கவும்
எப்போதும் போல படபடவென பொரிய தொடங்கினாள் விழி..
“ஓ.. இங்க ஒருத்தி உக்காந்து இருக்கிறது உங்க கண்ணுக்கு கூட தெரிஞ்சிருச்சா? பரவாயில்லையே.. எங்க நான் திடீர்னு இன்விசிபிள் ஆயிட்டேனோன்னு தோணுச்சு..”
அவள் கோபம் அவனுக்கு சிரிப்பையே வரவழைத்தது.. அதே நேரம் அவளுக்கு தன் கவனிப்பு தேவைப்படுகிறது என்ற விஷயம் அவனுக்குள் இனித்தது..
“நான் என்னடி பண்ணேன்.. இங்க வந்ததுலருந்து நீ தான் என்னை கிட்டயே வர விட மாட்டேங்குற.. ஆனா என் பொண்ணை பாரு.. நான் தள்ளி போனா கூட என்னை கைய புடிச்சு இழுத்து என்னோட ஒட்டிக்கிறா.. என்னடா சக்தி பாப்பா? பாருடா உங்க அம்மாவோட அலப்பறையை..” என்றான்..
அவளுக்கும் தெரிந்தது தான்.. அவள் தானே அவனுக்கு எல்லா விதத்திலும் தடை போட்டு வைத்திருக்கிறாள்.. இல்லை என்றால் இந்நேரம் காதல் கொண்டவன் அவளை மொத்தமாய் தன் அதிரடி நேச மழையில் குளிப்பாட்டி கொண்டாடி இருப்பானே.. இப்போது அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே தெரியவில்லை..
அவனை தள்ளி வைக்கவும் முடியவில்லை.. நெருங்க விடவும் முடியவில்லை.. நெருங்கினால் தன்னை அவனுக்குள் மொத்தமாய் தொலைந்துவிடுவாளே.. அவளுக்கு இந்த காதல் அவஸ்தை பெரிய கொடுமையாய் தெரிந்தது..
இப்படி இவள் நினைப்பு போய்க் கொண்டிருக்க சக்தியோ எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போல்
“அவ்வா அவ்வயு..” அவன் கன்னத்தை தன் பிஞ்சு கையால் மெல்ல தட்டி தட்டி சொல்லிக் கொண்டிருந்தாள் அவனுடைய அருமை மகள்..
சக்தியின் மழலையில் மீண்டும் தன்னை முழுதாய் தொலைத்திருந்தான் அவன்.. அவனின் கவனத்தை மொத்தமாய் தன் புறம் திருப்பி இருந்தாள் அவனின் செல்லமகள்..
அதை கண்ட விழியோ “ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் அம்மா லவ் யூ அம்மா ஐ லவ் யூ ன்னு என்னை சுத்தி சுத்தி வந்துட்டிருந்த.. இப்போ அப்பாவை பார்த்த உடனே நான் கண்ணுக்கு தெரியலையா டி உனக்கு..? அப்பா லவ் யூ வா? அங்கேயே இரு.. நான் எங்க அம்மா அப்பாவை பாக்க போறேன் இல்ல..? அவங்க கிட்ட என் லவ் மொத்தமும் சொல்லிக்கிறேன்.. இனிமே அப்பாவும் பொண்ணும் என் பக்கத்திலேயே வராதீங்க..”
சுறுசுறு வத்தியாய் பொரிந்தாள் அவள்..
“இது உனக்கே அநியாயமா தெரியலையா டி? உன் பக்கத்துல நான் வரக்கூடாதுன்னு எனக்கு கன்டிஷன் போட்டது நீ.. இப்ப நான் ஏதோ உன்னை அவாய்ட் பண்ற மாதிரி பேசற?”
அவன் நியாயம் கேட்க அவளோ உதட்டை சுழித்து “என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டாம்னு சொன்னேன்.. என்னை பார்த்து பேச வேண்டாம்னு நான் ஒன்னும் சொல்லல.. உன் பொண்ணை பார்த்ததும் நான் ஒருத்தி இருக்கிறதே உன் கண்ணுக்கு தான் தெரியலையே” சத்தமாக சொன்னவள்
ஆனால் அவள் உதட்டசைவை வைத்தே அவள் என்ன பேசுகிறாள் என்று கண்டு கொண்டவன் இதழுக்குள் சிரிப்பை அடக்கி தொண்டையை செறுமியபடி..
“இங்க பாரு.. என்னால எல்லாம் பேசிட்டு மட்டும் இருக்க முடியாது டி.. அதுக்கு தான் என்னை நானே கண்ட்ரோல் பண்ணிட்டு உன் பக்கமே திரும்பாம இருக்கேன்.. இப்ப கூட இதோ உன் உதட்டை சுழிச்ச பாரு.. அப்படியே அதை பிச்சு..”
ஏதோ பேச தொடங்கியவன் அப்படியே நிறுத்தி விழியின் கண்களுக்குள் பார்க்க மோகத்தில் சிவந்திருந்த அவன் கண்களின் ஆழ்ந்த பார்வையில் தடுமாறிப் போனாள் பெண்ணவள்..
“இங்க பாரு பேபி.. இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகல.. அந்த கடைசி கண்டிஷனை மட்டும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு.. அப்புறம் மாமா எப்படி உன்னை கண்டுக்குறேன்னு பாரு..”
அவன் சொன்னதும் வண்டியை நிறுத்தியவள் அவன் புறம் திரும்பி கை இரண்டையும் சேர்த்து பெரிய கும்பிடாய் போட்டு “வேணாம் சாமி.. நீங்க என்னை கண்டுக்கவே வேணாம்.. இந்த ஆறு மாசம் நீங்க இப்ப எப்படி இருக்கீங்களோ அப்படியே இருங்க.. அப்படியே ஏதாவது கண்டுக்கணும்னு தோணுச்சுன்னா..” என்று நிறுத்தி அவனை ஒரு கண்ணால் பார்த்தவளை கூர்ந்து பார்த்தவன்
அவள் கண்ணடித்து சொல்ல அவனோ “அடிப்பாவி..” என்று நம்பமுடியாமல் பார்த்தான் அவளை..
இவர்கள் இப்படி பேசிக் கொண்டே இருக்கையில் சக்தி இந்தரின் நெஞ்சிலேயே தலை சாய்த்து உறங்கிப் போயிருந்தாள்..
சக்தியின் உச்சந்தலையில் மெதுவாய் முத்தம் பதித்து அவள் கன்னத்தை வருடி தன் குட்டி இளவரசி உறங்கும் அழகை ரசித்திருந்தான் இந்தர்..
அதைப் பார்த்த விழி “குழந்தை தூங்கும் போது ரசிக்க கூடாது இந்து..” என்க
“அடியேய்.. உன்னை கண்டுக்கலைன்னு இப்படி எல்லாம் கதை விடாதடி.. ஆனாலும் உனக்கு இவ்ளோ பொறாமை ஆகாது..”
“ஐய.. நான்ஒன்னும் பொறாமைல சொல்லல.. நிஜமாத்தான் குழந்தை தூங்கும்போது ரசிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. சரி நம்பலைன்னா போ..” என்றவள் கார் செலுத்துவதில் தன் கவனத்தை செலுத்தினாள்..
“ஓ.. தூங்குற குழந்தையை ரசிக்க கூடாது.. சரி.. அப்படின்னா முழிச்சிட்டு வண்டி ஓட்டுற குழந்தையை ரசிக்கலாம் தானே..?” என்று சொல்லியபடி அவன் அவளை அவன் ரசனையாய் கண்களால் வருட
அவளுக்கோ அவனின் பார்வை அவள் மேனி முழுதும் அத்து மீறி பயணிக்க உள்ளுக்குள் என்னென்னவோ உணர்வுகள் ஆர்ப்பரித்து கிளம்பியது..
அதற்கு மேல் வண்டி ஓட்ட முடியாமல் அப்படியே வண்டியை நிறுத்தினாள் அவள்..
“இப்படியே என்னை பார்த்துட்டு இருந்தா நான் எப்படி வண்டி ஓட்டுறது? எனக்கு ஒரு மாதிரி இருக்கு இல்ல..?”
“ரொம்ப படுத்துற டி நீ.. தொட தான் கூடாதுன்னு சொன்ன..? பாக்கறதுக்கும் தடா போடுறே.. ஆனாலும் நீ என்னை இவ்வளவு கொடுமை படுத்த கூடாது..” என்றவன் கோபமாய் காரின் வெளிப்பக்கம் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்..
அதற்கு மேல் அவனை படுத்த மனம் வராமல் தன் சீட்பெல்டை கழட்டியவள் அவன் பக்கமாக திரும்பி குழந்தைக்கு தொந்தரவு இல்லாமல் அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து அவன் இதழோடு தன் இதழ் சேர்த்து இருந்தாள்..
அவனோ அவள் காலரை பிடித்தபோதே “குழந்தைடி” என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் வார்த்தை அவளின் வாய்க்குள் அடங்கிப் போய் இருந்தது..
தொடங்கியதுதான் அவள்.. அதன் பிறகு அந்த முத்தத்தின் ஆழத்தின் வரை சென்றவன் இதழ் வழியாகவே அவள் இதயத்தை முழுவதுமாய் உறிஞ்சுவது போல் அவளின் செம்மாதுளை அதரங்களை மொத்தமாய் ஆண்டிருந்தான்..
அந்த சாலையே வெறிச்சோடி இருந்தது.. சுற்றி மரங்களும் அதைத் தாண்டி நிலங்களும் இருந்தனவே தவிர அங்கு வீடுகளோ.. வாகனங்களோ.. மனித அரவமோ இல்லை..
அதனால் யாரும் பார்த்து விடுவார்களோ என்ற தயக்கம் இன்றி வெகுநேரம் தங்கள் முத்த விளையாட்டை தொடர்ந்திருந்தார்கள் அந்த இதழ் போராளிகள்..
பல நிமிடங்கள் கழிந்து மோக உணர்வு இருவரிலும் பீறிட்டு எழ அதற்கு மேல் தாங்காது என்று உணர்ந்த விழி அவன் இதழிலிருந்து தன் இதழை பிரித்தெடுக்க அவனோ அந்த இதழணைப்பு இன்னும் இன்னும் வேண்டும் என ஏங்கும் தன் அதரங்களை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து போனான்..
“வி..ழி..” அவன் கிறக்கமாய் அழைக்க அவளோ அவன் பக்கம் திரும்பாமல் நேராக சாலையை பார்த்தபடியே
“ம்ம்..?” என்றாள்..
“விழி..” மறுபடியும் அவன் அழுத்தமாய் அழைக்கவும்
அவன் புறம் திரும்பியவள் அவனை சங்கடமாய் பார்த்தபடி “என்னடா..?” என்க
அவனோ அவளை பார்த்து “என்னடி.. பாவம் டி நானு..” என்க
“இல்லை இந்து.. ப்ளீஸ்.. சொன்னா புரிஞ்சுக்க.. இது உனக்கு எவ்ளோ கஷ்டமோ அதே அளவுக்கு எனக்கும் கஷ்டம்தான்.. ஆனா இந்த வைராக்கியம் இருந்தாதான் நான் என்ன நினைச்சு வந்தனோ அதை செய்ய முடியும்.. எனக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்லி இருக்க தானே? என்னை டிஸ்ட்ராக்ட் பண்ணாதடா..”
அதைக் கேட்டவன் தன் கண்ணை மூடி திறந்து தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டு “ஓகே.. ஆனா உண்மையா சொல்லப்போனா ரொம்ப கஷ்டமா இருக்கு டி.. உன்னை இவ்வளவு பக்கத்துல வச்சுக்கிட்டு என்னால முடியல.. இந்த மூணு வருஷம் இருந்ததை விட இந்த ஆறு மாசம் எனக்கு ரொம்ப கொடுமையா இருக்கும் போல.. ஆனாலும் நான் இவ்ளோ கண்ட்ரோலா இருக்கிறதுக்கு காரணம் நான் உன்னை எதுக்காகவும் இழக்க விரும்பல.. எனக்கு நீயும் சக்தியும் வேணும்.. அதுக்காக எது வேணாலும் செய்வேன்..”
அவன் சொன்னதை கேட்டு அவள் கண்கள் நிறைந்து போயின..
“இப்படியே பேசிட்டு இருந்தா எனக்கு ரொம்ப எமோஷனலாகி வண்டியே ஓட்ட முடியாம போகப்போகுது.. ப்ளீஸ் இந்து.. இப்படியே போனா நம்ப அம்மா வீட்டுக்கு போய் சேர்ந்த மாதிரி தான்.. நான் ஏதாவது பாட்டு போடறேன்.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்..”
என்றவளின் கையைப் பிடித்து தடுத்தவன் “வேணாண்டி.. சக்தி தூங்குறா.. அவ எந்திரிச்சிக்கபோறா..” என்றவனை பாவமாய் பார்த்திருந்தாள் விழி..
ஒரு வழியாக விழியின் பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள் இந்தரும் விழியும்..
வீட்டு வாசலில் வந்த நின்றவுடன் இந்தரின் கையை அழுத்தமாய் பிடிக்க அவனோ “ஒன்னும் ஆகாது.. வா.. நான் பேசிக்கிறேன்” என்க..
“எனக்கு அப்பாவை நினைச்சு டென்ஷன் இல்ல.. அவர் ஒன்னும் சொல்ல மாட்டார்.. ஆனா அம்மா கொஞ்சம்..” என்றவளை திரும்பி பார்த்தவன் “அதான் நான் பேசறேன்னு சொல்றேன்ல..? நீ எதுக்கு இவ்வளவு டென்ஷனாகுற? வா வீட்டுக்குள்ள போகலாம்..” என்று அந்த கேட்டை திறந்து கொண்டு வீட்டு வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினான்..
வாசுகி தான் வந்து கதவை திறந்தார்..
வெளியே குழந்தையுடன் நின்றிருந்த இந்தரை பார்த்தவர் “மாப்ள.. யார் இந்த குழந்தை..?” என்று கேட்க அதே சமயம் அவன் பின்னாலிருந்து வெளிப்பட்ட விழியை பார்த்தவர் அதிர்ந்து போனார்..
“ஹேய்.. மலரு.. நிஜமாவே நீயாடி? எங்கடி போன? எங்க இருந்த? இந்த குழந்தை உன்னோடதா..?” அவள் தோளை பிடித்து கேட்டவர் அவள் மௌனமாய் நிற்கவும் தன் எதிரில் நிற்கும் மகளையும் பேத்தியையும் மாறி மாறி நம்ப முடியாமல் பார்த்தார்..
“அம்மா.. நான் ஆஸ்திரேலியா போயிருந்தேன் மா.. என் கனவை தேடி போயிருந்தேன்..”
“என்னது..? கனவை தேடி போனியா? அதுக்காக.. புள்ள பெத்திருக்க.. அவளுக்கு ரெண்டு வயசு இருக்கும் போல இருக்கு.. எங்க யார்கிட்டயும் எதுவுமே சொல்லணும்னு உனக்கு தோணலையா? அப்படி என்னடி உனக்கு பண்ணிட்டோம் நாங்க எல்லாம்..? உன்னால எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை மறைக்க முடிஞ்சது..?”
“அம்மா.. நான் இங்கிருந்து போன ரெண்டாவது நாளே நான் பிரக்னண்டா இருக்கேன்னு எனக்கு தெரிஞ்சிருச்சு.. ஆனா நான் திரும்பி வந்து இருந்தேன்னா மறுபடியும் பழைய படி என்னை அந்த வீட்ல அடச்சி வெச்சி இருப்பாங்க.. என் வயித்துல இருக்கிற குழந்தை என் கனவை அடையறதுக்கு எப்பவுமே தடையாய் இருக்க மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருந்தது.. அவ எனக்கு துணையா இருப்பான்னு நம்புனேன்.. அதனாலதான் யார்கிட்டயும் சொல்லாம இந்த குழந்தையை நான் பெத்துக்கிட்டேன்..”
“இவ்வளவு சுலபமா சொல்றே.. அந்த குழந்தை உன் வயித்துல வளர்ந்து இந்த பூமிக்கு வந்து ரெண்டு வயசு ஆகுற வரைக்கும் அப்பா பாட்டி தாத்தா சித்தப்பா சித்தின்னு எந்த உறவும் இல்லாம தனியா.. அநாதை மாதிரி..”
அதை சொல்லும்போதே அவரால் தாள முடியவில்லை.. கண்களை அழுத்தமாய் மூடியவர் “எதுக்குடி அவளுக்கு அந்த தலை எழுத்து? அவ எதுக்குடி அப்படி தனியா இருக்கணும்? ரொம்ப தப்பு மலர்.. நீ என்ன காரணம் சொன்னாலும் என்னால இதை மன்னிக்கவே முடியாது.. இப்ப மட்டும் எதுக்கு நீ இங்க வந்த? அப்படியே புள்ளைய வளர்த்து ஆளாக்கி கரை சேர்க்க வேண்டியது தானே? எதுக்குடி திரும்பி வந்த?” என்றவர் “அப்படியே போயிரு.. இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்ன.. நான் உன்னை அறைஞ்சு தள்ளிடுவேன்..” என்று அவளை அறைய கை ஓங்க அவருக்கும் விழிக்கும் நடுவில் வந்து நின்றான் இந்தர்..
“ப்ளீஸ் அத்தை.. அஜிடேட் ஆகாதீங்க.. அவ நெனச்சதெல்லாம் கரெக்ட் தான்.. அவ இப்ப வேர்ல்ட் சாம்பியன்.. இங்க இருந்து இருந்தா அவளால ப்ராக்டிஸ் கூட கன்டினியூ பண்ணி இருக்க முடியாது.. அவ செஞ்சது சரிதான்.. என்ன.. என்கிட்ட சொல்லி இருந்தா எங்க அப்பாக்கு தெரியாம அப்பப்போ வீடியோ கால்லயாவது இவளை பார்த்திருப்பேன்..”
அவளை திரும்பிப் பார்த்து அவன் அப்படி சொல்ல அவன் தன் தந்தைக்கு தெரியாமல் என்று சொல்லும் போது அவனை தீவிரமாய் முறைத்தாள் வில்விழி..
அவன் வாசுகியை நோக்கி “அவளே மூணு வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டு அடிப்பட்டு திரும்பி வந்து இருக்கா.. அவளை மேல மேல நோகடிக்காதீங்க அத்தை.. ப்ளீஸ்..” என்றான்..
“இல்ல மாப்ள.. அது..” என்று வாசுகி ஏதோ சொல்ல ஆரம்பிக்க
“போதும் அத்தை.. அவ செஞ்சது சரியா தப்பான்னு யோசிக்காதீங்க.. இப்ப அவ என்னோட வந்து சேர்ந்துட்டா.. இனிமே அவ நல்லா இருக்கணும்.. அதை பத்தி மட்டும் யோசிங்க.. நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்போம்.. இதுல உங்களுக்கு எந்த டவுட்டும் வேண்டாம்.. முதல் முதல்ல உங்க பேத்தி உங்க வீட்டுக்கு வந்திருக்கா.. வீட்டுக்குள்ள வரவிடாம இப்படித்தான் வாசல்ல நிக்க வச்சு திட்டிக்கிட்டே இருப்பீங்களா?”
அவன் கேட்டதும் தான் அவருக்கு சக்தியின் நினைவே வந்தது.. சட்டென அவள் புறம் திரும்பினார்..
நடந்த களேபரத்தில் அவள் அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்து முட்டைகண்ணை உருட்டி உருட்டி எதிரே இருந்தவர் யார் என பார்த்துக் கொண்டிருந்தாள்..
“இன்னும் கொஞ்ச நாள்ல மறுபடியும் நேஷனல் சாம்பியன்ஷிப் ஈவன்ட் வருது கா.. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்..”
வில்விழிக்கோ வித்யாவை கண்டு வியப்பு மேலிட்டது.. ஒரு பெண்ணால் இத்தனை கொடுமைகளை அனுபவித்த பிறகு எப்படி இவ்வளவு விரைவில் அதிலிருந்து மீண்டு இப்படி சாதாரணமாக பேச முடிகிறது..?
இத்தனைக்கும் வில்விழி மிகவும் தைரியமான பெண் என்று பெயர்.. அவள் கூட தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் நிச்சயம் உடைந்து நொறுங்கியே போயிருப்பாள்.. அதிலிருந்து மீளவே ஒரு வாழ்க்கை முழுவதும் தேவைப்பட்டிருக்கும்..
ஆனால் இந்தப் பெண் எவ்வளவு நம்பிக்கையோடு பேசுகிறாள் என்பது அவளுக்கு வியப்போடு சேர்ந்து மகிழ்ச்சியையும் தந்திருந்தது..
“வாவ் சூப்பர்.. ஆல் தி பெஸ்ட்.. நிச்சயமா இந்த முறை நீ தான் நேஷனல் சாம்பியன்..”
அவள் வித்யாவின் கன்னத்தை தட்டி சொல்ல வித்யாவோ கண்களில் ஒளி மின்ன “தேங்க்ஸ் கா” என்றாள்..
அப்போது அங்கு தூரத்தில் லக்ஷ்மனோடு பேசிக் கொண்டிருந்த இந்தரை பார்த்து வித்யா சற்றே கண்கள் கலங்க “ஆக்ச்சுவலா அந்த சம்பவம் நடந்து முடிஞ்ச பிறகு ரொம்ப நொறுங்கிப் போய் முடங்கி போயிட்டேன்கா.. நான் அகாடமிக்கு வராதப்போ நீங்க என்னை தேடி வந்து எனக்கு ஆறுதல் சொல்லி அந்த பொறுக்கிங்க மேல கேஸ் போட்டு என்னை கோர்ட்டுக்கு வந்து நடந்ததை சொல்ல சொன்னீங்க.. ஆனா என்னால கோர்ட்டுக்கு வர முடியல..”
அவள் உண்மையான வருத்தத்தோடு சொல்ல வில்விழியோ “ஹான்.. இந்தர் சொன்னாரு.. நீ ஏன் வரலன்னு.. இட்ஸ் ஓகே.. நீ அந்த இன்ஸிடன்ட்டை கடந்து வந்ததே பெரிய விஷயம்..” என்றாள்..
“உங்களுக்கு என் மேல எவ்வளவு கோவம் இருந்திருக்கும்ன்னு எனக்கு தெரியும்.. அதான் மனசு கேட்காம உங்களுக்கு ஃபோன் பண்ணி ஏன் வரலன்னு சொல்லிடலாம்னு பண்ணினேன்.. ஆனா உங்க ஃபோனை ரீச் பண்ண முடியல.. அப்பதான் இந்தர் சாருக்கு ஃபோன் பண்ணி அவங்க அந்த வீடியோவை வெச்சு மெரட்டுனதெல்லாம் சொன்னேன்.. இனிமே இந்த பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்னு சொல்லி அதோட எல்லாத்துக்கும் முழுக்கு போட்றலாம்னு தான் இருந்தேன்..”
அவள் கண்ணில் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது.. அதைத் துடைத்து விட்டாள் வில்விழி..
“ஆனா இந்தர் சார்.. நீங்க.. ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் அக்கா.. நீங்க எப்படி எனக்கு நடந்து கொடுமையை பத்தி தெரிஞ்சப்ப எனக்கு ஆறுதல் சொல்லி என்னை அதில இருந்து மீட்க முயற்சி பண்ணிங்களோ அதே போல தான் அவரும்.. அவர் மட்டும் மறுபடி என்னை தேடி வந்து இருக்கலைன்னா அப்படியே என் வீட்டிலேயே அடைஞ்சு கிடந்து மனப்புழுக்கத்திலேயே செத்துப் போயிருப்பேன் கா.. ஆனா அவர் என்னை அப்படி இருக்க விடல.. என் வீடு தேடி வந்து எங்க அம்மா அப்பாவை சமாதானப்படுத்தி என்னையும் மோட்டிவேட் பண்ணி மறுபடியும் ப்ராக்டிஸ்க்கு வர வச்சாரு.. நான் இதையெல்லாம் தாண்டி நேஷனல் சாம்பியன் ஆனா தான் உலகத்தையே என் பக்கம் திரும்பி பார்க்க வைக்க முடியும்னு சொன்னார்.. இப்போ லக்ஷ்மண் சார் தான் எனக்கு கோச்சிங் பண்ணிட்டு இருக்காரு.. இந்த முறை நிச்சயம் வின் பண்ணிடுவேன் கா..”
“அதான் எனக்கு தெரியுமே..” அவள் தலையை வாஞ்சையோடு வருடியவளுக்கு தன்னவனை நினைத்து பெருமை பிடிபடவில்லை.. அவன் மீது இருந்த காதல் இன்னும் இன்னும் பன்மடங்காய் பல்கி போனது..
வித்யா அங்கு இருந்த மற்றொரு மாணவியோடு அவள் ஏதோ கேட்கிறாள் என்று பதில் சொல்ல திரும்ப அந்த நேரம் தன்னவனை காதலோடு விழுங்குவது போல் பார்த்திருந்தவளின் பார்வை தன் மீது படிவதை உணர்ந்து அவள் புறம் திரும்பினான் இந்தர்..
முதலில் அவனிடம் மாட்டிக் கொண்டோமே என்று ஒரு கண்ணை மூடி “ஸ்ஸ்.. ஹைய்யோ.. சொதப்பிட்டியேடி விழி..” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு நாக்கை கடித்துக் கொண்டவள் அடுத்த நொடியே பளீரென அவனை பார்த்து புன்னகைத்தாள்..
தலையை இடவலமாய் ஆட்டி ஒன்றும் இல்லை என்றவள் தன் கட்டை விரலையும் சுட்டு விரலையும் இதய வடிவில் சேர்த்து காண்பித்து அவனை மொத்தமாய் திக்கு முக்காட செய்திருந்தாள்..
அதற்குள் அவள் புறம் திரும்பியிருந்த வித்யா “ஆமா.. நீங்க எங்க அக்கா போயிருந்தீங்க இவ்வளவு நாளா? நீங்க இல்லாம சார் ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு கா.. அகாடமி பக்கமே வரலை.. அப்படியே வந்தாலும் எதிலயும் கவனம் இல்லாம ஒரு மாதிரி வாழ்க்கையே சூனியமான மாதிரி ரொம்ப விரக்தியா இருந்தாரு.. இப்பதான் அவர் மூஞ்சில அந்த பழைய லைட்டை பாக்க முடியுது.. ரொம்ப சந்தோஷமா இருக்கு கா..”
“ம்ம்.. எனக்கும் புரியுது.. நான் ஆஸ்திரேலியால இருந்தேன் டா.. சம்யுக்தா அகாடமி இருக்குல்ல..?”
“தெரியும்.. அப்போ.. அந்த வர்ல்ட் சாம்பியன்ஷிப்ல சில்வர் மெடல் வாங்கின வில்விழி நீங்கதானா? நான் முகத்தை சரியா பாக்கல.. பேரை மட்டும் கேட்டுக்கிட்டேன்.. முகத்தை பார்த்திருந்தேனா நீங்கன்னு தெரிஞ்சிருக்கும்..”
“ம்ம்.. ஆமா.. எவ்ளோ தடைகள் வந்தாலும் அதை உடைச்சு நம்ம கனவை ஜெயிக்கிறது நம்ம கைல தான் இருக்கு.. நான் என் கனவை அடைஞ்சிட்டேன்.. ஆனா அதுக்கு நிறைய சாக்ரிஃபைஸ் பண்ண வேண்டி இருந்தது.. ஆனா உன்னோட லாஸ் ரொமப பெரிசு.. இந்த ஆர்ச்சரிக்காக நீ இழந்தது ரொம்ப அதிகம்.. உனக்கு இந்த சாம்பியன்ஷிப் அவார்ட்ஸ் இதெல்லாம் தான் உன் வாழ்க்கையில மறுபடியும் அந்த பழைய சந்தோஷத்தை மீட்டு கொடுக்கும்.. அதை விட்டுறாதே.. எதுக்காகவும் விட்றாத.. மேலமேல முன்னேறி போயிட்டே இரு.. யாரு எது சொன்னாலும் கவலைப்படாத.. நீ உயரத்தை ரீச் பண்ண அப்புறம் எல்லாரும் உன் பின்னாடி வருவாங்க..”
அவள் சொன்னதை கேட்ட வித்யாவுக்கு மனதில் புது தெம்பே கிடைத்தது..
“நிச்சயமா கா.. இந்த வாட்டி கோல்ட் மெடல் ஜெயிச்சுட்டு தான் வருவேன்..” என்று தன்னம்பிக்கையோடு சொன்னவளை பெருமையாய் பார்த்தாள் வில்விழி..
“தட்ஸ் லைக் மை கேர்ள்..” என்று சொல்லி அவளை தீவிரமாய் பயிற்சி செய்ய சொல்லிவிட்டு வெளியே லக்ஷ்மனுடன் பேசிக் கொண்டிருந்த இந்தரிடம் வந்தாள்..
“ஹாய் லக்ஷ்மன்.. எப்படி இருக்கீங்க..?”
ஒரு சினேகமான புன்னகையுடன் அவள் கேட்க “நல்லா இருக்கேன் மேடம்.. நீங்க எப்படி இருக்கீங்க? நீங்க திரும்பி வந்தது ரொம்ப சந்தோஷம் மேடம்.. இப்ப தான் சார் முகத்திலயும் திரும்ப உயிர் வந்த மாதிரி இருக்கு..” என்றான்..
அவன் எப்போதுமே அதிகமாக பேச மாட்டான்.. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன் அவன்..
“சரி மேடம்.. நான் போய் பசங்களை பார்க்கிறேன்..” என்று சொல்லிவிட்டு வழக்கம் போல அங்கிருந்து நழுவிக்கொண்டான்..
“சரி.. வாங்க வீட்டுக்கு போலாம்.. வீட்டுக்கு போய் சக்தியை அழைச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போகணும்..” எனவும் இருவரும் அவர்கள் புல்லட்டை விட்டு இருந்த பார்க்கிங்கிற்கு வந்தார்கள்..
அவன் வண்டியை எடுக்க போக அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள் அவள்..
“என்னடி.. இப்போவும் நீ தான் ஒட்ட போறியா? நீயே ஓட்டு.. நான் போய் வண்டியை எடுத்துட்டு வரேன்..” என்று நகர போனவனை மறுபடியும் பிடித்து இழுத்தவள் அவனை இறுக்கமாய் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள்..
அவனுக்கு அவள் கண்கள் கலங்கியது போல் தோன்ற அவள் முகம் நிமிர்த்தி பார்த்தான் அவன்.. நினைத்தது போலவே அவள் கண்கள் கலங்கித் தான் இருந்தன..
“என்னம்மா என்ன ஆச்சு? சொல்லுடா.. யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா? வித்யா கிட்ட தானே பேசிகிட்டு இருந்தே.. அவ ஏதாவது சொன்னாளா?”
அவள் நாடி பிடித்து அவன் கேட்க “இல்ல.. நான் தான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.. வித்யாவை மோட்டிவேட் பண்ணி மறுபடியும் விளையாட வச்சது ரொம்ப பெரிய விஷயம்.. ரொம்ப பெருமையா இருக்கு.. ஐ ஆம் சோ ப்ரவுட் ஆஃப் யூ இந்து..” என்றவள் அவன் கன்னத்தில் கை வைத்து மற்ற கன்னத்தில் எக்கி நின்று ஆழமாய் இதழ் பதித்தாள்..
“ஏய் என்னடி.. அகடமி டி இது.. மேடம் ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன் இது ஆஸ்திரேலியா இல்ல இந்தியா..” என்றான் அவன் கிண்டலாக..
ஆனால் உள்ளுக்குள் படபடவென சந்தோஷ சரவெடி வெடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு..
“தெரியும்.. அதான் இங்க யாரும் இல்லையே.. அப்படியே இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. என் புருஷன்.. எனக்கு முத்தம் கொடுக்கணும் போல இருந்தது.. கொடுத்தேன்.. ஆனா ஒருவேளை இந்த முத்தத்தை எனக்கு திரும்ப கொடுக்கணும் போல இருந்தா அது..க்..கு…… யூ ஆர் ஸ்ட்ரிக்ட்லி நாட் அலவுட் ஜென்டில்மேன்.. ரூல்ஸ் ஆர் ரூல்ஸ் மிஸ்டர்.இந்தர்”
அவனை ஒரு மார்க்கமாய் பார்த்து இதழுக்குள் புன்னகைத்த படி அவன் கன்னத்தை விரலால் வருடி சொன்னவள் அவன் மார்பில் தன் சுட்டு விரலை வைத்து அவனை தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்திவிட்டு “வாங்க போலாம்..” என்று சொல்லி வேகமாய் வண்டியை நோக்கி நடந்தாள்..
இப்போதும் அவள் திமிர் அவனை ஈர்க்கத்தான் செய்தது..
“ஷிட்.. ஐ லவ் ஹர் மேட்லி..”
தன் கேசத்தை முன்னிருந்து பின்னாய் கோதியபடி சொன்னவன் அவளை பின்தொடர்ந்து போனான்..
இருவரும் வீட்டுக்கு வந்து சக்தியை அழைத்துக் கொண்டு விழியின் பிறந்த வீட்டுக்கு புறப்பட்டார்கள்..
மார்க்கண்டேயன் ஹால் சோஃபாவில் அமர்ந்து இருந்தார்..
எப்போதும் இருக்கும் மிடுக்கோடு மார்க்கண்டேயன் கேட்க விழி “சொல்லிட்டேனே மாமா.. யார் கிட்ட சொல்லணுமோ அவங்க கிட்ட சொல்லிட்டேன்..” என்க
அவரோ சகுந்தலாவை திரும்பி பார்க்க “ஆமாங்க.. இப்பதான் அகடமிக்கு போயிட்டு வந்தப்புறம் சொன்னாங்க.. நான் உங்ககிட்ட சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன்.. அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டீங்க..”
சகுந்தலா சொன்னதை கேட்டவர் “அகடமிக்கு போனாங்களா?” என்று கேட்க “ஆமா மாமா.. அதையும் அத்தை கிட்ட சொல்லிட்டு தான் போனோம்..”
முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு சகுந்தலாவை பார்த்தபடி அவள் சொல்ல மார்க்கண்டேயனோ சகுந்தலாவை பார்க்க “அது.. இந்தர் கூட இங்க இருக்கிற அகாடமிக்கு தானே போறான்னு உங்ககிட்ட சொல்லலைங்க..” சங்கடமாய் தயக்கத்தோடு சொல்லி இருந்தார் சகுந்தலா..
“எதுக்கு மாமா சொல்லணும்? முன்னெல்லாம் வெளியே போகிறப்போ உங்ககிட்ட தான் பர்மிஷன் வாங்கிட்டு போவோம்.. அப்பல்லாம் நீங்க என்ன ஒவ்வொரு முறையும் அத்தையை கூப்பிட்டு சொல்லிக்கிட்டா இருந்தீங்க..? சில சமயம் இந்தரையும் ப்ருத்வியையும் ஆஃபீஸ்லருந்து நேரா வெளியூருக்கு அனுப்பிருவீங்க.. அவங்களுக்கு நைட்டு சாப்பாட்டையும் செஞ்சி வச்சுட்டு அத்தை காத்திட்டிருப்பாங்க.. அப்புறம் ரெண்டு பேரும் எங்களுக்கு ஃபோன் பண்ணி சொன்ன பிறகு நாங்க அத்தை கிட்ட சொல்லுவோம்.. இப்ப அத்தை மட்டும் எதுக்கு மாமா உங்ககிட்ட சொல்லணும்?”
ஒவ்வொரு முறையும் இந்தரும் பிருத்வியும் வெளியூருக்கு போகும் போது மார்க்கண்டேயனிடம் சொல்லிவிட்டு தான் செல்வார்கள்.. ஆனால் சகுந்தலாவிடம் அதைப் பற்றி மூச்சு கூட விட மாட்டார் அவர்.. அப்படி சொல்வது அவரை பொறுத்தவரை கௌரவ குறைச்சல்..
“ஆனாலும் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும்னு தோணுது மாமா.. இன்னிக்கு நைட் இந்தர் என்னோட எங்க அம்மா வீட்டுல தங்க போறாரு.. “
அவள் பேசியதை கேட்டு அதிர்ந்து கண்ணை மூடி திறந்த மார்க்கண்டேயன் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை அப்படியே அங்கிருந்த மேஜை மேல் தூக்கிப் போட்டுவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டார்..
அந்த வீட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று.. தங்கள் மனைவியின் பிறந்த வீட்டிற்கு இந்தரும் சரி பிருத்வியும் சரி மார்க்கண்டேயனின் அனுமதி கேட்டு செல்லலாம்.. ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அவர்கள் வீட்டில் இருக்கக் கூடாது.. இரவு மனைவியின் பிறந்த வீட்டில் தங்குவதெல்லாம் அந்த வீட்டை பொறுத்தவரை மன்னிக்க முடியாத குற்றம்..
அப்படியான நேரங்களில் தன் தந்தையின் முன் பேசாது அவருக்கு ஆமாம் சாமி போடும் இந்தர் சொன்னது போலவே அவளை பிறந்த வீட்டில் விட்டுவிட்டு திரும்பி வந்து விடுவான்..
ஆனால் இரவு எல்லோரும் தூங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் வில்விழியின் பிறந்த வீட்டிற்கு வருபவனை வில்விழி வாசலோடு நிறுத்தி திரும்பி போய்விடும் படி சண்டை இடுவாள்..
“பொண்டாட்டியோட பொறந்தவீட்டுக்கு ஏதோ சின்ன வீட்டுக்கு வரப்போல எதுக்கு ஒளிஞ்சு ஒளிஞ்சு வரணும்..? போய் உங்கப்பா கிட்ட சொல்லிட்டு வாங்க.. இல்லன்னா அங்கயே இருந்துக்கங்க..” என்று சொல்லி அவனை வீட்டு வாசலில் நிறுத்தி வைப்பாள்..
வில்விழியின் அன்னை வாசுகியோ கணவன் மனைவி இடையி்ல் நிற்காமல் அவர்களுக்கு தனிமை கொடுத்து உள்ளே சென்று விடுவார்..
அவனோ தன் தந்தையின் முன் மட்டுமே நல்ல பிள்ளையாய் அடங்குபவன் ஆயிற்றே.. அவளை பார்த்தால் எப்போதும் போல முரட்டு காதலனின் அவதாரத்தை எடுத்து விடுவான்.. அவளுடைய அன்னை விலகி சென்று தனிமை கிடைத்த நொடி அதிரடியாய் வீட்டுக்குள் நுழைபவன் அவளை அப்படியே தன் கையில் ஏந்தி அவளின் அறைக்கு தூக்கி சென்றுவிடுவான்..
“இந்தர்.. விடுங்க..” என்ற படி அவனுடைய அன்பு கட்டிலிருந்து வெளிவர திமிறுவாள் தான்.. ஆனால் ஒரு நாளும் அவளால் அதிலிருந்து வெளி வர முடிந்ததே இல்லை.. அவளின் அறைக்குள் அவளை தூக்கி வருபவன் அவனோடு வார்த்தை போரிடும் அவள் அதரங்களை தன் இதழ்களால் அடைத்து முத்தப்போர் புரிய தொடங்கி விடுவான்..
அதன் பிறகு அவள் எங்கே சண்டையிடுவது.. வாரத்தை யுத்தம் காதல் போராகி கட்டில் போராகி விட அவனின் அடாவடி காதலில் மொத்தமாய் தோற்று போவாள் மலரவள்.. விடியும் வரை அவளை தன் அணைப்புக்குள் இறுக்கியபடியே உறங்கி போவான் அவனும்..
சில நேரங்களில் இந்த அதிரடி அணைப்புகளையும் இதழ் ஆக்கிரமிப்புகளையும் தாண்டி அவனோடு சண்டையிட்டு அவள் தனியாக தரையில் படுப்பாள்.. ஆனால் எப்போதும் போல அவளை தூக்கி கட்டிலில் தன் மார்புக்கூட்டுக்குள் பூட்டியபடி உறங்கிடுவான்.. அல்லது தானும் தரையில் படுத்து பின்னாலிருந்து அவளின் இடைவளைத்து அணைத்து அவள் முதுகோடு அட்டை போல ஒட்டிக்கொள்வான்..
பின் கழுத்தில் அவன் மூச்சுக்காற்றின் வெப்பமும் அவன் மெல்லிய இதழ் உரசல்களும் அவளின் பேச்சுரிமைக்கு மொத்தமாய் தடை போட்டு விடும்.. அவள் கோவத்தின் சூட்டை மொத்தமாக தணித்துவிடும் அந்த மோக தாக்குதல்கள்..
இரவு முழுவதும் தன் அணைப்புக்குள்ளேயே அவளை சிறைப்படுத்தி வைப்பவன் அடுத்த நாள் விடியலில் தன் வீட்டுக்கு வந்து விடுவான்..
அவனின் இந்த அடாவடி அன்பு தான் வில்விழியின் பலவீனம்.. அவன் அதிரடியாய் அவளை இப்படி ஆளும்போது அவளால் அந்த ஆளுமையை எதிர்த்து உடைத்து வெளிவர முடிவதில்லை.. அதனால் தான் மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போது தன்னவனை சேர்ந்தாலும் அவனுடைய அதிரடி அன்பு தன்னை பலவீனப்படுத்த விடாமல் அவர்களுக்குள் ஒரு எல்லை கோட்டை வரைந்து அவனை சற்று தள்ளியே நிறுத்தி இருந்தாள்..
இப்போது இந்தருக்கு தன் தந்தையின் கோப முகம் பார்க்க நேர்ந்தாலும் இப்படி அவரிடம் சொல்லிவிட்டு வில்விழியின் பிறந்த வீட்டிற்கு செல்வது சற்று நிம்மதியை தான் தந்திருந்தது..
அந்த நொடி முன்னர் விழியின் வீட்டிற்கு போகும்போதும் இப்படியே தன் தந்தை கோவமுகம் காட்டினாலும் அதை எதிர்கொண்டு அவரிடம் ப்ருத்வி நேரடியாய் சொல்லிவிட்டு போவது போல போயிருக்கலாமோ என்று முதல் முறையாக யோசித்தான்..
வில்விழியின் பிறந்த வீட்டிற்கு சக்தியோடு கிளம்பினார்கள் இருவரும்.. அவர்களுக்கு வில்விழி திரும்பி வந்தது கூட தெரியாது.. அதுவும் அவள் இரண்டு வயது குழந்தையோடு திரும்பி வந்திருப்பதை அறியும்போது அவர்கள் எதிர்வினை எப்படி இருக்குமோ என்ற படபடப்போடும் எதிர்ப்பார்ப்போடும் இந்தரோடும் சக்தியோடும் தன் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் வில்விழி..
வில்விழியை பொறுத்தவரை அவள் வில் வித்தைக்கு என்றே பிறந்தவள் என்று தான் சொல்லவேண்டும்.. இயல்பாகவே அவளுக்குள் வில் வித்தையின் மேல் இருந்த ஆர்வம் எளிதில் விரைவாக அதே நேரம் நேர்த்தியாக சிறப்பாக ஒவ்வொரு பயிற்சியையும் மேற்கொண்டு கற்று அதில் தொடர்ந்து சிறந்து விளங்கவும் வைத்தது..
விஷ்வஜித் அகடமியில் அவள் சேர்ந்த நாளிலிருந்து அவளுக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் உட்பட அனைவருமே அவளின் அம்பு எய்யும் திறமையை பார்த்து பிரமித்து தான் போனார்கள்….
அவள் வில்லையும் அம்புகளையும் கையாளும் நேர்த்தி இலக்கை நோக்கிய அவளின் கூர்பார்வை அவளுக்கு இருக்கும் சிதறாத கவனம் ஒவ்வொரு முறையும் குறி தவறாமல் இலக்கை அம்பெய்து தகர்த்து விடும் அவளுடைய உறுதி இது எல்லாமே அங்கு இருந்த அத்தனை பேருடைய மெச்சுதலையும் பாராட்டையும் அவளுக்கு பெற்று தந்திருந்தது எனலாம்..
எந்த ஒரு போட்டிக்கு போனாலும் முதல் பரிசை தட்டிச் செல்வதையே வழக்கமாக வைத்திருந்தாள் அப்போது மலர்விழி என்று அழைக்கப்பட்டிருந்த வில்விழி..
இந்த்ரதனுஷ் அகாடமியிலும் அவள் போட்டியை தொடங்கும் போது எய்த அம்புகள் அத்தனையும் சரியாக இலக்கை நோக்கி பயணித்து அதிக புள்ளிகளை தரும் தங்க நிற வளையத்துக்குள் தவறாமல் சென்றடைந்து அவளை வெற்றிப் பாதையை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்தது..
அந்த வில்லும் அம்பும் அவள் கைகளில் இருப்பதற்காகவே பிறந்தது போல அவள் அதை கையாண்ட விதம் அவளின் இலக்கை நோக்கிய தீர்க்கமான பார்வை அவள் நின்றிருந்த மிடுக்கான தோரணை ஒவ்வொரு முறையும் அவள் அம்பை இலக்கு நோக்கி செலுத்திய நேர்த்தி எப்படியும் என் அம்பு சரியான இடத்தை பாய்ந்து சென்றடையும் என்று அவளுக்கு இருந்த உறுதி இதெல்லாமே இந்த்ரதனுஷை வியப்புக்குள்ளாக்கியது..
அது அவனுக்குள் அவள் முகத்தை பார்த்து விட வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை தூண்டிவிட போட்டியாளர்களுக்கு பின்னே அமர்ந்திருந்தவன் முன்னே வந்து அவள் முகம் பார்க்க முனைந்தான்..
ஆனால் அந்த குறுகுறு பார்வையோ அவளை மொத்தமாய் வெற்றிப் பாதையில் இருந்து விலக்கி இருந்தது..
அதுவரை அவள் மூளை இதயம் கண்கள் கைகள் கால்கள் என உடலின் ஒவ்வொரு அணுவையும் ஒரே இடத்தில் ஒருங்கே குவித்து கவனம் முழுவதும் இலக்கின் மேல் வைத்து தன்னுடைய அம்பை தான் குறி வைத்த இடத்தில் சொல்லி அடிப்பது போல் எய்துக் கொண்டிருந்தவள் அவன் விழி பார்வையில் மொத்தமாய் தடுமாறி போக அவள் எய்த அம்புகளோ தடம் மாறி போயின..
அவள் முகத்தை குறுகுறுவென பார்த்திருந்த அவன் பார்வையின் தீரத்தில் அவள் இதயமோ படபடத்து போனது.. முதல் முதலாய் வில்விழியின் விழிகள் அவள் அம்பு போய் சேரும் இடத்திற்கான இலக்கை விட்டு தன் இதயம் போய் சேரும் இடத்திற்கான இலக்கை குறி வைத்து பார்த்திருந்தது..
சிரமப்பட்டு அவனிடம் இருந்து தன் பார்வையை அவள் அகற்றி இருந்தாலும் அவள் மனக்கண்கள் மீண்டும் மீண்டும் அந்தப் விழிப்பார்வையின் பிம்பத்தை அவள் மனதில் திரையிட்டு அவளை பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது.. அவள் அவனின் புறம் பார்க்காமலேயே அவன் பார்வையின் பிம்பத்துகள் அவளுக்குள் ஊடுருவி அவளை மொத்தமாய் தன்னகத்தில் சிறை செய்திருந்தது..
கவனத்தை இலக்கை நோக்கி திருப்ப முடியாமல் அவள் மனமோ அவனை பார் அவனைப் பார் என்று சத்தமிட்டு அவளுக்குள் போராட்டம் நடத்த அதன் விளைவாய் மூளைக்கும் இதயத்துக்கும் நடந்த போரில் இறுதியாக இதயம் வென்றிருந்தது..
இங்கே இந்தருக்கும் அதே நிலைதான்.. அவள் முகத்தை பார்த்த நொடி அவன் கண்கள் அவளின் அழகு முகத்தோடு ஒட்டிக் கொண்டார் போல அவனால் தன்னுடைய பார்வையை இம்மி அளவு கூட அவளிலிருந்து விலக்க முடியவில்லை..
அவளையே பார்த்திருந்தவன் அவளுடைய இரண்டு அம்புகள் குறிதவற அதை அறிவிப்பாளர் அறிவிக்கும்போதுதான் தான் அவளுக்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது அவனுக்கு..
அதை உணர்ந்தவன் அங்கிருந்து மறுபடியும் தன் இடத்திற்கு வந்து அமர ஆனாலும் வழக்கமாக அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் போட்டிகளில் பரிசுகளை வென்று குவிப்பவள் இன்று வித்யாவிற்கு சமமான புள்ளிகளையே எடுத்திருந்தாள்..
அதன் பிறகு வேறு வழியின்றி இரண்டு பேரில் யார் நடுப் புள்ளிக்கு மிக அருகில் அம்பை செலுத்தி இருக்கிறார்கள் என்று பார்த்து அதை வைத்து வித்யாவிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது..
முதல் முறையாய் தோற்றிருந்தாள்.. அதனால் தானோ என்னவோ தோல்விக்கு காரணமாய் இருந்த இந்திர தனுஷ் மேல் அவளுக்கு ஒரு சிறு கோபம் முகிழ்த்தது உள்ளுக்குள்..
அவன் புறம் காந்தத்தின் ஈர்ப்பு சக்திக்கு இழுத்துச் செல்லப்படும் இரும்பாய் ஒரு புறம் அவள் மனம் ஓடிக்கொண்டிருக்க இன்னொரு புறம் அவளின் தோல்விக்கு காரணமான அவனை அவள் இதழ்களோ இயந்திரத்தனமாய் திட்டிக் கொண்டிருந்தது..
“ஐயோ. இவனை யாரு என் முன்னாடி வர சொன்னா? என் இத்தனை வருஷம் ரெக்கார்டை உடைச்சிட்டான்.. மூணு வருஷமா நான் எந்த இவன்ட்லயும் தோத்ததில்லை.. இன்னைக்கு இவன் மூஞ்சில முழிச்சேன்.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. இனிமே எந்த காரணத்தைக் கொண்டும் இவனை என் வாழ்க்கையில மீட் பண்ணவே கூடாது கடவுளே..” இப்படித்தான் வேண்டிக் கொண்டாள் அவள்.. ஆனால் கடவுளுக்கு அப்படியே அந்த வேண்டுதல் எதிர்மாறாக கேட்டதோ என்னவோ..
போட்டி முடிந்த பிறகும் கூட இருவர் இதயத்திலும் ஒருவரை ஒருவர் கண்ட படபடப்போ அலைப்புருதலோ அடங்கவே இல்லை.. போட்டி முடிந்து பரிசை வழங்கும்போது அவள் முன்னே நின்றிருந்த தனுஷின் பார்வை அவள் கண்கள் வழி ஊடுருவி இதயம் என்னும் நிலப்பரப்பை மொத்தமாய் உழுது அதில் ஆசை விதைகளை விதைத்திருக்க அங்கே காதல் பயிர் மெதுவாக துளிர்விட்டது…
தலைநிமிர்ந்து பார்த்து அவன் பார்வையை சந்திக்க திராணியில்லாமல் தலை குனிந்தபடியே பரிசுகளை வாங்கிக் கொண்டாள் அவள்.. அவளுக்குள் என்ன நடக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை..
போட்டி நடத்திய அகாடமி என்ற ரீதியில் இந்த்ர தனுஷ் போட்டியாளர்களை பாராட்டி பேசும்போது மலர்விழி பற்றி பேச தொடங்க அவன் இதழிலிருந்து மலர்விழி என்று அவள் பெயரை உச்சரித்த போது ஏனோ அந்தப் பெயரை திரும்ப உச்சரிக்க அவன் இதழ்கள் தீரா ஏக்கம் கொண்டது..
அந்த உந்துதலில் மலர்விழி.. என்று அவள் பெயரை ஒருமுறை சொன்னவன் மலர் என்று ரசனையோடு மென்மையாய் அந்த பெயருக்கு வலிக்காமல் மைக்கில் சொல்லி இருக்க அங்கு இருந்தவர்கள் அத்தனை பேருமே அவனை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தனர்.. அதில் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவளுக்கோ அவனின் ரசனையான பார்வை அவள் உடலெங்கும் பூ பூக்க செய்து இருந்தது..
எதுவுமே அவள் கட்டுப்பாட்டிலும் இல்லை அவன் கட்டுப்பாட்டிலும் இல்லை.. இருவருமே அவர்கள் இயல்புக்கு முரணான நிலையில் தான் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.. இருவருக்குமே மூளை செயல் இழந்து இதயம் அதிவேகமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தது..
அவனும் தட்டு தடுமாறி ஒரு வழியாக சமாளித்து தன் பேச்சை முடித்தான் அவன்..
போட்டி முடிந்து அவர்கள் எல்லோரும் கிளம்பும் நேரம் அவள் பைக்குள் தன் உடைமைகளை வைத்து கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்க அவள் அருகில் வந்தான் இந்தர்..
அவளோ மும்முரமாக பைக்குள் பொருள்களை அடுக்கி வைக்கும் வேலையில் இருக்க அவனோ மெல்ல மலர் என்று அழைத்த நேரம் குனிந்திருந்த அவள் இதயத்தில் தடக்தடக்கென ரயில் ஓசை கேட்டது..
“ஐயோ வந்துட்டானே படுபாவி.. மலரு.. ஸ்டெடியா இருடி.. ஏதாவது சொதப்பி வச்சிறாத..”
தனக்கு தானே சொல்லி சிரமப்பட்டு தன்னையே நிலைப்படுத்திக் கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்த்த நொடி மொத்தமாய் அத்தனை நேரமாக திரட்டி மனதை சமன்படுத்தி வைத்திருந்த அவளுடைய உறுதி அத்தனையும் சுக்கு நூறாய் நொறுங்கிப் போனது…
அவனைப் பார்த்த கணம் மனம் நாலு கால் பாய்ச்சலில் அவனை நோக்கி பாயத் தொடங்கி இருந்தது.. அதை கட்டுப்படுத்தியவள் தடுமாறாத பார்வையோடு அவன் பார்வையை சந்தித்து “ஹலோ சார்.. சொல்லுங்க.. என்ன விஷயம்?” சாதாரணமாக பேசினால் எங்கே அவன் முன்னே பனிக்கூழாய் உருகி உறைந்து விடுவேனோ என்று சற்று இறுக்குமாய் தான் அவனோடு பேசினாள்..
அவனும் தன்னுடைய பார்வை அவளுக்குள் என்னென்ன மாற்றங்களை எதிர்வினைகளை நிகழ்த்துகிறது என்று தெளிவாக உணர்ந்திருந்தான்.. ஆனாலும் தன் திமிரையும் மிடுக்கையும் குறைக்காமல் ஆளுமையோடு பேசியவளை இன்னும் இன்னும் தன்னகத்துக்குள் பூட்டிக்கொள்ள தோன்றியது ஆண் அவனுக்கு..
“பரவாயில்லையே மிஸ் மலர்.. இதுவரைக்கும் யாருமே பீட் பண்ண முடியாத எங்களோட பெஸ்ட் ஸ்டூடண்ட் வித்யா.. அவளுக்கே டஃப் கொடுத்துட்டீங்க.. நைஸ் பெர்ஃபாமென்ஸ்.. ஐ லைக் யுவர் கான்ஃபிடன்ஸ்.. ஆனா நீங்க இந்திர தனுஷ் அகடமியில இருந்திருந்தா எனக்கு என்னவோ நீங்க இவ்ளோ நேரம் நேஷனல் லெவல் சாம்பியன் ஆயிருப்பிங்களோன்னு தோணுது.. யூ அர் இன் த ராங் ஹேன்ட்ஸ்..”
இந்த்ரதனுஷ் ஒரு சிறந்த பயிற்சியாளன்.. அவனுக்கு ஏனோ வில்விழியை இந்திரதனுஷ் அகாடமியில் சேர சொல்லி அவளுக்கு தானே பயிற்சி கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.. அவளுக்கு ஒரு சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்திருந்தால் இந்நேரம் அவள் முன்னேற்றம் மிக அதிகமாக இருந்திருக்கும் என்று தோன்றியது அவனுக்கு..
அதனாலேயே அவனுடைய பயிற்சி கொடுக்கும் திறனின் மேலிருந்த அதீத நம்பிக்கையில் அவன் அப்படி பேசி இருக்க அவளோ “ஓ.. அப்படியா சார்.. அப்படின்னா இவ்ளோ நாள்ல வித்யா நேஷனல் சாம்பியன் ஆகி இருக்கணுமே… அவங்க ஏன் இன்னும் டிஸ்டிரிக்ட் லெவல் சாம்பியன்ஷிப்பே தாண்டாம இருக்காங்க..?” அவளும் திமிராய் தான் கேட்டாள்..
“நல்ல கேள்விதான்.. நீங்க சொல்றதும் கரெக்ட் தான்.. நான் வித்யாவையே ட்ரெயின் பண்ணிக்கிறேன்… நீங்க கிளம்புங்க.. அண்ட் ஆல் த பெஸ்ட்..”
அவனும் அவளிடம் இறங்கி போகவில்லை.. திமிராய் தான் பதில் சொன்னான்..
“அப்புறம்.. மிஸ். மலர்விழி இங்க டிஸ்டர்ப் ஆன மாதிரி வேற எங்கேயும் யாரை பார்த்தும் டிஸ்டர்ப் ஆகிடாதீங்க..”
அவன் சொன்னதை கேட்டு நிமிர்ந்தவள் அவன் கன்னத்தின் உள் பகுதியில் நாக்கை துழாவி ஒரு கேலி புன்னகையோடு அவளை ஆழமாய் பார்த்திருக்க அந்தப் பார்வையில் சிறிது தடுமாறி தான் போனாள்..
அவனுக்கும் அவள் விழிகளை பார்த்த நொடி தன்னை மறந்த மயக்கம் தான்.. அந்த விழி வில்லின் அம்புகளை விரும்பியே தன் மீது வாங்கிக் கொண்டான் அவன்.. அந்த விழிவில் வட்டத்திலிருந்து அகலவே மனம் வரவில்லை அவனுக்கு..
கோவமாக தன் பையின் சிப்பை சர்ரென இழுத்து மூடி அதை மாட்டிக் கொண்டு வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள் விழி..
“போடி போ.. என்னை தவிர உன்னை இந்த மாதிரி வேற எவனும் டிஸ்டர்ப் பண்ண மாட்டான்.. வேற எவன் கிட்டயும் டிஸ்டர்ப் ஆகவும் உன்னை விடமாட்டேன்.. வாழ்க்கை முழுக்க என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும்… இல்ல இல்ல… தப்பு… உன் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் இந்த இந்தர் மட்டும் தான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருப்பான்.. கூடிய சீக்கிரம் உன்னை தேடி வரேன் டி சரவெடி..”
இவன் இப்படி என்றால் அங்கே வில்விழிக்கோ வீட்டிற்கு போய் இரண்டு நாட்கள் ஆகியும் அவன் நினைவாகவே இருந்தது.. வேலையே ஓடவில்லை..
“அவனாலதான் முதல் முதல்ல நான் ஒரு இவன்ட்ல தோத்து இருக்கேன்.. ஆனாலும் அவனை மறக்கவும் முடியல.. வெறுக்கவும் முடியல.. அவன்தான் கேட்டான்ல அந்த அகாடமில வந்து சேர்ந்துக்கன்னு.. பெரிய இவ மாதிரி அவனை எதிர்த்து கேள்வி கேட்டுட்டு இப்போ உட்கார்ந்து புலம்பிகிட்டு இருக்கேன்..”
நிஜமாகவே தவித்து போனாள் அவள்.. திரும்பவும் அவனை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கவும் ஆரம்பித்திருந்தாள்..
அன்று முதல் முதலில் அவள் வில்லில் இருந்து அம்பை தொடுத்த போது அவளுடைய மிடுக்கையும் கம்பீரத்தையும் திமிரையும் பார்த்து அவளில் மொத்தமாய் விழுந்திருந்தவன் இப்போது அவள் புல்லட் ஓட்டி வந்த அழகில் இன்னுமே மயங்கி போனான்..
“ஹப்பா.. அந்த ஸ்ட்ரென்த் அந்த கட்ஸ் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது.. இது தான் என் மலரோட ப்ச்.. வில்லியோட அழகு.. அழகான ராட்சசி டீ நீ..”
இந்த்ரதனுஷ் அகாடமி அவள் எப்படி விட்டு சென்றாளோ அப்படியே தான் இருந்தது.. ஆங்காங்கே ஒரு நாலைந்து மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்கள்.. அவர்களை பார்த்தபடியே நகர்ந்தவள் கண்ணில் அவள் பட்டாள்..
வித்யா..
அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவள் சட்டென திரும்பி இந்தரை பார்த்து “இவ எதுக்கு இங்க இருக்கா? அவ்வளவு பண்ணியும் இவளை மறுபடியும் எதுக்கு அகடமில சேர்த்துக்கிட்டு இருக்க. உனக்கு என்ன பைத்தியமா? இவளால நாம எவ்வளவு மன உளைச்சலுககு ஆளானோம்? அதுக்கு அப்புறமும்..” அவள் கோவமாய் கேட்டாள்..
“ஹேய் படபடன்னு பொரியாதடி.. இன்னும் அதே சரவெடியா தான் இருக்கே.. நான் சொல்றதை முதல்ல கேளு.. அவ அன்னைக்கு வராததற்கு காரணம் இருக்கு..”
“அப்படி மிரட்டி இருந்தா கூட அவ வந்து இருப்பா.. ஆனா விஷயம் அது இல்லை..”
“பின்ன?”
“அவங்க அன்னைக்கு நடந்ததை வீடியோ எடுத்து வெச்சு அவளை மிரட்டி இருக்காங்க.. அவ என்ன பண்ணுவா? அவ கோர்ட்டுக்கு வந்தா அந்த வீடியோவை லீக் பண்ணுவோம்னு சொல்லி இருக்காங்க.. வேற வழி இல்லாம..”
“ஷிட்.. ராஸ்கல்ஸ்.. ஏன் இந்தர் இவங்க இப்படி இருக்காங்க.. ஒரு அகடமியோட லெவல்.. அவங்களோட க்ரோத் இதெல்லாம் அவங்க ஸ்டுடென்ட்ஸோட ட்ரெயினிங் அன்ட் பர்ஃபார்மன்ஸ் மூலமா இம்ப்ரூவ் பண்ணனும்.. ஆனா இவங்க ஏன் இந்த இவ்வளவு கேவலமா..”
“என்ன செய்ய? எல்லாருமே மார்க்கண்டேயனோட பிள்ளைங்க மாதிரி இருப்பாங்களா?”
அதைக் கேட்டு அவனை முறைத்தவள் “அது என்ன மார்க்கண்டேயனோட புள்ளைங்க.. ஏன்..? சகுந்தலாவோட பிள்ளைங்கன்னு சொல்லலாமே.. நீங்க அத்தைக்கும் பையன் தானே..? நான் இப்ப சொல்றேன்.. அத்தையோட வளர்ப்புனால தான் நீங்க பொண்ணுங்க கிட்ட இவ்வளவு நல்ல விதமா நடந்துக்கிறீங்க? மாமாவை ஃபாலோ பண்ணி இருந்தீங்கன்னா இத்தனை நேரம் இந்த்ரதனுஷ் அகடமியில ஒரு பொண்ணு கூட இருந்திருக்க மாட்டா..”
அவள் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்து விட்டான் அவன்..
“இன்னும் அதே சரவெடியா தாண்டி இருக்க வில்லி.. அதனாலேயே உன்னை இன்னும் இன்னும் ரொம்ப பிடிக்குது..”
அவன் சொல்ல வெட்கப்பட்டு தலையை குனிந்து கொண்டாள் அவள்..
“இதுவும் அழகா இருக்கே.. நான் என்னடி பண்ணுவேன்? மேடம் கண்டிஷன் வேற போட்டு இருக்கீங்க.. இதுக்கு மேல தாங்காது.. வா போலாம்..” என்றான் அவன்..
“நீங்க போங்க.. நான் வித்யா கிட்ட பேசிட்டு வரேன்” என்றாள் அவள்..
பயிற்சி செய்து கொண்டிருந்த வித்யாவின் தோளை தொட்டவள் அவள் திரும்பியதும் “எப்படி இருக்க டா.. நல்லா இருக்கியா?” என்று பரிவோடு கேட்க
“அக்கா..” என்று வியப்போடு அழைத்தவள் “எப்படி இருக்கீங்க கா? சாரி கா.. அன்னைக்கு கோர்ட்டுக்கு வந்து என்னால அவங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல முடியல.. அவங்களை ஒண்ணுமே பண்ண முடியல கா..”
“பொண்ணுங்க வளர்றதை தடுக்குறதுக்கு எப்படி எல்லாம் என்னல்லாம் செய்றாங்க பாத்தியா? நான் அந்த விஷ்வஜித் அகடமியில தான் ஸ்டுடென்ட் இருந்தேன்னு நினைக்கிறதுக்கே அவமானமா இருக்கு.. உனக்கு எவ்வளவு பெரிய கொடுமையை பண்ணி இருக்காங்க… அவங்கள இப்படி தண்டிக்க முடியாம போச்சே..”
அன்று நடந்த கொடுமையான விஷயங்கள் அவள் நினைவில் வந்து போயின..
“நீ ஒன்னும் கவலைப்படாத.. உனக்கு இவ்வளவு பெரிய கொடுமையை பண்ணவங்களுக்கு தண்டனை கிடைக்காம நான் விடமாட்டேன்.. அந்த விஷ்வாவையும் அவன் ஃப்ரெண்ட்ஸையும் ரேப் கேஸ்ல உள்ள தள்ளல.. என் பேரு வில்விழி இல்ல..”
பெண் சிங்கமாய் கர்ஜித்தாள் அவள்..
“வில்விழியா? உங்க பேரு மலர்வழி தானே கா?”
“அது ரொம்ப சாஃப்ட்டா இருக்குல்ல.. அவ்வளவு சாஃப்டா இருந்தா எல்லாரும் கசக்கி போட்டுருவாங்க நம்மை.. அதான் கொஞ்சம் கெத்தா இருக்கட்டுமேன்னு வில்விழின்னு எனக்கு பிடிச்ச மாதிரி என் பேரை மாத்திக்கிட்டேன்..”
“வாவ் சூப்பரா இருக்கு கா இந்த புது பேரு.. இனிமே நானும் உங்களை வில்லக்கான்னே கூப்பிடுறேன்..”
அதைக் கேட்டு சிரித்த வில்விழி “உங்க சார் என்னை வில்லினு கூப்பிடுறார்..” என்று அவளிடம் ரகசியமாய் சொல்ல அவளோ மனம் விட்டு சிரித்தாள் அதைக் கேட்டு..
இந்தப் பெண்ணை அந்த ஒரு நிமிடமாவது மனம் விட்டு சிரிக்க வைத்தோமே என்று சற்று நிம்மதியாய் இருந்தது வில்விழிக்கு..
அன்றைய உணவு நேரம் முன்னே எப்படி பெண்கள் தங்கள் கணவர்களுக்கு பரிமாறி விட்டு அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவி அவர்களுக்கு கை துடைக்க துவாலையும் கொடுத்து பிறகு தாங்கள் உண்பார்களோ அதே போலவே இன்று பெண்கள் மூவருக்கும் உணவு வேளையில் பணிவிடை செய்தார்கள் அந்த வீட்டின் ஆடவர்கள்.. அதன் பிறகே அவர்கள் உணவு உண்டார்கள்..
முதல் முறையாக அந்த வீட்டில் இருந்த நடைமுறை மாற்றப்பட்டு இருந்தது.. உணவு உண்டுவிட்டு சக்தியோடு ப்ருத்வி விளையாட போகிறேன் என்று அவளை தூக்கி கொண்டு போயிருந்தான்.. அவளும் தன் சித்தப்பாவோடு நன்கு ஒட்டிக்கொண்டாள்..
இந்தரோ “டேய்.. நானே அவளை பொறந்ததுலருந்து பார்க்காம இன்னிக்கு தான் பார்க்கறேன்.. அதெல்லாம் இன்னும் ஒரு வாரத்துக்கு நான் இவளை யார்கிட்டயும் தரமாட்டேன்” என்று சொல்லி முதலில் மறுத்தான் தான்..
ஆனால் அதன் பிறகு ப்ருத்வி சொன்ன வார்த்தையில் தன்னாலேயே குழந்தையை அவனிடம் கொடுத்து இருந்தான்..
“டேய்.. எனக்கு புரியுது டா.. ஆனா விழி இந்த வீட்டை விட்டு போனப்ப நீ எவ்வளவு நாள் ரொம்ப வெறுமையா இருக்குன்னு சொல்லி சின்ட்டூவை உன்னோட வெச்சுக்கிட்டு விளையாடுவ.. இப்ப எனக்கும் அப்படிதான்டா இருக்கு.. தனியா உட்கார்ந்திருந்தா மானு நெனைப்பும் சின்ட்டூ நெனைப்புமாவே இருக்குடா.. எவ்வளவு நேரம் தான் என் புலம்பலை எல்லாம் கர்ணா கிட்ட புலம்பி அவன் உயிரை எடுக்கிறது.. பாவம் டா அவன்.. சக்தியோட சிரிப்புல என் மனசு கொஞ்சம் லேசாயிடுது டா..”
அவன் கண்களும் கலங்கி இருக்க அதற்கு மேல் சக்தியை கொடுக்காமல் இருப்பானா இந்தர்..
“போடா… அவளை தூக்கிட்டு போய் விளையாடிட்டு இரு..” என்று சொல்லி அவனிடம் சக்தியை கொடுத்து அனுப்பினான்.
இரண்டடி எடுத்து வைத்தவன் இந்தர் புறம் திரும்பி “ஆமா வில்விழியை கூட தான் நீ மூணு வருஷமா பாக்கல.. இப்பதானே அவளோட சேர்ந்துருக்க.. அவ மூணு வருஷமா தனியா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காடா.. அவளோட டைம் ஸ்பென்ட் பண்ணு..”
அவன் சொன்னதை கேட்டு இதழ் விரித்தவன் “நீ சொல்றதும் கரெக்ட் தான்.. சரிடா.. நீ குழந்தையை எடுத்துட்டு போ.. நான் அவளை பாக்குறேன்..” என்றான் தனிச்சையாக..
தங்கள் அறைக்கு வந்தவன் வில்விழி அலமாரியை திறந்து கொண்டு அப்படியே கண்கள் கலங்க நின்றிருப்பதை பார்த்தான்..
அவனுக்கு புரிந்தது.. அந்த அலமாரியில் அவளுடைய ஆடைகள் அவள் எப்படி வைத்து விட்டு போயிருந்தாளோ அதே நிலையில் தான் இப்போதும் இருந்தன..
அவ்வப்போது அவள் புடவை ஒன்றை எடுத்து தன் நெஞ்சில் இறுக்கியபடி அவளை நினைத்து மருகிக் கொண்டிருப்பான் இந்தர்..
மூன்று வருடங்களாக இப்படிப்பட்ட தாப வாழ்க்கையையே அவன் வாழ்ந்திருக்கிறான் என்று உணர்ந்தவளுக்கு தன்னவனின் வலி அவளுக்குள்ளும் வலியை தான் கொடுத்தது..
ஆனால் இங்கேயே இருந்திருந்தால் தன் கனவுகளை மொத்தமாய் அழித்து சகுந்தலாவை போல் தன்னையும் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்திருப்பார்கள் என்று தெரிந்துதான் அவள் இங்கிருந்து விலகிச் சென்றிருந்தாள்..
அவளுக்கு நெஞ்சில் அப்படி செய்வதற்கு நிறைய சக்தி தேவையாக இருந்தது.. வேறு வழியின்றி மனதை பாறையாக்கிக் கொண்டுதான் அவள் இந்தரை விட்டு பிரிந்தாள்..
மூன்று வருடங்களுக்குப் பிறகு அவள் இப்போது திரும்பி வந்ததே அந்த வீட்டில் இருந்த நடைமுறைகளை கொஞ்சமாவது மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான்..
இந்திர தனுஷ் ஆர்ச்சரி அகாடமி பங்குகளை சம்யுக்தாவிடம் விற்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று தெரிந்த உடனேவே அவள் புரிந்து கொண்டாள்.. இந்தர் அவளைப் பிரிந்து ஜீவனற்று போய் இருப்பான் என்றும் அவனால் வேறு எதிலும் கவனம் செலுத்தி இருக்க முடியாது என்றும் புரிந்ததனால் தான் சம்யுக்தாவிடம் சொல்லிவிட்டு உடனேவே இங்கு கிளம்பி வந்து இருந்தாள்.. எல்லாவற்றையும் மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு..
அதற்கான முதல் அடியை எடுத்தும் வைத்திருந்தாள் ஆனால் இந்தரின் காதலை மூச்சு முட்ட அனுபவித்தவளாயிற்றே.. இப்படி அவனை வருத்த வேண்டி இருக்கிறதே என்று மனம் முழுக்க பாரமாய் இருந்தது அவளுக்கு..
இந்தர் உள்ளே வந்தான்..
“நான் அம்மா வீட்டுக்கு போய் மானுவை கூட்டிட்டு வரலாம்னு நினைக்கிறேன்..
அவள் நேரடியாக விஷயத்துக்கு வர “போலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் விழி..” என்றான்..
“சொல்லு..” என்பது போல் அவனை பார்க்கவும்
“அப்பா அம்மாகிட்ட நடந்துக்கிட்டது ரொம்ப அதிகம் தான்.. இல்லன்னு சொல்லல.. ஆனா நீ போட்ட கண்டிஷன்ஸ்.. அதெல்லாம் அவ்வளவு ஈசி இல்லை.. அந்த கோவத்துலதான் அவர் அப்படி நடந்துட்டு இருப்பார்.. ஆனா அதுக்காக இன்னிக்கு நீ அப்பாகிட்ட பேசுனது ரொம்ப அதிகம்.. என்ன இருந்தாலும் என் அப்பா.. அவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கணும் இல்ல..? அப்படியே நீ பட்டுனு மரியாதை இல்லாம பேசற.. அது தப்புன்னு உனக்கு தோணவே இல்லையா?”
நிதானமாக பேசினான் இந்தர்.. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.. அவள் பிரிவு அவனுக்குள் அவ்வளவு பொறுமையை தந்து இருந்தது.. ஒரு பெருமூச்சு விட்டாள்..
“ஆமா.. இந்தர்.. நான் அவரை மரியாதை இல்லாம ரொம்ப ரூடா தான் பேசுனேன்.. ஒத்துக்கிறேன்.. ஆனா அவர் அத்தை கிட்ட நடந்துக்கிட்ட முறை சரியா?”
“சரியில்ல தான்.. ஆனா அதை அம்மா கேட்கட்டுமே.. நீ எதுக்கு அவர்கிட்ட இப்படி மரியாதை இல்லாம பேசுன..?”
அவன் விழியோடு விழிகள் கலந்து அவள் கேட்ட கேள்வியில் அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை..
“அ..அது கேட்கிறதும் கேட்காததும் அவங்க சாய்ஸ் தானே விழி.. அதை நீ எப்படி கையில எடுத்துக்க முடியும்..?”
“ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கோ இந்தர்.. நான் இங்க வந்தது இந்த கண்டிஷன்ஸ் எல்லாம் போட்டது.. உன் அப்பாவை மட்டும் மாத்தறதுக்கு இல்லை.. உங்க அம்மாவையும் மாத்தறதுக்கு தான்.. அவங்க அப்படி இருக்கறதுனால தான் எனக்கும் மானுக்கும் அதே கொடுமைகள் தொடருது.. அவங்க மாறினா எங்களுக்கும் இந்த அடக்குமுறை இருக்கிற வாழ்க்கையிலருந்து விடுதலை கிடைக்கும்.. அவங்க அவங்களா பேச மாட்டாங்க.. அவங்களை பேச வெக்கணும்..”
ஒரு பெருமூச்சை விட்டு “இப்பதானே தொடங்கி இருக்கேன்.. பாக்கலாம்.. உங்க அப்பாவை மரியாதை இல்லாம பேசினேன்னு சொன்னீங்களே.. நான் கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்ததுலருந்து இந்த வீட்டை விட்டு வெளியே போற வரைக்கும் என்னைக்காவது உங்க அப்பா கிட்ட இந்த மாதிரி பேசி இருக்கேனா?”
“இல்ல.. எனக்கு அதுதான் ஆச்சரியமா இருக்கு.. இன் ஃபேக்ட் அப்பா என்னை பேர் சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு சொன்ன அப்புறம் அன்னைக்கு ரூம்ல வந்து என்னோட அவ்வளவு சண்டை போட்டே.. ஆனா அடுத்த நாளிலிருந்து அவர் முன்ன நீ என்னை பேர் சொல்லி கூப்பிடுறதை நிறுத்திட்டே.. என்னோட வாங்க போங்கன்னு மரியாதை கொடுத்து தானே பேசினே..”
“அப்படி இருந்தவ தான் இப்ப இப்படி பேசி இருக்கேன்.. நான் இவ்வளவு ரூடா நடந்துக்கறதுக்கு காரணம் இல்லாம இருக்கும்னு நினைக்கிறீங்களா? அவரை எதிர்த்து கேள்வி கேட்டா அவர் எவ்ளோ ரூடா மாறுறார்.. நீங்க பாத்தீங்கல்ல? அத்தை கையில குழம்பை ஊத்திட்டு கொஞ்சம் கூட அதை பத்தி கவலையே இல்லாம அதெல்லாம் ரொம்ப சகஜங்குற மாதிரி இருக்காரு.. அவங்க வலி அவருக்கு புரியல.. வக்கீலுக்கு படிச்சவங்கள ரொம்ப சாதாரணமா ஒரு வார்த்தை கூட தனக்காக பேச முடியாதபடி இந்த வீட்டுக்குள்ளேயே அடக்கி வெச்சிருக்கிறார்.. அவங்களுக்கும் மனசு இருக்கு.. அவங்களுக்கும் கனவு இருக்கும்.. அவங்களுக்கு அதை புரிய வைக்கணும் அதுக்கு தான் நான் வந்திருக்கேன்..”
“புரியுது ஆனா அது அவங்களுக்குள்ள இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங்.. அதுல நாம ஏன்..”
“சரி.. அவங்க பேச வேண்டாம்.. நீ பேசலாம்ல..? உன் அம்மாக்கு கையில சூடான குழம்பை ஊத்தி சிவந்து இருக்குன்னு பார்த்தும் உன் அப்பா கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா? உன் அம்மாக்கு மருந்து போடுறேன்னு சொன்ன.. ஆனா எவ்வளவு நாள் மருந்து போட்டுக்கிட்டே இருப்ப?”
“அவங்களே பேசாம இருக்கும்போது நான் எப்படி விழி கேட்க முடியும்?”
“உன் அப்பா உன் அம்மாவை இப்படி காயப்படுத்தறது ஒன்னும் முதல் முறை இல்லையே.. ஒவ்வொரு முறையும் என்ன கோவம் இருந்தாலும் தன் கையில இருக்கிற பொருள் என்னன்னு கூட பாக்காம அவங்க பக்கம் அதை விட்டெறிஞ்சு மனுஷத்தன்மையே இல்லாம நடந்துக்குறவர் தானே அவரு.. அவரு நேரடியா அவங்களை அடிக்க மாட்டார்.. ஆனா ஒரு பொருளை அவங்க முன்னாடி தூக்கி போட்டு உடைக்கும் போது அதைவிட அதிகமா வலிக்கும் இந்தர்.. சில சமயம் அப்படி அவர் தூக்கி போடுற பொருள் உடைஞ்சு சிதறி உங்க அம்மாக்கு அடி கூட பட்டிருக்கு.. ஏன் அத்தை அவர்கிட்ட ஒரு வார்த்தை நீங்க எதிர்த்து கேட்க கூடாதான்னு நான் கேட்டப்போ உங்க அம்மா என்ன பதில் சொன்னாங்க தெரியுமா?”
இந்தருக்கோ தன் அன்னையை நினைத்து கொஞ்சம் கண்கள் கலங்கித் தான் போயின..
“அவரை எதிர்த்து கேள்வி கேட்டா அடுத்த நிமிஷம் நான் இந்த வீட்டில இருக்க முடியாது.. என் பிள்ளைகளை விட்டுட்டு நான் எங்க போவேன்னு சொல்லு.. என்னால என் பிள்ளைகளை விட்டுட்டு இருக்க முடியாது.. அதுக்கு பதிலா அவர் பேசுற பேச்சையும் இந்த மாதிரி அவர் என்னை அவமானப்படுத்தி நடந்துக்கறதையும் பொறுத்துக்கிட்டு அவர் சொல்றபடி எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்துருவேன்னு சொன்னாங்க.. இதை கேக்குறப்போ உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கா? உங்க அம்மா அப்பாக்குள்ள பெரிய சண்டை எதுவும் வரல.. ஆனா உங்க அம்மா மனசுல எவ்ளோ போராட்டம் இருக்கும்ன்னு என்னைக்காவது யோசிச்சி இருக்கியா? உன் அப்பா உன் அம்மாவை இப்படியே காலம் முழுக்க காயப்படுத்திக்கிட்டே இருப்பாரு.. நீ அதுக்கு மருந்து போடுவ.. அப்படித்தானே..? உன் அப்பா செஞ்சது தப்புன்னு நீ கோவமா பேச வேண்டாம்.. அட்லீஸ்ட் சாதாரணமாவாவது சொன்னியா..? இல்லல்ல..? அதான் அவரை அத்தை கேள்வி கேட்டுருந்தா எப்படி இருக்கும்னு அவருக்கு காமிக்க வேண்டி இருந்தது.. அதைத்தான் நான் செஞ்சேன்.. எனக்கும் நான் இப்படி செய்யறது சந்தோஷமா இல்லை.. ஆனா வேற வழி இல்ல.. அத்தையையும் அவரையும் மாத்தியே ஆகணும்.. அத்தை அவங்களுக்காக பேச ஆரம்பிக்கணும்.. அப்பதான் இந்த வீட்ல பொண்ணுங்கள்லாம் மூச்சு விட்டு வாழ முடியும்..”
அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு அவள் பேசியதெல்லாம் நியாயமாகவே பட்டது..
“இந்தர்.. கணவன் மனைவிங்கறவங்க லைஃப் பார்ட்னர்ஸ்.. அவங்க அவர்கிட்ட வேலை பாக்குற அடிமை கிடையாது.. அவங்களுக்கும் கனவு மனசு எல்லாமே இருக்கும்.. அஃப்கோர்ஸ் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம்.. ஆனா அந்த காம்ப்ரமைஸ் ரெண்டு சைடும் இருக்கணும் இந்தர்.. காம்ப்ரமைஸ் மரியாதை அன்பு காதல் ஆசை இதெல்லாம் ம்யூசுவலா இருக்கும் போது தான் வாழ்க்கை நல்லா இருக்கும்.. ஆனா ஒரு சைடே விட்டுக் கொடுத்துட்டு போனா முதல்ல வலிச்சிட்டே இருக்கிற மனசு ஒரு ஸ்டேஜ்ல மரத்து போயிடும்.. எனக்கும் அத்தைக்கும் என்ன டிஃபரன்ஸ்னா அத்தை அடி வாங்கி அடி வாங்கி மரத்து போய் கிடக்கிறாங்க.. அவங்க ஆசை கனவு எல்லாத்தையும் மீட்டு எடுக்கவே முடியாத அளவுக்கு குழி தோண்டி புதைச்சிட்டாங்க.. நான் அப்படி இல்ல.. அவங்க மரத்துப்போன மனசை மீட்டு கனவை உயிரோட கொண்டு வரணும்னு நான் பார்க்கிறேன்.. சொல்லு.. நான் நினைக்கிறது தப்பா?”
“புரியுது விழி.. இனிமே நானும் இந்த சேஞ்சை கொண்டு வர்றதுக்கு உனக்கு துணையா இருப்பேன்..”
அவன் சொன்ன அடுத்த நொடி புன்னகைத்தவள் அவன் கன்னத்தில் கை வைத்து “தேங்க்யூ..” என்றாள்..
அவள் கைகளின் மேல் தானும் கை வைத்து “சாரிடி..” என்றவனின் மார்பில் புதைந்து ஒரு முறை அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் விழி..
அவனும் பதிலுக்கு அவளை அணைக்க கொஞ்சம் கொஞ்சமாய் அவன் கைகள் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டன..
அந்த அணைப்பில் தானும் உருகியவள் மெல்ல அவனுக்குள் மூழ்கத் தொடங்க அவன் கைகளோ அவள் உடலில் அத்து மீறி பயணிக்க ஆரம்பித்தது..
சிறிது நேரம் அவன் அணைப்பிலும் தேடலிலும் மயங்கி கிடந்தவள் தன்னை உணர்ந்த நொடி அவனிடம் இருந்து பதறி விலகினாள்..
“ஐயோ விழி.. கண்ட்ரோல் டி.. முதல்ல செய்ய வந்த வேலையை முடி.. அப்புறம் இவனோட தானே காலம் ஃபுல்லா இருக்க போற.. பாத்துக்கலாம்..”
தனக்கு தானே உள்ளுக்குள் கடிந்து கொண்டவள் “அது.. நான் அகாடமி போகணும்னு சொன்னேன்ல..? போலாமா?”
அவள் கேட்கவும் அவனும் அவளை ஆழ்ந்து அளப்பது போல் பார்த்த படி
“ம்ம்.. மேடம் கண்ட்ரோல்ல இருக்கீங்களா? பாக்கறேன்டி.. எத்தனை நாள் உன்னை நீயே போய் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கிறேன்னு..” மனதில் நினைத்தவன் “அகடமி தானே..? போலாம்..” என்று ஒரு மார்க்கமாய் அவளை பார்த்தபடி சொல்லிவிட்டு தன் காரின் சாவியை எடுக்க போக சட்டென அவன் கையைப் பிடித்து தடுத்தாள் விழி..
“எனக்கு கார்ல போகவேணாம்.. பைக்ல போகணும்..” என்க
“ஓகே..” என்றவன் பைக் சாவியை எடுக்கவும் பட்டென அவன் கையில் இருந்து அதை பறித்துக் கொண்டாள் விழி..
அவள் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு அவன் புல்லட் வண்டியை எடுக்கவும் அவனும் ஹெல்மெட்டை மாட்டியபடி பின்னால் ஏறி அமர்ந்தான்..
“ஏய்.. நீ புல்லட் ஓட்டுவியா? அங்க போய் புல்லட் ஓட்ட கத்துக்கிட்டியா?”
“ம்ம்.. அங்க போய்……. நிறை…..ய்ய கத்துக்கிட்டேன்..” அவன் விழிகளை பார்த்து அழுத்தமாய் சொன்னவள் “நல்லா பிடிச்சுக்கிட்டியா?” என்று கேட்க..
ஒழுங்காய் பிடித்துக் கொள்ளாமல் “ம்ம்.. அதெல்லாம் பிடிச்சாச்சு.. பிடிச்சாச்சு.. நீ கிளம்பு..” என்று அவன் அலட்சியமாய் சொல்லி முடிக்கவில்லை வண்டி நாலு கால் பாய்ச்சலில் வேகமாக கிளம்பியது..
கிளம்பிய வேகத்தில் அப்படியே பின்னால் வந்து முன்னால் சாய்ந்தவன் அவள் தோள்கள் இரண்டையும் அழுத்தமாய் இறுக பற்றி இருந்தான்..
“அடியேய்.. என்னடி இவ்ளோ வேகமா போற?” என்று கேட்க
“ஏன் நீ வண்டியில போகும்போது ஸ்லோவா மாட்டு வண்டி மாதிரியா ஓட்டிட்டு போவ? இப்படித்தானே போவ..? நானும் அதே மாதிரி போறேன்.. ஏன் பசங்க மட்டும் தான் வண்டியில் வேகமா போகலாமா? நாங்களும் போவோம் இல்ல.. ரோடு காலியா தானே இருக்கு.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனா அதுக்காக டிராஃபிக் ரூல்ஸ் ப்ரேக் பண்ண மாட்டேன்.. ஸ்பீட் லிமிட்டும் கிராஸ் பண்ண மாட்டேன்.. கவலைப்படாதே..” என்றவள் நன்றாய் தான் வண்டியை செலுத்தினான்..
இடை இடையில் வேகத்தடை வந்த போதெல்லாம் ஆணவனுக்கு தான் அவஸ்தையாய் போனது..
வண்டியின் வேகத்தை சிறிதும் குறைக்கவில்லை அவள்.. அடுத்த 15-வது நிமிடம் அகாடமி வாசலில் இருந்தாள்..
அகாடமி உள்ளே கால் எடுத்து வைத்த உடனேயே அவளுக்கு முதல் முதலில் இதே திடலில் இந்தரை சந்தித்த தருணம் நினைவுக்கு வந்தது..
அது ஒரு வில்வித்தைக்கான மாவட்ட அளவிலான போட்டி.. இந்த்ரதனுஷ் ஆர்ச்சர அகாடமியில் நடந்து கொண்டிருந்தது..
அந்த மாவட்டத்தில் இருந்த அத்தனை வில்வித்தை போட்டியாளர்களும் போட்டிக்காக அந்த அகாடமிக்கு வந்திருந்தார்கள்..
இந்த்ரதனுஷ் ஆர்ச்சரி அகாடமி போலவே இன்னொரு ஆர்ச்சரி அகாடமி தான் விஷ்வஜித் ஆர்ச்சரி அகடமி.. அங்குதான் விழி பயிற்சி மேற்கொண்டிருந்தாள்..
இந்திர தனுஷ் தன்னுடைய அகாடெமியில் மிகச் சிறந்த மாணவி வித்யா அடுத்து அறிவித்த போட்டியில் பங்கு பெற இருந்ததால் அவள் தான் எப்படியும் ஜெயிப்பாள் என்ற தீர்மானத்தோடு போட்டியாளர்களின் பின்னே அமர்ந்து போட்டியின் நிகழ்வை கவனித்துக் கொண்டிருந்தான்..
ஆனால் வித்யாவுக்கு எதிராய் போட்டி போட்டுக் கொண்டிருந்த மாணவி தன்னுடைய எல்லா அம்புகளையும் சரியாக தங்க நிற வளையத்துக்கு அருகில் எய்து புள்ளிகளில் பெரிய வித்தியாசத்தில் முன்னேறிக்கொண்டே இருந்தாள்..
பின்னே அமர்ந்திருந்த இந்தருக்கோ விஸ்வஜித் அகாடமியில் இப்படி ஒரு ஸ்டூடண்டா? அட.. யாருடா அவ..? அல்மோஸ்ட் எல்லா ஏரோஸூமே கோல்ட் ரிங் கிட்ட ஷூட் பண்றா..”
வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தவன் தனிச்சையாக எழுந்து அவள் யார் என்று பார்க்க போட்டி நடந்து கொண்டிருந்த பகுதியின் பக்கவாட்டிற்கு வந்தான்..
வந்தவன் வில்விழியின் முகத்தை பார்த்த மறு நொடி அவனுக்குள் ஏதோ ஒரு சொல்லமுடியாத ஈர்ப்பு அவளிடம்..
“யார் இந்த பொண்ணு..? பார்க்க இன்ட்ரஸ்டிங்கா இருக்காளே..”
அவன் யோசித்துக் கொண்டிருந்த நேரம் அவளோ சரியாக தங்க நிற வளையத்திற்குள் தன் அடுத்த அம்பை எய்திருந்தாள்.. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் மலர்விழி என்று அவள் பெயரை சொல்லி அவள் எடுத்திருந்த புள்ளிகளின் விவரங்களையும் அறிவிக்க அதைக் கேட்டு மெச்சுதலாய் புருவம் உயர்த்தினான் இந்தர்..
அடுத்த அம்பு எரியும் இடைவெளியில் எதேச்சையாய் இந்தரின் பக்கம் பார்த்தவள் அவன் தன்னையே விழுங்குவது போல் பார்த்திருக்க அவன் பார்வை அவளுக்குள் என்னென்னவோ ரசாயன மாற்றங்களை நிகழ்த்துவது போல் இருந்தது.. அவளுக்கும் அவனை பார்த்த நொடி உள்ளுக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு.. ஒரு வித ஈர்ப்பு அந்த முகத்தில்.. என்னவென்று புரியவில்லை அவளுக்கு..
“என்ன..? இந்த கோச் நம்மளை இப்படி பார்க்கிறார்..” என்று யோசித்தவள் அதன் பிறகு எய்த அம்புகள் அத்தனையும் அவள் சொல் பேச்சை கேட்கவில்லை..
அங்கு இருந்த அறிவிப்பாளர் கூட திடீரென மலர்விழிக்கு என்ன ஆயிற்று என்று மைக்கிலேயே கேக்கும் அளவு அவள் அம்புகள் தங்க நிற வளையத்தில் இருந்து பாதை மாறி கருப்பு நிற வளையத்தில் சென்று தாக்கும் அளவுக்கு அவள் கவனத்தையும் மனதையும் முழுவதுமாய் சிதறடித்திருந்தது இந்தரின் பார்வை..
இரவு வேலைகளை முடித்துக் கொண்டு சகுந்தலா கொடுத்த பால் சொம்புடன் இந்தரின் அறைக்குள் நுழைந்தாள் வில்விழி..
உள்ளே நுழைந்தவுடன் கதவை தாழிட்டவள் பாலை ஒரு குவளையில் ஊற்றி அவன் கையில் கொடுத்து
“ஏங்க.. இந்தாங்கங்க.. இந்த பால குடிங்க.. அத்தை உங்களுக்கு கொடுக்க சொன்னாங்கங்க..” என்று பணிவான குரலில் பேச
அவனோ முகம் சுருக்கி “எது.. ஏங்க.. இந்தாங்கங்கவா? இப்ப எதுக்குடி ஏங்க வீங்கன்னு என்னவோ போல பேசற? என்னடி இது அசிங்கமா ஏங்க என்னங்கன்னுகிட்டு..”
“ஓ.. ஏங்கன்னு கூப்பிட்டா உங்களுக்கு பிடிக்கலையா? அப்படின்னா.. அத்தான்னு கூப்பிடவா? இல்ல… சுவாமி..? இல்லனா.. பிராண நாதா..? நீங்க எப்படி கூப்பிடனும்னு சொல்றீங்களோ அப்படியே கூப்பிடுறேங்க.. மாமா தான் சொல்லி இருக்காங்களே.. உங்க பேர் சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு..”
“என்னடி..? நக்கலா..? இங்க பாரு.. நீ கோவமா இருக்கேன்னு புரியுது.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு டி மலரு.. அவர் முன்னாடி நீ என்னை மரியாதையா கூப்பிட்டுக்கோ.. ஆனா அவர்தான் இப்ப இங்க இல்லல்ல? இப்ப எதுக்குடி இப்படி எல்லாம் கூப்பிட்டு என் உயிரை எடுக்கிற..?”
“என்னங்க நீங்க? இப்படி எல்லாம் சொல்றீங்க? உங்களுக்கு இந்த மாதிரி கூப்பிடுறது எல்லாம் பிடிக்கலைன்னா உங்களுக்கு எப்படி கூப்பிட்டா பிடிக்கும்னு சொல்லுங்க.. அப்படியே கூப்பிடுறேங்க..”
அவள் இன்னும் அப்படியே குழைந்து பேசிக்கொண்டு இருக்க அவனுக்கோ எரிச்சல் மண்டியது..
“ம்ம்ம்.. எனக்கு டேய் இந்தருன்னு கூப்பிட்டா புடிக்கும்.. அப்படியே கூப்பிடு..”
“அய்யய்யோ.. அதெப்படிங்க? அப்படியெல்லாம் கூப்பிட முடியாது.. அப்படி கூப்பிட்டா மாமா என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவாரு.. சாப்பிடும் போது அவர் சொன்னார் இல்ல.. அப்போ நீங்களும் அமைதியா உட்கார்ந்து கேட்டுக்கிட்டு தானே இருந்தீங்க..?”
“ஐயோ மலரு.. மேல மேல இரிடேட் பண்ணாத என்னை.. என்னால அவரை எதிர்த்து பேச முடியாதுடி.. ஒரு நாள்ல அவர் முன்னாடி மேக்ஸிமம் நீ ஒரு ஒன் ஹவர் இருப்பியா? அந்த ஒன் ஹவர் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி.. மத்த நேரம் எல்லாம் எப்பவும் போல என்னோட கேஷுவலா இரு.. இந்தர் நீ வா போனே பேசு.. ப்ளீஸ்..” அவன் கெஞ்ச அவளோ முரண்டு பிடித்தாள்..
“அய்யய்யோ.. உங்க கிட்ட பேசிட்டு இருந்ததில மறந்துட்டேன் பாருங்க..” என்றவள் சட்டென அவன் காலில் விழவும் பின்னால் நகர்ந்து நின்றவன் “ஏய் லூசு.. என்னடி பண்ற? எந்திரிடி.. எதுக்குடி இப்ப என் கால்ல விழற?” என்க
“ரூமுக்குள்ள வந்த உடனே புருஷன் கால்ல விழணுமாங்க..”
அவள் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல கண்ணை இறுக்கமாய் மூடித் திறந்தவன்
“இப்ப நீ இப்படி ங்க போட்டு கூப்பிடறதை நிறுத்த போறியா இல்லையா?”
“இல்லைங்க.. அப்படித்தான் கூப்பிடுவேன்.. என்னை மாமா அப்படித்தான் கூப்பிட சொல்லி இருக்காரு..”
அவள் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற அதற்கு மேல் பொறுக்க முடியாதவன் “இப்படியே விட்டா நீ பேசிக்கிட்டே போவ.. உனக்கு எப்பவும் மலரோட அதிரடி இந்தர்தான் லாயக்கு.. உன்கிட்ட எதுக்கு நான் கெஞ்சிகிட்டு இருக்கேன்?” என்றவன் சட்டென அவளை இழுத்து அவள் இதழோடு இதழ் சேர்த்து இருந்தான்..
அவன் மார்பில் கை வைத்து தன்னிலிருந்து பிரித்து தள்ளியவள் அவனை எரிப்பது போல் முறைத்து
“ஒன்னும் தேவை இல்ல.. அவரு என்னை வீட்டை விட்டு வெளியில அனுப்புவேன்னு சொல்றாரு.. கேட்டுக்கிட்டு சும்மா தானே இருந்தீங்க.. அவரோட ரூல்ஸெல்லாம் எப்படியும் என்னால ஃபாலோ பண்ண முடியாது.. கொஞ்ச நாள்ல எப்படியும் என்னை வீட்டை விட்டு வெளியில அனுப்பிடுவாரு.. நீங்க தனியாவே இருந்து பழகிக்கோங்க..”
இப்படி சொன்னவள் கட்டிலிலிருந்து ஒரு தலையணையை எடுத்து தரையில் போட்டு அப்படியே கட்டாந்தரையில் ஒருக்களித்து அவனுக்கு எதிர்ப்புறமாக முகம் திருப்பி படுத்துக்கொண்டாள்..
“ஐயோ கொல்றாளே..” என்று மேலிருந்து கீழாய் தன் முகத்தை கைகளால் அழுந்த மூடி திறந்தவன் “ஏய் மலரு.. கட்டில் மேல படுடி..” என்றான் கட்டளையாக
அவன் பேசியது எதுவுமே காதில் விழாதது போல் அவள் அப்படியே படுத்து இருக்க “ஓ அவ்ளோ திமிராயிடுச்சா மேடமுக்கு.. இருடி வரேன்..” என்றவன்
அப்படியே தரையில் இருந்து அவளை கையில் அள்ளி எடுக்க அவளோ கால்களை உதறிக் கொண்டு அவனில் இருந்து திமிற முயன்றாள்.. ஆனால் அவளுடைய எந்த முயற்சிக்கும் பலன் இல்லாமல் போனது..
அவன் தான் பிடிவாதக்காரனாயிற்றே.., அவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் அழுத்தமாய் பிடித்தபடி அவள் சுதாரிக்கும் முன் அவள் மேல் முழுதுமாய் படர்ந்து இருந்தான்..
அவள் இதழை தன் இதழால் மூடியவன் அவனை எதிர்ப்பதற்கு அவளுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை..
நொடிகளில் இருந்து சில நிமிடங்கள் வரை தொடர்ந்து இருந்தது அந்த வன்மையான இதழ் ஆக்கிரமிப்பு..
முதலில் எதிர்த்தாள் தான்.. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் இதழ் ஆக்கிரமிப்பில் அனலில் இட்ட மெழுகாய் அவள் கோபம் எல்லாம் உருகி வழிந்து ஓடி இருந்தது..
அதன் பிறகு அவளை அந்த மயக்கத்தின் பிடியிலிருந்து மீளவே விடவில்லை அவன்..
தொடர்ந்து அவள் மேனி எங்கும் வெடித்து சிதறும் எறி குண்டுகளாய் மாறி இருந்த அவன் மூச்சு காற்றின் வெப்பத்தினால் அவளை காமத்தீயில் எரித்து தன் முத்த கணைகளால் அவளை அதிரடியாய் தாக்கி அவளின் உடை என்னும் பாதுகாப்பு கவசத்தை மொத்தமாய் அகற்றி மோகமென்னும் வாளேந்திய விரல்கள் கொண்டு அடி முதல் நுனிவரை தீண்டி தீண்டி நகங்களையும் பற்களையும் காதல் போரின் உச்சத்தில் ஆயுதங்களாய் மாற்றி காயத் தடங்களை உண்டாக்கி அவளை ஆதி முதல் அந்தம் வரை ஆட்கொண்டு மிச்சமில்லாமல் அவன் செய்த காதல் யுத்தத்தில் மொத்தமாய் வீழ்ந்து போயிருந்தாள் வீரநங்கை அவள்..
அவனிலும் காதல் காயங்களுக்கு குறைவில்லை. ஆனால் தினம் தினம் அவளோடு கட்டில் போரிட்டு காயங்கள் கொள்ள தானாகவே சித்தமாகி இருந்தான் அவன்..
தினமும். இப்படி தான் மார்க்கண்டேயனின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்கொண்டு இறுகி போய் கோவம் கொண்ட கிளியாய் தங்கள் அறைக்கு வருபவள் இந்தரின் அதிரடி காதலில் அவனின் ஆசை கிளியாய் மாறி போவாள்..
இன்று வரை அவனின் ஆளுமையான காதலுக்கு அடிமையாக தான் கிடக்கிறாள்.. இப்போதும் அவளின் அனுமதியின்றி அவன் அவளின் இதழ் தீண்டிய வேளை பழைய மலர்விழியாக அந்த ஒரு சில நொடிகள் அவன் ஆதிக்கத்தில் கட்டுண்டு தான் இருந்தாள்..
அவனின் இந்த அடாவடி காதல் தன்னை பலவீனமாக்குவதாகவே உணர்ந்தாள் அவள்.. அவன் மேல் இருந்த காதலுக்காகவே மார்க்கண்டேயனின் அடக்குமுறைகளை வேறு வழியின்றி வாயை மூடி ஏற்க வேண்டியதாயிற்று அவளுக்கு.. அதன் விளைவு தான் இப்போது அவளிட்ட அந்த கடைசி நிபந்தனை..
முடிந்தவரை அவன் கட்டுப்பாட்டுக்குள் தான் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தாள் அவள்.. ஆனால் அந்த நிபந்தனை அவனை விட அவளை தான் பாடாய் படுத்த போகிறதென்று அப்போது அறியவில்லை அவள்..
இன்று அந்த சாப்பாட்டு மேஜை முன் அமர்ந்திருந்த வில்விழி மனதில் திரையில் ஓடுவது போல் அந்தப் பழைய காட்சிகள் ஓட அவள் விழிகள் ஒரு நொடி கலங்கியது.. யாருக்கும் தெரியாமல் அவள் தன் கண்ணீரை வெளிவராமல் உள்ளே இழுத்துக் கொணடது இந்தர் கண்களுக்கு தப்பவில்லை..
கையில் குழந்தையுடன் சற்று தள்ளி நின்றிருந்தவன் அவள் பின்னால் சென்று நின்று அவள் தோளை ஆறுதலாய் அழுத்தமாய் பற்றி கொடுக்க தோளில் இருந்த அவன் கைகளின் அழுத்தம் அவளுக்கு இதமாய் தான் இருந்தது அந்த நொடி..
“சரி சாப்பிடலாமா அத்தை?” என்றவள் மார்க்கண்டேயனை பார்க்க அவரோ அவளை முறைப்படி சகுந்தலாவின் தட்டில் உணவை பரிமாற ஆரம்பித்தார்..
இந்தர் குழந்தையை கையில் ஏந்தியபடியே சிரமப்பட்டு விழிக்கு உணவை பரிமாறிக் கொண்டிருக்க சக்தி விழி தட்டில் இருந்த உணவை காட்டி “மம்மு சத்தி மம்மு தா..” என்றாள்..
“ஓ பசிக்குதா சக்திமா.. ?”
விழி கேட்க “அம்முகுட்டி.. பசிக்குதாடா செல்லம்? இதோ ஒரு செகண்ட்ரா..” என்றவன் விழியின் தட்டில் சாதமும் குழம்பும் ஏற்கனவே பரிமாறி இருக்க “விழி.. நீ சாப்பிட்டுக்கிட்டு இரு. நான் அதுக்குள்ள குட்டி பொண்ணுக்கு சாப்பாடு ஊட்டிட்டு வரேன்..” என்றான்..
ப்ருத்வி அவன் உதவிக்கு முன் வந்தான் “டேய்.. நான் வேணா விழிக்கு பரிமாறுறேன்டா.. நீ குழந்தையை பார்த்துக்கோ..” என்க
“இல்ல ப்ருத்வி.. அவர் தான் எனக்கு பரிமாறணும்..” மார்க்கண்டேயனை அர்த்தமாய் பார்த்தபடி சொன்னாள் அவள்..
“கவலைபடாதீங்க.. இன்னைக்கு அம்மா வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்.. மானுவை எப்படியும் கன்வின்ஸ் பண்ணி இன்னைக்கு மதியத்துக்குள்ள கூட்டிட்டு வந்துருவேன்.. சோ உங்க டியூட்டி நைட்ல இருந்து ஸ்டார்ட் ஆயிடும்..நீங்க வேணா அவர்கிட்ட இருந்து சக்தியை வாங்கி அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுங்க..”
விழி சொன்னதை கேட்டு ஒரு புறம் மான்விழியும் மகனும் தன்னிடம் வரப்போவதை எண்ணி மகிழ்ச்சி கொண்டவன் “கூல்.. சக்தி செல்லம் சித்தா கிட்ட வரிங்களா?” என்று இந்தரிடம் இருந்து குழந்தையை கைகளை நீட்டி அழைக்க
சக்தியோ இந்தரின் கழுத்தை இறுக்கமாய் கட்டிக்கொண்டு அவன் தோளில் புதைந்தபடி “அவ்வா அவ்வா.. சித்தா நானா..” என்று அவனிடம் வர மறுத்து பிடிவாதம் பிடித்தாள்..
விழி “சக்திமா சித்தா ஒன்னை ஹார்ஸ்ல கூட்டிட்டு போவாரு.. ஹார்ஸ் ரைட் போலாம்..”
விழி சொன்னது தான் தாமதம்.. சட்டென முகத்தை நிமிர்த்திய சக்தி இந்தரின் கைகளில் இருந்து பிருத்வியின் கைகளுக்கு சடார் என தாவினாள்..
பிருத்வியோ இதை எதிர்பார்க்காதவன் திடீரென அவள் தன்னிடம் தாவி வரவும் “ஊஊஊ.. சக்தி குட்டி உங்களுக்கு ஹார்ஸ்னா அவ்வளவு பிடிக்குமா? வாங்க வாங்க போலாம்..” என்று உற்சாகமாய் அவளை தூக்கிக்கொண்டு ஒரு கிண்ணத்தில் அவளுக்கான உணவை பிசைந்து எடுத்துக்கொண்டு ஷ்யாம்கர்ணாவிடம் சென்றான்..
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மார்க்கண்டேயனுடைய கைகளின் அழுத்தத்தில் சாப்பாட்டு கரண்டி படாத பாடுபட்டது..
சக்தியை சிறுவயதில் இருந்தே விழி தைரியம் உள்ள பெண்ணாக வளர்க்கிறாள் என்று புரிந்து போனது இந்தருக்கு..
தன் மகள் இப்படிப்பட்ட பயமின்றி வீர விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது அவனுக்கும் பெருமையான விஷயமாய் தான் தோன்றியது..
மார்க்கண்டேயன்.. இந்தர்.. இருவர் பக்கமும் திரும்பிய விழி “நீங்க ரெண்டு பேரும் கண்டினியூ பண்ணுங்க.. ஏன் நிறுத்திட்டிங்க? நாங்க சாப்பிடுறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்..” என்க
அவளை தீவிரமாய் முறைத்த மார்க்கண்டேயன் அந்த கோவத்துடனேயே குழம்பை அலட்சியமாய் சகுந்தலா தட்டில் வீசுவது போல் ஊற்ற அது தட்டை சுற்றி வெளியில் எல்லாம் சிந்தி பக்கத்தில் இருந்த சகுந்தலாவின் கைகளிலும் சுட சுட சிந்தி இருந்தது..
சகுந்தலா “ஸ்ஸ்ஸ்ஸ்..” என்ற சின்ன முனகலோடு அந்த எரிச்சலை கடந்து விட
வில்விழியோ “பொண்டாட்டிக்கு சாப்பாடு போடும்போது கவனம் சாப்பாட்டுல இருந்தா பரவால்ல.. நினைப்பெல்லாம் வேற எங்கேயோ இருந்தா இப்படித்தான் தாறுமாறா ஆகும்.. உங்களால ஒரு குழம்பை கூட பார்த்து ஊத்த முடியாதா?”
அவள் கேட்டு முடிக்கவில்லை.. சகுந்தலாவும் இந்தரும் “விழி..!!” என்று அதிர்ந்து போய் சீற
அவளோ மிகவும் கூலாக “இப்ப எதுக்கு ரெண்டு பேரும் டென்ஷன் ஆகுறீங்க? முன்ன ஒரு தடவை மான் விழி பிருத்விக்கு சாப்பாடு போடும் போது தெரியாம வெளியில கொஞ்சம் சாப்பாட்டு சிந்திட்டா… அதுக்கு இவர் இப்படித்தானே சொன்னாரு.. இப்ப அவர் பண்ணும் போதும் அதே நியாயம் தானே..? நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு?” என்றாள்..
மார்க்கண்டேயனோ பல்லை அழுந்த கடித்த படி ஒன்றும் செய்ய முடியாமல் அவளை பார்க்க “டென்ஷன் ஆகாதீங்க மாமா.. ஒரு பொறுப்பை எடுத்துட்டு இருக்கீங்கன்னா அதை சரியா செய்யணும் இல்ல..? மான்விழியாவது டேபிள்ல தான் சிந்தினா.. நீங்க பாருங்க.. அத்தை கையில் எல்லாம் சுட சுட குழம்ப ஊத்தி வச்சிருக்கீங்க?”
அவள் அப்படி சொன்னதும் தான் தன் அன்னையின் கை சிவந்திருப்பதை பார்த்த இந்தர் “அம்மா ரொம்ப எரியுதா? நான் வேணா மருந்து போட்டு விடட்டுமா?” என்று கேட்க
“டேய்.. உன் பொண்டாட்டி தான் ட்ராமா பண்றான்னா நீயும் எதுக்குடா அவ கூட சேர்ந்து ஆடுற?அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல.. இந்த மாதிரி சக்குக்கு சின்ன சின்னதா நிறைய சூடு பட்டு இருக்கு.. அதெல்லாம் அவளுக்கு வலிக்காது.. இதெல்லாம் பெரிய சூடுன்னு மருந்து போடறானாம்… இந்த மாதிரி ஒன்னும் இல்லாத உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ரொம்ப கவலைப்படாம இதோ உன் பக்கத்துல உக்காந்து இருக்காங்களே அந்த மேடம்.. அவங்களை கவனி.. ஏ சக்கு.. எவ்வளவு நேரம்டி சாப்பிடுவே.. சீக்கிரம் சாப்பிடு.. உன் பக்கத்திலேயே எவ்வளவு நேரம் நின்னுட்டு இருக்கறது?”
மார்க்கண்டேயன் படபடவென பொரிய
“ஏன் மாமா.. கால் வலிக்குதா? வலிச்சாலும் பரவால்ல.. அத்தை இப்படி தானே நின்னுட்டு முட்டி வலியோட உங்களுக்கு பரிமாறுவாங்க..? நீங்களும் அதே மாதிரி பரிமாறுங்க…” என்றாள் மார்க்கண்டேயனை அழுந்த பார்த்தபடி..
இந்தரோ மனதிற்குள் “வேளைக்கு ஒரு வில்லங்கம் பண்ணுவா போல இருக்கே.. இந்த ஆறு மாசமும் எப்படித்தான் சமாளிக்க போறோமோ தெரியல.. இந்த சின்ன விஷயத்துக்கே இவ்வளவு நியாயம் பேசுறா… இன்னும் நடந்த பெரிய பெரிய விஷயத்துக்கலாம் இவ எப்படி பழிவாங்க போறாளோ தெரியலயே.. அப்பா செஞ்சதுக்கெல்லாம் வச்சி செய்யப் போறா.. அப்பா நீங்க காலிதான்” மானசீகமாக தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான் அவன்..
கையில் சக்திக்கான உணவு கிண்ணத்தோடு ஷ்யாம்கர்ணாவிடம் அவளை தூக்கி வந்த பிருத்வி
“சக்தி குட்டி.. இவன் பேர் ஷியாம்கர்ணா.. சொல்லு.. ஷ்யாம்கர்ணா..”
சக்தியோ “சாட்சா..” என்று மழலை குரலில் வாய்க்கு வந்த பேரை அழைக்க “டேய் கர்ணா.. உன் பேரு சாட்சாவாம்… ஹான்.. ஹிந்தில சாச்சான்னா சித்தப்பான்னு அர்த்தம் டா.. சரியாத்தான் கூப்பிடுறா அவ.. ஆமா சக்திமா.. இவன் சாச்சா தான் உனக்கு..” என்றான்..
ஷ்யாம்கர்ணா குழந்தையின் கன்னத்தில் முத்தமிடுவது போல் தன் முகத்தால் வருட சத்தியோ பயமின்றி ஷ்யாம்கர்ணாவின் முகத்தில் சந்தோஷ சிரிப்போடு கையால் தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்..
“அப்படியே சக்திமா கொஞ்சம் கொஞ்சமா சித்தா கிட்ட மம்மு சாப்பிடுவீங்களாம்..” என்று குட்டி குட்டி கவளங்களாக சக்தியின் வாயில் உணவை ஊட்டினான் ப்ருத்வி..
அவன் சொன்னதும் மகிழ்வோடு விழிகளை விரித்த சக்தி சந்தோஷத்தில் கைகள் இரண்டையும் வேகமாக தட்டினாள்..
“இதே மாதிரி உன் அண்ணா சின்ட்டூவையும் கர்ணா கிட்ட உங்க சித்தி பழக விட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.. ஹீம்.. எங்க..?” பெருமூச்சு விட்டவன் தொடர்ந்து குதிரையை காட்டிய படியே உணவை ஊட்ட சக்தியும் சமத்துப் பிள்ளையாய் சாப்பிட்டு முடித்து இருந்தாள்..
சக்தியோடு காலி கிண்ணத்தையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றவன் விழியிடம் “விழி.. சக்திக்கு சாப்பாடு கொடுத்துட்டேன்.. அவளை ஒரு ரைடு கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா?”
“குதிரை சவாரியா? ஹைய்யோ.. பயங்கரமா என்ஜாய் பண்ணுவா.. அதெல்லாம் ஒரு ரவுண்டோட முடிக்க விடமாட்டா… நிச்சயமா ஒரு அஞ்சு ஆறு ரவுண்டாவது போகணும்னு சொல்லுவா.. உங்களுக்கு பரவாயில்லையா?”
விழி கேட்கவும் “இதைவிட எனக்கு என்ன வேலை இருக்கு? நம்ம சக்தி பாப்பாவோட ஜாலியா ரவுண்டு சுத்திக்கிட்டே இருக்கலாம்.. என் செல்ல குட்டி.. பாப்பு குட்டி..”
சக்தியை கொஞ்சிய படியே இருந்தவனை மெல்லிய புன்னகையோடு பார்த்திருந்தார்கள் அங்கிருந்த நால்வரும்..
அவன் சின்ட்டூ இல்லாமல் எவ்வளவு தவிக்கிறான் என்று புரிந்து போனது விழிக்கு.. உண்டு முடித்து
விட்டு முதலில் தன் பிறந்த வீட்டிற்கு சென்று மான்விழியை எப்படியாவது சின்ட்டுவோடு அங்கு அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தாள் அவள்..