2K
வணக்கம் உறவுகளே,
முதல் முறையாக நம் ஏந்திழை தளத்தில் நடைபெறப் போகும் இந்தப் போட்டி மாபெரும் காதல் திருவிழாவாக அமையப்போகின்றது.
“ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்..”
“E2K competition”
இந்தப் போட்டியின் மையக் கருவே காதல்தான்..
காதலில் பல வகை உண்டு.
அதில் சில வகைகளை நம்ம போட்டிக்காக தேர்ந்தெடுத்திருக்கேன்.
ஒரு தலைக் காதல்
லாங் டிஸ்டன்ஸ் காதல்
முக்கோணக் காதல்
பொஸஸிவ் காதல்
மாஃபியா காதல்
ஏஜ் கேப் (வயது இடைவெளி) காதல்
அழுத்தமான காதல்
மென்மையான காதல் (feel good)
முதல் காதல் தோல்வியுற்று இரண்டாம் முறை தோன்றும் காதல்
திருமணத்திற்கு பின்னரான காதல்
இதில் ஏதாவது ஒருவகையைத் தெரிவு செய்து அதற்கேற்றாற் போல போட்டியாளர்கள் கதையை எழுத வேண்டும்.
போட்டியின் விதிமுறைகள்
இது பெயர் மறைத்து எழுதப்படும் போட்டி என்பதால் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் எழுத்தாளர்கள் தங்களுடைய பெயரையும் தங்களுடைய கதை எது என்பதையும் இரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். தங்களின் மூலம் இந்த இரகசியம் மீறப்படும் போது போட்டியாளர் போட்டியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவர். உங்களுடைய எழுத்து நடையை வைத்து நீங்கள் யார் என்பதை வாசகர்கள் கண்டுபிடித்தாலும் கூட அவர்களிடம் அது நீங்கள்தான் என போட்டி முடியும் வரை ஒப்புக் கொள்ளவே கூடாது.
நம் போட்டியில் எழுதப்படப் போகும் அனைத்து கதைகளுமே காதல் கதைகள் என்பதால் ரொமான்ஸ் தாராளமாகவே எழுதலாம். எரோட்டிக் வகை எழுதவதை தவிர்க்கவும்.
அழுத்தமான காதல் எனும் பிரிவில் ஆன்டி ஹீரோக்களை தேர்ந்தெடுக்கும் எழுத்தாளர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அதீத வன்முறைகளை எழுதுவதை தவிர்ப்பது நல்லது.
நாவலின் சொற்கள் 25000 – 50000 வரை இருக்க வேண்டும்.
போட்டி தொடங்கப்படும் திகதி 01.06.2025 , போட்டி முடிவடையும் திகதி 31.08.2025. நாவலை எழுதி முடிப்பதற்கான கால அவகாசங்கள் மூன்று மாதங்கள் மாத்திரமே. கால நீட்டிப்பு கிடையாது.
போட்டியாளர்கள் எழுதிய நாவல்கள் போட்டியின் முடிவு அறிவிக்கப்படும் வரை தளத்தில் இருக்க வேண்டும்.
போட்டியின் முடிவு அக்டோபர் மாதம் 15ம் திகதி வெளியாகும்.
ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
ஒரு அத்தியாயம் 700 சொற்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். அதிகபட்ச வரம்பு இல்லை.
இரண்டு முறை வாசகர்களின் வாக்கெடுப்பு இடம்பெறும். முதல் சுற்று வாக்கெடுப்பின் அடிப்படையில் பத்து கதைகள் தெரிவு செய்யப்படும்.
பின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இடம்பெறும். அந்த இரண்டாவது சுற்றில் ஆறு கதைகள் தெரிவு செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஆறு கதைகளில் கதைக்கரு, எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை மற்றும் மொழிநடை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு முதல் ஐந்து கதைகள் வெற்றி பெற்றவையாக நடுவர் மூலம் அறிவிக்கப்படும்.
பரிசுத் தொகை பற்றிய விபரங்கள்
முதல் பரிசு – 5000
இரண்டாம் பரிசு – 3000
மூன்றாம் பரிசு – 2000
நான்காம் பரிசு – 1000
ஐந்தாம் பரிசு – 1000
ஏந்திழை தளத்தின் போட்டியில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களையும் சிறப்பிக்கும் முகமாக இணையவழி சான்றிதழ் வழங்கப்படும்.
எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல நாவல்களைப் படித்து விமர்சனங்களை தெரிவிக்கும் முதல் மூன்று வாசகர்களுக்கும் புத்தகப் பரிசுகள் உண்டு.
E2k competition போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள்
உங்களுடைய பெயர் :
புனைப்பெயர் :
வாட்ஸ் அப் எண் :
கதையின் தலைப்பு :
நீங்கள் எழுத விரும்பும் கதையின் வகை :
என்பவற்றை குறிப்பிட்டு eanthilaipathippagam@gmail.com இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
போட்டியாளர்கள் பெயர் பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள் : 10.06.2025
கெட் ரெடி ஃபார் ஏந்திழை அதிரடி..
🔥🔥🔥
[list_category_posts]s