Mr and Mrs விஷ்ணு 44

4.7
(58)

பாகம் 44

மறுநாள் காலை கண் விழித்தாள் விஷ்ணு.. அறையில் ப்ரதாப் இல்லை.. அப்பாடா என்று இருந்தது.. இருந்தால் சீண்டுவானே, நேற்று இரவு என்னவெல்லாம் சொல்லி சீண்டினான்.. சீண்ட மட்டுமா செய்தான்… வேறு என்னென்னமோ எல்லாம் செய் தானே, நேற்றைய கூடல் நினைவு வர கன்னம் தானாக சூடேறியது..

இரவு சாப்பிடாதது வேறு பசி வயிற்றை கிள்ளியது.. சீக்கிரம் குளிச்சிட்டு போய் சாப்பிடனும் என வெற்று உடலில் போர்வையை சுற்றி கொண்டு எழ பார்க்க, பாத்ரூமிலிருந்து ப்ரதாப் வந்தான்..

“அச்சோ” என்றவள் மீண்டும் போர்வையை தலை வரை இழுத்து போர்த்தி கொண்டாள்..

பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.. இருந்தும் எதுவும் பேசாமல் அமைதியாக கபோர்ட் அருகே சென்றான்..

இவர் இன்னும் ஆபிஸ் கிளம்பலையா? இப்ப நான் எப்புடி இப்புடியே எழும்பறது என்று தன்னை பார்த்தவள், ஆபிஸ் போற வரை இப்புடியே படுத்து இருப்போம் தூங்கறேன்னு  நினைச்சுப்பார் என்று நினைத்தவள் அப்புடியே கண் மூடி படுத்து இருந்தாள்.. 

இரண்டு நொடி கழிந்து இருக்கும் அவர் என்ன பண்ணுரார்ன்னு பார்ப்போம் என போர்வையை விலக்கிய ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்க்க ட்ரெஸிங் டேபிள் முன் ப்ரதாப் இல்லை..

எங்கே என இரண்டு கண்ணையும் திறக்க, அவளின் பக்கவாட்டில் கட்டிலின் அருகே தான் நின்று இருந்தான்.. இன்னும் ட்ரெஸ் மாற்றவில்லை டவலோடு நிற்க,

‘ச்சே இப்புடி அரையும் குறையுமா டவலோட தான் வந்து நிற்கனுமா’  கண்கள் அவளை மீறி கூச்சநாச்சம் இல்லாமல் அவன் அங்கத்தில் படிவதால் புலம்பினாள்.. அங்க டவலாவது இருக்கு ஆனா இங்க நீ’ என்ற மனசாட்சியை மேலும் பேச விடாது பல்லை கடித்து விரட்டினாள்..

“எழுந்துட்டியா போர்வையை விலக்கு” என்றான் ப்ரதாப்..

பகலிலேயேவா திக்கென்றானது இவளுக்கு “எதுக்கு” போர்வையை நெஞ்சோடு இறுக்கி பிடித்து கொண்டு கேட்டாள்..

“எது சொன்னாலும் செய்யவே மாட்டியா இதில் பதிவிரதை வாசுகின்னு டயலாக் வேற” என்று முறைத்தவன் போர்வையை விலக்கு என்றான்..

“முடியாது இது பகல் இப்ப போய் போங்க முடியாது” என்றவளை முதலில் புரியாமல் புருவம் சுருக்கி பார்த்தவனுக்கு புரிந்ததும் சிரிப்பு வந்தது.. அதை அடக்கியவன்,

“டெர்ட்டி கேர்ள் புத்தி போகுது பாரு, அது எல்லாம் இப்ப கிடையாது.. நைட்டு தான், எனக்கும் ஆசை தான், ஆனா வேலை கழுத்து வரை இருக்கு நைட்டு பார்த்துக்கலாம்” என்று கன்னத்தை கிள்ளியவன் எதுவும் காயம் பட்டு இருக்கான்னு பார்க்க தான் என்றான்..

“காயமா அது எல்லாம் எதுவும் இல்லை” என்றாள்… 

“இல்ல இருக்கும்” ப்ரதாப் உறுதியாக சொல்ல,

“அது எப்புடி சொல்றீங்க”?..‌

“இப்புடி தான்” என்றவன் திரும்பி தன் முதுகை காண்பித்தான்.. 

பார்த்த விஷ்ணு “இது என்ன உங்க முதுகுல எல்லாம் காயம்.. குரங்கு ப்ராண்டுனது போல நக கீறலா இருக்கு” என அவன் கொடுத்த மருந்தை முதுகில் போட்டபடியே கேட்க,

ப்ரதாப்புக்கு தான் அவள் கேட்டது சிரிப்பை தந்தது.. அடக்க மாட்டாமல் சிரித்தான்..  

இவர் ஏன் இப்புடி சிரிக்கிறார் புரியவில்லை விஷ்ணுவுக்கு,

ஆபிஸ் செல்வதற்கு தயாரானவன் மீண்டும் அவள் அருகே வந்தான்.. இப்ப என்னவோ போர்வையை நெஞ்சோடு அழுத்தி பிடித்தபடி விஷ்ணு பார்த்தாள்..

மேல் உதட்டை பற்களால் கடித்து சிரிப்பை அடக்கிய படி தான் வந்தான்.. அப்புடி நான் என்ன சொல்லிட்டேன் எதுக்கு தான் இந்த சிரிப்போ கோவம் வந்தது..

“கண்டிப்பா காயம் இருக்கும் விஷ்ணு.. இந்தா இதை போட்டுக்கோ” என்று மருந்தை அவள் கையில் கொடுக்க, மருந்தோடு நெயில் கட்டரும் இருந்தது..  முதலில் இது எதுக்கு என புரியாமல் பார்த்தவளுக்கு மண்டையில் பல்பு எரிந்தது..

‘அச்சோ நேத்துலிருந்தே மொக்கை வாங்குறேன்னே, பத்தாதுக்கு என்னை நானே குரங்குன்னு வேற சொல்லி இருக்குன்னே’ என தலையில் அடித்து கொண்டவள் முகத்தை மூடி கொண்டாள்.. ப்ரதாப் அடக்க மாட்டாமல் வெடித்து சிரித்தான்..

ப்ரதாப் சென்ற பிறகு குளிக்க ஆடைகள் எடுத்தவள் பாத்ரூம்ற்குள் சென்றாள்.. அவன் சொன்ன கண்டிப்பா காயம் இருக்கும் என்றது குளிக்கும் போது தண்ணீர் பட்டதும் எரிச்சல் வர அப்போது தெரிந்தது.. அதை பார்த்தவள் ‘எப்புடி காட்டுவாசி போல நடந்து இருக்கு பாரு இந்த ஊறுகாய் என திட்ட, அவராவது காட்டுவாசி போல தான் நடந்து இருக்கார்.. ஆனா நீ ஏதோ காட்டேரி பிடிச்சது போல நகத்தால் கோலம் போட்டு இருக்கியே, அவ்ளோ காஜியா நீ மனசாட்சி துப்ப’, அதை விரட்டி விட்டவள் சீக்கிரமாக குளித்து முடித்து வீட்டில் அணியும் சாதரண உடை அணிந்து கீழே சென்றாள்…

டைனிங் டேபிளில் அமர்ந்து பவித்ரா சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.. அவளை பார்த்த விஷ்ணு “குட்மார்னிங் அண்ணி ஆபிஸ் கிளம்பிட்டிங்களா”? என சிரித்தபடி கேட்க, 

பவித்ராவும் மெலிதாக சிரித்தபடி பதிலளித்தாள்.. அவளுக்கு பார்த்தி மீது மட்டும் தானே கோவம்.. அதோடு அண்ணன் மனைவி வேறு, அதனால் விஷ்ணு மீது அன்பு இருந்தது..

“டைம் என்னாகுது தெரியுமா”? விஷ்ணுவை பார்த்த விசாலாட்சி கோவமாக கேட்க,

இந்த கொசு வேற இடையில் பல்லை கடித்த விஷ்ணு “ஏன் உங்களுக்கு டைம் பார்க்க தெரியாதா சின்ன அத்தை டைம் 8:30” என்றாள் நக்கலாக,

“என்ன நக்கலா”,

“சத்தியமா இல்ல சின்ன அத்தை நீங்க கேட்டிங்களேன் சொன்னேன் அவ்ளோ தான்” என்றாள் விஷ்ணு..

“வாழ வந்த வீட்டில் நேரமா எழுந்தோம், வீட்டில் ஏதாவது வேலை செஞ்சோம், அவங்களுக்கு வேணுங்கிறதை சமைச்சே கொடுத்தோம் என்று எதையாவது பண்ணுறியா, முத தான் காலேஜ் போறேன் படிக்கிறேன்னு எதுவும் பண்ணமா சும்மா சுத்திட்டு இருந்த, இப்பவாவது செய்ய தோணேதா பாரேன்.. அது எப்புடி தான் சாப்பிட்டு சாப்பிட்டு சும்மா இருக்க முடியுதோ”,

“சித்தி அமைதியாவே இருக்க மாட்டிங்களா”? பவித்ராவும் கண்டித்தாள்.. இந்த பேச்சு அவளுக்கும் பிடிக்கவில்லை..

“இத்தனை வருஷமா உங்களால் எப்புடி இருக்க முடிஞ்சுதோ அதே போல் தான் சின்ன அத்தை” என்றாள்.. 

முன்பு என்ன பேசினாலும் சொன்னாலும் அதிகாரம் செய்தாலும் அமைதியாக தான் இருப்பாள்.. அவர்கள் சொல்லும் வேலையும் பேச்சும் விஷ்ணுவிற்கு பெரிதாக  பட்டதில்லை.. சீரியலை பார்த்ததுட்டு அதில் வரும் மாமியார் போல நடக்க ஆசைப்படுறாங்க என மனதிற்குள் திட்டி கொள்வாளே தவிர எதிர்த்து பேச மாட்டாள்.. 

ஆனால் இப்போது அவர்கள் சொல்லும் வேலையும் அதிகாரமும் அவளை கோவப்படுத்தவில்லை… லில்லியை அலுவலகத்திற்கு இவங்க தானே அனுப்பினார்கள் என்ற கோவமே, அதுக்கு தான் விசாலாட்சியிடம் பதிலுக்கு பதில் நிற்கின்றான்..

அவளை முறைத்த விசாலாட்சி “என்ன ரொம்ப திமிரா பேசுற, இது எல்லாம் என்கிட்ட வச்சுக்காத, அஞ்சு மாசம் உன் வீட்டில் இருந்தது போல் காலத்துக்கும் அங்க போய் இருக்க வச்சுருவேன்” அவர் ஆக்ரோஷமாக பேச,

அதை எல்லாம் சட்டை செய்யாது விஷ்ணு சமையலறைக்குள் சென்று விட்டாள்..

“பார்த்தீங்களா அக்கா அவ திமிரை நீங்க அமைதியா இருக்கிறதால் தான் அவ இவ்வளோ ஆட்டம் போடுறா, கூப்பிட்டு சத்தம் போடுங்க” என அங்கு வந்த தேவகியிடம் புகார் பத்திரிகை விசாலாட்சி வாசிக்க,

“அவளை இல்ல உன்ன தான் விசா சத்தம் போடனும்.. ப்ரியா அவ பாட்டுக்கு அமைதியா தான் இருக்கா, நீயா தான் போய் தேவையில்லாமா பேசி பிரச்சினை பண்ணிட்டு இருக்கா, வீட்டில் வேலை செய்ய தான் இத்தனை பேர் இருக்காங்களே, அப்புறம் என்ன உனக்கு பிரச்சினை?, பத்தலைன்னா இன்னும் இரண்டு மூணு பேரையும் வேணா வேலைக்கு எடுத்துக்கோ, அதை விட்டுட்டு ப்ரியாவை ஏன் வேலை செய்ய சொல்லி சத்தம் போடுற, இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங் விசா, இனிமே ப்ரியா கிட்ட சத்தம் போடுறது சண்டை போடுற வேலை எல்லாம் வச்சுக்க கூடாது” அவ்ளோ தான் சொல்லிட்டேன் என்று தேவகி எச்சரிக்க, 

விசாலாட்சிக்கு மட்டுமில்லை பவித்ராவுக்காக சமையலறையிலிருந்து  டீ எடுத்து கொண்டு வெளி வந்த விஷ்ணுவுக்குமே இது அதிர்ச்சி  தான்..

“இந்தாங்க அண்ணி பவித்ராவுக்கு டீயை கொடுத்தாள் விஷ்ணு.. பவித்ராவுக்கு காலை சாப்பிட்டதும் டீ குடிக்கும் பழக்கம்” அதனால் பவித்ராவுக்கும் அவளுக்கும் சேர்த்து தான் போட்டு இருந்தாள்.. 

இரண்டு கப் தான் இருந்தது.. ஒன்று அவளுக்கு இன்னோன்று பவித்ராவுக்கு, ஆனால் இப்போது தேவகி நிற்பதால் அவரிடம் நீட்ட, 

“நீ குடிம்மா நான் இப்ப தான் குடிச்சேன்” என மெலிதாக சிரித்தபடி கூறினார்..

உடனே விஷ்ணு இது கனவா என கையை கிள்ளி பார்க்க கனவல்ல நிஜம் தான் கிள்ளிய இடம் வலிக்கின்றதே, இதுவரை முகத்தை திருப்பி கொண்டு போவார்.. ஆனால் இப்போது சிரிக்கின்றாரே விஷ்ணுவுக்கு சந்தேகம் வர தானே செய்யும், என்னாச்சு இவங்களுக்கு தீடிர்னு திருந்திட்டாங்களே சீரியல் வில்லிங்க கூட க்ளைமாக்ஸ்ல தானே திருந்து வாங்க என்ற யோசனையோடு அங்கிருந்து நகர்ந்தாள்..

தேவகியின் இந்த தீடிர் மாற்றத்திற்கு காரணம் காலையில் ப்ரதாப் அறையிலிருந்து வெளி வரும் போது அவன் முகத்தில் தெரிந்த மலர்ச்சி தான்.. உணர்வுகளை வெளிகாட்டாது தனக்குள்ளே அடக்கி கொள்பவன் அவன்.. இப்போதும் அதை தான் செய்ய நினைகின்றான்.. ஆனாலும் அவனையும் மீறி மனதில் இருக்கும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் முகத்தில் காட்டி கொடுக்கின்றதே, 

“பார்த்தியா நம்ம ப்ரதாப் முகத்தில் தெரியுற சந்தோஷத்தை, இதுவரை அவனை இப்புடி பார்த்து இருக்கியா, அவனுக்கு ப்ரியாவை ரொம்ப பிடிச்சு இருக்கு.. ப்ரதாப்போட நிம்மதி சந்தோஷம் எல்லாம் ப்ரியா கிட்ட தான் இருக்கு..  அதை புரிஞ்சு நடந்துக்கோ தேவி.. இல்லை நான் மாமியார் அதிகாரத்தை காட்டுவேன்னு, ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு எல்லாம் அந்த பொண்ணை பேசி கஷ்டப்படுத்துவேன்னு வீம்புக்கு பண்ணி, பவித்ராவை போல ப்ரதாப்பையும் ஆக்கிடாத” என்ற வெங்கடேஷ், 

“ப்ரியாவை என்ன பண்ணலாம்னு யோசிக்கறதை விட்டுட்டு பவி வாழ்க்கையை எப்புடி சரி பண்ணலாம்.. அவளை எப்புடி சந்தோஷமா வாழ வைக்கிறது என்று யோசி தேவி” என்று சொல்லி விட்டு வெங்கடேஷ் செல்ல, தேவகிக்கும் அவர் சொல்வது சரியென பட்டது..

“அக்கா உங்களுக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா ஏதோ போல பேசிட்டு இருக்கீங்க” அதிர்ச்சியிலிருந்து மீண்டு விசாலாட்சி கேட்க, 

“நான் நல்லா தான் இருக்கேன் விசா.. நீயும் நல்லா இரு எந்த பிரச்சனையும் பண்ணாதன்னு தான் சொல்றேன்.. மறுபடியும் மறுபடியும் பிரச்சினை பண்ணுன நல்லா இருக்காதுன்னும் சொல்றேன்.. பார்த்து நடந்துக்கோ” மீண்டும் எச்சரித்தார் தேவகி..

விசாலாட்சிற்கு தான் பயங்கர கடுப்பனாது தேவகியின்  இந்த தீடிர் அந்தர்பல்டி கோவமாக தன்னறைக்கு சென்றார்..

அப்போது லில்லியின் அம்மா சாலா போன் செய்தார்.. போனை எடுத்த விசாலாட்சி “எதுக்கு எனக்கு போன் பண்ற, அதான் எல்லாம் முடிஞ்சு போயிருச்சே, அந்த ஒன்னும் இல்லாத ப்ரியா திரும்பவும் வீட்டேக்கு வந்துட்டா, இனி உன் பொண்ணு இங்க வருவது எல்லாம் நடக்கவே நடக்காது.. உன் ஆசையில் எல்லாம் உன் பொண்ணு மண்ணை அள்ளி போட்டுட்டா,நல்ல பொண்ணை பெத்து வச்சுருக்க.. எதுக்கும் லாயக்கு இல்லாத பொண்ணு, இனிமே எனக்கு போன் பண்ற வேலை வச்சுக்காத” என கோவமாக தெலுங்கில் பேசி விட்டு போனை வைத்தார்.. 

விசாலாட்சி பேசிய கோவத்தையும் சேர்த்து சாலா லில்லியிடம் தான் காட்டினார்.. ஏற்கெனவே நேற்று ஆபிஸில் இருந்து வந்து விஷயத்தை சொன்னதிலிருந்தே திட்டு தான்.. ஏன் அடிக்க கூட செய்தார்.. 

அவருக்கோ முதலில் சம்பந்தம் பேசும் போதும் சொந்தபந்தங்கள் அனைவரிடமும் திருப்பதி குரூப் பையன் விஷ்ணு ப்ரதாப்புக்கு தான் நம்ம லீலாவை கொடுக்க போறோம் என பேச்சு வார்த்தை தொடங்கும் முன்பே தம்பட்டம் அடித்து அது நடக்காமல் போக அனைவர் முன்பும் தலைகுனிவு.. 

இப்போதும் அதே போல் தான் ஒரு இடம் பாக்கி இல்லாமல் அனைவரிடமும் சொல்லி வைத்து இருந்தார்.. மகள் மேல் அவ்வளவு நம்பிக்கை.. ஆனால் அவளோ காரியத்தை கெடுத்து அல்லவா வைத்து இருக்கிறாள்.. 

“மீரு எதுக்கும் லாயக்கு இல்லை.. ஒரு ஆம்பளை பையனை வளைக்க தெரியலை நீ எல்லாம் என்ன பொண்ணுடி.. நீ உண்மையிலே பொண்ணு தானா.. எனக்கு டவுட் வருதுடி.. உனக்கு உடம்புல தான் ஏதோ பிரச்சினை போல.. வா ஹாஸ்பிடல் போய் செக் பண்ணலாம் வாடி” என லில்லி கை பிடித்து இழுக்க.. அழுது கொண்டு இருந்தவளோ, “ம்ஹும்” என வர மறுக்க,

அவளின் முதுகிலும் கன்னத்திலும் அறைந்து மறுபடியும் இழுக்க அவள் நகரவில்லை.. மறுபடி மறுபடி அவளை முகம் கை கால் என அடிக்க, நல்ல வேலை லில்லியை காப்பாத்தவே வந்து சேர்ந்தார் அவளின் அப்பா..

“விடு” என மகளை சாலாவிடம் இருந்து பிரிந்தவர்.. “லூசு மாதிரி பண்ணாத சாலா, எதுக்கு இப்புடி அடிக்கிற, என் பொண்ணுக்கு என்ன வேற மாப்பிள்ளையே கிடைக்க மாட்டாங்களா என்ன, அவளுக்கு இருக்க அழகுக்கும் அறிவுக்கும் நிறைய பேர் லைன்ல வருவாங்க டி” என்றார்… 

“திருப்பதி குரூப் விஷ்ணுப்ரதாப் போல வருமா”? சாலா கோவமாக கேட்க, 

“யார் யாருக்கு எதுவோ அது தான் கிடைக்கும் சாலா.. என் பொண்ணை இரண்டாதாரமா கொடுக்க எனக்கும் இஷ்டம் இல்லை.. ஆனா உன் தொந்தரவு தாங்காம தான் அவளை அங்க அனுப்பி வச்சேன்.. ஆனா இப்ப ப்ரதாப் மனசு என்னன்னு தெரிஞ்சிட்டு, இதை இதோட விடு அது தான் நல்லது.. அதை விட்டுட்டு இன்னோரு தடவை அடிச்ச” அவ்ளோ தான் என்றவர்.. 

“மகளை நீ கிளம்பி வெளிய எங்கையாவது ப்ரெண்ட்ஸ் கூட போய்டு வாம்மா” என்று வெளியே அனுப்பி வைத்தார்.. மனைவியிடம் இருந்து காப்பாற்றுவதற்காக,   

வெளியே வந்த லில்லிற்கோ கோவம் ராம் மீது தான் வந்தது.. அவள் வாங்கிய அத்தனை அடி திட்டுக்கு எல்லாம் காரணம் அவன் தான் என்று தோன்றியது.. அவன் தானே எப்போதும் அவளுக்கு ஏதாவது வேலை கொடுத்து கொண்டும் கண்காணித்து கொண்டும் இருந்தான்.. அவனால் தான் ப்ரதாப்பை நெருங்க முடியவில்லை.. அவன் தான் அவன் மட்டும் தான் என் அவன் மீது கோவம் கொண்டாள்..

ஆனால் உண்மையாக அவள் ஒரு தடவை கூட ப்ரதாப்பிடம் பேச முயற்சி செய்யவே இல்லை.. இப்போது கூட அப்பாடா இனி அங்க போக வேண்டாம்.. இந்த பிரச்சினை இதோட முடிந்தது என மனதில் நிம்மதி பரவவும் செய்தது..

இப்புடி இவள் இது முடிந்தது என நினைக்க.. அவள் அன்னை சாலாவோ இதை முடிய கூடாது.. மறுபடியும் சொந்தங்கள் முன் அவமானம் பட முடியாது.. மகளை எப்புடி யாவது ப்ரதாப் வாழ்வோடு பிணைக்க வேண்டும்.. அதுக்கு என்ன செய்வது என தீவிர யோசனையில் இறங்கி இருந்தார்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 58

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!