பார்த்திபன் பயங்கர கண்மண் தெரியாத அளவு கோவத்தில் இருந்தான்.. அவன் முன்பு பவித்ரா அவன் அருகே வம்சி நின்று இருந்தான்.. அதற்கு பக்கத்தில் பிருந்தா அழுது கொண்டு நின்று இருந்தாள்..
பவித்ராவுக்கு பார்த்திபன் கோவம் பிருந்தா அழுகை எதுக்கு என தெரியவில்லை.. அவள் மூவரையும் பார்த்து கொண்டு நின்றாள்.
பிருந்தாவும் வம்சியை தான் பார்த்தாள்.. இருவரும் பார்த்தி பவித்ரா அறியா வண்ணம் மெலிதாக சிரித்து கொண்டார்கள்..
ப்ரதாப் வம்சி பேசி முடித்த பின் வம்சி முதலில் செய்தது பவித்ரா விடம் பிருந்தா நம்பர் வாங்கி பேசிவிட்டு அவளை நேரில் சந்தித்தது தான்.. அவள் மனதில் பார்த்திபன் பற்றிய எண்ணம் எதுவும் இருக்கோமோ என அறிந்து கொள்ள,
பிருந்தா விடம் பேசி அப்புடி எதுவும் இல்லை என்று தெரிந்து கொண்ட வம்சி நிம்மதி அடைந்தான்,
“நீங்க தான் எங்க அக்கா மாமாவை சேர்க்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும் பிருந்தா முடியுமா, உங்களுக்கு அதில் ஏதும் பிரச்சினை இருக்கா” என்று கேட்டதும்.. “நோ நோ வம்சி என்ன பண்ணனும் சொல்லு ஜமாய்ச்சரலாம்” என்றாள் பிருந்தா..
அவர்களின் திட்டபடி தான் பிருந்தா பார்த்திபனிடம் வம்சி நேத்து உங்க ஆபிஸ்க்கு வந்ததுக்கு வம்சி என்னை சத்தம் போட்டுறான்.. ரொம்ப தப்பா பேசிட்டான் என்று சொன்னது.. அதுவும் அழுகையோடு,
கோவமாக பார்த்தி உடனே வம்சிக்கு போன் போட்டு வர சொல்லி விட்டான்.. அவனை மட்டும் தான் வர சொல்லி இருந்தான்.. அவன் தான் இந்த சீனில் பவித்ரா நிச்சயம் இருக்க வேண்டும் என்பதால் வரமாட்டேன் நேத்தே பார்த்தி என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்டான்.. நான் வரவே மாட்டேன் என்ற பவித்ராவை வம்படியாக இழுத்து வந்திருந்தான் வம்சி..
சத்தம் போட்டானா நம்பாத பார்வை பார்த்தாள் பவித்ரா.. வம்சி ஒருவரிடம் சண்டை போடுவதா.. அதுவும் ஒரு பெண்ணிடம் பவித்ராவால் நம்ப முடியவில்லை..
“எதுக்குடா அவளை போய் சத்தம் போட்ட,தேவையில்லாத வேலை எதுக்கு பண்ணுன வம்சி” மெதுவாக பவித்ரா கேட்க,
“நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்றான் வம்சி அதே போல,
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு வம்சி அங்க என்ன பார்வை” என பார்த்திபன் கோவப்பட, அவன் பார்வைக்கு வம்சி பிருந்தாவை முறைப்பது போன்று தோன்றியது.
“அவங்களை சத்தம் போட்டா நீங்க ஏன் பாவா கேட்கிறீங்க” என கேட்டான் வம்சி வேண்டுமென்றே பார்த்திபனை கோவப்படுத்த வேண்டும் என்றே இவ்வாறு கேட்டான்..
“ஏன்னா இதில் என்னை வச்சு என் பெயரை சொல்லி சத்தம் போட்டு இருக்க வம்சி.. அதான் நான் கேட்க வேண்டியதா இருக்கு.. இல்லைன்னா நீ யாரை திட்டுனா எனக்கு என்ன? உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை வம்சி.. சொல்லு ஏன் என்னை வச்சு சண்டை போட்டன்னு”..
“அது என் தனிபட்ட விஷயம் வம்சி.. அதில் நீங்க ஏன் தலையிடுறீங்க?” என கேட்டான் பார்த்திபன் அங்கு நின்றிருந்த பவித்ராவை முறைத்தபடி அவள் சொல்லி தான் வம்சி செய்திருப்பான் என நினைத்து,
“ஓ.. அப்ப அப்புடி தான் பேசுவேன்னு சொல்றீங்களா?” பாவா
“நான் அப்புடி சொன்னனா வம்சி”
“நீங்க சொல்றதுக்கு அதான் மாமா அர்த்தம்.. நீங்க அவங்க கூட இனிமே பேசவே கூடாது மாமா.. பேசுனா அவ்ளோ தான்” என்றான் இன்னும் பார்த்தி கோவத்தை தூண்டும் விதமாக,
பவித்ராவுக்கே வம்சி பேசுவது கொஞ்சம் அதிகபடியோ என்று தான் தோன்றியது..
“அப்புடி தான்டா பேசுவேன் உனக்கு என்னாடா”..
“ஓ.. பேசுவீங்களா இன்னைக்கு பேசுவீங்க நாளைக்கு கூட்டிட்டு ஊர் ஊரா சுத்துவீங்க நாங்க பார்த்ததுட்டு இருக்கனுமா” வம்சி கேட்கவும்.. பார்த்திபனுக்கு சுர்ரென்று ஏறியது.. வம்சி மும் அதை தானே எதிர்பார்க்கின்றான்..
“ஆமாடா கூட்டிட்டு ஊர் ஊரா சுத்துவேன் என்ன பண்ணுவடா” கோவத்தில் கத்தினான்..
“உன் அக்காவுக்கு கல்யாணம் பண்ணு , இல்ல வேற என்ன கருமமோ பண்ணு அதை ஏன்டா இங்க வந்து சொல்லிட்டு இருக்க.. வம்சி வேண்டாம் வெளிய போ முத, இனிமே என்னையோ என் பெயரை சொல்லி பிருந்தாவையோ நீயோ இல்ல உன் குடும்பத்தில் இருக்க வேற யாரோ தொந்தரவு பண்ணுனீங்க அவ்வளவு தான்.. இனிமே உன் குடும்பத்து ஆளுங்க யாரும் என் ஆபிஸ் பக்கம் வரவே கூடாது வெளிய போடா” என்று திட்டினான்..
“உனக்கு என்ன பைத்தியமா வம்சி எனக்கு இன்னோரு கல்யாணம் பண்ணி வைப்பேன் ஏன்டா சொன்னா” வீட்டுக்கு வந்த பின்பு பவித்ரா வம்சியிடம் கோவமாக கேட்டாள்..
“சொல்றது என்ன? உனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்க போறோம்.. அந்த பார்த்திபனுக்கு ஒரு பிருந்தா கிடைக்கும் போது உனக்கு ஒரு பிருந்தாவன் கிடைக்காமலா போகும்.. என்ன பெத்தம்மா நான் சொல்றது சரி தானே” தேவகியை இதில் கூட்டு சேர்ந்து கொண்டான்..
வீட்டில் எதையும் எப்போதும் சொல்லாதவன் இன்று வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து நடு ஹாலில் வைத்து அனைத்தையும் சொன்னான்.. வெங்கடேஷ்க்கு வம்சி ஏன் இப்புடி பண்ணுகிறான் என குழப்பமாக இருந்தது..
விஷ்ணுவுக்கு வம்சி மீது கோவம் வந்தது.. அவள் அண்ணனிடம் சண்டை போட்டு அவன் வாயாலே பிருந்தாவை கல்யாணம் பண்ணிப்பேன் என சொல்ல வைத்து இருக்கிறானே.. அதோடு பவித்ராவுக்கு வேறு திருமணம் செய்து வைப்பேன் என சொல்லுகிறானே, அவளுக்கு தானே தெரியும் பவித்ராவை பிரிந்து பார்த்திபன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று, இப்போது கூட கோவத்தில் தான் பார்த்தி இப்புடி சொல்லி இருப்பான்.. ஆனால் இந்த வம்சி தான் இதை பெரிதுபடுத்துக்கிறான் என தோன்றியது..
“அதானே அந்த பார்த்திபனே இன்னோரு கல்யாணம் பண்ணிக்கும் போது, உனக்கு என்ன பவி, நான் ஏற்கெனவே பவிக்கு இன்னோரு கல்யாணம் பண்றதை பத்தி யோசிச்சுட்டு தான் இருந்தேன் ப்ரதாப்.. நீ என்ன சொல்ற” என தேவகி கேட்க,
“என்னால் முடியாது எனக்கு இன்னோரு கல்யாணம் வேண்டாம்” என்று கத்தினாள் பவித்ரா..
“ஏன் முடியாதுன்னு கேளுங்க அம்மா.. பார்த்திபனை தான் கல்யாணம் பண்ணுவேன் சொன்னா அவ விருப்பபடி பண்ணி வச்சோம்.. அப்புறம் பிடிக்கலை விவாகரத்து பண்ணுறேன் சொன்னா அவ இஷ்டத்திற்கே விட்டாச்சு.. இப்பவும் அவ இஷ்டத்திற்கு இப்புடியே விட முடியுமா.. அதிலையும் அந்த பார்த்திபன் இவ்வளோ திமிரா பேசுன அப்புறம் இப்புடி விட முடியாது... கண்டிப்பா இன்னோரு கல்யாணம் பண்ணிக்கனும் புரிய வைங்க.. நான் சிங்கப்பூர் போய்ட்டு வந்து அப்புறமா நல்ல இடமா பார்க்க ஆரம்பிக்கலாம்” என்றான் ப்ரதாப் வம்சியும் அவனும் ரகசியமாக சிரித்து கொண்டார்கள்..
“அண்ணா ப்ளீஸ்” என்ற பவித்ரா பேச்சை நின்று அவன் கேட்கவில்லை தன் அறைக்கு சென்றான்..
பவித்ராவால் பார்த்திபனை மீறி இன்னோரு திருமணம் செய்யவே முடியாது.. அதை அவள் உணர வேண்டும்.. இந்த திருமண பேச்சில் நிச்சயம் ஷ்யாம் தலையீடு வரும்.. அவன் ஏதாவது செய்வான்.. அப்போது அவன் நோக்கம் என்னவென்று முழுதாக தெரியவரும்.. அவன் உண்மை முகத்தை பவித்ராவுக்கு தெரியும்படி செய்து, அவள் தவறை உணர்த்தி, பார்த்திபனை அவளாகவே தேடி செல்ல வைக்கவே அண்ணன் தம்பி இருவரின் திட்டம்..
அறைக்குள் கோவமாக வந்தாள் விஷ்ணு.. ப்ரதாப் அவன் உடைகளை பெட்டியில் அடுக்கி கொண்டு இருந்தான்..
.
“நீங்க பண்றது நல்லாவே இல்லை” என்றாள் முறைத்தபடி,
“அப்ப நீயே அடுக்கி வை” என்ற ப்ரதாப் கபோர்ட்டிலிருந்து துணிகளை எடுத்து வைக்க ஆரம்பிக்க
“நான் இதை சொல்லலை அண்ணி விஷயத்தில் சொல்றேன்.. பார்த்தி வம்சி பேசுற கோவத்தில் தான் அவங்களை கல்யாணம் பண்ணிப்பேன் சொல்லி இருப்பான்.. உண்மையா அப்புடி எல்லாம் எதுவும் அவன் மனசில் இருக்காது”..
“பார்த்தியும் அண்ணியும் இப்ப இல்லைன்னாலும் கொஞ்ச நாள் கழிச்சு அவர்களுக்குள்ள இருக்க கோவம் குறைஞ்சதும் ஒன்னா சேருவாங்கன்னு நினைச்சா, இப்ப நீங்க இப்புடி பண்றது சரியில்லை, எனக்கு சுத்தமாக பிடிக்கலை” என்றாள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு
இடுப்பில் கை வைத்து அவளை பார்த்தவன் “கிட்ட வா” என்றான்..
அவள் கோவத்தில் அப்புடியே நிற்க, அவள் அருகே வந்தவன் “ரொம்ப சுலபமா புரிய வேண்டிய விஷயமே உனக்கு புரியாது.. இது வேற கொஞ்சம் சிக்கலானா மேட்டர்.. அவுட் ஆஃப் சிலபஸ் வாசுகி மேடம்.. உங்களுக்கு புரியாது அதனால் விட்டுருங்க”..
“நான் சிங்கப்பூர் போய்ட்டு வர ஒரு வாரம் ஆகும்.. நாமா மத்ததை எல்லாம் விட்டுட்டு நம்மளோட வளையல் உடைக்கிற ப்ராஸசஸில் இறங்கலாமா” என்றவன் அவள் உணரும் முன்பு அணைத்தபடி கட்டிலில் சரிந்தான்..
இரவில் அறையில் படுத்து இருந்த விஷ்ணுவுக்கு பின் இரவாகியும் தூக்கம் வரவில்லை.. ஏனெனில் அவள் கணவன் அருகே இல்லை.. ஒரு வாரம் காலமாக அவன் கை வளைவில் தூங்கி பழகியவளுக்கு அவன் இல்லாது தூக்கம் வர மறுத்தது..
ப்ரதாப் சிங்கப்பூர் சென்று இருந்தான்.. ஊறுகாய் மசாலா பொருட்கள் ஏற்றுமதி சம்ப்ந்தமாக, நேற்று தானே சென்று இருக்கிறான்.. வர இன்னும் ஆறு நாட்கள் ஆகுமே.. புரண்டு புரண்டு படுத்தும் பயனில்லை..
எழுந்து தன் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.. இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டு இருந்த விஷ்ணு கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது..
லீலா போட்டு இருந்த இன்ஸ்டா ஸ்டோரியும் போட்டோவையும் பார்த்து தான்..
அவள் இன்ஸ்டாஸ்டோரியில் சிங்கப்பூர் சென்று இருப்பதாக போட்டு இருந்தது..
அதுவும் ப்ரதாப் சென்றே அதே ஃப்ளைட்… அவள் சிங்கப்பூரில் தங்கி இருக்கும் ஹோட்டல் பெயரையும் போட்டோவையும் இன்ஸ்ட்ராகிராமில் போட்டு இருக்க.. அதுவும் ப்ரதாப் தங்கி இருக்கும் ஹோட்டல் தான்.. இது போதாதா விஷ்ணுவுக்கு நெஞ்சு வலி வர,
அச்சோ இரண்டு பேரும் சொல்லி வச்சது போல போய் இருக்காங்களே என விஷ்ணுவின் குறுக்கு மூளை அவளுக்கு தப்பு தப்பாக எடுத்து கொடுத்தது..