Mr and Mrs விஷ்ணு 10

4.7
(61)

பாகம் 10

“ஏய் சிரிக்காத உன்னை கொன்னுருவேன்” என விஷ்ணு கோவப்பட்டாலும்.. நிவியின் சிரிப்பு நின்றபாடில்லை… இன்னும் இன்னும் அதிகம் தான் ஆனது.. 

வண்டி எடுத்து வரேன் என சென்ற தோழி பத்து நிமிடம் கடந்து வரவில்லையே என நிவியே தேடி பார்க்கிங் வர,

அங்கு விஷ்ணுவோ தலையில் கை வைத்து காரில் சாய்ந்து “போச்சு போச்சு எல்லாம் போச்சு” என புலம்பி கொண்டு இருந்தாள்.. 

“என்னடி ஆச்சு” என பதறி விசாரிக்க,

“ஏற்கெனவே செய்வினை செஞ்ச மாறி போய்ட்டு இருந்த என் வாழ்க்கையில்ல இந்த அஸ்வின் அவன் பங்குக்கு இரண்டு எலுமிச்சை பழத்தை உருட்டிட்டான்” என்றாள்..

“அய்யோ என்னடி விஷயம் அதை தெளிவா சொல்லு”என  நிவி கேட்க விஷ்ணு சற்று முன்பு நடத்தை  சொல்லவும்  கேட்ட நிவி சிரிக்க ஆரம்பிக்க,

விஷ்ணு முறைத்தாள்…

“சாரி சாரி மச்சி, ஆனா இங்க நடந்ததை இமேஜ்னேஷன் பண்ணி பார்த்தேன்னா சிரிப்பை அடக்க முடியலை” என மீண்டும் சிரிக்க, 

“ஏற்கெனவே என் பொழப்பு சிரிப்பா சிரிக்குதுன்னு நானே கவலையா இருக்கேன்.. இதில் நீயும் சிரிக்கிறியா” என்றதும் சிரிப்பை அடக்கியவள்,

“அஸ்வினுக்கு என்ன பதில் சொன்ன” என கேட்க,

“நான் என்னத்தை சொல்றது, லூசுபய நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேட்கமா”,

“நாளைக்கு என் பர்த்டே ப்ரியா நல்ல பதிலா சொல்லு ப்ரியா.. நெகட்டிவ்வா ஏதும் சொல்லி கஷ்டப்படுத்தா ப்ரியான்னு சொல்லிட்டு, நான் கூப்பிட கூப்பிட நிற்காம வண்டியில் ஏறி போறான்” என்றாள்.. 

அதை கேட்ட நிவிக்கு அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியவில்லை.. அப்போது சிரிக்க ஆரம்பித்தவள் தான் இன்னும் நின்றபாடில்லை..

மாலை வேளை அந்த பார்க்கில் உதயகுமார் வெங்கடேஷ் இருவரும் அமர்ந்து இருந்தனர்.. 

விவாகரத்து விஷயம் கேள்விப்பட்டு கண்டிப்பாக நண்பன் கவலையில் இருப்பான் என ஆறுதல் சொல்லவே வெங்கடேஷ் அழைத்து இருந்தார்..

இருவராலும் ஒருவரை ஒருவர் இயல்பாக பார்க்க முடியவில்லை..

பவித்ராவை நல்லா பார்த்துக்கோங்க.. பார்த்தி சார்பாக நான் சாரி கேட்டுக்கிறேன் என்றார் விஷ்ணுவின் தந்தை உதயகுமார்.. 

“நீ எதுக்கு உதயா சாரி சொல்ற, சொல்ல வேண்டியது நான் தான்.. தப்பு முழுக்க பவித்ரா மேல்ல தான்.. அப்புடி இருந்தும் மாப்பிள்ளை ரொம்ப இறங்கி வந்தார்.. ஆனா அவ தான் பிடிவாதமா நின்னு கடைசி எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டா” என்றார்.. 

உதயகுமார் எந்த பதிலும் சொல்லவில்லை.. என்ன சொல்வது என்றும் தெரியவில்லை..  அவரின் கவலை இப்போது மகள் வாழ்க்கையை பற்றி தான் இருந்தது.. மகன் வாழ்க்கையில் கூட இது தான் முடிவு என தெரிந்து விட்டது.. ஆனால் விஷ்ணு வாழ்க்கை அப்புடி இல்லை.. என்ன முடிவு என்பதே இந்த ஏழு மாதமாக தெரியவில்லையே அந்த கவலை முகத்தில் தெரிந்தது.. 

வெங்கடேஷ்க்கும் அவரின் நிலை புரிந்தது.. “உதயா நான் இப்பவும் சொல்றேன்.. ப்ரதாப் ரொம்ப நல்லவன்.. தப்பா எதுவும் செய்ய மாட்டான்..  எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையும் முடிவு பண்ற ஆளு இல்ல,  அவன்கிட்ட நான் பேசுறேன்,  சீக்கிரம் ப்ரியாவை வீட்டுக்கு அழைச்சுப்பான்” என்றதும் உதயகுமார் விரக்தியாக சிரித்தார்.. ஏனெனில் இந்த ஏழு மாதமாக வெங்கடேஷ் இதை தான் சொல்கிறார்.. ஆனால் நடந்தபாட்டை தான் காணோம்.. 

அவரின் கவலை வெங்கடேஷ்க்கு கஷ்டத்தை கொடுத்தது.. ப்ரதாப் மனதில் என்ன ஓடுகிறது அவருக்கும் புரியவில்லை.. பவித்ரா விஷயத்திற்காக மனைவியை ஒதுக்கும் அளவு ப்ரதாப் மோசம் கிடையாது..

ஆனாலும் ஏன் இந்த பிரிவு அவருக்கும் புரியவில்லை.. எத்தனையோ முறை ப்ரியாவை அழைச்சிட்டு வா ப்ரதாப்.. ஏன் இப்புதிய இருக்க உங்களுக்குள்ள ஏதும் பிரச்சினையா என என்ன கேட்டாலும் சரி, மருமகள் பற்றிய பேச்சை எடுத்தாலும் சரி, ப்ரதாப் வாயை திறப்பது இல்லை.. முகத்தை பார்த்து கூட என்ன நினைக்கிறான் என வெங்கடேஷால் அறிய முடியவில்லை.. 

ஆனால் இனி இப்புடியே விட கூடாது.. இரவு மகனிடம் பேச வேண்டும் என்ற முடிவோடு வீட்டிற்கு வந்தார்..

தனது மொபைல் போன் ஒலி எழுப்ப  கிச்சனில் வெங்காயத்தை வாணலியில் வதக்கி கொண்டு இருந்தவளுக்கு ரிங்டோன் வெச்சே அது யார் என்று தெரிய அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஓடி வந்து அழைப்பை ஏற்பதுக்குள் கால் கட்டாகி விட, திரும்ப அந்த எண்ணுக்கு அழைத்தாள் பூரணி 

ஒரே ரிங்கில் எதிர்முனையில் காலை எடுத்தவன் “ஏய் பூசணி எவ்ளோ நேரமா போன் அடிச்சிட்டு இருக்கேன்.. எங்கடி போய் தொலைஞ்ச” என்று அஸ்வின் கத்தவும்,

“கிச்சன்ல இருந்தேன்டா ஓடி வந்து எடுக்கிறதுக்குள்ள  கட் ஆகிருச்சு”, 

“எப்ப பாரு சோறு சோறுன்னு அதிலேயே குறியா இருடி, அதான் இப்புடி பூசணிக்காய் சைல்லயே இருக்க பூசணி” என்று அஸ்வின் கூறவும்,

“அதை விடுடா நீ சொல்லு என்னாச்சு ப்ரியாக்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டியா” ஆர்வமாக கேட்டாள் பூரணி..

“ம்.. அது எல்லாம் நீ சொன்ன மாதிரி ப்ரொபோஸ் பண்ணிட்டு, அவ பதில் சொல்ல வரதுக்கு முன்னாடி, இப்ப எதுவும் சொல்லதா ப்ரியா, எதா இருந்தாலும் நல்லா யோசிச்சு நாளைக்கு பதில் சொல்லுன்னு சொல்லிட்டு, அவ பேச ஆரம்பிக்கிற முன்னாடி ஓடி வந்துட்டேன்” என்றான்..

“டேய் நாளைக்கு உன் பர்த் டேன்னு சொன்னியா, அதான்னே முக்கியமான பாயிண்ட்”,

“அதையும் தான்டி சொல்லி இருக்கேன்.. நாளைக்கு என் பர்த்டே, பிறந்த நாள் அதுவுமா எதுவும் நெகடிவ்வா சொல்லி என் மனசை கஷ்டப்படுத்திடாத, நல்லா முடிவா சொல்லுன்னு அழுத்தி சொல்லி இருக்கேன்டி”,

“ஆனா”,

“ஆனா என்னடா”,

“பூசணி எனக்கு பக் பக்ன்னு இருக்குடி, ப்ரியா நாளைக்கு ஓகே தான சொல்லுவா, என்னை பிடிக்கலைன்னு எதுவும் சொல்லிட மாட்டா தானா” அஸ்வின் கலக்கமாக கேட்க,

“உன்னை பிடிக்கலைன்னு எப்புடிடா சொல்ல முடியும்.. உன்னை பிடிக்காதவங்க யாரும் இருப்பாங்களா என்ன? ப்ரியா நல்ல பதில் தான் சொல்லுவா நீ எதுவும் குழப்பிக்காத” என்று  ஆறுதல் சொன்னாள் பூரணி…

“நாளைக்கு மட்டும் நீ சொன்ன மாதிரி நடந்துச்சு.. நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேன்டி என்றவன், நீ பெருசா என்ன கேட்டுட போற பக்கெட் பிரியாணி தான, அதை இரண்டா வாங்கி தரேன்.. பாய் சீக்கிரம் போய் சாப்பிடு  குட் நைட்” என்று அஸ்வின் போனை வைத்து விட,

மறுமுனையில் அதுவரை சிரித்த முகமாக அஸ்வினிடம் பேசி கொண்டு இருந்த பூரணி முகம் மாறியது.. போனை தன் முன்பு இருந்த டேபிள் மீது வைத்து விட்டு எழுந்தவள் அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன்பு போய் நின்றாள்..  கண்ணாடியில் தன் முழு உருவத்தையும் பார்த்தாள்.. உப்பிய கன்னம் குட்டி தொப்பை என் கொழு கொழுவென அழகாக இருந்தாள்.. இப்புடி குண்டா இருக்கிறதால் தான் அஸ்வின் பார்வை உன் மேலே எப்பவும் விழ மாட்டேங்குது பூரணி என்று தன்னை தானே திட்டியவள்..

இந்த அம்மா அப்பாவை சொல்லனும் அவுங்க தான் ஊட்டம் கொடுக்கிறேன் ஊட்டம் கொடுக்கிறேன் சொல்லி இப்புடி உருளைகிழங்கா என்னை மாத்தி வச்சு இருக்காங்க என்று ஊரில் இருக்கும் பெற்றோரையும் திட்டி கொண்டு இருக்கும் போதே அடுப்பில் வைத்து விட்டு வந்த வெங்காயம் கருகிய வாடை வர, ஓடி போய் பூரணி பார்க்க அது கருகி போய் இருந்தது.. அடுப்பை அணைத்தவளுக்கு மேற்கொண்டு எதையும் சமைத்து சாப்பிடும் மனநிலை இல்லாததால் அப்புடியே சாப்பிடமால் வந்து படுக்கையில் விழுந்தாள்.. கண்ணை மூட அஸ்வின் ப்ரியா கை பிடித்து காதலை சொன்ன காட்சி தான் வந்தது.. கண்ணீர் தானாக மூடிய விழிகளிலிருந்து நிற்காமல் வந்தது.. 

பூரணி  அஸ்வின் இருவருக்கும் சொந்த ஊர் திருச்சி.. கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே பழக்கம்.. அஸ்வின் பூரணியின் சீனியர்.. பூரணி முதல் நாள் கல்லூரி சென்றவளை ரேக்கிங் செய்தவனே அஸ்வின் தான்.. உன் பேர் என்ன என்று அஸ்வின் கேட்க பூரணி என்று அவள் சொல்லிட, என்ன பூசணியா கரெக்ட்டா தான் வச்சு இருக்காங்க என்று அவளை பார்த்து கூறியவன் மேல் பூரணிக்கு கோவம் வரவில்லை முதல் பார்வையிலே அவன் வசம் தன்னை இழந்து இருந்தாள் பூரணி.. அதன் பிறகு அஸ்வின் அவனின் அசைமெண்ட் செய்வது ரெக்கார்ட் நோட் எழுதி தருவது சரக்கு அடிக்க காசு கொடுப்பதென அனைத்துக்கும் அவன் பூரணியிடம் தான் வந்து நிற்பான்..

அஸ்வின் பூரணியை தோழியாக மட்டுமே பார்த்தான்.. ஆனால் பூரணியின் மனமோ அவள் சொல் பேச்சு கேளாமல் அவன் மீது மலையளவு காதலை கொண்டு இருந்தது.. அவனிடம் அந்த காதலை வெளிப்படுத்த தான் பெரும் தயக்கம் பூரணிக்கு, அவனுக்கு தான் பொருத்தமில்லை என்று தன் உருவத்தை வைத்து தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தாள்.. ஏனெனில் அஸ்வினிடம் பூரணி எத்தனையோ தடவை உன் லவ்வர் எப்புடி இருக்கனும்டா சொல்லு என்று கேட்டால்,

அவன் சொல்லும் முதல் பதில் நல்லா ஸ்லிம்மா அழகா இருக்கனும் என்பது தான்.. அதனால்லே தன் காதலை சொல்ல தயங்கினாள் பூரணி.. அஸ்வின் ஒவ்வொரு பெண்ணாக சைட் அடிக்க.. பூரணிக்கு தான் அது எல்லாம் அவளை வருத்தியது.. ஒரு நாள் பாஸோ பெயிலோ பர்ஸ்ட் காதலை சொல்லிரலாம் என்று தைரியத்தை திரட்டி கொண்டு அஸ்வினிடம் காதலை சொல்லி விட, அவள் தலையில் தட்டிய அஸ்வின் சும்மா விளையாடாமா போடி ப்ராங்க் பண்ணாமா என்று சிரித்து விட்டு சென்று விட்டான்.. அது பூரணிக்கு வலித்தது.. தன் காதலை விளையாட்டாக எண்ணி விட்டவனிடம் இனி என்றுமே தன் மனதை வெளிப்படுத்த கூடாது என்று முடிவெடுத்து விட்டாள்.. 

கல்லூரி முடிந்து அஸ்வின் வேலைக்காக சென்னை வந்து விட, வேலைக்கும் செல்லும் தேவை இல்லை என்றாலும் அவனுக்காகவே வீட்டினரிடம் வேலைக்கு போவேன் என்று  சண்டை போட்டு அவளும் சென்னை வந்து அஸ்வினுடனே வேலைக்கும் சேர்ந்து விட்டாள்… முதலில் பெண்களை சைட் மட்டும் அடித்து கொண்டு இருந்தவன் மூன்று  மாதத்திற்கு முன்பு பூரணியிடம் வந்து நம்ம ஆபிசில் புதுசா ஜாயிண்ட் பண்ணி இருக்க ப்ரியாவை லவ் பண்றேன்டி என்று சொன்னான்.. மனது வலித்தாலும் அதை மறைத்து கொண்டு அஸ்வின் காதலுக்கு வாழ்த்தும் சப்போர்ட் செய்தாள்.. இன்று அவன் ப்ரியாவிடம் காதலை சொல்ல ஐடியா கொடுத்ததே பூரணி தான்..  

பூசணி எனக்கு பயமா இருக்கு என் கூட வாடி என்று பூரணியை தூர நிறுத்தி விட்டு வந்தே ப்ரியாவிடம் ப்ரொபோஸ் செய்ய நேரில் பார்த்த பூரணிக்கு தான் இதயத்தை கூர் கத்தி கொண்டு கிழித்தது போன்று வலித்தது.. உனக்கு ஏன்டா என் மனசு புரியலை.. உனக்கு பிடிச்ச மாதிரி ஏன் அஸ்வின் நான் இல்லை.. எனக்கு பயங்கரமா வலிக்குதுடா என்று எப்போதும் போல் பூரணி கண்ணீரில் கரைந்தாள்..

தனது அறையில் கோவமாக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள் விஷ்ணு.. “டேய் அஸ்வின் பைத்தியக்காரன் பைத்தியக்காரன் காலையில்லே இருக்குடா உனக்கு என்கிட்ட” என்று திட்டியவள் 

“எப்புடி எப்புடி அந்த அஸ்வின் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணலாம் அதும் அவர் முன்னாடியே”,

எனக்கு இருக்க பிரச்சினை பத்தாதுன்னு இவன் வேற, அச்சோ என்று நெற்றியில் அடித்து கொண்டு கட்டிலில் அமர்ந்தவள், முறைச்சுட்டே போனாரே, என்னை பத்தி என்ன நினைச்சு இருப்பாரோ, அவர்கிட்ட நாளைக்கு செமத்தியா இருக்கு,

டேய் அஸ்வின் லூசு எப்புடிடா கல்யாணமான என் மேல்ல உனக்கு லவ் வரலாம் என்று கால்லை தரையில் உதைக்க, அப்போதே தான் தன் கால் விரல்களை உன்னிப்பாக கவனித்தாள் விஷ்ணு..

அவள் கால் விரலில் மெட்டி இல்லை..மெட்டி அவள் அணிவதும் இல்லை..

தன் கால் விரல்களை பார்த்தாள்.. திருமணத்தின் போது அவள் விரல் பிடித்து மெட்டி மாட்டி விட்டதும் அவள் கணவன் தான், 

அவன் வீட்டினர் அனைவர் முன்பும் அதை கழட்டியவும் அவன் தான்..

விஷ்ணுவிற்கு வெள்ளி சேராது.. வெள்ளி பொருள் அணிந்தாலே தோல் அலர்ஜி ஏற்பட்டு தோல் சிவந்து புண்ணாகி விடும்.. அதனால்லே சிறு வயதிலிருந்தே கொலுசு கூட அணிய மாட்டாள்.. 

திருமணத்தின் போது கல்யாணி வந்து விஷ்ணுவின் இந்த அலர்ஜியை பற்றி ரங்கநாயகியிடம் கூற, அதை கேட்டு பாட்டி கூட அமைதியாக இருக்க, ப்ரதாப் அம்மா தேவகியும் சித்தி விசாலாட்சியும் தான் அது எப்புடி வெள்ளி சேரமா போகும்.. அதற்காக கல்யாணமான பொண்ணை எப்புடி மெட்டி போடாம இருக்க விட முடியும்.. அது எல்லாம் போட போட பழகிடும்.. கட்டாயம் மெட்டியும் கொலுசும் போட்டு தான் இருக்கனும் என்று கண்டிப்பாக கூறி விட்டனர்..

ஆனால் விஷ்ணுவுக்கோ திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் மெட்டி அணிந்த விரல்களிலும் கணுக்காலிலும் அலர்ஜி ஏற்பட்டு தோல் சிவந்து புண்ணாகி நடக்க முடியாத படி வலி எடுக்க ஆரம்பித்தது..

அவளை கவனித்த ப்ரதாப் என்ன என விசாரிக்க, தன் அலர்ஜியை பற்றி கூறினாள்..

அவளை முறைத்து ப்ரதாப்.. சேராததை ஏன் போட்டு இருக்க கழட்டு என்றான்.. 

அவளும் கழட்டி விட்டாள்.. ஆனால் மறுநாள் ப்ரதாப் சித்தி விசாலாட்சி அது எல்லாம் கூடாது என்ன பொண்ணு நீ மெட்டியை கழட்டி வச்சு இருக்க.. நீ என்ன குடும்ப பொண்ணா அதா இதா  என்று தாம் தூம் என்று குதிக்க.. வேறு வழி இல்லாமல் விஷ்ணு அதை காலில் மாட்டி கொள்ள  நடக்க கூட முடியாத அளவு புண் பெரிதாகி கால் நடக்க முடியாதபடி வலி பயங்கரமானது..

விஷயமறிந்த ப்ரதாப்போ வீட்டினர் அனைவர் முன்பும் தன் மனைவியின் கால்லை பிடித்து மெட்டியை கழட்டி வீசி விட்டான்.. 

உன் பொண்டாட்டி கால் உறுத்துன்னு சொன்னா சொல்லி  மெட்டியை கழட்டி வீசிட்டியே, இதே கழுத்து உறுத்துன்னு சொன்னா தாலியையும் கழட்டிறுவியா ப்ரதாப்  தன்னை அவமானப்படுத்தி விட்டானா என்ற கோவத்தில் விசாலாட்சி கேட்க..

ஆமா கழட்டிறுவேன் இதில் உங்களுக்கு ஏதாவது நஷ்டம் இருக்கா சித்தி.. என் பொண்டாட்டிக்கு இப்புடி தான் இருக்கனும் அப்புடி தான் இருக்கனும்னு நீங்க கண்டிஷன் போடாதீங்க சித்தி என்று விசாலாட்சி முகத்தில் அடித்தாற் போல் கூறினான்..

அவங்க சித்திக்கும் அவருக்கும் எப்பவும் ஆகாது..வீட்டுக்குள்ள பயங்கர கோல்ட் வார் அதான்  சித்தி மெட்டி போட்டே ஆகனும்னு சொன்னதால் தான்.. அவங்க சொல்லி கேட்கனுமாங்கிற ஈகோ அதற்காக தான் மெட்டியை கழட்டுனார்.. மத்தபடி என் மேல்ல அன்பு அக்கறை எல்லாம் எதுவும் இல்லை என்று இந்த விஷயமறிந்து கேட்ட நிவியிடம் கூறினாள் விஷ்ணு.. இன்று வரை அதை தான் சொல்லி கொண்டும் நம்பி கொண்டும் இருக்கின்றாள்..

காலேஜ்ல பசங்க ரெட் லைட்ன்னு குங்குமம் வைப்பதை கிண்டல் அடிக்க   குங்குமம் வைக்காமல் தான் காலேஜ் சென்றாள்..  ப்ரதாப்பும் ஒன்றும் சொல்லவில்லை.. உரிமைப்பட்டவனே அமைதியாக இருக்க மெட்டி விஷயத்திலே மூக்கு உடைப்பட்ட வீட்டினர் வாயை திறப்பார்களா என்ன? யாரும் விஷ்ணுவை எதுவும் சொல்லவில்லை..

அதுவே நாளைடைவில் அவளுக்கு பழகியும் விட்டது.. இப்போது தான் அதை உணர்கிறாள் விஷ்ணு.. 

ஓ… கல்யாணமான எந்த அடையாளமும் என்கிட்ட இல்லை.. அதான் அந்த லூசு அஸ்வின் இப்புடி பண்ணிட்டான் போல.. ச்சே என்று நெற்றியில் அடித்து கொண்டாள் விஷ்ணு…

அப்போது அவள் போனில் மெசேஜ் வந்ததற்கான் ஒலி வர,

என்னவென்று எடுத்து பார்த்தாள் விஷ்ணு..

பார்த்தி தான் வாசல்ல தான் நிற்கிறேன் ப்ரியாமா, காலிங் பெல் அழுத்தினா அம்மா அப்பா வந்திருவாங்க.. இப்ப இருக்க நிலைமைக்கு என்னால் அவங்களை ஃபேஸ் பண்ண முடியாது.. டோர் ஓபன் பண்ணி விடுடா என்று மெசேஜ் அனுப்பி இருந்தான்..

விஷ்ணுவும் சென்று கதவை திறந்து விட, பார்த்திபனோ சரியாக நிற்க கூட முடியாதபடி போதையில் இருந்தான்..

“என்னடா இது” விஷ்ணு சத்தம் போட,

“ஷ்… சத்தம் போடாதே அப்பா வந்திருவாங்க” என்று தன் வாய் மீது கை வைத்து காட்டியவன் “ஒன்னுமில்லடா” என்ற பார்த்திபன் அறையை நோக்கி நடக்கிறேன் என்று தடுமாறினான்..

அவனின் கையை பற்றி அறைக்குள் கொண்டு விட்ட விஷ்ணு,

“என்ன பழக்கம் பார்த்தி இது எல்லாம் அப்பாக்கு தெரிஞ்சா என்னாகிறது ஏன்டா இப்புடி குடிச்ச” என்று விஷ்ணு சத்தம் போட,

“முடியல ப்ரியாமா என்னால்ல சத்தியமா  முடியல”

“அவ்ளோ தான்ல இனிமே எனக்கும் பவிக்கும் இடையில்ல ஒன்னுமே இல்லைல அதை நினைக்கும் போதே வலிக்குதுடா” என்று இதயத்தை தொட்டு காட்டிய பார்த்தி,

“இவ்ளோ நிறைய இவ்ளோ இவ்ளோ நிறைய நிறைய லவ் அவ மேல்ல வச்சு இருந்தேன்” என்று கையை விரித்து  காட்டியவன், 

“என்னையும் என் காதலையும் புரிஞ்சிக்காம எட்டி உதைச்சிட்டு போய்ட்டாளேடா” என்று அழுதவனை தேற்றும் வழி தெரியாது விஷ்ணு முழித்தாள்..

அங்கு பவித்ராவோ பார்த்திபன் தனக்கு கொடுத்த பொருட்களை எல்லாம் அவனிடமே நாளை திருப்பி கொடுக்க வேண்டும் என்று எடுத்து வைத்து கொண்டு இருந்தவள், அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து விட்டு கடைசியாக கழுத்தில் இருந்த தாலியையும் கழட்டி அதோடு வைத்து பேக் செய்து கொண்டு இருந்தாள்… 

 

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 61

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!