Mr and Mrs விஷ்ணு 11

4.5
(39)

பாகம் 11

பவித்ராவோ பார்த்திபன் தனக்கு கொடுத்த பொருட்களை எல்லாம் அவனிடமே நாளை திருப்பி கொடுக்க வேண்டும் என்று எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.. 

“பவி அவ்ளோ தானா பேக் பண்ணிரலாமா” என கேட்டார் ப்ரதாப் பவி சித்தி விசாலாட்சி.. 

“ம்”. என்றாள் பவித்ரா.. 

“என்ன அவ்ளோ தான் சொல்ற?, அப்ப இது கொடுக்கிற எண்ணம் இல்லையா” என கழுத்தில் இருந்த தாலி செயினை சுட்டி காட்டி விசாலாட்சி கேட்க,

அதிர்ந்து போன பவி “சித்தி இதை எப்புடி?” என தயங்கினாள்..

“கோர்ட் படியேறி போய் டிவோர்ஸே வாங்கிட்ட, உங்க இரண்டு பேர் நடுவில்ல இப்ப எதுவும் எந்த உறவும் இல்லை, அப்புடி இருக்கையில் தாலி செயினை கழட்ட மட்டும் ஏன் யோசிக்கிற பவி,கழட்டு” என்றார்.. 

விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட போதும், இவன் எனக்கு வேணாம் என கோர்ட்டில் சொன்ன போதும் வராத தயக்கமும் நடுக்கமும், தாலியை கழட்டு என விசாலாட்சி சொன்ன போது வந்தது.. 

“ஏன் கழட்ட தயங்கிற பவி?, ஒரு வேளை பார்த்திபன் பண்ணுனதை எல்லாம் மறந்திட்டு, கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் அவனோட சேர்ற எண்ணம் ஏதும் இருக்கா பவி”? என கேட்டதும் வேகமாக தாலி கொடியை கழட்டி பாக்ஸில் போட்டாள்..

விசாலாட்சி நக்கலாக சிரித்து கொண்டார்.. 

தாலியை கழட்டி வைத்த பவித்ராவுக்கு மனம் என்னவோ போல் இருந்தது.. என்ன என்று தான் தெரியவில்லை.. மனம் நிலையில்லாமல் தவித்தது.. முகத்தை மூடி அமர்ந்து இருந்தாள் தவித்த மனதை அமைதிப்படுத்த, 

“அவன் சம்பந்தபட்ட எல்லா பொருளையும் எடுத்து வச்சிட்டியா பலி என்றபடி அவள் அறைக்கு வந்தார்  தேவகி … மகள் அமர்ந்திருக்கும் கோலத்தை பார்த்து தேவகி வருத்தப்பட, விசாலாட்சிக்கு வருத்தம் எல்லாம் எதுவும் இல்லை..

“அப்பவே சொன்னேன் கேட்டியா, அந்த பார்த்தி அவன் குடும்பம் எதுவும் வேண்டாம்ன்னு, அவன் தான் வேணும்னு ஒத்த கால்ல நின்ன, உன்னை எந்த நிலைமையில்ல கொண்டு வந்து நிறுத்தி இருக்கான் பாரு, இதே நான் சொன்ன இடத்தில் கல்யாணம் பண்ணி இருந்தனா, இப்புடி ஒரு நிலை வந்து இருக்குமா, அங்கு நீ ராணியா வாழ்ந்து இருக்கலாம்”.. என கண்ணை கசக்கியவர் 

“உன்னோட வாழ்க்கையை கெடுத்துக்கிட்டது மட்டும் இல்லாம என் பையன் வாழ்க்கையையும் கெடுத்து வச்சிட்டியே, என் பையனுக்கு அந்த ப்ரியா ஈடா வருவாளா, உனக்காக தானே, அவளை என் ப்ரதாப்புக்கு கட்டி வச்சேன்..இப்ப அவன் வாழ்க்கையே வீணா போயிருச்சு”என்று தேவகி பவித்ராவை தெலுங்கில் திட்டி கொண்டு இருந்தார்.. 

“என்னக்கா நீங்க, ஏற்கெனவே நம்ம பவி எவ்ளோ வேதனையில்ல இருக்கா, அவளை போய் இப்புடி திட்டிட்டு இருக்கீங்க.. அவளே பாவம் வேதனையில் இருக்கா, இந்த நேரத்தில் நம்ம பவிக்கு நாமா தான் துணையா இருக்கனும் இப்புடி திட்டி அவளை கஷ்டப்படுத்த கூடாது”என்றார் விசாலாட்சி..  

“பவி நீ ரெஸ்ட் எடுடா” என்றவர் “வாங்க அக்கா என் கூட” என்று தேவகியை வெளியே அழைத்து சென்றவர், “இப்ப என்னாகிருச்சுன்னு  நீங்க இவ்ளோ கவலைபடுறீங்க”..

“இதுக்கு மேல்ல என்னாகனும், பவி ப்ரதாப் இரண்டு பேர் வாழ்க்கையும் இப்புடி ஆகிருச்சே” என்று தேவகி புலம்ப,

“இதுவும் நல்லதுக்கு தான் நினைச்சுக்கோங்க அக்கா.. உங்களுக்கு தான் இந்த கல்யாணம் பிடிக்கவே இல்லையே.. பவி அந்த பார்த்தியை மொத்தமா பிரஞ்சு வந்துட்டா, அதே போல நம்ம ப்ரதாப்பையும் அந்த ப்ரியாவை விவகாரத்து பண்ண சொல்லிருங்க.. அப்புறம் பவி ப்ரதாப் இரண்டு பேருக்கும் நம்ம குடும்பத்துக்கு தகுந்த மாதிரி நம்ம ஊர்ல நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணிடலாம்” என்று விசாலாட்சி ஐடியா கொடுக்க.. 

“இது எல்லாம் சரியா வருமா விசா, தப்பில்லையா?” தேவகி தயங்கினார்.. 

“அது எல்லாம் சரியா வரும்க்கா,நம்ம ப்ரதாப் என்ன அந்த பொண்ணை விரும்பியா கல்யாணம் பண்ணுனான்.. நம்ம பவிக்காக தானே பண்ணிக்கிட்டான்.. நீங்க ப்ரதாப்க்கு கிட்ட பேசுங்க”என்று விசாலாட்சி ஏத்தி விட தேவகியும் சரி என்று தலை ஆட்டி வைத்தார்.. “ப்ரதாப் வரட்டும் பேசலாம்” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தார்

விசாலாட்சி சிரித்து கொண்டார்

அவரை பொறுத்தவரை தன் கணவர் தன் மகன் இருவர் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் மற்றவர்கள் எப்புடி போனால் எனக்கு என்ன என்ற உயரிய எண்ணம் உடையவர்.. அந்த எண்ணம் தான் ப்ரதாப் மேல் அவருக்கு இருக்கும் கோவத்திற்கான காரணமே, 

தன் கணவனையும் மகனையும் விட ப்ரதாப்புக்கு கிடைக்கும் மதிப்பு மரியாதை அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. அவனுக்கு கீழ் தான் என் மகன் கணவர் இருக்க வேண்டுமா? என்ற கோவம் ப்ரதாப் மீது, 

அதை அவனிடம் நேரிடையாக காட்டி விட முடியுமா, அவனை எதுவும் செய்ய முடியாதவர், விஷ்ணு இந்த வீட்டுக்கு வந்த பின்பு அவள் மீது காட்டினார்.. அவளை நிறைய தொந்தரவு செய்தார்.. அதை தெரிந்த ப்ரதாப் விசாலாட்சியை கண்டிக்க, விஷ்ணு மீதும் வன்மம் ஏற்பட்டது.. அதனால் இப்போது இருக்கும் பிரச்சினையை ஊதி பெருசாக்கி விட்டு விஷ்ணுவை இந்த வீட்டுக்கு வர விட கூடாது.. ப்ரதாப் குடும்பம் இல்லாமல் தனியாகவே நிம்மதி இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கேவலமான மனநிலையில் இருந்தார்…

தேவகிக்கு ப்ரதாப் மனநிலை என்னவென்று தெரியவில்லை.. ப்ரியா இந்த வீட்டில் இருக்கும் வரை அவர் அவளை எந்த தொந்தரவும் செய்யவில்லை.. ஆனால் விசாலாட்சி ப்ரியாவுக்கு நிறைய தொல்லை கொடுக்கும் போது அதை தடுக்கவில்லை.. ஆனால் ப்ரதாப்பிடம் விசாலாட்சி நன்றாகப் வாங்கி கட்டி கொண்டார்.. அதை பார்த்த தேவகி மகனுக்கு மனைவி மீது நாட்டம் என்று தான் நினைத்து இருந்தார்.. ஆனால் ப்ரியா இந்த வீட்டிலிருந்து சென்ற பின் அவளை அவன் கண்டு கொள்ளவே இல்லை.. வீட்டிற்கு அழைத்தும் வரவில்லை.. அதை பற்றி வெங்கடேஷ் பேசும் போது எல்லாம் பிடி கொடுக்கவும் இல்லை.. 

ப்ரதாப்புக்கு ப்ரியாவை பிடிக்கவில்லை பவித்ராவுக்காக மட்டும் தான் இத்தனை நாள் அவளுடன் இருந்தான்  போல என்ற எண்ணம் ஏற்கெனவே அவருக்கு இருந்தது.. இப்போது விசாலாட்சி வந்து பேசவும், ஆமா என் பொண்ணுக்காக தானே இந்த கல்யாணமே, அவளே அங்க வாழவில்லை.. அப்ப அந்த ப்ரியா மட்டும் இங்க வாழனுமா.. என் பொண்ணை கை நீட்டி அடிச்சான்ல அந்த பார்த்திபனை கதற விடுறேன் என்று நினைத்தவர் ப்ரதாப் வருகையை எதிர் நோக்கி காத்து கொண்டு இருந்தார்..

ப்ரதாப் வீட்டிற்கு வந்து சாப்பிட அமர்ந்ததும், “அந்த பார்த்திபன் எப்புடி பண்ணிட்டான் பார்த்தியா ப்ரதாப்.. நம்ம பவி வாழ்க்கையையே வீணாக்கிட்டான்” என்று தேவகி அரைமணி நேரமாக மூச்சு கூட விடாமல்  டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த ப்ரதாப்பிடம் பேசி கொண்டு இருந்தார்..

ப்ரதாப்போ தேவகி பேசும் எதையும் காதில் வாங்காமல் சாப்பிடுவதில் கண்ணும் கருத்துமாய் இருந்தான்..

நாம் பேசும் போது எதிரில் இருப்பவர்கள்  ம்.. கொட்டாமலும், எந்த எதிர்வினையும் முகத்தில் கூட காட்டாது இருந்தால் அடுத்தடுத்து பேச முடியாதல்லவா, அது போல்  ப்ரதாப் தேவகி பேச்சை கண்டு கொள்ளாமல்   இருக்க, தேவகிக்கு தான் அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை..

இருந்தும் ப்ரதாப்புக்கு ப்ரியா மீது  கோவம் வர வேண்டுமென்று, மேலும் “நான் பயந்தது போலவே இது எல்லாம் அந்த பார்த்தி அவன் குடும்பத்தோட ப்ளான் தான்.. நம்ம குடும்பத்தை பழி வாங்கவே தான் நம்ம பவியை பகடை காயா பயன்படுத்திட்டாங்க போல, 

பவித்ராவை கஷ்டப்படுத்துனா தான் அவளை பார்த்து நம்ம எல்லாரும் வருத்தப்படுவோம் கஷ்டப்படுவோம் சொல்லி இப்புடி எல்லாம் பண்ணிட்டாங்க.. இதுக்கு அந்த பார்த்தியும் உடந்தை.. அவனுக்கு பவி மேல்ல பாசம் எல்லாம் ஒன்னுமில்லை.. நம்ம சொத்து தான் அவனுக்கு கண்ணு.. நம்ம சொத்து மேல்ல ஆசைப்பட்டு தான் அந்த ப்ரியாவை கூட உன் தலையில் கட்டி வச்சிட்டாங்க என மீண்டும் தம் கட்டி பேசினார்..

“அபாண்டமா பேசாத தேவகி பவித்ராவுக்கு அங்க எந்த பிரச்சினையும் வர கூடாதுன்னு உங்க பயத்துக்காக,  ப்ரியாவை ப்ரதாப்புக்கு பொண்ணு கேட்டது நீயும் அம்மாவும் தான்.. இப்ப என்ன சொத்துக்கு ஆசைப்பட்டு ப்ரியாவை இங்க கல்யாணம் பண்ணி தந்ததாங்கன்னு சொல்லி பழி எல்லாம் அவங்க மேல்ல தூக்கி போடுற” என்று தேவகி மீது கோவப்பட்டார் வெங்கடேஷ்..

இந்த இடத்தில் ரங்கநாயகியும் தான் இருந்தார்.. ஆனால் அவர் எதுவும் பேசவில்லை.. சொல் பேச்சை கேட்காமல் விவாகரத்து வரை போய் விட்டாளே என்று பேத்தி மேல் தான் நிறைய வருத்தம்.. மகாவுக்கு தான் செய்த கொடுமை தான் பேத்தி வாழ்வு இப்புடி போவதற்கு காரணமோ என்ற குற்ற உணர்வு இருந்தது.. அதனால்லே இப்போது அவர் எதுவும் பேசவில்லை…

“சரி நாங்க தான் கேட்டோம்னு வச்சுப்போம், அவங்க எதுக்கு சம்மதம் சொன்னாங்க.. இந்த வசதி வாய்ப்பு மேல்ல ஆசை இல்லாமல்லா சம்மதம் சொன்னாங்க.. அப்புடி அவங்க மட்டும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு போய் இருந்தா என் பொண்ணுக்கு இவ்ளோ பிரச்சினையும் வந்து இருக்காதே”,

“தப்பு எல்லாம் பவி மேல்ல தான், அதோட முதல்ல விவாகரத்து கேட்டது பவி தான் தேவகி அதை மறந்துட்டு பேசாத, மாப்பிள்ளை எவ்ளோ இறங்கி வந்து சமாதானம் பண்ண முயற்சி பண்ணி இருப்பார்.. ஆனா உன் பொண்ணு தான் பிடிவாதமா ஒத்த கால்ல நின்னு இந்த விவகாரத்தை வாங்கி இருக்கா அதை மறந்துட்டு மாப்பிள்ளையை தப்பு தப்பா பேசிட்டு இருக்காத” என வெங்கடேஷ் கண்டிக்க

“இன்னும் என்ன மாப்பிள்ளை அதான் ஒன்னும் இல்லைன்னு ஆகிட்டே, நம்ம பொண்ணை நம்ம முன்னாடியே மாட்டை அடிக்கிற போல அடிச்சான், நீங்க தான் அதை மறந்துட்டு அவங்களுக்கு சப்போர்ட்டா பேசிட்டு இருக்கீங்க..  ஏன் சமாதானம் பண்ண வர மாட்டான்.. பவி மூலமா அவனுக்கு வரும் சொத்து எல்லாம் போயிடுமே, அது மட்டுமா அவன் தங்கச்சி வாழ்க்கை இருக்கே, அதுக்காக அவன் இறங்கி வந்து தானே ஆகனும்.. ஆனா அது எல்லாம் இங்க நடக்காது. என் பொண்ணு எப்புடி இப்ப கஷ்டப்படுறாளோ அதே போல் அவன் தங்கச்சியையும் அவனையும் கலங்க வைக்கிறேன் பாருங்க” என்ற தேவகியை முறைத்த வெங்கடேஷ்

“உன் எண்ணம் என்னன்னு எனக்கு புரியுது தேவகி.. வேணாம் உன் நினைப்பு ரொம்ப தப்பு.. பவி பார்த்தி விஷயம் வேற, அவர்களுக்குள்ள பிரச்சினை வந்தது சண்டை போட்டுக்கிட்டாங்க.. ஆனா ப்ரியா” என்று ஆரம்பித்த வெங்கடேஷ் பேச்சை, 

“எனக்கு எல்லாம் தெரியும் நீங்க அமைதியாக இருங்க” என்று அவர் பேச்சை தவிர்த்த தேவகி 

ப்ரதாப் என்று திரும்பி டைனிங் டேபிள்ளை பார்க்க, ப்ரதாப் அங்கு இல்லை..

சாப்பிட்டு முடித்து விட்டு வாஷ் பேஷனில் கை கழுவி கொண்டு இருந்தான்.. கையை கழுவி விட்டு அஙகிருந்த டவலில் கையை துடைத்து விட்டு வந்தவன் தேவகி வெங்கடேஷ் இருவரையும் கடந்து தன்னறைக்கு செல்ல மாடியேற போக,  

 இவ்வளவு நேரம் மூச்சை கொடுத்து பேசுன பேச்சுக்கு மகன் ஒரு எதிர்வினையும் காட்டாது போகிறானே என்று எண்ணிய தேவகி, 

“என்ன ப்ரதாப் ஒன்னும் சொல்லாம அமைதியா போற” என்று கேட்டார்..

“சொல்றதுக்கு ஒன்னும் இல்ல,அதான் அமைதியா போறேன்” என்று பதிலளித்தான்..

 

“நம்ம பவிக்கு டிவோர்ஸ் ஆகிட்டு ப்ரதாப் அதுக்கு நீ ஒன்னும் பண்ணாம”,

“என்ன பண்ணனும் பட்டாசு வெடிச்சு கேக் வெட்டி கொண்டாலாமா?” என ப்ரதாப் கேட்க, 

இல்ல பவி கோர்ட் போயிட்டு வந்ததிலிருந்தே ரொம்பவே அழுறா ப்ரதாப் என்றார் தேவகி..

“அழுறாளா? எதுக்கு அழுகனும்? அவ கேட்ட டிவோர்ஸ் தான் கிடைச்சிருச்சே.. அதுக்கு நியாயமா பார்த்தா சந்தோஷம் தானே படனும்” என்று ப்ரதாப் சொன்னதும் தேவகி முகம் தொங்கி விட்டது இருந்தும்

“அவ டிவோர்ஸ் கேட்கிற அளவுக்கு அங்க அவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கா ப்ரதாப், அது உனக்கு தெரியாது  என்று சப்பை கட்டு கட்டியவர், 

 ப்ரதாப் நம்ம வீட்டு பொண்ணை  கஷ்டப்படுத்தி இருக்காங்க, அவங்களை நீ சும்மா விட மாட்டேன்னு எனக்கு தெரியும்.. அடுத்து நீ என்ன பண்ண போற ப்ரதாப்” என ப்ரியா விஷயத்தில் என்ன பண்ண போற என்பதை நேரிடையாக கேட்காமல் மறைமுகமாக  கேட்டார்.. 

“தூங்க போறேன்”  என்றான்.. 

தேவகிக்கு தான் அய்யோடா என்று இருந்தது.. இருந்தும் “இல்லை நான் அதை கேட்கல ப்ரதாப்  உன் வாழ்க்கை” என்றவரை இடைமறித்த ப்ரதாப் 

“எதா இருந்தாலும் நாளைக்கு பேசுங்க.. அதுவும் இப்ப பேசுன டாபிக் எனக்கு பிடிக்கலை.. அதை தவிரத்த எதா இருந்தாலும் பேசுங்க

இப்ப எனக்கு தூக்கம் வருது.. சோ டயர்ட், குட் நைட்” என்றவன் மாடி படியேறி தன்னறைக்கு சென்றான்.. தேவகி தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு நின்றார்..

பார்த்து கொண்டு இருந்த வெங்கடேஷ்க்கு  நண்பனிடம் கூறியதை போல ப்ரதாப் ப்ரியாவை விட மாட்டான் என நிம்மதியாக இருந்தது.. 

ப்ரதாப் பின்னாடி அவன் அறைக்கு சென்றவர் “ப்ரதாப் கண்ணா உன்கிட்ட பேசணும்” என்றார்..

“சொல்லுங்க  நானா” என்றதும்,

“உன் அம்மா எண்ணம் என்னன்னு உனக்கு புரியுதுல கண்ணா.. நீ ப்ரியாவை வீட்டிற்கு அழைச்சிட்டு வந்துட்டா, அவளுக்கு இந்த எண்ணம் எல்லாம் வராது.. அதனால்ல நீ நாளைக்கே ப்ரியா வீட்டுக்கு போய்” என பேசி கொண்டு இருந்த தன் நானாவை இடை மறித்தவன்,

“எதா இருந்தாலும் நாளைக்கு பேசுங்க நானா.. நீங்க இப்ப பேசுன விஷயமும் எனக்கு பிடிக்கலை.. இதை விடுத்து எதா இருந்தாலும்”என தேவகியிடம் சொன்ன அதே டயலாக்கை இவரிடமும் பேச, வெங்கடேஷ்க்கு தான் மகன் மனதில் என்ன இருக்கிறது என தெரியாமல் தலை சுற்றியது.. 

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 39

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!