Mr and Mrs விஷ்ணு 12

4.6
(29)

பாகம் 12

கதவை திறந்து அறைக்குள் வந்த ப்ரதாப் கண்ணில் முதலில் பட்டது விஷ்ணு, ப்ரதாப் அவர்களின் கல்யாண போட்டோ தான்.‌.. தெரிந்தோ தெரியாமலோ கதவை திறந்து அறைக்குள் வந்து நிமிர்ந்தாலே கண்ணில் படும்படி தான் அந்த போட்டோவை மாட்டி வைத்து இருந்தாள் விஷ்ணு…

அந்த போட்டோ ஃப்ரேம் கொஞ்சம் கோணலாக இருந்தது.. அறையை சுத்தம் செய்தவர்கள் போட்டோவை துடைக்கும் போது கோணலாகி இருக்கும் அவர்கள் கவனிக்காமல் போய் இருக்கலாம் என்று புரிந்தது.. அந்த போட்டோ அருகே சென்ற ப்ரதாப் போட்டோவை நேராக்கினான்..

ஒரு நொடி போட்டோவை உற்று பார்த்தான்.. அதில் பாவமான முகபாவத்துடன் தெரியும் மனைவியின் நிழற்படத்தை பார்த்தவனுக்கு இன்று மாலை அஸ்வின் விஷ்ணுவின் கையை பிடித்தபடி நின்று இருந்த காட்சியே வந்து வந்து போனது..

‘போட்டோவில் இருந்த விஷ்ணுவை முறைத்தவன் வெரிவாடு வெரிவாடு ஆ… தொங்குனா கொடுக்கு தான் கையை பிடிச்சு ஏதேதோ உளறிட்டு இருக்கான்னா கன்னத்தில்லே ஓங்கி ஒன்னு வைக்காம ப்பேன்னு முழிச்சிட்டு நிற்கிறா முட்டாள் முட்டாள், என்று போட்டோவில் இருந்த மனைவியை திட்டினான்..

அப்போது ப்ரதாப்பின் மொபைல் போன் அடித்தது.. போனை எடுத்து பார்க்க அதில் ப்ரதாப்பின் பி.ஏ ராம் கால் செய்து இருந்தான்..

அழைப்பை ஏற்ற ப்ரதாப் “ம் சொல்லு ராம்” என்றதும், மறுமுனையில் இருந்த ராமோ “சார் நீங்க சொன்னதை பக்காவா முடிச்சிட்டேன் சார்”என்றான்.

“ம் வெரி குட் நைட்டு ஃபுல்லா அவன் எங்கேயும் நகர கூடாது பார்த்துக்கோ, நாளைக்கு மார்னிங் வந்து கவனிச்சுக்கிறேன்” என்று கூறி விட்டு போனை வைத்த ப்ரதாப், மீண்டும் போட்டோ ஃப்ரேமில் இருந்த மனைவியை முறைத்தவன் ‘லூசு அம்மாயி’ என்று தலையில் கொட்டுவது போன்ற பாவனை செய்து விட்டு உன்னை நாளைக்கு பார்த்துக்கிறேன் என்று சொல்லி கொண்டே மெத்தையில் சென்று படுத்தான்..

மறுநாள் காலை தூக்கம் கலைந்து எழுந்தாள் விஷ்ணு.. இரவு பார்த்தியை சமாதானம் சொல்லி தூங்க வைக்கவே முன்னிரவு கடந்து இருந்தது.. அதன் பின்பு வந்து படுத்துத்தவளுக்கு அன்றைய தினத்தில் நடந்த நிகழ்வுக்ள் பற்றிய

சிந்தனையே வந்து வந்து போக தூங்கவே அதிகாலை ஆகி இருந்தது. அதனால் இப்போது கண் எரிந்தது..

கண்ணை கசக்கி கொண்டே கஷ்டப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்த விஷ்ணுவுக்கு முதலில் தன் அண்ணன் நினைவே வந்தது.. நைட்டு ரொம்ப வருத்தப்பட்டு அழுதானே இப்ப என்ன பண்றானோ என்ற எண்ணம் வர, வேகமாக பாத்ரூம் சென்று முகத்தை கழுவி விட்டு வந்து பார்த்திபன் அறைக்கு சென்றாள்..

அங்கு பார்த்தியோ டிப் டாப்பாக நார்மல் சர்ட் பேன்ட் அணிந்து பாடல் ஒன்றை விசிலடித்தபடி கண்ணாடி முன்னாடி நின்று தலையை வாரியபடி நின்று இருந்தான்.. அறைக்குள் வந்த விஷ்ணுவை பார்த்த பார்த்தி “என்னடா மா எழுந்துட்டியா” என்று சிரித்தபடி கேட்க,

அவன் அருகே வந்த விஷ்ணு, “பார்த்தி ஆர்.யூ.ஓகே” என்று கேட்டாள்.. விஷ்ணு கேட்டதில் சிரித்த பார்த்தி விஷ்ணு தலையில் கை வைத்து ஆட்டியவன் “நான் நார்மலா தான் இருக்கேன்டா, நைட்டு ஏதோ ஒரு எமோஷனல் அதான் அப்புடி பண்ணிட்டேன், நீ ஒன்னும் வொரி பண்ணிக்காத இனிமே அப்புடி நடக்காது”என்றவன்,

மேலும் “நான் ஆபிஸ் கிளம்புறேன் டா நிறைய வொர்க் பென்டிங் இருக்கு” என்ற பார்த்தி அறையை விட்டு வெளியேறினான்.. என்ன தான் பார்த்தி சிரித்து பேசினாலும் இன்னும் அவன் சரியாகவில்லை என்பது முகத்திலே தெரிந்தது..

அறையிலிருந்து வெளி வந்த பார்த்திக்கு தாய் தந்தை இருவரையும் பார்க்க சற்று சங்கடமாக இருந்தது.. நேற்று காலை கோர்ட் செல்லும் முன்பு அவர்களை பார்த்தது.. அப்போது கல்யாணி விவாகரத்து வேண்டாம்னு சொல்லு பார்த்தி இதனால் ப்ரியா வாழ்க்கையும் பாதிக்கும்னு திரும்ப திரும்ப சொல்லி தான் அனுப்பி இருந்தார்..

ஆனால் கோர்ட்டில் நடந்ததோ வேறு, அதனால்லே நேற்றிலிருந்து பார்த்தி தாய் தந்தை இருவரையும் பார்க்காமலே இருந்தான்.. இன்றும் தாய் தந்தையை பார்க்க தயக்கமாகவே இருந்தது.. விவாகரத்து ஏன் பண்ணுனே என்று சத்தம் போடுவார்களோ, உன்னால்ல தான் உன் தங்கச்சி வாழ்க்கையும் கெட்டு போயிருச்சுன்னு சொல்லிட்டா என்ன பண்றது என்று தயக்கத்துடன் பார்த்திபன் நின்று இருக்க,

“என்னடா இவ்ளோ சீக்கிரமா ஆபிஸ் கிளம்பிட்ட, ஒரு அஞ்சு நிமிஷம் இரு டிபன் ரெடியாகிட்டு சாப்பிட்டு போ” என்று கூறிய கல்யாணி சமையலறை சென்றார்..

ஹாலில் ஷோபாவில் அமர்ந்து இருந்த உதயகுமாரும் “பார்த்தி உட்கார் அம்மா சொல்ற மாதிரி சாப்பிட்டு போ” என்றதும் பார்த்தியும் தந்தை அருகே அமர்ந்தான்.. அவரும் வேலை விஷயமாகவே பேசினார்.. நேற்றிலிருந்து அவர்களை சந்திக்க சங்கடப்பட்டு கொண்டு இருந்த பார்த்திக்கு இந்த சாதாரண பேச்சு ஆறுதலாக தான் இருந்தது..

உதயகுமார் தான் கல்யாணியிடம் நம்ம குழந்தைகளோட கடினமான நேரம் இது.. இந்த டைம்ல நாமா தான் அவங்களுக்கு துணையா இருக்கனும்.. நீ ஏன் இப்புடி செஞ்ச அப்புடி செஞ்சன்னு சொல்லி புலம்பி மேலும் மேலும் அவங்க கஷ்டத்தை அதிகப்படுத்த கூடாது.. எல்லாம் மாறும் கொஞ்சம் பொறுமையா இரு என்று எடுத்து சொல்லவே கல்யாணியும் புரிந்து கொண்டார்..

கல்யாணி சமைத்த பாத்திரங்களை டைனிங் டேபிளில் அடுக்கி வைத்து விட்டு “பார்த்தி சாப்பிட வா, ஏங்க நீங்களும் வாங்க” என்று உதயகுமாரையும் அழைத்த கல்யாணி அங்கு அமர்ந்திருந்த விஷ்ணுவை பார்த்தவர், “ஏன்டி இப்புடி நடு வீட்டுல குளிக்காம கொள்ளமா உட்கார்ந்துட்டு இருக்க, பல்லையாவது தேய்ச்சையா இல்ல எழுந்து அழுக்கு பண்டாரமா அப்புடியே வந்துட்டாயா” என்று கல்யாணி கேட்க,

அவரை பார்த்து முறைத்த விஷ்ணு, “நான் பல்லு தேய்ச்சனா குளிச்சனாங்கிற ஆராய்ச்சி எல்லாம் அப்புறம் வச்சிக்க கல்யாணி, இப்ப உனக்கு முதல்ல என்னாச்சுன்னு சொல்லு, நேத்து ஃபுல்லா புலம்பி அழுது ஊரை கூப்பிட்டு இருந்த, இன்னைக்கு என்னடான்னா திடீர்னு எதுவுமே நடக்காத மாதிரி அமைதியா கேஷுவலா இருக்க, உனக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா, இல்ல அமைதியான ஆவி ஏதாவது உன்னை புடிச்சிட்டா” என்று பேசியபடி கல்யாணி நெற்றியை தொட விஷ்ணு அருகில் வர,

அவள் கையை தட்டி விட்ட கல்யாணி “ச்சீ போடி அழுக்கு பண்டாரம் குளிக்காம என்ன தொடத” என்றார்..

“ஓ… குளிக்காம தொடக்கூடாத, அப்ப கண்டிப்பா உன்ன தொடுவேன் தொடறது என்ன கட்டியே பிடிப்பேன் அப்ப நீ என்ன பண்றேன்னு பார்க்கலாம்” என்று கிட்ட வர,

“கிட்ட வந்தேன்னா அடி வாங்குவடி என்று கல்யாணி கரண்டியை வைத்து மிரட்ட”, பார்த்திபனும் உதயகுமாரும் அதை பார்த்து சிரித்து கொண்டு இருந்தனர்..

அப்போது “சார்” என்ற குரல் கேட்க அனைவரும் திரும்பி வாசலை பார்த்தனர்.. அங்கு பவித்ரா வீட்டு டிரைவர் நிற்க, டைனிங் டேபிளில் இருந்து யோசனையுடன் எழுந்த பார்த்திபன் அவர் அருகே செல்ல,

“சார் பவித்ரா மேடம் இதை உங்க கிட்ட கொடுத்துட்டு வர சொன்னாங்க” என்று ஒரு பெரிய பாக்சை வைத்தவர் தான் வந்த காரின் சாவியையும் பார்த்திபன் கையில் கொடுத்து விட்டு சென்றார்..

அந்த கார் திருமணம் முடிந்த பிறகு பார்த்திபன் பவித்ராவுக்கு வாங்கி தந்தது.. அந்த அட்டை பாக்ஸ் முழுவதுமே பார்த்திபன் காதலித்த காலத்திலிருந்து இப்ப வரை கொடுத்த பரிசு பொருட்கள் தான் இருந்தது.. அதோடு தாலி கொடியும் இருந்தது.. அதை பார்த்ததுமே பார்த்திபனுக்கு இதயத்தில் சுருக்கென்று வலி ஏற்பட்டது.. அதை வெளிகாட்டாதவன் கையில் இருந்த கார் சாவியையும் அந்த பாக்ஸிலே வீசினான்.. அம்மா குப்பை வண்டி வரும் போது இந்த குப்பைகளையும் சேர்த்து போட்டுருங்க என்று கூறி விட்டு டைனிங் டேபிள் சென்று வலுக்கட்டாயமாக இரண்டு இட்லியை சாப்பிட்டு விட்டு ஆபிஸிக்கு கிளம்ப, கல்யாணி உதயகுமார் விஷ்ணு மூவரும் தான் செல்பவனை வருத்தமாக பார்த்து கொண்டு நின்று இருந்தனர்..

“நான் இன்னைக்கு ஆபிஸ்க்கு வரலை டி நீயே போ” என்றாள் வண்டியின் பின்னாடி அமர்ந்து இருந்த விஷ்ணு,

வண்டி ஓட்டி கொண்டே சைடு மிரர் வழியாக அவளை பார்த்த நிவி “ஏன்” என்று கேட்டாள் ..

“வந்தா இந்த அஸ்வின் பையன் நேத்து அடிச்ச கூத்துக்கு அவர்கிட்ட திட்டு விழுமோன்னு பயமா இருக்கு” என்றாள் விஷ்ணு..

“வரலைன்னா இன்னைக்கு லீவ் போட்டதுக்கும் சேர்த்து நாளைக்கு திட்டு விழும் பரவாயில்லையா” என்று சிரித்த நிவியை பார்த்து முறைத்த விஷ்ணு “போடி உனக்கு என் கஷ்டம் புரியலை “என்று அலுத்து கொண்டாள்..

“என்ன கஷ்டம் அஸ்வின் மேட்டர்ல சார் உன்ன திட்டுவாங்கன்னு பயப்படுறா அதானா”

ம்.. என்று விஷ்ணு தலையாட்ட

“கண்டிப்பா உன்னை சார் திட்டுவாங்கன்னு நினைக்கிறியா” நிவி கேட்க,

“ஆமாடி அதை தானே நேத்திலிருந்து சொல்லிட்டு இருக்கேன்” என சலித்து கொண்டாள் விஷ்ணு..

“இதில்ல பயப்பட கவலைப்பட என்ன இருக்கு.. சொல்ல போனா நீ சந்தோஷம் தான் படனும்” என்ற நிவியை புரியாமல் பார்த்த விஷ்ணு, “என்ன உளறுர” என்று கேட்க..

“நான் ஒன்னும் உளறலடி நீ தான் எதுவுமே புரியாத மக்கு மங்குனியா இருக்க என்ற நிவி, “அஸ்வின் மேட்டர்ல மட்டும் சார் உன் மேல்ல கோவப்பட்டா அவருக்கு உன் மேல்ல பொசசிவ் இருக்கு, ப்ரியம் இருக்குன்னு தானே அர்த்தம், யாருக்காவது பிடிக்காத பொண்டாட்டி டிவோர்ஸ் பண்ண போற பொண்டாட்டி மேல்ல பொசசிவ் வருமா?,அவளை யார் லவ் பண்ணுனா என்ன? கல்யாணம் பண்ணுனா என்ன? அவங்க ஏன் கோவப்பட போறாங்க” என்று நிவி சொன்னதை கேட்ட விஷ்ணுவின் முகம் ஒரு நொடி பிரகாசித்தது..

ஒரு வேளை திட்டலைன்னா என்ன பண்றது என்ற யோசனை எழ, இல்ல இல்ல இந்த மாதிரி நெகட்டிவா யோசிக்க கூடாது என்று அந்த எண்ணத்திற்கு தடை போட்டவள், ப்ரதாப் தன்னை திட்டியே ஆக வேண்டும் என்ற வேண்டுதலுடன் அலுவலகத்துக்கு சென்றாள்..

அலுவலகத்திற்குள் வரும் விஷ்ணுவை பார்த்த அனைவரும் அவள் முகத்தை தான் பார்த்தனர்.. என்ன சொல்லவே இல்லை என்ற கேள்வியும் கேட்டனர்.. அனைவருக்கும் சின்ன சிரிப்பை பதிலாக அளித்த விஷ்ணு நேராக தன் இருக்கைக்கு செல்ல,

மேடம் எம்.டி சார் வர சொன்னாங்க என்று ஆபிஸ் பாய் கூறி விட்டு செல்ல, “நிவி நான் போய் திட்டு வாங்கிட்டு வரேன்டி” என்று முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு மின்ன கூற,

“மங்களம் உண்டாக்கட்டும் மகளே” என்று தன் வலது கையை ஆசிர்வதித்து போல் நிவி காட்ட, விஷ்ணு துள்ளலுடன் ப்ரதாப் அறை நோக்கி சென்றாள்..

விஷ்ணு சென்றபின் நிவி தன் வேலையை தொடங்க.. பதினைந்து நிமிடம் கழித்து தன்னருகே விஷ்ணு அமரும் அரவம் கேட்க திரும்பி பார்த்தாள் நிவி.. சற்று முன்பு

இருந்த துள்ளல் போய் முகம் சுருங்க விஷ்ணு அமர்ந்து இருக்க..

“என்னாச்சுடி” என்ற நிவியை முறைத்தாள் விஷ்ணு..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!