Mr and Mrs விஷ்ணு 13

4.9
(33)

பாகம் 13

ப்ரதாப் அழைத்ததும் அவனின் கோவத்தை எதிர்பார்த்து அவன் அறைக்கு சென்றாள் விஷ்ணு..

அங்கு ப்ரதாப் நேற்று அவள் அனுப்பி இருந்த டிசைனிலுள்ள சிறு சிறு திருத்தங்களை சொல்லி அதை சரி செய்யும்படி அவளை பாராமல் கணினியை மட்டும் பார்த்து கூறி விட்டு தன் வேலையை தொடர்ந்தான்.. வேலை சம்மந்தமாக மட்டும் பேச விஷ்ணுவுக்கு தான் அது ஏமாற்றமாக இருந்தது..

“அவ்ளோ தானா நான் போகவா” என்று கேட்டாள் விஷ்ணு..

“ம்”.. என்று ப்ரதாப் கூறவும், உண்மையாவே அவ்ளோ தானா வேற எதுவுமே இல்லையா?” என்று நலிந்த குரலில் கேட்டாள் விஷ்ணு..

அவள் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்த ப்ரதாப் நிமிர்ந்து விஷ்ணு முகத்தை பார்க்க அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.. விஷ்ணு நெற்றி வகட்டில் குங்குமம் வைத்து இருந்தாள்.. திருமணத்தன்று அவன் வைத்து விட்டது. அன்று இருந்த மனநிலையில் அதை அவன் பார்க்கவே இல்லை..

அதற்கு அடுத்து வந்த நாட்களில் விஷ்ணு குங்குமம் வைப்பதே இல்லை… அது அவனுக்கு பெரிய விஷயமாக பட்டதும் இல்லை. வீட்டில் இருப்பவர்கள் அதை பற்றி கேட்ட போதும் வைப்பது வைக்காமல் போவது அவள் விருப்பம் என்று தான் இருந்தான்.. ஆனால் இன்றோ ‘இவ ஏன் இவ்ளோ நாள் குங்குமம் வைக்காமல் இருந்தாள்’ என்ற எண்ணம் தோன்றும் அளவு அவனின் அழகு மனைவிக்கு மேலும் அழகு சேர்த்தது அந்த குங்குமம்..

நிமிடங்கள் கடந்தும் வைத்த கண்ணை எடுக்காமல் ப்ரதாப் மனைவியை ரசித்து கொண்டு இருந்தாலும் முகத்தை சாதரணமாக வைத்து கொண்டு இருக்க, இவன் அகத்தில் என்ன உள்ளது என்று அறியாத அவனின் மக்கு மனைவியோ “க்கும்” என்று குரலை செறுமியதில் நிதானத்திற்கு வந்த ப்ரதாப் ,”என்ன?” என்று கேட்க,

“உங்களுக்கு என் மேல்ல கோவம் வரலையான்னு கேட்டேன்” என்றாள்..

ப்ரதாப்புக்கு அவள் எதற்காக இதை கேட்கிறாள் என்பது புரிந்தது.. அஸ்வின் விஷயத்தில் நேற்று அமைதியாக நின்று இருந்தவளை பார்க்கும் போது இழுத்து வச்சு இரண்டு அறை கொடுக்க வேண்டும் என்பது போல் பயங்கர கோவம் ப்ரதாப்புக்கு இருந்தது தான்.. இப்போதும் இருக்கின்றது தான்..

ஆனால் அவன் இந்த கோவத்தை காட்டினால் அவனின் மனதில் என்ன இருக்கின்றது என்று தெரிந்து விடுமே, அதனால் தான் அமைதியாக இருக்கின்றான்.. அவள் மனதில் என்ன இருக்கின்றது என்று தெரியாமல் தன் மனதை வெளிக்காட்ட கூடாது என்ற மொட பிடிவாதம்… அதனால் அமைதியாக இருக்கின்றான்..

“கோவப்படற அளவு டிசைனில் பெரிய மிஸ்டேக் எதுவும் இல்லை சின்ன சின்ன மிஸ்டேக் தான் ஈவ்னிங் வரைக்கும் டைம் இருக்கு கரெக்ட் பண்ணிக்கலாம்” என்று வேண்டுமென்றே ப்ரதாப் வேலையை பற்றி கூறியதும் கடுப்பானள் விஷ்ணு,

“நான் வேலை விஷயத்தில்ல கோவமான்னு கேட்கலை.. வேற விஷயத்தில் கேட்டேன்” என்றாள் பல்லை கடித்தபடி,

“வேலை விஷயத்தை தவிர வேற விஷயத்திற்கு கோவப்படற அளவுக்கு நமக்குள்ள என்ன இருக்கு” என்று விஷ்ணுவை கோவப்படுத்த வேண்டுமென்றே அலட்சியமாக ப்ரதாப் கேட்டான்..

இதற்கு விஷ்ணுவின் பதில் என்னவாக இருக்கும்… கோவத்தில் அவர்களுக்குள் இருக்கும் உறவை பற்றி சொல்வாளா என்ற எதிர்பார்ப்பில் விஷ்ணு முகத்தையே பார்த்தான்..

எதிரில் இருந்தவளோ வேலை விஷயத்தை தவிர நம்ம இரண்டு பேர் நடுவிலும் ஒன்னுமே இல்லைன்னு சொல்றார் போல,நாமா தான் வீணாக கற்பனை குதிரையை அலைய விடுகிறோம் போல அதற்கு கடிவாளம் போட வேண்டும் என்று அவன் கூறியதை எப்போதும் போல் தவறாக நினைத்து கொண்டு “ஆமா எதுவும் இல்லை எதுவுமே இல்லை தான் சாரி சார்” என்று கூறி விட்டு அறையிலிருந்து வெளியேறினாள்…

அவள் சொல்லியதில் கோவமான ப்ரதாப் “போடி பைத்தியம் முட்டாள் உன்னை” என்று கையை முறுக்கியவன் ஆத்திரத்தில் மேஜையை குத்தினான்..

இதான் நடந்துச்சு என்ற விஷ்ணு “போடி நீ சொன்ன மாதிரி எதுவுமே நடக்கல.. அவர் என்கிட்ட கோவிச்சிக்கவே இல்ல.. அப்புடினா என்னை பிடிக்கலைன்னு தானே அர்த்தம்” என்றவள் ஒற்றை கையால் முகத்தை மூடி அமர,

நிவிக்கு தான் சும்மா இருந்தவளை ஏதோதோ சொல்லி ஏத்தி விட்டுடோமோ என்று கஷ்டமாகி போனது..

அந்நேரம் அங்கு வந்த பூரணி “நிவி நிவி நீ அஸ்வினை பார்த்தியா?, மார்னிங்லிருந்து கால் பண்றேன் அட்டன் பண்ணவே இல்லை.. அவன் ரூம்க்கு போய் பார்த்தா ஆபிஸ்க்கு போய்ட்டான்னு சொன்னாங்க.. இங்கு வந்தும் எல்லா இடத்திலும் தேடிட்டேன் ஆளை காணோம் எங்காவது பார்த்தீங்களா?” என்று கேட்டாள்..

‘அவனால்ல தான் இப்ப இவ்ளோ பிரச்சினை போய்ட்டு இருக்கு.. இவ வேற’ என்று கடுப்பான நிவி, “இடுப்புல இருந்து இப்ப தான் இறக்கி விட்டேன்” என்று சுற்றும் முற்றும் தேட,

 “போடி உன்கிட்ட வந்து கேட்டேன் பாரு” என்று நிவியை திட்டிய பூரணி, “நானே போய் தேடி பார்த்துக்கிறேன்” என்று திரும்பியவள்,

“அஸ்வின் உனக்கு என்னாச்சு ஏன் இப்புடி இருக்க?” என்ற பூரணி சத்தமிட,

திரும்பி பார்த்த நிவியும், ‘என்ன இவன் கிழிஞ்சு போன கரித்துணி மாறி வந்து நிற்கிறான் என்னாச்சு’ என்று நினைக்க..

விஷ்ணுவும் கலைந்த தலையுடனும் சிவந்த கண்களுடனும் இரவு உடையில் இருந்த அஸ்வினை என்னாச்சு என்ற ரிதியில் பார்த்தாள்..

“பர்த் டே அதுவுமா ஆபிஸ்க்கு ஏன்டா இந்த கோலத்தில் வந்து இருக்க?” பூரணி அக்கறையாக கேட்க

“அதை ஏன்டி கேட்கிற நேத்து நைட்டு ராம் சார் கால் பண்ணாங்க. நேத்து நான் முடிச்ச அந்த அபார்ட்மெண்ட் டிசைன் மெயில் பண்ணுனது எதிர் பார்டிக்கு இன்னும் சென்ட் ஆகவே இல்லை, சார் கோவமா திட்டிட்டு இருக்காங்க வந்து வேலையை முடிச்சு கொடுத்துட்டு போக சொன்னாங்க.. நான் எல்லாத்தையும் கரெக்ட்டா தான் பண்ணி இருந்தேன் அப்புடி இருக்கும் போது எப்புடி இந்த மிஸ்டேக் ஆச்சுன்னு தெரியலை.. சரி என் சிஸ்டம்ல இருக்கிறதை வந்து சென்ட் பண்ணிடலாம் ஒரு பத்து நிமிஷம் வேலை தானேன்னு ஆபிஸ்க்கு வந்து சிஸ்டம் ஓபன் பண்ணுனா, அந்த டிசைனையே காணோம் டெலிட் ஆகி இருக்கு.. பேக் அப் எடுக்கலாம்ன்னு பார்த்தா சிஸ்டம் எரர் காட்டுது, பேக் அப் எடுக்க முடியலை.. மிட் நைட் வரை அதுக்கு போராடி பார்த்துட்டேன் சரி பண்ணவே முடியலை.. மார்னிங்குள்ள புதுசாவே டிசைன் பண்ணி கொடுத்துடலாம் நானும் டிரை பண்றேன்.. அந்த டிசைன் எல்லாம் சார்க்கு பிடிக்கவே இல்லை.. முதலில் இருந்த பர்பெக்ஷன் சரியா வர மாட்டேங்குது.. மண்டையே காயுது” என்றான் அஸ்வின்..

“என்னடா என்னமோ சொல்ற நீ அப்புடி எல்லாம் தப்பு பண்ண மாட்டியே என்னாச்சு, சார் எதுவும் திட்டுனாங்களாடா” பூரணி கேட்கவும்..

“பீப் வார்த்தை மட்டும் தான் மிஸ்ஸிங் மத்தபடி பயங்கரமா வாங்கி கட்டிக்கிட்டேன்.. இதுவரை சார் கிட்ட இவ்ளோ கோவம் நான் பார்த்ததே இல்லை” என்று அஸ்வின் கூறியதை கேட்டு பூரணி அவனுக்காக வருத்தப்பட்டாள்..

“எப்பவும் வேலையில் ரொம்ப கவனமா இருப்பியேடா,அப்புறம் எப்புடி இப்புடி ஒரு மிஸ்டேக் நடந்துச்சு” அஸ்வின் கோவத்தை பார்த்து கவலையாக பூரணி கேட்க,

“அதான் எனக்கும் தெரியலை பூரணி.. இதுவரை சின்ன மிஸ்டேக் கூட நான் பண்ணது இல்லை.. அப்புடி இருக்கும் போது இதை எப்புடி நான் மிஸ் பண்ணுனேன்னு எனக்கே தெரியலை.. அதுவும் என் சிஸ்டம்ல நான் வச்சிருந்தது எப்புடி டெலிட் ஆகும்.. அதான் எனக்கு புரியவே மாட்டேங்குதுடி”

தானாக எதுவும் டெலிட் ஆகலை.. டெலிட் பண்ணி இருக்காங்க.. அதுவும் இந்த ஆபிஸ் எம்.டிக்கு தெரிஞ்சே, ஏனெனில் அவரை மீறி இங்கு ஒரு துரும்பு கூட அசையாதே என்று நிவிக்கு சந்தேகம் தோன்றியது‌‌,

 விஷ்ணுவை சற்று தள்ளி அழைத்து சென்றவள்,

“அஸ்வின் சொன்னதில் உனக்கு ஏதாவது புரியுதா” என்று கேட்க, இல்லை என்ற ரிதியில் விஷ்ணு உதட்டை பிதுக்க,

“அச்சோ மக்கே” என்ற நிவி தனக்கு தோன்றியதை விஷ்ணுவிடம் கூற,

அவள் தலையில் கொட்டிய விஷ்ணு “இப்புடி தான் காலையிலேயும் நீ சொன்ன எல்லாத்தையும் நம்பி ஏமாந்து போய் இருக்கேன்.. மறுபடியும் சார் உனக்காக தான் உன் மேல்ல இருக்க பாசம் பாயசாத்தால் தான் இது எல்லாம் பண்ணி இருக்காங்க அது இதுன்னு உளறுன கொன்னுருவேன் பார்த்துக்கோ”, என்று விஷ்ணு நிவியை சத்தம் போட,

இதுவரை விஷ்ணுவை சரியாக பார்க்காத அஸ்வின் அப்போது தான் கவனித்தான் அவள் நெற்றியிலிருந்து குங்குமத்தை அதிர்ச்சியானவன் “ப்ரியா என்ன இது” என்று அவள் நெற்றியை கை நீட்டி அதிர்ச்சியாக கேட்க, பூரணியும் அப்போது தான் விஷ்ணுவை கவனித்தாள்..

“அது குங்குமம் டா இதுக்கூடவா உனக்கு தெரியாது நிவி கேலி செய்ய,

“ப்ரியா உனக்கு கல்யாணமாகிருச்சா?” என்று பூரணி கேட்க “ஆமா” என்றாள் விஷ்ணு.. அதை கேட்டு அஸ்வின் உடைந்து போக,

அவனை பார்த்து பொறுக்க முடியாத பூரணி “ஏன் எங்ககிட்ட முதல்லே உனக்கே கல்யாணமானதை சொல்லாம மறைச்சு எங்களை ஏமாத்துன ப்ரியா” என்று கோவமாக கேட்டாள்..

“மறைச்சனா நான் எப்ப டி மறைச்சேன்.. எப்பவாவது நீங்க உனக்கு கல்யாணமாகிருச்சான்னு கேட்டு நான் இல்லைன்னு சொல்லி இருக்கானா.. உங்களுக்கே தெரியும்னு தான் நானும் இவ்வளோ நாள்ல நினைச்சுட்டு இருந்தேன்… மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை புரிஞ்சுதா”என்று விஷ்ணுவும் கோவமாக தான் பதில் கூறினாள்..

அதை கேட்ட அஸ்வின் அமைதியாக அங்கிருந்து நகர “ப்ரியா என்ன நீ இவ்ளோ அசால்ட்டா பதில் சொல்ற, உனக்கு மேரஜ் ஆகலைன்னு நினைச்சு தான் அஸ்வின் உன்னை என்று சொல்ல வந்து நிறுத்தியவள், உன்னால்ல அஸ்வின் எவ்ளோ கஷ்டப்படுறான் பாரு.. நீ அவனை ஏமாத்திட்ட, பர்த் டே அதுவுமா அவனை ரொம்ப கஷ்டப்படுத்திட்ட” என்று பேசி கொண்டே போக,

“பூரணி அமைதியா போயிடு நான் ஏற்கெனவே பயங்கர கடுப்புல இருக்கேன் ஏதாவது பேசிட்டு இருந்த அவ்ளோ தான் சொல்லிட்டேன்” என்னை பத்தி எதுவுமே தெரியாமல் அவனா அவன் இஷ்டத்திற்கு ஏதேதோ நினைச்சிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது என கோவமாக பேசிய விஷ்ணுவும் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்..

அவள் செய்கையில் கோவமான பூரணி “இனிமே நான் உன்கிட்ட பேசவே மாட்டான்” என்று சொல்ல, “பேசாத ரொம்ப சந்தோஷம்” என்று விஷ்ணு கூறவும் நிவி சிரித்து விட, அவளையும் முறைத்த பூரணி “உன் கூடவும் சேர்த்து தான் பேச மாட்டேன்” என்றாள்..

“பேசாத போடி போடி போய் அந்த அஸ்வினுக்கு மாமா வேலை பாரு” என்ற நிவியை முறைத்து விட்டு பூரணி செல்ல ஃபேக்டரி செல்வதற்காக ப்ரதாப் வெளியே வந்தான்..

அஸ்வினுக்காக பேசுவதற்காக அவன் அருகே சென்றாள் பூரணி.. விஷ்ணு கோவத்தில் ப்ரதாப்பை பார்க்காமல் வேலை செய்து கொண்டு இருக்க, நிவி வேலை செய்வது போல் பாவனையில் அவர்களை தான் கவனித்து கொண்டு இருந்தாள்.

“சார்” என்று பூரணி அழைக்க, ப்ரதாப் நின்று “வாட் “என்று கேட்டான்..

“சார் டுடே அஸ்வின் பர்த் டே ” என்றாள்..

“போய் விஷ் பண்ணு அதை ஏன் என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க” என்று ப்ரதாப் கேட்கவும்,

“இல்ல சார் அது வந்து அவன் வொர்க்ல மிஸ்டேக் நீங்க அதுக்கு அவனை பனிஷ் மெண்ட்” என்று சரியாக சொல்ல முடியாமல் பூரணி தடுமாற,

அவள் சொல்ல வருவது என்ன என்பது புரிந்த ப்ரதாப் “அவன் தப்பு பண்ணி இருக்கானே அதுவும் ரொம்ப பெரிய தப்பு, எப்புடி சும்மா விடறது” என்றவன் பார்வை விஷ்ணுவிடம் சென்றது..

“சார் புரியுது அவன் வேணும்னு எதுவும் செய்யலை சாரி சார் தெரியாம தான் மிஸ்டேக் பண்ணிட்டான்” என்றாள் பூரணி..

“தெரியாம பண்ணுனதால் தான் அவன் இங்க இருக்கான்.. தெரிஞ்சே பண்ணி இருந்தான்னா இன்னைக்கு நீ அவனை வேற இடத்தில் தான் பார்த்திருப்ப” என்றவன் பார்வை இன்னும் விஷ்ணுவிடம் தான் இருந்தது.. நிவி கண்ணிலும் அது பட, “ம்… நம்ம சந்தேகப்பட்டு சரி தான் போலயே” என்று நினைத்து கொண்டாள்..

மேலும் பூரணி எதையோ சொல்ல வர ப்ரதாப் அங்கிருந்து சென்று விட்டான்.. ராம்க்கு அழைத்த ப்ரதாப் “ஒரு ஹாப் ஹவர் கழிச்சு அஸ்வினுக்கு லீவ் கொடுத்து அனுப்பிடு” என்று சொல்லி விட்டு காரில் ஏறி சென்று விட்டான்.. பூரணியும் அஸ்வினை தேடி சென்று விட்டாள்,

ப்ரதாப் மேல் இருக்கும் கோவத்தை எல்லாம் கீ போர்ட்டில் காட்டி கொண்டு இருந்த விஷ்ணுவிடம் வந்த நிவி “இப்ப சார் பூரணிக்கிட்ட பேசினது எல்லாம் நீயும் கேட்ட தானே இதில்ல உனக்கு ஏதாவது புரிஞ்சுதா” என்று கேட்டாள்..

“ம்.. புரிஞ்சுதே”

“என்ன புரிஞ்சுது”

“ம்… நீ இன்னைக்கு முழுசா வீடு போய் சேர மாட்ட எதையாவது உளறி என்கிட்ட அடி வாங்கிட்டு கை கால்ல கட்டோடு தான் போக போறேன்னு நல்லா புரியுது” என்ற விஷ்ணு நிவி முதுகில் இரண்டு அடி வைத்து விட்டு கோவமாக தள்ளி போய் அமர்ந்தாள்..

“நல்லது செய்ய நினைக்கிறவங்களுக்கு எல்லாம் கடைசியில் இது தான்டி கிடைக்குது” என்று தன் முதுகை தேய்த்த நிவிக்கு இன்று நடந்ததில் ஒன்றும் மட்டும் புரிந்தது.

ப்ரதாப் விஷ்ணு இருவருமே தங்கள் மனதிற்கு திரை போட்டு மறைத்து விட்டு எதிரில் இருப்பவர்கள் தான் முதலில் அத்திரையை விலக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருக்கின்றார்கள் என்று புரிந்தது…

தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 33

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!