Mr and Mrs விஷ்ணு 14

4.7
(31)

பாகம் 14

அஸ்வினை ஆபிஸ் முழுவதும் பூரணி தேடி பார்க்க எங்கேயும் அவன் இல்லை.. ராம் தான் ப்ரதாப் சொன்னபடி கடைசியாக அவன் அனுப்பிய டிசைனை “க்ளைன்ட் ஓகே சொல்லிட்டாங்க அதனால் நீ வீட்டுக்கு போ” என்று சொல்லி விட்டானே,

காதல் தோல்வியில் இருந்த அஸ்வினுக்கும் அதற்கு மேல் ஆபிஸில் இருக்க பிடிக்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.. இதை அறிந்த கொண்ட பூரணிக்கு அங்கு இருக்கவே முடியவில்லை.. லீவ் கேட்டு ராமிடம் செல்ல அவனோ அடிக்கடி லீவ் எல்லாம் கொடுக்க முடியாது வேலை நிறைய இருக்கு என்று சொல்லி விட்டான்..

அஸ்வின் வீட்டுக்கு போய் இருப்பான்னா இல்லை வேற எங்காவது போய் இருப்பானோ, எனக்கு இப்பவே அவனை பார்க்கனுமே, ச்சே ஒருத்தரோட அன்பு நிராகரிக்கப்படும் போது எவ்வளவு வலிக்கும்னு எனக்கு தானே நல்லா தெரியும்.. இந்த பெயினை அவன் எப்புடி தாங்கிக்க போறானே, எல்லாம் இந்த ப்ரியாவால தான் இப்புடி அவனை கவலைப்பட வச்சுட்டாளே என்று காதல் கொண்ட மனம் அவனுக்காக வருத்தப்பட்டது..

நிவி வலது புறம் இருந்த விஷ்ணுவை பார்க்க அவள் கோவமாக கணினியை தட்டி கொண்டு இருந்தாள்.. ‘கஷ்டம்’ என்று அவளை பார்த்து சலித்து கொண்டவள் மறுபுறம் திரும்ப, பூரணியோ விட்டால் அழுது விடும் அளவு சோகமாக முகத்தை வைத்து கொண்டு இருந்தாள், இது எல்லாம் உருப்படறது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்று மீண்டும் சலித்து கொண்டாள்…

‘பர்ஸ்ட் நாமா இந்த இடத்தை சேன்ஜ் பண்ணனும் இல்லை நாமளும் இதுங்களை போல லூசாகிடுவோம்.. ச்சே ச்சே வாழ்க்கையில் காதல் கல்யாணம் கமிட்மென்டை எல்லாம் மெயின்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம் தான் போல, நிவி நீ வாழ்க்கையில்ல இந்த சுழலில் மட்டும் சிக்கிக்கவே கூடாதுடி வாழ்க்கை புல்லா இதே போல முரட்டு சிங்கிளாவே வாழனும்.. முரட்டு சிங்கிள் தான் கெத்து என்று சத்தமாகவே சொல்ல, அது அந்த வழியாக இவர்களை கடந்து சென்ற ராம் காதிலும் விழுந்தது.. நின்று நிவியை ஒரு நொடி நக்கலாக பார்த்தான்..

அவன் எதற்காக இப்புடி பார்க்கிறான் என்பது புரிந்த நிவி அமைதியாகி ராமை பார்க்காமல் வேறு புறம் திரும்பி கொண்டாள்.. “அலைபாயுதே கண்ணா அலைபாயுதே” என்று நிவியை பார்த்து பாடியபடி ராம் அங்கிருந்து சென்றான்..

அவனை முறைத்த நிவி,

விஷ்ணு இதை கவனித்து விட்டாளோ என்று அவசரமாக திரும்பி பார்த்தாள், ‘அப்பாடா நல்ல வேலை இவ கவனிக்கலை’ என்று நிம்மதியானாள் நிவி.. அவளிடம் விஷ்ணு அறியாத, விஷ்ணு மட்டுமல்ல யாரும் அறியாத ரகசியம் ஒன்று உள்ளது.. அவளே அதை நினைப்பது இல்லை.. மறந்து விட்ட நிலையில் இப்போது ராம் அதை நியாபகப்படுத்தி விட்டு செல்ல, அந்த பழைய நினைவுகள் வரிசை கட்டி வந்து நின்றது, அதில் லயித்து கண்ணை மூடி ஒரு நொடி அந்த நினைவுக்களுக்குள் செல்ல போனவள் ‘ஆ… நிவி வேண்டாம் வேண்டாம் மனசை கண்ட்ரோல்ல வச்சுக்கோ என்று கண்ணை திறந்து அந்நினைவுகளை விரட்டி அடித்தவள்… நிவி மறுபடியும் முட்டாள் ஆகிடாத.. வேலையை கவனி தனக்குள் சொல்லி கொண்டவள் வேலையில் கவனத்தை செலுத்தினாள்…

இதை எல்லாம் சிசிடிவி கேமரா வழியாக தன் மொபைலில் பார்த்து கொண்டு இருந்தான் அவன்.. நிவி வேலையை தொடங்கவும், சிரித்தவன் தன் மொபைல் போனின் தொடு திரையில் பள்ளி சீருடையில் பதின் பருவத்தில் இருந்த நிவியை விரல் கொண்டு வருடினான் வாழ்க்கையில் தனியாவே இருக்கனுங்கிற தீர்மானத்தை நீ மட்டுமே எடுத்தா போதுமா பேபி.. அதை நான் தானே முடிவு பண்ணனும்.. அவ்வளவு சீக்கிரம் உன்னை விடுவேனே பேபி.. லவ் யூ சோ மச் அண்ட் மிஸ் யூ வெரி பேட்லி என்றவன் அலைபேசியில் இருந்த நிவி பிம்பத்துக்கு முத்தமிட்டான்..

“மேடம் இந்த பைல் எல்லாம் நீங்க ஒரு தடவை செக் பண்ணிட்டிங்கனா ஆடிட்டர் ஆபிஸ் அனுப்பிடலாம் மேம்” என்று பவித்ரா முன்பு கொண்டு வைத்து விட்டு சென்றனர்.. ஆடிட்டர் என்றதும் அவள் நினைவு சென்றது பார்த்திபனிடம் தான்.. அவன் தான் திருப்பதி ஃபுட் ப்ரொடக்டஸ் நிறுவனத்தின் ஆடிட்டர்.. இவர்கள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல சென்னையின் முன்னணி நிறுவனம் பலவற்றுக்கும் அவன் தான் தணிக்கையாளர்… பவித்ரா பார்த்தி காதல் கூட இப்புடி அலுவலக சம்மந்தமாக இருவரும் அடிக்கடி சந்தித்ததில் தான் ஆரம்பித்தது..

அப்போது எல்லாம் அக்கௌவுண்ட்ஸ், ஆடிட்டர் ஆபிஸ், என்றாலே பவித்ராவுக்கு குஷி தான்.. ஆனால் இப்போது அவர்களுக்குள் எல்லாம் முடிந்த பின்பு தொழில் விஷயமாக கூட பார்த்திபனை பார்ப்பதற்கு பவித்ரா தயாராக இல்லை.‌.. அதனால் முன்பே ப்ரதாப்பிடம் சென்று ஆடிட்டரை மாற்றி விடலாமா என அம்மா தேவகி மூலம் கேட்க,

அவனோ ஒரே வார்த்தையாக முடியாது என்று விட்டான்.. பர்சனல் வேற தொழில் வேற இரண்டையும் தனியா தனியா தான் பார்க்கனும்.. நான் பிசினஸை கையில் எடுத்த இந்த பத்து வருஷமா அவன் தான் ஆடிட்டர்.. அப்பவும் இரண்டு ஃபேமிலிக்குள்ள நிறைய ப்ராளம் இருந்தது.. அந்த பிரச்சினை எல்லாம் பிசினஸ்க்குள்ள நாங்க கொண்டு வந்தது கிடையாது. நான் கொடுக்கிற காசுக்கு அவன் அவனோட வேலையை கரெக்டா இதுவரை செய்து கொடுத்து இருக்கான்.. இனி மேலும் அவன் அப்புடி தான் இருப்பான்.. அதனால் அவனை மாத்த எல்லாம் முடியாது என்று உறுதியாக கூறி விட்டான்.. இப்போது என்ன செய்வது என்று பவித்ரா தலை மீது கை வைத்து அமர்ந்து இருந்தாள்..

அப்போது அவள் அறை கதவை தட்டாமல் கூட உள்ளே பூங்கொத்து ஒன்றோடு “ஹாய் பவி” என்று சிரித்தபடி வந்தான் ஒருவன்..

அவனை பார்த்த பவி மெலிதாக சிரித்து “ஷ்யாம் வாங்க உட்காருங்க” என்றாள்.. ஷ்யாம் பவித்ரா எதிரே அமர அப்போது அவளின் போன் இசைத்தது.. அவனிடம் எஸ்க்யூஸ் மீ ஒன் செகண்ட் என்று அவனிடம் சொல்லி விட்டு போன் பேசி கொண்டு இருக்க,

எதிரிலிருந்த ஷ்யாமின் பார்வையோ பவித்ராவின் உடலில் எங்கும் தங்கு தடையின்றி தவறாக பயணித்தது.. அவன் கண்ணில் கருப்பு நிற கூலர்ஸ் அணிந்து இருந்ததால் பவித்ராவுக்கு அது தெரியவில்லை..

பேசி முடித்து விட்டு போனை வைத்த பவித்ரா “சொல்லுங்க ஷ்யாம் என்ன விஷயம் என்றதும்,

கையிலிருந்த பூங்கொத்தை பவியிடம் நீட்டினான்.. “எதுக்கு எனக்கு பொக்கே?” என்று கேட்டாள் பவித்ரா..

“உனக்கு கிடைச்ச விடுதலைக்கு வாழ்த்து சொல்ல தான்” என்றதுமே பவியின் முகம் மாறியது அவள் அமைதியாகி விட,

“எதுக்கு இப்ப உலகமே இடிச்சு விழுந்த மாதிரி முகத்தை வச்சு இருக்க பவி.. உன் அம்மாவும் சொன்னாங்க நீ கோர்ட்ல இருந்து வந்ததிலிருந்தே இப்புடி தான் அயைதியா இருக்கிறதா, என்னாச்சு?” என்று கேட்டான்..

ஒன்றுமில்லை என்று அவள் தலை அசைக்கவும்..

“டிவோர்ஸ் ஆகிட்டே இனிமே நம்ம வாழ்க்கை என்னாவாக போகுதுன்னு உன் பாட்டி காலத்து ஆளுங்க மாதிரி திங்க் பண்ணிட்டு இருக்கியா நீ, இங்க பாரு வாழ்க்கை ரசிச்சு வாழ்றதுக்கு தான்.. அதில்லே ஒத்து வரதுங்கிற விஷயத்தை அட்ஜெஸ்ட் பண்ணி வாழ்ந்துக்கலாம்னு முதுகில்ல தூங்கிட்டு சுத்துறது சுத்த முட்டாள் தனம்.. பொண்ணுங்களுக்கு வாழ்க்கையில்ல சுயமரியாதை கௌரவம் ரொம்ப முக்கியம்.. அது கொடுக்காத ஒருத்தன்னுக்கிட்ட இருந்து நீ பிரஞ்சு வந்து இருக்க, ஆக்சுவலா இதுக்கு நீ சந்தோஷம் தான் படனும் வருத்தப்பட கூடாது” என்றவன் தன்னிடத்தில் இருந்து எழுந்து பவித்ரா அருகே வந்து அவளுக்கு ஆறுதல் சொல்வது போல் தோளை அழுத்தி பிடித்தான்.. அவன் தொடுகையில் இருந்த தவறு வேற மனநிலையில் இருந்த பவித்ராவால் கண்டுபிடிக்க முடியவில்லை..

மேலும் அவன் “நீ ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்க நினைக்கிறேன் வா கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம்” என்று அழைத்தான்..

“இல்ல ஆபிசில் நிறைய வேலை இருக்கு, இப்ப வெளிய வந்தா அது எல்லாம் கவனிக்க முடியாது.. வேலையில் சின்ன மிஸ்டேக் நடந்தாலும் அண்ணாக்கிட்ட திட்டு வாங்க முடியாது நான் வரலை” என்று பவித்ரா மறுக்க, அவன் மீண்டும் பேசி பேசியே அவளை சம்மதிக்க வைத்து விட்டான்..

பாரில் க்ளாசில் இருந்த மதுவை வெறித்து கொண்டு இருந்தான் பார்த்திபன்.. இனி குடிக்கவே கூடாது.. பவித்ராவை பற்றியே நினைக்க கூடாது முன்னேறி செல்ல வேண்டும் என்று நினைத்து தான் காலையில் எழுந்தான்.. ஆனால் காலையில் அவள் திருப்பி அனுப்பி இருந்த பரிசு பொருள் தாலி கொடியை பார்க்க பார்க்க மனது அவர்கள் சந்தோஷமாக இருந்த நாட்களை எண்ணி வேதனை கொண்டது.. அந்த வேதனையிலிருந்து விடுபட்டு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை அவனால்..

மாது நினைவை தடுக்க மது பக்கம் செல்ல சொல்லி மனம் கட்டளையிட புத்தி தடுத்தது.. வெளியே எங்காவது சென்று மனதை அமைதிப்படுத்தலாம் என்று நினைத்து ஊர் முழுக்க சுத்த எங்கும் அவள் எதிலும் அவள் என்று அனைத்திலும் பவித்ராவுடன் அவன் சென்று வந்த நியாபகமே வந்தது.. வண்டி போன போக்கில் போனவன் இறுதியாக பீச்சுக்கு வந்து சேர்ந்தான்.. அங்குமே பவித்ராவுடன் வந்த நினைவு தான் வந்தது.. இது எதுவுமே வேலைக்காது தன்னை மறந்தால் தான் இந்த நினைவுகளிலிருந்து தப்பிக்க முடியும் அதுக்கு மது தான் தீர்வு என்று தோன்ற அங்கிருந்து கிளம்பும் போது,

ஷ்யாமையும் அவன் கூட பவித்ராவையும் சேர்த்து பார்த்த பார்த்திபனுக்கு தன்னை கட்டுபடுத்த முடியாதளவு கோவம் வந்தது.. மேலும் இங்கு இருந்தால் சரிப்படாது அவனை ஏதாவது செய்து விடுவோம் என்று தோன்ற அங்கிருந்து கிளம்பி இங்கு வந்து சேர்ந்தான்..

அவன் தான் அந்த ஷ்யாம் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்.. இன்னும் இவன் கூட சுத்திட்டு இருக்காளே, இவளுக்காக வருத்தப்பட்டு கவலைப்பட்டு குடிச்சி வீட்டுல இருக்கிறவர்களை கஷ்டப்படுத்தி உன்னை நீயே அழிச்சுக்கனுமா, அவ எந்த கவலையும் இல்லாம ஜாலியா தான் இருக்கா அப்புடி உன்னால் இருக்க முடியாதா என்ற கேள்வியை புத்தி எழுப்ப குடிக்காமல் பார்த்து கொண்டே இருந்தவன், அந்த க்ளாசை தூக்கி போட்டு உடைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்..

இரவு தன்னறையில் இருந்த விஷ்ணு ‘நிவி சொன்னா உனக்கு எங்கடி போச்சு அறிவு கூடவே இருக்கும் போதே அவருக்கு உன்னை பிடிக்காது, இப்ப எப்புடி பிடிக்கும் என்று தன்னை திட்டி கொண்டவளுக்கு அவனுடன் இருந்த அந்த ஐந்து மாத வாழ்வு நியாபகத்திற்கு வந்தது.. பார்த்திபனுக்கும் உறக்கம் வரவில்லை பவித்ரா ஷ்யாம்

நடந்த பிரச்சினை என பழைய நிகழ்வுகளை நினைத்து பார்க்க ஆரம்பித்தான்…

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!