Mr and Mrs விஷ்ணு 15

4.9
(30)

பாகம் 15

விஷ்ணு ப்ரதாப் இருவர் திருமணமும் முடிந்து முதல் இரவு அறைக்கு வந்தவளை லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டு இருந்த ப்ரதாப் உறங்க சொல்ல, கட்டிலில் படுத்து இருந்த விஷ்ணுவோ உருண்டு ப்ரதாப் கால் அடியில் விழுந்தாள்..

விஷ்ணு அவசரமாக எழ கீழே விழுந்ததில் பின் குத்தாமல் கட்டிய புடவை மடிப்பு அவிழ அதை குனிந்து பிடிக்க போக மாராப்பும் சரிந்தது.. அச்சச்சோ என்று பதறியவள் ஒரு கையால் மாராப்பை தோளில் போட்டு விட்டு மற்றொரு கையால் கீழ் மடிப்பை பிடித்து கொண்டவள் ப்ரதாப் பார்த்து விட்டானா என அவசரமாக அவனை பார்க்க,

அவனோ வேலையில் தான் கவனமாக இருந்தான்.. ‘அப்பாடா அவர் பார்க்கல ‘என்று நெஞ்சில் கை வைத்து நிம்மதி பெருமூச்சு விட நினைக்க அது முடியவில்லை.. அவளுக்கே தான் புடவை சரியாக கட்ட வராதே, இப்ப என்ன பண்றது.. என்று அவள் யோசித்து கொண்டு இருக்கையிலே,

“இப்புடியே புடவையை கையில்ல புடிச்சிட்டு எவ்ளோ நேரம் கனவு கண்டுட்டு நிற்கிறதா உத்தேசம்”என்று ப்ரதாப் வேலை செய்தபடியே கேட்க

‘அச்சச்சோ அப்ப இவர் எல்லாத்தையும் பார்த்துட்டாரா’ என்று அவள் அதிரும் முன்பே,

“என்னடி புடவையை கட்டாமா,அப்புடியே நின்னுட்டு இருக்க.. என்ன என்னை செடியூஸ் பண்ண ட்ரை பண்றியா?” நக்கலாக கேட்டான்..

அதில் கோவம் வந்தது விஷ்ணுவுக்கு “எனக்கு ஒன்னும் உங்களை மயக்கனும்ங்கிற அவசியம் இல்லை” என்றாள் வெடுக்கென்று

“அப்ப சாரியை கட்ட வேண்டியது தானே எதுக்கு இப்புடி போஸ் கொடுத்துட்டு இருக்க”

வேண்டுதல் என மனதிற்குள் சொன்னவள், வெளியே “அது வந்து எனக்கு புடவை சரியாக கட்ட வராது அதான் என்ன பண்றதுன்னு”

“அப்ப வேற டிரஸ் சேன்ஜ் பண்ண வேண்டியது தானே”.

“இருந்தா பண்ண மாட்டானா என் டிரஸ் எல்லாம் கீழே ரூம்ல இருக்கு” உங்க வீட்டில் சொந்தக்காரங்க பேரில் வந்து இருக்காங்களா அந்த வானரபடைங்க.. ஒரு ட்ரேஸ் கூட எடுத்து வர விடலை என அவளுக்கு புடவை கட்டி விடுகிறேன் என்ற பெயரில் ஒரு கூத்து அடித்ததே அந்த பெண்கள் மீது கோவம் கொண்டாள்..

“சூப்பர் அப்ப இப்புடியே நில்லு.. அவங்க சொன்னா அதுக்கு அப்படியே தலை ஆட்டிட்டு வந்த தானே”

“என்னங்க எவ்வளவு நேரம் இப்புடியே நிற்கிறது என விஷ்ணு சிணுங்க,

“என்ன கேட்டா உன்னால்ல எவ்வளவு நேரம் நிற்க முடியுமோ அவ்வளவு நேரம் நில்லு” என்றான் ப்ரதாப்

“ஒன்னா பேசாமலே இருந்து சாவடிக்க வேண்டியது, இல்லைன்னா இப்புடி எடக்கு மடக்கா பேசியே சாவடிக்க வேண்டியது, என்று ப்ரதாப்பை பார்த்து முனுமுனுத்தவள், “ப்ளீஸ்ங்க” என கெஞ்ச

நான் என்ன பண்றது என ப்ரதாப் கேட்டான் பார்வை என்னவோ லேப்டாப்பில் தான், நிமிர்ந்தால் தான் அவள் நிற்கும் நிலையை பார்க்க வேண்டி வருமே, முன்னர் பார்த்ததே இன்னும் கண்ணுக்குள் வந்து வந்து போகின்றது.. அதனால் நிமிரவே இல்லை ப்ரதாப்,..

“நீங்க எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுனீங்கனா போதும்” என்று கேட்ட விஷ்ணுவை நிமிர்ந்து பார்த்து முறைத்தவன், மீண்டும் லேப்டாப் பக்கம் குனிந்து கொண்டு

“என்ன என்னை புடவை கட்டி விட சொல்றியா, எனக்கு அது எல்லாம் தெரியாது போடி?” என்றான்..‌

“அய்யோ அது எல்லாம் வேண்டாம்.. கீழே இருக்க உங்க ரிலேட்டிவ் பொண்ணுங்க யாருக்காவது கால் பண்ணி என் டிரஸ் ஒன்ன எடுத்துட்டு வர சொன்னீங்கனா போது”ம் என்றவளை மீண்டும் அனல் தெறிக்க முறைத்தவன்,

உனக்கு மூளை கொஞ்சம் கூட இல்லையாடி, இந்த டைம்ல பர்ஸ்ட் நைட்ல ரூம்ல இருந்துட்டு டிரஸ் எடுத்துட்டு வான்னு போன் பண்ணுனா நம்மளை என்னடி நினைப்பாங்க முட்டாள் என்று திட்டினான்..

என்ன நினைப்பாங்க? விஷ்ணு அப்பாவியாய் கேட்க,

“ரொம்ப கேவலமா நினைப்பாங்க” என்றான் அதே கோவத்தோடு,

“இப்ப நான் என்ன பண்றது” முகத்தை பாவமாக வைத்து விஷ்ணு கேட்க..

பெருமூச்சு ஒன்றை விட்டு இரு பக்கமும் சலிப்பாக தலை ஆட்டியவன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு எழுந்து கட்டிலின் மறுபக்கம் சென்று அங்கிருந்த கபோர்ட்டை திறந்து தனது டீசர்ட் ஒன்றை எடுத்து விஷ்ணு பக்கத்தில் தூக்கி போட்டு இதை போட்டு தொலை என்றான்..

“இதையா” என்று அவள் முகம் சுருக்க..

“ஏன் வேண்டாமா?,

“இது எனக்கு பெருசா இருக்குமே, போட்டா ஆவி போல இருப்பேன் அதான்” என்று விஷ்ணு தயங்க..

“அப்ப இப்புடியே நில்லு.. எனக்கென்ன இதுவரை என் டிரஸை யாருக்குமே கொடுத்தது இல்லை எனக்கு அது பிடிக்கவும் பிடிக்காது.. பாவமேன்னு கொடுத்தா ரொம்ப தான் பண்ற” என்றவன் டீசர்ட்டை எடுக்க போக,

வேகமாக டீசர்ட்டை கையில் எடுத்தவள் “திரும்புங்க நான் சேன்ஜ் பண்ணனும்” என்று கூறவும்..

“இனிமே திரும்ப என்ன இருக்கு” என்று முணுமுணுத்து கொண்டே பாத்ரூம் சென்றான்..

ஆ… என்று முழித்தவள் மானம் போச்சு என்று தலையில் அடித்து கொண்டு புடவையை கலைந்து விட்டு ப்ளவுஸ் இன்ஸ்கட் மேலே அவனின் டீசர்ட்டை அணிந்து கொண்டாள்..

அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன்னை பார்க்க, ப்ரதாப் ஆறு அடி உயரம் என்பதால் அவனின் டீசர்ட் விஷ்ணுவுக்கு முட்டிக்கு கீழ் வரை இருந்தது.. முட்டிக்கு கீழ் வரை டீசர்ட் அதன் கீழ் பாவாடை என நின்றிருந்தாள்.. ‘அய்யோ பார்க்க எனக்கே காமெடியா இருக்கே’என்று அவள் பார்த்து கொண்டு இருக்க

பாத்ரூம்லிருந்து வெளி வந்த ப்ரதாப்பும் அவளை பார்க்க அவனின் டீசர்ட் விஷ்ணுவுக்கு இன்னோரு ஆளே புகுந்து கொள்ளும் அளவு தொள தொளவென முட்டிக்கு கீழ் வரை இருந்தது..

இதை போட்டா நான் ஆவி போல் இருப்பேன் என்று அவள் சொன்னது உண்மை தான் போல என நினைத்து கொண்டவன், அவளை தாண்டி செல்கையில் விஷ்ணு அருகே இருந்த ஷோபாவில் புடவையை மடிக்காமல் அப்புடியே போட்டு வைத்திருப்பது கண்ணில் பட்டது.. பார்த்ததுமே கோவம் வந்தது..

ப்ரதாப்புக்கு எப்போதும் எல்லா இடமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. அதுவும் அவன் அறையில் எடுத்த பொருளை சரியாக அதே இடத்தில் திருப்பி வைக்க வேண்டும்.. ஏனோதானோ வென்று பொருட்களை அறையில் சிதற விடுவது எல்லாம் அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது.. விஷ்ணு அருகே வந்தவன் “என்ன இது”? என்று கேட்க

“புடவை” என்றாள்..

“அது தெரியாதா எனக்கு, அதை ஏன் இப்புடி போட்டு வச்சு இருக்க.. புடவை கட்ட தான் தெரியாது மடிக்க கூடவா தெரியாது என்று ப்ரதாப் சத்தம் போட,

“எப்புடியும் நாளைக்கு வாஷ் பண்றதுக்கு எடுக்கிறது தானே, அதை ஏன் வீணா போட்டு மடிச்சிக்கிட்டு, துவைச்சு அப்புறம் சேர்த்தே மடிச்சுக்கலாம்” என்றாள்…

இப்போது நீ நான் சொல்வதை செய்தே ஆக வேண்டும் என்ற ரிதியில் ப்ரதாப் கையை கட்டி முறைத்தபடி நிற்க, வேறு வழியில்லாமல் ப்ரதாப்பை மனதிற்குள் திட்டி கொண்டே புடவையை மடித்து அங்கிருந்த அழுக்கு கூடையை தேடி அதற்குள் போடும் வரை ப்ரதாப் அப்புடியே நின்றான்.

“இம்சை” என்று விஷ்ணு வாய்க்குள் முனக,

“இங்க வா” என்று ப்ரதாப் அழைத்தான்.. விஷ்ணு அவன் அருகே வரவும், “இதோ பாரு ரூம்மை குப்பையா வச்சு இருந்தா எனக்கு பிடிக்காது.. எப்பவும் க்ளீனா வச்சு இருக்கனும்.. இப்ப பண்ண மாதிரி துணியையோ பொருளையோ அங்கங்கே போட்டு வச்சு இருக்க கூடாது… அப்புடி இனிமே ஏதாவது பண்ணுன அவ்ளோ தான்” என்றவன்,

மேலும் “ரூம்ல இருக்க என்னோட திங்கஸ் ஏதாவது யூஸ் பண்றதா இருந்தா என்கிட்ட கேட்டுட்டு தான் யூஸ் பண்ணனும் புரியுதா”என்றதும்

ம்.. புரியுது எனும் விதமாக தலையாட்டிய விஷ்ணு,

‘பிக்பாஸ் ரூல்சை விட பெரிய பெரிய ரூல்சா இருக்கே எப்புடி பாலோவ் பண்ணறது’ என்று மனதிற்குள் புலம்பினாள்..

கட்டில் அருகே படுக்க சென்றவன் “ஆ… இன்னோரு முக்கியமான விஷயம் உன்னோட தேவை எதுவா இருந்தாலும் அதை என்கிட்ட கேளு என்கிட்ட மட்டும் தான் கேட்கனும்.. உன் அப்பா அம்மாக்கிட்டயோ இல்ல என் வீட்டு ஆளுங்கிட்டயோ யார்க்கிட்டயும் கேட்க கூடாது.. என்கிட்ட மட்டும் தான் கேட்கனும்.. அது எவ்வளவு காஸ்ட்லியான பொருளா இருந்தாலும் வாங்கி தரேன்.. எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும் முடிச்சு தரேன்.. ஏன்னா விஷ்ணு ப்ரதாப்போட வொய்ஃப் யார் முன்னாடியும் எதுக்காவும் போய் நிற்க கூடாது.. அப்புடி நின்னா அது எனக்கு தான் அசிங்கம்.. என்னை அசிங்கப்படுத்துற மாதிரி ஏதாவது செஞ்ச அவ்வளவு தான் நின்னே சம்பேஷ்தானு” என்று மிரட்ட, விஷ்ணு பயந்து தான் போனாள்..

“உனக்கு ஏதாவது சொல்லனுமா” என்று ப்ரதாப் கேட்கவும், ஆம் என்று தலை அசைத்தவள் சுண்டு விரலை காட்டினாள்..

“ஒரு விஷயம் சொல்லனுமா” என்று ப்ரதாப் கேட்க

ம்ஹூம் என்று மீண்டும் தலை அசைத்தாள்..

“வாயை திறந்து சொல்லுடி” என்று ப்ரதாப் கோவப்பட்டான்..

மீண்டும் சுண்டு விரலை காட்டியவள் இது வருது என்று சொல்லவும் முதலில் அவள் சொல்வது என்னவென்று புரியாமல் பார்த்த ப்ரதாப் புரியவும்,

“ச்சீ ச்சீ வந்தா போய் தொலைய வேண்டியது தானே அதை எதுக்குடி என்கிட்ட சொல்ற”,

“ஆ… நீங்க தானே இந்த ரூம்ல இருக்க பொருள் எதை யூஸ் பண்றதா இருந்தாலும் உங்களை கேட்டுட்டு தான் யூஸ் பண்ணனும் சொல்லி இருக்கீங்க.. உங்களை கேட்காமா நானா ஏதாவது பண்ண போய் நீங்க திட்டுவீங்களே அதான்” என்று ஒன்றுமறியா பாப்பா போல் விஷ்ணு கூறவும் தீயாய் அவளை முறைத்தவன், “உன்ன என்று அடிக்க” எழுந்ததும் ஓடி பாத்ரூம்க்குள் நுழைந்து கொண்டாள்…

ச்சே வெரிவாடு வெரிவாடு முகத்தை மட்டும் பயப்படற மாதிரி வச்சுக்கிட்டு எல்லா வேலைத்தனம் பண்றாளே, கொஞ்ச நேரமே இவ கூட இருக்க முடியலையே எரிச்சலா இருக்கு, எப்புடி தான் லைஃப் ஃபுல்லா ட்ராவல் பண்ண போறேனோ என்று அலுப்பாக இருந்தது ப்ரதாப்புக்கு,

தலைவலி என்று மனைவியை திட்டினான்.‌

இதுவரை ப்ரதாப் வீட்டிலும் சரி தொழிலிலும் சரி நிறுத்தி நிதானமாக நன்றாக யோசித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுத்து இருக்கின்றான்.. அப்புடி அவன் எடுத்த அத்தனை முடிவும் அவனுக்கு வெற்றியை தான் தேடி தந்து இருக்கின்றது.. இதுவரை அவன் எடுத்த எந்த முடிவுகளையும் இது சரி தானா என்று பிற்பாடு உட்கார்ந்து யோசித்தது கிடையாது.. அவன் எதை பற்றியும் யோசிக்காது அவசரமாக எடுத்த ஒரே முடிவு விஷ்ணுவுடனான திருமணம் தான்.. அவள் வந்து ஆபிஸில் பேசவும் அவனின் ஈகோ தூண்ட முதலில் சம்மதம் சொன்னவனுக்கு விஷ்ணு மீது அவ்வளவு பிடித்தம் இல்லை.. திருமண ஏற்பாடு பாதி முடித்திருக்க இப்போது வேண்டாமென்று சொல்வது நியாயம் இல்லை. தன்னுடைய சித்தப்பா போல் நடந்து கொள்ள கூடாது என்று அமைதியாக இருந்தான்..

ஆனால் தாலி கட்டும் அந்த நொடி இனி இவள் தான் வாழ்வு முழுவதும் என்ற தீர்மானத்துடன் முழுமனதுடன் தான் தாலி கட்டினான்.. ஆனால் இன்று தாலி கட்டிய ஒரே காரணத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையை தொடங்க விருப்பம் இல்லை.. விஷ்ணுவிற்கும் இன்னும் படிப்பு முடிய 6 மாத காலம் இருக்க, அவள் படிப்பு முடியட்டும்.. இந்த இடைப்பட்ட காலத்தில் அவள் மீது சின்ன ஈர்ப்பாவது வரட்டும் அதன் பின்பு வாழ ஆரம்பிக்கலாம் என்று நினைத்து இருக்க,

ஆனால் விஷ்ணுவுடன் சிறிது நேரமே இருக்க முடியவில்லை.. எப்புடி தினமும் இவளுடன் வாழ்வை கழிப்பது என்ற மலைப்பை முதல் நாளிலேயே உண்டு பண்ணி இருந்தாள் விஷ்ணு..

பாத்ரூம் கதவை சிறிது திறந்து எட்டி பார்த்தாள் விஷ்ணு.. ப்ரதாப் படுத்து இருந்தான்.. தூங்கிட்டாங்க போல என்றபடி கட்டில் அருகே வர, கட்டிலின் ஒரு புறம் ப்ரதாப் படுத்து இருக்க, இவள் புறம் கட்டிலை ஒட்டியபடி இரண்டு பீம் பேக் போடப்பட்டு இருந்தது.. முன்னாடி இது இல்லையே இவங்க தான் போட்டு இருப்பாங்களா எதுக்கு என்று யோசித்தவள்,

ஒரு வேளை நாமா கட்டிலிருந்து உருண்டு கீழ விழுந்து அடி பட கூடாதுங்கிறதுக்காகவா, நம்மளை மேல்ல இவ்ளோ அக்கறையா என்று யோசிக்க,

“அக்கறை எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.. நீ பாட்டுக்கு அடிக்கடி கீழே விழுந்து இடுப்பை பிடிச்சிட்டே நாளைக்கு வெளிய போனா, பார்க்கிறவங்க எல்லாம் அவங்க அவங்க இஷ்டத்துக்கு என்னென்னமோ கற்பனை பண்ணிப்பாங்க.. அதான் என்று ப்ரதாப் கண்ணை திறவாமலே கூற,

மனசில்ல நினைச்சதை அப்புடியே சொல்றாங்க என்று அதிர்ச்சியானவள், அப்புடி என்ன கற்பனை பண்ணுவாங்க என்று யோசித்தபடி நிற்க,

“லைட்டை ஆஃப் பண்ணுடி” என்று ப்ரதாப் சத்தம் போட, வேகமாக சென்று லைட்டை அணைத்து விட்டு படுத்தவள் சற்று நேரத்திலே உறங்கியும் போனாள்..

நல்ல தூக்கத்தில் இருந்த ப்ரதாப்புக்கு கழுத்தில் ஏதோ ஊர்வது போல் இருந்தது.. என்னவென்று கண்ணை திறந்து பார்க்க, விஷ்ணு தான் தூக்கத்தில் உருண்டு அவன் அருகே வந்து கையையும் கால்லையும் அவன் மீது போட்டு உரசியபடி படுத்து இருந்தாள்.. இம்சை இம்சை என்று திட்டினாலும் முதல் முறை ஒரு பெண்ணின் ஸ்பரிசம் அதுவும் தாலி கட்டிய மனைவியின் ஸ்பரிசம் உள்ளுக்குள் குறுகுறுத்தது.. அதுவும் தலையில் வைத்து இருந்த மல்லிகையின் மணம் வேறு நாசியை தொலைத்து மூளை வரை ஏறி, இதுவரை அவன் உணராத புதுவித உணர்வை தூண்டியது.. தாலி கட்டிய மனைவியாக இருந்தாலும் மனதில் சின்ன ஈர்ப்பு கூட இல்லாது அவளை நெருங்க கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவன் அவளை தன்னிடமிருந்து விலக்கி தள்ளி படுக்க வைத்தவன், தலையை கோதி தன்னிலை அடைந்து தூங்க ஆரம்பிக்கும் போது பொத் என்ற சத்தம் கேட்டது.. அவனின் மனையாள் தான் கட்டிலிருந்து உருண்டு பீம் பேக்கில் விழுந்து இருந்தாள்..

‘ம்பச் இவ ஒருத்தி’ என்று சலித்து கொண்டவன் எழுந்து அவள் அருகே வந்து தூக்கி கட்டிலில் நேராக படுக்க வைத்து விட்டு தூங்க ஆரம்பிக்க, மீண்டும் விஷ்ணு உருண்டு வந்து அவன் மீது கையையும் காலையும் போட்டாள்.. ஆ… அவனுக்கு இது அவஸ்தையாக இருந்தது.. மீண்டும் அவன் அவளை நகர்த்தி விட, மீண்டும் உருண்டு பீம் பேக்கில் விழுந்து இருந்தாள்.. உஃப் என்று பெருமூச்சு விட்ட ப்ரதாப் மீண்டும் அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைக்கலாம் என எழுந்தவன், இல்ல வேணாம் அங்க இருக்கிறதே நல்லது.. மேலே படுக்க வைத்தால், கை கால்களை மேலே போட்டு தேவையில்லாத அவஸ்தை நம்மால் தூங்க

முடியாது என்று நினைத்தவன் கண்களை மூடி உறங்க முயற்சிக்க,
விஷ்ணுவோ சிறிது நேரத்திலே பீம் பேக்கில் இருந்தும் உருண்டு தரையில் விழுந்தால்.. அதில் கண் விழித்தவன் இவளோட எப்புடி தான் வாழ போறேனோ என நெற்றியில் அடித்து கொண்டவன் கண்மூடி  சிறிது நேரத்தில் தூங்கி விட்டான்…

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!