Mr and Mrs விஷ்ணு 16

4.8
(17)

பாகம் 16

மறுநாள் காலை சமையல் அறையில் வேலை பார்த்து கொண்டு இருந்தார் கல்யாணி.. பவித்ரா அங்கு வந்தாள்.. “எழுந்துட்டியாமா” என்று கேட்ட கல்யாணி, பவித்ரா முகத்தை பார்க்க அதில் தெரிந்த பொலிவை பார்த்து சந்தோஷப்பட்டார்,

“அத்தமா சாரி லேட்டா எழுந்ததுக்கு ,என்ன சமைக்கனும்னு சொல்லுங்க சீக்கிரமா செய்றேன்” என்றாள் பவித்ரா.. “உனக்கு சமைக்க தெரியுமா?”கல்யாணி கேட்கவும்,

“தெரியாது” என்றவள், “நீங்க சொல்ல சொல்ல செய்றேன்” என்றதும் சிரித்த கல்யாணி, “அது எல்லாம் வேண்டாம் நானே பார்த்துக்கிறேன்,

நீ காலையில்ல என்ன குடிப்பமா டீயா காபியா இல்ல பாலா எது வேணும்னு சொல்லு போட்டு தரேன்” என்று கேட்டார்..

“இல்ல நானே போட்டுக்கிறேன் அத்தமா” என்று பவித்ரா தயங்கவும்,

“அம்மா பவி காபி தான் குடிப்பா”என்றான் பார்த்திபன்..

உடனே காபி தயாரித்து இரண்டு கப்பில் ஊற்றிய கல்யாணி, பவி கையில் கொடுத்து “ஒன்னு பார்த்திக்கிட்ட கொடுத்துருமா” என்றார்..

அந்த கல்யாணி கிட்ட பார்த்து கவனமா நடந்துக்கோ இல்ல போன முதல் நாளிலிருந்தே உன்னை ராஜ்ஜியம் பண்ண ஆரம்பாச்சிடுவா என்று தாய் கூறியது எவ்வளவு தப்பு என்பது கல்யாணியின் எதார்த்தமான பேச்சு பவிக்கு புரிய வைத்தது..

“டேய் பார்த்தி இரண்டு பேரும் கிளம்பி இன்னைக்கு நம்ம குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு வந்துருங்கடா” என்று கல்யாணி காபி குடித்து கொண்டு இருந்த பாய்த்தியிடம் கூற,

“போம்மா இன்னைக்கு சினிமா போறதுக்கு டிக்கெட் போட்டு இருக்கோம் இன்னோரு நாள் பார்த்துக்கலாம்” என்றான் ‌பார்த்திபன்..

“பார்த்தி கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாள் வரதா வேண்டி இருக்கேன்டா சினிமா தானே அதை சாயங்காலம் போய் பார்த்துங்க”..

“அட போம்மா டிக்கெட் புக் பண்ணிட்டோம்” என்று பார்த்திபன் மறுபடியும் மறுப்பு கூற,

“பார்த்தி அத்தமா தான் இவ்வளவு சொல்றாங்க மறுபடியும் மறுபடியும் நீ முடியாதுன்னு சொல்ற, அத்தமா சொல்ற மாதிரி கோவிலுக்கு பர்ஸ்ட் போகலாம் சினிமா இன்னோரு நாள் பார்த்துக்கலாம்” என்ற பவித்ரா, “நான் போய் ரெடியாகிட்டு வரேன்” என்று அறைக்கு சென்றாள்..

“ஏங்க பவித்ரா ரொம்ப நல்ல டைப் இல்ல” என்று உதயகுமாரிடம் சொல்ல,

“இந்த கல்யாணம் வேண்டாம் அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு செட் ஆக மாட்டானா சொன்ன” என்று உதயகுமார் நக்கலாக கேட்கவும், பார்த்தி சிரக்க அவர்களை முறைத்தபடி கல்யாணி சமையல் அறை சென்றார்..

அறைக்குள் சென்ற பவித்ரா எந்த புடவையை அணிவது என்று பார்த்து கொண்டு இருந்தாள்.. அவளை பின்னிருந்து அணைத்த பார்த்தி “நீங்க நல்ல மருமகன்னு பேர் எடுக்கிறதுக்கு எங்களை திட்டுவீங்களா மேடம்” பவி கன்னத்தில் முத்தமிட்டபடி கேட்க,

“ஆமா என்னோட பலி ஆடு நீ மட்டும் தானே அதான்” என்றாள்..

“நான் பலி ஆடா உன்னை” என்று கழுத்தில் முத்தமிட ஆரம்பிக்க, “பார்த்தி விடுடா இந்த நேரத்தில்ல போய் அத்தை மாமா இருக்காங்க” என்று தன்னை சுற்றி இருந்த கையை பவி விலக்க பார்க்க,

“வெளிய தானடி இருக்காங்க” என்றவன் கைகள் புடவையை விலக்கி வெற்று இடையில் அழுத்த,

சிலிர்த்தவள் கண்களை மூடி “கோவிலுக்கு போகனும் டா வேண்டாம்” என்றாள் இடையிலிருந்து மார்பை நோக்கி மேலேறும் கைகளை தடுத்த படி,

“குளிச்சிக்கலாம்டி” என்றவன் முழுவதுமாக அவளை தன் வசமாக்கி கட்டிலில் சரித்து அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான்..

உறக்கம் கலைந்து எழுந்த விஷ்ணு, முதல் எங்கு இருக்கிறோம் என்று ஒரு நொடி குழம்பியவள் கண்ணை கசக்கி கொண்டு எழுந்து அமர, சுவரில் மாட்டப்பட்டு இருந்த ப்ரதாப் போட்டோவை பார்த்தும் அனைத்தும் புரிந்தது..

அவர் எங்க என்று ப்ரதாப்பை அறை முழுவதும் பார்வையை சுழல விட்டு தேட எங்கும் ப்ராதாப் இல்லை, ‘இவ்வளவு சீக்கிரமா எழுந்து எங்க போனாங்க’ என்று நினைத்தவள், மணியை பார்க்க அது எட்டு என்று காட்டியது.. அச்சச்சோ இவ்ளோ நேரமாவா தூங்கி இருக்கேன் என்று தலையில் அடித்து கொண்டு மெத்தையிலிருந்து எழுந்தவள்,

‘இந்த வீட்டுக்கு வந்த முத நாளே இவ்வளோ லேட்டா எழுந்து இருக்கேன் என்ன சொல்வாங்களோ’ சீக்கிரம் குளிச்சிட்டு கீழே போகனும் என்றபடி எழுந்தவளுக்கு அப்போது தான் இந்த அறையில் அவள் உடை எதுவுமே இல்லை என்பது உரைத்தது.. இப்ப என்ன பண்றது இப்புடியே வெளிய போக முடியாதே என்று தரையில் காலை உதைத்தவள், அப்போது தான் கவனித்தாள் அவளின் உடை பெட்டியும் மற்ற உடமைகளும் அறையில் இருப்பதை, ஆ.. யார் கொண்டு வந்து வச்சிருப்பாங்க என்று யோசித்தவள், யார் கொண்டு வந்து வச்சா நமக்கு என்ன, நமக்கு தேவையானது இருக்கு என்றபடி தேவையான உடைகளை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.‌. அது அவள் கணவனின் செயல் என்பதை அறியாமல்,

குளித்து விட்டு வந்தவளுக்கு பயங்கரமாக பசித்தது.. அதனால் அவசரமாக தயாராகி கீழே வர மொத்த குடும்பமும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.. ப்ரதாப்பும் அங்கு தான் இருந்தான்..

தன் மாமியார் தேவகி, விசாலாட்சி பாட்டி ரங்கநாயகி மூவரும் லேட்டா எழுந்ததுக்கு ஏதும் சொல்வாங்களோ என்று உள்ளுர பயந்து கொண்டே விஷ்ணு வர, அவர்கள் யாரும் இவளை எதுவுமே சொல்லவில்லை.. ‘அடடா என்ன இது’ என்று நினைத்தவள், அவர்கள் மூவரையும் பார்த்து சிநேகமாக சிரிக்க, அவர்கள் இவளை கண்டு கொள்ளாமல் முகத்தை திருப்பி கொண்டனர்.. மாமனார் வெங்கடேஷ் மட்டும் தான் விஷ்ணுவை பார்த்து சிரித்து “எழுந்துட்டியமா” என்று நல்ல படியாக பேசினார்..

ப்ரதாப் சாப்பிட்டபடியே அவனின் சித்தப்பா ஜெகதீஷ் பேசி கொண்டு இருப்பதை கேட்டு கொண்டு இருந்தான்.. விஷ்ணு வந்ததும் தன்னருகே இருந்த சேரை அவள் அமர்வதற்கு ஏதுவாக இழுத்து போட்டு விட்டு கண்ணால் அந்த இருக்கையை காட்ட, மக்கு விஷ்ணுவுக்கு அவனின் செய்கை புரியாமல் நின்று கொண்டு இருந்தாள்.. ப்ரதாப்பின் தந்தை வெங்கடேஷ் தான் “ப்ரியாமா ஏன் நின்னுட்டு இருக்க சாப்பிட உட்காருமா” என்றதும் வேகமாக அமர்ந்தாள்..

“நீங்க சொல்ற பிசினஸ் ஐடியா சரியா வராது சித்தப்பா.. நானும் நிறைய பேர்கிட்ட இதை பத்தி விசாரிச்சுட்டேன் இலாபம் வராது ரொம்ப கஷ்டம் பணம் போட்டா திரும்ப வராது.. நீங்க வேற ஏதாவது பிசினஸ் பண்ணுங்க சித்தப்பா கண்டிப்பா அதுல நான் இன்வெஸ் பண்றேன்… இல்லனா நம்ம ஆபிஸிக்கே நீங்க வரலாமே” என்று ப்ரதாப் சொல்லி கொண்டு இருக்கும் போதே,

“நேரிடையாவே பணம் தர முடியாதுன்னு சொல்லு ப்ரதாப் ஏன் சுத்தி வளைக்குற, அப்புறம் ஏன் இவ்ளோ நேரம் தெலுங்கில்ல தானே நீ பேசிட்டு இருந்த இப்ப மட்டும் ஏன் தமிழில்ல பேசுற” என விசாலாட்சி கொந்தளிக்க

“ஏன்னா விஷ்ணுவுக்கு தெலுங்கு தெரியாது அதான்” என்று ப்ரதாப் சொன்னதும்

“நம்ம குடும்ப விஷயத்தை எல்லாரும் தெரிஞ்சுக்கனுமா?” என்று விசாலாட்சி ஒரு நொடி விஷ்ணுவை பார்த்து விட்டு ப்ரதாப்பிடம் தெலுங்கில் கோவமாக கேட்டார்..

“எல்லாரும் தெரிஞ்சுக்கனுமா இல்லையாங்கிறதை விட என் மனைவி தெரிஞ்சிக்கனும் சித்தி.. ஏன்னா அவளும் நம்ம குடும்பத்தில் ஒருத்தி தான்” என்றான்

“நேத்து வந்தவளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கனுமா ப்ரதாப்?” என்று மீண்டும் விசாலாட்சி சீற,

“கண்டிப்பா கொடுக்கனும், அவ வந்தது நேத்தா இருந்தாலும் இனி வர போறது கடைசி வரைக்கும் இல்லையா சித்தி அதனால்ல கண்டிப்பா அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்” என்று ப்ரதாப் கூறவும்,

 விசாலாட்சி ‘நான் என் புருஷன், புள்ளை எல்லாம் உனக்கு கீழன்னு ஒன்னும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த உன் பொண்டாட்டி தெரிஞ்சிக்கனும் தான் இதை சொல்றியா, ஒன்னும் இல்லாத வீட்டில் இருந்து வந்தவளுக்கு இவ்வளவு முக்கியத்துவமா’ என்று மனதிற்குள் கருவியவர் கோவம் முழுவதும் விஷ்ணு மீது தான் திரும்பியது..

ப்ரதாப் என் மனைவி எனக்கு முக்கியம் என்று பேசியதை கேட்ட தேவகி மருமகளிடம் எந்த வம்பும் வைத்து கொள்ள கூடாது என்றும், அவளை சீண்டினால் மகனின் கோவத்துக்கு ஆளாக வேண்டும் என்பது புரிந்தது.. இருந்தும் அவருக்கு விஷ்ணு மீது கோவம் கோவமாக வந்தது.. ரங்கநாயகி பாட்டிக்கும் அதே எண்ணம் தான்..

ப்ரதாப்புக்கு தெரியும் பவித்ராவுக்காக மட்டுமே விஷ்ணு இந்த வீட்டு மருமகளாக்க பட்டு இருக்கிறாள் என்பது, மற்றபடி அவனின் பாட்டி அம்மாவிற்கு எல்லாம் இதில் விருப்பம் இல்லை என்பதும், அவன் மனைவிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவன் சரியாக கொடுத்தால் தான்.. தன் வீட்டில் உள்ளவர்களும் அவளை சரியாக நடத்துவார்கள் என்பது, அவர்கள் இருவரின் உறவு அறைக்குள் எப்புடியோ அறைக்கு வெளியே மிசஸ் விஷ்ணுவிற்கு கடுகளவு கூட அவள் மரியாதை குறைய கூடாது.. அவளை சரியாக நடத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தான்..

இங்கு இவ்வளவு பிரச்சினை போய் கொண்டு இருக்க விஷ்ணு அதை எல்லாம் கவனிக்கவே இல்லை.. அவள் கவனம் முழுவதும் டேபிளில் என்னென்ன டிபன் இருக்கிறது என்பதில் தான் அவள் ஆர்வம் இருந்தது.. நேற்று கல்யாண டென்சனில் இருந்ததால் சரியாக சாப்பிடவில்லை எழுந்ததுமே விஷ்ணுவுக்கு பயங்கர பசி அதனால் இந்த பேச்சை அவள் சரிவர கவனிக்க வில்லை.. தட்டில் இட்லி வைத்து சாம்பார் ஊற்றவும் சாப்பிட தயாராக,

அப்போது சாப்பிட்டு முடித்து எழுந்த ப்ரதாப் விஷ்ணு என்று அவளை அழைத்தான்.. அவள் காதில் எங்கு அது விழுந்தது.. அவள் தான் சாப்பிட தயாராகி கொண்டு இருந்தாளே, மீண்டும் ப்ரதாப் விஷ்ணு என்றுஅழைக்க அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லாது போனதும் தோளை தட்டி கூப்டவும், “ஹாங்” என்றபடி திரும்பி ப்ரதாப்பை பார்த்தாள் விஷ்ணு…

“நான் ஆபிஸ் விஷயமாக ஹைதராபாத் போறேன், நாளைக்கு நைட்டு தான் வருவேன் என்று ப்ரதாப் கூறவும்,பசியில் இருந்த விஷ்ணுவுக்கு மனதில் இதை ஏன் நம்மகிட்ட சொல்றாரு என்று தோன்றினாலும் சரி எனும் விதமாக தலை அசைத்தாள்..

“கல்யாணமாகி அடுத்த நாளே வேலை பிசினஸ்னு அலையனுமா ப்ரதாப் நீ ஒரு வாரம் எல்லாத்தையும் விட்டுட்டு ப்ரியாவை அழைச்சிட்டு எங்காவது வெளியூர் ஏதாவது போய்டு வா… நம்ம வம்சி ஹைதராபாத்தில் தானே இருக்கான் அவனை போய் பார்த்துக்க சொல்லு இல்லைனா நான் போறேன் நீ வர வரைக்கும் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்றார் வெங்கடேஷ்..

“ஒத்து நானா புதுசா நியூ ப்ரொடக்ட் ஒன்றை மார்கெட்ற்கு லான்ச் பண்ண போறோம்.. இது ரொம்ப நாளா மேரஜ் முன்னாடியே ப்ளான் பண்ணினது.. ரொம்ப பேர் இதுக்காக ஹார்ட் வொர்க் பண்ணி இருக்காங்க.. என்னோட பர்சனல் விஷயங்களுக்காக இதை எல்லாம் தள்ளி போட முடியாது.. அதோட வம்சி இப்ப தான் புதுசா ஆபிஸ் வர ஆரம்பிச்சு இருக்கான் அவனால் தனியா இதை சமாளிக்க முடியாது..நான் போனா தான் சரி வரும்.. பவித்ரா வர வரைக்கும் நீங்க சென்னை ஆபிஸை பார்த்துக்கோங்க” என்று தந்தையிடம் கூறியவன், மீண்டும் மனைவியிடம் போய்ட்டு வரேன் என்பது போல் தலை அசைத்து விட்டு சென்றான்..

இட்லியை பிய்த்து சாம்பாரில் முக்கி வாய்க்குள் வைத்த விஷ்ணுவுக்கு கண் எல்லாம் கலங்கி உச்சி முடி பிய்த்து கொள்ளும் அளவு சாம்பாரில் காரம்.. வேகமாக ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்க அப்போதும் காரம் அடங்கியபாடு இல்லை.. தொண்டை எல்லாம் எரிய ஆரம்பித்தது..

ஒரு கிலோ மிளகாய் தூளை கரைச்சி சாம்பார்ல் ஊத்தி வச்சு இருக்காங்க என்று நொந்தவள் சாம்பாரை ஒதுக்கி விட்டு சட்னியை தொட்டு கொள்ள அது இதை விட பல மடங்கு காரமாக இருக்க மீண்டும் இரண்டு டம்ளர் தண்ணீரை குடித்தவள், இதை எப்புடி சாப்பிடறாங்க என்று பார்க்க தேவகி விசாலாட்சி ரங்கநாயகி மூவரும் ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.. ஆந்திரகாரங்க காரம் சாப்பிடுவாங்க என்று தெரியும் ஆனானா இவ்ளோ காரம் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை என்று நொந்த விஷ்ணுவுக்கு சாப்பிடும் ஆசையும் பசியும் பறந்து போனது..

பாதி சாப்பாட்டில் எழ, இவ்வளவு நேரம் விஷ்ணு பட்ட அவஸ்தையை பார்த்து ரசித்த விசாலாட்சி அவள் எழுந்ததும், “என்னமா அதுக்குள்ள எழுந்துட்ட”

“இல்ல போதும்” என்று விஷ்ணு கூறவும்

“ஒரு இட்லி கூட சாப்பிடல அதுக்குள்ள போதுமா இப்புடி தட்டில் வச்சு சாப்பிட்டை வேஸ்ட் பண்றது ரொம்ப தப்பு உட்காரு உட்கார்ந்து சாப்பிடு” என்றதும் வேறு வழி இல்லாமல் உட்கார்ந்த விஷ்ணு வெறும் இட்லியை மட்டும் கஷ்டப்பட்டு சாப்பிட, அதை பார்த்த விசாலாட்சி என்ன வெறும் இட்லி சாப்பிட்டு இருக்க என்றவர் வேண்டுமென்றே இட்லி மீதே சாம்பாரை ஊற்றி நல்லா சாப்பிடுமா என்றார்..

விஷ்ணுவுக்கு தான் வேண்டாம் என்று சொல்லவும் முடியாமல் சாப்பிடவும் முடியாமல் காரத்தாலும் தன் நிலையை எண்ணியும் கண்ணில் கண்ணீர் வடிய தொண்டை வயிறு எல்லாம் எரிய திக்கி திணறி திண்டாடிய படி சாப்பிட்டாள்… அதை பார்த்த விசாலாட்சி மனதிற்குள் நல்லா அனுபவிடி என்று சிரித்து கொண்டார்..தேவகி ரங்கநாயகி பாட்டி இருவரும் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்..

சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்த விஷ்ணுவுக்கு இன்னும் காரம் அடங்கிய பாடில்லை.. இங்கு வந்தும் பாட்டிலில் இருந்த தண்ணீர் முழுவதையும் குடிக்க, அதிக்மாக தண்ணீர் குடித்ததால் வாந்தி வந்து விட்டது.. ரெஸ்ட் ரூம் சென்று வாந்தி எடுத்து விட்டு வந்தவளுக்கு அதீத காரம் உண்டதால் வயிறு வலிக்கவும் ஆரம்பித்து விட்டது..

அவள் சிறு வயதிலிருந்தே காரம் அதிகம் எடுத்து கொள்ள மாட்டாள்.. அதனால் அவளால் இந்த காரத்தை தாங்கி கொள்ள முடியவில்லை.. “ஆ… சரியான கொலைக்கார குடும்பம்” என்று வயிற்றை பிடித்து கொண்டு படுத்தவளுக்கு வலி அதிகரிக்க தான் செய்ததே தவிர குறைந்த பாடில்லை.. அதனால் அழுகை வர அழுதபடி படுத்து இருத்தவள் சற்று நேரத்தில் உறங்கியும் போனாள்..

 

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!