Mr and Mrs விஷ்ணு 17

4.9
(28)

பாகம் 17

மதியம் 4 மணி போல் எழுந்தாள் விஷ்ணு வயிற்றுவலி மட்டுபட்டு இருக்க, கொஞ்ச நேரத்தில் பசி எடுக்கவும் ஆரம்பித்தது.. மீண்டும் சாப்பிட செல்லவே அவளுக்கு பயமாக இருந்தது..

தயிர் சாதம் போட்டுட்டு ரூம்ல வந்து சாப்பிட்க்கனும் என்றபடி கீழே செல்ல, அங்கு இன்று வெறும் சாதமே வைக்க வில்லையும்.. ஆவக்காய் பிரியாணி தான் செய்து இருந்ததார்களாம்.. அந்த பிரியாணியின் சிவந்த நிறத்தையும் அதில் தெரிந்த பச்சை மிளகாயையும் பார்த்தவள் பசியே இல்லை என்று கூறி விட்டு அறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.. நேரமாக நேரமாக பயங்கரமாக பசித்தது.. பால் பழம் ஏதாவது சாப்பிடலாமா என்றாலும் புதிதாக திருமணமான பெண்கள் புகுந்த வீட்டில் உரிமை எடுத்து கொள்ள இருக்கும் தயக்கம் விஷ்ணுவுக்கும் இருந்தது..

மேலும் அந்த வீட்டில் உள்ள பாட்டி மாமியார் என்கிட்ட நெருங்காதே என்று பார்வையால் தூர நிறுத்தினர்.. அவர்கள் மட்டுமல்ல வேலைக்கு இருப்பவர்களும் விஷ்ணுவை கண்டு கொள்வதே இல்லை.. அதனால் யாரிடமும் அவளால் எதையும் கேட்க முடியவில்லை.. ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டாலும் அதையும் பிரச்சினை செய்வார்கள் என்று அமைதியாக இருந்தாள்..

அந்த நாள் அப்புடியே கழிய அடுத்த நாளும் அதே தான் தொடர்ந்தது.. ஒரு நேரம் கூட தவறாமல் சாப்பிடுபவள், எந்நேரமும் நொறுக்கு தீனி கொறித்து கொண்டே இருப்பவள் இரண்டு நாளாக சரியாக ஏதும் சாப்பிடாமல் இருக்கின்றாள்.. சாப்பிட அவளால் முடியவில்லை.. அவள் சாப்பிடாளா என்று கூட கேட்க அந்த வீட்டில் ஆளில்லை.. கேட்க வேண்டிய அவள் கணவனோ மனைவியை மறந்து வேலையில் முழ்கி இருந்தான்..

விஷ்ணுவுக்கு அவள் அம்மா அப்பா மீதும் கணவன் மீதும் கோவம் கோவமாக வந்தது.. கூடவே அழுகையும் வந்தது.. இடையில் அவளுக்கு கல்யாணி கால் செய்து எப்புடி இருக்கம்மா என்று கேட்க மொத்த கடுப்பையும் அவரிடம் காட்டி கத்தி விட்டு போனை வைத்து விட்டாள்.. ஆனால் இங்கு அவளுக்கு நடப்பதை ஏனோ சொல்லவில்லை.. இதுக்கு எல்லாம் முத காரணம் அந்த ஊறுகாய் கடை ஓனர் தான் குரங்கு குரங்கு மல குரங்கு காட்டு எருமை, இதுக்கு தான் வேண்டாம்னு சொன்னேன், வம்படியா என்னை கட்டிட்டு வந்துட்டு குடும்பமா சேர்ந்து கொடுமை பண்றாங்க என்று பசியினால் உண்டான கோவத்தில் கணவனிடம் சண்டை பிடிக்க காத்து கொண்டு இருந்தாள்..

இரவு 12 மணிக்கு மேல் தான் ப்ரதாப் வந்தான்.. விஷ்ணுவும் தூங்காமல் தான் இருந்தாள்.. ப்ரதாப் வந்ததும் பயங்கரமாக சண்டை போட வேண்டும் என்று ட்ரையல் பார்த்தவளுக்கு அவனை கண்டதும் பேச்சே வரவில்லை.. மனைவியின் முகம் ஏதோ சரியில்லை என்று ப்ரதாப்புக்கு தெரிந்தாலும் அவளாகவே சொல்லட்டும் என்று விட்டு விட்டான்.. இரண்டு நாள் சரியாக தூங்காமல் வேலை வேலை என சரியாக தூங்காமல் ஓடியதால் தூக்கம் வர படுத்து விட்டான்..

‘ஒரு வார்த்தை சாப்டியா ஏன் ஒரு மாதிரி இருக்குன்னு கணவன் கேட்கவேயில்லையே’ என்ற ஆதங்கம் விஷ்ணுவுக்கு மறுபடியும் அழுகையை கொடுத்தது.. அழுது கொண்டே படுத்தவளுக்கு கத்தி குத்துப்பட்டவன் கூட தூங்கிடுவான் குறை வயித்துக்காரன் தூங்க மாட்டான் என்ற பழமொழி போல் விஷ்ணுவுக்கு பசியில் படுக்கவே முடியவில்லை… எழுவது லைட்டை போட்டுவிட்டு நடப்பது மறுபடியும் படுப்பது என்று இருக்க, அது ப்ரதாப் உறக்கத்தை கெடுக்க எரிச்சல் வந்தது..

கோவமாக எழுந்தவன் “உனக்கு தூக்கம் வரலைன்னா ரூம்மை விட்டு வெளியே போடி.. இரண்டு நாள் தூக்கம் இல்லாம செம டயர்ட்ல படுத்தா சும்மா டிஸ்டர்ப் பண்ணிட்டு” இருக்க என்று கத்தவும்,

விஷ்ணுவுக்கும் கோவம் வந்தது “இரண்டு நாள் நீங்க தூங்க மட்டும் தான் செய்யல.. ஆனா நான் சாப்பிடவே இல்லை தெரியுமா? எங்க வீட்டுல எல்லாம் நைட்டு ஏழு மணிக்கே சாப்பிட்டாலும் திரும்ப ஒன்பது மணிக்கு சாப்பிட்டா தான் எனக்கு தூக்கமே வரும்.. ஆனா இங்க இரண்டு நாளா சாப்பிடாம தூக்கம் வராம நானே கஷ்டப்பட்டு இருக்கேன் வந்துட்டாரு பெரிய இவர் மாதிரி” என்று பதிலுக்கு கத்தியவள் நடந்த அனைத்தையும் கூறி விட்டு முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்..

அவள் சொல்வதை கேட்டவனுக்கு விஷ்ணு மீது பரிதாபத்தை விட கோவம் தான் அதிகமாக வந்தது.. “அழறதை நிறுத்து முட்டாள்” என்ற ப்ரதாப்பின் கோபகுரலில் நிமிர்ந்து பார்த்தாள் விஷ்ணு..

“நான் முட்டாளா”

“ஆமாடி முட்டாள் தான்.. இந்த சாப்பாடு காரமாக இருக்கு என்னால்ல சாப்பிட முடியலை வேற செஞ்சு தாங்கன்னு வாயை திறந்து சொல்றதை விட்டுட்டு இரண்டு நாளாக சாப்பிடாம இருந்த உன்னை முட்டாள்ன்னு சொல்லாமா வேற என்ன சொல்றது… நீ சொல்லாம உன் பிரச்சினை என்னன்னு மத்தவங்களுக்கு எப்புடி தெரியும்.. இங்க இருக்கவங்க யாருக்கும் ஜோசியம் தெரியாது.. எதையும் சொல்லாம கண்டுபிடிக்க, நீ ஏன் சொல்லலை”? என்று கேட்டான்..

“அது எனக்கு கொஞ்சம் தயக்க” என்று விஷ்ணு சொல்வதற்குள்,

“ஒரு வேளை எனக்கு இந்த வீட்டுல சோறு போடாம கொடுமை பண்றாங்கன்னு வெளியே என்னை அசிங்கப்படுத்தனும்னு வேணும்னே இப்புடி எல்லாம் பண்றியாடி”என்று ப்ரதாப் கத்தவும்,

அவன் சொல்வதை கேட்டு கோவமான விஷ்ணு “ஆமா அப்புடி தான் கரெக்ட்டா சொன்னீங்க உங்களை அசிங்கப்படுத்த தான் இப்புடி பண்ணுனேன் இன்னும் நிறைய பண்ணுவேன் என்ன பண்ணுவீங்க” என்று பதிலுக்கு அவள் கத்த, ஏற்கெனவே அவள் சாப்பிடாமல் இருந்தேன் என்றதிலே கோவமாக இருந்தவன் இவள் இப்புடி பேசவும் அந்த கோவம் அதிகரிக்க அடிக்க கை ஓங்கினான்,

அதில் பயந்தவள் கன்னத்தில் கை வைத்து மறைத்தபடி பின்ன நகர கால் இடறி விழுந்து விட்டாள்.. உடனே பதறியவன் “ஏய் என்னாச்சு” என்றபடி அவள் அருகே முட்டி போட்டு அமர்ந்து அவளை தொட, கையை தட்டி விட்டவள் அப்புடியே படுத்து முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்.. அதை பார்த்தவனுக்கு அவசரப்பட்ட தன் மீதே கோவம் வர கையை மடக்கி நிலத்தில் குத்தியவன் அறையிலிருந்து வெளியேறினான்..

தோட்டத்துக்கு வந்தவன் ச்சே என்று காலை தரையில் உதைத்தவனுக்கு விஷ்ணு மீது இன்னுமே கோவம் அடங்கவில்லை.. அவனை பொறுத்தவரை அவளுக்கு இந்த வீட்டில் நிறைய உரிமை இருந்தும் அதை எடுக்காமல் சாப்பிடாமல் இருந்தேன் என சொல்லி அழுபவள் மீது கோவமே வந்தது..

அதை விட பல மடங்கு அவன் வீட்டினர் மீது கோவம் வந்தது.. வீட்டிற்கு புதுசா வந்த பொண்ணு சாப்பிட்டாளா இல்லையான்னு கூட கவனிக்கமா இப்புடி அலட்சியமாக விட்டு இருக்காங்களே, ஒரு வாரம் நான் வரலைன்னாலும் இப்புடி தான் கவனிக்காமல் இருப்பாங்களா, அவங்களுக்கு நாளைக்கு காலையில்ல இருக்கு என்று கோவத்தில் கொதித்து கொண்டு இருந்தான்..

விஷ்ணுவோ ,சாப்பிடமா இருக்காளேன்னு கொஞ்சம் கூட பாவம் பார்க்கமா அடிக்க வராங்க.. என்னை பிடிச்சா இப்புடி எல்லாம் பண்ணுவாரா பிடிக்காததுனால் தான் இப்புடி பண்றாங்க என்று அழுது கொண்டு இருக்க, கதவு திறக்கும் ஓசை கேட்டது வருவது அவள் கணவன் என்பதை அறிந்தவள் கண்ணை இறுக மூடி கொண்டாள்..

அவள் அருகே வந்த அமர்ந்த ப்ரதாப் “விஷ்ணு”என்று கூப்பிட அவள் கண்ணை திறக்கவில்லை.. மீண்டுமொரு முறை அழைக்க அவள் அப்புடியே இருக்க.. வெடுக்கென அவளை கை பிடித்து தூக்கி அமர வைத்தான் ப்ரதாப்..

அதில் மிரண்டவள் “என்ன வேணும் உங்களுக்கு மறுபடியும் என்னோட சண்டை போடனுமா இல்லை அடிக்கனுமா” என்று சத்தம் போட, அவள் கையில் ஒரு தட்டை கொடுத்தான் ப்ரதாப்..

தட்டை பார்த்தவளுக்கு பேச்சு நின்று போனது.. என்ன இது என்றபடி மூடி இருந்த ப்ளேட்டை விலக்கி பார்க்க நூடுல்ஸ் இருந்தது.. அதை பார்த்தும் பயங்கர பசியில் இருந்தவள் என்ன ஏதுன்னு எல்லாம் கேட்காமல் அவசர அவசரமாக சாப்பிட ஆரம்பித்தாள்.. அவள் சாப்பிடும் விதமே அவள் பசியின் அளவை சொல்ல ப்ரதாப்புக்கு பாவமாகி போனது அவளை பார்த்து,

தோட்டத்தில் கோவமாக கொஞ்ச நேரம் நின்று இருந்தவன், கோவம் குறைந்ததும் விஷ்ணுவுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்கலாம் என்று பார்த்தால், ஒரு மணிக்கு ஏது ஹோட்டல், சமையல் செய்பவர்களிடம் ஏதாவது செய்ய சொல்லாம் என்றால் அவர்களும் இந்நேரம் தூங்கி இருப்பர்.. தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பும் பழக்கம் ப்ரதாப்புக்கு கிடையாது..

வேறு வழியில்லை மனைவிக்கு தான் தான் செய்து கொடுக்க வேண்டும் என்று சமையலறை வரை வந்து விட்டான் அவளுக்கு இருக்கும் பசிக்கு பால் பழம் எல்லாம் போதாது என்று தோன்றியது.. சமையற்கலை வரை வந்து விட்டானே தவிர அவனுக்கு சமையலில் abcd கூட தெரியாது.. என்ன பண்ணுவது என்றவனுக்கு யூடியுப் கை கொடுக்க அதை பார்த்து எக் நூடுல்ஸ் செய்து கொண்டு வந்தான்..

தட்டில் இருந்ததை பாதி முடித்த பிறகே ப்ரதாப்பை பார்த்தவள் “ஹோட்டலையா வாங்கிட்டு வந்துங்க” என்று சற்று முன்பு நடந்த சண்டையை மறந்து கேட்க..

அவனோ மணியை பார் என்று கடிகாரத்தை கண்ணால் காட்டினான்..

அதை புரிந்து கொண்டவள் “ஆமால்ல இந்த டைம்ல ஹோட்டல் இருக்காதுல்ல, அப்புறம் இந்த நூடுல்ஸ் ஓ… சமையல் அக்காகிட்ட செய்ய சொன்னீங்களா, அவங்க செஞ்சு கொடுத்தாங்களா, பரவாயில்லையே இந்த டைம்ல கூட செஞ்சு கொடுத்து இருக்காங்க சூப்பர்ல, காலையில்ல தாங்க்ஸ் சொல்லனும்” என்று விஷ்ணு சொல்ல,

யார் செய்தார்கள் என்று கேட்டு இருந்தால் ஒரு வேளை ப்ரதாப் நான் தான் செய்தேன் என்று கூறி இருப்பானோ என்னவோ இப்போது விஷ்ணு கூறியதற்கு மறுப்பு சொல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான்..

“டேஸ்ட் எப்புடி இருக்கு” என்று கேட்டான்.. அவன் முதன் முதலாக செய்த சமையல் அதன் ரிசல்ட் என்ன என்று தெரிந்து கொள்ள கேட்டான்..

“உங்க ப்ரெண்ட் நூடுல்ஸ்ல செஞ்சு இருப்பாங்க போல அதனால்ல டேஸ்ட் கொஞ்சம் சுமார் தான்.. இதே xxxx அந்த ப்ரெண்ட் நூடுல்ஸ் செஞ்சு இருந்தா சும்மா தாறுமாறா இருந்துருக்கும்” என்றவளை ப்ரதாப் முறைக்க,

“ஏன் முறைக்கிறீங்க உண்மையை தான்ங்க சொல்றேன் நீங்களே சாப்பிட்டு பாருங்க” என்று ஒரு வாய் எடுத்து தன்னருகே இருந்த ப்ரதாப்பு கன்னத்தை பிடித்து வாய்க்குள் ஊட்டி விட்டவள்,

ஏய் என்னடி பண்ற என்றவன் நூடுல்ஸை மெல்ல அவன் செய்த காரணத்தால் சுவை சுமாராக தான் இருந்தது.. அது அவன் முகத்தில் தெரிய,

அதை பார்த்த விஷ்ணு “பார்த்தீங்களா நான் சொன்னது உண்மைன்னு உங்களுக்கே தெரியுதா, உங்க நூடுல்ஸ் சுமார் தான்.. xxxx அந்த கம்பெனி நூடுல்ஸ் இன்னோரு நாள் செஞ்சு தரேன்.. அதை சாப்பிட்டு பார்த்துட்டு அதே போல நீங்களும் நல்ல படியா நூடுல்ஸ் ப்பெர் பண்ணுங்க அப்பாவது உங்க நூடுல்ஸ் நல்லா இருக்கான்னு பார்ப்போம்” என்றாள் விஷ்ணு..  

அதை கேட்டவன் எனக்கு இது தேவை தான் என்று நினைத்து கொண்டாலும் அவள் கூறிய விதத்தில் சிரிப்பு தான் வந்தது.. அதை உதட்டுக்குள் மறைத்து கொண்டான்.. இரண்டு நாட்களுக்கு முன்பு அவள் பேசும் போது எரிச்சல் வந்தது அதே இன்று சிரிப்பு வருவதை நினைத்து அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.. ஐக்

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 28

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!