Mr and Mrs விஷ்ணு 18

4.6
(32)

பாகம் 18

மறுநாள் காலை ப்ரதாப் வீட்டினரிடம் சத்தம் போட்டு விட்டு இனிமே இப்புடி நடக்க கூடாது என்று எச்சரித்து விட்டு, சமையல் வேலை செய்பவர்களிடம் மனைவிக்கு தனி சமையல் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டான்.. அதே போல் விஷ்ணுவிடமும் “உனக்கு என்ன வேணுமோ அதை வாயை திறந்து சொல்லு உன் மனசுல இருக்கிறதை படிக்கிற ஸ்பெஷல் பவர் எல்லாம் இங்க யார்க்கிட்டயும் இல்லை” என்று அவளையும் சத்தம் போட்டவன் அலுவலகம் சென்று விட்டான்…

மகனின் செயலில் அதிர்ந்து நின்ற தேவகி அருகில் வந்த விசாலாட்சி,”என்னக்கா வந்த இரண்டே நாள்ல ப்ரதாப்பை இப்புடி மாத்தி வச்சு இருக்கா அந்த பொண்ணு, இதுவரை நின்னு நாலு வார்த்தை சேர்த்து பேச மாட்டான்.. ஆனா இப்ப எல்லாரையும் எவ்வளவு திட்டுறான்.. அவ சாப்பிடமா போனா நாமா என்ன பண்ண முடியும்.. அவளுக்கு ஊட்டியா விட முடியும்.. எனக்கே அவ மேல்ல கோவம் வருது உங்களுக்கு வரலையா”? என்று ஏத்தி விட,

“வருது தான், ஆனா என்ன பண்ண முடியும் ப்ரதாப் பேசிட்டு போனதை கேட்ட தானே, இனியும் போய் அவளை ஏதும் தொந்தரவு பண்ணுனா, அவ ப்ரதாப் கிட்ட சொல்லி கொடுத்துட்டா அவ்ளோ தான்.. அவன் என்ன கோவிச்சுக்குவான் எதுக்கு வம்பு” என்றவர் அமைதியாக சென்று விட்டார்.. இது அனைத்தும் அவர்கள் தெலுங்கில் பேசி கொண்டது..

விசாலாட்சி அமைதியாக விடுவாரா விஷ்ணு மெட்டி போடவில்லை குங்குமம் வைக்கவில்லை ஒவ்வொன்றாக எடுத்து பிரச்சினை செய்ய அனைத்திலும் மனைவியின் பக்கமே இருந்தான் ப்ரதாப்..

தனக்காக நிற்கும் கணவன் மீது விஷ்ணுவிற்கு ஈர்ப்பு வர ஆரம்பிக்க, அதற்கும் வெட்டு வைத்தார் விசாலாட்சி.. “உன்னை பிடிச்சுப் உனக்கு சப்போர்ட் பண்றான்னு நினைக்காத, ப்ரதாப்புக்கு என்னை பிடிக்காது, எப்பவும் நான் என்ன சொன்னாலும் அதுக்கு எதிராக தான் அவன் செய்வான்.. அந்த மாதிரி தான் உன் விஷயமும், உனக்கு சப்போர்ட் பண்றதும் என்று கொளுத்தி போட்டு விட்டு செல்ல, இது போதாத நம் விஷ்ணுவுக்கு தன்னை தானே குழப்பிக் கொள்ள,

‘அப்ப என்னை இப்ப கூட பிடிக்காதா, எனக்காக எதுவும் பண்ணலையா, அவங்க சித்தி கூட இருக்க ஈகோகா மட்டும் தானா’, என்று எப்போதும் போல் தன்னை குழப்பி கொண்டாள்..

திருமணம் முடிந்து இரண்டு மாதம் கழிந்து இருந்தது..

ப்ரதாப் ஆபிஸ்க்கு செல்ல அவசரமாக ரெடியாகி கொண்டு இருந்தான்.. விஷ்ணுவும் கல்லூரி செல்ல ரெடியாகி கொண்டு இருந்தவள் தீடிரென அறையிலிருந்து வெளியேற, டையை கட்டி கொண்டு இருந்த ப்ரதாப் என்னவாக இருக்கும் என்று அவளை திரும்பி பார்த்து “ம்பச்” என்று தோளை குலுக்கி விட்டு ஷூவை மாட்டி கொண்டு அறையிலிருந்து வெளியேற முற்படும்போது, விஷ்ணு திரும்பி வந்தாள்.. அவள் கையில் தட்டு இருந்தது..

இதுக்காக தான் அவ்ளோ அவசரமா போனாளோ என்று நினைத்த ப்ரதாப் தட்டோடு தன்னருகே விஷ்ணு வரவும், தட்டை வாங்க அவன் கையை நீட்ட, அதை கவனிக்காத விஷ்ணு ஷோபாவில் அமர்ந்து சாப்பிட துவங்கினாள்..

ஒரு நொடி தனக்காவோ என்று நினைத்த தன் மடதனத்திற்காக மானசீகமாக தலையில் தட்டி கொண்டவன், “வரேன்” என்று மனைவியிடம் கூறி விட்டு வாய்க்குள் அவளை திட்டியபடி கோவமாக அறையிலிருந்து வெளியேறி அவன் கார் அருகே வந்தான்..

அவன் கார் பக்கத்தில் நின்றிருந்த விஷ்ணு ஸ்கூட்டியை பார்த்தவனுக்கு இன்னுமே கோவம் அதிகரித்தது.. அப்பிராணியாக நின்று இருந்த வண்டியை லேசாக உதைக்க பாவப்பட்ட வண்டி கீழே விழுந்தது.. அவன் மனைவிக்கு ரொம்பவே பிடித்த அந்த வண்டியை ப்ரதாப்பிற்கு சுத்தமாக பிடிக்காது..

அதற்கு காரணம் திருமணம் முடிந்து விஷ்ணு கல்லூரி செல்ல துவங்கிய போது ப்ரதாப் தான் காலை வேளையில் அவளை கல்லூரியில் இறக்கி விடுவான்.. மாலை அவளை அழைத்து செல்ல ட்ரைவரிடம் சொல்லி காரை அனுப்பிடுவான்.. ஒரு வாரம் இப்புடியே தொடர ப்ரதாப் மீண்டும் தொழில் விசயமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்தது.. அவன் வரும்வரை விஷ்ணு கல்லூரி செல்ல ப்ரதாப் மாலை அவளை அழைத்து வரும் ட்ரைவரையே நியமித்து இருக்க..

அன்று விஷ்ணு கல்லூரி செல்ல கிளம்பி கீழே வர அவள் போகும் கார் இல்லை.. விசாலாட்சி அந்த காரில் கோவில் சென்றுள்ளார் என்றும் இன்னும் வரவில்லை என்றும் தெரிந்தது..

‘இவங்க வேற எப்ப பாரு என்கிட்டே பிரச்சினை பண்ணிட்டு, மனசுக்குள்ள பெரிய சீரியல் வில்லின்னு நினைப்பு விசாலாட்சியை திட்டினாள்.. விஷ்ணுவிற்கு ஏற்கெனவே லேட்டாகி இருந்தது.. முக்கியமான க்ளாஸ் அட்டன் பண்ணலைன்னா கண்டிப்பா திட்டு விழும்.. வீட்டில் வேறு எந்த காரும் இல்லை.. வேறு வழியில்லை பஸ்ஸில் தான் போக வேண்டும்.. பஸ் ஸ்டாண்ட் வேற வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருந்தது.. வேகமாக வேகமாக ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்ட் சென்று, பஸ் பிடித்து கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து கல்லூரி செல்வதற்குள் க்ளாஸ் துவங்கி இருக்க, லேட்டாக சென்றவளை ப்ரொபசரும் திட்டி க்ளாஸ்க்குள்ள வராதே கெட் அவுட் என்று தூரத்தி விட்டார்.. இது எல்லாம் சரிப்பட்டு வராது.. நம்ம வண்டி தான் நமக்கு சரி என்று நினைத்த விஷ்ணு.. தன் வீட்டிலிருந்து தன் வண்டியை கொண்டு வந்து அதில் கல்லூரி செல்ல துவங்கினாள்.. ப்ரதாப் திரும்பி வந்த பிறகும் கூட விஷ்ணு ஸ்கூட்டியில் தான் சென்றாள்..

அவள் ஸ்கூட்டியில் சென்ற காரணத்தை ப்ரதாப்புக்கு சொல்லவில்லை.. அவன் வந்த பிறகும் அவனோடு வராது அவள் வண்டியில் செல்வதால், ப்ரதாப்பிற்கு இந்த வண்டியை பிடிக்காது..

காரை கோவமாக ஓட்டி கொண்டு இருந்தான்.. “ஏன் என் கூட காலேஜ் வந்தா இவ குறைஞ்சிடுவாளா? என்று ப்ரதாப்பிற்கு கோவம் வந்தது.. காலையில் அவளிடம் எதிர்பார்த்து ஏமாந்த போனது வேறு கோவத்தை தந்தது.. வாழ்வில் இதுவரை யாரிடமும் ஏன் பெற்றவர்களிடம் கூட எதையும் எதிர்பார்க்காதவன் இப்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட அவள் தனக்கா செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.. அது ஏன் என்று தான் அவனுக்கு புரியவில்லை.. அப்புடி எதிர்பார்க்கும் தன் மீதும் கோவம் வந்தது..

எதையுமே புரியாமல் இருக்கும் அவள் மீதும் கோவம் வந்தது.. மனைவி புரிந்து கொள்ளவில்லை என்று கோவப்படுபவன் எனக்காக இதை செய் என்றும், நானே உன்னை ட்ராப் பண்றேன் நான் இல்லாத டைம்ல உன் வண்டியில் போ என்று உரிமையோடு வாய் திறந்து சொல்ல மட்டும் ஏனோ அவனின் ஈகோ தடுக்கிறது..

காதல் கத்திரிக்காய் என்று எல்லாம் கவனத்தை சிதற விடாமல் அதில் நாட்டம் இல்லாமல் தொழிலில் முன்னேறி ஓடி கொண்டு இருந்தவன் வாழ்வில் வந்த ஒரே பெண் விஷ்ணு தான்.. அதிலும் முதலில் விஷ்ணுவை அவனுக்கு பிடிக்கவும் இல்லை.. அவனுக்கு பிடித்த மாதிரி அவள் நடந்து கொண்டதும் இல்லை.. ஆனால் என்ன மாயமோ மந்திரமோ மஞ்சள் கயிறு மேஜிக்கோ என்னவோ தெரியவில்லை இப்போது எல்லாம் ப்ரதாப்பிற்கு மனைவி மீது சின்ன நாட்டம் வந்து இருந்தது.. அதை வெளிப்படுத்த தான் அவனின் ஈகோ தடுத்தது..

இவர்கள் வாழ்க்கை இப்புடி நகர பவித்ரா பார்த்தியோ இரண்டு பேரும் இரண்டு வாரம் தேனிலவு சென்று விட்டு வந்து தங்கள் வேலைகளுக்கு செல்ல துவங்கினர்.. எந்த வித சண்டை சச்சரவு இல்லாது காதலோடும் சந்தோஷமாகவும் நகர்ந்து கொண்டு இருந்தது..

அன்று முக்கியமான பிசினஸ் பார்டி ஒன்று இருந்தது.. எப்போதும் இப்புடிபட்ட பார்டிகளில் ப்ரதாப் தான் கலந்து கொள்ளுவான், ஆனால் இந்த முறை அதுக்கு பவியை அனுப்பி வைத்தான்.. அவளும் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், ப்ரதாப் பவியிடம் இதை கூற “ஓகே அண்ணய்யா” என்றவள் அந்த பார்டிக்கு ரெடியாகி சென்றாள்..

அவளை பார்டி நடக்கும் அந்த இடத்தில் இறக்கி விட்ட பார்த்தி “முடிஞ்சதும் கூப்பிட்டு” என்று சொல்லி விட்டு நகர பார்க்க,

“நீயும் வா பார்த்தி” பவி அழைக்க..

“நான் எதுக்குடி உங்க பிசினஸ் மீட்டிங்கு” என்று பார்த்தி கூறவும் பவித்ரா முறைக்க,

“இல்லடி எனக்கு முக்கியமான வேற வேலை இருக்குடி அதான் வரலைன்னு சொல்றேன்.. நான் அதை போய் பார்க்கிறேன்.. நீ பார்டி முடிஞ்சதும் கால் பண்ணு நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் போ” என்றதும், பவித்ரா சிரித்தபடி பார்டி நடக்கும் ஹாலுக்குள் சென்றாள்.. அவள் கண்ணில் மறையும் வரை நின்று இருந்த பார்த்தி அதன் பிறகு தனது பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான்..

பார்டிக்கு நகரத்தின் முன்னனி முக்கிய தொழில் பிரமுகர்கள் கலந்து இருந்தனர்.. பவித்ரா உள்ளே நுழையவும் அனைவரின் பார்வையும் அவள் மீது தான் இருந்தது… ப்ளாக் சாரி ஒன் பில்ட் விட்டு அதற்கு பொருத்தமாக ரெட் கலர் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து முடியை ஸ்டைலாக கொண்டையிட்டு கழுத்திலும் காதிலும் அதே ரெட் கலர் ப்ளாட்டினம் கற்கள் பதித்த நகைகளை அணிந்து இருந்து நிமிர்ந்த நடையுடன் கம்பீரமாக நடந்து வந்தவள் அங்கிருந்த அனைவரின் கருத்தையும் கவர்ந்தாள்..

அதும் திருப்பதி குரூப்ஸ் ஆஃப் கம்பெனி விஷ்ணு ப்ரதாப் தங்கை என்றதும் பவித்ராவுக்கு அங்கு தனி மரியாதை கிடைத்தது.. அவளுக்கு தெரிந்தவர்கள் தெரியாதவர்களென அனைவரும் தாமாக முன் வந்து அவளிடம் வந்து பேசி விட்டு சென்றனர்..

அப்புடி பவித்ரா இந்த ஹாலுக்குள் வந்ததிலிருந்து அவளை பார்வையால் பின் தொடர்ந்த ஷ்யாமும் அவளிடம் வந்து பேசினான்.. “ஹாய் ஐ யம் ஷ்யாம் சுந்தர் எஸ். எஸ் காஸ்மெடிக்ஸ் எம்.டி” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு தன் கையை நீட்ட,

தன் கையை கொடுத்து குலுக்கியவள் “ஹாய் ஐ யம் பவித்ரா பார்த்திபன் என்றாள்..

திருப்பதி ஃபுட் ப்ரொடக்டஸோட ஒன் ஆஃப் த எம்.டி” என்ற ஷ்யாம் சிரிக்க..

“இல்ல நான் எம்.டி கிடையாது,நா அண்ணய்யா தான் எம்.டி நான் ஒன் ஆஃப் த ஃபோர்டு மெம்பர்” அவ்ளோ தான் என்று பவித்ரா திருத்தவும்,

“ஹா ஹா ஹா” என்று ஏதோ ஜோக் கேட்டது போல் ஷ்யாம் சிரிக்க, அவனின் சிரிப்பு பவித்ராவுக்கு எரிச்சலை தான் கொடுத்தது.. அதன் பிறகு ஷ்யாம் பிசினஸ் எப்புடி போகுது அது இதுன்னு என்று பேச்சை வளர்த்து கொண்டே போக,

ஒன்றிரண்டுக்கு மட்டும் பட்டும் படாமலும் பதிலளித்தவள் “எஸ் க்யூஸ் மீ” என்று அவன் பேசி கொண்டு இருக்கும்போதே அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.. தன்னுடன் நின்று பேச அவள் விரும்பவில்லை என்றும் தன்னுடைய பேச்சு அவளை கவரவில்லை என்றும் ஷ்யாமிற்கு புரிந்தது.. அதை அவன் அவமானமாகவும் கருதினான்..

ஷ்யாமிற்கு பொதுவாகவே தன் அழகின் மீது அதீத கர்வம் உண்டு.. இதுவரை அவன் எங்கு சென்றாலும் பெண்களே வலிய வந்து பேசி அவன் மேல் விழ, அந்த கர்வம் கூடியது.. இன்று பவித்ராவை பார்த்தவுடன் அவளின் பால் வண்ண நிறமும், அழகும்,அவளின் உடலமைப்பும் ஷ்யாமை பித்தம் கொள்ள செய்தது.. அதனால் தான் அவனாகவே சென்று பேசினான்.. ஆனால் பவித்ரா இவனை கண்டுகொள்ளவே இல்லை.. அது ஷ்யாமிற்கு கோவத்தை தந்ததாலும் பவித்ராவின் அழகு அவனின் கோவத்தையும் ரோஷத்தையும் நீரூற்றி அணைத்தது..

பவித்ரா எங்கு சென்றாலும் அவள் பின்னே அவள் கண்ணில் படும்படி நின்று கொள்ள, பவித்ரா அவனை கண்டு கொள்ளவே இல்லை.. பார்டி முடிந்து சாப்பிட்டு முடித்தவள் பார்த்தி வந்ததும் அவனுடன் அங்கிருந்து கிளம்பினாள்..

இன்னும் பவித்ரா சென்ற திசையையே பார்த்து கொண்டு இருந்தான் ஷ்யாம்..

உன் பார்வை போற இடம் சரியில்லைடா தம்பி பார்வையை மாத்துடா என்றான் ஷ்யாமின் தொழில் நண்பன் டேவிட்..

“வேற எங்கேயும் பார்க்க முடியாதபடிக்கு அவ அழகு என் கண்ணை மறைக்கே நான் என்ன பண்ணட்டும்”..

“நீ கண்ணு வைக்கிற இடம் வேற ஒருத்தனுக்கு சொந்தமானதுடா.. கல்யாணமான பொண்ணு” ‌என்று டேவிட் கூற,

“எத்தனை கல்யாணமான பொண்ணுங்களை என் மேல்ல பைத்தியமா சுத்துற அளவுக்கு மாத்தி இருக்கேன்.. இது எல்லாம் எனக்கு சாதாரணம்” என்று வெக்கம் இல்லாமல் பெருமை அடித்து கொண்டான் ஷ்யாம்..

“மத்த பொண்ணுங்க மாதிரி இந்த பொண்ணு சாதாரணமான ஆள் கிடையாது.. திருப்பதி குரூப்ஸ் ப்ரதாப்போட தங்கச்சி இங்க நீ வாலாட்டுன அவன் உன்னை உரு தெரியாமா அழிச்சிருவான்.. அதோட அந்த பொண்ணு லவ் மேரேஜ் அவனை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் பிடிவாதமா பண்ணி இருக்கா.. அதனால்ல நீ நினைக்கிறது எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை”..

“நடக்கும் நடத்தி காட்டுறேன் பாரு.. இன்னும் கொஞ்ச நாள்ல அந்த பவித்ரா வாயாலேயே அவ புருஷனை வேண்டாம்னு சொல்ல வச்சு அவங்களை பிரிச்சு விட்டுட்டு அவளை எனக்கு சொந்தமாக்கி காட்டுறேன்.. பார்க்கிறேன் அந்த

விஷ்ணு ப்ரதாப் என்னத்தை கிழிக்கிறான்னு” என்றவன், அவன் சொன்னதை செய்யும் வேலையில் அடுத்த நாளே இறங்கினான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 32

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!