Mr and Mrs விஷ்ணு 19

4.6
(25)

பாகம் 19

நாட்கள் மெல்ல நகர அன்று காலை அலுவலகத்துக்கு செல்ல ப்ரதாப் ரெடியாகி கொண்டு இருக்க, விஷ்ணுவோ மெத்தையில் படுத்து மொபைல் நோண்டி கொண்டு இருந்தாள்.. இந்நேரத்திற்கு பரபரப்பா காலேஜ் கிளம்புபவள் இன்று இப்புடி படுத்திருப்பது பார்த்த ப்ரதாப் “காலேஜ் போகலையா” என்று கேட்க,

“இல்லை” என்று தலையாட்டினாள்..

உடம்பு ஏதும் சரியில்லையோ என்று மனதிற்குள் நினைத்து கொண்டு வெளியில்  “ஏன்” என்று ஒற்றை வார்த்தையில் கேட்டான்..

படுத்து இருந்தவள் எழுந்து “எல்லாத்துக்கும் காரணம் அந்த பார்த்தி கடன்காரன் தான்” என்றாள் தலை முடியை கையால் அள்ளி கொண்டையிட்டபடி, 

புருவத்தை சுருக்கி புரியவில்லை எனும் விதமாக ப்ரதாப் அவளை பார்க்க,

“எனக்கு எப்பவும் பார்த்தி தான் பீஸ் கட்டுவான்.. இந்த தடவை இன்னும் பீஸ் கட்டலை போல, லாஸ்ட் டேட் நேத்தோட முடிஞ்சு போயிட்டு, அதான் இன்னைக்கு போகலை.. அவனை கூப்பிட்டு திட்டி இருக்கேன் இன்னைக்கு எப்புடியும் கட்டிடுவான் நாளைக்..” என்று விஷ்ணு சொல்லி கொண்டு இருக்கும் போதே

அவளின் முழங்கையை பிடித்து வெடுக்கென இழுத்து கட்டிலிருந்து இறக்கி தன் முன் நிறுத்தி இருந்தான்  ப்ரதாப்.. அவன் தீடிரென இழுத்ததில் பயந்து போனவள் ப்ரதாப் முகம் பார்க்க அவன் இவளை பார்வையால் எரித்து கொண்டே,

“ஏன்டி என்னை அசிங்கப்படுத்தனும்னே இப்புடி எல்லாம் பண்றியா?” கோவமாவே கேட்டான்.. அவன் கண்கள் கோவை பழம் போல் சிவந்து இருப்பதே அவனின் கோவத்தின் அளவை விஷ்ணுவுக்கு புரிய வைத்தது.. ஆனால் ஏன் இந்த தீடீர் கோவம் என்று தான் புரியவில்லை.. அவன் அழுத்தி பிடித்திருந்த கை வேறு வலித்தது..

“நான் நான் என்ன பண்ணுனேன்” புரியாமல் கேட்டாள் விஷ்ணு..

“கல்யாணமான முதல் நாளே உன்கிட்ட என்ன சொன்னேன் உன் தேவை எதுவா இருந்தாலும் என்கிட்ட தான் கேட்கனும்னு வேற யார்கிட்டேயும் எதுவும் கேட்க கூடாதுன்னு சொன்னேன் தானே, நான் அவ்ளோ சொல்லியும் கூட நீ உன் அண்ணனை பீஸ் கட்ட சொல்லி இருக்கேனா,  அது என்னை அவமானப்படுத்துற செயல் தானே,  நேத்து வரை எப்படியோ ஆனா இப்ப நீ காலேஜ் பீஸ் கட்டாமல்,  காலேஜ் போகமா இருந்தா உதயகுமார் பொண்ணுன்னு சொல்ல மாட்டாங்க.. மிசஸ் விஷ்ணு ப்ரதாப் காலேஜ் பீஸ் கட்டாததுனால் காலேஜ் போகமா இருக்கான்னு தான் சொல்வாங்க அது யாருக்கு டி அசிங்கம்.. என்னை அசிங்கப்படுத்தனும் அவமானப்படுத்தனும்னே பண்றீயாடி” என்று கோவப்பட்டான்..

விஷ்ணு அதிர்ந்து முழித்தாள் என்னடா இது என்று, 

ப்ரதாப் முதல் இரவு அன்று அவ்வாறு சொன்னது எல்லாம் அவளுக்கு நினைவே இல்லை.. எப்போதும் போல் பார்த்தி கட்டி இருப்பான் என்று தான் இருந்தாள்.. அவன் கட்டவில்லை என்பதே நேற்று பீஸ் கட்டாதவர்கள் லிஸ்டில் அவள் பெயர் வந்த போது தான் தெரியும்.. அதோடு பீஸ் கட்ட இவங்க ஏன் பணம் தரனும்.. எப்பவும் அப்பாவும் பார்த்தியும் தானே கட்டுவார்கள்… அவங்க கட்டுவதால் இவர்க்கு என்ன அசிங்கம், இதில் என்ன இருக்கு யார் கட்டுனா என்ன என்றும் தோன்றியது, அதை அப்புடியே ப்ரதாப்பிடம் கேட்டு விட, இதில் என்ன இருக்கு என்ற வார்த்தை, ஏற்கெனவே  கோவத்தில் எரிந்து கொண்டு இருப்பவனுக்கு  எண்ணெய் ஊற்றியது போன்று இருந்தது..

விஷ்ணுவின் கையை விட்டு விட்டு பின்னகழுத்தை அழுத்தி பிடித்து தன் முகத்திற்கு நெருக்கமாக கொண்டு வந்து விஷ்ணுவின் இதழை சிறை பிடித்தான்.. இதை சற்றும் எதிர்பாராதவள் முதலில் அதிர்ந்து பின்பு அவனின் வேக முத்ததில் பயந்து விடுபட நெளிய ஆரம்பிக்க, ப்ரதாப் இடையை அழுத்தி பிடித்து நகர விடாமல் செய்தான்.. அதை மீறியும் அவள் ஒவ்வொரு முறை நெளியும் போது முத்ததில் வேகமும் இடையை பிடித்திருந்த கையின் அழுத்தமும் கூடியது.. அதற்கு பின்பு விலக முயற்சி செய்வதை விட்டுவிட்டு கண்ணை இறுக மூடி கொண்டு நிற்க, அவள் அமைதியான பின்பு அவளை விட்டான் ப்ரதாப்..

எதிர்பாராத இந்த முத்த தாக்குதலில் நிலைகுலைந்த விஷ்ணு ப்ரதாப்பை பார்க்காமல்  தலை குனிந்து நிற்க, அவளின் நாடியை பிடித்து நிமிர்த்திய ப்ரதாப்  “இதோ இப்ப நடந்ததே இதை எப்புடி என்னை தவிர வேற யார்க்கிட்டயும் கேட்க முடியாதோ, அதை போல தான்டி உன் சம்மந்தப்பட்ட எல்லா விஷயமும் நீ என்கிட்ட மட்டும் தான் கேட்கனும் நான் தான் உனக்கு செய்யனும்.. அது 50 பைசா சேஃப்டி பின்னா இருந்தாலும் கூட, 

புரியுதா என்று அதட்டியவன், மறுபடியும் இந்த மாதிரி ஏதாவது என்னை அசிங்கப்படுத்தற மாதிரி நடந்துக்கிட்ட அவ்ளோ தான், நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்று கோவமாக கூறி விட்டு அறையிலிருந்து வெளியேறினான்..

அவன் சென்றபின் கட்டிலில் தொய்ந்து போய் அமர்ந்தாள்.. அவன் கோவத்தில்  முத்தமிட்டு  காயம் செய்திருந்த உதடு வேறு எரிந்தது..  ஸ்…. ஆ… என்றவள் சரியான “ஈகோ பிடிச்ச மனுஷன்” என்று திட்டினாள்.. இவ்வளவு நேரம் ப்ரதாப் பேசியது அவனின் ஈகோவிற்காக என்று எப்போதும் போல் விஷ்ணு தவறாக புரிந்து கொண்டாள்…

இப்போது ப்ரதாப் கோவமாக கூறியதை எல்லாம் கொஞ்சம் பொறுமையாக அமைதியாக கூறி இருந்தால் ஒரு வேளை விஷ்ணுவிற்கு புரிந்து இருக்குமோ என்னவோ, அவளுக்கு கணவனை புரிய முடியவில்லை.. கணவனோ மனைவியிடம் எழும் கோப உணர்வை மட்டும் தயங்காமல் உடனே வெளிப்படுத்துபவனுக்கு, மற்ற உணர்வுகளை வெளிப்படுத்த மட்டும் ஏன் இந்த பிடிவாதமோ?

இரவு 12:30 மணியை கடந்து இருந்தது.. சிட்டியை விட்டு தள்ளி அவுட்டரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றின் வாசலில் நின்று இருந்தாள் பவித்ரா.. தனது கையிலிருந்த மொபைலை பார்த்தாள்.. சார்ஜ் இல்லாமல் உயிரை விட்டு இருந்தது.. “இதோ பக்கம் வந்துட்டேன்டி ஜஸ்ட் 2 மினிட்ஸ்” என்ற பார்த்தி ஒரு மணி நேரமாகியும் கூட இன்னும் வரவில்லை.. “பார்த்தி இடியட், ஏன் இன்னும் வரலை? என்று கணவனை கோவமாக திட்டி கொண்டு நின்று இருந்தாள் பவித்ரா.. நள்ளிரவின் கும்மிருட்டும் தனிமையும் அவளை பயமுறுத்தியது..

இப்போது தன்னுடைய கார் இருந்திருந்தால் இப்புடி நின்று இருக்க வேண்டிய நிலை வந்து இருக்குமா எல்லாம் இந்த பார்த்தியால் தான், உன் வீட்டுலிருந்து ஆடம்பரமான பொருள் கார் எல்லாம் நீ கொண்டு வரவே கூடாது, அது எல்லாம் கொண்டு வந்தா உன் பாட்டி அம்மா சொல்ற மாதிரி நான் உன் பணத்துக்காக உன்னை கல்யாணம் பண்றது போல் ஆகிடும் பவி, அது எல்லாம் வேண்டாம் என்று திருமணத்தின் போது  பார்த்திபன் கண்டிப்பாக சொல்லி விட்டான்.. அதை அப்புடியே கேட்ட தன் முட்டாள் தனத்தை இப்போது நொந்து கொண்டாள்..

பவியின் தோழி பிருந்தாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.. அதற்க்காக அவள் தன் நண்பர்களுக்கு மேரேஜ் பார்டி ஒன்று ஏற்பாடு செய்திருந்தாள்.. பவி பார்த்தி இருவரையும் அவள் அழைத்திருந்தாள்.. பார்த்தியும் அவளுக்கு நன்றாக தெரியும்.. அதனால் அழைக்கும் போதே பார்த்திபனை கண்டிப்பாக அழைத்து வர வேண்டும் என்று நிறைய முறை பவித்ராவிடம் சொல்லி இருந்தாள் பிருந்தா.. 

பவி இந்த விஷயத்தை பார்த்திபனிடம் கூற, பார்த்திக்கு அன்று தலைக்கு மேல் வேலை அதோடு  அவன் ஆடிட்டிங் செய்யும் கம்பெனியில் ரெய்டு வேறு நடந்து கொண்டு இருந்தது.. அதனால் பவித்ராவிடம் “எனக்கு வேலை இருக்குடி நீ மட்டும் போய்டு வா” என்று கூறினான்.. 

“இல்ல பார்த்தி நீயும் வா, நீ வரலைன்னா உன்னை ஒன் சைட்டா லவ் பண்ண அந்த பிருந்தா நான் தான் உன்னை வர விடாமா பண்ணிட்டேன் சொல்லி எல்லார்க்கிட்டையும் சொல்லுவா, அதனால்ல வந்துட்டு போ பார்த்தி ப்ளீஸ் ப்ளீஸ்” 

“ஏய் என்ன விளையாடிறியா பவித்ரா? அங்க இங்க நகர முடியாதளவு எனக்கு டைட் வொர்க் இருக்குடி.. சொல்றதை புரிஞ்சிக்காம சின்ன பிள்ளை மாதிரி பேசதா பவி” என்று பார்த்தி சத்தம் போட,

“புரியுது பார்த்தி ஆனாலும் உனக்கே தெரியும்ல அந்த பிருந்தா எப்புடின்னு, என்னை பத்தி மத்த ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் தப்பு தப்பா பேசுவாடா, ஏற்கெனவே நீ அவளை தான்  லவ் பண்ணுன நான் தான் இடையில்ல வந்து அதை கெடுத்துட்டேன்னு சொல்லிட்டு இருக்காடா, இப்ப நீ வரலைன்னு வை, இன்னும் என்னென்னவோ கதை கட்டுவா பார்த்தி, அதனால்ல உன்னோட ஸ்டாப்ஸ் கிட்ட கொஞ்சம் நேரம் வொர்க்கை கொடுத்துட்டு ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் அங்க மட்டும் வந்துட்டு, அப்புடியே என்னையும் வீட்டில் ட்ராப் பண்ணிட்டு போயிரு.. ப்ளீஸ் ப்ளீஸ் பார்த்தி ஜஸ்ட் ஜஸ்ட் ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் ப்ளீஸ் ப்ளீஸ் பார்த்தி” பவித்ரா கெஞ்ச,

“சின்ன குழந்தை மாதிரி பிகேவ் பண்ணாத பவி, உன்னை பத்தி தப்பா பேசுற  ஒருத்தியோட ஃப்ரெண்ட்ஷிப் உனக்கு தேவையா, எத்தனை தடவை அந்த பிருந்தாவோட ப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ண சொல்லி இருக்கேன்.. உனை பத்தி தப்பா பேசுற ஒருத்தி கொடுக்கிற பார்டிக்கு நீ ஏன்டி போகனும் ஒன்னும் போக வேணாம் வீட்டிலேயே இரு” என்று பார்த்தியும்

“போகாம எல்லாம் இருக்க முடியாது பார்த்தி, என்னோட மத்த ப்ரெண்ட்ஸ் என்னை தப்பா நினைப்பாங்க.. அதனால்ல கண்டிப்பா நான் போய் ஆகனும், நீயும் கண்டிப்பா வரனும்” என்று பவித்ராவும் மாறி மாறி வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர்..

இறுதியில் “வந்து தொலைக்கிறேன் போனை வைடி” என்று கோவமாக பேசி விட்டு போனை வைத்தான் பார்த்தி.. பவித்ராவும் கோவமாக இருக்க போனை வைத்த இரண்டு நொடியிலே அழைத்த பார்த்தி

“டாக்சியில் போகாதே வீட்டில் இருக்க அப்பா காரை எடுத்துட்டு போ, ஒரு வேளை என்னால் வர முடியலைன்னா, நீ அந்த கார்லேயே வீட்டுக்கு போய்டு” என்றும் கூறி இருந்தான்.. 

பார்த்தி வர முடியாது என்று சொன்னதில்லேயே பவிக்கு அவன் மீது கோவம்.. இதுல அவங்க அப்பா காரை எடுத்து கொண்டு போக சொல்கிறானே என்றும் கோவம் வந்தது.. பவியை பொறுத்தவரை அந்த கார் சொப்பன சுந்தரி கார்.. பத்து வருஷத்திற்கு முன்னாடி வந்த பழைய மாடல் டப்பா கார்.. அதை கொண்டு போனால் தோழிகளின் கேலிக்கு ஆளாக கூடும் என்று நினைத்த பவி,” தான் பங்ஷன் போவதாகவும்,  டாக்சியில் தான் போகின்றேன், நீ தான் வந்து பிக்கப் பண்ணிக்கனும்” என்று பார்த்திபனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு டாக்சியில் பார்டி நடக்கும் ரிசார்ட்க்கு சென்றாள்..

பத்து மணியாகியது பங்ஷன் முடியும் நேரம் கூட ஆனது… பார்த்தி தான் வரவேயில்லை.. கை ரேகை தேயும் அளவு பவித்ரா அவனுக்கு அழைத்தும் பயனில்லை.. அவன் ஒருமுறை கூட பவித்ரா அழைப்பை ஏற்கவேயில்லை.. மீண்டும் மீண்டும் பவி அழைத்து கொண்டே இருக்க ஒரு வழியாக போனை எடுத்தான் பார்த்தி, பவி திட்ட ஆரம்பிப்பதற்குள், “சாரி சாரிடி ஹெவி வொர்க் மொபைல் சைலன்ட்டில் இருந்தது.. அதான் உன் கால் கவனிக்கலை”.. 

“சீக்கிரம் வா பார்த்தி, பங்ஷன் முடிய போகுது”.. 

“ஏன்டி இப்புடி இம்சிக்கிற வேலை நிறையா இருக்குடி புரிஞ்சிக்கோ” என்று பார்த்தி கூற, மீண்டும் கோவமான பவி சண்டை போடவும் “வரேன் வைடி” என்றவன் தான், அதன் பின்பு மீண்டும் போனை எடுக்கவே இல்லை.. 

11 மணிக்கு அவனாகவே பவிக்கு அழைத்து “கிட்ட வந்துட்டேன்டி ஜஸ்ட் 2 மினிட்ஸ் கால் பண்ணிட்டே இருக்காதே” என்றான்.. அதை நம்பி பங்ஷன் முடிந்து தோழிகள் கிளம்பிய போது கூட, பார்த்தி  பக்கத்தில் வந்துட்டான் நான் அவனோட போய்க்கிறேன் நீங்க கிளம்புங்க என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.. 

ஆனால் அது மிகப்பெரிய முட்டாள் தனம் என்று இப்போது தோன்றியது.. ‘இந்த பார்த்தியை நம்பியிருக்கவே கூடாது.. அவனுக்கு வேலை தான் ரொம்ப முக்கியமா போயிருச்சு, என்னை பற்றி எந்த கவலையும் இல்லாமல்,;இந்த அன் டைம்ல இப்புடி தனியா விட்டுட்டானே’ என்று பார்த்தியை திட்டி கொண்டே இருந்தவள் கவனிக்கவில்லை தன்னருகே வந்து நின்ற இரு குடிமகன்களை,

“என்ன பாப்பா தனியா நின்னுட்டு இருக்க” என்ற ஒருவனின்  குரலில் தான் திடுக்கிட்டு கவனித்தாள், அவர்கள் தன்னருகே நின்று இருப்பதை, “என்னமா இப்புடி முழிக்கிற நீ வர சொல்லி இருந்த பார்டி வரலையா, அதான் கோவமா இருக்கியா, அவன் ஒருத்தன் வரலைன்னா என்ன நாங்க இரண்டு பேரும் இருக்கோம் கவலைப்படாத” என்று கூற, அவர்கள் பேசிய வார்த்தைகளின் அர்த்தம் புரிந்த பவி அவர்களை கண்ணால் எரிக்கும் அளவு முறைத்து விட்டு, ‘உங்களுக்கு காலையில்ல இருக்குடா’ என்று நினைத்தபடி எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர, “ஏம்மா பேசிட்டு இருக்கோம்ல ஒன்னும் சொல்லாம நகர்ந்தா எப்புடி? ரேட் எவ்ளோன்னு சொல்லிட்டு போ” என்று பவியின் கையை பிடித்து இழுக்க,

அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் பவி.. ஏற்கெனவே குடித்திருந்த காரணத்தால் அவன் கீழே விழுந்து விட, அருகில் இருந்த மற்றொருவன் “ஏய் எங்களையே அடிக்கிறயா? உன்னை என்ன பண்றேன் பாரு” என்று பவியை நெருங்க கையில் வைத்திருந்த ஹேன்ட் பேக்கால் அவனையும் அடித்து அவனையும் கீழே தள்ளிய பவி அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தாள்..

பின்னால் அவர்கள் வருகிறார்களா என்று ஓடி கொண்டே திரும்பி பார்க்க அவர்களை காணவில்லை.. நல்ல வேளை தப்பிச்சுட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டுட்டே இனி நடக்கலாம் மெயின் ரோடு போய் டாக்சி பிடிச்சுக்கலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பிக்க, 

தீடிரென எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை அவள் முன்பு ஏற்கெனவே அவளிடம் அடிவாங்கிய இருவர் அவர்களோடு இன்னும் இரண்டு தடியன்களும் சேர்ந்து நின்று இருந்தனர்.. “எங்க மேலேயே கை வைச்சலே, இப்ப உன் நிலைமை என்ன ஆகப் போகுதுன்னு பாரு” என்றபடி அவர்கள் பவியை நெருங்கி வர,

பவி தைரியமான பெண் தான்.. இருந்தாலும் இப்புடி நால்வர் எதிரே நின்று இருப்பதை பார்க்க உடல் எல்லாம் நடுங்கியது.. பின்னால் நகர்ந்து கொண்டே “ஏய் கிட்ட வராதீங்க வந்தா அவ்ளோ தான், நான் யாருன்னு தெரியாமா என்கிட்ட வம்பு பண்றீங்க, ஒழுங்கா இங்கிருந்து ஓடிருங்க இல்லைன்னா நாளைக்கு நீங்க யாருமே உயிரோட இருக்க மாட்டிங்க” என்று உள்ளுக்குள் பயத்தை மறைத்து கொண்டு பவி மிரட்டினாள்..  

அதை கேட்ட நால்வரும் “ஹா ஹா ஹா” என்று சிரித்து கொண்டே “தோ பாருடா இந்த குட்டி நம்மளை மிரட்டுது எல்லாரும் பயப்படுங்கடா” என்று கேலி செய்தவர்கள், “உன்னை மாதிரி பல பேரை பார்த்தாச்சு பாப்பா, அமைதியா இருந்தா எங்க வேலையை முடிச்சிட்டு உன்னை விட்டுருவோம்.. இல்ல ஓடுறது, சத்தம் போடறது, முரண்டு பிடிக்கிறதுன்னு வச்சுக்கிட்ட அப்புறம் சேதாரம் உனக்கு தான் சிதைஞ்சு சின்னபின்னமாகிடுவ” என்றபடி முன்னோக்கி வர, 

பவி பின்னாடி திரும்ப ஓட பார்க்க, அவள் எங்கும் ஓடாதபடி நால்வரும் அவளை சூழ்ந்து கொண்டனர்.. அவர்களை அடித்து தள்ளி விட பார்க்க, அது எல்லாம் முடியாதபடி அவளை கையையும் கால்களையும் இறுக்கி பிடித்தபடி மறைவான இடத்திற்கு தூக்கி சென்றனர், பவி அவர்களிடமிருந்து தப்பிக்க போராடி திமிற, எவ்வளவு முயன்றும் அவளால் முடியவில்லை.. இதுவரை அவள் படித்த செய்திகளில் பார்த்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நடந்த கொடூரங்கள் தனக்கும் நடக்க போகின்றதா நினைக்கவே பயங்கரமாக இருந்தது அவளுக்கு,

கடவுளே என்னை எப்புடியாவது 

காப்பாற்று என்று வேண்டியவள், “பார்த்தி வந்துருடா, என்னை இப்புடியே விட்டாராத, நாளைக்கு என்னை நீ உயிரோட பார்க்க முடியாது” என்று பவி உள்ளுக்குள் குமுறி கொண்டாள்.. 

பவி எவ்வளவு முயன்றும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாத படி இரண்டு கையையும் ஒருவன் நிலத்தில் இறுக்கி பிடிக்க, இன்னொருவன் அவள் சத்தம் போடாதபடி வாயை பொத்தி இருக்க, மற்றோருவனோ சட்டை பட்டனை கழட்டி விட்டு கிட்ட நெருங்க, கையறு நிலையில் இருந்த பவித்ராவால் வேண்டாம் என்றபடி தலை அசைத்து அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது என்று கண்ணீர் மட்டும் தான் விட முடிந்தது.. இந்த நொடி பார்த்திபன் மீது அளவிட முடியாத கோவமும் வெறுப்பும் வந்தது..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!