பாகம் 23
பவித்ரா தன் தலையை இரு கைகளாலும் பற்றியபடி கண் மூடி அமர்ந்து இருந்தாள்.. என்ன தான் இமை மூடி இருந்தாலும் கரு விழி அங்கிங்கும் வேகமாக நகர்வதிலே தெரிந்தது.. அவள் விழிகளில் மட்டுமில்லை மனதிலும் இதே தள்ளாட்டம் தான் என்று,
பயங்கரமான குழப்பத்தில் இப்போது அவள் இருந்தாள்.. தான் செய்ய போவது சரியா தவறா என்று,
ஆனாலும் செய்யவும் முடியவில்லை செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கும் வர முடியவில்லை.. பார்த்தி பார்த்தி என்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்திட்டியே அவள் செய்ய போகும் பாவத்தை அவன் மீது சுமத்தினாள்..
பவித்ரா உறுதியாக நம்பினாள் தன் இந்த நிலைக்கு பார்த்திபன் தான் காரணம் என்று, அப்புடி அவள் மனதின் அடி ஆழத்தில் ஆழமாக பதிய வைத்து இருந்தான் அவள் அருகில் அமர்ந்து இருந்த ஷ்யாம்..
ஷ்யாம் பவித்ராவை பொறுத்தளவு அவளின் ஆபத் ரட்சகன், அவளின் கஷ்ட சூழ்நிலையில் அவளை காத்த கடவுள் அப்புடி தான் அந்த அப்பாவி பொண்ணு நம்பி கொண்டு இருக்கின்றது, அந்த ஷ்யாம் ஒரு பசுத்தோல் போர்த்தி இவளை வேட்டையாட காத்திருக்கும் புலி என்று அறியாமல்,
பவித்ரா ஷ்யாம் ஏற்பாடு செய்திருந்த ரவுகளிடம் மாட்டிட ஷ்யாம் போய் காப்பாற்றிய நிகழ்வு அடுத்த நாளுக்க தான் பவித்ராவுக்கு புரிந்தது.. அவனுக்கு தான் இந்த விஷயத்திற்காக நன்றி கூட சொல்லவில்லை என்பது, ‘ச்சே எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கான் இப்புடி சின்ன தாங்க்ஸ் கூட சொல்லலையே’ என்று தன்னை தானே கடிந்து கொண்ட பவித்ரா, அடுத்த நாளே ஷ்யாம் ஆபிஸ் அட்ரஸை தெரிந்து கொண்டு நேரில் சென்று நன்றி சொல்லிட, அவனும் ஏதோ பெரிய யோக்கிய சிகாமணி போல் “இதற்கு எல்லாம் எதுக்குங்க தாங்க்ஸ் அதுவும் இவ்வளவு தூரம் என்னை தேடி வந்து சொல்லனும்ங்கிற அவசியமே இல்லை” என்றான்..
“நீங்கபண்ணுனது சின்ன விஷயம் இல்லை ஷ்யாம்.. இப்ப நான் உயிரோட இருக்க காரணம் நீங்க தான், ஒன்ஸ் அகைன் தாங்க் யூ என்று பவித்ரா மறுபடியும் நன்றி கூற,
“எனக்கு இந்த தாங்க்ஸ் எல்லாம் வேண்டாம்” என்று வெடுக்கென்று கூறிவிட பவித்ராவிற்கு தான் ஒரு மாதிரி ஆகி விட்டது.. அதை பார்த்து மெலிதாக சிரித்தவன் “நன்றி எல்லாம் வேண்டாம் உன்னுடைய ப்ரெண்ட்ஷிப் தான் வேணும்” என நட்பு கரம் நீட்ட, அவன் செய்த உதவி முன்னால் வர பவித்ராவும் அவன் நட்பை ஏற்றாள்..
விஷயம் தெரிந்த பின்பு பார்த்திபன் கூட ஷ்யாமை சந்தித்து நன்றி கூறினான்.. ஷ்யாமை பற்றி விசாரித்த வரை கொஞ்சம் முன்னபின்ன தான் இருந்தது.. இருந்தாலும் தங்கைக்கு உதவி இருக்கிறானே எல்லாரும் எல்லா நேரங்களிலும் தவறாக இருக்க முடியாது என்று தன்னுள் எழுந்த சந்தேகங்களை ஒதுக்கி வைத்த ப்ரதாப்பும் ஷ்யாமிடம் நன்றி கூறினான்.. இருந்தும் பவித்ரா அவனிடம் நட்பு பாராட்டுவது ப்ரதாப்புக்கு ஏனோ பிடிக்கவில்லை.. அதை அவளிடம் “அளவா வச்சுக்கோ” என்று நேரடியாக சொல்லியும் இருந்தான்..
ஷ்யாம் ஒன்னும் அவ்வளவு கெட்டவன் போல தெரியலையே, இந்த அண்ணாவுக்கு எல்லார் மேலேயும் எப்பவும் டவுட்டு தான் என்று ப்ரதாப் கூறியதை பவித்ரா பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. பார்த்திக்கும் ஷ்யாம் மீது எதுவும் பெரிய தவறு போல் தெரியவில்லை அதனால் இதை அவனும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை..
இந்த ஷ்யாமோ பவித்ராவிடம் எப்பொழுதும் “ நீ ரொம்ப க்ரேட் பவி, உன்னை மாதிரி பொண்ணை நான் பார்த்ததே இல்லை, வேற யார் இந்த மாதிரி எல்லாம் பண்ணுவாங்க, பார்த்தி ரொம்ப கொடுத்து வச்சவன் என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருப்பான்..
“ஏன் நான் என்ன பண்ணுனேன்” பவித்ரா புரியாமல் கேட்க.. “என்ன பண்ணுனியா உங்க வீட்டுல இருக்க வசதிக்கு நீ எவ்ளோ பெரிய இடத்தில் கல்யாணம் பண்ணி எவ்ளோ பெரிய லக்ஸரி லைஃப் வாழலாம்.. ஆனா காதலுக்காக பார்த்திக்காக அவனோட சின்ன வீட்டில் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு வாழுறியே.. இது எவ்வளவு பெரிய தியாகம் தெரியுமா? இப்ப இருக்க பொண்ணுங்களில் யார் இப்புடி இருப்பா என்றவன்.. உன் காதல் கிடைக்க பார்த்தி கொடுத்து தானே வச்சு இருக்கனும்” என பவித்ராவுக்கு தூபம் போட ஆரம்பித்தான்..
“இல்ல ஷ்யாம் நீ சொல்றது தப்பு நான் எந்த தியாகமும் பண்ணலை.. பார்த்தி என் மேல்ல வச்சு இருக்க லவ் முன்னாடி இது எல்லாம் சாதாரணம்.. அதோட நான் அங்க அட்ஜெஸ்ட் பண்ணி வாழலை ஷ்யாம்.. சந்தோஷமா எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கேன் என்றாள் பவித்ரா உண்மையான காதலுடன், எதிரில் இருந்து கேட்டவனுக்கு தான் எரிந்தது..
இருந்தும் அப்போது சிரித்து சமாளித்தவன் அதன் பின்பு வந்த நாட்களிலும் இதையே திரும்ப திரும்ப சொல்லி சொல்லி பவித்ரா மனதிலும் தான் ஏதோ பெரிய தியாகம் செய்து விட்டதாக பிம்பத்தை தோற்றுவித்தான்.. சும்மாவா சொன்னார்கள் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று,
அப்புடி பவித்ராவையும் புகழ்ந்து புகழ்ந்து பேசி மூளை சலவை செய்து வைத்து இருந்தான்.. அது நன்றாக வேலை செய்ய பார்த்திபன் செய்யும் செயலில் அவன் அன்பில் சின்ன சின்ன குறைகள் தான் பவித்ராவிற்கு முதலில் கண்ணில் பட்டது.. அதனால் இருவர்க்குள்ளும் சின்ன விரிசல் விழுந்தது.. அடிக்கடி சண்டை மூண்டது.. அதை அணையாதபடி மேலும் மேலும் அதற்கு எண்ணெய் ஊற்றி பற்ற வைத்து கொண்டு இருந்தான் ஷ்யாம்.. உனக்கு என்மேல்ல பாசமே இல்ல பார்த்தி.. நீ முன்ன மாதிரி இல்லை என்று தனிமையில் குறைப்பட்டு கொண்டாள் பவி.. ஆனால் அவளுக்கு தெரியவில்லை முன்பை போல் தான் தான் இல்லை.. மாற்றம் தன்னிடம் தான் என்பது,
புருஷனிடம் மட்டுமல்ல மாமியாரிடமும் பவித்ராவிற்கு குறை மட்டும் தான் தெரிந்தது.. கல்யாணி சாதரணமாக எதுவும் சொன்னாலுமே அதை தவறாக எடுத்துக் கொண்டு சண்டைக்கு நின்றாள்.. அதனால் கல்யாணி பவித்ராவிடம் பேச்சை குறைத்து கொள்ள பவிக்கு அதுவும் தவறாகி போனது.. திருமணத்திற்கு முன்பு பாட்டி அம்மா சித்தி எல்லாம் கல்யாணி பற்றி தவறாக கூறியது எல்லாம் இப்போது உண்மை என தோன்றியது..
இந்நிலையில் தான் ஒரு வாரம் முன்பு பவி உடம்புக்கு முடியவில்லை என்று வீட்டிலே இருந்து கொண்டாள்.. அவளை காண ஆபிஸ்க்கு வந்தவன் ஷ்யாம்.. அவள் அங்கு இல்லாததால் அதோடு உடம்பு முடியவில்லை என வீட்டில் இருப்பதை அறிந்து கொண்டு பார்ப்பதற்கென வீட்டிற்கு சென்றான்..
அப்போது கல்யாணி உறவினர் ஒருவர் பத்திரிக்கை வைக்க வந்து இருக்க உதயகுமாரும் வீட்டில் இருந்தார்.. காரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் வந்தான் ஷ்யாம்.. அவனை பார்த்து உதயகுமார் “வாங்க தம்பி” என்று வரவேற்க அவரையும் ஹாலில் இருந்த மற்றவர்களையும் அலட்சியமாக பார்த்து விட்டு பவித்ரா பார்த்தி பெட் ரூமிற்கு நேரே மாடியேறி சென்றான்..
வந்திருந்த உறவினர்கள் முன்பு சங்கடமாக இருந்தது.. “போன்ல பேசிட்டே போனதால் கவனிக்கலை என்றார் உதயகுமார் சங்கடமாக,
“யாருக்கா அது மருமக ரூமிற்கு போறாங்க” என்று வந்து இருந்த பெண்மணி கல்யாணியிடம் விசாரிக்க,
“மருமகளோட ஃப்ரெண்ட் உடம்பு முடியலைல அதான் பார்க்க வந்து இருப்பாங்க போல” என்று பதில் கூற,
“பெட்ரூம் வர போய் பார்க்கிற அளவு ரொம்ப நெருக்கமான ப்ரெண்டு போல” என்று அந்த பெண்மணி நக்கல் அடித்தார்..
அதில் கோவமான கல்யாணி” என் மருமகளை இப்புடி எல்லாம் பேசுற மாதிரி இருந்தா, என் வீட்டு பக்கம் இனிமே வரவே வராத” என்று சத்தம் போட்டு தூரத்தி விட்டார்..
சாயங்காலம் கீழே வந்த மருமகளிடம் “பவி உன் ப்ரெண்ட் இனிமே வீட்டுக்கு வந்தா ஹாலில் உட்கார்ந்து பேசுமா, ஏன்னா யாரும் தப்பா நினைக்க கூடாதுல அதான் “என்று தயங்கியவாறே கல்யாணி கூற,
“வேற யாரும் தப்பா எடுத்த போல தெரியலை, உங்களுக்கு தப்பா தெரியுது போல, உங்க மனசில் தான் நிறைய தப்பு இருக்கு.. அதான் இப்புடி அசிங்கமா பேசுறீங்க என்றவள், அவரிடம் சண்டை போட்டு முடித்து,
இரவு வீடு வந்த பார்த்திபனிடமும் அதை சொல்ல, “அம்மா காரணம் இல்லாமா சொல்ல மாட்டாங்க பவி, அதோட எனக்கும் அது பிடிக்கலைடி” என்றிட,
“ஓ… இப்ப நீயும் என்னை சந்தேகப்படுறீயா, உங்கம்மா வை இப்புடி எல்லாம் பேச சொல்லி சொன்னதே நீ தானா” சண்டைக்கு நின்றாள்… “ஏய் பையத்தியம் போல பேசாதடி” கத்திய பார்த்தி,
“புரிஞ்சிக்கவே மாட்டியா, இது நம்ம இரண்டு பேரோட பெட்ரூம்டி.. இங்க நம்ம இண்டிமேட் போட்டோஸ் திங்க்ஸ் நிறைய இருக்கு அதை வேற ஒரு ஆள் பார்க்கிறது எனக்கு பிடிக்கலை, அதனால் தான் சொல்றேன் புரிஞ்சுதா” என்று விளக்கம் கொடுத்தாலும், அது அவள் மண்டைக்கு ஏறவில்லை..
அவள் சொன்னதையே திரும்ப திரும்ப பேச,பார்த்தியும் பேச, என சண்டை தான் அதிகமானது.. “உனக்காக நான் என்ன எல்லாம் பண்ணி இருக்கேன்.. இப்ப எல்லாம் நீ ரொம்ப மாறிட்ட பார்த்தி” என்றவளை பார்த்து விரக்தியாக சிரித்தவன்,
நமக்காக அப்புடிங்கிறது உனக்காகனு மாறி இருக்கு அதிலேயே தெரியலையா மாறி இருக்கிறது யார்னு போடி உன்னோட முடியலை கடுப்பாக இருக்கு” என்றவன் வெளியே சென்றான்..
அந்த சண்டை இன்னமும் சமாதானமாகவில்லை.. எப்பவும் இறங்கி வரும் பார்த்தியும் இந்த முறை இறங்கி வரவில்லை.. இருவரும் பேசாமலே அவரவர் வேலையை பார்த்தபடி இருந்தனர்.. நேற்று காலை எழுந்த பவிக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.. அப்புடியே மெத்தையில் அமர்ந்தவளுக்கு யோசனை.. ஒரு வாரமாகவே இருக்கும் சோர்வு.. சாப்பிட முடியாமல் எதை கண்டாலும் வாந்தி வருவது போல் இருந்தது.. இந்த தலை சுற்றல் யோசித்தவளுக்கு எதனால் என்பது புரிந்தது..
அலுவலகத்திற்கு வந்தவள் கார்டு வைத்து செக் செய்ய அவள் கருவுற்று இருப்பது தெரிந்தது.. சந்தோஷமாகவும் இருந்தது.. அதே நேரம் என்னடா இந்த நேரத்திலா என்ற எண்ணமும் இருந்தது.. இப்புடி தினமும் சண்டையாக செல்லும் வாழ்க்கையில் குழந்தையை எப்புடி பெற்று கொள்வது.. தன்னால் இந்த மனநிலையில் குழந்தையை சுமக்க முடியுமா, ஒரு வேளை இந்த குழந்தை வரவு பார்த்திக்கும் தனக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைக்குமா, பழையபடி சந்தோஷமாக வாழ வழி செய்யுமா, இல்லை குழந்தை பிறந்த பின்பும் இப்புடியே செல்லுமா என்ற குழப்பதோடு அமர்ந்து இருந்தாள்..
Post Views: 382