Mr and Mrs விஷ்ணு 27

4.9
(32)

பாகம் 27

சாரி சார், நான் வேணா அப்புறமா வரட்டுமா”

“நத்திங் மேன் நீ சொல்லு” என்றான்..

அவனவள் வந்து இருப்பதும் அதை தெரிந்து கொள்வதற்காக தானே, அவனுக்கும் அது புரிந்தது.. தன் மீது இந்த பொசசிவ்வாது இருக்கே மனதிற்கு கொஞ்சம் இதமாக இருந்தது..

“சார் நாயுடு சார் பொண்ணு  M.E முடிஞ்சு இருக்காங்களாம்.. நாயுடு சார்க்கு தன் பொண்ணுக்கு சொந்தமா கன்ஸ்ட்ரக்சன் பிசினஸ் வச்சு கொடுக்க ஆசையாம்.. ஆனா அதை பற்றி அவருக்கும் அவர் பேமிலில் யாருக்கும் எந்த அனுபவம் இல்லாததால்.. ஒரு எக்ஸ்பீரியன்ஸ்காக ஒரு ஆறு மாசம் நம்ம ஆபிஸில் வேலைக்கு சேர்வதற்காக.. தேவகி மேடம் கிட்ட நாயுடு சார் ஹெல்ப் கேட்டாங்களாம்.. மேடம் ஒத்துக்கிட்டாங்களாம்.. அதான் மேடம் நாயுடு பொண்ணை அனுப்பி இருக்காங்க.. வேலைக்கு சேர்த்துக்க சொல்லி” என ராம் சொல்லி முடிக்க,

கேட்ட ப்ரதாப்புக்கு கோவம் வந்தது என்ன இது என்று, பிசினஸ் விஷயத்தில் இது எல்லாம் அவனுக்கு பிடிக்காது.. 

“அது எல்லாம் ஒன்னும் வேண்டாம் போக சொல்லுங்க” ப்ரதாப்புக்கு முன்னால் வேகமாக விஷ்ணு சொன்னாள்..

ப்ரதாப் அவளை பார்க்க, “இல்ல நம்மகிட்டயே தொழில் கத்துக்கிட்டு, சக்சஸ் சீக்ரெட் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வெளிய போய் பிசினஸ் தொடங்கி நமக்கு எதிராகவே வந்துட்டா அதான் சார்”.. “வேண்டாம் வேண்டாம் ராம் அண்ணா வேண்டாம் சொல்லிருங்க” என்றவளை பயங்கரமாக முறைத்தான் ப்ரதாப்..

அவனே வேண்டாம் என்று தான் சொல்ல வந்தான்.. இப்போது விஷ்ணு வேண்டாம் என்றதும் இவ எதுக்கு சொல்றா, இவளால் தானே இது எல்லாம், இருக்க வேண்டிய இடத்தில் இவள் இருந்திருந்தால், சுற்றி இருப்பவர்களுக்கு இந்த மாதிரி எண்ணம் தோன்றி இருக்குமா, 

இந்த மாதிரி குறுக்கு புத்தி தனமாக செயல்பட அவன் அம்மாவுக்கு தெரியாது சித்தியின் மூளை சலவை தான் புரிந்தது… இருந்தும் அம்மா மீது கோவம் வந்தது.. அவர்கள் பையனை பற்றி அவர்கள் என்ன நினைத்து இருக்கிறார்கள் என்று, இது என்ன சின்னதனமான செயல் கோவம்.. அம்மா மேலும் மனைவி மேலும்,

“வேணுமா வேண்டாமான்னு நான் தான் டிசைட் பண்ணனும் ப்ரியா.. அதை சொல்ல நீங்க யாரு” என்று நிறுத்தினான்.. அந்த இடைவெளியில் அவள் தனக்கு யார் என்று சொல்ல வேண்டுமென்று, சொல்லவில்லையே இப்போதும் ஏமாற்றம் தான் திருதிருவென முழித்து கொண்டு நிற்கின்றாள்..

அதில் கோவமானவன் “இங்க நான் தான் எம்.டி.. என்ன பண்ணனும் எனக்கு தெரியும் சோ நீங்க அமைதியா இருங்க” என்று கடிந்தவன், “ராம் வர சொல்லு” என்றான்..

‘ஈகோ ஈகோ ஈகோ நான் வேணாம் சொன்னதற்காகவே வர சொல்றார்’ என கோவம் வந்தது விஷ்ணுவிற்கு 

ராம் வெளியேறவும் “எக்ஸ் க்யூஸ் மீ நீங்க” 

“போக மாட்டேன் இங்க இருந்து தான் வேலை பார்ப்பேன்.. ஏற்கெனவே ஈவ்னிங் டூ ஹவர்ஸ் எக்ஸ்டாராவா வேலை பார்க்கனும்.. அதுக்குள்ள இந்த வொர்க்கை முடிக்கனும்.. இல்லைன்னா உங்ககிட்ட பேச்சு வாங்கனும்.. அதனால்ல போக மாட்டேன்”… என்றாள் பிடிவாதமாக,ப்ரதாப்  முறைக்க 

“நீங்க பேசுறதை கேட்கவும் மாட்டேன் சார் போதுமா” என்றவள் மீண்டும் அமர்ந்து விட்டாள்…

‘அவங்க தான் வேணும்னே சப்பை காரணம் சொல்லி இவர் பக்கத்தில் அவளை இருக்க வைக்க சொல்றாங்க, அதை புரிஞ்சிக்காமா இவரும், ஒரு வேளை புரிஞ்சு தான் இப்புடி பண்றாரோ’ வழக்கம் போல் விஷ்ணுவின் யோசனை தறிகெட்டு ஓடியது..

அந்த பெண் உள்ளே வந்தாள்.. “ஹலோ சார்” என்றபடி கை நீட்டினாள்.. இங்கே விஷ்ணுவிற்கோ பற்றி கொண்டு வந்தது..

ப்ரதாப்போ கை நீட்டாமல் சின்ன தலை அசைப்பை கொடுத்தவன் அமரும்படி இருக்கையை காட்டினான்..

அவன் கை நீட்டாதது வருத்தமாக இருந்தது, இருந்தும் சொல்லப்பட்டது தானே அவனை பற்றி அவன் குணத்தை பற்றி, பொறுமையா ரொம்ப பொறுமையா இருக்கனும் தாய் சொன்னது நினைவு வந்தது.. ரொம்ப பொறுமையாவே இருக்கலாம் இப்புடி ஹாண்ட்ஸமான ஆளுக்காக ப்ரதாப்பை பார்த்ததும் தோன்றியது அவளுக்கு,

“தாங்க யூ சார்” என்றபடி அமர்ந்தவள், விஷ்ணுவை பார்த்து சிரித்தாள்.. விஷ்ணு முகத்தை திருப்பி கொண்டாள் போடி என்றபடி,

“வாட்ஸ் யுவர் நேம்”..

“லில்லி” என்றாள்..

ஆஹான் என்று விழித்தவள் ‘பேரை பாருங்க லில்லி சொவத்துல ஊர்ற பல்லின்னு’ விஷ்ணுவே தான்.. அவளின் மைண்ட் வாய்ஸ்.. 

ப்ரதாப்பும் கண்ணை சுருக்கியவன் ரெஸ்யூம் கேட்க, தான் கொண்டு வந்திருந்த ஃபைலை ப்ரதாப்பிடம் கொடுத்தாள்.. வாங்கி அவளின் ப்ரொபைலை பார்த்த ப்ரதாப்..

“லீலா ரைட்டு” ப்ரதாப் கேட்க, “எஸ் சார் என்றாள்” லில்லி சிரித்தபடி, 

ஓகே மிஸ். லீலா உங்க ப்ரொபைல் குட்.. நீங்க வேலையில் ஜாயின்ட் பண்ணிக்கலாம் என்றான்.. இதை கேட்ட லீலா முகம் பிரகாசித்தது.. 

தாங்க் யூ சார் தாங்க் யூ சார் என்றாள்.. விஷ்ணு முகம் பொலிவு இழந்தது.. ப்ரதாப்பையும் லீலாவை தீயாய் முறைத்தாள்.. 

“இங்க இருக்க மத்த ஸ்டாப்ஸ் போல தான் நீங்களும், சோ எந்த அட்வான்டேஜ்ஜும் எடுத்துக்க கூடாது.. அவங்களாவது பண்ற வொர்க்கு சேலரி வாங்குவாங்க.. உங்களுக்கு அதுவும் கிடையாது.. ஆபிஸ் ரூல்ஸை மதிச்சு நடக்கனும்.. 

மற்றதை எல்லாம் வெளியே இருக்க ராம் சொல்லுவான் கேட்டுக்கோங்க ஓகே’ என்று அவன் சொன்ன விதத்தில் லில்லி தலை தன்னால் ஆடியது.. 

“ஆல் த பெஸ்ட் லீலா” என்றவனிடம் “சார் வீட்டுல எல்லாம் லில்லின்னு தான் கூப்டுவாங்க.. சோ நீங்களும்”

“இது உங்க வீடு இல்லையே மிஸ்.லீலா என்றதும், உள்ளே வந்ததிலிருந்து மலர்ந்து இருந்த லீலா முகம் சற்று வாடியது.. 

இருந்தும் சிரித்து சமாளித்தவள், “சார்” என்று அழைத்தாள் ப்ரதாப் பார்க்கவும்,

“நீங்க பார்க்க ரொம்ப ஹாண்ட்ஸ்சமா இருக்கீங்க சார்” என்றாள்..

இதை கேட்டதும் ப்ரதாப்பின் பார்வை மனைவியை நோக்கியது.. அவள் லீலாவை பார்வையால் பொசுக்க,

‘ம்க்கும்.. இதுக்கும் ஒரு குறைச்சலும் இல்லை.. இதை எல்லாம் சொல்ல வேண்டிய இவ பக்கத்தில் இருந்து சொல்லி இருந்தா’,

‘இப்புடி யார் யாரோ எல்லாம் வந்து சொல்லுவாங்களா, இதில் முறைப்பு வேற’ என மனைவியை செல்லமாக மனதிற்குள் கடிந்தான்..

ஆனால் மனைவியின் இந்த கோவம் ப்ரதாப்புக்கு பிடித்து இருந்தது.. 

அப்புடியே  திரும்பி லீலாவை அவன் பார்த்த பார்வையில் லீலா பயந்தே போனாள்.. அவ்வளவு கண்டிப்பு இருந்தது அவன் பார்வையில்,

“தேவையில்லாத விஷயம் எல்லாம் பேசாம, வந்த வேலையை மட்டும் பாருங்க மிஸ்.லீலா” என்றான் அந்த குரலிலும் கண்டிப்பு தான் இருந்தது.. 

அழகா இருக்கீங்க என யாரையாவது பார்த்து கூறினாள் அது அவர்களுக்கு பிடிக்கும்.. திரும்பி தேங்க்ஸ்  நீங்களும் தான் என்று சொல்வார்கள் இதுவரை லீலா அப்புடி தான் பார்த்து இருக்கிறாள்.. 

ஆனால் இந்த ப்ரதாப்போ பயந்த லீலா சாரி  என்று கூறி விட்டு அறையிலிருந்து அவசரமாக வெளியேறினாள்.. 

இப்போது ப்ரதாப் விஷ்ணு மட்டுமே, 

விஷ்ணுவுக்கு லீலா வந்ததும் தன் வாழ்க்கை குறித்து  எதை எதையோ நினைத்து பயமாக இருந்தது.. இவர் மனசில்லை என்ன நினைச்சிட்டு இருக்கார்.. சட்டை பிடிச்சு கேட்க வேண்டும் என்று தோன்றியது.. அவளால் முடியவில்லையே பாவமாக அவனை பார்த்தாள்..

“விஷ்ணு” என்று அழைக்க ம்.. கூட கொட்டவில்லை அவள் கோவத்தில், 

“லீலாவை உங்க டீமில் சேர்த்துக்கோங்க அவங்களுக்கு நீங்க தான் ட்ரைன் பண்ணனும்.. எல்லாத்தையும் கத்துக் கொடுங்க” என்றான்..

‘அவளுக்கு நானா,  எதையாவது எடுத்து இந்த ஆள் மண்டையை உடைச்சிரலாமா’ கோவமான கோவம் வந்தது.. 

ப்ரதாப் கேஷ்வுலாக உட்கார்ந்து தன் வேலையை பார்த்து கொண்டே மனைவியையும் பார்த்து கொண்டு இருந்தான்.. அவளுக்கு லீலா மேல் எழும் கோவம் அவனுக்கு பிடித்து இருந்தது.. தன் மேல் இருக்கும் அன்பு தானே அவளிடம் கோவம் கொள்ள செய்கிறது என்று, அதோடு அவளின் பயம் அது மீது கோவம் வந்தது.. எதற்கு இந்த பயம் என்று, தன் மீது இவளுக்கு நம்பிக்கை இல்லையா என்று,

அதே கோவத்தோடு ‘அவளை வேலைக்கு வைக்காதீங்க எனக்கு பிடிக்கலை போக சொல்லுங்கன்னு நேரிடையா உரிமையா என்கிட்ட சொல்லுடி.. இல்ல நீ யார் எனக்குங்கிறதை எல்லார் கிட்டயும் சொல்லு, நீ வாயை திறக்காம எதுவும் நடக்காது முட்டாள் பொண்ணே’,  நினைத்தபடி அவளை பார்த்தான்..

இல்ல கடைசி வரை இப்புடியே தான் போக போகுது வாழ்க்கை   என்றான் வாய் விட்டே 

“ஹான் என்ன சொன்னீங்க” விஷ்ணு கேட்க, 

நத்திங் என்று தோள் குலுக்கினான்..

“ஏதோ சொன்னீங்க எனக்கு சரியா புரியலை”

“புரிஞ்சிட்டாலும்”  சலித்து கொண்டவன் “எப்பவும் உனக்கு புரிய போறதே இல்லைடி மாங்கா” என்றவன் எதையோ தெலுங்கில் சொன்னான்..

“என்ன புரியலை”

“இதுவரை சொன்னது மட்டும் புரிஞ்சிருச்சா போடி” என்றான்..

“தெலுங்கில் சொன்னதை தமிழ்ல சொல்லுங்க புரியும்” என்றாள்.. 

“கெட்ட வார்த்தையில் திட்டுனேன்.. அதை தமிழ்ல சொன்ன கொஞ்சம் அசிங்கமா இருக்கும் பரவாயில்லையா என்றதும்

“ஹான்” என்று முழித்தாள்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 32

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!