Mr and Mrs விஷ்ணு 28

4.5
(36)

பாகம் 28

ப்ரதாப் அறையிலிருந்து வெளி வந்த லீலா தன் போனை எடுத்து அவள் அம்மாவுக்கு போன் செய்து ப்ரதாப் பேசியதையும் ஆபிஸில் வேலைக்கு சேர்த்து கொண்டதையும் பற்றியும் கூறினாள்..

“சூப்பர் சூப்பர் லில்லி, மா பங்காரம் என்று செல்லம் கொஞ்சியவர், நான் சொன்னது போல சரியா நடந்துக்கிட்ன்னா இந்த மொத்த ஆபிஸிக்கும் நீ தான் ஓனர், இதுக்கு மட்டும் இல்ல மொத்த திருப்பதி ப்ரைவேட் லிமிட்க்கும், சரியா” என்று லில்லி அம்மா  சாலா தெலுங்கில் சொல்ல,

“அம்மா” என்ற லில்லி எதையோ சொல்ல வந்து தயங்கி  நிறுத்த,

“ஏன்டி செப்பு”

“இது எல்லாம் சரியா வருமா ம்மா, ஏன்னா அவருக்கு ஏற்கெனவே மேரேஜ் ஆகிடுச்சு, நான் இப்ப செகண்ட், எனக்கு அது ஒரு மாதிரி”  

“லீலா” என்ற சாலாவின் அழுத்தமான அழைப்பில் தன் பேச்சை நிறுத்தி கொண்டாள் லீலா..

“நிகேமன்னா பிச்சி பட்டிந்தா லில்லி( உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா லில்லி)நான் உன் அம்மா.. எனக்கு உன் வாழ்க்கைக்கு என்ன செய்யனும்னு நல்லா தெரியும்.. நீ எதையும் போட்டு குழப்பிக்காத, நான் சொல்றதை மட்டும் நீ செய்” என்று கண்டிப்புடன் சொல்லி விட்டு போனை வைக்க அந்த போனை வெறித்தாள் லீலா..

“மேடம் வாங்க நீங்க சில பேப்பரில் சைன் பண்ணனும்” என்று ராம்  அழைக்க அவன் பின்னே சென்றாள்..

“ஏ மேன் உன் பாஸ் எப்பவும் இப்புடி தானா” வாய் சும்மா இருக்காமல் கேட்க,

திரும்பி பார்த்த ராம் “உங்க வயசு என்ன” என்று கேட்டான்..,

“ஏன்”

“தெரிஞ்சுக்க தான் சொல்லுங்க மேடம்”..

“23” என்றாள்..

“என்னை விட அஞ்சு வயசு சின்ன பொண்ணு, ஆனா நான் உங்களை” என்று அவளை கை காட்டி “மேடம் வாங்கன்னு தான் சொன்னேன்.. ஏன் தெரியுமா?” என கேட்க

லீலா தெரியாது எனும் விதமாக தலை அசைத்தாள்..

“ஏன்னா நாமா ஒருத்தருக்கு மரியாதை கொடுத்தா தான் திரும்ப அங்கிருந்து மரியாதை கிடைக்கும் அதுக்காக தான்.. ஆனா நீங்க எடுத்த எடுப்பிலே ஒருமையில் பேசுறீங்க. தப்பு இல்லையா? “என்று கேட்டான்..

“இதுல்ல என்ன இருக்கு நான் எங்க வீட்டில் கடையில் வேலை பார்க்கிறவர்களை கூட அப்புடி தான் பேசுவேன்”என்றாள் சாதரணமாக இது தவறு இல்லை என்பது போல்,

“நான் ஒன்னும் உங்க கடையில் வேலை பார்க்கலையே” சட்டென்று ராம் சொல்ல,  அடுத்து என்ன பேசுவது லீலாவுக்கு தெரியவில்லை

“உங்க கடையில் வீட்டில் வேலை பார்க்கிறவங்களையும் மரியாதை இல்லாம பேசனும்னு எதுவும் இல்லை.. அங்கேயும் உங்களை விட பெரியவங்களை மரியாதையாவே பேசலாம் தப்பில்லை” என்றான்..

லீலா முகம் விழுந்து விட்டது..

இருந்தும் அவன் முன் அப்புடி இருக்க விரும்பாதவள்  “எனக்கு உன் க்ளாஸ் எதுவும் தேவையில்லை நிறுத்து மேன்” என்றாள்.. ராம் முறைக்க,

அதில் பயம் எழுந்தாலும் “அப்புடி தான் வா போன்னு பேசுவேன் என்ன பண்ணுவ நீ” என கேட்டாள் வீம்பாக,

“ஷோ சிம்பிள் எதுவும் பண்ண மாட்டேன்.. நீ வான்னு சொன்னா நான் பதிலுக்கு வாடின்னு சொல்லுவேன்.. போன்னு சொன்னா போடின்னு சொல்லுவேன் அவ்ளோ தான்” என்றான் தன் தோள் குலுக்கி, 

“இப்ப வாடி சைன் பண்ணனும் டி” என்றதும் திகைத்து அவனை பார்த்தவள்,

“ஏய் மரியாதையா பேசு”, என்றாள் ஒற்றை விரலை அவன் முகத்தின் முன்பு நீட்டி

“அதை தான் நானும் சொல்றேன்.. உனக்கு தான் மண்டையில் ஏறவே மாட்டேங்குதேடி” என்றதும்

ஆஹான் என்றவள் “நான் நான் யாருன்னு தெரியாமா நீ நீ பேச” வார்த்தை வரவில்லை திக்கி திணறினாள்.. 

ஏன் நீ யாருன்னு மறந்து போய்ட்டா உனக்கு என கேலியாக அவளை பார்த்தான் ராம்.. ஏற்கெனவே அவனுக்கு லீலாவை பிடிக்கவில்லை.‌ அவள் வந்த நோக்கம் அவனுக்கு அவள் மீது கோவத்தை கொடுத்தது..  ப்ரதாப்பிடம் அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என அவனுக்கு நன்கு தெரியும்..‌ ஆனாலும் விஷ்ணுவை சின்ன பிள்ளையிலிருந்து அவனுக்கு தெரியும்.. அவளுக்கு போட்டியா வர நினைக்கும் இந்த லில்லியை மீது ஏற்கெனவே கடுப்பில் இருக்கும் போது, இவள் அப்புடி மரியாதை குறைவாக நடந்தால் விடுவானா என்ன? 

 ஏன் தெரியாம உனக்கும் தான் நான் யார் என் வேல்யூ தெரியாம பேசுற “நான் கொஞ்ச நாள்ல இந்த ஆபிஸிக்கே M.D ஆகப் போறவ” என்றாள் லீலா என்கிற லில்லி நெஞ்சை நிமிர்த்தி, 

ஆசையை பாரேன் இவளுக்கு எங்க சார் கேட்குதா, இவளை இதுக்கு இன்னோரு நாள் வச்சுக்கிறேன் என்று பல்லை கடித்தவன், அது நடக்கும் போது பார்த்துக்கலாம்டி இப்ப நீ இந்த ஆபிஸில் எனக்கு கீழ தான்டி ” என்றான் ராம்..

“ஏய் உன்ன உன்னை உன் சார்கிட்ட கம்பளைன்ட் பண்றேன்” லீலா மிரட்ட,

“வா இப்பவே போகலாம் நடந்ததை சொல்லுவோம் யார் மேல்ல தப்புன்னு சாரே சொல்லட்டும்” என்று ப்ரதாப் அறை நோக்கி ராம் நடக்க,

அய்யயோ என்று நெஞ்சில் கை வைத்தாள்.. ஏற்கெனவே ப்ரதாப்பிடம் பல்பு வாங்கிய விட்டாளே, இப்ப போய் இவன் எதையாவது சொல்லி ப்ரதாப் வேலைக்கு வேணாம் போ என்று சொல்லி விட்டால், அவ்வளவு தான் தன் அம்மா வீட்டிற்குள்ளேயே சேர்க்க மாட்டாங்க.. லீலா கொஞ்சம் பொறுமையா இருபடி தனக்குள் சொல்லி கொண்டவள்,

“ராம் சார் ராம் சார்” என்று அவன் கைபிடித்து தடுத்தாள், “சாரி சாரி இனிமே உங்களை சார்ன்னே கூப்பிடுறேன் இதை இதோட விட்டுருங்க பாஸ்” என்று ராம் வழிக்கு வர,

“குட் இது கடைசி வரை இப்புடியே மாறாம இருக்கனும் ஓகே மேடம்” என்று ராம் கேட்கவும்,

ம்.. என்று தலையாட்டியவள், இரு இரு உன்னை என் அம்மாகிட்ட சொல்றேன்.. அவங்க உன்னை சும்மா விடமாட்டாங்க மனதில் கருவி கொண்டே ராம் அறைக்கு அவனோடு சென்றாள்..

ராம் அவள் சைன் பண்ண வேண்டிய பேப்பர்ஸை ரெடி பண்ணி கொண்டு இருக்க, அவன் எதிரே அமர்ந்து இருந்தவளோ அங்கிருந்த காகிதம் ஒன்றை எடுத்து பேனா வைத்து  ஏதோ எழுதி கொண்டு இருந்தாள்..

பேப்ர்ஸை ரெடி பண்ணியவன் நிமிர்ந்து லீலாவை பார்க்க, அவள் தலை குனிந்து பேப்பரில் கிறுக்குவதிலே மும்மரமாக இருக்க, “மேடம்” என்று டேபிள்ளை ராம் லேசாக தட்ட நிமிர்ந்தாள்..

என்ன இது எனும் விதமாக பேப்பரை காண்பித்து கேட்க…

“பாருங்க” என்று சந்தோஷமாக பேப்பரை அவனிடம் காண்பித்தாள்.. அதில் அவன் டேபிளில் சின்னதாக அவன் வைத்து இருந்த குட்டி விநாயகர் பொம்மையை பென்சில் ஆர்ட் செய்து இருந்தாள்.. 

“அழகா இருக்கா, நல்லா ட்ரா பண்ணி இருக்கன்னா, என பேப்பரை காண்பித்து ராமிடம் கேட்டாள்.. 

அழகாக தான் இருந்தது அவள் வரைந்து இருந்த ஒவியம், ஆனாலும் ராம் எதுவும் சொல்லவில்லை..

“எனக்கு  ட்ராயிங் பண்றது ரொம்ப, இல்ல ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்று கையை அகல விரித்து அந்த பிடித்த அளவை காண்பித்தவள், பேசி கொண்டே இருந்தாள்.. “பெரிய ஆர்டிஸ்ட் ஆகனும்னு தான் ஆசை என்றவள் அப்ப ஏன் இஞ்ஜினியரிங் படிச்சன்னு கேட்கிறீங்களா?”

“இல்லையே”என்ற ராம், “எனக்கு தேவையில்லாத விஷயத்தை பற்றி நான் ஏன் கேட்க போறேன் மேடம்.. சும்மா பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணாம இந்தாங்க இந்த பேப்பரை படிச்சு பார்த்து சைன் பண்ணுங்க” என்று பேப்பரை அவள் முன்பு நீட்டினான்..

‘இவன் எம்.டியாச்சும் ஒரு தடவை தான் மூக்கு உடைச்சார்.. இவன் ஒவ்வொரு வார்த்தைக்கும் மூக்கை உடைக்கிறானே, இப்புடியே போனா மூக்கு இல்லாமா தான் வீட்டுக்கு போகனும் போலயே’ என்று நினைத்தவள் வாயை அடக்கினாள்.. அவன் கொடுத்த பேப்ர்ஸை வாங்கி படிக்க, ப்ரதாப் சொன்ன நீங்க இங்க வேலை பார்க்கிறதுக்கு உங்களுக்கு சேலரி கிடையாது என்றும்.. ஆபிஸில் ஏதாவது பொருள் தெரிந்தோ தெரியாமலோ உடைத்தால் அதுக்கு உண்டான பணத்தை அவள் தான் செலுத்த வேண்டும் என்றும் இருந்தது.. 

‘இது வேறையா’ என்று பெருமூச்சு விட்டவள் கையெழுத்து போட்டு ராமிடம் கொடுக்க, “இந்த பேப்பரில் ஒரு காப்பி ஈவ்னிங் உங்களுக்கு தரேன்.. இப்ப போய் உங்க வொர்க் ஸ்டார்ட் பண்ணிக்கலாம்” என்றதும்

சரி என்று தலை அசைத்தவள் அறையிலிருந்து வெளியேற போக “மேடம் “என்று ராம் அழைத்தான்,

திரும்பி அவனை பார்த்தவளிடம், “ரூம்மை விட்டு வெளிய போனதும் ரைட் சைட்ல அக்கவுண்ட் இருப்பாங்க அவங்க கிட்ட ஃபைவ் ரூப்பி கொடுத்துருங்க” என்றான்..

ஹான் என்று விழித்தவள் “எதுக்கு” என கேட்க, 

இதுக்கு என்றான் அவள் வரைந்து வைத்திருந்த பேப்பரை காண்பித்து, “ஒரு A4 ஷீட்டை வேஸ்ட் பண்ணி இருக்கீங்க.. எந்த ஒரு பொருளையும் உடைச்சாலோ வேஸ்ட் பண்ணினாளோ உங்க சொந்த பைசாவை கொடுக்கனும் சைன் பண்ணி இருக்கீங்களே” என்றான்..

லில்லிக்கு தான் புசு புசுவென கோவம் வந்தது.. அதை வெளி காட்ட முடியாதே, தன் கைப்பையை திறந்து ஐநூறு ரூபாய் எடுத்து அவன் டேபிள் மீது “வச்சுக்கோங்க” என்று நங்கென்று வைத்தாள்..

“மேடம்க்கு காது சரியா கேட்காதா,ஐநூறு ரூபாய் இல்ல அஞ்சு ரூபா தான்” என்றவன், “அதுவும் என்கிட்ட கொடுக்க கூடாது அக்கவுண்ட் கிட்ட தான் கொடுக்கனும்”..

“என்கிட்ட சேன்ஜ் இல்ல நீங்களே வச்சுக்கோங்க” பல்லை கடித்து கூறினாள்..

“உங்க காசு எங்களுக்கு எதுக்கு மேடம்.. உங்க பண திமிரை எல்லாம் வெளியே வச்சுக்கோங்க” என முறைக்க

“உஃப்”என்று பெருமூச்சு விட்டவள் “எவ்வளோ பைசாவோ அதை எடுத்துட்டு மீதி சேன்ஜ் கொடுங்க.. இல்லைன்னா அந்த ஃபைவ் ஹண்டர்ட் ரூபிக்கும் பேப்பரா கொடுத்துருங்க” என்றாள்..

“இது என்ன மளிகை கடையா, இல்ல பேப்பர் விற்கப்படும்னு போர்ட் போட்டு இருக்கா, உங்க மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க” இடுப்பில் இரு கையையும் வைத்து இன்னும் முறைத்தான்.. 

“அய்யோ தேவுடா என்னை இந்த பிச்சிக்கிட்ட (பைத்தியம்) இருந்து காப்பாத்து” கை கூப்பி மேலே பார்த்து கும்பிட்டவள், கையை கீழே இறக்காமலே “அய்யா வெங்கடாசலபதி என்கிட்ட ஃபைவ் ரூப்பி சேன்ஜ் இல்ல இப்ப நான் என்ன பண்ணனும் நீங்களே சொல்லிடுங்க”  ராமிடமே கேட்க,

தன் பாக்கெட்டிலிருந்து ஐந்து ரூபாய் காயின் எடுத்து டேபிள் மீது வைத்தவன் “இதை அக்கவுண்ட்கிட்ட கொடுத்துருங்க” என்றான்..

“தெய்வமே ரொம்ப தாங்க்ஸ்” என்றவள்,  விட்டா போதும் என்று அதை எடுத்து கொண்டு அறையிலிருந்து வெளியேற,

“மேடம் ராம்” அழைத்தான்..

மறுபடியும் முத இருந்தா என்ற ரிதியில் பாவமாக லில்லி ராமை பார்க்க, “இந்த அஞ்சு ரூபா கடனா தான் கொடுத்து இருக்கேன்.. நாளைக்கு திருப்பி தந்துரனும் ஓகே வா” என கேட்க..

சரி என்று தலையசைத்தாள்..

இவனுக்கு இவன் எம்.டியே பரவாயில்லை போல, இதுக்காகவே ப்ரதாப்பை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி இந்த ஆபிஸிக்கு வந்து இவனை வச்சு செய்யனும் என்று நினைத்து கொண்டு கோவமாக அறையை விட்டு வெளியேறினாள்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 36

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!